பக்கங்கள்

புதன், 30 ஜூன், 2010

கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? (அ) ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?

கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? 

அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?

Are Christian Dyed or Baptized?

சூரா 2:138 கீழ்கண்டவாறு கூறுகின்றது:

"(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம் (ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்" (எனக் கூறுவீர்களாக) - (முஹம்மது ஜான் மொழியாக்கம்) 

(Our religion is) the Baptism of Allah: And who can baptize better than Allah? And it is He Whom we worship. (Yusuf Ali) 

(Receive) the baptism of Allah, and who is better than Allah in baptising? and Him do we serve. (Shakir) 

Say, "Belief in God and following the guidance of Islam are God's means of purification for us. Islam is the baptism of God. No one is a better baptizer than He and we Muslims worship Him." (Sarwar)

இந்த வசனத்தில் ஞானஸ்நானத்திற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை "சிப்காஹ் - sibghah " என்பதாகும், இதை எழுத்தின் படி (literal translation) மொழியாக்கம் செய்தால் இதன் பொருள் "வர்ணம் - dye" என்பதாகும். அல் ஜலாலைன் மற்றும் அல் பைஜாவி விரிவுரையாளர்கள் இந்த வார்த்தை "ஞானஸ்நானத்தை" குறிக்கும் என்று கூறுகிறார்கள். 

அல் பைஜாவி கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"நஸ்ரேயர்கள் (கிறிஸ்தவர்கள்) தங்கள் பிள்ளைகளை மஞ்சல் தண்ணீரில் மூழ்க வைப்பார்கள், இதை அவர்கள் "அல் மமுதியா - al-Ma'mudiyah" என்று அழைக்கிறார்கள். இப்படி செய்வதினால், அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறுகிறார்கள். (Tafsiru'l-Baizawi)

தமிழில் பீஜே அவர்களின் மொழியாக்கமும், ஆங்கிலத்தில் இதர இரண்டு மொழியாக்கங்களும் இந்த பொருளை தருகின்ற விதமாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

'(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை 38 (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்' (என்று கூறுங்கள்!) - (பிஜே மொழியாக்கம்) 

(We take our) colour from Allah, and who is better than Allah at colouring. We are His worshippers. (Pickthall) 

(Our religion) takes its hue from Allah. And who can give a better hue than Allah. And it is He Whom we worship. (Yusuf Ali, Saudi corrected version)

மத்தேயு சுவிசேஷம் 21:24-26ம் வசனங்களில், பிரதான ஆசாரியர்கள் மற்றும் தேவாலய பொறுப்பாளிகள் இயேசுவை சோதிக்க வந்தார்கள். அந்த நேரத்தில் இயேசு அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், அதே கேள்வியை நாம் இப்போது இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புகிறோம்.

இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, 

Jesus replied, "I will also ask you one question. If you answer me, I will tell you by what authority I am doing these things. John's baptism—where did it come from? Was it from heaven, or from men?" They discussed it among themselves and said, "If we say, 'From heaven,' he will ask, 'Then why didn't you believe him?' But if we say, 'From men'—we are afraid of the people, for they all hold that John was a prophet."

அதாவது, இறைவன் தன் தீர்க்கதரிசியாகிய (நபியாகிய) யோவான் மூலமாக, 'ஞானஸ்நானத்தை' கட்டளையிட்டு இருக்கும் போது, இஸ்லாமியர்கள் ஏன் இறைவனின் இந்த இறைக்கட்டளையை பின்பற்றுவதில்லை? 

இறைவன் கட்டளையிடாமல் தானாகவே யோவான் ஸ்நானகன் இட்டுக்கட்டி இந்த ஞானஸ்நானத்தை கொடுத்து இருந்தால், ஏன் இஸ்லாமியர்கள் இன்னும் யோவான் ஸ்நானகனை 'நபி' என்று மரியாதையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? 

ஆங்கில மூலம்: Are Christian Dyed or Baptized?

இதர குர்‍ஆன் விரிவுரை கட்டுரைகள்

5 கருத்துகள்:

  1. read this blog

    http://bibleunmaikal.blogspot.com/
    பைபிளில் உள்ளவை.

    பதிலளிநீக்கு
  2. Bibleunmaikal has left a new comment on your post "கர்த்தரின் காற்றுபிரியுமாம் சங்கீதமாய்!!??.. பைபிள...":

    //Villavarayens said...

    இந்த வலைப்பூவை நடத்துகிறவருக்கு அப்படி என்ன பணக்கஷ்டமோ...பாவம்...ஹிட்ஸ் வரணும்கரதுக்காக கண்டதையும் எழுதி தள்ளுகிறார்......தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாம் தப்பு தான்.....உலகத்தில் உள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒரு மத நூலை சரியாக அறிந்து கொள்ளாமல்,தன இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் இந்த அறிவிலியை என்ன வென்று சொல்வது....

    பைத்தியம்.. //

    பணக்கஷ்டம் ஒன்றுமில்லை. ஹிட்ஸ்கள் மூலம் பணம் எதிர்பார்க்க இதில் எந்த விளம்பரங்களும் இல்லை. ஏன் ஆயாசப்படுகின்றீர்.

    இங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா?

    பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே?

    கண்ணில் படவில்லையா?

    விழிமின். எழுமின்.

    பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்?

    ஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்து அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப்போகின்றீர்கள்?

    எந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை என் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    உங்களுடைய கோரிக்கை படி பைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே?

    BIBLE IS GOD'S WORD. THERE IS NO DOUBT ABOUT IT. RIGHT?

    பைபிளின் ஒவ்வொரு சொல்லும் கர்த்தரின் வார்த்தைகள். எப்படி தூஷனையாகும்.?

    அதை யாரும் திரிக்க முடியாது.

    இங்கு திரிக்கப்படவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. Dear Brother,

    why you dont want to explain that what you want to try to explain?

    please tell your points clearly.

    thanks

    பதிலளிநீக்கு
  4. Question asked in this article:

    "அதாவது, இறைவன் தன் தீர்க்கதரிசியாகிய (நபியாகிய) யோவான் மூலமாக, 'ஞானஸ்நானத்தை' கட்டளையிட்டு இருக்கும் போது, இஸ்லாமியர்கள் ஏன் இறைவனின் இந்த இறைக்கட்டளையை பின்பற்றுவதில்லை?

    இறைவன் கட்டளையிடாமல் தானாகவே யோவான் ஸ்நானகன் இட்டுக்கட்டி இந்த ஞானஸ்நானத்தை கொடுத்து இருந்தால், ஏன் இஸ்லாமியர்கள் இன்னும் யோவான் ஸ்நானகனை 'நபி' என்று மரியாதையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? "

    Umar

    பதிலளிநீக்கு
  5. முதல் பின்னூட்டம் இட்ட சகோதரருக்கு:

    பைபிளில் உள்ளவைகள் என்ற பிளாக்கரின் தொடுப்பை இங்கு கொடுத்த சகோதரரின் விருப்பத்திற்கு ஏற்ப நான் அவரது தொடுப்பை வெளியிட்டேன்.

    இதே போல, என் இந்த தளமாகிய ஈஸா குர்‍ஆன் தளத்தின் தொடுப்பை அவரது தளத்தில் பதிக்க அவர் தயாரா?

    http://isakoran.blogspot.com


    அவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கையிருந்தால், அல்லாஹ் ஒரு உண்மையான இறைவன் என்ற நம்பிக்கையிருந்தால், அதே போல, முஹம்மது ஒரு நல்ல மனிதர் தான் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்குமானால், என் தளத்தின் தொடுப்பைத் தரட்டும்.

    Umar

    பதிலளிநீக்கு