திங்கள், 28 செப்டம்பர், 2009

குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்

குர்-ஆன் முரண்பாடுகள்

 

மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்

 
அநேக சூராக்களில் குர்-ஆன், இயேசுவின் தாயாகிய மரியாளை (எபிரேய மொழியில் 'மிரியம்'), ஏறக்குறைய 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆரோன், மோசேயின் சகோதரியும் மற்றும் அம்ராமின் மகளுமான 'மிரியாமோடு' சேர்த்து குழப்புகிறது.
 
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (19:27-28)

மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும்.....சுரா 66:12
 
 
இந்த பிரச்சனைக்கு முஸ்லீம்கள் என்ன பதிலைத் தருவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். மேலேயுள்ள வசனங்களை பற்றி யூசுப் அலி கீழ்கண்டவாறு விரியுரை கூறுகிறார்:
 
 
"மோசேயின் சகோதரன் ஆரோன் இஸ்ரவேலின் ஆசாரிய வரிசையில் முதன்மையானவர். மரியாளும் அவளுடைய உறவின் முறையான எலிசபெத்தும் (யஹ்யாவின் தாய்) ஒரு ஆசாரிய சந்ததியில் வந்தவர்கள். எனவே அவர்கள் ஆரோனின் சகோதரிகளும் இம்ரானின் (ஆரோனின் தகப்பன்) மகளுமாவார்கள்." (Footnote: 2481)

 
மரியாள் லேவி வம்சமா அல்லது யூதா வம்சமா என்பதை அறிய இக்கட்டுரையை படிக்கவும்: Is Mary from the tribe of Levi or Judah?
 
 
இது ஒரு தவறான பதில் அல்லது சுட்டிக்காட்டலாகும். ஆரோன் மட்டும் தான் தேவனுடைய "ஆசாரியன்" அதுவும் முதல் ஆசாரியன் ஆனார். மேலும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே ஆசாரியர்களாவார்கள். ஆரோனின் சகோதரனாகிய மோசேயோ அல்லது அவர் சகோதரி மிரியாமோ ஆசாரிய சந்ததிகளாக கருதப்படமாட்டார்கள். அம்ராம் (ஆரோனின் தந்தை) நிச்சயமாக ஒரு ஆசாரியன் அல்ல. இஸ்ரவேலில் ஒவ்வொரு ஆசாரியனும் ஆரோனின் சந்ததிகளாக இருக்கிறார்கள். ஆரோனுடைய சகோதரனும் சகோதரியும் ஆசாரிய சந்ததிகளாக எண்ணப்படமாட்டார்கள். ஒரு வேளை இயேசுவின் தாயாகிய மரியாள் ஆசாரிய வம்சத்தில் வந்தவர் என்றுச் சொல்லவேண்டுமானால், அவரை "ஆரோனின் குமாரத்தி/மகள்" என்று மட்டுமே சொல்லவேண்டும்.

 
"தகப்பன்", 'மகள்" மற்றும் "சகோதரி" என்று உபயோகப்படுத்தப்படுபவைகள் அதிகமாக ஒரு 'பொதுவான குடும்ப உறவுகளை' குறிக்கின்றன என்பதை நான் அங்கீகரிக்கிறேன். எனவே அப்படிப்பட்ட ஒவ்வொரு குறிப்புகளையும் அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று மிக கவனமாக நாம் ஆராயவேண்டும். இந்த காரியத்தில் "மகள்" மற்றும் "சகோதரி" என்ற குறுகிய சரீரப்பிரகாரமான உறவைப் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்பதை நான் கீழே விளக்குகிறேன். ஒருவேளை அங்கே "ஆசாரியத்துவம்" முக்கியமாக கருதப்படவில்லையென்றாலும், ஒரு நீண்ட குடும்ப உறவுமுறை காணப்படுகிறது. அப்படியிருக்க குர்-ஆன் ஏன் மரியாளுடைய புகழ் பெற்ற முற்பிதாவான "ஆரோனின் புதல்வி" என்று கூறுவதில்லை?

 
"சகோதரி" என்ற வார்த்தை ஒரே குடும்பத்தில் உள்ள நபர்களின் உறவுமுறைகளை குறிப்பதோடு மட்டுமில்லாமல், பரந்த முறையிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையானாலும், இரண்டு நபர்களை ஒப்பிடும் போது குர்-ஆனில் கூட "சகோதரர்கள், சகோதரிகள்" என்ற வார்த்தைகள் ஒரே காலகட்டத்தில் வாழும் உறவினர்களை குறிப்பதற்கும், "தந்தை மகள்" என்ற வார்த்தைகள் பல வம்சங்களுக்கு இடையில் இருப்பவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே!

 
ஏன் முஹம்மதுவின் மனைவிகள் "நம்பிக்கையாளர்களின் சகோதரிகள்" என்று அழைக்கப்படாமல் "நம்பிக்கையாளர்களின் தாய்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்?[இன்றைய நம்பிக்கையாளர்களே! - ஆயிஷா நிச்சயமாக முஹம்மதுவின் சம காலத்தில் வாழ்ந்த உதமான், உமர், அபூ பக்கர் மற்றும் மற்றவர்களின் தாய் என்று அழைக்கப்படவில்லை.]

குர்-ஆன் எந்த காரணத்திற்காக மரியாளை புகழ்பெற்ற ஆரானின் சகோதரியாக அழைக்கிறது ஆனால் இம்ரானின் மகளாக (பைபிளில்: அம்ராம்) அழைக்கிறது? (ஆரோன் ஏறக்குறைய 1400 வருடங்கள் மரியாளை விட மூத்தவராக இருக்கிறார்). இம்ரான் பற்றி யாத்திராகமம் 6 மற்றும் 1 நாளாகமம் 23 ல் வரும் வம்சாவழிப் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதை தவிர வேறொன்றும் நாம் அறியாதிருக்க, அவருடைய மகள் என்று ஏன் மரியாள் அழைக்கப்பட வேண்டும்? எனவே இந்த இரண்டு மிரியாம்களையும் குறித்து குர்-ஆன் குழம்பியிருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை ஒற்றுமைப் படுத்துவதற்கு எடுக்கப்படும் இஸ்லாமியர்களின் முயற்சிகள் உண்மையிலேயே அறிவுடமையானதாக இல்லை.

மேலேயுள்ள குறிப்புகள் ஒரு சில 'சிறிய கேள்விகளே'. ஆனால் இங்கே பெரிய பிரச்சனை என்பது பின்வரும் வசனங்களில் நாம் பார்ப்பது போல, குர்-ஆன் வெளிப்படையாக ஒரு பரந்த வம்ச உறவைப் பற்றி (Wider Clan Relationships) பேசுவதில்லை.
 
 
இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. ……(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" ….(மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. …. 3:36
 
 
முஸ்லீம்கள் வழக்கமாக ஒரு பெண் யாருடைய மனைவி என்பதில் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவளுடைய ஏதோ ஒரு 'தூரத்து உறவின் முறை' என்பதால் அவளோடு யாரும் உடலுறவு வைத்துக்கொள்ள நிச்சயமாக அனுமதியில்லை. ஒருவேளை மரியாள் இம்ரானின் மனைவியின் கர்ப்பத்திலிருந்து உருவான பெண்குழந்தை எனில் அவள் இம்ரானின் நேரடி மகளாவாள். மேலும் குர்-ஆனிலேயே முரண்பாடக இருக்கும் "தூரத்து சந்ததி" என்ற கருத்துக்கே இங்கு இடமில்லை.

 
யூசுப் அலி சூரா 3:35க்கான தன்னுடைய விரிவுரை 375ல் இன்னும் கொஞ்சம் அதிகமாக கண்டுபிடிக்க(?) முயற்சி எடுத்து "இரண்டாம் இம்ரானை" அறிமுகப்படுத்துகிறார். எப்படியாவது குர்-ஆனை இந்த முரண்பாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, "பாரம்பரியமாக மரியாளின் தாய் "ஹன்னா (அன்னாள்)" என்று அழைக்கப்பட்டாள் .... அவளுடைய தகப்பன் "இம்ரான்" என அழைக்கப்பட்டார்" என்று கூறுகிறார். ஆனால் மரியாளின் தாயை அன்னாள் என்று அழைக்கும் அதே பாரம்பரியம் அவளுடைய கணவனுக்கு "யோயாக்கிம்" என்ற பெயரைக் கொடுக்கிறது. எதற்காக யூசுப் அலி பாரம்பரியத்தின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு (e.g. in the Proto-Evangelion of James the Lesser) அதே பாரம்பரியத்தின் அடுத்த பகுதியை விட்டுவிடவேண்டும்? யூசுப் அலி அவர்கள் தன் வாதத்தை நிருபிப்பதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. இவர் சொன்ன பாரம்பரியத்தின் ஆதாரத்தை நாம் காணும் வரை, இவர் சொல்வதை நாம் நம்பமுடியாது. எனக்கு தெரிந்தவரை, முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் எதுவும் இல்லை. சில முஸ்லீம் விரிவுரையாளர்கள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பின்னாட்களில் எதையாவது உருவாக்கியிருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட பின் கொள்கை/பாரம்பரியம் நம்பத்தகுந்தது அல்ல.

 
இறுதியாக ஒரு கேள்வி: பெரிய உறவு முறையில் ஒரு நபர் தொடர்ச்சியாக இன்னாரின் மகள் (மகன்) அல்லது சகோதரி (சகோதரன்) என்று அழைக்கப்பட்ட வேறு சம்பவம் ஏதாவது குர்-ஆனில் உண்டா? (And a last question: Is there any other instance in the Qur'an where a person is consistently called daughter [son] or sister [brother] of people which are only wider relatives?)

 
எனவே ஒவ்வொருவரும் ஒரு நபருடனான தன்னுடைய உறவு முறையின் அடிப்படையிலேயே பெயரிடப்படுவதற்கு கடடைமப்பட்டிருக்க, அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான தந்தை, தாய் அல்லது சகோதரன், சகோதரியுடனான உறவை குறிப்பிடமால் வேறு இரண்டு தூரத்து உறவினர்களை எப்பொழுதும் தன்னுடைய "தந்தை" மற்றும் "சகோதரனின்" இடத்தில் வைத்து பெயரிடப்படுவது என்பது கண்டிப்பாக நிகழக் கூடியது அல்ல. ஒருவேளை இதுதான் ஒரே தீர்வு என்றுச் சொன்னால், இதனால் முஸ்லீம்களின் விளக்கமானது அடிப்படை விளக்கத்திலிருந்து இன்னும் அதிகமாக நீட்டப்படும் (அதாவது, விளக்கம் என்பது வேறு எதற்காகவும் அல்லாமல் இந்த ஒரு பிரச்சனையை விளக்கவேண்டும், அப்படியிராவிட்டால் அந்த விளக்கம் நம்பத்தகுந்தது அல்ல). இந்த விஷயத்தில் இது ஒரு உண்மைப்போலத் தோன்றும் செயற்கையான இஸ்லாமிய காரணமாகும். உண்மையில் ஆரோன் இம்ரானின் மகன் ஆவார், இது ஒரு நேரடி மற்றும் சரியான உறவாகும், மேலும் மற்றவர்கள் சகோதரிகள் என்றும் புதல்விகள் என்றும் இன்றைய வழக்கத்தின்படி பரவலாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

 
தாமஸ் பாட்ரிக்ஸ் ஹக்ஸ் (Thomas Patrick Hughes) என்பவர் தன்னுடைய "Dictionary of Islam", என்ற புத்தகத்தில் பக்கம் 328ல் இந்த விஷயத்தை குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:
 
 
"நிச்சயமாக இது விரிவுரையாளர்களின் சில குழப்பத்தின் விளைவு ஆகும். அல்-பைதாவி (Al-Baidawi ), அவள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்ததினால் 'ஆரோனின் புதல்வி' என்று அழைக்கப்பட்டாள் என்று கூறுகிறார். ஆனால் ஹுஸைன் என்பவர், இந்த வசனத்தில் குறிப்பிட்பட்டுள்ள 'ஆரோன் மோசேயின் சகோதரனாகிய ஆரோன் அல்ல' என்று கூறுகிறார்".
 
 
எனவே, இஸ்லாமியர்களின் இவ்விதமான முரண்பாடான விளக்கங்கள் "உண்மையிலேயே ஒரு பிரச்சனை உள்ளது" என்பதை காட்டுகிறது. ஒருவரும் திருப்திகரமான தெளிவான தீர்வை கொடுக்கவில்லை என்பது திண்ணம்.

 
குறிப்பு: மோசேயும், ஆரோனும் "மூஸா இபின் இம்ரான்" என்றும், "ஹாருன் இபின் இம்ரான்" என்று ஹதீஸ்களில் அழைக்கப்படுகிறார்கள். இதே போலத் தான் குர்-ஆன் 66:12ல் "மர்யம் இபினத் இம்ரான்" என்று அழைக்கப்படுகிறார்.

ஆங்கில மூலம்: Mary, Sister of Aaron & Daughter of Amram


இந்த தலைப்பைப் பற்றிய இதர இஸ்லாமிய ஆதாரங்களோடு கூடிய கட்டுரைகளை இங்கு படிக்கவும்: லஸ்: Is Mary the Sister of Aaron? , ஷாம் ஷமான்:Mary, the Mother of Jesus and Sister of Aaron .

 

 

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

பொதுவான கேள்விகளுக்கான தொடர் பதில்கள்

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

ஷாம் சாமான்
 
 
கேள்வி:


சுவிசேஷ நூல்களில், இயேசு சாப்பிட கனிகள் ஏதாவது இருக்குமா என்று பார்க்க ஒரு அத்திமரத்தினிடம் செல்கிறார் (மத் 21:18-22; மாற்கு 11: 12-14, 20-21). அந்த மரத்தில் கனிகள் ஒன்றும் இல்லாதிருப்பதைக் கண்டபோது அவர் அந்த மரத்தை சபித்தார். இந்த சம்பவத்தில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மாற்கு 11:13ம் வசனத்தின் படி, அந்த காலம் அத்தி மரம் கனி கொடுக்கிற காலமல்ல. இயேசு "இறைவனாக" இருந்தால் "அது அத்திப் பழத்திற்கான காலம் (Season) இல்லை" என்பதை ஏன் அறியாதிருந்தார்? அந்த காலம் அத்திப் பழ காலமாக இல்லாமலிருந்தது மரத்தினுடைய குற்றமாகாதபோதும் அதை அவர் ஏன் சபிக்க வேண்டும்?
 
 
பதில்:

அத்திமர காலமாக இல்லாதபோதும் இயேசு ஏன் அந்த மரத்தை சபித்தார் என்பதற்கு சரியான காரணம் உள்ளது. அத்திமரமானது கனி காலம் (Season) தொடங்குவதற்கு முன்பே சிறிய உருண்டை வடிவிலான அத்தி கனிகளை கொடுக்கும், அதை வழிப்போக்கர்கள் உண்பார்கள். புகழ்பெற்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் காலஞ் சென்ற எப்.எப். புரூஸ் (F.F. Bruce) அவர்கள் கிழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்:
 
 
'இயேசு செய்த இன்னொரு அற்புதம் என்னவென்றால் "கனிகொடாத அத்தி மரத்தை சபித்த அற்புதமாகும்." (மாற்கு 11:12-14), இந்த அற்புதம் அநேகருக்கு ஒரு இடறுதலாக காணப்படுகிறது. அவர்கள், இந்த அற்புதத்தை இயேசு செய்து இருக்கமாட்டார், யாரோ ஒருவர் "நடந்ததை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும்", அல்லது ஒரு உவமையாக சொல்லப்பட்டதை நடந்த ஒரு அற்புதமாக திரித்துக் கூறியிருக்கிறார்கள், அல்லது அதைப் போல ஏதாவது இருக்கும் என்று சொல்கிறார்கள். மற்றொருபுறம், சிலர் அந்த சம்பவத்தை வரவேற்கிறார்கள் ஏனென்றால், அவர்களுக்கு இந்த சம்பவமானது இயேசுவும் சில சந்தர்ப்பங்களில் காரணமில்லாமல் கோபப்படக் கூடிய சாதாரண ஒரு மனிதனே என்று காட்டுகிறது என்று நம்புகிறார்கள். எப்படியிருந்தாலும், அத்திமரத்தைப் பற்றிய புரிந்துக்கொள்ளுதல் அல்லது முழு அறிவு கிடைக்குமானால் இப்படிப்பட்ட தவறான விளக்கங்கள் தடுக்கப்பட்டிருக்கும். "அத்திப்பழக் காலமாயிரதாபடியால்" என்று மாற்கு எழுதுகிறார், ஏனென்றால் அது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக, "நல்ல அத்திப்பழமாக முழுமையடைவதற்கு" ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு முன் நடந்தது. உண்மையாக, இந்த வார்த்தைகளை அவர் சேர்ப்பதன் மூலம் தான் எதைப்பற்றிச் சொல்லுகிறார் என்பதை மாற்கு நன்கு அறிந்திருந்தார்.மார்ச் மாத இறுதியில் அத்தி இலைகள் காணப்படும் போது அவைகளோடு சேர்ந்து கொத்தாக சிறிய உருண்டை அத்திப்பழங்களும் தோன்றும், அதை அரபியர்கள் "டக்ஷ்" (taqsh) என்று அழைத்தனர். அவைகள் உண்மையான அத்திப் பழங்களுக்கு முன்னோடியாக தோன்றுபவை. இந்த "டக்ஷ்" என்ற பழங்களை விவசாயிகள் மற்றம் வழிப்போக்கர்கள் பசியாக இருக்கும் போது சாப்பிடுவார்கள். உண்மையான அத்திப்பழ காலத்தின் அத்திப்பழங்கள் உருவாகும் போது அவைகள் உதிர்ந்து விடும். ஒருவேளை அந்த அத்தி இலைகள் அந்த "டக்ஷ்களோடு" சேர்ந்து தோன்றவில்லை என்றால் அந்த மரமானது அந்த வருடத்தில் கனி கொடுக்காது என்று பொருள். எனவே, அந்த மரத்தில் அப்போதைக்கு பசியாற்றுவதற்கு ஏதாவது "டக்ஷ்" கிடைக்குமா என்று திரும்பிய நம்முடைய ஆண்டவருக்கு டக்ஷ் இல்லாமாலிருப்பது உண்மையான அத்திப்பழங்கள் வருவதற்கான காலத்திலும் அங்கே அத்திப்பழங்கள் இருக்காது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. எனவே அந்த மரத்தில் அத்தனை அழகான இலைத்தொகுப்புகள் இருந்தும் அந்த மரமானது ஒரு கனியற்ற, நம்பிக்கையற்ற மரமாகும்." (Bruce, Are The New Testament Documents Reliable? [Intervarsity Press; Downers Grove, Ill, fifth revised edition 1992], pp. 73-74; bold emphasis ours)
 
 
மற்றொரு குறிப்படப்படும் சுவிசேஷ அறிஞர் கிரெய்க் எஸ். கீனர் (Craig S. Keener) பின்வரும் ஆய்வை அளிக்கிறார்.
 
 
"பஸ்கா பண்டிகையின் நாட்களில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒலிவ மலைக்கு கிழக்கில் அத்தி மரங்கள் இலைகள் மிகுந்ததாக காணப்படும். வருடத்தின் இந்த சமயத்தில் அந்த அத்தி மரங்கள் பச்சையான தொடக்க அத்திப் பழங்களை மட்டும் கொண்டிருக்கும்.(அரபியர்கள் அவைகளை டக்ஷ் என்று அழைப்பார்கள்), அவைகள் ஏறக்குறை ஜூன் மாதத்தின்போது பழுக்கும் அல்லது அதற்கு முன்பே பச்சையான இலைகளை மட்டும் விட்டுவிட்டு உதிர்ந்து விடும். எனவே இலைகள் நிறைந்த ஒரு அத்திமரம் தொடக்க அத்திப் பழங்களை இழந்திருந்தால் அந்த வருடத்தில் அம்மரம் நிச்சயமாக கனிகளை கொடுக்காது". (Keener, A Commentary on the Gospel of Matthew [Wm. B. Eerdmans Publishing Company, July 1999], p. 504)
 
 
அவ்வாறாக, புதிய ஏற்பாட்டின் உண்மைக்கு எதிரான உதாரணம் என்று கருதப்பட்டவை உண்மையில் அதன் (புதிய ஏற்பாட்டின்) வரலாற்று ரீதியான நம்பகத்தன்மைக்கு வலிமையான விவாதமாக மாறுவதில் முடிவடைந்திருக்கிறது! இது சுவிசேஷ நூல்களின் உண்மைத் தன்மையை காட்டுகிறது, அதாவது எந்த இடத்தில் எந்த காலத்தில் நிகழ்ச்சிகள் நடந்தன என்பவற்றை "பஸ்கா பண்டிகையின் போது நடந்தது" என்றும், அத்திமரங்கள் ஒலிவ மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் மிக நுட்பமான காரியங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் இது மத்தேயு, மாற்கு சுவிசேஷ நூல்கள் இதர சுவிசேஷ நூல்களுக்கு முன்பாக எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது அல்லது எருசலேமின் வீழ்ச்சிக்கு முன் எழுதப்பட்டவைகள் என்று அதன் பழமைக்கு தகுந்த ஆதாரங்களை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த விளக்கங்களின் முழு விவரங்கள் எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுதும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.

 
இன்னும் அதிகமாக, அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்த இந்த காரியம் ஒரு உவமையாகவும் காட்டப்பட்டுள்ளது, இஸ்ரவேலுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்புக் குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு காரியமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது. மெசியானிக் அறிஞர் டேவிட் ஸ்டெர்ன் (David Stern) கூறுகையில்:
 
 
'…இயேசு அந்த மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்ததற்கு காரணம், பசியாற்ற வந்தவருக்கு அது கனி தராமல் ஏமாற்றியது தான், இனி அந்த மரம் வேறு யாருக்கும் பயன்படப்போவதில்லை, எனவே, மேசியாவே அதற்கு சரியான தண்டனையைக் கொடுத்தார். இதனால், இயேசு இங்கே ஒரு தீர்க்கதரிசன நாடகத்தை உவமையாக நடத்துகிறார் (லூக் 13:6-9 ல் கூறியது போல ஒரு உவமை). "தனக் (Tanakh)" என்று யூதர்கள் அழைக்கும் பழைய ஏற்பாட்டில் எரேமியா 19ம் அதிகாரத்தில் "ஒரு களிமண் பாண்டத்தை" கொண்டுவந்து உடைக்கும் படி" தேவன் கூறுகிறார். இதே போல எசேக்கியேல் 4,5ம் அதிகாரங்களில் "எருசலேமின் ஒரு மாதிரியைச் செய்து அதை எரித்துப் போடும் படி" எசேக்கியேலுக்கு தேவன் கட்டளையிடுகிறார். இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லி, செய்துக்காட்டிய எடுத்துக்காட்டுகளாகும். இதே போல ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் 21:10-11 வசனங்களில் காணலாம்.

 
கனி தரும் காலம் இல்லாத போதும் ஒரு அத்தி மரம் இலைகளோடு காணப்படுகிறது - அது தொலைவிலிருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு இலைகளோடு இருந்திருக்கிறது (வசனம் 12) - கனிகளுக்கான நிச்சயத்தை அளிப்பதாக இருந்தது. சாதரணமாக இஸ்ரவேல் தேசத்தில் அத்திப் பழங்களுக்கான தொடக்க காலம் ஜூன் ஆகும். ஆனால் பச்சையான பழங்களின் தொடக்க காலமானது (உன்னதப்பாட்டு 2:13) பஸ்கா பண்டிகைக்கு முன்பதாக இன்னும் வசந்தகால இலைகள் கிளைகளில் தோன்றுவதற்கு முன்பே தோன்றும்.

 
தேவனுடைய ஜனங்கள் நீதியென்னும் கனிகளை கொடுக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பதும், மற்றும் கனி தராத கிளைகளை அக்கினியிலே போடப்படும் என்பதும் நமக்கு தெரியும் (மத் 7:16-20; 12:33; 13:4-9, 18-23; யோவான் 15:1-8). இவ்வாறாக அந்த அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகப் பண்ணியது என்பது இஸ்ரவேலுக்கு ஒரு எச்சரிப்பாகும். நீதிமொழிகள் 27:18ன் படி "அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்". இயேசு இங்கே தன்னுடைய சீடர்களுக்கு தங்கள் எஜமானகிய தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது என்ன என்பதை கற்றுக் கொடுக்கிறார். அதாவது தேவனிடத்திலிருந்து வரும் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் (வசனம் 22). அப்படியிராவிட்டால் அவர்கள் உதிர்ந்துவிடுவார்கள். இயேசு எந்த ஒரு அற்புதத்தையும் தன்னுடைய கோபத்திலோ அல்லது மனம்போன போக்கிலோ ஒரு மாயவித்தைக்காரன் செய்வது போல செய்வதில்லை. அவருடைய ஒவ்வொரு அற்புதமும் ஒரு ஆவிக்குரிய முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது.' (Stern, Jewish New Testament Commentary [Jewish New Testament Publications, Inc., Clarksville Maryland, Fifth edition 1996], pp. 95-96; bold emphasis ours)
 
 
பழைய ஏற்பாடு அத்திமரத்தை இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்பிட்டுக் அடிக்கடி குறிப்பிடுகிறது.
 
 
"அவர்களை முற்றிலும் அழித்துப் போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களை விட்டுத் தாண்டிப் போகும் என்று சொல்." எரேமியா 8:13

 
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக் குறித்தும், இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப் பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 29: 15-19

 
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப் போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப் போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன். ஓசியா 9: 10,16

 
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்தமுதல் அறுப்பின் கனியும் இல்லை (none of the early figs that I crave). தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. மீகா 7:1-4

 
உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப் போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும். நாகூம் 3:12
 
 
 
எனவே மேலேயுள்ள மேற்க்கோள்கள் இயேசு ஏன் அத்திமரத்திற்கு அப்படி செய்தார் என்பதை விளக்குகிறது. பழைய ஏற்பாடு கூறுவது போல யேகோவா தேவன் குறிப்பாக இஸ்ரேவேல் ஒரு கனிகொடுக்கும் ஒரு மரம், மலடோ பட்டுப் போனதோ அல்ல என்பதற்கான அடையாளத்தை தேடுகிறார், அதையே கிறிஸ்துவும் தேடுகிறவராக வந்தார். எனவே ஆவிக்குரிய ரீதியில் இஸ்ரவேல் ஜீவனோடுதான் இருக்கிறது மேலும் தன்னுடைய தேவனை திருப்தி படுத்தக் கூடிய கனிகளை கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டிய தொடக்க அத்திப்பழங்களை (ஒசியா 9:10; மீகா 7: 1) காண்பதற்கு பதிலாக தேசம் ஆவிக்குரிய ரீதியில் மலடாகவும் மரித்தும் இருப்பதை கிறிஸ்து கண்டார். இஸ்ரவேலின் ஆவிக்குரிய மலட்டுத்தன்மையின் காரணமாக தேவன் தன்னுடைய அத்தி மரங்களை, தன்னுடைய திராட்சை செடிகளை வெட்டி அக்கினியில் சுட்டெரித்துப்போடுகிறார்.
 
 
 
"அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்." லூக்கா 13:6-9

 
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? " மாற்கு 12:1-9

 
"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். " மத்தேயு 23:37-39

 
"அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்." லூக்கா 19:41-44
 
 
 
இயேசு அத்தி மரத்தை சபித்ததின் அர்த்தம் இதுதான், ஒரு அடையாளமாக தேவன் தன்னுடைய உடன்படிக்கையின் ஜனங்களிடத்தில் ஆவிக்குரிய கனிகளை தேடி வந்தார் ஆனால் ஒன்றையும் காணாத அவர், அவர்கள் மீது தண்டனையை கொண்டு வருவார்.

 
எனவே அவர் அத்திமரத்தை சபித்ததில் எந்த தவறும் கிடையாது அதோடு இந்த செயல் அவருடைய பரிபூரண தெய்வீகத் தன்மையை குறைப்பதாகவும் இல்லை.

 
 
 

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

Answering Mist: குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா

Answering Mist: இஸ்லாமியராக மாற பணம் கொடுத்த முஹம்மது
 
குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 
 
 
முன்னுரை: மிஸ்ட் என்ற பெயரில் இஸ்லாமிய சகோதரர் ஒருவர், ஈஸா குர்‍‍ஆன் கட்டுரைகளில் பின்னூட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார். Dr. ஜாகிர் நாயக் அவர்கள் பற்றிய கட்டுரைக்கு நான் கொடுத்திருந்த ஒரு பின்னூட்டத்திற்கு, மிஸ்ட் அவர்கள் கீழ் கண்ட விதமாக மறுபின்னூட்டமிட்டார்.
 
 
Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.. //

மூலம்: பின்னூட்ட பகுதியைக் (comments section) காணவும்.
 
(மிஸ்ட் அவர்களின் மூழு பின்னூட்டத்தையும், அதற்கான என் பதிலையும் இந்த "Answer Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி" என்ற‌ கட்டுரையில் படிக்கவும்.

 
இந்த தற்போதைய‌ கட்டுரையில் அவரது மேலே கண்ட‌ குறிப்பிட்ட விமர்சனம் பற்றி காண்போம்.

அதாவது பணம் கொடுத்து மதம் மாற்றுவது என்பது "கூட்டிக் கொடுப்பதற்கு சமம், அல்லது அவ்வளவு கீழ்தரமானது" என்று கூறுகிறார். பணம் கொடுத்து மதம் மாற்றுவது என்பது கீழ்தரமானது என்பது தான் என் கருத்தும். ஆனால், மிஸ்ட் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று "இப்படி செய்வது கூட்டிக் கொடுப்பது" போன்ற பாவத்திற்கு சமமானது என்று கூறியுள்ளார்.

 
இவருக்கு இஸ்லாம் பற்றி தெரிந்திருந்தால், கு‍ர்‍ஆன் ஜகாத்தை யார் யாருக்குக் கொடுக்கச் சொல்கிறது போன்ற விவரங்கள் தெரிந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். இந்த கட்டுரையில் சில விவரங்களை நாம் காணப்போகிறோம். இந்த ஆதாரங்களின் படி "கூட்டிக் கொடுப்பது போன்ற பாவத்தை முஹம்மது செய்துள்ளார்" என்ற முடிவிற்கு மிஸ்ட் வரவேண்டியிருக்கும். ஏனென்றால், குர்‍ஆன் வசனமும், சஹீஹ் புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களும் சொல்கின்றபடி, பணத்தை கொடுத்தாவது ஒரு சிலரை இஸ்லாமியராக முஹம்மது மாற்றியுள்ளார்.

 
நம்முடைய ஆதாரங்கள் கீழ் கண்ட இஸ்லாமிய நூல்களிலிருந்து கொடுக்கப்படுகிறது:
 
  • குர்‍ஆன்
  • சஹீஹ் புகாரி ஹதீஸ்
  • சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்
  • இபின் கதீர் விரிவுரை
  • இபின் இஷாக்:முஹம்மதுவின் வாழ்க்கை சரிதை (சீரத் ரஸுல் அல்லாஹ்)

 
இனி குர்‍ஆன் 9:60ம் வசனத்தின் விளக்கத்திற்குள் செல்வோம்
 
 
1) பணத்தைக் கொடுத்து இதர மக்களை இஸ்லாமுக்கு ஈர்க்க குர்‍ஆன் கட்டளை:

 
குர்‍ஆன் 9ம் அதிகாரம் 60ம் வசன கூற்றின்படி, "ஜகாத்" அல்லது "ஸகாத்" என்றுச் சொல்லக்கூடிய பணத்திலிருந்து ஒரு பகுதியை "இஸ்லாமியரல்லாதவர்களை ஈர்க்க பயன்படுத்தவேண்டும்". இந்த வசனத்தை இரண்டு தமிழாக்கத்தில் படிப்போம்.
 
முஹம்மது ஜான் தமிழாக்கம்

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (குர்‍ஆன் 9:60)

 
பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும்204. அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும்,205 நாடோடிகளுக்கும்206 தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்130 (குர்‍ஆன் 9:60)
 
மிஸ்ட் அவர்களே, இஸ்லாமின் பக்கம் உள்ளங்கள் ஈர்க்கப்பட பணத்தை பயன்படுத்தலாம், கொடுக்கலாம் என்று இவ்வசனம் சொல்கிறதே, உங்களின் விளக்கம் அல்லது கருத்து இந்த வசனத்தைச் சொன்னவருக்கு பொருந்துமா? தெரிவிக்கவும்.
 
 
2) பீஜே அவர்களின் "உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்கள்" பற்றிய விளக்கம்:

 
பீஜே அவர்களும் "உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்கள்" என்பது "இஸ்லாமியரல்லாதவர்களைக் குறிக்கும்" என்று கூறுகிறார்.
 
204. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும் :

ஸகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிமல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். (திருக்குர்‍ஆன் 9:60)

உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது. பகைமை பாராட்டும் முஸ்லிமல்லாதவர்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அத்தகையோருக்கும் கொடுக்கலாம். 'உள்ளங்கள் ஈர்க்கப்பட' என்பதில் இவர்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழங்கியுள்ளனர். (நூல்: முஸ்லிம் 4275, 4277)

மூலம்: formats mine
 
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் தரப்படவேண்டும் என்று இவ்வசனம் சொல்கிறது என்று பிஜே அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். அதாவது, இஸ்லாமியர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை ஜகாத்தாக கொடுக்கவேண்டும். அதில் ஒரு பகுதியை காபிர்களுக்கு தரப்படவேண்டும், அதுவும் அவர்கள் இஸ்லாமின் பக்கம் திரும்பவேண்டும் என்பதற்காக தரப்படவேண்டும். எனவே, மிஸ்ட் அவர்களே, பணத்தின் ஆசைக்காட்டி இஸ்லாமின் பக்கம் ஈர்க்கக்கிறவர்கள் உங்களின் கருத்துப்படி "கூட்டிக்கொடுப்பவர்கள்", இது சரியாக இஸ்லாமுக்கு பொருந்துகிறதா? விளக்கவும்.

3) இபின் கதிர் இவ்வசனத்தின் விளக்கத்தை கீழ்கண்டவாறு கூறுகிறார்:
 
"இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்" என்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: "இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், "நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்" [*].

மூலம்: இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது (http://isakoran.blogspot.com/2009/08/blog-post.html ) 
 
மிஸ்ட் அவர்களே, இதை கவனியுங்கள்:

"நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் "

உங்கள் நபி கொடுத்தாராம், கொடுத்தாராம் கொடுத்துக்கொண்டே இருந்தாராம், எதுவரையில்? அந்த நபர் முஹம்மதுவை நேசிக்கும் நபராக மாறும்வரை கொத்துக்கொண்டே இருந்தாராம்... இது எதற்கு சமம் - சிறிது சொல்லமுடியுமா?

மிஸ்ட் அவர்களே உங்களின் கருத்துப்படி, இது ஆசைக் காட்டி மசியவைப்பதா? அல்லது லஞ்சம் கொடுத்து இஸ்லாமியராக மாற்றுவதா? அல்லது கூட்டிக்கொடுப்பதா?
 
 
4) சஹீஹ் புகாரி

 
சில நேரங்களில் முஹம்மது இஸ்லாமியரல்லாதவர்களுக்கு (அல்லது புதிதாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு) பொருட்கள்/பணம் தருவதைக் கண்டு " இதர இஸ்லாமியர்கள் கோபித்துக் கொண்டார்கள்", இன்னும் சிலர் இது சரியில்லை, நீதியில்லை என்று உங்கள் நபி மீது கோபம் கொண்டார்கள். பிறகு முஹம்மது அப்படிப்பட்டவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

மிஸ்ட் அவர்களே, கீழ் கண்ட புகாரி ஹதீஸ்களை படித்து உங்கள் கருத்தை திரும்பச் சொல்லமுடியுமா?
 
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4667

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், 'இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்' என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் 'நீங்கள் நீதி செய்யவில்லை' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3344

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, 'நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்" என்று கூறினார்கள். ………..

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4332

அனஸ்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றியின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். எனவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக் கொண்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'ஆம், (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ தான் செல்வேன்'' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4334

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்று கூட்டி, '(இந்தக்) குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போது தான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனல் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். எனவே, அவர்களுக்கு நிவராணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?' என்று கேட்டார்கள். அன்சாரிகள், 'ஆம் (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகளின் கணவாயில் தான் அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கில் தான்... செல்வேன்'' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4333

அனஸ்(ரலி) அறிவித்தார்

…………. பின்னர், நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்ட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஸாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, 'இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்'' என்று கூறினார்கள்.
 
5) சஹீஹ் முஸ்லீம் ஹதீஸ்

திர்மிதி ஹதீஸிலிருந்து இபின் கதீர் அவர்கள் விளக்கியபடியே, முஸ்லிம் ஹதீஸிலும் வந்துள்ளது. மிஸ்ட் அவர்களே, இந்த ஹதீஸ் சொல்வது ஆசைக் காட்டுவது ஆகாதா? இது கூட்டிக்கொடுப்பது ஆகாதா? சிறிது விளக்குங்களேன்.
 
...அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சஃப்வன் பி. உமய்யாவிற்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். அவர் மறுபடியும் அவருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள், மறுபடியும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். சஃப்வான் கூறியதாக ஸயத் பி. முஸய்யிப் கூறியதாவது, "நான் வெறுப்பவர்களில் அதிகமாக வெறுக்கும் நபராக அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் இருந்தார்கள், அவர் எனக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார், எதுவரையில் என்றால், நான் அதிகமாக நேசிக்கும் நபராக அவரை நான் நினைக்கும் வரையிலும் அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார்". (என் சொந்த மொழியாக்கம், இதன் மூலம் ஆங்கிலத்தில் கீழே உள்ளது)

Book 030, Number 5730:

…., and Allah's Messenger (may peace be upon him) gave one hundred camels to Safwan b. Umayya. He again gave him one hundred camels, and then again gave him one hundred camels. Sa'id b. Musayyib said that Safwan told him: (By Allah) Allah's Messenger (may peace be upon him) gave me what he gave me (and my state of mind at that time was) that he was the most detested person amongst people in my eyes. But he continued giving to me until now he is the dearest of people to me.
 
6) இபின் இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு

முஹம்மது பணத்தைக் கொடுத்து ஆசைக் காட்டி மட்டுமல்ல, இதர மக்களை பயமுறுத்தியும் இஸ்லாமுக்கு அழைத்துள்ளார்.
 
மாலிக் என்பவரிடம் கீழ் கண்டவாறு கூறும் படி இறைத்தூதர் சொன்னார்கள்:

"மாலிக் ஒரு முஸ்லிமாக மாறி தன்னிடம் வந்தால் அப்போது அவரது குடும்பத்தையும் சொத்துக்களையும் திரும்ப கொடுத்து, இன்னும் நூறு ஒட்டகங்களையும் தருவேன்"

.... இதைக் கேட்டவுடன் மாலிக் எழுந்து.... இறைத்தூதரிடம் சேர புறப்பட்டு வந்தார்... அவர் (முஹம்மது) மாலிக்கிற்கு அவரது குடும்பத்தையும், சொத்துக்களையும் கொடுத்து, பிறகு நூறு ஒட்டகங்களையும் கொடுத்தார்கள். மாலிக் மிகவும் சிறப்பான ஒரு முஸ்லிமாக மாறினார் (இபின் இஷாக், சீரத் ரஸுல் அல்லாஹ், பக்கம் 593)

The apostle told them to tell Malik that if he came to him as a Muslim he would return his family and property to him and give him a hundred camels. On hearing this Malik came out ... and rode off to join the apostle ... He (Muhammad) gave him back his family and property and gave him a hundred camels. He became an excellent Muslim. (Ibn Ishaq, Sirat Rasul Allah, p. 593)
 
மிஸ்ட் அவர்களின் கூற்றை இன்னொரு முறை படிப்பது நன்று:

//Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.. //
 
 
மிஸ்ட் அவர்களே உங்களின் வரிகளில் பயன்படுத்திய வார்த்தைகளின் படியெல்லாம் உங்கள் முஹம்மது செய்துள்ளார். அதாவது "பணம் கொடுத்து ஆசை வார்த்தைக் காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது" என்ற உங்களின் வார்த்தைகளின் சாராம்சத்தின்படி, அப்படியே முஹம்மது செய்துள்ளார்.

 
இந்த மாலிக் என்பவரை பாருங்கள், அவர் இஸ்லாமியராக மாறினால், அவரது குடும்பத்தை (மனைவி பிள்ளைகளை...) திரும்ப தருவாராம்... இன்னும் அவரது சொத்துக்களையே திரும்ப தருவாராம்... இன்னும் அதிகமாக (லஞ்சம்) நூறு ஒட்டகங்களைத் தருவாராம்....

யாராவது தன் சொந்த குடும்பம் திரும்ப கிடைக்கும் போது, தன் சொத்துக்கள் கிடைக்கும் போது, இன்னும் போனஸ்ஸாக நூறு ஒட்டகங்கள் கிடைக்கும் போது "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலில்லாஹி" என்று ஏன் சொல்லமாட்டான்?!?

மாலிக் என்பவர் ஒரு அறிவாளி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நான் இஸ்லாமியனாக மாறமாட்டேன் என்று மாலிக் சொல்லியிருந்தால், தன் மனைவி யாரோ ஒரு முஸ்லிமுடைய வைப்பாட்டியாகவோ (மிகவும் அழகாக இருந்தால் முஹம்மதுவின் வைப்பாட்டியாகவோ) அல்லது குர்‍ஆனின் வார்த்தைகளின் படி சொல்லவேண்டுமானால், "இஸ்லாமியர்களின் வலக் கரம் சொந்தமாக்கிக்கொண்ட ஆபாச ஆசைகளை தீர்க்கும் அடிமைப்பெண்ணாகவோ" மாறியிருப்பாள்.

அது மட்டுமல்ல தன்னுடைய உயிருக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே தான் மாலிக் சுலபமான வழியை புத்திசாலியான வழியை தெரிந்துக்கொண்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், "இப்படி இஸ்லாமுக்கு மாறிய மாலிக் ஒரு நல்ல இஸ்லாமியராக மாறினாராம்?!?..." (இஸ்லாமியர்களின் அகராதியின் படி "நல்ல முஸ்லிம்" என்றால் என்ன அர்த்தம் என்று வாசகர்கள் சிந்திக்கவும்).

முடிவுரை: அருமை மிஸ்ட் அவர்களே, கூட்டிக் கொடுத்தவர் யார்? என்று இப்போது புரிகிறதா?

குர்‍ஆனும் ஹதீஸ்களும் இஸ்லாமிய விரிவுரையாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை படித்துப்பார்த்து விமர்சனம் செய்யவேண்டும். முதலில் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொண்டு விமர்சியுங்கள், இல்லையானால்... அதிகமாக அவமானப்படவேண்டிவரும்.

நீங்கள் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள், புதிய தலைப்புக்களை எடுத்துத் தாருங்கள்.

உங்களின் இதர பின்னூட்ட பதிலில் சந்திக்கிறேன்....
 

Answering Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி

 
Answering Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி
(இஸ்லாமை விட்டு வெளியேறுதல்)
 
 
முன்னுரை: ஈஸா குர்‍ஆனின் "யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?" என்ற கட்டுரைக்கு மிஸ்ட் என்ற இஸ்லாமிய சகோதரர் இரண்டு பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார். அவரின் முதல் பின்னூட்டத்திற்கான பதிலை இங்கு (Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்) படிக்கலாம். இப்போது இரண்டாம் பின்னூட்டத்திற்கான பதிலைக் காண்போம்.
 
 
Mist Said:

தொடர்ச்சி:

// umar quoted:

3) உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை, அதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொன்று, மக்களை பயப்படவைத்து கேவலமான நிலையில் இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியெறுபவனை நாங்கள் தாக்குவதில்லை,என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் சட்டம்கொண்டு வந்து அதை சரியாக பின்பற்றட்டும், விரல்விட்டு எண்ணும் ஆண்டுகளில், இஸ்லாமின் நிலை அம்போ கதி தான்.

Mist Said:

எதுக்கு வேற எங்கயாவது போகணும் இந்தியாவில் முஸ்லிம்கள் தொகை கூடுதா, குறையுதா? இங்க ஒரு முஸ்லிம் மதம் மாறினால் யாரும் அவனை ஒன்னும் பண்ண முடியாது. இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய மதம் சரியில்லையின்னு மாற வேண்டியதுதானே? ஆனால் மாற்றமாக நல்ல பல இஸ்லாமிய அறிஞர்கள் இங்கிருந்துதனே தோன்றி கொண்டிருக்கிறார்கள்.
 
Umar's Reply:

மிஸ்ட் அவர்களே, நான் கேட்ட கேள்வி என்ன? இந்தியாவில் மதம் மாறினால் கொல்கிறார்கள் என்றுச் சொன்னேனா? இல்லையே!

[இங்கே அப்படி கொன்றால், கொல்கிறவர்களை முட்டிக்குமுட்டி தட்டி, லாக்கப்பில் வைத்து ஏறியிருக்கும் போதையை எல்லாம் இறக்கிவிடுவார்கள் நம் காவல் துறையினர்]

நான் கேட்டது, உங்கள் இஸ்லாமிய சட்டம் நடக்கும் பொற்கால அரசு நடக்கும் இஸ்லாமிய நாடுகளின் நிலையைச் சொன்னேன், அதைப் பற்றி விட்டுவிட்டு ஏன் ஜனநாயக நாட்டின் இஸ்லாம் பற்றி பேசுகிறீர்கள். இந்தியாவில் அப்படி கொல்வதில்லையே என்று பெருமையாக பேச உங்களுக்கு உரிமை இல்லை. இது ஜனநாயக நாடு. இங்கும் இஸ்லாமிய ஆட்சி நடந்தால் தானே உண்மை இஸ்லாம் வெளிப்படும்,

இந்தியாவின் பின்பற்றப்படும் இஸ்லாம் "மக்காவின் இஸ்லாம்", இந்தியாவில் இஸ்லாமியர்கள் வெளிக்காட்டும் இஸ்லாம் "அமைதி இஸ்லாம்", ஆனால், உண்மை இஸ்லாமை இங்கு பார்க்கமுடியாது, அதற்கு பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ, சௌதி அரேபியாவிற்கோ... செல்லவேண்டும்.

[மக்காவின் இஸ்லாம் என்றால், இஸ்லாமிய ஆட்சி நடக்காத இடத்தில் பின்பற்றப்படும் இஸ்லாமாகும், இஸ்லாமியர்கள் குறைவாக இருக்கும் இடங்களில் பின்பற்றப்படும் இஸ்லாமாகும். இங்கு இஸ்லாமின் உண்மை நாடி தெரிவதில்லை, இங்கு எல்லாரும் தூதர்களைப் போல அமைதியாளர்களாக காட்ட முயற்சி எடுப்பார்கள்.]
 
//Mist said:

இங்க ஒரு முஸ்லிம் மதம் மாறினால் யாரும் அவனை ஒன்னும் பண்ண முடியாது//
 
Umar's Reply

உண்மையாகச் சொன்னீர்கள் மிஸ்ட் அவர்களே, உண்மையைச் சொன்னீர்கள் "யாரும் அவனை ஒன்னும் பண்ண முடியாது" என்று உண்மையைச் சொன்னீர்கள். அதாவது "இந்தியச் சட்டம் இஸ்லாமியர்கள் மதம் மாறுபவர்களைக் கொல்ல அனுமதிக்கவில்லை, அதனால், உங்களால் அவர்களை ஒன்றும் பண்ணமுடியாது" என்றுச் சொல்கிறீர்கள்.

ஆனால், "ஒரு வேளை சட்டம் அனுமதித்தால்... இரத்த ஆறு ஓடும்... மண்டை ஓடுகள் தெருக்களில் கிடக்கும்.... கைகள் துண்டிக்கப்படும்... வெள்ளிக்கிழமை மதிய தொழுகை முடிந்ததும் நடு ரோட்டில் எல்லாரும் பார்க்கும் படி, தூக்கிலிடப்படுவான்.... இப்படி உங்கள் அமைதி இஸ்லாமின் கோர முகம் வெளிப்படும்... ".

ஆக, இங்கு உங்களால் முடியவில்லை, அதற்கு அனுமதி இல்லை, அதற்காக உங்களால் ஒன்னும் பண்ணமுடியாது.... இது தானே நீங்கள் சொல்ல வந்தது...!?!

என்னுடைய கேள்வியும் அது தான், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றால், "அது அமைதி மார்க்கம் என்பதை ஜனநாயக நாட்டில் மட்டுமே காட்ட ஏன் முயற்சி எடுக்கிறீர்கள்? பாகிஸ்தானில் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று காட்டவேண்டியது தானே! சௌதியில் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று காட்ட முயற்சி எடுக்கவேண்டியது தானே!....".

நாளைக்கு ஒருவேளை இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக மாறினால் (இஸ்லாமிய நாடாக மாறும் துர்பாக்கிய நிலை எந்த நாட்டிற்கும் வரக்கூடாது), இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கல்லெரிந்து கொல்லச் சொல்லும் போது, முதல் கல்லை நீங்கள் ("மிஸ்ட்") எறிவீர்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை, பாட் லக்.
 
Mist said:

இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய மதம் சரியில்லையின்னு மாற வேண்டியதுதானே?
 
Umar's Reply:

கண்டிப்பாக இஸ்லாமை விட்டு வெளியேறுவார்கள், ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அது என்ன நிபந்தனை என்று கேட்டால், "அவர்களுக்கு முதலில் முழு இஸ்லாமும் தெரியவரவேண்டும், முஹம்மது பற்றிய முழு வாழ்க்கை வரலாறும் தெரியவரவேண்டும்". இது தெரியாதவரையில், அவர்களுக்கு "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்ற பொய்யை உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் பசுமரத்தாணி போல அடித்து, அவர்களின் மூளையை சலவை செய்துக்கொண்டு இருக்கும் வரையில் இது நடக்க அதிக சத்தியக்கூறுகள் இல்லை.

அதனால், இஸ்லாமுக்கு முலாம் பூசி நீங்கள் இஸ்லாமியர்களை மூளைச் சலவை செய்துக்கொண்டு இருக்கின்ற இந்த காலத்தில், முலாம் பூசாத உண்மை இஸ்லாமை நாங்கள் சொல்ல முன் வந்துள்ளோம். எனவே, இன்னும் சில காலம் பிடிக்கும்.

நான் எழுதிய பின்னூட்ட வரிகளை சிறிது பாருங்கள் அவற்றில் "உண்மையாக இஸ்லாமை அறிந்துக்கொள்ளும்" என்ற சொற்கள் மிகவும் முக்கியமானவைகள்.

//Umar quoted:

உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை,//

முலாம் பூசப்பட்ட இஸ்லாமை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள் இஸ்லாமில் நிலைத்து இருப்பார்கள். இதைத் தான் இயேசு "சத்தியத்தை அறிவீர்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும்" என்றார், அதாவது, இஸ்லாம் பற்றிய சத்தியத்தை அறிந்தால், அந்த முஸ்லீம் அடிமைத் தனத்திலிருந்து விடுதலையாவான்.
 
//Mist said:

ஆனால் மாற்றமாக நல்ல பல இஸ்லாமிய அறிஞர்கள் இங்கிருந்துதனே தோன்றி கொண்டிருக்கிறார்கள்//
 
Umar's Reply:

மிஸ்ட் அவர்களே, "நல்ல" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிவியுங்கள். ஏனென்றால், இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாமிய ஜிஹாத் புரியும் நபர்களையும் "இஸ்லாமிய உலகம்" நல்லவர்கள் என்றே சொல்கிறது... அவர்களுக்கு புகழாரங்கள் சூட்டுகிறது. எனவே, உங்களின் அகராதியின் படி, தற்கொலை செய்துக்கொண்டு மற்றவர்களை கொல்பவனும் நல்லவனே, தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவனும் நல்லவனே, தன் சொந்த சகோதரியை கொலை செய்து நான் குடும்ப கௌரவத்தை காப்பாற்றினேன் என்றுச் சொல்பவனும் நல்லவனே. உங்களைப் பொருத்த மட்டில், உலகத்திற்கு எப்படி இருந்தாலும், உலகம் எப்படி நினைத்தாலும், "முஹம்மதுவின் வழியில் நடப்பவன், இஸ்லாமிய சட்டத்தின்படி நடப்பவன்" நல்லவன் தான். ஆனால், உலகம், "நல்லவன்" என்பதற்கு இந்த உங்களின் நிபந்தனையை தருவதில்லை.

உங்களுக்கு நேரமிருந்தால் "இஸ்லாமிய சட்டத்தின் படி நடப்பவன், முஹம்மதுவின் வழியில் நடப்பவன் எந்த வகையில் சமுதாயத்திற்கு நல்லவனாக இருக்கின்றான்" என்பதைப் பற்றி எங்களுக்கும், உலகத்திற்கும் விளக்கினால், நலமாக இருக்கும்.

உலகத்தில் "நல்ல" என்பதற்கும் "கெட்ட" என்பதற்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமாக பொருள் தருவார்கள். இதில் நீங்கள் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் எந்த வகையில் நல்லவர்களாக உங்கள் கண்களுக்குத் தெரிகிறார்கள் என்று எழுதினால் நன்றாக இருக்கும். இஸ்லாமிய அறிஞர்களின் நற்செயல்களைப் பற்றி உலகத்திற்கு தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 
Mist said:

உங்க ஆளுங்கே மாதிரி காசு பணம் கொடுத்தெல்லாம் எந்த முஸ்லிம் மிஷநரியும் மதம் மாற்றுவதும் கிடையாது, மேலும் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிரிகளான RSS ம் துணைக்கு இருக்கும் போது, இந்தியாவில் அல்லவா அதிகமான மக்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேற வேண்டும்..
 
 
Umar's Reply:

நான் தான் சொன்னேனே, முஹம்மதுவைப் போல சில மி(வி)ஷநரிகள் இருக்கத் தான் செய்கிறார்கள், இவர்கள் பணத்தை வைத்து எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனாலும் எல்லாரும் அப்படி இல்லையே.

பணத்தைக் கொடுத்தும் வன்முறையை பயன்படுத்தியும், பொய்யாக இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றுச் சொல்லியும் வாங்கும் கிறிஸ்தவர்களானாலும் சரி, முஸ்லிம்களானாலும் சரி, அதிக நாட்கள் தாக்கு பிடிப்பதில்லை. அதனால் தான் இஸ்லாமை ஏற்கும் அனேகர் இஸ்லாமியராக மாறின சில ஆண்டுகளிலேயே அந்த அடிமையிலிருந்து வெளிப்பட்டு விடுகின்றனர். முஹம்மது மரித்த பிறகும், இதே நிலை தான் இருந்தது, ஒரு பெரிய ரௌடி மரித்தவுடன் அந்த ஊர்க்காரர்கள் சந்தோஷப்படுவது போல, முஹம்மது மரித்தபிறகு அனேக நாடுகள் இஸ்லாமுக்கு தங்கள் முகத்தை அல்ல, தங்கள் முதுகை காட்டின, பிறகு இவர்களை வழிக்கு (இஸ்லாமிய வழிக்கு) கொண்டுவர முதல் காலிபா அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டாராம்.

எனவே, பணம் கொடுத்து வாங்கும் "கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முடிவு தேதி (Expiry Date) கண்டிப்பாக இருக்கும்".
 
Mist said:

உங்களை மாதிரி பல எதிர்கள் இஸ்லாத்தை அழிக்க என்னென்ன முயற்சிகளை எல்லாம் எடுத்தார்கள் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
 
Umar's Reply:

இஸ்லாமிய ஏதிரிகள் உங்களை அழித்ததை விட, இஸ்லாம் தன் எதிரிகளை அழித்தது தான் அதிகம். என்னவோ, இஸ்லாம் அமைதியான மார்க்கமாகவும், யார் எதிர்த்தாலும் அமைதியான முறையில் ஒன்றுமே செய்யாத மார்க்கமாக இருந்ததாகவும் பெருமையாக பேசுகிறீர்கள். தன்னை எதிர்த்தவர் யாராக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, அவளின் இரத்தம் மண்ணில் சிந்தப்பட்டு அல்லவா உங்கள் முஹம்மது மதினாவில் நிலைத்து இருந்தார்? என்ன மிஸ்ட் அவர்களே, இஸ்லாமுக்கு எதிரிகள் இருந்தார்கள், அவர்கள் எதிர்த்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றுச் சொன்னால், மூளைச் சலவை செய்யப்பட்ட முஸ்லீம்களில் சிலர் வேண்டுமானாலும் ஏற்கலாம்... மற்றவர்கள் இதற்கெல்லாம் மசிய மாட்டார்கள்.

எனக்கு இஸ்லாம் மீது அதிக நம்பிக்கையுண்டு, அதாவது "இஸ்லாமை ஒருவர் தனியாக வந்து அழிக்கவேண்டியதில்லை, அது தானாகவே அழிந்துவிடும்... இஸ்லாமின் கொள்கைகள் அடி தடி என்று இருப்பதால், ஒரு இஸ்லாமிய குழு இன்னொரு இஸ்லாமிய குழுவை அழிக்கும்... இதனை ஷியா மசூதிகளில் வெடிக்கும் வெடிகுண்டுகளும், சுன்னி இஸ்லாமிய மசூதிகளில் வெடிக்கும் வெடிகுண்டுகளும் சாட்சிச் சொல்லும்". இஸ்லாம் நிலைத்து இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்ளாதீர்கள், ஏதோ இஸ்லாமிய நாடுகளில் "சட்டத்தை பயன்படுத்தி" பயப்படவைத்து, இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் "இஸ்லாமின் உண்மை முகத்தைக் காட்டாமல், பொய்யான முகத்தைக் காட்டி, அதாவது மக்காவின் இஸ்லாமை காட்டி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது".

நான் இஸ்லாமை அழிக்க வரவில்லை, நான் சத்தியத்தைச் சொல்லவந்தேன், இஸ்லாமைப் பற்றிய உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவந்தேன்.. அவ்வளவு தான், ஒளி வந்ததும் இருள் தானாக அகலும்.. அது போல, உண்மையை அறியும் ஒவ்வொருவரும் இருளை விட்டு வெளியே வருவார்கள்.
 
Mist said:

நல்லது ஒன்னு இருந்தால் கெட்டதுன்னு ஒன்னு இருக்கணும்பாங்க அது மாதிரி நீங்களும் இருந்து விட்டு போங்க என்ன செய்வது.
 
 
Umar's Reply:

ஆமாம், நல்லது என்று ஒன்று இருந்தால், "இஸ்லாம் என்று" அதற்கு எதிரானது இருக்கத் தானே செய்யும், நீங்கள் சொல்வது சரியானது தான்.
 
Mist said:

எனவே உமரண்ணா வேலைக்கு ஆகாத இந்த வாதத்தை இனிமேலும் சொல்லிக்கிட்டு திரியாதீங்க என்ன.
 
Umar's Reply:

வேலைக்கு ஆகாத வார்த்தைகளை நான் பேசவில்லை, இந்த பின்னூட்டத்தை கொடுத்து "நீங்கள் தான் வேலைக்கு ஆகாத வார்த்தைகளை பேசியுள்ளீர்கள், அதாவது, ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்களை கொடுங்கள் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, என் மீது பாய்ந்தால் என்ன அர்த்தம்? கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லாமல், இப்படி வேலைக்கு ஆகாத வார்த்தைகளை பேசுவது நீங்கள் தான் என்பதை என் கட்டுரையையும், அதற்கான உங்கள் பின்னூட்டத்தையும் படிப்பவர்களுக்கு புரியும்".

உங்கள் இஸ்லாமிய அறிஞர் சொன்ன பொய்யை தமிழ் உலகம் அறியச் செய்வது "ஆகாத வேலையா?", நீங்கள் சொன்ன விவரங்களுக்கு புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்களை தாருங்கள் என்று கேட்பது, ஆகாத வேலையா? நல்லா இருக்கு கதை..
 
Mist said:

முடிந்தால் உங்க மிஷநரி களையெல்லாம் கூட்டிகிட்டு இஸ்லாத்திற்கெதிராக பிரச்சாரம் செய்து ஒரு 10 வருஷத்தில் இந்தியாவில் இஸ்லாமை இல்லாமல் ஆக்குங்களேன் பார்க்கலாம். இங்கே உங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது இல்லையா, வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் போது செய்து காட்டுங்களேன் உமரண்ணா.
 
Umar's Reply:

நல்ல ஐடியா தான், ஆனால், உங்களை நம்பமுடியாதே,.... ஜனநாயக நாட்டில் உங்களால் வெளிப்படையாக எதுவும் செய்யமுடியாது என்பது உண்மை தான்... ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் மறைவில் அமர்ந்துக் கொண்டு எல்லாம் செய்வார்களே....

இஸ்லாம் பற்றி உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னால் விடுவீர்களா?

யாரோ கார்ட்டூன் வரைத்தான் ஏதோ ஒரு நாட்டில் வரைந்தான் என்றுச் சொல்லி, வேறு ஒரு நாட்டில் கொலை செய்வது.. யார்? உங்களைப் போல இஸ்லாமியர்கள் தானே!

யாருக்குத் தெரியும், இஸ்லாம் பற்றி உண்மைகளை வெளிப்படியாக சொன்னால் (முஹம்மது கொள்ளையடித்தார், கற்பழித்தார், அனேக மனைவிகளை திருமணம் செய்தார், தன் மருமகளையும் திருமணம் செய்துக்கொண்டார் என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டினால்) , நீங்கள் தீவிரவாதிகளுக்கு அழைப்பு கொடுத்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை அதிகம் இருக்கிறது என்றுச் சொல்லி அவர்களை அழைத்தனுப்பி அவர்களை செயல்களில் ஈடுபடவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இப்போதே காஷ்மீர் பிரச்சனை, பாபர் மசூதி பிரச்சனை என்றுச் சொல்லி, அனேக தீவிரவாத செயல்கள் இந்தியாவில் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறது... இதில் கிறிஸ்தவர்கள் வேறு இன்னும் தீவிரவாத செயல்கள் செய்பவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமா சொல்லுங்கள்?

எனவே, எங்கள் வேலை சத்தியத்தைச் சொல்வது, அதுவும் மென்மையான முறையில் சொல்வது, மீதமுள்ளதை அவரின் கையில் கொடுத்துவிடுகிறோம்.

இங்கு இந்த சவால்கள் கொடுத்து பயன் இல்லை மிஸ்ட் அவர்களே, இஸ்லாமிய நாடுகளில் முதலாவது இப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டுவாருங்கள், அங்கு இஸ்லாமை விட்டு வெளியேறாதவர்களை கொலை செய்வதை தடுத்து நிறுத்துங்கள், பிறகு தெரியும்...?
 
Mist said:

Umar quoted

4) கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம், அதற்கு எதிர் மறையான மார்க்கம் தான் இஸ்லாம். இஸ்லாமிய நாடுகளில் இன்னும் எவ்வளவு தான் நீங்கள் கொடுமைப்படுத்தினாலும், கிறிஸ்தவம் இன்னும் வளரும் (கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு கணக்கில்லாமல் பிள்ளைகள் பெற்று கிறிஸ்தவத்தை வளர்க்க விரும்புவதில்லை, படுக்கை அறையில் கிறிஸ்தவத்தை வளர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.)

Mist said :

ஏன் உமரண்ணா அப்போ என்ன படுக்கையறை ஜெபம் பண்ணுவதற்கா? ஏன் உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை இந்த மாதிரி மட்டமான விமர்சனங்களின் மூலம் நிரூபிக்கிறீர்.
 
Umar's Reply:

இதை நான் வேண்டுமென்றுச் சொல்லவில்லை, சௌதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை நான் விசாரித்ததில், "ஏன் இத்தனை பிள்ளைகள் என்று கேட்டால்?" இஸ்லாமை வளர்க்கிறோம் என்று சொல்கிறார்களாம். எனவே, என்னுடைய காழ்ப்புணர்ச்சி இல்லை, இது தான் உண்மை. மட்டமாக நான் விமர்சிக்க வில்லை, மட்டமான சட்டங்களைப் பற்றிச் சொல்கிறேன், மட்டமான கோட்பாடுகளைப் பற்றிச் சொல்கிறேன், அவ்வளவு தான்.
 
Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.
 
Umar's Reply:

அதாவது முஸ்லீம்கள் படுக்கை அறையில் இஸ்லாமை வளர்க்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்காக நன்றி.

இப்போது "கூட்டிக் கொடுப்பது" என்று நீங்கள் சொல்லும் விவரம் பற்றி காண்போம். அதாவது, பணத்தைக் காட்டி, ஆசைக் காட்டி ஒருவரை ஒரு மார்க்கத்திற்குள் வரவழைப்பதென்பது ரொம்ப நாட்கள் தாக்குபிடிக்காது, கிறிஸ்தவர்களிலும் இப்படி சிலர் இருப்பது வருத்தப்படத்தக்கதே என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

பணம் கொடுத்து, ஆசைக் காட்டி மதமாற்றம் செய்யும் நபர்களை "கூட்டிக் கொடுக்கிறவர்கள்" என்று குற்றம் சாட்டுகிறீர்கள். இதே கருத்தில் நீங்கள் நிலைத்து இருக்கவேண்டும், சில உண்மைகள் தெரிந்த பிறகு "உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது?".

உங்களின் இந்த கருத்தின் படி "உங்கள் முஹம்மது அதாவது இஸ்லாமிய நபி அவர்கள் கூட‌ ஒரு கூட்டிக்கொடுப்பவர்" என்று அர்த்தமாகிறது. இதை நான் சொல்லவில்லை, உங்களின் கருத்துப்படி, அவரும் அந்த வகையிலேயே வருகிறார்.

என்னது? பணம் கொடுத்து, பொருட்கள் கொடுத்து முஹம்மது இஸ்லாமுக்கு அழைத்தாரா?
இல்லவே இல்லை!
இப்படி நடக்க வாய்ப்பே இல்லை!
இது இஸ்லாம் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு என்று சொல்வீர்கள்.

இப்படி சொல்லும் இஸ்லாமியர்கள் முதலில் குர்‍ஆன் 9:60ம் வசனத்தை படிக்கவேண்டும் மற்றும் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகளை படிக்கவேண்டும்:
 
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)
 
இந்த வசனம் பற்றியும், அதன் விரிவுரைப் பற்றியும், இன்னும் புகாரி, முஸ்லீம் ஹதீஸ்களின்படியும் "முஹம்மது பணத்தைக் கொடுத்து, இஸ்லாமுக்கு அனேகரை அழைத்துள்ளார், அப்படி சிலர் இஸ்லாமியராகவும் ஆகி இருக்கிறார்கள்". இதனை விளக்கும் இரண்டு தமிழ் கட்டுரைகள்.

1) Answering Mist: இஸ்லாமியராக மாற பணம் கொடுத்த முஹம்மது (குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பகிர்ந்தளிப்பு)

இந்த இரண்டு கட்டுரைகளை படித்து, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களை கண்ட நீங்கள், மிஸ்ட் அவர்களின் கருத்துப்படி, "முஹம்மதுவை நாம் என்னவென்று அழைக்க முடியும்?" இதற்கு பதில் மிஸ்ட் அவர்கள் கொடுத்த பின்னூட்டத்தில் உண்டா?
 
Mist said:

முதலில் உங்க ஆளுங்களை இந்த மாதிரி மட்டமான வேலையை நிறுத்த சொல்லுங்க, பவுலிஸ்தவம் காணாமல் போய்விடும்.
 
Umar's Reply:

போலி கிறிஸ்தவர்களில் சிலர் செய்யும் மட்டமான வேலையை நிறுத்தச் சொல்லி நான் போலி கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். ஆனால், உங்கள் முஹம்மது செய்த மட்டமான வேலையைப் பற்றி யார் தீர்ப்பு கூறப்போகிறார்கள்? மேலே படித்த இரண்டு கட்டுரைகளின் படி, பணம் கொடுத்து முஹம்மது பலரின் மனதை மாற்றியுள்ளார் (மட்டகரமான வேலையை செய்துள்ளார்). இவரை யார் இப்போது குற்றப்படுத்தப் போகிறார்கள், மிஸ்ட் அவர்களின் வார்த்தைகளே முஹம்மதுவை குற்றப்படுத்துகிறது.
 
Mist said:

உமரண்ணா உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் மக்கள் தொகை சம விகிதத்தில்தான் வளர்கிறது, முஸ்லிம் மக்கள் தொகை மட்டும் தனியாக வளர வில்லை, போன தலைமுறையில் பிள்ளைபேறு அதிகமாகத்தான் இருந்தது எல்லா மதத்திலும். மக்களுடைய மன மாற்றமும், அரசின் பிரசாரமும் மக்கள் தொகை வளர்ச்சியை ஓரளவுக்கு கட்டு படுத்தியுள்ளதை அறிவுள்ள யாவரும் ஒத்துக்கொள்வர். உண்மையான மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத உங்கள் மனம் பணமாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏனோ?

Bye

Mist.
 
Umar's Reply:

இந்திய அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும் பிரச்சாரங்களும் ஜனத்தொகை பெருக்கத்தை சிறிது குறைத்துள்ளது என்பது உண்மை தான், ஆனால், இப்படிப்பட்ட சட்டமில்லாத நாடுகளில், இஸ்லாமிய நாடுகளில் எப்படி ஜனத்தொகை வளருகிறது? இப்படி ஒன்றுக்கு நான்கு மனைவிகளை கட்டிக்கொண்டு, கணக்கில்லாமல் பிள்ளை பெற்றுக்கொண்டு இருந்து விட்டு, "உலகத்தில் இஸ்லாம் வேகமாக வளருகிற மார்க்கம்" என்று மார்த்தட்டுவது எந்த வகையில் நியாயம்? ஆம், இஸ்லாமியர்களின் வளர்ச்சி படுக்கை அறையிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை மட்டும் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

உங்களை அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை...