101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?
கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை? போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும். இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள் மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.
மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில் கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும் ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.
கி.பி 610 க்கு முன்னர், அதாவது ஜீப்ரீல் தூதன் முஹம்மது அவர்களை முதன் முதலாக குகையில் சந்திப்பதற்கு முன்பு அவரது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
முஹம்மதுவின் வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகளில், அவர் இஸ்லாம் அல்லது முஸ்லிம் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அவர் குர்ஆனைப் பற்றியும் கேள்விப்படவில்லை. ஒருபோதும் ஷஹதா (இஸ்லாமிய விசுவாச அறிக்கையை) ஓதவில்லை அல்லது ஒரு நாளைக்கு 5 முறை இன்று முஸ்லிம்கள் செய்வது போன்று, சிரம் பணிந்து தொழுகையை நடத்தவில்லை. முஹம்மது தனது வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகள், ஒரு முஸ்லீமாகவோ அல்லது அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாகவோ அல்லது அல்லாஹ்வின் மதத்தைப் பின்பற்றுபவராகவோ வாழவில்லை.
அவர் நபியாக மாறுவதற்கு முன்பு, குகைகளில் சுற்றித் திரிந்தார்.
அவருக்குத் தெரிந்த ஒரே “அல்லாஹ்” தலைமுறை தலைமுறைகளாக காபாவில் அமைதியாக அமர்ந்திருந்த 360 சிலைகளில் ஒரு சிலை தான் அல்லாஹ். முஹம்மதுவின் குடும்பத்தினர் காபாவை பராமரித்துக்கொண்டு இருந்தனர் (கோயில் தர்மகர்த்தா என்றுச் சொல்வோமே, அது போல அவரின் குடும்ப வம்சத்தார் காபாவின் தர்மகர்த்தாவாக இருந்தனர்).
அல்லாஹ்விற்கு மூன்று மகள்கள் இருந்தனர், அவர்களின் பெயர்களாவன: அல்-லத், அல்-மனாத் மற்றும் உஸ்ஸா ஆகும். அல்லாஹ்வின் இந்த மகள்களின் சிலைகளோடு சேர்த்து, அல்லாஹ்வின் சிலையையும், மற்றுமுள்ள சிலைகளையும் சுத்தம் செய்வது அவர்களின் வேலையாக இருந்தது. இந்த வேலையை ஒரு கால அட்டவணை போட்டுக்கொண்டு ஒவ்வொரு வம்சத்தினராக செய்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த பழங்குடியினரான மக்காவினரும், இதர சுற்றுமுள்ள இன மக்களும் வழிபடுவதற்கும் பிரார்தனைகள் செய்வதற்கும் வரிசைக்கிரமமாக அந்த 360 சிலைகள் காபாவில் வைக்கப்பட்டு இருந்தன.
முஹம்மது கேள்விப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகள் அனைவரும், அவருடைய வர்த்தகத்தின் போது, அவரோடு தொடர்பு கொண்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அந்த தீர்க்கதரிசிகள் யாரும் முஹம்மது வணங்கிக்கொண்டு இருந்த அந்த காபாவின் 360 சிலைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் முஹம்மது மற்றும் அவரது தந்தை அப்துல்லாஹ் அவர்களும் (பொருள்: அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அவரது முழு கோத்திரமும் அந்த பழங்குடியினரின் 360 சிலைகளையே வணங்கிக்கொண்டு இருந்தனர்.
முஹம்மது தமது முதல் நாற்பது ஆண்டுகள், காபாவில் இருந்த 360 சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்த ஒரு “பல தெய்வவழிப்பாட்டு பழங்குடியினராகவே” வாழ்ந்தார். முஸ்லிம்கள் இதை மறுக்க விரும்புகிறார்கள். ஆனால், அந்த நாற்பது ஆண்டுகளில் (ஜஹலியாவின் காலத்தில்), அந்த பல தெய்வ சிலைகளை வணங்கும் பழக்கங்களை, தொழுகை முறைகளை முஹம்மது எதிர்த்ததாக, நிராகரித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
என்றைக்கு அவர் தன்னை முதல் முஸ்லிமாக அறிமுகம் செய்தாரோ, ஒரு புதிய மதத்தை அறிமுகம் செய்தாரோ, அந்த மதத்திற்காக கட்டளைகளையும், ஐந்து தூண்களையும், இதர தொழுகைகளையும், குர்ஆன் ஓதுதலையும் அறிமுகம் செய்தாரோ, அன்று தான் அவர் அந்த பல தெய்வ வழிப்பாட்டு சிலைகளை எதிர்க்க நிராகரிக்க ஆரம்பித்தார்.
முஹம்மது ஒரு பேகன் (பல தெய்வ வழிப்பாட்டுக்காரர்) என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால், குர்ஆன் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராகவே சாட்சி சொல்கிறதே! முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு பல சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்தார் என்றுச் சொல்கிறதே! முஹம்மதுவிற்கு தாம் வெளிப்பாடு கொடுப்பதற்கு முன்பு, முஹம்மது அறியாதவராக இருந்தார் என்று அல்லாஹ் ஒப்புக்கொள்கின்றான்.
குர்ஆன் 42:52 ஐ ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்:
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
42:52. (நபியே!) இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹீயின் மூலமாக அறிவிக்கின்றோம். (இதற்கு முன்னர்) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீங்கள் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர்கள்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
42:52. மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
42:52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர் ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவிக்கின்றோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹீ மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீர்.
பீஜே தமிழாக்கம்:
42:52. இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை[344] மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.
குறிப்பு: அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட பீஜே அவர்களின் விளக்கத்தை படிக்கவும்.
40 ஆண்டுகளாக, முஹம்மது ஒரு போதும் ஸலாத் (அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது) செய்யவில்லை. மாறாக, பேய்கள் வசிப்பதாகச் சொல்லப்படும் இருண்ட குகைகளில் தியானங்களை செய்துக்கொண்டு இருந்தார்.
இங்கு ஒரு கேள்வி எழுகின்றது, அதாவது இஸ்லாம் பற்றியும், குர்ஆன் பற்றியும் எதையும் அறியாதவராக இருந்த காலத்தில், அந்த குகையில் அவர் எதனை தியானம் செய்துக்கொண்டு இருந்தார்? தன்னைப் பற்றி எதையுமே, தன் வேதம் பற்றி ஒன்றுமே அறியாத காலத்தில் முஹம்மது செய்த அந்த தியானச் செயலை அல்லாஹ் அங்கீகரித்திருப்பானா?
இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது.
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைக்கு மரண அடியாக அமைந்துள்ளது.
முதல் மனிதரான ஆதம் நபியை இறைவன் படைப்பதற்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் நியமித்து விட்டான் என்பதும், இதனால் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும் தான் அந்தக் கட்டுக் கதை.
பிறக்கும் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகப் பிறந்தார்கள் என்றால் நம்பிக்கை என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது; வேதம் என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது என்று 42:52 வசனத்தில் அல்லாஹ் கூறுவானா?
இறைத்தூதராக நியமிக்கப்பட்டவருக்கு ஈமான் இல்லாமல் இருக்குமா? வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் நபியாக இருக்கவுமில்லை, தாம் இறைத்தூதராக நியமிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இறைச்செய்தி வந்த பிறகு தமக்கு வந்தது இறைச்செய்தி தான் என்பதை ஆரம்பத்தில் அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வரகா என்பவர் உறுதி செய்த பிறகுதான் அவர்களுக்கே அது உறுதியானது. (பார்க்க: புகாரி 4, 3392, 4954, 6982)
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும், உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் கட்டுக்கதை என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம்.
"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்" ~தேவன் (உபாகமம் 18:20)[1]
"நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்" ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]
யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.
முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.
முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக விவரிக்கிறேன்.
I. உபாகமத்தின் உண்மை (I. THE DEUTERONOMY DEDUCTIONS)
வாதம் பிரதிவாதம் பற்றி இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன, அவைகள் Valid Logic மற்றும் True Premises ஆகும். இந்த இரண்டு விவரங்களும் நாம் சரியான முடிவு எடுக்க நம்மை அழைத்துச்செல்கிறது. ( The most basic argument form is the syllogism, and the most basic valid form of the syllogism is Modus Ponens.[3] The logical form of the following arguments is Modus Ponens; thus, they are logically valid: )
கீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:
வாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர்க்கதரிசி:
A1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால், அந்த நபர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" ஆவார். A2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார். —————————————————— A3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி
வாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்
B1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒரு கள்ள தீர்க்கதரிசி. B2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார். —————————————————— B3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி
மேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, எனவே, உண்மையான வாதங்களின் அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன. ஆக, இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய் (அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம் இந்த "அடிப்படை வாதங்களைப் பற்றி" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.
II அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.
II. PREMISES A1 AND B1 DEFENDED
அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்ட விவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது. அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராத வசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையான தீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது. "முகமது பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது" என்று முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படை வாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
முகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின் உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்கு அடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதே போல, "Brief Illustrated Guide to Understanding Islam " என்ற புத்தகத்தில் "முகமது பற்றி பைபிள் சொல்கிறது" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமான ஆதாரமாக காட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ் கண்டவாறு கூறுகிறார்:
"The Biblical prophecies on the advent of the Prophet Muhammad are evidence of the truth of Islam for people who believe in the Bible"
"முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளை நம்புகிறவர்களுக்கு "இஸ்லாம் உண்மையான மார்க்கம்" என்பதற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகும்."
உபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:
"உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்." (உபாகமம் 18: 18, 19)[4]
இந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்த புத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. நான் இங்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், "முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18: 18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்று கருதுகிறார்கள்). அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்கு அடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க முடியாதே! இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:
"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்." (உபாகமம் 18:20)
இந்த வசனத்தின் படி நாம் "ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)" இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்:
(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்று சொல்பவர்.
(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பவர்
முகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 and B1) தவிர்க்க முடியாது. மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம் 18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்று சொல்கின்றன. ( To sum up, Muslims have appealed to a passage in Deuteronomy 18, and that passage entails premises A1 and B1. Thus, according to Muslim claims, the first premise of each of the Deuteronomy Deductions is true.)
III அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.
III. PREMISES A2 AND B2 DEFENDED
"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது" என்ற இஸ்லாமியார்களின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் இறைவன் அனுப்பாத செய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம். இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார். ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், ஏனென்றால், அவர் அபகீர்த்தியான "சாத்தானின் வசனங்கள்" என்றுச் சொல்லக்கூடிய வசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.
சாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூத எழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்ப கால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம். சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:
(1) Ibn Ishaq, (இபின் இஷாக்) (2) Wakidi, (வாகிடி) (3) Ibn Sa'd, (இபின் சத்) (4) al-Tabari, (அல்-டபரி) (5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்) (6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்) (7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா) (8) Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா) (9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )
சிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்த சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையான அதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய "மூன்று சங்கிலித் தொடர்" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது [7]. ( three chains of transmission [isnad] ). இது மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த "சஹி அல்-புகாரி" என்ற ஹதீஸ் தொகுப்பும், சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாக உள்ளது (Number 4862, கிழே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த விவரங்கள் போக, குர்ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53) "பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு" பதில் அளிப்பதாக உள்ளது.
ஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது, உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள் நம்மை கட்டாயப்படுத்துகின்றன. (இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும் விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் - http://www.answering-islam.org/Responses/Saifullah/sverses.htm) இந்த சரித்திர ஆதாரங்கள் அனைத்தும் "சாத்தனின் வசனங்கள்" என்ற நிகழ்ச்சி ஒரு ஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன. சரித்திர ஆய்வாளர்கள், "உலக தலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை" ஆய்வு செய்ய " Principle of Embarrassment " என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கோட்பாடு சட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியர் " Annette Gordon-Reed " என்பவர், இந்த கோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:
"Declarations against interest are regarded as having a high degree of credibility because of the presumption that people do not make up lies in order to hurt themselves; they lie to help themselves."[8]
"தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களை காயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மை உண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்."[8]
மேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம் "சாத்தானின் வசனங்களோடு" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, "முகமதுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதையில்லை" என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டி இருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்; ஒருவேளை இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள் தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்ற முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லி இது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.
சாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ள ஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது. இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த சரித்திரத்தில் "சாத்தான் வசனம்" பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.
அல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):
அல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இன மக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம் மிகவும் வேதனையுற்றார். அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காக இறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில் விரும்பினார். தன் இன மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இன மக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதனால், அவர் தன்க்குள் தானே போராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமா என்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
மற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)
அவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இன மக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான் அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:
"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்" (Al-Tabari, பக்கம். 108)
கடைசியாக முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேக தெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதற்கு பிரதிபலனாக "தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால், இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate), அந்த மசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ, நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்"(Al-Tabari, பக்கம். 109)
அந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும் குறுகிய காலம் வரை தான் நிலைத்தது, அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களை புகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அது சாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார். அல்லாவிற்கு எதிராக இவரின் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால் முகமது புலம்பினார்: "நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச் சொன்னேன்"(பக்கம் 11). இருந்தபோதிலும், "கப்ரியேல்" தூதன் முகமதுவை தேற்றினார், மற்றும் "எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்" என்று அவருக்கு அறிவித்தார். இந்த நம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம் குர்ஆனிலும் காணமுடியும்:
"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்." (குர்ஆன் 22:52)[9]
"And We did not send before you any apostle or prophet, but when he desired, the Shaitan made a suggestion respecting his desire; but Allah annuls that which the Shaitan casts, then does Allah establish His communications, and Allah is Knowing, Wise." (Surah 22:52)[9]
குர்ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களை சோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லா அனுமதிக்கிறாராம்.
சாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத குர்ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்று மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதாவது இஸ்லாமின் நபி குறைந்த பட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாக கொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம் ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10]. ஆக, முஸ்லீம்களின் ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள் உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.
IV சாத்தியமான மறுமொழிகள்
(IV. POSSIBLE REPLIES)
வாதமூலக்கூறுகளாகிய A1,A2,B1 மற்றும் B2 போன்றவைகளை நான் ஏற்றுக்கொள்வதற்கு சரியான காரணங்கள் நமக்கு இருப்பதால், முடிவுகளாகிய A3, B3 இரண்டையும் நாம் ஏற்றுக்கொள்வது சரியானதாகும். இந்த வாதங்கள் நமக்கு முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை காட்டுகின்றது. இருந்தபோதிலும், முஸ்லீம்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் எப்படி இதனை மறுக்கிறார்கள் என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்கமாக காண்போம்.
முஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்து வராத ஒரு வெளிப்பாடு ஆகும் என்று ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் இந்த வழியில் போனால், "உபாகமம் 18:18,19"ம் வசனங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாக இருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள் சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.(அதாவது, பைபிளில் உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள் சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ, அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச் சொல்வார்கள்) உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் "முகமது ஒரு நபி" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு வசனம் திருத்தப்பட்டது காரணம் அவ்வசனம் "முகமது ஒரு கள்ள நபி" என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.(While it is alarmingly common for Muslims to pick and choose which passages in the Bible are correct (i.e. everything that agrees with Islam is correct, but everything that disagrees with Islam was corrupted by evil Jews and Christians), no one is going to be convinced by the claim that one verse in Deuteronomy 18 proves the prophethood of Muhammad, while another verse in the same passage is corrupted because it proves that he was a false prophet.)
ஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள், உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும். மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசன வசனம் தாம், முஸ்லீம்கள் "தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க" முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும். எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்து ஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்த முன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பது நிச்சயம். ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார். அப்படியானால், இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது நிரூபனமாகும். அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள் விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லை என்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது, இது முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.
ஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தை விட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது. உபாகமம் 18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும், அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை, ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள் நிரூபிக்கட்டும், இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபி பொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள் மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.(Muslims who want to deny A1 and B1 must therefore show that these premises are false by arguing that genuine prophets can indeed deliver false revelations and speak in the names of false gods. I would love to see Muslims attempt to defend such an untenable position!)
முகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது, ஆனால், A2 மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும். அப்படியானால், முகமது புறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ள அதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களை செய்யவேண்டும்.
முதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின் (கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில் விவரிக்கவேண்டும் (அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதை நிருபிக்கவேண்டும்)
இரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையை மறுப்பதற்கான காரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதி வைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள். (இதற்கு பதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்து இருக்கலாம்).
மூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa'd, al-Tabari, Ibn Abi Hatim, Ibn al-Mundhir, Ibn Mardauyah, Musa ibn 'Uqba, and Abu Ma'shar போன்றவர்கள் தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்று நிரூபிக்கவேண்டும் (இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது)
நான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்) தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்று தெரிவிக்க பயன்படுத்திய "சங்கிலித் தொடர் (Chains of Authority)" முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.
ஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ் தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சில விவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள் விளக்கவேண்டும்.
அல்-புகாரி இப்படியாகச் சொல்கிறது:
நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். (4862) [11]
The Prophet performed a prostration when he finished reciting Surat an-Najm [Surah 53], and all the Muslims and Al-Mushrikun (polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allah and in His Messenger Muhammad) and jinn and human beings prostrated along with him. (4862)[11]
புறசமயத்தார்கள்(Pagans) முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate) செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர் தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்ன சாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.
ஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், "அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின் வசனங்களை சொல்லியுள்ளார்கள்" என்றுச் சொல்லும் குர்ஆன் சூரா 22:52ஐ விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம் சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் உள்ளது.
ஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்ற எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாக பில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது மற்றும் ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்று முகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம் எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக "முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்று நம்பவேண்டும்" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும். (Seventh, they must show non-Muslims why we should reject all the available evidence and believe that Muhammad was spiritually reliable, when, as all informed Muslims will admit, Muhammad was the victim of black magic (a spell cast by a Jewish magician) and, at one point, was convinced that he was demon-possessed. )
இதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசு பிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம் செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தை சொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? (முகமதுவின் ஆன்மீக பிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் : "சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)")
இஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களை விளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை. உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம் புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்பவருக்கும் இடையே "முகமதுவின் நபித்துவம் - prophethood of Muhammad " என்ற தலைப்பில் நடந்த விவாதம் பற்றிச் சொல்வேன். இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, " இது குர்ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்" என்றுச் சொல்கிறார். ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காக சிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை, இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridicules polytheism). உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில் உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.
முஸ்லீம்கள் குர்ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக, முகமது 53வது சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அதன் மென்மையைக் கண்டு புறசமயத்தார்கள்(pagans) சிரவணக்கம் செய்தனர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற இஸ்லாமியர்கள் கூறுவது என்பது ஒரு ஏமாற்று வேலையாகும். சஹி அல்-புகாரியை விட பல ஆண்டுகள் முந்தைய சரித்திர நூலாகிய இபின் இஷாக்வுடைய சரித்திர வெளிச்சத்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹதீஸ் மிகவும் சரியாக பொருந்துகிறது. ஏன் புறசமயத்தார்கள் சூரா 53க்கு தங்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்தினார்கள் என்று சிந்தித்துப்பார்க்கும் போது, நமக்கு கிடைக்கும் நம்பத்தகுந்த காரணம் என்னவென்றால், முகமது, அவர்கள் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன வசனங்களே ஆகும் என்பது மிகவும் தெளிவாகும், இதைத்தான் ஆரம்ப கால இஸ்லாகிய சரித்திர ஏடுகள் சொல்லும் விளக்கமுமாகும்.
இது வரை நாம் சிந்தித்த விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றிய சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பலவீனமான நேரத்தில், முகமது சோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பல தெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும். இதன் பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது. அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின் உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாத முடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதாவது, முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதாகும்.
V. மதிப்பீடு
V. ASSESSMENT
முடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம் என்னவென்றால், என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடிப்படை வாதங்கள்) இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early Muslim Historians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபி மக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். தற்கால முஸ்லீம்கள், முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க, உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்று ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தை கொடுத்துள்ளார்கள். உபாகமத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாக இருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, அது என்னவென்றால், "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்பதாகும்.
உபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with true premises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒரு நேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான். இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் இந்த வாதங்களை தீவிரமாக ஆராய்ந்து, சோதித்து, அதற்கு ஆதாரங்கள் உண்டா என்று பரிசோதித்து, கடைசியில் வாதங்களை மறுக்காமல், அதற்கு பதிலாக, முடிவுரையை மட்டும் மறுத்தால், இவர் எப்படிப்பட்டவர் என்றால், "உண்மையை தெரிந்துக்கொள்ள விருப்பமில்லாதவர் மற்றும் தான் வளர்க்கப்பட்ட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மனிதராகவே நமக்கு தென்படுவார்". எனக்கு என் அனுபவம் கற்றுக்கொடுத்ததின் படி பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே போல முஸ்லீம்களிலும் பலர் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட முஸ்லீம்கள் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய முதலாவது சத்தியம் என்னவென்றால், தாங்கள் நபி என்றுச் சொல்லும் முகமது ஒரு தீர்க்கதரிசியே அல்ல என்பதாகும். அதே போல இரண்டாவது சத்தியம், தாங்கள் நபி என்றுச் சொல்லும் இயேசுக் கிறிஸ்து ஒரு நபியை விட மேன்மையானவர் என்பதாகும். (இந்த இரண்டாம் சத்தியம் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்)
குறிப்புகள்:
1 Bible quotations are from the New American Standard Bible, Updated Edition. 2 The History of al-Tabari, Volume VI: Muhammad at Mecca, W. Montgomery Watt and M. V. McDonald, trs. (Albany: State University of New York Press, 1988). 3 Modus Ponens takes the form:
1. If P, then Q. 2. P. ——————— 3. Therefore, Q. Here we may substitute various elements for P and Q, giving us, for instance: 1. If Fido is a dog, then Fido is a mammal. 2. Fido is a dog. ——————— 3. Therefore, Fido is a mammal.
4 Ibrahim, I. A. A Brief Illustrated Guide to Understanding Islam (Houston: Darussalam, 1997), p. 33. 5 See, for example, "Muhammad in the Bible?" 6 For references, see "Muhammad and the Satanic Verses." 7 Ibn Hajar, quoted in Allam Shibli Nu'mani, Sirat-un-Nabi, Volume 1, M. Tayyib Bakhsh Budayuni, tr. (New Delhi: Kitab Bhavan, 2004), p. 164. 8 Annette Gordon-Reed, Thomas Jefferson and Sally Hemings: An American Controversy (Charlottesville: University of Virginia Press, 1997). 9 Qur'an quotations are from the M. H. Shakir translation. 10 One might object that Muhammad did not actually speak in the names of the pagan gods. That is, he did not say, "I come to you in the name of Manat." Instead, he spoke in the name of Allah, and merely approved of the intercession of the pagan gods. However, the point of the passage in Deuteronomy is clearly that anyone who promotes polytheism is a false prophet. And Muhammad certainly promoted polytheism on this occasion. 11 Sahih Al-Bukhari, Volume Six, Muhammad Muhsin Khan, tr. (Riyadh: Darussalam, 1997).
இஸ்லாமை வளர்க்கவேண்டும் என்று உழைக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் "முகமது எவ்வளவு நல்லவராக வாழ்ந்தார்" என்று மற்றவர்களுக்கு போதிப்பார்கள். " இன்றைய மனித இனத்திற்கு முகமதுவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என்றுச் சொல்லுவார்கள். பல முஸ்லீம்களிடமும் முஸ்லீம்களில்லாதவர்களிடமும் முகமதுவைப் பற்றிப் பேசிப் பார்த்ததில் ஒன்று மட்டும் எனக்கு மிகவும் தெளிவாக புரிந்துவிட்டது. அது என்னவென்றால், இவர்கள் முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் விவரங்களை, புத்தகங்களை படிக்கவில்லை என்பது தான் அது. மற்றும் முகமது தன் வாழ்க்கையில் என்னென்ன செய்தார் என்று இவர்களுக்கு தெரியவில்லை. அவர் செய்த பல செயல்களில் ஒன்று தான் " மற்றவர்களை கொடுமைப்படுத்துவது ".
முதன் முதலாக முகமதுவின் வாழ்க்கை சரிதையை எழுதியவர் மதினாவில் பிறத இபின் இஷாக் (85-151 ஹிஜரி) என்பவராவார். இந்த சரிதையில் "கைபர்" என்ற பட்டணத்தை முகமது கைப்பற்றிய பிறகு என்னென்ன செய்தார் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். இந்த நிகழ்ச்சியை இபின் கதிர்[1] ஏற்றுக்கொண்டுள்ளார் மற்றும் அதைப் பற்றி எழுதியும் உள்ளார்.
கைபர் பட்டணம் பற்றிய மிதமுள்ள விவரங்கள் ( THE REST OF THE AFFAIR OF KHAYBAR )
கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான்(T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் " நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, " இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள்(Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)
THE REST OF THE AFFAIR OF KHAYBAR
Kinana b. al-Rabi`, who had the custody of the treasure of B. al-Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came (T. was brought) to the apostle and said that he had seen Kinana going round a certain ruin every morning early. When the apostle said to Kinana, "Do you know that if we find you have it I shall kill you?" he said Yes. The apostle gave orders that the ruin was to be excavated and some of the treasure was found. When he asked him about the rest he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr b. al-`Awwam, " Torture him until you extract what he has," so he kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud. (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)
முகமதுவின் இந்த செயல், அவருடைய நடத்தையைப் பற்றிய மிகவும் முக்கியமான விவரத்தை நமக்கு போதிக்கிறது. தன் இலக்கை அடைவதற்கு கொடுமைபடுத்துவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய மனிதனாக முகமது உள்ளார். இந்த நிகழ்ச்சியில், முகமதுவிற்கு அல்-நதிர் என்ற இனமக்களின் "பொக்கிஷங்கள்" தேவைப்பட்டது. அந்த பொக்கிஷ சாலையின் பாதுகாவலன் அதை முகமதுவிற்கு கொடுக்கவில்லை. அதனால், அவனை கொடுமைப்படுத்தும் படி முகமது கட்டளையிட்டார். முகமதுவின் தோழர்களுக்கு ஒரு மனிதனை எப்படி கொடுமைப்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரியும், எனவே, அவனை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர் தான் முகமது என்பவர். முகமது விரும்பினால் மற்றவர்கள் மீது பரிதாபப்பட்டு அவர்களை மன்னிக்கமுடியும், அதே நேரத்தில் தன் அரசாங்கத்தை விஸ்தரிக்கச் செய்வதற்காகவும் பணத்திற்காகவும் மற்றவர்களை கொடுமைப்படுத்தவும் அவரால் முடியும். இந்த வகையில் பார்க்கும் போது, உலக சரித்திரத்தில் வாழ்ந்த சாதாரண அரசர்கள் மற்றும் சர்வாதிகாரிகள் போல இவரும் செயல்பட்டுள்ளார்.
முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.
இயேசுவின் வாழ்க்கையே எல்லாரும் பின்பற்றத் தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளதென்று நான் சொல்வேன். நீங்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும், அவரை பின்பற்றவும் உங்களை நான் அன்புடன் அழைக்கிறேன். பைபிளில் இயேசுவைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள இந்த தொடுப்பை க்ளிக் செய்யவும்.
Endnotes
[1] Ibn Kathir, Al-Sira al-Nabawiyya, translated as, The Life of the Prophet Muhammad, (tr. Prof. Trevor Le Gassick), Reading, UK: Garnet Publishing Limited, 2000, vol. 3, p. 268.
COMPARING THE BIBLE AND THE QUR'AN (How to do it Accurately) By Samuel Green
தமிழாக்கம் ( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்)
கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கும் போது, சில நேரங்களில் பைபிளையும் குர்ஆனையும் ஒன்றையொன்று ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக கீழ் கண்ட விதங்களில் (தலைப்புக்களில்) அவைகளை ஒப்பிடுகிறார்கள்.
வேதங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது (Preservation of text )
வேதங்களின் அதிகாரபூர்வமான தொகுப்புக்கள் (Formation of canon )
இயேசு, பெண்கள், போர்கள் போன்ற தலைப்புகள் குறித்து வேதங்கள் என்ன போதிக்கின்றன (Teaching about Jesus, women, warfare, etc. )
விஞ்ஞான பிழையின்மை (அ) ஆதாரம் (Scientific accuracy )
முரண்பாடுகள் (Contradictions)
நானும் இப்படிப்பட்ட ஒப்பிட்டு முறையைத் தான் கடந்த காலத்தில் செய்துவந்தேன். உண்மையில் இது ஒரு பிழையுள்ள மற்றும் நம்மை தவறான வழியில் நடத்தக்கூடிய "ஒரு ஒப்பிட்டு முறையாகும்". இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
காரணம் 1: பைபிள் மற்றும் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலை (Reason 1. The Context of the Bible and Qur'an)
குர்ஆன் முகமதுவின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவரங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் சொல்கிறது. முகமது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சூழ்நிலைகளுக்கு பதிலாக குர்ஆன் வசனங்களைச் சொன்னார் அல்லது அவருக்கு வசனங்கள் வெளிப்பட்டது. ஆனால், அந்த சூழ்நிலைகள் (அ) சந்தர்பங்கள் என்ன? போன்ற விவரங்கள் குர்ஆனில் எழுதப்படவில்லை. அதாவது, குர்ஆன் தன் சொந்த வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), கால வரிசை விவரங்களையும்(Chronology) கொண்டு இருக்கவில்லை. குர்ஆனை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அதன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தெரிந்துக்கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையையும், காலவரிசை முறையையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், குர்ஆனுக்கு வெளியே உள்ள "இஸ்லாமிய பாரம்பரிய" நூல்களாகிய "ஹதீஸ்களையும், சீராவையும் (Hadith or Sira literature)" நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நூல்கள் நமக்கு குர்ஆன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையை சொல்கின்றன. இஸ்லாமிய அறிஞர் Habib Ur Rahman Azami (ஹபீப் உர் ரஹ்மான் அஜாமி) "குர்ஆன் ஹதீஸ்கள் மீதும் சீராவின் மீதும் ஆதாரப்பட்டுள்ளது " என்று மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ஹதீஸ்கள் பயனற்றவை என்றும், அதிகார பூர்வமற்றது என்றும் அவைகளை ஒதுக்கிவிட்டால், குர்ஆனில் உள்ள பெரும்பான்மையான வசனங்களின் பொருளும், அவைகளை புரிந்துக்கொள்வதும் முடியாமல் போய்விடும். (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)
(I)t is almost impossible to understand or explain the meaning of a large number of Qur'anic verses if the Traditions are rejected as useless and inauthentic. (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)
ஆனால், பைபிள் வித்தியாசமானது. பைபிள் தன் வசனங்களை புரிந்துக்கொள்ள தேவையான சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் வெளிப்பாடுகள் உலகம் உண்டானது எப்படி என்ற விவரங்களோடு ஆரம்பிக்கிறது, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்து கடைசியில், உயிர்த்தெழுதல் காலத்தைப் பற்றி சொல்லி விட்டு, சரியாக முடிவடைகிறது. பைபிள் பல கட்டளைகளை கொடுக்கும் போது அல்லது நற்செய்தியை அறிவிக்கும் போது, அவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில்(Context) வெளிப்பட்டது என்ற விவரங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறது. ஆகவே, நீங்கள் பைபிளை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு தேவை பைபிள் மட்டும் தான்.
இறைவனுடைய வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டுமோ அது போல, பைபிள் தன் சுயதேவையை தானே பூர்த்திசெய்துக்கொள்ளும் தகுதியுடையதாக உள்ளது. எனவே, பைபிளை குர்ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் மற்றும் அது தவறான முடிவுக்கு கொண்டுபோகும். (The Bible is self-sufficient, as the word of God should be. Therefore to compare the Bible to the Qur'an alone is misleading and inaccurate.)
காரணம் 2: பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் (Practices and Beliefs)
இஸ்லாமின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றிய விவரங்கள் குர்ஆனில் இல்லை.
"முகமது சொன்னது, செய்தது" என்று சொல்லக்கூடிய "சுன்னா-Sunnah" என்பது குர்ஆனுக்கு துணையாக உள்ள அடுத்தபடியான நூல்கள் ஆகும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் சில சந்தர்பங்களில் இந்த "சுன்னா" குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது அல்லது "சுன்னா" வின் கை குர்ஆனைவிட ஒரு படி மேலே நிற்கிறது.
உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்லட்டும், அதாவது குர்ஆன் தினமும் மூன்று முறை நமாஜ் செய்யவேண்டும்(24:58 and 11:114) என்று சொல்லும் போது, சுன்னா "ஐந்து முறை" தினமும் நமாஜ் செய்யவேண்டும் என்று சொல்கிறது (முஸ்லீம்கள் இன்று பின்பற்றுவது "சுன்னா" நிர்ணயித்த தினமும் 5 முறை நமாஜ் செய்வதைத்தான், குர்ஆன் சொல்வதை அல்ல ).
இன்னும் சில சந்தர்பங்களில் இஸ்லாமின் ஆரம்ப கால பழக்கவழக்கங்களை பார்க்கும் போது, சில பழக்கங்கள், "சுன்னா" விற்கு முரண்பட்டவையாக கூட இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், குர்ஆன் வெளிப்படையாக எல்லா கட்டளைகளையும் சொல்லவில்லை , இஸ்லாமின் அடிப்படை கட்டளைகளையாவது குர்ஆன் முழுமையாக சொல்வதில்லை. அதாவது, குர்ஆன் "நமாஜ் (தொழுகை)" செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது, ஆனால், எப்படி செய்யவேண்டும்? என்று சொல்வதில்லை. எப்படி நமாஜ் செய்யவேண்டும்? என்ற வழிமுறை முழுக்க முழுக்க "சுன்னா"வின் மீது ஆதாரப்பட்டுள்ளது. (Cyril Glass鬠"Sunnah", The Concise Encyclopedia of Islam, pp. 381-382.)
குர்ஆன் தினமும் தொழவேண்டிய தொழுகையாகிய "நமாஜ்" என்ற சலாவை(Salah) கடமையாக்கி அதை கட்டளையிட்டுள்ளது, மற்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற சில விவரங்களை (like Qiyam, Ruku`, Sujud and Qira'ah) குர்ஆன் சொல்கிறது. ஆனால், நமாஜை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்பதையும், இந்த நமாஜ் சம்மந்தப்பட்ட இதர செயல்பாடுகள் எந்த வரிசையில் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்கள் குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதே போல, ஹஜ்(Hajj) என்னப்பட்ட "மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரை" என்பது ஒரு மதசம்மந்தப்பட்ட கடமை என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், ஹஜ் என்பதை எந்த ஒழுங்கில்(Method) செய்யவேண்டும்? ஹஜ் செய்யும் போது என்னென்ன சாம்பிரதாயங்களை(Formalities) எப்படி செய்யவேண்டும்? போன்ற விவரங்களை குர்ஆன் விவரிப்பதில்லை. ஹஜ்ஜை எப்படி செய்யவேண்டும் என்று சரியான வழிமுறையை நபியே செய்துகாட்டியுள்ளார். (Habib Ur Rahman Azami, pp. 10-11.)
குர்ஆன் மற்றும் சுன்னா(Sunnah) என்ற இரண்டின் உதவியுடன் மட்டுமே இஸ்லாம் சட்டம்(Islamic Shariah) முழுமைபெறும். (Habib Ur Rahman Azami, p. 5.)
எப்படி தொழவேண்டும்? எப்போது தொழவேண்டும்? மற்றும் என்ன சொல்லி தொழவேண்டும்?ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதை எப்படி செய்யவேண்டும்? சுன்னத்து(circumcision) எப்படி செய்யவேண்டும்? போன்ற, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பெரும்பான்மையாக முகமதுவின் செயல்பாடுகளிலிருந்து(சுன்னா) வருகிறது . இஸ்லாமுக்கு சுன்னா(Sunnah) என்பது மிக முக்கியமானது, ஆனால், சுன்னா என்பது குர்ஆனிலிருந்து வரவில்லை, அதற்கு பதிலாக அது ஹதீஸ்களிலிருந்தும், சீராவிலிருந்தும் வருகிறது. மறுபடியும் நாம் கவனிக்கும் பொது, பைபிள் கோட்பாடுகள் இப்படி இல்லை. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் நம்மை இரட்சிப்பதற்காக என்ன செய்தார்? மற்றும் இதனால் தன் பெயர் எப்படி கனப்படுத்தப்படும் மற்றும் நாம் எப்படி வாழவேண்டும்? போன்றவற்றை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. பைபிள் நம்முடைய ஞானத்திற்கும் விடுதலைக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, பைபிளை குர்ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் (inaccurate) மற்றும் அது தவறான முடிவுக்கு(misleading) கொண்டுபோகும்.
மிகச் சரியான ஒப்பிடும் முறை ( A More Accurate Comparison )
இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, அதாவது பைபிளை குர்ஆனோடு ஒப்பிடுவது என்பது சரியான ஒப்பிடுதல் அல்ல. ஏனென்றால், பைபிள் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும். ஆனால், குர்ஆன் இஸ்லாமின் அஸ்திபாரம் அல்ல. மாறாக, குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா இவை மூன்றும் இஸ்லாமின் அஸ்த�=As��Aாரமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை நேர்மையாகவும், சரியான முறையிலும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இவ்விரு மார்க்கங்களின் முக்கியமான புத்தகங்களை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். ( If you want an honest and accurate comparison between the books of Christianity and Islam then you must compare the essential books of both religions.)
ஹதீஸ்கள் பற்றிய சில விவரங்கள்: "ஹதீஸ் - hadith" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு பொருளின் விவரம் அல்லது செய்தி (an account or news about something) " என்பதாகும். ஒரு ஹதீஸின் அளவு ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு பக்கம் அளவிற்கோ இருக்கும். இஸ்லாமைப் பொருத்தவரை முகமது என்ன சொன்னாரோ மற்றும் அவர் என்ன செய்தாரோ அது தான் ஹதீஸ்களின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதைத் தான் "சுன்னா" என்றுச் சொல்வார்கள், ஆக, ஹதீஸ்களில் இருப்பது "சுன்னா" ஆகும். ஹதீஸ்கள் பலவகையில் மிகப்பெரிய தொகுப்புகளாக உள்ளது. முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்கள் என்ன என்று பேராசிரியர். மசுத்-உல்-ஹசன் அவர்கள் விளக்குகிறார்.
முசன்னப் ("Musannaf"[1]) முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
... அல்-புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் மிகவும் உயர்ந்ததாகவும் உண்மையானதாகவும் மதிக்கப்படுகிறது, எனவே இவை இரண்டும் "அல்-சஹிஹை - Al-Sahihain" ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரபூர்வமான ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது.
Al-Bukhari
Muslim
மஸ்நத் - "Musnad"[2] முறைப்படி மிகவும் புகழ்பெற்ற ஹதீஸ் "அஹமத் இபின் ஹன்பல் " (கி.பி. 855 )தொகுத்த ஹதீஸ் தொகுப்பாகும்.
ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்களில், முகமது நபி என்ன சொன்னாரோ அல்லது செய்தாரோ போன்ற செய்திகளை மட்டும் அது உள்ளடக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷியா இமாம்கள்(அறிஞர்கள்)சொன்னதும் செய்ததும் அது உள்ளடக்கியுள்ளது.
ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முஹம்மத் இபின் யாகுப் அல்-குல்லுனி (கி.பி. 939)
முஹம்மத் அல்-ஹும்மி (கி.பி. 991)
தஹிர் அல்-ஷரிப் அல்-முர்தஜா (கி.பி. 1004)
முஹம்மத் அல்-துசி (கி.பி. 1067) (Prof. Masud-ul-Hasan, History of Islam, vol. 1, p. 613.)
"முவட்டா மாலிக் - Muwatta of Malik" என்ற பெயரில் ஒரு முக்கியமான ஹதீஸ் தொகுப்பும் உள்ளது.
சீராவைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். "சீரா"க்கள் என்பது முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிய சரிதைகள் ஆகும். இவைகள் முகமதுவின் வாழ்க்கையின் சூழ்நிலையையும், கால வரிசை முறையையும் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையும், கால வரிசை முறையும் தான் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலையும்(Context), காலவரிசையு(Chronology)மாக இருக்கிறது. பழமைவாய்ந்த இரண்டு சீராக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
( Muhammad ibn Ishaq (d. 773 C.E.) via ibn Hisham's (d. 840 C.E.) recension, Sirat Rasul Allah. (English translation 798 pages[3].)
Muhammad ibn Sa'd (d. 852 C.E.), Kitab al-Tabaqat al-Kabir, (English translation, 1097 pages[4].))
Ibn Ishaq
Ibn Sa'd
இக்கட்டுரையை படிக்கும் நீங்கள், இஸ்லாம் மார்க்கத்திற்கு குர்ஆன் மட்டுமல்லாமல், இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் இருப்பதை கவனிக்கமுடியும். இந்த இதர புத்தகங்களின் அளவை பார்க்கும் போது அவைகள் குர்ஆனை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது.
புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் உள்ள வசனங்களின் எண்ணிக்கை குர்ஆனின் மொத்த வசனங்களாகிய 6236 வசனங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு முன்னாள் இஸ்லாமிய அறிஞர் ஒரு முறை எனக்கு கீழ்கண்டவாறுச் சொன்னார், அதாவது, "இஸ்லாமில் 10% குர்ஆன் மற்றும் 90% ஹதீஸ்கள் (ஹதீஸ் மற்றும் சீரா)" என்றார். குர் ஆன் என்பது ஒரு "வரை படத்தின்" நான்கு பக்கங்களிலும் போடப்பட்டு இருக்கும் சட்டங்கள்(Frame) போன்றது. குர்ஆன் சில எல்லைகளை குறித்துக் கொடுக்கும், ஆனால் அந்த படத்தில் வரையப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் ஹதீஸ்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ( The Quran is like the frame of a picture. It sets some boundaries, but the details of the picture are provided by the traditions. )
சில செயல்முறை விளக்கங்கள்: (Some Application)
1. பைபிளை குர்ஆனோடு ஒப்பிடும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக நடந்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை இனி நிறுத்திவிடவேண்டும். அவர்கள் இனி "குர்ஆன் தனக்குள் தானே முழுமையானது அல்ல" என்று மக்களுக்கு போதிக்கவேண்டும். இனி பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமில் உள்ள முக்கியமானதாக கருதப்படும் இதர அனைத்து புத்தகங்களையும் ஒப்பிடுங்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் இப்படி நேர்மையற்ற முறையில் பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிட்டு வாதாடுவதை, இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உடனே தைரியம் கொண்டு அவர் செய்துக்கொண்டு இருக்கும் இந்த தவறை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.
2. "பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியானது" தான் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டு ஏமாந்துப் போகாதீர்கள். இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்தவம் என்பது பைபிள் ஒன்றின் மீது மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் குர்ஆன் மீது மட்டுமல்ல, அதோடு கூட ஹதீஸ்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லீம் "இரண்டு புத்தகங்களையும்" ஒப்பிடுங்கள் என்று உங்களிடம் கூறினால், உடனே நீங்கள் "நேர்மையான முறையில்" ஒப்பிடவேண்டுமானால், குர்ஆனோடு கூட ஹதீஸ்களையும், சீராவையும் பைபிளோடு ஒப்பிடவேண்டும் என்று அழுத்திச்சொல்லுங்கள்.
3. ஒரு வேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு "கிறிஸ்தவரல்லாதவராகவோ" அல்லது ஒரு "முஸ்லீமாகவோ" இருப்பீர்களானால்,"உண்மையில் குர்ஆனும் பைபிளும் ஒரே வகையான புத்தகங்கள் இல்லை" என்பதை நினைவில் கொள்ளவும். குர்ஆன் என்ன வசனங்கள் சொல்கிறதோ அந்த வசனங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை(சூழ்நிலையை - Context )அது சொல்வதில்லை அல்லது இஸ்லாமில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகளைப் பற்றிய சூழ்நிலையை குர்ஆன் சொல்வதில்லை. இவைகள் வேறு புத்தகங்களிலிருந்து வருகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் அவன் பின்பற்றவேண்டிய எல்லா கோட்பாடுகளையும் பைபிள் தன்னிடம் கொண்டுள்ளது.
4. நாங்கள் "இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, பைபிள் ஒன்றை மட்டும் நீங்கள் நம்பினால் போதும் என்றுச் சொல்கிறோம்.
5. ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.
பின் குறிப்புகள் :
[1] Where the hadiths are ordered according to topic. [2] Where the hadiths are ordered according to narrator. [3] Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998. [4] Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir, (tr. S Moinul Haq) New Delhi: Kitab Bhavan, 2 volumes, no date.
References
Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, U.K.: UK Islamic Academy, 1995. Prof. Masud-ul-Hasan, History of Islam, Delhi: Adam Publishers & Distributors, 2002. Cyril Glass鬠The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989.
ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம் ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.
தமிழாக்கம் முற்றிற்று
நன்றியுரை: நான் சகோதரர் சாமுவேல் கிரீன் அவர்களுக்கு மெயில் அனுப்பி, ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்க்க அனுமதி கெட்டபோது, உடனே எனக்கு அனுமதி கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு)
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இயேசு இறைமகனா ?" என்ற புத்தகத்தில் நான்காவது பகுதியில், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா ஆள் மாறாட்டம் செய்து இயேசுவை எடுத்துக்கொண்டார் என்று எழுதுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மரித்தார், மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்று பைபிள் சொல்வதும், கிறிஸ்தவர்கள் நம்புவதும் தவறானதாகும், குர்ஆன் சொல்வது தான் சரியானது என்று சொல்கிறார். இதற்கு ஆதாரமாக குர்ஆன் 4:155 – 159 வசனங்களை ஆதாரமாக காட்டுகிறார்.
பிஜே அவர்கள் புத்தகத்திலிருந்து:
இயேசுவைப் பற்றி
அவரை (இயேசுவை) அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் (கர்த்தர்) தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (கர்த்தர்) மிகைத்தவராகவும் ஞானமுடையோராகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் 4:155-159)
குர்ஆன் சொல்லும் இந்நிகழ்ச்சியில் அனேக பிரச்சனைகள் உள்ளது. மட்டுமல்ல, இது குர்ஆனுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இப்படி இயேசுவின் சிலுவை நிகழ்ச்சியை அல்லா மாற்றி சொல்வதினால், அல்லா எதிர் காலத்தைப் பற்றி ஞானமில்லாதவராக தென்படுகிறார், மற்றும் இயேசுவின் சீடர்களை ஏமாற்றியவராக மாறுகிறார். இதுவே, அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துக்கொள்ள கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்.
பிஜே அவர்களின் இந்த வசனங்களுக்கு பதிலாக கீழ் கண்ட கட்டுரையை முன்வைக்கிறேன் .
இந்த கட்டுரையின் ஆசிரியருக்கு நான் மெயில் அனுப்பி, அனுமதி பெற்று, அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
பி.ஜே அவர்களுக்கு இக்கட்டுரையை நான் பதிலாக முன் வைப்பதால், இக்கட்டுரை சம்மந்தப்பட்ட பிஜே அவர்களது எல்லா கேள்விகளுக்கும் முடிந்த அளவிற்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆன் அளித்த இதர பதில்கள் :
முஸ்லீம்களுக்கு வேண்டுகோள் : என் அருமை தமிழ் முஸ்லீம்களே, நான் ஒரு பதில் எழுதினால், அது யாருக்காக எழுதப்படுமோ அவர்கள் தான் பதில் அளிக்கவேண்டும் என்பதில்லை. குர்ஆனை நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் பதில் அளிக்கலாம், முடிந்தால்.
கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் : என் அருமை கிறிஸ்தவர்களே, பிஜே அவர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், உங்களில் பலரும் அதில் பங்கு பெற்று கேள்விகள் கேட்டு இருப்பீர்கள். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், இக்கட்டுரையை குறைந்தது பத்து பேருக்காவது அனுப்புங்கள் . ஈஸா குர்ஆன் தளத்தையும், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தையும் அறிமுகம் செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் பிஜே அவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர் பதில் அளிந்து இருப்பாரானால், அதை (கேள்வியும், பிஜே அவர்கள் அளித்த பதிலும்) எனக்கு இந்த மெயில் விலாசத்திற்கு ( isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com ) அனுப்புங்கள். நான் என் கருத்தை அல்லது பதிலை எழுத முயற்சி செய்வேன். இது கிறிஸ்தவர்கள் இஸ்லாமை இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
ஈஸா குர்ஆனின் இதர இஸ்லாம் கட்டுரைகளையும், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தள கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு ஈஸா குர்ஆன் அளித்த பதில்களை(மறுப்புக்களை)யும் படிக்கவேண்டுமானால், கீழ் கண்ட தொடுப்புகளை க்ளிக் செய்யவும்.
பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்
(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்ஆனின் பதில்)
முன்னுரை:
தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் " அப்போஸ்தலர் பவுலைப் பற்றி கீழ் கண்டவாறு " எழுதுகிறார்.
"பவுல் வாக்கு மூலம்
இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே .
கர்த்தருக்கு சித்தமானால், "இயேசு இறைமகனா" என்ற புத்தகத்தில் பி.ஜே அவர்களது எல்லா கிறிஸ்தவ சம்மந்தப்பட்ட கருத்துக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்வேன். முதலாவதாக, பவுல் பற்றி பி.ஜே அவர்கள் சொல்லும் கருத்துக்கு என் பதிலை இக்கட்டுரையில் தருகிறேன்.
பி.ஜே அவர்கள் பவுல் மீது வைக்கும் குற்றச்சாட்டு :
"இயேசுவிற்கு பிறகு, முக்கடவுள் (Trinity – திரித்துவ) கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தவர் "
"திரித்துவ கொள்கையை உருவாக்கியது" பவுல் என்ற முஸ்லீம்களின் வாதம், தவறானது மற்றும் ஆதாரமற்றது .
இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே பல வித்தியாசங்கள் உண்டு. அடிப்படை கோட்பாடுகளிலேயே இவ்விரண்டும் வேறுபடுகின்றன.
ஆனால், இஸ்லாமியர்கள் கீழ் கண்ட கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்:
1. இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி மட்டுமே.
2. இயேசுவின் போதனைக்கும் முகமதுவின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே செய்தியைத் தான் போதித்தார்கள்.
3. அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்தவத்தை கெடுக்க இயேசு சொல்லாத, பைபிளில் இல்லாத "திரித்துவ கொள்கையை" உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார்.
இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல என்பதை கீழ் கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.
திரித்துவ கொள்கை பைபிளின் உயிராகும், அது பவுலின் கற்பனை அல்ல
இக்கட்டுரையில் "திரித்துவ கொள்கை" என்றால் என்ன என்று நாம் பார்க்கப்போவதில்லை. புதிய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது, இயேசு என்ன சொன்னார், இயேசுவின் சீடர்கள் என்ன சொல்கிறார்கள், கடைசியாக பவுல் என்ன சொல்கிறார் என்று பார்க்கப்போகிறோம். பவுல் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையானாலும், இயேசுவும், அவர் சீடர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தாலே போதும், பி.ஜே அவர்கள்(இஸ்லாமும்) பவுலின் மீது சாற்றும் குற்றம் ஆதாரமற்றது என்பது விளங்கும் .
[பழைய ஏற்பாட்டில் திரித்துவம்: பழைய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தனி கட்டுரையில் காணலாம். இப்போதைக்கு, பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகள் உதவும்.
புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, இயேசுவும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.
1. புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்:
புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரித்தஆவியானவர் என்று பல வசனங்கள் வருவதை பார்க்கலாம். இயேசுவும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார், இயேசுவின் சீடர்களும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக பவுல் இதைப் பற்றி எழுதுகிறார்.
ஆனால், முஸ்லீம்கள், இயேசு சொல்வதையும், பவுல் அல்லாத மற்ற சீடர்கள் சொல்வதையும் காற்றிலே விட்டுவிட்டு, பவுல் தான் இக்கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார் என்று தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள்.
1.1 நற்செய்தி நூல்களில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் விவரங்கள்:
முஸ்லீம்களின் கருத்து தவறான கருத்தாகும். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது அப்போஸ்தலன் பவுல் அல்ல, அதை எழுதியவர்கள் இயேசுவின் சீடர்கள் ஆவார்கள்.
மூன்று நற்செய்தி நூல்களில் பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே இடத்தில் இடைபடும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையிலிருந்து ஏறிவரும் போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மீது இறங்குகிறார், மற்றும் வானத்திலிருந்து பிதாவாகிய தேவன் "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன்" என்றுச் சொல்லும் சத்தம் வானத்திலிருந்து வருகிறது.
இந்நிகழ்ச்சி மத்தேயு (3:16-17), மாற்கு(1:10-11) மற்றும் லூக்கா(3:21-22) என்ற நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை பவுல் எழுதவில்லை என்பதை முஸ்லீம்கள் நம்பவேண்டும். வேண்டுமானால், முஸ்லீம்களின் வழக்கமான பதிலாக சொல்லப்படும் " ஆரம்ப காலத்தில் இந்நிகழ்ச்சி நற்செய்தி நூல்களில் இல்லை, பின்னாட்களில் இந்நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சேர்த்து எழுதினார்கள்" என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மத்தேயு 3:16இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
1.2 இயேசுவின் வார்த்தைகளில் திரித்துவம் :
இயேசு பல முறை பிதா என்றும், பரிசுத்த ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்.
யோவான்: 14:8. பிலிப்பு அவரை நோக்கி, ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப்போதும் என்றான்.9. அதற்கு இயேசு, பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னைஅறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவைஎங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
யோவான்: 10:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
இயேசு சென்ற பிறகு பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்புவதாகவும் சொல்லியுள்ளார். கீழ் கண்ட வசனத்தில் இயேசு, பிதாவைப் பற்றியும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும் குறிப்பிடுவதை காணலாம்.
யோவான்: 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார் .
இது போல பல சந்தர்பங்களில் இயேசு பிதா என்றும், ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை முதல் நான்கு நற்செய்தி நூல்களை படித்தால், தெரிந்துக்கொள்ளலாம்.
[ஒன்றுக்குள் ஒன்று(யோவான் 10:30) என்றால் கடவுள் எனப் பொருளா? என்ற பி.ஜே அவர்களின் கருத்திற்கு தனி கட்டுரையில் பதில் அளிக்கிறேன்]
1.3 இயேசுவின் கட்டளை: பிதா, குமாரன், ஆவியானவரின் பெயரில் ஞானஸ்நானம்
இயேசு தன் சீடர்களுக்கு கடைசியாக கொடுத்த கட்டளையில் மிகவும் அழகாக திரித்துவத்தின் மூன்று நபர்களை குறிப்பிடுகிறார். அதுவும், முஸ்லீம்கள் நம்புவது போல, குமாரனாகிய இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான் என்ற வாதம் ஆட்டம் காணும் அளவிற்கு குமாரன், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று மூவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பேசுகிறார்.
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார், ஆமென்.
இந்த கட்டளையை தங்கள் இதயங்கள் சுமந்தவாறு இயேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்குச் சென்று, இயேசுவின் மூலம் வரும் இரட்சிப்பை சொல்லி, எல்லா நாட்டு மக்களையும் சீடராக்கினார்கள்.
எனவே, இன்று நான் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களை அழைக்கிறேன், இயேசுவின் அன்பின் செய்தியை உங்கள் இதயத்தில் ஏற்று, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்று, திருமண உறவுகள், உடலுறவுகள் இல்லாத, மதுபானம் இல்லாத பரலோகத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
பவுல் எழுத்துக்களுக்கு முன்பாகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இக்கட்டளையை தம் சீடர்களுக்கு கொடுத்து சென்றுள்ளார் என்பதை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
1.4 இயேசுவின் சீடன் போதுருவின் வார்த்தைகளில் திரித்துவம்:
இயேசுவோடு கூட இருந்தவர், இயேசுவின் பல முக்கிய அற்புதங்களில் அவரோடு கூடவே இருந்தவர் இந்த சீடர் பேதுரு. தனக்கு பிறகு தன் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை இவரை நம்பி இவரிடம் கொடுத்தார், இவருக்கு தலைமை பொறுப்பு அதிகாரம் கொடுத்தார். இயேசுவை எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தாலும், இவரை இயேசு மறுபடியும் தன்னிடம் சேர்த்துக்கொண்டு, எருசலேமின் ஆரம்ப கால சபைக்கு தலைவராக இருக்கும்படி இவரை உட்சாகப்படுத்தினார்.
ஆரம்ப கால சபை விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு பற்பல பாஷைகளை பேசும் போது, மக்களுக்கு ஒரு அருமையான பிரசங்கம் செய்து, 3000 பேரை தன் மந்தையில் சேர்த்தவர் இவரே. அவர் செய்த முதல் பிரசங்கத்திலேயே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாக காட்டி மக்களை நல்வழிப்படுத்தினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.33. அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
இவர் எழுதிய ஒரு கடிதத்தில் "திரித்துவத்தைப் பற்றி" சொல்வதை கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.
இயேசுவிற்கு பிரியமான சீடன் யோவான் ஆவார். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்து இளைப்பாரும் அளவிற்கு இயேசு இவர் மீது அன்பாக இருந்தார். இவர் தான் புதிய ஏற்பாட்டில் நான்காவது நற்செய்தி நூலாகிய "யோவான் நற்செய்தி" நூலை எழுதியவர், மற்றும் புதிய ஏற்பாட்டில் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" எழுத இயேசு இவருக்கு தரிசனத்தின் மூலம் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விவரங்களை வெளிப்படுத்தினார். இவர் சபைகளுக்கு மூன்று தனி கடிதங்களையும் எழுதியுள்ளார்.
இவரும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.
இவ்வசனத்தில் வார்த்தை என்பது இயேசுவை குறிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.
இவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனத்தில் கூட பல முறை "ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை, காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று பல முறை எழுதுகிறார்.
வெளி 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. (இதே போல இந்த வசங்களிலும், 2:7, 2:11, 2:17, 3:6, 3:13, 3:22)
மற்றும் சிங்காசனத்தில் தேவன் உட்கார்ந்துள்ளார், வலது பாரிசத்தில் ஆட்டுக்குட்டியானவர் இயேசுவும் உட்கார்ந்துள்ளார் என்று பல வசனங்கள் வருகின்றன.
வெளி 5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
வெளி 5:13 அப்பொழுது, வானத்திலும் பூயிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும்ஆட்டுக்குட்டியானவருக்கும்ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
வெளி 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
வெளி 21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
நாம் இதுவரைக்கும் பவுலுக்கு முன்பாகவும், பவுல் அல்லாத மற்ற சீடர்களும், இயேசுக் கிறிஸ்துவும் திரித்துவ கொள்கையைப்பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை கண்டோம். திரித்துவம் என்றால் என்ன? பைபிளில் எங்கெங்கே இதைப் பற்றி விவரங்கள் கிடக்கின்றன என்று நாம் பார்க்கவில்லை. அதைப் பற்றி தனி கட்டுரைகளில் பார்க்கலாம் .
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்வது போல, பவுல் திரித்துவ கொள்கையை உருவாக்கவில்லை, அதை பயன்படுத்தி கிறிஸ்தவத்திற்குள் நுழையவும் இல்லை. இது இஸ்லாமியர்களின் கற்பனையே ஒழிய வேறில்லை .
இஸ்லாமியர்களின் இக்கூற்று ஆதாரமற்றது என்பதை தெரிந்துக்கொள்ள சில கேள்விகள் அல்லது விவரங்கள்:
1. பவுல் கிறிஸ்தவத்திற்கு வருவதற்கு முன்பே, எருசலேமில் பல ஆயிரபேர் பேதுருவின் பிரசங்கங்களினால் இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேதுருவினாலும், யோவானாலும் மற்ற சீடர்களாலும் பல அற்புதங்கள் செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பெயரிலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பவுல் இயேசுவின் சீடர்களோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
2. விசுவாசிகள் அதிகமாகிறதினால், அனேகர் கைது செய்யப்பட்டு (தேவதூஷணம் குற்றத்திற்காக, இயேசு தேவகுமாரன் என்று சொன்னதற்காக)ஸ்தேவான் என்பவர் கல்லெரியப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சமயத்தில் கல்லெரிபவர்களின் கூட்டத்தில் இருந்தவர், இந்த பவுலே .
3. இயேசு தேவ குமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான் அல்லது நல்லவர், அவர் மரிக்கவில்லை மறுபடியும் எழுந்திருக்கவில்லை என்று பேதுருவும், மற்ற சீடர்களும் சொல்லியிருப்பார்களானால், ஏன் யூத ஆசாரியர்களும், பவுலும் இவர்கள் மீது "தேவதூஷணம்" குற்றம் சுமத்தி, கொல்ல முயற்சி செய்வார்கள்? முஸ்லீம்கள் சிந்திக்கவேண்டும். ஒரு பொய்யைச் சொல்லி ஏன் இயேசுவின் சீடர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தை வருவித்துக்கொள்ளப்போகிறார்கள் .
4. இயேசு பரமேறிச் சென்ற 40வது நாளிலேயே 3000 பேர், பேதுருவின் பிரசங்கம் கேட்டு சபையில் விசுவாசிகள் ஆனார்கள். இந்த 3000 பேருக்கு "பேதுரு" என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணுகிறீர்கள் நீங்கள் ?
5. இயேசு தேவன் கிடையாது, அவர் மரிக்கவில்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா தான் இறைவன் என்று சொல்லியிருப்பார்களா சீடர்கள்?
6. இப்படி சொல்லியிருந்தால், இவர்கள் ஏன் கொல்லப்படுவார்கள், ஏன் உலகமெல்லாம் சுற்றி நற்செய்தியை சொல்லி கஷ்டப்பட்டிருப்பார்கள் ?
7. இத்தனை ஆயிரம் பேர் இருக்கும் போது, திடீரென்று பவுல் வந்து "தேவன், இயேசு, பரிசுத்த ஆவியானவர்" இவர்கள் மூவரும் ஒரே இறைவன் தான் என்று சொல்லியிருந்தால், இத்தனை ஆயிரம் பேர் ஏற்றுக்கொள்வார்களா ?
8. ஒருவரை இருவரை ஏமாற்றலாம், அல்லது சிலரை ஏமாற்றலாம், இத்தனை ஆயிரம் பேரையா திடீரென்று ஏமாற்ற முடியும்? தங்கள் கொள்கைகளை விட்டு புது கொள்கைக்கு மாற்ற முடியும்?
இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
முடிவுரை:
கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகள் அல்லது அஸ்திபாரம் போடுவதில், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலர் நடபடிகளும், மற்றும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய 6 புத்தகங்கள் தான் முக்கியமான பங்கை வகிக்கின்றன. மற்றபடி பவுல் எழுதிய இதர கடிதங்கள் இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்ட மாளிகைகளே தவிர வேறில்லை.
ஒரு உதாரணம்:
இயேசு போட்டது அஸ்திபாரம்: …. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்(மத்தேயு 19:19).
பவுல் கடிதங்களில் எழுதியது, இயேசு போட்ட அஸ்திபாரத்தின் மீது எழுப்பிய மாளிகை: ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்(ரோமர் 13:8).
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது(1 கொரிந்தியர் 13:4).
இது ஒரு உதாரணம் தான், இயேசு சொன்னதற்கு முரணாக ஒரு கருத்தையும் நாம் பவுலுடைய எழுத்துக்களில் காணமுடியாது. ஏனென்றால், பவுல் ஒரு எழுத்தாணி மட்டும் தான், எழுதியது ஆவியானவர். எனவே, தான் எந்த முரண்பாடும் காணமுடியாது.
இயேசுவின் பிறப்பு, அற்புதங்கள், மரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை இவை அனைத்தையும் விளங்கிக்கொள்ள, அல்லது இவைகள் பற்றி தெரிந்துக்கொள்ள நாம் தேடவேண்டியது, பவுல் எழுதிய கடிதங்களில் அல்ல, அதற்கு மாறாக நான் மேலே சொன்ன 6 புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலேயே. இந்த 6 புத்தகங்கள், கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம் போடுமானால், பவுலும், மற்றவர்களும் எழுதிய கடிதங்கள், சபை, விசுவாசிகள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தேவையான பதிலைச் சொல்கின்றன. எனவே, புதிய ஏற்பாட்டின் இந்த இரண்டு வகையான புத்தகங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள், இவைகளில் முரண்பாட்டை கண்டுபிடிக்க யாராலும் முடியாது.
பவுலை காரணம் கட்டி, கிறிஸ்தவர்களை வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு திசை திருப்ப யாராலும் முடியாது.
கிறிஸ்தவர்களுக்கு சில வேத எச்சரிக்கைகள்:
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்(பேதுரு 1:16 ).
இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், (தீத்து 1:13 )