ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஏகத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏகத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூலை, 2015

2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

ரமளான் மாத தொடர் கடிதங்களை இங்கு சொடுக்கி படிக்கலாம். 

[நேற்று எழுதிய கடிதத்தை படித்தவுடன், உமரின் தம்பி தொலைபேசியில் அழைத்து உமருடன் பேசுகிறார். இவ்வுரையாடலில் முஹம்மதுவிற்கு பிறகு சஹாபாக்களின் நிலை, இயேசுவிற்கு பிறகு சீடர்களின் நிலை ஒப்பிடப்படுகின்றது. இவர்களில் யார் வழிகாட்டுதல் இல்லாத அனாதைகள்? தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படிக்கவும். உமரின் மொபைள் அலறுகிறது, உங்களுக்கு பிடித்தமான ட்யூனை நீங்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்….]

உமர்: ஹலோ, தம்பி

தம்பி: ஹலோ அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்.

உமர்: வாஅலைக்கும் ஸலாம் தம்பி. நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி: இது நலம் விசாரிக்கின்ற நேரமல்ல, அதை அப்புறம் விசாரித்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். உங்களின் கடிதத்தை படித்தவுடன், உங்களுக்கு போன் செய்து, நச்சென்று நாலு கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்து போன் செய்தேன். உங்களுக்கு இப்போது நேரமிருக்கிறதா?

உமர்: நீ ரொம்ப கோபமாக இருக்கிறாய் போல தெரிகிறது. கோபத்தில் எதையும் பேசவேண்டாம், நாம் பிறகு பேசலாம்.

தம்பி: இல்லை.. இல்லை.. நான் கோபமாக இல்லை. இப்போதே பேசனும்.

உமர்: சரி, உன் விருப்பம். 

தம்பி: நேற்று நீங்க அனுப்பிய கடிதத்தில் அனேக தவறான விவரங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அதில் ஒன்று, "சஹாபாக்கள் அனாதைகளாக விடப்பட்டார்கள்" என்றுச் சொன்னது தான்.

உமர்: உண்மை தானே! சஹாபாக்கள் அனாதைகளாகவும், சரியான வழிநடத்துதலும், உதவியும் இல்லாமலும் தங்கள்  மனம் போன போக்கில் நடந்துக்கொண்டார்கள் இல்லையா?

தம்பி: நீங்க என்ன சொல்ல வருகிறீங்க? எங்க இறைத்தூதர் சஹாபாக்களோடு நிரந்தரமாக வாழ்ந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கிறீர்களா? இது சாத்தியமான ஒன்றா? மனிதனாக பிறந்தவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டுமல்லவா? இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை?

உமர்: முஹம்மது பல நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லையே!

தம்பி: இப்படி இல்லையென்றால், உங்க வரிகளுக்கு வேறு என்ன அர்த்தமாம்?

உமர்: சஹாபாக்கள் அனாதைகள் என்றுச் சொன்னது, மனித வடிவில் முஹம்மது அவர்களோடு இருந்திருக்கவேண்டும் என்று  அர்த்தமில்லை.  இது சாத்தியமும் இல்லை என்று எனக்குத் தெரியும்.

முஹம்மதுவிற்கு பிறகு அவர்களை நேர் வழியில் நடத்த எந்த ஒரு ஏற்பாட்டையும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ செய்யவில்லையே! என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

தம்பி: என்ன ஏற்பாடு தேவைப்படுகின்றது என்று நீங்க நினைக்கிறீங்க? சஹாபாக்கள் என்ன  சின்ன பிள்ளைகளா? அவர்களை கண்காணிக்க கார்டியன் (Guardian) வைத்துப்போக!  அவர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள், உலகத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் நன்கு அறிந்தவர்கள். 

இது மட்டுமல்ல, அவர்களை நேர் வழியில் நடத்த அவர்களிடம் குர்-ஆனும், சுன்னாவும் இருந்தன. மேலும் அவர்கள் முஹம்மதுவை நேரடியாக பார்த்த முதல் தர சாட்சிகளாக இருந்தார்கள். 

உமர்: என் கேள்வியும் இதைப் பற்றியது தான். குர்-ஆனும் சுன்னாவும் சஹாபாக்களை நேர்வழியில் நடத்தியிருந்தால், இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், எதிரிகளைப்போல கருதிக்கொண்டும் இருந்திருப்பார்களா?

முஹம்மது உயிரோடு இருந்தபோது, காணப்பட்ட அந்த ஐக்கியம் அவர் மரித்தவுடன் ஏன் காணாமல் போய்விட்டது?

தம்பி: அப்படி என்ன செய்துவிட்டார்கள் சஹாபாக்கள்?

உமர்: விடிய விடிய இராமாயணம் கேட்டு, சீதை இராமனுக்கு என்ன உறவு என்று கேட்டானாம் ஒருத்தன், அது போல இருக்கு உன் கேள்வி.

முதலாவதாக, முஹம்மது மரித்த பிறகு, ஃபாத்திமாவும், அலியும் சொத்துக்காக போட்ட சண்டையை என் கடிதங்களில் எழுதினேன்.

அண்ணன் எப்போ காலியாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதற்கு ஏற்றாற்போல, முஹம்மது மரித்தவுடன் அடுத்த தலைவர் யார் என்று முடிவு செய்ய முக்கியமானவர்களுக்கும் சொல்லாமல் கூட்டம் கூடிவிட்டார்கள் அன்ஸார்கள். அங்கு சென்ற அபூ பக்கரும், உமரும் தங்களுக்குத் தான் அந்த பதவி, முஹம்மது எங்களைத் தான் தலைவராக நியமிக்க விரும்பினார் என்றெல்லாம் சொல்லி சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். 

இதுவரை மேற்கண்ட இரண்டு விஷயங்களை மட்டுமே பார்த்துள்ளோம், இன்னும் அனேக விவரங்கள் பாக்கியுள்ளது. அவைகளை சொல்வதற்கு முன்பாகவே, "சஹாபாக்கள் அப்படி என்ன செய்தார்கள்?" என்று நீ கேட்கிறாய்?  இது ஆரம்பம் தான் இன்னும் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது தம்பி. 

இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல

தம்பி: நீங்க என்ன சொல்லவருகிறீங்க என்று எனக்கு புரியலே! 23 ஆண்டுகள் இறைத்தூதர் ஊழியம் செய்தார், குர்-ஆனை கொடுத்தார், குர்-ஆனின் விளக்கமாக தானே வாழ்ந்துவிட்டுச் சென்றார். இத்தனை வழிகாட்டுதல் இருந்தும், சஹாபாக்களை அனாதைகள் என்றுச் சொல்ல என்ன இருக்கிறது?

இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்.  இயேசு மரித்த பிறகு அவர்களிடம் புதிய ஏற்பாடு இல்லை, குறைந்த பட்சம் நற்செய்தி நூல்களும் அவர்களிடம் இல்லை.  அவர்கள் மத்தியிலே இயேசு வாழ்ந்த 3.5 ஆண்டுகள் தான் இவர்களின் சொத்துக்களாக இருந்தது. ஆக, இஸ்லாமோடு ஒப்பிடும் போது:

  1. சஹாபாக்களிடம் --> குர்-ஆன் இருந்தது மற்றும் சுன்னா இருந்தது (23 ஆண்டுகால முஹம்மதுவின் வாழ்க்கை)
  2. அப்போஸ்தலர்களிடம் --> புதிய ஏற்பாடு இல்லை, நற்செய்தி நூல்கள் இல்லை, இயேசுவின் சுன்னா மட்டும் இருந்தது அதுவும் 3.5 ஆண்டுகள் மட்டும் தான்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல. 

இப்போது உங்களுக்கு சரியாக புரிந்திருக்குமே! நச்சென்று உச்சந்தலைக்கு காரம் ஏறியிருக்குமே!

உமர்: தம்பி, நீ முன்னேறி விட்டாய் என்று நினைக்கிறேன். லாஜிக்கை நல்லா பிடிக்கிறாயே!

தம்பி: உங்களிடம் பதில் இல்லையா?!? அதனால் தான் சொல்கிறேன், அதிகமாக இஸ்லாமோடு விளையாடாதீர்கள், "மாட்டேன்" என்று அடம் பிடித்தால், இப்படி மூக்கு அறுக்கப்பட்டுப் போகவேண்டி வரும். இது எப்படி இருக்கு?

உமர்: நான் இன்னும் முடிக்கவில்லையே தம்பி. யாருடைய மூக்கு அறுக்கப்போகுது என்று கடைசியில் தானே தெரியும். என் தரப்பு வாதத்தை நான் வைக்கட்டும். தம்பி, இப்புடு சூடு!?! [தமிழே பாதி தான் வரும், இதில் தெலுங்கு வேறா…]

சஹாபாக்களை குர்-ஆனும், ஹதீஸ்களும் நேர் வழியில் நடத்தியிருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் கடித்துக் கொண்டு, வசை மொழிகளை கூறிக்கொண்டு, அடித்துக் கொண்டு செத்து இருந்திருக்கமாட்டார்கள். இவர்களை குர்-ஆனும், சுன்னாவும் நேர் வழியில் நடத்தவில்லை என்பது தான் உண்மை.

இயேசுவின் சீடர்கள் அனாதைகளாக வாழவில்லை, அவர்கள் நேர் வழியில் நடத்தப்பட்டார்கள்.

தம்பி: உங்களால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால்,  எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உமர்: உனக்கு தெளிவாக விளக்குகிறேன்.  

நாம் இந்த வருடம் ரமளான் மாதத்தில், சஹாபாக்களின் நடபடிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஐந்து சதவிகிதம் கூட நான் எழுதி முடிக்கவில்லை. அதற்குள், நீ சஹாபாக்களை இயேசுவின் அப்போஸ்தலர்களோடு ஒப்பிட முந்திவிட்டாய். இந்த ஒப்பிடுதலை நான் கடைசியில் செய்யலாம் என்று விரும்பியிருந்தேன், ஆனால், நீ கேள்வியை இப்போதே கேட்டபடியினால், ஒரு சுருக்கத்தை உனக்குத் தருகிறேன். இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள், அதாவது, சஹாபாக்களின் நடபடிகளில் இன்னும் 95% சதவிகித விவரங்களை நாம் நம் உரையாடல்களில் தொடவே இல்லை.

அப்போஸ்தலர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles)

இயேசுவின் சீடர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles) என்பதை இப்போது விளக்குகிறேன்.  இந்த தொடர்கள் அனைத்தும் முடிக்கும்  போது, முஹம்மதுவின் சஹாபாக்கள் தவறான வழியில் நடத்தப்பட்டார்கள் (Wrongly Guided Caliphs) என்பதை நீயே புரிந்துக் கொள்வாய்.

தம்பி: போதும் போதும்… முதலில் இயேசுவின் சீடர்கள் எப்படி அனாதைகள் இல்லை என்பதை விளக்குங்கள். எனக்கு வளவளவென்று பேசிக்கொண்டு இருக்க நேரமில்லை.

உமர்: அடப்பாவமே!  நீ தானே என்னை அழைத்து உடனே பேசனும் என்றுச் சொன்னாய்!  இப்போது அப்படியே தலைகீழாக பேசுகிறாயே! நீ அவசரக்காரணுக்கு தம்பியாக இருப்பாய் போல் இருக்கிறதே!

தம்பி: உங்களின் கடைசி வரியை நான் மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறேன் [கிண்டலாக சிரிக்கிறார்….]

உமர்: சிரிப்பாய் தம்பி, சிரிப்பாய்…. 

சரி போகட்டும் விவரத்திற்கு வருகிறேன்,

அப்போஸ்தலர்களை இயேசு எப்படி வழிநடத்தினார் என்பதை உனக்கு விளக்குகிறேன். 

நீ அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்கும்போது, சீடர்களோடு எப்படி தேவன் இடைப்பட்டார் என்பதை கவனிக்கமுடியும். அதே நேரத்தில், சஹாபாக்களை எப்படி அல்லாஹ் அம்போ என்று விட்டுவிட்டார் என்பதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியும்.

அப்போஸ்தலர்கள் நடபடிகள்சஹாபாக்கள் நடபடிகள்
இயேசுவின் ஊழியம் 3.5 ஆண்டுகள்
முஹம்மதுவின் ஊழியம் 23 ஆண்டுகள்.
இயேசுவின் சொல்லும் செயலும் மட்டுமே அவர்களின் சொத்து. பழைய ஏற்பாடு அவர்களிடம் இருந்தது.
குர்-ஆனின் 6236+ வசனங்களும், 23 ஆண்டுகால சுன்னாவும் (முஹம்மதுவின் சொல்லும் செயலும்)
உலக பிரகாரமாக, இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் கூட அவருடைய சீடராகவில்லை. இயேசுவின் தாய் மரியாள் விசுவாசியாக இருந்தார்கள்.
முஹம்மதுவிற்கு பெண் கொடுத்த மாமனார்கள், முஹம்மதுவின் மருமகன்கள், இதர சொந்தக்காரர்கள், மதினா முஸ்லிம்கள், இதர முஸ்லிம்கள் இருந்தார்கள்.
தலைவர்கள்: பேதுருவும், யோவானும். இவர்களை இதர சீடர்கள் தலைவர்களாக அல்லது முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக கண்டார்கள். இயேசுவும் பேதுருவை "சீடர்களை வழி நடத்தும் படி தயார் படுத்தியிருந்தார்".  பார்க்க யோவான் 21:15-17
தலைவர்கள்: முஹம்மதுவிற்கு நெருங்கிய தோழர்களில், சிலர் தாங்கள் தலைவராக வேண்டும் என்றனர், ஒருவர் "இன்னார் தலைவராக வரும்வரை நான் உருவிய வாளை உறையில் போடுவதில்லை" என்றார்.  அன்ஸார்கள் தாங்கள் தான் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் என்றனர், முஹாஜிர்கள் தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென்றனர்.  இவர்கள் மத்தியிலே ஒருமனம் இல்லை.
அப்போஸ்தலர்கள் இயேசுவின் சொல்லையும் செயல்களையும் மனதில் பதித்து இருந்தனர்.
சஹாபாக்கள் முஹம்மதுவின் சொல்லையும் செயல்களையும் மனதில்  பதித்து இருந்தனர். குர்-ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்தவர்களும் இருந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
இயேசு மரித்தார், உயிர்த்தெழுந்தார், 40 நாட்கள் அவர்களோடு அனேக காரியங்களை பேசினார், சீடர்களை தயார்படுத்தினார்.
முஹம்மது மரித்தர், மண்ணோடு மண்ணாக மாறிவிட்டார். சஹாபாக்களை தயார்படுத்தவில்லை, தனக்குப்பிற்பாடு யார் தலைவர் என்று தெளிவாக சொல்லிவைக்கவில்லை, எழுதியும் வைக்கவில்லை.
இயேசுவின் சீடர்களிடம் ஒருமனம் இருந்தது.
சஹாபாக்களிடம் ஒருமனம் தவிர்த்து மற்ற அனைத்தும் இருந்தது.
இயேசு பரலோகம் சென்றார், பரிசுத்த ஆவயானவர் சீடர்களிடம் வந்தார். உங்களை நான் திக்கற்றவர்களாக விடேன் என்றார் (பார்க்க யோவான் 14:16-18, 6:7-11)
முஹம்மது மரித்தார், ஜிப்ராயீல் தூதனும் தன் ஜிராக்ஸ் கடையை முடிவிட்டு சென்றுவிட்டார் (இனி ஜிராக்ஸ் எடுக்க ஒன்றுமில்லை என்பதால், அவர் சென்றுவிட்டார் என்று முஸ்லிம்கள் சொல்லுவார்கள்)
சீடர்கள் ஒருமனப்பட்டு, தங்கள் ஆஸ்திகளை நிலங்களை விற்று பொதுவாக அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். (அப் 2:45,46)
தந்தை மரித்த அடுத்த நாளே தனக்கு ஆஸ்திகளை கொடுங்கள் என்று சண்டை போட்ட மகள் ஃபாத்திமா. ஆறு மாதங்கள் இதனால் அபூ பக்கரிடம் பேசாமல் இருந்து அப்படியே மௌனமாக மரித்துவிட்டர். ஆஸ்திக்காக மருமகனும், முஹம்மதுவின் இதர மனைவிகளும், சொந்தக்காரர்களும் போட்டி போட்டனர். 

முஹம்மது மரித்த பிறகு, சஹாபாக்கள் தங்கள் இச்சைகளின் படி வாழ ஆரம்பித்தனர். இவர்களை வழி நடத்த யாருமே இல்லை, பெற்றோர்கள் இருந்தும் அனாதைகளாகவும், பிள்ளைகள் இருந்தும் மலடிகளாகவும் காணப்படும் மக்களைப் போல இவர்களும் வாழ்ந்தார்கள். 

தம்பி: இன்னும் நீங்கள் "இயேசுவின் சீடர்கள் அனாதைகள் இல்லை என்று நிருபிக்கவில்லையே!".

உமர்: வருகிறேன்.. வருகிறேன். 

அ) இயேசுவைப் போல அற்புங்கள் செய்த சீடர்கள்: 

அற்புதங்களும் அடையாளங்களும் சீடர்கள் மூலமாக இயேசு செய்தார். இதனால், இவர்களுக்கு மக்கள் கீழ்படிந்தார்கள், இவர்களின் வார்த்தைகளுக்கு தெய்வீக அங்கீகாரம் உள்ளது என்பதை மக்கள் கண்டனர், இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும்  ஒரு அற்புத அடையாளமுண்டு, நீயே இவைகளை படித்துப் பார் தம்பி: அப் 3:1-11, 5:15-16, 5:19-20, 8:5-13, 9:32-42, 12:7-17, 13:8-11, 14:8-10, 16:16-18, 16:24-33, 19:11-20.

ஆனால், சஹாபாக்கள் முஹம்மதுவைபோல, சண்டைபோட்டார்களே  தவிர, தெய்வீக கரம் இவர்களோடு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்த அற்புதமும், அடையாளமும் சஹாபாக்கள் செய்யவில்லை. சஹாபாக்கள் மூலமாக அல்லாஹ் செய்யவில்லை.

ஆ) பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்:

இயேசுவின் சீடர்களுக்கு வழிகாட்டியாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் நேரத்தில் சரியான வழியில் அவர்களை நடத்தினார் (பார்க்க அப்: 8:26-40, 13:2-4, 16:6-7).

சீடர்களுக்கு தரிசனங்கள் மூலமாக வழி காட்டினார், (பார்க்க அப் 10:1-48, 16:9-10). 

இவர்களையா தம்பி நீ அனாதைகளென்றுச் சொல்கிறாய்? இப்படிப்பட்ட வழிகாட்டல்கள் சஹாபாக்களுக்கு இல்லை என்பதால், அவர்களை அனாதைகள் என்றேன்.

தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பி சபை செய்யவேண்டிய காரியங்களை முன்கூட்டியே சொன்னார் (பார்க்க அப் 11:27-30). இயேசு தரிசனத்தில் காணப்பட்டு, பவுலை பலப்படுத்தினார் (பார்க்க 18:9-10)

இப்படி பல வகைகளில், தேவனின் கரம் அப்போஸ்தலர்களோடு இருந்து, வழி காட்டியது. 

இஸ்லாமை எடுத்துக் கொண்டால், நான் ஒருவன் (அல்லாஹ்) எனக்கு ஒருவன் (முஹம்மது) அவ்வளவு தான் கதை முடிந்துவிட்டது. முஹம்மதுவிற்கு பிறகு மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? சஹாபாக்களுக்கு குர்-ஆன் வழிகாட்டிவிடும் என்ற ஆசையில் அல்லாஹ் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது.

இ) சீடர்களின் பரம எதிரியை, பரலோக நண்பனாய் மாற்றினார்:

சவுல் என்ற பெயரில் ஒரு யூத அறிஞன், சீடர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கும் போது, இயேசு அவனை சந்தித்து, இரட்சித்து, சபையிலே சேர்த்தார், இவர் தான் பவுல், இவரை அறியாமல் தற்கால முஸ்லிம்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் (பார்க்க அப் 9:1-30).

இப்படி, இயேசுவின் சீடர்களோடு, பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் போதெல்லாம் வழி காட்டினார். ஆனால், இப்படிப்பட்ட வழிகாட்டுதல் இஸ்லாமிலே எங்கே என்று தேடிப்பார் தம்பி.

முஹம்மது உயிரோடு இருந்தபோது,  அற்பமான விஷயங்களுக்கெல்லாம், ஓடிப்போய் குர்-ஆன் வசனங்களை கொண்டு வந்த ஜிப்ராயீல் தூதன், சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கழுத்தை வெட்டிக்கோண்டு செத்துக் கொண்டுஇருக்கும் போது ஏன் ஒரு முறை கூட வரவில்லை?  

சஹாபாக்களும் மனிதர்கள் என்பதால், அவர்களுக்கு வழிக்காட்டல் தேவைப்பட்டது. குர்-ஆனை தனக்கு ஏற்றாற்போல பொருள் கொள்வதும், எதைச் செய்தாலும், முஹம்மது இப்படிச் சொன்னார் என்று சாக்கு சொல்லிக்கொண்டு, இதர முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொல்வதும், சஹாபாக்களின் வாழ்வில் அனுதின நிகழ்வு ஆகிவிட்டது. இதற்கு ஒத்தாசையாக குர்-ஆனின் வசனங்கள் இருந்தது தான் முக்கியமான காரணம். வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடுவது? குர்-ஆனை அடிப்படையாக வைத்து தான் அனைத்து தீய செயல்கள் இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் நடந்தது.

முதல் நான்கு கலிபாக்கள் "நேர் வழி நின்ற கலிஃபாக்கள் அல்ல, கோணலான வழிநின்ற கலிஃபாக்கள்" ஆவார்கள். இதற்கு முழுவதுமாக பொறுப்பேற்கவேண்டியவர், குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவர் "அல்லாஹ்" தான்.  இந்த விஷயத்தில் முஹம்மதுவையும் நான் குற்றவாளியாக தீர்க்கமாட்டேன், அவர் வெறும் அம்பு தான், எய்தவனுடையது தான் எல்லா குற்றமும்.

தம்பி: போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கு அவசர அவசரமாக போன் செய்து பேசினேன் பாருங்கள், என் புத்தியை ….

உமர்: வேண்டாம் தம்பி, உன் புத்தியை திட்டாதே, அதை சரியாக தீட்டு. 

தம்பி: வாய் ஜாலம் எல்லாம் போதும், அடுத்த முறை பார்க்கலாம்.  ஒரு நாள் உங்களை நான் சரியான லாஜிக்கை வைத்து வாரப்போகிறேன் பாருங்க, அப்போது, துண்டைக்காணும், துணியக்காணும் என்று நீங்க ஓடப்போறீங்க. 

உமர்: என்ன தான் இருந்தாலும், நீ என் தம்பி உன்னிடம் தோற்பது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கிறிஸ்தவத்தை யாரிடமும் தோற்கவிடமாட்டேன். நீ தோற்றுப்போகும் பக்கத்தில் இருக்கிறாய் அல்லவா… அதை நெனச்சாத் தான்…

[கால் கட்டாகி விட்டது… பீப்… பீப்… பீப்… மறுபடியும் கால் செய்தால், "நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை" என்ற சத்தம் வருகிறது…]

உமர்: ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா…. அடுத்த முறை நான் கடிதம் எழுதாமல் இருப்பேனா… நீ படித்து மறுபடியும் எனக்கு கால் பண்ணாமல் தான் இருக்கப்போகிறாயா… பார்த்துக் கொள்ளலாம் தம்பி…. 

அன்பான ஆண்டவரே, என் தம்பியை இரட்சியும்.

தேதி: 2 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day10.html


செவ்வாய், 30 ஜூன், 2015

2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

அன்புள்ள  தம்பிக்கு,

உன் அண்ணன் உமர் வாழ்த்துதல் சொல்லி எழுதிக்கொள்வது.

நாம் இந்த ரமளான் மாதம், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக சுருக்கமாக ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். 

முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு நடந்த ஒவ்வொரு தீய செயலுக்கும் மனிதன் (சஹாபாக்கள்) காரணமாக இருந்தாலும், தான் உண்டாக்கிய மார்க்கத்தை சரியான வழியில் நடத்திச் செல்லாத அல்லாஹ் தான் முழு பொறுப்பு என்பதை முஸ்லிம்கள் பல்லை கடித்துக் கொண்டாவது அங்கீகரித்தே ஆகவேண்டும். 

முஹம்மது மரித்தவுடன் தன் கடமை இதோடு  முடிந்துவிட்டது என்று அல்லாஹ் கருதிவிட்டார் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அல்லாஹ்விற்கு தலைவலி அன்றிலிருந்து தான் ஆரம்பமானது. முஹம்மது உயிரோடு இருக்கும் போது சுறுசுறுப்பாக வேலை செய்த அல்லாஹ், முஹம்மது மரித்தவுடன் அதிக ஓய்வை எடுத்துக் கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

அல்லாஹ் ஓய்வில்லாமல், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருந்திருக்கவேண்டும்! சஹாபாக்களை வழி நடத்தியிருந்திருக்க வேண்டும்! ஆனால், அல்லாஹ் மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில், அவரது வழி நடத்துதல் தேவைப்பட்ட நேரத்தில் சஹாபாக்களை சரியாக வழி நடத்த தவறிவிட்டார். உண்மையாகவே அவர்களை இறையில்லா அனாதைகளாக்கி விட்டார்.

நேர்வழிநின்ற கலீபாக்கள்:

தம்பி, இஸ்லாமின் முதல் நான்கு கலிஃபாக்களை "நேர்வழிநின்ற கலீபாக்கள் – ராஷிதூன் கலிஃபாக்கள் (Rightly Guided Caliphs)" என்று அழைக்கிறார்கள். ஆனால், இந்நான்கு கலிஃபாக்களை யார் நேர் வழியில் நடத்தினார்கள்? 23 ஆண்டுகள் வஹியை கொண்டுவந்த ஜிப்ராயீல் இவர்களை நேர் வழியில் நடத்த ஒரு முறையும் வரவில்லை. குர்-ஆனும் இவர்களை நேர் வழியில் நடத்த முடியவில்லை. முஹம்மதுவின் சுன்னாவும் (சொல்லும் செயலும்) இவர்களை நேர் வழி நடத்தவில்லை. அப்படியிருக்கும் போது சுன்னி முஸ்லிம்கள் இவர்களை "நேர் வழியில் நின்ற கலிஃபாக்கள்" என்று எப்படி அழைக்கிறார்கள்?

தம்பி, இந்த தொடர் கடிதங்களில் நாம் நான்கு கலிஃபாக்கள் பற்றிய முக்கியமான விவரங்களைப் பார்க்கப்போகிறோம். கடைசியில் இந்த நான்கு கலிஃபாக்கள் நேர்வழியில் உண்மையாகவே நடத்தப்பட்டார்களா? இல்லையா என்பதை நீயே உலகிற்கு எடுத்துச் சொல்லப்போகிறாய். 

முந்தையை கடிதங்களில், முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு, அபூ பக்கர் கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்றும் ஆனால், அவர் ஒருமனதாக அனைவரின் விருப்பத்தின் படி தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல என்பதைச் சொன்னேன். இந்த கடிதத்தில், அவரை கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற முக்கியமான இரண்டு பிரிவினர்களைப் பற்றி கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம்.

1) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸார்கள் – இஸ்லாமின் இருகண்கள்

2) குர்-ஆனில் இவர்களை புகழும் அல்லாஹ்

3) சஹாபாக்களின் சகோதர அன்பு மாயம், சுயநலம் உதயம்

4) முடிவுரை


இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

1) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸார்கள் – இஸ்லாமின் இருகண்கள்

முஹாஜிர்கள் யார்? அன்ஸார்கள் யார்? என்று உனக்கு தெரிந்து இருக்கும். 

முஹம்மதுவின் இஸ்லாமிய பிரச்சாரத்தின் காரணமாக முஸ்லிம்களாக மாறிய அவரது சொந்தக்காரர்களிலும் மற்றும் மக்காவாசிகளிலும் யார் யாரெல்லாம் இவரோடு ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு இடம் பெயர்ந்தார்களோ, அவர்களை இஸ்லாம் முஹாஜிர்கள் என்று அழைக்கிறது. இவர்கள் தங்கள் வீடுகளையும், செல்வங்களையும் விட்டுவிட்டு, தங்கள் விசுவாசத்திற்காக மதினா வந்தவர்கள்.

முஹம்மது மதினா வருவதற்கு காரணமாக இருந்தவர்கள், அன்ஸார்கள் (உதவியாளர்கள்) ஆவார்கள். மதினாவில் முஹம்மதுவிற்கும், முஹாஜிர்ளுக்கும் தங்கள் வீடுகளில் இடம் கொடுத்து, தங்கள் செல்வங்களினாலும், இதர உதவிகளினாலும் ஆதரித்தவர்கள். இவர்களுடைய உதவி எப்படி இருந்தது என்றால், ஒரு அன்ஸார் இறந்துவிட்டால், அவரது சொத்தில் முஹாஜிர்களுக்கு பங்கு (வாரிசு உரிமை) தரப்படுமாம், அவ்வளவு ஆழமாக அழகாக இவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 

இவ்விரு கூட்டத்தினரும், முஹம்மதுவின் மதினா வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெறுகிறார்கள். முஹம்மதுவின் போர்களில் பங்கு பெற்று, முஹம்மதுவிற்கு பாதுகாப்பு அளித்து, இஸ்லாமின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவ்விரு கூட்டத்தினர். 

2) இவர்களை புகழும் அல்லாஹ்

இவர்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் வசனங்களில் ஒரு சிலவற்றையும், ஹதீஸ்களில் சிலவற்றையும் இங்கு தருகிறேன். ஆரம்ப காலத்தில் இவ்விருவருக்கும் இடையே காணப்பட்ட நட்பு போற்றுதலுக்கு உரியது.

இவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறார்:

குர்-ஆன் 9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

அன்ஸார்களின் உதவி:

குர்-ஆன் 59:9. இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

அன்ஸாரிகளின்  வாரிசாக முஹாஜிர்கள் இருந்தார்கள். இந்த சட்டம் பிறகு மாற்றப்பட்டது.

புகாரி 2292. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்ஸாரி ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உறவினர்கள் அன்றி முஹாஜிர் அவருக்கு வாரிசாவார். நபி(ஸல்) அவர்கள் இருவருக்கிடையே ஏற்படுத்திய சகோதரத்துவமே இதற்குக் காரணம். 'மேலும், தாய் தந்தையரும் நெருங்கிய பந்துக்களும்விட்டுச் செல்கிற செல்வத்திலிருந்து (விகிதப்படி பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம்! அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களின் பங்கைக் கொடுத்து விடுங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளானக இருக்கிறான்!" (திருக்குர்ஆன் 04:33) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது இது மாற்றப்பட்டது. உடன்படிக்கை செய்தவர்களுக்கிடையே வாரிசுரிமை, போய், உதவி புரிதல், ஒத்தாசை செய்தல், அறிவுரை கூறுதல் ஆகியவை தாம் எஞ்சியுள்ளன! உடன்படிக்கை வெசய்தவருக்காக வஸிய்யத் (மரண சாசனத்தின் வாயிலாக சிறிது சொத்தை எழுதி வைப்பது) மட்டும் செய்யலாம்! Volume :2 Book :39

புகாரி 2294. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார். 

"இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!" என்று பதிலளித்தார்கள். Volume :2 Book :39

3) சஹாபாக்களின் சகோதர அன்பு மாயம், சுயநலம் உதயம்

முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, அன்ஸார்கள் ஒன்று கூடி, இஸ்லாமிய தலைவரை தங்கள் வம்சங்களிலிருந்து தெரிந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தனர். அபூ பக்கர், உமர் மற்றும் இதர முஸ்லிம்களுக்கு தெரிவிக்காமல், தலைவரை தெரிவு செய்ய அன்ஸார்கள் கூட்டம் கூடிவிட்டார்கள். 

இதனை அறிந்துக் கொண்ட அபூ பக்கரும், உமரும் அங்கு சென்று மறுப்பு தெரிவித்தனர்.  இதனால், அன்ஸார்களில் ஒரு தலைவரும், முஹாஜிர்களில் ஒரு தலைவருமாக நியமித்துக் கொள்ளலாம் என்று அன்ஸார்கள் கூறினார்கள். உமர் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக உமரின் சாதூர்யமான செயலினால், அபூ பக்கர் கலிஃபாவாக நியமிக்கப்பட்டார். வேறு வழியில்லாமல் மற்றும் விருப்பமில்லாமல் அன்ஸார்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை நாம் தபரி சரித்திரத்தில் காணலாம். இந்த விவரங்களை ஆதாரங்களோடு விளக்கும் தமிழ் கட்டுரையை இங்கு (இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்) படிக்கவும். 

தம்பி, இந்த நேரத்தில் ஒரு குர்-ஆன் வசனத்தை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். இவர்களிடையே காணப்பட்ட சகோதர அன்பை உண்டாக்கியது தாம் தான் என்று அல்லாஹ் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். 

குர்ஆன் 8:63 - மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்;மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான் (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்ஆன் தமிழாக்கம்)

உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை கொடுத்தாலும், முஸ்லிம்களிடையே "அல்லாஹ் உண்டாக்கிய பிணைப்பு போன்றதொரு பிணைப்பை உண்டாக்க முடியாதாம்". ஆனால், அது ஏன் இப்படி சுயநலமாக மாறிவிட்டது?

சுயநலம் உதயம்:

அன்ஸார்களும், முஹாஜிர்களும் இஸ்லாமின் இருகண்கள் போன்றவர்கள். இவர்களுக்கு குர்-ஆன் என்னும் ஞானப்பால் 23 ஆண்கள் புகட்டப்பட்டது. முஹம்மதுவின் சொல்லும் செயலும் அவர்களின் சரீரங்களுக்கு ஊட்டச் சத்துக்களைப் போல  வலிமையை கொடுத்தது. குர்-ஆனும் முஹம்மதுவின் சுன்னாவும் முஹம்மது உயிரோடு இருக்கும் போது சரியாக வேலை செய்தது.  ஆனால், அவர் மரித்த அதே நாள், நாற்காலிக்கு சண்டை போட அந்த ஞானப்பாலின் சக்தியும், ஊட்டச்சத்தும் இஸ்லாமுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிட்டது. 

இரண்டு கண்களில், ஏதாவது ஒன்றை பிடுங்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டால், எந்த கண்ணை பிடுங்குவது? வலது கண்ணையா இடது கண்ணையா? இரண்டும் முக்கியம் தான்.  முஹம்மது உயிரோடு இருந்த போது, இந்த கேள்வியை கேட்டு இருந்தால் அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

அல்லாஹ் குர்-ஆனில் சொல்கிறான்  'உலகத்தின் அனைத்து செல்வங்களை செலவிட்டாலும், இப்படிப்பட்ட பிணைப்பை உண்டாக்கமுடியாது, ஆனால், முஹம்மது மரித்த நாள், அற்பமான ஒரு பதவிக்காக, உலகத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பை ஆளுவதற்காக, இவர்கள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர், தலைவர்களை சுயமாக நியமித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்கள்'.  அல்லாஹ்வின் வார்த்தை பொய்த்துவிட்டது. முஹம்மதுவின் சரீரத்தை பூமிக்குள் புதைப்பதற்கு முன்பே, முஹாஜிர்களும், அன்ஸார்களும், இஸ்லாமை புதைத்துவிட்டார்கள். 

தம்பி, இப்போது சில கேள்விகள் உன் மததில் எழவேண்டுமே!

அ) தங்கள் சொத்துக்களில் பாதியை அப்படியே, மக்கா முஸ்லிம்களுக்கு தாராளமாக கொடுத்த அன்ஸார்களின் அன்பும், ஆதரவும் இப்போது எங்கு சென்றுவிட்டது?

ஆ) இவர்கள் மத்தியிலே இருந்த சகோதர அன்பு முஹம்மது மரித்த அதே நாள் மரித்துவிட்டதா? 

இ) அன்ஸார்களுக்கு தலைவர் பதவி சென்றுவிடக்கூடாது என்று அபூ பக்கரும், உமரும் விரும்பியதின் காரணமென்ன? முஹாஜிர்களுக்கு தெரியாமல், தலைவர்களை தெரிவு செய்ய, அன்ஸார்கள் முடிவு செய்ய காரணமென்ன?

ஈ) அல்லாஹ்வின் வார்த்தை ஏன் இவர்களிடத்தில் தோல்வி அடைந்தது? குர்-ஆன் 8:63 சொல்வது வெறும் பேச்சுக்குத்தானா?

உ) குர்-ஆனின் இறையியல், ஆரம்ப கால முஸ்லிம்கள் மத்தியிலே அன்பை உண்டாக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்றாக காணப்படவில்லையே!

ஊ) இவர்கள் முஹம்மதுவை காணாமல் விசுவாசித்தவர்கள் அல்ல.   இவர்கள் முஹம்மதுவை மிகவும் நெருக்கமாக கண்டவர்கள், அவரோடு பேசியர்கள், அவரைத் தொட்டுப்பார்த்தவர்கள், அவரின் மூச்சுக்காற்றின் வெப்பத்தின் அளவு எவ்வளவு என்று கேட்டாலும் உடனே பதில் தரக்கூடிய அளவிற்கு நெருக்கமானவர்கள்.  இவர்களிடம் காணப்பட்ட சுயநலம் முஸ்லிமல்லாதவர்களிடம் கூட காணப்படாது என்று எண்ணத்தோன்றுகிறது. உலகத்தின் கடைசி நபியோடு வாழ்ந்தவர்களிடம் உயர்ந்த தரத்தை உலக மக்கள் எதிர்ப்பார்ப்பது தவறா? 

4) முடிவுரை (அல்லாஹ் நீ எங்கே இருந்தாய்!):

அற்பமான பதவிக்காக, அதிகாரத்திற்காக இவர்கள் சண்டையிட்டு கொண்டு இருக்கும் போது, அல்லாஹ் எங்கே சென்றுவிட்டார்? ஒரே ஒரு முறை காபிரியேல் தூதனை அனுப்பி ஒரு நிமிடத்தில் அவர்கள் கூடியிருந்த அறையில் காணப்பட்டு அல்லது ஒரு அற்புதம் செய்து, அவர்களை ஒன்று கூட்டி இருந்திருக்கலாம் அல்லவா அல்லாஹ்?

முஹம்மது மரித்ததும், அல்லாஹ் உலக தோற்றத்திற்கு முன்பிலிருந்து எழுதி வைத்திருந்த அனைத்து காரியங்களும் முடிந்துவிட்டது என்று நினைத்துவிட்டாரா? இஸ்லாமின் ஒரு கண், இன்னொரு கண்ணை வெறுத்துவிட்டதே! 

முஹம்மதுவிற்காக அவரது மனைவிகள் மற்றும்  அவரை நேசிக்கும் இதர மக்கள் திருப்தியாக கூட அழுது இருந்திருக்கமாட்டார்கள், அதற்குள் சண்டையும், சச்சரவும், பயமுறுத்தல்களும், சுயநலமும் சஹாபாக்களின்  வாழ்விலே காணப்பட்டது. 

இதற்கு காரணம் யார்? இவ்வளவு காரியங்கள் நடக்கும் என்று தெரிந்திருந்தும், எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், தன் நபி மௌனமாக மரித்துவிட ஏன் அல்லாஹ் அனுமதிக்கவேண்டும்!  அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய குர்-ஆன் இந்த சஹாபாக்களின் உள்ளத்தில் மனப்பாடமாக பதிந்து இருந்து என்ன பிரயோஜனம்? ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான வசனங்களை மனப்பாடம் செய்த மனங்களிலிருந்து இவர்களை எச்சரிக்கை செய்ய ஒரு வசனம் கூட இவர்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? ஒருவேளை இவர்களுக்கு ஞாபகம் வந்த குர்-ஆன் வசனங்கள், வன்முறையை தூண்டும் வசனங்களாக இருந்ததினால் தான் இவர்கள் இப்படி நடந்துக் கொண்டார்களா?

அன்றும் சரி, இன்றும் சரி இஸ்லாமிய இறையியல் மக்களை ஒன்று படுத்தாது, அவர்கள் மனதளவில் மாற்றமடைய உதவி புரியாது என்பது தான் நிஜம். இதனை அறிய நாளை காலை வெளிவரும் இஸ்லாமிய நாட்டு செய்திகளை படித்துப் பாருங்கள்.  ஒரே குர்-ஆனை நாங்கள் படிக்கிறோம் என்றுச் சொல்லுகின்ற சுன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம்களின் மசூதிகளில் வெடிகுண்டு வைக்கிறார்கள்.  

முஹம்மது உயிரோடு இருக்கும் போது அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள், அவர் மரித்த பிறகு ஓணாய்களைப்போல சண்டையிட்டுக் கொண்டது ஏன்? இதற்கான இரகசியம் ஒருவேளை நமக்கு குர்-ஆனில் காணப்படுமா?

இந்த கடிதத்தில், இஸ்லாமின் இரண்டு கண்கள் எப்படி ஒன்றையொன்று மோதிக்கொண்டது என்பதைக் கண்டோம். அடுத்த கடித்ததில்,  அபூ பக்கர் தலைவராக வருதை, அதே குழுவில் இருந்தவர்களாகிய அலியும்,  இதர மக்களும் விரும்பினார்களா என்பதைக் காண்போம்.  இஸ்லாமின் ஆரம்பகாலத்தை தோண்டத் தோண்ட மரித்த சடலங்கள்  வெளியே வந்துக்கொண்டே இருக்கின்றன.   

தம்பி, உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். 

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

சனி, 27 ஜூன், 2015

2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே "2015ம் ஆண்டு ரமளான் மாதத்தில்" கடித உரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவைகளை படிக்க இங்குசொடுக்கவும்.

இதுவரை ஏழு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த எட்டாவது கடிதத்தில் உமரின் தம்பி முன்வைத்த வாதம் "முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனதால் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் வந்தன"  என்பதாகும். உண்மையாகவே இது மட்டும் தான் காரணமா? அல்லது அல்லாஹ் இதற்கு காரணமா?  இக்கேள்விகளுக்கு இக்கடிதம் பதில் அளிக்கும்.


முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ் 

அன்புள்ள தம்பிக்கு, 

உன் அண்ணன் உனக்கு இயேசுவின் பெயரில் சமாதானம் கூறி எழுதிக்கொள்வது. உனக்காக நாங்கள் அனுதினமும் ஜெபிக்கிறோம். நீ மனம் திறந்து உன் கேள்விகளை, சந்தேகங்களை எனக்கு எழுதுகின்றபடியால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது மட்டுமல்ல, என் மீது நீ வைக்கும் குற்றச்சாட்டுகளையும் நான் ஒரு ஆரோக்கியமான உரையாடலின் ஒரு அங்கம் என்றே கருதுகிறேன். 

முஸ்லிமல்லாதவர்கள், இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, ஒவ்வொரு முஸ்லிமும் வெவ்வேறு வகையாக அதற்கு பதில்(அடி) கொடுக்கிறார்கள்: 

சில முஸ்லிம்கள், கண்டும் காணதவர் போல இருந்துவிடுவதுண்டு.

சில முஸ்லிம்கள், கெட்ட வார்த்தைகளால் திட்டுவிட்டு, வேறு ஒன்றையும் செய்ய திராணியில்லாதவர்களாக, திட்டியதே போதும், உள்ளத்திலிருந்த பாரமெல்லாம் இறங்கிவிட்டது என்றுச் சொல்லி திருப்தியாக இருந்துவிடுகிறார்கள்.

சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சாபத்தைக் கூறுகிறார்கள், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமல், நீ நாசமடைவாய், அல்லாஹ் உன்னை தண்டிப்பான், நீ நரகத்துக்குச் செல்வாய் என்றுச் சொல்லிவிட்டு, அமைதியாக ஜகா வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

சில முஸ்லிம்கள், ஒரு படி மேலே சென்று விமர்சனம் செய்தவனின் குடும்ப நபர்களை முக்கியமாக பெண்களை படுப்பதற்கு அழைப்பார்கள். எதிரிகளாக பாவிப்பவர்களின் குடும்ப பெண்களை படுப்பதற்கு அழைக்கும் ஆசையை இவர்கள் உள்ளத்தில் போட்டவர்கள்/வளர்த்தவர்கள் யார் என்பதை எல்லாரும் ஆய்வு செய்யவேண்டும். 

கடைசியாக, சில முஸ்லிம்கள் இஸ்லாம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஆய்வு செய்து, அனேக ஆதார நூல்களில் பதில்களைத் தேடிப்பார்த்து, உண்மை எதுவென்று கண்டுபிடிப்பார்கள். மேலும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் இதர மேதாவிகளிடமும் கேள்விகள் கேட்டு, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு, ஒரு ஆரோக்கியமான பதிலை தங்களால் முடிந்தவரை கொடுக்க முயற்சி எடுப்பார்கள்.  ஒரு வேளை இவர்களின் ஆய்வின் முடிவு, இஸ்லாமுக்கு எதிராக இருந்தால், தைரியமாக இஸ்லாமை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டார்கள். 

தம்பி, நீ கடைசியாக சொன்ன வகையைச் சார்ந்தவன் என்று நான் நம்புகிறேன்.  

இப்போது உன் கடிதத்தில் நீ சுட்டிக்காட்டிய "முஹம்மதுவின் கடைசி ஆசை" பற்றிய விவரத்தையும், ஹதீஸையும் காண்போம். 

முதலாவது நீ எழுதிய வரிகளை இங்கு பதிக்கிறேன்:

"முஹம்மது தாம் மரிப்பதற்கு முன்பாக ஒரு எழுதுகோலையும், எழுதுவதற்கு பயன்படும் காகிதம் போன்ற ஒன்றையும் கேட்டார், அதில் அவர் சிலவற்றை எழுதவேண்டும் என்றும் விரும்பினார். அவர் தன் கடைசி ஆசையை எழுதியிருந்தால், இஸ்லாமிய சமுதாயம் குழப்பத்திற்குள்ளாக செல்லாது" என்றும் கூறினார். ஆனால், பல தடைகளினால் அது முடியாமல் போனது. ஆகையால் தான் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே சில சலசலப்புக்கள் காணப்பட்டது. 

ஆனால், உமரண்ணா, நீங்கள் அனைத்திற்கும் இஸ்லாம் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள், இது சரியான விமர்சனம் அல்ல. ஆரம்ப கால சஹாபாக்கள் எதை செய்தாலும், இஸ்லாமிய இறையியலை குற்றப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது.  

சஹாபாக்களைப் போலவே இயேசுவிற்கு பிறகு, அவரின் சீடர்கள் மத்தியிலேயேயும் இப்படிப்பட்ட சலசலப்புக்களும், வாக்குவாதங்களும், பிரச்சனைகளும் காணப்பட்டது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டும்.

தம்பி, உன்னுடைய மேற்கண்ட வாதத்தில் நியாயம் இல்லை. இறைவன் செய்கின்ற எதுவும் தவறிப்போகாது, அது முழுமையடையும்.  இதனை கீழ்கண்ட தலைப்புகளில்  உனக்கு விளக்குகிறேன். இந்த கடிதத்தில், சஹாபாக்களும், முஹம்மதுவின் கடைசி ஆசையும் என்பதைப் பற்றிய விவரங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறேன்.

இயேசுவின் சீடர்கள் பற்றி நீ எழுதியவைகள் பற்றி தனி தலைப்பிலே உனக்கு இன்னொரு கடிதத்தை நான் எழுதுவேன். 

1) முஹம்மதுவின் கடைசி ஆசை - புகாரி ஹதீஸ்

2) உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?

3) முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்

4) முடிவுரை


முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ் 

1) முஹம்மதுவின் கடைசி ஆசை - புகாரி ஹதீஸ்

தம்பி, உன் கடிதத்தில் "முஹம்மதுவின் கடைசி ஆசை பல தடைகளினால்  நிறைவேறாமல் போனது" என்று சொல்லியுள்ளாய். ஆனால், உண்மையாக அன்று என்ன நடந்தது என்று ஆதாரத்தோடு சொல்லவில்லை.  உனக்காக, இந்த விஷயத்தைப் பற்றி வரும் புகாரி ஹதீஸை இங்கு பதிக்கிறேன்.

புகாரி 7366. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள்.உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என்றார்கள். 

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நடந்தவற்றை சுருக்கமாக நான் உனக்கு தருகிறேன்.

அ) முஹம்மது மரண படுக்கையில் இருக்கிறார்

ஆ) உமர் உட்பட சிலர் அங்கு இருக்கிறார்கள்.

இ) இந்த கூட்டத்தைக் கண்டு, "ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன், இதன் மூலமாக நீங்கள் வழிதவறிப் போகமாட்டீர்கள் என்று" முஹம்மது  சொல்கிறார்.

ஈ) எங்களுக்கு குர்-ஆனே போதும், இப்போது எதுவும் எழுதத்தேவையில்லை என்று உமர் மறுக்கிறார்.

உ) ஒரு சிலர் முஹம்மது கேட்டதை கொடுப்போம், அவர் முக்கியமான ஒன்றை எழுதித்தருவதாகச் சொல்கிறார் எனவே தடை செய்யவேண்டாமென்றுச் சொல்கிறார்கள்.

ஊ) வேறு சிலர், உமரின் வார்த்தைகளுக்கு இணங்க, கொடுக்க மறுக்கிறார்கள்.

எ) கூச்சல் அதிகமாவதைக் கண்ட முஹம்மது அனைவரையும் வெளியே போகும் படி கட்டளையிடுகிறார்.

ஏ) உமர் எண்ணியதுபோலவே நடந்தது.

2) உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?

என் அருமை தம்பி, புகாரி ஹதீஸை படித்தாயா?

23 ஆண்டு ஊழியம், ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான குர்-ஆன் வசனங்கள்(6236), பல வழிப்பறி கொள்ளைகள், பல போர்கள், பல கொலைகள், பல பெண்களின் கற்பு பாலைவன சூட்டில் சூரையாடப்பட்டது அதாவது,  போரில் பிடிபட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், அடிமைகளாக விற்கப்பட்டார்கள். எத்தனை முறை ஜிப்ராயீல் தூதன் இறங்கி வந்து வசனத்தை இறக்கினானோ, எண்ணிக்கை முஹம்மதுவிற்குத் தான் தெரியும். மேற்கண்ட அனைத்து காரியங்களுக்கும் வெளிப்பாடுகளைப் பெற்ற முஹம்மது இன்று மரணப் படுக்கையில் கிடக்கிறார். 

இவர் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும் தான். அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு பயன்படும் ஒன்றை எழுதித் தருகிறேன் என்றார்.  நீங்கள் எழுதுவது எங்களுக்கு தேவையில்ல என்று மறுத்துவிட்டார். கூச்சலும் குழப்பமும் தொடங்கிவிட்டது. (முஹம்மதுவிற்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்று தானே முஸ்லிம்கள் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கு எப்படி இவர் பேனாவையும், பேப்பரையும் கேட்கிறார்…? இதைப் பற்றி மற்றொரு நேரத்தில் சிந்திப்போம்).

உமர் ஏன் தடை செய்யவேண்டும்? உமர் அறியாமையில் இதனைச் செய்தாரா? அல்லது இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது இருக்கின்றதா? 

சஹாபாக்களின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை தீர்த்துவைத்த முஹம்மதுவின் கடைசி (பென்) ஆசை அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது. பாவம் முஹம்மது, ஒரு கைதிக்கு கூட உன் கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள், ஆனால் இவருக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது.

உங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட குர்-ஆன் எங்களுக்கு உண்டு, அதுவே போதும் என்று உமர் கூறினார். குர்-ஆன் போதுமென்று முஹம்மதுவிற்குத் தெரியாதா? உமர் முஹம்மதுவிற்கு புதிதாக ஏதாவது கற்றுக்கொடுக்க முடியுமா என்ன?

ஒரு வேளை, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும் என்று முஹம்மது எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டால், என்ன செய்வது? மதினாவின் முஸ்லிம்களாகிய அன்சாரிகளுக்கு அந்த நாற்காலி சென்றுவிட்டால் என்ன செய்யமுடியும்? முஹம்மது ஒரு முறை எழுதிவிட்டால், அதனை யாரும் மாற்றமுடியாது அல்லவா?  இந்த சூழல் வருவதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்?  தானாக வாய்ப்பு வந்தாலும் அதனை எப்படியாவது கெடுத்துவிடலாம் என்ற எண்ணம் உமரின் உள்ளத்தில் தோன்றியதோ? 

அண்ணே! ஆட்சியை பிடிக்கவேண்டுமென்கிற இப்படிப்பட்ட கீழ்தரமான கேடுகெட்ட எண்ணங்கள் சஹாபாக்களுக்கு வராது என்றுச் சொல்லத்தோன்றுகிறதா தம்பி?

நீ கட்டாயம் இந்த ஹதீஸை படித்தே ஆகவேண்டும்.

புகாரி 4447. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் 

அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள். 

இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். Book :64

இறைத்தூதரிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுவிடுவோம் என்று சிலர் சொல்லும் போது, அலி அவர்கள் மறுத்துவிட்டார்கள்.  அவருக்கு அடுத்தபடியாக யார் நாற்காலியை பிடிப்பது என்பதைப் பற்றி கேட்பது இந்த சூழலில் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. எனவே கேட்போம் என்றுச் சொன்னபோது, இதனை அலி மறுத்துவிட்டார். முஹம்மது மீது அலி அவர்களுக்கு நம்பிக்கையில்லை, ஒருவேளை ஆட்சி அதிகாரம் அன்சாரிகளுக்கு (மதினா முஸ்லிம்களுக்கு) என்று முஹம்மது சொல்லிவிட்டால், அதன் பிறகு  தனக்கு அதிகாரம் வராது என்பதால், அலி மறுத்துவிட்டார்.

முஹம்மது சொன்னது கூட வஹி தான் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட வஹி மூலமாக வரும் செய்தி எங்களுக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார், ஒரு சஹாபா அலி, இவர் முஹம்மதுவின் அன்பான மகளின் கணவராவார். அல்லாஹ் எடுக்கும் முடிவு, தங்களுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? எனவே, வாய்ப்பையை உருவாக்கக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்வையே ஜெயித்துவிட்டார் அலி.

அலி அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செல்லக்கூடாது என்று ஆயிஷா அவர்கள் விரும்பியதாக, இன்னொரு ஹதீஸும் சொல்கிறது. முஹம்மது தனக்கு அடுத்து ஆட்சியை நடத்த அலியை தெரிவு செய்தாராமே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று ஆயிஷா அவர்கள் மறுத்தார்கள். இதனையும் நாம் புகாரி ஹதீஸில் காண்லாம்.

புகாரி 4459. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் 

"நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே" என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், 'இதைச் சொன்னவர் யார்?' என்ற கேட்டுவிட்டு, '(நபி(ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?' என்று கேட்டார்கள். Book :64

சஹாபாக்கள் - பொறுக்கி எடுத்த இஸ்லாமிய முத்துக்கள்:

அ) அலி அவர்கள் நல்ல வாய்ப்பை உருவாக்க மறுத்துவிட்டார்.

ஆ) உமர் அவர்கள், முஹம்மதுவினால் உண்டான வாய்ப்பையே தட்டிக் கழித்துவிட்டார்.

வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாமிய ஆரம்ப கால முஸ்லிம்கள். பாவம் முஹம்மது, அல்லாஹ்வே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் போது, இவரால்  என்ன செய்யமுடியும்? அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் வல்லவராமே!

"அல்லாஹ்வா! சூழ்ச்சி செய்தான்! இல்லை இல்லை, சஹா பாக்கள் செய்த குழப்பத்தினாலும், ஆட்சி அதிகாரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசையினாலும் இப்படி எங்கள் இறைத்தூதருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை" என்று தம்பி நீ சொல்லுவாய். ஆனால், இது தவறு, உனக்கு இஸ்லாம் தெரியாது, குர்-ஆன் தெரியாது, அல்லாஹ்வைத் தெரியாது.  இவைகள் எல்லாம், அல்லாஹ்வின் அனுமதிக்கு உட்பட்டுத் தான் நடந்தது. புரியவில்லையா! அடுத்த தலைப்பில் தரப்படும் குர்-ஆன் வசனங்களைப் பார். உண்மை புரியும்.

3) முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்

மேலோட்டமாக, மேற்கண்ட ஹதீஸ்களை பார்த்தால், உமரின் செயலினால் தான்  முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று சொல்லத்தோன்றும். ஆனால் உண்மையில், அல்லாஹ் நாடவில்லை, அதனால், முஹம்மதுவின் ஆசை நிறைவேறவில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்.

அ) உச்சு சப்பு இல்லாத அற்பமான விஷயங்களுக்கு அல்லாஹ் வசனங்களை இறக்குவார்.

ஆ) முஹம்மதுவின் ஆசைகளை பூர்த்திசெய்ய அல்லாஹ்விடமிருந்து ஈமெயில் சீக்கிரமாக வரும்.

இ) வளர்ப்பு மகனின் மனைவியை எடுத்து முஹம்மதுவிற்கு கொடுப்பதற்கு அல்லாஹ்வின் வஹி இறங்கிவரும்.

ஆனால், 23 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் கனி கனிந்துவரும் நேரத்தில், சஹாபாக்கள் செய்யப்போக்கும் கூச்சல் குழப்பம், அதிகார துர்பியரோகம், கொலைகள், அவமானங்கள் போன்றவைகள் நடக்கப்போகின்ற நேரத்தில் "அந்த சமுதாயத்துக்கு தேவையான வஹி அல்லாஹ்விடமிருந்து வராது". ஒரு வேளை வந்திருந்தாலும், அதனை உமர் போன்ற ஒரு மனிதரால் தடை செய்யமுடியும் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.

அடுத்த தலைவர் யார் வரவேண்டும் என்ற ஒரு தெளிவான வசனம் குர்-ஆனில் இல்லை, ஹதீஸில் இல்லை, சாவதற்கு முன்பாக யாரோ ஒருவரை விரல் நீட்டி காட்டிவிட்டுச் செல்லலாம் என்று விரும்பினாலும், அல்லாஹ் நாடவில்லை. 

குறைந்தபட்சம் ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கலாம் என்று விரும்பினாலும், இஸ்லாமிய உம்மா மக்கள் சும்மாவே சண்டை போட்டுக்கொள்கிறார்கள். 

ஒலி வடியில் தான் எங்கள் குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றுச் சொல்கின்ற முஸ்லிம்கள், ஏன் முஹம்மது ஒலிவடியில் தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டுச் சென்று இருக்கக்கூடாது என்று சிந்திக்கவேண்டும்.  கடைசி ஆசையைச் சொல்ல ஏன் கடைசி வரைக்கும் முஹம்மது காத்திருக்கும் படி அல்லாஹ் செய்தார்? ஒரு வாரம் அல்லது மாதத்துக்கு முன்பாகவே சொல்லிவிட்டுச் சென்று இருக்கலாம் அல்லவா? தம்பி, நீ இவைகளை ஆராய்ந்துப் பார்.

ஒட்டு மொத்த குற்றமும் அல்லாஹ்வுடையது தம்பி. உமரும் அலியும், ஆயிஷாவும் இதர சஹாபாக்களும் வெறும் நடிகர்கள் தான், அவர்களை நடிக்க வைப்பவன் யார் - அல்லாஹ் தான். 

தம்பி, இதுவரை முன்வைத்த விவரங்களுக்கு ஆமீன் என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள்:

அல்லாஹ்வின் சித்தமில்லாமல், எதுவும் உலகில் சிந்தாது:

குர்-ஆன் 9:51. "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

முஹம்மதுவின் கடைசி ஆசை, ஆசையாகவே நின்றுவிடும் என்று அல்லாஹ்வின் ஏட்டில் அல்லாஹ்வே முன்குறித்துள்ளான்:

குர்-ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

குர்-ஆன் 57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

நன்றும் தீதும் பிறர் தரவாரா! – அல்லாஹ்வே கொடுப்பார் (தன் நபி விஷயத்திலும்):

குர்-ஆன் 6:17. "(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

குர்-ஆன் 6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

குர்-ஆன் 76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.

4) முடிவுரை

எனக்கன்பான தம்பியே, உனக்காக எவ்வளவு நேரத்தை ஒதுக்கி எழுதுகிறேன் என்று பார்த்தாயா?  என் எழுத்துக்களால், ஒரே ஒரு ஆத்துமா பரலோகம் சென்றால், தூதர்கள் முன்பு மிகுந்த சந்தோஷம் அதனால் உண்டானால்,அதுவே எனக்கு போதும். அந்த ஆத்துமா என் தம்பியாக ஏன் இருக்கக்கூடாது?

முஹம்மதுவிற்கு அடுத்து, சஹாபாக்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டார்கள். வஹி இல்லா அனாதைகள், வழி தெரியாமல் தவிக்கும் பிள்ளைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் சென்றார்கள். இவர்களை வழிநடத்த ஜிப்ராயீல் வரவில்லை, வஹி வரவில்லை, இவர்களை சரியான வழியில் நடத்த குர்-ஆனில் தெளிவான வசனங்கள் இல்லை, அவ்வளவு ஏன், இவர்கள் மத்தியிலே ஒரு சகோதர அன்பு இல்லை. 

குர்-ஆனின் இறையியல், இவர்களை மாற்றவில்லை, இவர்களை மற்ற போதுமானதாகவும் இல்லை. குர்-ஆன் வசனங்களுக்கு இவர்களை மாற்ற சக்தி இல்லை.  தம்பி, இந்த வரிகளை நான் எழுதிக்கொண்டு இருக்கும் போதே, தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. 

குவைத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 

துனிசியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். (மூலம்)  

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு 

உன் அண்ணன்

வியாழன், 25 ஜூன், 2015

2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே "2015ம் ஆண்டின் ரமளான் மாதத்தில்" கடித உரையாடல்கள் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவைகளை படிக்க இங்குசொடுக்கவும்.

இந்த கடிதத்தில், முதலாவது உமரின் தம்பி கடிதம் எழுதுகிறார், அதன் பின்பாக உமர் அவருக்கு பதிலைத் தருகிறார். 


அன்புள்ள அண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதங்களை படிக்கும் போது, எனக்கு இரத்தம் கொதிக்கிறது. இஸ்லாமை பற்றி நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் ஆரோக்கியமானவைகளாக இல்லை.  உங்கள் முந்தைய  கடிதத்தை படித்தேன், அதில் அலி அவர்கள் பற்றி நீங்கள் தரக்குறைவாக எழுதியுள்ளீர்கள்.

1) அவருக்கு பண ஆசை அதிகம் என்று எழுதியுள்ளீர்கள். மனைவிக்கு அறிவுரை கூறாதவர் என்று குறைகூறியுள்ளீர்கள்.

2) அலி தன் தவறை உணர்ந்து, அபூ பக்கரிடம் ஒப்புறவான விஷயத்தை மட்டும் நீங்கள் மறைத்துவிட்டீர்கள்.  அவரது பிழைகளை எடுத்துக் காட்டிவிட்டு, அவர் மறுபடியும் ஒப்புறவான விஷயத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டீர்கள்.  இதனை நீங்கள் மேற்கோள் காட்டிய புகாரி ஹதீஸிலிருந்து அறிந்துக் கொள்ளலாம். ஆனால், அந்த ஹதீஸீன் கடைசி பகுதியை நீங்கள் வேண்டுமென்றே மேற்கோள் காட்டாமலேயே விட்டுவிட்டீர்கள். இதிலிருந்து உங்கள் உள்நோக்கம் தெரிகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

3) மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான், அவன் திருந்திவிட்டால், அவனின் முந்தையை தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாது. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்குத் தெரியவில்லையா? 

ஏன் நீங்கள் புகாரி ஹதீஸ் 4240 & 4241ஐ முழுவதுமாக பதிக்கவில்லை என்பதை எனக்கு சொல்லுங்கள்? நீங்கள் மறைத்த ஹதீஸை நான் உங்களுக்காக பதிக்கிறேன், படித்துப் பாருங்கள். இதற்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உங்களிடன் கடிதத்திற்காக நான் காத்திருப்பேன்.

புகாரி 4240. & 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

. . . . . . . . . ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்) அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் - விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அலீ(ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. எனவே, 'தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம்" என்று கூறி அலீ(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்-ரலி - அவர்களுடன்) உமர்(ரலி) வருவதை அலீ(ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும. அப்போது உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)" என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்" என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ(ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கம் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கம் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்" என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல்விட்டு விடவுமில்லை" என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும" என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல் மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது" என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்" என்று கூறினர். தம் போக்கை அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.  Book :64

இப்படிக்கு, 

உங்கள் தம்பி

சௌதி அரேபியா.

தேதி: 24 ஜூன் 2015


2015 ரமளான் கடிதம் 7

அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

அன்பான தம்பிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். 

உன் கடிதத்தை படித்து மகிழ்ந்தேன். உன் ஆர்வத்தையும் ஆய்வையும் கண்டேன். 

நீ கேட்ட கேள்விகளுக்கு நான் கட்டாயம் பதில் சொல்வேன். 

உன் முதல் கேள்வி: அலி அவர்கள்  "பண ஆசை" உள்ளவர் என்று நான் எழுதியது பற்றியதாகும். மேலும் பண விஷயத்தில், பெரியவர்களுக்கு தர வேண்டிய மதிப்பு   மரியாதை விஷயத்தில் மனைவிக்கு அறிவுரைச் சொல்லாதவர் என்றும் நான் எழுதியிருந்தேன். 

தம்பி, என் விமர்சனத்திற்கு ஆதாரமாக நான் ஆதாரங்களை காட்டி எழுதினேன். இப்போது அதனை மறுக்கும் நிலையில் நீ இருந்தால்,  அதற்கான ஆதாரங்களைத் தருவது உன் கடமையாகும். அதற்கும் என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? நான் மேற்கோள் காட்டிய ஹதீஸிலிருந்து, அலியும், ஃபாத்திமாவும் பண ஆசையே இல்லாதவர்கள் என்று உன்னால் நிருபிக்கமுடியுமா?  முயற்சி எடுத்துப்பார். 

இரண்டாவது விமர்சனம்: நான் ஏன் புகாரி ஹதீஸ்கள் 4240 & 4241  எண்களில் வரும்  கடைசி பகுதியை முந்தைய கடிதத்தில் பதிக்கவில்லை என்று கேட்டு இருந்தாய். 

என்னிடம் கேள்வி கேட்டுவிட்டு, நீயே பதிலை சொல்லிவிட்டால் எப்படி சொல்?  ஏன் பாதி ஹதீஸை பதித்தீர்கள்? என்று என்னிடம் கேள்வி கேட்டாய், ஆனால், நீயே அதற்கு பதிலையும் சொல்லிவிட்டாய். அதாவது நீயும்  இந்த கடிதத்தில் பாதி ஹதீஸையே பதித்தாய் ஏன்?

கடிதத்திற்கு தேவையான பகுதியை மட்டுமே பதித்தேன், தேவை இல்லாததை ஏன் பதிக்கவேண்டும் என்று எனக்கு நீ பதில் சொல்லக்கூடும். அதே பதில் தான் நானும் கூறுவேன். ஒரு தலைப்பு பற்றி நாம் பேசும்  போது, அந்த விஷயத்தைப் பற்றிய பகுதியை மட்டுமே மேற்கோள் காட்டுவோம். தேவையில்லாத ஊர் கதையெல்லாம் அந்த தலைப்பில் விவாதிக்கமாட்டோம். அதனால், தான் ஃபாத்திமா மற்றும் அலி அவர்களின் பண ஆசை வெளிப்படும் "ஹதீஸ் பகுதியை நான் மேற்கோள் காட்டினேன்".   இது தான் நான் ஹதிஸின் முதல் பகுதியை பதித்ததற்கான முதலாவது காரணம். 

இரண்டாவது காரணம் என்னவென்றால்,  ஒரு கடிதத்தில் ஒரு தலைப்பு பற்றியே நான் எழுதவேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொரு கடிதத்திற்கும் தனித்தனி தலைப்புகள் வைப்பதினால், அதைப் பற்றிய விவரங்களை மட்டுமே பதித்தேன். ஃபாத்திமா அவர்கள் மரித்த பிறகு, அலி  அபூ பக்கரிடம் வந்து நடித்த நடிப்பை ஒரு புதிய கடிதமாக எழுத நான் எண்ணியிருந்தேன். ஆகையால், அதனை நான் முந்தைய கடிதங்களில் பதிக்கவில்லை.  இப்போது அதற்கான சமயம் வந்தபடியால், இந்த கடிதத்தில் அதைப் பற்றி எழுதுகிறேன்.

புகாரி 4240/4241ம் ஹதீஸ்களின் பிற்பகுதிக்கு, நான் வைத்த பெயர் என்ன தெரியுமா? "அலி ஒரு சந்தர்ப்பவாதி" என்பதாகும்.

உபதலைப்புக்கள்:

1) ஃபாத்திமாவின் மரணமும், அலியின் மரியாதைக் குறைவும்.

2) ஆறு மாத கசப்பும், திடீர் மனந்திரும்புதலும்.

3) முடிவுரை: வாய்ப்புக்கள் கதவை தட்டாவிட்டாலும், தானாக திறக்கும் கதவுகள்.

------------------------

1) ஃபாத்திமாவின் மரணமும், அலியின் மரியாதைக் குறைவும்.

தம்பி நீ பதித்த ஹதீஸை மறுபடியும் நன்றாக படித்துப் பார்.  அதில் முக்கியமான வரியை உனக்காக இங்கு பதிக்கிறேன்.

. . . . "ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள்." . . .

ஃபாத்திமா அவர்கள் உயிரோடு இருக்கும் வரையிலும்,  அலி அவர்களுக்கு மக்கள் மரியாதை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.  ஃபாத்திமா மரித்தவுடன், மக்களின் முகங்களில் மாற்றம் வந்தது, மரியாதை குறைந்தது, தனிக்கவனம் குறைந்தது. இதனைக் ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது. 

நாம் சென்றுக்கொண்டு இருக்கும் வழி சரியானது தான் என்ற நம்பிக்கை இருந்தால், அதே வழியில் தொடர்ந்து சென்றுக்கொண்டே இருக்கவேண்டும்.  அது தான் நேர்மையானவர்களுக்கும், சத்தியத்தை பின் பற்றுபவர்களுக்கும் அழகு. யார் மரியாதை கொடுததால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன?  என்னை அபூ பக்கர் ஏமாற்றிவிட்டார், இவரால் என் பதவியும் போச்சு,  பணமும் போச்சு  இருந்தாலும், ஆறு மாதங்களாக எடுத்த தீர்மானத்தை மாற்றாமல் இருக்கிறேன் என்றுச் சொன்ன அலி அவர்கள், ஃபாத்திமா மரித்த பிறகு ஏன் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்? மக்கள் செல்வாக்கு இதனை செய்ய அவரை கட்டாயப்படுத்தியுள்ளது.  

2) ஆறு மாத கசப்பும், திடீர் மனந்திரும்புதலும்

தம்பி, இஸ்லாமிலே நான் அனேக ஆச்சரியங்களைக் கண்டு இருக்கிறேன். முஹம்மதுவிற்கு பரம எதிரியாக இருந்தவர்,  முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றுச் சொன்னவர்,  முஹம்மதுவோடு போர் செய்து, அவரை கொல்லவேண்டும் என்று விரும்பியவர் ஒருவர் இருக்கிறார். இவருக்கு திடீரென்று ஞானம் பிறக்கிறது – எப்போது?   முஹம்மதுவின் கத்தி, அவரின் கழுத்து பக்கத்தில் வரும்போது, திடீரென்று இந்த நபருக்கு  "முஹம்மது நபியாக தென்படுகிறார், அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை மார்க்கம்" என்ற ஞானம் வந்துவிடுகிறது.  முஹம்மதுவிற்கு முன்பு வந்து, நான் கலிமா சொல்லி முஸ்லிமாகிறேன் என்றுச் சொல்வார், இதனை முஹம்மதுவும் ஏற்றுக்கொள்வார். அந்த பரம எதிரிக்கு நல்ல பதவிகளையும் முஹம்மது தருகிறார். நான் யாரைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று உனக்கு தெரிகின்றதா தம்பி?  சிறிது ஆய்வு செய்துப்பார், இந்த பரம எதிரி யார்? அவர் செய்த செயல்கள் என்னென்ன? இந்த பரம எதிரியினால், இஸ்லாம் சுவைத்த கனிகள் என்ன? என்பதை நேரம் வாய்க்கும்போது உனக்கு எழுதுவேன்.

இப்போது அலியின் கதைக்கு வருவோம். 

ஆறு மாத கசப்பு,  கலிஃபாவும் வேண்டாம், அவரது ஆட்சியும் வேண்டாம், அவரோடு விசுவாச பிரமாணமும் வேண்டாம். நான் உட்கார வேண்டிய இடத்தில், அவர் உட்கார்ந்து இருக்கிறார். என் மனைவி கரேக்ட், நானும் கரேக்ட். இது தான் அலியின் நிலைப்பாடு.  இந்த நிலைப்பாட்டில் அலி ஆறுமாதங்கள் இருந்தார். இன்னும் இருந்திருப்பார், ஆனால், ஃபாத்திமா மரித்துவிடுகிறார்கள். 

மனைவி மரித்தவுடன், மக்களிடத்தில் தன் செல்வாக்கு குறைந்தவுடன், திடீரென்று போதிமரத்தின் ஞானம் இவருக்கு பிறக்கிறது. நான் தவறு செய்துவிட்டேனா?  முதலில் பதவி போச்சு, அடுத்தபடியாக பணமும் போச்சு, இப்போது மனைவியும் போயாச்சு, போதாகுறைக்கு, இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் போலிருக்கே! என்ன செய்வது என்று சிந்தித்தார் அலி.  

முஹம்மதுவிற்கு அடிக்கடி வந்து வெளிப்பாடுகளை கொடுத்த ஜிப்ராயீல் தூதன், மருமகனுக்கு வெளிப்பாடுகளை தர வரவில்லை. கனவிலே மாமனார் வந்து அபூ பக்கரிடம் ஒப்புறவாகிவிடு என்றுச் சொல்லவில்லை.  தெருவிலே மக்கள் காட்டிய மரியாதை (த்குறைவு) தான் அலியை மாற்றியுள்ளது. 

  • நான் சென்று அபூ பக்கரிடம் சமரசம் செய்துக்கொள்ளட்டுமா?
  • அபூ பக்கர் நமக்கு செய்த துரோகத்தை மறந்துவிட்டு, ஏன் இப்படி அவரோடு சேர்ந்துவிட்டீர்கள் என்று ஃபாத்திமா கேட்டால் என்ன செய்வது? 
  • ஓ.. ஃபாத்திமா தான் மரித்துவிட்டார்களே! யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்.

 

 

இத்தனை நாட்கள் இந்த ஐடியா வராமல் இருந்ததற்கு பாத்திமா தான் காரணமோ? ஒரு ஐடியா வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது (An idea can change your life).

காரணம் எதுவாக இருந்தாலும்,  இந்த நல்ல சந்தர்ப்பத்தை மட்டும் நழுவ விடக்கூடாது. விட்ட கதையை தொடரவேண்டியது தான்.  முந்தைய வசனங்களை இரத்து செய்துவிட்டு, புதிய வசனத்தை நமக்கு நாமே இறக்கிக்கொள்வோம்.  நல்ல விஷயங்களை பெறுவதற்கு, முந்தையை விஷயங்களை மறப்பதில் அல்லது மறைப்பதில் தவறில்லை.  அல்லாஹ்வே தன் முந்தைய வசனங்களை இரத்து செய்கிறானே, நான் செய்தால் என்ன? 

இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க, ஒரு இடத்தில் அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அலி. 

தம்பி, உன் ஹதீஸின் படி, அவர் அபூ பக்கரை வரச்சொல்கிறார் (பொதுவாக இவர் தானே அபூ பக்கரிடம் செல்லவேண்டும்? ஒரு கலிஃபாவை வரச்சொல்வதா!  நான் யார் இறைத்தூதரின் மருமகனாக்கும்!).

தன் தவறுகளை அறிக்கையிட்டார், நல்ல பிள்ளை என்று பெயரை வாங்கினார். திடீர் திருப்பங்கள் இஸ்லாமுக்கு புதிதல்லவே! அபூ பக்கர் கண்ணீர் மல்கினார். மக்களின் முன்பாக விசுவாச பிரமாணம் செய்யப்படுகின்றது. அலி எதிர்ப்பார்த்தபடியே மக்கள் அவரை அன்புடன் ஏற்றுக்கொண்டனர். மனந்திரும்புகின்ற ஒரு பாவியினிமித்தம், பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்ற பைபிளின் வசனத்திற்கு ஏற்ப, அபூ பக்கரின் தோளோடு தோள் சேர்க்க, அலி எடுத்த இந்த முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது ஒரு சிலரைத் தவிர.  இந்த மனந்திரும்பிய நிகழ்ச்சியினால் துக்கப்பட்டவர்கள் யாராவது இருந்திருப்பார்களா? ஆம், இருந்திருக்கலாம், அதுவும் அபூ பக்கரின் வீட்டில் பிறந்தவர்களுக்கே இது ஒரு துக்ககரமான செய்தியாக இருந்திருக்கலாம். 

3) முடிவுரை:

வாய்ப்புக்கள் கதவை தட்டாவிட்டாலும், தானாக திறக்கும் கதவுகள்.

தம்பி, நீ மேற்கோள் காட்டிய பகுதிலிருந்து தான் நான் இதுவரை உனக்கு விளக்கினேன். அலியின் செயல் ஒரு சந்தர்ப்பவாத செயலாகும். செய்த தவறை ஒப்புக்கொள்வதை நான் குறை கூறவில்லை, அதனை எப்போதும் நான் மெச்சிக்கொள்வேன். ஆனால், அலி ஏன் இப்படி தன் இதய கதவை திறந்தார்?  என்று சிந்திக்கும் போது,  பணமும், பதவியும், மக்களின் செல்வாக்கும் தான் அலியை நடத்தியுள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம். 

அ) ஃபாத்திமா உயிரோடு இருக்கும்  போது வராத இந்த நல்ல எண்ணம் ஏன் மரித்த பிறகு வந்தது?

ஆ) ஆறு மாதகாலமாக மனைவி சொல்லே மந்திரம் என்பதுபோல மனைவியின் சொற்படி  நடந்துக்கொண்டார்கள். மனைவி மரித்தவுடன், மந்திரம் மாந்திரீகம் ஆகிவிட்டதா?

இ) ஃபாத்திமா மரித்தபிறகு மக்களின் செல்வாக்கு குறைந்த போது, மனைவியின் தீர்மானங்களை மனைவியோடு கூட சேர்த்து மண்ணிலே புதைத்துவிட்டு, புத்துயிர் பெற்றுவிட்டார் அலி. அலிக்கு, பழயவைகள் ஒழிந்துப்போயின, எல்லாம் புதிதாயின.

ஈ) ஒரு வேளை,  அல்லாஹ்வின் அரசாட்சியில், முதன் முதலில் அலி ஃபாத்திமாவை எப்படி சந்திப்பார்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு பேசுவார்?

உ) அலி செய்தது சரியான காரியமானால், அதனை ஃபாத்திமாவிற்கும் சொல்லி இருவராக அபூ பக்கரோடு ஒப்புறவாகியிருந்தால், இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியிருக்குமே!

எ) மனைவி மரித்தபிறகு இப்படி ஒப்புறவாகுதல் என்பது, மனைவிக்குச் செய்யும் துரோகமில்லையா? தனக்கு நல்லபெயர் வேண்டும், தன் மனைவிக்கு மட்டும் தேவையில்லையா?

தம்பி, நாம் பச்சோந்தி என்றுச் சொல்லுவோம் தெரியுமா? சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது என்பது இது தானோ! 

அலியின் இந்த ஒப்புறவாகுதலை நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை, ஆனால், இந்த ஒப்புறவாகுதல்  எதன் காரணமாக இவருக்குள் உண்டானது என்பது தான் ஜீரணித்துக் கொள்ளமுடியாது (எனக்கு இல்லை தம்பி, உனக்குத் தான் ஜீரணமாவது கடினம்). முதலாவது செல்வத்துக்காக வாக்குவாதம் செய்துக்கொண்டாலும்,  அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், வாரிசு என்பதாலும், என்னை கேட்காமல், தலைவரை தெரிவு செய்ததாலும் தான் நான் கோபம் கொண்டேன் என்று பல்டி அடித்தார் அலி. 

நீ உண்மை இஸ்லாமை அறியாமல், அதில் காலை வைத்துவிட்டாய், இப்போது அதிலிருந்து வெளிவருவது சிறிது கடினம் தான் உனக்கு, ஆனால்,  முடியாது என்று சொல்லமாட்டேன்.  முயற்சி திருவினையாக்கும் தம்பி. சிந்தித்துப்பார்.

தம்பி, இன்னும் அலி அவர்கள் பற்றி அறியவேண்டியவைகள், நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக நான் உனக்கு எழுதுவேன்.  இஸ்லாம் ஃபாத்திமாவை மாற்றவில்லை, அலியையும் மாற்றவில்லை,  பண ஆசையும், பதவி ஆசையும் இவர்களை ஆட்டிபடைத்தது.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், அதுவரை உன் மனக்கண்களால் இஸ்லாமை ஆய்வு செய்துப்பார். 

இப்படிக்கு 

உன் அண்ணன்

உமர்