ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

உண்மையா? பொய்யா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மையா? பொய்யா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஆகஸ்ட், 2008

முகமது நம்பத்தகுந்தவரா? ( Al-Amin - Trustworthy?) - Part 1

முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்)
 
 
உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர் 
 
 
 
Muhammad as Al-Amin (the Trustworthy)
 
 
 
How His Enemies Really Viewed Him
 
 
 Sam Shamoun
 
 
இஸ்லாமுக்காக‌ வாதம் புரிப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தீர்க்க‌த‌ரிசியின் நேர்மையைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் போது அடிக்க‌டி மேற்கோள் காட்டுவ‌து, முக‌ம‌துவிற்கு அல்-அமின்(Al-Amin or Al-Ameen) என்ற‌ பெய‌ர் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதைப் பற்றியதாகும். அல்-அமின் என்றால், "நம்பத்தகுந்தவர்" என்று பொருளாகும், மற்றும் இந்த பட்டப்பெயர் முகமதுவிற்கு அவரின் உறவினர்கள் அவர் இறைவனின் ஊழியத்திற்கு வருவதற்கு முன்பாக கொடுத்து இருந்தார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். முகமதுவின் கால மக்களில் இவர் மிகவும் நம்பத்தகுந்த நபராக இருந்தார் என்றும், மற்றும் இவர் ஒரு பொய்யையும் சொல்லாதவராக இருந்தார் என்பதால் இவருக்கு அல்-அமின் என்ற பட்டப்பெயரை அம்மக்கள் இவருக்கு கொடுத்தார்கள் என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த வாதத்திற்கு கீழ் கண்ட ஹதீஸ் ஆதாரமாக தரப்பட்டுள்ளது:
 
 
'...அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார் [ஹெர்குலிஸ்]. நான் இல்லை என்றேன். 'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். ………. இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். …. அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். ( பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7 )

 
ஆங்கிலத்தில்:

"… He [Heraclius] said, 'Had you ever blamed him for telling lies before he claimed what he claimed?' I replied, 'No.' … He said, 'Does he break his promises?' I replied, 'No, but we are now at truce with him and we are afraid that he may betray us.' … . 'When I asked you whether he was ever blamed for telling lies, your reply was in the negative, so I took it for granted that a person who did not tell a lie about (others) the people could never tell a lie about Allah. I asked you whether he had ever broken his promise. You replied in the negative. And such are the apostles; they never break their promises…'" (Sahih al-Bukhari, Volume 4, Book 52,
Number 191)
 
 
 
இங்கே, முகமதுவின் எதிரியாக இருந்த அபு சுஃப்யான் என்பவர், பைஜான்டியம் ஆளுநரான ஹெர்குலிஸ் என்பவரை சந்தித்து பேசும் போது, முகமது ஒரு முறையும் பொய் சொல்லவில்லை மற்றும் அவர் தன் வாக்குறுதியை எப்போதும் காப்பவராக இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டதாக, மேலே உள்ள ஹதீஸ் கூறுகிறது.

 
முஸ்லீம்கள் மேற்கோள் காட்டும் இன்னொரு விவ‌ரமும் உண்டு, அதாவது, இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களும்(unbelievers) முகமது ஒரு முறையும் யாரிடமும் பொய் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொண்டதாக உள்ள ஹதீஸாகும்.
 
 
 
இபின் அப்பாஸின் அதிகார பூர்வமான ஹதீஸாக அறிவிக்கப் பட்டது என்னவென்றால், "உன் உறவினர்களை எச்சரிப்பாயாக(மற்றும் அவர்களிடம் உள்ள ஒருசில குழுவினருக்கு எச்சரிப்பாயாக)" என்ற வசனம் இறங்கியப் போது, அல்லாவின் நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், சபா(Safa)வின் மிது ஏறி, உரத்த சத்தமாக கூப்பிட்டார்கள்: உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார். இப்படி சத்தமாக கூப்பிடுவது யார் என்று அவர்கள் கேட்டார்கள். முகமது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அவரிடம் வந்தார்கள், மற்றும் அவர்: ஓ இன்னாருடைய மகன்களே, இன்னார் இன்னாருடையை மகன்களே, ஓ அப்த் மனஃபு உடைய மகன்களே, ஓ அப்த் அல் முத்தாலிஃப் உடைய மகன்களே, என்று அழைத்தார், அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வந்தார்கள். அவர்(நபி):ஒருவேளை இந்த மலையின் அடிவாரத்தில் குதிரை வீரர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுமொழியாக: உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒரு பொய்யையும் காணவில்லை என்றுச் சொன்னார்கள். அவர் சொன்னார்: நல்லது, வரப்போகும் மிகக்கொடுமையான ஆபத்தைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த ஹதீஸை சொன்னவர் கூறினார், இதற்கு அபு லஹாப் கூறினார்: உனக்கு அழிவு உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை இங்கு கூட்டிச் சேர்த்தாய்? அவர்(பரிசுத்த நபி) எழுந்து நின்றார், அப்போது இந்த வசனம் இறங்கியது, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும் (111:1)". அமாஸ் இந்த வசனத்தை சூராவின் கடைசியில் வாசித்தார். (Sahih Muslim, Book 001, Number 0406 In English)
 
 
 
மேலே கண்ட உரையாடல் அல்லது நிகழ்ச்சி முகமது ஒரு நேர்மையானவர் என்பதற்கு ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்(*). இறைவன் தன் நபியாக அல்லது தூதுவராக அனுப்பினார் என்று ஒரு பொய்யான வாதத்தை முகமது முன்வைக்க மாட்டார் என்று நம்புவதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.

 
முஸ்லீம்களின் இந்த வாதத்தில் அனேக பிரச்சனைகள் உள்ளன. குறைந்த பட்சமாக முகமதுவின் காலத்தவர்கள் தங்கள் கைப்பட எழுதி வைத்த(No Written Records) ஒரு ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் முஸ்லீம்களால் எழுதப்பட்டது, இன்னும் சொல்லப் போனால், முகமதுவின் மரணத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

 
மேலும், இந்த இஸ்லாமிய விவரங்கள் சந்தேகத்திற்கு உரியவைகள் ஏனென்றால், முஸ்லீம்கள் க‌தைகளை இட்டுக் கட்டி தங்கள் நபி மிகவும் நல்லவராக காட்டுவதற்கு இப்படி செய்கிறார்கள். குர்‍ஆன் முகமதுவை எப்படி காட்டுகிறதோ அதை விட நல்லவராக காட்டுவதற்கு முஸ்லீம்கள் முயற்சி செய்கிறார்கள்! ஆகையால், முகமதுவின் எதிரிகள் அவருடைய நடத்தையைப் பற்றி மிகவும் புகழ்ந்தும், அவருடைய நேர்மையைப் ப‌ற்றி புகழ்ந்தும் பேசுவதாக இருக்கும் இந்த விவரங்கள் பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 
இதற்கும் மேலாக, ஓயாமல் முஸ்லீம்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இப்படிப்பட்ட கதைகளுக்கு எதிர்மறையாக குர்‍ஆன் சாட்சி சொல்கிறது. அதாவது, குர்‍ஆன் முஸ்லீம் அல்லாதவர்களின் வார்த்தைகளை பதிவு செய்து தன்னிடம் வைத்துள்ளது.
 
 
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்‍ஆன் 6:33


உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. குர்‍ஆன் 10:41

 
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். குர்‍ஆன் 15:6

 
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். குர்‍ஆன் 16:101

 
"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! குர்‍ஆன் 25:4-6

 
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். குர்‍ஆன் 35:4
 
 
 
ஆனால், இவைகள் அனைத்தும் முஸ்லீமல்லாதவர்களால சொல்லப்பட்ட பொய்யான கூற்றுக்கள் என்று முஸ்லீம்கள் இந்த வசனங்களை ஒதுக்கிவிடுவார்கள். இப்படி முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்கள் வாதங்களில் உள்ள முரண்பாட்டை(inconsistency) இது காட்டுகிறது. ஆனால், உண்மையில் இதே முஸ்லீம்கள் தான் "முகமதுவின் நேர்மையை நிருபிப்பதற்கு முஸ்லீம்களல்லாதவர்களின் கூற்றுகளை ஆதாரங்களாக காட்டி முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பது" (After all, they are the ones appealing to the statements of the disbelievers to prove that Muhammad was a trustworthy person).

 
ஒரு வேளை, முஸ்லீம் அல்லாதவர்களின்(Unbelievers) சாட்சி/கூற்று முகமது ஒரு நேர்மையானவர் என்பதை நிருபிக்க போதுமானதாக‌ இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொல்லும் போது, அதே முஸ்லீம் அல்லாதவர்களின் சாட்சி/கூற்று முகமதுவின் நடத்தையை கேள்விக்குரியதாக்க போதுமானதாக இருக்கிறது என்று நம்பலாம் அல்லவா? இது எப்படி உள்ளதென்றால், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றுச் சொல்வது போல முஸ்லீம்களின் கூற்று இருப்பது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது (But if their testimony is reliable enough to support Muhammad's integrity then the unbelievers are also a good enough source to call his character into question. It is apparent that the Muslims want to have their cake and eat it too).

 
சில நேரங்களின் முஸ்லீம்கள் கீழ் கண்டவாறுச் சொல்லி திருப்தி அடைவார்கள், அதாவது, "முகமதுவைப் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொன்னார்களோ அதே போலத் தான் மற்ற நபிகள் மற்றும் தூதர்கள் பற்றியும் நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இதனை மட்டும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்ப மாட்டார்கள் என்று முஸ்லீம்கள் சொல்வார்கள். முஸ்லீம்களின் இந்த கருத்து மிகவும் தவறானது, இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
 
 
முதலாவதாக, பைபிளின் நபிகளுக்கும், தூதர்களுக்கும் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும்படிச் செய்து, அவர்கள் தனக்கு பதிலாக பேச அனுப்பப்பட்ட நபிகள் என்று வலுவான ஆதாரங்களோடு நிருபித்தார். இதன் காரணத்தினால், நம்பிக்கயில்லாதவர்களின் கூற்றுக்கள் பொய் என்று நிருபனமாகிறது. இதற்கு எதிர்மறையாக, முகமது, தான் இறைவனால் அனுப்பப்பட்டவர் தான் என்பதை நிருபிக்கும் படி ஒரு அற்புதமும் செய்துக்காட்ட முடியாமல், தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டார் (Muhammad, on the other hand, failed to provide any supernatural confirmation that he was speaking on behalf of God).

 
இரண்டாவதாக, இப்போது பிரச்சனை என்னவென்றால், "நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னது சரியானதா என்பதல்ல, அதற்கு மாறாக, நம்பிக்கை இல்லாதவர்கள் முகமதுவின் நேர்மையைப் புகழ்ந்தார்கள் என்று சொல்லும் முஸ்லீம்களின் வாதம் உண்மையானதா என்பதாகும்". குர்‍ஆன் சாட்சி சொல்வது போல, நம்பிக்கை இல்லாதவர்களின் கூற்று உண்மையாகவே, முகமதுவை மட்டுப்படுத்தவதாகவே இருந்தது. (Secondly, the issue here is not whether what the unbelievers said was correct, but whether the Muslim assertion that even the disbelievers praised Muhammad's honesty is true. As the Quran testifies, their comments were anything but flattering to Muhammad.)

 
 
 
 
மிகவும் முக்கியமாக, முகமது ஒரு நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் மற்றும் நேர்மையற்றவர் என்றும் தெரிந்துக்கொள்வதற்கு இஸ்லாமிய விவரங்கள்/ஹதீஸ்கள் போதுமான நம்பத்தகுந்த‌ ஆதாரங்களாக உள்ளன. முஸ்லீம்கள் நினைப்பது போல‌ முகமது ஒன்றும் நேர்மையின் நன்னடத்தையின் கலங்கரை விளக்கு அல்ல (He wasn't the beacon of virtue and honesty that Muslims make him out to be).
 
 
ஒரு எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் கூட சொல்வார், மற்றும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக தன்னை பின் பற்றுபவர்கள் பொய் சொல்லவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.
 
 
 

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள்.(Muhammad bin Maslama said, "Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab)." The Prophet said, "You may say it.") …… ….
….

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை" என்று கூறினார்கள்"

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். (Sahih al-Bukhari, Volume 5, Book 59,
Number 369 in English)

 
 
மற்றும்
 
 

கெய்பர் கைப்பற்றப்பட்டபிறகு, 'அல் ஹஜ்ஜஜ் பி. இலத் அல் சலாமி' என்ற அல் பஹ்ஜ் என்ற இனத்தைச் சார்ந்தவர், நபியவர்களிடம் வந்து, 'என் மனைவியிடம்(உம் ஷய்பா டி அபூ தல்ஹா) என் பணம் உள்ளது, (இவர்கள் இருவருக்கு முரத் என்ற மகனுண்டு). மக்காவிலுள்ள வியாபாரிகளிடம் எங்கள் பணம் உள்ளது, எனவே மக்காவிற்குச் சென்று அப்பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப அனுமதி கொடுங்கள் என்று கேட்டார். அனுமதி பெற்றுக்கொண்டு, மறுபடியும் இவர் நபியவர்களிடம் "நான் பொய் சொல்லியாக வேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'அவர்களிடம் சொல்" என்றுச் சொன்னார். அல் ஹஜ்ஜஜ் கூறினார், 'நான் மக்காவிற்குச் சென்றேன், அல்பைதா என்ற இடத்தில் சில குவாரிஸ் மக்கள் கெய்பருக்கு நபி சென்றாரே, அவர் எப்படி உள்ளார் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். ஹிரஜ் என்ற பட்டணம் மிகவும் முக்கியமான பட்டணம் என்றும், அதிக ஜனத்தொகையுள்ள மற்றும் அதிக பாதுகாப்புள்ள பட்டணம் என்றும் அவர்களுக்குத் தெரியும், எனவே, அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்களிடம் ஏதாவது செய்தி கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களுக்குத் தெரியாது, எனவே என்னை அவர்கள் கண்ட போது, என்னிடம், "இவர் அல் ஹஜ்ஜஜ் பி.இலத் தானே, கண்டிப்பாக இவரிடம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எங்களிடம் சொல்லவும், ஓ அபூ முஹம்மதே, அந்த வழிப்பறி கொள்ளைக்காரன்(highwayman) யூதர்களின் மற்றும் தோட்டங்களுள்ள ஹிரஜ் என்ற பட்டணத்திற்கு சென்றான் என்று கேள்விப்பட்டோம்". நான் "நீங்கள் சந்தோஷப்படும் ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றேன். என் ஒட்டகத்தின் இருபுறங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து, "சொல் ஹஜ்ஜஜ்" என்றார்கள். நான் கூறினேன், "இதுவரை நீங்கள் கேள்விப்படாத அளவிற்கு அவர் தோல்வியை சந்தித்தார் மற்றும் அவருடைய சக தோழர்கள் வெட்டப்பட்டு மரித்தார்கள்; அவர் எப்படி பிடிக்கப்பட்டாரோ அதை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்". கெய்பரின் மக்கள், "நாம் இவரை கொல்லகூடாது, இவரை மக்கா மக்களிடம் அனுப்புவோம், இவர் கொன்ற மக்கா மக்களுக்கு பழிக்கு பழியாக அவர்களே இவரை கொல்ல‌ட்டும்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து மக்கா மக்களுக்கு சத்தமாக சொன்னதாவது, "இதோ ஒரு செய்தி உங்களுக்கு, முகமது இங்கு அனுப்பும் வரைக்கும் நீங்கள் காத்திருங்கள், பிறகு உங்கள் மத்தியில் அவரை கொல்லலாம்". நான் "என் பணத்தையும், எனக்கு வரவேண்டிய தொகையையும் நான் வசூல் செய்துக்கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு முன்பு நான் மறுபடியும் கெய்பருக்குச் சென்று, முகமது மற்றும் அவரது தொழர்களிடமிருந்து தப்பித்தவர்களை பற்றிக்கொண்டு இருக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன்". அவ‌ர்க‌ள் எழுந்திருந்து என்னுடைய‌ ப‌ண‌ம் அனைத்தையும் வ‌சூல் செய்தார்க‌ள், நான் வ‌சூல் செய்து இருந்தாலும் இவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் என் வேலை முடிந்திருக்காது. நான் என் ம‌னைவியிட‌ன் சென்று அவ‌ளிட‌ம் உள்ள‌ ப‌ண‌த்தையும் பெற்றுக்கொண்டு, நான் கெய்ப‌ருக்குச் சென்று வியாரிக‌ளுக்கு முன்பாக‌ நான் வாங்க‌ வேண்டும் என்றேன். அப்பாஸ் இந்த‌ செய்தியையும், என்னைப் ப‌ற்றியும் கேள்விப்ப‌ட்டு, நான் த‌ங்கியிருந்த‌ வியாபாரிக‌ளின் கூடார‌த்தின் ப‌க்க‌த்தில் வ‌ந்து நின்று என்னிட‌ம் செய்தி என்ன‌ என்று கேட்டார். நான் அவ‌ரிட‌ம் "நீ இர‌க‌சிய‌மாக‌ வைத்திருப்பேன் என்று சொன்னால், ஒரு விஷ‌ய‌த்தை உன்னை ந‌ம்பிச் சொல்கிறேன்" என்றேன். நான் அப்படியே இரகசியமாக வைப்பேன் என்று சொன்னார். நான் இப்போது நீ பார்க்கின்ற படி பணத்தை நான் வசூல் செய்துக்கொண்டு இருக்கிறேன், நான் உன்னை தனிமையில் சந்திக்கும் வரை காத்திரு என்றேன், அவரும் சென்றுவிட்டார். எனக்கு மக்காவில் வரவேண்டிய பணம் அனைத்தையும் நான் வசூல் செய்துவிட்டபிறகு, நான் கெய்பருக்குச் செல்ல முடிவு செய்தபோது, அப்பாஸை சந்தித்து சொன்னதாவது, "நான் சொல்லும் செய்தியை மூன்று நாட்கள் இரகசியமாக வைத்திருந்து, பிறகு நீங்கள் சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் என்னை பிடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்". அப்பாஸ் அப்படியே நான் செய்கிறேன் என்றுச் சொன்னபோது, நான் சொன்னதாவது, நான் "உன் சகோதரனின் மகன் அந்த அரசனின் மகள் ஷபியாவை திருமணம் செய்துக்கொண்டார், கெய்பர் கைப்பற்றப்பட்டது, அதனுள் இருப்பதெல்லாம் நீக்கப்பட்டது, இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாக மாறிவிட்டது" என்றுச் சொன்னேன். அவர் கேட்டார் "ஹஜ்ஜஜ் நீ என்ன சொல்கிறாய்?". நான் "ஆமாம், அல்லாவின் உதவியால் நடந்தது. என் இரகசியத்தை காத்துக்கொள்". நானும் ஒரு முஸ்லீம் தான், என்னுடைய பணத்தை வசூல் செய்யவே நான் வந்தேன், என் பணத்தை இவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்துவந்தேன். மூன்று இரவுகள் கடந்த பின்பு, இந்த செய்தியை மற்றவர்களுக்கு உங்கள் விருப்பப்படி சொல்லலாம் என்றேன். மூன்றாம் நாள் வந்தபோது, அப்பாஸ் தன் மேல் ஷால்வையை போட்டுக்கொண்டு, நறுமனம் பூசிக்கொண்டு மற்றும் தன் தடியை எடுத்துக்கொண்டு, காபாவிடம் சென்று அதை சுற்றினார். மக்கள் அவரைக் கண்டு, அவரிடம், "ஓ அபூ அல்-பதல், இது மிகவும் துரதிஷ்டமானது என்றனர்". அதற்கு அவர், "இல்லை இல்லை, நீங்கள் சத்தியமிடும் அல்லாவின் உதவியோடு, முகமது கெய்பரை கைப்பற்றியுள்ளார், மற்றும் அந்த நாட்டு மன்னரின் மகளையே திருமணம் செய்துள்ளார்" என்றுச் சொன்னார். முகமது அவர்களின் எல்லா சொத்துக்களையும் முடக்கிவிட்டார், இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாகி விட்டது என்றார். அவர்கள் கேட்டனர், "யார் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது?". அதற்கு அவர் "யார் உங்களுக்கு உங்கள் செய்தியை கொண்டுவந்தார்களோ, அவரே தான் சொன்னார், அவர் ஒரு முஸ்லீமாக இங்கு வந்தார், தன் பணத்தை வசூல் செய்துக்கொண்டார், மற்றும் முகமதுவிடம் அவரது தோழர்களிடம் சேர்ந்துக்கொள்ள மறுபடியும் சென்றுவிட்டார், இனி அவரோடு இருப்பார்" என்றார். அதற்கு அவர்கள், "ஓ அல்லாவின் மக்களே, அல்லாவின் எதிரி தப்பித்துக்கொண்டான். அவன் அப்படிப்பட்டவன் என்று தெரிந்து இருந்தால், வேறு விதமாய் அவரை கவனித்து இருந்திருப்போமே" என்றனர். கடைசியாக ஒரு உண்மைச் செய்தி அவர்களை அடைந்துவிட்டது. (The Life of Muhammad: A Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah, with introduction and notes by Alfred Guillaume [Oxford University Press, Karachi, Tenth impression 1995], pp. 519-520; capital and underline emphasis ours).

 
 
முகமதுவிற்கு தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொள்ளவும் பிரச்சனை இருந்தது இல்லை:
 
 

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518

ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். 'ஜாம்' கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போது கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.) ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), 'அருகில் வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட நான் கண்டுள்ளேன்' என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே 'இதை இனிமேல் உண்ணமாட்டேன்' என்று சத்தியம் செய்து விட்டேன்' என்று கூறினார்.

அதற்கு அபூ மூஸா(ரலி) 'அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்' என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம் நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் 'உங்களைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் தர மாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். மேலும், 'உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை' என்று கூறினார்கள்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து) 'அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?' என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது) எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்கினார்கள்.

நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என் தோழர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தர மாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்த சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும் வெற்றியடைய மாட்டோம்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம் ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தை மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்' என்று சொன்னோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்' என்று கூறினார்கள்.37 (Sahih al-Bukhari, Volume 7, Book 67,
Number 427 in English)

 
 
முகமது, தன்னை பின் பற்றுகிறவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தையும் முறித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்:
 
 

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது... (Sahih al-Bukhari, Volume 9, Book 89,
Number 260 in English)

 
 
 
ஒரு நபர்(ஆணோ/பெண்ணோ) மற்றவர்களை ஏமாற்றுவதை அனுமதித்து, மற்றும் முன்பு இருந்ததை விட மிகவும் மேலானது தனக்கு கிடைத்தவுடன் முன்பு செய்த சத்தியத்தை முறித்து விடும் நபர் ஒரு நேர்மையானவரா அல்லது நம்பத் தகுந்தவரா சொல்லுங்கள்? இப்படிப்பட்ட நபர்(ஆணோ/பெண்ணோ) மீது நம்பிக்கை கொள்ளமுடியாது. ஏனென்றால், இவர் உண்மையைத் தான் சொல்கிறாரா அல்லது நேரத்திற்கு ஏற்றது போல தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வாரா என்று தெரியாத போது எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்?
 
 
முடிவாக, அடுத்து நாம் பார்க்கப்போவது, முகமது ஒரு நம்பத் தகுந்தவர் அல்ல என்பதை நிருபிக்கும் விவரங்களாகும்.
 
 
 
முஸ்லீம்கள் முகமதுவை மிகவும் நல்லவராக காட்டுவதற்கு பல கவர்ச்சிகரமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை தயாரிக்கிறார்கள். முகமதுவை மிகவும் எதிர்மறையாக காட்டும் கதைகளை அவர்கள் தயாரிப்பதில்லை. ஆனால், உண்மையில், முகமதுவின் நடத்தைப் பற்றி மிகவும் தரம்குறைவாக உள்ள விவரங்கள், அவரது நடத்தையை சரியாகக் காட்டும் விவரங்களாக அவர்களுக்கு காணப்படுகிறது, எப்போது? அவ்விவரங்களில் உள்ள சில எதிர்மறையான வாக்கியங்களை ஒதுக்கிவிடும் போது(In fact, the reports which reflect poorly on Muhammad's character have a greater chance of being true precisely because the Muslim tendency was/is to portray him in a more favorable manner while omitting any negative statements).

 
இதில் மிகவும் தர்மசங்கடமான விவரம் என்னவென்றால், "முகமது நபியாக மாறுவதற்கு முன்பாக நேர்மையானவர் என்று பெயர் பெற்று இருந்தார் என்று முஸ்லீம்கள் சொல்வது உண்மையானால், அவர் நபியாக மாறிய பிறகு அவரிடம் இருந்த நேர்மையை விட, அதற்கு முன்பாக அவரிடம் அதிகமாக நேர்மை இருந்ததாக அர்த்தமாகிறது".

 
What makes this rather ironic is that if this Muslim assertion is true, that Muhammad was known for being trustworthy prior to his prophethood, this means that he was more honest before he became a "prophet" than afterwards!

 
நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய ஹதீஸை நம் நினைவிற்கு கொண்டு வருவோம். இந்த ஹதீஸில் ஹெர்குலிஸ் அரசர் அபூ சுஃப்யானிடம் முகமது பொய் சொல்லியுள்ளாரா? அல்லது தன் உறுதிமொழியை முறித்துக் கொண்டுள்ளாரா? என்று கேள்விகள் கேட்டுள்ளார். இந்த ஹதீஸின் இன்னொரு தொகுப்பைக்(another version) காண்போம்:
 
 
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7

….. 'அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார். நான் இல்லை என்றேன்.

'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! ..... இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

 
"… Heraclius said, 'Have you ever accused him of telling lies before his claim (to be a Prophet)?' I replied, 'No.'
Heraclius said, 'Does he break his promises?'
I replied, 'No. We are at truce with him but we do not know what he will do in it.' I could not find opportunity to say anything against him except that… 'I further asked whether he was ever accused of telling lies before he said what he said, and your reply was in the negative. So I wondered how a person who does not tell a lie about others could ever tell a lie about Allah.'" (Sahih al-Bukhari, Volume 1, Book 1,
Number 6)
 
 
 
நாம் மேலே பதித்த இந்த ஹதீஸ் முகமது பொய்யும் சொல்ல வில்லை மற்றும் தன் உறுதி மொழியையும் மீறவில்லை என்று பார்க்கிறோம். மட்டுமல்ல, அபூ சுஃப்யான் என்பவர் கூட, முகமது பொய் சொல்லவில்லை, வாக்கு மாறவில்லை என்றுச் சொல்கிறார்! ஆக, முகமதுவை இன்னும் நேர்மையாவராகவும் நம்பத் தகுந்தவராகவும் மாற்றுவதற்கு பதிலாக, அல்லா அவரை தீயவராகவும் மற்றும் நம்பத் தகாதவராகவும் மாற்றியுள்ளார். குர்‍ஆன் அல்லாவின் வார்த்தை என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் சொல்லவும் தன் வாக்குறுதியை மீறவும் செய்தவர் அல்லா தான்.
 
 
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். குர்‍ஆன் 66:1-2

 
மற்றும்:

 
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. குர்‍ஆன் 3:28
 
 
இவ்வசனத்திற்கு புகழ்பெற்ற சுன்னி உரையாளர் இபின் கதிர் கீழ் கண்டவாறு பொருள் கூறுகிறார்:
 
 
 

நம்பிக்கையில்லாதவர்களோடு நட்புறவு கொள்ளக்கூடாது என்ற தடை:


 
 
இஸ்லாமின் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்களோடு, முஸ்லீம்கள் நண்பர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார், அல்லது முஸ்லீம்களோடு அல்லாமல் நம்பிக்கையில்லாதவர்களோடு நெருங்கிய நட்பை கொள்ளக்கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களுக்கு எதிராக அல்லா தன் எச்சரிப்பை கீழ்கண்ட வசனம் மூலமாக தெரிவிக்கிறார்.

<And whoever does that, will never be helped by Allah in any way> இதன் பொருள், அல்லா தடை செய்ததை யார் மீறுகிறார்களோ அவர்களை அல்லாவும் தள்ளிவிடுவார். இதே போல அல்லா சொல்கிறார்...

<ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;> மற்றும்…

<உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர் வழியை திட்டமாக தவற விட்டு விட்டார>[60:1]. அல்லா சொல்கிறார் ….

<முஃமின்களே ! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தரவிரும்புகிறீர்களா?>[4:144],

மற்றும் …

<முஃமின்களே ! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்.>[5:51].
 
 
நம்பிக்கையாளர்கள் மற்ற நம்பிக்கையாளர்களாகிய முஹாஜிரின், அன்சார் மற்றும் பெடோயின் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டு, அல்லா சொல்கிறார்...
 
 
<நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.>[8:73]
 
 
மறுபடியும் அல்லா சொல்கிறார்...
 
 
<அவர்கள் மூலமாக ஆபத்து வரும் என்று கருதினால் தவிர> ஒருவேளை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களினால்(Unbelievers) தீமை ஏற்படும் என்று பயப்பட்டால், இந்த சமயங்களில் இப்படி செய்ய வேண்டிய தில்லை. அதாவது, இந்த நேரங்களில் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை இல்லாதவர்களோடு நட்பு கொள்ளலாம், அதுவும் வெளிப் புறத்திற்கு நட்பு மாதரி காண்பித்துக் கொள்ள வேண்டும், ஆனால், மனதளவில் அவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது. அல்புகாரியில் அபூ அத்தர்தா சொன்னதாக பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது, "நாம் சில மக்களிடம் பேசும் போது, முகத்தைப் பார்த்து சிரிக்கிறோம், ஆனால், நம்முடைய இதயம் அவர்களை சபித்துக் கொண்டு இருக்கும்". அல்புகாரி சொல்கிறார், ஒரு எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டுமானால், அல்புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்னவென்றால், அல் ஹஸன் கூறினார், "உயிர்த்தெழுதலின் நாள் வரை தக்கியா அனுமதிக்கப் பட்டுள்ளது"... (Source; underline emphasis ours)
 
 
இதுவரையில் நாம் பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முகமது ஒரு நேர்மையற்ற மனிதராக மாறுவதற்கு பொறுப்பு அல்லா தான். இப்படிப்பட்டவர் மீது யார் நம்பிக்கை கொள்ளமுடியும்!

 
இது மட்டுமல்ல, யேகோவா தேவனின் கோபம் மற்றும் சாபம் முகமதுவின் மீது விழும்படியாக செய்ததும் அல்லா தான். அதாவது "செய்த உறுதிமொழியை" எவ‌ன் முறிக்கின்றானோ அவன் யேகோவாவிற்கு அருவருப்பானவன் ஆவான்:
 
 
மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: "கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக் கடவன்." எண் 30:1-2

 
"தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?" பிரசங்கி 5:2-6
 
 
 
ஆக, இதுவரை மேலே நாம் கண்ட இஸ்லாமிய விவரங்களின் படி, குர்‍ஆனில் வசனங்களாக உள்ள, நம்பிக்கயில்லாதவர்கள் முகமது பற்றி சொன்ன விவரங்கள் அனைத்தும் உண்மை என்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது, அதாவது அவர் பொய் சொல்லியுள்ளார் மற்றும் தான் செய்த சத்தியத்தை / வாக்கை முறித்துள்ளார். இதனால், முகமதுவை தன் காலத்தவர்கள்/உறவினர்கள் "அல் அமின்" என்று கண்டார்கள் என்பது நிருபிக்கப்படாத விவரமாகும். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட கதைகளை இட்டுக்கட்டியுள்ளார்கள்; அல்லது ஒரு வேளை இந்த புகழாரம் உண்மையாகவே அவருக்கு கொடுத்து இருந்திருந்தாலும், தனக்கு சூட்டிய அந்த புகழாரத்திற்கு ஏற்ப அவர் தன் வாழ்நாளின் மீதியான காலத்தில் வாழவில்லை, முக்கியமாக தன் கடைசி காலங்களில் வாழவில்லை.

 
ஆனால், இந்த புகழாரத்திற்கு தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார், ஏனென்றால், உண்மையின் விலாசமாக வாழ்ந்திருக்கிறார் அவர். அவர் தான் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து, பிதாவின் பிழையற்ற ஆட்டுக்குட்டி.
 
 
 
"அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்!" மாற்கு 1:24

 
"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்." யோவான் 6:68-69

 
"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ள வனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." யோவான் 7:18

 
"என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்." யோவான் 8:29

 
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

 
"ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக் கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந் தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." அப் 3:13-15

 
"இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக் கப்பட்டீர்களே." எபேசியர் 4:21

 
"நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." எபிரேயர் 4:15

 
"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." எபிரேயர் 7:26

 
"நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" எபிரேயர் 9:14

 
"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாத படியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்….அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை….. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." 1 யோவான் 3:1-3, 5, 7
 
 
மேலும் அறிய படிக்கவும்:
 
 
இக்கட்டுரையின் பாகம் இரண்டை படிக்கவும்: முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர் Part 2


 

வியாழன், 31 ஜூலை, 2008

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - அபுமுஹை கட்டுரைகளில்

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?





1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source:
A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source:
Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு …நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html
…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html
……I invite you to embrace Islam so that you may live in security.

Source:
The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source:
A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered:
"Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:
A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source:
Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi


2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "
if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.


ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'


...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.


அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.


சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.



முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.


மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்
 
 

திங்கள், 21 ஜூலை, 2008

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?

 

An Answering-Islam.org Article

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 
How Muhammad's Contemporaries Really Viewed Him –
An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam
 

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.



முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)



முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.



முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:





1. முகமது ஒரு பொய்யர்(A Liar):



(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)





2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):



"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்)
"நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல!
"இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

"இன்னும்; இது (அல் குர்ஆன்)
பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும்
அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (குர்‍ஆன் 25:5)

(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)




3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):



மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள்
"இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்
"இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)




4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):



"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால்,
நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது)
ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)


5. முகமது ஒரு பைத்தியக்காரர்/"ஜின்"னால் பீடிக்கப்பட்டவர்(A Madman - Majnun – lit., "jinn-possessed")



(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, "
அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்;
பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)



முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:

முகமது ஒரு பொய்யர்( A Liar )

முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)

முகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)

முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)

முகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )



குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.

மற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.



இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், "இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்" என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது "முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்" என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது.( S/he cannot therefore simply discredit the claims of the unbelievers when they are unflattering to the character of Muhammad. After all, if their testimony is reliable enough to support of Muhammad's integrity then by the same token the unbelievers' claims are also good enough to call his character into question. The Muslims cannot have their cake and eat it too.)





மூலம்: http://www.answering-islam.org/Shamoun/mhd_amin2.htm






 

 

திங்கள், 14 ஜூலை, 2008

நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி) - ஒரு முஸ்லீமின் கருத்து

 
நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)


முன்னுரை: நான் "சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!! " என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஒரு கிறிஸ்தவ சகோதரர் RAJ பதில் அளித்து இருந்தார், அதாவது, இவர் தன்னை கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் அளித்து இருந்தார். ஆனால், இவரது வரிகள் இவர் ஒரு முஸ்லீம் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

இனி இவரது பின்னூட்டத்தையும், அதற்கு என்னுடைய பதிலையும் காணலாம்.


-----------------------------
RAJ said...
WHAT ARE YOU GOING TO DO AFTER FINDING THE ORIGINAL SOURCE.

HOW IT IS GOING TO HELP US?
-----------------------------

அன்பு நண்பர் ராஜ் அவர்களே, முதலில் நீங்கள் என் கட்டுரையை முழுவதும் படிக்காமல், நான் கொடுத்த அதே தொடுப்பை ஆதாரமாக கொடுத்தீர்கள். அதாவது, நீங்கள் ஒன்றையும் முழுவதுமாக படிக்காமல், தலைப்பை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் என்று தெளிவாக தெரிகிறது.

அடுத்ததாக, முஸ்லீம்கள் பொய்களை இப்படி அவிழ்த்து விடுகிறார்கள், இது உண்மையா பொய்யா என்று சில ஆதாரங்களை தேடி நான் கேள்வி கேட்டு இருந்தேன், அவர்களிடம் உண்மை இருந்தால், பதில் கொடுத்து இருப்பார்கள், இல்லையானால், "முஸ்லீம்களில் சிலர் பொய்யர்கள்" என்ற பட்டத்தை தட்டிச்சென்றுக்கொண்டு செல்வார்கள். உங்களுக்கு ஏன் கோபம் சொல்லுங்கள்.

சரி, அடுத்ததாக, "மூல தொடுப்பினால்" எனக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டுள்ளீர்கள்? அதாவது, முஸ்லீம்கள் உண்மையை சொல்லவில்லையானால், "இக்கட்டுரையை வெளியிட்ட முஸ்லீம்கள் பொய்யர்கள் என்ற உண்மை உலகம் அறியும்". சரி, இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? அதாவது, பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிடும் இவர்களுக்கு பைபிளைப் பற்றியோ, உண்மை நேர்மை, நீதி நியாயம் போன்றவைகளைப் பற்றி எழுத‌ என்ன தகுதி இருக்கிறது என்று, இவர்களின் கட்டுரையை படிக்கும் சராசரி முஸ்லீம்களும் அறிந்துக்கொள்வார்கள், அதே போல கிறிஸ்தவர்களும் அறிந்துகொள்வார்கள்.

எது உண்மை என்றுச் சொல்வது மட்டும் போதாது நண்பரே, எது உண்மை இல்லை என்பதையும் நாம் உலகிற்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டதால், உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதாவது, இயேசு ஒரு சவுக்கை தயாரித்து தேவாலயத்தில் இருப்பவர்களை துரத்திய நிகழ்ச்சி. அதைத்தான் நானும் இன்று செய்துக்கொண்டு இருக்கிறேன், சிலருக்கு சவுக்கு தேவை, சிலருக்கு சமாதானம் தெவை.



-----------------------------
RAJ said...

CHRISTIANS GOT MUCH PRESCIOUS " NAGMA " IN CHRISTIANISM.

SHE IS WORTH MILLIONS OF ITALIAN PRIEST. IS THAT RIGHT ? THAT IS HOW CHRISTIAN BLOGGERS ARE TRUMPETING IN THEIR BLOGS ABOT NAGMA.
------------------------------

அருமை நண்பரே, ஒரு விவரத்தைச் சொல்கிறேன்.

நீங்கள் கிறிஸ்டியானிசம்(CHRISTIANISM) என்று எழுதியுள்ளீர்கள், ஆனால் நாஜியிசம், இஸ்லாமிசம்(ISLAMISM) போன்று, கிறிஸ்தவத்தை கிறிஸ்டியானிசம் என்று சொல்வதில்லை, அதற்கு பதிலாக, கிறிஸ்டியானிடி(CHRISTIANITY) என்று தான் சொல்வார்கள். சரி, இதனால் இப்போது என்ன என்று என்னை கேட்கலாம், உங்களுக்கு சில விவரங்களைச் சொல்லலாம் என்று தான் சொன்னேன்.

சரி, நக்மாவின் விஷயத்திற்கு வருவோம், கிறிஸ்தவர்களுக்கு "நக்மா" இயேசுவை தன் சொந்த தெய்வமாக அங்கீகரித்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் தான் அதைச் சொல்கிறீர்கள்.

கிறிஸ்தவ ப்ளாக்கர்கள் அதிகமாக, நக்மாவின் சாட்சியை பதித்தார்கள் என்றுச் சொல்கிறீர்களே, இப்போது தான் புரிகிறது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல, ஒரு முஸ்லீம் என்பது. மட்டுமல்ல, பொய்களை அப்படியே அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய தளங்கள் பற்றி ஒன்றுமே சொல்லாமல், நக்மாவின் சாட்சியை மட்டும் கிறிஸ்தவர்கள் பதித்தால், அப்படியே கொதித்து எழும்புகிறீர்கள் நீங்கள். பொய்யான சாட்சியை எழுதி அது உண்மைப்போல தம்பட்டம் அடிக்கும் இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன, அது உங்கள் கண்களுக்கு நெருடலாக இல்லையோ, ஆனால், ஒரு உண்மைச் செய்தி அதுவும் செய்தித்தாளில் வந்தது என்று பதித்தால், உங்களுக்கு நெருடலாக உள்ளதோ?


//RAJ said: SHE IS WORTH MILLIONS OF ITALIAN PRIEST//

உங்களுக்கு வேண்டுமானால், ஒரு நக்மா ஒரு மில்லயன் இத்தாலி பாதியார்களுக்கு சமமாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு அப்படி இல்லை, பல கோடிபேர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு இறைவனின் இராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அது போலத் தான் இந்த செய்தியும். உங்கள் வாதம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் எவ்வளவு பொய்யைச் சொன்னாலும், மற்றவர்கள் கேள்வி கேட்காமல் இருக்கவேண்டும் அப்படித்தானே?


-----------------------------
RAJ said...

TRY TO MAINTAIN BY POSTING GOOD ARTICLES ABOUT CHRISTIANISM RATHER THAN CHALLENGING OTHERS AS WE ALREADY HAVE ENOUGH RUBBISH IN OUR OWN YARD.
-----------------------------

உங்களை கிறிஸ்தவர் என்று வெளிப்படுத்தி எங்களை வெட்கமடையச் செய்கின்றீர்கள் நீங்கள். அப்படி என்னய்யா ரப்பிஷ் உள்ளது? ஓகோ, உங்களைப்பற்றி சொல்கின்றீர்களா? அப்படியானால் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நல்ல கட்டுரைகள் என்றால் எது என்று பட்டியல் இட்டு தரமுடியுமா? அதை எழுதுகிறோம்.

ஒரு அநியாயக்காரனுக்கு நியாயம் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது, ஒரு பொய்யனுக்கு உண்மையைப் பற்றி பேச என்ன தகுதி சொல்லுங்கள், இருட்டுக்கு வெளிச்சம பற்றிப்பேச என்ன தகுதி சொல்லுங்கள். பொய்யையும், அவதூறுகளையும் அள்ளி வீசும் இஸ்லாமிய தளங்களில் முகங்களைக் கிழிப்பது உங்களுக்கு வேதனையாக உள்ளதோ?

ஜெமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, இயேசுக்கு நேர்ந்தது என்ன? என்று கட்டுரை எழுத தைரியம் எங்கே இருந்து வந்தது. பல ஆயிர மக்கள் சூடான் நாட்டில் முஸ்லீமானார்கள் என்று எழுதினார்கள், நாங்கள் எங்கே ஆதாரம் என்றுக் கேட்டோம், இன்னும் பதில் வந்தபாடில்லை, இதுவெல்லாம் அல்லாவிற்கு செய்யும் சேவையா, ஊழியமா, இஸ்லாமை பரப்புவதா... இப்படியெல்லாம் பரப்புவதைக் காட்டிலும், சும்மா இருப்பது இஸ்லாமுக்கு நன்மை பயக்கும் என்பது என் கருத்து.



-----------------------------
RAJ said...

ARE WE ABLE TO ANSWER ANY ONE OF THE ARTICLES ABOUT BIBLE PUBLISHED IN "SINDHIKKA UNMAIGAL" BLOG
CONSTRUCTIVELY WITH PROPER SENSE AND BASIS?
------------------------------


"சிந்திக்க உண்மைகள்" என்ற பெயரில் ஒரு பொய்யான பெயரில், தங்களை நாத்தீகர்கள் என்று காட்டிக்கொண்டு கட்டுரை எழுதும் முஸ்லீம்கள் இன்னும் என்னென்ன வேஷம் போடுவார்களோ கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

உங்களால் பதில் சொல்லமுடியாது என்பதால், எங்களை ஏன் சேர்த்துக்கொள்கிறீர்கள் ராஜ் அவர்களே, சரி, உங்கள் உட்சாகத்திற்கு நன்றி, இனி "சிந்திக்க உண்மைகள்" என்ற தளங்களுக்கு நான் பதில் எழுதுகிறேன், ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த தளம் ஒரு இஸ்லாம் தளம் என்ற நோக்கில் மட்டுமே என் பதில்கள் இருக்கும்.

நான் பதில்கள் அளித்தால், கண்டிப்பாக இஸ்லாமுக்கு சில கேள்விகளும் இருக்கும். எனவே, இனி சிந்திக்க உண்மைகள் தளம் இஸ்லாமிய தளம் என்று கருத்தில் கொண்டு எழுதுகின்றேன்.

பொய் முகமூடியோடு எத்தனை நாட்கள் தான் இப்படி உலாவுவீர்கள்?

சிந்திக்க உண்மைகள் என்ற தளம் ஒரு திராவிட சமய பெரியார் சிந்தனைகள் கொண்ட தளம், அதற்கு பதில் அளிக்கிறேன் என்றுச் சொல்லி, இஸ்லாமை ஏன் வம்புக்கு இழுக்கிறாய் என்று என்னிடம் யாரும் கேள்விகள் எழுப்பக்கூடாது. ஏனென்றால், இஸ்லாமை ஆதரிக்கும் ஒரு தளம், இஸ்லாம் கோட்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பாமல் இருக்கும் தளம் எந்த நாளும் ஒரு நாத்தீக தளமாக இருக்காது.

நன்றி ராஜ் அவர்களே, உங்கள் உட்சாகத்திற்கு நன்றி.

-----------------------------
RAJ said...

YOUR BLOG IS CREATING UNNECESSARY FRICTION WITHOUT SOLID BASIS.
-----------------------------


என் கட்டுரைகளில் SOLID BASIS இல்லையானால் ஏன் உங்களுக்கு FRICTION வருகிறது?

ஆமாம், என் தளம் உங்கள் மன அழுத்தத்தை உயர்த்தும்.

ஆதாரம் இல்லாமலா நான் கட்டுரையை எழுதுகின்றேன், வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் சிரிப்பார்கள். இஸ்லாமிய கட்டுரைகளை படித்துப்பாரும் ஒவ்வொரு கட்டுரைக்கு எத்தனை ஆதாரங்களை அவர்கள் மன்னிக்கனும் நீங்கள் கொடுக்கின்றீர்கள் என்று ஆராய்ச்சி செய்துப்பாரும். இப்போது நீங்கள் பின்னூட்டம் எழுதிய இந்த கட்டுரையே போதும், உங்களின் ஆதார கட்டுரைகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

எனக்கு சரியாக நிச்சயமாக பதில் தெரிந்தால், அதைச் சொல்லுவேன், அப்படி சந்தேகம் மட்டும் இருந்தால், "சந்தேகத்தை தீர்த்துவையுங்கள்" என்று கேட்பேனே ஒழிய, ஆதாரம் இல்லாமால் எழுதமாட்டேன்.




-----------------------------
RAJ said...

APPEARS TO CHILDISH.

SOMETIMES I WONDER WHETHER YOU ARE REALLY A CHRISTIAN OR NOT?

BE A GOOD CHRISTIAN .
-------------------------------


அருமை ராஜ் அவர்களே, உங்களின் வார்த்தைகளைக் கண்டால், எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்த உங்கள் வரிகளை படிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் உங்களைப் பற்றி சிரிப்பார்கள்.

என் கட்டுரைகள் குழந்தைத் தனமாக உள்ளதா? சொல்லுங்கள் எந்த கட்டுரை குழந்தைத்தனமாக உள்ளது?

பைபிள் வசனங்களையும், குர்‍ஆன் வசனங்களையும் திருத்தி பதில் சொல்லும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பொய் முகத்தை உலகத்திற்கு காட்டியது குழந்தைத் தனமா?

பொய்களைத் தவிர உண்மையை பேசமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டவர்களாக "இஸ்லாமுக்கு மாறிய கிறிஸ்தவ பாதிரிகள்" என்று பொய்களை ஆதாரம் இல்லாமல் எழுதும் இஸ்லாமிய தளங்களில் பொய் முகங்களை உலகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வருவது உங்களுக்கு குழந்தைத் தனமா?

உங்களைப் போன்றவர்கள் முஸ்லீமாக இருந்தும் ஒரு கிறிஸ்தவனாக காட்டிக்கொண்டு இப்படி எழுதுகிறீர்களே, உங்களின் போலி முகத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டுவது குழந்தைத்தனமா?

ஒரு முறை என் தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளை படித்து எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பை மட்டும் படித்து பின்னூட்டம் எழுதுவதை இனி விட்டுவிடுங்கள், இல்லையானால், இப்படி மாட்டிக்கொள்ளவேண்டி வரும்.

"நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருக்கவேண்டுமா?" எங்கே சொல்லுங்கள், ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்ன என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஓகோ, நல்ல கிறிஸ்தவன் என்றால், "இயேசுவின் மீது எவ்வளவு பொய்களை முஸ்லீம்கள் சொன்னாலும், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் தான் நல்ல கிறிஸ்தவனுக்கு இருக்கும் குணம்" என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்களா?

முதலில் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருங்கள். இப்படி ஆட்டுத்தோல் போர்த்திய நரியாக இருக்கவேண்டாம்.



-----------------------------
RAJ said...

FAITH WILL GROW ON IT'S OWN MERIT.

A GOOD FAITH CANNOT BE BROUGHT DOWN BY MILLION SLANDEROUS ARTICLES.
-----------------------------

ஓகோ, ஒரு முஸ்லீம் தளம் பொய்யைச் சொன்னால் அது ஒரு நல்ல கட்டுரை ஆனால், ஆதாரம் எங்கே என்று கேட்டால், அது ஒரு அவதூறான கட்டுரையோ?

என்னுடைய கட்டுரைகள் உங்களுக்கு "SLANDEROUS ARTICLES" யாக இருக்கின்றதா? அப்படியானால், இஸ்லாமியர்கள் பைபிள் என்பது கற்பனை, அதில் உண்மை இல்லை என்றுச் சொல்வது உங்களுக்கு நல்ல கட்டுரை அப்படித்தானே. இதோ உங்கள் இஸ்லாமிய முகம் தெளிவாக தெரிகின்றது, இந்த கட்டுரையில்.


//RAJ said: FAITH WILL GROW ON IT'S OWN MERIT//

உண்மை தான், இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை பயப்படவைத்து அவனை இஸ்லாமில் இருக்கச்செய்வது என்ன நம்பிக்கையோ சிந்தித்துப்பாருங்கள்.



-----------------------------
RAJ said...

FIRST OF ALL CHANGE THE BLOG NAME FROMM ISA KORAN TO ISA BIBLE.

WHY IMITATE?
------------------------------

அய்யா நண்பரே, நான் யாரையும் காபி அடிக்கவில்லை. மற்றும் குர்‍ஆனின் பெயரை என் தளத்திற்கு இட பெருமை அடையவும் இல்லை.

நீங்கள் குர்‍ஆனை அல்லாவின் வார்த்தை என்றுச் சொல்கிறீர்கள்
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் "இயேசுவை" தேவனின் வார்த்தை என்றுச் சொல்கிறோம்.

என் தளத்தில் விவாதங்கள், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இல்லை, முகமதுவிற்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இல்லை. அதற்கு பதிலாக,

இயேசுவிற்கும் (தேவனின் வார்த்தைக்கும்), குர்‍ஆனுக்கும் (அல்லாவின் வார்த்தைக்கும்) தான் .

எனவே, தான் ஈஸா குர்‍ஆன் என்று வைத்தேன்.

இயேசு என்றாலே தேவனின் வார்த்தை, பின் எதற்கு நான் ஈஸா பைபிள் என்று வைக்கவேண்டும். அது சரி, அப்படி என்ன உங்களுக்கு என் தளத்தின் தலைப்பு உங்களுக்கு நெருடலை உண்டாக்கிவிட்டது?

-----------------------------
RAJ said...

ONE CAN FOOL MANY FOR SOMETIMES
BUT WE CANNOT FOOL EVERYBODY ALL THE TIME.
------------------------------

இது இஸ்லாமுக்கு மிகவும் நன்றாக பொருந்தும், அதாவது, இணையம் இல்லாத போது, உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொன்னது தான் உண்மை என்ற நிலையில் உலக மக்கள் இருந்தார்கள், இப்போது இணையம் பயன்படுத்தும் ஒவ்வொருவனும் இஸ்லாம் என்றால் என்ன என்று உங்களை விட நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கின்றான். முக்கியமாக, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உங்களின் பொய்களை நன்றாக அறிந்துள்ளார்கள்.



-----------------------------
RAJ said...

WHY SHOULD WE DEGRADE BIBLE BY CALLING IT BY OTHER NAMES?

THINK AND ACT SENSIBLY.

EXPECTING A GOOD CHANGE A.S.A.P.

GOD BLESS YOU TOO.
-----------------------------


என்னே வேதனை, என்னே ஒரு பைபிள் பற்றிய அக்கரை. ஆனால் ஒரு உண்மையைச் சொல்லியுள்ளீர்கள், இதற்காக உங்களுக்கு என் நன்றி.



//RAJ said: WHY SHOULD WE DEGRADE BIBLE BY CALLING IT BY OTHER NAMES? //

மேலே உள்ள உங்கள் வரியில், "OTHER NAMES" என்ற இடத்தில் "குர்‍ஆன்" என்ற பொருளில் தானே நீங்கள் சொல்லியுள்ளீர்கள்.

உண்மைத் தான், பைபிள் இருக்கவேண்டிய இடத்தில் "குர்‍ஆன்" என்ற வார்த்தை கொடுத்தால், அது நமக்கு இழுக்கு தான்,அவமானம் தான். இதை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், என் தளத்தின் பெயர் நான் ஏற்கனவே, வைத்துவிட்டதால், அதை அப்படியே விட்டுகின்றேன்.

கடைசியாக, நீங்கள் பல குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள், மற்றும் என் கட்டுரைகள் குழந்தைத்தனமானது என்று சொல்லியுள்ளீர்கள். நீங்கள் கிறிஸ்தவர் இல்லை என்பது மட்டும் நிச்சயம், இருந்தாலும் சொல்கிறேன், என் கட்டுரைகளை படியுங்கள், உங்களுக்கு கேள்விகள் இருக்குமானால், பின்னூட்டம் இடுங்கள், பதில் தருகிறேன். ஒரு வேளை நான் ஒரு முஸ்லீம் என்றுச் சொல்வீர்களானால், உங்கள் இஸ்லாமிய தளங்கள் வெளியிடும் பொய்யான கட்டுரைகளினால், வெட்கமடையுங்கள், உங்கள் அல்லாவிடம் கேட்டுப்பாருங்கள், இப்படி பொய்யைச் சொல்லித் தான் உன் தீனை இவர்கள் பரப்பவேண்டுமா என்று கேட்டுப்பாருங்கள். அல்லா உங்களுக்கு என்ன பதில் சொல்வாரோ அதன் படி செய்யுங்கள்.


சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.(ரோமர் 1:18)
 

 
1