Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
"ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?"
முஹம்மதுவிற்கு பிடித்தவைகளில் ஒன்று "பெண்களை திருமணம்" புரிவதும், அவர்களுடன் உடலுறவு கொள்வதுமாகும். பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனி கவனம் அல்லாஹ் செலுத்தியுள்ளான், விதிவிலக்கு அளித்துள்ளான், பார்க்க குர்ஆன் 33:50. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிப்பவர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம்.
குர்ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி ஒரு சிறிய கட்டுரையை எழுதியிருந்தேன். அதனை இங்கு சொடுக்கி படிக்கவும்: முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
இந்த கட்டுரைக்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, சகோதரர் அப்ஸர் என்பவர் ஒரு பதிலை பதித்து இருந்தார், அதனை இங்கு படிக்கவும்: ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் கூறிய அவதூறுக்கு பதில். மக்களுக்கு ஸஃபிய்யாவின் மீது இருந்த மரியாதையை அவர் காற்றில் கலந்துவிட்டார். ஏன் இப்படி செய்தார் என்று கேட்டால், தங்கள் நபியை காப்பாற்றுவதற்காக, அவர் செய்த செயல்களை நியாயப்படுத்துவதற்காக இப்படி செய்தார். இது சர்வ சாதாரணமாக இஸ்லாமியர்கள் செய்யும் செயலேயாகும்.
இனி, அவர் ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை காண்போம். ஒருவகையில் பார்த்தால், இஸ்லாமே ஸஃபிய்யாவை கொச்சை படுத்தியுள்ளது, இவர் என்ன செய்யமுடியும்? இஸ்லாம் சொல்வதை தானே இவரும் சொல்லமுடியும்?
என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க நடுங்கும் "இஸ்லாமியர்கள்":
கடந்த மூன்று ஆண்டுகளாக நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், எத்தனையோ தளங்கள் வருகின்றன, ஆவேசமாக சில கட்டுரைகள் எழுதுகின்றன, மறுபடியும் மறைந்துவிடுகின்றன.
• சரி, எழுதும் சில கட்டுரைகளிலாவது "என் கட்டுரையின்" தொடுப்பை தரலாம் அல்லவா? தரமாட்டார்கள்!
• இஸ்லாமியர்களுக்கு பயம் அதிகம்.
• அவர்களுக்கு இஸ்லாம் மீதோ, முஹம்மதுவின் நடத்தையின் மீதோ குர்ஆன் மீதோ நம்பிக்கை இல்லை.
பதில் என்றும், மறுப்பு என்றும் கூறுவார்கள், அவதூறு என்று கூறுவார்கள் ஆனால், தொடுப்பை தரமாட்டார்கள். இவர்களது தளங்களை படிக்கும் உங்களைப் போன்ற வாசகர்கள், என்னையும் சேர்த்து அடிமுட்டாள்கள் என்று இவர்களது நம்பிக்கை. இவர்கள் சொல்வதை நாம் படிக்கவேண்டும், ஆனால், இவர்கள் யாருக்கு பதில் சொல்கிறார்களோ, அவர்கள் என்ன எழுதினார்கள் என்று முழுவதுமாக படிக்க தொடுப்பை தரமாட்டார்கள், இது தான் இவர்களது கேவலமான கீழ்தரமான இஸ்லாமிய யுக்தி. ஒரு மனிதனுக்கு ஒரு சொல், ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்றுச் சொல்வார்கள், ஆனால், சிலர் மாட்டைவிட கேவலமாக நடந்துக்கொள்கிறார்கள். எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு உறைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் யாரென்றால், மற்றவர்களின் தொடுப்பை தராமல் இஸ்லாமிய சமுதாய தொண்டு செய்ய வரும் இஸ்லாமிய அறிஞர்களாவார்கள்.
இணையத்தில் இஸ்லாமுக்காக எழுதும் எல்லா தளங்களும் பெரும்பான்மையாக இப்படியே செயல்படுகின்றது, இதில் இப்போது இன்னொரு தளமும் சேர்ந்துள்ளது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாயிற்றே! ஒரே மாதிரியாகத் தான் செயல்படுவார்கள்.
என் கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லி, என் தள தொடுப்பை கொடுக்காமல் பதில் தர முன்வந்து இருக்கின்ற சகோதரர் அப்ஸர் அவர்களே உங்களுக்கு கேவலமாக இல்லை? என்ன மனிதர்களோ!?!
சரி, இனி அப்ஸர் எழுதிய பதிலுக்கு வருகிறேன்.
என் கட்டுரையில் நான் கேட்ட கேள்வி, முஹம்மது செய்துக்கொண்டது திருமணமா அல்லது விபச்சாரமா என்பதாகும். அதற்கு பதில் என்றுச் சொல்லி, இரண்டு விவரங்களை கூறியுள்ளார் சகோதரர் அப்ஸர், அவைகள்:
1) கைபர் போருக்காக காரணம் என்ன?
2) ஸஃபிய்யாவின் திருமணத்திற்கான காரணம் என்ன?
நான் எழுதிய கட்டுரையில் கைபர் போருக்கான காரணம் என்ன என்று கேட்கவில்லை, இருந்தாலும் இவர்கள் சொல்லியுள்ளார்கள். இதைப் பற்றி தனி தொடர் கட்டுரைகளாக நாம் பிறகு காண்போம்.
• கைபர் மக்கள் என்ன குற்றம் புரிந்திருந்தார்கள்?
• ஏன் முஹம்மது கைபரை பிடிக்க அதிகாலையில் சென்றார்?
• போருக்கு இலக்கணம் சொல்லிக்கொடுத்தவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டும் இஸ்லாமியர்கள் எந்த முன்னெச்சரிப்பும் இல்லாமல், அதிகாலையில் சென்று போர் புரிந்ததின் காரணமென்ன?
• முக்கியமாக அந்த கைபர் போரில் நடந்த நிகழ்ச்சிகள் என்னென்ன?
போன்றவைகளை தனி கட்டுரைகளாக காண்போம். கைபர் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றிய சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.
1. MUHAMMAD AND THE TREATY OF HUDAYBIYYA
2. MUHAMMAD AND THE DEATH OF KINANA
3. Muhammad and the Treaty of Hudaybiyya
4. The Profit of the Prophet: Should Muhammad Get Paid Or Shouldn't He?
"ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?"
என் கட்டுரையில் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அவர்கள் எழுதிய, ஸஃபிய்யாவின் திருமணம் பற்றிய உண்மையை நாம் இப்போது அலசப்போகிறோம்.
முதலாவது, அப்ஸர் அவர்கள், "ஸஃபிய்யாவுடன் திருமணம்" என்று தலைப்பு கொடுத்து, நான் என் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருந்த ஹதீஸை காட்டினார். இதற்கு தனிப்பட்ட பதில் தேவையில்லை ஏனென்றால், இந்த ஹதீஸைத் தான் என் கட்டுரையில் நான் அடிப்படையாக கொண்டு இருந்தேன்.
இரண்டாவதாக, அப்ஸர் அவர்கள் கீழ்கண்ட விவரத்தை எழுதினார்:
இன்னொரு வரலாற்று புத்தகத்தில் வருவதாவது:
நபிகளார் ஸபிய்யாவை விடுவித்து, அவர் யூதப் பெண்ணாகவே தொடர்ந்திருக்க அல்லது இஸ்லாத்தினுள் நுழைந்து தமது மனைவியாகிக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்கள். "நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தெரிந்து கொண்டேன்" என்றார் ஸபிய்யா. மதினாவுக்குத் திரும்பி வரும் வழியிலான முதல் தரிப்பிடத்தில் அவர்கள் மணஞ்செய்து கொண்டனர்.
formats are mine.
உமரின் பதில்:
அப்ஸர் அவர்களே, இன்னொரு வரலாற்று புத்தகம் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அது எந்த வரலாற்று புத்தகம் என்று தெரிந்துக்கொள்ளலாமா?
இஸ்லாமியர்களின் ஒரு பொதுவான டெக்னிக்: ஒரு இஸ்லாமிய வரலாற்று புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் "முஹம்மதுவிற்கு" சாதகமாக உள்ளவைகளை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டுவார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அதே வரலாற்று புத்தகத்திலிருந்து, மற்றவர்கள் மேற்கோள் காட்டினால், அது முஹம்மதுவின் நடத்தையை இன்றைய சமுதாயத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கேவலமானதாக சித்தரிக்குமென்றால், உடனே அந்த வரலாற்று ஆசிரியர் சொல்வதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றுச் சொல்வார்கள்.
அது பலவீன ஹதீஸ் அல்லது பலவீன வரலாற்று தகவல் என்றுச் சொல்லி மழுப்புவார்கள். இன்னொரு வரலாற்று புத்தகம் என்று எழுதிய அப்ஸருக்கு, அந்த வரலாற்று ஆசிரியரின் பெயரை எழுத ஏன் தயக்கம்?
என்னுடைய கருத்தின் படி, மேற்கண்ட விவரம் "தபரி" என்ற வரலாற்று ஆசிரியருடையதாக இருக்கவேண்டும், ஏனென்றால், தபரி சரித்திரத்திலிருந்து இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுவார்கள், ஆனால், மற்றவர்கள் மேற்கோள் காட்டக்கூடாது, இது முஹம்மதுவை காப்பாற்ற இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் முயற்சி யாகும்.
எனவே, எந்த வரலாற்று ஆசிரியர் என்று நமக்கு அப்ஸர் அவர்கள் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளார்.
சரி, இஸ்லாமியர்களின் வழிக்கே வருவோம், மேற்கண்ட வரலாறு உண்மை என்றே நாமும் நம்புவோம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை இப்போது முன்வைப்போம், மேற்கண்ட வரலாற்றை நம்புவதினால், "ஸபிய்யாவின் நடத்தை" மீது மக்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை உண்டாகும் என்று இப்போது பார்ப்போம்.
வாசகர்கள் நிதானமாக படியுங்கள், கூர்ந்து கவனியுங்கள்.
அப்ஸர் மேற்கோள் காட்டிய விவரங்களின்படி:
1) முஹம்மது ஸபிய்யாவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறார்.
2) முஹம்மது ஸபிய்யாவை விடுதலை செய்வதாகவும், இதனால், அவள் தன் மக்களோடு சேர்ந்து விடுதலையோடு வாழலாம் எனவும் சொல்கிறார். அதாவது விடுதலைப் பெற்று, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படாமல், தன் ஊரில் அவள் விடுதலையோடு வாழலாம் என முஹம்மது சொல்கிறார்.
3) அல்லது, இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவிற்கு மனைவியாக மாறி, முஹம்மதுவோடு வாழ விருப்பமா என்று கேட்கிறார்.
4) இந்த இரண்டு விருப்பங்களில், ஸபிய்யா, "நான் இஸ்லாமை ஏற்று, முஹம்மதுவை திருமணம்" செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னார்களாம்.
இது தான் அப்ஸர் அவர்களின் அந்த இன்னொரு வரலாறு கூறிய விவரம். இப்போது உண்மை மனசாட்சியோடு கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்லுங்கள்:
1) முஹம்மது கைபரை அதிகாலை பிடித்து, மக்களை அழித்துப் போட்டார்.
2) ஸபிய்யா திருமணமான பெண்ணாக இருக்கிறார். திருமணமாகி ஒரிரு நாட்கள் ஆகியிருக்கிறது. (அதாவது தமிழ் நாட்டில் இப்படியாகச் சொல்லுவார்கள், "திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மரித்துவிட்டால், தாலி இன்னும் ஈரமாகவே உள்ளதே, அதற்குள் மரித்துவிட்டானே என்றுச் சொல்லி மக்கள் கூறுவார்கள், இது போல உள்ளது ஸபிய்யாவின் கதை)
3) ஸபிய்யாவின் தந்தையை முஹம்மதுவே கொன்றார், தன் உறவினர்களை முஹம்மதுவே கொன்றுள்ளார்.
4) ஸபிய்யாவின் புது மாப்பிள்ளையை கூட இந்த கைபர் போரில் தான் முஹம்மது கொன்றார்.
5) தன் ஊர் மக்கள் 'ஓ' வென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்கள், பிள்ளைகள் அநாதைகள் ஆகிவிட்டார்கள்.
6) பெண்கள் இஸ்லாமிய வீரர்களுக்கு அதாவது முஹம்மதுவின் போர் வீரர்களுக்கு அடிமைகளாக மாறி, அவர்களின் காம வேட்கைக்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அடிமைப்பெண்களை கற்பழித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
7) சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாக மாறிவிட்டார்கள், பெண்களை அவரரவர் தெரிந்தெடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் அவர்களோடு விபச்சாரம் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
8) இந்த நிலையில், ஸபிய்யா வேறு ஒரு நபரின் அடிமையாக பிடிக்கப்பட்டு சென்றுக் கொண்டு இருக்கும்போது (எதற்காக ?), ஸபிய்யாவின் அழகு பற்றி முஹம்மதுவிற்கு கூறப்படுகின்றது.
இஸ்லாமியர்கள் குர்ஆனுக்கு அடுத்தபடியாக அதிகமாக மதிக்கும் புகாரி ஹதீஸ் சொல்லும் விவரம், முஹம்மதுவிற்கு புது மணப் பெண்ணாக இருந்த ஸபிய்யாவின் அழகு பற்றி கூறினார்கள், அதனால், முஹம்மதுவிற்கு ஆசை வந்துவிட்டது. ஸபிய்யா வேறு ஒரு இஸ்லாமியரின் கணக்கில் வந்தாலும், அழகாக இருக்கிறாள் என்பதற்காக தன் கணக்கிற்கு மாற்றிக்கொள்கிறார் முஹம்மது.
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4211
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ('கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் 'குமுஸ்'பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அரும்லுள்ள) 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். ………
தன் குடும்பம் தனக்கு முன்பாக உயிரை விட்டது, ஊரில் உள்ள பெண்கள் முஸ்லிம்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள், சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாகிவிட்டார்கள். இதையெல்லாம் கண்டுக்கொண்டு இருந்த ஸபிய்யா:
தன் குடும்பத்தை அழித்துப்போட்ட முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லுவாரா?
என் குடும்பம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?
என்னைப் பெற்ற தகப்பன் அழிந்துப்போனால் எனக்கென்ன?
என் உறவினப்பெண்கள் கற்பழிக்கப்பட்டால் எனக்கென்ன?
இப்போது தான் திருமணமான என் புதுமாப்பிள்ளை இரத்தவெள்ளத்தில் கிடந்தால் எனக்கென்ன?
"நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன்" என்று ஸபிய்யா சொன்னதாக, இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.
இதை படிக்கும் வாசகர்களே, உலகத்தில் எந்த ஒரு குடும்பப்பெண்ணாவது இப்படிப்பட்ட முடிவை எடுப்பாளா? தன் குடும்பத்தை அழித்த ஒரு கொடூரமான மனிதனுக்கு தன் முந்தானையை சந்தோஷமாக நான் விரிக்க தயார் என்றுச் சொல்லுவாளா? சிந்தித்துப் பாருங்கள்.
இஸ்லாமியர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை பார்த்தால், முஹம்மதுவை காப்பாற்ற பின்பு வந்த இஸ்லாமியர்கள் எழுதிவைத்த கட்டுக்கதை என்று தெரிகின்றதல்லவா?
இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், இது கட்டுக்கதை அல்ல, இது உண்மையாகவே நடந்தது, அதாவது "ஸபிய்யா" இப்படித் தான் சொன்னார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறினால், "ஸபிய்யா" எப்படிப்பட்ட நடத்தையுள்ளவராக நீங்கள் உலகத்திற்கு அடையாளம் காட்ட வருகிறீர்கள்?
தன் தாய்வீட்டையும், தன் புகுந்த வீட்டையும் அழித்த ஒரு நபருக்கு மனைவியாக என்னை தர நான் விருப்பம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றுச் சொல்லும் ஒரு பெண் ஒரு பெண்ணா? இப்படிப்பட்ட பெண்ணை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியுமா?
முஹம்மதுவின் கொடூர செயலை நியாயப்படுத்த "ஸபிய்யாவை" கேவலமாக்காதீர்கள் இஸ்லாமியர்களே!
எந்த குடும்ப பெண்ணுக்கு தன் குடும்பத்தை நாசமாக்கிய நபரோடு குடும்பம் நடத்த விருப்பம் உண்டாகும்?
எந்த குடும்ப பெண்ணுக்கு தன் புது மாப்பிள்ளையை கொன்ற கோடுரமான நபரோடு திருமணம் செய்துகொள்ள விருப்பமுண்டாகும்?
எந்த குடும்ப பெண்ணுக்கு தன் ஊரில் உள்ள பெண்கள் கற்பழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தன் ஊர் பெண்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய முஹம்மதுவோடு, தன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள விருப்பமுண்டாகும்?
அதுவும் இந்த கொடூரங்கள் நடந்த ஒரு வாரத்திற்குள்ளாக, முஹம்மது ஸப்பியாவோடு உடலுறவு கொண்டுள்ளார், இதை படிப்பவர்களாகிய நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தால், இந்த நிகழ்ச்சிக்கு என்னவென்று பெயர் வைப்பீர்கள்? ஸபிய்யா சந்தோஷமாக முஹம்மதுவோடு 'அந்த' இரவை கழித்துயிருப்பாரா?
சாதாரணமாக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டாகி, சிறிது மனக்கசப்பு உண்டானால் கூட, பெண்கள் தன் கணவனோடு ஒரு சில நாட்கள் சந்தோஷமாக இரவை கழிக்காமல் இருப்பார்கள், அதாவது, தங்கள் எதிர்ப்பை குறைந்தபட்சம் காட்டும் இடமாக, கணவன் மனைவியின் தனி அறை இருக்கும். ஆனால், இங்கு பார்க்கிறோம், ஒரு வம்சத்தை அழித்த கொடூரனை திருமணம் செய்து, அன்றே முஹம்மதுவோடு வீடு கூடினாராம் ஸபிய்யா, இதை சுயநினைவு உள்ள எந்த மனிதனாவது ஏற்றுக்கொள்வானா? சிந்தியுங்கள்.
ஓ, இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், மனசாட்சியுள்ளவர்களாக சிந்தியுங்கள். எந்த பெண்ணாவது இப்படிச் சொல்வாளா?
ஸபிய்யாவின் நடத்தையை கேள்விக்குறியாக்கி, உங்கள் முஹம்மதுவை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளீர்கள், ஆனால், முஹம்மதுவின் மனைவி ஸபிய்யாவை கேவலப்படுத்திவிட்டீர்களே!
தன் குடும்பம் என்ன ஆனாலும் சரி, தன் கணவன், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் மற்றும் உறவினர்கள் எப்படி அழிந்தாலும் சரி, இவர்களை கொன்றழித்த நபரை நான் திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வேன் என்ற மனப்பான்மையுள்ள ஒரு பெண்ணோடு உங்கள் முஹம்மது வாழ்ந்துள்ளார், இதைத் தான் நீங்கள் உலக மக்களுக்கு உங்கள் ஆதாரங்கள் மூலமாக காட்டுகிறீர்கள்.
மூன்றாவதாக, அப்ஸர் அவரகள் என்ன எழுதினார் என்பதை இப்போது காண்போம், அதற்கு பதிலைப் பார்ப்போம்.
அப்ஸர் அவர்கள் எழுதியது:
ஸஃபிய்யா இஸ்லாத்தையும் நபி (ஸல்) திருமண பந்தத்தையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள காரணம்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழு நிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து. மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது" என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்) formats are mine.
உமர் எழுதியது:
ஒரு சிறிய கேள்வி: இந்த இஸ்லாமிய மேற்கோளை "இப்னு ஹிஷாம்" வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ள இஸ்லாமியர் அப்ஸர் அவர்களே, இதே இப்னு ஹிஷாமின் மேற்கோள்களை நான் மேற்கோள் காட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா?
முஹம்மதுவின் செயலை நியாயப்படுத்த இன்னொரு கட்டுக்கதை அரங்கேற்றம்:
1) ஸபிய்யாவின் கன்னத்தின் அடியில் ஒரு வடு (காயம்) காணப்படுகிறதாம்.
2) கன்னத்தில் என்னம்மா காயம்? என்று முஹம்மது கேட்டாராம்.
3) நீங்கள் எங்கள் ஊரை கைப்பற்றிய முந்தைய நாளில், என் கனவில் ஒரு முழு நிலா தன் இடத்திலிருந்து வந்து என் மடியில் விழுந்தது, அதைப் பற்றி தன் கணவருக்கு சொன்னார்களாம் ஸபிய்யா.
4) இதைக் கேட்ட ஸபிய்யாவின் கணவன் (புது மாப்பிள்ளை), நீ மதினாவின் அரசனை (முஹம்மதுவை) விரும்புகிறாயா? என்றுச் சொல்லி கன்னத்தில் அறைந்தானாம். அதனால், ஏற்பட்ட வடுவாம் அந்த வடு. ஆனால், உங்களைப் பற்றி நான் நினைத்துகூட பார்க்கவில்லை என்று ஸபிய்யா முஹம்மதுவிடம் கூறினாராம்.
இப்படி கனவில், ஒரு முழு நிலா தன்னிடத்திலிருந்து வந்து, ஸபிய்யாவின் மடியில் விழும்படி படி கனவு வந்ததால் தான் ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று "உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காது குத்துகிறார்கள் இஸ்லாமியர்கள்", இதில் நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்களும் அடங்குவர், அப்படிப்பட்டவர்களில் அப்ஸர் அவர்களும் ஒருவர், இவர் நமக்கு காது குத்த வந்துள்ளார். நாம் காதை காட்டுவோமா? இல்லை இஸ்லாம் சொல்லும் கதையை சிறிது அலசிப்பார்ப்போமா? மேலும் படிக்கவும்.
அப்ஸர் அவர்கள் காட்டிய ஒரு மேற்கோள் மூலமாக, ஸபிய்யாவின் நற்குணத்திற்கு இஸ்லாமியர்களால் களங்கம் உண்டானது, இப்போது இந்த 'கனவு' மூலமாக யாருக்கு பிரச்சனை என்று பார்ப்போம்.
ஸபிய்யாவின் திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ?
குர்ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் நாம் படிக்கும் போது அறிந்துக்கொள்வது என்னவென்றால், முஹம்மதுவிற்கு பெண்கள் என்றால் அதிக விருப்பம், இன்னும் அழகான பெண்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். இதற்காக அவருக்கு அல்லாஹ் தனிப்பட்ட வசனங்களை இறக்குவார், கனவுகள் மூலமாக ஓகே சிக்னல் கொடுப்பார், அவ்வளவு ஏன் சிறுமியாக இருந்தாலும் சரி, காபிரியேல் தூதன் மூலமாக முஹம்மதுவின் கனவில் ஓகே சிக்னல் கொடுப்பார். (அல்லாஹ் தன் அடியார்கள் மரித்து சொர்க்கம் வந்தால், அங்கும் அவர்களுக்கு கன்னிப்பெண்கள் காத்திருப்பதாக வாக்கு செய்கிறார்).
இப்போது, அந்த கனவு, முஹம்மதுவிற்கு வராமல், ஸபிய்யாவிற்கு வந்துள்ளது, இதனை சிறிது அலசுவோம். இந்த விவரமும் இஸ்லாமியர்களின் கட்டுக்கதை என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்ளலாம், ஸபிய்யாவோடு முஹம்மது புரிந்த திருமணம் கேவலமானது என்பதை மறைக்க ஆரம்பகால இஸ்லாமிய யுக்தி இதன் மூலம் வெளிப்படும்.
கவனிக்கவும்:
1) ஸபிய்யா தன் புது மாப்பிள்ளையோடு வாழுகின்றாள்
2) அப்போது அவளுக்கு ஒரு கனவு வருகிறது, நிலா வந்து தன் மடியில் விழுகின்றது,
இதன் மூலமாக நாம் அறிவது என்னவென்றால்:
அ) ஒரு பெண், மற்றவனின் மனைவியாக இருக்கும்பொது, அவளுடைய கனவில் இன்னொரு ஆண் பற்றிய கனவை கொடுத்த இறைவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?
ஆ) ஸபிய்யா ஒரு குடும்ப பெண், திருமணம் செய்துக்கொண்டு தன் கணவனோடு வாழுகின்றாள். மற்றவனுடைய மனைவியின் கனவில் இன்னொரு ஆண் பற்றி கனவு வருகிறது? இதை கொடுத்தவர் யார்?
இ) இஸ்லாமியர்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த கனவை "அல்லாஹ்" தான் கொடுத்தார், இதனை நம்பித் தான், ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
ஈ) ஒரு கனவு வந்தது என்பதறகாக, தன் வம்சத்தை அழித்த ஒரு கொடூரமானவனை ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்வாளா? தன் குடும்பத்தின் மீது ஸபிய்யாவிற்கு இருந்த அன்பு இவ்வளவு தானா?
உ) இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஸபிய்யாவின் கணவனுக்கு கனவுகளுக்கு பொருள் கூறும் சக்தி இருந்திருக்கிறது! ஸபிய்யாவின் கணவனுக்கு இந்த சக்தியை கொடுத்தவர் யார்? அல்லாஹ்வா?
ஊ) இஸ்லாமியர்கள் சொல்வதைப் பார்த்தால், ஸபிய்யாவின் கணவன் கொடுத்த "கனவு விளக்கம்" சரியானது தான், அதனால், தான் ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று கூறுகிறார்கள்?
நமக்கு அவ்வப்போது ஏதோ ஒரு கனவு வருகிறது, சிலருக்கு தினமும் கனவு வருகிறது, நமக்கு வரும் கனவுகளில் 99% கனவுகளுக்கு பொருளே இருக்காது, பைத்தியக்காரத் தனமாக கனவுகள் வரும், சைக்கிலை ஓட்ட கூட பயப்படும் ஒருவனுக்கு, ஏரோபிளேன் ஓட்டுவதாக கனவுகள் வரும். இப்படிப்பட்ட கனவை நம்பியா ஒரு குடும்ப பெண், தன் வம்சத்தையே இரத்த வெள்ளதில் ஆழ்த்திய ஒருவரை திருமணம் செய்துக் கொள்வாள். வாவ் ரொம்ப ஆச்சரியாமாக உள்ளது? ஸபிய்யா பெண் அல்ல, ஸபிய்யா ஒரு பெண் தெய்வம், என்னே தியாகம், உலகத்தில் எந்த ஒரு பெண்ணாவது இப்படி செய்து இருப்பாளா?
[இது சாத்தியமா பாருங்கள்: ஈராக்கை அமெரிக்க கைப்பற்றிய பிறகு, ஈராக்கை நாசமாக்கிய பிறகு, சத்தாம் உசேனை கொன்றுவிட்ட பிறகு, சத்தாம் உசேனின் மனைவி, ஜார்ஜ் புஷ்ஷை திருமணம் செய்துக்கொள்ள எனக்கு மகிழ்ச்சி என்றுச் சொன்னால் எப்படி இருக்கும்? இதே போலத்தான் ஸபிய்யா நடந்துக்கொண்டார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்]
இப்போது அப்ஸர் அவர்களிடம் சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் கேட்கவேண்டும்:
1) ஸபிய்யாவிற்கு வந்த கனவை கொடுத்தவர் யார்? அல்லாஹ்வா அல்லது இப்லிஷ் என்றுச் சொல்லக்கூடிய சாத்தானா?
2) அல்லாஹ் தான் என்று பதில் கூறுவீர்களானால், ஒரு திருமணமான பெண்ணின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்துக்கொள்ளும்படியான கனவை ஒரு இறைவன் கொடுப்பானா?
3) அல்லாஹ் இல்லை, 'சாத்தான் தான் கனவை கொடுத்தான்' அல்லது 'இது சம்மந்தமில்லாத வீணான கனவு' என்றுச் சொல்வீர்களானால், முஹம்மது ஸபிய்யாவை செய்துக்கொண்ட திருமணம், திருமணமல்ல, அது ஒரு கற்பழிப்பு, முஹம்மதுவின் காமத்திற்கு பலியான ஒரு பெண்ணின் கதை என்றுச் சொல்லலாம் அல்லவா?
ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் ஒரு உண்மையான இறைவனே அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக புரிகிறது. அதே போல, முஹம்மது ஒரு பொய் நபி என்பதும், நல்ல வழிகாட்டியாக அவர் வாழவில்லை என்பதும் புரிகிறது.
முடிவுரை:
முஹம்மது தன் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள அவர் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் தங்க முலாம் பூச முற்படுகின்றீர்கள். ஸபிய்யா தன் குடும்ப துரோகியை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்து, ஸபிய்யாவை கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, கனவு வந்தது அதனால் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார் ஸபிய்யா என்றுச் சொல்லி "அல்லாஹ்வையும்" சேர்த்து கேவலப்படுத்தியுள்ளீர்கள்.
இன்னும் இந்த கட்டுரையைப் பற்றி அப்ஸர் அவர்களோ, அல்லது வேறு நபர்களோடு பதிலைக் கொடுத்தால், இன்னும் அனேக ஆதாரங்கள் முன்வைக்கப்படும்.
பெண்களை கற்பழிக்கும் முஹம்மதுவை எப்படி இறைவனின் தூதர் என்று நம்பச் சொல்கிறீர்கள்? ஒரு நபரின் மனைவியின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்வது பற்றிய கனவை கொடுத்த அல்லாஹ் ஒரு இறைவனா? தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருமணம் என்ற பெயரில் பெண்களை கற்பழிக்கும் ஒரு நபர், நாம் பின்பற்றத் தகுந்த மாதிரியா? இல்லை இல்லவே இல்லை.
சரி, கடைசியாக இந்த கட்டுரைக்கு தொடர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பதற்காக, ஒரு சில கேள்விகளோடு முடிக்கிறேன்:
விதவையான பெண்ணின் "இத்தா" காலமும் முஹம்மதுவும்
1) இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால், அந்த பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்?
2) இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால், அந்தப் பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்?
3) ஸபிய்யா விதவையானால் அல்லவா? (முஹம்மது தான் அவளை விதவையாக்கினார், அவளது கணவரை கொன்றார்), ஸபிய்யாவிற்கு "இத்தா" நாட்களை ஒதுக்காமல் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு விரோதமாக முஹம்மது, ஸபிய்யா தன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடனேயே அவளோடு உடலுறவு கொண்டார்? (ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்று ஒருவன் சொன்னானாம், அது போல அல்லவா உள்ளது இவரது செயல்கள்)
4) அல்லாஹ் கட்டளையிடும் "இத்தா" முஹம்மதுவிற்கும் ஸபிய்யாவிற்கும் பொறுந்தாதோ?
5) ஸபிய்யாவை விடுதலை செய்துவிட்டு, முஹம்மதுவை திருமணம் புரிந்து இருந்தால், விடுதலையான ஒரு விதவையின் "இத்தா" காலம் ஸபிய்யாவிற்கும் ஒதுக்கியிருக்கவேண்டாமா?
6) இல்லை, ஸபிய்யா அடிமையாகவே இருந்தார், ஆகவே உடலுறவு கொண்டார் என்று சொல்வீர்களானால், திருமணம் புரியாமல் ஒரு பெண்ணொடு உடலுறவு கொள்வது, "கற்பழிப்பு தானே"?
அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரையில்.....
உமர் (isa.koran (at) gmail.com or isa_koran (at) yahoo.co.in)
9 கருத்துகள்:
மிக அருமை... அப்சா் இதுக்கு ஏதாவது ஒரு கதை புத்தகத்தை பிரஸ்ஸில் கொடுத்து பிரிண்டு செய்து... ஆதாரம் உள்ளதுன்னு அதை ஸ்கேன் செய்து போட்டு ஒரு கதை அளக்கப் போகிறார். நிச்சயமா நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமாட்டார் அப்சர். பழையபடி செக்ஸ் இன் பைபிள்னு கூகுளில் தேடி உங்க பைபிளில் அப்படி இருக்கு... இப்படி இருக்குன்னு பேச்சை மாத்துவார்.
இதுவே போதும் என எண்ணுகிறேன். மேலும் இதற்கு அவர்கள் விளக்கம் எழுதி அசிங்கப்பட விரும்பமாட்டார்கள் கள் என எண்ணுகிறேன்.
புதிதாக இணையத்தளத்தை ஆரம்பித்தவர்கள் அல்லாவா? இதுவும் மோசடியாக இதே பெயரில் இப்ப துள்ளதான் செய்வார்கள். போகபோக பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். குறிப்பாக இவர்களுக்கு பதில் எழுதுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.
எப்பொழுதும் போல் வாதம் என்ற பெயரில் உங்கள் பொய்யான கருத்துகளை அல்லவா மூன் எடுத்து வைத்து இருக்குறீர், "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்று கேட்கும் நீங்கள் அப்படி இல்லை என்று நிரூபிக்க உண்மையான சரித்திர அல்லாது ஹதிஸ் ஆதாரத்தை அல்லவா மூன் வைக்க வேண்டும்! ஆதாரம் இல்லாமல் உங்கள் பொய்யான கருத்துகளை, வார்த்தை ஜாலங்களை நம்பா சொல்வது தான் எதிர் வாதமா?
உங்கள் கருத்துகளை நிரூபிக்க நேரடி அதரங்களை எடுத்து வையுங்கள், இஸ்லாமியர் பைபிள்ளில் இருந்து தெளிவான வசனத்தை வைப்பது போல்லா, அல்லாது பைபிள்க்கு ஏதிராக பைபிள்ளில் இருந்து எடுத்து வைக்கப்படும் வசனங்களுக்கு உங்கள் பொய்யான விலகயுரை இல்லாமல் பைபிள்ளில் அல்லாது சரித்திர நூல்களில் இருந்து ஆதாரத்தை தரலாமே!! உங்களால் முடியாதா?
கருத்து சொல்றேன்னு திரு. ஜாவித் ஒரு அபாண்டத்தை கூறியிருக்கார்... எந்த இஸ்லாமியரும் பைபிளில் இருந்து ஆதாரத்தை எடுத்து கூறுவது கிடையாது... இந்த நிலையில் மிக துல்லியமாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டுவது போல ஒரு சீஸ் போட்டிருக்கார். இந்த ஸஃபிய்யா பற்றி நிறைய ஆதாரத்துடன் இந்த தளத்தில் நண்பா் விளக்கிவிட்டார். முடிந்தால் பதில் சொல்லுங்க... இதுவரைக்கும் எந்த இஸ்லாமியரும் இந்த தளத்திற்கு பதில் கூறியதாக தெரியவில்லை. (கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம... அப்சா் மாதிரி செக்ஸ் இன் பைபிள்னு சா்ச் செய்து ஒரு புது கதை கட்டுவதை தவிற)
//இதுவரைக்கும் எந்த இஸ்லாமியரும் இந்த தளத்திற்கு பதில் கூறியதாக தெரியவில்லை.//
பிரவீன் நீங்கள் என்ன இவ்வளவு அடி முட்டலாகவா இருப்பீர்கள்? உங்கள் உமர் தான் "Answer Apsar" என்று அப்சருக்கு பதில் என பொருள் பட எழுதி உள்ளாரே. அப்படி இருக்கையில் பதில் இல்லை என்று உமருக்கு கூற்றுக்கு எதிராகவே பேசுகிறீர்களே...
என்ன தெரிவிக்கிறோம் என்று யோசிக்காமல் எழுதுவதே இந்த பிரவின்னின் வாடிக்கை ஆகி விட்டது, இங்கே உள்ள கட்டுரைகளுக்கு எத்தனை பதில் வந்தள்ளது என்று ஏனைய தளங்களை ஆராய்ந்து பாருங்கள், பிறகு உண்மை நீங்கள் அறிய கூடும்.
//எந்த இஸ்லாமியரும் பைபிளில் இருந்து ஆதாரத்தை எடுத்து கூறுவது கிடையாது...// என்ன சொல்ல விரும்புகிறிர் பிரவின்? பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருட்டு என்பது போல் அல்லவா நீங்கள் சொல்வது இருக்கிறது? கடிவாளம் போட பெற்ற குதிரை போல் அல்லவா இணைய தளங்களை பார்க்காமல் கருத்துகளை முன் வைகிறிர்கள்... பிற இணைய தளங்கள் எடுத்து வைக்கும் பைபிள் வசனங்களுக்கு பதில் அளியுங்களேன் உங்கள் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை இருந்தால்...
There is nothing in bible...it is the most worse book in the world..and you foolish people come to debate with holistic peoples(muslims) uh??Better go and do some useful works either..I was a catholic and now i converted to islam..After knowing that christianity is mere waste..And umar i am damn sure you wil not post this comment..Good bye
இது தான் உங்கள் யோக்கியதை திருவாளா் ரகீம் அவா்களே... பதில் என்று கண்ட கிறுக்கல்களை எழுதினால் உண்மை ஆகிவிடுமா? பதில் கூறாமல் மந்திகள் மாதிரி அடுத்த ஒரு தலைப்புக்குத்தானே ஓடுறீங்க நீங்க எல்லாம்... எதுக்கு இதுதான் ஆதாரம்... இதுதான் பதில்னு சொல்லியிருக்கீங்க? உங்களால தான் அப்படி பதில் சொல்ல முடியுமா? யாரோ ஒருத்தா் சொன்ன கட்டுக்கதையை உண்மைன்னு சொல்றவங்க தானே நீங்க... உங்களைப் பொருத்தவரைக்கும் சூரியன் தானே பூமியை சுத்திவருது... அதுவும் ஒரு சகதிக்குள்ள போய் சூரியன் ஒளிஞ்சிக்குதாம்... சூரியனை சுத்திவர பூமிக்கு எத்தைன நாட்கள் ஆகும்னு விஞ்ஞானப்பூா்வமா நிருபிச்ச பின்னரும் உங்க நாட்காட்டியில மாத்தாதவங்க தானே நீங்க... இப்போ முட்டாள் யாருன்னு தெரியுதுங்களா ரகீம் அவா்களே... என்ன பதில் சொல்லியிருக்கிங்க ஆதாரப்பூா்வமான்னு ஒன்னே ஒன்னை சொல்ல முடியுமா? பதில் கூறுவதை விட்டுவிட்டு முட்டாள் கிட்டாள்னு பேசுறதை நிறுத்திக்கிங்க... (அது முட்டால் இல்லை முட்டாளே)
இந்த தலைப்பை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லாமல் வேறும் பொய்யுரைகளையும், தனி நபர் கூற்றுகளையும் மட்டுமே முன் வைத்து வரைய பெற்ற உங்கள் கட்டுரைக்கு “பகுதி – இரண்டு, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி“ என்ற தலைப்பில் http://isaakoran.blogspot.com/2010/12/blog-post_17.html இணையதளத்தில் பதில் கட்டுரை வரைய பெற்று உள்ளது, அதில் பைபிள்’ளின் இருந்து தெளிவான வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும்மாறு வேண்டப்பட்டு உள்ளது, இதற்க்கு நீங்கள் விளக்கம் அளிக்க முன் வர போகிறீர்களா? அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டீர்களா?
பொய் கூற்றுகளை மூன் வைத்து பிற மதங்களை குற்றம் சொல்ல மூன் வரும் நீங்கள் தயவுடன் முதலில் உங்கள் கிறிஸ்தவத்தில் அடங்கி இருக்கும் விரசங்களை விளங்குங்கள்.
கருத்துரையிடுக