ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 30 ஜூலை, 2007

இது தான் இஸ்லாம், பதில்:2 - என் பதில்.

கிறிஸ்தவ இணையத்திற்கு பதில்-2: எது சத்தியம்" கட்டுரைக்கு என் பதில்.

நான் என் மறுப்பை முழுவதுமாக, இதே கட்டுரையில் தந்துள்ளேன். அதற்கு முன்பாக ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.


இது தான் இஸ்லாமியர்களுக்கு கேள்விகள், இரண்டு விதமாக வருகிறது என்று நண்பர் சொல்லியுள்ளார்.

1. அந்த தளத்திலேயே உள்ள கேள்விகேட்கும் பக்கத்தை பயன்படுத்தி.

2. தனியாக மெயில் மூலமாக கேள்விகள் வருகிறதாம்.

முதல் முறையில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை, கேள்விகள் அப்படியே வரட்டும். அந்த மெயில் ஐடிக்களும் சில நேரங்களில் வாசகர்கள் தவறாகவே பதிவு செய்வார்கள்.

கிறிஸ்தவத்தைப் பற்றிய ஒரு கேள்வி "மெயில் e-mail " மூலமாக வந்ததாக நண்பர் நிஜாமுத்தீன் அவர்கள் எழுதினார்கள். தங்களுக்கு மெயில் மூலமாக வந்த கேள்வி, Gmail Inbox --> Open Mail பக்கம் எப்படி இருக்கும் என்று ஆதாரத்துடன் ஒரு படத்தையும் பதிவுசெய்தார்கள்.

இது தான் அந்த Gmail ஆதார பக்கம்: இதில் சிகப்பு வட்டங்கள் நான் வரைந்தது.


இப்போது இதே போல, நான் என் Gmail உள்ள Inbox Open Mail படத்தை தருகிறேன், பாருங்கள்.இங்கு படங்கள் தெரியவில்லையானால், கீழே உள்ள Link கை Click செய்யவும்.
1. http://www.geocities.com/isa_koran/images/kambalu.jpg இது தான் இஸ்லாம் வெளியிட்ட படம். வட்டங்கள் நான் இட்டது.
2. http://www.geocities.com/isa_koran/images/mygmailpage.JPG என் Gmail Inbox படம் -1 (hide details)
3. http://www.geocities.com/isa_koran/images/mygmailpage1.JPG என் Gmail Inbox படம் -2 (show details)
இனி விவரங்களை படியுங்கள்.

1. இது தான் இஸ்லாம் தளத்தில் வெளியிட்டுள்ள படம் (Edit or Modify) திருத்தப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.

2. Gmail தலைப்பு விவரங்கள்(Headers like from, to, Subject etc..) தெரிவதற்கு "show details" என்ற ஒரு url or Link கொடுத்துள்ளார்கள். அதை நாம் க்ளிக் செய்தால், அதன் கீழே விவரங்கள் தெரியும்.

3. இதை நான் என் படத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். அப்படி நாம் க்ளிக் செய்தால், கீழே விவரங்கள் தெரிந்தால், உடனே, அந்த "show details" என்ற வார்த்தை "hide details" என்று மாறிவிடும். இது எல்லாருக்கும் தெரியும்.

4. ஆனால், நம் அன்பு இஸ்லாமிய நண்பர்கள் வெளியிட்டுள்ள படத்தை பார்ப்பீர்களானால், "show details"என்ற வார்த்தை தெரியும் தெரியும், அதன் கீழே விவரங்களும் தெரியும், இது எப்படி சாத்தியமாகும். "hide details" என்றல்லாவா தெரியவேண்டும்.

5. என்னை குற்றப்படுத்த, இப்படி படத்தை திருத்தி இவர்கள் வெளியிடுகிறார்கள், இவர்கள் என்னை மட்டும் குற்றப்படுத்தவில்லை, Gmail Programmer's திறமையை கேள்விக்குறியாக்கியுள்ளார்கள்.

6. Gmail க்கு ஒரு கடிதம் எழுதவேண்டும், எப்படி இப்படி Program எழுதுகிறீர்கள். ஒருவருக்கு சரியாக வருகிறது, இன்னொருவருக்கு இப்படி தவறாக வருகிறது என்று கடிதம் எழுதவேண்டும்.

சரி இப்படி திருத்தி வெளியிட்டார்கள், குறைந்தது, தலைப்பு விவரங்களில் வரும் Font, Number of headings, Gmail லில் உள்ளபடியாவது திருத்தக்கூடாது? அதையும் செய்யவில்லை, நம் இஸ்லாமிய நண்பர்கள்.

அவர்கள் கொடுத்த படத்தில் வரும் தலைப்புக்கள் இவை: Name, email, Location, Subject.

ஆனால், என் Gmailலில் தலைப்புக்கள் இப்படி உள்ளதே அது எப்படி? from, to, date, subject, signed by, mailed-by. (See the uppercase and Lower case)

அவர்கள் சொல்லலாம், யார் யாருக்கு Mail வந்தது என்று வெளியே தெரியக்கூடாது என்று நாங்கள் ஒரு "Group Name" உருவாக்கியுள்ளோம், பாருங்கள் "vips" என்பது எங்கள் Group Name, இதில் பல mail id க்கள் உள்ளது.

நானும் ஒரு "Group Name" உருவாக்கித் தான் இந்த சோதனையே செய்தேன். என் "Group Name" கூட "vips" தான்.

இந்த "Group Name"யில் யார் யார் Mail Idக்கள் இருக்கிறது என்பது இரகசியம் என்றால், இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது, அவர் மட்டும் எப்படி ஒருவருக்கு அனுப்பாமல், Group Name ற்கு அனுப்புகின்றார்.அப்போ அது இரகசியமில்லையா?

"இல்லை, அவர் எங்கள் நண்பர்" என்றுச் சொல்வீர்களானால், அவர் ஏன் இல்லாத mail id மூலம் உங்களுக்கு (அதாவது நண்பர்களுக்கு, இரகசியம் தெரிவித்த நண்பர்களுக்கு) அனுப்புகின்றார்?

அது எப்படி, உங்கள் Group Name இல் உள்ள எல்லா mail Idகளுக்கும், அவர் அனுப்பமுடிந்தது.

நீங்கள் பதித்த படத்தின் அடியில் "Reply to All" என்று இருப்பதிலிருந்து, இது ஒரு "Group Name" க்கு அனுப்பிஇருப்பது தெரிகிறது.

நீங்கள் Gmail செய்தியை ஒரு சதுரம் போட்டு (Box) படத்தை மாற்றி இருக்கிறீர்கள். இப்படி Gmail வராது, என் படத்தை பாருங்கள்.

நீங்கள் ஒன்று செய்து இருக்கலாம், எல்லா கேள்விகளும், எங்கள் தளத்திற்கு வந்து வாசகர்கள் பதிந்திவிட்டு சென்றார்கள், என்று சொல்லியிருந்தால், பிரச்சனையே இல்லை.

சரி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை, ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். நடக்கட்டும்.

வாசகர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோல்: நான் இதில் சொன்னது, இன்று Gmail ல் சென்று நான் சேகரித்த விவரங்கள், இது தவறு என்றுச் சொன்னால், நீங்கள் மறுப்பை தெரிவியுங்கள். அவர்கள் வெளியிட்ட படத்தோடு உங்கள் Gmailயில் ஒரு மெயிலை திறந்து சரி பாருங்கள், நான் வெளியிட்ட படம் தவறா? அவர்கள் Edit செய்து வெளியிட்ட படம் தவறா?

நிஜாமுத்தீன் அவர்களே, உங்களால் முடிந்தால், உங்களுக்கு வந்த மெயிலை Forward செய்யமுடியுமா?

நீங்கள் வெளியிட்ட படத்தில் நீங்கள் Edit or Modify செய்யவில்லை என்று "அல்லாவின் பேரில், குர்-ஆனின் பேரில், முகமதுவின் பெயரில்" சத்தியம் செய்து, உங்கள் மனசாட்சியோடு, "நான் Edit செய்யவில்லை" என்றுச் சொல்லமுடியுமா? (நான் என்னிடம் செய்யும்படி கேட்கவில்லை, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.)

இதிலும் நான் அவசரப்பட்டு தவறு செய்து இருந்தால், வாசகர்கள் எனக்கு தெரிவியுங்கள். நான் திருத்திக்கொள்கிறேன். சிந்திக்கவேண்டியது, பேசவேண்டியது நிறைய உள்ளது, ஆனால், என் நிலை... இப்படி மெயில் பாக்ஸோடு ஆகிவிட்டது.

இனி உங்கள் இந்த கட்டுரைக்கு என் பதிலை கீழே தருகிறேன்.

//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இயேசுவின் உண்மை நிலைப் பற்றி நாம் எழுதி வருபவைக்கு மறுப்பு என்றப் பெயரில் சில இணையங்கள் சில கட்டுரைகளைப் பதித்தன. அதில் தமிழ் கிறிஸ்டியன் இணையத்தை நாம் நேரடி கருத்துப் பரிமாற்றக் களமாக எடுத்துக் கொள்ள எண்ணினோம். காரணம் பின்னூடல்கள் அதில் வருவதால். என்னவோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட மன்றம் மெளனம் சாதித்து விட்டது. மறுப்புக கட்டுரை எழுதுபவர் தனது நேரடி வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகின்றார். விவாத அழைப்பெல்லாம் தேவையில்லை. உங்கள் நிலையை நீங்கள் எழுதுங்கள், எங்கள் தரப்பை நாங்கள் எழுதுகிறோம் என்ற தோரணையில் எழுதியுள்ளார். எனவே அவரது நேரடி வலைப்பூவே நமது பதிலுக்குரியதாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.//

என் பதில்: என் வேண்டுகோலை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: முக்கியக் குறிப்பு: இணையத்தளத்தின் எழுத்துப் பணி என்பது எங்களின் முழு நேரப் பணியல்ல. நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அந்நிய மண்ணில் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். எங்கள் ஓய்வு நேரங்களை கூடுதலாக இதற்கும் பிற சமுதாய பணிகளுக்கும் நாங்கள் பயன்படுத்துகிறோம். எனவே பதில்களோ கட்டுரைகளோ பதிப்பதற்கு தாமதம் ஏற்படவே செய்யும். இந்த தாமதம் தவிர்க்க முடியாததாகும். //

என் பதில்: என்னால், உங்கள் நிலையை புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதுங்கள். நானும் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது. நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகிறேன்.

//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இனி விஷயத்திற்கு வருவோம்.

இதுதான் இஸ்லாமிற்கு பதிலளிக்கிறேன் என்றப் பெயரில் அவரிடம் (அவர் என்று நாம் குறிப்பிடும் இடங்கள் அனைத்தும் மறுப்புக் கட்டுரை எழுதும் அந்த சகோதரரைக் குறிக்கும்) ஏற்பட்டுள்ள அவசரம் மற்றும் அவரது மனநிலையை முதலில் சுட்டிக் காட்டுவோம்.

அவசரம் - 1

இயேசுவின் வரலாறு முதலாவது மறுப்புக் கட்டுரையை அவர் இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.

'பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே, இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்'.

நம்மைப் பற்றி இப்படி குறிப்பிட்ட இதே சகோதரர் அவரது நான்காவது மறுப்புக் கட்டுரையில் 'நம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக சொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம்'. என்று குறிப்பிடுகின்றார்.

இப்படியும் அப்படியுமாக அவர் எழுதியுள்ளது முரண்பாடு என்று சொல்லவில்லை. பதில் கொடுத்து விட வேண்டும் என்ற அவரது அவசரம் இந்தத் தவறை செய்துள்ளது.//

என் பதில்: இதில் தவறு எங்குள்ளது.

இயேசுவின் வரலாறு தொடர் 1ல், நீங்கள் கீழ் கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்:

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

நீங்கள் சொன்னவிவரங்கள் 12-17ம் அதிகாரங்கள் வரை அல்ல, 21ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் கீழ்கண்டவாறு சொன்னேன்.

அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர். இது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.

இந்த விவரங்கள் சரியானதா இல்லையா? இப்போதாவதுச் சொல்லுங்கள் நண்பரே.

செய்த பிழையை ஒப்புக்கொள்ளாமல், படிப்பவர்களை குழப்பபார்க்கிறீரோ?

இந்த இடத்தில் தவறு நேர்ந்துவிட்டது, அதிகாரங்களின் எண்கள் இடம் மாறிவிட்டது என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, அவசரம் என்று என் மேல் குற்றம் சொன்னால் எப்படி நண்பரே?

நான்காவது தொடரில் "பைபிள் விலாசம்" பற்றிய உம் செய்தியைப் பற்றி:

நண்பரே, நான் ஒரு கிறிஸ்தவன், இயேசுவை பின்பற்றுபவன். இதனால், என்னால் முடிந்த அளவிற்கு நடுநிலையாக இருக்கவிரும்புகிறேன்.

முதல் தொடரில், நீர் தவறு செய்தீர், சுட்டிக்காட்டினேன். நான்காவது தொடரில் நீர் விலாசம் சரியாகச் சொன்னீர், அதற்காக அதையும் என் மறுப்புக்கட்டுரையில் மெச்சிக்கொண்டேன் அல்லது என் கருத்தை தெரிவித்தேன். நாம் என்ன எதிரிகளா? எப்போதும் தவறையே சுட்டிக்காட்டுவதற்கு. சரி என்றால், சரி என்றுச் சொல்கிறேன். தவறு என்றால் தவறு என்றுச் சொல்கிறேன். என் மறுப்புக்கட்டுரைகளில் ஒன்றை நீர் கவனிக்கவேண்டும், உன் கட்டுரைகளில் வரும் ஒவ்வொரு வரியையும் நான் சேர்த்துள்ளேன். ஒரு வரியையும் நான் விட்டுவிடவில்லை. அப்படி விடப்பட்டு இருந்தால், அது தவறுதலாக விடப்பட்டிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சரியான விலாசம் சொன்னதை நான் குறிப்பிடவில்லை என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள், " நான் தவறுதலாக அதிகாரத்தை மாற்றிச் சொன்னேன், அதை தன் மறுப்பில் குறிப்பிட்டார்கள், ஆனால், நான் சரியாக சொன்னவிவரங்களை, சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் என்றுச் சொல்லி" என்மேல் குற்றம் சாட்டமாட்டீர்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

அவசரம் - 2

இதுதான் இஸ்லாம் வெளியிட்ட கிறிஸ்த்தவ கேள்வி பதில் பகுதியில் வந்துள்ள மெயில் ஐடிகள் போலியானவை. அப்படி எந்த மெயில் ஐடியும் இல்லை. ஏனெனில் அந்த நான்கு மெயில் ஐடிகளையும் நான் இப்போதுதான் உருவாக்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது எழுத்தில்.

Qoute:

இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்?

இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன். இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.

a) irvanm@rediffmail.com

b) kabmabul@yahoo.com

c) mailto:rafeeqrauoofa@gmail.com

d) mmsafi20@hotmail.com

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)

என் பதில்: உண்மை தான். அன்று காலை நான் தான் இந்த மெயில் ஐடிக்களை உருவாக்கினேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இப்படி எழுதிய இவரது கட்டுரைக்கு தரமான பின்னூடல்களும் வந்துள்ளன.

Qoute:

உமர், இதில் ஒன்றை கவனித்திற்களா அவர்கள் மின்-அஞ்சல் முகவரியை தரும் போது irvanm(at)reedifmaildotcom என்று தந்து இருப்பதை அதாவது SPAM மின்-அஞ்சல்களை தவர்ப்பதற்காக சிலர் இவ்வாறு((at) and dotcom) தருவதுண்டு. இல்லாத மின்-அஞ்சல் முகவரிக்கு, யாருங்க மின்-அஞ்சல் அனுப்பபோகிறார்கள்.

இவ்வளவு யோசித்தவர்கள் அந்த மின்-அஞ்சல் முகவரியை மறந்து விட்டார்கள். அது சரி இவர்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்பது தவறு தான்.

அப்ப இது தான் டூபாக்கூர் என்பதா? இப்பதாங்க டூபாக்கூர் என்றால் என்ன அர்த்தம் என்று புரிகிறது.

Last edited by vijayakumar on Fri Jul 13, 2007 2:12 pm.

இதேப் போன்று இன்னும் சில பின்னூடல்களும் தமிழ் கிறிஸ்டியன் தளத்தில் உள்ளன. இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம். இதுதான் இஸ்லாம் தளத்தில் நேரடியாக கேள்வி எழுதும் வசதியை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 'எங்களுக்கு எழுத' என்றப் பகுதியை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போன்று பக்கம் திறக்கும்.

இணையம் வருபவர்கள் நேரடியாக தங்கள் கேள்விகளைப் பதிப்பார்கள். இதில் கேட்கப்படும் பெயர், மின் அஞ்சல், நாடு என்று நாம் விபரம் கேட்டிருக்கிறோம். அவர்கள் பதிப்பவை எல்லாம் உண்மையா என்று எங்களால் கண்டறிய முடியாது. நாங்கள் மட்டுமல்ல பல்வேறு இணையங்களின் நிலையும் இதுதான். பல இணையங்களிலிருந்து சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யும் போது சம்பந்தப்பட்ட தளங்கள் மெயில் ஐடி கேட்கும். JUNK மெயிலுக்கு பயந்து பெரும்பாலானவர்கள் போலி மெயில் ஐடியையே பதிப்பார்கள். பல நேரங்களில் எங்கள் இணையத்திற்கு வந்து எழுதுபவர்கள் கூட போலி ஐடியை கொடுத்து விடுகின்றார்கள். உதாரணத்திற்கு 'கிறிஸ்த்தவம் கேள்வி பதில்' இதில் இடம் பெற்ற ஒரு மெயில் ஐடியை எடுத்துக் கொள்வோம். b) kabmabul@yahoo.com

இந்த மெயில் ஐடி கிறிஸ்த்தவம் கேள்வி பதிலில் 424 வது கேள்வியில் இடம் பெற்றுள்ளது. இதே மெயில் ஐடியை கிறிஸ்த்தவ சகோதரர் 'ஜுலை 13ல் தாம் உருவாக்கியதாகக் கூறுகிறார். qoute:

திரு அறிஞன் அவர்களுக்கு என் (http://isakoran.blogspot.com) பதில்:

• இது தான் இஸ்லாம் தளத்தில் "பொய்யான ஐடிக்கள் வெளியிடப்பட்ட நாள்" Thursday, July 12, 2007 கிறிஸ்த்துவம் கேள்வி பதில்

• நான் ஐடிக்களை உருவாக்கி, பதில் தந்த நாள் : Friday, July 13, 2007

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

• இது தான் இஸ்லாம் "தள அனுமதி கேட்டு" இருந்த நாள்: Sunday, July 15, 2007

தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1

• அனுமதி தரப்படமாட்டாது என்றும், தேவையானால் பதில் தரவும், இல்லையானால் விட்டுவிடவும் என்றுச் சொல்லி, பதில் கொடுத்த நாள் : Monday, July 16, 2007 இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.

எந்த தளமும் பொறுப்பேற்காது, உங்களுக்கு விருப்பம் இருந்தால், பதில் தரவும் இல்லையானால் விட்டுவிடவும் என்று சொல்லி இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. இதுவரையில் பதில் இல்லை.

உண்மையில் உங்களிடம் பதில் இருந்தால்( பொய்யான ஐடிக்கள் பற்றி) உடனே அதை சொல்லவேண்டியது தானே,

ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் செய்கிறீர்கள்?

மடியில் கனம் இல்லையானால் ஏன் வழியில் பயம் ?

இதே மெயில் ஐடியுடன் எங்களுக்கு எப்போது கேள்வி வந்தது தெரியுமா.. ஜுன் மாதம் 14ம் தேதி. அதாவது இவர் இதே மெயில் ஐடியை உருவாக்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே இதே மெயில் ஐடியிலிருந்து எங்களுக்கு கேள்வி வந்து விட்டது. என்ன ஆதாரம் என்கிறீர்களா... கீழுள்ள இமேஜை பாருங்கள்.

நாங்களே மெயில் ஐடியை போலியாக வெளியிட்டுள்ளோம் என்றும் அதை அவர்கள் கண்டு பிடித்து (அதிலும் கழிவறையில் உட்கார்ந்து படித்து ) தங்கள் சாதனையை மெச்சிக் கொள்பவர்கள், இப்போது இன்னும் பல மடங்கு தங்களை புகழ்ந்துக் கொள்ளட்டும். அதற்கு கழிவறைகள் துணை புரியட்டும்.

சம்பந்தப்பட்ட கிறிஸ்த்தவ சகோதரர் இதே மெயில் ஐடியை உருவாக்கி இருக்கட்டும் நாங்கள் அதை மறுக்கவில்லை. (அவரது திறமைக்கு ஒரு பாராட்டு) ஆனால் மெயில் ஐடி என்றாலே அது உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கைதான் குழந்தைத் தனமானது.

நாமாக மெயில் ஐடிகளை போலியாக வெளியிட்டு கேள்விகளைத் தொகுக்க வேண்டும் என்றால் இன்னும் ஆழமாக பல கேள்விகளைத் தொகுத்திருக்க முடியும் என்பதை அந்த சகோதரர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் என்றைக்கும் அதுபோன்று செய்ததில்லை.

என் பதில்: இதற்கான பதிலை இக்கட்டுரையின் ஆரம்பித்திலேயே தெரிவித்துவிட்டேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: ஏற்கனவே ஒரு இஸ்லாமிய அறிஞரின் தவறை சுட்டிக் காட்டிய போது இதே போன்று id பிரச்சனையை நாங்கள் சந்தித்துள்ளோம். அதற்கான விரிவான விளக்கம் இதுதான் இஸ்லாம் 'விமர்சனப்பகுதி்'யில் உள்ளது. இதை சகோதரர் சாதிக் சமீபத்தில் தனது பின்னூடலில் கூட சொல்லியுள்ளார். எனவே இனிமேல் இணையத்தளம் வந்து எழுதும் கேள்விகள் பற்றிய இமெயில் மீது வைக்கப்படும் விமர்சனம் யாருடையதாக இருந்தாலும் அதை நாம் கண்டுக் கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.

என் பதில்: இப்படி தங்களுக்கு வரும் மெயில் ஐடிக்களை, அனுப்புகின்ற வாசகர்கள் மாற்றினால், ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அந்த மெயில் ஐடிக்களை நீங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளில் பதியும் போது xya@gmail.com என்று பதியாமல், Spam க்காக xyzatgmail.com இப்படி பதிக்கிறீர்கள். கேள்விகளை அனுப்புகின்ற வாசகர்கள், இப்படி மாற்றி கட்டுரையில் எழுதுங்கள் என்றுச் சொல்கிறாரா? அப்படிச் சொன்னாலும், கேள்வி கேட்ட நான்கு வாசகர்களுமா இப்படி உங்களிடம் கேட்டுக்கொள்வார்கள்? (கிறிஸ்தவ பதிலில் நீங்கள் கொடுத்த கேள்விகளைப் பற்றிப் பேசுகின்றேன்).

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

//மறுப்பாளரின் மனநிலை.

மனம் திறந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு நாம் அழைப்பு விட்டிருந்த நிலையில் அவர்களின் மன நிலையை அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அதையும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கின்றோம். Rukmani

Joined: Apr 02, 2007

Posts: 240 Posted: Fri Jul 13, 2007 1:13 pm Post subject:

ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?

இந்த விவாதத்தைப் பார்த்து நானே, என்ன இது புரியவில்லையே, ஒருவேளை ஆபிரகாம் பலி கொடுக்க நினைத்தது இஸ்மவேலாக கூட இருந்திருக்கலாம் என்று நினைத்தேன், நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்க்கு

_________________

Rukmani Shanmugam

ருக்குமணி என்ற சகோதரியின் பின்னூடலுக்கு உமர் என்றப் பெயரில் மறுப்பு எழுதும் அவர் அளித்துள்ள பதில். umar

Joined: Mar 16, 2007

Posts: 179 Posted: Fri Jul 13, 2007 2:27 pm Post subject:

ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,

ஒரு பேச்சுக்காக "பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை".

திரு உமர் அவர்களே... உங்கள் மனநிலையை நீங்கள் அறிவித்து விட்டீர்கள். 'நான் அப்படித்தான் என்று' நீங்கள் முடிவு செய்து விட்டப் பிறகு உங்களுக்காக கர்த்தரிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது உங்கள் விருப்பம். ஆனால் "இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை" என்றெல்லாம் எழுதி உங்கள் வடிகட்டிய அறியாமையை வெளியில் காட்டிக் கொண்டிருக்காதீர்கள்.

நீங்கள் இதுதான் இஸ்லாத்திற்கு மறுப்பாக பல கட்டுரைகளை பதித்து விட்டீர்கள். உங்கள் அவசரத்திற்கு பாராட்டுகள். அதன் நிலவரங்களை நாம் தொடர்ந்து எழுதுவோம் பொருத்திருங்கள். வளரும் கர்த்தர் நாடட்டும்.//


என் பதில்: "ஒரு பேச்சுக்காக" என்று நான் சொன்னதை நீங்கள் இவ்வளவு தீவிரமாக சிந்திப்பீர்களானால், அதிலேயே நான் ஒரு உண்மையை உலகிற்கு சொல்லிவிட்டேனே, அதை பார்க்கவில்லையா?

Quote:

ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,

ஒரு பேச்சுக்காக "பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை".


இதன் பொருள் என்ன தெரியுமா? நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதனால், குர்-ஆன் தவறு என்றுச் சொல்வதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு இந்துவாக இருந்தாலும், ஏன் நாத்திகனாக இருந்தாலும், அப்போது கூட நான் குர்-ஆனை திறந்த மனதுடன் அனுகினாலும், குர்-ஆன் மூலமாக ஒரு மனிதனை இறைவனிடம் சேர்க்கும் வழி அல்லாவிடம் இல்லை என்பது தான் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

இப்படி எல்லா மறுப்புக்களையும் சேர்த்து ஒரு பதிலை நீங்கள் தருவதை விட்டுவிட்டு, இது வரை நான் கொடுத்த மறுப்புக்களுக்கு தனித் தனியாக பதிலைத் தாருங்கள். அப்போது தான் வாசகர்களுக்கு புரியும், உண்மை தெரியும்.

நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது:

1. இந்த மறுப்பின் முதலில் நான் முன்வைத்த கேள்விக்கான பதில் (ஜீமெயில் விவரங்கள்)

2. இயேசுவின் வரலாறு 1 முதல் 5 வரையிலான என் மறுப்பிற்கு ஒவ்வொன்றாக பதில்.

3. "இஸ்மவேலை புகழும் பைபிள்" தொடருக்கான என் மறுப்பிற்கு உங்கள் பதில்.

வெள்ளி, 20 ஜூலை, 2007

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - இஸ்லாம்

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

ஆசிரியர்: Khaled

முதல் உரை: இந்த கட்டுரை www.answering-islam.org என்ற தளத்தில் வெளியான " Is the Quran Preserved " ? என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர் சகோதரர் "கால்ட்" என்பவர் ஆவார். நான் அவருக்கு ஒரு மெயில் அனுப்பி, அவருடைய இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிடலாமா என்று அனுமதி கேட்டபோது. உடனே அவர் எனக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்ததற்காக அவருக்கு கர்த்தருக்குள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலத்தில் அவருடைய கட்டுரையை இங்கு படிக்கலாம், ஆங்கிலத்தில் படித்தால் இக்கட்டுரையின் விவரங்கள் இன்னும் தெளிவாக புரியும்.

அவருடைய மெயில் விலாசம் : Khaled
அவருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles
அவருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic

கட்டுரை தொடர்கிறது...

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

குர்-ஆன் இதை உரிமைபாராட்டுகிறது:

குர்-ஆன் 15:9 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

இஸ்லாமிய உரை எழுதுபவர்களில்(Commentators) ஒருவராகிய இபின் கதிர் என்பவரின் (Ibn Kathir) கருத்துப்படி, இந்த " நினைவூட்டும் வேதம் " என்பது குர்-ஆனை குறிக்கும். ஏனென்றால், இதே அதிகாரத்தில் சில வசனங்களுக்கு முன்பு நாம் படிக்கிறோம்:

குர்-ஆன் 15:6

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமியர்கள் கருத்துப்படி, "(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே!" என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படுபவர் "முகமது " ஆவார், எனவே, "நினைவூட்டும் வேதம்" என்று இங்கு குறிப்பிடுவது நிச்சயமாக "குர்-ஆனைத் தான்" என்று சொல்கிறார்கள். "குர்-ஆனை யாராலும் மாற்றமுடியாது " என்பது அல்லாவின் உறுதிமொழியாகும், எனவே இன்றளவும் குர்-ஆன் சரியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கின்றனர்.

இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சில கிறிஸ்தவர்கள் (Christian Apologists) "நினைவூட்டும் வேதம்" என்பது அல்லாவின் எல்லா வசனங்களையும், மற்றும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட வசனங்களையும் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாதாரணமாக கிறிஸ்தவர்களின் இந்த வாதத்தை மறுத்து, அல்லா பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தது குர்-ஆனை மட்டும் தான் என்றுச் சொல்கிறார்கள். யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் எல்லா வசனங்களையும் கருத்தில் கொண்டு கவனித்தால், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இப்போதுள்ள வேதம் இறைவனின் அதிகார பூர்வமான மற்றும் திருத்தப்படாத வேதம் தான் என்று குர்-ஆன் சொல்வதை நிச்சயமாக கவனிக்கலாம். ( இந்த கட்டுரைகளை படிக்கவும் ) . இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் இந்த விவரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இப்படி நம்பிக்கை கொண்டிருப்பதினால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை (Logical Problems) எடுத்துக்காட்டுவதாகும். எனவே, விவாதத்திற்காக வேண்டி, இஸ்லாமியர்கள் நம்பிக்கையின் படியே நான் செல்கிறேன், மற்றும் அவர்களுடைய இந்த நம்பிக்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம்.

குர்-ஆன் மற்றொரு இடத்தில் தன்னிடம் பிழை இல்லை என்று உரிமைபாராட்டுகிறது:

குர்-ஆன் 41:42 , 4:82

குர்-ஆன் 41:42 அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

அதே நேரத்தில், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதென்று வரும் குர்-ஆன் வசனங்களை முஸ்லீமகள் நம்புகின்றனர்.

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)

இப்படி இருந்தும், முஸ்லீம்கள் முந்தைய வேதங்களை நம்பவேண்டுமென்று குர்-ஆன் கட்டளையிடுகிறது:

குர்-ஆன் 2:4, 2:285 & 3:84

குர்-ஆன் 2:4

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

குர்-ஆன் 2:285 (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இந்த முந்தைய வேதங்கள், கீழ்கண்டவைகளை உள்ளடக்கி உள்ளது.

குர்-ஆன் 5:44, 21:105, & 5:46

குர்-ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம் ;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

(தவ்ராத் = ஆதியாகமம் முதல் உபாகமம் வரை, மோசேவிற்கு இறங்கிய வேதம், ஜபூர் = சங்கீதம் & இன்ஜில் = சுவிசேஷங்கள் - தெளிவிற்காக நான் சேர்த்தது)

இது வரையில் நாம் சேகரித்த விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்:

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

2. குர்-ஆனுக்கு முந்தி அல்லா இறக்கிய வேதங்கள்: தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் (ஆதியாகமம்-உபாகமம், சங்கீதம், சுவிசேஷங்கள்) ஆகும். (இந்த புத்தகங்கள் புனித பைபிளில் பெரும் இடத்தை பிடித்துள்ளது)

3. குர்-ஆன் , தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம், அல்லா இறக்கிய வேதங்கள் ஆகும்

4. அல்லாவின் வேதத்தை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது

5. குர்-ஆனுக்கு முந்தி வந்த வேதம் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.

6. முந்தைய வேதமாகிய பைபிளை(தவ்ராத், ஜபூர், இன்ஜில்) அதிகாரபூர்வமாக அல்லா தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.

நாம் இப்போது இந்த லாஜிக்கை(LOGIC) பார்ப்போம்: (We now here to deal with this logic)

A. குர்-ஆன், தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் என்பவைகள் அல்லாவின் வேதங்கள் ஆகும்.

B. இப்போதுள்ள தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் திருத்தப்பட்டது.

C. அல்லாவின் கடைசி வேதமாகிய குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

1st Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) திருத்தப்பட்டது

2nd Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) பாதுகாக்கப்பட்டது.

மேலே கண்ட பொதுவான விவரங்களிலிருந்து, கீழே கொடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நாம் வரலாம்.

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் திருத்தப்பட்டது.

Minor premise: குர்-ஆன் அல்லாவின் வார்த்தையாகும்.

Conclusion: குர்-ஆன் திருத்தப்பட்டு இருக்கலாம்.

அல்லது இப்படியும் இருக்கலாம்,

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் பாதுகாக்கப்பட்டது.

Minor premise: தௌராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் அல்லாவின் வார்த்தைகள்.

Conclusion: தவ்ராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.

முக்கிய பிரச்சனை: பலவீனமான மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை மாற்ற அல்லா அனுமதித்ததால், நாம் கீழ்கண்டவாறு அல்லாவைப் பற்றி கருத வேண்டியுள்ளது:

1. அல்லா ஒரு பலவீனமான இறைவன். அவரால் தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லா அதிக வலிமையை சம்பாதித்துக்கொண்டார், அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்-ஆனை பாதுகாத்து இருக்கிறார்.

2. மக்கள் கள்ளத்தனமான வெளிப்பாடுகளால்(counterfeit revelations) வழிவிலகி சென்றுக்கொண்டு இருந்தபோது, அதைப் பற்றி அல்லா அக்கரைக் கொள்ளவில்லை. தான் அக்கரைகொள்ளாமல் இருந்தும், மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லி, அவர்களுக்கு "நரக நெருப்பு" தப்பாது என்று தண்டனையும் தருகிறார். அல்லா தன் விருப்பத்தின்படியே முந்தைய வேதம் திருத்தப்பட அனுமதித்தார் என்று அந்த மக்கள் உணராமல் இருக்கிறார்கள். இதனால் அல்லா ஒரு அநீதியானவர் என்று தெரிகிறது.

மேற்கண்ட விவரங்களின் வெளிச்சத்தைக்கொண்டு பார்த்தால், அல்லாவின் மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்க தனக்கு சக்தியில்லாமல் சும்மா இருந்த அல்லா, தன் பிந்திய வேதமாகிய குர்-ஆனை மட்டும் பாதுகாத்தார் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி?

அல்லா தன் ஐந்தாவது வேதத்தை அனுப்பவேண்டி வரலாம்? ஒரு வேளை, தன் ஐந்தாவது புத்தகத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டும் இருக்கலாம். அது "பஹாய் மத நம்பிக்கையின்" நிறுவனரான "பஹாயுல்லா"விற்கு வெளிப்பட்ட வேதமாக கூட இருக்கலாம்?

மிகவும் முக்கியமாக, அல்லாவின் வேதத்தில் மாற்றம் இருந்தும், "இறைவனின் வார்த்தையில் மாற்றம் இல்லை" என்ற அல்லாவின் வாதத்தை முஸ்லீம்கள் எப்படி சரி செய்துக்கொள்ளப்போகிறார்கள்? அல்லது ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்?

இஸ்லாமியர்களே, நீங்கள் ஒரு முடிவை எடுக்கவேண்டும், கீழ்காணும் தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும்.

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது: இதை தெரிந்தெடுத்தால், இதன் பொருள், அல்லா பலவீனமானவர் அல்லது அவர் ஒரு அநீதிக்காரர். தன் முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்-ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாவின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

2. முந்தைய வேதங்களைப் போல குர்-ஆனும் திருத்தப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் எப்படி திருத்தப்பட்ட முந்தைய வேதங்களை படிப்பதில்லையோ அதே போல திருத்தப்பட்ட குர்-ஆனையும் படிக்கக்கூடாது. அப்படி திருத்தப்பட்ட குர்-ஆனை படித்தால், முந்தைய வேதங்களையும் படிக்கவேண்டும்.

3. குர்-ஆனும் பாதுகாக்கப் பட்டது, அதே போல முந்தைய வேதங்களும் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் அல்லா அதிகாரபூர்வமாக இறக்கிய முந்தைய வேதத்தை(பைபிளை) கட்டாயமாக படித்தேயாக வேண்டும்.

4. குர்-ஆன் திருத்தப்பட்டது, ஆனால், முந்தைய வேதம் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் குர்-ஆன் படிப்பதை நிறுத்திவிட்டு, பைபிள் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு நொடி நில்லுங்கள், இன்னும் நான் முடிக்கவில்லை.

ஒரு வேளை நீங்கள், மூன்றாவது தெரிவை தெரிந்தெடுத்து இருந்தால், உங்களுக்கு மற்றோரு பிரச்சனை உள்ளது. குர்-ஆன் இந்த முந்தைய வேதங்களோடு பல அடிப்படை கோட்பாடுகளில் முரண்படுகிறது. இதற்கு பொருள் என்னவென்றால், குர்-ஆன் என்பது ஒரு பொய்யான வேதமாகும், அது நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்துயிருக்காது. ஏனென்றால், இறைவன் என்பவன் குழப்பத்திற்கு இறைவன் இல்லை. இறைவன் எப்போதும், தன் முந்தைய வேதத்திற்கு நேர் எதிரான முரண்பாடான வேதத்தை இறக்கமாட்டான்.

இந்த என் தெரிவுகள்(Alternatives) உங்களுக்கு பிடிக்கவில்லையானால், எனக்கு சொல்லுங்கள்:

மேலே சொல்லப்பட்ட என் கருத்துக்களில் மற்றும் முடிவுகளில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நீங்கள் என் வாதத்தின் அடிப்படையை(Premises) ஏற்றுக்கொள்ளவில்லையானால், என் முடிவுகளையும்(Conclusions) தவிர்த்துவிடுங்கள்.

அப்படியானால், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதென்று எனக்கு நிருபியுங்கள்

நீங்கள் அதை நிருபிப்பது "பகுத்தறிவு" முறையில் இருக்கவேண்டும். குர்-ஆனிலிருந்து வசனத்தை காட்டக்கூடாது, அது வெறும் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வாதமே தவிர அது " ஆதாரமல்ல". அல்லது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று நிருபிக்க முற்படாதீர்கள், ஒரு வேளை முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டாலும், அது குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிருபிக்காது. அல்லது குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உள்ளது என்று என்னிடம் சொல்லாதீர்கள், நான் அந்த அற்புதங்கள் பொய் என்று நம்புகின்றேன். மேலே சொல்லப்பட்ட தத்துவ இயல் முறையிலான பிரச்சனையை தீர்க்கும்படி நான் கேட்கிறேன்(I want you to resolve the philosophical problem outlined above).

பகுத்தறிவோடு சிந்தித்துச் சொல்லுங்கள்,, இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகிய "முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட குர்-ஆனும், திருத்தப்பட்ட முந்தைய வேதங்களும்" ஒரே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கை, நீதியான மற்றும் சர்வ வல்லமை படைத்த இறைவனை "இழிவுபடுத்துவது ஆகாது என்று நிருபியுங்கள்?".

(Show me logically and rationally how the Muslim assertion of a perfectly preserved Quran together with an alleged corruption of God's earlier Revelations is not an insult to God's perfect justice and great power.)

கட்டுரை முற்றிற்று

ஆசிரியருடைய மெயில் விலாசம் : Khaled
ஆசிரியருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles
ஆசிரியருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic

பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை (இஸ்லாம்)

அன்பு இஸ்லாமிய மற்றும் இதர நண்பர்களுக்கு,

இது தான் இஸ்லாம் தளத்திற்கு வந்த "Comment ற்கு" பதில் :


1,கஜினி said... அன்புடையோர் அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் இணையத்தில் வெளிவந்த "கிறிஸ்த்துவம் கேள்வி பதில்" பகுதியில் கேள்வி கேட்ட அனைத்து E-mail முகவரிகல் போலியானவை என்றும் தாங்களே இது போன்ற கேள்விகளை சுயமாக தயாரித்து வெளியிட்டதாக http://www.tamilchristians.com/ கூருகிறது. தங்களின் விளக்கம் தேவை.

July 17, 2007 9:50 PM


2,அறிஞன் said...
அவர்கள் அவசரமாக அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். நடந்தது வேறு. சம்பந்தப்பட்ட இணையத்தின் நிர்வாக ஒப்புதலைக் கேட்டிருந்தோம் அவர்கள் பின் வாங்கியுள்ளார்கள்.

நமக்கு மறுப்பளிக்கும் பிற வலைப்பூக்களை நாம் சுட்டிக்காட்டாமல் அவர்களின் இணையத்தை மட்டும் சுட்டிக் காட்டியதற்கு காரணம் அந்த இணையத்தில் மட்டும் தான் பின்னூடல்கள் வருகின்றன. நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பிறரும் வலியுறுத்தலாம்.


போலி IDகளை நாம் உருவாக்கவில்லை என்பதும் அவர்களின் அவசரத்தின் நிலையையும் தனிபதிவில் விளக்குவோம்


July 18, 2007 11:33 AM


3,இயேசு கிறிஸ்த்து said...
அன்பு நண்பர் அறிஞன் அவர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும். முதலில் உங்களுக்கு மறுப்பை வெளியிட்டது http://isakoran.blogspot.com/2007/07/blog-post_16.htmlஇந்த இணையமே.பின்புதான் கிறிஸ்தவர் இணையத்தில் பதியப்பட்டு உள்ளது.வலைபூக்களில் நீங்கள் ஒரு கட்டுரை வெளியிடும் போது அதற்கு பதில் தெரிந்த யாராக இருந்தாலும் பதில் அளிப்பார்கள்.அளித்த பதில் சரியா அல்லது தவறா என்பதை விளக்க முயற்சி செய்யுங்கள்.அதை விடுத்து இணையங்களுக்குள் விவாத அழைப்பை விட்டு பின் வாங்கியுள்ளார்கள் போன்ற உதார் எல்லாம் விடாதீர்கள்.உங்களிடம் இருந்து வந்த கட்டுரைக்கு பதில் எழுதிய இணையம் வேறு,அவைகள் பதியப் பட்டுள்ள இணையங்கள் வேறு.உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் வீண் விவாதமெல்லாம் விட்டு விட்டு பதில்களை தாருங்கள்.இன்ஸா அல்லா.வரும் நாட்களில் உண்மையை உங்களிடம் எதிர் பார்க்கும் ஜாமா

July 18, 2007 11:57 PM


4,Asalam said... மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கு இது வருமேயானால், யோசிக்க வேண்டிய கட்டாய நிலைமையில் இருப்பார்கள் நமது கிருத்துவ சகோதரர்கள். ஆமீன்


திரு அறிஞன் அவர்களுக்கு என் (http://isakoran.blogspot.com) பதில்:


 • இது தான் இஸ்லாம் தளத்தில் "பொய்யான ஐடிக்கள் வெளியிடப்பட்ட நாள்" Thursday, July 12, 2007 கிறிஸ்த்துவம் கேள்வி பதில்
 • நான் ஐடிக்களை உருவாக்கி, பதில் தந்த நாள் : Friday, July 13, 2007
  Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்
 • இது தான் இஸ்லாம் "தள அனுமதி கேட்டு" இருந்த நாள்: Sunday, July 15, 2007
  தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
 • அனுமதி தரப்படமாட்டாது என்றும், தேவையானால் பதில் தரவும், இல்லையானால் விட்டுவிடவும் என்றுச் சொல்லி, பதில் கொடுத்த நாள் : Monday, July 16, 2007
  இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.
எந்த தளமும் பொறுப்பேற்காது, உங்களுக்கு விருப்பம் இருந்தால், பதில் தரவும் இல்லையானால் விட்டுவிடவும் என்று சொல்லி இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. இதுவரையில் பதில் இல்லை.

உண்மையில் உங்களிடம் பதில் இருந்தால்( பொய்யான ஐடிக்கள் பற்றி) உடனே அதை சொல்லவேண்டியது தானே,

ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் செய்கிறீர்கள்?

மடியில் கனம் இல்லையானால் ஏன் வழியில் பயம் ?

நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளம் பொறுப்பேற்காது என்று, பின் ஏன் இன்னும் கால தாமதம் செய்கிறீர்கள்?

நான் சொன்னது பொய் என்றால், சொல்லவேண்டியது தானே "இது தான் உண்மை, அந்த கிறிஸ்தவன் பொய்சொன்னான் என்று" ?

நீங்கள் பதில் தரவில்லையானாலும், நான் நீங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

யோவான் 14:16ல் சொல்லப்பட்டது ஆவியானவரா அல்லது முகமதுவா? என்ற கேள்விக்கு என் பதிலையும் நான் தந்துவிட்டேன். http://isakoran.blogspot.com/2007/07/1416.html
இன்னும் சில கேள்விகளுக்கு பதிலையும் கூடிய சீக்கிரத்தில் தருவேன்.
மறுபடியும் சொல்கிறேன், நடந்ததை சொன்னேன், ஆனால், உங்களிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களிடம் பதில் இருந்தால் பதில் தாருங்கள் இல்லையானால் விட்டுவிடுங்கள்.

மற்ற சகோதரர்களுக்கு, உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த நான்கு மெயில் ஐடிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், மற்றும் என் தளத்தில், காமன்ட் எழுதுங்கள். நான் நீங்கள் என்ன செய்தியை அனுப்பினீர்களோ அதை இதே தளத்தில் உங்கள் காமன்டிற்கு கீழே பதிவு செய்கிறேன்.

இனிமேல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது...


தளத்தை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.......

வியாழன், 19 ஜூலை, 2007

யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா - (இஸ்லாம்) ?

யோவான் 14:16ல் சொல்லப்பட்டது ஆவியானவரா அல்லது முகமதுவா?
முகமது மற்றும் யோவான் 14:16

முன்னுரை:

எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் "முகமதுவை" புதியஏற்பாட்டில் (பைபிளில்) கண்டுபிடிக்க நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம், இயேசு தன்னுடைய சீடர்களுக்கு "வேறொரு தேற்றரவாளன்" வருவார் என்றுச் சொன்ன வசனத்தை குறிப்பிடுவார்கள்(யோவான் 14:16).

இயேசு "முகமது" வருவார் என்றுச் சொன்னதாக குர்-ஆனில் ஒரு வசனம் வருகிறது.

குர்-ஆன் 61:6

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ' அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.

கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள்:

இயேசு சொன்ன "தேற்றரவாளன்" முகமது தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். "அஹமத்" என்பதின் பொருள் "புகழ்ச்சிக்குறியவர்" (The Praised One) என்பதாகும். இந்த பொருள் கொண்ட கிரேக்க வார்த்தை "Periklytos" என்பதாகும். கிரேக்க மொழி புதிய ஏற்பாட்டின் மூலமொழியாகும்.

ஆனால் பைபிளில் இயேசு சொன்னது "அஹமத்" Periklytos இல்லை, மாறாக "தேற்றரவாளன்" Parakletos என்பதாகும். ( "Periklytos" இல்லை, Parakletos ஆகும்.)

யோவான் 14:16

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை (Parakletos) அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

"Periklytos" என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் "Parakletos" என்ற வார்த்தையை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். ஆனால் அவர்களால் இதற்கு ஒரு ஆதாரத்தையும் காட்டமுடியாது.

1. நம்மிடம் இப்போது இஸ்லாமிற்கு முன்பு அழுதப்பட்ட பைபிளின் பல ஆயிர பிரதிகள் உள்ளன. அவற்றில் எந்த ஒரு பிரதியிலும் "Periklytos" என்ற வார்த்தை வருவதில்லை.

2. அப்படி யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் மாற்றியிருந்தால், மக்கா அல்லது மதினாவில் உள்ளவர்கள் மட்டுமே மாற்றியிருக்கமுடியும் ( இவர்களுக்கு மட்டும் தான் முகமது பற்றித் தெரியும்). அப்படியானால் இவர்களுடைய பிரதிகள் எங்கே? இந்த வார்த்தையுள்ள ஒரு பிரதியாவது (7ம் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்ட)காட்டமுடியுமா? (மாற்றத்திற்கு முன்பு, மாற்றத்திற்கு பின்பு உள்ள பிரதிகள்)

3. முகமது மட்டும் தான் படிப்பறிவு இல்லாதவர், மற்ற சஹாபாக்களில் சிலபேர் படித்தவர்களாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் இருந்தாலும், யூதர்களிடம் உள்ள பிரதிகளை தேடி கண்டுபிடித்து அதை படிப்பவர்களிடம் காட்டி, முகமதுவோ அல்லது சஹாபாக்களோ குர்-ஆன் 61:6 வசனத்தை நிருபித்துயிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை, காரணம் குர்-ஆன் 61:6 ல் சொல்லப்பட்டது போல இயேசு சொல்லவில்லை என்பது தான்.

சில புத்திசாலி முஸ்லீம்கள்:

சில புத்திசாலி முஸ்லீம்கள் Perakletos என்ற வார்த்தை தான் சரியான வார்த்தை என்று ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால், "தேற்றரவாளன்" என்று இயேசு சொன்னது, முகமதுவைப்பற்றித் தான் என்றுச் சொல்கிறார்கள். அப்படியானால், "தேற்றரவாளன்" என்பது "முகமது" தானா என்பதை நாம் இங்கே காண்போம்.

"தேற்றரவாளன்" பற்றி வரும் பைபிளின் வசனங்களைப் பார்ப்போம்.

யோவான் 14:16,17

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.


யோவான் 14:26

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.யோவான் 15:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.யோவான் 16:7

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

இந்த எல்லா வசனங்களும் யோவான் சுவிசேஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த எல்லா வசனங்களும் இயேசு தம்முடைய சீடர்களுக்குச் சொன்னது. இவைகளை நாம் பார்க்கும் போது இயேசு சொன்ன "தேற்றரவாளன்" முகமது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும்.

1. இயேசு சொன்ன எல்லா வசனங்களையும் பார்த்தால், ஒரு உண்மை புரியும், இதில் அவர் ஒரு மனிதனைப் பற்றிச் சொல்லவில்லை, மாறாக ஒரு "ஆவி அல்லது ஆத்துமா" அல்லது "ரூஹுல் குதுஸி" வைப்பற்றிப் பேசுகிறார். முகமது மனிதனாவார், ஒரு ஆத்துமா இல்லை.

2. யோவான் 14:16 வசனத்தின் படி, "என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கும்" என்று இயேசு சொல்கிறார். ஆனால் முகமது கி.பி. 632ல் மரித்தார், அவருடைய கல்லரையும் மதினாவில் உள்ளது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவோடு இருந்ததுபோல (குர்-ஆன் 2:87, 2:253 "ரூஹுல் குதுஸி" என்னும் பரிசுத்த ஆத்மா), ஒவ்வொரு விசுவாசி கூடவும் மரிக்கும் வரைக்கும் இருப்பார்.

3. யோவான் 14:17ன் படி, "அவர் உங்களுடனே வாசம்பண்ணி(வாழ்ந்து) உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்" என்று இயேசு சொல்கிறார். இதன்படி, ரூஹுல் குதுஸியானவர் (பரிசுத்த ஆத்துமாயானவர்) இயேசுவின் சீடர்களோடு:

1) வாழ்ந்து இருக்கிறார் (இயேசுவோடு ரூஹுல் குதுஸி இருப்பதால், சீடர்கள் இயேசுவோடு வாழ்ந்ததால்)
2) சீடர்களுக்குள்ளே இருக்கிறார்
3) சீடர்கள் அவரை அறிந்தும் இருக்கிறார்கள்

இப்படியிருக்க 500 ஆண்டுகளுக்குபின் வந்த முகமது எப்படி சீடர்களோடு வாழ்ந்துயிருக்கமுடியும்.

4.தான் சென்றபிறகு தேற்றரவாளன் வருவார், அதற்காக காத்துயிருங்கள் என்று சீடர்களுக்கு இயேசு கட்டளையிடுகிறார் (அப்போஸ்தலர் 1:4,5), அவர் சொன்னதுபோலவே 10 நாட்களுக்கு பின்பு "பரிசுத்த ஆவியானவர்" சீடர்களிடத்தில் இறங்குகிறார் (அப்போஸ்தலர் 2:1-4). இந்த நிகழ்ச்சி முகமதுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது. முகமது வந்தபிறகு அல்ல. தேற்றரவாளனுக்காக சீடர்கள் 500 ஆண்டுகள் காத்துயிருக்கவில்லை. இப்படியிருக்க "தேற்றரவாளன்" என்பது முகமதுவிற்கு எப்படி பொருந்தும். சிந்தியுங்கள்.


அப்போஸ்தலர் 1:4,5 மற்றும் 2:1-4

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

கடைசியாக "தேற்றரவாளன்" என்பவர் "முகமது" அல்ல என்பதும், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இஸ்லாமியர்களால் காட்டமுடியாது என்பதும் நாம் புரிந்துக்கொள்ளலாம்.


சிந்திக்க சில கேள்விகள்:


1) பைபிளை திருத்தி எழுதிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் இஸ்லாமியர்கள், ஏன் குர்-ஆனை, முகமதுவை தீர்க்கதரிசி (நபி) என்று நிருபிக்க பைபிளை (மாற்றப்பட்டதாகச் சொல்லும் புத்தகத்தை) ஆதாரமாக காட்டுகிறார்கள்?

2) முகமது காலத்தில்கூட யூதர்கள் மேசியா( இயேசு) இன்னும் வரவில்லை என்று நம்பி, அவருக்காக எதிர்பார்த்தார்கள். கிறிஸ்தவர்கள் இன்னும் ஒரு தீர்க்கதரிசிக்காக காத்துயிருந்தால், ஏன் அவர்கள் முகமதுவை தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு பதிலாக ஏன் அவர்கள் தங்கள் வேதங்களை மாற்றி எழுதவேண்டும்?


1

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Mohammad/Mohandjohn1416.htm

David

email : isa.koran@gmail.com

திங்கள், 16 ஜூலை, 2007

இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.

அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு,

நான் (உமர்) தமிழ் கிறிஸ்டியன்ஸ் என்ற தளத்தில் ஒரு உறுப்பினன். மற்றும் என் கட்டுரைகள் முதலாவது இடம் பெற்றது என் தளமாகிய www.geocities.com/isa_koran என்ற தளத்தில் தான்.

தமிழ் கிறிஸ்டியன்ஸ் (www.tamilchristians.com) என்ற தளம் உள்ளதை தெரிந்துக்கொண்ட உடன், உறுப்பினனாகி என் கட்டுரைகளை அங்கும் வைத்தேன். நான் எழுதும் கட்டுரைகளுக்கு, மறுப்புக்களுக்கு அத்தள நிர்வாகத்திடம் நான் கேட்க மாட்டேன். அந்த தளம் கிறிஸ்தவர்களுடைய கருத்துக்களை பரிமாரிக்கொள்ள வைத்துள்ளார்கள்.

நான் என் முதல் "இயேசு வரலாறு -1 மறுப்புக் கட்டுரையை" உங்கள் (iduthaanislam.blogspot.com) தளத்தில் Comment டாக பதித்தேன், அதை பிரசுரிக்கவில்லை. எனவே தான் நான் ஒரு புதிய தளத்தை உருவாக்கவேண்டி வந்தது ( http://isakoran.blogspot.com).

கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான்:

1. எனக்கும் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திற்கும் எந்த நிர்வாக சம்மந்தமுமில்லை. நான் ஒரு உறுப்பினன் மட்டும் தான்.

2. என் பிரதானமான தளம் : www.geocities.com/isa_koran மற்றும் http://isakoran.blogspot.com

3. உங்களுக்கு விருப்பமானால் என் "மறுப்பு கட்டுரைகளுக்கு" மறுப்பை எழுதுங்கள், அல்லது விட்டுவிடுங்கள். அது உங்கள் விருப்பம். நீங்கள் பதில் தரவேண்டுமானால், "ஒரு நிர்வாகம் தன் ஒப்புதலை தரவேண்டும்" என்று நீங்கள் நினைத்தால், அது முடியாது.

4. என் கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவித்தால், தெரிவியுங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள். உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் எண்ணும் போது, நானும் என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

5. ஒரு தளம் பொறுப்பேற்றால் தான் பதில் தருவேன் என்றால், அது உங்கள் விருப்பம். நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை.

இது தான் இஸ்லாமின் கேள்வி:

தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
எது சத்தியம்? -1 (தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில்)
G.N
அன்பானவர்களே... இறைவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்து இறைவனுக்கு பிரியமானவர்களாக மரிப்பதே மேல். இறைவனின் வார்த்தையை விசுவாசித்து அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பதன் வழியாகவே நாம் இறைவனுக்கு உவப்பானவர்களாவோம்.
இறை விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு மத்தியில் பல மாறுபாடுகள் நிலவுகின்றன. பிறவற்றை விட்டு விட்டு இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத்திற்கு மத்தியில் உள்ள பிரச்சனைகளை அலசும் முகமாக இந்த விவாதம் துவங்கியுள்ளது.
நானொரு முஸ்லிம். குர்ஆனை இறைவேதம் என்று நம்புபவன். வெறும் நம்பிக்கையுடன் நின்றுவிடாமல் அதன் வார்த்தைகளை முடிந்தவரை - என் அறிவுக்கு எட்டியவரை - விளங்கி வருபவன்.
முஹம்மத் மக்காவில் பிறந்தவர். தன்னை இறைத்தூதர் என்று அவர் சொன்ன பொழுதுகளில் அவர் பிறந்த பூமி சிலைவணக்கங்களாலும் - தீய செயல்களாலும் நிறைந்திருந்தன. அந்தப் பொழுதுகளில் திருக்குர்ஆன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் அவர்களைப் பற்றியும் அதேக் கொள்கையை சரிகண்டுக் கொண்டிருந்தவர்கள் - இருப்பவர்கள் பற்றியும், அவர்கள் எவ்வளவு தவறான வழியை தெரிவு செய்து தன்னை இறை நிராகரிப்பின் பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அதிலிருந்து சிந்தித்து மீண்டு வரும் வழிகளையும் முன்வைத்தது.
இறைவனால் இறைத்தூதராக ஆக்கப்பட்டு தன் பணியைத்துவங்கிய முஹம்மத் அவர்கள் பிறகு மதினா செல்கிறார்கள். அங்கு வாழ்ந்த பிற சமூகங்களை சந்திக்கின்றார்கள். அந்த சமுதாய மக்கள் விசுவாசத்தால் முந்தியவர்கள் என்று தங்களைக் கூறிகொண்டிருந்தவர்கள். அவர்கள் யூதர்களும் - கிறிஸ்த்தவர்களுமாவர்.
அநத சமூகங்களுக்கு வந்த இறைத்தூதர்களைப் பற்றியும் அவர்களின் பணிப்பற்றியும் குர்ஆன் பேசத்துவங்கியதும், அந்த சமுகங்கள் செய்த தவறுகளையும் குர்ஆன் சுட்டிக்காட்டத்துவங்கியது. அதில் முக்கிய இடம் பிடிப்பதுதான் இறைத்தூதராக வந்த இயேசு இறைமகனாக மாற்றப்பட்ட விபரம்.
முந்தைய வேதங்களை - மோசேவுக்கு அவருக்கு முன் வந்தவர்களுக்கு, இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களை நம்பவேண்டும் என்று கட்டளையிடும் குர்ஆன் அந்த வேதங்களின் நிலை என்னவாகியது என்பதையும் சுட்டிக் காட்டத்தவறவில்லை. வேதங்களை இறக்கியவனின் ஒப்புதல் இல்லாமல் அவன் வார்த்தைகள் பிறரால் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத ஒரு வேதத்தை இயேசுவை அனுப்பிய அதே இறைவன் முஹம்மதுக்கு இறக்கி வைத்தான்.
பிற வேதங்களை நம்ப சொல்லும் அதே வேளை அந்த வேதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்ற குர்ஆனின் வாதம் தான் பிறர் வேதமாக நம்பிக்கொண்டிருக்கும் பைபிளை ஆய்வு செய்யும் நிலையை இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்படுத்தியது. உலகலாவிய அளவில் இது ஒரு பணியாகவே நடந்துக் கொண்டிருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த பணி மிக மிக மிகக் குறைவாகும்.
என் போன்றவர்களை பைபிளைப் படித்து அதன் நிலையை உணர செய்ய தூண்டுகோலாக அமைந்தவர் சென்னையை சேர்ந்த மெய்வழிப் பத்திரிக்கை ஆசிரியர் ஜெபமணியாவார்.
இவர் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுத துவங்கியது இஸ்லாமிய அறிஞர்களை விழிப்படைய செய்தது. அவர்கள் பைபிளை அலசத்துவங்கினார்கள். எழுதத்துவங்கினார்கள். நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டார்கள். கிறிஸ்த்தவர்கள் சார்பாக அதே ஜெபமணி கலந்துக் கொண்டார். இஸ்லாத்திற்காக விவாத அழைப்பு விட்ட அறிஞர் பிஜே கலந்துக் கொண்டார்.
மதுரையில் சில நாட்கள் அந்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்புப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. (அந்த விவாத சீடிகளை கிறிஸ்த்தவர்கள் மிக அவசியமாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். விவாதம் செய்ய ஜெபமணி தகுதியானவர் அல்ல என்று உங்களில் பலர் கருதலாம். ஜெபமணிக்காக இல்லாவிட்டாலும் இஸ்லாத்தின் தரப்பில் பைபிள் குறித்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் உஙகள் சிந்தனைக்கு பெரும் சவாலாக அமையும்.
அதன் தொடர்ச்சியாகவே இயேசு பற்றி பைபிள் நிலவரங்களை கூடுதலாக கவனம் செலுத்தத் துவங்கினோம். காழ்ப்புணர்ச்சிகளுக்கோ வெறுப்புணர்ச்சிகளுக்கோ இடமளிக்காமல் ஒரு சராசரி மனநிலையோடுதான் அன்றிலிருந்து இன்றுவரை நமது பைபிள் குறித்த சிந்தனை நீடிக்கின்றது.
பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சிந்தனைக்கு நாம் முரட்டுத்தனமாக வரவில்லை. பைபிளை ஊன்றிப்படித்த பிறகே அந்த சிந்தனைக்கு வந்தோம். அதனால் தான் இயேசு குறித்த நிலவரங்களை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன" என்ற வரலாற்றுத் தொடரை துவங்கினோம். அது குறித்து கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிலர் விவாதத்திற்காக நம்மோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த விவாதம் ஒரு முடிவை நோக்கி நம்மை இட்டு செல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேதங்களை இன்னும் ஆழமாக அணுகி அலசி பார்க்க ஒரு வாய்ப்பாக அமையட்டும்.
இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு மறுப்பு பல இணையங்களில் வந்தாலும் (ஒரே மறுப்பு பல இணையங்களில் பிரசுரிக்கப்படுகின்றது) நாம் 'தமிழ் கிறிஸ்டியன்" இணையத்தை நம்மோடான நேரடி விவாதக்களமாக எடுத்துக் கொள்வோம். இதற்கு அவர்கள் உடன்பட்டு தங்கள் ஒப்புதலை அளிக்கட்டும்.
ஒப்புதல் கேட்பதற்கு கூட காரணம் இருக்கின்றது.
உமர் என்றப் பெயரில் எழுதும் சகோதரர் ஜுலை 6ம் தேதி செய்த பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருந்து, நம் இருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கட்டுரைகள் நமக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இஸ்லாமிய சகோதரர்கள் "கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது" என்று தலைப்பு கொடுத்துயிருந்தார்கள்.
இந்த மறுப்புக் கட்டுரைகள், எழுதும் நபருடைய சொந்த கருத்துக்கள் என்றும், இதில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு இந்த
http://www.tamilchristians.com/ தளம் பொருப்பு வகிக்காது என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேற் கொண்டு இத்தளத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
இவரது கருத்துக்களுக்கு இணையத்தளம் பொருப்பு ஏற்காது என்றால் எதை நம்பி எழுதத்துவங்குவது என்பது கேள்வி.
இணையத்தின் நிர்வாகம் பொருப்பேற்கும் கருத்துக்களே இணையத்தில் பதிக்கப்பட வேண்டும். (இதுதான் இஸ்லாம் இதே நிலையில் தான் உள்ளது).நாங்கள் பொருப்பேற்க மாட்டோம் ஆனால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதித்து விட்டுப் போகலாம் என்று ஒரு மன்ற நிர்வாகம் அலட்சியப்படுத்தக் கூடாது.
உமர் என்பவரோ அல்லது பிற சகோதர சகோதரிகளோ யாராக இருந்தாலும் அவர்களின் பதிப்புக்கு மன்றமும் பொருப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.
நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மன்றத்தில் பதியுங்கள். தொடர்வோம்
எங்கள் தொடர்பு அஞ்சல்.
totmpage@gmail.com
(முக்கிய குறிப்பு: இதுதான் இஸ்லாம் இல்லாத மெயில் ஐடிகளை கேள்வி பதிலில் பயன்படுத்தியுள்ளதா... என்பது பற்றிய உங்கள் பதிவுக்கு உங்கள் ஒப்புதலுக்கு பிறகு விளக்கமளிப்போம். தேவன் நாடட்டும்)
உங்களின் அஞ்சல் முகவரியை வெளியிடுங்கள்.


வெள்ளி, 13 ஜூலை, 2007

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

அன்புள்ள மனித இனமே வணக்கம்,

"இது தான் இஸ்லாம்" தளம் இயேசுவின் வரலாறு என்று ஐந்து தொடர் கட்டுரையை எழுதியது. பைபிளைப் பற்றி தவறான தகவல்கள் கொடுத்து இருந்தார்கள். நான் அதற்கு மறுப்பு எழுதினேன்.

இக்கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக "இது தான் இஸ்லாம்" தளம் "கிறித்துவம் கேள்வி பதில்" என்ற தலைப்பில் நான்கு கேள்விகள் அதற்கு இஸ்லாம் முறையில் பதில் கொடுத்து இருந்தார்கள்.

இந்த நான்கு கேள்விகள் வித்தியாசமான ஈ-மெயில் அட்ரஸ் மூலமாக தங்கள் தளத்திற்கு கேள்விகளாக வந்ததாக சொல்லி, அந்த ஈ-மைல் அட்ரஸ் கூட கொடுத்து இருந்தார்கள்.

இதோ அந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்கள் மற்றும் கேள்விகள்: Source : http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_12.html

http://www.tamilmuslim.com/QA/qa35.htm
1. இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?
irvanm(at)reedifmaildotcom

2. நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom

3. முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom

4. கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது?
mmsafi20(att)hotmaildotcom

இந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்களும் ஒரு பொய்யான ஈமெயில் அட்ரஸ்கள்.


இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்?

இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன். இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.


a) irvanm@rediffmail.com
b) kabmabul@yahoo.com
c) rafeeqrauoofa@gmail.com
d) mmsafi20@hotmail.com

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)

இது எப்படி சாத்தியம் ?

உண்மை என்னவென்றால், இப்படி அவர்களுக்கு கேள்விகளும் வரவில்லை, இப்பெயர் கொண்ட மெயில் முகவரிகளும் இல்லை. ஒரு சர்வரில் ஒரே பெயரில் இரண்டு முகவரிகள் இருக்க வாய்ப்பு இல்லை. ( இதைப் பற்றி ஏதாவது புதிய தகவல் இருந்தால் எனக்கு தெரியபடுத்தவும்).


இது தான் இஸ்லாமா ? அல்லது இது தானா இஸ்லாம்:

இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, சிந்தியுங்கள். நேர்மையுள்ளவர்கள், நீதியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், இப்படி செய்யலாமா ?

ஏன் பொய்யானா முகவரியிலிருந்து கேள்விகள் வந்தது என்றுச் சொல்லவேண்டும் ? அவர்களாகவே, இதே கேள்விகளை கொடுத்து பதில் தரலாம் இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது ?

சரி, கொடுத்தது கொடுத்தீர்கள், உங்கள் நண்பர்களது முகவரியையாவது கொடுக்கலாம் இல்லையா?

(at Worst Case :இன்னும் சொன்னால், ஏன் ஒரு மணி நேரம் செலவழித்து இந்த நான்கு முகவரிகளையும் அவர்களே உருவாக்கி இருக்ககூடாது ?)


அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் பிறகு தருகிறேன்.

இது என்ன விளையாட்டு இறைவனுடைய ஊழியம் செய்யும் போது? உங்களுக்கு எங்கள் மறுப்பு கட்டுரைக்கு பதில் தரமுடிந்தால் தாருங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள்?

ஏன் இஸ்லாமின் பெயரை , அல்லாவின் பெயரை மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பெயரை கெடுக்கவேண்டும் ?

நல்ல பெயர் எடுக்க பல வருடங்கள் ஆகலாம், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிடம் பொதும்.

இதை படிக்கும் இஸ்லாமியர்களே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? இவர்களை கேட்கமாட்டீர்களா?

நேர்மை:

நான் எழுதும் கட்டுரைகளில், மறுப்புகளில் பிழை இருக்கலாம், எழுத்து பிழை, வசன எண் பிழை, ஏன் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனத்தை நான் தவறாக புரிந்துக்கொண்டு எழுதிகூட இருக்கலாம். நான் படித்த, பார்த்த சில தளங்களில் சில தவறான கருத்துக்களை நான் சொல்லியிருக்கலாம்.


என் தவறை சுட்டுக்காட்டினால், நான் திருத்திக்கொள்கிறேன், ஒப்புக்கொள்கிறேன், தேவைப் பட்டால் என் வார்த்தைகளை திரும்பபெற்றுக்கொள்கிறேன். இவைகளை என் கட்டுரைகளின் கடைசியில் பதித்து வைக்கிறேன்.

நான் மனிதன், தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, அதை திருத்திக்கோள்வதில் தான் வெற்றி உள்ளது.


"இயேசுவிற்கு அல்லது கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கு நான் ஒரு பொய்யான தகவலை என் மனசாட்சிக்கு தெரிந்தே சொல்வதை காட்டிலும், என் கைகள் தங்கள் வேலையை இழந்தால், அது எனக்கு நலமாக இருக்கும்".

பொய் பித்தலாட்டத்தை இயேசு ஒப்புக்கொள்ள மாட்டார்.

இயேசு 30 வருடங்கள் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களைப் பார்த்து கேட்கும் கேள்வி: என்னில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் ? அவரை நோக்கி ஒரு விரலும் எழும்பவில்லை.

இது தான் இயேசு கிறிஸ்து.

இனி அவர்கள் கட்டுரைகளில் உள்ள நேர்மையை இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்.

(நானோ அல்லது மற்ற கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவரவில்லை, அதற்காக சில கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளை இங்கு சொல்லவேண்டாம். ஆனால், இயேசு நல்லவர், அவரின் வழி சரியானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை)

வாய்மையே வெல்லும், சத்தியமேயே ஜயதே.

சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியும் உங்களை விடுதலையாக்கும் - இயேசு.


David
site : www.geocities.com/isa_koran
email : isa.koran@gmail.com
Blod : http://isakoran.blogspot.com

வியாழன், 12 ஜூலை, 2007

பைபிள் புகழும் இஸ்மவேல் (இது தான் இஸ்லாம்) : மறுப்புக் கட்டுரை

பைபிள் புகழும் இஸ்மவேல்-இது தான் இஸ்லாம்: மறுப்புக் கட்டுரை

இது தான் இஸ்லாம் தள அன்பர்கள் " பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்வைத்தனர். அதற்கான மறுப்பை மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிக்கின்றேன். யார் மனதை புன்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பைபிளில் சொல்லப்பட்டதை முன் வைக்கின்றோம்.

-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------
Quote:
Monday, July 9, 2007

பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்.

பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன்.

இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்.

ஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் (பைபிளில் இஸ்மவேல்) இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் (ஸல்) என்ற இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள். கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது. மதகுருக்கள் அந்த அளவிற்கு அந்த மக்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு வருகின்றார்கள். என்றாலும் வரலாறு இஸ்லாமிய வளர்ச்சியை தன்னுல் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது.


------------------
என் மறுப்பு:
------------------
யேகோவா தேவன் "இஸ்மவேலை" ஆசீர்வதிக்கிறார். அவர் மூலமாக 12 பிரபுக்களை உருவாக்குவேன் என்கிறார். அவனை பெரிய நாடு ஆக்குவேன் என்று ஆசீர்வதிக்கிறார்.

//இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்.//

உண்மையில் இஸ்மவேலின் வரலாற்றைச் சொன்னதே கிறிஸ்தவம் தான். இஸ்மவேலுக்கு எத்தனை பிள்ளைகள், அவர்கள் பெயர் என்ன? அவர் யாரை திருமணம் செய்துக்கொண்டார், எத்தனை வயது இருக்கும் போது மரித்தார், என்று பல விவரங்களை உலகிற்கு பைபிள் தான் சொன்னது.

ஆதியாகமம்: 16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

ஆதியாகமம்: 25: 12. சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு ,13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,14. மிஷ்மா, தூமா, மாசா,15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

// கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது.//

நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்டு வருகிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பைபிள் தெளிவாகச் சொல்கிறது, இயேசுவிற்கு அடுத்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடுத்து வேறு யாரும் வரவேண்டிய அவசியமில்லை என்று, இப்படி இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி முகமதுவை நம்ப முடியும்? சொல்லுங்கள்.

"மெஹ்தி" Mehdi

ஷிய முஸ்லீம்கள் "மெஹ்தி" Mehdi என்ற ஒரு "நபி" அல்லது ஒருவர் வருவார், அவர் வந்து உலகத்தை மாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவரை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவரைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளது என்று விகீபீடியா சொல்கிறது ( http://en.wikipedia.org/wiki/Mahdi ). எனவே, ஒருவர் நபி என்று வந்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை.

வந்தவர் உண்மையாக இறைவன் அனுப்பியவராக இருந்து, மக்கள் அவரை நம்பவில்லையானால், அவர்களுக்கு இறைவன் அதற்கேற்ற கூலி கொடுப்பான் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் விவரமாக எல்லாம் சொன்னதால்( ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை), நாங்கள் நம்புவதில்லை, அவ்வளவு தான்.

ரஷீத் காலிஃபா:

ரஷீத் என்று ஒருவர் கூட ஒரு நபி என்று சொல்லிக்கொண்டு வந்தார் (November 19, 1935 – January 31, 1990) , குர்-ஆனில் உள்ள "Numerical Miracle" என்று சொல்லிக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். தான் மொழி பெயர்த்த குர்-ஆனில் "தன் பெயரை" கூட சேர்த்துக்கொண்டார்.

தன்னிடம் அல்லா பேசுவதாகச் சொன்னார், அவரையும் எத்தனையோ பேர் அங்கீகரித்தனர். தான் சொல்லும் இஸ்லாம் தான் உண்மையானது, இப்போது உள்ளது உண்மையானது இல்லை என்றுச் சொன்னார்.

இவரை ஒரு பெரிய "அல்லாவின் சேவகன்" என்று அஹமத் தீதத் (Ahmad Deedat) என்ற இஸ்லாமிய ஊழியர் கூட புகழ்ந்தார். இவரின் Numerical Miracle பற்றி மிகவும் அதிகமாக அஹமத் தீதத் புகழ்ந்தார்.

படிக்கவும் இங்கே: http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

Quote:
Khalifa was initially well-received throughout the Muslim world upon his mathematical discoveries embedded in the text of the Quran. Prominent Shaykh Ahmed Deedat referred to him as a "great servant" of God in his book based on Khalifa's discoveries "Al-Qur'an: The Ultimate Miracle


1991ல் அவரை கொலை செய்தார்கள். இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இவரை அஹமத் தீதத் புகழ்ந்துள்ளாரே. இவரை நம்பும்படி நான் சொல்லவில்லை, இப்படி பல பேர் வருவார்கள் என்றுச் சொல்கிறேன். ( ஒரு தமிழ் பாட்டு: யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது..)

ரஷீத் அவர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: http://19.org/km/RK/1

கீழ் கண்ட வசனங்களில் அவர் தன்னுடைய பெயரை எழுதிக்கொண்டு குர்-ஆனை மொழி பெயர்த்தார். இவைகள் முகமதுவிற்கு என்று எங்களுக்குத் தெரியும்.


Quote:
Quran 13:30

We have sent you (O Rashad) to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny."

Quran 13:38

We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without GOD's authorization, and in accordance with a specific, predetermined time.

Quran 25:56

We have sent you (Rashad) as a deliverer of good news, as well as a warner.

Quran 34:28

We have sent you (O Rashad ) to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know.

Quran 34:46

Say, "I ask you to do one thing: Devote yourselves to GOD, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution."

Quran 36:3

Most assuredly, you (Rashad ) are one of the messengers.

Quran 42:24

Are they saying, "He (Rashad) has fabricated lies about GOD!"? If GOD willed, He could have sealed your mind, but GOD erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts.

Quran 81:22

Your friend (Rashad) is not crazy.


இப்படி சிலர் இருக்கிறார்கள், இவரை நபி என்று நாங்கள் (ஏன், நீங்கள் கூட) ஏற்றுக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.

-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------

Quote:
பைபிள் கூறியுள்ள இஸ்மவேல் பற்றிய விபரங்களை ஊன்றி கவனித்தால் முஹம்மத் அவர்களின் தத்ரூபம் தெளிவாக புரிந்து விடும். இஸ்மவேல் பற்றி மதகுருக்களி்ன் பயத்தால் பைபிளில் ஏற்பட்ட மாற்றமும் விளங்கும்.


---------------------
என் மறுப்பு:
---------------------
பைபிளில் எங்கு மாற்றினார்கள் ?

என்ன மாற்றினார்கள்?

மாற்றுவதற்கு முன்பு அந்த வசனம் எப்படி இருந்தது?

இப்போது எப்படி உள்ளது?

மாற்றப்படுவதற்கு முன்பு இருந்த பைபிள் பிரதிகள் ஏதாவது இருந்தால் காட்டுங்களேன்?

போன்றவற்றைச் தயவு செய்து சொல்லுங்கள் Please ....

==========
-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------

Quote:
ஆப்ரஹாமின் முதல் மகனான இஸ்மவேலைப் பாராட்டி பைபிளில் பல வசனங்கள் உள்ளன.

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேத் தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

தன் மகன் குறித்து சொல்லப்பட்ட இந்தக் காரியம் அபிராமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

அப்போது தேவன் அபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப் பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்கு சொல்வதெல்லாவறறையும் கேள்.

அடிமைப் பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

அபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தித் தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப் போய் 'பெயர்செபா'வின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பிறகு அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிரே அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே. பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள்.

தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.

அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள். (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)

இந்த பைபிள் வசனங்களை வாசிக்கும் எவரும் இஸ்மவேலின் சிறப்பை அறிந்துக் கொள்ளலாம்.

தேவன் பிள்ளையுடன் இருந்தார் என்ற வசனமும் பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளைக்கு தேவன் நீரூற்றை உருவாக்கிக் கொடுத்ததும் (இந்த நீரூற்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை மக்காவில் ஜம்ஜம் என்ற பெயருடன் வற்றாமல் இருக்கின்றது) இஸ்மவேலின் ஜாதியை பல்கி பெருகசெய்வேன் என்ற தேவனின் வார்த்தைகளும் அரேபிய சமுகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றது.


------------------
என் மறுப்பு:
------------------
இந்த வசனங்கள் பைபிளின் தேவன் ஆகாருக்கும், இஸ்மவேலுக்கும் காட்டும் அன்பு, பரிவு, பாதுகாப்பு போன்றவற்றைக் காட்டுகிறது. இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கிறது. இதில் இறைவனின் சிறப்பு தான் மேலோங்கி நிற்கிறது. தன் படைப்பின் மீது அன்பு காட்டுவது இறைவனின் இயல்பு.

சரி, விசுவாசத்தின் தந்தை என்று கிறிஸ்தவர்கள், யூதர்கள் சொல்லும் "ஆபிரகாமின் மகனுக்கு" நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம். இஸ்மவேல் சிறந்தவர் தான். நாங்களும் அவருக்கு மதிப்புத் தருகிறோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

தேவன் அந்த பிள்ளையோடு இருந்தார் என்று நாங்கள் வாசிக்கிறோமே, தேவனே அவரை ஆசீர்வதித்து இருக்க, நாங்கள் எம்மாத்திரம் சொல்லுங்கள். இஸ்மவேலோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எங்கள் பிரச்சனை அல்லது கருத்து என்னவென்றால், தேவன் செய்த உடன்படிக்கை ஈசாக்கோடு மட்டும் தான் என்பது. அவ்வளவு தான். இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரன் தான், இன்னும் ஆபிரகாமுக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள் தான். ஆனால், தேவன் கொடுத்த உடன்படிக்கை ஈசாக்கோடு என்றுச் சொல்கிறோம். இஸ்மவேலை நாங்கள் அவமதிக்க வில்லை.

பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளையோடு இறைவன் இருந்தார் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

நீங்கள் சொல்லுங்கள், இப்போது நீங்கள் சொன்னது போல, "ஆகாரையும், இஸ்மவேலையும்" பாலை வனத்தில் விட்டு ஆபிரகாம் சென்றாரா? அல்லது
மக்காவரையில் அழைத்துச் சென்று "ஆபிரகாமும் அவர்களோடு" காபாவை புதுப் பித்தாரா?

//நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். //

ஆதியாகமம்: 16: 8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

முதல் முறை சாராள் ஆகாரை கடினமாக நடத்தும் போது, ஆகார் வீட்டை விட்டு ஓடும் போது, அதே தேவன், மறுபடியும் உன் நாச்சியாரிடம் சென்று இரு என்றுச் சொன்னார், ஆனால், இப்போது தேவன் பிள்ளைக்கு பாதுகாப்பு அளித்து, ஆசீர்வதித்து தனியாக ( ஆபிரகாமையும், ஈசாக்கையும்) விட்டு செல்லும் படி சொல்கிறார். இதைத் தான் நங்களும் இன்று நம்புகிறோம். இஸ்மவேல் ஆபிரகாமின் மகன் இல்லை என்றுச் நாங்கள் சொல்லவில்லை. தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கு மூலம் தான் நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார் என்றுச் சொல்கிறோம்.

 
-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------
 
Quote:
இந்த பைபிள் வசனங்களை அப்படியே நம்பினால் இஸ்மவேலின் வழித்தோன்றலாக வந்த முஹம்மத் அவர்களும் சிறப்புப் பெற்றுவிடுவார்களே என்றஞ்சிய பவுலின் கிறிஸ்தவ குருமார்கள் பிற்காலத்தில் பைபிளில் சில வசனங்களை சேர்த்துள்ளனர்.


------------------
என் மறுப்பு:
------------------
சரி, நீங்கள் பைபிள் வசனங்கள் எல்லாவற்றையும் அப்படியே நம்புகின்றீர்களா?

ஆதியாகமம் மோசேயினால் கி.மு. 1450-1410 ல் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது. முகமதுவின் காலம் கி.பி. 570-632. முகமதுவின் காலத்தோடு தோராயமாக பார்த்தால், 2000 வருடங்களாக பைபிள் புழக்கத்தில் இருந்து இருக்கிறது. பல பைபிள் பிரதிகள் எடுத்து இருப்பார்கள். மக்கள் பல பாகங்களுக்கு சென்று இருப்பார்கள்.

நீங்கள் சொல்வது போல, கிறிஸ்தவ குருக்கள் பைபிளை மாற்றி இருந்தால், எதை மாற்றி இருப்பார்கள்?, தங்களிடம் உள்ள, மற்றும் தங்கள் ஊரில் உள்ள பிரதிகளை மாற்றி எழுதமுடியும். மற்ற பிரதிகளை (2000 வருடங்களாக உள்ள) யார் மாற்றியது ? குருக்கள் மாற்றினால், மற்றவர்கள் என்ன சும்மா இருப்பார்களா? ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள்?

மக்காவிற்கு ஆயிர மைல் அப்பால் உள்ள இடங்களில் உள்ள பைபிளை யார் மாற்றுவது. அவர்களுக்குத் தான் முகமது என்பவர் ஒருவர் பற்றி தெரியவே வாய்ப்பு இல்லையே? அவர்கள் ஏன் என்று கேட்க மாட்டார்கள்?

எனவே, மாற்றிவிட்டார்கள் என்று வெறுமனே சொல்லலாம், ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது, நண்பரே.

சரி, முகமதுவிற்கு முன்பு(கி.மு 1450 - கி.பி. 560) உள்ள மாற்றப்படாத ஒரு பைபிளை கொண்டு வாரும், இன்று எங்களிடம் உள்ள பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்? (நான் ஏன் உங்களை கொண்டுவரும்படிச் சொல்கிறேன் என்றால், "மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டியது நீங்கள், எனவே, அதை நிருபிக்கும் பொறுப்பும் உம்முடயது)

கி.மு. 2 அல்லது 3ம் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்ட பைபிள் பிரதிகள் "சவக்கடல் சுருள்கள்" கிடைத்தது. அவைகள் இப்போது நம்மிடம் உள்ள பைபிளுக்கு ஒத்து இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சரி இதை சிந்தியுங்கள், இப்போது ஒரு கிறிஸ்தவ குரு, ஒரு முஸ்லீம் போல மாறி, முஸ்லீம்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்துக்கொண்டு, சில வருஷங்கள் கழித்து, குர்-ஆனில் இயேசுவைப் பற்றி இன்னும் வசங்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான் சேர்க்கப்போகிறேன் என்றுச் சொன்னால், அது நடக்குமா? முஸ்லீம்கள் சும்மா இருப்பார்களா? ஒரு வேளை அவர் மாற்ற நினைத்தாலும், உலக முழுவதும் ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் உள்ள குர்-ஆனில் யார் மாற்றுவது, சாத்தியாமா என்றுப் பாருங்கள். குர்-ஆனை அல்லா பாதுகாப்பதாக சொல்லியுள்ளார் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். (இது ஒரு உதாரணத்திற்காகச் சொன்னது).

-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------

Quote:
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)

இந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும் இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு வழங்குவாரா...

இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.

இல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால் இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள்.


------------------
என் மறுப்பு:
------------------
"துஷ்ட மனுஷன்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள், ஆங்கிலத்தில் அது "Wild Man" என்றும், "Wild Donkey" என்றும் உள்ளது.

Genesis16:12 He will be a wild donkey of a man; his hand will be against everyone and everyone's hand against him, and he will live in hostility toward [a] all his brothers." ( NIV - http://www.biblegateway.com/passage/?search=Genesis%2016:12&version=31)

Genesis 16: 12 And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren. (King James Version : http://www.biblegateway.com/passage/?search=Genesis%2016:12;&version=9; )

இந்த வசனத்தில் சொல்லப்பட்டது, ஒரு மனிதன் வளர்க்கும் தன் கழுதை எப்படி முரட்டாட்டம் பிடிக்குமோ, அப்படி "முரடணாக" இருப்பார் என்று ஒரு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.

அவரை "மனித குல விரோதி" என்று யார் சொன்னது, நீங்கள் தான் சொல்கிறீர்கள்.

பைபிள் வசனத்தை நன்றாக பாருங்கள்:

"அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்"

"இவருடைய கை எல்லாருக்கும் விரோதமாக இருக்கும்" என்றால், இவர் சண்டை பொடுவார் என்று பொருள் கொள்ளலாம், சரி அதை அடுத்து படியுங்கள் " எல்லாருடைய கை இவருக்கு விரோதமாக இருக்கும்", மற்றவர்களும், இவரைச் சுற்றி உள்ளவர்களும் இவரோடு சண்டை போடுவார்கள் என்று பொருள் வருகிறது அல்லவா?

இங்கு சொல்லப்பட்டது இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு போல)என்பதே தவிர, இவர் மட்டும் கொடுமைக்காரர் என்று அல்ல.

இயேசு தன் முக்கியமான சீடனைப் பார்த்து "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்". இவர் தான் பேதுரு, ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் தலைவர், சொல்லப்போனால், "கிறிஸ்தவ மூத்த குரு". இவரை திட்டிய வசனம் கூட பைபிளில் உள்ளது. இஸ்மவேலுக்கு சொன்னதோ, "ஒரு மனிதனுடைய கழுதை போல", ஆனால், பேதுருவிற்கோ " சாத்தானே" என்று இயேசுவே திட்டிவிட்டார். அதற்காக இன்று உள்ள கிறிஸ்தவர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களா? என்ன?

இயேசு, தன் சபை பொறுப்பை இவரிடம் ஒப்படைக்க வில்லையா? இவர் தான் இயேசுவை விட்டு தூரமாக போய்விட்டாரா?


//இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.//

நாங்கள் தான் சொல்கிறோமே, தேவன் ஆசீர்வதித்த மனிதன் இஸ்மவேல், தேவன் பெயர் சூட்டிய மனிதன் "இஸ்மவேல்". அவர் குணம் கொஞ்சம் "கடினமானது" என்று பைபிள் சொல்கிறது அவ்வளவு தான்.


இஸ்மவேலை விடும், ஆபிரகாமைப் பாரும், இவரின் வம்சத்தில் வந்தவர் தானே முகமது கூட (இஸ்லாம் படி, நான் நம்புவது, நம்பாதது அது வேறு விஷயம்), அப்படி இருந்தும், நாங்கள் "முகமதுவை" நபியாக ஏற்றுக்கொள்ள முடியாது.


இயேசுவின் வம்சவரலாறு உமக்கு தெரிந்து இருக்கும், அவர் வந்த வம்சம் எப்படிப் பட்டது. தாவிது, தன் சிப்பாயின் மனைவியோடு விபச்சாரம் செய்தான், தேவன் அவன் குழந்தையை மரிக்கச் செய்தார். சாமுவேல் பல மனைவிகளை கொண்டான், தேவனுக்கு தூரமாகச் சென்றான், பிறகு மனம் திரும்பி வந்தான். இப்படி பலபேர்

எனவே, "வம்சத்தை பார்த்து கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, வந்தவரைப் பார்த்து விசுவாசிக்கிறோம்".
 
-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------
 
Quote:
இஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள் கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம்.

தேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா.... ஈசாக்கையா.....

ஆப்ரஹாம் இஸ்மவேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார் என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின் சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும் நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள்.
ஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.


------------------
என் மறுப்பு:
------------------
நண்பரே, முகமது வந்தது கி.பி. 570-632 ல். புதிய ஏற்பாட்டிலேயே முதல் நூற்றாண்டிலேயே சொல்லப்பட்டுள்ளது " ஆபிரகாம் பலியிட்டது ஈசாக்கை" என்று.

எபிரெயர் 11:17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது. ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
எபிரெயர் 11:18 ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி ,

யாக்கோபு 2:21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது , கிரியைகளினாலேஅல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

இந்த வசனங்கள் எழுதப்பட்டது முதல் நூற்றாண்டில் சகோதரரே, 7ம் அல்லது 8ம் நூற்றாண்டில் இல்லை.
 
 
-----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------
 
Quote:
இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம்.

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )

இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.


------------------
என் மறுப்பு:
------------------
குர்-ஆனில் இந்த வசனத்தில் முதலில் "இஸ்மவேல்" தான் பலியிடப்பட்டது என்று பெயர் வருகிறதா அல்லது அந்தப் பெயரை அடைப்பு குறிக்குள் இடுகிறீர்களா?

குர்-ஆன் குறிப்பிட்டு "இஸ்மவேல்" தான் என்றுச் சொல்வதில்லை, அரபிக் குர்-ஆனில் "இஸ்மவேல்" என்ற வார்த்தை இந்த வசனத்தில் உள்ளதா என்று பாருங்கள்.(எனக்கு அரபி தெரியாது, எனவே, வசனத்தை அரபியில் இருந்தால், சொல்லுங்கள்)

ஹதீஸ்களிலிருந்து இஸ்மவேல் என்று தெரிந்துக்கொண்டு இங்கு "இஸ்மவேல்" என்று மொழி பெயர்த்துள்ளீர்கள்.
ஆனால், "இஸ்மவேல்" என்று இந்த வசனம் சொல்வதில்லை.

37:100
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

குர்-ஆன் 37:100 "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).37:101
فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

37:102
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاء اللَّهُ مِنَ الصَّابِرِينَ

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."

நான் www.tamililquran.com , www.chittarkottai.com/quran/index.php என்ற தளங்களை தேடிவிட்டேன், நீர் சொன்னது போல, அடைப்பு குறிக்குள் "இஸ்மவேல்" பெயர் இல்லையே? வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு இருந்தால் சொல்லவும். இந்த இரண்டு தளங்களிலும் "அம்மகன்" என்று தான் வருகிறது.
 
----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------
 
Quote:

பைபிள் என்ன சொல்கின்றது?

அப்போது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2)

இந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான் என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும் இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.

எப்படி?

நாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர் 'உன் புத்திரன்' 'ஏகசுதன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று பொருள்.

உன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின் உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம் இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார்.

ஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம் என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16)

தனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல் குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார்.

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5)

இந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர் சொல்லி இருந்தால் நிச்சயமாக 'ஏகசுதன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது.

ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?


---------------------
என் மறுப்பு:
---------------------

இஸ்லாமிய நண்பரே,

ஆதியாகமம் 21ம் அதிகாரத்திலேயே, ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் தனியே அனுப்பிவிட்டார், அதுவும் அசீர்வதித்து அனுப்பிவிட்டார், நீர் சொல்வது போல இஸ்மவேலை சிறப்பித்து, அனுப்பிவிட்டார்.

இதை ஆபிரகாமே செய்தார். நீர் கூட இந்த கட்டுரையின் முதலில், பைபிள் சிறப்பித்த இஸ்மவேல் என்றுச் சொல்லி, அந்த வசனங்களை சொல்லியிருந்தீர்.


ஆதியாகமம்: 21:9. பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,10. ஆபிரகாமை நோக்கி, இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.11. தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

ஈசாக்கை பலியிடச் சொன்னது ஆதியாகமம் 22ம் அதிகாரம். இஸ்மவேலை தேவன் ஆசீர்வதிப்பேன், பிரபுக்களை உண்டாக்குவேன் என்றுச் சொல்லிவிட்ட பிறகு நடந்த விவரங்கள்.

எனவே, ஆதியாகமம் 22:2ம் வசனத்தில் சொன்ன "ஏகசுதன்" இஸ்மவேல் இல்லை, "ஈசாக்கு" தான்.

இனி உம் விருப்பம்:

1) பைபிளில் இஸ்மவேலை தேவன் பாலைவனத்தில் பிள்ளையோடு இருந்து, ஆசீர்வதித்தார் என்பதை நம்புவீரோ (ஆதியாகமம் 21ம் அதிகாரம்)

அல்லது,

2) இந்த பலியிட்டது (ஆதியாகமம் 22ம் அதிகாரம்) இஸ்மவேல் என்பதை நம்புவீரோ, இனி எல்லாம் உம் கையில்.

பலியிட்டது "இஸ்மவேல்" என்றுச் சொன்னீர் என்றால், இந்த உம்முடைய கட்டுரையின் "கருவே - பைபிள் புகழும் இஸ்மவேல்" பாதிக்கப்படும் அல்லது பொய்யாகிவிடும். இஸ்மவேலை பைபிள் புகழும் வசனங்கள் நீர் காட்டியது, பாலை வனத்தில் ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் ஆசீர்வதிக்கும் போது சொன்ன வசனம்.
 
----------------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------------
Quote:
இந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க

முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார் ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை சொந்தக்

குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும்.

இதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம்.

ஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அவன் தான்

தகப்பனாவான். இதுதான் உலக நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில் ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால்

கூட நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று தீர்பளிக்கும்.

ஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும். அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது யார். ஆப்ரகாம் அந்தப்

பெண்ணுடன் கூடி அதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை

அல்லவென்று எப்படி கூற முடியும்.

இஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ உலகம்

வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து விடுகின்றது.


------------------
என் மறுப்பு:
------------------


நீங்கள் சொன்னது போல, கிறிஸ்தவ குருக்கள் போல, நான் சொல்ல மாட்டேன். இஸ்மவேல் அபிரகாமின் மகன் தான்.

நாங்கள் ஏற்றுகொள்கிறோம்.


ஆனால், என் வாதம் என்ன ?

தேவன் பலியிடச் சொன்னபோது, இஸ்மவேல் அங்கு வீட்டில் இல்லை, ஆபிரகாமின் வீட்டில் இல்லை, உங்கள் கூற்றுப்படி,

பைபிள் இஸ்மவேலை சிறப்பித்து தனியே அனுப்பிவிட்டது. சிம்பில்.


----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------


 
Quote:
அபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து

தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு மறுமணையாட்டியாக்

கொடுத்தாள். (ஆதியாகமம் 16:3)

சட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில் வந்த பிறகே

ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து இஸ்மவேலை பெற்றெடுக்கிறார்.

கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல

என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர் எப்படி வெளிபடுத்துகிறார் என்று

பாருங்கள்.

ஆப்ரகாமுடைய நுனித்தோல் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் பதிமூன்று

வயதாயிருந்தான். (ஆதியாகமம் 17:23-25)

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என்

குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. (ஆதியாகமம் 21:10-11)

இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள்

சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

நாம் இதில் எடுத்துக் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் அதற்கான விளக்கங்கள் இவற்றை நிதானத்தோடு ஊன்றி படிக்கும் யாவரும்

இஸ்லாத்திற்கான அழைப்பின் வாசல் பைபிளில் இருக்கின்றது என்பதை கண்டுக் கொள்வார்கள்.


------------------
என் மறுப்பு:
------------------


//கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை//

பைபிளில் உள்ள வசனங்களை நான் தருகிறேன்:

கீழே உள்ள வசனங்களைப் பார்த்தால், தேவன் "ஆகாரை" சாராளின் அடிமை அலல்து வேலையாள் என்று அழைக்கிறார். தனக்கு சாராள் நாச்சியார்(முதலாளி) என்றுச் ஆகார் சொல்லுகிறார்.

a) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8
ஆகாரும் தன்னை "ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை" தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.


கர்த்தருடைய தூதனானவர் கூட "ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்" சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.

ஆதியாகமம் 16:7-8 16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,

16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

மற்றொரு இடத்தில் "ஆகாரே" என்று அழைக்கிறார், தேவதூதனானவர்.

ஆதியாகமம்: 21: 12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். 13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

ஆதியாகமம்: 21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்

b) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6

ஆதியாகமம் 16:6
16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள் மேலே சொன்ன வசனங்களில் தேவனும், அபிரகாமும், "அடிமைப் பெண்ணே" என்று தான் அழைக்கிறார்.
 
மற்றொரு இடத்தில் தேவதுதன் "ஆகாரே" என்று அழைக்கிறார்.

இப்படி இருக்க எப்படிச் சொல்கிறீர் நீர், "தேவன் அழைக்கவில்லை என்று"?
 
ஒன்று செய்யலாம் நீர், இந்த வசனங்களை நம்பவேண்டாம். அவ்வளவு தான், பைபிளில் இருக்கும் வசனம் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர் ?

//இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.//


இப்போது பிரச்சனையே, மதகுருக்கள் சொன்னதால் அல்ல, "பைபிள்" சொன்னதால் தான்.

கிறிஸ்தவ குருக்கள் என்ன தங்கள் கையில் "எபிரேய" பைபிளை வைத்துக்கொண்டு "இதில் இப்படி உள்ளது" நம்புங்கள் என்றுச் சொல்கிறார்களா? எங்களிடம் தமிழில், ஆங்கிலத்தில் பைபிள் இல்லையா? அவர்கள் சொல்வதைக்கேட்டு அப்படியே நம்பிவிடுவதற்கு?

----------------------------------------------------------
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது
----------------------------------------------------------
Quote:
எந்த தேவன் மோசேயை அனுப்பினாரோ எந்த தேவன் இயேசுவை அற்புதமான முறையில் தேர்ந்தெடுத்து

அனுப்பினாரோ அதே தேவன் தான் முஹம்மத் அவர்களை இஸ்மவேலின் வம்சாவழியில் பிறக்க செய்து இறைத்தூதராக்கி அவரைப்

பின்பற்ற சொல்லியுள்ளான்.

இயேசுவை ஏற்போம் முஹம்மதை புறக்கணிப்போம் என்று யாராவது முடிவெடுத்தால் அவர் முஹம்மதை புறக்கணிக்கவில்லை. மாறாக

இயேசுவை அனுப்பிய அந்த தேவனைப் புறக்கணிக்கிறார் என்பதே உண்மையாகும். கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்திப்பார்களா...?


------------------
என் மறுப்பு:
------------------

ஒரு விவரத்தை சொல்லட்டுமா, இயேசு தான் "மோசேயை" அனுப்பினார் தெரியுமா உமக்கு?

ஆதியிலே வார்த்தை இருந்தது, அது தேவனிடத்தில் இருந்தது, அது தேவனாயிருந்தது. அந்த வார்த்தை இயேசுக் கிறிஸ்து.


சரி, நாங்கள் கடைசியாக எதை நம்புகிறோம் என்று சொல்லிவிடுகிறேன்:

1. இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன் - ஆமென்.

2. தேவன் இஸ்மவேலை அபரீதமாக ஆசீர்வதித்து வருகிறார், இன்னும் ஆசீர்வதிப்பார். - ஆமென்.

3. கிறிஸ்தவர்கள் இஸ்மவேலை ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்தவர் என்பதை நம்புகின்றனர் - ஆமென்.

4. தேவனுடைய வார்த்தை மாறாதது, அவர் கொடுத்த வாக்குத்தத்தம் "ஈசாக்கு" மூலமாக நிறைவேறியது. - ஆமென்.

5. நாங்கள் இஸ்லாமியர்களை நேசிக்கிறோம், ஜெபிக்கிறோம், அதற்காக முகமதுவை நம்பவேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை பைபிள் படி.


ஜெபம் : எங்கள் அனைவரையும் நேசிக்கின்ற எங்கள் இயேசுவே, நீர் தான் வழி என்பதை எல்லாரும் அறியும் படி மனக்கண்களை திறந்தருளும். நானே வழி என்றுச் சொன்னீரே. உம்முடைய வழியில் நடக்க அருள் புரியும். இயேசுவின் பெயரில் ஜெபிக்கின்றேன்(றோம்) - ஆமென்.
 
 
David