ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 மே, 2022

முஸ்லிம்கள் பவுலடியாரை வெறுப்பதற்கான‌ இரண்டு முக்கியமான காரணங்கள்

(Two Reasons Why Muslims Hate Paul?)

காரணம் #1

கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பல விவாதங்களில், கிறிஸ்தவத்தை நிறுவியவர் பவுலடியார் என்று முஸ்லிம்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது, கடந்த 2000 வருடங்களாக உலகின் மிகப்பெரிய மதத்தை தனியாளாக நின்று பவுலடியார் உருவாக்கினார் என்றுச் சொல்லி, முஸ்லிம்கள் நேரடியாக அவருக்கு பெருமை சேர்த்துக் கொண்டு வருகின்றனர்.

ஆதாமின் காலத்திலிருந்து "அல்லாஹ்வின் மதமாகிய இஸ்லாம்" ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. அல்லாஹ் தனது 25 தீர்க்கதரிசிகளையும், 1,24,000 இறைத் தூதர்களையும் உலகம் முழுவதும் அனுப்பிய பிறகும், அவனது மதத்தினால், பவுலடியாரின் மதத்தை எட்டிப்பிடிக்கமுடியவில்லை என்பது முஸ்லிம்களுக்கு வேதனைக்குரிய விஷயமே.

பவுலடியாரை முஸ்லிம்கள் அதிகமாக வெறுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது! பவுல் என்ற‌ ஒரு மனிதனோடு அல்லாஹ்வின் ஆயிரக்கணக்கான இறைத்தூதர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்கள்.  முஹம்மது பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே பவுலடியார் இறந்துவிட்டாலும், 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவம் உலகின் மிகப்பெரிய மதமாக இருந்து வருகிறது. ஆனால், அல்லாஹ் மற்றும் முஹம்மதுவின் மதம், பவுலடியார் நிறுவிய கிறிஸ்தவத்தை தாண்டி வரமுடியாமல் இன்றுவரை பின்தங்கியுள்ளது. இஸ்லாமியர்கள் பவுலடியார் மீது வெறித்தனமாக கோபம் கொண்டுயிருப்பதில் ஏதாவது ஆச்சரியமுண்டா? இஸ்லாம் பவுலடியாரின் மதத்தை  எண்ணிக்கையில் தாண்டவேண்டுமென்று ஆசைப்படுகிறது.

இவ்விரு மார்க்கங்களுக்கும் உள்ள இந்த 'பந்தயம்' இன்னும் முடிவடையவில்லை என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக, முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மதத்திற்கு உதவுவதற்காக வேகமாக "இனப்பெருக்கம்" செய்யத் தொடங்கினர்.  இதன் மூலம் உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடுவதினால்  "உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் தான்" என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். சராசரி கிறிஸ்தவ குடும்பத்தில் 2 குழந்தைகள் இருக்கும்போது, ஒரு முஸ்லீம் ஆண் 4 மனைவிகளை மணந்துக்கொண்டு, ஒவ்வொரு மனைவியும் 4 அல்லது 5 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி இஸ்லாமை வளர்க்கிறார்கள் முஸ்லிம்கள். இதுவும் அல்லாஹ்விற்கு செய்யும் ஒரு சேவையென்று அவர்கள் கருதுகிறார்கள்.

இப்படியெல்லாம் செய்து கூட, இஸ்லாம் இன்னும் (இன்றுவரை) கிறிஸ்தவத்தை தாண்டமுடியவில்லையே என்று எண்ணும் போது,  பவுலடியார் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள கோபத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துக்கொள்ளலாம் அல்லவா! அப்போஸ்தலர் பவுலடியார் இறந்து 2000 வருடங்கள் ஆகியிருந்தாலும், அல்லாஹ்வையும் அவனது 1,24,000 அல்லாஹ்வின் இறைத்தூதர்களையும் த‌ம் ஒற்றைக் கையால் ஜெயித்துள்ளார். இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அவமானமாக தெரிகிறது.

இது தான் முஸ்லிம்கள் பவுலடியாரை வெறுப்பதற்கான முதல் காரணம் என்பதில் உங்களுக்கு இன்னும் யாருக்காவது சந்தேகம் உண்டா?

காரணம் #2

ஈஸாவுக்கு (இயேசுவிற்கு) அல்லாஹ் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் மாற்ற முடியாது என்று இஸ்லாமும் குர்‍ஆனும் ஆணித்தரமாக கூறினாலும், இன்று முஸ்லிம்கள் "அல்லாஹ்வின் வார்த்தைகளை பவுலடியார் மாற்றிவிட்டார்" என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது தனிமனிதராக பவுலடியார் "அல்லாஹ்வின் வார்த்தைகளை கெடுக்கவும், அழிக்கவும், மாற்றவும்" செய்வதில் வெற்றியடைந்துவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈஸாவுக்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் 30 ஆண்டுகள் கூட வாழவில்லை! ஆனால் பவுலடியார் எழுதிய "(முஸ்லிம்களின் படி) கெட்ட" புத்தகம் இன்றுவரை 2000 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! அதனை உலகின் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாக படித்துக்கொண்டு வருகிறார்கள். முஸ்லிம்கள் பவுலடியாரை வெறுப்பதற்கு காரணம் புரிகின்றதா? 

அழியக்கூடிய ஒரு மனிதனாகிய பவுலடியாரால் இப்பிரபஞ்சத்தின் எல்லையற்ற படைப்பாளனாகிய அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை "சிதைக்கவும், மாற்றவும்" முடிந்தது என்று முஸ்லிம்கள் ஆணித்தரமாக பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனை முஸ்லிம் சமுதாயம் நம்பிக்கொண்டும் இருக்கிறது. பவுலடியாருக்கு போட்டியாக விளையாடியும்,  அல்லாஹ் டக்அவுட் (Duck Out) ஆனார். மட்டுமல்ல, கோடிக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விலைமதிப்பற்ற புத்தகங்களை அழிப்பதற்காக "பவுலடியார் தீட்டிய திட்டங்களுக்கு எதிராக ஒன்றுமே செய்யமுடியாமல், திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளைப்போல திகைத்துக்கொண்டு இருக்கிறார்கள்".

அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற பிரமாண்டமான‌ கப்பலை, பவுலடியார் தம் ஒற்றைக் கையால் கவிழ்த்துப்போடுவதற்கு எவ்வளவு தைரியம் அவருக்கு!

கிறிஸ்தவர்களை பொறுத்தவரை, பவுலடியார் கிறிஸ்துவின் நல்லடியாராக இருந்து, இயேசுவிற்காக கொல்லப்படும் நாள் வரை, ஒரு தாழ்மையுள்ள‌ ஊழியராக நற்செய்தியை பிரசங்கித்துக் கொண்டு இருந்தார்.

ஆனால், முஸ்லிம்களை பொறுத்தவரை, பவுலடியார் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவாக‌ காணப்படுகிறார், இதனால் அவர் அல்லாஹ்விற்கு போட்டியாக பல காரியங்களைச் செய்து, அதில் வெற்றியும் கண்டார்.

பவுலடியார் கி.பி. 65ல் ரோம் நகரில் மரித்ததாக வரலாறு கூறுகின்றது.  ஆனால், ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் இன்றும் அவர் வாழ்ந்துக்கொண்டும், அவர்களை சஞ்சலப்படுத்திக்கொண்டும்  இருப்பதாக முஸ்லிம்கள் தங்கள் வார்த்தைகளின் மூலமாக‌ வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/two-reasons-why-muslims-hate-paul/


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/why-muslims-hate-saint-paul.html


செவ்வாய், 3 மே, 2022

ரமளான் 2022 - உவமை 12: அவர்கள் மூஸாவிற்கும் நபிமார்களுக்கும் செவிகொடாவிட்டால்... இப்ராஹீம் மடியில் லாசருவும், பாதாளத்தில் இக்பாலும்

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
  • உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?
  • உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?
  • உவமை 11: புத்தியுள்ள 5 கன்னிகைகள் உவமையின்படி இயேசு 5 பேரை திருமணம் புரிந்தாரா? தம்பியின் கேள்வி உமரின் பதில்

உமரின் தம்பி சௌதியிலிருந்து அழைத்து, தன் நண்பன் 'இமாம்' முஹம்மத் இக்பால், உமரோடு பேசவேண்டுமென்று விரும்புகிறார் என்று கூறினார், உமரும் ஒப்புக்கொண்டார். சௌதியில் ஒரு மசூதியில் இமாமாக வேலைப் பார்க்கும், முஹம்மது இக்பால் என்பவரோடு இந்த கட்டுரையில் உமர் உரையாடுகிறார். இயேசு கூறிய இன்னொரு முக்கியமான உவமையிலிருந்து இமாம் இக்பால் அவர்கள் பல கேள்விகளை கேட்கிறார், அவைகளுக்கு என்ன பதில் தரப்படுகின்றது என்பதை பார்ப்போம்.

அவர்கள் மூஸாவிற்கும் நபிமார்களுக்கும் செவிகொடாவிட்டால்... 

(உமரும், அவரது தம்பியும், இமாம் முஹம்மத் இக்பாலும் வாட்ஸப் மீடிங்கில் பேசுகிறார்கள்)

தம்பி: ஹலோ, அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னேன் அல்லவா? உங்களோடு பேச இக்பால் அவர்கள் நம்மோடு இணைந்திருக்கிறார்.

உமர்: ஹலோ தம்பி, மற்றும் இமாம் இக்பால் உங்கள் இருவருக்கும் ஸலாம்.

எம். இக்பால்: வ அலைக்கும் ஸலாம், உமர் அண்ணே! எப்படி இருக்கீங்க? உங்கள் வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கவேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

உமர்: கர்த்தரின் கிருபையால் நலமாக இருக்கிறோம். நீங்க எப்படி இருக்கீங்க!

எம். இக்பால்: அல்லாஹ்வின் அருளால் மிகவும் நலமாக இருக்கிறேன்.

உங்களிடம் பேசவேண்டுமென்று ரொம்ப நாட்களாக காத்திருந்தேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ரமளான் மாதத்தில் உங்கள் பிளாக்கை படித்தேன், உங்க தம்பியிடம் நீங்கள் பேசியதும் அவர் என்னிடம் சொன்னார். எனவே, எப்படியாவது பேசிவிடலாம் என்று வந்தேன்.

உமர்: உங்களிடம் பேசுவதில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. சரி சொல்லுங்கள், என்னிடம் என்ன கேள்விகளை கேட்கப்போகிறீர்கள்?

எம். இக்பால்: நீங்கள் இயேசு கூறிய உவமைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இஸ்லாமை விமர்சிப்பதாக எனக்குத் தெரிகிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் தெரிந்துக்கொள்ளலாமா? நம் இரு மார்க்கங்களில் உள்ள ஒற்றுமைகளை எடுத்து பேசாமல், ஏன் வித்தியாசங்களை பேசுகிறீர்கள்?

உமர்: இதில் மறைமுகமான நோக்கம் எதுவுமே இல்லை. உங்களுக்குத் தெரியாததா என்ன? என் தம்பி, கிறிஸ்தவம் என்ற மெய்யான மார்க்கத்தைவிட்டுவிட்டு, இஸ்லாமை தழுவிவிட்டான்.  தொலைந்துவிட்ட ஆட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிக்கவேண்டுமல்லவா?

எம். இக்பால்: பாருங்கள், இன்னும் நாம் பேசவே ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளே மெய்யான மார்க்கம் கிறிஸ்தவம் என்றும், இஸ்லாம் மெய்யான மார்க்கமில்லையென்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இது உங்களுக்கே சரியாக தெரிகின்றதா?

உமர்: நீங்க மட்டும் ஏன் என்னிடம் பேசவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்று நீங்கள் நம்புவதினாலும், என் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவேண்டுமென்பதற்காகவும், மேலும் இஸ்லாமிய தாவா ஊழியத்தை என்னிடம் செய்து, முடிந்த அளவிற்கு என்னையும் முஸ்லிமாக மாற்றத்தானே நீங்களும் விரும்புகிறீர்கள்?

நாம் இருவரும் ஒரே நோக்கத்தையுடையவர்கள் தான்! நேரடியாக விஷயத்துக்கு வாங்க.

எம். இக்பால்: சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசி, பிறகு மையக்கருத்துக்கு வரலாம் என்று நினைத்தேன், நீங்கள் ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க.

சரி, நேரடியாக‌ நானே விஷயத்தை போட்டு உடைக்கிறேன். இன்று இயேசு கூறிய "லாசரு மற்றும் செல்வந்தன்" உவமையை சிறிது பார்ப்போமா?

உமர்:  ஓ... ஆராயலாமே! தம்பி நீயும் இருக்கிறாயா? அல்லது தூங்கிவிட்டாயா? 

தம்பி: இரு கண்களையும், காதுகளையும் திறந்துவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருக்கிறேன், பேசுங்கள்.

எம். இக்பால்: நாம் லூக்கா 16:19-31 வரையுள்ள வசனங்களை படிப்போமா?

உமர்: தாராளமாக படிக்கலாம். நீங்கள் ஏற்கனவே இவ்வசனங்களை படித்துவிட்டு, தயாராக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சரி தானே!

எம். இக்பால்: ஆமாம், நானும் உங்கள் தம்பியும் இதற்கு முன்பாக ஒன்றாக சேர்ந்து படித்தோம்.

உமர்: ஓ.. ஏற்கனவே படித்து தயாராக இருக்கிறீர்களா! அப்படியென்றால் நாம் இப்போது இன்னொரு முறை படிக்கத்தேவையில்லை. நான் அந்த உவமையில் சிறிது மாற்றம் செய்து சொல்கிறேன், அதன் பிறகு நாம் அதைப் பற்றி பேசுவோமா?

தம்பி: வேண்டாம்.. வேண்டாம்... நீங்கள் உவமையில் எதையும் மாற்றாதீர்கள், இக்பால் இதனை ஒப்புக்கொள்ளாதே! என் அண்ணன் வஞ்சிக்கிறவர், அவர் பேச்சை கேட்காதே!....

உமர்: தம்பி, இக்பால் ஒரு இமாம், குர்‍ஆனை நன்கு கற்றுயிருக்கிறார், அவருக்கு பயமில்லை என்று நான் நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் இக்பால்... 

எம். இக்பால்: நான் எதற்கும் பயந்தவனில்லை… நீங்க எப்படி மாற்றிச் சொன்னாலும் சரி, என்னிடம் யாரும் வாலாட்டமுடியாது...

உமர்: தட்ஸ் த ஸ்பிரிட்...

அந்த உவமையில் வரும் செல்வந்தன் என்ற இடத்தில் "இக்பால்" உங்களை கற்பனைச் செய்துக்கொள்வோம், மற்ற விவரங்கள் அப்படியே இருக்கட்டும் சரியா?

எம். இக்பால்: சூப்பர், இது தான் சரியான போட்டி, எனக்கும் இது தான் வேண்டும்..

நான் தான் அந்த செல்வந்தன் என்று நீங்கள் சொன்னதால், அவன் பேசிய கடைசி வரிகளையே என் கேள்விகளாக முன்வைக்கிறேன்.

என் கேள்வி இந்த‌ கடைசி 2 வசனங்களிலிருந்து தான்: லூக்கா 16:30-31

16:30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

16:31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

"லாசரு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்துச் சென்றால், தன் சகோதரர்கள்" நம்புவார்கள் என்று இக்பால் (அதாவது அந்த செல்வந்தன்) கூறினான், ஆனால் அதற்கு இப்ராஹீம் என்ன பதில் கொடுத்தார்?

"மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் தேவையில்லை, அவர்களிடம் இருக்கும் வேதமே அவர்களுக்கு போதுமானது" என்று இப்ராஹீம் கூறுகின்றார்.

ஆக, இரட்சிக்கப்படுவதற்கு மரித்தோரிலிருந்து இயேசு எழுந்திருக்கவேண்டிய அவசியமில்லை, வேதம் மட்டும் இருந்தால் போதும் என்று இப்ராஹீமே சொல்கிறார் என்று புரிகிறதல்லவா? 

விசுவாசத் தந்தை என்று அழைக்கப்படும் இப்ராஹீம் அவர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் கேட்கவேண்டுமா? இல்லையா? 

இதற்கு பதில் சொல்லுங்கள்.

உமர்:அருமையான முயற்சி.

முதலாவதாக, ஆபிரகாம் "இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி இங்கு குறிப்பிடவில்லை" என்பதை இக்பால் நீங்கள் கவனிக்கவேண்டும். 

மேலும், இயேசு தம்முடைய சில உவமைகளில் "தம் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் போன்ற விவரங்களை" குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த உவமையில் யூதர்களின் பொய்யான நம்பிக்கையைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கும்படி இதனைச் சொன்னார்.

1) அக்கால யூதர்கள், "உலகப்பிரகாரமான செழிப்பான வாழ்க்கை ஒரு யூதனுக்கு கிடைத்து விட்டால், அது தேவன் அங்கீகரித்த வாழ்க்கை" என்று நம்பிக்கொண்டு இருந்தார்கள். இது நூறு சதவிகிதம் உண்மையல்ல என்பதைக் காட்டவே இயேசு இந்த உவமையைக் கூறினார். செழிப்போடு கூட 'கருணையும், நன்மை செய்யும் குணமும் தேவை' அப்போது தான் பரலோக ராஜ்ஜியம் செல்லமுடியும் என்பதை எடுத்துக் காட்ட இயேசு இந்த உவமையை கூறினார்.

2) அடுத்ததாக, யூதர்களிடம் இருந்த  தேவைக்கும் அதிகபடியான விசுவாசம் என்னவென்றால் "ஆபிரகாம் எங்கள் பிதா, எனவே, நாங்கள் வழிமாறிப்போக வாய்ப்பு இல்லை, தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிச்சயம் நிறைவேறும், எங்களை யாருமே அசைக்கமுடியாது' என்ற பொய்யான விசுவாசமாகும்.

இந்த இரண்டையும் இயேசு மேற்கண்ட உவமையில் தகர்த்துப்போட்டார்.

இந்த உவமையில் ஐந்து முறை ஆபிரகாமின் பெயர் வருகிறது, அந்த செல்வந்தனும் "தகப்பனாகிய ஆபிரகாமே" என்று இரண்டு முறையும், "தகப்பனே" என்று ஒரு முறையும் அழைக்கிறான் (வசனங்கள்:24,27 & 30), ஆபிரகாமும் அவனைப் பார்த்து "மகனே" என்று அந்த செல்வந்தனை அழைக்கிறார் (வசனம் 25). ஆனால், ஒருமுறையும் கூட லாசரு அந்த செல்வந்தனை பார்த்ததாக குறிப்பு இல்லை (அது தேவையும் இல்லை), மற்றும் லாசரு ஒன்றுமே பேசவில்லை.

செல்வந்தனும் யூதன் தான், லாசருவும் யூதன் தான். இருவரும் ஆபிரகாமுக்கு பிள்ளைகள் தான், யார் பூமியில் வாழும் போது, நன்மை செய்து, மற்றவர்கள் மீது கருணை காட்டுகிறார்களோ, அவர்கள் தான் "ஆபிரகாமோடு உட்காரமுடியும்", பரலோக ராஜ்ஜியம் செல்லமுடியும் என்பதை விளக்க இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

ஆக, இமாம் இக்பால் அவர்களே, இயேசுவின் உயர்த்தெழுதல் பற்றிய கேள்வியே இந்த உவமையில் வரவில்லை, அதைப் பற்றி இயேசு இதனை கூறவில்லை என்பது தான் உண்மை.

எம். இக்பால்: நீங்கள் சொல்வது உண்மையானால், அந்த செல்வந்தன் 30வது வசனத்தில் "தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள்" என்று ஏன் சொன்னான்? ஒரு அற்புதம் நடந்தால், முக்கியமாக மரித்த பிறகு ஒருவன் உயிரோடு எழுந்திருந்து, இப்படியெல்லாம் உரையாடல் நடந்தது  என்றுச் சொன்னால், மக்கள் நம்புவார்கள் அல்லவா?

ஏன் ஒருவன் உயிர்த்தெழுந்து போனாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என்று ஆபிரகாம் கூறினார்?

உமர்: "அற்புதங்கள், அடையாளங்கள்" தற்காலிகமான அத்தாட்சிகள் ஆகும், அவைகள் நீண்ட கால அத்தாட்சிகள் அல்ல.

எம். இக்பால்: புரியவில்லை, சிறிது விவரமாக விளக்குங்கள்.

உமர்: இதோ சொல்கிறேன். "அற்புதங்கள் தற்காலிகமானவைகள்" ஏனென்றால், அவைகளை கண்களால் கண்டு நம்புகிற சந்ததிக்கு (மக்களுக்கு) மட்டுமே அவைகள் அற்புதங்களாகத் தோன்றும், அவர்கள் அதனை நம்புவார்கள், ஆனால், அடுத்தடுத்த சந்ததி வரும் போது, தங்கள் தகப்பன் அல்லது பெரியவர்கள் சொன்ன விவரங்களை "அற்புதங்களாக ஏற்க மறுப்பார்கள்". இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகிவிட்டால், மக்கள் நடந்துமுடிந்த அற்புதங்களால் கவரப்படுவது அசாத்தியமே! அவர்களுக்கு அந்த நேரத்தில், அற்புதங்களை விட "உண்மையும், யதார்த்தமும், நடைமுறை சாத்தியங்களும் மற்றும் சிறந்த கோட்பாடுகளும் தான் நம்பிக்கையைத் தரும்".

இதனால் தான் ஆபிரகாம் சொன்னார் "அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான்".

எம். இக்பால்: இன்னும் தெளிவாக எனக்கு புரியவில்லை, புரிவது போல இருக்கிறது, ஆனால் தெளிவாக புரியவில்லை.

உமர்: ஒன்றும் பிரச்சனையில்லை, ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

இந்த உவமையின் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்காக, அந்த செல்வந்தன், அதாவது "இக்பால் அவர்கள்" சொன்ன ஆலோசனையைக் கேட்டு, ஆபிரகாம் "அந்த லாசருவை இறைவனின் உதவியோடு மறுபடியும் உயிர்பெறச் செய்து, அனுப்பியிருந்தால், என்ன நடந்திருக்கும்" என்று பார்ப்போம்.

எம். இக்பால்: இந்த எடுத்துக்காட்டு நன்றாக இருக்கும், சொல்லுங்கள்.

உமர்: கற்பனை செய்துக்கொள்ளுங்கள், லாசரு மரித்துவிட்டார், அவரை ஒரு கல்லறையில் அடக்கம் செய்துவிட்டார்கள். சில வாரங்கள் அல்லது மாதங்கள் கடந்து அந்த செல்வந்தனும் மரித்துவிட்டான், அவனையும் அடக்கம் செய்துவிட்டார்கள்.

ஒரு பேச்சுக்காக, இவ்விருவருடைய குகை கல்லறையும், அக்கம் பக்கம் இருப்பதாக கருதிக்கொள்வோம். 

செல்வந்தனை கல்லறையில் வைத்துவிட்டு, அவருடைய ஐந்து சகோதரர்களும் அவர்களது குடும்பம் மற்றும் மக்கள் அனைவரும் அங்கேயே நின்று ஒரு மணி நேரமாக அழுதுக்கொண்டும், அஞ்சலி செலித்திக்கொண்டும் இருக்கும் போது, திடீரென்று பக்கத்தில் இருக்கும் "லாசருவின் கல்லறையிலிருந்து அவன் உயிரோடு எழுந்து வருகிறான்" என்று வைத்துக்கொள்வோம்.

அந்த சூழல் எப்படி இருக்கும்? மக்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? பயமாகவும் இருக்கும் அல்லவா?

எம். இக்பால்: எஸ், கரெக்ட். நிச்சயமாக மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதைத் தானே "நான்" சாரி, அந்த செல்வந்தன் ஆலோசனையாக கூறினான்.

இந்த உயிரோடு எழுந்த லாசரு எதைச் சொன்னாலும், மக்கள் நிச்சயம் நம்புவார்கள் அல்லவா?

உமர்:  எஸ், நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இன்னும் கதை இருக்கிறது.

நாம் கதைக்குச் செல்வோம்...

லாசரு உயிரோடு வந்தவுடன், மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அவர் வந்து, அந்த ஐந்து சகோதரர்களுடனும், மற்ற மக்களுடனும் 'நடந்த உரையாடலையும், இந்த உலகில் நற்செயல்கள் செய்தால் தான்" பரதீசு என்ற சொர்க்கம் கிடைக்கும் என்றும் சொன்னால், அந்த மக்கள் நம்புவார்கள். மேலும், அவன் சொன்னதின்படி தீய செயல்களை விட்டுவிட்டு, நற்செயல்களை செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இந்த அற்புதம் தற்காலிகமானது.

எம். இக்பால்:அது எப்படி? மக்கள் மனந்திரும்பினார்களே! அந்த செல்வந்தனின் சகோதரர்களும் திருந்தி வாழ்ந்தார்களே!

உமர்: ஆமாம், அவர்கள் மனந்திரும்பினார்கள், ஆனால், அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில் அனைவரும் மரித்துவிடுவார்கள். அடுத்த சந்ததி வரும், இந்த நிகழ்ச்சியை பார்க்காத மக்கள், பிள்ளைகள் வரும் போது, இந்த அற்புதம் அவர்களுக்கு பயன்படுமா?

ஒரு தோராயமாக கணக்கு போட்டாலும், அடுத்த சந்ததியில் "தங்கள் பெற்றோர்கள் கண்ட அற்புதங்களை" நம்பியவர்கள் 50% என்று எடுத்துக்கொண்டாலும், அடுத்த 50 ஆண்டுகள் கழித்து, அந்த அற்புதத்தை நம்புகிறவர்கள் இருக்கவே மாட்டார்கள்.

அடுத்த‌ 150 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது, நம் கொள்ளுத்தாத்தா காலத்தில் இப்படி நம் ஊரில் நடந்தது என்றுச் சொன்னால், யாருமே நம்பமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கண்களால் பார்க்கவில்லையே!

இன்று கூட நம் குடும்பங்களில் சில கதைகளைச் சொல்லும் போது, நாம் நம்புவதில்லை, ஏனென்றால், நம் காலத்தின் சூழ்நிலையின் படி நாம் வளர்க்கப்படுவதாலும், நாம் பார்க்காததாலும், நாம் நம்புவதில்லை.

இதனால் தான் "அற்புதங்கள்" அனைத்தும் தற்காலத்திற்கு பயன்படும், அதனை காண்கின்ற சந்ததிக்கு பயன்படும், அடுத்தடுத்த சந்ததிக்கு பயன்படாது. எனவே தான், ஆபிரகாம்  "அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு" என்றார்.  தௌராத்திலும் மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களிலும் இறைவன் செய்த அற்புதங்கள் அடையாளங்கள் எழுதப்பட்டுள்ளன (பார்வோனிடத்தில் மோசே செய்த அற்புதம், செங்கடல் பிளக்கப்பட்டது, இன்னும் பல அற்புதங்கள்). அவைகளை படித்து, "அவைகள் உண்மையாகவே நடந்தவைகள்" என்றும், "இறைவன் அவைகளைச் செய்தான்" என்றும் நம்பவேண்டும்.

அந்த ஐந்து சகோதரர்களுக்கு பழைய ஏற்பாடு உண்டு, அவைகளை அவர்கள் நம்பி வாழாவிட்டால், இன்று ஒரு அற்புதம் செய்தாலும், அவர்களுக்கு அது பயன்படும், ஆனால், அது நிரந்தர தீர்வு ஆகாது. இதனால் தான் "ஆபிரகாம் அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்" என்று கூறினார்.

தம்பி: அண்ணே, இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளதல்லவா, அதாவது "லாசரு உயிரோடு எழுந்தது  மற்றும் பேசியது, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆச்சரியம் உண்டாக்கினாலும், தன் சகோதரன் பாதாளத்தில் துக்கப்படுகிறான், ஆனால், இந்த பிச்சைக்காரன் லாசரு, ஆபிரகாமின் மடியிலா" என்ற கோபமும் அவர்களுக்கு உண்டாகி அவனை தாக்க முயலுவதற்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா?

உமர்: ஆம், இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், இயேசு யூதர்களின் கண்களுக்கு முன்பாக மிகபெரிய அற்புதங்கள் செய்தாலும், அதனை கண்களால் கண்டும், அனேகர் அவரை நம்பவில்லையே!

மேலும்  எகிப்திலிருந்து வெளியே வந்த இஸ்ரவேலர்கள் அனேக அற்புதங்களை கண்டபிறகும், பல முறை சந்தேகம் கொண்டு, மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.

எம். இக்பால்: சரி, உமர் அவர்களே! இதுவரை சொன்ன விவரங்கள் எனக்கு புரிந்தது. அற்புதங்கள் தற்காலிகமானவை என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள், சில வேளைகளில் அவைகளினால் எந்த பயனுமில்லை என்றும் சொல்கிறீர்கள். இதனை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், உங்களுடைய சில விமர்சனங்களை நான் படித்த போது "எங்கள் இறைத்தூதர் ஒரு அற்புதமும் செய்யவில்லை, அதனால் அவர் நபி/தீர்க்கதரிசி இல்லை என்று குற்றம் சாட்டுகிறீர்களே", இது நியாயமா?

ஒரு பக்கம் "அற்புதங்கள் தேவையில்லை, அவைகள் பயன்படாது, அவைகள் தற்காலிகமானவை" என்று சொல்கிறீர்கள், இன்னொரு பக்கம் "முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமும் செய்யவில்லை எனவே அவர் நபியில்லை" என்றுச் சொல்கிறீர்கள். இது என்ன நிலைப்பாடு?

ஏன் இரண்டு வகையாக பேசுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள்? இறைத்தூதர் முஹம்மதுவிடம் வந்தால் ஒரு நிலைப்பாடு, கிறிஸ்தவ கோட்பாடு என்று வந்தால் இன்னொரு நிலைப்பாடா?

இதற்கு பதில் சொல்லுங்கள்.

தம்பி: சரியான பாயிண்டை பிடித்துவிட்டீர்கள் இக்பால். நெத்தியடி கேள்வி, பதில் சொல்லுங்க அண்ணே!

உமர்: நான் என் வார்த்தைகளை மாற்றி சொல்லவில்லை. என் நிலைப்பாடு ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது, நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துக்கொள்ள்வில்லை.

அற்புதங்களினால் தற்காலிக பலன்கள் தான் கிடைக்கும்,  அவைகள் நிரந்தரமானவைகள் அல்ல என்பது உண்மை. அதே போன்று ஒருவர் தன்னை நபி என்றுச் சொல்லிக்கொண்டால், தன்னுடைய நபித்துவத்தை நிருபிக்க அவருக்கு அற்புதங்கள் வேண்டும், அப்படி அவர் அற்புதங்கள் செய்யவில்லையென்றால், எதை வைத்துக்கொண்டு அவரை நம்பி மக்கள் வருவார்கள்?

இந்த லாசரு உவமையில், யாரும் தம்முடைய நபித்துவத்தை நிருப்பிக்கும் நிர்பந்தத்தில் இல்லை, ஆனால், முஹம்மதுவின் விஷயத்தில் "அவரை நபி என்று ஏற்றுக்கொள்ள குறைந்தபட்ச தேவையாக அற்புதங்கள்" தேவை என்றுச் சொல்கிறேன்.

உங்கள் இருவரிடம் ஒரு கேள்வி: நாளைக்கு உங்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ் அனுப்பிய அடுத்த நபி நான் தான், என்னை நம்பி என் பின்னால் வாருங்கள், இல்லையேல், அல்லாஹ் உங்களை நரகத்தில் தள்ளுவான் என்றுச் சொல்கின்றான் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் சொல்வதை அப்படியே நம்புவீர்களா?

எம். இக்பால்: அது எப்படி நம்பமுடியும்? அனேக கள்ள நபிகள் உலகில் இருக்கிறார்கள் அல்லது வருவார்கள்,எனவே அவரிடம் அத்தாட்சி என்ன என்று கேட்பேன்.

உமர்: அவர் உடனே "14 அத்தியாயங்கள் அடங்கிய ஒரு சிறிய‌ புத்தகம் காட்டி, இது தான் அத்தாட்சி, இதன் பெயர் கர்‍ஆன்", இது தான் வேதம், இதை நீங்கள் நம்பவேண்டும், இது உயர்ந்த இலக்கண நடையில் எழுதப்பட்டுள்ளது, எனக்கு அல்லாஹ் வஹீ மூலம் கொடுத்தது என்றுச் சொல்கிறார். இதற்கு உங்கள் பதில்?

எம். இக்பால்: சிரிக்கிறார்... போடா பைத்தியம், ஒரு புத்தகத்தைக் காட்டி நபி என்றுச் சொன்னால், எப்படி நம்புவோம் என்று கேட்பேன்.

உமர்: இதைத் தானே முஹம்மதுவும் செய்தார். 

நீங்கள் அவரைப் பார்த்து, "பைத்தியம்" என்று சொன்னது போலவே, மக்கா மக்களும், அன்றைய யூதர்களும் முஹம்மதுவை பைத்தியம் பிடித்தவர் என்றும், பிசாசு பிடித்தவர் என்றும் சொன்னார்கள். 

இமாம் முஹம்மத் இக்பால் அவர்களே, உங்களுக்கும் அன்றைய மக்காவினருக்கும்/யூதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

எம். இக்பால்: புரிந்தது! நான் அவரிடம், "புத்தகமெல்லாம் நபித்துவத்துக்கு அடையாளம் ஆகமுடியாது", உங்களை அல்லாஹ் தான் அனுப்பினான், நபியாக நியமித்தான் என்பதற்கு சான்றுகளை காட்டுங்கள் என்று கேட்பேன்.

உமர்:  உடனே அவர், "காபிரியேல் தூதன் என்னை சந்தித்தான், இது தான் சான்று" ஆனால், என்னைத் தவிர வேறு யாருமே அவரை பார்க்கமுடியாது  என்று அவர் பதில் அளித்தால்? 

எம். இக்பால்: இல்லை, இல்லை, குறைந்தபட்சம் ஒரு அற்புதமாவது செய்துக் காட்டி, உங்கள் நபித்துவத்தை நிருபித்துக்கொள்ளுங்கள் என்று கேட்பேன்...

உமர்: அப்படி வாங்க வழிக்கு!

இதைத் தானே, அன்றைய மக்களும் யூதர்களும் முஹம்மதுவிடம் கேட்டார்கள்! ஒரே ஒரு அற்புதம் செய்துக்காட்டி, உன் நபித்துவத்தை நிருபித்துக்கொள் என்று கேட்கும் போது, அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லையே!

எப்படி அவரை நபி என்று நம்புவது? உலகில் பைத்தியங்கள் நிறைய சுற்றுகின்றன? சைத்தானும் தன் பங்கிற்கு அனேகரை நபி என்றுச் சொல்லி, மக்களை நம்பவைத்துக்கொண்டு இருக்கிறான்.

நல்ல உண்மையான நபி மற்றும் கள்ள நபி என்பதை எதை அவைத்து அடையாளம் கண்டுக்கொள்வது?

இதற்கு யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் அனேக வழிமுறைகள் உள்ளன. முதலாவது அடிப்படை சான்று "அற்புதம் செய்வதாகும், அதன் பிறகு அவருடைய கனிகள், செயல்கள் மூலம் அவரை கண்டுக்கொள்ளலாம்".

எனவே, முஹம்மது போல அரசியலையும், ஆன்மீகத்தையும் சேர்த்து, நபித்துவம் கற்பிக்கும் நபர்களுக்கு அற்புதங்கள் தேவைப்படுகின்றன.

இப்போது உங்களுக்கு புரிந்ததா? இக்பால்

எம். இக்பால்:  ம்ம்.. புரிவது போல தெரிகிறது... நாம் இந்த சந்திப்பை முடித்துக்கொள்வோமா?

தம்பி: ஆமாம், முடித்துக்கொள்ளலாம்

உமர்: இருங்க இக்பால், என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது,  அதையும் பார்த்துவிட்டு, நாம் முடித்துக்கொள்ளலாம்.

இஸ்லாமில் இப்ராஹீமுக்கு உயர்ந்த இடம் உள்ளது, மேலும் குர்‍ஆனில் நான் தேடும்போது கிட்டத்தட்ட 69 இடங்களில் இப்ராஹீம் என்ற பெயர் வருகிறது மற்றும் பக்ரீத் பண்டிகை என்பது இவரது தியாகத்தின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

இப்படிப்பட்ட இப்ராஹீம் நபி சொல்லும் ஆலோசனையை முஸ்லிம்களாகிய நீங்கள் கேட்பீர்களா?

எம். இக்பால்: இந்த கேள்விக்கே இடமில்லை, இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் நண்பர், எனவே அவர் சொல்வதை நிச்சயம் நாம் கேட்போம்.

உமர்: அப்படியானால், அவர் 29வது வசனத்தில் சொல்வதை கவனியுங்கள்:

 லூக்கா 16:29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

முஸ்லிம்களாகிய நீங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களை படிக்கும்படி அவர் ஆலோசனை சொல்கிறார்:

  • நீங்கள் மோசேயின் தவ்ராத்தை படிப்பீர்களா? 
  • மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களை படிப்பீர்களா?

மரித்த பிறகு நாம் வாழப்போகும் வாழ்க்கை, அந்த லாசருவைப்போன்று மகிழ்ச்சியாக, சொர்க்கத்தில் வாழவேண்டுமென்றால், இப்ராஹீம் சொல்லும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

எம். இக்பால்:  இந்த உவமையில் அவர் வெறும் மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் என்று மட்டுமே சொல்கிறார், மற்ற புத்தகங்களைச் சொல்லவில்லையே!

உமர்: பழைய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களை மூன்றாக பிரித்துள்ளார்கள், தோரா, நெவிம் மற்றும் கெதுவின்.

இப்ராஹீம் சொன்னவைகளை அப்படியே மேலோட்டமாக எடுத்துகொண்டாலே 26 புத்தகங்கள் வருகின்றன‌:

  • தௌராத்தில் (தோரா) ஐந்து (5) மோசேயின் புத்தகங்கள் வருகின்றன. 
  • நெவிம் என்றால் நபிகள்/தீர்க்கதரிசிகள் என்று பொருள், இந்த பிரிவில், பெரிய மற்றும் சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள் வருகின்றன. யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல் 1 & 2, ராஜாக்கள் 1 & 2, ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் இதர 12 சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள் வருகின்றன, மொத்தம் 21 புத்தகங்கள் வருகின்றன.

இப்ராஹீம் நபி சொன்னதை ஆழமாக ஆய்வு செய்தால், பழைய ஏற்பாட்டின் "கெதுவின்(எழுத்துக்கள்)" என்ற பிரிவில் உள்ள இதர புத்தகங்களாகிய சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி போன்ற மீதமுள்ள புத்தகங்களும் அடங்கும், ஏனென்றால், இவைகளை கூட நபிகள் தானே எழுதினார்கள்.  தாவீதுக்கு ஜபூர் என்ற சங்கீதம் என்ற வேதத்தை கொடுத்ததாக குர்‍ஆன் கூட ஒப்புக்கொள்கிறதே. தாவீது கூட நபி தானே! 

நீதிமொழிகளை எழுதிய சாலொமோன் கூட நபி தானே! 

ஆக, இப்ராஹீம் நபி சொன்ன ஆலோசனையை முஸ்லிம்கள் பின்பற்றவேண்டும் என்று நமக்கு புரிகின்றதல்லவா?

எம். இக்பால்:  உமரண்ணே! சும்மா சொல்லக்கூடாது, நீங்க சூப்பரா குழப்புகிறீர்கள்

உமர்: தம்பி இக்பால், நான் குழப்பவில்லை. உங்களுக்கு புரிகின்றது, ஆனால் அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனதில்லை.

முதலில் நீங்கள், லாசரு உவமையில் இல்லாத ஒன்றை, இப்ராஹீம் சொல்லாத ஒன்றை சொன்னீர்க‌ள். இயேசுவின் உயிர்த்தெழுதலை இப்ராஹீம் மறுப்பதாகச் சொன்னீர்கள், அதற்கு பதில் கொடுத்தேன்.

இரண்டாவதாக, அந்த செல்வந்தன் சொன்ன "ஒருவர் உயிர்த்தெழுந்து சொன்னால், மக்கள் நம்புவார்கள்" என்ற கருத்துக்கு இப்ராஹீம் கொடுத்த பதிலை விமர்சித்தீர்கள், அதற்கும் பதிலைக் கண்டோம்.

மூன்றாவதாக, முஹம்மதுவின் நபித்துவத்திற்கு சான்றாக‌ அற்புதங்களை ஏன் எதிர்ப்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலைச் சொன்னேன்.

உங்கள் இருவருக்கும் லாசருவின் உவமை இப்போது தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எம். இக்பால்: உங்களிடம் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது...

உமர்:  என்னிடம் ஒன்றுமில்லை...பைபிளில் சத்தியம் உள்ளது, அது தான் பேசுகின்றது...

தம்பி: போதும் போதும்...நண்பா இக்பால்... அடுத்த முறை இன்னொரு முக்கியமான விவரங்களோடு களத்தில் இறங்குவோம்...இதோடு நம் மீடிங்கை முடித்துக்கொள்வோம்.

அண்ணா, உங்களுக்கு ரமலான் ஈத் முபாரக்.

உமர்: உங்கள் இருவருக்கும் ரமலான் ஈத் முபாரக். உங்கள் இருவரோடு பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

. . .முற்றிற்று. . .

அடிக்குறிப்புக்கள்:

இதுவரை லாசரு மற்றும் செல்வந்தன் உவமையை படிக்காதவர்கள், இங்கு அதனை படிக்கலாம்.

[1] லூக்கா 16:19-31

19. ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

20. லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

21. அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.

27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 3rd May 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2022ramalan/2022-ramalan-12.html


ஞாயிறு, 1 மே, 2022

ரமளான் 2022 - உவமை 11: புத்தியுள்ள 5 கன்னிகைகள் உவமையின்படி இயேசு 5 பேரை திருமணம் புரிந்தாரா? தம்பியின் கேள்வி உமரின் பதில்

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
  • உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?
  • உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?

மேலேயுள்ள முந்தைய கட்டுரையைப் படித்து, உமரின் தம்பி சௌதியிலிருந்து, ஃபோன் செய்து பல கேள்விகளை சரமாரியாக உமரிடம் கேட்கிறான். இதுவரைக்கும், புத்தியுள்ள கன்னிகைகள்  உவமையை பல முறை படித்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கே வராத கேள்விகள், உமரின் தம்பிக்கு வந்துள்ளது, அவைகள் சுவாரசியமான கேள்விகள் மற்றும் முஸ்லிம்கள் கேட்க தயங்கும் கேள்விகளை உமரின் தம்பி கேட்டுள்ளான். வாருங்கள்.. அக்கேள்வி பதில்களை காண்போம்.

இவ்வருட‌ (2022) ரமளான் மாதத்தின் கடைசி நோன்பு இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தியுள்ள 5 கன்னிகைகள் உவமையின்படி இயேசு 5 பேரை திருமணம் புரிந்தாரா?

இஸ்லாமை தழுவிய உமரின் தம்பி சௌதியிலிருந்து ஃபோன் செய்கிறார், உமர் எடுத்து பேசுகின்றார்.

தம்பி: ஹலோ, அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: ஹலோ தம்பி, வஅலைக்கும் ஸலாம்.  போன முறை நடந்த‌ காரசாரமான ஃபோன் காலுக்கு பிறகு நீ எனக்கு இந்த ரமலான் முடியும் வரை, ஃபோன் செய்யமாட்டாய் என்று நினைத்தேன். ஆனால், நீ ஃபோன் செய்துவிட்டாய்! 

தம்பி: நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன். என்ன செய்வது! சூழ்நிலை சூழ்ச்சி செய்துவிட்டது, உங்களுக்கு நான் ஃபோன் செய்துவிட்டேன்.

உமர்: அது என்ன சூழ்நிலை, உன்னை இப்படி செய்ய வைத்துவிட்டது தம்பி? சூழ்ச்சி செய்வதில் உன் அல்லாஹ் தான் சிறந்தவனாச்சுதே! அவனிடம் உதவி கேட்கவில்லையா நீ!

தம்பி: அவனுடைய உதவியோடு தான் வந்திருக்கிறேன். நேற்று நீங்கள் பதித்த புத்தியுள்ள கன்னிகைகள் பற்றிய கட்டுரையைத் தான் நான் 'சூழ்நிலை' என்றுச் சொன்னேன். அது தான் என்னை உங்களிடம் ஃபோன் செய்து பேச வைத்துக்கொண்டு இருக்கிறது! இது மிகப்பெரிய தர்மசங்கடத்தில் உங்களைத் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

உமர்: ஓ... நீ அந்த ரூட்டில் வருகிறாயா! சரி பேசலாம் வா.

தம்பி: நீங்கள் நேற்று பதித்த "மத்தேயு 25:1-13" வசனங்களில் வரும், புத்தியுள்ள 5 கன்னிகைகள் பற்றியது தான் என் கேள்விகள்.  

நீங்கள் இந்த உவமையை எடுத்துக்காட்டி எனக்கு, சாரி இஸ்லாமுக்கு மறைமுகமாக உதவி செய்துவிட்டீர்கள். அது என்ன உதவி என்று தெரிந்துக்கொள்ள ஆசையா?

உமர்: உமராவது இஸ்லாமுக்கு மறைமுகமாக உதவுவதாவது!

தம்பி உன் கருத்துக்களைச் சொல், நானும் கேட்கிறேன்.

தம்பி: "என் கருத்துக்கள்" என்றுச் சொல்லாதீர்கள், "என் கேள்விகள்" என்றுச் சொல்லுங்கள்.

சரி, விஷயத்துக்கு நேரடியாக வந்துவிடுகிறேன்.

இந்த 10 கன்னிகைகள் உவமையில்[1] இயேசு இஸ்லாமின்  'பல தார திருமண சட்டத்தை  ஆதரித்துள்ளார்' என்று நான் சொல்கிறேன். 

இதற்கு உங்கள் பதில் என்ன?

உமர்: எனக்கு புரியவில்லையே! சிறிது புரியும்படி விளக்கு பார்க்கலாம்!

தம்பி: நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா? இது உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமென்று!

உங்களுக்கு புரியும் படி கேட்கிறேன். இயேசுவின் உவமையில் 5 கன்னிகைகள் புத்திசாலிகள். மீதமுள்ள‌ 5 பேர் புத்தியற்றவர்கள், அவர்கள் தங்கள் தீவட்டிகளுக்காக எண்ணையை கொண்டுவரவில்லை, அதனால் மணவாளனோடு சேர்ந்து செல்லமுடியாமல் போய்விட்டது, சரி தானே!

உமர்: ஆமாம், புத்தியுள்ள கன்னிகைகள் "மணவாளன் தாமதமாக வந்தால், விளக்குகள் எண்ணையில்லாமல் அனைந்துவிட்டால் என்ன செய்வது என்று முன்பே சிந்தித்து, ஆயத்தப்பட்டு, எண்ணையை கொண்டுவந்தார்கள், மணவாளனோடு திருமண கொண்டாட்டத்தில் அவரோடு சென்றார்கள்". 

தம்பி: இங்கே தான் டிவிஸ்ட் (Twist) இருக்கிறது!

உமர்: அது என்ன டிவிஸ்டு தம்பி? சிதம்பரம் ரகசியம் என்று சொல்வது போல புரியாமல் பேசுகின்றாய்!

தம்பி: இப்போது சொல்லுங்கள், அந்த புத்தியுள்ள 5 கன்னிகைகளை இயேசு திருமணம் செய்துக்கொண்டார் என்று தானே! அந்த உவமையில் இயேசு கூறுகின்றார்! அப்படியென்றால், இஸ்லாம் கூறும் பலதார திருமணத்தை இந்த உவமையின்படி இயேசு அங்கீகரித்துள்ளார் என்று தானே! அர்த்தம்.[2]

உமர்: அடப்பாவமே! இப்படியெல்லாம் நீ சிந்திக்க உன்னால் எப்படி முடிகின்றது?

நீ சிறுவனாக இருந்தபோது( கிறிஸ்தவனாக இருந்தபோது), ஞாயிறு பள்ளிகளில் இந்த உவமையை பல முறை கேட்டிருப்பாய், வாலிபனாகிவிட்டபோதும், நம் பாஸ்டர் கொடுத்த செய்திகளிலும் இதனை பல முறை கேட்டிருக்கிறாய்! அப்போதெல்லாம் வராத இப்படிப்பட்ட விபரீத 'ஐடியா' எப்படி இப்போது வந்துள்ளது?

நீ இஸ்லாமை தழுவியதால், உலகத்தை இஸ்லாமிய பார்வையில் பார்க்க தொடங்கிவிட்டாயா? இப்படியெல்லாம் சிந்திக்கிறாய்!

தம்பி: எனக்கு பழைய கதைகளையெல்லாம் இப்போது சொல்லவேண்டாம்! இயேசு அந்த ஐந்து பேரை திருமணம் செய்தார் என்று அந்த உவமை சொல்கிறதா இல்லையா?

உமர்: சரி, உனக்கு என் பாணியில் விளக்கினால் தான் புரியும் போல தெரிகிறது, இதோ விளக்குகிறேன்.

தம்பி: இதோ பாருங்க, போன முறை ஃபோன் செய்யும் போது பயன்படுத்திய‌ கடினமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

உமர்: இல்லை.. இல்லை.. அப்படியெல்லாம் பேசமாட்டேன். விஷயத்துக்கு வருகிறேன்.

அந்த உவமையில் இயேசு சொன்னதை சரியாக கவனித்துப்பார்: பரலோக ராஜ்ஜியத்தை இயேசு எப்படி ஒப்பிட்டார்? திருமண கொண்டாட்டத்தின் போது, மணவாளனை வரவேற்க சென்ற 10 கன்னிகைகளுக்கு இயேசு ஒப்பிட்டார். இந்த இடத்தில் அந்த 10 கன்னிகைகள்,  மணப்பெண்கள் என்றா சொல்லப்பட்டுள்ளது?

மத்தேயு 25:1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

அவர்கள் மணவாளனுக்கு "எதிர்கொண்டு போக புறப்பட்டார்கள்" என்று வசனம் தெளிவாகச் சொல்வதிலிருந்து, இப்பெண்கள் மணப்பெண்கள் அல்ல என்பதைக் கூடவா உன்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை!

தம்பி: அப்படியென்றால், மணப்பெண் எங்கே? இவர்கள் தானே அந்த மணப்பெண்கள்?

உமர்: உனக்கு என்ன புத்தி புல் திண்ணச் சென்றுவிட்டதா? எத்தனை திருமணங்களில் நாம் பார்த்து இருப்போம்...

திருமண கொண்டாட்டங்களின் போது, கல்யாணப்பெண்ணுக்கு வேலை கொடுப்பார்களா? மணப்பெண்ணும் மணவாளனும் 'முக்கியமானவர்கள்', இவர்களுக்கு திருமண வேலைகளைச் செய்ய அனுமதிக்கமாட்டார்கள்.

மணப்பெண் தன் தோழிகளோடு மகிழ்ச்சியாக‌, அலங்காரங்களை செய்துக்கொண்டு, திருமணத்தின் ரிசப்ஷனுக்காக அல்லது திருமண நிகழ்ச்சிக்கக தயாராகிக்கொண்டு இருப்பாள். மாப்பிள்ளை வரும் போது, அவருக்கு எதிர்கொண்டுச் சென்று அழைத்து வர மணப்பெண் போகமாட்டாள்.

மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு எனபதே ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும், இதற்காகவே பலபேர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், அவர்களோடு மற்றவர்களும் செல்வார்கள். இது கூடவா புரியவில்லை உனக்கு?

தம்பி: நீங்கள் தானே சொன்னீர்கள், "இயேசு மணவாளன், திருச்சபை மணவாட்டி" என்று? அப்படியென்றால், அந்த 5 பேர் மணவாட்டி தானே!

உமர்:  நீ இரண்டு விஷயங்களை ஒன்றாக சேர்த்துக் கொண்டு குழப்பிக்கொள்ளாதே!

முதலாவதாக, இயேசு சொன்ன "புத்தியுள்ள 5 கன்னிகைகள்" உவமையில், மணப்பெண் ஒருத்தி மட்டுமே என்பதை புரிந்துக்கொள். 

இரண்டாவதாக, கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களின் படி, புதிய ஏற்பாட்டின் படி,  இயேசு மணவாளன், அவரது சபை (உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்கள்) அவரது மணவாட்டி என்பதாகும்.

யோவான் ஸ்நானகன் சொல்வதைப்பார், இயேசு மணவாளன், அவர் மீது விசுவாசம் வைக்கும் அனைவரும் (சபை) மணவாட்டி, மேலும் தாம் "மணவாளனோடு இருக்கும் அவரது நண்பர்" என்றுச் சொல்கிறார்.

யோவான் 3:29. மணவாட்டியை உடையவனே மணவாளன்மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

இயேசு தம்மை மணவாளன் என்றும், அவரது சீடர்கள், "மாப்பிள்ளைத் தோழர்கள், எனவே அவர்கள் திருமண கொண்டாட்ட நாட்களில் உபவாசம் இருக்கமாட்டார்கள்" என்று கூறுகின்றார்.

மாற்கு 2:19-20

2:19. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.

2:20. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.

முழு திருச்சபையும் ஒரு கற்புள்ள கன்னிகை, மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருக்கிறாள்

II கொரிந்தியர் 11:2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

இயேசுவிற்கும் சபைக்கும் இடையேயிருக்கும் உறவுமுறை: கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயிருக்கும் உறவுமுறை:

எபேசியர் 5: 25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

இப்போதாவது புரிந்ததா - இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டது மணவாட்டி அல்ல, அவர்கள் வரவேற்ப்பாளர்கள் என்று!

தம்பி: புரிந்தது, புரிந்தது... நான் ஃபோனை வைக்கிறேன் பிறகு பேசலாம்.

உமர்: இரு தம்பி, இன்னும் சில நிமிடங்கள் பேசலாம். நீ பேட்டிங்க் செய்தாய், நான் ஃபீள்டிங் செய்தேன், இப்போது நான் பேட்டிங்க் செய்யவேண்டாமா?

"இயேசுவின் உவமை இஸ்லாமின் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது" என்று ஆரம்பத்தில் சொன்னாய் அல்லவா?

தம்பி:  ஆமாம்

உமர்: குர்‍ஆனின் படி, ஒரு முஸ்லிம் அதிக பட்சமாக நான்கு பேரைத்தானே திருமணம் செய்யவேண்டும்? 

குர்‍ஆன் 4:3ஐ படி:

குர்‍ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

தம்பி: அது வந்து...

உமர்: நீ தவறாக விளக்கம் அளித்த 'இயேசுவின் உவமையில் ஐந்து பேர் அல்லவா' மணவாளனோடு சென்றார்கள்.  உனக்கு கணக்குகூட சரியாக போடத் தெரியாதாடா?

ஏதோ, கிறிஸ்தவத்தை விமர்சிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படாதே! குறைந்தபட்சம் வைக்கப்படும் விமர்சனங்கள் மிகவும் வலுவானதாக இருந்தால் நன்றாக இருக்கும், இப்படி கேவலமாக இருந்தால் எப்படி?

ஒருவேளை, ஒரு பேச்சுக்காக, உன் கணக்குப்படியே இயேசுவின் உவமையை எடுத்துக்கொண்டால், நீங்கள் குர்‍ஆன் 4:3ஐ மாற்றி எழுதுவீர்களா? 

குர்‍ஆன்  4:3  ". . .உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, ஐந்தைந்தாகவோ; . . ."

தம்பி: ஆளவிடுங்கண்ணே! தப்பு நடந்துவிட்டது.. இனி இப்படி நடக்காது.. நான் ஃபோனை வைக்கிறேன்.

உமர்: ஒரு நிமிஷம் இரு தம்பி. என்னிடம் இன்னொரு கேள்வியிருக்கிறது: 

குர்‍ஆன் நான்கு மனைவிகள் ஒரு முஸ்லிமுக்கு அனுமதி என்றுச் சொல்லும் போது, உங்க முஹம்மதுவிற்கு மட்டும் ஏன் ஒன்பதற்கும் அதிகமான மனைவிகள்...? உங்கள் முஹம்மது ஒரே நாளில் தம்முடைய ஒன்பது மனைவிகளோடு உறவு கொள்வாராமே! இது உண்மையா? அல்லது அவர் மனபிராந்தியில் இருந்தாரா? இது எப்படி சாத்தியம் தம்பி, ஒரே நாளில் ஒன்பது மனைவிகளோடு உறவு?

தம்பி: எனக்கு திருமணம் ஆகவில்லை, என்னால் எப்படி உங்களுடைய "ஒரே நாளில் ஒன்பது மனைவிகளோடு ..." என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியும்?

அண்ணே! என் மீது சிறிது கருணை காட்டுங்கள்! இனி இப்படி நடக்காது... ஆள விடுங்க... குட் நைட்.... 

தம்பி ஃபோனை வைத்துவிட்டான்...

உமர் மனதுக்குள் பேசிக்கொள்கிறான்...

உமர்: முதல்ல என் தம்பிக்கு கல்யாணம் செய்யணும்... அதன் பிறகு முஹம்மது பற்றிய மற்ற கேள்விகளை கேட்டுக்கொள்கிறேன்... முஹம்மது பற்றிய சில கேள்விகள் சென்ஸார் கட் கேள்விகள், எனவே அவனிடமிருந்து பதில் வராது... அனுபவமில்லையல்லவா?... 

உமர் தனக்குள் சிரித்துக்கொள்கிறான்...

அடிக்குறிப்புக்கள்:

[1] மத்தேயு 25:1-13

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

[2] ஒசாமா அப்தல்லா என்ற முஸ்லிம் இந்த புத்தியுள்ள புத்தியற்ற கன்னிகைகள் உவமையில் (மத்தேயு 25:1-13) இப்படிப்பட்ட இஸ்லாமின் பலதாரமணம் என்ற பொருளைகொண்டு வந்து விமர்சித்திருந்தார். அந்த ஆங்கில கட்டுரையையும், அதற்கு கிறிஸ்தவர்களின் தரப்பிலிருந்து கொடுத்த பதிலையும் இந்த தொடுப்பில் படிக்கலாம்: https://www.answering-islam.org/Responses/Osama/bible_polygamy.htm - Section: Jesus' Parable and Osama's Perverted Mind

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 1st May 2022