தலாக் பற்றிய தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.
முஹம்மதுவின் மனைவிமார்களை அல்லாஹ் இரண்டு முறை தலாக் பற்றிச் சொல்லி மிரட்டினார் என்பதை முந்தைய கட்டுரைகளில் குர்-ஆனின் உதவிக்கொண்டு விளக்கப்பட்டது. இக்கட்டுரையில் ஒரு அற்பமான காரணத்திற்காக முஹம்மது தம் மனைவிக்கு தலாக் கொடுக்க முயன்றார் என்ற விவரத்தை ஆய்வு செய்வோம்.
1) முஹம்மது - உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்
குர்-ஆனின் பார்வையில், முஹம்மது உயர்ந்த நற்குணமுடையவர், சிறந்த முன்மாதிரி ஆவார். இதனை குர்-ஆன் 68:4 மற்றும் 33:21 தெளிவாகச் சொல்கிறது.
குர்-ஆன் 68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
குர்-ஆன் 33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இதன் அர்த்தமென்னவென்றால், முஹம்மதுவின் அனைத்துச் செயல்களும் சிறந்த செயல்கள் ஆகும், நாம் முகம் சுளித்துக்கொள்ளும் அளவிற்கு அவரது செயல்கள் இருக்காது என்பதாகும். அவர் செய்தவைகள் அனைத்தும் 7ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த 21ம் நூற்றாண்டிலும் நல்லச் செயல்கள் தான். உலக முடிவு வரையிலும் அவர் தான் சிறந்தவர். உலகில் இறைவனுக்கு அடுத்தபடியாக நல்ல மனிதர் ஒருவர் இருப்பாரானால் அவர் முஹம்மது ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இன்னும் சிலர் அவர் பாவமே செய்யவில்லை என்றும் சொல்வார்கள். எனவே எல்லா முஸ்லிம்களும் அவரை அணுவணுவாக பின்பற்ற முயலுகின்றார்கள். முஸ்லிம்கள் நம்புவது போல, முஹம்மது உண்மையாகவே நல்லவராக இருந்தால் அவரைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது?
2) மனைவிக்கு வயதானால், அவளை விவாகரத்து செய்யலாமா?
இந்த கேள்வியை யாராவது நம்மிடம் கேட்டால், நம்முடைய பதில் என்னவாக இருக்கும்? கேள்வி கேட்டவரை ஒரு மாதிரியாக பார்ப்போம். இப்படியும் கேள்வி கேட்பார்களா? என்று ஆச்சரியப்படுவோம். ஆனால், இஸ்லாமியர்கள் "நற்குணத்தின் சிகரம்" என்று போற்றுகின்ற முஹம்மது, தம்முடைய இரண்டாவது மனைவிக்கு (ஸவ்தா) வயது கூடிவிட்டது என்பதால், அவரை விவாகரத்து செய்ய விரும்பினார் என்ற விவரம் எத்தனைப் பேருக்குத் தெரியும்? முஹம்மது தம்மை ஒதுக்கிவிட்டால், தாம் தனிமரமாக ஆகிவிடுவோமே! ஏற்கனவே முந்தையை கணவர் இறந்ததால் விதவை என்ற பட்டம் கிடைத்தது, இப்போது விவாகரத்து பெற்றவள் என்ற பட்டம் வேண்டுமா? இதற்கு பதிலாக, தன்னுடைய முக்கியமான ஒரு உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு, முஹம்மதுவின் மனைவியாகவே மரிக்கலாம் என்று விரும்பினார் அந்த மனைவி. எந்த உரிமையை ஸவ்தா விட்டுக்கொடுத்தார்? அது என்ன உரிமை? ஆம், அதே தான், கணவருக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் அந்த உன்னத உறவை பேணும் அந்த உரிமை. அதாவது முஹம்மது தன்னிடம் செலவிடும் நாளை அவருக்கு மிகவும் பிரியமான மனைவியாகிய சிறுமி ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டார். இது ஒரு "நல்ல முடிவு" என்று முஹம்மதுவும் ஏற்றுக்கொண்டார். கிழவியிடம் ஒரு நாளை செலவிடுவதில் என்ன இன்பம் இருக்கும்? குமரியிடம் இரண்டு நாட்கள் செலவிடுவது அல்லவா இன்பம்! கரும்பு திண்ணக்கூலி வேண்டுமா என்ன? ஸவ்தாவின் இந்த முடிவை ஆதரித்து குர்-ஆன் 4:128ம் இறங்கிவிட்டது.
இதைப் பற்றி 2010ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு கட்டுரையை தமிழில் பதித்தேன், அதனை கீழேயுள்ள தொடுப்பில் படித்துவிட்டு, இக்கட்டுரையின் மீதமுள்ள விவரங்களைப் படிக்கவும். இவ்விவரங்களுக்கு ஆதாரமாக குர்-ஆன், ஸஹீஹ் ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் விரிவுரைகளை மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளது.
3) விவாகரத்துக்கு வயது ஒரு காரணமா?
மேற்கண்ட கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்களை படிப்பவர்கள் முகத்தை நிச்சயமாக சுளிப்பார்கள், அப்படி அவர்கள் சுளிக்கவில்லையென்றால் அவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள். ஒரு மகன் தன் தாய்க்கு வயது கூடிவிட்டது என்பதால் தன் தந்தை அவரை விவாகரத்து செய்தால், 'சீ, இவனெல்லாம் ஒரு மனிதனா? இப்படிப்பட்டவனுக்கு மகனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்' என்பான்.
முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் மரித்தபோது, முஹம்மதுவிற்கு இரண்டாவது மனைவியாக மாறி, அவரையும், அவரது பிள்ளைகளையும் கவனித்துகொண்டு வாழ்ந்த அந்த பெண்மணிக்கு வயது கூடிவிட்டது என்றுச் சொல்லி, விவாகரத்து செய்ய முயன்றது மன்னிக்கமுடியாத குற்றமாகும். புதிய மனைவிகள் வந்தவுடன், பழைய மனைவியை ஒதுக்க முயலுவது ஒரு நல்ல முன்மாதிரியா?
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற தமிழர்களின் முதுமொழியை தன் குடும்பத்தில் நடைமுறைப்படுத்த முயன்றார் முஹம்மது. முஸ்லிம் ஆண்கள் இப்படிப்பட்டவரை அணுவணுவாக பின்பற்றுவது முஸ்லிம் பெண்களுக்கு ஆபதல்லவா? (நல்லவேளை, அனேக முஸ்லிம்களுக்கு முஹம்மது பற்றிய அனைத்து விவரங்களும் தெரியாது).
விவாகரத்துக்கு பலமான காரணங்கள் இருக்கவேண்டும். அந்த காரணங்களையும் பெரியோர்கள் முன்பு கொண்டுச் சென்று, சமரசம் செய்வதற்கே முயலவேண்டும்.
4) முஸ்லிமே! இன்று உன் தாய்க்கு அழகில்லை என்பதால் உன் தந்தை தலாக் சொன்னால். . .
அன்பான தமிழ் முஸ்லிம் நண்பனே! இன்று உன் தாயை, உன் தகப்பன் தலாக் செய்ய முயன்றால் என்ன செய்வாய்? உன் தாய்க்கு வயதாகிவிட்டது, பருமனாக இருக்கிறார், அவர் இப்போது அழகாக இல்லை, முகத்தில் சுருக்கம் விழுந்துவிட்டது போன்ற காரணங்களை உன் தகப்பன் சொன்னால் உனக்கு கோபம் வருமா? அல்லது எங்கள் நபியைப் போல என் தகப்பனார் நடந்துக்கொள்கிறார் என்ற பெருமிதம் வருமா? இன்னும் ஒரு படி மேலே சென்று, உன் தகப்பனிடமிருந்து நீயே உன் தாய்க்கு விவாகரத்தை வாங்கிக்கொடுத்து, உன் தாயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவாயா? மேலும், உன் தகப்பனின் கண்களுக்கு அழகாகவும், இளமையாகவும் தென்படுகின்ற, மெலிந்த உடலமைப்பு கொண்ட, உன் தகப்பனின் காமத்துக்கு ஈடுகொடுக்கின்ற அளவிற்கு உள்ள பெண்களை உன் தகப்பனுக்கு திருமணம் செய்து வைப்பாயா?
உன்னை அவமதிக்கவேண்டுமென்று இக்கேள்விகளைக் கேட்கவில்லை, என் வயிறு எறிவதினால் கேட்கிறேன், இஸ்லாமின் பெண்களின் நிலையைக் கண்டு துக்கப்பட்டுக்கேட்கிறேன்.
ஒரு வேளை, என் தகப்பன் இப்படி கீழ்தரமாக நடந்துக்கொள்ளமாட்டார் என்றுச் சொல்வாயானால், "மனைவிக்கு வயதானதால் தலாக் கொடுக்க விரும்பியவர் (முஹம்மது) கீழ்தரமாக நடந்துக்கொண்டார்" என்று ஒப்புக்கொள்வாயா?
புதிய கார் மாடல் வந்தவுடன், பணக்காரர்கள் பழைய காரை விற்றுவிட்டு, புதிய காரை வாங்குவதைப் போல பெண்களை நடத்தமுடியாது, அப்படி நடத்துபவர் மனித சமுதாயத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர். முஹம்மதுவைப் போல நம் முஸ்லிம்கள் நடக்காதபடியினால், வயதுமுதிர்ந்த நம் அன்னையர்கள் நம்மோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
5) ஸவ்தாவின் தலாக்கை ஆதரிக்கும் சில வாதங்கள்
முஸ்லிம்கள் எப்போதும் முஹம்மதுவை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஒரு நாயைப் பார்த்து இது மாடு என்று முஹம்மது சொல்லிவிட்டால், முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக அதனை ஆதரிப்பார்கள். "அது நாய் அல்ல, அது மாடு தான்" என்று நிருபிக்க பல வாதங்களை முன்வைப்பார்கள். இப்படிப்பட்ட முஸ்லிம்களின் சில வாதங்களை ஆய்வு செய்வோம்.
5.1 இவ்விஷயத்தில் முஹம்மதுவை ஆதரிக்காதவர்கள் முட்டாள்கள் – இப்னு அல்-அரபி & இப்னு அபி மாலிக்
முதுமையை காரணம் காட்டி விவாகரத்து கொடுப்பது தவறு என்று சொல்பவர்கள் "முட்டாள்கள்" என்று இஸ்லாமிய அறிஞர் இப்னு அல்-அரபி மேற்கோள் காட்டியுள்ளர்.
".. ஸவ்தா பின்ட் ஜமா வயது சென்றவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மதுவின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மதுவும் அவரை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா மரிக்கும் போது முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவராகமரித்தார்கள். இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த வசனம் ஆயிஷாவிற்காக இறக்கப்பட்டது, ஒரு மனிதன் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, பிறகு அவளுக்கு வயது அதிகமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன். [1]
மேற்கண்ட சிந்தனை காட்டுமிராண்டிதனமான சிந்தனையாகும். ஒரு முஸ்லிம், ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, அவளோடு வாழ்ந்துவிட்டு, அவளுக்கு வயதாகிவிட்டால், அவளின் அழகு குறைந்துவிட்டால், உடனே அவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு மனைவியை திருமணம் செய்துக்கொள்வது தவறு இல்லையாம்! இவர் மட்டும் "என்றும் பதினாறு" என்று இளமையாகவா இருப்பாரா? இவருக்கு முகத்தில் சுருக்கங்கள் வராதா? இப்படிப்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் இருந்தால், இஸ்லாமிய சமுதாயம் எப்படி உறுப்படும்? சிலருக்கு இன்னும் புரியவில்லை, இப்போது புரியவைக்கிறேன் : முஹம்மதுவிற்கு வயது கூடவில்லையா? இவர் மட்டும் என்றும் இளமையாகவே இருந்துவிட்டாரா? இவரது முகத்தில் சுருக்கங்கள் விழவில்லையா? அல்லது விழாதா? இன்னும் சில ஆண்டுகளில் இவரது பற்கள் விழுந்து இவரின் இளமை அழியாதா?
5.2 என்னே முஹம்மதுவின் இரக்க குணம்! இதர மனைவிகளோடு போட்டி போடமுடியாதபடியினால் தலாக் செய்தாராம்
இன்னொரு இஸ்லாமிய மேதாவி இப்படிச் சொல்கிறார்.
When she was older, the prophet was worried that Sawda might be upset about having to compete with so many younger wives, and offered to divorce her. She said that she would give her night to Aisha, of whom she was very fond, because she only wanted to be his wife on the Day of Rising. She lived on until the end of the time of Umar ibn al Khattab. She and Aisha always remained very close.
ஸவ்தாவிற்கு பிறகு, முஹம்மது ஆயிஷாவை (வயது 9) திருமணம் செய்தார், இன்னும் இதர பெண்களையும் திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் மற்ற மனைவிகள் இளமையாக இருப்பதினால், இம்மனைவிக்கு கொஞ்சம் வயது அதிகமாக இருப்பதினால், "போட்டி அதிகமாக இருக்குமாம்". எனவே, இரக்க குணமுள்ள முஹம்மது, ஸவ்தாவின் நன்மையைக் கருதி "தலாக்" கொடுக்க விரும்பினாராம்.
மூளை எந்த அளவிற்கு துரு பிடித்து இருந்தால் இப்படியெல்லாம் முஸ்லிம்கள் சிந்திப்பார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். மேற்கண்ட விதமாக எழுதியவருக்கு சில கேள்விகளை நாம் கேட்கவேண்டும்:
அ) அருமை முஸ்லிம் நண்பரே! மனைவிக்கு வயது கூடும் போது, கணவனுக்கு வயது கூடாதோ? ஸவ்தா அவர்களின் வயது கூடும் போது, முஹம்மதுவின் வயது அதே நிலையில் நின்றுவிட்டிருந்ததா? ஆண்களுக்கு வயது கூடாமல் இருப்பதற்கு ஏதாவது லேகியம் கிடைத்ததா அன்று?
ஆ) முஹம்மதுவின் மனைவிகள் மத்தியில் இடையில் உலக அழகிப்போட்டியா நடந்துக்கொண்டு இருந்தது? ஸவ்தா அவர்கள் மற்ற இளம் போட்டியாளர்களோடு போட்டிப்போட முடியாமல் போவதற்கு? என்ன கொடுமையடா இது!
இ) உண்மையாகவே முஹம்மதுவிற்கு இரக்க குணம் அதிகமாக இருந்திருந்தால், யாரிடம் குறையுள்ளதோ (முதுமை வந்துவிட்டதோ) அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்து இருந்திருக்கவேண்டும். அவர் நபி தானே! மனைவிமார்களின் மத்தியிலே ஒரு நல்ல உறவை உண்டாக்கியிருந்திருக்கவேண்டும், அவரால் முடியவில்லையென்றால் அல்லாஹ்வை உதவிக்கு அழைத்து இருந்திருக்கலாம் அல்லவா? இரண்டும் செய்யாதவருக்கு எதற்கு இத்தனை மனைவிகள்? [வாசகர்கள் கவனிக்க: அல்லாஹ்வை உதவிக்கு அழைத்தால், அவர் தலாக் பற்றி மிரட்டுகின்றார் என்பது வேறு விஷயம். முந்தைய இரண்டு கட்டுரைகளை படிக்கவும், அல்லாஹ்வை உதவிக்கு அழைத்தால், பெண்களின் நிலை என்னவென்பது புரியும்.] தானே அனேக இளம் மனைவிகளை திருமணம் செய்துக்கொள்வது, அதன் பிறகு, மூத்த மனைவிகள் போட்டியில் ஜெயிக்கமாட்டார்கள் என்றுச் சொல்லி முஹம்மது மூத்த மனைவிகளை விவாகரத்து செய்ய முயலுவது நகைப்பிற்கு உரியது.
ஈ) ஒரு கணவனுக்கு மனைவி மீது அதிக அக்கரையிருந்தால், என்ன செய்வான்? அவளை விவாகரத்து செய்வானா? அல்லது இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவளுக்கு உண்டான வேதனையை நீக்கி ஆறுதல்படுத்துவானா? காஃபிர்களை மருத்துவ மனைகளில் சென்று நோட்டமிடுங்கள். தங்கள் வயது முதிர்ந்த மனைவிகளுக்கு சுகம் கிடைக்க, எப்படிப்பட்ட துன்பங்களை காஃபிர் ஆண்கள் திருப்தியாக சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்து திருந்துங்கள். தன்னோடு பல ஆண்டுகள் வாழ்ந்த மனைவிக்கு முதுமை வந்து உடல்நலம் குறைந்துவிட்டது என்பதற்காக, தன் சொத்துக்கள் மற்றும் மீதியுள்ள வாழ்க்கை அனைத்தையும் அவள் ஒருத்திக்காக தாரவாத்து கொடுக்கும் காஃபிர் ஆண்களைப் பார்த்து பாடம் கற்கவேண்டும் முஸ்லிம்கள். இப்படிப்பட்டவர்கள் எங்கே! தன் மனைவிக்கு வயதானதால் விவாகரத்து செய்ய விரும்பிய முஹம்மது எங்கே! முடிவு வாசகர்களிடமுள்ளது. முஹம்மதுவா பின்பற்றத்தகுந்த முன்மாதிரி, வெட்கம்.
5.3 முஹம்மதுவை விட ஸவ்தாவிற்கு அதிக வயது இருக்கும்
இன்னும் சில முஸ்லிம் மேதாவிகள், "முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பியதற்கு காரணம், அவர் முஹம்மதுவை விட மூத்தவர்" என்பதால் என்று காரணங்களைக் சொல்கிறார்கள். இதுவும் வேடிக்கையான கூற்றாகும், இதைப் பற்றி முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜாவோடு ஒப்பிட்டு அடுத்த பாயிண்டில் எழுதியுள்ளேன், அதனை படிக்கவும். ஆனால், உண்மையில் ஸவ்தாவிற்கு முஹம்மதுவை விட குறைவான வயது இருக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பி. ஜைனுல் ஆபிதீன் – குர்-ஆன் தமிழாக்கம் விளக்கம் 378
378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?
இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளம் பெண்ணைத் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மனைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா (ரலி) அவர்களைத் தான். நிச்சயமாக காம உணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது உறுதி.
இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.
அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்குக் காம உணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
மூலம்: பி. ஜைனுல் ஆபிதீன் – குர்-ஆன் தமிழாக்கம் விளக்கம் 378
ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் முதல்பரிசு பெற்ற முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம்:
. . . அவன் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.
கதீஜா (ரழி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார்.
மூலம்: அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் (முபாரக்பூர், உ.பி., இந்தியா), புத்தகம்: அர்ரஹீக்குல் மக்தூம் - முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்.
மேற்கண்ட விளக்கத்தில், பிஜே அவர்கள் கூறியவை:
அ) முஹம்மது ஸவ்தா அவர்களை திருமணம் செய்யும் போது, முஹம்மதுவிற்கு 50 வயது, ஸவ்தாவிற்கு 55 வயது
ஆ) ஸவ்தா இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவை
இ) முஹம்மது மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.
இப்போது உண்மையில் ஸவ்தா அவர்களின் வயது எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடுவோம். ரஹீக் புத்தகத்தில், ஸவ்தா முஹம்மதுவை விட மூத்தவர் என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது, ஆனால், பிஜே அவர்கள் தான் அது என்ன வயது சொல்லியுள்ளார்.
பீஜே அவர்கள் சொன்ன வயது எண்ணிக்கையை (55 வயது) எடுத்துக்கொண்டால், நமக்கு கீழ்கண்ட வயது பட்டியல் கிடைக்கும்.
விவரம் | முஹம்மதுவின் வயது | ஸவ்தாவின் வயது | கி.பி. | ஹிஜ்ரி |
---|
முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்த போது | 50 | 55 | 620 | ஹிஜ்ரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு |
விவாகரத்து செய்ய விரும்பிய போது | 53 | 58 | 623 | ஹிஜ்ரி 1 |
முஹம்மதுவின் மரணத்தின் போது | 62 | 67 | 632 | ஹிஜ்ரி 10 |
ஸவ்தா மரித்த போது | 104 | 109 | 674 | ஹிஜ்ரி 54 |
ஸவ்தா சதத்தை தாண்டிய பிறகு மரித்தார்களா?
பிஜே அவர்கள் கொடுத்த வயதை கணக்கிடும் போது, அதாவது இவ்விருவரின் திருமணத்தின் போது, முஹம்மதுவிற்கு 50, ஸவ்தாவிற்கு 55 வயது என்று கணக்கிட்டால், ஸவ்தா மரிக்கும் போது அவருக்கு 109 வயது இருக்கவேண்டும். இது சாத்தியமில்லை என்பதை அறியலாம், ஏனென்றால், முஸ்லிம்களின் அன்னைகள் என்று அழைக்கப்பட்ட முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவரான ஸவ்தா அவர்கள் 109 வயதில் மரித்தால், நிச்சயமாக இந்த விவரத்தை நாம் ஹதீஸ்களில் அல்லது இதர சரித்திர நூற்களில் (சீராக்கள்) கண்டு இருந்திருப்போம். ஆனால், எந்த ஒரு ஹதீஸ் தொகுப்பில் கூட, "ஸவ்தா அவர்கள் 100 வயதுக்கு பிறகு (109ல்) மரித்தார்கள்" என்ற விவரமில்லை (தெரிந்தவர்கள் அதனை எனக்கு தெரிவிக்கவும்). முஹம்மதுவின் தோழர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஸவ்தா அவர்கள் பற்றிய இந்த முக்கியமான விவரத்தை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.
ஆக, பிஜே அவர்கள் குறிப்பிட்ட வயது விவரம் தவறானது என்பது இதன் மூலம் அறியலாம். ஸவ்தா அவர்கள் தம்முடைய 55வது வயதில் முஹம்மதுவை திருமணம் செய்தார் என்பதை ஒப்புக்கொள்ளமுடியாது, மேலும் அதற்கு சரியான ஆதாரமில்லை.
முஹம்மதுவின் இந்த விவாகரத்துச் செயல், அனேக முஸ்லிம் அறிஞர்களுக்கு தர்மசங்கடமாக இருப்பதினால், மற்றவர்கள் முன்பு முகம் சுளிக்கச்செய்வதால், பழியை ஸவ்தா அவர்கள் மீது சுமத்துகிறார்கள். ஸவதா கிழவியாக இருந்தார்கள், அதனால் அவர் விவாகரத்து செய்ய விரும்பினார் என்று சொந்தமாக கருத்தைச் சொல்லி, முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள கரும்புள்ளையை பச்சைப்பொய்யால் மூடப் பார்க்கிறார்கள்.
ஸவ்தா அவர்களுக்கு என்ன வயது இருந்திருக்க வாய்ப்பு உள்ளது?
பிஜே அவர்களின் வயது கணக்கு தவறு என்பதைக் கண்டோம். இப்போது இன்னொரு கணக்கைப் பார்ப்போம். ஸவ்தா அவர்களுக்கு 50 வயதில் திருமணம் ஆகியிருந்தால்? அதாவது முஹம்மதுவிற்கும், ஸவ்தா அவர்களுக்கும் ஒரே வயது (50) இருக்கும் போது திருமணம் ஆகியிருந்தால்?
இந்த கணக்கின்படி பார்த்தாலும், ஸவ்தா அவர்கள் மரிக்கும் போது அவரது வயது 104 என்று வருகிறது. இதுவும் சரியானதாக இருக்கமுடியாது. இதற்கு காரணம் முஸ்லிம்களின் அன்னையர் 100 வயதை தாண்டி மரித்திருந்தால், ஆரம்பகால முஸ்லிம்கள் அதனை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள். ஆக, ஸவ்தா அவர்களுக்கு 50 வயது இருக்கும் போது திருமணம் ஆனது என்பதைக் கூட ஏற்கமுடியாது.
ஸவ்தா அவர்களின் வயது திருமணத்தின் போது முஹம்மதுவிற்கு சமமாக இருக்கமுடியாது, அதே போல அதிகமாகவும் இருக்கமுடியாது என்பதைக் கண்டோம்.
ஸவ்தா மரிக்கும் போது 90 அல்லது 80 வயது இருந்திருந்தால்?
ஸவ்தா அவர்கள் மரித்த ஆண்டு, ஹிஜ்ரி 54 (கி.பி. 674) ஆகும். அவர் 100ஐ தாண்டியிருக்கமாட்டார் என்பதை மேலே கண்டோம். ஒருவேளை அவர் மரிக்கும் போது 80 அல்லது 90 வயதுடையவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால், முஹம்மதுவை அவர் திருமணம் செய்யும் போது அவருக்கு என்ன வயது இருந்திருக்கும்?
ஸவ்தாவின் வயது பற்றிய முழு பட்டியல்:
விவரம் | முஹம்மதுவின் வயது | ஸவ்தாவின் வயது | கி.பி. | ஹிஜ்ரி |
---|
முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்த போது | 50 | 55 | 50 | 37 | 27 | 620 | ஹிஜ்ரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு |
விவாகரத்து செய்ய விரும்பிய போது | 53 | 58 | 53 | 40 | 30 | 623 | ஹிஜ்ரி 1 |
முஹம்மதுவின் மரணத்தின் போது | 62 | 67 | 62 | 49 | 39 | 632 | ஹிஜ்ரி 10 |
ஸவ்தா மரித்த போது | 104 | 109 | 104 | 90 | 80 | 674 | ஹிஜ்ரி 54 |
கூர்ந்து கவனியுங்கள், ஸவ்தா 80 வயதில் மரித்திருந்தால், அவருக்கு 27ம் வயதில் முஹம்மதுவோடு திருமணம் ஆகியிருக்கும். அவர் 90 வயதில் மரித்திருந்தால் அவருக்கு 37ம் வயதில் திருமணம் ஆகியிருக்கும். இந்த இரண்டு நிலையிலும், முஹம்மதுவை விட 13 அல்லது 23 ஆண்டுகள் குறைவானவராக ஸவ்தா இருந்திருக்கவேண்டும். பிஜே போன்ற அறிஞர்களுக்கு புரிகின்றதா?
ஆக, ஸவ்தா அவர்கள் முஹம்மதுவை திருமணம் செய்யும் போது, அவரை விட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இளயவராக இருந்திருப்பார். மூன்று ஆண்டுகள் கழித்து முஹம்மது அவரை விவாகரத்து செய்ய விரும்பியுள்ளார். இந்த காலத்திலும் கூட ஸவ்தா அவர்கள் 30/40 வயதில் இருந்திருப்பார், முஹம்மதுவின் வயது 53 ஆண்டுகளாக இருந்திருக்கும். எப்படிப்பார்த்தாலும், ஸவ்தா முஹம்மதுவை விட இளையவரே என்பது இதன் மூலம் அறியலாம்.
இப்னு இஷாக் 'இவர் முதியவர் (Old Woman)' என்பதின் அர்த்தமென்ன?
இதைப் பற்றி நான் ஆய்வு செய்யும் போது, விக்கிபீடியாவில் ஸவ்தாவின் கட்டுரையின் நம்பகத்தன்மையைப் பற்றிய விவாதங்களை காணநேரிட்டது. அதனை கீழே தருகிறேன், ஏதாவது புரிகின்றதா என்பதைப் பாருங்கள்.
If in 620 she is 50 years old, at shes death in 674 she is 104 years old. Hummm, I don't think that this is correct. Enciclopaedya of Islam give the death date as 674, then she must be younger in 620, perhaps about 30.--88.16.136.91 (talk) 12:03, 25 July 2011 (UTC)
Sawda's age is not given in any primary source. I agree with you that if she had lived to be 104, this would have been so unusual that people would have commented, so she was almost certainly younger than Muhammad. We can only guess her age from indirect information. (1) Encyclopaedia of Islam is quoting Tabari, who definitely says she died in September/October 674, and adds that some alternative date of which he is aware is wrong. (2) The date when Muhammad began divorcing Sawda was "after he married Umm Salama" (April 626), suggesting it was before he married his next wife. This was Zaynab bint Jahsh, whom he married in March 627. It makes sense that Muhammad would have considered divorcing someone at that point, since Zaynab would be his fifth concurrent wife, and he had always said a Muslim should not have more than four wives. The reason given by Tabari and Abu Dawud, however, is that "Sawda grew old". In context, this probably means that she "reached menopause" - Arabic has two different words for a "woman of childbearing age" and a "post-menopausal woman", and the latter is often translated as "old woman", even though she might be only 45 years old. (3) If Muhammad considered Sawda "old", this presumably means she was significantly older than his next-oldest wife. This was Zaynab bint Jahsh, who was born around 589. All this information together suggests that Sawda was born around 580, but that we can't be dogmatic on this point.Grace has Victory (talk) 03:17, 21 August 2012 (UTC)
முஹம்மதுவின் ஐந்தாவது மனைவி ஜைனப்பை அவர் திருமணம் செய்யும் போது, ஜைனப்பிற்கு 34/35 வயது இருக்கும். இந்த நேரத்தில் முஹம்மதுவிற்கு இருந்த மனைவிகளில் மிகவும் வயது சென்றவர் ஸவ்தா, அதாவது இவருக்கு வயது 40 இருக்கலாம். எனவே, யாரையாவது ஒருவரை விவாகரத்து செய்ய முஹம்மது விரும்பினார். இந்த நேரத்தில் அவருக்கு இருந்த மனைவிகளில் அதிக வயதுடையவர் என்று சொல்லும் போது, அது 40 வயதுடைய ஸவ்தா தான். ஆக, வயது மூத்தவர் என்ற சொற்றொடர், ஸவ்தா முஹம்மதுவை விட மூத்தவர் என்ற பொருளில் அல்லாமல், முஹம்மதுவிற்கு அப்போது இருந்த மனைவிமார்களில் இவர் மூத்தவர் என்ற அர்த்தம் தருகின்றது. மேலும், ஒரு பெண் 40 வயதை தாண்டும் போது, மாதவிடாய் நின்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது, இதனை குறிக்கவும் சொல்லப்பட்டு இருந்திருக்கலாம்.
37-40 வயதுடைய மனைவியை முஹம்மது விவாகரத்து செய்ய முயன்றது சரியானதல்ல. விவாகரத்து விஷயத்துக்கு வரும் போது, எந்த வயது மனைவியாக இருந்தாலும், அவளை வயதின் காரணம் காட்டி விவாகரத்து செய்வது, ஒரு நல்ல மனிதனுக்கு அழகல்ல.
இதுவரை கண்ட விவரங்களின் சுருக்கம் இது தான். ஸவ்தாவை முஹம்மது திருமணம் செய்யும் போது, அல்லது மூன்று ஆண்டுகளூக்கு பிறகு விவாகரத்து செய்ய விரும்பிய போது, ஸவ்தா அவர்கள் முஹம்மதுவை விட 10லிருந்து 13 ஆண்டுகள் வரை குறைவானவராகத் தான் இருந்திருக்கிறார். ஸவ்தா அவர்கள் பருமனானவராக இருந்திருக்கின்றார் என்பதாலும், தனக்கு புதிய இளம் மனைவிகள் கிடைத்துக்கொண்டு இருந்ததாலும், ஒரு முஸ்லிமுக்கு நான்கு மனைவிகள் தான் அதிகபட்சம் என்பதால், தானும் அதன் படி செய்ய விரும்பியிருக்கலாம். பழைய காரை விற்றால் தானே புதிய கார் வாங்கமுடியும்!
6) ஸவ்தாவின் இடத்தில் கதிஜா அவர்கள் இருந்திருந்தால் - அமிலப்பரிட்சை
முஸ்லிம்களின் அன்னையர்களில் முஹம்மதுவின் முதலாவது மனைவி கதிஜா அவர்களுக்கு ஒரு தனி இடம் உள்ளது. சில விவரங்கள் சரியாக சென்றடையவேண்டுமென்றால், சில நேரங்களில் முஸ்லிம்களுக்கு அமிலப்பரிட்சை வைக்கவேண்டும். ஸவ்தா அவர்களின் நிலையில், முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் இருந்திருந்தால், முஹம்மது இப்படி தலாக் கொடுத்து இருந்திருப்பாரா? என்பது பல கோடி மதிப்புப்பெறும் கேள்வியாகும்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்லவேண்டுமென்றால், 'கதிஜா அவர்கள் மரிக்காமல் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருந்தால், முஹம்மது ஒரு ஒழுக்கச்சீலராக திகழ்ந்து இருந்திருப்பார், அவருடைய மரணம் வரை அவர் இந்த கதிஜாவோடு மட்டுமே வாழ்ந்திருப்பார், அவருடைய வாழ்க்கையிலே இன்னொரு மனைவிக்கு இடமிருந்திருக்காது, அடிமைப்பெண்களோடு விபச்சாரம் புரிவது இருந்திருக்காது, முஸ்லிம்கள் அனைவரும் ஏகபத்தினி விரதம் பூண்டு இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்' என்பது என் திடமான நம்பிக்கையாகும்.
வாசகர்கள் கவனிக்கவேண்டும், கதிஜா அவர்கள் முஹம்மதுவை திருமணம் செய்த போது, அவருக்கு 40 வயது மற்றும் முஹம்மதுவிற்கு 25 வயது. கதிஜா அவர்கள் முஹம்மதுவை விட 15 வருடங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதிஜா அவர்கள் முஹம்மதுவிற்கு வேலை கொடுத்த எஜமானர் ஆவார். அதன் பிறகு இவ்விருவரும் திருணம் செய்துக்கொண்டார்கள். அடுத்த 25 ஆண்டுகள், இவர்கள் இருவரும் ஈருடல் ஓருயிர் போல வாழ்ந்தார்கள். முஹம்மதுவிற்கு 50 ஆண்டுகள் இருக்கும் போது, கதிஜா 65 வயது நிரம்பிய மூதாட்டியாவார். பிஜே அவர்களின் அதே வரிகளில் சொல்லவேண்டுமென்றால் கதிஜா அவர்கள் "இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதியவர்".
கதிஜா அவர்களை ஒருவேளை அல்லாஹ் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால்…!?!
முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள்:
அ) ஒரு வேளை கதிஜா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், முஹம்மது இத்தனை திருமணங்கள் செய்திருப்பாரா? (11க்கும் அதிகமான மனைவிகள், மற்றும் செக்ஸ் அடிமைகள்).
ஆ) ஸவ்தாவை விட, கதிஜா தான் கிழவியாக இருந்திருப்பார். அந்த நேரத்தில் முஹம்மது கதிஜா அவர்களை முதலாவது தலாக் கொடுத்து இருந்திருப்பாரா?
இ) முஹம்மது ஏழ்மையில் 25 வயதுடைய வாலிபனாக இருந்தபோது, தனக்கு நல்ல செல்வம் கிடைக்கும் என்பதால், 40 வயது பெண்ணையும் திருமணம் செய்ய தயங்காமல், கதிஜாவை திருமணம் செய்தார். ஆனால், அதே முஹம்மது நபியாக முடிசூட்டப்பட்ட பிறகு, தலைகீழாக மாறிவிட்டாரே! இது என்ன கொடுமை? நபியாக மாறுவதற்கு முன்பாக மிகவும் நல்லவராக இருந்துள்ளார். நபியாக மாறியபிறகு தான் அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது.
ஈ) ஒருவேளை கதிஜா அவர்கள் மரிக்காமல் இருந்திருந்தால், முஹம்மது தம் வாழ்நாள் முழுவதும் ஒரே மனைவியை உடையவராகவே வாழ்ந்திருப்பார். இல்லை, கதிஜா உயிரோடு இருந்திருந்தாலும், முஹம்மதுவிற்கு பல மனைவிகளை அல்லாஹ் கொடுத்திருப்பார் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா?
உ) முஹம்மதுவின் பலதாரமணத்தை கதிஜா ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால், அவருக்கு விவாகரத்து கொடுத்திருந்திருப்பாரா முஹம்மது? அல்லாஹ் கதிஜாவை தலாக் பற்றிச் சொல்லி மிரட்டி இருந்திருப்பாரா?
ஊ) கதிஜா அவர்கள் எதிர்க்கவில்லையென்றாலும், முஹம்மதுவை விட 15 ஆண்டுகள் மூத்தவர் என்பதால், தாம்பத்ய வாழ்விற்கு உபயோகமற்றவர் என்பதால், முஹம்மது அவருக்கு விவாகரத்து கொடுத்திருந்திருப்பாரா?
எ) பிஜேவின் படி, ஸவ்தாவிற்கு 5 வயது அதிகம் என்பதால், விவாகரத்து செய்தது சரியானது என்று முஹம்மதுவிற்கு வக்காளத்து வாங்கும் முஸ்லிம்கள், முஹம்மதுவை விட, 15 ஆண்டுகள் அதிகமாக இருந்த மூதாட்டியை கதிஜாவை விவாகரத்து செய்திருந்தால், அதற்கும் வக்காளத்து வாங்குவீர்களா?
முடிவுரை:
இதுவரை நாம் ஆய்வு செய்த விவரங்களை திறந்த மனதுடன் சிந்தித்துப்பாருங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர், தன் மனைவி அழகாக இல்லை என்பதால், வயதாகிவிட்டது என்பதால் அவரை விவாகரத்து செய்தால், இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஒவ்வொரு முஸ்லிமும், முஹம்மதுவை பின்பற்ற நினைத்தால், முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? திருமணத்தின் போது இளமையாக இருந்தாலும், 40-50ம் வயதின் போது, என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிடுவார் என்று பெண்கள் பயப்படமாட்டார்களா? இப்படியெல்லாம் முஸ்லிம் ஆண்கள் செய்வதில்லை என்று நீங்கள் சொன்னால், 'முஹம்மதுவின் இந்த செயல் தவறானது, நாங்கள் அதனை இன்று பின்பற்றுவதில்லை' என்று ஒப்புக்கொள்கிறீர்கள் என்று நாம் கருதலாமா?