ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 27 செப்டம்பர், 2021

எல்லா முஸ்லிம்களும் “தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கு” நட்டு கழன்றவர்கள் (பைத்தியங்கள்) அல்ல‌

பகுத்தறிவுள்ள, சுய நினைவில் உள்ள ஒரு நபர் நிச்சயமாக முஸ்லிம் தீவிரவாதியாக இருக்கமுடியாது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். ஆனால், இக்கூற்றில் உண்மையுள்ளதா?

கடந்த சில வருடங்களாக இஸ்லாத்தைப் பற்றி நான் வகுப்புக்கள் எடுக்கும் போதும் மற்றவர்களிடம் உரையாடும் போதும், "பயங்கரவாதிகள் பைத்தியக்காரர்கள் ஆவார்கள், அல்லது குழப்பப்பட்ட‌ முஸ்லிம்கள்" என்று பலர் நினைப்பதை நான் கவனித்தேன். முஸ்லிம் பயங்கரவாதிகள் என்பவர்கள் "படிக்காதவர்கள், ஏழைகள், வேலையில்லாத இளைஞர்கள் ஆவார்கள்" என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இவர்கள் தற்கொலைத் தாக்குதல் செய்து மரித்தாலும், இவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்வதிலிருந்து இவர்கள் பகுத்தறிவில்லாதவர்கள் என்று நிருபித்துக்கொள்கிறார்கள் என்றும் நல்ல முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலைப்பாடு உண்மையாக இருக்கவாய்ப்பு இல்லை. முஸ்லிம்களால் எழுதப்பட்ட இந்த ஆய்வுக்கட்டுரை (Islam's best, brightest and (increasingly) radical By Hassan M. Fattah Published: July 15, 2007) என்ன சொல்கிறது தெரியுமா? பல முஸ்லிம் பயங்கரவாதிகள் படித்தவர்களாகவும், நல்ல வேலைகளை செய்கிறவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று கூறுகிறது. மேலும், இவர்களில் மருத்துவர்கள் இருக்கிறார்கள், வங்கியாளர்கள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள் மற்றும் நல்ல குடும்பங்களோடும், பிள்ளைகளோடும் வாழும் மக்களாக இருந்துள்ளார்கள் என்று கூறுகிறது. இப்படிப்பட்டவர்கள் தற்கொலை தாக்குதல் செய்து, மற்றவர்களையும் கொன்று, இவர்களும் கொல்லப்படுவதால், இவர்கள் குடும்பங்களை இழக்கிறார்கள், இவர்களின் குடும்பங்கள் அனாதைகளாகிறார்கள். எனவே, முஸ்லிம் தீவிரவாதிகள் பகுத்தறிவில்லாதவர்கள், பாமர மக்கள் என்று சொல்வதற்கில்லை.

இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டர்கள் தான் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்ற கூற்று பொய்யானது என்பது இப்போது புரிந்திருக்கும். முஸ்லீம் தீவிரவாதிகள் வீடுகளை வாங்குகிறார்கள், நல்ல‌ குடும்பங்களை உடையவர்களாக இருக்கிறார்கள், , தொழில்முறை  முன்னேற்றமான வேலைகளை செய்கிறார்கள். நாம் சில வீடியோக்களில் பார்ப்பது போன்று, தீவிரவாதிகள் ஒருவகையான மனவளர்ச்சி இல்லாதவர்கள் என்று சித்தரித்து செய்திகள் வெளியாவதெல்லாம் ஏற்புடையதன்று. ஆனால் உண்மை என்னவென்றால், முஸ்லிம்கள் அந்த தீயச் செயல்களை செய்வதற்கு முன்பு, அவர்களின் வாழ்க்கை நம்மைப்போன்று ஒரு சாதாரண நல்ல குடிமகன்களைப் போன்றே சிறப்பாக இருந்திருக்கிறது. அவர்களின் முந்தைய வாழ்க்கையைப் பார்த்தால், "இவர்களா இப்படி செய்தார்கள்" என்று ஆச்சரியப்படுவீர்கள்! எனவே, அவர்கள் புத்தியில்லாதவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரைக் குத்தமுடியாது. அவர்கள் மிகவும் தெளிவாக இருந்து தான் இச்செயல்களை செய்கிறார்கள். 

முஸ்லிம் தீவிரவாதிகள் அறிவில்லாதவர்கள் அல்ல, தங்கள் மார்க்கத்தை (உம்மாவை) இடது வலது புறம் பிசகாமல் பின்பற்றுகிறார்கள். இவர்களின் நம்பிக்கை குர்ஆன் மீதும் மற்றும் ஹதீஸ்கள் மீதும் உள்ளது. இவ்விரண்டும் தான் இவர்கள் அந்த முடிவுக்கு வர உதவுகிறது.  இவர்கள் தங்கள் மார்க்கத்தில் முதிர்ச்சி அடைந்துவிட்டோம், அனைத்தும் புரிந்துக்கொண்டோம் என்று கருதும் போது, அடுத்த நிலைக்குச் செல்ல முயலுகிறார்கள், இஸ்லாமின் படி, இலக்கை அடைகிறார்கள் அவ்வளவு தான். உலக மக்களுக்கு அது தீவிரவாதமாக தெரிகிறது. இவர்களுக்கோ "அல்லாஹ் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுபவர்களாக" தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டு மரிக்கிறார்கள்.

தங்களுடைய நல்லொழுக்கம் (ஜிஹாதிகளாக மரிப்பது), ஒரு நற்செயல், அல்லாஹ் அங்கீகரிக்கும் செயல் என்று அவர்கள் கருதுகிறார்கள், போதிக்கப்படுகிறார்கள். இங்கு ஒன்றை நாம் கவனிக்க தவறக்கூடாது, "ஒருவர் மிகவும் ஆழமாக தன் நம்பிக்கையை பின்பற்றும் போது, அது துரதிஷ்ட வசமாக, ஒரு பொய்யான மார்க்கமாகவும், அதே நேரத்தில் தீயதாகவும் இருந்தால், இஸ்லாமிய தீவிரவாதிகளால் உண்டாகும் தீய‌விளைவுகள் தொடர்ந்து நடப்பது போன்று நடக்க ஆரம்பிக்கும்". இதனை மறக்காதீர்கள்: ஒருவர் ஆழமாக எந்த செயல் செய்தாலும், அச்செயலுக்கு ஏற்ற விளைவுகள் நிச்சயம் உண்டாகும்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

குர்‍ஆன் 30:26: குர்‍ஆன் முரண்பாடு: வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடக்கின்றனவா?

குர்‍ஆனிலிருந்து ஒரு வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்: குர்‍ஆன் 30:26

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து நடக்கின்றன.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவையாவும் அவனுக்கே உரியன! (இவை) ஒவ்வொன்றும் அவனுக்கே கீழ்ப்படிந்து நடக்கின்றன.

பீஜே தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை.

ஆங்கிலத்தில்:

Pickthall:

Unto Him belongeth whosoever is in the heavens and the earth. All are obedient unto Him.

Sahih Intl:

And to Him belongs whoever is in the heavens and earth. All are to Him devoutly obedient.

Yusuf Ali:

To Him belongs every being that is in the heavens and on earth: all are devoutly obedient to Him.

Transliteration (ஒலிப்பெயர்ப்பு):

Walahu man fee alssamawati waalardi kullun lahu qanitoona

இந்த வசனத்தில் அப்படி என்ன முரண்பாடு உள்ளது? என்ற சந்தேகம் வருகின்றதா? இந்த வசனம் பெரும்பான்மையான குர்‍ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது என்றுச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

குர்‍ஆன் 30:26ன் பொருள்:

இந்த வசனத்தின் படி வானத்தில் உள்ளவைகள் அனைத்தும், அதாவது தேவதூதர்கள்/மலக்குகள்/ஜின்கள் மற்றும் மற்ற கிரகங்கள் அனைத்தும் அவனுக்கு கீழ்படிகின்றன, மேலும் பூமியில் உள்ளவைகள் கூட அவனுக்கு கீழ்படிகின்றன. பூமியில் உள்ளவைகள் என்றால், மரம் செடி கொடி, மலைகள், கடல், நிலத்தில் நீரில் வாழும் மிருகங்கள், கடைசியாக மனிதர்கள் உட்பட அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றன.

குர்‍ஆனின் முரண்பாடு:

உண்மையாகவே வானத்தில் மற்றும் பூமியில் உள்ளவைகள் (உள்ளவர்கள்) அனைத்தும் அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றனவா?

இந்த கேள்விக்கு குர்‍ஆனே "இல்லை, என்று அழுத்தமாக பதில் சொல்கிறது". 

வானத்தில் கீழ்படியாமை: அல்லாஹ்வின் சமூகத்திலேயே கீழ்படியாமை தொடங்கியது.

கீழ்கண்ட அனைத்து வசனங்களிலும் பல முறை அல்லாஹ் தனக்கு சைத்தான்/இப்லீஸ் கீழ்படியவில்லை என்று அங்கலாய்க்கிறான். நீ ஏன் நான் சொன்னபடி செய்யவில்லை என்று கேள்வி கேட்கிறான், அதற்கு 'ஆமாம், நான் உனக்கு கீழ்படிய முடியாது' என்று இப்லீஸ் பதில் சொல்கிறான். கீழ்படியாமல் இருந்தது மட்டுமல்ல, அதன் காரணத்தையும் நச்சென்று கூறியுள்ளான். வானத்தில் அல்லது அல்லாஹ்வின் சமுகத்தில் உள்ள/இருந்த‌ இப்லீஸ்/சைத்தான் அல்லாஹ்விற்கு கீழ்படியவில்லை என்பதற்கு குர்‍ஆனிலிருந்தே சான்றுகள்.

இவ்வசனங்கள் அனைத்தும், குர்‍ஆன் 30:26க்கு முரண்படுகின்றதல்லவா!

குர்‍ஆன் 2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

குர்‍ஆன் 7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், "ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)" என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

குர்‍ஆன் 7:12. "நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

குர்‍ஆன் 15:31. இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். 15:32. "இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான். 15:33. அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.

குர்‍ஆன் 17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: "களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?" என்று கூறினான்.

குர்‍ஆன் 18:50. அன்றியும், "ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக;அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்;அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான் ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

குர்‍ஆன் 20:116. "நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.

குர்‍ஆன் 38:74. இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான். 38:75. "இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான். 38:76. "நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்" என்று (இப்லீஸ்) கூறினான்.

(அனைத்து வசனங்கள் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து மேற்கோள் காட்டப்படுகின்றன‌)

பூமியில் கீழ்படியாமை: 

மேற்கண்ட வசனங்களின் படி வானத்தில் அல்லஹ்விற்கு கீழ்படியாதவன் (இப்லீஸ்) இருக்கிறான் என்பதைக் காண்டோம். இப்போது நம் கவனத்தை பூமியின் பக்கம் திருப்புவோம்.

மனிதர்கள் தவிர மற்றவைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு கீழ்படிவதாக நாம் கருதிக்கொள்வோம். மனிதர்ள் தனக்கு கீழ்படியவில்லை என்றும், அவர்கள் இதனால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அனேக முறை இப்படிப்பட்டவர்களை தாம் தண்டித்து அழித்துவிட்டதாகவும் அல்லாஹ் குர்‍ஆனில் ஆணித்தரமாகச் சொல்கின்றான்.

கீழ்கண்ட வசனங்கள் அனைத்தும் குர்‍ஆன் 30:26க்கு முரண்படுகின்றதல்லவா?

1) ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார் 

குர்‍ஆன் 20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.

2) அல்லாஹ்வுக்குப் பணியாது மாறு செய்து வரம்புகளை மீறினார்கள்

குர்‍ஆன் 2:61. இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.

3) மாறு செய்தோம் என்று நேரடியாக மக்கள் கூறினார்கள்

குர்‍ஆன் 2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.

4) மக்களே மாறு செய்யாதீர்கள் என்று கட்டளை

குர்‍ஆன் 2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

5) அல்லாஹ்வின் சான்றுகளை கண்டும் மாறு செய்தார்கள்

குர்‍ஆன் 3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

குர்‍ஆன் 3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

6) மாறு செய்பவனுக்கு தண்டனை

குர்‍ஆன் 4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

குர்‍ஆன் 4:42. அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.

குர்‍ஆன் 7:135. அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.

குர்‍ஆன் 16:112. மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.

குர்‍ஆன் 19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

குர்‍ஆன் 24:63. (முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

குர்‍ஆன் 29:66. அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.

குர்‍ஆன் 65:8. எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.

குர்‍ஆன் 69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

குர்‍ஆன் 73:16. எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.

7) வரம்பு மீறி மாறு செய்தவர்கள் நபிகளால் சபிக்கப்பட்டவர்கள்

குர்‍ஆன் 5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.

8) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்தவர்கள்

குர்‍ஆன் 9:77. எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

9) ஆது கூட்டத்தினர் மாறு செய்தார்கள், அவர்களுக்கு கேடு தான்

குர்‍ஆன் 11:59. (நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.

குர்‍ஆன் 11:60. எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக "ஆது" கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான "ஆது" கூட்டத்தாருக்கு கேடுதான்.

10) மாறு செய்தால் வேதனையுண்டு என்ற எச்சரிக்கை

குர்‍ஆன் 14:7. "(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

11) யார் மாறு செய்தாலும், அல்லாஹ்விற்கு நஷ்டமில்லை

குர்‍ஆன் 14:8. மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) "நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்" என்றும் கூறினார்.

12) வானத்திலும் அல்லாஹ்விற்கு மாறு செய்ய ஷைத்தான் உள்ளான் என்று பூமியில் உள்ளவனின் எச்சரிக்கை

குர்‍ஆன் 19:44. "என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.

13) மாறு செய்பவர்கள் பாவிகள்

குர்‍ஆன் 24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

14) மாறு செய்பவர்கள் பகிரங்க வழிகேட்டில் உள்ளவர்கள்

குர்‍ஆன் 33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

15) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்

குர்‍ஆன் 42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

குர்‍ஆன் 82:6. மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

இதுவரை பார்த்த வசனங்கள் அனைத்தும், உலகில் உள்ள மனிதர்கள் தங்கள் சுய விருப்பத்தின் படி, அல்லாஹ்விற்கு கீழ்படிவார்கள், அதே போன்று கீழ்படியாமலும் போவார்கள் என்பதைத் தான் காட்டுகின்றது. இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுத்தான், இன்னும் கொடுப்பான் என்று கூறுகின்றன.

ஆனால், குர்‍ஆன் 30:26ஐ படிக்கும் போது, பூமியிலுள்ள அனைத்தும், அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றன என்றுச் சொல்வது, மேற்கண்ட அனைத்து வசனங்களுக்கும் முரண்படும் ஒன்றாகும்.

பூமியில் மனிதன் தவிர மற்றவைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றன என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வானத்தில் இப்லீஸ் தவிர மற்றவர்கள் கீழ்படிகிறார்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட வசனத்தில்(குர்‍ஆன் 30:26) உள்ளது போன்று சொல்லமுடியாது.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர்.

இந்த முரண்பாட்டுக்கு யாராவது பதில் சொல்லமுடியுமா?

குறிப்பு: சில முஸ்லிம்களின் பதில்:

சிலர் இப்படி சொல்லக்கூடும், குர்‍ஆன் 30:26 சொல்வது "கீழ்படிவது (Obedience)" பற்றியல்ல, "அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள்(under Control) அனைவரும் இருப்பது பற்றியாகும்". 

இது தவறான வாதமாகும், குர்‍ஆன் 30:26ஐ அனைவரும் "கீழ்படிகிறார்கள்" என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள். இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இறைவனின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே செல்லமுடியாது. ஆனால், கீழ்படிவது என்று வரும் போது, அது தனி மனிதனின் சுய விருப்பமாகும்.  

அரபி மூல வார்த்தை கானிதூன:

குர்‍ஆன் 30:26ம் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள, அரபி வார்த்தை "கானிதூன" என்பதாகும், இதன் பொருள் "கீழ்படிவதாகும்".  இவ்வார்த்தை வரும் அனைத்து குர்‍ஆன் வசனங்களிலும், "இது கீழ்படிவது" என்பது பற்றியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வார்த்தை வரும் குர்‍ஆன் வசனங்களை குர்‍ஆன் கார்பஸ் தளத்திலிருந்து கீழ்கண்ட விவரங்களை தருகிறோம்.

Verb (form I) - to be obedient  
(3:43:2) uq'nutīBe obedientيَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ
(33:31:2) yaqnutis obedientوَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ

  

Active participle  
(2:116:14) qānitūna(are) humbly obedientسُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ
(2:238:8) qānitīnadevoutly obedientوَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
(3:17:3) wal-qānitīnaand the obedientالصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
(16:120:5) qānitanobedientإِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ
(30:26:8) qānitūna(are) obedientوَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ
(33:35:6) wal-qānitīnaand the obedient menوَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ
(39:9:3) qānitun(is) devoutly obedientأَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ
(66:12:17) l-qānitīnathe devoutly obedientوَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

  

Active participle  
(1) Noun  
(4:34:16) qānitātun(are) obedientفَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ
(33:35:7) wal-qānitātiand the obedient womenوَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ
   
(2) Adjective  
(66:5:12) qānitātinobedientعَسَىٰ رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ مُؤْمِنَاتٍ قَانِتَاتٍ

Source : Quran Corpus

தேதி: 24th Sep 2021


உமரின் குர்-ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran_contra_30_26.html


செவ்வாய், 14 செப்டம்பர், 2021

பெரும்பான்மையான கல்லறை தண்டனைகளுக்கு காரணம்: சிறுநீர் - ஆனால் முஹம்மதுவின் சிறுநீரை குடித்தால்...

இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது கூறினார்:

"கல்லறையின் பெரும்பாலான தண்டனைகள் சிறுநீர் காரணமாக கொடுக்கப்படுகின்றன‌" (நூல்: சுனன் இப்னு மாஜா ,1, 82)

கால்சட்டை, பைஜாமா அல்லது பேன்ட் கணுக்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார். ஒருவேளை சிறுநீர் சொட்டுகள் ஆடைகளில் பட்டு, இதனால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால், இந்த கட்டளையை அவர் கொடுத்து இருந்திருக்கலாம். ஒரு மனிதன் செய்யும் கற்பழிப்புக்கள், கொலைகள், படுகொலைகள் போன்ற தீயசெயல்களைக் காட்டிலும், சிறுநீர் ஆடைகளில் படுவது அதிக ஆபத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்கும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் போல தெரிகின்றது.

அமர் இப்னு அல்-அஸ் அறிவித்ததாவது: அப்துர்ரஹ்மான் இப்னு ஹஸனா அறிவித்தார்: நானும் அமர் இப்னு அல்-அஸும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர் ஒரு தோல் பையை கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். அவர் அந்த தோல்பையினால் மூடிக்கொண்டு சிறுநீர் கழித்தார். பிறகு நாங்கள் சொன்னோம்: அவரைப் பாருங்கள். அவர் ஒரு பெண் செய்வது போல் சிறுநீர் கழிக்கிறார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டார்கள், மேலும் கூறினார்கள்: பனூ இஸ்ராயில் (யூதர்களில்) ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் மீது சிறுநீர் விழும்போது, சிறுநீர் விழுந்த இடத்தை அவர்கள் வெட்டிவிடுவார்கள்; ஆனால் அவர் (அந்த நபர்) அவர்களை (அவ்வாறு செய்ய) தடை செய்தார், மேலும் அவரது கல்லறையில் தண்டிக்கப்பட்டார். நூல்: சுனன் அபூதாவூத் எண்: 1:22 (Sunan Abu Dawud 1:22)

ஆயிஷா கூறினார்: "இறைத்தூதர் அவர்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிப்பார் என்று உங்களுக்கு யார் சொன்னாலும்; அவரை நம்பாதீர்கள். உட்கார்ந்துக்கொண்டு தான் அவர் சிறுநீர் கழிப்பார், நின்றுக்கொண்டு சிறுநீர் கழிக்க மாட்டார். [அவர் கூறினார்:] இந்த விவரமுள்ள ஹதீஸ்களை உமர், புறைதா, [மற்றும் அப்துர்-ரஹ்மான் பின் ஹசனா] ஆகியோரும் கூறியுள்ளார்கள். நூல்: திர்மிதி 21:245:1

ஹதீஸ் முஸ்லிம் 491.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள். பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

உலகின் மிக ஆபத்தான அசுத்தமாகிய‌ உங்கள் சிறுநீரில் இருந்து உங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ளப்போகிறீர்கள்?

இதற்கு ஒரு வழி இருக்கிறது. அதாவது இறைத்தூதர் முஹம்மதுவின் சிறுநீரை குடிக்கவேண்டும்!

இதற்கு ஒரு உதாரணத்தை ஹதீஸ்களிலிருந்து காண்போம். முஹம்மதுவின் ஆரம்பகால முஸ்லிம் சகோதரி ஒருவர் (பெண் தோழர்) ஒரு முறை முஹம்மதுவின் 'ஆசீர்வதிக்கப்பட்ட' சிறுநீரை தன்னை அறியாமல் குடித்துவிட்டார். இந்த செயல் 'நரக நெருப்பிலிருந்து அப்பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்' என்று கூறியுள்ளார் முஹம்மது.

உலக சரித்திரத்தில் எந்த ஒரு நபருக்கும் கொடுக்காத ஆசீர்வாதங்களை அல்லாஹ், நம்முடைய பிரியமான இறைத்தூதருக்கு கொடுத்திருந்தார். ஒரு முஸ்லிமல்லாதவர் இதனுடைய ஒரு சிறிய பகுதிய அறிந்தாலும் சரி, உடனே தான் பிடிவாதமாக பிடித்துக்கொண்டு இருக்கும் மார்க்கத்தை விட்டுவிட்டு, இஸ்லாமை முழு இருதயத்தோடு பின்பற்ற தொடங்கிவிடுவார். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: 

முஹம்மதுவின் ஆரம்பகால முஸ்லிம் சகோதரி ஒருவர் (பெண் தோழர்) ஒரு முறை முஹம்மதுவின் 'ஆசீர்வதிக்கப்பட்ட' சிறுநீரை தன்னை அறியாமல் குடித்துவிட்டார். இந்த செயல் 'நரக நெருப்பிலிருந்து அப்பெண் காப்பாற்றப்பட்டுவிட்டாராம்'.

இமாம் ஸுயுதி, ஆதார பூர்வமான ஹதீஸை தம்முடைய "al-Khasaa’is al-Kubra" என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (Imam Suyyuti narrates an authentic report in his al-Khasaa'is al-Kubra, vol. 2, page 253 (published by Daar al-Kutub al-Arabiy — some other online editions have this narration in vol. 2, page 441): )

"நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நம்முடைய நபியின் ஆசீர்வதிக்கப்பட்ட சிறுநீரை குடிப்பதன் மூலம் சொர்க்கத்தில் தங்களுடைய இடத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உண்மையில் திருக்குர்ஆன் கூறுவது போல்: "அப்படியானால் உங்கள் இறைவனின் எந்த அருட்கொடைகளை நீங்கள் மறுப்பீர்கள்?" (ஸூரா அர்-ரஹ்மான்). எனவே சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் உம்மா சில வருடங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து "சையித் முஹம்மது அல்-யாகூபியின்" கூற்றோடு முழு உடன்பாட்டில் உள்ளது.

"அவர் கூறியதாவது: "நான் எங்கள் நபி அவர்களிலிருந்து வெளிப்படும் அவரது சிறுநீராக இருக்க விரும்புகிறேன், அந்த சிறுநீர் தூய்மையானதும், நோய்களிலிருந்து குணப்படுத்துவதுமாக இருக்கிறது".

முடிவுரையாக, இஸ்லாமிய அறிஞர், விரிவுரையாளர் இஸ்மாயீல் ஹக்கி அல்பருசி(Isma'eel Haqqi al-Barusi) அவர்கள் தம்முடைய "ரூ அல் பயான் - Rooh al-Bayan" என்ற குர்‍ஆன் விரிவுரையில் கூறிய வரிகளை இங்கு தருகிறேன்:

"இறைத்துதருடைய முடியானது சொர்க்கத்தின் தாவரங்களிலிருந்தும், அவரது உமிழ்நீர் சொர்க்கத்தின் தேனிலிருந்தும், அவரது சிறுநீர் நம்முடிய சில அறிஞர்கள் கூறியது போன்று, சொர்க்கத்தின் குடிநீராக உள்ளது"

"His noble hair is from the vegetation of Paradise, his saliva is from the honey of Paradise, and His urine, as some of our wise men say, is the water of Paradise."

இதனை அவர் யூதர்களின் கட்டுக்கதைகளிலிருந்து கற்றுக்கொண்டு, முஹம்மதுவிற்கு சம்மந்தப்படுத்தி பேசியுள்ளார்.

சுனன் அந்நிஸா எண் 1345:

ஆயிஷா கூறினார்: "ஒரு யூதப் பெண் என்னிடம் சொன்னதாவது: 'கல்லறையின் வேதனை சிறுநீர் காரணமாக இருக்கிறது.' நான் சொன்னேன்: 'நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.' அவள் சொன்னாள்: 'இல்லை, அது உண்மை; அதன் காரணமாக சிறுநீர் பட்ட எங்கள் தோலையும் உடைகளையும் வெட்டினோம். 'அல்லாஹ்வின் தூதர் (ﷺ) தொழுகை செய்ய வெளியே சென்றார், எங்கள் இருவரின் பேச்சுக்களின் குரல்கள் உரத்த சத்தத்தில் ஒலித்தன. இதனை கேட்டு இறைத்தூதர்: 'இது என்ன? சத்தம் என்று கேட்டார்' அதனால் அவள் சொன்னதை நான் அவரிடம் சொன்னேன். அவர் கூறினார்: 'அவள் உண்மையைப் பேசினாள்.' அந்த நாளுக்குப் பிறகு அவர் இப்படி வேண்டினார்: "ஜிப்ரீலின் மற்றும் மிகாவேலின் மற்றும் இஸ்ரஃபிலின் ஆண்டவனே (அல்லாஹ்வே), நெருப்பின் வெப்பம் மற்றும் கல்லறையின் வேதனையிலிருந்து எனக்கு அடைக்கலம் தருவாயாக'

இதுவரை சொன்னவைகள் முட்டாள்தனமானதாகவும், நான் இட்டுக்கட்டியதாகவும் நீங்கள் எண்ணினால், முஸ்லிம்கள் தங்கள் "இறைத்தூதரின் சிறுநீரை குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எழுதியுள்ளவைகளை' இங்கு சொடுக்கி படித்து சரி பார்க்கவும்: Benefits Of Drinking The Blessed Urine Of Our Holy Prophet

அபு யாலா, ஹகீம், தர் க‌த்னி, தபரானி, அபூ நுய்ம் மூலமாக, உம்மு அய்மன் (பராக்கா என்றும் அழைக்கப்படுகிறார்) கூறினார் என்று "இமாம் ஜலால் ஸுயூதி" அறிவித்ததாவது: 'நபி அவர்கள் ஒரு நாள் இரவில் எழுந்தார், ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்தார். அதே இரவில் எனக்கு தாகமாக இருந்ததால் நான் எழுந்தேன், அதனால் கிண்ணத்தில் இருந்ததை குடி நீர் என்று நினைத்து நான் குடித்தேன். காலையில் நான் என்ன செய்தேன் என்று அவரிடம் சொன்னேன், அவர் சிரித்துக்கொண்டே, 'நிச்சயமாக உங்களுக்கு வயிற்றில் வலி இருக்காது' என்றார். அபூ யாலாவின் வார்த்தைகள் பின்வருமாறு, 'இன்றைய நிலையில் நீங்கள் ஒருபோதும் வயிற்று வலியை உணர மாட்டீர்கள்' என்பதாக நபி கூறினார்.

முஹம்மதுவின் சிறுநீருக்கு இவ்வளவு முக்கியத்துவமா? சிந்தியுங்கள் முஸ்லிம்களே!

அதே நேரத்தில், சிறுநீர் சரீரத்தில் பட்டால், அதை கழுவாமல் விட்டால், கல்லறையில் அல்லாஹ் தண்டனையை கொடுப்பானா?

முஹம்மதுவின் சிறுநீர் பற்றிய முஸ்லிம்களின் ஆய்வுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்: http://scholarspen.blogspot.com/2005/05/prophets-urine_10.html 

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

குர்‍ஆன் 4:95 & 6:93 - மோசடிக்காரர்களிடமிருந்து (முஹம்மதுவிடமிருந்து) எச்சரிக்கையாக இருங்கள்!

ஒரு நாள் முஹம்மது "ஜிஹாது என்ற புனிதப்போரில் பங்கு பெற தவறியவர்கள் குறித்து" அல்லாஹ்விடமிருந்து ஒரு வெளிப்பாட்டை, வசனத்தைப் பெறுகிறார்.

"Not equal are those believers who sit (at home) and those who strive and fight in the Cause of Allah."

குர்‍ஆன்  4:95. இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இவ்வசனத்தின் பொருள் என்னவென்றால்  "அல்லாஹ்விற்காக போரில் தீவிரமாக ஈடுபடுபவர்கள், போரில் ஈடுபடாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை விட உயர்ந்தவர்கள்" என்பதாகும்.

இந்த தெய்வீகமான வசனத்தை முஹம்மதுவின் ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண்டு இருக்கும் போது, கண்பார்வையற்ற ஒரு முஸ்லிம் அங்கு வருகிறார். அவ்வசனத்தைப் பற்றி அறிந்தவுடன் அவர் முஹம்மதுவிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் குருடனாக இருக்கிறார் இதனால் "ஜிஹாத்தில் பங்கேற்க முடியாது". இவ்வசனத்தின் படி "அல்லாஹ்வின் வெளிப்பாட்டில் நியாயமில்லை" என்றுச் சொல்லி முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு வாதிடுகிறார். ஜிஹாதில் பங்கு பெறாமல், வேண்டுமென்று வீட்டில் உட்காரவில்லை, கண்பார்வை இல்லை என்பதால் தான் பங்கு பெறவில்லையென்று முஹம்மதுவிடம் கேள்வி கேட்கிறார்.

உடனே முஹம்மதுவிற்கு மாற்றப்பட்ட வசனம் இறங்குகிறது...

மேற்கண்ட ஸூரா 4:95ல், "தக்க காரணங்கள் இல்லாமல் (நோய் நோடிகள், ஊனம் போன்ற காரணங்கள் இல்லாமல்)" என்ற வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டு வெளிப்பாடு இறங்குகின்றது.  இப்படி "இரண்டாவது முறை" ஒரு குருடனின் கேள்வியால் மாற்றப்பட்டு இறக்கப்பட்ட வசனத்தைத் தான் இன்று நீங்கள் குர்‍ஆனில் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த அருமையான நிகழ்ச்சியை சஹீஹ் புகாரி நூலில் படிக்கலாம். 

சஹீஹ் புகாரி  2831. பரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

''இறைநம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்" (4:95) எனும் வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் தமது (கண்பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, "தக்க காரணமின்றி' என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (4:95) அருளப்பட்டது.

சஹீஹ் புகாரி  2832. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ''இறை நம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும் இறைவழியில் தம் செல்வங் களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்" (4:95) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உம்மி மக்த் தூம் (ரலி) அவர்கள் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப் போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். ஆகவே, அப்போது உயர்ந்தோனும் வளமிக்கோனுமான அல்லாஹ் தன் தூதருக்கு (வேத அறிவிப்பை) அருளினான்.

நபி (ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத அறிவிப்பு வரத்தொடங்கிய காரணத் தால்) அது என்மீது (கனத்துப்போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவுக்கென்றால் என் தொடை நசுங்கிவிடும் என்று அஞ்சினேன். பிறகு நபியவர்களைவிட்டு அந்நிலை அகற்றப்பட்டது. அப்போது அல்லாஹ், <தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)> எனும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

மேலும் பார்க்க எண்கள்: 4593, 4594 & 4990

ஊனமுற்றவர்களுக்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு அளிப்பதைப் பற்றி 'சர்வ ஞானியான, எல்லாம் அறிந்த அல்லாஹ்'  மறந்துவிட்டான் என்றுச் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? நம்புகிறீர்களா?

அல்லாஹ்வின் வெளிப்பாட்டில் இருந்த தவறை சரி செய்ய, மேம்படுத்த மற்றும் அதனை திருத்த ஒரு குருட்டு மனிதன் உண்மையில் தேவைப்படுவானா?

குர்ஆன் நித்தியமானது என்றும், நித்திய பலகைகளில்(உம்முல் கிதாபில்) பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்லாம் போதிக்கின்றதே, அப்படியானால், இந்த வசனம் (4:95) எப்படி "உம்முல் கிதாபில்" எழுதப்பட்டுள்ளது? ஊனமுற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட வசனமாகவா? அல்லது விதிவிலக்கு அளிக்கப்படாத வசனமாகவா?

ஞானத்தில் குறைவில்லாத மற்றும் எல்லையில்லா ஞானமுள்ள‌ அல்லாஹ்விற்கு எவ்வளவு பெரிய அவமானம் பாருங்கள்! ஒரு கண்பார்வையற்ற ஏழை மனிதன், "அல்லாஹ்வும் அவனது இறைத்தூதரும்" தோல்வி அடைந்த போது, "தன்னைப்போன்ற ஊனமுற்றவர்களுக்காக பேசி" அல்லாஹ்வின் வெளிப்பாட்டை மாற்றினான் என்று வாசிக்கும் போது! இது அல்லாஹ்விற்கு அவமானமாக தெரியவில்லையா முஸ்லிம்களுக்கு?

ஒருவேளை இப்படி இருக்குமோ! முஹம்மது அதிகமாக சிந்திக்காமல் சொந்தமாக "வெளிப்பாடுகளை" இட்டுக்கட்டி கூறுயிருப்பாரோ! மேலும் தான் இட்டுக்கட்டிய வெளிப்பாடுகளில் உள்ள தவறுகளை மக்கள் சுட்டிக்காட்டும் போது, அல்லது சூழ்நிலைகள் மாறுவதை இவரே கண்டுபிடிக்கும் போது, முழு குற்றத்தை அல்லாஹ்வின் மீது போட்டுவிட்டு "இரத்து செய்தல்" என்ற ஒன்றைச் சொல்லி, முந்தைய வெளிப்பாடுகளை மாற்றியிருக்கிறாரோ?

முஹம்மது இப்படி செய்திருக்கமாட்டார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால், ஸூரா 4:95ல் நடந்த நிகழ்ச்சிப் பற்றி பார்க்கும் போது, இப்படித் தான் நடந்துள்ளது என்று தெரிகின்றதல்லவா?

சரி, கண்பார்வையற்றவரின் நிகழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும், இன்னொரு சுவாரசியமான‌ நிகழ்ச்சியையும் பாருங்கள்.

குர்‍ஆன் வசனங்கள் முஹம்மதுவிற்கு வெளிப்படும் போது அதனை நேர்மையாக‌ எழுதக்கூடியவராக  "அப்துல்லா இப்னு அபி ஸ‌ர்" என்ற முஸ்லிம் இருந்தார். 

ஆனால், ஒரு நாள் திடீரென்று ஒரு நிகழ்ச்சி நடந்தது . . .

ஒரு நாள், முஹம்மதுவிற்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்டன, அவைகளை முஹம்மது ஓதஓத அப்துல்லா இப்னு அபி ஸர் எழுதிக்கொண்டு இருந்தார். ஆனால், திடீரென்று அப்துல்லாஹ் தான் எழுதிக்கொண்டு இருந்ததை நிறுத்திவிட்டு, அந்த  வசனம் தொடர்பாக ஒரு ஆலோசனையை முஹம்மதுவிற்கு கொடுத்தார், அவ்வசனத்தை மாற்றி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று அவர் ஆலோசனை கொடுத்தார். அல்லாஹ்வின் வெளிப்பாட்டில், இறை வசனங்களில் தலையிட்டு, மாற்றம் செய்யும் ஆலோசனையை கொடுக்காதே, இது அல்லாஹ்விற்கு மிகப்பெரிய அவமரியாதை என்று அப்துல்லாஹ்வை "கடிந்துக்கொள்வதை" விட்டுவிட்டு, இறைத்தூதர் முஹம்மது அவர் கொடுத்த ஆலோசனையை மாற்றத்தை ஏற்றுக்கொண்டு "நீ விரும்பியபடி, குர்‍ஆன் வசனங்களை மாற்றி எழுதிக்கொள்" என்று அனுமதி கொடுத்துள்ளார்.

குர்‍ஆன் வெளிப்பாடுகளை மாற்றி எழுத முஹம்மது கொடுத்த அங்கீகாரம், எழுத்தாளர் அப்துல்லா இப்னு அபி ஸரை மிகவும் தொந்திரவு செய்துள்ளது. என்னடா இது அப்துல்லாஹ்விற்கு வந்த சோதனை! முஹம்மதுவுக்கு அல்லாஹ் குறிப்பிட்ட வார்த்தைகள்  கொண்ட வசனங்களை வழங்கியிருந்தால், முஹம்மது அவைகளை, இப்னு அபி ஸரின் விருப்பப்படி எழுத எப்படி அனுமதி கொடுக்கமுடியும்! என்ற கேள்விகள் அவருக்கு எழுந்தன. இதுவரை நேர்மையாகவும், உண்மையாகவும் எழுதிக்கொண்டு இருந்த இந்த எழுத்தாளர் ஏமாற்றமடைந்தார்.

இதனால், குர்‍ஆன் வசன எழுத்தாளர் அப்துல்லாஹ், முஹம்மது ஒரு நபியல்ல, அவர் ஒரு பொய்யர், போலியான நபி என்று வெளியே சொல்லத் தொடங்கி, முஹம்மதுவை விட்டு, இஸ்லாத்தை விட்டுவெளியேறி, மக்காவிற்கு உயிர் தப்ப ஓடிவிட்டார். இது முஹம்மதுவிற்கு மிகவும் தர்மசங்கடமாக ஆகிவிட்டது (நம் நாடுகளில் பெரிய புள்ளிகளின், சாமியார்களின் இரகசியங்கள் வெளியே வந்தால் எப்படி இருக்கும் அப்படியாகிவிட்டது). 

உடனே, இன்னொரு வசனத்தை குர்‍ஆன் 6:93ஐ அல்லாஹ்/முஹம்மது வெளிப்படுத்தினா(ன்)ர். இந்த வசனத்தில், இந்த எழுத்தாளரை திட்டித் தீர்த்து, அவன் பொய்யன் என்று குற்றம் சாட்டி, அவனுக்கு நித்திய தண்டனையை அல்லாஹ் கொடுப்பான் என்றுச் சொல்லி, முஹம்மது அவ்வசனத்தை இறக்கினார்[1][2].

குர்‍ஆன் 6:93ஐ இப்போது படியுங்கள்.

குர்‍ஆன் 6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்). முஹம்மது ஜான் தமிழாக்கம்

இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு கேள்வி. 

ஒரு பேச்சுக்காக "நீங்கள் தான் முஹம்மது என்று வைத்துக்கொள்ளுங்கள்", உங்களின் இரகசியங்களை எழுத்தாளர் அப்துல்லாஹ் வெளியே சொல்லி உங்களை அவமானப்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, நீங்கள் பெரிய சர்வாதிகாரியாக‌ வலிமையுள்ளவராக மாறிவிட்ட பிறகு, உங்கள் கையில் 'அந்த நபர் அப்துல்லாஹ்' கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

ஆமாம்.. நீங்கள் என்ன மனதில் நினைத்தீர்களோ, அதையே முஹம்மதுவும் அவனுக்குச் செய்தார், அதாவது, முஹம்மது மிகவும் பெரிய சர்வாதிகாரியாக மாறினார், மதினா முழுவதும் அவரது கைக்குள் வந்தது, மற்ற பகுதிகளும் அப்படியே அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது, இராணுவம் பலத்தது. முஹம்மது மக்காவை கைப்பற்றினார்!

சொல்லுங்கள் பார்க்கலாம், யாரையெல்லாம் முஹம்மது மக்காவில் கொல்லவேண்டும் என்று விரும்பினாரோ, அவர்களின் பட்டியலில் இந்த அப்துல்லாஹ்வின் பெயர் இடம் பெற்று இருக்குமா? இல்லையா? ஆமாம், நீங்கள் நினைப்பது உண்மை தான். முஹம்மதுவின் பட்டியலில் அப்துல்லாஹ் இப்னு அபி ஸர் என்ற குர்‍ஆன் எழுத்தாளனுக்கும் இடம் கொடுக்கப்பட்டது (மக்காவில் முஹம்மது கொல்ல விரும்பிய 10 பேர்கள் பற்றிய முழு விவரங்களை அறிய இந்த தமிழ் கட்டுரையை படிக்கவும்: முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - Muhammad And The Ten Meccans).

அப்துல்லாஹ் பற்றிய இந்த நிகழ்ச்சி "அல்ஃப்ஃபியத் அஸ்ஸீரத் இன்னபவிய்யாஹ்" என்ற வாழ்க்கை சரித்திர புத்தகத்தில் அதன் ஆசிரியர் "அல் ஹஃபித் அல் இராகி" குறிப்பிடுகிறார்.

"முஹம்மதுவின் எழுத்தாளர்கள் 42 பேர் ஆவார்கள். இவர்களில் "அப்துல்லாஹ் இப்னு ஸர் அல் அமிரி" என்பவரும் ஒருவர் ஆவார். குர்‍ஆன் வசனங்களை எழுதுபவர்களில் இவர் தான் முதலாவது குறைஷி ஆவார், இவர் மக்காவிலிருந்தே வசனங்களை எழுதிக்கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியினால், முஹம்மதுவின் இறைத்தூது மீது சந்தேகம் கொண்டு, இஸ்லாமை விட்டு மக்காவிற்கு ஓடிச்சென்றார்.

அவர் இப்படி கூறுவார்: "நான் விரும்புகிறதை முஹம்மதுவைக் கொண்டு செய்தேன். அதாவது அவர் என்னிடம் குர்‍ஆன் வசனங்களை ஓதிக்காட்டி, அதில் 'மிக உயர்ந்தவன், ஞானமுள்ளவன்' என்று எழுது என்று எனக்கு கட்டளையிடும்போது, நான் 'ஞானமுள்ளவன்' என்று மட்டுமே எழுதுவேன். அப்போது அவர், 'ஆம், இரண்டும் ஒன்று தான்' என்று சொல்வார்.

இதே விவரத்தை இந்த புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது: :  Usûd Ulghâbah fî Ma'rifat Is-Sahâbah, [Dâr al-Fikr, Beirut (Lebanon), 1995], Volume 3, p. 154.

இன்னொரு மேற்கோள்:

On a certain occasion he (Muhammad) said, 'Write such and such', but I wrote 'Write' only, and he said, 'Write whatever you like.'"

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவர் (முஹம்மது), 'இப்படி இப்படி எழுதுங்கள்' என்று கூறுவார், ஆனால் நான் 'சிலவற்றை மட்டுமே' எழுதுவேன், உடனே முஹம்மது, 'உங்களுக்கு விருப்பமானதை எழுதுங்கள்' என்று கூறுவார்.

குர்‍ஆன் 23:12ஆம் வசனம், "நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். . ." என்று இறக்கப்பட்டது.  இந்த வசனத்தை முஹம்மது அப்துல்லாஹ்விற்கு ஓதிக்காண்பித்தார், அப்போது "பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக செய்தோம்" என்ற இடத்தை அடைந்தபோது, அப்துல்லாஹ் இதோடு கூட "அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - படைப்பாளர்களில் எல்லாம் மிக அழகான படைப்பாளன்" என்று எழுதினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். அப்பொது இறைத்தூதர் "இதையும் எழுதிக்கொள், இப்படித்தான் எனக்கு இவ்வசனம் இறக்கப்பட்டது" என்று கூறினார். அப்துல்லாஹ்விற்கு இப்போது தான் சந்தேகம் வந்தது, அவர் இப்படியாக மற்றவர்களிடம் கூறினார்: "முஹம்மது ஒரு உண்மையான நபியாக இருந்தால், அவருக்கு வெளிப்பாடு வருவது போன்றே எனக்கும் வருகிறது. முஹம்மது ஒரு பொய்யராக இருந்தால், நான் என்ன வெளிப்படுத்தினேனோ, அது அவரது வசனத்திற்கு நிகரான ஒரு வெளிப்பாடாக இருக்கிறது". (Anwar al-Tanzil wa Asrar al-Ta'wil by 'Abdallah Ibn 'Umar al-Baidawi)

மேற்கண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு முஹம்மதுவின் எழுத்தாளர் அப்துல்லாஹ் மக்காவிற்கு தப்பித்துச் சென்று மேற்கண்டவிதமாக  கூறிக்கொண்டு இருந்தார். 

முஹம்மது மக்காவைக் கைப்பற்றிய நாளில், தனது முன்னாள் எழுத்தாளரைக் கொல்லும்படி கட்டளையிட்டார். ஆனால் எழுத்தாளர் உஸ்மான் இப்னு அஃபானிடம் தப்பிச் சென்று தஞ்சம் புகுந்தார், ஏனென்றால் உஸ்மான் அப்துல்லாஹ்வின் வளர்ப்பு சகோதரர் ஆவார் (அப்துல்லாஹ்வின் தாயார் உஸ்மானுக்கு பாலூட்டியுள்ளார்). எனவே, உஸ்மான் அவரை முஹம்மதுவிடமிருந்து காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்தார். சில நாட்கள் கழித்து, மக்கள் அமைதியடைந்த பிறகு, கோபம் தனிந்த பிறகு, உஸ்மான் எழுத்தாளர் அப்துல்லாஹ்வை முஹம்மதுவிடம் அழைத்து வந்து அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி வேண்டினார் (உஸ்மான் முஹம்மதுவின் மருமகன் ஆவார்). என்ன செய்வதென்று புரியாமல், முஹம்மது நீண்ட நேரம் அமைதியாக இருந்தார், அதன் பிறகு முஹம்மது "அப்துல்லாஹ் இப்னு அபி ஸரின் உயிருக்கு பாதுகாப்பு தருவதாக ஒப்புக்கொண்டார்". உஸ்மானும், முன்னாள் எழுத்தாளர் அப்துல்லாஹ்வும் அவையிலிருந்து வெளியேறியதும், முஹம்மது தனது தோழர்களிடம் "நீங்கள் அவனை கொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் நான் அமைதியாக இருந்தேன், ஆனால், என் அமைதியின் இரகசியத்தை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்.

என்ன ஒரு கோழைத்தனமான செயல்! முஹம்மது செய்தது. இப்படி ஒரு விஷமித்தனமான செயலை ஒரு இறைத்தூதர் செய்யலாமா?

முஹம்மது தம்மை சார்ந்தவர்களை முட்டாள்களாக்க, இப்படிப்பட்ட கதைகளையும், குர்‍ஆனின் வெளிப்பாடுகளையும் இட்டுக்கட்டினாரா?

இதனை சரி பார்க்க இன்னொரு சிறிய நிகழ்ச்சியை ஹதீஸ்களிலிருந்து காண்போம். 

ஒரு ஸஹீஹ் ஹதீஸில் முஹம்மது, "அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் ஆனால் கொட்டாவி வெறுக்கிறான்" என்று கூறுயுள்ளார்.

ஸஹிஹ் புகாரி 6223 & 6226. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்து லில் லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

ஆனால், கொட்டாவி ஷைத்தானிட மிருந்து வருவதாகும். உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

முழு பிரபஞ்சத்தின் எல்லையற்ற படைப்பாளியாகிய அல்லாஹ், அவரே உருவாக்கியதாகக் கூறப்படும் மனித உடலின் இயற்கையான எதிர்வினைகளாகிய தும்மலை ஏன் விரும்புகிறார் அல்லது கொட்டாவியை ஏன் வெறுக்கிறார்?

  1. மனிதனுக்கு வரும் தும்மல் எப்படி எல்லையற்ற படைப்பாளியை அல்லாஹ்விற்கு மகிழ்ச்சியைத் தருகிறது? இதன் பின்னால் இருக்கும் உண்மையென்ன?
  2. இதே போன்று "கொட்டாவி" ஏன் அல்லாஹ்விற்கு தொந்தரவு செய்கிறது?
  3. இப்படிப்பட்ட முட்டாள் தனமான விவரங்கள் எப்படி உண்மையாக இருக்கும்?

இதிலிருந்து அறிவது என்னவென்றால், முஹம்மது தனது ப‌யங்களை அல்லாஹ் மீது சுமத்தி, தனது பொய்யான‌ மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்த அல்லாஹ்வை தனது நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளார். இதற்காக பல கட்டுக்கதைகளை அவிழ்த்திவிட்டுள்ளார்.

சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வால் "மனிதர்கள் கொட்டாவிவிடுவது தடைசெய்யப்பட்டிருந்தால்", ஏன் முந்தைய எந்த ஒரு தீர்க்கதரிசியும் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, எச்சரிக்கவில்லை? அல்லாஹ் அதை வெறுத்தார் என்று தெரியாமல் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கிறார்களே! இது என்ன கொடுமை?

முடிவுரையாக, இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து, தனக்கு அல்லாஹ் இறக்கிய‌ குர்‍ஆன் வசனங்களில், எழுத்தாளர்கள் சொந்தமாக வார்த்தைகளை சேர்க்க அனுமதித்த முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகத் தான் இருக்கவேண்டும் என்று சான்றுகளுடன் புரிகிறது. மேலும், மக்களை முட்டாள்களாக்க அல்லாஹ்வை தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மையாக முஹம்மது பயன்படுத்தியுள்ளதும் புரிகிறது. எனவே இப்படிப்பட்ட மார்க்கத்திடம், இஸ்லாத்திடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தேதி: 10th Sept 2021

மூலம்: https://www.faithbrowser.com/beware-of-fraud/

அடிக்குறிப்புக்கள்:

[1] அப்பாஸ் விரிவுரை: - Abbas - Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs

(Who is guilty) who is more tyrannical and more daring (of more wrong than he who forgeth a lie against Allah, or saith) Allah did not reveal anything, this is Malik Ibn al-Sayf, or him who says: (I am inspired) with a Scripture, (when he is not inspired in aught) with any Scripture, this is Musaylimah, the liar; (and who saith: I will reveal the like of that which Allah hath revealed) I will say the like of what Muhammad (pbuh) is saying: this is 'Abdullah Ibn Sa'd Ibn Abi Sarh. (If thou couldst see) O Muhammad, (when the wrong-doers) the idolaters and the hypocrites, on the Day of Badr (reach the pangs of death and the angels stretch their hands out) to take out their souls, (saying: Deliver up your souls) your spirits. (This day) the Day of Badr, as it is said it is the Day of Judgement (ye are awarded doom of degradation) a severe doom (for that ye spake concerning Allah other than the Truth, and scorned) you thought yourselves too great to believe in Muhammad (pbuh) and the Qur'an, (His portents) Muhammad (pbuh) and the Qur'an. 

Source: https://quranx.com/Tafsirs/6.93

[2] வஹிதி விரிவுரை: - Wahidi - Asbab Al-Nuzul by Al-Wahidi

(Who is guilty of more wrong than he who forgeth a lie against Allah, or saith: I am inspired…) [6:93]. This was revealed about the liar, Musaylimah al-Hanafi. This man was a soothsayer who composed rhymed speech and claimed prophethood. He claimed that he was inspired by Allah. (… and who saith: I will reveal the like of that which Allah hath revealed?) [6:93]. This verse was revealed about 'Abd Allah ibn Sa'd ibn Abi Sarh. This man had declared his faith in Islam and so the Messenger of Allah, Allah bless him and give him peace, called him one day to write something for him. When the verses regarding the believers were revealed (Verily, We created man from a product of wet earth…) [23:12-14], the Prophet dictated them to him. When he reached up to (and then produced it as another creation), 'Abd Allah expressed his amazement at the precision of man's creation by saying (So blessed be Allah, the Best of Creators!). The Messenger of Allah, Allah bless him and give him peace, said: "This ['Abd Allah's last expression] is how it was revealed to me". At that point, doubt crept into 'Abd Allah. He said: "If Muhammad is truthful, then I was inspired just as he was; and if he is lying, I have uttered exactly what he did utter". Hence Allah's words (and who saith: I will reveal the like of that which Allah hath revealed). The man renounced Islam. This is also the opinion of Ibn 'Abbas according to the report of al-Kalbi. 'Abd al-Rahman ibn 'Abdan informed us> Muhammad ibn 'Abd Allah ibn Nu'aym> Muhammad ibn Ya'qub al-Umawi> Ahmad ibn 'Abd al-Jabbar> Yunus ibn Bukayr> Muhammad ibn Ishaq> Shurahbil ibn Sa'd who said: "This verse was revealed about 'Abd Allah ibn Sa'd ibn Abi Sarh. The latter said: 'I will reveal the like of that which Allah has revealed', and renounced Islam. When the Messenger of Allah, Allah bless him and give him peace, entered Mecca, this man fled to 'Uthman [ibn 'Affan] who was his milk brother. 'Uthman hid him until the people of Mecca felt safe. He then took him to the Messenger of Allah, Allah bless him and give him peace, and secured an amnesty for him".


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/beware-of-fraud.html