முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - பாகம் 2
Muhammad And The Ten Meccans- 2
முன்னுரை: முஹம்மது மெக்காவை பிடித்த பிறகு, பத்து பேரை கொல்லும் படி கட்டளையிட்டார். அவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் என்பவராவார். குர்ஆன் வசனங்களை முஹம்மது சொல்ல அதனை எழுதுகின்றவராக இந்த அப்துல்லாஹ் இருந்தார். அப்துல்லாஹ் சுயமாக குர்ஆனில் ஏதாவது மாற்றம் செய்து, இதனை மாற்றி எழுதலாமா என்று கேட்டால், அதனை முஹம்மது அங்கீகரித்தார், அதனால், குர்ஆன் இறைவேதமாக இருக்கமுடியாது என்பதை அறிந்த இவர், இஸ்லாமை விட்டு வெளியேறி மெக்காவில் தஞ்சம் புகுந்தார். இவரை முஹம்மதுவிற்கு முன்பாக கொல்வதற்கு கொண்டு வந்தபோது, உத்மான் அப்துல்லாஹ்விற்கு ஆதரவாக பேசி, கொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், இந்த நேரத்தில் முஹம்மது ஒன்றும் பேசாமல் இருந்தார், நீண்ட நேரம் சென்ற பிறகு, அப்துல்லாஹ்வை கொல்வதில்லை என்று முஹம்மது மன்னிப்பு அளித்தார்.
அவர்கள் சென்றுவிட்ட பிறகு தன்னை சுற்றியிருந்த தன் தோழர்களிடம் முஹம்மது, நான் நீண்ட நேரம் அமைதியாக இருந்தது எதற்காகவென்றால், அந்த நேரத்தில் உங்களில் ஒருவர் அப்துல்லாஹ்வின் தலையை துண்டித்துவிடுவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன் என்றுச் சொன்னார்.
அதற்கு அவரின் தோழர்கள், நீங்கள் ஏன் சைகை காட்டவில்லை, அல்லது தெளிவாக எங்களுக்குச் சொல்லவில்லை என்றுச் சொன்னார்கள். நபி என்பவர் சைகை காட்டி கொல்லமாட்டார் என்ற ஒரு நொண்டிச் சாக்கு ஒன்றை கூறி சமாளித்தார் முஹம்மது.
ஆக, முஹம்மதுவின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ள அவரது சகாக்கள் தவறியதால், ஒருவரின் உயிர் தப்பியது. இந்த விவரங்கள் அனைத்தும் தகுந்த ஆதாரங்களோடு முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்கு படிக்கவும்:
முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - பாகம் 1 அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் துரதிஷ்டம்
இப்போது, முஹம்மது கொல்ல விரும்பிய மீதமுள்ள ஒன்பது பேரைக் குறித்து இந்த இரண்டாம் பாகத்தில் காண்போம்.
முதல் கொலை: அப்துல்லாஹ் கட்டல் (Abdullah Khatal)
இப்போது முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறாகிய, சீரத் ரஸூலல்லாஹ்விலிருந்து நான் விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன், பக்கம் 550:
[கொலை செய்யப்படுவதற்கு குறிக்கப்பட்ட] மற்றொருவர் அப்துல்லாஹ் கட்டல் ஆவார் (Abdullah Khatal of B. Taym b. Ghalib). அவர் ஒரு முஸ்லீமாக மாறியிருந்தார், இறைத்தூதர் அவரை ஒரு அன்சாரியோடு கூட ஏழை வரியை வசூலிப்பதற்காக அனுப்பியிருந்தார். அவருக்கு ஒரு விடுவிக்கப்பட்ட அடிமையிருந்தான் அவன் இவருக்கு சேவை செய்துக்கொண்டு இருந்தான் (அவனும் ஒரு முஸ்லீம் தான்). அவர்கள் ஒரு இடத்தில் தங்கின போது தன்னுடைய வேலைக்காரனிடத்தில் ஒரு ஆட்டை அடித்து தனக்கு உணவை ஆயத்தப் படுத்தும் படி சொல்லிவிட்டு தூங்க சென்றார். அவர் துயில் எழுந்தபோது அவன் ஒன்றும் செய்யாமலிருந்தான். எனவே அவர் அவனை தாக்கி கொன்று போட்டார் மற்றும் இஸ்லாமிலிருந்து அவர் வெளியேறி விட்டார். அவருக்கு பாட்டு பாடக்கூடிய இரண்டு அடிமைப் பெண்கள் இருந்தார்கள், இவர்களில் ஒரு பெண்ணின் பெயர் ஃபர்தானா என்பதாகும், மற்றும் இவளது இன்னொரு தோழியும் சேர்ந்து வழக்கமாக முஹம்மதுவைப் பற்றி கேலியான பாட்டுகளை பாடுவார்கள். எனவே அவர்கள் இருவரும் அவரோடு சேர்த்து கொல்லப்படுவதற்கு முஹம்மது கட்டளையிட்டார்.
இங்கே சற்று நிறுத்தி இந்த பத்தியை ஆய்வு செய்வோம். இஸ்லாமைவிட்டு வெளியேறிய ஒரு மனிதனையும், அவனுடைய இரண்டு அடிமை சிறுமிகளையும் கொல்ல முஹம்மது கட்டளையிட்டார். அப்துல்லாஹ் கட்டலுக்கு (Abdullah Khatal) மரண தண்டனை விதிக்கபட்டதற்கு அவர் ஒரு முஸ்லீமாக இருந்த தன்னுடைய அடிமையை கொலை செய்ததற்காக அல்ல மாறாக மதத்தை விட்டதற்காகத்தான். தன்னுடைய ஒரு அடிமையைக் கொன்றதற்காக ஒரு இஸ்லாமியருக்கு மரண தண்டனை விதிப்பதை இஸ்லாமிய சட்டம் அனுமதிப்பதில்லை. மேலும் கேலியான பாட்டுகளை பாடும் இரண்டு அடிமைச் சிறுமிகளையும் கொல்லுவதற்கு முஹம்மது கட்டளையிட்டார். அவர்கள் முஹம்மதுவைப் பற்றி சில வருடங்க்கு முன்பு தான் கேலியான பாடல்களை பாடினார்கள் என்பதை நினைவு கூறவும். இப்போது முஹம்மதுவின் பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது. இந்த அடிமை சிறுமிகள் இஸ்லாமுக்கோ அல்லது புதிய இஸ்லாமிய தேசத்திற்கோ அச்சுறுத்தலானவர்கள் இல்லை. அவர்கள் வெறும் அடிமைப் பெண்கள் தான் ஆனால் கொலை செய்யப்பட கட்டளையிடப்பட்டார்கள். ஏனென்றால் முஹம்மதுவைப் பற்றிய வேடிக்கையான பாடல்களைப் பாடினார்கள். இன்னும் அவைகளைப் பற்றி கீழுள்ள பத்திகளில் மேலதிக விவரங்களைக் காண்போம்.
இங்கே, இபின் சாத்தின் பட்டியலில், கட்டல் (Khatal) ஆறாவது நபராக இருப்பதை கவனிக்கவும்.
கட்டலைப் பற்றி இபின் சாத்தின் புத்தகத்தில் தொகுப்பு 2 பக்கம் 172 லிருந்து உள்ள செய்திகளை நான் இங்கு கொடுக்கிறேன். இங்கு, செய்தியை அறிவித்தவர்களின் சங்கிலித்தொடர்ச்சியான பெயர்களை குறிப்பிடவில்லை என்பதை கவனிக்கவும் (Chain of Narrators).
பக்கம் 172: 'அல்லாஹ்வின் தூதர் வெற்றி பெற்ற வருடத்தில் மெக்காவிற்குள் பிரேவேசித்தார், அவருடைய தலையில் ஒரு தலைக்கவசம் இருந்தது. பின்னர் அதை அவர் நீக்கினார்'. மான் மற்றும் மூஸா இபின் தாவுத் அறிவித்ததாவது: ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, 'ஓ அல்லாஹ்வின் தூதரே! இபின் கட்டல் (Ibn Khatal) அல்-காபாவின் திரைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அவனைக் கொல்லுங்கள்" என்று சொன்னார்.
பக்கம் 173: "..... நீங்கள் அவனை எங்கே கண்டாலும் கொல்லுங்கள்"
இப்போது கட்டலைப் (Khatal) பற்றி புகாரி ஹதீஸிலிருந்து, தொகுப்பு 5 எண் 582 கூறுவதைக் காண்போம்:
அனஸ் பின் மாலிக் கூறியதாவது: வெற்றியின் நாளில் மெக்காவிற்குள் தலையில் ஒரு தலைக்கவசம் அணிந்தவராக நபி பிரேவேசித்தார், அவர் அதை எடுத்தபோது, ஒரு மனிதன் வந்து, 'இபின் கட்டல் காபாவின் திரையோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறினான். நபி 'அவனை கொல்லுங்கள்' எனக் கூறினார்.
அப்துல்லாஹ்வைப் போன்று கட்டலுக்கு (Khatal) அதிர்ஷ்டம் இல்லை, இபின் சாத் பக்கம் 174 ல் கூறுகிறார்:
'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் இபின் அபி சார், ஃபர்தானா இபின் அல் சிப்ரா மற்றும் இபின் கட்டலை வெற்றியின் நாளிலே கொல்லுவதற்கு (தன்னை பின்பற்றுபவர்களுக்கு) கட்டளை கொடுத்தார். அபூ பர்ஜாஹ் வந்து காபாவின் திரையை அவர் (இபின் கட்டல்) இறுக பிடித்துக் கொண்டிருப்பதை கண்டான். அவன் (அபூ பர்ஜாஹ்) அவருடைய வயிற்றை பிளந்து போட்டான்.
இஸ்லாமிலிருந்து விலகினதற்காக கொலை செய்யப்பட்ட மனிதனைப் பற்றி பார்த்தோம். அவன் மெக்காவில் இருக்கும் போது அல்ல மதீனாவிலிருக்கும் போது தான் இஸ்லாமிலிருந்து வெளியேறினான் என்பதை கவனிக்க.
நாம் இதுவரை கண்ட இரண்டு நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் (1 of 2).
இரண்டாம் கொலை: அடிமைப்பெண்
இப்போது அந்த இரண்டு அடிமைப் பெண்களின் கதையை நிறைவு செய்வதற்காக, நான் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறாகிய சீரத்தின் 551வது பக்கத்திற்கு தாவுகிறேன்.
"இபின் கட்டலின் இரண்டு பாடும் அடிமைப் பெண்களின் விஷயத்தில், ஒருவள் கொலை செய்யப்பட்டாள், இன்னொருவள் பொதுமன்னிப்புக்காக வேண்டி, முஹம்மது அதை அளிக்கும் வரைக்கும் தப்பி ஓடிப்போனாள்".
ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள், இன்னொருவள் தப்பி ஓடிப்போனாள். முஹம்மது கொஞ்சம் இளகியவுடன் அவள் மன்னிப்புக்காக கெஞ்சினாள் அவர் பொது மன்னிப்பு அளித்தார்.
ஆக, ஒரு அடிமைப் பெண் தப்பித்துக் கொண்டாள் ஆனால், மற்றொருவள் மரண தண்டனையை அனுபவித்தாள். பிறகு உயிரோடிருப்பவள் மன்னிப்புக்காக கெஞ்சுகிறாள், அவளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. மீண்டும் இங்கே முஹம்மதுவின் மரண தண்டனைக்கான உத்தரவு முஹம்மதுவின் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறுகிறவைகளாக இருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் அவரை கேலி செய்தார்கள். அதற்கு தண்டனையை அனுபவித்தர்கள் (ஒருவள் தன் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தது). பிறகு முஹம்மது அதிக பாதுகாப்பாக உணர்ந்தபோது உயிரோடிருந்த அடிமைப் பெண்ணுக்கு மன்னித்தார்.
நாம் இதுவரை கண்ட நான்கு நபர்களில் இருவர் கொல்லப்பட்டனர் (2 of 4).
மூன்றாம் கொலை: அல்-ஹுவாயிரித் (al-Huwayrith )
சீரத்தின் 551 பக்கத்திலிருந்து:
மற்றொருவர் மெக்காவில் அவரை நிந்தனை செய்பவர்களில் ஒருவரான அல்-ஹுவாயிரித் நுக்காயித் வஹாப் குசாயி (al-Huwayrith Nuqaydh Wahb Qusayy) .......... அல்-ஹுவாயிரித் அலியால் கொல்லப்பட்டார். (அலி முஹம்மதுவின் மருமகன் ஆவார்).
நீங்கள் இங்கே என்ன காண்கிறீர்கள்? இந்த மனிதன் முஹம்மதுவை கேலி செய்ததினால் கொலை செய்யப்பட்டார்! முஹம்மதுவின் இரண்டு குழந்தைகள் சவாரி செய்து கொண்டிருந்த ஒட்டகத்தை ஹுவாயிரித் முடுக்கிவிட்டார், அதன் விளைவாக வருடங்கள் கழிந்தபோது தன் உயிரைக் கொடுக்க வேண்டியாதாயிருந்தது என்று இபின் ஹிசாம்[804] குறிப்பிடுகிறார்.
நாம் இதுவரை கண்ட ஐந்து நபர்களின் மூன்று பேர் கொல்லப்பட்டனர் (5 of 3).
நான்காம் கொலை: மிக்யாஸ் ஹுபாபா
சீரத்தின் 551 பக்கத் தொடர்ச்சி:
"[கொலை செய்யப்படுவதற்கு கட்டளை கொடுக்கப்பட்ட] மற்றொருவர் மிக்யாஸ் ஹுபாபா (Miqyas Hubaba) என்பவராவார். இவர் தற்செயலாக தன்னுடைய சகோதரனை கொன்ற ஒரு அன்சாரியை கொலை செய்தார். பிறகு பல தெய்வ வழிபாட்டாளராக மாறி இஸ்லாமை விட்டு வெளியேறி குறைஷிகளிடம் திரும்பினார்."
பக்கம் 492 ல் இதற்கான ஒரு குறிப்பு உள்ளது:
"மிக்யாஸ் ஹுபாபா மெக்காவிலிருந்து ஒரு முஸ்லீமாக வந்தார், அவர் வந்து, 'ஒரு முஸ்லீமாக நான் உஙகளிடத்தில் வந்திருக்கிறேன். தவறுதலாக கொல்லப்பட்ட என்னுடைய சகோதரனுடைய ரத்தப்பழிக்காக பழிக்கு பழி வாங்க வந்திருக்கிறேன்" என்று கூறினார். இறைத்தூதர், அவர் தன்னுடைய சகோதரன் ஹிஷாமின் இரத்தப் பழியை வாங்கிக் கொள்ளட்டும் என்று உத்தரவிட்டார், சிறிது நேரம் அவர் இறைத்தூதரோடு இருந்துவிட்டு பின்னர் தன்னுடைய சகோதரனைக் கொன்றவரை கொலைசெய்து விட்டு மெக்காவுக்குத் இஸ்லாமை விட்டு வெளியேறி திரும்பிப்போனார்.
இந்த மனிதன் ஆதாரப்பூர்வமாக ஒரு முஸ்லீமாக மாறி தற்செயலாக தன்னுடைய சகோதரனைக் கொன்றவனை பழிவாங்குவதற்கு விரும்பியிருக்கிறான். முஹம்மது அவர் பழிவாங்குவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். பிறகு மிக்யாஸ் தன் சகோதரனைக் கொன்ற மற்ற முஸ்லீமைக் கொலை செய்தார். பின்னர் அவர் இஸ்லாமை விட்டு வெளியேறி மெக்காவிற்கு திரும்பினார். இஸ்லாமை விட்டதற்கு தண்டனையாக மரண தண்டனை இருப்பதால், முஹம்மது அவரை கொலை செய்தார்.
நாம் இதுவரை கண்ட ஆறு நபர்களின் நான்கு பேர் கொல்லப்பட்டனர் (4 of 6).
ஐந்தாம் கொலை: சாரா
சீரத்தின் 551 பக்கத் தொடர்ச்சி
'மேலும் அப்துல் முத்தாலிப்பின் (பழங்குடி) ஒரு விடுவிக்கப்பட்ட அடிமை சாரா மற்றும் இக்ரிமா அபூ ஜஹால் என்பவர்களாவார்கள். சாரா அவரை [முஹம்மதுவை] மெக்காவில் அவமானப்படுத்தியிருந்தாள். இக்ரிமா யமனுக்கு தப்பி ஓடியிருந்தார். அவருடைய மனைவி உம் ஹக்கீம் ஹரீத் ஹிஸாம் முஸ்லீமாக மாறி தன் கணவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் படி வேண்டினார். இறைத்தூதர் பொது மன்னிப்பு அளித்தார். அவள் யமனுக்குச் சென்று தன்னுடைய கணவனை தேடிப்பிடித்து அவரை இறைத்தூதரிடம் கொண்டுவந்தாள் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான்".
மற்றொரு பக்க குறிப்பு, இக்ரிமா கூறியதாக உள்ள ஹதீஸ், புகாரி தொகுப்பு 9 எண் 57:
'இக்ரிமா கூறியதாவது: சில நாத்திகர்கள் அலியினிடத்திற்கு [முஹம்மதுவின் மருமகன், நான்காவது கலிபா] கொண்டுவரப்ட்டார்கள். அலி அவர்களை எரித்து (கொன்று) போட்டார். இந்த சம்பவத்தின் செய்தி இப்னு அப்பாஸுக்கு எட்டிய போது அவர் கூறினார், "நான் அலியின் ஸ்தானத்தில் இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் "அல்லாஹ்வின் தண்டனையால் (எரித்து) யாரையும் தண்டிக்காதே" என்று கூறி தடுத்திருப்பதைப் போல 'நான் அவர்களை எரித்திருக்க மாட்டேன். யாராவது தன்னுடைய இஸ்லாமிய மதத்தை மாற்றினால், அவனைக் கொல்லுங்கள் என்ற அல்லாஹ்வின் தூதரின் வாக்கியத்ததைப் போல நான் அவர்களைக் கொன்று போட்டிருப்பேன்."
நாம் இதுவரை கண்ட எட்டு நபர்களின் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் (5 of 8)
மதச் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இஸ்லாமை விட்டு விடுவதினால் ஜனங்கள் கொல்லப்பட வேண்டுமா? அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று முஹம்மது கூறியுள்ளார்.
ஆறாவது கொலை: ஹப்பர் இபின் அல்-அஸ்வத்
இபின் சாத்தின் பட்டியலில் இரண்டாவது இருப்பவர் புகாரி தொகுப்பு 5, எண் 662ல் கூறப்பட்டுள்ள மனிதன், அநேகமாக ஹப்பர் இபின் அல்-அஸ்வத் அல்-அன்சி ஆவார். அவர் யமனில் கொல்லப் பட்டார்.
நாம் இதுவரை கண்ட ஒன்பது நபர்களின் ஆறு பேர் கொல்லப்பட்டனர் (6 of 9).
உயிர் தப்பிய: ஹிந்த் பின்ட் உத்பாஹ்
இபின் சாத்தின் பட்டியலில் 7 வது நபர் ஹிந்த் பின்ட் உத்பாஹ் என்பவராவார். அவள் அபூ சுப்யானின் மனைவியாவாள். முஹம்மது ஏற்கனவே சுப்யானை கொல்லும்படி கட்டளையிட்டிருந்தார் என்று தஸ்தி (Dashti) குறிப்பிடுகிறார். சுப்யான் மெக்காவில் ஒரு பெரிய தலைவராக இருந்தார். சுப்யான் ஒரு யுத்தத்தில் முஹம்மதுவிற்கு எதிராக சண்டையிட்டு இருந்தார். முஹம்மது மெக்காவை பிடிப்பதற்கு முன்பாக சுப்யான் முஹம்மதுவிடம் சென்று இஸ்லாமை ஏற்றுக்கொண்டார், இல்லையானால் இவர் கொல்லப்பட்டு இருப்பார். சுப்யான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஹிந்த் பின்ட் உத்பாஹ் இஸ்லாமை ஏற்றுக்கொண்டாள், அதனால் அவளது உயிர் தப்பியது. உஹூத் போருக்கு பிறகு மரித்த முஸ்லீம்களின் உடல்களின் முன்பாக ஹிந்த் அசுத்தப்படுத்தியிருந்தாள். அவள் ஒரு இறந்த முஸ்லீமுடைய கல்லீரலை வெட்டி, அதில் ஒரு கடி கடித்து, பின் துப்பினாள். அவள் முஹம்மதுவையும் மற்ற தோற்கடிக்கப்பட்ட முஸ்லீம்களையும் அவர்கள் யுத்த களத்தை விட்டு ஓடின போது பரிகசித்தாள்.
அவள் மன்னிப்பு கோரினாள், மன்னிப்பு வழங்கப்பட்டாள்.
நாம் இதுவரை கண்ட பத்து நபர்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். (6 of 10).
முடிவுரை: சில மக்கள் இங்கே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் முஹம்மதுவை வெறுத்தும் அவரை அவமானப்படுத்தியிருந்தார்கள். மற்றவர்கள் கொல்லப்பட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தாங்களாகவே இஸ்லாமை விட்டு வெளியேறினார்கள். இவர்களில் அநேகர் முஹம்மது எதிராக ஆயுதம் கூட தூக்காதவர்கள். பல வருடங்களுக்கு பிறகு முஹம்மது தான் அனுபவித்த வேதனை நிந்தனைகளுக்காக அவர்களை பழி வாங்கினார். அவர்களை கொலை செய்தார்.
meccan10.htm
Rev A: 10-12-97
ஆங்கில மூலம்: Muhammad And The Ten Meccans
சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
முஹம்மது பற்றிய கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக