இஸ்லாமிய போரில் மரித்தவர்கள் நரகத்திலிருந்து தப்பிப்பார்களா?
(அ)
எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
குர்ஆன் முரண்பாடு
Are Martyrs Spared or Will all Muslims go to Hell?
" The Concise Encyclopedia of Islam by Cyril Glassé:" என்ற கலைக்களைஞ்சியத்தில் "போரில் மரித்தவர்கள் (Martyrs)" என்பதற்கு கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் மார்க்கத்திற்காக மரித்த நம்பிக்கையாளர்கள் மற்றும் மார்க்கத்தை காப்பதற்காக அல்லது மார்க்கத்திற்காக சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் மரித்த பிறகு அப்படியே அடக்கம் செய்யப்படுவார்கள், அவர்கள் குளிப்பாட்டப்படாமல், அவர்கள் அதே பழைய உடைகளில் அடக்கம் செய்யப்படுவார்கள், அவர்களின் ஆடையில் பதிந்து இருக்கும் இரத்தகறைகள் அவர்கள் எவ்விதம் மரித்தார்கள் என்பதைக் காட்டும்.
Believers who die for their faith, in defense of it, or persecuted for it, are assured of Heaven. They are buried as they died, unwashed and in the same clothes, the bloodstains testifying to their state.
இதே விவரத்தை அனேக ஹதீஸ்கள் கூறுகின்றன, உதாரணத்திற்கு கீழ்கண்ட சஹீஹ் புகாரி ஹதீஸை காணவும்:
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7530
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நம்மில் (இறைவழியில்) கொல்லப்படுகிறவர் சொர்க்கத்திற்குச் செல்கிறார்' எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
போரில் மரிப்பவர்கள் உடனே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்ற பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையை கீழ்கண்ட குர்ஆன் வசனங்கள் ஆதரிக்கின்றன.
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும். (3:157)
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.(3:158)
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் (3:169)
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (9:111)
ஆனால், மேற்கண்ட வசனங்களுக்கு முரண்பட்ட விதத்தில் குர்ஆனின் கீழ்கண்ட வசனம் உள்ளது:
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (19:71-72)
ஆர்பெரி (Arberry) கீழ்கண்ட விதமாக நேரடி பொருள் வரும்படி மொழியாக்கம் செய்துள்ளார்:
No one of you there is, but he shall go down to it; That for thy Lord is a thing decreed, determined. Then We shall deliver those that were god-fearing; and the evildoers We shall leave there, hobbling on their knees. -- Sura 19:71-72
எல்லா இஸ்லாமியர்களும் நரகத்தில் நுழைவார்கள் என்று இந்த வசனம் தெளிவாக கூறுகிறது (இறைவனின் முடிவான தீர்மானமாகும்). அதன் பிறகு அவர்களில் சிலர் நரகத்திலிருந்து தப்புவிக்கப்படுவார்கள், மற்றவர்கள் நிரந்தரமாக நரகத்தில் விட்டுவிடப்படுவார்கள்.
சூரா 19:71ம் வசனத்தின் படி, எல்லாரும் நரகத்திற்குச் செல்வார்கள், ஆனால், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த வசனங்களின் படி "அல்லாஹ்வின் வழியில் மரித்தவர்கள்" நரகத்திற்குச் செல்லாமல், நேரடியாக அல்லாஹ்விடம் செல்வார்கள் மற்றும் "தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் [நிகழ்காலம்] - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்". இது தான் முரண்பாடு என்பது.
குர்ஆனின் முரண்பாடு ஒரு பக்கமிருக்க, சூரா 19:71-72ம் வசனங்கள் இஸ்லாமியர்களை அதிகமாக தொந்தரவு செய்கின்றன, அதாவது மரித்த பிறகு நரகத்திற்கு செல்லவேண்டி வருமே என்று இஸ்லாமியர்கள் பயப்படுகின்றார்கள். சுல்தான் முஹம்மது கான் என்பவரை மட்டும் அதிகமாக இந்த விவரம் வாட்டியுள்ளது. இவர் இஸ்லாமில் இருக்கும் எல்லா விவரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து, இஸ்லாமில் இரட்சிப்பு என்றால் என்ன என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் கிறிஸ்தவராக மனம் மாறியுள்ளார். அவருடைய வாழ்க்கை சாட்சியை இந்த தொடுப்பில் படிக்கவும்.
சூரா 9:111 பற்றிய சிறு குறிப்பு:
சூரா 9:111 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:
"….அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? .…".
மேற்கண்ட விதமாக சொல்லும் வசனம் தோராவிலும், சுவிசேஷ நூல்களில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது தேவனுக்காக போரிட்டால் மற்றும் அவர்கள் கொல்லப்பட்டால் நிச்சயமாக சொர்க்கத்தை அடைவார்கள் என்றுச் சொல்லும் வாக்குறுதி தோராவிலும், சுவிசேஷங்களில் எங்கும் சொல்லப்படவில்லை. தேவனுக்காக போரிட்டு மரித்தால் சொர்க்கம் நேரடியாக சென்றுவிடலாம் என்ற இப்படிப்பட்ட கோட்பாடு குறைந்தபட்சம் பைபிளில் எனக்கு தெரிந்தவரை இல்லை. ஆனால், பைபிளின் படி, தேவனே நமக்காக யுத்தம் செய்கின்றவராக இருக்கிறார். நம்முடைய சக்தி மற்றும் ஆயுதங்களை விட தேவன் சர்வ வல்லவராக இருக்கிறார், நம்முடைய உதவி அவருக்கு நிச்சயமாக தேவையில்லை.
இந்த குர்ஆனின் முரண்பாடு பற்றி இஸ்லாமியர்கள் கொடுத்த பதில்களையும், அதற்கான எங்கள் மறுப்புக்களையும் கீழே காணலாம்.
1) மிஷால் அல் காதி அவர்களின் கட்டுரையும் எங்கள் மறுப்பும் (தமிழ்)
2) மோயிஜ் அம்ஜத் அவர்களின் கட்டுரையும் எங்கள் பதிலும்
3) எல்லா இஸ்லாமியரக்ளும் நரகத்திற்குச் செல்வார்களா? பாகம் 1, பாகம் 2
4) Karim in Hell
ஆங்கில மூலம்: Are Martyrs Spared or Will all Muslims go to Hell?
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக