ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நபிகளும் அவர்களின் அழுகா சடலங்களும் - முஹம்மது ஒரு கள்ள நபி என்பதற்கு இன்னொரு ஆதாரம்

நபிகளும் அவர்களின் அழுகா சடலங்களும்

முஹம்மது ஒரு கள்ள நபி என்பதற்கு இன்னொரு ஆதாரம்

சாம் ஷமான்

இது ஒரு சிறிய கட்டுரையாகும், நான் நேரடியாக கருப்பொருளுக்கு வருகிறேன். ஒரு குறிப்பிட்ட ஹதீஸின் படி, முஹம்மது இவ்விதமாக கூறியுள்ளார். அதாவது, நபிகள் மரித்துவிட்டால், அவர்களின் உடல்கள் அழிக்கப்படாமல் இருக்கும்படி அல்லாஹ் பாதுகாப்பானாம். மரித்த உடல்களை மண்ணில் புதைக்கும் போது, பல நாட்கள்/மாதங்களுக்குள் அவைகளை மண் தின்றுவிடும், வெறும் எலும்புகள் தான் மிஞ்சம். ஆனால், முஹம்மதுவின் படி, அல்லாஹ் எல்லா நபிமார்களின் புதைக்கப்பட்ட உடல்கள் அழிக்கப்படாமல் (மக்கிவிடாமல்) பாதுகாத்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளான் என்று முஹம்மது கூறியுள்ளார். 

"உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் "நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?" என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் "நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா

இன்னொரு ஹதீஸ்:

உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்?என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: நஸாயீ 1357

நாம் இனி காணப்போகும் பைபிளின் வசனங்களின் படி, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பது நிருபனமாகும். பைபிளில் அனேக தீர்க்கதரிசிகளின் மரித்த உடல்களை மண் தின்றுள்ளது என்பதைக் காண்கிறோம், அவர்களின் எலும்புகள் மட்டுமே மிச்சமாக இருந்துள்ளன (உதாரணத்திற்கு யோசேப்பைச் சொல்லலாம்).

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள். (ஆதியாகமம் 50:24-26)

மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள்என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான். அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். (யாத்திராகமம் 13:19-20)

மற்றும் எலிஷா தீர்க்கதரிசியின் எலும்புகளைப் பற்றி நாம் படிக்கிறோம்:

எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப் போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின் மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். (2 இராஜாக்கள் 13:19-20)

குர்-ஆன் எப்படி முந்தைய வேதங்களை உறுதிச் செய்கிறது என்பதை கவனியுங்கள். மேற்கண்ட விவரங்கள் முந்தைய வேதங்களில் காணப்படுகிறது, அவைகளைத் தான் முஹம்மதுவும் குர்-ஆனும் உறுதிச் செய்திருக்கிறார்கள். பைபிள் பற்றிய குர்-ஆனின் சாட்சிகளைப் பாருங்கள் (வசனங்கள் அனைத்தும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்).

இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.  நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:40-44)

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! (குர்-ஆன் 2:89)

"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக. (குர்-ஆன் 2:91)

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (குர்-ஆன் 2:97)

அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்-ஆன் 2:101)

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.(குர்-ஆன் 4:47)

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.(குர்-ஆன் 46:12)

(ஜின்கள்) கூறினார்கள்: "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) "வழி" காட்டுகின்றது.(குர்-ஆன் 46:30)

மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் முந்தையை வேதமாகிய பைபிளை உறுதிப்படுத்துகிறது என்று முஸ்லிம்களிடம் சொல்லும் போது, 'இல்லை, அது திருத்தப்பட்டுவிட்டது' என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால் இது அவர்களுக்கு பயன்படாது. முஸ்லிம்கள் இப்படி சொல்வது அவர்களின் நபியாகிய முஹம்மதுவிற்கே தலைவலியாக மாறும், ஏனென்றால், மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் எவைகளை உறுதிச்செய்கிறதோ, அவ்வேதத்தை அறியாதவராக முஹம்மது இருக்கிறார். முஹம்மது முந்தைய வேதங்களை உறுதிச் செய்ய வந்தார், ஆனால் முஸ்லிம்கள் அவ்வேதங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள்.

இக்கட்டுரையில் நாம் ஆரம்பத்தில் கண்ட ஹதீஸ்களின் படி, நபிமார்களின் உடல்கள் மக்காது (மண் தின்பதில்லை) என்று முஹம்மது சொன்னார், ஆனால், முந்தைய வேதங்களில் (பைபிளில்) கண்ட வசனங்களின் படி, நபிமார்களின் உடல்களும் அழுகும், அவைகளை மண் தின்றுவிடும் என்று பார்த்தோம். இதன் மூலம் அறிவது என்ன? முந்தைய வேதங்களில் என்ன உள்ளது என்பதை முஹம்மது அறியவில்லை, அவருக்கு கற்றுக்கொடுத்த அல்லாஹ்விற்கே தெரியவில்லை என்பதாகும். மேலும், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்றும், அல்லாஹ் பைபிளின் தேவன் அல்ல என்பதும் இதன் மூலம் நிருபனமாகிறது. 


வெள்ளி, 27 ஜனவரி, 2017

பத்து யூத அறிஞர்களும் முஸ்லிம்களின் திசை திருப்பும் யுக்தியும்


(இஸ்லாமிக் அவார்னஸ் தளத்துக்கு மறுப்புக்கள்)

"குர்-ஆனின் அர்த்தமற்ற எழுத்துக்களும், பத்து யூத ஞானிகளும்" என்ற கட்டுரையை நான் முதன் முதலில் படிக்கும் போது, இதற்கு முஸ்லிம்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. இஸ்லாமிக் அவார்னஸ் என்ற தளம் தங்களுடைய பாணியில் இதற்கு பதில் அளித்துள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள், தவறான விவரங்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி ஒரு பதிலை எழுதியுள்ளார்கள். குற்றம் சாட்டுவதும் கெலி செய்வதும் அவர்களின் பதில்களில் பொதுவாகவே அடங்கியிருக்கும் அம்சங்கள் என்ற போதிலும், அவர்களின் இந்த பதிலில் 'திசை திருப்புதல் (ad hominem – Logical Fallacy)' என்ற தர்க்க பிழையையும் அவர்கள் செய்துள்ளார்கள். மேலும் மறைமுகமாக குர்-ஆனின் ஒரு 'திசை திருப்புதல்' பிழையை வெளிப்படுத்தி மாட்டிக்கொண்டுள்ளார்கள். (குர்-ஆனின் தர்க்க பிழைகளைப் பற்றி அறிய இக்கட்டுரையை படிக்கவும் – Logical Fallacies in the Quran).

இந்த "பத்து யூத ஞானிகள்" என்ற கதை "கட்டுக்கதை" என்ற நிலையில் உள்ளது என்பதை நான் அறிவேன். இதனை நாம் எப்படி அறியலாம் என்று பார்த்தால், அந்த கதையின் படி, யூத ஞானிகள் தங்கள் பெயர்களை சில குர்-ஆனின் அத்தியாயங்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்திலிருந்து அறியலாம். ஆனால், குர்-ஆனின் எந்த ஒரு அத்தியாயத்திற்கும் அந்த யூத ஞானிகளின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இந்த யூத ஞானிகளின் கதை குர்-ஆன் 113 மற்றும் 114 அத்தியாயங்களைக் காட்டிலும் அதிகமான கட்டுக்கதை அம்சங்களை கொண்டுள்ளது எனலாம். முஹம்மதுவின் படி, அவர் மீது சூன்யம் செய்யப்பட்டதாம். அதாவது தன் மனைவிகளோடு உடலுறவு கொள்ளவில்லையென்றாலும், தான் உடலுறவு கொண்டுவிட்டோம் என்ற பிரமையில் முஹம்மது ஒரு வருடம் இருந்தாராம்.

குர்-ஆனை படிப்பவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துக்கொள்வார்கள், அது என்னவென்றால், முஹம்மது "பல பழமைவாய்ந்த கட்டுக்கதைகளை சொல்பவர்" என்ற குற்றச்சாட்டு அவர் மீது பல முறை வைக்கப்பட்டது என்பதாகும் (இவ்வசனங்களை பார்க்கவும்: குர்-ஆன் 6:25; 8:31; 16:24; 23:83; 25:5; 27:68; 46:17; 68:15; and, 83:13). 

குர்-ஆன் 16:103 ஒரு விசேஷித்த வசனம் என்றுச் சொல்லலாம்:

குர்-ஆன் 16:103

16:103. "நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்.) 

கூர்ந்து கவனிக்கவும், இந்த வசனத்தில் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முஹம்மது மறுக்கவில்லை, அதாவது ஒரு நபர் முஹம்மதுவிற்கு குர்-ஆனைச் சொல்லித்தருகின்றார் என்ற குற்றச்சாட்டை முஹம்மது மறுக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் "திசை திருப்பதல் (Fallacy of Distraction) என்ற தர்க்கப்பிழையை இங்கு செய்கிறார்". மேற்கண்ட குற்றச்சாட்டிற்கு முஹம்மது கொடுத்த பதில் இது தான், "அதாவது எனக்கு கற்றுத்தருகிறார் என்றுச் சொல்லும் நபர், வேற்று மொழி பேசுபவர், அவருக்கு தூய அரபியில் வசனங்களை எழுத வராது என்பதாகும்". அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டு வேறு, அவர் கொடுத்த பதில் வேறு, ஏனென்றால் அவர் கையில் உள்ள குற்றச்சாட்டை பார்க்காமல் அதனை திசை திருப்ப முயன்றுள்ளார்.  

ஸைஃபுல்லாவும் அவரது குழுவும்ம (இஸ்லாமிக் அவார்னஸ் தளம்) தங்கள் நபி செய்த அதே தர்க்கப்பிழையை செய்துள்ளார்கள். மக்களை திசை திருப்புதவற்காக, முஹம்மது "மொழி" என்ற வாதத்தை முன்வைத்தார். முஹம்மது மீது வைத்த குற்றச்சாட்டு, அவரது "வெளிப்பாடுகள்" பற்றியது, அது எந்த மொழியில் இறங்கியது, அந்த மொழியின் சிறப்பு என்ன? அவருக்கு சொல்லிக்கொடுப்பவருக்கு அரபி மொழி தெரியுமா? தெரியாதா? என்பது பற்றியது அல்ல. 

இதைப் போலவே, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு பதில் கொடுப்பதை விட்டுவிட்டு, இஸ்லாமிக் அவார்னஸ் என்ற குழுவும், விஷயத்தை திசை திருப்பும்படி பதில் கொடுத்துள்ளார்கள். இவர்கள் கொடுத்த பதில் "இப்னு இஷாக்கின் மூல பிரதி தற்போது நம்மிடம் இல்லை" என்பதாகும். தங்கள் நபியைப் போலவே இவர்களும் தர்க்கபிழை (திசை திருப்பும் பிழையை) செய்துள்ளார்கள்.

முஹம்மதுவிற்கு மற்றவர்கள் கற்றுக்கொடுத்தார்கள் என்று தியோபன்ஸ் முன்வைத்த விவரம் மிகவும் சுவாரசியமானது. இதைவிட அதிக சுவாரசியமான விவரம், குர்-ஆன் சொல்லும் விவரமாகும், ஏனென்றால், தியோபன்ஸை விட, குர்-ஆனின் விவரம் இன்னும் பழமையானது. கர்த்தருக்கு சித்தமானால், குர்-ஆனின் விரிவுரை என்ற தலைப்பில் எந்தெந்த யூத மூலத்திலிருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு குர்-ஆனில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.  முஹம்மது எந்தெந்த மூலங்களிலிருந்து விவரங்களை சேகரித்துள்ளார் என்பதை முஹம்மதுவை விமர்சித்தவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதாவது ஹக்காட மற்றும் யூத கிறிஸ்தவ நூல்களிலிருந்து அவர் எடுத்த விவரங்கள் பற்றி அனேகருக்கு தெரிந்திருந்தது.

ஆசிரியர்: ஆண்ட்ரு வார்கோ


குர்‍ஆன் மூலம் பற்றிய இதர கட்டுரைகள்

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்

Source: http://www.answeringislam.org/tamil/quran/text/10wise.html

குர்-ஆனின் அர்த்தமற்ற எழுத்துக்களும், பத்து யூத ஞானிகளும்

குர்-ஆனின் அர்த்தமற்ற எழுத்துக்களும், பத்து யூத ஞானிகளும்

The Ten Wise Jews

முஹம்மது யூத அறிஞர்களிடமிருந்து விவரங்களை கற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு பல யூத மற்றும் கிறிஸ்தவ நூல்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. கி.பி. 818ல் மரித்த தியோபன்ஸ்(Theophanes) என்ற கிறிஸ்தவர் மூலமாக ஒரு விவரம் இதைப் பற்றி கிடைத்துள்ளது. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை எழுதிய இப்னு இஷாம் என்பவரை விட பல ஆண்டுகள் முந்தியது இக்கிறிஸ்தவரின் விவரம். இது மட்டுமல்ல, இவ்விவரம் ஹதீஸ்கள் என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய பாரம்பரிய நூல்களைக் காட்டிலும் முந்தியது. ஹதீஸ்கள் முஹம்மதுவின் மரணத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டவைகள் என்பது கவனிக்கத்தக்கது. 

முஸ்லிம் பாரம்பரியங்களின் படி முஹம்மதுவின் காலத்தில் பல யூத ரபிக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர், இவர்களில் இரண்டு நபர்கள் "அப்துல்லாஹ் இப்னு சலாம்" மற்றும் "கஅப் அல் அஹ்பர்" என்பவர்கள் ஆவார்கள். இவ்விருவர் தவிர, இன்னும் எட்டு யூதர்களின் பெயர்களை இப்னு இஷாக் சரித்திரம் பட்டியலிடுகிறது. இவர்கள் "இஸ்லாமில் தஞ்சம் புகுந்தனர்" என்றுச் சொல்லிவிட்டு, அதன் பிறகு அவர்கள் "ஏமாற்றுக்காரர்களாக இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு" இருந்தார்கள் என்று இப்னு இஷாக்கின் சரித்திரம் இந்த யூதர்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இஸ்லாமை அப்போது ஏற்றுக்கொண்ட யூத ரபிக்களின் எண்ணிக்கை 10 என்பதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது, ஏனென்றால், முஹம்மது இந்த எண்ணிக்கையைப் பற்றி கூறியதாக கீழ்கண்ட புகாரி ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது: 

3941. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :4 Book :63

கவனிக்கவும், மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது கூறிய அந்த 10 யூதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏனென்றால், ஒட்டுமொத்த யூத ஜனங்கள் முஹம்மதுவை நம்புவதற்கு இவர்கள் காரணமாக இருப்பார்கள் என்று கூறுவதிலிருந்து, அவர்கள் முக்கியமான அந்தஸ்தில் (ரபிக்களாக, மார்க்க தலைவர்களாக) இருப்பவர்கள் என்பதை அறியலாம்.

குர்-ஆன் யூத ரபிக்கள் என்றுச் சொல்லவில்லையென்றாலும், ஒரு தடயத்தை மேலோட்டமாக சொல்லியுள்ளது, பார்க்க குர்-ஆன் 16:103

16:103. "நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தியோபன்ஸ் என்பவர் எழுதிய ஆரம்பகால விவரங்களை இப்போது படிப்போம்:

அவர் (முஹம்மது) வந்த ஆரம்ப காலத்தில், பல அறியாமையில் இருந்த யூதர்கள் "தாங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த மேசியா இவர் தான்" என்று நினைத்துக்கொண்டார்கள். இவர்களில் சிலர் அவரோடு சேர்ந்துக்கொண்டார்கள், இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் இறைவனோடு நேரடியாக பேசிய மோசேயை புறக்கணித்துவிட்டார்கள். அவர்(முஹம்மது) முதலாவது பலியிட்டார், அதுவரை, இந்த பத்து யூதர்கள் அவரோடு இருந்தார்கள். அவர் பலியிட்டு ஒட்டக கறியை சாப்பிடுவதை அந்த யூதர்கள் கண்டு திடுக்கிட்டார்கள். "தாங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த மேசியா இவர் அல்ல" என்பதை அப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள். "முழுவதுமாக நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம்" என்று உணர்ந்த அவர்கள், இனி என்ன செய்யவேண்டுமென்று சிந்தித்தார்கள். இஸ்லாமை விட்டுவெளியெறினால் ஆபத்து என்பதை புரிந்துக்கொண்டு, முஹம்மதுவோடு இருந்துவிட்டார்கள், ஆனால் கிறிஸ்தவத்துக்கு எதிராக பல எதிர் கருத்துக்களை அவருக்கு சொல்லிக்கொடுத்தார்கள் (தியோபன்ஸ், 333)

முதலாவதாக, யூத நூல்களில் இந்த விவரம் 9வது அல்லது 10வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்தது. 

ஆடுகள் வளர்க்கப்படும் பகுதியில் வாழ்ந்த முஹம்மது என்பவரின் கதை இது. அந்த இடத்திற்கு புதிய மலை என்று பெயர். அவர் ஸனாவிற்கும், அதன் பிறகு ஹிஜாஜ் என்ற இடத்திற்கும் சென்றார். சூரியனின் அடையாளம் என்ற பெயர் கொண்ட இடத்தில் (பல்கின் பகுதியில்) வாழுந்த துறவியின் அறிவுரையை அவர் கேட்டார். அவரோடு சேர்ந்த ரபிக்கள் அவருக்கு பல அறிவுரைகளை கொடுத்தார்கள், மேலும் அவர்கள் ஒரு கள்ளப்புத்தகம் உருவாக காரணமாகவும் இருந்தார்கள். குர்-ஆனின் சில அத்தியாயங்களுக்கு தங்கள் பெயர்களையும், அத்தியாயங்களின் ஆரம்பத்தில் சில எழுத்துக்களை யாரும் அறியாதவண்ணம், கீழ்கண்ட சொற்றொடரையும் நுழைத்துவிட்டார்கள்: 

"Thus did the wise men of Israel advise the wicked Alm [or 'illem - referring to Isaiah 56:10]

ஆக, இஸ்ரேலின் ஞானிகள் அந்த கெட்ட ஊமைக்கு  அறிவுரை கொடுத்தார்கள் (பத்து யூத அறிஞர்கள் 402).

(Alm என்ற வார்த்தை ஏசாயா 56:10ல் வரும் ஊமை என்ற எபிரேய வார்த்தையை (illem) குறிப்பதாகும்)

யூத அறிஞர்கள் மேற்கண்ட வாக்கியத்தை பயன்படுத்தி, பல புரியாத எழுத்துக்களை குர்-ஆனில் புகுத்திவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

"Thus did the wise men of Israel advise the wicked Alm"

"ஆக, இஸ்ரேலின் ஞானிகள் அந்த கெட்ட ஊமைக்கு  அறிவுரை கொடுத்தார்கள்"

எபிரேய மொழியின் "kakhah ya'asu (ஆங்கிலம் - Thus did advise)" என்ற சொற்றிடரின் மூல எழுத்துக்கள் khy's  ஆகும், இவ்வெழுத்துக்களை குர்-ஆன் 19:1ல் காணலாம்.

காஃப், ஹா, யா, ஐன், ஸாத்

எபிரேய மொழியின் "hakheme(ஆங்கிலம் - the wise men)" என்ற சொற்றிடரின் எழுத்துக்கள் குர்-ஆன் 41-46 அத்தியாயங்களில் காணலாம்.

ஹா, மீம்

எபிரேய மொழியின் "yisra 'el (ஆங்கிலம் - of Israel)" என்ற சொற்றிடரின் மூல எழுத்துக்கள் ys  குர்-ஆன் 36ல் காணலாம்.

யா, ஸீன்

மேலும், Alm என்பது ஏசாயா 56:10 வரும் ஊமை ['illem] என்ற வார்த்தையை குறிப்பதாக உள்ளது.

ஏசாயா 56:10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான['illem] நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;

இந்த Alm என்ற எழுத்துக்கள் குர்-ஆன் அத்தியாயங்கள் 2, 3, 7, 13 மற்றும் 30-32ல் காணலாம்.

அலிஃப், லாம், மீம்

மூலம்: Seeing Islam as Others Saw It, Robert C. Hoyland, (Princeton NJ: Darwin Press), 1997, pp. 505-508.

இக்கட்டுரைக்கு முஸ்லிம்கல் கொடுத்த பதிலும், நம்முடைய மறுப்பும்க: The Ten Wise Jews and the Fallacy of Distraction

கட்டுரை முற்றிற்று

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு என்றுச் சொன்ன நபி யார்?


முஸ்லிம்கள் எப்போதும் "இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பம் அனுபவிக்கவில்லை, அவர் சிலுவையில் மரிக்கவில்லை" என்றுச் சொல்வார்கள். இயேசு துன்பம் அனுபவிப்பதிலிருந்து காக்கப்பட்டார் மேலும் அவருடைய இடத்தில் இன்னொரு நபர் (யூதாஸ் ஸ்காரியோத்து அல்லது இன்னொரு இயேசுவின் சீடர்) துன்பத்தை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள்.

நான் புகாரி ஹதீஸை வாசித்துக்கொண்டு இருக்கும் போது, கீழ்கண்ட ஹதீஸ் கண்களில் பட்டது. 

3477. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் 

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. 'அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 

'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' 

என்று சொல்லிக் கொண்டிருந்தார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :4 Book :60

இது ஒரு விசித்திரமான ஹதீஸ் என்று எனக்குத்  தோன்றுகிறது, அதாவது லூக்கா 23:34ல் கீழ்கண்டவாறு இயேசு சொல்லியுள்ளதை படிக்கவும்.

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். . . . (லூக்கா 23:34)

இஸ்லாமிய ஹதீஸில் படித்தபடி, "தம் மக்களால் இவ்விதமாக காயப்படுத்தப்பட்ட அந்த தீர்க்கதரிசி யார்?" என்று முஸ்லிம்களிடம் கேட்டால்.

இறைவன் அனுப்பிய ஆயிரக்கணக்கான தீர்க்கதரிசிகளில் இவர் ஒருவர் ஆனால், இவர் இயேசு அல்ல என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள். ஏனென்றால், இஸ்லாமின் படி இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. ஆனால், லூக்காவிலும், புகாரி ஹதீஸிலும் அந்த தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை கவனித்தால், இவ்விருவரும் ஒருவர் தான் என்று நமக்குத் தோன்றும்.

ஒருவேளை ஒருவர் திறந்த மனதுடன் புகாரி ஹதீஸையும், லூக்காவின் வசனத்தையும் படித்தால், உடனடியாக என்ன நினைப்பார்? இவ்விருவரும் ஒரே நபர் என்றும் மேலும் அந்த நபர் இயேசு என்றும் நினைப்பார். இயேசு சிலுவையில் நம் அனைவரின் குற்றங்களை தாம் சுமந்து மரித்து நமக்கு மன்னிப்பைக் கொடுத்தார். 

இப்போது கேள்வி என்னவென்றால், இயேசு கொடுத்த மன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா? அல்லது அதனை புறக்கணிக்கிறோமா? என்பது தான். 

உன்னைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்? (இயேசு மற்றும் மெஹதி)


(Who Do You Make Yourself Out To Be?)

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

முஸ்லிம்களோடு உரையாடும் போது நான் ஆச்சரியப்படும் விவரம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விவரத்தை (லாஜிக்கை) இஸ்லாமோடு பெருமையாக ஒப்பிடுவார்கள். ஆனால், அதே விவரத்தை (லாஜிக்கை) கிறிஸ்தவத்தோடு எதிர்மறையாக ஒப்பிடுவார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், தங்கள் சொந்த லாஜிக்கின் மீது முஸ்லிம்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை என்பதாகும். அதாவது ஒரே லாஜிக்கின் மூலமாக இஸ்லாமை புகழ்ந்து பேசுவார்கள், அதே லாஜிக்கை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை குறைசொல்வார்கள். 

இதனை புரிந்துக்கொள்ள ஒரு உதாரணத்தைக் காண்போம், அதாவது "நான் இறைவன் என்று இயேசு சொல்லவில்லை, எனவே அவர் இறைவன் அல்ல" என்ற முஸ்லிம்களின் வாதத்தை எடுத்துக்கொள்வோம். "நான் இறைவன்" என்ற சொற்றொடரை அப்படியே இயேசு சொல்லாதபடியினால், முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு இறைவன் என்று நம்பமாட்டோம் என்றுச் சொல்கிறார்கள். இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் இப்படிப்பட்ட பல வாதங்களை முன்வைக்கிறார்கள். முஸ்லிம்களின் இந்த வாதத்தை இப்போது நம் கட்டுரையின் ஆய்விற்காக எடுத்துக்கொள்வோம்.  ஒரு முஸ்லிம் அறிஞர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"இயேசு இறைவனா?" என்ற கேள்விக்கு பதில் தரும் வண்ணமாக இன்னொரு எதிர் கேள்வியை கேட்கவேண்டும். அதாவது இயேசு எப்போதாவது நான் இறைவன் என்று ஒப்புக்கொண்டுள்ளாரா? நான் இறைவன் என்னை வணங்குங்கள் என்றுச் சொல்லியுள்ளாரா? நாம் பைபிளை படிக்கும் போது, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் இப்படி சொன்னதில்லை என்பதை அறியமுடியும் [i].

மேற்கண்ட வாதத்தை முன்வைத்த முஸ்லிம் யோவான் 10:33ஐ வாசிக்கவில்லை போல் தெரிகின்றது. பொதுவாக இப்படிப்பட்ட கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் பதில் சொல்லும் போது, பல வசனங்களை பைபிளிலிருந்து மேற்கோள் காட்டுவார்கள். இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்திய  வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். [ii]. இன்னொரு வகையிலும் கிறிஸ்தவர்கள் அருமையாக இக்கேள்விக்கு பதில் அளிப்பார்கள், அதாவது இயேசு நேரடியாக இதே வார்த்தைகளை பயன்படுத்தி "நான் இறைவன்" என்றுச் சொன்னால், அது திரித்துவ கோட்பாட்டை புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கும் என்பதாலும், அதே நேரத்தில், இதனால் பல கல்ட் மதங்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாலும், இயேசு இப்படி நேரடியாக சொல்லவில்லை என்ற பதிலாகும் [iii].

இப்படிப்பட்ட பாணியில் இக்கேள்விக்கு பதில் சொல்வது சரியானதாக இருந்தாலும், என்னுடைய தளத்தில் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் அறிந்திருக்கின்ற படி, நான் ஒரு தனிப்பட்ட பாணியில் விவரங்களை நோக்குகின்றேன், பதில் கொடுக்கின்றேன் என்பதால், ஒரு புதிய பாதையில் இக்கேள்விக்கான பதிலை தர நான் இப்போது முயலுகின்றேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்களின் (லாஜிக்கின்) படி, ஒரு நபர் தன் தெய்வீகத்தன்மையை நிருபிக்க விரும்பினால், அவர் "தான் யார் என்பதை நேரடியாக சொல்லவேண்டும்/ஒப்புக்கொள்ளவேண்டும்" என்பதாகும். இந்த லாஜிக்கை அப்படியே நாம் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம், இதன் விளைவு என்ன என்பதை இப்போது பார்ப்போம். முஸ்லிம்கள் கூர்ந்து கீழ்கண்ட விவரங்களை படிக்கவும். 

இஸ்லாமிலே மஸீஹா போன்ற அந்தஸ்தில் ஒரு கதாநாயகன் கடைசி காலத்தில் வெளிப்படப்போகிறார். மேலும் அவர் இஸ்லாமுக்காக சில ஆண்டுகள் தலைவராக இருந்து ஆட்சி செய்யப்போகிறார். முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் இந்த நபருக்கு "மெஹ்தி/மஹதி" என்று பெயர், இதற்கு அரபியில் "நேர்வழியில் நடத்தப்பட்டவர் (The rightly guided one)" என்று அர்த்தமாகும். ஷியா பிரிவு முஸ்லிம்கள், இவர் 12து இமாம் என்றும், மேலும் இவர் தற்போது மறைந்துள்ளார், உலகத்தின் கடைசி காலத்தில்  வெளிப்படுவார் என்றும் நம்புகிறார்கள். இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, மஹதி என்ற இவர் "உலகத்தின் கடைசி காலத்தில் வெளிப்படும் நபர் ஆவார் [iv] மேலும், இஸ்லாமின் போதனைகளின்படி, இவர் பல நல்ல காரியங்களைச் செய்வார். அவைகளில் இரண்டு முக்கியமான நல்ல காரியங்கள் "இஸ்லாமிய நம்பிக்கையை புதுப்பிப்பது, மற்றும் இஸ்லாமின் எதிரிகளோடு சண்டையிட்டு அவர்களை தோற்கடிப்பதாகும்" [v].

முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் இந்த தலைவரினால் இஸ்லாமுக்கும், முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய நன்மை உண்டாக இருக்கிறது என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. இஸ்லாமில் மெஹதிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணமாக அனேக ஹதீஸ்கள் இஸ்லாமில் உள்ளன. மேலும், மெஹதி வெளிப்படும் போது அவரை எப்படி அடையாளம் காணவேண்டும் என்பதைப் பற்றி   முஸ்லிம்கள் அனேக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். இந்த மெஹதி பற்றி அனேக விசித்திரமான விவரங்கள் உள்ளன, அவைகள் பற்றி நாம் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். ஆனால், இந்த கட்டுரையின் கருப்பொருளுக்கு வருவோம், அது என்னவென்றால், "மெஹதி தம்மைப் பற்றி என்ன சொல்கிறார்?" என்பது தான். 

இவரைப் பற்றி நான் சொல்வதை கேட்பதைக் காட்டிலும், முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேளுங்கள்.

"அவரிடம் நீங்கள் மெஹதியா? என்று கேட்டால், நான் மெஹதி இல்லை என்று அவர் பதில் அளிப்பார். மேலும் அவர்கள் அவரிடம் "இது தான் உங்கள் பெயர் (மெஹதி), இது தான் உங்கள் தந்தையின் பெயர், நாங்கள் எதிர்ப்பார்த்த அடையாளங்கள் அனைத்தும் உங்களிடம் காண்கிறோம்" என்றுச் சொல்லும் போது, இவைகள் அனைத்தையும் அவர் மறுப்பார் [vi].

கூர்ந்து கவனியுங்கள். முஸ்லிம்கள் மெஹதியை அடையாளம் காணும் விதங்களில் ஒரு முக்கியமான அடையாளம், "அவர் (மெஹதி) ஒரு போதும் தன்னை மெஹதி என்று ஒப்புக்கொள்ளமாட்டார்" என்பது தான். அவர் மெஹதி என்பதற்கான ஒரு அடையாளம், "நான் மெஹதி" என்று அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தான் (விசித்திரமாக இருக்கிறதல்லவா?). சுருக்கமாகச் சொல்வதென்றால், "நான் மெஹதி" என்று அவர் ஒரு போதும் சொல்லமாட்டார் என்பது தான். 

நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் முஸ்லிம்களின் முரண்பாடு என்னவென்றால், "இயேசுவின் தெய்வீகத்தன்மைக்கு எதிராக முஸ்லிம்கள் முன்வைக்கும் அதே வாதத்தை, தாங்கள் எதிர்பார்க்கும் இஸ்லாமின் நம்பிக்கை நட்சத்திரம் மெஹதியின் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக முன்வைக்கிறார்கள் என்பதாகும். 

சுருக்கமாகச் சொல்வதானால், முஸ்லிம்களின் நம்பிக்கை இவ்விதமாக உள்ளது:

இயேசு, "நான் இறைவன்" என்றுச் சொன்னால் மட்டுமே அவரை நம்புவோம், 

மெஹதி, "நான் மெஹதி இல்லை" என்றுச் சொன்னால் மட்டுமே அவரை நம்புவோம்.

இறைவனைச் சார்ந்த ஒரு மனிதன் தன் அடையாளத்தை வெளிப்படையாக அறிக்கையிடவேண்டுமா? இது ஒரு எளிமையான கேள்வி ஆகும். 

இதற்கு முஸ்லிம்கள் "ஆம்" என்று பதில் அளிப்பார்களானால், அவர்களின் பதிலின் அடிப்படையில், இஸ்லாமின் மெஹதியை கண்டுபிடிக்கும் அடையாளத்தில் பிழையுள்ளது, எனவே, மெஹதி பற்றிய அடையாள குறிப்பு பிழையானது என்ற முடிவிற்கு முஸ்லிம்கள் வரவேண்டும். 

ஒருவேளை, "இல்லை" என்று முஸ்லிம்கள் பதில் சொல்வார்களானால், இயேசுவிற்கு எதிராக அவர்கள் முன்வைக்கும் வாதம் பிழையானது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும், இனி அவ்வாதத்தை முன்வைப்பதை முஸ்லிம்கள் கைவிடவேண்டும்.

இந்த இரண்டு தெரிவுகளில், ஏதாவது ஒரு தெரிவை முஸ்லிம்கள் தெரிவு செய்யலாம், ஆனால், அந்த தெரிவு இயேசு மற்றும் மஹதி என்ற இவ்விரண்டு நபர்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்துவதாக இருக்கவேண்டும். (நான் இறைவன் என்று இயேசு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்த்தால், நான் மெஹதி என்று மெஹதியும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவேண்டுமல்லவா?).

முஸ்லிம் அறிஞர்களின் இந்த முக்கியமான முரண்பாட்டின் முடிச்சியை அவிழ்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், ஒரு அறிவுரையை கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கவேண்டியுள்ளது. முஸ்லிம் அறிஞர்களின் இப்படிப்பட்ட முரண்பட்ட வாதங்களுக்கு இக்கட்டுரையில் நாம் பதில் கொடுத்த பாணியில் பதில் தருவது சில நேரங்களில் அவர்களின் இதயங்களை கடினமாக்கிவிடும். நற்செய்தி என்பது எப்போதும் ஜெபத்தினாலும், நட்பினாலும் நிறைந்து பகிர்ந்துக்கொள்வதாகும். நம் தளத்தில் காணும் கட்டுரைகள் அனைத்தும், கிறிஸ்தவர்கள் படித்து பயன்பெறவேண்டும் என்பதற்காகவே ஆகும். இவைகள் முஸ்லிம்களோடு ஒரு ஆரோக்கியமான உரையாடல்களை புரிவதற்காக எழுதப்படுகின்றன, அவர்களோடு  விவாதம் புரிந்து வெற்றிப்பெறுவதற்காக அல்ல. முஸ்லிம்களோடு ஆரோக்கியமான உரையாடல்களை புரிந்தவர்கள் தங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ள நான் அழைக்கிறேன்.

[i] shajahanahmed.wordpress.com/2010/01/10/%E2%80%98i-am-he%E2%80%99-does-that-really-make-jesus-pbuh-god/

[ii] www.radicaltruth.net/index.php

[iii] www.muhammadanism.org/Jesus/Jesus_did_not_claim.htm

[iv] Zwemer, Samuel. Heirs of the Prophets. Chicago, IL: Moody Bible Institute, 1946, p115.

[v] Esposito, John L. The Oxford Dictionary of Islam. New York, NY: Oxford University Press, 2003, p185.

[vi]http://harunyahya.com/en/Ahir_Zamana_ait_Yeni_Bilgiler/13256/Hazrat_Mahdi_(as)_will_accept_no_claims_regarding_his_being_the_Mahdi

ஆங்கில மூலம்: unravelingislam.com/blog/