நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது,
நாம் அவர்களை மூழ்கடித்தோம்;
அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; ... (25:37)
நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?
பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது,
அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;
அவரையும், அவருடைய குடும்பத்தாரையும்
மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)
மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்)நிலைத்திருக்கும்படி செய்தோம். (குர்ஆன் 37:77)
இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?
நோவாவின் நிகழ்ச்சியில் உள்ள இன்னுமுள்ள பிரச்சனைகள்
நோவாவின் நிகழ்ச்சியில் உள்ள இன்னுமுள்ள பிரச்சனைகள்
1 கருத்து:
அன்பிற்குரிய கிறித்துவ சகோதரர் உமர் அவர்களுக்கு,
குர் ஆனில் நபிமார்களை பற்றி ஒருமை மற்றும் பன்மையில் குறிப்பிடுவதை பற்றி கேள்வி எழுப்பி கட்டுரை பதித்துள்ளீர்கள். இங்கே கீழே நான் குறிப்பிட்டுள்ள திருமறையின் ஒருமை மற்றும் பன்மை வசனங்களை படித்துவிட்டு தங்களுடைய கருத்தை கூறவும்.
பன்மையில் குறிப்பிடும் வசனங்கள்.
7:35 ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
7:35. O ye Children of Adam! whenever there come to you apostles from amongst you, rehearsing My signs unto you,- those who are righteous and mend (their lives),- on them shall be no fear nor shall they grieve.
7:43 தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்" (இதற்கு பதிலாக, "பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
7:43. And We shall remove from their hearts any lurking sense of injury;- beneath them will be rivers flowing;- and they shall say: "Praise be to God, who hath guided us to this (felicity): never could we have found guidance, had it not been for the guidance of God: indeed it was the truth, that the apostles of our Lord brought unto us." And they shall hear the cry: "Behold! the garden before you! Ye have been made its inheritors, for your deeds (of righteousness)."
ஒருமையில் குறிப்பிடும் வசனங்கள்.
7:61 அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்.
7:61. He said: "O my people! No wandering is there in my (mind): on the contrary I am an apostle from the Lord and Cherisher of the worlds!
7:67 அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.
7:67. He said: "O my people! I am no imbecile, but (I am) an apostle from the Lord and Cherisher of the worlds!
7:75 அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.
7:75. The leaders of the arrogant party among his people said to those who were reckoned powerless - those among them who believed: "know ye indeed that Salih is an apostle from his Lord?" They said: "We do indeed believe in the revelation which hat h been sent through him."
அமீர்.
கருத்துரையிடுக