Jesus or Muhammad: Who is God's True Seal of Prophethood?
சாம் ஷமான் முஹம்மது, இறைவனின் நபித்துவ முத்திரையாகவும், அதனால் மனித குலத்திற்கு இறுதித் தூதராகவும் இருப்பதாகக் குர்ஆன் மேன்மை பாராட்டிக் கொள்கிறது.
"முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.." சூரா: 33:40
அனேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி மக்களை ஏமாற்றுவார்கள் என கர்த்தராகிய இயேசு கூறியதைக் காரணம் காட்டி, இதனால், இயேசுவிற்குப் பின் மற்றுமொரு உண்மையான தீர்க்கதரிசி வந்தாகவேண்டுமென்று இஸ்லாமியர்கள் ஆணித்தரமாக வாதிடுகின்றனர். கிறிஸ்துவிற்குப் பின் எந்த தீர்க்கதரிசிகளும் இல்லையெனில் இயேசு, கள்ளத்தீர்க்கதரிசிகளை வேறுபடுத்திக்காட்டும் வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு எந்தத் தீர்க்கதரிசியும் இல்லை எனச் இயேசு சுருக்கமாகவே சொல்லியிருக்கலாம் என இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். (பார்க்கவும்: மத்தேயு 7:15-20, 24:23-26)
இஸ்லாமியர்களின் இத்தகைய வாதத்தில் உள்ள பிழை என்னவெனில், இவ்வாதம் பரிசுத்த பைபிளின் முழுப் பிண்ணனியையும் காண மறுப்பதே ஆகும். உதாரணமாக, தமது வார்த்தைகளையும் செயல்களையும் உறுதிப்படுத்திக் காட்ட தேவன் தமக்கு அவரின் சொந்த அடையாள முத்திரையை வழங்கியிருப்பதாக இயேசு சொல்லியிருக்கிறார்.
"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." யோவான் 6:27
"Do not work for food that spoils, but for food that endures to eternal life, which the Son of Man will give you. On him God the Father has placed HIS SEAL OF APPROVAL." John 6:27
இதே விவரம் வேறு இடங்களிலும் தேவனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. யோவான் 5:36-38
"நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்" யோவான் 8.:16-18
"பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." யோவான் 10: 36-38
"அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." யோவான் 14: 9-11
தேவன் கொடுத்த அங்கீகாரத்தில், இயேசு வலியுறுத்தியவைகளில் ஒன்று "கிறிஸ்து தான் இறுதித்தூதர் (Final Messanger) என்கின்ற உண்மையாகும்". இதன் முழு அர்த்தம் என்னவெனில், கர்த்தராகிய இயேசு தான் தேவனின் அனைத்துக் காரியங்கள் குறித்த இறுதி மற்றும் ஒரே விளக்கம் என்பதேயாகும். (Part of Jesus' claims, which God has given his approval to, includes Christ's statement that he is the final messenger. This essentially means that the Lord Jesus is God's final and only perfect commentary in relation to the things pertaining to God:)
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்று போட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்." மாற்கு 12:1-8
தேவன் தமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளை அனுப்பின பின்பு இறுதியில் தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். இது எதைக் காட்டுகிறது என்றால், தாம் மக்களிடம் பேசும்படிக்கு இறுதியில் சென்றவர் வெறும் இறைத்தூதுவர் மட்டுமல்ல, தாம் தேவனின் நேச குமாரனும் அனைத்துக்கும் வாரிசானவர் (அனைத்திற்கும் சொந்தக்காரர்) என இயேசு புரிந்து கொண்டிருந்தார் என்பதேயாகும். (மத்தேயு 28:18; லூக்கா 10:22; யோவான் 5:17-31; 10:36; 13:3; 16:13-15; 17:10 மற்றும் எபிரேயர் 1:2-3)
உண்மையில், பிதா தாமே "இயேசு தம் நேசகுமாரன்" என சாட்சியளிக்கின்றார்.
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 1:9-11
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 9:2-7
கிறிஸ்து தேவகுமாரன் என்று தேவனே கொடுத்த சாட்சியை முஹம்மது மறுப்பதினால், முஹம்மது, இறைவனின் தீர்க்கதரிசியோ அல்லது அவரின் முத்திரை பெற்றவரோ இல்லை என்பதனை அறிய இது ஒன்றே போதுமானது.
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17-18
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ….சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். …இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளி 22:12-13,16,20
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆல்பாவும் ஒமேகாவுமாகவும், ஆரம்பமும் முடிவுமாகவும், முதலும் இறுதியுமாகவும் இருக்கிறார் என சொல்லியுள்ளார். படைப்பு மற்றும் அனைத்துக் கிரியைகளின் முழுமைக்கும் இயேசுவே பிறப்பிடம் என்பதே இதன் பொருள். கிறிஸ்து ஒருவரே அனைத்து ஆக்கங்களையும் தம் நோக்கத்தின்படியும் விருப்பத்தின்படியும் நடத்தி ஆளுகை செய்கின்றவர்.
பழைய ஏற்பாட்டின் பிண்ணனியின் படி தன்னை, "முதலும் முடிவுமானவர் - the First and the Last" எனக் குறிப்பிட்டது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஒரே மெய்த் தேவன் என்பதையே காட்டுகின்றது.
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். ஏசாயா 44:6
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே. ஏசாயா 48:12
படைப்பு மற்றும் அனைத்துக் கிரியைகளின் முழுமைக்கும் இயேசுவே பிறப்பிடம் என்பதையும் கிறிஸ்துவே பிதாவுடனும் பரிசுத்த ஆவியுடனும் இணைந்து ஒரே மெய்க் கடவுளாக இருக்கிறார் என்பதையும் முஹம்மது ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் முஹம்மது தேவனின் முத்திரை அல்ல என்றும் அவர் மெய்யான தேவனால் அனுப்பப்பட்ட உண்மை இறைத்தூதர் அல்ல என்றும் அறியலாம்.
பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில், தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்துவின் வருகையினால் அவைகளின் நோக்கங்களும், அவைகளின் நிறைவேறுதலும் முழுமை அடைகிறது என்று ஆணித்தரமாகச் சொல்லப்படுகிறது.
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். எபிரெயர் 1:1-3
தீர்க்கதரிசிகளின் மூலமாக மனிதர்களிடம் பேசிய தேவன், தமது இறுதி வெளிப்பாடினைத் தமது குமாரன் மூலமாக நிறைவேற்றுகிறார். குமாரனும் தமது செய்தியினைத் தாம் நியமித்த மனிதர்களின் வழியாக வழங்குகின்றார்.
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். யோவான் 15:16
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:7-8
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்… அதற்குக் கர்த்தர் நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன். அப்போஸ்தலர் 9:1-6, 15-16
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுய ஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:12-18
அன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். I கொரிந்தியர் 7:25
ஒருவன் தன்னைத் தீர்க்தரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் . I கொரிந்தியர் 14:37-38
கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே…ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். I தெசலோனிக்கேயர் 4:2, 8
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரெயர் 2:1-4
பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். II பேதுரு 3:1-2
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது….. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளி 1:1-3, 10-11
இவைகளைத் தங்கள் சுய விருப்பத்தின்படியல்லாமல், இந்த அப்போஸ்தலர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தினால் தங்களின் எஜமானனின் கட்டளைகளாக அவைகளைப் பதிவு செய்யவும் அறிவிக்கவும் முற்பட்டனர் என்பதையே இவ்வசனங்கள் நமக்கு உறுதி செய்கின்றன.
இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற அர்த்தத்தையும் நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. தானியேல் 9:20-26
இப்பகுதியில் காணப்படுபவைகளின்படி, காபிரியேல் தூதன், மேசியா வருமட்டும் அறுபத்தி ஒன்பது வாரங்கள் (ஏழு வாரமும் + அறுபத்திரண்டு வாரமும்) செல்லும் என்றும், அதன் பின்பு மேசியா வந்து சங்கரிக்கப்படுவார் ("cut off") என்றும், எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அதிகாரிகளால் அழிக்கப்படுமென்றும் தானியேலுக்கு அறிவிக்கிறார். இந்தக் கால கட்டத்தில் தரிசனமும் வெளிப்பாடும் நிறைவடையும்.
இந்த நிகழ்வுகள், இயேசுவின் முதலாம் வருகையின் போது அவர் கொடூரமாக சிலுவையில் அடிக்கப்பட்ட போதும் அதின் பின்பு எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அழிக்கப்பட்டபோதும் நிறைவேறின (33-70 AD). இது, கிறிஸ்துவின் வருகைக்குப்பின் அவரால் நியமிக்கப் பெற்ற எந்த ஒரு தூதனும் வரப்போவதில்லை என்பதினைத் தெளிவாக வலியுறுத்துகிறது. கிறிஸ்துவுக்குப் பிறகு, தான் ஒரு தீர்க்கதரிசி என அறிக்கையிட்டுக் கொள்ளும் எவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மட்டுமே, கிறிஸ்துவும் அவரின் அப்போஸ்தலரும் போதித்த சுவிசேஷத்தினை உறுதி செய்யும் வகையில் தீர்க்கதரிசனம் சொல்லியாக வேண்டும்.
ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள். மத்தேயு 23:34
தீர்க்கதரிசிகளை அனுப்புவேன் என்று ஆண்டவராகிய இயேசு உரைக்கிறார். தேவன் ஒருவரே தீர்க்கதரிசிகளை அனுப்பவும் அவர்களை பலப்படுத்தவும் முடியும் என்பதினால் இயேசுவே தேவன் என்பதை இது நிலைநிறுத்துகிறது. மேலும், ஒரு தீர்க்கதரிசி, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலேயே பேச வேண்டும் என்பதினையும் இயேசுவின் மற்றும் அப்போஸ்தலரின் செய்தியையும் உறுதிப்படுத்துகிறது. மீண்டும்:
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:11-13
இயேசு தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் சுவிசேஷர்களையும் அனுப்புகிறவர் என்கின்ற கருத்தை இப்பகுதி மீண்டும் தெளிவாக்குகிறது. இத்தகைய தீர்க்கதரிசிகளில் சிலர்:
அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 11: 27-29
நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். அப்போஸ்தலர் 21:10-11
யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி; அப்போஸ்தலர் 15:32
இதன் பொருள் என்னவெனில், தேவன் அனுப்பியவர்களில் இயேசு ஒருவரே தேவன் நேரடியாக அனுப்பிய இறுதியானவர் என்பதே. அதின் பின்பு கிறிஸ்துவே ஏனைய தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் அனுப்புபவராக உள்ளார்.
நீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன் . யோவான் 17:18
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். யோவான் 20:21-23
கிறிஸ்து முன்னறிவித்தது இதோ:
இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற்கு 14:9
இதே கருத்து வேறொரு இடத்திலும் வலியுறுத்தப்படுகிறது:
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, வெளி 14:6
சுவிசேஷம் என்பது அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலத்திலும் இரட்சிப்பின் வழியே என்றும் இது உலகம் முழுவதிலும் அறிவிக்கப்படும் என்றும் இந்தப் பகுதி விளக்குகின்றது. இயேசுவால் அறிவிக்கபட்ட இந்த சுவிசேஷத்திற்கு முரண்பட்ட எந்தவொரு செய்தியைக் கொண்டு வருபவரும் தேவனிடம் இருந்து வந்தவரல்ல. பவுல் அப்போஸ்தலரின் வார்த்தைகளில் சொல்வோமானால்:
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:6-9
முஹம்மதுவிடம் பேசிய தேவதூதன் கிறிஸ்து அறிவித்த சுவிசேஷத்திற்கு முரணான செய்தியைக் கொண்டு வந்தான் எனக் காண்பதினால், இந்தத் தூதன் தேவனின் நித்திய தண்டனைக்குப் பாத்திரன் ஆகிறான். இதனால் இந்த தேவ தூதன் காபிரியேல் அல்லவென்றும், மாறாக இவன் சத்தானால் அனுப்பப்பட்ட ஒரு போலி தேவ தூதன் என்றும் அறிகிறோம். இது ஒன்றும் ஆச்சரியமல்ல; ஏனெனில், சாத்தான், மக்களை மெய்யான இரட்சிப்பின் செய்தியைத் தழுவிக்கொள்வதைத் தடுத்து அவர்களை ஏமாற்ற, ஒளியின் தூதனாக வேடமணிந்து வருவான் எனப் பரிசுத்த வேதாகமம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது:
அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். II கொரிந்தியர் 11:13-15
இதன் காரணமாகவே, பரிசுத்த வேதாகமம், கள்ளத் தீர்க்கதரிசிகளை, உண்மையானவர்களிடமிருந்தும், பொய் சொல்லும் ஆவியினை தேவனின் பரிசுத்த ஆவியிலிருந்தும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள ஒரு சோதனை முறையைக் கொடுத்துள்ளது:
ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். I கொரிந்தியர் 12:3
பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள். நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். I யோவான் 2:18-24
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். I யோவான் 4:1-6
இந்த வசனங்களின்படி, இயேசு, மாமிசத்தில் வந்த தேவனின் நித்திய குமாரன் என்பதைனையும் அவரது இறைத் தன்மையையும் மறுதலிக்கும் எந்தவொரு மனிதனும் அல்லது ஆவியும் இறைவனால் உண்டானவை அல்ல என விளங்குகின்றது. இஸ்லாம், இந்த அடிப்படை உண்மைகளை மறுதலிப்பதால், அது, மெய்யான இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது.
உண்மையில், தேவன் தம் குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சியை மறுதலிப்பதால், இஸ்லாம் தேவனைப் பொய்யராக்குகிறது.
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். I யோவான் 5:9-12
ஆண்டவராகிய இயேசு தொடர்கிறார்:
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். யோவான் 15:26-27
இயேசு சொன்னதின்படி, பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு இயேசுவுக்குச் சாட்சியாய் இருக்கும். இயேசுவுக்கு சாட்சியாய் இல்லாதிருக்கிற எந்தவொரு தீர்க்கதரிசியையும் கள்ளத் தீர்க்கதரிசியாகவே கருத வேண்டும். உண்மையில், தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவை அறிவிப்பதாகவே இருக்க வேண்டும்.
அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். அப்போஸ்தலர் 10:42-43
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். வெளி 19:10
தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவே, அதாவது அவரின் வரலாறே. ஏனெனில், அனைத்தும் அவராலே ஒன்றிணைக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றன.
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12
சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். கொலோசெயர் 1:19-22
அனைத்திலும் கிறிஸ்துவே மகிமைப்படும்படிக்கு மேன்மையுள்ளவராக இருக்கும் படிக்கு, தேவன் இதனை இவ்விதமாய் உருவாக்கினார்.
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். கொலோசெயர் 1:15-18
சுருங்கக் கூறின்:
- தாமே மனுக்குலத்திற்கு தேவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என்பதை இயேசு அறிவிக்கிறார்.
- கிறிஸ்துவின் வருகையுடன் தீர்க்கதரிசனங்களும் நோக்கமும் நிறைவடைகின்றன எனப் பழைய ஏற்பாடு உறுதிபடச் சொல்கிறது.
- தீர்க்கதரிசனங்களின் மையக் கருத்து இயேசுவின் தெய்வத்துவம், அவர் தேவ குமாரனென்ற நிலைப்பாடு, அனைத்துப் படைப்புகளையும் ஆளுகை செய்யவல்ல அவரது அதிகாரம் ஆகியன குறித்த சாட்சியே.
- சுவிசேஷங்களின் செய்தி, உலகளாவியதும் அனைத்து மனிதர்க்கும் அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தும் வண்ணமாக இரட்சிப்பின் ஒரே வழியாயும் இருக்கிறது.
- கிறிஸ்துவுக்குப் பின் வரும் எந்தவொரு தீர்க்கதரிசியும் அவர் பிரசங்கித்து, புதிய ஏற்பாட்டில் பதிவிடப்பெற்ற நற்செய்தியின்படியே இயேசுவின் பெயரால் பேசவேண்டும்.
மேலே கண்ட விவரங்களின்படி, முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியோ அல்லது தேவனின் நபித்துவ முத்திரை பெறப்பட்டவரோ அல்ல. தேவனின் ஒரேபேறான குமாரனும் மகிமையும் மகத்துவமுமானவருமாகிய இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசங்களின் அடிப்படையையும் மையக் கருத்தையும் முஹம்மது மறுதலிக்கிறார். இவ்வாறு அவர் பேசுவதினால், அவர் பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தும் மெய்யான தேவனின் (Yahweh Elohim) நபி அல்ல என்று காட்டிக்கொள்கிறார்.
இணைப்பு
தேற்றரவாளனாக முஹம்மது
MUHAMMAD AS THE PARACLETE
முஹம்மது வரப்போவதை இயேசு முன்னறிவித்ததாகக் காட்ட சில முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு அவர்கள் பெரும்பாலும் வேறொரு தேற்றரவாளனை (கிரேக்கத்தில் Paraclete) அனுப்புவது குறித்த வாக்குத்தத்தத்தைத் தங்கள் நபி குறித்த முன்னறிவிப்பாக மேற்கோள் காட்டுகிறார்கள். (யோவான் 14:16-17, 26; 15:26; 16:7-15)
யோவான் 14:26 ல், ஆண்டவராகிய இயேசு, பரிசுத்த ஆவியானவரே அந்தத் தேற்றரவாளன் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், முஸ்லிம்கள் தேற்றரவாளன் பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது என நிரூபிக்க யோவான் 16:7 ஐக் காட்டுகிறார்கள்.
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7
தேற்றரவாளன் வர வேண்டுமென்றால், தான் செல்ல் வேண்டும் என இயேசு தெளிவாக்குகிறார். கிறிஸ்து செல்லவில்லையெனின், தேற்றரவாளன் வரமாட்டார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஊழியக் காலத்திலேயே இருந்ததினால், தேற்றரவாளன் எனக் குறிப்பிட்டது அவரை அல்ல எனக் கொள்ளலாம் , எனவே இது கிறிஸ்து சென்ற பின்பு சுமார் அறுனூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த முஹம்மதுவைத் தான் குறிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். (மத்தேயு 3:16-17)
முஸ்லீம்களின் இத்தகைய விளக்கத்தில் உள்ள பிரச்சனை என்னவெனில், இயேசு எவ்வாறான சூழ்நிலையில் இவ்வாறு கூறினார் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை. உதாரணமாக, தேற்றரவாளன் பிரசன்னமாகவில்லை என இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக, எதிர்காலத்தில் தேற்றரவாளன் வெளிப்படும் விதமாக இப்பொது அவர் வெளிப்படவில்லை என்பதைச் சொன்னார். (Jesus wasn't claiming that the Comforter was not already present, but that the Comforter would not be present in the manner that Jesus had described earlier). இந்தக் கருத்தின் சூழலில் இயேசுவின் வார்த்தைகளைப் பாருங்கள்:
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:16-17
தேற்றரவாளன் ஏற்கனவே சீஷர்களுடன் இயேசுவைப் பின் பற்றியவர்களுடன் பிரசன்னமாய் இருந்தார் எனவும் அவர்கள் அவரை அறிவார்கள் எனவும் ஆண்டவர் தெளிவாக வெளிப்படுத்துகிறார். இதில் வித்தியாசம் என்னவெனில், தேற்றரவாளன் சீஷர்களிடம் பிரசன்னமாய் இருந்த போதிலும், இயேசு பரம் ஏறி மகிமை அடையும் வரையிலும் அவர்களின் உள்ளங்களில் வலுப்பெற்று அவர்களை பலப்படுத்தவில்லை என்பதே. (The Lord clearly states that the Comforter was already present with the disciples and that his followers knew him. The difference is that even though the Comforter was present with the disciples he would not be able to indwell and empower them until Jesus ascended into heavenly glory.)
இந்த நோக்கில் தான் யோவான் தமது சுவிசேஷத்தில் இவ்வாறாய் குறிப்பிடுகிறார்:
பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். யோவான் 1:32
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. யோவான் 7:37-39
எனவே, யோவான் 16:7 ஐ அதின் சமீபத்திய மற்றும் விரிந்த சூழலில் ஆராய்வோமானால், தேற்றரவாளன் எனக் குறிப்பிடப்படுவது தேவனின் பரிசுத்த ஆவியையே என்பது விளங்கும். அது முஹம்மதுவைக் குறிக்கவில்லை.
மேலும், முஹம்மதுவை தேற்றரவாளனாய்ப் பார்க்கும் கண்ணோட்டத்தில் உள்ள கூடுதல் சிக்கல்களைக் கீழே காணுங்கள்:
- யோவான் 14:17ன் படி, தேற்றரவாளன், ஒரே சமயத்தில் எல்லா சீஷர்களிலும் வாசம் செய்திருக்க வேண்டும். இது அவ்வாறாயின், அவர் ஒரு பொருளாகவோ மனிதனாகவோ அல்லாமல் ஒரு ஆவியாகத் தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருளோ மனிதனோ எல்லோரிலும் ஒரே சமயத்தில் வாசம் செய்வது இயலாத காரியம், பல உருவில் வாழக்கூடிய மனுஷர்களிருந்தால் கூட அவ்வாறு வாசம் செய்ய முடியாது. எனவே தேற்றரவாளன் என்பவர் அனைத்திலும் வியாபித்து இருப்பவர் எனப் பொருள்படுகிறது (Comforter is omnipresent). இறைவன் தான் அவ்வாறு இருக்க முடியும் என்பதினால் தேற்றரவாளன் கடவுளாகத் தான் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம், முஹம்மதுவைக் கடவுளாகக் கருதாத பட்சத்தில், இத்தகைய கண்ணோட்டத்திற்கு அடிப்படையே இல்லை.
- தேற்றரவாளன் என்பவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வண்ணமாய், அவருக்கு உரிய மகிமையை அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்.
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். யோவான் 16:13-15
பிதாவுக்கு உரியவைகள் அனைத்தும் தம்முடையவைகள் என இயேசு உரிமை பாராட்டுகிறார். இது அவரை அனைத்துக்கும் வாரிசானவர் எனக்காட்டுகிறது. எனினும், குர்ஆன் அல்லாஹ்வை அனைத்துக்கும் வாரிசாக இனம் காட்டுகிறது.
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். சூரா: 15:23
நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள். சூரா: 19:40
இந்தக் கருத்துக்களை அலசும் போது, நாம் இயற்கையாகவே பெறும் முடிவு "முஹம்மதுவின் கடவுளாகிய அல்லாஹ், இயேசுவே!". கீழ்வரும் தத்துவ ரீதியான வாதத்தைப் பாருங்கள்!
- முஹம்மதுவே தேற்றரவாளன்
- தேற்றரவாளன் என்பவர் இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும்
- அனைத்துப் பொருட்களும் கிறிஸ்துவுக்கே சொந்தம்
- முஹம்மது அல்லாஹ்வை மகிமைப்படுத்தினார்
- அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வுக்கே சொந்தம்
- எனவே, இயேசு தான் அல்லாஹ்!
ஆங்கிலத்தில்
- Muhammad is the Comforter
- The Comforter was to glorify Jesus
- All things belong to Christ
- Muhammad glorified Allah
- All things belong to Allah
- Therefore Jesus is Allah!
எந்த முஸ்லிம் தான் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளுவார்? இத்தகைய ஒரு வாதத்தை எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்கின்ற உண்மையே, இயேசு முன்னறிவித்த தேற்றரவாளன் "முஹம்மது" அல்ல என்கின்ற வாதத்தை வலுவுள்ளதாக்குகிறது.
உயிர்த்தெழுந்த நம்முடைய ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் சதாகாலங்களிலும், ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும். உம்மை எப்பொழுதும் நாங்கள் நேசிக்கிறோம்.
1 கருத்து:
இது பொதுவாக முஸ்லீம்களுகேதிரான கிறிஸ்தவர்களின் கேள்வி.
*வசனங்களை கொடுக்க இறைவனுக்கு வல்லமையிருக்கும் போது, அதை பத்திரமாக பாதுகாக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது.
முஸ்லீம்கலின் புகாரியில் முஹம்மது நபி பின்வருமாறு கூறியுள்ளார்.(பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7274)
"ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (குர்ஆன்) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"******
நான் விளங்குவது
மோசேயிற்கு மந்திரக்கோலும்
ஜீசசுக்கு பிணிதீர்க்கும் அற்றலும்
அவ்வவ் காலங்களில் பிரசித்திப் பெற்ற அற்புதங்களாகும். அதைக்காட்டுவதன் மூலம் மக்களை நேர்வழிபடுத்த நாடினானே தவிர வசனங்களை அம்மக்களுக்கு தரவோ (கட்டளைகளையே இறைவன் கொடுத்தான்), பாதுகாக்கவோ நாடவில்லை. அவ்வாறு நாடியிருப்பின் ஆதாமுக்கு பிறகு மனிதர்களுக்கு தலைமைத்துத்தின் தேவை யிருந்திருக்காதே! அவ ருக்குக்கொடுத்த வேதத்தையே பாதுகாத்திருக்கலாமே?
இங்கு முகம்மத் தான் பெற்றதாக கூறும் அற்புதம் அவைகளிலிருந்து வேறுபட்டு நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் எமது கண்களால் காணக் கிடைக்கிறதே. இது முகம்மதின் இறுதித் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவே எனது அறிவு கூறுகிறது.
குரானில் அதிசயங்கள் இருப்பதை விடவும் முக்கியமான விடயம் இதைப் போல வேறொரு குரானை ஏன் இன்றைக்கும் கூட நவீன உலகால் தயாரிக்க முடியவில்லை?
அடுத்த முக்கிய சந்தேகம் முன்னைய வேதங்களனைத்தும் அடுத்த அவதாரம் பற்றி முன்னறிவிப்பு செய்து கொண்டிருக்க குரானோ "மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்"(5:3) என கூறுகிறது. இதைக்கொண்டு தொடர்ந்து வந்த
அவதாரங்கள் நிறைவு பெற்றதாக முஸ்லிம்கள் கூறுவது எனக்கு தவறாக படவில்லை. உங்களது விளக்கமும் இன்றைய நிலையில் எனக்கு அதிகளவில் பிரயோசனப்படும்.
கருத்துரையிடுக