பாகம் 4
பாகம் 1, பாகம் 2, பாகம் 3ஐ படிக்க சொடுக்கவும். இந்த நான்காம் பாகத்தில் 31வது காரணத்திலிருந்து 40வது காரணம் வரை காண்போம்.
31. மக்களின் மீது பழி தீர்த்துக்கொள்ளும் தீர்க்கதரிசி
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மக்களின் மீது சுயமாக பழி தீர்த்துக்கொள்ளவில்லை. எரேமியா, ஏசாயா மற்றும் ஆமோஸ் போன்ற புத்தகங்களை படிக்கும் போது, இதர நாடுகள் மற்றும் மக்கள் மீது கர்த்தர் தண்டனையை கொண்டுவருவார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்க்கதரிசிகள் சுயமாக ஒரு இராணுவத்தை தயார்படுத்திக்கொண்டு கீழ்படியாத மக்கள் மீது போருக்குச் செல்லவில்லை. இதற்கு நேர் எதிராக முஹம்மது சொந்தமாக இராணுவத்தை உருவாக்கிக்கொண்டு, இவரை எதிர்க்கும் மக்கள் மீதும், கீழ்படியாத மக்கள் மீதும் போர் புரிந்தார். பைபிளின் தீர்க்கதரிசிகள், யார் மீதும் சுயமாக ஜிஹாத் தொடுக்கவில்லை. முஹம்மது பைபிளின் படி வந்த தீர்க்கதரிசி அல்ல என்பதற்கு இதுவும் ஒரு நிதர்சனம்.[31]
32. தீர்க்கதரிசிகள் கடந்த காலம் பற்றியும் உண்மையைச் சொல்லவேண்டும்
பைபிளின் தீர்க்கதரிசிகள் சொல்லிய எதிர்கால நிகழ்வுகள் நடந்தன. இதுமட்டுமல்ல, அவர்கள் கடந்த காலம் பற்றிச் சொன்ன விவரங்களும் உண்மையாக இருந்தது. ஆனால், முஹம்மது சொல்லிய நடந்துமுடிந்த நிகழ்வுகள் பொய்களாக இருக்கின்றன. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுக் கால நிகழ்வுகளைப் பற்றி முஹம்மது கூறியவைகளில் அனேக விஷயங்கள் பொய்களாக உள்ளன. சரித்திரம் என்பது நடந்துமுடிந்த ஒன்று அதனைப் பற்றியும் அவர் பொய்களைச் சொல்லியுள்ளார். இயேசு சிறுவனாக இருக்கும் போது, களிமண்ணினால் பறவையைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்த நிகழ்ச்சி குர்-ஆனில் கூறப்பட்டது(5:110), இது பொய்யான செய்தியாகும். தள்ளுபடி புத்தகங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு அவைகள் உண்மையென்றுச் சொன்ன முஹம்மது எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? கானா ஊரில் நடந்த திருமணம் தான் இயேசுவின் முதல் அற்புதம் என்று பைபிள் கூறுகிறது. முஹம்மது சொன்ன அற்புதத்தை எந்த ஒரு கிறிஸ்தவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.[32]
33. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் தண்டிக்கிறார்கள்? பெற்றோர்கள்-பிள்ளைகளின் அடிப்படை உறவுமுறையை அறியாத தீர்க்கதரிசி
முஹம்மது குர்-ஆனில் இவ்விதமாக எழுதியுள்ளார், அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களை இறைவனின் பிள்ளைகள் என்றுச் சொல்கிறார்கள், முஹம்மதுவின் கருத்துப்படி இது தவறாகுமாம். ஏன் என்று கேள்வி கேட்டால், "நீங்கள் இறைவனின் பிள்ளைகளாக இருந்தால், நீங்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் ஏன் தண்டிக்கிறான்? மக்கள் இறைவனின் பிள்ளைகள் ஆகமுடியாது, அவனது அடிமைகளாகத் தான் ஆகமுடியும், அதனால் தான் இறைவன் பாவம் செய்கின்றவர்களை தண்டிக்கிறான்" என்று பதில் சொல்கிறார். பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் தண்டிக்கிறார்கள் என்ற அடிப்படை கூட முஹம்மதுவிற்கு தெரியவில்லை, அல்லது அல்லாஹ்விற்கு தெரியவில்லை. பிள்ளைகள் நல்ல வழியில் நடத்தும் படி, அவர்களுக்கு நல்ல பாடங்களை புகட்டும் அடி பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிக்கிறார்கள். இதே போலத்தான், பைபிளின் தேவனும், தவறு செய்யும் தன் பிள்ளைகளை தண்டித்து, நேரான வழியில் கொண்டுவந்து வழி நடத்துகிறார். முஹம்மதுவை பொறுத்தமட்டில், அல்லாஹ் எஜமானன் ஆவார், மக்கள் அனைவரும் அவனது அடிமைகள் ஆவார்கள். இவர்களுக்கிடையில் தகப்பன், பிள்ளைகள் என்ற உறவுமுறை கிடையாது. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நம் இறைவனைக் காண்கிறோம், வேதம் நமக்கு எவைகளை போதிக்கிறது? தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் தவறுகள் செய்யும் போது நம்மை நல்வழிப்படுத்த நம்மை மட்டாக தண்டித்து, மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் தேவன். ஒரு தகப்பனின் அன்பை சரியாக புரிந்துக்கொள்ளாமல், போதனை செய்யும் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு தீர்க்கதரிசி என்று அங்கீகரித்துக்கொள்வார்கள்? [33]
34. கோடை காலத்துக்கும், குளிர் காலத்துக்கும் காரணம் நரகம் தான்
கோடைக்கும் வாடைக்கும் காரணம் நரகம் என்று முஹம்மது சொல்லியுள்ளார். நரகமும் அல்லாஹ்வும் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும். இப்படி கற்பனை உரையாடல்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றியவர் முஹம்மது. இப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்கிய நபரா இறைவனின் தீர்க்கதரிசி? நிச்சயமாக இல்லை. [34]
35. பேத்தி வயது சிறுமியை சிறுமைப்படுத்திய தீர்க்கதரிசி
முஹம்மது தனக்கு 53 வயதாகும்போது, 6 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர் சுயமாகச் சென்று பெண் கேட்டார், ஆயிஷாவிற்கு 6 வயதாகும்போது, அவரின் தந்தையாகிய அபூ பக்கரிடம் சம்மந்தம் பேசி நிச்சயம் செய்துக்கொண்டார். ஆயிஷாவிற்கு 9 வயதாகும் போது, வீடு கூடினார். பேத்தி வயதாகும் ஒரு சிறுமையை, எப்படி திருமணம் செய்ய இவருக்கு மனது வந்தது? இது கீழ்தரமான செயல் அல்லவா? அன்று முஹம்மது செய்த காரியத்தை இன்று இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். முஹம்மதுவின் இந்தச் செயல் அந்த சிறுமிக்கு எதிராக செய்த பாவம் அல்லவா? இது மனிதாபமற்ற செயலாகுமல்லவா? இப்படிப்பட்டவர் ஒரு தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் எப்படி நம்புவார்கள்? [35]
36. தேவகுமாரன் என்றுச் சொன்னால், தேவன் மனைவியோடு சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளை என்று கீழ்தரமாக கருதிய முஹம்மது
கிறிஸ்தவர்கள் இயேசுவை "தேவக்குமாரன்" என்றுச் சொன்னால், தேவன் ஒரு பெண் மூலமாக பெற்றெடுத்த பிள்ளை என்று கருதி சொல்வதில்லை, பைபிளும் அப்படிச் சொல்வதில்லை. ஆனால், முஹம்மது கீழ்தரமாக கருதி, அல்லாஹ்விற்கு மனைவி இல்லாத போது அவருக்கு எப்படி பிள்ளை பிறக்கும் என்று கேட்கிறார்! எவ்வளவு பெரிய அறியாமை பாருங்கள். முஹம்மதுவின் மனைவிகள் உலக மக்களுக்கு அன்னைகள் என்று முஹம்மது கூறியுள்ளாரே! முஹம்மதுவின் லாஜிக்கின்படி, முஹம்மதுவின் மனைவிகள் உலக முஸ்லிம்களுக்கு அன்னைகள் என்றால், அந்த முஸ்லிம்களின் தந்தைகள் முஹம்மதுவின் மனைவிகளுக்கு யாராக இருக்கிறார்கள்? முஹம்மது கருதியது போல நாம் கருதுவதில்லை. ஒரு சாதாரணமான விஷயம் கூட புரியாத இவர் எப்படி நபியாக மாறிவிட்டார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது, மேலும், இவரை பைபிளின் தேவன் அனுப்பவில்லை என்பது இதன் மூலம் விளங்கும் உண்மையாக இருக்கிறது. [36]
37. சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் இருந்ததற்காக கல்லறையில் வேதனையடைந்த மனிதன்
எதற்கு தண்டனை தரவேண்டும் எதற்கு தரக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லாமல் இஸ்லாமின் இறைவன் செயல்படுகிறார். ஒரு முறை முஹம்மது ஒரு சுடுகாட்டுக்கு அருகில் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, இரண்டு மனிதர்கள் கல்லறைக்குள் வேதனைப்பட்டு சத்தமிடுவதை முஹம்மது கேட்டாராம். அதில் ஒருவர் சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் கழித்ததினால், அல்லாஹ் இப்படி கல்லறையில் வேதனையை கொடுத்தாராம். இதற்காக, முஹம்மது பேரிச்ச கிளைகளை அவர்களுக்கு அருகில் நாட்டி வைத்தாராம். இந்த மட்டைகள் காயாமல் இருக்கும் வரை கல்லறையில் உள்ளே வேதனைப்படும் மனிதர்களுக்கு வேதனை இல்லாமல் இருக்குமாம். இது தான் முஹம்மது சொன்ன கதை. அறிவுள்ள மனிதன் எவனாவது இதனை அங்கீகரித்துக்கொள்வானா? இவரா தீர்க்கதரிசி? நிலாவில் வடைசுடும் பாட்டியின் கதைப்போல முஹம்மது கதைகளைச் சொல்லியுள்ளார். இவர் நிச்சயமாக கள்ளத்தீர்க்கதரிசி தான். [37]
38. வாழும் போது தான் சபித்தார், சாகும் போதும் சபிக்கவேண்டுமா?
முஹம்மது மரிப்பதற்கு முன்னால் 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார். எதிரிகளையும் நேசியுங்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், இவரோ மரிப்பதற்கு முன்பாகவும் சாபத்தை கொடுத்தார். இப்படிப்பட்டவர் எப்படி ஒரு நல்ல நபியாக இருக்கமுடியும்? தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தம், "உன்னை சபிப்பவர்களை சபிப்பேன், உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன்" என்பதாகும். இதோ முஹம்மது யூதர்களை சபித்தார், இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? இவர் ஒரு கள்ள நபியாவார் என்பதற்கு இந்த வெறுப்புணர்வும் ஒரு காரணமாகும். [38]
39. இஸ்லாமிய நபி மண்ணறை வேதனைப் பற்றி அதிகமாக பயந்துள்ளார்
முஹம்மது அல்லாஹ்வின் இறுதித்தூதர் ஆவார் , பரிசுத்தர் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால் முஹம்மதுவோ மண்ணறையில் தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி அதிகமாக பயந்துள்ளார். அல்லாஹ்விடம் அந்த தண்டனையிலிருந்து காப்பாற்றும் படி அதிகமாக வேண்டியுள்ளார். இஸ்லாமிய நபியே இப்படி பயந்தால், முஸ்லிம்கள் பயப்படாமல் இருப்பார்களா? பைபிளின் எந்த ஒரு தீர்க்கதரிசியாவது இப்படி தனக்கு மண்ணறை தண்டனை கிடைக்கும் என்று பயந்து ஜெபித்ததுண்டா? இஸ்லாமிய நபியே தண்டனைக்கு பயந்தால், சாதாரண முஸ்லிமின் நிலை என்ன? இவர் ஒரு பாவியான கள்ள நபி என்பது திண்ணம். [39]
40. பல்லியை ஏன் கொல்லவேண்டும்? ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது நியாயமா?
ஆபிரகாமை தீக்குண்டத்தில் போட்டபோது, அந்த அக்கினி இன்னும் அதிகமாக எரியவேண்டும் என்றுச்சொல்லி பல்லி ஊதியதாம் எனவே பல்லியை கொல்லவேண்டும் என்று முஹம்மது கூறினார். பாட்டிக்கதை எப்படி உள்ளதென்று பார்த்தீர்களா? பாட்டிகூட இப்படி கற்பனை செய்துச் சொல்லாது, அவ்வளவு பழமைவாதியாக முஹம்மது சொல்லியுள்ளார். இதுமட்டுமா, ஒரே அடியில் பல்லியை கொன்றவருக்கு அதிக நன்மைகளாம், இரண்டு அடியில் கொன்றவருக்கு கொஞ்சம் குறைவான நன்மைகள் கிடைக்குமாம். நெருப்பை பல்லி ஊதி அனலை அதிகமாக்குமா? இப்போது கேள்வி என்னவென்றால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது எந்த ஊர் நியாயம்? ஆதாம் செய்த பாவத்தினால் நாமும் பாவ சுபாவத்தினால் பிறக்கிறோம் என்றுச் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? அப்படியானால் முஸ்லிம்கள் ஒருவரின் பாவ சுமையை இன்னொருவர் சுமப்பதில்லை என்று ஏன் சொல்கிறார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக பல்லியின் கதையைச் சொன்ன இந்த முஹம்மது என்பவர் ஒரு கள்ள நபி என்பதற்கு இது ஒரு சான்றாக காணப்படவில்லையா? கிறிஸ்தவர்களே, பைபிளின் படி யார் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா? [40]
அடிக்குறிப்புக்கள்:
அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
[31] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682
பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.
3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.
அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.
"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.
பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.
அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.
அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.
கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.
அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
[32] குர்-ஆன் 5:110
5:110. அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
[33] குர்ஆன் 5:18 & எபிரேயர் 12:5-10, நீதிமொழிகள் 22:15
குர்ஆன் 5:18
யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
எபிரேயர் 12:5-10
12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
நீதிமொழிகள் 22:15
22: 15 பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
[34] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 1087
1087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 5
[35] ஸஹீஹ் புகாரி எண் 3894 & 3896
3894. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், 'நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்" என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.
Volume :4 Book :63
3896. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா(ரலி) இறப்பெய்திவிட்டார்கள். (அதன்பின்னர்) நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள்... அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்... (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா(ரலி) ஆறுவயதுடையவர்களாயிருக்கம்போது அவர்களை மணந்தார்கள் பிறகு ஆயிஷா(ரலி) ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள்.
Volume :4 Book :63
[36] குர்-ஆன் 6:101 & 33:6
6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
[37] ஸஹீஹ் புகாரி 216 & 218
216. நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
218. 'நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
[38] ஸஹீஹ் புகாரி எண் 1330
1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.
பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
Volume :2 Book :23
[39] ஸஹீஹ் புகாரி எண்கள் 1372, 1373, 1376 & 4707
1372. மஸ்ரூக் அறிவித்தார்.
ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'.
Volume :2 Book :23
1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
Volume :2 Book :23
1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார்.
Volume :2 Book :23
4707. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.
Volume :5 Book :65
[40] ஸஹீஹ் புகாரி எண்: 3359 & 4509
3359. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள்.
Volume :4 Book :60
ஸஹீஹ் முஸ்லிம் எண்: 4509
4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :39
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக