ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 21 டிசம்பர், 2016

ஏசாயா 29:12ம் வசனத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டா? – ஜாகிர் நாயக் இஸ்லாமுக்கு இழுக்கு

முன்னுரை:

இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மீது நீங்கள் (முஸ்லிம்கள்) வைத்துள்ள மரியாதை குறைந்துவிடும். முஸ்லிம்களால் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் என்று கருதப்படும் இவர், ஐந்தாம் வகுப்பு மாணவன் மேடையில் எப்படி தன் அறியாமையை வெளிப்படுத்துவானோ, அதுபோல இவரும் செய்திருப்பது தெரியவரும்.


பைபிளில் முஹம்மது:


பைபிளில் முஹம்மது என்ற தலைப்பில் பல பொய்யான தகவல்களை டாக்டர் ஜாகிர் நாயக் எழுதியுள்ளார், மேலும் வீடியோக்களிலும் அதைப் பற்றி பேசியுள்ளார். பைபிளின் ஏசாயா புத்தகத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று இவர் அவிழ்த்து விட்ட ஒரு பொய்யை இக்கட்டுரையில் காண்போம். இந்த பொய்யினால்  முஹம்மதுவிற்கு இவர் செய்த துரோகத்தையும் காணமுடியும். 

டாக்டர் ஜாகிர் நாயக் எழுதியது:

Muhammad (pbuh) is prophesised in the book of Isaiah:

It is mentioned in the book of Isaiah chapter 29 verse 12:

"And the book is delivered to him that is not learned, saying, Read this, I pray thee: and he saith, I am not learned."

When Archangel Gabrail commanded Muhammad (pbuh) by saying Iqra - "Read", he replied, "I am not learned".


இந்த வீடியோவில் அவர் பேசியதை, முதலாவது நிமிடத்தில் பார்க்கலாம், அதன் பிறகு சாம் ஷமான் மற்றும் டேவிட் உட் கொடுத்த பதிலையும் பார்க்கலாம் - https://www.youtube.com/watch?v=XUeYLckRu0Y


ஜாகிர் நாயக்கிற்கு பதில்:


ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை தன் பேச்சுக்களால் முட்டாள்களாக்கியுள்ளார். இவரைப்போல அரைகுறை மனிதர்களுக்கு பதில் எழுதவும் எனக்கு வெட்கமாக உள்ளது, இருந்தாலும், இவரது முட்டாள்தனத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிவேண்டியதும், முஸ்லிம்களை எச்சரிக்கை செய்வதும் நம் கடமையாகும். 


ஏசாயா 29:12


இப்போது நாம் ஜாகிர் நாயக் அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை காண்போம்:

அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். (ஏசாயா 29:12)


ஜாகிர் நாயக்கின் ஆய்வு:


இந்த இஸ்லாமிய மாமேதையின் ஆய்வின் படி, முதன் முதலாக ஜிப்ரீல் தூதன் முஹம்மதுவிடம் "முதல்முறை குர்-ஆன் வசனத்தை ஓது என்று சொன்னபோது, நான் படிக்கத்தெரியாதவன்" என்று  முஹம்மது சொன்ன நிகழ்ச்சியோடு ஏசாயா 29:12ம் வசனத்தை ஒப்பிடுகிறார். மேடைகளில் இவரது ஞானமான! வார்த்தைகளை கேட்கும்  முஸ்லிம்கள் ஆச்சரியத்தோடு புருவங்களை உயர்த்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். இவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, "நம் இறைத்தூதருக்கு முதன் முதலாக குர்ஆன் வசனம் இறக்கப்பட்டபோது நடைப்பெற்ற உரையாடல், பைபிளின் ஏசாயா புத்தகத்தில் உள்ளதா!? அதுவும் இயேசுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஏசாயா புத்தகத்தில் உள்ளதா!?  என்ன ஒரு ஆச்சரியம்! அதிசயம்!" என்று துள்ளி குதிப்பார்கள். 
ஆனால், உண்மையென்ன? ஏசாயா 29:12 முஹம்மது பற்றிய முன்னறிவிப்பா?

 1. ஏசாயாவில் (29:12) ஒரு படிக்காதவன் வருகிறான், ஹிரா குகையிலும் ஒரு படிக்காதவர் இருக்கிறார்.
 2. இந்த படிக்காதவனிடம், ஒரு புத்தகம் கொடுக்கப்படுகின்றது, ஹிரா குகையிலும் வசனம் கொடுக்கப்படுகின்றது.
 3. ஏசாயாவில் அவனிடம் படிக்கச்சொல்லப்படுகின்றது, ஹிரா குகையிலும் படிக்கச் சொல்லப்படுகின்றது.
 4. ஏசாயாவில் 'எனக்கு படிக்கத்தெரியாது என்றுச் சொல்கிறான்', ஹிரா குகையிலும் 'எனக்கு படிக்கத்தெரியாது' என்று முஹம்மது சொல்கிறார்.

முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு ஏசாயாவில் இருக்கிறது என்பதை நிருபிக்க  இவைகளைக் காட்டிலும் இன்னொரு ஆதாரம் வேண்டுமா? இது தான் நாயக்கின் ஆய்வு. ஆனால், ஏசாயா 29:12ல் வரும் அந்த படிக்காதவன் யார்? என்பதை இந்த மாமேதை ஆய்வு செய்தாரா? படிக்காதவனுக்கு முன்பு ஒரு படித்தவன் வருகிறானே (ஏசாயா 29:11) அவன் யார் என்பதை இந்த மேதை கண்டுபிடித்தாரா? ஏசாயாவில் வரும் அந்த மனிதனோடு முஹம்மதுவை ஒப்பிட்டது சரியா? இப்போது ஏசாயா 29ம் அத்தியாயத்தின் உண்மை அர்தத்தைப் பார்ப்போம், அப்போது தான் ஜாகிர் நாயக்கின் ஆய்வின் இலட்சணம் முஸ்லிம்களுக்கு புரியவரும்.


ஜாகிர் நாயக்கின் அறியாமை அரியணை ஏறுகிறது:


தேவன் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்போகும் தண்டனைப் பற்றி ஏசாயா 29ம் அத்தியாயத்தில் பேசுகின்றார்.

 • பெருமையாக பேசும் எருசலேமை தேவன் தண்டிப்பதாகச் சொல்கிறார். எதிரிகளினால் வரும் துன்பங்களை சகிக்கமுடியாமல், எருசலேம் தவிக்கும் என்கிறார் (வசனங்கள் 1-9)
 • நீ பெருமையாக இருந்ததினால், தரிசனங்களை புரிந்துக்கொள்ளும் ஞானத்தை உன்னை விட்டு தூரமாக்குவேன் என்று கர்த்தர் சொல்கிறார் (வசனம் 10).
 • படிக்கத்தெரிந்தவனுக்கும் தரிசனங்களை புரிந்துக்கொள்ளமுடியாத அளவிற்கு  தேவன் திரையை போட்டு தண்டிப்பார் (வசனம் 11).
 • படிக்கத்தெரியாதவனுக்கு சொல்லவே வேண்டாம், அவனுக்கு ஒன்றுமே புரியாது, எனக்கு படிக்கத்தெரியாது என்று அவன் சொல்லுவான் (வசனம் 12)

ஏன் இப்படிப்பட்ட தண்டனையை இஸ்ரவேலுக்கு தேவன் கொடுப்பதாகச் சொல்கிறார்? அதற்கான பதில், 13-15ம் வசனங்களில் வருகிறது [1].

இஸ்ரவேலர்கள் செய்த பாவங்கள்:

 • உதடுகளினால் தேவனிடம் சேருகிறார்கள், அவர்கள் இருதயம் அவரைவிட்டு தூரமாக இருக்கிறது.
 • அவர்கள் தேவனுக்கு பயப்படுவதில்லை.
 • அவர்கள் தவறுகளை செய்துவிட்டு, யார் நம்மை காண்பார்கள்? என்று பெருமையடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 • இதனால், தேவன் அவர்களின் ஞானத்தையும், விவேகத்தையும் எடுத்துப்போட்டார்.

இதுவரை டாக்டர் ஜாகிர் நாயக்கின் ஆய்வைப் பார்த்தோம், மேலும் ஏசாயா 29ம் அத்தியாயத்தின் பின்னணியை சுருக்கமாகக் கண்டோம். நாயக்கின் படி, முஹம்மது யார் என்பதை இப்போது காண்போம்.


அ) முஹம்மது தேவனால் தண்டிக்கப்பட்டவர்:


ஏசாயா 29:12ம் வசனத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னபடியினால், ஏசாயா 29ம் அத்தியாயத்தின் படி முஹம்மது தேவனால் தண்டிக்கப்பட்டவர் ஆவார். ஏசாயா 29ம் அத்தியாயத்தில் தேவன் ஞானிகளின் ஞானத்தையும், விவேகத்தையும் நீக்கிப்போட்டு தண்டிக்கிறார், தரிசனங்களை புரிந்துக்கொள்ளமுடியாத அளவிற்கு அவர்களின் கண்களுக்கு திரையை போடுகின்றார். 

இதன் படி பார்த்தால், நாயக்கின் விளக்கத்தின் படி, தரிசனங்களை புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டவர் தான் முஹம்மது. இதனை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா? முஹம்மது தேவனால் தண்டிக்கப்பட்டவர் என்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? "இல்லை, இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்" என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், "முஹம்மதுவிற்கு இப்படிப்பட்ட அவப்பெயரை கொண்டுவந்த ஜாகிர் நாயக்கை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என்பதை முடிவு செய்யுங்கள்".


ஆ) முஹம்மதுவின் உதடு அல்லாஹ்விற்கு அருகில், இருதயமோ அல்லாஹ்விற்கு தூரம்:


ஏசாயா 29ம் அத்தியாயத்தில், ஏன் அந்த மக்களை தேவன் தண்டித்தார் என்று பார்க்கும் போது, 13ம் வசனம் இவ்விதமாகச் சொல்வதை காணலாம். ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டிய வசனத்துக்கு (12க்கு) அடுத்த வசனம் தான் இந்த 13ம் வசனம்.

ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

அந்த மனிதனின் உதடு அல்லாஹ்விற்கு அருகில் உள்ளதாம், அவனது இருதயம் அல்லாஹ்வை விட்டு எங்கேயோ தூரமாக இருக்கிறதாம். ஜாகிர் நாயக்கின் விளக்கத்தின் படி, முஹம்மது அல்லாஹ்வை துதித்தது எல்லாம் சும்மா தான், முஹம்மதுவின் உதடுகளில் தான் அல்லாஹ் இருந்துள்ளான், இருதயத்தில் அல்ல. முஹம்மதுவின் இருதயம், அல்லாஹ்வை விட்டு, தூரமாக இருந்துள்ளது. 

முஸ்லிம்கள், ஜாகிர் நாயக்கின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வார்களா? இவரை ஏற்றுக்கொள்பவர்கள் முஹம்மதுவை கேவலப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம். 


இ) முஹம்மதுவின் ஞானம் கெட்டுப்போகும், விவேகம் மறைந்துப்போகும்:


ஏசாயா 29ல் கொடுக்கப்பட்ட இன்னொரு தண்டனை 14ம் வசனத்தில் உள்ளது. 

ஏசாயா 29:14  ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டிய 12ம் வசனத்துக்கு அடுத்தடுத்துள்ள வசனம் இது. இதன் படி, ஜாகிர் நாயக்கின் படி முஹம்மதுவின் ஞானம் கெட்டுவிட்டது, அவரது விவேகம் மறைந்துப்போயிற்று. 

முஸ்லிம்களே, ஜாகிர் நாயக்கின் விளக்கத்தின் படி, முஹம்மதுவின் ஞானம் கெட்டுவிட்டது என்றோ, அவரது விவேகம் மறைந்துப்போயிற்று என்றோ நீங்கள் நம்புகிறீர்களா? நாயக்கின் மீது நம்பிக்கை வைக்கும் முஸ்லிம்கள், இதனை நம்பித்தானே ஆகவேண்டும்! முஹம்மதுவின் ஞானம் கெட்டுவிட்டது, அவர் ஒரு விவேகம் இல்லாத மனிதர் என்று முஸ்லிம்கள் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது, ஏனென்றால், முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு ஏசாயா 29:12 உள்ளதல்லவா! 

முஸ்லிம்களே! ஜாகிர் நாயக்கினால் முஹம்மது எப்படிப்பட்ட அவமானங்களையெல்லாம் சந்திக்கவேண்டியுள்ளது பார்த்தீர்களா? அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம், "நீங்கள் சிந்தியுங்கள், மற்றவர்கள் உங்களுக்காக சிந்திக்கவிடவேண்டாம்!". 


ஈ) இரகசியமாக பாவம் செய்து, இதை காண்பவன் யார் என்றுச் சொல்லும் முஹம்மது:


தேவன், தான் தண்டிக்கும் இஸ்ரவேல் மக்களின் ஒவ்வொரு பாவத்தையும் ஒவ்வொன்றாக ஏசாயா 29ம் அத்தியாயத்தில் சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறார். ஏசாயா 29:!5ம் வசனத்தில் இன்னொரு பாவத்தையும் சுட்டிக்கட்டியுள்ளார்.

ஏசாயா 29:15  தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!

பைபிள்: 'தம்பி நாயக், ஏசாயா 29:12 இஸ்ரவேல் மக்கள் பற்றியது' 

நாயக்: 'இல்லை, இல்லை, இது முஹம்மது பற்றியது' 

பைபிள்: 'அப்படியானால், விளைவை அனுபவித்துத்தொலை' 

இஸ்ரவேல் மக்கள் மறைவிலே பாவம் செய்துவிட்டு, இதை யார் காண்பார்கள்? என்று மார்தட்டுகிறார்கள் என்று பைபிள் சொன்னால், நாயக் போன்றவர்கள் 'இல்லை, மறைவிலே பாவம் செய்துவிட்டு, இதை யார் காண்பார்கள் என்றுச் சொன்னவர், எங்கள் முஹம்மது' என்றுச் சொல்கிறார்.

இவைகளை படித்துவிட்டு, கிறிஸ்தவர்கள் 'ஆமீன், அப்படியே ஆகட்டும்' என்று சொல்கிறார்கள். இப்போது முஸ்லிம்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? 'ஆமீன் என்றுச் சொல்லப்போகிறார்களா! அல்லது நாயக்கின் விளக்கம் தவறு என்றுச் சொல்லப்போகிறார்களா?'

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

முஸ்லிம்கள் உங்களிடம் வந்து ஏசாயா 29:12ல் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்றுச் சொன்னால், 'ஆமீன்' நாங்கள் இதனை ஒப்புக்கொள்கிறோம் என்று அடித்துச் சொல்லுங்கள். 


உ) நாயக் காட்டிய வசனத்தின் அடுத்த வசனத்தை மேற்கோள் காட்டிய இயேசு


நாயக் எவ்வளவு பெரிய இடத்துக்கு உயர்ந்துவிட்டார் பாருங்கள்! 

நாயக் ஏசாயா 29:12ம் வசனத்தை மேற்கோள் காட்டினார், இவ்வசனத்தின் அடுத்த வசனத்தை அதாவது ஏசாயா 29:13ஐ இயேசு மேற்கோள் காட்டினார். உண்மையாகவா! நெசமாக இயேசு மேற்கோள் காட்டினார்!

இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட உட்கார்ந்ததை குற்றம் பிடித்த யூதமத தலைவர்களை இயேசு கடிந்துக்கொண்டார், அப்போது அவர் 'ஏசாயா 29:13ம்" வசனத்தை மேற்கோள் காட்டினார்,  பார்க்க மாற்கு 7:6-7 மற்றும் மத்தேயு 15:7-9

மாற்கு 7:6  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 

மாற்கு 7:7  மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 

மத்தேயு 15:7  மாயக்காரரே, உங்களைக்குறித்து: 

மத்தேயு 15:8  இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; 

மத்தேயு 15:9  மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

ஏசாயா 19:12ல் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று ஜாகிர் நாயக் சொல்கிறார், அப்படியானால், முஹம்மது இரண்டு முறை கடிந்துக்கொள்ளப்பட்டு இருக்கிறார் என்று பைபிளிலிருந்து நாம் அறியலாம். முதலாவதாக, தேவன் ஏசாயா 29ம் அத்தியாயத்தில் முஹம்மதுவை கடிந்துக்கொண்டார், இரண்டாவதாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவும் ஏசாயா 29:13ஐ குறிப்பிட்டு கடிந்துக்கொண்டார். இவ்விரண்டு இடங்களிலும் கண்டிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் மக்களும், யுதமத தலைவர்களும் ஆவார்கள்.  திரு ஜாகிர் நாயக் போன்றவர்கள் பைபிளின் வசனங்களின் பின்னணிகளை அறிந்துக்கொள்ளாமல், முழு அத்தியாயத்தையும் படிக்காமல் சுயமாக பொருள் கொடுத்து ஏமாற்றுவதினால் உண்டாகும் விளைவை முஸ்லிம் அறியவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இக்கட்டுரையில் முஹம்மதுவை கேவலப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. ஜாகிர் நாயக் போன்றவர்களின் வஞ்சகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதும், சத்தியத்தின் பக்கம் முஸ்லிம்களை அழைப்பதும், நாயக் போன்றவர்களின் வஞ்சகத்தில் கிறிஸ்தவர்கள் விழாமலிருக்கவும் எடுக்கப்படும் சிறிய முயற்சி தான் இது. 

நாயக் அவர்களிடம் ஒரு கடைசி கேள்வியை கேட்கவேண்டும். ஏசாயா 29:12ல், எனக்கு படிக்கத்தெரியாது என்றுச் சொன்னவர் முஹம்மது என்றால், இவ்வசனத்தின் முந்தைய வசனமான 29:11ல், "இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது" என்றுச் சொன்னானே, அவன் எந்த தீர்க்கதரிசி? 

ஏசாயா 29:11  ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.

முஸ்லிம்கள், இந்த மேற்கண்ட வசனத்தில் வரும் அந்த நபர் யார் என்று நாயக்கிடம் கேட்டுச் சொல்வார்களா?


முடிவுரை: 


திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஏசாயா 29:12ஐ குறிப்பிட்டு, அதில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உள்ளது என்றுச் சொன்ன கருத்தை நாம் இதுவரை ஆய்வு செய்தோம். முஸ்லிம் அறிஞர்கள் எப்படி பைபிளை கையாள்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என்பதை வாசகர்களுக்கு இப்போது நன்றாக புரிந்திருக்கும். இப்படிப்பட்ட பிழையான வாதம் வைக்கும் முஸ்லிம்களுக்கு எப்படி பதில் தரவேண்டும் என்று கிறிஸ்தவர்களும் புரிந்திருக்கும். நாயக் போன்றவர்கள் மேற்கோள் காட்டும் வசனத்தின் முழு அத்தியாயத்தை படித்தாலே போதும், அவர்களின் முகத்திரை தானாக கிழிந்துவிடும். 

இம்மாதத்தில், உலகமெங்கும் இயேசுவின் பிறப்பை நினைவு கூறும் கிறிஸ்தவர்களுக்கு என் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துதல்கள். 

அடிக்குறிப்பு:

[1] ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. ஏசாயா 29:14  ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஏசாயா 29:15  தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!

தேதி: 21, டிசம்பர் 2016

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இஸ்லாம் உலகை ஆளுமா? (அ) உலகிலிருந்து அழிந்தே போகுமா? முஹம்மதுவின் முன்னறிவிப்பு என்ன?

இன்று பல கோடி முஸ்லிம்களை 'இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்' என்ற நம்பிக்கை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நம்பிக்கையினால், சில முஸ்லிம்கள் ஒரு கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டும், இன்னொரு கையில் குர்-ஆனை பிடித்துக்கொண்டும், உலகை ஒருநாள் இஸ்லாம் ஆளும் என்று கோஷமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு "அந்த நாளுக்கான ஆயத்தங்களை இன்று நாங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டோம்" என்று சொல்லிக்கொண்டு, பட்டனை சட்டென்று அழுத்தி, குண்டுகளை வெடிக்கச்செய்து தாங்களும் அழிந்து மற்றவர்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உலகை கொண்டுவரவேண்டும் என்ற தீராத ஆசையால் தான் அன்று அல்கெய்தா, இன்று ஐஎஸ்ஐஎஸ்  ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறது. தீவிரவாதி முஸ்லிம்களாகிய பக்தாதி முதற்கொண்டு, அமைதியை விரும்பும்  ரஹீம் பாய் வரை 'இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்' என்ற நம்பிக்கையை அடிமனதில் வைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள்.  ஆனால், முஹம்மதுவின் ஒரு குறிப்பிட்ட முன்னறிவிப்பு, உலகை இஸ்லாம் ஆளாது, அதற்கு பதிலாக, ஒரு பாம்பு தனக்கு ஆபத்து வரும் போது எப்படி தன் புற்றுக்குச் சென்று அபயம் பெறுமோ (தப்பித்துக்கொள்ளுமோ), அது போல இஸ்லாமும் "தான் உருவான இடத்திற்கே சென்று அபயம் பெரும்" என்று சொல்கிறது.
இது உண்மையா?
இந்த விவரம் இஸ்லாமிய ஆதாரநூல்களான ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

1) குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி, அதே எண்ணிக்கையில் முடிவடையும் இஸ்லாம்:

இஸ்லாம் ஒரு மனிதரோடு தொடங்கியது, அந்த மனிதர் முஹம்மது ஆவார். அவருக்கு அடுத்து, அவரது மனைவி கதிஜா அவர்கள், அதன் பிறகு இதர நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் ஏற்றனர். மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரி செய்யும் போது கூட சில நூறு பேரை மட்டுமே இஸ்லாம் சம்பாதித்து இருந்தது. 
கீழ்கண்ட ஹதீஸ்களில் இஸ்லாமின் எதிர்காலம் பற்றி முஹம்மது என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்:
முஸ்லிம் ஹதீஸ் எண்: 232, 233, 234 மற்றும் புகாரி ஹதீஸ் எண்: 1876
பாடம் : 65 இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது; குறைந்த எண்ணிக்கையினரிடையே தான் அது திரும்பிச்செல்லும். அது (இறுதியில் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ ஆகிய) இரு பள்ளிவாசல்களிடையே அபயம் பெறும். 
232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது. 
233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 
பாடம் : 66 இறுதிக் காலத்தில் இறைநம்பிக்கை (இல்லாமற்) போய்விடுவது. 
234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
புகாரி ஹதீஸ் எண்: 1876
பாடம் : 6 இறை நம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும். 
1876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!"  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

2) முஹம்மதுவின் இந்த தீர்க்கதரிசனம் (முன்னறிவிப்பு) நிறைவேறுமா?

இஸ்லாமிய நபி முஹம்மது எதையும் சொந்தமாக சொல்லமாட்டார், முக்கியமாக இஸ்லாம்  பற்றி அவர் சொந்த சரக்கை அவிழ்த்துவிடமாட்டார், இது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. அவர் இஸ்லாம் பற்றி சொன்னதெல்லாம், அல்லாஹ்விடமிருந்து வஹியாக (வெளிப்பாடாக) பெற்றுத்தான் சொன்னார். மேலும், ஹதீஸ் நூல்களில் புகாரியும், முஸ்லிமும் முன்னணியில் இருக்கும் நூல்கள் ஆகும். முஸ்லிம்களுக்கு குர்-ஆனுக்கு அடுத்தபடியான இறைவேதம் ஹதீஸ்களாகும். குர்-ஆனில் அல்லாஹ் மட்டும் பேசியிருக்கிறார், ஆனால், ஹதீஸ்களில் அல்லாஹ்வும் முஹம்மதுவும் பேசியுள்ளார்கள் என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. 
மேற்கண்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை சுருக்கினால், கீழ்கண்ட விவரங்கள் கிடைக்கும்:
அ) இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையே தோன்றியது. 
ஆ) அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும், அதாவது கடைசியில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் வெறும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களாக இருப்பார்கள்.
இ) இதனை புரிந்துக்கொள்ள ஒரு உதாரணம்: பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும். பாம்புக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் உடனே தப்பித்துக்கொள்ள புற்றுகளைத் தேடி அதில் அபயம் பெறும், அது போல, இஸ்லாமுக்கு ஆபத்து வரும், அப்போது மக்கா மதினாவில் அது சென்று அபயம் பெறும்.
ஈ) பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும். அப்படியானால், முஸ்லிம்கள் உலகில் அற்றுப்போகும் போது தான், மறுமை நாள் வரும். உலகில் முஸ்லிம்கள் இல்லாமல் இருந்தால், அது தான் மறுமை நாளுக்கு அடையாளம்.
உ) இதனை சரியாக புரிந்துக்கொள்வதானால், "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது. ஆக, உலகின் கடைசி முஸ்லிம் எப்போது மரிப்பானோ, அப்போது தான் மறுமை நாள் வரும்.

3) ஆய்வு:

இதுவரை முஸ்லிம்களின் நம்பிக்கையை பார்த்தோம், அதாவது ஒரு நாள் இஸ்லாம் முழு உலகையும் ஆளும். மேலும் உலகில் இருக்கும் எல்லா ஜாதிக்காரர்களையும், நாட்டுக்காரர்களையும் முஸ்லிம்களாக மாற்றிவிடுவார்கள் முஸ்லிம்கள் (மாறாதவர்கள் செத்துத்தொலைக்கவேண்டியது தான்). இது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், முஹம்மது அல்லாஹ்விடமிருந்து வெளிப்பாட்டைப் பெற்று அறிவித்தது என்னவென்றால், 'உலகில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை உலக முடிவு வராது. காஃபிர்கள் இருப்பார்கள், கிறிஸ்தவர்கள் இருப்பார்கள், இந்துக்கள் இருப்பார்கள், நாத்தீகர்கள் இருப்பார்கள் ஆனால், முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுப்போவார்கள், அல்லது இல்லாமல் போவார்கள், அப்போது தான் முடிவு வரும்'. இது மட்டுமல்ல, குறைந்த எண்ணிக்கையிலான மக்களோடு இஸ்லாம் ஆரம்பித்தது, அதே போல உலகில் இஸ்லாம் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு, கடைசியாக மக்கா மதினாவில் அது செட்டிலாகிவிடும். இந்த நிலையில் சில முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள், அவர்களும் அழிக்கப்பட்டுவிட்டால் தான் உலக முடிவு வரும்.

4) முஸ்லிம்களுக்கு கேள்விகள்

யார் சொல்வதை நாங்கள் நம்புவது? நீங்கள் சொல்வது போல இஸ்லாம் உலகை ஆளுமா? அல்லது முஹம்மது சொன்னது போல (அல்லாஹ் சொன்னது போல) இஸ்லாம் உலகில் இல்லாமல் போய்விடுமா?
 • உலகை இஸ்லாம் ஆளும் என்ற உங்களின் நம்பிக்கை சரியானதா?
 • உலக கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும் இஸ்லாமையா நீங்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்?
 • பாம்புக்கு ஆபத்து வருவது போல, இஸ்லாமுக்கும் கடைசி காலத்தில் ஆபத்து வருமா?
 • உலக கடைசியில் அல்லாஹ் இயேசுவை பூமிக்கு அனுப்புவார், அவர் வந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக சண்டைபோடுவார், பன்றிகளை கொன்றுப்போடுவார் என்று பலவாறு முஸ்லிம்கள் சொல்கிறார்களே, அவைகள் எல்லாம் பொய்யான தகவல்களா?
குர்-ஆன் 4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
புகாரி எண் 2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (மேலும்  பார்க்க புகாரி எண்கள் 2476 & 3448, முஸ்லிம் எண்கள்: 242 & 243)
பிஜே அவர்களின் "கியாமத் நாளின் அடையாளங்கள்" புத்தகத்தில் உலக முடிவு நாள் பற்றி  பல ஆதாரங்களை அவர் எழுதியுள்ளார். ஆனால், பாம்பு அபயம் பெறுவது போல இஸ்லாம் அபயம் பெறும் என்ற  முஸ்லிம், மற்றும் புகாரி ஹதீஸ்கள் பற்றி மூச்சு விடவில்லை, இந்த ஹதீஸ்களை அவர் குறிப்பிடவும் இல்லை.  ஒரு வேளை நான் குறிப்பிட்ட முஸ்லிம் மற்றும் புகாரி ஹதீஸ்களை அவர் மறுக்கிறாரா? அல்லது இனிமேல் மறுப்பாரா?

முடிவுரை: 

இஸ்லாமை ஆய்வு செய்யச் செய்ய ஒன்று மட்டும் தெளிவாகபுரிகிறது, அது என்னவென்றால், இஸ்லாம் அதிகமாக குழப்புகிறது. கடந்த 1400 ஆண்டுகளாக அது குழப்பிக்கொண்டே இருக்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமினால் குழப்பப்படுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, முஸ்லிம்களையே இஸ்லாம் அதிகமாக குழப்பிக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமில் அனேக முரண்பாடுகள் உள்ளன.  ஒன்றுக்கொன்று முரண்படும் விவரங்கள் குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் நிரம்ப காணப்படுகிறன. முஸ்லிம் சமுதாயம் இதனை புரிந்துக்கொள்ளாமல், தங்களுக்குள் சண்டைப்போட்டுக்கொள்கிறது அல்லது மற்றவர்களோடு சண்டை போடுகிறது. 
இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்ட உலகத்தின் முடிவு நாட்கள் பற்றிய ஹதீஸ்களுக்கு முஸ்லிம்கள் விளக்கமளிப்பார்களென்று நான் நம்புகிறேன். பிஜே போன்ற அறிஞர்கள் தங்களின் தள்ளுபடி ஹதீஸ் பட்டியலில் மேற்கண்ட ஹதீஸ்களையும் சேர்த்துக்கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எது எப்படியோ! முஹம்மதுவின் மேற்கண்ட ஹதீஸ்கள் நிறைவேற என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேதி: 18, டிசம்பர் 2016


குர்-ஆன் முரண்பாடு - யோனா வெட்டவெளியில் எறியப்பட்டாரா? (அ) எறியப்படவில்லையா? ஸூரா 37:145 மற்றும் 68:49.


ஸூரா 37:145 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

37:145 அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். (பிஜே மொழியாக்கம்)

இவ்வசனத்தை வேறு சில தமிழாக்கங்களில் காண்போம்.

37:145. ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

37:145. (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

37:145 இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம். இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேற்கண்ட குர்-ஆன் வசனத்திற்கு முரண்பட்டு, இன்னொரு இடத்தில் அதே குர்-ஆன் வேறுவிதமாக சொல்கிறது. 

குர்-ஆன் 68:49

68:49. அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். (பிஜே மொழியாக்கம்)

இந்த வசனத்தை இதர தமிழாக்கங்களிலும் காண்போம்.

68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

68:49. அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார். அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

68:49. அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்! இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேற்கண்ட தமிழாக்கங்களின் நடை வேறுபட்டு இருந்தாலும், குர்-ஆன் 37:145ம் வசனம் "யோனா  வெட்ட வெளியில் எறியப்பட்டார்" என்றுச் சொல்கிறது என்பதை அனைவரும்  ஒருமித்து தமிழாக்கம் செய்துள்ளார்கள். இது ஒருபுறமிருக்க, குர்-ஆனின் 68:49ம் வசனம் 'யோனா வெட்டவெளியில் எறியப்படவில்லை' என்றுச் சொல்கிறது என்பதையும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.  அதாவது, அல்லாஹ்வின் அருட்கொடை/கருணை அவருக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், அவர் வெட்டவெளியில் எறியப்பட்டு இருந்திருப்பார் என்று ஸூரா 68:49 சொல்கிறது. 

எந்த வசனம் சொல்வது உண்மை? ஸூரா 37:145ன் படி யோவா வெட்டவெளியில் எறியப்பட்டாரா? அல்லது ஸூரா 68:49ன் படி யோனா வெட்டவெளியில் எறியப்படவில்லையா?  

இந்த முரண்பாட்டிற்கு முஸ்லிம்களின் பதில்:

இந்த முரண்பாட்டிற்கு இரண்டு தளங்களில் சில பதில்களை படித்தேன், அவைகளை இங்கு தருகிறேன்:

 1. www.understanding-islam.com/was-jonah-pbuh-cast-on-the-desert-shore-or-not/
 2. www.call-to-monotheism.com/was_jonah_cast_on_the_desert_shore___by_ansar_al__adl

நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் மேற்கண்ட கட்டுரைகளை படிக்கவேண்டும், மேலும் தங்கள் தமிழாக்கங்களில் செய்துள்ள பிழைகளை திருத்திக்கொள்ளவேண்டும். அதாவது ஸூரா 68:49 பற்றிய ஆய்வை மறுபரிசீலனை செய்யவேண்டும், மேலும் புதிய மொழியாக்கத்தை கொடுக்கவேண்டும்.

குர்-ஆன் ஒரு விரிவான விளக்கமான வேதம் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது. ஆனால், இக்கட்டுரையில் நாம் கண்டதுபோல, யோவாவைப் பற்றிய விஷயத்தில் முரண்பட்ட கருத்தை குர்-ஆன் சொல்கிறது.

குர்-ஆன் 6:114. (நபியே! கூறும்:) "அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்-ஆனின் இந்த குழப்பமான முரண்பட்ட விவரங்கள் நம் தமிழாக்க அறிஞர்களுக்கும் புரியவில்லை. எனவே அவர்கள் தமிழாக்கம் செய்யும் போது, ஒரு இடத்தில் யோனா வெட்டவெளியில் எறியப்பட்டார் என்றும், இன்னொரு இடத்தில் எறியப்படவில்லையென்றும் மொழியாக்கம் செய்துள்ளார்கள். அவர்கள் செய்து சரியானது தான், ஆனால் முரண்பாடு குர்-ஆனில் அல்லவா உள்ளது!

கீழ்கண்ட வசனத்தை கவனியுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்து காட்டுவதாக குர்-ஆன் பெருமை அடித்துக்கொள்கிறது, ஆனால், யோனாவின் விஷயத்தில் முரண்பட்ட விவரத்தைச் சொல்லியுள்ளது, அது மட்டுமல்ல, முந்தைய வேதங்களில் தெளிவாக்கப்பட்டுவிட்ட விவரங்களை சொல்லும் போதும் குர்-ஆன் தடுமாறுகிறது. 

குர்-ஆன் 12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

அடுத்த வசனத்தைப் பாருங்கள் - குர்-ஆன் 16:89

குர்-ஆன் 16:89. இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். 

ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்கும்படியாக குர்-ஆன் இறக்கப்பட்டது என்று ஸூரா 16:89 சொல்கிறது, ஆனால், நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவருக்கும் தெளிவை குர்-ஆன் கொடுக்கவில்லை, எனவே, அவர்கள் முரண்பட்ட விவரங்களை அப்படியே தமிழாக்கம் செய்துள்ளார்கள். இதன் மூலம் அறிவது என்ன? குர்-ஆன் தன்னைப்பற்றிச் சொல்வது ஒன்று, ஆனால் நிதர்சனம் மற்றொன்று.  குர்-ஆன் என்பது பாமர மனிதனுக்கும் புரியும் வகையில் உள்ளது என்று பிஜே அவர்கள்  சொல்வார்கள். ஆனால் உண்மையென்னவென்றால், இவருக்கே புரியாமல் அல்லவா இவர் மொழியாக்கம் செய்துள்ளார். குழப்பம் தரும்படி குர்-ஆனின் வசனங்கள் உள்ளன என்பதற்கு இந்த யோனா பற்றிய வசனங்கள் தான் சாட்சி. அரபியை கறைத்துகுடித்தவர்களுக்கே தடுமாற்றம் என்றால், அரபியின் வாசனையையும் முகராதவர்களின் கதி என்னவென்று சொல்லத்தேவையில்லை.

தேதி: 18, டிசம்பர் 2016


குர்-ஆன் தமிழாக்க குளறுபடி கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/quran_tamil_translations/jonah_cast.html


புதன், 7 டிசம்பர், 2016

அம்மாவின் நிர்வாகம், அல்லாஹ்வின் நிர்வாகம் – அடுத்த தலைவர் யார்?


ஒரு ஆடு தளபதியாக இருக்கும் சிங்கங்களின் இராணுவத்திற்கு நான் பயப்படமாட்டேன், ஆனால், ஒரு சிங்கம் தளபதியாக இருக்கும் ஆடுகளின் இராணுவத்திற்கு நான் பயப்படுகிறேன் என்று மகா அலேக்சாண்டர் கூறியதாகச் சொல்வார்கள். ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்த கூற்று எடுத்துக்காட்டுகின்றது.  

டிசம்பர் 5ம் தேதி, 2016ம் ஆண்டு நம் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலமானார்கள். ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் பல ஆண்டுகளாக அஇஅதிமுக கட்சியை கட்டிக்காத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவருக்கு அடுத்தபடியாக இக்கட்சியை இவரைப்போலவே நிர்வாகம் செய்யும் அடுத்த தலைவர் தேவைப்படுகின்றார். இக்கட்சி அடுத்த 10 ஆண்டுகளில் எந்த நிலையில் இருக்கும் என்பதை, அடுத்த தலைவரின் நிர்வாகத் திறமை மீது சார்ந்துள்ளது. சிறந்த தலைவர்கள் தங்களுக்கு பிறகு தாங்கள் உருவாக்கிய ஸ்தாபனங்கள், கட்சிகள் அல்லது இயக்கங்களை செவ்வனே நடத்துவதற்கு ஏற்ற சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும், அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடவேண்டும். திரு எம்ஜிஆர் அவர்கள் ஒரு சிறந்த தலைவியை தன் கட்சிக்கு கொடுத்துவிட்டுச் சென்றார். இதனால் இந்நாள்வரை அவரது கட்சி வாழ்ந்துவந்துள்ளது. இதே போல, மாண்புமிகு ஜெயலலிதா அவர்களும் தனக்கு பிறகு யார் அந்த கட்சியை நடத்துவார் என்ற முடிவை, கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு அறிவித்து இருந்திருப்பார் என்று நாம் நம்பலாம். இதோடு தமிழ் நாட்டு அரசியல் பற்றி எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். எதிர்பாராத  விதமாக மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி எனக்கு இஸ்லாமின் தலைசிறந்த தலைவர் முஹம்மதுவை ஞாபகப்படுத்தியது. 

இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. 

சிறந்த தலைவன் யார்?

உலகத்தின் பல வெற்றிகரமான சாம்ராஜ்ஜியங்கள் சரித்திர ஏடுகளிலிருந்து காணாமல் போனதற்கு முக்கிய காரணம், சரியான நிர்வாகத் திறமையில்லாத தலைவர்கள் ஆட்சி செய்ததால் தான்.  எவன் ஒருவன் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குகின்றானோ, அவனே சிறந்த தலைவன் எனப்படுவான். தன் வாழ்நாள் முழுவதும் தொண்டர்களை தொண்டர்களாகவே வைத்திருப்பவன், தனக்கு பிறகு குழி தோண்டி தன் கட்சியை/இயக்கத்தை புதைப்பதற்கு சமமான காரியத்தை செய்பவன் ஆவான். 

இச்சிறிய கட்டுரையில், இஸ்லாமின் ஸ்தாபகரும், சிறந்த தலைவராகவும் திகழ்ந்த முஹம்மது அவர்கள் தனக்கு பிறகு தன் ஸ்தானத்தில் யார் தலைவர் பதவியில் உட்காரவேண்டும் என்ற முடிவை எடுத்தாரா இல்லையா? என்பதை ஆய்வு செய்யப்போகிறோம். 

முஹம்மதுவின் திடீர் மரணம்

இஸ்லாம் என்ற நாணயத்திற்கு (காசைச் சொல்கிறேன்) இரண்டு பக்கங்கள் உள்ளன, ஒரு பக்கம் ஆன்மீகம், அடுத்த பக்கம் ஆட்சி அதிகாரம், ஒரு பக்கம் அவ்வுலகம், அடுத்த பக்கம் இவ்வுலகம்.  இஸ்லாமின் தலைவராக (கலிஃபாவாக) நியமிக்கப்படுபவர் ஆன்மீக தலைவராகவும், அதே நேரத்தில் நாட்டின் ஆட்சித் தலைவராகவும் செயல்படுவார். நாம் வாழும் இக்காலத்தில் அரசாங்கத்தை நடத்த வெறும் ஆட்சித்தலைவரை நியமித்தால் போதுமானது, ஆனால், இஸ்லாமைப் பொருத்தமட்டில், அதே நபர் ஆன்மீகத்தலைவராகவும் இருக்கவேண்டும், எனவே, இதில் தவறு நடந்தால், நாடு அழியும். 

இஸ்லாம் பற்றி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மதுவின் மூலமாக அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சியை ஸ்தாபித்தான், இதன் ஒரு பாகம் ஆன்மீகம் ஆகும். இருபத்தி மூன்று ஆண்டுகள் முஹம்மது ஒரு ஆன்மீக தலைவராகவும், (சில ஆண்டுகள்) நாட்டுத் தலைவராகவும் இஸ்லாமை கட்டிக்காத்தார். இதற்கு அல்லாஹ்வின் அருட்கொடையும், போர்கள் மூலமாக கிடைத்த பொருட்கொடையும் அளவில்லாமல் இருந்தது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கவேண்டியவர், ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக, முஹம்மது சுகவீனமானார், ஒரு நாள் அவரது உயிரை அல்லாஹ் அபகரித்துக்கொண்டான். 

தனக்கு பிறகு யார் ஆன்மீகத்தலைவராகவும், நாட்டுத்தலைவராகவும் இருக்கவேண்டும் என்று முஹம்மது சொல்லியிருந்தாரா? தொண்டர்கள் அனைவருக்கும் அடுத்த தலைவர் யார் என்றுத் தெரியுமா? முஹம்மதுவின் மரணத்துக்கு முன்பே அதிகார பூர்வமாக தலைவர் பற்றிய அறிக்கையை முஹம்மது செய்திருந்திருந்தாரா?

நாற்காலிக்காக சண்டைபோடும் ஆன்மீக பழுத்த பழங்கள்

ஒரு பக்கம் முஹம்மது மரித்த சோகம் மக்களின் உள்ளத்தில் சொல்லொன்னா வேதனையை உண்டாக்கியிருந்தது, இன்னொரு பக்கம், தலைவர்கள் நாற்காலிக்காக சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நாற்காலிச்சண்டை அவர் மரித்த அதே நாள் நடந்தது என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

அ) அன்சாரிகள் என்று அழைக்கப்பட்ட மதினாவாசிகள் தங்கள் இனத்திலிருந்து ஒரு தலைவரை நியமிக்க கூட்டம் கூடிவிட்டார்கள்.

ஆ) மக்காவாசிகளான குறைஷிகள் தங்கள் இனமக்கள் தான் இஸ்லாமுக்கு தலைமை தாங்கவேண்டும் என்று விரும்பினார்கள். 

இ) இவ்விரு கூட்டத்தினரும் ஒன்று கூடி பேசியும் பயனில்லை. மதினா தலைவர்கள் ஒரு ஆலோசனைச் சொன்னார்கள், இரண்டு தலைவர்களை நியமிப்போம், உங்களில் ஒருவர் எங்களில் ஒருவர். ஆனால், இதனை மக்காவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈ) அபூ பக்கர், மற்றும் உமர் என்பவர்கள் முஹம்மதுவிற்கு பெண் கொடுத்த மாமனார்கள் ஆவார்கள்.  உஸ்மான் மற்றும் அலி என்பவர்கள் முஹம்மதுவின் மகள்களை திருமணம் செய்திருந்த மருமகன்மார்கள். இவர்கள் அனைவரும் மக்காவினராவார்கள்.

உ) ஜுபைர் என்ற முஹம்மதுவின் தோழர், தன் வாளை உறுவி, அலிக்கு ஆதரவு கிடைக்கும் வரை இதை உறையில் போடமாட்டேன் என்றுச் சொன்னார். ஜுபைரை கல்லால் அடித்து வாளை பிடுங்கு என்று உமர் கூறினார். இவர்கள் அனைவரும் தற்கால முஸ்லிம்களின் படி, இஸ்லாமிய ஆன்மீகத்தில் பழுத்த பழங்கள்.

ஊ) அபூ சுஃப்யான் என்ற இன்னொரு முஸ்லிம், இங்கு தலைகள் உருளும் சூழல் உள்ளது என்றார், வாளை சுழற்றவேண்டிய சரியான வேளைக்காக காத்திருந்தார். 

எ) நிலைமை தலைக்கு மேலே போகிறது என்பதை உணர்ந்த உமர், புத்திசாலித்தனமாக மிகவும் தைரியமாக தன் ஆதரவு அபூ பக்கருக்கு என்று கூறினார். வேறு வழியின்றி ஒவ்வொருவரும் ஆதரவு அளித்தனர். 

ஏ) அலிக்கு தான் தலைவராகவேண்டுமென ஆசை இருந்தது, இரத்தம் சிந்த இது சமயமல்ல என உணர்ந்தவராக, தன் ஆதாரவையும் அபூ பக்கருக்கு கொடுத்தார். பாவன் இவர், இப்படிப்பட்ட ஆதரவை அவர் மூன்று முறை கொடுக்கவேண்டி இருந்தது. கடைசியாக நான்காவதாக இவர் தலைவரானார். 

ஐ) அபூ பக்கர் தலைவராக வருவதை அபூ சுஃப்யான், விரும்பவில்லை. குறைவான வம்சத்தில் வந்த அபூ பக்கரா எங்களுக்கு தலைவராவது? ஜாதிவெறி அவரை ஆட்டிப்படைத்தது.  அலியிடம் பேசிப்பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. 

ஒ) மதினாவினரும் விருப்பமில்லாமல் தங்கள் ஆதரவை கொடுத்தார்கள். 

இவைகள் எல்லாம், முஹம்மது மரித்த அதே நாள் அரங்கேரியது.

இக்குழப்பத்திற்கு யார் காரணம்?

அல்லாஹ்வும் முஹம்மதுவும் தான் இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம். 

பெண்களின் மாதவிடாய் முதற்கொண்டு, தேவையில்லாத அனைத்துவித கேள்விகளுக்கு பதில் கொடுத்த முஹம்மது, தனக்கு பிறகு யார் தலைவராக வரவேண்டும்? தலைவர்களை எப்படி நியமிக்கவேண்டும்? போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டுச் சென்று இருந்திருக்கலாம். ஆனால், இதைப் பற்றி முஹம்மது விளக்கமளிக்கவில்லை.

அற்பமான விஷயங்களுக்கெல்லாம் 'வெளிப்பாடுகளை, அதாவது குர்-ஆன் வசனங்களை இறக்கிய அல்லாஹ்' ஒரு தலைவனை எப்படி நியமிக்கவேண்டும் என்றுச் சொல்ல மறந்துவிட்டான்.

ஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்களையும் (6236), பல ஆயிர ஹதீஸ் விவரங்களையும் இறக்கிய அல்லாஹ்விற்கு முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக வரும் தலைவர்களை எப்படி நியமிக்கவேண்டும் என்பதை விளக்கும் 10 வசனங்களை இறக்கமுடியவில்லை.

முஹம்மது தனக்கு பிறகு தலைவர்களை எப்படி நியமிக்கவேண்டும் என்ற விவரங்களைச் சொல்லாமல் மரித்தபடியினால் உண்டான இழப்புக்களை இஸ்லாமின் ஆரம்பகால 50 ஆண்டுகால சரித்திரத்தில் காணலாம்.

அல்லாஹ்வும் முஹம்மதுவும் செய்த மிகப்பெரிய தவறினால், முஹம்மதுவின் பேரப்பிள்ளைகளும் குடும்பமும் பரிதாபமாக கொல்லப்பட்டார்கள். முஹம்மதுவின் மருமகனார் உஸ்மான் அவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார், அதே முஸ்லிம்களால் இன்னொரு மருமகனார் அலி அவர்களும் கொல்லப்பட்டார்கள். 

அல்லாஹ் இறைவனா? 

"அல்லாஹ் தான் பைபிளின் தேவன்" என்று குர்-ஆன் சொல்கிறது. அடுத்த தலைமுறை தலைவர்களை நியமிக்கும் இந்த குணத்தை பார்க்கும் போது, நிச்சயமாக அல்லாஹ் பைபிளின் தேவனாக இருக்கமுடியாது என்று சொல்லமுடியும். 

மோசேயின் வாழ்வு எப்படி எப்போது முடிவடையும்? அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும்? போன்றவற்றை பைபிளின் தேவன் முடிவு செய்து, அதனை ஒரு அழகான முறையில் செயல்படுத்தினார். ஆனால், முஹம்மது எப்படி எப்போது மரிப்பார் என்று தெரியாதவராக அல்லாஹ் காணப்படுகிறார்.  இஸ்லாமின் சரித்திரத்தை கூர்ந்து ஆய்வு செய்தால், இந்த முடிவிற்குத் தான் வரமுடியும். 

 1. மோசே மரிப்பது பற்றிய செய்தியை தேவன் மோசேக்கு அறிவிக்கிறார்.[1]
 2. ஒரு சிறந்த தலைவனை தெரிவு செய்யுங்கள் என்று மோசே வேண்டுகிறார்.[2]
 3. யோசுவாவை தெரிவு செய்யும்படி தேவன் கட்டளையிடுகிறார்.[3]
 4. யோசுவாவை மக்களுக்கு முன்பாக கொண்டுச்சென்று, அவனுக்கு அதிகாரம் மற்றும் கனம் கொடு என்று தேவன் கட்டளையிட்டார்.[4]
 5. யோசுவா ஒரு விஷயத்திற்காக எப்படி முடிவு எடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய கட்டளையை தேவன் கொடுக்கிறார்.[5]
 6. இதர இடங்களில் மோசே யோசுவாவிற்கு அறிவுரைகள், கட்டளைகள் மற்றும் உற்சாக வார்த்தைகளை கொடுத்தார்.[6]
 7. கடைசியாக, மோசே மரித்தபிறகு, தேவன் நேரடியாக யோசுவாவை வழி நடத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார், வெற்றியுள்ள தலைவனாக இருக்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். [7]

அடுத்தபடியாக, புதிய ஏற்பாட்டிலும், இயேசு தனக்கு பிறகு யார் தன் திருச்சபைக்கு தலைமை தாங்கவேண்டும் என்பதை தன் சீடர்களுக்கு விளக்கிவிட்டுச் சென்றார். இயேசுவின் உள்வட்ட சீடர்களில் பேதுரு, யோவான் போன்றவர்கள் தலைவர்களாக செயல்பட்டபோது, இதர சீடர்கள் அதனை ஆமோதித்தார்கள், முஹம்மதுவின் சீடர்களைப்போல, வாளை ஏந்தி இரத்தம் சிந்த துடிக்கவில்லை. 

இதிலிருந்து அறிவது என்னவென்றால், அல்லாஹ் பைபிளின் இறைவனல்ல என்பதாகும். வீணான பயனில்லாத விஷயங்களுக்கெல்லாம் வசனங்களை இறக்கிய அல்லாஹ், தலைவர்களை எப்படி நியமிப்பது? அவர்களை ஆட்சியிலிருந்து எப்படி நீக்குவது போன்றவற்றையெல்லாம் சொல்லாமல், முஹம்மதுவை எடுத்துக்கொண்டது, அல்லாஹ்வின் தெய்வீகத்தன்மையை கேள்விக்குரியக்குகிறது.

முடிவுரை: 

ஆரம்பகால இஸ்லாமிய சரித்திரத்தைபோன்று, தமிழ்நாட்டின் அஇஅதிமுக கட்சி அல்லல்படக்கூடாது என்று விரும்புகிறேன். நல்ல நிர்வாகத்திறமையுள்ள தலைவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் தேவை. 

இஸ்லாமிய ஆரம்பக்காலத்தை, அதாவது முதல் நான்கு கலிஃபாக்களின் ஆட்சியை முஸ்லிம்கள் "இஸ்லாமின் பொற்காலம்" என்றுச் சொல்வார்கள், ஆனால் இது பச்சைப்பொய்யாகும். மூன்றாவது கலிஃபா உஸ்மான் அவர்கள் தன் தலைமையகத்தில், முஸ்லிம்களால் மிகவும் கொடுமையாக கொல்லப்படுவாரானால், அந்த காலக்கட்டத்தை "பொற்காலம்" என்று எப்படிச் சொல்லமுடியும்? வேண்டுமானால், அக்காலத்தை 'இஸ்லாமின் கற்காலம்' என்றுச் சொல்லலாம். 

முஹம்மதுவிற்கு பிறகு அடுத்த 50 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

இஸ்லாமின் அரச குடும்பத்தின் கனிகள் (நடத்தைகள்)

The Fruits of Islam's Royal Family

 1. Muhammad's Wealth
 2. The New King
 3. Uthman's Murder
 4. Ali and Aisha
 5. Ali and Mu'awiya
 6. Husayn and Yazid
 7. The Fruit of Islam Judged

அடிக்குறிப்புக்கள்

[1] எண்ணாகமம் 27:13  நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

[2] எண்ணாகமம் 27:15  அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: 27:16  கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு, 27:17  அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான். 

[3] எண்ணாகமம் 27:18  கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, 

[4] எண்ணாகமம் 27:19  அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 27:20  இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு. 

[5] எண்ணாகமம் 27:21  அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார். 27:22  மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, 27:23  அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

[6] உபாகமம் 3:28  நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார். 

உபாகமம் 31:7  பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய். 31:8  கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

[7] யோசுவா  1:1  கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: 

1:2  என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். 

1:3  நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். 

1:4  வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். 

1:5  நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. 

1:6  பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 

1:7  என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. 

1:8  இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். 

1:9  நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

தேதி: 7, டிசம்பர் 2016


உமரின் இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/amma_allah.html


ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ஜிஹாத் சிக்கலுக்கு விளக்கம் (Unraveling Jihad)


ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் 'இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?" என்ற கேள்வியை பண்டிதர்களும், ஊடகங்களும் கேட்கும்படி செய்துள்ளன. பெரும்பாலான முஸ்லிம்கள் அமைதியை விரும்பும் மக்களாக இருக்கிறார்கள் என்ற விவரமும் நம் செவிகளில் அடிக்கடி விழுகிறது. இவைகளுக்கு இணையாக, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமல்ல" என்ற சத்தமும் நம் செவிகளில் விழாமல் தப்பிக்கமுடிவதில்லை. ஒரு பக்கத்திலிருந்து "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்ற சத்தம் தொணிக்கிறது, இன்னொரு பக்கத்திலிருந்து "இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல" என்ற சத்தமும் தொணிக்கிறது. இவ்விரண்டு சத்தங்களும் உண்மையா? அப்படியானால், இது எப்படி சாத்தியம்? 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்துக்கொண்டால், இந்த கேள்வியின் பாதி பதில் புரிந்துவிடும். மீதமுள்ள பதிலை புரிந்துக்கொள்ள ஜிஹாத் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை கவனிக்கவேண்டும். இஸ்லாம் எவைகளை போதிக்கிறது? இஸ்லாமின் முக்கியமான தூண்கள் என்ன? இஸ்லாமை பின்பற்றுகிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள்  எவை? இந்த கட்டளைகளுக்கு பலவிதமாக விளக்கம் அளிக்கமுடியுமா?  இவைகள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் எப்படி வாழுகிறார்கள்? எப்படி மற்றவர்களிடம் பழகுகிறார்கள்? கடைசியாக, முஸ்லிம்களின் இருதயத்துக்கு அருகில் இருக்கும் இஸ்லாமிய கட்டளை எவைகள்? என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

மேலே சொன்னவைகளின் சுருக்கம் என்னவென்றால், 'இறையியலுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசமென்ன?' என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த வித்தியாசத்தை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, கிறிஸ்தவத்திலிருந்து ஒரு கட்டளையை உதாரணமாக காண்போம்,  அதாவது மன்னிப்பு என்ற கோட்பாட்டை காண்போம். தீமை செய்தவர்களை மன்னிக்கவேண்டும் என்று பைபிள் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகின்றது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்,  தீமை செய்தவர்களை வெறும் மன்னிப்பதல்ல, அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று பைபிள் போதிக்கிறது.  

மத்தேயு 5:44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இந்த மேற்கண்ட கட்டளைக்கு பலவகையான விளக்கங்களை கொடுக்கமுடியாது, இதற்கு ஒரே விளக்கம் தான் உள்ளது அதுவும் தெளிவாக உள்ளது. இது கிறிஸ்தவத்தின் அடிப்படையாக உள்ளது, எனவே இதற்கு பலவகையான விளக்கங்களை கொடுத்து யாரும் இதன் பொருளை கெடுக்கமுடியாது. தனக்கு தீமை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டுவது தான் மனிதனின் இயற்கையான குணம் ஆகும். இந்த குணத்தையும் தாண்டி, எதிரிகளை நேசிக்கவேண்டும், அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்பது தான் கிறிஸ்தவத்தின் தெளிவான கட்டளை. ஆனால், அனேக கிறிஸ்தவர்கள் இந்த கட்டளையை நடைமுறைப்படுத்தாமல், தங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு, பழிக்குபழி வாங்குகிறார்கள். இயேசு போதித்த இந்த கட்டளைப்படி ஏன் அனேக கிறிஸ்தவர்கள் நடந்துக்கொள்வதில்லை? இந்த ஒரு கட்டளை மட்டுமல்ல, இயேசுவின் இதர கட்டளைகளையும் பல கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதில்லை, உதாரணத்திற்கு, மற்றவர்களை உபசரிப்பது, நாளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது, ஊழியத்துக்கு கொடுப்பது பற்றிச் சொல்லலாம். இங்கு சொல்லவருவது இது தான், அதாவது நல்ல கோட்பாடுகளை மார்க்கம் போதிக்கும், ஆனால், அந்த மார்க்க மக்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. 

இஸ்லாமின் ஆதார நூல்களாகிய குர்-ஆனும் ஹதீஸ்களும் ஜிஹாத் பற்றி போதிக்கின்றன, ஜிஹாத் ஒரு முஸ்லிம் வாழ்க்கையின் அங்கமாகும் என்றுச் சொல்கின்றது. இதனை என் முந்தைய கட்டுரைகளில் (கட்டுரை 1, கட்டுரை 2) விளக்கியுள்ளேன். ஜிஹாத் என்பது முஸ்லிம்களின் உள்ளத்தில் நடக்கும் ஒரு போராட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள், ஆனால், இதனை குர்-ஆனும் ஹதீஸ்களும் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்திற்கு, கண் தெரியாதவர்களும், ஊனமுள்ளவர்களும் ஜிஹாதிலிருந்து விடுபடுவார்கள். இந்த கட்டளை கொடுக்கப்பட்ட சூழல், முஹம்மது போர் பற்றிய விவரங்களைச் சொல்லும் போது கொடுக்கப்பட்டதாகும். ஆனால், பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதன் படி நடந்துக்கொள்வதில்லை (தங்கள் மீது ஜிஹாத் நியமிக்கப்பட்ட கட்டளை என்று அவர்கள் கருதி அதன் படி வாழ்வதில்லை). 

ஜிஹாத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது விழுந்த கட்டளையென்று அல்லாஹ் விளக்கிவிட்டபின்பும் ஏன் முஸ்லிம்கள் அதன் படி வாழ்வதில்லை? முஸ்லிம்களின் இந்த போக்கிற்கு மூன்று காரணங்களை கூறலாம்.

முதல் காரணம்:

முதலாவதாக, பெரும்பாலான முஸ்லிம்கள் நல்லவர்களும், நல்லதைச் செய்ய விரும்புகிறவர்களுமாகவும் இருக்கிறார்கள். ஜிஹாத் அவர்களுக்கு அந்நிய கோட்பாடாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு பொருந்தாத ஒன்றாகவும் தெரிகின்றது. எனவே, இப்படிப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் ஜிஹாதின் தாக்கத்தை குறைக்க முயலுகிறார்கள், அல்லது அதனை புறக்கணிக்க முயலுகிறார்கள். தங்கள் சுவைக்கு ஏற்றது போல தங்கள் மார்க்கத்தை வளைக்கும் வல்லமை மக்களுக்கு இயற்கையாகவே இருந்துவருகிறது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலம் இதனை காலம் காலமாக செய்துக்கொண்டு இருக்கிறது. எனவே, பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் வேதமாகிய குர்-ஆன் ஜிஹாத் பற்றி சொல்லியிருந்தும், அதனை மௌனமாக புறக்கணித்துவிட்டு, ஒரு பக்தியுள்ள நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

இரண்டாம் காரணம்:

இரண்டாவதாக, இன்னும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்கள் மார்க்கம் எவைகளை போதிக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பல மசூதிகள், முக்கியமாக என்னுடைய பகுதியில் இருக்கும் மசூதியில் கூட, ஜிஹாத் பற்றிய போதனைகளை புறக்கணித்துவிட்டு, அல்லது அதற்கு முக்கியத்தும் கொடுக்காமல் நழுவிவிடுகின்றது. ஜிஹாத் பற்றி இஸ்லாம் போதிக்கவில்லை என்பது போல, ஜிஹாதை விட்டு ஒதுங்கி பல மசூதிகள் நடத்தப்படுகின்றன. இந்த மசூதிகளில் இஸ்லாமின் இதர போதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒரு மார்க்கத்தின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டு சில இயக்கங்கள் காணப்படுகின்றன. அவைகள் தங்களுக்கு பிடித்த மார்க்க கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கின்றன, தங்களுக்கு பொருந்தாத ஜிஹாத் போன்ற கோட்பாட்டை மறந்துவிட்டு வாழுகின்றன, இப்படிப்பட்ட மசூதிகள் "அமைதி மார்க்க இயக்கங்களாக" காணப்படுகின்றன. 

ஜிஹாதில் பங்கு கொள்வது பற்றி குர்-ஆனும் ஹதீஸ்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியாமல் அனேக முஸ்லிம்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய இந்த அடிப்படை நூல்களின் படி காஃபிர்களாகிய முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஹாத் புரிவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட முஸ்லிம்களின் படி, தங்களுக்கு போதிக்கப்பட்ட அரைகுறை இஸ்லாமை முழுமனதோடு பின்பற்றிக்கொண்டு அமைதியானவர்களாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். (ஒரு முஸ்லிமுக்கு ஜிஹாத் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? முஹம்மது அதைப் பற்றி என்ன சொல்கிறார்? என்று தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அரைகுறை விவரங்கள் மட்டுமே தெரியும் என்றுச் சொல்லலாம் அல்லவா?)

மூன்றாம் காரணம்:

மூன்றாவதாக, பல முஸ்லிம்கள் ஜிஹாத் என்ற குர்-ஆனின் கட்டளையை முழுமனதோடு நம்புகிறார்கள். முஹம்மதுவின் போதனையின்படி 'ஜிஹாத் என்பது உள்ளான போராட்டம் மட்டுமல்ல, அது வெளியே செய்யும் யுத்தமும் ஆகும்'. அதாவது ஜிஹாத் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யக்கூடிய யுத்தமாகவும் இருக்கிறது என்பது தான் முஹம்மதுவின் போதனை[i].  ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற மக்கட்தொகையின் எண்ணிக்கையைவிட குறைவாக இருக்கும் போது, அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும். ஆனால், முஸ்லிம்கள் பெரும்பாலானவர்களாக மாறும்போது, இஸ்லாமுக்காக ஜிஹாத் புரிவது முஸ்லிம்களின் கடமையாகும். முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஜிஹாத் பற்றிய முழு அறிவு உண்டு, ஆனால், மேற்கத்திய நாடுகளில் அவர்கள் நேரடியாக ஜிஹாதில் இறங்கவேண்டிய காலம் இன்னும் கனியாதபடியினால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஊடகங்களில் நாம் 'இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்' என்று படிக்கும் போது, இந்த முஸ்லிம்கள் மூன்றாம் நிலையில் இருக்கும் முஸ்லிம்களாவார்கள். அதாவது, தாங்கள் இஸ்லாமுக்காக நேரடியாக களத்தில் (ஜிஹாதில்) இறங்கவேண்டிய கட்டம் வந்துவிட்டது என்று கருதுபவர்கள் ஆவார்கள்.  

தங்களுக்காக ஒரு காலம் வரும் அப்போது ஜிஹாதில் இறங்கலாம் என்று கருதும் முஸ்லிம்களின் சதவிகிதம் எவ்வளவு என்று நம்மால் சரியாக கணிக்கமுடியாது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பை யாரும் எடுக்கவும் வில்லை. (இந்த வாய்ப்பு தங்கள் நாடுகளில் கிடைக்காவிட்டாலும், சிரியா போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களோடு சேர்ந்தது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனேக முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலிருந்து பயணம் செய்து, ஜிஹாதில் பங்கு பெருவதை நாம் செய்திகளில் கண்கூடாக படிக்கிறோம்).

முடிவுரை:

ஒரு வரியில் சொல்வதென்றால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமல்ல, ஆனால், அனேக முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டவர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள் "தீவிரவாத முஸ்லிம்கள்" அல்ல. இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டவர்கள் அமைதியாக வாழும் முஸ்லிம்கள் ஆவார்கள்.  அவர்கள் இஸ்லாமின் உண்மை போதனைகளை புரிந்துக்கொள்ளாமல் தங்களுக்கு ஏற்றபடி, இஸ்லாமை வளைத்துவிட்டு (அமைதியாக) வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் தான். மேலும், முன்றாவதாக இருக்கும் முஸ்லிம்கள், தங்களுக்கு ஒரு நல்ல காலம் வரும் அப்போது ஜிஹாதில் ஈடுபடலாம் என்று எண்ணி வாழும் முஸ்லிம்கள் தான் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.

அடிக்குறிப்புக்கள்:

[i] Shoebat, Walid. God's War on Terror. Top Executive Media, 2008, p 118-121.