ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

Fake லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Fake லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஜூலை, 2008

நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி) - ஒரு முஸ்லீமின் கருத்து

 
நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)


முன்னுரை: நான் "சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!! " என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஒரு கிறிஸ்தவ சகோதரர் RAJ பதில் அளித்து இருந்தார், அதாவது, இவர் தன்னை கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் அளித்து இருந்தார். ஆனால், இவரது வரிகள் இவர் ஒரு முஸ்லீம் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

இனி இவரது பின்னூட்டத்தையும், அதற்கு என்னுடைய பதிலையும் காணலாம்.


-----------------------------
RAJ said...
WHAT ARE YOU GOING TO DO AFTER FINDING THE ORIGINAL SOURCE.

HOW IT IS GOING TO HELP US?
-----------------------------

அன்பு நண்பர் ராஜ் அவர்களே, முதலில் நீங்கள் என் கட்டுரையை முழுவதும் படிக்காமல், நான் கொடுத்த அதே தொடுப்பை ஆதாரமாக கொடுத்தீர்கள். அதாவது, நீங்கள் ஒன்றையும் முழுவதுமாக படிக்காமல், தலைப்பை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் என்று தெளிவாக தெரிகிறது.

அடுத்ததாக, முஸ்லீம்கள் பொய்களை இப்படி அவிழ்த்து விடுகிறார்கள், இது உண்மையா பொய்யா என்று சில ஆதாரங்களை தேடி நான் கேள்வி கேட்டு இருந்தேன், அவர்களிடம் உண்மை இருந்தால், பதில் கொடுத்து இருப்பார்கள், இல்லையானால், "முஸ்லீம்களில் சிலர் பொய்யர்கள்" என்ற பட்டத்தை தட்டிச்சென்றுக்கொண்டு செல்வார்கள். உங்களுக்கு ஏன் கோபம் சொல்லுங்கள்.

சரி, அடுத்ததாக, "மூல தொடுப்பினால்" எனக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டுள்ளீர்கள்? அதாவது, முஸ்லீம்கள் உண்மையை சொல்லவில்லையானால், "இக்கட்டுரையை வெளியிட்ட முஸ்லீம்கள் பொய்யர்கள் என்ற உண்மை உலகம் அறியும்". சரி, இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? அதாவது, பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிடும் இவர்களுக்கு பைபிளைப் பற்றியோ, உண்மை நேர்மை, நீதி நியாயம் போன்றவைகளைப் பற்றி எழுத‌ என்ன தகுதி இருக்கிறது என்று, இவர்களின் கட்டுரையை படிக்கும் சராசரி முஸ்லீம்களும் அறிந்துக்கொள்வார்கள், அதே போல கிறிஸ்தவர்களும் அறிந்துகொள்வார்கள்.

எது உண்மை என்றுச் சொல்வது மட்டும் போதாது நண்பரே, எது உண்மை இல்லை என்பதையும் நாம் உலகிற்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டதால், உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதாவது, இயேசு ஒரு சவுக்கை தயாரித்து தேவாலயத்தில் இருப்பவர்களை துரத்திய நிகழ்ச்சி. அதைத்தான் நானும் இன்று செய்துக்கொண்டு இருக்கிறேன், சிலருக்கு சவுக்கு தேவை, சிலருக்கு சமாதானம் தெவை.



-----------------------------
RAJ said...

CHRISTIANS GOT MUCH PRESCIOUS " NAGMA " IN CHRISTIANISM.

SHE IS WORTH MILLIONS OF ITALIAN PRIEST. IS THAT RIGHT ? THAT IS HOW CHRISTIAN BLOGGERS ARE TRUMPETING IN THEIR BLOGS ABOT NAGMA.
------------------------------

அருமை நண்பரே, ஒரு விவரத்தைச் சொல்கிறேன்.

நீங்கள் கிறிஸ்டியானிசம்(CHRISTIANISM) என்று எழுதியுள்ளீர்கள், ஆனால் நாஜியிசம், இஸ்லாமிசம்(ISLAMISM) போன்று, கிறிஸ்தவத்தை கிறிஸ்டியானிசம் என்று சொல்வதில்லை, அதற்கு பதிலாக, கிறிஸ்டியானிடி(CHRISTIANITY) என்று தான் சொல்வார்கள். சரி, இதனால் இப்போது என்ன என்று என்னை கேட்கலாம், உங்களுக்கு சில விவரங்களைச் சொல்லலாம் என்று தான் சொன்னேன்.

சரி, நக்மாவின் விஷயத்திற்கு வருவோம், கிறிஸ்தவர்களுக்கு "நக்மா" இயேசுவை தன் சொந்த தெய்வமாக அங்கீகரித்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் தான் அதைச் சொல்கிறீர்கள்.

கிறிஸ்தவ ப்ளாக்கர்கள் அதிகமாக, நக்மாவின் சாட்சியை பதித்தார்கள் என்றுச் சொல்கிறீர்களே, இப்போது தான் புரிகிறது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல, ஒரு முஸ்லீம் என்பது. மட்டுமல்ல, பொய்களை அப்படியே அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய தளங்கள் பற்றி ஒன்றுமே சொல்லாமல், நக்மாவின் சாட்சியை மட்டும் கிறிஸ்தவர்கள் பதித்தால், அப்படியே கொதித்து எழும்புகிறீர்கள் நீங்கள். பொய்யான சாட்சியை எழுதி அது உண்மைப்போல தம்பட்டம் அடிக்கும் இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன, அது உங்கள் கண்களுக்கு நெருடலாக இல்லையோ, ஆனால், ஒரு உண்மைச் செய்தி அதுவும் செய்தித்தாளில் வந்தது என்று பதித்தால், உங்களுக்கு நெருடலாக உள்ளதோ?


//RAJ said: SHE IS WORTH MILLIONS OF ITALIAN PRIEST//

உங்களுக்கு வேண்டுமானால், ஒரு நக்மா ஒரு மில்லயன் இத்தாலி பாதியார்களுக்கு சமமாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு அப்படி இல்லை, பல கோடிபேர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு இறைவனின் இராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அது போலத் தான் இந்த செய்தியும். உங்கள் வாதம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் எவ்வளவு பொய்யைச் சொன்னாலும், மற்றவர்கள் கேள்வி கேட்காமல் இருக்கவேண்டும் அப்படித்தானே?


-----------------------------
RAJ said...

TRY TO MAINTAIN BY POSTING GOOD ARTICLES ABOUT CHRISTIANISM RATHER THAN CHALLENGING OTHERS AS WE ALREADY HAVE ENOUGH RUBBISH IN OUR OWN YARD.
-----------------------------

உங்களை கிறிஸ்தவர் என்று வெளிப்படுத்தி எங்களை வெட்கமடையச் செய்கின்றீர்கள் நீங்கள். அப்படி என்னய்யா ரப்பிஷ் உள்ளது? ஓகோ, உங்களைப்பற்றி சொல்கின்றீர்களா? அப்படியானால் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நல்ல கட்டுரைகள் என்றால் எது என்று பட்டியல் இட்டு தரமுடியுமா? அதை எழுதுகிறோம்.

ஒரு அநியாயக்காரனுக்கு நியாயம் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது, ஒரு பொய்யனுக்கு உண்மையைப் பற்றி பேச என்ன தகுதி சொல்லுங்கள், இருட்டுக்கு வெளிச்சம பற்றிப்பேச என்ன தகுதி சொல்லுங்கள். பொய்யையும், அவதூறுகளையும் அள்ளி வீசும் இஸ்லாமிய தளங்களில் முகங்களைக் கிழிப்பது உங்களுக்கு வேதனையாக உள்ளதோ?

ஜெமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, இயேசுக்கு நேர்ந்தது என்ன? என்று கட்டுரை எழுத தைரியம் எங்கே இருந்து வந்தது. பல ஆயிர மக்கள் சூடான் நாட்டில் முஸ்லீமானார்கள் என்று எழுதினார்கள், நாங்கள் எங்கே ஆதாரம் என்றுக் கேட்டோம், இன்னும் பதில் வந்தபாடில்லை, இதுவெல்லாம் அல்லாவிற்கு செய்யும் சேவையா, ஊழியமா, இஸ்லாமை பரப்புவதா... இப்படியெல்லாம் பரப்புவதைக் காட்டிலும், சும்மா இருப்பது இஸ்லாமுக்கு நன்மை பயக்கும் என்பது என் கருத்து.



-----------------------------
RAJ said...

ARE WE ABLE TO ANSWER ANY ONE OF THE ARTICLES ABOUT BIBLE PUBLISHED IN "SINDHIKKA UNMAIGAL" BLOG
CONSTRUCTIVELY WITH PROPER SENSE AND BASIS?
------------------------------


"சிந்திக்க உண்மைகள்" என்ற பெயரில் ஒரு பொய்யான பெயரில், தங்களை நாத்தீகர்கள் என்று காட்டிக்கொண்டு கட்டுரை எழுதும் முஸ்லீம்கள் இன்னும் என்னென்ன வேஷம் போடுவார்களோ கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

உங்களால் பதில் சொல்லமுடியாது என்பதால், எங்களை ஏன் சேர்த்துக்கொள்கிறீர்கள் ராஜ் அவர்களே, சரி, உங்கள் உட்சாகத்திற்கு நன்றி, இனி "சிந்திக்க உண்மைகள்" என்ற தளங்களுக்கு நான் பதில் எழுதுகிறேன், ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த தளம் ஒரு இஸ்லாம் தளம் என்ற நோக்கில் மட்டுமே என் பதில்கள் இருக்கும்.

நான் பதில்கள் அளித்தால், கண்டிப்பாக இஸ்லாமுக்கு சில கேள்விகளும் இருக்கும். எனவே, இனி சிந்திக்க உண்மைகள் தளம் இஸ்லாமிய தளம் என்று கருத்தில் கொண்டு எழுதுகின்றேன்.

பொய் முகமூடியோடு எத்தனை நாட்கள் தான் இப்படி உலாவுவீர்கள்?

சிந்திக்க உண்மைகள் என்ற தளம் ஒரு திராவிட சமய பெரியார் சிந்தனைகள் கொண்ட தளம், அதற்கு பதில் அளிக்கிறேன் என்றுச் சொல்லி, இஸ்லாமை ஏன் வம்புக்கு இழுக்கிறாய் என்று என்னிடம் யாரும் கேள்விகள் எழுப்பக்கூடாது. ஏனென்றால், இஸ்லாமை ஆதரிக்கும் ஒரு தளம், இஸ்லாம் கோட்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பாமல் இருக்கும் தளம் எந்த நாளும் ஒரு நாத்தீக தளமாக இருக்காது.

நன்றி ராஜ் அவர்களே, உங்கள் உட்சாகத்திற்கு நன்றி.

-----------------------------
RAJ said...

YOUR BLOG IS CREATING UNNECESSARY FRICTION WITHOUT SOLID BASIS.
-----------------------------


என் கட்டுரைகளில் SOLID BASIS இல்லையானால் ஏன் உங்களுக்கு FRICTION வருகிறது?

ஆமாம், என் தளம் உங்கள் மன அழுத்தத்தை உயர்த்தும்.

ஆதாரம் இல்லாமலா நான் கட்டுரையை எழுதுகின்றேன், வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் சிரிப்பார்கள். இஸ்லாமிய கட்டுரைகளை படித்துப்பாரும் ஒவ்வொரு கட்டுரைக்கு எத்தனை ஆதாரங்களை அவர்கள் மன்னிக்கனும் நீங்கள் கொடுக்கின்றீர்கள் என்று ஆராய்ச்சி செய்துப்பாரும். இப்போது நீங்கள் பின்னூட்டம் எழுதிய இந்த கட்டுரையே போதும், உங்களின் ஆதார கட்டுரைகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

எனக்கு சரியாக நிச்சயமாக பதில் தெரிந்தால், அதைச் சொல்லுவேன், அப்படி சந்தேகம் மட்டும் இருந்தால், "சந்தேகத்தை தீர்த்துவையுங்கள்" என்று கேட்பேனே ஒழிய, ஆதாரம் இல்லாமால் எழுதமாட்டேன்.




-----------------------------
RAJ said...

APPEARS TO CHILDISH.

SOMETIMES I WONDER WHETHER YOU ARE REALLY A CHRISTIAN OR NOT?

BE A GOOD CHRISTIAN .
-------------------------------


அருமை ராஜ் அவர்களே, உங்களின் வார்த்தைகளைக் கண்டால், எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்த உங்கள் வரிகளை படிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் உங்களைப் பற்றி சிரிப்பார்கள்.

என் கட்டுரைகள் குழந்தைத் தனமாக உள்ளதா? சொல்லுங்கள் எந்த கட்டுரை குழந்தைத்தனமாக உள்ளது?

பைபிள் வசனங்களையும், குர்‍ஆன் வசனங்களையும் திருத்தி பதில் சொல்லும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பொய் முகத்தை உலகத்திற்கு காட்டியது குழந்தைத் தனமா?

பொய்களைத் தவிர உண்மையை பேசமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டவர்களாக "இஸ்லாமுக்கு மாறிய கிறிஸ்தவ பாதிரிகள்" என்று பொய்களை ஆதாரம் இல்லாமல் எழுதும் இஸ்லாமிய தளங்களில் பொய் முகங்களை உலகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வருவது உங்களுக்கு குழந்தைத் தனமா?

உங்களைப் போன்றவர்கள் முஸ்லீமாக இருந்தும் ஒரு கிறிஸ்தவனாக காட்டிக்கொண்டு இப்படி எழுதுகிறீர்களே, உங்களின் போலி முகத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டுவது குழந்தைத்தனமா?

ஒரு முறை என் தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளை படித்து எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பை மட்டும் படித்து பின்னூட்டம் எழுதுவதை இனி விட்டுவிடுங்கள், இல்லையானால், இப்படி மாட்டிக்கொள்ளவேண்டி வரும்.

"நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருக்கவேண்டுமா?" எங்கே சொல்லுங்கள், ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்ன என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஓகோ, நல்ல கிறிஸ்தவன் என்றால், "இயேசுவின் மீது எவ்வளவு பொய்களை முஸ்லீம்கள் சொன்னாலும், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் தான் நல்ல கிறிஸ்தவனுக்கு இருக்கும் குணம்" என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்களா?

முதலில் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருங்கள். இப்படி ஆட்டுத்தோல் போர்த்திய நரியாக இருக்கவேண்டாம்.



-----------------------------
RAJ said...

FAITH WILL GROW ON IT'S OWN MERIT.

A GOOD FAITH CANNOT BE BROUGHT DOWN BY MILLION SLANDEROUS ARTICLES.
-----------------------------

ஓகோ, ஒரு முஸ்லீம் தளம் பொய்யைச் சொன்னால் அது ஒரு நல்ல கட்டுரை ஆனால், ஆதாரம் எங்கே என்று கேட்டால், அது ஒரு அவதூறான கட்டுரையோ?

என்னுடைய கட்டுரைகள் உங்களுக்கு "SLANDEROUS ARTICLES" யாக இருக்கின்றதா? அப்படியானால், இஸ்லாமியர்கள் பைபிள் என்பது கற்பனை, அதில் உண்மை இல்லை என்றுச் சொல்வது உங்களுக்கு நல்ல கட்டுரை அப்படித்தானே. இதோ உங்கள் இஸ்லாமிய முகம் தெளிவாக தெரிகின்றது, இந்த கட்டுரையில்.


//RAJ said: FAITH WILL GROW ON IT'S OWN MERIT//

உண்மை தான், இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை பயப்படவைத்து அவனை இஸ்லாமில் இருக்கச்செய்வது என்ன நம்பிக்கையோ சிந்தித்துப்பாருங்கள்.



-----------------------------
RAJ said...

FIRST OF ALL CHANGE THE BLOG NAME FROMM ISA KORAN TO ISA BIBLE.

WHY IMITATE?
------------------------------

அய்யா நண்பரே, நான் யாரையும் காபி அடிக்கவில்லை. மற்றும் குர்‍ஆனின் பெயரை என் தளத்திற்கு இட பெருமை அடையவும் இல்லை.

நீங்கள் குர்‍ஆனை அல்லாவின் வார்த்தை என்றுச் சொல்கிறீர்கள்
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் "இயேசுவை" தேவனின் வார்த்தை என்றுச் சொல்கிறோம்.

என் தளத்தில் விவாதங்கள், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இல்லை, முகமதுவிற்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இல்லை. அதற்கு பதிலாக,

இயேசுவிற்கும் (தேவனின் வார்த்தைக்கும்), குர்‍ஆனுக்கும் (அல்லாவின் வார்த்தைக்கும்) தான் .

எனவே, தான் ஈஸா குர்‍ஆன் என்று வைத்தேன்.

இயேசு என்றாலே தேவனின் வார்த்தை, பின் எதற்கு நான் ஈஸா பைபிள் என்று வைக்கவேண்டும். அது சரி, அப்படி என்ன உங்களுக்கு என் தளத்தின் தலைப்பு உங்களுக்கு நெருடலை உண்டாக்கிவிட்டது?

-----------------------------
RAJ said...

ONE CAN FOOL MANY FOR SOMETIMES
BUT WE CANNOT FOOL EVERYBODY ALL THE TIME.
------------------------------

இது இஸ்லாமுக்கு மிகவும் நன்றாக பொருந்தும், அதாவது, இணையம் இல்லாத போது, உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொன்னது தான் உண்மை என்ற நிலையில் உலக மக்கள் இருந்தார்கள், இப்போது இணையம் பயன்படுத்தும் ஒவ்வொருவனும் இஸ்லாம் என்றால் என்ன என்று உங்களை விட நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கின்றான். முக்கியமாக, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உங்களின் பொய்களை நன்றாக அறிந்துள்ளார்கள்.



-----------------------------
RAJ said...

WHY SHOULD WE DEGRADE BIBLE BY CALLING IT BY OTHER NAMES?

THINK AND ACT SENSIBLY.

EXPECTING A GOOD CHANGE A.S.A.P.

GOD BLESS YOU TOO.
-----------------------------


என்னே வேதனை, என்னே ஒரு பைபிள் பற்றிய அக்கரை. ஆனால் ஒரு உண்மையைச் சொல்லியுள்ளீர்கள், இதற்காக உங்களுக்கு என் நன்றி.



//RAJ said: WHY SHOULD WE DEGRADE BIBLE BY CALLING IT BY OTHER NAMES? //

மேலே உள்ள உங்கள் வரியில், "OTHER NAMES" என்ற இடத்தில் "குர்‍ஆன்" என்ற பொருளில் தானே நீங்கள் சொல்லியுள்ளீர்கள்.

உண்மைத் தான், பைபிள் இருக்கவேண்டிய இடத்தில் "குர்‍ஆன்" என்ற வார்த்தை கொடுத்தால், அது நமக்கு இழுக்கு தான்,அவமானம் தான். இதை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், என் தளத்தின் பெயர் நான் ஏற்கனவே, வைத்துவிட்டதால், அதை அப்படியே விட்டுகின்றேன்.

கடைசியாக, நீங்கள் பல குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள், மற்றும் என் கட்டுரைகள் குழந்தைத்தனமானது என்று சொல்லியுள்ளீர்கள். நீங்கள் கிறிஸ்தவர் இல்லை என்பது மட்டும் நிச்சயம், இருந்தாலும் சொல்கிறேன், என் கட்டுரைகளை படியுங்கள், உங்களுக்கு கேள்விகள் இருக்குமானால், பின்னூட்டம் இடுங்கள், பதில் தருகிறேன். ஒரு வேளை நான் ஒரு முஸ்லீம் என்றுச் சொல்வீர்களானால், உங்கள் இஸ்லாமிய தளங்கள் வெளியிடும் பொய்யான கட்டுரைகளினால், வெட்கமடையுங்கள், உங்கள் அல்லாவிடம் கேட்டுப்பாருங்கள், இப்படி பொய்யைச் சொல்லித் தான் உன் தீனை இவர்கள் பரப்பவேண்டுமா என்று கேட்டுப்பாருங்கள். அல்லா உங்களுக்கு என்ன பதில் சொல்வாரோ அதன் படி செய்யுங்கள்.


சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.(ரோமர் 1:18)
 

 
1

சனி, 21 ஜூன், 2008

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் "Radiallah tala anho" (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

(Zakir Naik's Remarks on Yazid Spark Anger Among Muslims Shahid Raza Burney, Arab News )


மும்பையில் நடந்த 10 நாள் அமைதி முகாமில், நாயக் அவர்கள் யஜித் என்பவரின் பெயரை கூறியபோது, அதோடு கூட "ரதிஅல்லா தால அன்ஹூ" என்று கூறினார் மற்றும் கர்பலா என்ற போர் ஒரு "அரசியல் போர்" என்று கூறினார். இந்த அவரது கருத்தை பல இந்திய முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் நாயக் அவர்கள் இதற்கு மன்னிப்பு கோரவில்லையானால், தன் கருத்தை திரும்ப பெறவில்லையானால் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.



ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது:

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

Source: Arab News . Com

2. THE TIMES OF INDIA : (Row Over Islamic Preachers Remarks)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

Naik, who returned from Haj on Wednesday, conveyed his reaction through his brother Mohammed Naik: "At the peace conference, while replying to a question, I neither condemned nor lauded Yazid. I did say 'May Allah be pleased with him' while mentioning Yazid. I can show the fatwas from seminaries like Darul Uloom Deoband supporting my stand."

Source : THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: Mind Your Words Mr. Zakir Naik

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

Source: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. Islamic Insights.com : Zakir Naik Draws Ire With Karbala Comments

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Most Sunni scholars and jurists, including Ibn Kathir, Ibn Taymiyya, and Ahmad bin Hanbal, have condemned Yazid and deemed it permissible to curse him.

Source: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condenmn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1



Press Conference to condenmn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2



Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3




Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4




Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5



டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch?v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு

REPLY BY DR ZAKIR NAIK ON KARBALA & YAZID (YAZEED)
Dr. Naik's Response



இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.


முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.

திங்கள், 29 அக்டோபர், 2007

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

            

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்



முன்னுரை: தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல், இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள்.

என்னுடைய இந்த கட்டுரை, கிறிஸ்தவ மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு இவர்கள் புது அர்த்தத்தை கொடுத்துள்ளதைப் பற்றி அலசுகிறது. இந்த வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் உள்ளது. கிறிஸ்தவர்களை மாற்றுமத நண்பர்கள் " அல்லேலூயா கூட்டம் " என்று கூடச் சொல்வார்கள்.


இக்கட்டுரையில் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு "தமிழ் முஸ்லீம்" தளம் என்ன பொருள் சொல்கிறது என்றும், உண்மையில் இவ்வார்த்தைக்கு சரியான பொருள் என்னவென்றும், இப்படி இஸ்லாமியர்கள் மாற்றுமத வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கற்பிப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் பார்க்கப்போகிறோம்.

1. தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரை:

கீழ் கண்ட தொடுப்பில், தமிழ் முஸ்லீம் தளத்தின் " பிற மத வேதங்களில் இஸ்லாம் " என்ற கட்டுரையை படிக்கலாம்.

பிற மத வேதங்களில் இஸ்லாம் தொடர் 3 http://www.tamilmuslim.com/piramathangak/piramatangal3-4.htm

இக்கட்டுரையில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நான் இக்கட்டுரையில் "கிறிஸ்தவ வேதத்தில் காணப்படும் அல்லேலூயா" என்ற வார்த்தையைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி மட்டும் சொல்லப்போகிறேன். மற்ற விவரங்களைப் பற்றி கர்த்தருக்கு சித்தமானால், தனி கட்டுரையாக பார்க்கலாம். இக்கட்டுரையில் தமிழ் முஸ்லீம் தளம் எழுதிய வரிகள் பச்சை வண்ணத்தில்(and Bold) கொடுக்கப்படுகிறது


அல்லேலூயா என்ற வார்த்தையைப் பற்றி தமிழ் முஸ்லீம் தளம் கூறியது :


தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்
முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்!



இனி இவ்வார்த்தைக்கு உள்ள உண்மை பொருளைப்பற்றி பார்க்கலாம்.

2. Hallelujah, Halleluyah, or Alleluia (அல்லேலூயா) வார்த்தையின் பொருள் என்ன?

அல்லேலுயா(Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது:

1. Halelu -- அல்லேலு

2. Yah -- யா


"Halelu" என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise) என்று பொருளாகும்.

"Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும். "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்பது.

இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் " யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh " என்பதாகும்.

[இயேசுவின் (Yeh oshua) பெயரிலும் "Yah" இருப்பதை கவனிக்கலாம். இயேசு என்றால், "யேகோவா என் இரட்சிப்பு" என்று பொருள். Source: http://en.wikipedia.org/wiki/Jesus ]

இந்த விவரங்களோடும் இன்னும் மேலதிக விவரங்களுக்கு "விகிபீடியா" என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள். Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah


Hallelujah, Halleluyah, or Alleluia , is a transliteration of the Hebrew word הַלְלוּיָהּ (Standard Halləluya, Tiberian Halləlûyāh) meaning "[Let us] praise (הַלְּלוּ)." It is found mainly in the book of Psalms. The word is used in Judaism as part of the Hallel prayers, and in Christian praise. It has been accepted into the English language, but its Latin form Alleluia is used by many English-speaking Christians in preference to Hallelujah.

The word hallelujah mentioned in Psalms is the Hebrew word for requesting a congregation to join in praise. "Hallel" means to recite praise, "hallelu" is the plural form. The grammatical extension "yah" is a way of expressing magnanimity[1], hence halleluyah means "a great praise."

There are other ways of interpreting this word, as the Hebrew language does include the possibility for many meanings in the same word; thus it can also be understood to mean " Praise (הַלְּלוּ) the LORD (יָהּ) or God ." This interpretation comes from the idea that the suffix "-yah" could be a shortened form of the name "Yahweh/Jehovah," although this would make it an exception, and not typical of standard Hebrew.[2]

For most Christians, "Hallelujah" is considered the most joyful word of praise to God, rather than an injunction to praise Him. In many denominations, the Alleluia, along with the Gloria in Excelsis Deo, is not spoken or sung in liturgy during the season of Lent, instead being replaced by a Lenten acclamation.

The term is used 24 times in the Hebrew Bible (mainly in the book of Psalms (e.g. 111-117, 145-150, where it starts and concludes a number of Psalms) and four times in Greek transliteration in Revelation.
(emphasis mine)


எபிரேய மொழியில் ஒரு வார்த்தைக்கு பல பொருள்கள் கூறமுடியும், அதன்படி பார்த்தால், "Yah" என்ற வார்த்தைக்கு "Great" என்ற பொருளும் உள்ளது. அதன் படி இவ்வார்த்தையை "A Great Praise": என்று கூடச் சொல்லலாம் என்று விகிபீடியா சொல்கிறது.

3. தமிழ் முஸ்லீம் தள பொருளில் உள்ள குறைபாடு :

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :


இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது
.


இவர்களின் கருத்துப்படி, "அல்லேலூ யா – Hallelu yah " என்ற வார்த்தையில் உள்ள "யா - Yah " என்பது ஒரு விளி வேற்றுமைச் சொல்லாகும் . இது இவர்களின் சொந்தக்கருத்து, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை..

ஆனால், உண்மையில், "யா" "Yah" என்பது ஒரு பெயர்ச் சொல். அதாவது, இது "யேகோவா – Yehweh" தேவனைக் குறிக்கிறது. எப்படி "அல்லா" என்பது ஒரு பெயரோ அது போல "யா" என்பது "யேகோவா" என்ற பெயர்ச் சொல்லின் சுருக்கமாகும்.

இவ்வார்த்தை ஒரு எபிரேய(ஹிப்ரு) மொழி வார்த்தை என்று தெரிந்த உங்களுக்கு, இதன் பொருள் என்ன என்று தெரியாமல் போனதென்ன? அல்லது பொருள் தெரிந்துக்கொண்டே "யார் நம்மை" கேள்வி கேட்பது என்று நினைத்தீர்களா?

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை .


உண்மை தான் இவ்வார்த்தைக்கு எபிரேய மொழியின் பொருள் "யோகோவாவை துதி - Praise Yahweh" என்று இருக்கும் வரை, இதை திருப்பிப்போட்டாலும் பொருள் மாறுவதில்லை. ஆனால், பிரச்சனை "யா " என்ற வார்த்தை ஒரு நபரை(Yahweh) குறிக்கும் போது, அதை ஒரு "விளி வேற்றுமை " என்று சொல்கிறீரே அது தான்.

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :


கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்

முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்

அவ்வளவுதான் வித்தியாசம்!




உண்மையில் இந்த இரண்டு வரிகளை படிக்கும் பாமர கிறிஸ்தவன் "அடடா என்ன அருமையாக சொல்லியிருக்கிறார்கள் முஸ்லீம் சகோதரர்கள், இது அல்(ல)வா ஒற்றுமை என்பது " என்று மெய் மறந்துப்போவான்.

இவ்வளவு அருமையான ஒற்றுமை அல்லது சின்ன வேற்றுமையை இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம், அல்லது மக்கள் காட்டுவார்களானால், நான் 1008 "சலாம்" சொல்வேன்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்:


"யா அல்லாஹ் " என்ற சொற்றொடரில்:

யா = விளி வேற்றுமை (உங்கள் கருத்துப்படி, எனக்கு அவ்வளவு இலக்கணம் தெரியாது)
அல்லாஹ் = பெயர்ச் சொல்

உண்மையில் "யா அல்லேலு" என்ற சொற்றொடரில் :

யா = பெயர்ச் சொல் (Yah, or Yahweh)
அல்லேலு = துதித்தல், Praise (வினைச்சொல்)

எவ்வளவு அழகாக " அல்லாஹ்" மற்றும் "அல்லே லு" என்ற வார்த்தைகளில் சில எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வருவதால், இவைகளை ஒன்றாக இணைத்து "இஸ்லாமிய முறையில்" தவறான ஒரு பொருளை கொடுத்து, மக்களை(உங்கள் தளத்தில் படிக்கும் வாசகர்களை, என்னோடும் சேர்த்து) முட்டாளாக்கியுள்ளீர்கள். யாருக்கு வரும் இந்த கலை.

4. சில கேள்விகள்:

உங்கள் வழிக்கே வருகிறேன். அல்லேலூயா என்றால், "யா அல்லாஹ்" என்பதற்கு சமம் அல்லது அதற்கு இணையானது(கடைசி சில எழுத்துக்கள் தான் வித்தியாசம்) என்று சொல்கிறீர்களே, அப்படி நீங்கள் சொல்வதை "நடைமுறையில்" கொண்டுவரமுடியுமா?

அதாவது,

1. உங்கள் மசூதிகளில், அல்லது நீங்கள் எங்கேயெல்லாம் "யா அல்லாஹ்" என்றுச் சொல்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "அல்லேலு யா" என்றோ அல்லது "யா அல்லேலூ" என்றோ சொல்லவேண்டும் என்று உங்கள் இஸ்லாமிய மக்களுக்கு கட்டளையிட முடியுமா?

2. "அல்லேலுயா – Praise to God " என்ற வார்த்தைக்கு இணையான அரபி வார்த்தை "அல்ஹம்துலில்லாஹ் - Alhamdulillah " என்று விகிபீடியா சொல்கிறது. முஸ்லீம்கள் பல செயல்களின் போதும், இன்ன பிற நேரங்களிலும் "அல் ஹம்து லில் லாஹ்" என்றுச் சொல்கிறார்கள், குறைந்த பட்சம் "அல் ஹம்து லில் லாஹ்" என்று சொல்வதற்கு பதிலாகவாவது, "அல்லேலூயா" என்று சொல்லமுடியுமா ?


Source http://en.wikipedia.org/wiki/Alhamdulillah

Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning "Praise to God" or "All praise belongs to God," similar to the Hebrew phrase Halelu Yah. In everyday speech it simply means "Thank God!" It is used by Muslims as well as Arabic-speaking Jews and Christians , but primarily by Muslims due to centrality of this specific phrase within the texts of the Quran and the speech/sayings of Muhammad.

3. அரபி பேசும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் "அல்(the) ஹம்து(Praise) லில்(Preposition for, to etc..) லாஹ்(God or Allah)" என்று சொல்கிறார்களாம், ஏனென்றால், அரபி பைபிளில் "தேவன்" என்ற இடத்திலே "அல்லாஹ்" என்று மொழிபெயர்த்து விட்டார்கள். எனவே, அரபி பேசும் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள முஸ்லீமகள் (குறைந்தது உங்கள் தளத்தை படிக்கும் முஸ்லீம்களாவது) "அல்லேலூயா" என்று சொல்லுங்கள் என்று உங்களால் உங்கள் தளத்தில் எழுதமுடியுமா ?

5. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள் :

அன்பு சகோதரர், சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், ( கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி ) உடனே அதில் சொல்லப்பட்டது "உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரி, முதலில் அதை படித்து, ஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்து, உங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள் .

முடிவுரை: இனியாவது மாற்றுமத கட்டுரைகளை எழுதும் போது, சிறிது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்துக்கள் வேதங்கள் பற்றியும் எழுதியுள்ளீர்கள், அதில் இன்னும் என்னன்ன குழப்படிகள் செய்துள்ளீர்களோ? இறைவனுக்குத் தான் வெளிச்சம் "யா அல்லேலு" .


Isa Koran Home Page Back - Rebuttal Index page

வியாழன், 25 அக்டோபர், 2007

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)

                     

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி

தமிழாக்க முன்னுரை: "இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி" இது தான் இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி. முகமதுவும் "இயேசுவிற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் உலக நபர்களில், தான் மட்டும் தான் இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்" என்கிறார். ஆனால், இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்வீர்கள், இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல. இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக முகமது போதித்தார் என்பதை அறிந்துக்கொள்ளலாம். இக்கட்டுரையில் இயேசுவின் தெய்வீகத்தன்மையோடு முகமதுவின் வாழ்க்கையை ஆசிரியர் ஒப்பிடவில்லை, மாறாக இவர்கள் இருவரின் போதனைகள் ஒன்றல்ல என்பதை மட்டும் காட்டுகிறார். இதை படித்தபிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம், அது என்ன? இயேசு ஒரு இஸ்லாமிய நபியோ (அ) தீர்க்கதரிசியோ அல்ல. இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் வெவ்வேறானவை ஒன்றல்ல. இரண்டும் இருபெரும் துருவங்கள், என்றும் ஒன்றாக கலக்காத இரயில் தண்டவாளங்கள். எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பது தான் கேள்வி.

Jesus is a Muslim Prophet? By Frankly Speaking


இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி?


பைபிளின் சுவிசேஷங்களையும், குர்-ஆனையும் படித்துப் பாருங்கள். இயேசுவும், முகமதுவும் தங்கள் செய்திகளை வெவ்வேறு மூலத்திலிருந்து ( different sources) பெற்றதாக அறிந்துக்கொள்ளலாம். இயேசுவின் போதனையும், வாழ்க்கையும் முகமதுவின் வாழ்க்கைக்கு எதிர்மறையாக இருப்பதாக அறியலாம். இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி (தீர்க்கதரிசி) என்று சொல்கிறார்கள். சுவிசேஷங்களுக்கும், குர்-ஆனுக்கும் இடையே எந்த வித்தியாசங்கள் வந்தாலும், அந்த வித்தியாசத்திற்கு காரணம் "கிறிஸ்தவர்கள்" சுவிசேஷங்களை மாற்றி விட்டார்கள் என்று வாதாடுகிறார்கள். இஸ்லாமிய அறிஞர்களின் இந்த சந்தேகம், இஸ்லாமுக்கு நன்மையாக மாறுவதற்கு முன்பாகவும், இந்த இரண்டு புத்தகங்களையும் படிக்காதவர்களுக்காகவும் ஒரு சிறிய ஆய்வு செய்யலாம். குர்-ஆனையும், பைபிளையும் ஒப்பிட்டு, முகமது எதை பிரச்சாரம் செய்தாரோ, அதற்கு நேர் எதிராக இயேசு செய்த போதனைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.



1. திருமணம் மற்றும் விபச்சாரம் (ADULTERY AND MARRIAGE)

இயேசுவை பொருத்தவரையில், ஒருவன் ஒரு பெண்ணை காமத்தோடு பார்த்தாலே போதும், அது "விபச்சாரம்" செய்ததற்கு சமம் என்று சொல்கிறார். விவாகரத்து என்பது "இறைவனின் கட்டளை" அல்லது "இறைவன் விரும்பும் செயல்" அல்ல என்று இயேசு தெளிவாகச் சொன்னார். யுதர்கள் பல மனைவிகளை உடையவர்களாக இருந்தாலும், மனிதன் "ஒரு மனைவி உடையவனாக" இருக்கவேண்டும் என்று இயேசு அழுத்திச் சொன்னார்(அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்றார்).

இந்த விஷயத்தில் முகமது கொஞ்சம் அதிக சுதந்திரத்தை கொடுத்தார். மனைவி அல்லாத பெண்களோடு உடலுறவு(Sex) கொள்வது அனுமதிக்கப்பட்டது, மட்டுமல்ல அது ஒரு ஆசீர்வாதமானது. இந்த பெண்களை நமக்கு சொந்தமானவர்களாக இருக்கவேண்டும்(அடிகைகள்) மற்றும் இவர்களின் அனுமதியில்லாமல் அவர்களிடம் உடலுறவு கொள்ளலாம்(கற்பழிப்பு). முகமது நான்கு மனைவிகள் வரையில் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று பலதாரமணத்திற்கு அனுமதியளித்தார்
.


இயேசு:

மத்தேயு 5:

27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.


மாற்கு 10

4. அதற்கு அவர்கள், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத்தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, உங்கள் இருதயகடினத்தினிமித்தம்இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
6. ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும்பெண்ணுமாக உண்டாக்கினார்.
7. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன்மனைவியோடே இசைந்திருப்பான்;
8. அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள்இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
9. ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்என்றார்.


முகமது:

குர்-ஆன் 4:3,

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

குர்-ஆன் 4:24

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (4:24)



2. மரணத்தின் பின் வாழ்க்கை (AFTERLIFE)

இயேசு மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை உடலுறவு இல்லாத ஒரு "ஆவிக்குரிய - spiritual " வாழ்க்கை என்றுச் சொன்னார், அங்கு திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்றுச் சொன்னார். ஆனால், முகமதுவின் போதனைப்படி சொர்க்கம் என்பது ஒரு உடல் சம்மந்தப்பட்ட இடம், அங்கு இளவயது கன்னிகள்(பெண்கள்) இருப்பார்கள் (virgins "whish favours of the Lord" would not be denied (including sex)). முகமது கீழ்கண்ட வசங்களிலும் குர்-ஆன் 37:40-48; 44:51-55; 52:17-20, etc., இன்னும் பல வசனங்களிலும் சொர்க்கத்தைப் பற்றி விவரிக்கிறார், அங்கு மிகவும் அழகான மெத்தைகள், விருப்புகள் இருப்பதாகச் சொல்கிறார், இங்கும் உடலுறவிற்கு தடையில்லை.

இயேசு யூத சதுசேயர்கள் "உயிர்த்தெழுதல், மற்றும் சொர்க்கத்தில் திருமண வாழ்வு பற்றி" கேட்ட கேள்விக்கு இயேசு பதில் அளித்தார்


மத்தேயு 22 :

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;


முகமது சொர்க்க தோட்டத்தைப் பற்றி விவரிக்கிறார்
குர்-ஆன் 55

70: அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். (55:70)
71: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:71)
72: ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (55:72)
73: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:73)
74: அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)
75: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:75)
76: (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)



3. எதிரிகளை எப்படி சமாளித்தார்கள்: (HOW TO DEAL WITH ENEMIES)

தன்னை பின்பற்றுபவர்கள் "சமாதானம் செய்கிறவர்களாக - peacemakers" இருக்கவேண்டும் என்று இயேசு மலை பிரசங்கத்தில் சொல்கிறார். ஏனென்றால், இப்படிப்பட்டவர்கள் தான் "தேவனுடைய குமாரர்கள் ஆவார்களாம்" என்றுச் சொல்கிறார் (மத்தேயு 5:9). இயேசு மன்னிக்கும் சுபாவத்தை அதிகமாக புகழ்ந்தார், உட்சாகப்படுத்தினார், ஏனென்றால், மன்னிக்கும் சுபாவம் மூலம் தான் "சமாதானத்தை" தர இயலும். இயேசு உங்கள் விரோதிகளையும் நேசியுங்கள் என்று போதித்தார், மற்றும் எல்லாரும் இறைவனைப் போல மிகவும் கருணை உடையவர்களாக வேண்டும் என்று விரும்பினார்.

முகமது மிகவும் 'சுலபமான' வழிமுறையை பின்பற்றினார், "உங்கள் எதிரிகளை கொல்லுங்கள், அவர்கள் மீது ஆளுகை செலுத்துங்கள்". இவருடைய எண்ணம் என்னவென்றால், உன் எதிரி உன் கைக்குள் அடங்கவில்லையானால்(Surrender), அல்லது மரிக்கவில்லையானால்(dead) உனக்கு "சமாதானம்" இல்லை. முகமது தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "அவர்களை கொல்லுங்கள்" அவர்களோடு போர் புரியுங்கள் என்றுச் சொன்னார், ஒரு வேளை அவர்களுக்கு போர் புரிவது பிடிக்கவில்லையானாலும், அதை செய்யவேண்டும் காரணம், அல்லாவைப் பொருத்தவரையில் சண்டையிடுவது ஒரு நல்ல செயல்.

இயேசு:

 
லூக்கா 6:

35
. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,
36. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.


முகமது:

குர்-ஆன் 2:

190: உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190)

191: (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். (2:191)

216: போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)



4. தங்கள் செய்தியை பரப்பிய விதம் (PROSELYTIZING):

இயேசு மற்றும் முகமது இருவரும் "தங்கள் செய்தி" மக்களுக்கு சென்று அடையவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், இவர்கள் இருவரும் வித்தியாசமான வழிமுறைகளை கையாண்டனர். இயேசு நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள், அற்புதங்கள் செய்வதின் மூலமாக, இடம் பொருள் ஏவலை கருத்தில் கொண்டு மக்களுக்கு தன் செய்தியைச் சொன்னார் (Jesus opted for persuading people with good words, deeds and miracles taking in account the protocols and manners of the time.) ஒரு வேளை மக்கள் இவருடைய செய்தியை கேட்கவில்லையானால், அவர்களை அப்படியே விட்டுவிடும்படி இயேசு சொன்னார், ஏனென்றால், அந்த மக்களோடு இறைவன் இடைபடுவார் என்று விட்டுவிட்டார்.

வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், ஆரம்ப காலத்தில் தன் மக்களுக்கு முகமது தன் செய்தியை அமைதியான முறையில் பரப்பினார், ஆனால் அவருக்கு வெற்றி இல்லை. முகமதுவின் செய்தியை கேட்டவர்கள் அவரை எதிர்த்தார்கள், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவர் தன் கையில் வாளை எடுத்தார். இவர் சில யுத்தவீரர்களின், திருடர்களின், கொல்லையடிப்பவர்களின் உதவியுடன், தன் செய்தியை நம்பும் பல மக்களை சம்பாதித்தார். இவர்களுக்கு உவ்வுலகத்தில் செல்வ செழிப்பையும்,மறு உலகத்தில் பெண்களையும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தார்.(With the help of some mercenaries, thieves and pirates who were promised riches in earth and sex in the after life Muhammad gets more people interested in his message.) இஸ்லாமுக்கு மாறாத மக்களை கொன்றார் அல்லது "ஜிஸ்யா" என்ற வரி கட்ட கட்டாயப்படுத்தினார்
.


இயேசு:

லூக்கா 10:

3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்
4. பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது, இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன்கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான. வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
9. அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்,
11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.


முகமது: 

குர்-ஆன் 9

28: ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9:28)
29: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கௌ;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29)

5. பிள்ளைகள் அல்லது குழந்தைகள் (CHILDREN)

இயேசுவும் முகமதுவும் குழந்தைகளை நேசித்தார்கள், ஆனால், வித்தியாசமான வழியிலே. இயேசு தன் சீடர்களுக்கு "குழந்தைகளைப் போல கள்ளம் கபடற்றவர்களாகவும், தாழ்மையாகவும் இருக்கும்படியாக" போதித்தார். ஏனென்றால், தேவனுடைய அரசு (இறைவன் இருக்கும் இடம் - the kingdom of Heaven) இப்படிப்பட்டவர்கள் உடையது என்றுச் சொன்னார். இயேசு தன் கைகளை பிள்ளைகள் மீது வைத்தார் மற்றும் அவர்களை ஆசீர்வதித்தார்.

முகமது கூட சின்ன குழந்தைகளை நேசித்தார், முக்கியமாக சிறுமிகளை. குர்-ஆன் 65:4ம் வசனத்தை அரபி மொழியில் மிகவும் சரியாக புரிந்துக்கொள்ளலாம். ஏனென்றால், வேறு மொழியில் மொழிபெயர்ப்பவர்கள், இந்த வசனத்தின் உண்மை பொருளை கூறாமல், மழுப்பி மாற்றி மொழி பெயர்க்கிறார்கள். இந்த வசனத்தில் "மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும்," என்ற சொற்றொடருக்கு சரியான பொருள், "இதுவரை ருதுவு எய்தாத(வயதுக்கு வராத) சின்ன சிறுமிகள்" ஆகும். (Qur'an 65:4 is better understood in original Arabic because translators obscure the real meaning of "and for those who have no courses (it is the same)" which means young girls yet to menstruate.) அரபி தெரிந்தவர்களுக்கு இதோ அந்த சொற்றொடர்:

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُوْلَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا

இந்த வசன வெளிப்பாடு முகமதுவிற்கு ஒரு வாய்ப்பை தருகிறது, அதாவது முகமது ஆயிஷா என்ற சிறுமிக்கு 6 வயதாகும் போது, திருமணம்(Marry) செய்துக்கொண்டார், மற்றும் 9 வயதாகும் போது முழுமையாக திருமணம்(Consummate the Marriage) செய்துக்கொண்டார். (இவைகள் பற்றி இந்த ஹதீஸ்கள் மூலமாக அறிந்துக்கொள்ளலாம் Sahih Muslim 8:3310; Bukhari 5:58:234, 8:73:151, Tabari IX: 131)


இயேசு:
 

மாற்கு 10:

13. அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களைஅவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள்அதட்டினார்கள்.
14. இயேசு அதைக்கண்டு விசனமடைந்து, சிறு பிள்ளைகள் என்னிடத்தில்வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்;தேவனுடையராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தைஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து,அவர்களை ஆசீர்வதித்தார்.



முகமது:

குர்-ஆன் 65:

4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (65:4)

6. தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் இவர்கள் கையாண்ட முறை (PREJUDICE)

இயேசுவும், முகமதுவும் தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி அதிகமாக வேதனைப்பட்டனர். ஆனால், இவர்கள் இதற்காக வித்தியாசமாக செயல்பட்டார்கள். இயேசு தன்னையும் தன் செய்தியையும் ஏற்றுக்கொள்ளாத மக்களின் இச்செயலுக்காக, அவர் தன்னுடைய செய்தியை இஸ்ரவேல் இல்லாத மக்களுக்கு (அன்னிய மக்களுக்கு) சொல்ல ஆரம்பித்தார்.

முகமதுவோ, கிறிஸ்தவர்களிடமும், யூதர்களிடமும், விக்கிர ஆராதனைக்காரர்களிடமும், மற்றும் தன் செய்தியை நம்பாதவர்களிடமும் நட்பு (நண்பர்களாக) இருக்கக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக கட்டளையிட்டார். (Muhammad strongly prohibits friendship with Christian, Jews, idolaters and unbelievers.)
 


இயேசு:
யோவான் 3

16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில்அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.


யோவான் 4:

7. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
8. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளைநோக்கி, தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி, நீர்யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்றுஉன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தயானால், நீயே அவரிடத்தில்கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ, ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும்ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர்பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும்தாகமுண்டாகும்.
14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.


முகமது:

குர்-ஆன் 5:


41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. (5:41)

44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)

51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)

முடிவுரை: (CONCLUSION) 

இயேசு மற்றும் முகமது இருவரும் ஒரே செய்தியை போதிக்கவில்லை என்பதை, எழுத்தறிவில்லாத பாமரன் கூட தெளிவாக புரிந்துக்கொள்வான். இந்த கட்டுரையின் நோக்கமானது, கிறிஸ்தவத்தையும், இஸ்லாமையும் நியாயம் தீர்ப்பதற்காக அல்ல. அதற்கு மாறாக, இவ்விரண்டும் வித்தியாசமானவை என்பதை சொல்வதற்காகவே. இந்த சரித்திர நபர்களின் போதனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அல்லது ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம். இப்போது நாம் பார்த்த இந்த வித்தியாசங்கள் நமக்கு "இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் போதனைகள்" வித்தியாசமானவை என்பதை காட்டுகிறது.

முகமதுவின் கருத்துப்படி "இயேசுவின் சீடர்கள் சுவிசேஷங்களை மாற்றியதாகவும், அதை, தான் சரி செய்வதாகவும்" நினைத்திருந்தார். அதனால், தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இவ்வளவு வித்தியாசங்கள்.

இதை படிக்கும் வாசகர்களைப் பொருத்தது, இவர் (முகமது) கொண்டு வந்த மாற்றங்கள் உண்மையிலேயே தேவையா அல்லது இவைகள் ஆன்மீக நல்ல வாழ்விற்கு எதிரானவையா என்று முடிவு செய்யவேண்டியது, படிக்கும் உங்கள் கையில் உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் சரி, முகமது இயேசுவின் போதனைகளை மதிக்கவில்லை என்பது புரியும். இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக இருக்கும் செய்தியை முகமது போதித்தார். இயேசு போதித்த ஒவ்வொரு செய்திக்கும் எதிராக போதித்து, இயேசு வாழ்ந்த வாழ்விற்கு எதிராக போதித்துவிட்டு, "இயேசு ஒரு முஸ்லீம் தீர்க்கதரிசி(நபி)" என்றுச் சொல்வது, வெறும் "உதடுகளால் செய்யும் புகழாரமே ஒழிய வேறில்லை
.

It is up to you, the reader, if these changes were necessary or morally objectionable. In any case Muhammad did not respect the teachings of Jesus. Muhammad preached the opposite. Calling Jesus a Muslim prophet is just paying lip service to Christians while at the same time contradicting everything Jesus stood up for and taught.


Source:  http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1400

Thanks to"FaithFreedomInternational"



Isa Koran Home Page Back - Jesus Christ Index
1

திங்கள், 30 ஜூலை, 2007

இது தான் இஸ்லாம், பதில்:2 - என் பதில்.

கிறிஸ்தவ இணையத்திற்கு பதில்-2: எது சத்தியம்" கட்டுரைக்கு என் பதில்.

நான் என் மறுப்பை முழுவதுமாக, இதே கட்டுரையில் தந்துள்ளேன். அதற்கு முன்பாக ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.


இது தான் இஸ்லாமியர்களுக்கு கேள்விகள், இரண்டு விதமாக வருகிறது என்று நண்பர் சொல்லியுள்ளார்.

1. அந்த தளத்திலேயே உள்ள கேள்விகேட்கும் பக்கத்தை பயன்படுத்தி.

2. தனியாக மெயில் மூலமாக கேள்விகள் வருகிறதாம்.

முதல் முறையில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை, கேள்விகள் அப்படியே வரட்டும். அந்த மெயில் ஐடிக்களும் சில நேரங்களில் வாசகர்கள் தவறாகவே பதிவு செய்வார்கள்.

கிறிஸ்தவத்தைப் பற்றிய ஒரு கேள்வி "மெயில் e-mail " மூலமாக வந்ததாக நண்பர் நிஜாமுத்தீன் அவர்கள் எழுதினார்கள். தங்களுக்கு மெயில் மூலமாக வந்த கேள்வி, Gmail Inbox --> Open Mail பக்கம் எப்படி இருக்கும் என்று ஆதாரத்துடன் ஒரு படத்தையும் பதிவுசெய்தார்கள்.

இது தான் அந்த Gmail ஆதார பக்கம்: இதில் சிகப்பு வட்டங்கள் நான் வரைந்தது.






இப்போது இதே போல, நான் என் Gmail உள்ள Inbox Open Mail படத்தை தருகிறேன், பாருங்கள்.







இங்கு படங்கள் தெரியவில்லையானால், கீழே உள்ள Link கை Click செய்யவும்.
1. http://www.geocities.com/isa_koran/images/kambalu.jpg இது தான் இஸ்லாம் வெளியிட்ட படம். வட்டங்கள் நான் இட்டது.
2. http://www.geocities.com/isa_koran/images/mygmailpage.JPG என் Gmail Inbox படம் -1 (hide details)
3. http://www.geocities.com/isa_koran/images/mygmailpage1.JPG என் Gmail Inbox படம் -2 (show details)
இனி விவரங்களை படியுங்கள்.

1. இது தான் இஸ்லாம் தளத்தில் வெளியிட்டுள்ள படம் (Edit or Modify) திருத்தப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.

2. Gmail தலைப்பு விவரங்கள்(Headers like from, to, Subject etc..) தெரிவதற்கு "show details" என்ற ஒரு url or Link கொடுத்துள்ளார்கள். அதை நாம் க்ளிக் செய்தால், அதன் கீழே விவரங்கள் தெரியும்.

3. இதை நான் என் படத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். அப்படி நாம் க்ளிக் செய்தால், கீழே விவரங்கள் தெரிந்தால், உடனே, அந்த "show details" என்ற வார்த்தை "hide details" என்று மாறிவிடும். இது எல்லாருக்கும் தெரியும்.

4. ஆனால், நம் அன்பு இஸ்லாமிய நண்பர்கள் வெளியிட்டுள்ள படத்தை பார்ப்பீர்களானால், "show details"என்ற வார்த்தை தெரியும் தெரியும், அதன் கீழே விவரங்களும் தெரியும், இது எப்படி சாத்தியமாகும். "hide details" என்றல்லாவா தெரியவேண்டும்.

5. என்னை குற்றப்படுத்த, இப்படி படத்தை திருத்தி இவர்கள் வெளியிடுகிறார்கள், இவர்கள் என்னை மட்டும் குற்றப்படுத்தவில்லை, Gmail Programmer's திறமையை கேள்விக்குறியாக்கியுள்ளார்கள்.

6. Gmail க்கு ஒரு கடிதம் எழுதவேண்டும், எப்படி இப்படி Program எழுதுகிறீர்கள். ஒருவருக்கு சரியாக வருகிறது, இன்னொருவருக்கு இப்படி தவறாக வருகிறது என்று கடிதம் எழுதவேண்டும்.

சரி இப்படி திருத்தி வெளியிட்டார்கள், குறைந்தது, தலைப்பு விவரங்களில் வரும் Font, Number of headings, Gmail லில் உள்ளபடியாவது திருத்தக்கூடாது? அதையும் செய்யவில்லை, நம் இஸ்லாமிய நண்பர்கள்.

அவர்கள் கொடுத்த படத்தில் வரும் தலைப்புக்கள் இவை: Name, email, Location, Subject.

ஆனால், என் Gmailலில் தலைப்புக்கள் இப்படி உள்ளதே அது எப்படி? from, to, date, subject, signed by, mailed-by. (See the uppercase and Lower case)

அவர்கள் சொல்லலாம், யார் யாருக்கு Mail வந்தது என்று வெளியே தெரியக்கூடாது என்று நாங்கள் ஒரு "Group Name" உருவாக்கியுள்ளோம், பாருங்கள் "vips" என்பது எங்கள் Group Name, இதில் பல mail id க்கள் உள்ளது.

நானும் ஒரு "Group Name" உருவாக்கித் தான் இந்த சோதனையே செய்தேன். என் "Group Name" கூட "vips" தான்.

இந்த "Group Name"யில் யார் யார் Mail Idக்கள் இருக்கிறது என்பது இரகசியம் என்றால், இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது, அவர் மட்டும் எப்படி ஒருவருக்கு அனுப்பாமல், Group Name ற்கு அனுப்புகின்றார்.அப்போ அது இரகசியமில்லையா?

"இல்லை, அவர் எங்கள் நண்பர்" என்றுச் சொல்வீர்களானால், அவர் ஏன் இல்லாத mail id மூலம் உங்களுக்கு (அதாவது நண்பர்களுக்கு, இரகசியம் தெரிவித்த நண்பர்களுக்கு) அனுப்புகின்றார்?

அது எப்படி, உங்கள் Group Name இல் உள்ள எல்லா mail Idகளுக்கும், அவர் அனுப்பமுடிந்தது.

நீங்கள் பதித்த படத்தின் அடியில் "Reply to All" என்று இருப்பதிலிருந்து, இது ஒரு "Group Name" க்கு அனுப்பிஇருப்பது தெரிகிறது.

நீங்கள் Gmail செய்தியை ஒரு சதுரம் போட்டு (Box) படத்தை மாற்றி இருக்கிறீர்கள். இப்படி Gmail வராது, என் படத்தை பாருங்கள்.

நீங்கள் ஒன்று செய்து இருக்கலாம், எல்லா கேள்விகளும், எங்கள் தளத்திற்கு வந்து வாசகர்கள் பதிந்திவிட்டு சென்றார்கள், என்று சொல்லியிருந்தால், பிரச்சனையே இல்லை.

சரி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை, ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். நடக்கட்டும்.

வாசகர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோல்: நான் இதில் சொன்னது, இன்று Gmail ல் சென்று நான் சேகரித்த விவரங்கள், இது தவறு என்றுச் சொன்னால், நீங்கள் மறுப்பை தெரிவியுங்கள். அவர்கள் வெளியிட்ட படத்தோடு உங்கள் Gmailயில் ஒரு மெயிலை திறந்து சரி பாருங்கள், நான் வெளியிட்ட படம் தவறா? அவர்கள் Edit செய்து வெளியிட்ட படம் தவறா?

நிஜாமுத்தீன் அவர்களே, உங்களால் முடிந்தால், உங்களுக்கு வந்த மெயிலை Forward செய்யமுடியுமா?

நீங்கள் வெளியிட்ட படத்தில் நீங்கள் Edit or Modify செய்யவில்லை என்று "அல்லாவின் பேரில், குர்-ஆனின் பேரில், முகமதுவின் பெயரில்" சத்தியம் செய்து, உங்கள் மனசாட்சியோடு, "நான் Edit செய்யவில்லை" என்றுச் சொல்லமுடியுமா? (நான் என்னிடம் செய்யும்படி கேட்கவில்லை, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.)

இதிலும் நான் அவசரப்பட்டு தவறு செய்து இருந்தால், வாசகர்கள் எனக்கு தெரிவியுங்கள். நான் திருத்திக்கொள்கிறேன். சிந்திக்கவேண்டியது, பேசவேண்டியது நிறைய உள்ளது, ஆனால், என் நிலை... இப்படி மெயில் பாக்ஸோடு ஆகிவிட்டது.

இனி உங்கள் இந்த கட்டுரைக்கு என் பதிலை கீழே தருகிறேன்.

//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இயேசுவின் உண்மை நிலைப் பற்றி நாம் எழுதி வருபவைக்கு மறுப்பு என்றப் பெயரில் சில இணையங்கள் சில கட்டுரைகளைப் பதித்தன. அதில் தமிழ் கிறிஸ்டியன் இணையத்தை நாம் நேரடி கருத்துப் பரிமாற்றக் களமாக எடுத்துக் கொள்ள எண்ணினோம். காரணம் பின்னூடல்கள் அதில் வருவதால். என்னவோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட மன்றம் மெளனம் சாதித்து விட்டது. மறுப்புக கட்டுரை எழுதுபவர் தனது நேரடி வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகின்றார். விவாத அழைப்பெல்லாம் தேவையில்லை. உங்கள் நிலையை நீங்கள் எழுதுங்கள், எங்கள் தரப்பை நாங்கள் எழுதுகிறோம் என்ற தோரணையில் எழுதியுள்ளார். எனவே அவரது நேரடி வலைப்பூவே நமது பதிலுக்குரியதாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.//

என் பதில்: என் வேண்டுகோலை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: முக்கியக் குறிப்பு: இணையத்தளத்தின் எழுத்துப் பணி என்பது எங்களின் முழு நேரப் பணியல்ல. நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அந்நிய மண்ணில் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். எங்கள் ஓய்வு நேரங்களை கூடுதலாக இதற்கும் பிற சமுதாய பணிகளுக்கும் நாங்கள் பயன்படுத்துகிறோம். எனவே பதில்களோ கட்டுரைகளோ பதிப்பதற்கு தாமதம் ஏற்படவே செய்யும். இந்த தாமதம் தவிர்க்க முடியாததாகும். //

என் பதில்: என்னால், உங்கள் நிலையை புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதுங்கள். நானும் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது. நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகிறேன்.

//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இனி விஷயத்திற்கு வருவோம்.

இதுதான் இஸ்லாமிற்கு பதிலளிக்கிறேன் என்றப் பெயரில் அவரிடம் (அவர் என்று நாம் குறிப்பிடும் இடங்கள் அனைத்தும் மறுப்புக் கட்டுரை எழுதும் அந்த சகோதரரைக் குறிக்கும்) ஏற்பட்டுள்ள அவசரம் மற்றும் அவரது மனநிலையை முதலில் சுட்டிக் காட்டுவோம்.

அவசரம் - 1

இயேசுவின் வரலாறு முதலாவது மறுப்புக் கட்டுரையை அவர் இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.

'பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே, இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்'.

நம்மைப் பற்றி இப்படி குறிப்பிட்ட இதே சகோதரர் அவரது நான்காவது மறுப்புக் கட்டுரையில் 'நம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக சொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம்'. என்று குறிப்பிடுகின்றார்.

இப்படியும் அப்படியுமாக அவர் எழுதியுள்ளது முரண்பாடு என்று சொல்லவில்லை. பதில் கொடுத்து விட வேண்டும் என்ற அவரது அவசரம் இந்தத் தவறை செய்துள்ளது.//

என் பதில்: இதில் தவறு எங்குள்ளது.

இயேசுவின் வரலாறு தொடர் 1ல், நீங்கள் கீழ் கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்:

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

நீங்கள் சொன்னவிவரங்கள் 12-17ம் அதிகாரங்கள் வரை அல்ல, 21ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் கீழ்கண்டவாறு சொன்னேன்.

அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர். இது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.

இந்த விவரங்கள் சரியானதா இல்லையா? இப்போதாவதுச் சொல்லுங்கள் நண்பரே.

செய்த பிழையை ஒப்புக்கொள்ளாமல், படிப்பவர்களை குழப்பபார்க்கிறீரோ?

இந்த இடத்தில் தவறு நேர்ந்துவிட்டது, அதிகாரங்களின் எண்கள் இடம் மாறிவிட்டது என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, அவசரம் என்று என் மேல் குற்றம் சொன்னால் எப்படி நண்பரே?

நான்காவது தொடரில் "பைபிள் விலாசம்" பற்றிய உம் செய்தியைப் பற்றி:

நண்பரே, நான் ஒரு கிறிஸ்தவன், இயேசுவை பின்பற்றுபவன். இதனால், என்னால் முடிந்த அளவிற்கு நடுநிலையாக இருக்கவிரும்புகிறேன்.

முதல் தொடரில், நீர் தவறு செய்தீர், சுட்டிக்காட்டினேன். நான்காவது தொடரில் நீர் விலாசம் சரியாகச் சொன்னீர், அதற்காக அதையும் என் மறுப்புக்கட்டுரையில் மெச்சிக்கொண்டேன் அல்லது என் கருத்தை தெரிவித்தேன். நாம் என்ன எதிரிகளா? எப்போதும் தவறையே சுட்டிக்காட்டுவதற்கு. சரி என்றால், சரி என்றுச் சொல்கிறேன். தவறு என்றால் தவறு என்றுச் சொல்கிறேன். என் மறுப்புக்கட்டுரைகளில் ஒன்றை நீர் கவனிக்கவேண்டும், உன் கட்டுரைகளில் வரும் ஒவ்வொரு வரியையும் நான் சேர்த்துள்ளேன். ஒரு வரியையும் நான் விட்டுவிடவில்லை. அப்படி விடப்பட்டு இருந்தால், அது தவறுதலாக விடப்பட்டிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சரியான விலாசம் சொன்னதை நான் குறிப்பிடவில்லை என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள், " நான் தவறுதலாக அதிகாரத்தை மாற்றிச் சொன்னேன், அதை தன் மறுப்பில் குறிப்பிட்டார்கள், ஆனால், நான் சரியாக சொன்னவிவரங்களை, சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் என்றுச் சொல்லி" என்மேல் குற்றம் சாட்டமாட்டீர்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

அவசரம் - 2

இதுதான் இஸ்லாம் வெளியிட்ட கிறிஸ்த்தவ கேள்வி பதில் பகுதியில் வந்துள்ள மெயில் ஐடிகள் போலியானவை. அப்படி எந்த மெயில் ஐடியும் இல்லை. ஏனெனில் அந்த நான்கு மெயில் ஐடிகளையும் நான் இப்போதுதான் உருவாக்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது எழுத்தில்.

Qoute:

இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்?

இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன். இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.

a) irvanm@rediffmail.com

b) kabmabul@yahoo.com

c) mailto:rafeeqrauoofa@gmail.com

d) mmsafi20@hotmail.com

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)

என் பதில்: உண்மை தான். அன்று காலை நான் தான் இந்த மெயில் ஐடிக்களை உருவாக்கினேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இப்படி எழுதிய இவரது கட்டுரைக்கு தரமான பின்னூடல்களும் வந்துள்ளன.

Qoute:

உமர், இதில் ஒன்றை கவனித்திற்களா அவர்கள் மின்-அஞ்சல் முகவரியை தரும் போது irvanm(at)reedifmaildotcom என்று தந்து இருப்பதை அதாவது SPAM மின்-அஞ்சல்களை தவர்ப்பதற்காக சிலர் இவ்வாறு((at) and dotcom) தருவதுண்டு. இல்லாத மின்-அஞ்சல் முகவரிக்கு, யாருங்க மின்-அஞ்சல் அனுப்பபோகிறார்கள்.

இவ்வளவு யோசித்தவர்கள் அந்த மின்-அஞ்சல் முகவரியை மறந்து விட்டார்கள். அது சரி இவர்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்பது தவறு தான்.

அப்ப இது தான் டூபாக்கூர் என்பதா? இப்பதாங்க டூபாக்கூர் என்றால் என்ன அர்த்தம் என்று புரிகிறது.

Last edited by vijayakumar on Fri Jul 13, 2007 2:12 pm.

இதேப் போன்று இன்னும் சில பின்னூடல்களும் தமிழ் கிறிஸ்டியன் தளத்தில் உள்ளன. இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம். இதுதான் இஸ்லாம் தளத்தில் நேரடியாக கேள்வி எழுதும் வசதியை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 'எங்களுக்கு எழுத' என்றப் பகுதியை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போன்று பக்கம் திறக்கும்.

இணையம் வருபவர்கள் நேரடியாக தங்கள் கேள்விகளைப் பதிப்பார்கள். இதில் கேட்கப்படும் பெயர், மின் அஞ்சல், நாடு என்று நாம் விபரம் கேட்டிருக்கிறோம். அவர்கள் பதிப்பவை எல்லாம் உண்மையா என்று எங்களால் கண்டறிய முடியாது. நாங்கள் மட்டுமல்ல பல்வேறு இணையங்களின் நிலையும் இதுதான். பல இணையங்களிலிருந்து சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யும் போது சம்பந்தப்பட்ட தளங்கள் மெயில் ஐடி கேட்கும். JUNK மெயிலுக்கு பயந்து பெரும்பாலானவர்கள் போலி மெயில் ஐடியையே பதிப்பார்கள். பல நேரங்களில் எங்கள் இணையத்திற்கு வந்து எழுதுபவர்கள் கூட போலி ஐடியை கொடுத்து விடுகின்றார்கள். உதாரணத்திற்கு 'கிறிஸ்த்தவம் கேள்வி பதில்' இதில் இடம் பெற்ற ஒரு மெயில் ஐடியை எடுத்துக் கொள்வோம். b) kabmabul@yahoo.com

இந்த மெயில் ஐடி கிறிஸ்த்தவம் கேள்வி பதிலில் 424 வது கேள்வியில் இடம் பெற்றுள்ளது. இதே மெயில் ஐடியை கிறிஸ்த்தவ சகோதரர் 'ஜுலை 13ல் தாம் உருவாக்கியதாகக் கூறுகிறார். qoute:

திரு அறிஞன் அவர்களுக்கு என் (http://isakoran.blogspot.com) பதில்:

• இது தான் இஸ்லாம் தளத்தில் "பொய்யான ஐடிக்கள் வெளியிடப்பட்ட நாள்" Thursday, July 12, 2007 கிறிஸ்த்துவம் கேள்வி பதில்

• நான் ஐடிக்களை உருவாக்கி, பதில் தந்த நாள் : Friday, July 13, 2007

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

• இது தான் இஸ்லாம் "தள அனுமதி கேட்டு" இருந்த நாள்: Sunday, July 15, 2007

தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1

• அனுமதி தரப்படமாட்டாது என்றும், தேவையானால் பதில் தரவும், இல்லையானால் விட்டுவிடவும் என்றுச் சொல்லி, பதில் கொடுத்த நாள் : Monday, July 16, 2007 இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.

எந்த தளமும் பொறுப்பேற்காது, உங்களுக்கு விருப்பம் இருந்தால், பதில் தரவும் இல்லையானால் விட்டுவிடவும் என்று சொல்லி இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. இதுவரையில் பதில் இல்லை.

உண்மையில் உங்களிடம் பதில் இருந்தால்( பொய்யான ஐடிக்கள் பற்றி) உடனே அதை சொல்லவேண்டியது தானே,

ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் செய்கிறீர்கள்?

மடியில் கனம் இல்லையானால் ஏன் வழியில் பயம் ?

இதே மெயில் ஐடியுடன் எங்களுக்கு எப்போது கேள்வி வந்தது தெரியுமா.. ஜுன் மாதம் 14ம் தேதி. அதாவது இவர் இதே மெயில் ஐடியை உருவாக்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே இதே மெயில் ஐடியிலிருந்து எங்களுக்கு கேள்வி வந்து விட்டது. என்ன ஆதாரம் என்கிறீர்களா... கீழுள்ள இமேஜை பாருங்கள்.

நாங்களே மெயில் ஐடியை போலியாக வெளியிட்டுள்ளோம் என்றும் அதை அவர்கள் கண்டு பிடித்து (அதிலும் கழிவறையில் உட்கார்ந்து படித்து ) தங்கள் சாதனையை மெச்சிக் கொள்பவர்கள், இப்போது இன்னும் பல மடங்கு தங்களை புகழ்ந்துக் கொள்ளட்டும். அதற்கு கழிவறைகள் துணை புரியட்டும்.

சம்பந்தப்பட்ட கிறிஸ்த்தவ சகோதரர் இதே மெயில் ஐடியை உருவாக்கி இருக்கட்டும் நாங்கள் அதை மறுக்கவில்லை. (அவரது திறமைக்கு ஒரு பாராட்டு) ஆனால் மெயில் ஐடி என்றாலே அது உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கைதான் குழந்தைத் தனமானது.

நாமாக மெயில் ஐடிகளை போலியாக வெளியிட்டு கேள்விகளைத் தொகுக்க வேண்டும் என்றால் இன்னும் ஆழமாக பல கேள்விகளைத் தொகுத்திருக்க முடியும் என்பதை அந்த சகோதரர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் என்றைக்கும் அதுபோன்று செய்ததில்லை.

என் பதில்: இதற்கான பதிலை இக்கட்டுரையின் ஆரம்பித்திலேயே தெரிவித்துவிட்டேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: ஏற்கனவே ஒரு இஸ்லாமிய அறிஞரின் தவறை சுட்டிக் காட்டிய போது இதே போன்று id பிரச்சனையை நாங்கள் சந்தித்துள்ளோம். அதற்கான விரிவான விளக்கம் இதுதான் இஸ்லாம் 'விமர்சனப்பகுதி்'யில் உள்ளது. இதை சகோதரர் சாதிக் சமீபத்தில் தனது பின்னூடலில் கூட சொல்லியுள்ளார். எனவே இனிமேல் இணையத்தளம் வந்து எழுதும் கேள்விகள் பற்றிய இமெயில் மீது வைக்கப்படும் விமர்சனம் யாருடையதாக இருந்தாலும் அதை நாம் கண்டுக் கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.

என் பதில்: இப்படி தங்களுக்கு வரும் மெயில் ஐடிக்களை, அனுப்புகின்ற வாசகர்கள் மாற்றினால், ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அந்த மெயில் ஐடிக்களை நீங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளில் பதியும் போது xya@gmail.com என்று பதியாமல், Spam க்காக xyzatgmail.com இப்படி பதிக்கிறீர்கள். கேள்விகளை அனுப்புகின்ற வாசகர்கள், இப்படி மாற்றி கட்டுரையில் எழுதுங்கள் என்றுச் சொல்கிறாரா? அப்படிச் சொன்னாலும், கேள்வி கேட்ட நான்கு வாசகர்களுமா இப்படி உங்களிடம் கேட்டுக்கொள்வார்கள்? (கிறிஸ்தவ பதிலில் நீங்கள் கொடுத்த கேள்விகளைப் பற்றிப் பேசுகின்றேன்).

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

//மறுப்பாளரின் மனநிலை.

மனம் திறந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு நாம் அழைப்பு விட்டிருந்த நிலையில் அவர்களின் மன நிலையை அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அதையும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கின்றோம். Rukmani

Joined: Apr 02, 2007

Posts: 240 Posted: Fri Jul 13, 2007 1:13 pm Post subject:

ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?

இந்த விவாதத்தைப் பார்த்து நானே, என்ன இது புரியவில்லையே, ஒருவேளை ஆபிரகாம் பலி கொடுக்க நினைத்தது இஸ்மவேலாக கூட இருந்திருக்கலாம் என்று நினைத்தேன், நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்க்கு

_________________

Rukmani Shanmugam

ருக்குமணி என்ற சகோதரியின் பின்னூடலுக்கு உமர் என்றப் பெயரில் மறுப்பு எழுதும் அவர் அளித்துள்ள பதில். umar

Joined: Mar 16, 2007

Posts: 179 Posted: Fri Jul 13, 2007 2:27 pm Post subject:

ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,

ஒரு பேச்சுக்காக "பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை".

திரு உமர் அவர்களே... உங்கள் மனநிலையை நீங்கள் அறிவித்து விட்டீர்கள். 'நான் அப்படித்தான் என்று' நீங்கள் முடிவு செய்து விட்டப் பிறகு உங்களுக்காக கர்த்தரிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது உங்கள் விருப்பம். ஆனால் "இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை" என்றெல்லாம் எழுதி உங்கள் வடிகட்டிய அறியாமையை வெளியில் காட்டிக் கொண்டிருக்காதீர்கள்.

நீங்கள் இதுதான் இஸ்லாத்திற்கு மறுப்பாக பல கட்டுரைகளை பதித்து விட்டீர்கள். உங்கள் அவசரத்திற்கு பாராட்டுகள். அதன் நிலவரங்களை நாம் தொடர்ந்து எழுதுவோம் பொருத்திருங்கள். வளரும் கர்த்தர் நாடட்டும்.//


என் பதில்: "ஒரு பேச்சுக்காக" என்று நான் சொன்னதை நீங்கள் இவ்வளவு தீவிரமாக சிந்திப்பீர்களானால், அதிலேயே நான் ஒரு உண்மையை உலகிற்கு சொல்லிவிட்டேனே, அதை பார்க்கவில்லையா?

Quote:

ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,

ஒரு பேச்சுக்காக "பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை".


இதன் பொருள் என்ன தெரியுமா? நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதனால், குர்-ஆன் தவறு என்றுச் சொல்வதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு இந்துவாக இருந்தாலும், ஏன் நாத்திகனாக இருந்தாலும், அப்போது கூட நான் குர்-ஆனை திறந்த மனதுடன் அனுகினாலும், குர்-ஆன் மூலமாக ஒரு மனிதனை இறைவனிடம் சேர்க்கும் வழி அல்லாவிடம் இல்லை என்பது தான் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

இப்படி எல்லா மறுப்புக்களையும் சேர்த்து ஒரு பதிலை நீங்கள் தருவதை விட்டுவிட்டு, இது வரை நான் கொடுத்த மறுப்புக்களுக்கு தனித் தனியாக பதிலைத் தாருங்கள். அப்போது தான் வாசகர்களுக்கு புரியும், உண்மை தெரியும்.

நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது:

1. இந்த மறுப்பின் முதலில் நான் முன்வைத்த கேள்விக்கான பதில் (ஜீமெயில் விவரங்கள்)

2. இயேசுவின் வரலாறு 1 முதல் 5 வரையிலான என் மறுப்பிற்கு ஒவ்வொன்றாக பதில்.

3. "இஸ்மவேலை புகழும் பைபிள்" தொடருக்கான என் மறுப்பிற்கு உங்கள் பதில்.

வெள்ளி, 20 ஜூலை, 2007

பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை (இஸ்லாம்)

அன்பு இஸ்லாமிய மற்றும் இதர நண்பர்களுக்கு,

இது தான் இஸ்லாம் தளத்திற்கு வந்த "Comment ற்கு" பதில் :


1,கஜினி said... அன்புடையோர் அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் இணையத்தில் வெளிவந்த "கிறிஸ்த்துவம் கேள்வி பதில்" பகுதியில் கேள்வி கேட்ட அனைத்து E-mail முகவரிகல் போலியானவை என்றும் தாங்களே இது போன்ற கேள்விகளை சுயமாக தயாரித்து வெளியிட்டதாக http://www.tamilchristians.com/ கூருகிறது. தங்களின் விளக்கம் தேவை.

July 17, 2007 9:50 PM


2,அறிஞன் said...
அவர்கள் அவசரமாக அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். நடந்தது வேறு. சம்பந்தப்பட்ட இணையத்தின் நிர்வாக ஒப்புதலைக் கேட்டிருந்தோம் அவர்கள் பின் வாங்கியுள்ளார்கள்.

நமக்கு மறுப்பளிக்கும் பிற வலைப்பூக்களை நாம் சுட்டிக்காட்டாமல் அவர்களின் இணையத்தை மட்டும் சுட்டிக் காட்டியதற்கு காரணம் அந்த இணையத்தில் மட்டும் தான் பின்னூடல்கள் வருகின்றன. நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பிறரும் வலியுறுத்தலாம்.


போலி IDகளை நாம் உருவாக்கவில்லை என்பதும் அவர்களின் அவசரத்தின் நிலையையும் தனிபதிவில் விளக்குவோம்


July 18, 2007 11:33 AM


3,இயேசு கிறிஸ்த்து said...
அன்பு நண்பர் அறிஞன் அவர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும். முதலில் உங்களுக்கு மறுப்பை வெளியிட்டது http://isakoran.blogspot.com/2007/07/blog-post_16.htmlஇந்த இணையமே.பின்புதான் கிறிஸ்தவர் இணையத்தில் பதியப்பட்டு உள்ளது.வலைபூக்களில் நீங்கள் ஒரு கட்டுரை வெளியிடும் போது அதற்கு பதில் தெரிந்த யாராக இருந்தாலும் பதில் அளிப்பார்கள்.அளித்த பதில் சரியா அல்லது தவறா என்பதை விளக்க முயற்சி செய்யுங்கள்.அதை விடுத்து இணையங்களுக்குள் விவாத அழைப்பை விட்டு பின் வாங்கியுள்ளார்கள் போன்ற உதார் எல்லாம் விடாதீர்கள்.உங்களிடம் இருந்து வந்த கட்டுரைக்கு பதில் எழுதிய இணையம் வேறு,அவைகள் பதியப் பட்டுள்ள இணையங்கள் வேறு.உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் வீண் விவாதமெல்லாம் விட்டு விட்டு பதில்களை தாருங்கள்.இன்ஸா அல்லா.வரும் நாட்களில் உண்மையை உங்களிடம் எதிர் பார்க்கும் ஜாமா

July 18, 2007 11:57 PM


4,Asalam said... மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கு இது வருமேயானால், யோசிக்க வேண்டிய கட்டாய நிலைமையில் இருப்பார்கள் நமது கிருத்துவ சகோதரர்கள். ஆமீன்


திரு அறிஞன் அவர்களுக்கு என் (http://isakoran.blogspot.com) பதில்:


  • இது தான் இஸ்லாம் தளத்தில் "பொய்யான ஐடிக்கள் வெளியிடப்பட்ட நாள்" Thursday, July 12, 2007 கிறிஸ்த்துவம் கேள்வி பதில்
  • நான் ஐடிக்களை உருவாக்கி, பதில் தந்த நாள் : Friday, July 13, 2007
    Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்
  • இது தான் இஸ்லாம் "தள அனுமதி கேட்டு" இருந்த நாள்: Sunday, July 15, 2007
    தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
  • அனுமதி தரப்படமாட்டாது என்றும், தேவையானால் பதில் தரவும், இல்லையானால் விட்டுவிடவும் என்றுச் சொல்லி, பதில் கொடுத்த நாள் : Monday, July 16, 2007
    இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.
எந்த தளமும் பொறுப்பேற்காது, உங்களுக்கு விருப்பம் இருந்தால், பதில் தரவும் இல்லையானால் விட்டுவிடவும் என்று சொல்லி இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. இதுவரையில் பதில் இல்லை.

உண்மையில் உங்களிடம் பதில் இருந்தால்( பொய்யான ஐடிக்கள் பற்றி) உடனே அதை சொல்லவேண்டியது தானே,

ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் செய்கிறீர்கள்?

மடியில் கனம் இல்லையானால் ஏன் வழியில் பயம் ?

நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளம் பொறுப்பேற்காது என்று, பின் ஏன் இன்னும் கால தாமதம் செய்கிறீர்கள்?

நான் சொன்னது பொய் என்றால், சொல்லவேண்டியது தானே "இது தான் உண்மை, அந்த கிறிஸ்தவன் பொய்சொன்னான் என்று" ?

நீங்கள் பதில் தரவில்லையானாலும், நான் நீங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

யோவான் 14:16ல் சொல்லப்பட்டது ஆவியானவரா அல்லது முகமதுவா? என்ற கேள்விக்கு என் பதிலையும் நான் தந்துவிட்டேன். http://isakoran.blogspot.com/2007/07/1416.html
இன்னும் சில கேள்விகளுக்கு பதிலையும் கூடிய சீக்கிரத்தில் தருவேன்.
மறுபடியும் சொல்கிறேன், நடந்ததை சொன்னேன், ஆனால், உங்களிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களிடம் பதில் இருந்தால் பதில் தாருங்கள் இல்லையானால் விட்டுவிடுங்கள்.

மற்ற சகோதரர்களுக்கு, உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த நான்கு மெயில் ஐடிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், மற்றும் என் தளத்தில், காமன்ட் எழுதுங்கள். நான் நீங்கள் என்ன செய்தியை அனுப்பினீர்களோ அதை இதே தளத்தில் உங்கள் காமன்டிற்கு கீழே பதிவு செய்கிறேன்.

இனிமேல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது...


தளத்தை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.......

வெள்ளி, 13 ஜூலை, 2007

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

அன்புள்ள மனித இனமே வணக்கம்,

"இது தான் இஸ்லாம்" தளம் இயேசுவின் வரலாறு என்று ஐந்து தொடர் கட்டுரையை எழுதியது. பைபிளைப் பற்றி தவறான தகவல்கள் கொடுத்து இருந்தார்கள். நான் அதற்கு மறுப்பு எழுதினேன்.

இக்கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக "இது தான் இஸ்லாம்" தளம் "கிறித்துவம் கேள்வி பதில்" என்ற தலைப்பில் நான்கு கேள்விகள் அதற்கு இஸ்லாம் முறையில் பதில் கொடுத்து இருந்தார்கள்.

இந்த நான்கு கேள்விகள் வித்தியாசமான ஈ-மெயில் அட்ரஸ் மூலமாக தங்கள் தளத்திற்கு கேள்விகளாக வந்ததாக சொல்லி, அந்த ஈ-மைல் அட்ரஸ் கூட கொடுத்து இருந்தார்கள்.

இதோ அந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்கள் மற்றும் கேள்விகள்: Source : http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_12.html

http://www.tamilmuslim.com/QA/qa35.htm




1. இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?
irvanm(at)reedifmaildotcom

2. நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom

3. முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom

4. கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது?
mmsafi20(att)hotmaildotcom

இந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்களும் ஒரு பொய்யான ஈமெயில் அட்ரஸ்கள்.


இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்?

இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன். இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.


a) irvanm@rediffmail.com
b) kabmabul@yahoo.com
c) rafeeqrauoofa@gmail.com
d) mmsafi20@hotmail.com

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)

இது எப்படி சாத்தியம் ?

உண்மை என்னவென்றால், இப்படி அவர்களுக்கு கேள்விகளும் வரவில்லை, இப்பெயர் கொண்ட மெயில் முகவரிகளும் இல்லை. ஒரு சர்வரில் ஒரே பெயரில் இரண்டு முகவரிகள் இருக்க வாய்ப்பு இல்லை. ( இதைப் பற்றி ஏதாவது புதிய தகவல் இருந்தால் எனக்கு தெரியபடுத்தவும்).


இது தான் இஸ்லாமா ? அல்லது இது தானா இஸ்லாம்:

இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, சிந்தியுங்கள். நேர்மையுள்ளவர்கள், நீதியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், இப்படி செய்யலாமா ?

ஏன் பொய்யானா முகவரியிலிருந்து கேள்விகள் வந்தது என்றுச் சொல்லவேண்டும் ? அவர்களாகவே, இதே கேள்விகளை கொடுத்து பதில் தரலாம் இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது ?

சரி, கொடுத்தது கொடுத்தீர்கள், உங்கள் நண்பர்களது முகவரியையாவது கொடுக்கலாம் இல்லையா?

(at Worst Case :இன்னும் சொன்னால், ஏன் ஒரு மணி நேரம் செலவழித்து இந்த நான்கு முகவரிகளையும் அவர்களே உருவாக்கி இருக்ககூடாது ?)


அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் பிறகு தருகிறேன்.

இது என்ன விளையாட்டு இறைவனுடைய ஊழியம் செய்யும் போது? உங்களுக்கு எங்கள் மறுப்பு கட்டுரைக்கு பதில் தரமுடிந்தால் தாருங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள்?

ஏன் இஸ்லாமின் பெயரை , அல்லாவின் பெயரை மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பெயரை கெடுக்கவேண்டும் ?

நல்ல பெயர் எடுக்க பல வருடங்கள் ஆகலாம், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிடம் பொதும்.

இதை படிக்கும் இஸ்லாமியர்களே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? இவர்களை கேட்கமாட்டீர்களா?

நேர்மை:

நான் எழுதும் கட்டுரைகளில், மறுப்புகளில் பிழை இருக்கலாம், எழுத்து பிழை, வசன எண் பிழை, ஏன் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனத்தை நான் தவறாக புரிந்துக்கொண்டு எழுதிகூட இருக்கலாம். நான் படித்த, பார்த்த சில தளங்களில் சில தவறான கருத்துக்களை நான் சொல்லியிருக்கலாம்.


என் தவறை சுட்டுக்காட்டினால், நான் திருத்திக்கொள்கிறேன், ஒப்புக்கொள்கிறேன், தேவைப் பட்டால் என் வார்த்தைகளை திரும்பபெற்றுக்கொள்கிறேன். இவைகளை என் கட்டுரைகளின் கடைசியில் பதித்து வைக்கிறேன்.

நான் மனிதன், தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, அதை திருத்திக்கோள்வதில் தான் வெற்றி உள்ளது.


"இயேசுவிற்கு அல்லது கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கு நான் ஒரு பொய்யான தகவலை என் மனசாட்சிக்கு தெரிந்தே சொல்வதை காட்டிலும், என் கைகள் தங்கள் வேலையை இழந்தால், அது எனக்கு நலமாக இருக்கும்".

பொய் பித்தலாட்டத்தை இயேசு ஒப்புக்கொள்ள மாட்டார்.

இயேசு 30 வருடங்கள் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களைப் பார்த்து கேட்கும் கேள்வி: என்னில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் ? அவரை நோக்கி ஒரு விரலும் எழும்பவில்லை.

இது தான் இயேசு கிறிஸ்து.

இனி அவர்கள் கட்டுரைகளில் உள்ள நேர்மையை இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்.

(நானோ அல்லது மற்ற கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவரவில்லை, அதற்காக சில கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளை இங்கு சொல்லவேண்டாம். ஆனால், இயேசு நல்லவர், அவரின் வழி சரியானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை)

வாய்மையே வெல்லும், சத்தியமேயே ஜயதே.

சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியும் உங்களை விடுதலையாக்கும் - இயேசு.


David
site : www.geocities.com/isa_koran
email : isa.koran@gmail.com
Blod : http://isakoran.blogspot.com