கீழே கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி ஸவ்தா பின்ட் ஜமா என்ற ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும். இப்பெண் ஆரம்பகால இஸ்லாமியர்களில் ஒருவராக இருந்த "அஸ் ஸக்ரன் இபின் அமர் இபின் அப்த் ஷம்ஸ் (as-Sakran ibn 'Amr ibn 'Abd Shams)" என்ற ஒருவரை திருமணம் செய்து இருந்தார். மக்காவில் தனக்கு கொடுமைகள் அதிகரித்ததால், இவர் தன் மனைவியாகிய ஸவ்தாவையும், இன்னும் தன் நண்பர்களாகிய ஏழுபேரோடும் கூடஎத்தியோப்பியாவிற்கு தப்பித்துச் சென்றார். எத்தியோப்பியாவில் ஸவ்தாவின் கணவர் மரித்துவிடுகின்றார், இதனால் அப்பெண் தன் தாய் நாட்டிற்கு திரும்பி வருகிறார்.
இந்த கால கட்டத்தில் தான் முஹம்மது தன் மனைவி கதிஜாவை இழந்து தனிமரமாக நிற்கிறார்.
சீக்கிரத்திலேயே முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்துக்கொள்கிறார். ஸவ்தாவின் மற்றும் முஹம்மதுவின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பினால் இவர்கள் வேதனை அடைந்து இருப்பதினால், ஒருவரின் மனவேதனையை இன்னொருவர் புரிந்துக்கொண்டவர்களாக இவ்விருவர் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு வாழ்ந்தனர்.
காலம் செல்லச் செல்ல, முஹம்மது இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அவர் மரிப்பதற்கு முன்பாக அவருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தார்கள்.
இபின் கதீர் என்ற இஸ்லாமிய விரிவுரையாளர் கூறும் போது, முஹம்மது மரிக்கும் போது அவருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தாக கூறுகிறார்.
ஆனால், முஹம்மது தன் நாட்களை எட்டு மனைவிகளுக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்து இருந்தார். முஹம்மது செல்லாத அந்த ஒன்பதாவது மனைவி யார் என்று கேட்டால், அவர் தான் ஸவ்தா என்பவராவார். இந்த ஸவ்தா என்ற முஹம்மதுவின் மனைது தன்னிடம் வந்து முஹம்மது தங்கும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்து இருந்தார்.
முஹம்மதுவிற்கு ஒரு நீண்ட கால துணையாக மனைவியாக வாழ்ந்த ஸவ்தா, ஹதீஸ்கள் கூறுகின்றபடி, தனக்கு இருந்த மனைவி என்ற உரிமையை அதாவது முஹம்மது தன்னிடம் செலவிடுகின்ற நாளை விட்டுக்கொடுத்தாராம். ஸவ்தாவிற்கு ஒரு கணவன் என்ற முறையில் செய்யவேண்டிய கடமையை மட்டுமல்ல, ஸவ்தாவை சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டாராம் முஹம்மது.
இந்த ஹதீஸ்களின் ஆதாரத்தன்மை அதாவது நம்பகத்தன்மை மறுக்கமுடியாதது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், புகாரி ஹதீஸ் இவ்விதமாக கூறுகிறது:
ஆயிஷா அறிவித்ததாவது: ஸவ்தா பின்ட் ஜமா தன் நாளை (முஹம்மது தன்னிடம் செலவிடும் நாளை) ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார். இதனால், முஹம்மது ஆயிஷாவின் இரண்டு நாட்கள் தங்குவார், அதாவது ஆயிஷாவின் நாளிலும், ஸவ்தாவின் நாளிலும் அவர் ஆயிஷாவின் வீட்டில் தங்குவார் [1]
ஆனால், ஏன் ஸவ்தா தன் உரிமையை விட்டுக்கொடுத்தார்?
தனக்கு துணையாக முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஸவ்தா ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?
இதற்கான பதிலை நாம் குர்ஆன் 4:128 வசனத்திற்கான விரிவுரைகளில் காணலாம்:
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (குர்ஆன் 4:128)
நாம் மேலே படித்த குர்ஆன் 4:128ம் வசனத்திற்கு இபின் கதீர் கீழ்கண்ட விளக்கவுரையைத் தருகிறார்:
"தன் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, அல்லது புறக்கணித்துவிடுவாரோ என்று ஒரு பெண் பயந்தால், அவள் தன்னுடைய எல்லா உரிமைகளையும் அல்லது ஒரு சில உரிமைகளையும் விட்டுக்கொடுக்கலாம், அதாவது கணவரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் பொருளாதார உரிமைகள், உடுக்க உடை அல்லது இருக்க வீடு போன்ற உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம், அப்போது அக்கணவர் தன் மனைவியிடமிருந்து வரும் இந்த உரிமைகள் விட்டுக்கொடுத்தலை அங்கீகரித்துக் கொள்ளலாம். தன் உரிமைகளை விட்டுக்கொடுப்பது மனைவியின் தவறில்லை, அதே போல, தன் மனைவியின் உரிமை விட்டுக்கொடுத்தலை அங்கீகரிப்பதும் அந்த கணவனின் தவறு அல்ல. இதைத் தான் இறைவன் கூறுகின்றான்:"அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது". இதன்படித் தான், ஸவ்தா பின்ட் ஜமா வயது சென்ற கிழவியாகமாறினபோது, இறைத்தூதராகிய முஹம்மது அவளை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதனால், ஸவ்தா முஹம்மதுவிடம் இப்படி விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, தன்னிடம் அவர் செலவிடும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாகச் சொல்லி முஹம்மதுவிடம் வேண்டிக்கொண்டார். இதனால், முஹம்மது ஸவ்தாவின் உரிமை விட்டுக்கொடுப்பதற்கு பதிலாக, ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை.
"...இபின் அப்பாஸ் அதிகார பூர்வமாக கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்று ஸவ்தா பயந்தார். ஆகையால், அவரிடம் ஸவ்தா கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, என்னை நீங்கள் விவாகரத்து செய்திவிடாதீர்கள்.. அதற்கு பதிலாக என் நாள் ஆயிஷாவின் நாளாக மாறட்டும். ஆகையால், முஹம்மதுவும் அப்படியே செய்தார், குர்ஆன் 4:128ம் வசனம் வெளிப்பட்டது.
ஏன் அல்லாஹ்வின் தூதர் ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பினார்?
ஸவ்தாவை முஹம்மது விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றுச் சொன்னால், ஏன் ஸவ்தா தன்னை அவர் விவாகரத்து செய்து விடுவார் என்று பயப்படவேண்டும்?
தன்னிடம் முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஆயிஷாவிற்கு ஸவ்தா விட்டுக்கொடுக்கவேண்டும்?
ஸவ்தா செய்த பிழை தான் என்ன?
இபின் கதீர் அவர்களின் விரிவுரையின் படி, ஸவ்தாவின் எந்த பிழையும் இதற்கு காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் ஸவ்தா வயது சென்றவராக மாறியது தான், அதாவது அவருக்கு வயது கூடிக்கொண்டே சென்றது தான்.
இன்னும் ஒரு சில அறிவிப்புக்கள் உண்மையாகவே முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறுகிறது, அதன் பிறகு ஸவ்தா அவரிடம் பேசி, தன் உரிமைகளை விட்டுக்கொடுப்பதாக சொன்ன போது, முஹம்மது அதனை அங்கீகரித்தார்.
அல் காசிம் இபின் அபி பேஜா (Al-Qasim ibn Abi Beza) கூறினார்: முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு செய்தியை அனுப்பினார். அதன் பிறகு முஹம்மது ஆயிஷாவின் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியாக வருவார் என்று ஸவ்தா காத்திருந்தார். முஹம்மது அவ்வழியே வருவதை ஸவ்தா கண்டவுடன், அவரிடம் சென்று "உலக உயிர்களிலெல்லாம் உம்மை மேன்மைப்படுத்தியவனும், தன் வார்த்தைகளை உமக்கு வெளிப்படுத்தும் இறைவனின் பெயரில் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்னை விவாகரத்து செய்தீர்கள்? நான் வயது சென்றவளாக இருக்கிறேன், எனக்கு ஆணின் துணை தேவையில்லை. ஆனால், கடைசி நாளில் உயிர்த்தெழும் போது உம்முடைய மனைவிமார்களின் கூட்டத்தில் நானும் உயிர்த்தெழவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் முஹம்மது தன் மனதை மாற்றிக்கொண்டார். மற்றும் ஸவ்தா கூறினார்: என்னுடைய நாளையும், இரவையும் நபியின் பிரியமானவருக்கு (ஆயிஷாவிற்கு) கொடுக்கிறேன் .... (பார்க்கவும் இபின் கதீர் விரிவுரை குர்ஆன் 4:128)
முஹம்மது விவாகரத்து செய்யவில்லை, ஆனால், செய்யவேண்டுமென்று விரும்பினார் என்று சிலர் கூறுகிறார்கள்.
விவரம் எதுவானாலும், ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.
தனக்கு இருக்கும் ஒரே கணவனின் நாளையும், அதற்கான தன் உரிமையையும் ஏன் ஒரு பெண் வேறு ஒரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்கிறாள்?
மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் முழு விவரமும் தெரிந்துக்கொள்ள, இன்னுமுள்ள குர்ஆன் விரிவுரையாளர்கள் குர்ஆன் 4:128ம் வசனத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.
குர்ஆன் 4:128 பற்றி ரஜி (Razi) கூறுகிறார்:
சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "அறிந்துக்கொண்டாள்" என்பதாகும். இன்னும் சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "நினைத்தாள்" என்பதாகும். ஆனால், இப்படி பொருள் கூறுகிறவர்கள், மிகவும் தெளிவாக புரியக்கூடிய ஒன்றை கவனிக்காமல் அறியாமையில் இருக்கிறார்கள். பயம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், பயம் என்றால் பயம் என்று தான் பொருள், அவ்வளவு தான். பயம் எப்போது வருகிறது, அந்த பயம் உருவாவதற்கான காரண காரணிகள் அல்லது நிகழ்வுகள் நடைப்பெறக்கூடிய சூழ்நிலைகள் தெரியும் போது பயம் வருகிறது. இந்த சூழ்நிலைகள் என்ன? உதாரணத்திற்கு ஒரு ஆண் தன் மனைவியைக் கண்டு, உனக்கு வயதாகிவிட்டது, நீ அசிங்கமாக இருக்கிறாய்.. நான் ஒரு நல்ல அழகுள்ள வாலிபப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லும் போது... தன் மனைவிக்கு பயம் வருகிறது. ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்துவிடுவது போல, புறக்கணித்துவிடுவது போல காட்டிக்கொள்ள என்ன செய்வான்? அவன் அவளின் முகத்தில் கோபமாக பார்ப்பான், அவளுக்கு தேவையான தாம்பத்ய உறவினை துண்டித்துக் கொள்வான்..அவளை கேவலமாக நடத்துவான். இப்படிச் செய்து தன் வெறுப்பை காண்பிப்பான்.
ரஜி அவர்கள் விரிவுரை கூறியது போல, முஹம்மது ஸவ்தாவிற்கு செய்து இருப்பாரோ? ரஜி சொல்வது போன்ற சில காரணங்களை கண்டிப்பாக ஸவ்தா கண்டு இருக்கவேண்டும், இதனால் தான் ஸவ்தா முஹம்மதுவிடமிருந்து விவாகரத்து பெறாமல் இருப்பதற்கு எது சரியான வழி என்று சிந்தித்து, கடைசியாக தன் உரிமையை விட்டுக்கொடுத்து இருக்கக்கூடும்.
இதைப் பற்றி இபின் கதீர் மேலும் கூறும் போது:
"குர்ஆன் வ்சனம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், "ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம் " என்னை விவாகரத்து செய்யவேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் செய்யவேண்டியதில்லை" என்று நான் என் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாம்.
இந்த ஹதீஸ் இரண்டு உண்மையான ஹதீஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ்களில் உண்டு இந்த வசனம் சொல்லவருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த நிபந்தனையினால் விவாகரத்து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமிய நாடுகள் முஹம்மதுவின் இந்த எடுத்துக்காட்டுதலின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது..
இதனை இஸ்லாமிய நாடுகள் பின்பற்றுகின்றன. ரஜி அறிவிக்கிறார்:
இந்த வசனம் முதன் முதலாக வெளிப்படுத்தப்பட்டது இபின் அபீ அஸ் சையிப் (Ibn abi as-Sa'ib) என்பவருக்காக, இவருக்கு ஒரு மனைவி இருந்தார்கள், அவருக்கு அனேக பிள்ளைகள் இருந்தார்கள். இப்பெண்ணுக்கு வயது கூடுகின்றது என்பதினால், அவரின் கணவர் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதனால், அந்தப்பெண், அவரிடம் "என்னை விவாகரத்து செய்யவேண்டாம். நான் என் பிள்ளைகளை கவனிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். மற்றும் மாதத்தில் ஒரு சில இரவுகள் மட்டும் என்னிடம் தங்கினால் போதும்" என்று கூறினாரகள். இதனைக் கேட்டு, அவரின் கணவர், இப்படி நீ கூறியதால், எனக்கு இது சம்மதம், அப்படியே ஆகட்டும் என்று கூறினார்.
இரண்டாவது நிகழ்ச்சி, முஹம்மது பற்றியது. முஹமம்து ஸவ்தா பின்ட் ஜமாஹ்வை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால், ஸவ்தா ஒரு நிபந்தனையின் பேரில் தனக்கு விவாகரத்து நடக்காமல் பார்த்துக்கொண்டார். அந்த நிபந்தனையானது, தன்னுடைய நாளை ஆயிஷாவிற்கு கொடுத்துவிடுவது என்பதாகும்.
மூன்றாவதாக, ஆயிஷா கூறிய ஹதீஸாகும்: அதாவது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து வேறு மனைவியை திருமணம் செய்ய தீர்மானிக்கும் போது, அவள் அவனிடம் "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், ஆனால் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்ளுங்கள். என்னை விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, எனக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டாம், எனக்கு கொடுக்கப்பட்ட இரவுகளை நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றுச் சொல்லலாம்.
இந்த விபரம் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர இபின் அல் அரபி (Ibn al-'Arabi) கூறும் போது:
".. ஸவ்தா பின்ட் ஜமா வயது சென்றவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மதுவின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மதுவும் அவரை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா மரிக்கும் போது முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவராகமரித்தார்கள். இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த வசனம் ஆயிஷாவிற்காக இறக்கப்பட்டது, ஒரு மனிதன் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, பிறகு அவளுக்கு வயது அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன். [2]
ஆக, இஸ்லாமியர்கள் அறியாமையினால் முஹம்மதுவை கண்மூடித்தனமாக பின்பற்றினர் மற்றும் அதே நேரத்தில் இதற்காக அல்லாஹ்வை புகழ்வதையும் மறக்கவில்லை.
டாக்டர் பின்ட் அஷ் ஷடி(Dr bint ash-Shati') என்பவர், இவர் "இறைத்தூதரின் மனைவிகள் (The Wives of the Prophet [nisaa' an-Nabi] )" என்ற புத்தகத்தை எழுதியவர். இவர் தன் புத்தகத்தில் "ஸவ்தா பார்ப்பதற்கு அழகில்லாதவராக இருப்பார் மற்றும் பருமனாக இருப்பார்" என்று கூறுகிறார் [3]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உயரமாக இருப்பார் [4], பருமனாக இருப்பார் மற்றும் நிதானமாக வேலை செய்வார்[5])
டாக்டர் பின்ட் அஷ் ஷடி, முஹம்மது மற்றும் ஸவ்தாவின் திருமண பந்த உறவு பற்றி கீழ் கண்டவாறு கூறுகிறார்:
"ஸவ்தா தன் அனுபவத்திலிருந்து உணர்ந்துக்கொண்டது என்னவென்றால், தனக்கும் முஹம்மதுவின் உள்ளத்திற்கும் இடையில் மிகப்பெரிய தடை அல்லது பிளவு உள்ளது என்பதை உணர்ந்தார். ... தனக்கு தரப்பட்டிருக்கும் முஹம்மதுவோடு தங்கும் அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார். [6]
இருவருக்கும் இடயே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்துக்கொள்ளவேண்டும்?
மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?
டாக்டர் பின்ட் அஷ் ஷாடி கூறுகிறார்: கோலா பின்ட் ஹகீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த நேரத்தில் ஆயிஷா 7 வயதுடையவராக இருந்தாராம். கோலாவிடம் முஹமம்து "யார் என்னுடைய வீட்டை பார்த்துக்கொள்வார்கள், யார் இறைத்தூதருடைய மகள்களை கவனித்துக்கொள்வார்கள்" என்று கேட்டாராம். அதற்கு கோலா, "ஸவ்தாவை திருமணம் செய்துக்கொள்ளும்" என்றுச் சொன்னார்கள், இதற்கு நபி அங்கீகரித்தார். மற்றும் ஸவ்தா முஹம்மதுவின் வீட்டை கவனித்துக்கொள்ளவும், அவருடைய மகள்களை பார்த்துக்கொள்ளவும் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்கள் [7].
இப்போது நமக்கு படம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மதுவின் காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மதுவின் மகள்களை கவனிக்கும் பணிவிடைக்காரியாக (ஆயாவாக) மாறினார்.
முஹம்மதுவின் முதல் மனைவி மரித்த பிறகு அவரின் வேதனையான நேரத்தில் ஆதரவு அளித்து அவரைத் தேற்றி, இத்தனை ஆண்டுகள் அவரின் பிள்ளைகளை கவனித்து, சமைத்துப்போட்டு, துணிகளை துவைத்துப்போட்டு, எல்லாருக்கும் தேவையானதைச் செய்த ஸவ்தாவை இப்போது முஹம்மதுவிற்கு பிடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவரது விவாகரத்திற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை, இருக்கும் ஒரே காரணம், ஸவ்தா கிழவியாகி விட்டார், அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழகும் இப்போது இல்லை.
குர்ஆன் கீழே உள்ள வசனத்தில் தம்பதிகளாக இருக்கும் கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் அன்பு குறித்து அழகாக பேசுகின்றது.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
குர்ஆன் சொல்லும் அந்த அன்பு மற்றும் உவப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது? அதில் உள்ள குறைபாடு என்ன என்பதை இதுவரை நாம் கண்ட நிகழ்ச்சி மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
குர்ஆன் சொல்லும் அன்பு, இரக்கம் போன்றவைகள் ஸவ்தாவிற்கு நடந்த நிகழ்ச்சியில் காணப்படவில்லையே?
இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் முஹம்மது தண்டிக்கப்படுவாரா? நியாயந்தீர்க்கப்படுவாரா?
அல்லது
குர்ஆனை விட முஹம்மது உயர்ந்தவரா?
இஸ்லாமிய சட்ட நூல்களை எழுதிய ஆசிரியர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:
வெறும் காமம், மோகத்தை மட்டுமே முக்கியம் என்று கருதி இருக்கும், நல்ல நடத்தை இல்லாத ஒரு மனிதன், இஸ்லாம் அங்கீகரிக்காததை செய்து, தன் மனைவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தால் அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன? இதற்கான பதில்: இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தண்டிப்பான், இந்த உலகத்திலும், வரவிருக்கும் அந்த உலகத்திலும், அல்லாஹ் அவனை பழிவாங்குவான்.[8]
மேலே சொன்ன வரிகள் மிகவும் அழகாகவும் நியாயமானதாகவும் தென்படுகின்றது, எதுவரைக்கும்? அதே ஆசிரியர் அதே புத்தகத்தில் சில பக்கங்களுக்கு பிறகு என்ன சொல்லியுள்ளார் என்று நாம் படிப்பதற்கு முன்பாக மட்டுமே இவ்வரிகள் அழகாகத் தெரியும். அதே ஆசிரியர் எழுதுவதை படியுங்கள்: "எப்போது ஒரு பெண் தன் கணவனின் காமத்திற்கு மோகத்திற்கு உபயோகமில்லாதவளாக மாறுகிறாளோ, அவளிடம் இருக்கும் சில சரீர குறைபாடுகளினாலோ, அல்லது முதுமையினாலோ (வயது அதிமாகிவிட்டாளோ) அல்லது இப்படிப்பட்ட காரணங்களினால், ஒரு மனிதன் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றான்" [9].
ஒருவன் தன் மனைவி முதுமை அடைந்துவிட்டாள் என்பதால் அவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாக முஹம்மது வர்ணிக்கப்படுகிறார். முஹம்மது தான் ஒரு நல்ல கணவராக இருப்பதாக குர்ஆனிலே தனக்கு தானே புகழ்ந்துக்கொள்கிறார்:
"மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்" குர்ஆன் 68:4.
வேறு வகையாகச் சொல்லவேண்டுமானால், ஒரு ஹதீஸ் கூறுகின்றபடி "முஹம்மதுவின் நடத்தை தான் குர்ஆனில் வெளிப்படுகிறது".
ஆனால், டாக்டர் பின்ட் அஷ் ஷாடி முஹம்மது ஒரு மனிதர் தானே என்றுச் சொல்லி, அவருக்காக வக்காளத்து வாங்குகிறார்.
ஆக, குர்ஆன் தான் முஹம்மதுவின் நடத்தை, மற்றும் முஹம்மது வெறும் சாதாரண மனிதர் தான். இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு இப்போது எல்லா விஷயமும் புரிந்து இருக்கும்.
1. Bukhari, the Book of Nikah, Hadith No. 139.
2. Ahkam al-Qur'an, Abi Bakr Ibn 'Abd Allah known as Ibn al-'Arabi, Dar al-Kotob al-'Elmeyah, commenting on Q. 4:128.
3. Nisaa' 'an-Nabi, Dr. Bint ash-Shati', Dar al-Kitab al-'Arabi, 1985, p. 62, 67.
4. Bukhari, Vol. 1, Book 4, Hadith No. 148.
5. Bukhari, Vol. 2, Book 26, Hadith No. 740.
6. Nisaa' 'an-Nabi, Dr. Bint ash-Shati', Dar al-Kitab al-'Arabi, 1985, p. 64.
7. Nisaa' 'an-Nabi, Dr. Bint ash-Shati', Dar al-Kitab al-'Arabi, 1985, p. 64.
8. 'Abd ar-Rahman al-Gaziri, al-Fiqh 'ala al-Mazahib al-Arba'a, Dar al-Kutub al-'Elmeyah, 1990, vol. 4, p. 278.
9. 'Abd ar-Rahman al-Gaziri, al-Fiqh 'ala al-Mazahib al-Arba'a, Dar al-Kutub al-'Elmeyah, 1990, vol. 4, p. 281.
ஆங்கில மூலம்: Muhammad, Lord of the Sent Ones? - SAUDA BINT ZAM'AH
பி. நியூட்டன் அவர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்
குர்ஆன் பற்றிய கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/newton/sauda.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக