குர்ஆன் ஒரு அற்புதமா?
Is The Qur'an Miraculous?
சூரா 11:13-16ல் "இப்புத்தகம் இணையற்ற புத்தகம்" என்று குர்ஆன் சொல்கிறது, அதனால், குர்ஆன் ஒரு அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கைப் பற்றி மற்றவர்களுக்கு சவால் விடும்போது, இந்த ஒரு வாதத்தை முன்வைப்பார்கள், மற்றும் இந்த சவாலை யாராலும் எதிர்கொள்ளமுடியாது என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் முழு வாதத்தையும் இதன் மீதே வைத்திருக்கின்றனர், ஆனால், தன் தெய்வீகத் தன்மையை நிருபிக்க குர்ஆன் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை. குர்ஆன் இணையற்ற புத்தகம் என்ற கருத்து இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளதோ அது போல, இஸ்லாமிய நம்பிக்கை குர்ஆனின் தெய்வீகத்தன்மை மீது ஆதாரப்பட்டுள்ளது. குர்ஆன் தன் தனித்தன்மையைப் பற்றி அதிக நம்பிக்கையுடையதாக இருக்கிறது, இதனால் அது மனிதனுக்கும், ஜின்னுக்கும் இப்படிப்பட்ட ஓரு புத்தகத்தை அல்லது ஒரு வசனத்தை கொண்டு வரமுடியுமா? என்று குர்ஆன் சவால் விடுகிறது.
எது எப்படியிருந்தாலும், குர்ஆன் ஒரு அற்புதமா? என்ற கேள்வியை கேட்கும் போது, இஸ்லாமியர்கள் அனேக பதில்கள் சொல்வதை நான் கேட்டியிருக்கிறேன், அவைகளில் மிகவும் முக்கியமானவைகள் இவைகளாகும்:
1) குர்ஆனின் மொழி மற்றும் இலக்கிய நடை நிகரற்றது (In its literary eloquence)2) குர்ஆனின் உள்ளடக்க விவரங்கள் நிகரற்றது (In its subject matter)3) குர்ஆன் அனேக நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இருப்பதால், இது நிகரற்றது (In its preservation over the centuries)
இந்த தற்போதைய கட்டுரையில், மேலே இஸ்லாமியர்கள் சொல்லும் பதில்களில் முதல் பதிலை மட்டுமே அலசப்போகிறேன். பிறகு என் இதர கட்டுரைகளில் மற்ற இரண்டு பதில்களைப் பற்றி நாம் காண்போம். தற்போதைய கட்டுரை நீண்டதாக இருப்பதால், இந்த பதிலை நான் இரண்டு பிரிவுகளாக பிரித்து பதில் அளிக்கிறேன். முதல் பிரிவில் நான் "குர்ஆனின் சவாலை" சந்திப்பதற்கான பதிலை தருகிறேன் (தற்போதைய கட்டுரை), இரண்டாவது பிரிவில் "குர்ஆனில் இலக்கிய நடை நிகரற்றதாக உள்ளது (perfect eloquence)" என்ற வாதத்திற்கான மறுப்புக்களை தருகிறேன். இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்ட விவரங்கள் பெரும்பான்மையாக இதர ஆசிரியர்களின் கருத்துக்களாகும், அப்படி மேற்கோள் காட்டப்பட்ட இடங்களில் எந்த புத்தகத்திலிருந்து, எந்த ஆசிரியரின் கருத்து என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கம் இஸ்லாமிய வாசகர்களை துக்கப்படுத்து அல்ல, இதனால் தான் வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்தியுள்ளேன், இதன் மூலமாக இந்த முக்கிய தலைப்பு பற்றி விவாதிக்க இஸ்லாமியர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள். நான் அறியாமையில் ஏதாவது தவறான விவரத்தை எழுதியிருந்தால், வாசகர்கள் இந்த தளத்தின் நிர்வாகிக்கு எழுதினால், அவர்கள் திருத்தம் செய்து சரி செய்வார்கள். இந்த விவரங்களை மனதில் கொண்டு, இந்த கட்டுரையின் முக்கிய விவாதத்திற்குள் கடந்துச் செல்வோம். குர்ஆனின் இலக்கிய நடையோடு ஒப்பிடக்கூடிய மூன்று விவரங்களை இப்போது நாம் காண்போம், இந்த ஒப்பீடு கருத்தின் படி உயர்ந்ததாக கருதப்படவில்லையானாலும், எழுத்தின் படி குர்ஆனை விட மேன்மையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
விவாதம் 1:
ஒரு மனிதனுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சரியான அபிப்பிராயம் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த விஷயத்தில் தேர்ச்சிப் பெற்ற நிபுனர்களிடம் சென்று கேட்கவேண்டும். ஒரு வேளை உங்கள் உடல் நலம் பற்றி தெரிந்துக்கொள்ள, சிகிச்சை பெற விரும்பினால், ஒரு சிறந்த மருத்துவரிடம் நீங்கள் செல்வீர்கள். ஒரு வேளை, எந்த தொழில் ஆரம்பிப்பது அல்லது எந்த வேலையை செய்வது என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், இதற்காகவே இருக்கும் "அறிவுரை நிபுனர்களிடம் (Counsellors)" செல்வீர்கள். இந்த பிரபஞ்சம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், அதற்குரிய புத்தகங்களை நீங்கள் படிப்பீர்கள். இது போல, ஒரு மொழியைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக நாம் அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்களிடம் செல்வோம். குர்ஆனின் மொழியைப் பற்றியும், அதன் இலக்கிய நடைப் பற்றியும், அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்:
புகழ்பெற்ற ஈரான் அரபி அறிஞர் அலி தஸ்தி, கீழ் கண்டவாறு கூறுகிறார்:
ஆங்கிலம்:
"Neither the Qur'an's eloquence, nor it's moral precepts are miraculous." (Ali Dashti, Twenty Three Years, pg 57)
தமிழாக்கம்:"குர்ஆனின் இலக்கிய நடையோ அல்லது அதன் ஒழுக்க நெறி கட்டளைகளோ அற்புதமானவைகளாக இல்லை"
அலி தஸ்தி தன் புத்தகத்தின் ஆரம்பத்தில், இதே கருத்தை கூறுகின்ற இதர அறிஞர்களைப் பற்றி கூறுகிறார். உதாரணத்திற்கு, சிரியாவைச் சேர்ந்த கண்பார்வையில்லாத கவிஞர் "அபூ அலா அல் மாரி" என்பவரைப் பற்றி தஸ்தி கூறும் போது, "…அவர் ஒரு சிறந்த மற்றும் ஆழ்ந்த அரபி சிந்தனையுடையவர் - a great and penetrating Arab thinker" (பக்கம் 53) என்றும், "…அவர் ஒரு சிறந்த மற்றும் உலக மக்கள் நேசிக்கும் கவிஞர், மற்றும் சிந்தனையாளர் - a great and universally admired poet-philosopher" (பக்கம் 94) என்றும் கூறுகிறார். இக்கவிஞர் தன் சொந்த கவிதைகளை ஒப்பிடும் போது, அவைகள் குர்ஆனுக்கு சமமானவைகள் என கருதுகிறார். ஒரு வேளை இவரது கருத்து தவறு என்றுச் சொன்னால், வேறு யார் இப்படிப்பட்டவரின் கவிதைகளின் தரத்தை நிர்ணயிக்கமுடியும்? இவரைப் போல நிபுனத்துவம் உள்ளவர்கள் தானே, இப்படிப்பட்ட விஷயங்களில் ஒரு முடிவைச் சொல்லமுடியும்! உண்மையாகச் சொல்லவேண்டுமானால், இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இதர அறிஞர்கள் கூட "குர்ஆன் ஒரு இலக்கிய சிறப்பு மிக்க ஒரு அற்புதம்" என்று கருதவில்லை. இதைப் பற்றி அலி தஸ்தி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை படியுங்கள்.
"Among the muslim scholars of the early period, before bigotry and hyperbole prevailed, were some such as Ebrahim on-Nazzim who openly acknowleged that the arrangment and syntax of the Qur'an are not miraculous and that work of equal or greater value could be produced by other God-fearing persons", (emphasis mine, pg 48)
"கருத்து சுதந்திரம் பரிக்கப்படுவதற்கு முன்பு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில், "இப்ராஹிம் அன் நஜீம்" போன்றவர்கள் அனேகர் இருந்தனர். குர்ஆனின் வடிவமைப்பும், அதன் இலக்கிய நயமும் அற்புதமானது அல்ல மற்றும் குர்ஆனுக்கு சமமாகவும் அதற்கும் மேலான நயத்துடனும் நூல்களை எழுத இறையச்சம் உள்ளவர்களால் முடியும்" என்று இவர் வெளிப்படையாக அங்கீகரித்தார்.
மேலே சொல்லப்பட்ட விவரமானது, அனேக எடுத்துக்காட்டுக்களில் ஒன்று மட்டுமே. இதே போல தங்கள் கருத்தைச் சொன்னவர்களில் இவர்களும் அடங்குவார்கள்: "இபின் ஹஜம் மற்றும் அல்-கய்யத்....மற்றும் இதர அறிஞர்களானவர்கள் (several other leadering exponents of the Mo' tazzilite school)" (பக்கம் 48). சமீப காலத்தில் கூட அரபி மொழியில் அதிக நிபுனத்துவம் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, ஜெருசலேமில் 16 ஆண்டுகள் உழைத்து, குர்ஆனின் மொழி நடையிலேயே பைபிளின் வசனங்களை மொழியாக்கம் செய்தார்கள். இவர்களின் இந்த வெற்றியை புறக்கணித்தால், அவர்களின் ஒட்டு மொத்த நிபுனத்துவத்தையும், மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவியலையும் நாம் புறக்கணித்ததற்கு சமமாகும்.
எனினும், இந்த அறிஞர்கள் வேண்டுமென்றே இப்படிச் சொன்னார்கள், இவர்களின் கூற்றுகளில் உண்மையில்லை என்று இஸ்லாமியர்கள் இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். அந்த சிரியன் கவிஞர் தன் சொந்த கவிதைகளை புகழுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். இதே போல, ஜெருசலேமில் உழைத்த அந்த அறிஞர்கள் ஒரு பக்கம் சார்ந்து இவ்வேலையைச் செய்தார்கள் ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.
நான் உங்களிடம் கேட்க விரும்புவது: " இந்த மனிதர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட ஒரு தைரியமான சவாலை மக்களின் முன்வைப்பதற்கு, அவர்கள் என்ன முட்டாள்களாக இருந்தார்களா? தங்கள் பெயர் மற்றும் புகழுக்கு இழுக்கு வரும் என்று தெரிந்துமா இப்படிப்பட்ட சவாலை மக்களின் முன் வைக்கமுடியும்?அவர்களின் கூற்றுகளில் உண்மையில்லாமலா இந்த சவாலை அவர்கள் மக்கள் பொதுவில் வைத்திருப்பார்கள்?" இது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கருத்துக்களை, கவிதைகளை மக்களின் முன் வைத்தார்கள், யாராவது வந்து இதற்கு மறுப்புக் கூறி நிருபியுங்கள் என்று சவால் விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால், அவர்களின் எழுத்துக்களை அலசுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், அவர்களுக்கு மறுப்பு தெரிவியுங்கள், நிருபியுங்கள். உங்களால், இப்படி மறுப்பு தெரிவித்து, நிருபிக்க முடியவில்லையானால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதே சரியானது.
நான் மேலே சொன்ன இரண்டு மேற்கோள்களிலும், சந்தேகத்திற்கு இடமுண்டு என்பதை நான் நம்பமாட்டேன். ஆசிரியர் அலி தஸ்தி தன் புத்தகம் முழுவதும் நடுநிலையோடு எழுதியிருப்பதை நாம் காணமுடியும். அவர் வேண்டுமென்றே ஒருபுறம் சார்ந்து எழுதியதாக, இஸ்லாமுக்கு எதிராக எழுதியதாக நாம் அவரது புத்தகத்தில் காணமுடியாது. இந்த புத்தகம் ஒரு பக்கமாக சார்ந்து எழுதப்பட்டதா என்று, இந்த புத்தகத்தை வாங்கி, படித்து பிறகு எனக்குச் சொல்லுங்கள் என்று நான் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அலி தஸ்தி புத்தகத்தை எழுதியதின் முக்கிய நோக்கமே, முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றியும், இஸ்லாம் பற்றியும் நடுநிலையோடு எழுதுவதாகும். கடைசியாக நாம் பார்த்த விவரத்திலும் கூட, இஸ்லாமுக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் எழுதியிருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆகையால், இஸ்லாமுக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்திற்கும் இடமில்லை. முடிவாக, நிபுனர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய நிபுனர்களையும் சேர்த்து, குர்ஆனின் சவால் ஏற்கனவே சந்தித்தாகிவிட்டது.
விவாதம் 2:
சூராக்கள் 1, 113 மற்றும் 114 ஆகிய மூன்று அதிகாரங்கள், மூல குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை, அவைகள் பிறகு நுழைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்துல்லா இபின் மசூத் என்பவர் குர்ஆன் பற்றிய விஷயங்களில் முக்கிய அதிகாரபூர்வமானவர் என்பதை முஹம்மதுவே இவரைப் பற்றி கூறியுள்ளார் (புகாரி). இந்த அதிகாரங்கள் குர்ஆனின் ஒரு பாகமல்ல என்று கருதுகிறார். இவரது எழுத்துக்கள் மூலமாக இதனை அறியலாம். 1930களில் சில விமர்சகர்கள் இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அலசிப்பார்த்தார்கள், பிறகு இதே முடிவிற்கு வந்தார்கள். இஸ்லாமியர்கள் ஏன் சூரா 1ஐ குர்ஆனின் ஒரு பகுதியில்லை என்று கருதுவதற்கு மூன்றாவது காரணமும் இருப்பதாக நான் நம்புகிறேன்.
குர்ஆன் இறைவனின் நேரடி வெளிப்பாடு அல்லது வார்த்தைகள் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது, அந்த வார்த்தைகளை பேசுகிறவர், முழுக்க முழுக்க இறைவனாவார். வெளிப்பாடு பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து இப்படி இருப்பதினால், " இறைவன் நேரடியாக பேசும் வார்த்தைகள் அனைத்தும் தன்னிலையில் (First Person) இருக்கும், இப்படி இல்லாமல், முன்னிலையில் வரும் (Second Person) வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள் அல்ல" என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் புரிவதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். பைபிளில் உள்ள "சங்கீத புத்தகம்" இறைவேதமல்ல ஏனென்றால், அவைகளில் வரும் வார்த்தைகள் அதனை எழுதிய ஆசிரியர் இறைவனை தொழுதுக்கொள்வதாக இருப்பதால், சங்கீதம் இறைவேதமல்ல என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இஸ்லாமியர்கள் இப்படி கேட்பார்கள் "இறைவன் தன்னைத் தானே தொழுதுக் கொள்வாரா?"
நான் இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புவது, "குர்ஆனின் சூரா 1, வழிகாட்டுதலுக்காக இறைவனிடம் அதை எழுதிய ஆசிரியர் எழுதுவதாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் எப்படி அந்த சூராவை இறைவார்த்தை என்றுச் சொல்கிறார்கள்?" (இந்த சூராவின் ஆரம்பத்தில் "கூறுவீராக" என்ற வார்த்தை இல்லை என்பதால், இது இறைவன் கூறச்சொன்ன வார்த்தைகள் இல்லை). இஸ்லாமியர்களின் வெளிப்பாடு பற்றிய சித்தந்தத்தின்படி, இஸ்லாமியரின் பகுத்தறிவின் படி பார்த்தால், இறைவன் தன்னிடம் தானே துவா கேட்பாரா?" இக்கேள்விக்கு, என் கருத்துப்படி, இஸ்லாமியர்களின் அறிவுடமையான பதில் "இல்லை" என்பதாகத் தான் இருக்கும். இந்த சூரா, குர்ஆனில் உள்ள இதர சூராக்களை விட நல்ல நயத்துடன் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த சூரா இறைவனால் எழுதப்படாமல், ஒரு மனிதனாலோ அல்லது மனிதர்களாலோ எழுதப்பட்டிருக்கிறது மற்றும் இதர சூராக்களை விட நல்ல இலக்கிய நயத்துடன் இருக்கிறது, இன்னுமா குர்ஆனின் சவால் சந்திக்கப்படாமல் இருக்கிறது?
முடிவுரை:
மேலே கண்ட விவாதத்திலிருந்து ஒருவர் எந்த முடிவிற்கு வரமுடியும்? குர்ஆனின் சவால் சந்திக்கப்பட்டால் என்னவாகும்? ஒருவேளை குர்ஆனின் சவால் சந்திக்கப்பட்டால், அதன் பிறகு குர்ஆன் ஒரு அற்புதமாக கருதப்படாமல் போகுமா? ஆக, குர்ஆனின் தெய்வீகதன்மையை நிருபிக்க பயன்படுத்தப்படும் அந்த ஒரு ஆதாரமும் ஆட்டங்காணுகிறது. இஸ்லாமியர்கள் ஏன் குர்ஆன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதற்கான சரியான காரணமில்லாமல் தனிமையில் விட்டுவிடப்படுகிறார்கள். குர்ஆனின் சவால் சந்திக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களோடு நாம் மேலே கண்டோம். அப்படியானால், உங்களின் தீர்மானம் என்ன?
இஸ்லாமிய வாசகர்களுக்காக சில வரிகள்:
இந்த கட்டுரையில் நாம் சரியான ஆதாரங்களோடு எடுத்த முடிவை ஏற்க பல இஸ்லாமியர்கள் இன்னும் மறுக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களிடம் கீழ் கண்ட கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.
உங்களுடைய முடிவு, உண்மையான விவரங்கள் (Facts) மீது ஆதரப்பட்டு இருக்கிறதா? அல்லது உங்கள் நம்பிக்கையின் (Faith) மீது ஆதாரப்பட்டு இருக்கிறதா? (Is your conclusion based on the facts, or on your faith?)
குர்ஆனின் இந்த சவால் ஒருபோதும் சந்திக்கப்படாது என்றுச் சொல்லும் நபராக நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் எடுத்த முடிவு உங்களின் நம்பிக்கையின் மீது ஆதாரப்பட்டு இருக்கிறது, பகுத்தறிவின் மீதல்ல. நீங்கள் ஏற்கனவே முடிவை எடுத்துவிட்டதால், இனி அந்த சவால் பயனற்றதாக உள்ளது. இங்கு நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ஏனென்றால், நீங்கள் மிகவும் ஆபத்தான நிலத்தை உழுதுக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சவாலை பயனற்றதாக மாற்றுவீர்களானால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையும் பயனற்றதாக மாறிவிடும்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்றுச் சொல்லக்கூடிய, இந்த அற்புதத்தின் மூலமாக, இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் சுழற்சி வாதத்தை (Circularity of Muhammad's claims) முறித்துவிடுகிறார்கள். நான் சொல்ல வருவது என்ன? ஒரு முஸ்லீமிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்:
முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?
இஸ்லாமியர்களின் பதில்: அவர் தீர்க்கதரிசி என்று குர்ஆன் சொல்கிறது மற்றும் குர்ஆன் இறைவனின் வேதமாக இருக்கிறது.
மறுபடியும் அவர்களிடம் கேளுங்கள்: குர்ஆன் இறைவேதமென்று உங்களுக்கு எப்படி தெரியும்?
இஸ்லாமியர்களின் பதில்: குர்ஆன் இறைவேதமென்று முஹம்மது சொன்னார்.
இப்படிப்பட்ட சுழற்சியை உடைக்கவேண்டுமானால், கிறிஸ்தவத்திற்கு உள்ளது போல, இந்த இரண்டு பதில்களுக்கு வெளியே ஆதாரங்கள் இருக்கவேண்டும் (ரவி ஜகரியா - இஸ்லாம் செய்திகள்). குர்ஆன் தன் அற்புதத்தைப் பற்றி மேன்மை பாராட்டுகிறது, இதற்கு வலுவூட்டும் விதமாக சவாலும் இருக்கிறது என்றுச் சொல்கிறது. ஆக, இந்த சவாலே பயனற்றதாக மாறும்போது, குர்ஆனின் அற்புதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போகும், இதனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு பகுத்தறிவான வாதம் இல்லாமல் போகும், இதனால் அவர்களின் நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கையாக மாறும், ஏனென்றால், அவர்களின் நம்பிக்கைக்கு குர்ஆனின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது. மனிதனின் அறிவு மட்டுமே அவனை எப்போதும் சத்தியத்திற்கு நேரே நடத்தவேண்டும் என்று குர்ஆன் வாதம்புரிவதால், இந்த நிலை. இன்னும் நீங்கள் உங்கள் வாதத்திலே அசையால் நிற்கிறீர்களா? அல்லது உங்கள் மனதில் நேர்மையானவர்களாக இருக்க முடிவு செய்யப்போகிறீர்களா?
Reference: Ali Dashti, "Twenty Three Years: A Study of the Prophetic Career of Mohammad", Routledge Chapman & Hall, Mazda Pubs, Bibliotheca Iranica: Reprints Ser., Vol. No. 2., 1985, 246p. $15.95, ISBN 1-56859-029-6.
இதர கட்டுரைகளை படிக்கவும்: குர்ஆன் ஒரு அற்புதமா?
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
5 கருத்துகள்:
இயர்கைதான் குர்ஆன்
குர்ஆன் என்றால் அனுபவபாடம்
illay
Aiah ovvoru islamia thmishzanum kuranai mushzuvadhumaga Thai moshziyam thmishzil padithu purindhu kondal orey nalil islamai vittu veliyerividuvargal. Adhanal than islamia arivaligal kuranin vasanangalai arabu moshziyil padithu thmishzil thavarana vilakkangalai koduthu thamishzargalai vashzi thavarana seigindrargal.
Aiah ovvoru islamia thmishzanum kuranai mushzuvadhumaga Thai moshziyam thmishzil padithu purindhu kondal orey nalil islamai vittu veliyerividuvargal. Adhanal than islamia arivaligal kuranin vasanangalai arabu moshziyil padithu thmishzil thavarana vilakkangalai koduthu thamishzargalai vashzi thavarana seigindrargal.
Aiah ovvoru islamia thmishzanum kuranai mushzuvadhumaga Thai moshziyam thmishzil padithu purindhu kondal orey nalil islamai vittu veliyerividuvargal. Adhanal than islamia arivaligal kuranin vasanangalai arabu moshziyil padithu thmishzil thavarana vilakkangalai koduthu thamishzargalai vashzi thavara seigindrargal.
கருத்துரையிடுக