இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
முன்னுரை: முஹம்மதுவை அவமதித்ததற்காக ஒரு பேராசியரின் கைகளை இஸ்லாமியர்களில் சிலர் வெட்டினார்கள். அதைப் பற்றிய ஒரு சிறு கட்டுரையை கீழே முதல் கட்டுரையாக படிக்கவும், அதற்கு வந்த பின்னூட்டத்திற்கான பதிலை இரண்டாம் கட்டுரையாக படிக்கவும்.
1) முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்2) வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்
வெட்டப்பட்ட ஜோசப் அவர்களுக்கு இன்னொரு இஸ்லாமிய குழு இரத்ததானம் செய்ததாக ஒரு செய்தியை தினமலரில் படித்தேன். மக்கள் மனதில் இப்போது தான் குழப்பம் ஆரம்பமாகிறது. அதாவது குழந்தையை கிள்ளியும் விட்டுவிட்டு, அழுதுக்கொண்டு இருக்கும் குழந்தையை தாலாட்டவும் வந்துவிட்டார்கள் என்றுச் சொல்லும் சொற்றொடருக்கு ஏற்ப ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.
முதலில் தினமலர் செய்தியை படிக்கவும்:கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களுக்கு மனமார்ந்த என் நன்றிகள் உரித்தாகுக.
அனேக தானங்களில் இரத்ததானம் மிகவும் சிறந்தது, அதாவது தங்கள் உடலில் உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் இரத்தத்தை கொடுப்பது என்பது மிகவும் போற்றுவதற்குரியது. ஆகையால், இரத்த தானம் செய்து காயப்பட்ட ஜோசப்பிற்கு உதவிய இஸ்லாமியர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரங்கள் அனேகம் உள்ளன. அதாவது,
1) தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மதுவை அவமதித்த ஒருவருக்கு, இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்து இருப்பது ஒரு நல்ல விஷயம் தான். (ஆம, இதை நான் சிந்துப்பார்க்கவே இல்லையே என்று சிலர் இப்போது தலையை சொறிந்துக்கொள்வார்கள்)
2) இப்படி தங்கள் மார்க்கத்தலைவரை தாக்கி எழுதியவருக்கே இரத்ததானம் செய்தவர்களாகிய இவர்களைக் கண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது (அன்பான மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா? அல்லது சட்டத்தின் படி தண்டனை பெற விட்டுவைக்காமல் கைகளை வெட்டிய அந்த இஸ்லாமியர்களைக் கண்டு இஸ்லாம் இப்படிப்பட்டது (அடாவடி மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா?
இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, இஸ்லாமை தோற்றுவித்தவரும், இஸ்லாமின் ஆணிவேராக இருப்பவரும், இஸ்லாமியர்கள் வழிகாட்டியாக இருப்பவருமான முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது என்று தீர்மானித்தால், அது மிகச்சரியாக இருக்கும். இது இஸ்லாமுக்கு மட்டுமல்ல, எல்லா மார்க்கத்திற்கும் பொருந்தும், அதாவது தோற்றுவித்தவர் எவ்வழியோ தொடர்பவர்களும் அவ்வழியே (சிலர் வேறு மாதிரியாக நடந்துக்கொண்டாலும் சரி).
இஸ்லாமியரல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும்: முஹம்மதுவின் வழிகாட்டல்: ஒரே ஒரு உதாரணம்
இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று அனேக விவரங்களைச் சொல்லியுள்ளார், அவைகளில் ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
குர்ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் ஹதீஸ்களிலிருந்து, முஹம்மது சொன்ன ஒரு கட்டளை அல்லது அறிவுரை: அதாவது யூதர்கள் கிறிஸ்தவர்களை வழியில் கண்டால், அவர்கள் நெருக்கமான வழியில் செல்லும்படி செய்யுங்கள், அல்லது கட்டாயப்படுத்துங்கள் என்று முஹம்மது இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறார். அவர் எதைச் சொல்வாரோ அதை ஒரு மயிரிழையும் பிசகாமல் இஸ்லாமியர்கள் பின்பற்றுவார்கள், இதற்கு சந்தேகமே இல்லை.
ஒரே வழியில் செல்பவர்கள் அவரவர் வழியில் செல்ல விட்டுவிடவேண்டியது தானே! முஹம்மது அவர்களே... ஏன் இப்படி மக்களின் மனதிலே வெறுப்புணர்ச்சியை ஊட்டுகிறீர்கள்?
சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389
அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்) கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம் (சலாம்) கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது, சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.
Muslim :: Book 26 : Hadith 5389Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.
இப்போது சில விவரங்களை அலசுவோம் வாருங்கள்.
இரத்த தானம் செய்த முஸ்லீம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களா?
மேலே படித்த முஹம்மதுவின் கட்டளையை படிக்கும்போது, சில விவரங்கள் தெளிவாக புரிகின்றது, அதாவது,
1) இஸ்லாமியர்கள் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களிடம் கடுமையான நடந்துக்கொள்ளவேண்டும்.
2) அவர்களை இடுக்கமான வழியில் செல்லும்படி கட்டாயப்படுத்தவேண்டும்,
3) அந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் வழியில் செல்லும் இஸ்லாமியர்களுக்கு எந்த கெடுதியும் செய்யவில்லையானாலும் சரி, அவர்களை இடுக்கமான வழியில் செல்லச் செய்யவேண்டும், அதாவது இஸ்லாமியர்களின் கை உயர்ந்து இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்துத் தான் செல்லவேண்டும் என்று காட்டவேண்டும்.
4) முஸ்லீம்களின் மனதில் ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டு, மற்ற மார்கத்தவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை போதிக்காமல், ஒற்றுமையை குலைக்கும் விதமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமிய நபி கூறியுள்ளார்.
ஆனால்,
1) இன்று, தங்கள் நபி பற்றி அவதூறாக எழுதியவருக்கு இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்துள்ளார்கள்.
2) இப்படி கைகளை வெட்டுவது தவறு என்று கண்டித்து அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்
நாம் என்ன முடிவு எடுக்கப்போகிறோம்?
இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்கள் முஹம்மது சொன்னது போல செய்யாமல், முஹம்மதுவையே அவதூறாக பேசியவருக்கே இரத்ததானம் செய்து இருப்பதினால், இந்த இஸ்லாமியர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா?
ஒரு வேளை முஹம்மது இப்போது இருந்திருந்தால், இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களிடம் என்ன சொல்லியிருப்பார். என்னை திட்டியவருக்கே நீங்கள் உதவி செய்ய சென்றுவிட்டீர்களோ? இரத்தம் கொடுக்க முன் வந்துவிட்டீர்களோ? நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யாமல், அவரின் எதிரிகளுக்கு உதவி செய்துவிட்டீர்களே என்று கூறியிருப்பார்.
இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்:
நாம் இதுவரை மூன்று வகையான விவரங்களை (நபர்களைக்) கண்டோம்:
1)முஹம்ம்துவை அவமானப்படுத்தியதற்காக வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
2)பாதிக்கப்பட்டவருக்கு மனமுவந்துச் சென்று இரத்த தானம் செய்த இஸ்லாமியர்கள்
3)மாற்று மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வெறுப்புணர்ச்சியை தூண்டிய முஹம்மது.
இப்போது இஸ்லாம் எப்படிப்பட்டது என்று யாரைக் கொண்டு தீர்மானித்தால் சரியாக இருக்கும்?
முஹம்மதுவைக் கொண்டா? ------> இஸ்லாமை தோற்றுவித்தவர்
கைகளை வெட்டியவர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்
இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்
முஹம்மதுவைக் கொண்டே இஸ்லாம் எப்படிப்பட்டது என்று முடிவு எடுக்கவேண்டுமே ஒழிய, இரத்ததானம் செய்தவர்களைக் கொண்டு அல்ல.
அது எப்படி என்று கேட்பீர்களானால், முஹம்மது சொன்னது தவறு, அவருக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது, நாங்கள் செய்தது தான் சரியானது, அது தான் இஸ்லாம் என்று இரத்ததானம் கொடுத்தவர்கள் சொல்வார்களானால், இது எடுபடாது. அதாவது,முஹம்மதுவின் ஒவ்வொரு அசைவும் இஸ்லாம், ஒவ்வொரு வார்த்தையும் இஸ்லாம், ஒவ்வொரு மூச்சும் இஸ்லாம், முஹம்மதுவே இஸ்லாம்.
எந்த ஒரு முஸ்லிம், முஹம்மது சொன்னது தவறு என்றுச் சொல்வானோ அப்போதே அவன் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக அர்த்தம். அல்லாஹ்வையும்,அவரது தூதரையும் மதிக்காதவன் முஸ்லீமில்லை, இதை எல்லாரும் (இஸ்லாமியர்கள்) அங்கீகரிப்பார்கள்.
ஆக, இஸ்லாமியரல்லாதவர்கள், இரத்த தானம் கொடுத்தவர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்றுச் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது.
எப்போது நாம் இப்படிச் சொல்கிறோமோ, அப்போதே அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக பொருள்,முஹம்மதுவை விட நல்லவர்களாக முஸ்லீம்கள் ஆகிவிடுவார்களா? அய்யோ இது முடியாத காரியம், முஹம்மதுவை விட அவர் காட்டிய வழியை விட நல்லவழியை ஒரு இஸ்லாமியன் காட்டமுடியுமா, கற்பனைக் கூட செய்து பார்க்கமுடியாது.
அப்படியானால், கைகளை வெட்டியவர்கள் தான் இஸ்லாமை முழுவதுமாக முஹம்மது சொன்னது போல செய்தவர்களா என்று கேட்கிறீர்களா? இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு.
எந்த ஒரு குற்றமும் இழைக்காதவனுக்கே வழியை கொடுக்காதே என்று வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடுகிறார் முஹம்மது, அப்படி இருக்கும்போது, அவதூறாக எழுதியவருக்கு என்ன கதி? அதைத் தான் கேரளாவின் இஸ்லாமியர்கள் சிலர் செய்து காட்டினார்கள். தலைவன் எவ்வழியோ... தொண்டன் அவ்வழி.
அப்படியானால், இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களின் செயல்.... வெறும் ஏமாற்று வேலை... ஒரு புறம் இஸ்லாமியர்கள் வெட்டிச் சாய்ப்பார்கள்...இன்னொரு புறம் இரத்ததானம் செய்வார்கள்...
கேரளாவின் கோரச் செயலை கண்டித்த இஸ்லாமியர்கள், முஹம்மதுவின் கோரச் செயல்களை கண்டிப்பார்களா? அவரின் வாயிலிருந்து விழுந்த ஹதீஸ்களை கண்டித்து அறிக்கையிடுவார்களா?
இதை தான் "தக்கியா" என்பார்கள், அதாவது பொய் சொல்லியாவது, ஏமாற்றியாவது இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வர முயற்சிப்பது. இது தான் நடந்தேறியுள்ளது.
முடிவுரை:
இந்த நாடகத்தினால் இஸ்லாமுக்கு இரண்டு நன்மைகள்:
1) இனி யாராவது பொதுவாக கூட, மறந்தும் முஹம்மது பற்றி தவறாக எழுதாமல் இருக்க ஒரு நல்ல ஏற்பாடு (ஒருவரின் கைகளை வெட்டியது)2) அதே நேரத்தில் நாங்களும் இரத்ததானம் செய்கிறோம், அறிக்கையிடுகிறோம், இஸ்லாம் மன்னிக்கின்ற மார்க்கம் (அப்படியா..) என்று சொல்லிக்கொள்ள ஒரு ஏற்பாடு (இரத்த தானம் செய்வது)
ஒருவேளை இரத்ததானம் செய்த சகோதரர்கள், "அய்யா எங்களுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது... நாங்கள் வேதனை அடைந்து தான் இந்த தானத்தைச் செய்தோம். முஹம்மது சொன்னது போல நாங்கள் செய்யவில்லையே" என்று உண்மையாகவே வேதனை அடைந்து கூறுவார்களானால்,......அப்படிப்பட்டவர்களின் கால்களை கழுவி துடைக்க நான் கடனாளியாக இருக்கிறேன்.
முஹம்மது இஸ்லாமியர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்? கீழே உள்ள தமிழ் கட்டுரையை படிக்கவும்:
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்
முஹம்மது ஒரு தீவிரவாதியா?
முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்
முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக