2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா?
[முந்தைய எட்டு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் நாள் 1, நாள் 2, நாள் 3, நாள் 4, நாள் 5 , நாள் 6, நாள்7 & நாள் 8 ]
அன்பான தம்பிக்கு,
உன் கடிதத்திற்காக நான் கடந்த சில நாட்களாக காத்திருக்கிறேன், ஆனால், இதுவரை நீ பதில் எழுதவில்லை. உனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கின்றதா? உனக்கு நேரம் கிடைக்கும் போது சிலவரிகளை எழுதி எனக்கு மெயில் அனுப்பு.
இந்த கடிதத்தில், 10வது வழிப்பறி கொள்ளைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
ரஹீக் என்ற புத்தகத்தில் இந்த "இலைப் படை" என்றுச் சொல்லக்கூடிய வழிப்பறி பற்றி கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. முதலில் இதனை நீ படித்துக்கொள், அதன் பிறகு சில கேள்விகளை நான் உன்னிடம் கேட்கிறேன்.
ரஹீக் - பக்கம் 333:
8) "ஸயத்துல் கபத்' எனப்படும் இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடரை நாம் பார்க்கும் போது இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு சற்று முன் நடைபெற்றது என்று தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதில் கலந்து கொண்ட ஜாபிர் (ரழி) அறிவிப்பதாவது: '300 வாகன வீரர்களை அபூ உபைதாவின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து பதுங்கி இருந்தோம். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டதால் காய்ந்த இலைகளைத் தின்றோம். எனவே, இப்படைக்கு "ஜய்ஷுல் கபத்" - இலை படை- என்று பெயர் வந்தது. . . . அதற்குப் பின் கடலிலிருந்து "அம்பர்" என்ற மிகப்பெரிய மீன் ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் பதினைந்து நாட்கள் சாப்பிட்டோம். அதனுடைய கொழுப்பை எண்ணையாக பயன்படுத்தி தடவிக் கொண்டோம். அதன் மூலம் எங்களுடைய உடல்கள் நல்ல ஆரோக்கியமடைந்தன. . . . . .. . . . அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவு நாங்கள் சேகரித்து வைத்துக் கொண்டோம். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில்மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள் என்றார்கள். நாங்கள் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்று நாம் கூறியதற்குக் காரணம், முஸ்லிம்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தவொரு வியாபாரக் கூட்டத்தையும் கைப்பற்றுவதற்காக செல்லவில்லை.
இந்த நிகழ்ச்சி பற்றி புகாரி ஹதீஸ் தொகுப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(பார்க்க: பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2983,
பாகம் 4, அத்தியாயம் 64, எண்கள் 4360, 4361, 4362,
பாகம் 6, அத்தியாயம் 72, எண்கள் 5493 & 5494)
1) ஏழு ஆண்டுகள் கொள்ளையடித்தும். . . .
எங்கள் இறைத்தூதர் உலகிலேயே சிறந்தவர் என்று பெருமையடித்துக்கொள்ளும் என் அருமை தம்பியே! முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த சொத்துக்களைத் திரும்ப பெறுவதற்கு தான் அவர்கள் குறைஷிகளின் வியாபாரிகளை கொள்ளையிட்டார்கள் என்றுச் சொல்லும் என் தம்பியே!
• ஏழு ஆண்டுகள் குறைஷிகளை கொள்ளையிட்டும், போர்கள் புரிந்தும், போரின் மூலம் கிடைத்த செல்வங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுவிட்ட பிறகும், முஸ்லிம்களின் ஏழ்மை அவர்களை விட்டு போகவில்லையா?
• மதினாவிற்கு வந்த பிறகு, தொடர்ந்து வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு, போர்கள் புரிந்து, கொலைகள் செய்து, மற்றவர்களின் இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சொத்துக்கள் உங்கள் இறைத்தூதருக்கு போதவில்லையா?
• ஹிஜ்ரி எட்டாவது ஆண்டிலுமா, குறைஷிகளின் வியாபாரிகளை தாக்க உங்கள் இறைத்தூதர் முஸ்லிம்களை அனுப்பவேண்டும்? அப்படி எவ்வளவு சொத்துக்களை உங்கள் முஸ்லிம்கள் மக்காவில் விட்டு வந்தார்கள்?
• இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கண்ட அந்த பெரிய மீனை கொடுத்தது அல்லாஹ் என்று முஹம்மது கூறியுள்ளாரே! இப்படி கொள்ளையடிக்க தன் அடியார்களை அனுப்புவது அல்லாஹ்வின் வேலையா? இப்படிப்பட்ட இறைவனையா நீ வணங்குகிறாய் தம்பி?
• ஏழு ஆண்டுகளாக கொள்ளையிட்ட பிறகுமா முஸ்லிம்களின் ஏழ்மையை போக்க அல்லாஹ்வினால் முடியவில்லை? தம்பி, இந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம்களின் ஏழ்மையை காட்டவில்லை, அவர்களின் பழிவாங்கும் தன்மையையும், அதிகார துர்பிரயோகத்தையும், ஹிட்லரைப்போல சர்வாதிகாரத்தனத்தையுமே காட்டுகிறது.
இவ்வளவு விவரங்களை உனக்குச் சொல்லியும், இன்னும் நீ இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று நம்புவாயானால், உன்னை என் தம்பி என்றுச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நேர்மையையும், உண்மையையும் கடைபிடித்த நீ, இன்று இவ்வளவு பெரிய குற்றங்களுக்கு வக்காளத்து வாங்குவதைக் கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு
உன் பதிலுக்காக காத்திருக்கும் உன் அண்ணன்,
உமர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக