அன்புள்ள தம்பிக்கு,
உன் மீது தேவனின் கிருபையும் சாந்தியும் உண்டாவதாக.
என் முந்தைய கடிதத்தில், நீ கேட்ட முதல் கேள்விக்கு பதில் அளித்தேன். இந்த கடிதத்தில், உன்னுடைய இரண்டாவது கேள்விக்கு என் பதிலைத் தருகிறேன்.
நீ கேட்ட முதல் கேள்வி & அதற்கான பதில் (தொடுப்பு): ஃபாத்திமா தனக்கு வரவேண்டிய சொத்துக்களை அபூ பக்கரிடம் கேட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை.
நீ கேட்ட இரண்டாவது கேள்வி: ஃபாத்திமாவிற்கு வரவேண்டிய சொத்துக்களை அலி அவர்கள் குர்-ஆனிலிருந்து உதாரணங்களை மேற்கோள் காட்டி கேட்டாலும், அபூ பக்கர் அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், அலி அவர்கள் கோபம் கொண்டதில் நியாயம் இருக்கிறதல்லவா?
தம்பி, உன் இரண்டாவது கேள்வியில் அனேக பிரச்சனைகள் உள்ளன. நீ இரண்டு வரிகளில் சுலபமாக கேள்விய கேட்டுவிட்டாய், இதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தை நீ கணக்கு போடவில்லை. அலியின் தவறான செயலை நியாயப்படுத்துவதற்கு நீ முயற்சி எடுத்தாய், ஆனால், அது எப்படி உன் இறைத்தூதர் முஹம்மதுவையும் தாக்கும் என்பதை இந்த கடிதத்தில் அறிந்துக் கொள்வாய்.
இஸ்லாம் பற்றி எவ்வளவுக்கு அதிகமாக ஒருவன் அறிந்துக் கொள்கிறேனோ, அவ்வளவுக்கு அதிகமாக இஸ்லாம் சிக்கலானது என்றும், பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு இஸ்லாம் பதில் அளிப்பதில்லை என்பதையும் அறிந்துக் கொள்வான். இங்கு முஸ்லிம்கள் மனப்பாடம் செய்யும் ஸூராக்களைப் பற்றியோ, இதர மத சடங்காச்சாரங்களையோ நான் சொல்லவில்லை, இஸ்லாமிய மூல நூல்களிலிருந்து இஸ்லாமை அறிய அறிய முஸ்லிம்களுக்கு பிரச்சனைத் தான். அந்த நிலையில் இப்போது நீ இருக்கிறாய். இஸ்லாம் தன் ஆரம்பகால சீடர்களையும் நல்லவர்களாக மற்றவில்லை என்பதை அறியும் போது, உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.
தம்பி, என் முந்தைய கடிதங்களில், புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து அதிகமாக மேற்கோள் காட்டினேன், இப்போது உனக்கு "கிதாப் அல்தபாகத் அல்கதீர்" என்ற புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை காட்டி தொடருகிறேன்.
முஹம்மது மரித்த அடுத்த நாள், மகளும் மருமகன் அலியும் அபூ பக்கரிடம் பேசுகிறார்கள். அலி அவர்கள் பேசுவதை சரியாக கவனித்துப் பார் தம்பி.
கிதாப் அல் தபாகத் அல் கதீர் – பக்கம் 393 ("Kitab al-Tabaqat al-Kabir, (Book of the Major Classes), Volume 2, by Ibn Sa'd, pages 393)
பாத்திமா அபூ பக்கர் அவர்களிடம் வந்து தன் தந்தை விட்டுச் சென்ற சொத்தில் தனக்கு இருக்கும் பங்கை கொடுக்குமாறு கோரினார்கள். அல்- அப்பாஸ் கூடஅபூ பக்கர் அவர்களிடம் வந்து சொத்தில் தனக்கிருக்கும் பங்கை கொடுத்து விடும் படி கோரினார். அலியும் அவர்களோடு வந்திருந்தார். அப்பொழுது அபூ பக்கர்: "நாம் பரம்பரை சொத்துக்களை விட்டுச் செல்வதில்லை, நாம் சதகாஹ் என்றுச் சொல்லக்கூடிய தானதர்மத்தை மட்டுமே விட்டுச்செல்கிறோம்" என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார். யாருக்கு நபியவர்கள் பராமரிப்பு செலவுகளைச் செய்யச்சொன்னார்களோ, அவர்களுக்குதான் நான் பராமரிப்புகளை ஏற்படுத்துவேன்" என்று பதில் அளித்தார். இதற்கு அலி கூறினார், "சுலைமான் (சாலமோன்) தாவூத்தின் சொத்துக்களை பெற்றுக்கொண்டார், மேலும் சகரியா கூறினார், அவன் என்னுடை வாரிசாகவும், யாக்கோபுடைய பிள்ளைகளின் வாரிசாகவும் (சகரியாவும் யோவான் ஸ்நானனும்) இருப்பார்" என கூறினார். இதற்கு அபூ பக்கர் அவர்கள், "அல்லாஹ்வினால், இது இருப்பதைப் போன்றே இருக்கிறது, நான் அறிந்திருக்கிறது போலவே நீயும் அறிந்திருக்கிறாய்" என்று அலி அவர்களிடம் கூறினார். அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான் பேசுகின்றது" என கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும் கலைந்து சென்றுவிட்டார்கள். (பக்கம் 393)
Fatimah came to Abu Bakr and demanded her share in the inheritance. Al-Abbas came to him and demanded his share in the inheritance. Ali came with them. Thereupon Abu Bakr said, "The Apostle of Allah said, "We leave no inheritance, what we leave behind us is sadaqah." I shall make provisions for those for whom the Prophet had made." On this Ali said, "Sulayman (Solomon) inherited Dawud (David), and Zakariya said, 'He may be my heir and the heir of the children of Yaqab (Zachariah and John the Baptist)'". Abu Bakr said, "This is as this is. By Allah! You know it as I know." Thereupon Ali said, "This is the Book of Allah that speaks." Then they became quiet and retired. (page 393).
இந்த விவரங்கள் நமக்கு மூன்று முக்கியமான விஷயங்களைச் சொல்கிறது.
முதலாவதாக, ஃபாத்திமாவும், அலியும் தங்களுக்கு வரவேண்டிய சொத்துக்களை கேட்கும் போது, முஹம்மது "தன் சொத்துக்கள், தன் குடும்பத்துக்குச் சேரக்கூடாது" என்று சொன்னார் என்று அபூ பக்கர் கூறுகின்றார். இதனை இன்றுள்ள முஸ்லிம்கள் "ஹதீஸ்" என்றுச் சொல்வார்கள். இதுவும் அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு வகையான வஹீ தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். தம்பி, நன்றாக கவனி, இது ஒரு ஹதீஸ்.
இரண்டாவதாக, அலி குர்-ஆனிலிருந்து சில நபிகளின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து இரண்டு உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார். அதாவது தாவூத் என்ற அரசருக்கு அடுத்த வாரிசாக, அவரின் மகன் சுலைமான் வந்தார். தன் தந்தையின் சொத்துக்களையும், பதவியையும் சுலைமான் பெற்றார். அதே போல, ஜகரியா என்ற நபியின் வாரிசாக யஹ்யா தொடர்ந்தார். தம்பி, நம் கிறிஸ்தவ முறைப்படிச் சொல்லவேண்டுமென்றால், பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு உதாரணத்தையும், புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு உதாரணத்தையும் அலி அபூ பக்கரிடம் கூறினார்.
இந்த நபிகள் பற்றி குர்-ஆனிலும், முஹம்மது மூலமாகவும் அதிகமாக அலி கேட்டு இருக்கிறார், இதனை அபூ பக்கரும் அறிவார்.
இதில் ஒரு தர்ம சங்கடம் என்னவென்றால், "அலியின் வார்த்தைகளின் படி, குர்-ஆனில் இப்படி சொல்லியிருக்கிறது, ஆனால், முஹம்மது வேறு மாதிரியாக குர்-ஆனுக்கு எதிராகச் சொல்லியுள்ளார். "நபிகளின் சொத்துக்களை தங்கள் வாரிசுகள் பெற்றுக்கொள்ளக்கூடாது" என்று முஹம்மது சொன்னது தவறானது, அதாவது முஹம்மதுவின் ஹதீஸ் அல்லாஹ்வின் குர்-ஆனோடு மோதுகின்றது. அலியாகிய நான் குர்-ஆனிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றேன், அபூ பக்கராகிய நீங்களோ ஹதீஸைச் சொல்கிறீர்கள். எதற்கு முன்னுரைமைத் தரவேண்டும்? குர்-ஆனுக்கா அல்லது ஹதீஸுக்கா?
இதன் சுருக்கம் என்னவென்றால், குர்-ஆன் பற்றிய அறிவு முஹம்மதுவிற்கு குறைவு, குர்-ஆனில் சொல்லப்பட்டதை அறிந்துக்கொள்ளாமல், நடந்துவிட்ட இதர நபிமார்களின் சரித்திரத்தை அறிந்துக் கொள்ளாமல், என் மாமனார் முஹம்மது சொன்னது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எனவே, எங்கள் சொத்தை திருப்பித் தாருங்கள் என்று அலி கேட்கிறார்.
அலி கடைசியாகச் சொன்ன வாசகத்தை, தம்பி இன்னொரு முறை படி, நான் சொல்வது படித்தான் "குர்-ஆன்" சொல்கிறது என்று அடித்துச் சொல்கிறார் அலி. அலி குர்-ஆன் பற்றி சொன்னவுடன், மேற்கொண்டு அபூ பக்கர் ஒன்றுமே பேசவில்லை.
அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான் பேசுகின்றது" என கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும் கலைந்து சென்றுவிட்டார்கள். (பக்கம் 393)
Thereupon Ali said, "This is the Book of Allah that speaks." Then they became quiet and retired. (page 393).
மூன்றாவதாக, இஸ்லாமிய கோட்பாடுகள் மக்களை இறைவனுக்கு ஏற்ற மக்களாக மாற்றியிருந்திருந்தால், அலியும் ஃபாத்திமாவும் ஆறு மாதங்கள் கசப்பை தங்கள் உள்ளத்தில் வைத்திருக்கமாட்டார்கள்.
தம்பி, மேற்கண்ட இஸ்லாமிய விவரங்களை பார்க்கும்போது, அனேக கேள்விகளை உன்னிடம் கேட்கத்தோன்றுகிறது.
1) அலிக்கு பதவி ஆசை இதயத்தில் ஆழமாக பதிந்து இருந்திருக்கின்றது.
2) முஹம்மதுவிற்கு அடுத்து கலிஃபா பதவி தனக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
3) பதவி தான் கிடைக்கவில்லை, சொத்துக்களாவது கிடைக்கும் என்று விரும்பினார், ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.
4) ஒரு ஆன்மீகத் தலைவரின் மருமகன், சொர்க்கத்திற்கு கட்டாயமாகச் செல்பவர்கள் 10 பேர் என்று முஹம்மது சொன்னதாக சொல்லப்படுகின்றது, அதில் அலியும் ஒரு நபர்.
5) இப்படி தனக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பதை முஹம்மது மூலமாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு இருக்கும் போது, உலக செல்வத்துக்காக, முஹம்மதுவின் ஸ்தானத்தில் இருக்கும் அபூ பக்கரிடம் கோபம் கொண்டு இருப்பது, அவருக்குதன் ஆதரவை தராமல் ஆறு மாதங்கள் கடத்துவது என்பது அலி போன்ற நிலையில் இருக்கும் நபருக்கு தகாது.
6) பணமா குணமா என்று கேட்டால், பணம் தான் என்று அலி முடிவெடுத்தார். முஹம்மதுவின் மகளும் தன் கணவரின் வழியிலேயேச் சென்றார்கள்.
7) இஸ்லாம் சந்தித்த இன்னொரு தோல்வி, அலி மூலமாக வந்தது என்று நான் கூறுவேன்.
8) ஃபாத்திமா தவறு செய்யும் போது, அவர்களுக்கு அறிவுரைச் சொல்லி, "நாம் கலிஃபா அபூ பக்கரிடம் இப்படி நடந்துக்கொள்ளக்கூடாது, அவருக்கு உதவி செய்யவேண்டும், அவரோடு நட்புறவோடு இருக்கவேண்டும், இறைத்தூதர் நமக்கு எப்படியோ, அப்படியே இவரும் இருக்கிறார்" என்றுச் சொல்லி, ஃபாத்திமாவை சமாதானப்படுத்தியிருக்கவேண்டும். உன் அப்பா சம்பாதித்த பணம் நமக்கு முக்கியமல்ல, அவர் மூலமாக வந்த இஸ்லாம் தான் முக்கியம் என்றுச் சொல்லியிருக்கவேண்டும்.
9) அல்லது அலியை ஃபாத்திமா சமாதானப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், இவ்விருவரையும் சரியான வழிக்கு கொண்டுவர இஸ்லாம் தவறிவிட்டது. 23 ஆண்டுகள் முஹம்மது என்னத்தைக் கற்றுக்கொடுத்தார் இவர்களுக்கு? தன் சொந்த மகள் இப்படி அபூ பக்கரிடம் நடந்துக் கொண்டதை முஹம்மது அறிந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?
10) கபட்டுத் தனமாக வாழ்வதை இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. மாய்மாலமான வாழ்க்கையை வாழ இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. முழூ இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்பு கூறவேண்டும் என்ற கோட்பாடுகள் இவர்களுக்கு அந்நிய கிரகத்தின் கோட்பாடுகளாக தென்பட்டுள்ளது.
தம்பி, அலியிடமோ, அல்லது ஃபாத்திமா அவர்களிடமோ, இறைவன் எதிர்ப்பர்க்கும் 100% நேர்மை, பரிசுத்தம் போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் நல்ல குணத்தைத் தான் மக்கள் எதிர்ப்பார்ப்பார்கள், ஏனென்றால்,அவர்கள் ஆரம்பகால முஸ்லிம்கள், முஹம்மதுவின் குடும்பத்தார். அப்பா செத்த மறுநாளே மகள் சொத்துக்களுக்காக சண்டைபோடுவார்கள் என்றால், அவர்களின் குணம் எப்படிப்பட்டது என்றும், எதன் மீது அவர்களின் மனம் இத்தனை ஆண்டுகள் இருந்தது என்று புரிகின்றதல்லவா?
தம்பி, உனக்கு புரியும் மொழியில் சொல்லவேண்டுமென்றால், காஃபிர்களிலும் இப்படிப்பட்ட செயல்களைக் காணமுடியாது, ஒரு வேளை சிலரிடம் கண்டாலும், இஸ்லாமிய இறைத்தூதரின் மகள் மற்றும் மருமகனின் வாழ்க்கையில் காணப்படக்கூடாது. அந்தோ பரிதாபம்! இஸ்லாம் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்துக்கொண்டே இருக்கிறது "மனிதர்களின் மனங்களில்".
தம்பி இன்னும் அலி பற்றிய இதர விவரங்களை அடுத்தடுத்த கடிதங்களில் உனக்கு எழுதி அனுப்புகிறேன்.
இஸ்லாம் தன் ஆரம்ப கால முக்கியமான நபர்களையும் திருத்த திராணியில்லாமல் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இதுவரை, ஃபாத்திமா, அலியை பற்றி சுருக்கமாக பார்த்துள்ளோம், இன்னும் ஆயிஷா, அபூ பக்கர், உமர் மற்றும் உஸ்மான் பற்றியும், நாம் அலசுவோம்.
தம்பி, உன் கேள்விகளை கேள், திருப்தியாக கேள். நீயும் இஸ்லாமிய ஆரம்பகால நிகழ்ச்சிகளை நன்றாக ஆய்வு செய். உன்னிடம் நேர்மையிருந்தால், கிறிஸ்தவத்தின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளை இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப்பார்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக