இந்த கட்டுரையில் ஜிஹாதின் வழியில் நடந்த சிலுவைப்போர் பற்றிய சின்னஞ்சிறு கேள்வி பதில்களைக் காண்போம். இது தான் இந்த தொடரின் கடைசிக் கட்டுரை. யாராவது இதைப் பற்றி மேலதிக விவரங்கள் கேட்டால் அப்போது அதைப் பற்றி எழுதலாம்.
முந்தையக் கட்டுரைகளை படிக்க:
- ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு
- சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? - பாகம் 2
- முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3
- முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)
- சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் (பாகம் 5)
சின்னஞ்சிறு 25 கேள்வி பதில்கள்
1. ஏன் கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர்களை தொடங்கினார்கள்?
முஹம்மதுவின் மரணம் தொடங்கி (கி.பி. 632) முஸ்லிம்கள், கிறிஸ்தவ நாடுகளை போர் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டு வந்தார்கள். எருசலேமில் உள்ள தங்கள் புனித ஸ்தலங்களைக் காண கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனித பயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள். இப்படி பயணம் செய்பவர்களை முஸ்லிம்கள் தாக்கினார்கள், அதிக தொல்லைகளை கொடுத்தார்கள். எருசலேம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. மேலும் பைசாந்திய கிறிஸ்தவ நாட்டு அரசரும் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபட தங்களுக்கு உதவி செய்யும் படி போப்பை கேட்டுக்கொண்டார். எருசலேமை முஸ்லிம்களின் கைகளிலிருந்து கைப்பற்ற போப் அர்பன் II முடிவு செய்தார். முஹம்மதுவிற்கு 450+ ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் எருசலேமை கைப்பற்ற தொடுத்த போர்கள் தான் சிலுவைப்போர்கள்.
2. ஒருவரியில் பதில் சொல்லுங்கள் - சிலுவைப்போர்கள் பைபிளுக்கு எதிரானதா?
ஆம், சிலுவைப்போர்கள் பைபிளுக்கு எதிரான செயலாகும்.
3. ரோமன் கத்தோலிக்கர்கள் சிலுவைப்போர்களை ஆதரிக்கிறார்களா?
முன்னாள் போப் ஜான் பால் II, 1204ம் ஆண்டு நடந்த சிலுவைப்போர்களுக்காக ஈஸ்டன் திருச்சபை பிரதிநிதியிடம் மன்னிப்பு கோரியிருக்கின்றார் (பார்க்க: en.wikipedia.org/wiki/List_of_apologies_made_by_Pope_John_Paul_II)
4. முன்னாள் போப் ஜான் பால் II, சிலுவைப்போர்களை திருச்சபை புரிந்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரினார் என்பது உண்மையா?
இல்லை, முஸ்லிம்களிடம் அவர் மன்னிப்பு கோரவில்லை. முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை.
5. இன்றைய கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர்களுக்காக மன்னிப்பு கோருவார்களா?
யாரிடம்?
கடந்த காலத்தில் திருச்சபை செய்த தவறுக்காக யூதர்களிடம் மன்னிப்பு கோரலாம், மற்ற மக்களிடம் மன்னிப்பு கோரலாம், ஆனால் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரமுடியாது, கோரக்கூடாது. ஏனென்றால், முஸ்லிம்கள் மற்ற நாடுகள் மீது வலியச் சென்று போர் புரிந்து, கொள்ளையிட்டு வன்முறையில் ஈடுபட்டதால், திருச்சபை 450 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு எதிரடி கொடுத்தது, அதுவும் எருசலேமை அவர்களிடமிருந்து மீட்க. எனவே, சிலுவைப் போர்களுக்காக இன்றைய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் மட்டும் மன்னிப்பு கோரக்கூடாது.
இது எப்படி உள்ளதென்றால், இந்திய சுதந்திர போராட்டத்தினால் ஆங்கிலேயர்கள் விரட்டி அடிக்கப்பட்டதால், இன்று 'பிரிட்டீஷ்காரர்களிடம் இந்தியர்கள் மன்னிப்பு கோரவேண்டும்' என்றுச் சொன்னால், அது வேடிக்கையாக இருக்குமல்லவா?
அது போலத்தான், முஸ்லிம்களிடம் கிறிஸ்தவர்கள் மன்னிப்பு கேட்கமுடியாது.
6. முஹம்மதுவும் முஸ்லிம்களும் செய்த கொடுமைகளுக்கு இன்று முஸ்லிம்கள் மன்னிப்பு கோரவேண்டுமா?
நிச்சயம் கோரவேண்டும்.
முஸ்லிம்களுக்கு சரித்திரம் தெரிந்திருந்தால், அவர்கள் இஸ்லாமிய சரித்திரத்தை படித்து புரிந்துக்கொண்டு இருந்தால், முஸ்லிம்களுக்கு அன்புள்ளமிருந்தால், அவர்கள் நேர்மையானவர்களாக தங்களை கருதினால், முஹம்மதுவும், கலீஃபாக்களும் செய்த கொடுமைகளுக்காக உலக மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
7. முஸ்லிம்கள் தான் சிலுவைப்போருக்கு காரணம் என்பது சரியான கூற்றாக இருக்கமுடியுமா?
சிலுவைப்போர்களுக்கு 100% முஸ்லிம்களின் ஆட்சி மோகம் தான் காரணம், இஸ்லாம் தான் காரணம்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கும், அதனால் நமக்கு உண்டான உயிர்ச்சேதத்திற்கும், இழப்புகளுக்கும் ஆங்கிலேயர்கள் காரணம் என்றுச் சொன்னால், அது பொய்யாகுமா?
முதலாவது முஸ்லிம்கள் வலியச் சென்று நாடுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டு வந்ததால் தான் காலதாமதமாக (450+ ஆண்டுகளுக்கு பிறகு) கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர் புரிந்தார்கள், அதுவும் ஒரு பட்டணத்திற்காக மட்டுமே. முஸ்லிம்கள் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த தங்கள் நாடுகளை மீட்க சிலுவைப்போர்கள் தொடங்கப்படவில்லை.
8. கிறிஸ்தவ புனித ஸ்தலங்களை முஸ்லிம்களிடமிருந்து (மற்றவர்களிடமிருந்து) மீட்கும் படி பைபிள் சொல்கின்றதா?
இல்லை, நிச்சயமாகச் சொல்லவில்லை.
யூதர்களுக்கும் அது கட்டளையில்லை, கிறிஸ்தவர்களுக்கும் கட்டளையில்லை.
யூதர்களுக்கு எருசலேம் அட்டாச்மெண்ட் உண்டு, கிறிஸ்தவர்களுக்கும் உண்டு, ஆனால் சண்டைப்போட்டு பூமியை மீட்டுக்கொள்ள வேண்டிய அளவிற்கு அட்டாச்மெண்ட் கிறிஸ்தவர்களுக்கு இல்லை, கட்டளையும் இல்லை.
9. எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன?
கி.பி. 1095/96 லிருந்து கி.பி. 1272ம் ஆண்டு வரை 8 அல்லது 9 நடந்தது. அதன் பிறகு நடந்தவை எருசலேமுக்காக அல்ல, அவைகளுக்கு வேறு காரணங்கள் உள்ளன.
10. ஏன் ஒவ்வொரு சிலுவைப்போருக்கும் இடையே பல ஆண்டுகள் இடைவெளி உள்ளது? உதாரணத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் சிலுவைப்போருக்கு இடையே 48 ஆண்டுகள் இருப்பது ஏன்?
சிலுவைப்போர்களின் நோக்கம் நாடுகளை பிடிப்பதாக இருந்திருந்தால், எருசலேமை பிடித்தவுடன் பக்கத்து நாடுகள் மீது போர் தொடுத்து இருந்திருப்பார்கள்.
எருசலேமை கைப்பற்றியவுடன், பாதுகாப்பிற்காக 300 போர் வீரர்களையும்(Knight), 2000 காலாட்படை வீரர்களையும் எருசலேமில் விட்டுவிட்டு, மற்றவர்கள் தங்கள் ஊர்களுக்கு (ஐரோப்பா) சென்றுவிட்டனர். அதன் பிறகு எருசலேமுக்கு புனிதப்பயணம் தொடர்ந்து தடையில்லாமல் நடந்தது. மறுபடியும் முஸ்லிம்கள் எருசலேமை பிடிக்க வந்த போது இரண்டாம் போர் தொடங்கியது. முதல் மற்றும் இரண்டாம் சிலுவைப்போர்களுக்கு இடையே 48 ஆண்டுகள் இருப்பதற்கும், இதே போல மற்ற போர்களுக்கும் இடையே இப்படியே பல ஆண்டுகள் இடைவெளி இருப்பதற்கும் இதுவே காரணம்.
முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் 95 வன்முறைகளில், போர்களில் ஈடுபட்டார். தன் ஆட்சி மோகத்தினால் முழு அரேபியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். முஹம்மதுவிற்கு பிறகு 50 ஆண்டுகளில் கலீஃபாக்கள் பெரும்பான்மையான மத்திய கிழக்கு நாடுகளை பிடித்துக்கொண்டார்கள்.
இதன் மூலம் அறிவதென்ன? மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை யாருக்கு இருப்பதாக அறியமுடிகின்றது? முஹம்மதுவிற்கும் முஸ்லிம்களுக்குமா? அல்லது சிலுவைப்போர் வீரர்களுக்கா?
11. மொத்தத்தில் சிலுவைப்போரினால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
சிலுவைப்போர்களினால் கிறிஸ்தவ உலகிற்கு மிகப்பெரிய இழப்பு உண்டானது. ஒரு கணக்கின் படி, 80% சதவிகிதத்திற்கும் அதிகமாக சிலுவைப்போர் வீரர்கள் மரித்திருக்கிறார்கள். இரண்டாம் சிலுவைப்போர்களிலிருந்து எட்டாம் சிலுவைப்போர்கள் வரை அனைத்தும் பெரும் உயிர் நஷ்டத்தில் முடிந்தது, பல தோல்விகளும், இழப்புக்களும் தான் மிஞ்சியது.
முதல் சிலுவைப்போருக்கு பிறகு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் எருசலேம் கிறிஸ்தவர்களிடம் இருந்தது, அதன் பிறகு மறுபடியும் முஸ்லிம்கள் ஆக்கிரமித்தார்கள். அடுத்தடுத்த வந்த போர்களும் தோல்வியில் முடிந்தது, மறுபடியும் சில ஆண்டுகள் கிறிஸ்தவர்களிடம் வந்தது, கடைசியாக முஸ்லிம்களின் கைகளுக்கே அது திரும்பியது.
உலகத்திற்கு நன்மை என்றுச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்களின் அதிவேக ஆக்கிரமிப்புக்களுக்கு சிலுவைப்போர்கள் தடை போட்டது, அதனால் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கள் கொஞ்சம் வேகம் குறைந்தது.
12. பிள்ளைகள் சிலுவைப்போர் (Children Crusade) என்றால் என்ன?
முதல் சிலுவைப்போருக்கு பிறகு முஸ்லிம்கள் மறுபடியும் எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்ட போது, பிரான்ஸில் சிறுவர்களின் ஒரு குழு தாங்கள் எருசலேமை மீட்க புறப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் போகின்ற வழியிலேயே பனியினாலும் பட்டினியினாலும் மாட்டிக்கொண்டு, அனேகர் மரித்துவிட்டதாகவும், மற்றவர்கள் திரும்பி வந்து ஊர் சேர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
13. முஸ்லிம்களிடம் பழிக்கு பழி வாங்கியதாக சிலுவைப்போர்களை கருதலாமா?
பழிக்கு பழி அல்ல, தங்கள் புனித ஸ்தலங்களை மீட்டு, அங்கு புனிதப் பயணங்களை பயமில்லாமல் தொடர எடுக்கப்பட்டதே சிலுவைப்போர்கள். பழிக்குபழி வாங்கவேண்டும்னெறால் ஏன் அவர்கள் முஸ்லிம்களின் நாடுகளை தொடர்ந்து பிடித்து தங்கள் ஆட்சியை நிறுவவில்லை?
14. முஸ்லிம்களின் நாடுகளை சிலுவைப்போராளிகள் ஆக்கிரமித்தார்களா?
இல்லை, இது தவறு.
எருசலேமை பிடிக்கச் சென்ற போது கூட சிலுவைப்போராளிகள் அனைத்து முஸ்லிம் நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியை அமைக்க வில்லை. அப்படி அமைத்து இருந்திருந்தால் மறுபடியும் முஸ்லிம் நாடுகள் எழும்பி எருசலேமை பிடித்திருக்க மாட்டார்கள். அன்று கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தெரியாது மற்றும் போர் யுக்தி தெரியாமல் போனது தான் எருசலேம் மறுபடியும் இழந்ததற்கு காரணம்.
15. முஹம்மதுவின் மரணம் முதல் சிலுவைப்போர்கள் தொடங்கும் வரை 500க்கும் அதிகமான போர்களை முஸ்லிம்கள் புரிந்தார்கள் என்பது உண்மையா?
ஆம், இந்த வீடியோவை மற்றும் கட்டுரையைப் பார்க்கவும்:
மூலம்: Jihad vs Crusades - Bill Warner, PhD - www.politicalislam.com/jihad-vs-crusades/
16. சிலுவைப்போராளிகள் புனித நகரத்தை மீட்டுக்கொள்வதைத் தவிர வேறு எந்த ஒரு தீமையும் செய்யவில்லையா?
சிலுவைப்போர்களின் நோக்கம் வெறும் எருசலேமை மீட்பதாக இருந்தது. ஆனால் வழியில் சில இராணுவகுழுக்கள், யூதர்களையும், மற்ற கிறிஸ்தவர்களையும் கொன்று, அவர்களின் ஊர்களையும் கொள்ளையிட்டனர். இதனை சிலுவைப்போரை துவக்கிய போப்மார்கள் வன்மையாக கண்டித்தனர். சிலுவைப்போராளிகள் பல தீய காரியங்களை செய்தது உண்மை தான்.
17. ஒருவேளை முஹம்மதுவும், கலீஃபாக்களும் மற்ற நாடுகளை அநியாயமாக ஆக்கிரமிப்பதை தவிர்த்து இருந்திருந்தால், சிலுவைப்போர்கள் நடந்திருக்காதா?
நிச்சயமாக தவிர்க்கப்பட்டு இருந்திருக்கும்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்ததால் தானே, நாம் சுதந்திர போராட்டத்தில் இறங்கினோம், பல கொடுமைகளை இந்திய மக்கள் சந்தித்தார்கள். ஆங்கிலேயர்கள் வராமல் இருந்திருந்தால், முஹம்மதுவும் கலீஃபாக்களும் அமைதியாக இஸ்லாமிய தாவா செய்திருந்தால், இவைகள் நடந்திருக்குமா?
சரி, அமைதியாக இஸ்லாமை பரப்பவேண்டுமென்று குர்ஆன் சொன்னால் தானே!
18. கிறிஸ்தவர்களின் புனித நகரம் எருசலேமா?
கிறிஸ்தவர்களுக்கு ஒரு புனித நகரம் உண்டு என்று பைபிள் கட்டளையிடவில்லை. எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித நகரம் என்று இயேசுவும் சொல்லவில்லை.
ஒரு குறிப்பிட்ட நாடு, ஒரு குறிப்பிட்ட நகரம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமில்லை, எனென்றால் இயேசுவின் நற்செய்தி உலக மக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். மேலும் புனித நகரம் என்ற ஒன்றை கட்டளையிட்டுவிட்டால், அதனால் பல பிரச்சனைகள் வரும் என்று இயேசுவிற்குத் தெரியும், எனவே, அதனை கட்டளையிடவில்லை.
யூதர்களுக்காக எருசலேம் புனித நகரமாக மேசியா வரும் வரை கட்டளையிடப்பட்டு இருந்தது. ஆனால், மேசியாவாகிய இயேசு வந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தேவாலயம், ஒரு குறிப்பிட்ட நகரம் என்று இல்லாமல், உலகமெங்கிலும் அவரை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். இதனை புரிந்துக்கொள்ளாததினால் தான் அதாவது மேசியாவை யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததினால் தான் மத்திய கிழக்கு பகுதியில் இன்றுவரை போர்கள் சண்டைகள் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த சண்டைகளுக்கு இன்னொரு காரணம், முஸ்லிம்களும் எருசலேமை தங்களின் மூன்றாம் புனித நகரமாக கருதியது தான்.
கிறிஸ்தவர்களுக்கு புனிதர் இயேசு உண்டு, புனித நகரம் இல்லை. ஆனால், இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பிறகு, யாருமே எருசலேமை சொந்தம் கொண்டாடமுடியாத காலத்தில் நமக்கு அது புனித நகரமாக மாறும். அதுவரை கிறிஸ்தவர்கள் எந்த நகரையும் புனித நகரமாக கருதவேண்டியதில்லை.
19. இயேசு புனிதப்பயணம் செய்யும் படி கட்டளையிட்டுள்ளாரா?
இல்லை, இயேசுவோ, பைபிளோ கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடவில்லை.
வசதி படைத்தவர்கள் எருசலேமை ஒரு சுற்றுலா பயணம் போன்று சென்று பார்த்துவிட்டு வரலாம். இயேசுவும், அப்போஸ்தலர்களும், இதர பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் வாழ்ந்த இடம் என்பதால் ஒரு சுற்றுலா சென்று வருவதில் தவறில்லை. கிறிஸ்தவர்கள் எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபம் செய்யவேண்டும், சொந்தம் கொண்டாடத்தேவையில்லை.
20. கிறிஸ்தவ திருச்சபை அரசியலில் ஈடுபடலாமா?
ஆன்மீகத்தையும், அரசியலையும் ஒன்றாக வைப்பது தவறு. இயேசுவின் படி திருச்சபையும் அரசாங்கமும் தனித்தனியாக இருப்பது தான் சரியாது.
21. சமுதயாத்திற்கு நன்மை உண்டாகும்படி, கிறிஸ்தவ ஊழியர்கள் அரசியலில் குதிக்கலாமா?
குதிக்கட்டும், அதற்கு முன்பாக தங்களுடைய ஊழிய பணியை இராஜினாமா செய்யட்டும். அதாவது ஒரு சபை போதகர் "நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) அல்லது பாராளுமன்ற உறுப்பினருக்காக (MP) நிற்கப்போகிறேன்" என்று சொல்வாரானால், அவர் தன் போதகர்/சுவிசேஷகர் பணியை விட்டு வரட்டும். கர்த்தருடைய ஊழியத்தையும், அரசியலையும் ஒரே நேரத்தில் செய்வது, சபைக்கும் நன்மையில்லை, நாட்டுக்கும் நன்மையில்லை. சபையின் சாட்சி கெட இது வழி வகுக்கும்.
சிலுவைப்போர்களின் தொடக்கத்திற்கு ஒரு முக்கியமான காரியம், ஆன்மீகத்தில் உள்ள போப்மார்கள் அரசு செய்யவேண்டிய வேலையைச் செய்ய முயன்றது தான்.
அரசன் தன் வேலையைச் செய்யவேண்டும், ஆசாரியன் தன் வேலையைச் செய்யவேண்டும், இவை இரண்டையும் ஒன்று சேர்க்கக்கூடாது.
22. கிறிஸ்தவர்கள் இராணுவத்தில் சேர்ந்து போர்களில் சண்டையிடுவதை இயேசு அங்கீகரிப்பாரா?
இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக தன் உயிரைக் கொடுப்பதும், போர்க்களத்தில் சண்டையிட்டு எதிர்களை வீழ்த்துவதும் பைபிளின் படி, இயேசுவின் படி ஏற்றுக்கொள்ளப்பட்டதே.
ஒரு கிறிஸ்தவன் ஒரு நல்ல குடிமகன் என்பதை மறக்க வேண்டாம். திடீரென்று நம் இந்தியாவின் மீது போர் தொடுக்க யாராவது வந்தால், நம் இராணுவத்தில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்ற தேவை வந்தால், நிச்சயம் நாம் இராணுவத்தில் சேர்ந்து போரிடவேண்டும்.
23. தேர்தல் சமயங்களில் சில திருச்சபைகள் எந்த நபருக்கு ஓட்டு போடவேண்டுமென்று தங்கள் சபை அங்கத்தினர்களுக்குச் சொல்கிறதே, இது சரியா?
ஓட்டு உரிமை என்பது மிகவும் முக்கியமான உரிமையாகும். நம்மை ஆள நாம் ஒரு நபரை தெரிவு செய்யும் போது, தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். திருச்சபைகள் தங்கள் அங்கத்தினர்களிடம் யாருக்கு ஓட்டு போடவேண்டும்? ஏன் போடவேண்டும்? போன்றவற்றை விளக்கவேண்டும், மற்றும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொண்டுவரவேண்டியது சபையின் கடமையாகும்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்துக்கொண்டு, அந்த கட்சி சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லையென்றாலும், அதற்கே ஓட்டு போடவேண்டும் என்று சபை சொல்லக்கூடாது. வேறுவகையில் சொல்வதானால் சபை அரசியல் செய்யக்கூடாது.
24. கிறிஸ்தவ சபை சரித்திரத்தில் சிலுவைப்போர்கள் ஒரு இருண்ட காலம் என்றுச் சொல்வது சரியா?
இயேசுவின் தியாகபலியின் மீது கட்டப்பட்ட சபை, அவரது கட்டளைகள் அஸ்திபாரங்களாக வைத்திருக்கும் சபை, அவரது கட்டளைகளை மீறியது சபையின் இருண்டகாலம் தானே!
25. சிலுவைப்போர்கள் தவறு என்று நீங்கள் சொல்வதினால், கத்தோலிக்க சபையினர் துக்கமடைவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
ரோமன் கத்தோலிக்கர்களின் போப், சிலுவைப்போர்களுக்காகவும், தங்கள் சபையின் இதர தவறுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டு இருப்பதால், கத்தோலிக்கர்களின் மனது இதனால் துக்கப்படுமா?
கடந்த கால சரித்திரத்தை யாரும் மாற்றமுடியாது. அதனைப் படித்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தவறுகளை சரி செய்துக்கொள்வது தான் அறிவுடமையாகும். தவறுகளை நியாயப்படுத்த விரும்பினால், அதே தவறுகளை எதிர்காலத்தில் மக்கள் செய்ய வழி வகுக்கும். எனவே தவறு என்றால் தவறு தான் என்று ஒப்புக்கொண்டு சத்தியத்தை நோக்கி பயணிப்பது தான் சரியானது.
தேதி: 26th Jan 2020
ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/crusades/crusades-6.html