ஆசிரியர்: தீமோத்தேயு ஆபிரகாம்
என் நண்பரின் பெயர் முஹம்மத் ஆகும். இவர் "அறியொணாமை" (அக்னாஸ்டிக்) [1] என்ற கொள்கையை நம்புகிறார். இவர் முன்னால் இஸ்லாமியராவார். இவரும் நானும் சேர்ந்து இஸ்லாமியர்களோடு அனேக வாதங்களையும், விவாதங்களையும் மற்றும் உரையாடல்களையும் புரிந்துள்ளோம். இந்த உரையாடல்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நாங்கள் இத்தனை உரையாடல்களைச் செய்தும், ஒரு முடிவிற்கு வரவில்லை, அதாவது சுற்றி சுற்றி ஒரே இடத்திற்கு வந்திருந்தோம். என்னுடைய நண்பர் என்னிடம் வந்து "இனிமேல் இஸ்லாமில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, வேறு ஒரு நல்ல வழியை நாம் கண்டுபிடித்து, அதன் படி இனி இஸ்லாமை அணுகவேண்டும்" என்றுச் சொன்னார். அவர் ஒரு புதிய வழியை பரிந்துரைத்தார், அது என்னவென்றால், "நாம் இஸ்லாமை சீர்த்திருத்துவோம்" என்பதாகும். இதனை அவர் முதன் முதலில் என்னிடம் சொன்ன போது, அவர் நகைச்சுவைக்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். அதாவது நான் முழு இஸ்லாமை எடுத்து பல பாகங்களாக பிரித்து, மறுபடியும் அதனை சீர்த்திருத்துகிறேன் என்ற பெயரில், வேறு ஒரு புதிய வகையில் அதனை ஒன்றுச் சேர்த்து, ஒரு சீர்த்திருத்தப்பட்ட இஸ்லாமை உருவாக்கி, அதன் பிறகு முஸ்லிம்களிடம் சென்று, "அருமையான முஸ்லிம்களே, இதோ பாருங்கள் இது தான் உங்கள் இஸ்லாம், இதில் சிறிது பழுது பார்க்கவேண்டி இருந்தது, எனவே, இஸ்லாமை முழுவதும் பழுதுப்பார்த்து சீர்த்திருத்தி இருக்கிறேன்" என்றுச் சொன்னால், சுயநினையில் இருக்கும் முஸ்லிம்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? ஆனால் என் நண்பர் இப்படித் தான் நினைத்தார். என் நண்பரின் இந்த புதிய ஆலோசனை மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தற்கால முஸ்லிம்கள் இதனைத் தானே செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் இஸ்லாமிய தீவிரவாத செய்திகள் அதிகரித்துவருவதினால், அரேபிய அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் இஸ்லாம் பற்றி தங்கள் வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். ஒரு சீர்த்திருத்தவாதியான இஸ்லாமியர் "குர்-ஆனின் இஸ்லாம்" தனக்கு தர்மசங்கடத்தை கொண்டு வந்துள்ளது என்று வேதனை அடைகிறார், மேலும் தற்கால நிலைக்கு ஏற்றபடி இஸ்லாம் சீர்த்திருத்தப்படவேண்டிய நிலையில் உள்ளது என்றுச் சொல்கிறார்.
- இவரின் கருத்துப்படி "இஸ்லாமியரல்லதவர்களைக் கொல்லுங்கள் ("Kill the infidels") என்ற குர்-ஆன் வார்த்தைகளுக்கு பதிலாக "அவர்களைக் கொல்லுங்கள்(Kill them)" என்று மாற்றி எழுதவேண்டுமாம்.
- மேலும், "உங்கள் மனைகளை அடியுங்கள்" என்ற குர்-ஆன் வார்த்தைகளுக்கு பதிலாக, "அவளின் பின் பாகத்தில் இரகினால் அடியுங்கள்" என்று மாற்றி எழுதவேண்டுமாம், இப்படி அனேக இடங்களில் வசனங்களை மாற்றி எழுதவேண்டும் என்கிறார்.
- இந்த 21ம் நூற்றாண்டில் காணப்படும் மனித உரிமை முக்கியத்துவத்திற்கு ஏற்றபடி குர்-ஆனை மாற்றி எழுதி இஸ்லாமை காப்பாற்றவேண்டும் என்று இந்த அறிஞர்கள் மிகவும் அதிகமாக பாடுபடுகிறார்கள்.
நாகரீகமான தற்கால சமுதாயங்களில் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்றும், அவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை காண்பிக்கக்கூடாது என்றும் நாம் சொல்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட சமுதாயத்திற்கு ஏற்றபடி வாழ விரும்பும் ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. ஒரு மனிதன் நாட்டின் குடிமகனாக கருதப்படுவதற்கு "அவன் மனிதன்" என்ற ஒரு தகுதியே போதுமானது. அவன் எந்த மதத்தை பின்பற்றுகிறான், எவைகளை நம்புகிறான், அவன் கருப்பா சிகப்பா போன்றவையெல்லாம் குடிமகன் என்பதற்கு தகுதிகள் அல்ல. தற்கால அரேபிய அறிஞர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள்: இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமின் மத அடையாளம் என்பதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆனால், இதே அடையாளம் முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையில் தொல்லை தருகின்றதாக இருக்கிறது. அதாவது காலம் செல்லச் செல்ல தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் உயிரணுவைப் போல இஸ்லாம் காணப்படுகின்றது. இதன் விளைவு என்ன? தற்கால நவீனவாதிகளாகிய சில இஸ்லாமியர்கள், ஆச்சரியப்படும் விதமாக மேற்கத்திய கருத்துக்களையும், கலாச்சாரத்தையும் இஸ்லாமுக்குள் புகுத்த முயலுகிறார்கள். தற்கால புத்தகத் துறை நவீன இஸ்லாமை ஆதரிக்கிறது. மேலும், அரேபிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவர்களாகிய, முஹம்மத், அர்கௌன், முஹம்மத் அபெத் அல் ஜபிரி, ஃபாதிமா மர்னிஸ்ஸி, முஹம்மத் ஷஹ்ரூர் போன்றவர்கள் "நவீன இஸ்லாமை (الحداثي الإسلام)" ஆதரிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால், "பழமைவாத இஸ்லாமினால் (الإسلام التقليدي)" விளைந்த கடந்த கால இருண்ட நிகழ்வுகளை துடைத்து எறிவதாகும்.
பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு "மரபு இஸ்லாம்" சரியானதாக தோன்றுகிறது, சராசரி முஸ்லிமுக்கு "நவீன இஸ்லாம்" மிகவும் சிக்கல் நிறைந்ததாக தோன்றுகிறது, ஆனால், சில அரேபிய அறிஞர்களுக்கு இந்த நவீன இஸ்லாம் சரியானதாக தோன்றுகிறது. இந்த அறிஞர்களின் புதுமையான எண்ணங்கள் இந்த புதிய வகையான இஸ்லாமை (நவீன இஸ்லாம்) பெற்றெடுத்துள்ளது. இந்த சீர்த்திருத்தப்பட்ட இஸ்லாம் தன் கையில் ஒரு துணியை எடுத்துக்கொண்டு, மரபு இஸ்லாமை சீர்த்திருத்த (தூசியை தட்டி சுத்தப்படுத்த) முயற்சிக்கிறது. மரபு இஸ்லாமை பழுது பார்க்க நவீன சீர்த்திருத்தப்பட்ட இஸ்லாம் முயற்சி செய்கிறது. ஆனால், குர்-ஆன் மீதும், முஹம்மதுவின் ஹதீஸ்கள் மீதும் சார்ந்துள்ள "மரபு இஸ்லாம்" நவீன இஸ்லாமை பயமுறுத்துகிறது. "தூசி தட்டும் ஒரு சிறிய துணியை கையில் வைத்துக்கொண்டு என்னை பழுதுப்பார்க்க நீ துணியவேண்டாம் என்று மரபு இஸ்லாம் நவீன இஸ்லாமை எச்சரிக்கிறது". "உங்கள் மனைவிமார்கள் கீழ்படியாவிட்டால்(நுஸூஜ்), அவர்களை அடியுங்கள்" என்று குர்-ஆன் வெளிப்படையாகச் சொல்கிறது. டாக்டர் ஷஹ்ரூர் என்ற சீர்த்திருத்தவாதி "குர்-ஆன் இப்படிச் சொல்லவில்லை, இதன் அர்த்தம் மனைவியை அடியுங்கள் என்பதல்ல, இதனை உவமையாக எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றுச் சொல்கிறார். இதே போல, "தீர்க்கதரிசிகள் பாவம் செய்யாதவர்கள்" என்ற கோட்பாட்டை நம்பும் என் இஸ்லாமிய நண்பர்கள் "மோசே ஒரு எகிப்தியரைக் கொன்றார்" என்பதை நம்புவதில்லை. இந்த இடத்தில் "கொன்றார்" என்ற வார்த்தையின் அர்த்தம் உண்மையாகவே மனிதர்களைக் கொல்வதைப் பற்றிச் சொல்லப்படவில்லை என்று இவர் சொல்கிறார். இதே கருத்தை முஹம்மத் அர்கௌன் என்ற இஸ்லாமிய நவீனவதியும் கொண்டுள்ளார். ஆனால் இப்படிப்பட்ட நவீனவாத கருத்தைக் கொண்டுள்ள இவரின் இஸ்லாமிய வைராக்கியம் ஏன் சில நேரங்களில் கொழுந்துவிட்டு எரிகின்றது? அதாவது சல்மான் ரஸ்டியின் "சாத்தானின் வசனங்கள்" என்ற நாவல் பற்றி கேள்விப்பட்டவுடனே, ரஸ்டி கொல்லப்படவேண்டும் என்று ஏன் இவர் சொல்கிறார்? இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் சில நேரங்களில் "மரபு இஸ்லாமுக்கு" கட்டுப்பட்டவராக, வன்முறைகளில் ஈடுபடவும், அவைகளை ஆதரிக்கவும் தொடங்கிவிடுகிறார். நவீன இஸ்லாமை ஆதரிக்கும் இவர், இஸ்லாமை புறக்கணித்து அதனை விமர்சிப்பவர் கொல்லப்படவேண்டும் என்று விரும்புகிறார், இந்த சமயங்களில் நவீன இஸ்லாமை பக்கத்தில் வைத்துவிட்டு, மரபு இஸ்லாமை கையில் எடுத்துக்கொண்டு, மரண தண்டனைப் பற்றிய ஃபத்வாவை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார். இது இஸ்லாமியர்களின் மாய்மாலமான நடவடிக்கைகளாகும். இதனை நாம் இஸ்லாமிய சரித்திரத்தை சிறிது புரட்டிப்பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். இப்படி நவீன வாதிகள் நடந்துக்கொள்ளும் போது, அவர்களின் நவீன இஸ்லாம் அல்லது சீர்த்திருத்தப்பட்ட இஸ்லாம் என்ற கோட்பாடு சிறிது சிறிதாக மறைந்து, ஜிஹாதின் ஆவியும், அல்லாஹ்வின் பழிவாங்கும் எண்ணங்களும் இவர்களை ஆட்கொண்டு விடுகின்றன. முடிவாக, நவீன இஸ்லாம் நீண்ட காலம் செல்லுபடியாவதில்லை. இன்றோ அல்லது நாளையோ ஏதோ ஒரு நாள் நாம், இஸ்லாமின் சகிப்புத்தன்மையற்ற இருதயத்தை காண நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாம் என்பது "தன்ஜீல்" என்ற கோட்பாட்டின் மீது முழுவதுமாக சார்ந்துள்ளது. தன்ஜீல் என்றால், குர்-ஆனின் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை நம்புவதாகும். இஸ்லாமை சீர்த்திருத்தலாம் என்று ஒரு மனிதன் விரும்பலாம், ஆனால், குர்-ஆனின் வெளிப்பாடு, பாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து(Preserved Tablet المحفوظ اللوح) வந்தது என்று இஸ்லாம் நம்புவதினால், மனிதனின் பங்கு இங்கு ஒன்றுமே இல்லை. குர்-ஆனின் ஒவ்வொரு எழுத்தையும் அவன் அல்லாஹ்வின் வார்த்தையாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதற்கு சுய விளக்கத்தை அவன் தரமுடியாது. குர்-ஆனின் வெளிப்பாட்டில் மனிதனின் பங்கு இல்லை என்பதை இஸ்லாம் சத்தமாக கூறுகின்றது. ஒரு முஸ்லிம் "ஓய்வு நாள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது" என்பதை நம்பமாட்டான், அதாவது "மனிதனுக்காக அல்லாஹ் செயல்படுகின்றார்" என்பதை நம்பமாட்டான், "அல்லாஹ்விற்காகத் தான் மனிதன்" என்பதை நம்புகிறான். இதன் படி பார்த்தால், ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வின் அடிமையாவான், அதே போல, குர்-ஆனுக்கும் அந்த மனிதன் அடிமையாக இருக்கிறான். அதனை சீர்த்திருத்த மனிதனால் முடியாது.
ஒரு முஸ்லிம் "நவீனவாதியாக" இருக்கவேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், அதே நேரத்தில் அவனது மதம் அவனிடம் வந்து "ஒரு பெண் ஆணோடு ஒப்பிடும் போது பாதியாக கருதப்படுகிறாள், அதாவது சொத்துக்களை பிரிப்பதிலும், நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதிலும் மேலும் இது போன்ற விஷயங்களில் ஒரு பெண் ஆணுக்கு சமமல்ல" என்றுச் சொல்கிறது. மேலும் இதே முஸ்லிமின் மதம் அவனிடம் வந்து "ஒருவன் திருடினால் குர்-ஆனின் படி அவன் கைகளை வெட்டவேண்டும், திருமணமாகாத ஒரு பெண்ணும் ஆணும் விபச்சாரம் புரிந்தால் அவர்களுக்கு சாட்டையால் 100 அடிகள் அடிக்கவேண்டும், அவர்கள் திருமணமானவர்களாக இருந்தால், அவர்கள் சாகும்வரை கல்லெறியவேண்டும்" என்றுச் சொல்கிறது. ஒரு முஸ்லிம் தன் குர்-ஆன் சொல்லும் மேற்கண்ட தண்டனைகளை, குற்றவாளிகளுக்குக் கொடுத்து குர்-ஆனுக்கு கீழ்படிய வேண்டுமா? அல்லது தன்னை ஒரு நவீனவாதி என்று காட்டிக்கொண்டு, குர்-ஆனுக்கு கீழ்படியாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டுமா? அரேபிய ஊடகங்களில், தொலைக்காட்சிகளில், புத்தகங்களில், இணைய தளங்களில் நாம் பார்க்கும் போது, ஒரு முஸ்லிம் தன்னை "நவீன முஸ்லிம் (مسلم حداثي – முஸ்லிம் ஹதாதி)" என்று அறிமுகப்படுத்திக் கொள்வதைக் காணமுடியும்.
இப்போது இந்த நவீன முஸ்லிம் எப்படி தன் ஷரியா சட்டத்தோடு தொடர்புடையவராக இருக்கிறார் என்பதை காண்போம். ஷரியா சட்டத்தோடு இந்த முஸ்லிமின் நவீனத்துவம் எத்தனை நாட்கள் தாக்குபிடிக்கும் என்பதைக் காண்போம்? இந்த நவீன முஸ்லிம் குர்-ஆனின் ஷரியா சட்டத்தை சீர்த்திருத்துகிறேன் என்றுச் சொல்லி, எப்படி தன் சொந்த மதத்தை எதிர்க்கமுடியும்? பொருளாதார, சமூக துறைகளில் சீர்த்திருத்தப்பட்ட இஸ்லாம் ஒரு "உண்மையான இஸ்லாமாக" இருக்கமுடியுமா? இஸ்லாம் சீர்த்திருத்தப்பட்ட பின்பு அதனை "இஸ்லாம்" என்று நாம் அழைக்கமுடியுமா?
ஒரு வேளை இஸ்லாம் சீர்த்திருத்தம் செய்யப்பட்டு அனைவரும் அனைத்து துறைகளிலும் சமமானவர்கள் என்றுச் சொல்லுமானால், அதனை நாம் இனி "இஸ்லாம்" என்று அழைக்கமுடியாது. அதனை நாம் "மதசார்ப்பற்ற சமூகம்" என்று அழைக்கவேண்டும், இதைத் தான் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நாம் இன்று காண்கிறோம். இந்த நாடுகளில் மதமும் அரசாங்கமும் தனியாக பிரிக்கப்பட்டு, ஒன்றை மற்றொன்று ஆட்டிப்படைக்காதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களைக் கொல்லவேண்டும் என்ற ஷரியா சட்டம் எழுத்தின் படி அமுலில் இல்லை. ஆனால், உண்மையாகவே ஒரு முஸ்லிம் கிறிஸ்தவத்திற்கோ, பஹாய் என்ற மதத்திற்கோ, அல்லது இதர மதங்களுக்கோ மாறிவிட்டால், முஸ்லிம்களின் இரத்தம் கொதிக்கிறது. இஸ்லாமின் மீது கொண்டுள்ள பற்று வெளிப்பட ஆரம்பிக்கிறது, இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறியவர் (முர்தத்) கொல்லப்படவேண்டும் என்று மக்கள் கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒருவர் இஸ்லாமைத் தவிர வேறு ஒரு மதத்தை பின்பற்ற ஆரம்பிக்கிறார் என்பதை இவர்களால் ஜீரணித்துக் கொள்ளமுடிவதில்லை. இஸ்லாமிய சட்டமாகிய ஷரியா குர்-ஆனின் மீதும், முஹம்மதுவின் ஹதீஸ்கள் மீதும் சார்ந்துள்ளது. இஸ்லாம் என்பது தற்காலத்தில் உலகத்தில் நாம் காணும் ஆன்மீகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மார்க்கமல்ல. இஸ்லாம் என்பது அரசியலும், ஆன்மீகமும் ஒன்றாக கலந்த கலவையாகும், மேலும் இஸ்லாமே நாட்டின் மதமாக கருதப்படவேண்டும், வேறு மதம் இருக்கக்கூடாது என்று கருதும் மதமாகும். குர்-ஆனே இஸ்லாமின் அடிப்படை சட்டம். மதினாவில் முஹம்மது புரிந்த அரசியல் யுக்திகள் அனைத்தும் அல்லாஹ்வின் வெற்றிகளாக (نصر الله والفتح) கருதப்பட்டது. முஹம்மது மக்காவை ஆக்கிரமித்தார், மேலும் அரேபியா மக்கள் தங்களை முஹம்மதுவிற்கு சமர்ப்பித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
ஷரியா சட்டத்தின் கீழ் இஸ்லாமியரல்லாதவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? குர்-ஆனின் படி ஒரு முஸ்லிம் எழுந்துச் சென்று யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஜிஸ்யா வரி செலுத்தும் வரை அவர்களோடு சண்டையிட்டால் (குர்-ஆன் 9:29) அல்லது யூதர்களை இஸ்லாமின் கொடிய எதிரிகளாக பார்த்தால்? இந்த நிலைக்கு யார் காரணம்? முஸ்லிம்களின் இந்த குணத்திற்கு யாரைக் குற்றப்படுத்துவது?
இஸ்லாமியச் சட்டத்தின் படி, இஸ்லாமியரல்லதவர் எப்படி ஜிஸ்யா வரி கட்டவேண்டும் என்பதை கீழ்கண்ட வரிகள் விளக்குகிறது:
An infidel who has to pay his poll-tax, jizya, should be treated by the tax collector with disdain; the collector remaining seated and the infidel standing before him, the head bent and the body bowed. The infidel should personally place the money in the balance, while the collector holds him by the beard and strikes him on both cheeks."1இஸ்லாமியரல்லாத ஒருவர் ஜிஸ்யா வரி கட்ட வரும் போது, வரி வசூல் செய்பவர் அவரை மிகவும் ஏளனமாக, மரியாதையற்ற முறையில் நடத்தவேண்டும். வரி வசூல் செய்பவர் உட்கார்ந்துக்கொண்டே இருக்கவேண்டும், வரி செலுத்தும் நபர் நின்றுக்கொண்டே இருக்கவேண்டும், மேலும் தலையும், உடலும் குனிந்து இருக்கவேண்டும். வரி செலுத்துபவர் தன் பணத்தை/வரிக்கான பொருளை தராசில் வைக்கவேண்டும், வசூல் செய்யும் முஸ்லிம் அவனது தாடியை பிடித்துக்கொண்டு, அவன் இரண்டு கன்னங்களிலும் அறையவேண்டும் [1].
நான் ஒரு முறை ஒரு சௌதி ஸலஃபி முஸ்லிமிடம் இப்படி கூறினேன்: "இப்னு தய்மிய்யா என்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மதுவை சபிக்கும் நபர் கொல்லப்படவேண்டும் என்றுச் சொல்லியுள்ளார், இது சரியான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை". ஏனென்றால், நானும் இஸ்லாமை விட்டு வெளியேறியவன் தான், இஸ்லாம் பற்றி எனக்கு சொந்த கருத்துக்கள் உண்டு. இதன் படி பார்த்தால் இஸ்லாமின் படி நானும் மரண தண்டனைக்கு தகுதியானவன் என்று அவரிடம் கூறினேன். இந்த உரையாடலுக்கு முன்பு வரை, சௌதி அரேபியாவில் உள்ள அல்கஸ்ஸீம் என்ற பகுதியில் இஸ்லாமிய விரிவுரையாளராக பணியாற்றும் இவரிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைப்பு வரும். இவர் அன்புள்ள நல்ல நண்பராக எனக்கு காணப்பட்டார். இவரிடம் தொலைபேசியில் பேசுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், மிகவும் அன்பானவராக காணப்பட்ட இவர், இந்த உரையாடலுக்கு பிறகு, தன்னுடைய இறைத்தூதரால் ஈர்க்கப்பட்டவராக எனக்கு கீழ்கண்டவாறு பதில் கொடுத்தார்:
"இஸ்லாமை விட்டு வெளியேறுகின்ற நபர் கொல்லப்பட்டால், அவன் நேரடியாக சொர்க்கம் செல்வான், ஏனென்றால், பூமியிலிருந்து தீமை அழிந்துவிட்டது (இஸ்லாமை விட்டு வெளியேறுபவன் அழிந்துவிட்டான்)."
இது தான் இஸ்லாம். இது தான் மரண வாசனை வீசும் மதம். இதன் படி, மக்களின் உயிரை எடுத்துவிடுங்கள், இறைவன் அவர்களுக்கு கொடுத்த வாழ்க்கையை அழித்துவிடுங்கள், அவர்களின் இரத்தத்தை சிந்துங்கள், இதன் மூலம் அவர்கள் செய்த பாவத்தை(இஸ்லாமை விட்டு வெளியேறும் பாவத்தை) நீக்கிவிடுங்கள், இதையெல்லாம் செய்துவிட்டு, "ஓ.. அவர்கள் இப்போது சொர்க்கம் செல்வார்கள்" என்றுச் சொல்லுங்கள்.
மனிதனின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சீர்த்திருத்தம் செய்தால், அது உண்மையான சீர்த்திருத்தம் எனப்படும். சப்பாத் என்று அழைக்கப்படும் ஓய்வு நாள் என்பது மனிதனுக்காக கொடுக்கப்பட்டதே தவிர, ஓய்வு நாளுக்காக மனிதன் அல்ல. ஒரு முஸ்லிம் என்ற நிலையில் முஹம்மது செய்த அனேக காரியங்களை நான் மறைக்கலாம், கண்டும் காணாதது போல இருந்துவிடலாம், அதாவது முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருந்தார்கள், அவருக்கு வைப்பாட்டிகள் இருந்தார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடலாம். ஆனால், ஜிஸ்யா என்ற வரியைப் பற்றி "தவ்பா" என்ற ஸூராவில் படிக்கும்போது, நான் எனக்குள் "இவர் உண்மையான இறைவனின் தூதராக இருக்கமுடியாது, மேலும் குர்-ஆன் மனித இனத்தின் நல்வாழ்வை கோராமால் அவர்களின் அழிவையே கோருகிறது" என்று சொல்லிக்கொண்டேன். அதாவது குர்-ஆன் 9:29ம் வசனத்தின் படி முஸ்லிம்கள் இஸ்லாமை ஏற்காத கிறிஸ்தவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தமுடியுமோ, அப்படியெல்லாம் அவமானப்படுத்தி, அவர்களிடமிருந்து கப்பம் வாங்கும் படி கட்டளையிடுகின்றது. உலக மக்கள் அனைவரையும் படைத்த ஒரு உண்மையான இறைவன், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் சுயமரியாதையை கெடுக்க அனுமதிக்கமாட்டார். அதுவும், இறைவனின் பெயரில் இதனைச் செய்ய அவர் அனுமதிக்கவே மாட்டார்.
ஒரு மனிதன் அல்லாஹ்வின் பெயரில் இன்னொரு மனிதனுடைய சுயமரியாதையை சிதைக்கும் போது, இதனை பார்க்கும் நாம், ஒன்றுமே செய்யமுடியாமல் வாயடைத்து நிற்கிறோம். "இந்த இஸ்லாம் மார்க்கம் இறைவன் அனுப்பிய மார்க்கமாக இருக்காது, மனித இனத்தை இரட்சிக்க வந்த மார்க்கமாக இருக்கமுடியாது" என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கிறிஸ்தவத்தில் இறைவனின் முக்கிய நோக்கம் மனிதர்கள் ஆவார்கள். மனிதனின் முக்கிய நோக்கம் இறைவன் ஆவார். பைபிளின் இறைவன் மனிதனைத் தேடுகிறார், அவனுக்காக அனைத்தையும் செய்து முடித்தார். முதன் முதலாக இறைவனே மனிதனை நேசித்தார். அன்பின் அடிப்படையில் அனைத்தையும் செய்கிறார். தேவனின் இந்த அன்பை உணர்ந்தவனாக மனிதன் தன் வாழ்வின் முக்கிய நோக்கமாக "தேவனை" கொண்டு வாழுகின்றான். தேவன் தன் மீது அன்பை பொழிந்தபடியால், மனிதன் தேவனின் மீது அன்பை பொழிகிறான்.
ஒரு முஸ்லிம் பிரென்சு புரட்சியின் மூன்று முக்கிய கொள்கைகளாகிய "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்பவைகளை பின் பற்றினால், அவன் தன் இறைத்தூதராகிய முஹம்மதுவின் பொதனைகளுக்கு எதிராக செயல்படுகின்றான் என்று பொருளாகிறது. மேலும், கடந்த 14 நூற்றாண்டுகளாக பின்பற்றிக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளை புறக்கணிக்கின்றான் என்று அர்த்தமாகின்றது. இஸ்லாமை சீர்த்திருத்துகிறோம் என்றுச் சொல்பவன், தனக்கு பிரியமான தன் மார்க்கத்தை தானே தகர்த்துவிடுகின்றான், தன் இஸ்லாமிய அடையாளத்தை துடைத்துவிடுகின்றான், இஸ்லாம் படுதோல்வி அடைந்துவிட்டது என்று பறைச்சாற்றுகின்றான். முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு காட்டும் இஸ்லாமிலே, அடக்குமுறை வசனங்களைக் கொண்டுள்ள குர்-ஆனின் இஸ்லாமின் அகராதியில் "சுதந்திரம்" மற்றும் "சமத்துவம்" என்ற வார்த்தைகளைக் காணமுடியாது. மேலும் இஸ்லாம் மனித வர்க்கத்தை "முஸ்லிம்கள்" என்றும் "காஃபீர்கள்" (இஸ்லாமியரல்லாதவர்கள்) என்றும் பிரித்து வைப்பதினால், "சகோதரத்துவம்" என்பதும் அவ்வளவு அதிகமாக இஸ்லாமிலே காணமுடியாது. சமத்துவம் என்பது ஒரு மனிதனை மனிதனாக மதிப்பதாகும், அவனுடைய சுயமரியாதையை காப்பதாகும். அந்த மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எவைகளைச் செய்தாலும் அதனை கணக்கில் கொள்ளாமல், அவனுக்கு சமுதாயத்தில் முழுவதுமாக உரிமையை கொடுப்பதாகும்.
குர்-ஆனை பொறுத்தமட்டில் "சகோதரத்துவம்" என்பது இதர முஸ்லிம்களுக்கு மட்டுமே காட்டப்படும் சகோதர அன்பாகும். குர்-ஆன் முஸ்லிமல்லாதவர்களிடம் சகோதர அன்பை காட்டும்படி சொல்வதில்லை. அவர்களிடம் வெறுப்புணர்வைக் காட்டுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாமினால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணக்கள், படிப்பு மற்றும் உள்ளத்தின் ஆசை ஆகியவைகள் நவீன உலகைப் பற்றிப் பிடித்துள்ளது. நவீன உலகின் தற்கால வெளிச்சத்திற்குள்ளே எப்படி ஒரு முஸ்லிம் ஏழாம் நூற்றாண்டின் கோட்பாடுகளை புகுத்தமுடியும்?
அடிக்குறிப்புக்கள்
Footnotes
1 Nawawi; E C Howard; Lodewijk Willem Christiaan van den Berg, Minhaj et talibin : a manual of Muhammadan law ; according to the school of Shafi (Lahore : Law Pub. Co., 1977, 1914), 467.
ஆங்கில மூலம்: The Impossibility of Reforming Islam
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.