ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 31 ஜூலை, 2020

முருகனை சுப்ரமணியனாக்கிய ஆரியர்கள், இயேசுவை ஈஸாவாக்கிய அரேபியர்கள் - ஓர் சிறிய ஒப்பீடு

(கந்த சஷ்டி கவசம் பற்றிய சர்ச்சை விமர்சனத்துடன்)

பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. முருகன் தமிழ்க்கடவுள் என்று தமிழ் அறிஞர்கள் சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன், ஆனால், வினாயகருக்கு இவர் எப்படி தம்பியானார்? எப்போது தம்பியானார்? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், இந்த "கந்த சஷ்டி கவசம்" பற்றிய கறுப்பர் கூட்டம் வீடியோ வந்த பிறகு, பல தமிழ் அறிஞர்கள் பேசிய வீடியோக்களை பார்த்த பிறகு என் சந்தேகம் தீர்ந்தது.

ஆரியர்கள் முருகனை ஆட்டையப்போட்டு, அவர் பெயரில் பல கட்டுக்கதைகளை உருவாக்கி, அதனை தமிழ் மக்கள் மத்தியில் புகுத்திவிட்டார்கள்.  முருகனுக்கு ஒரு அண்ணனையும் கொடுத்துள்ளார்கள், அவ்வளவு ஏன்! ஒரு அப்பாவையும் (சிவனை),  அம்மாவையும்  கொடுத்து சிறப்பித்து இருந்திருக்கிறார்கள், என்பதை புரிந்துக்கொள்ளமுடிந்தது.

திருவிளையாடல் படம் மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற படங்களை மாற்றுமத அன்பர்களும், இறைநம்பிக்கையில்லாதவர்களும் பார்த்து ரசித்ததை மறுக்கமுடியாது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று சொல்வது போன்று ஒரு சிறிய குடும்பத்தோடு அழகாக‌ தோன்றும் காட்சிகள் பார்த்து சிறிய வயதில் இரசித்து இருந்திருக்கின்றேன். அந்த கதைகளும் ஆரியர்களின் கைவேளை என்பதை இப்போது தான் புரிகின்றது.

அதனால் இப்போது தமிழ் அறிஞர்கள் முருகனை அவர் குடும்பத்தை விட்டுவேறு பிரிக்க பார்க்கிறார்கள், தமிழ் அறிஞர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்த கீழ்கண்ட வீடியோவில் (இன்னும் பலரது வீடியோவின் படி) முருகன் தமிழ்க்கடவுள், அவரை ஆரியர்கள் திருடி சுப்ரமணி ஆக்கிவிட்டார்கள், அவருக்கு  ஒரு குடும்பத்தை உருவாக்கி, அவருக்கு பூணூல் போட்டு, நல்ல அருமையான தமிழ் நூல்களை திருடி, அவைகளில் கைவைத்து திருத்தி தங்கள் கோட்பாடுகளை உட்புகுத்திவிட்டார்கள் என்று இந்த வீடியோவில் வரும் அம்மையார் கலையரசி நடராஜன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
  • https://www.youtube.com/watch?v=sBoubAvvOMc  (இயேசு கடவுள் இல்லை சித்தர், ஆனால் முருகன்....? Kalaiarasi Natarajan | Kandha Sasti Kavasam Issue)
குறிப்பு: இயேசு ஒரு சித்தர், கடவுள் இல்லை என்று இந்த தாயார் பேசியுள்ளார்கள், இதில் பிரச்சனை ஒன்றுமில்லை, அவர் பைபிளை முக்கியமாக நற்செய்தி நூல்களை படித்துயிருந்திருக்கமாட்டார். எனவே தான் அறிந்த அளவின் படி பேசியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் வெளியிட்ட‌ கந்தசஷ்டி வீடியோ பற்றி என் கருத்து:

திடீரென்று ஒரு நாள் யுடியூப் பார்க்கும் போது, கறுப்பர் கூட்டம் யுடியூப் குழுமத்தின் நிர்வாகியை கைது செய்வது பற்றிய செய்தியை பார்த்தேன்.  சரி எதை இவர் பேசினார் என்று சில வீடியோக்களை பார்க்கும் போது, கந்த சஷ்டி கவசம் பற்றி அடிபட்டது, ஆனால் கறுப்பர் கூட்டத்தின் வீடியோ எனக்கு கிடைக்கவில்லை.

என் நண்பர் ஒருவரிடம் அது என்ன வீடியோ உங்களிடம் உள்ளதா என்று கேட்டதற்கு "இல்லை" என்று சொல்லிவிட்டார்.  எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, வேறு யாராவது மறுபடியும் அந்த ஒரிஜினல் வீடியோவை பதிவேற்றம் செய்வார்கள், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அதன் பிறகு நான் எதிர்ப்பாத்தபடி, ஓரிருவர் அதனை யுடியூபில் பதிவெற்றம் செய்திருந்தார்கள்.

கறுப்பர் கூட்டத்தின் வீடியோவைப் பார்த்தேன், அவருக்கு எதிராக பேசி திட்டுபவர்களின் வீடியோவையும் பார்த்தேன். 

இவ்விரண்டு பேர்கள் மீதும் அன்பான‌ கோபம்: 

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் என்பவர், ஒரு சின்ன விஷயத்தை இவ்வளவு பெரியதாக்கிவிட்டது வேதனைக்குரியது. சத்தமில்லாமல் வாழைப்பழத்தில் ஊசி நுழைக்கவேண்டிய இடத்தில், இவர் வெடிகுண்டு வைத்து கொளுத்தியிருக்கிறார். வெடிகுண்டு வைத்தால் சத்தம் வராதா என்ன? வாழைப்பழத்திற்கு ஊசியே அதிகம், அதற்காக வெடிகுண்டு பயன்படுத்துவது அறிவுடமையாகுமா?  இவருடைய வேறு பல வீடியோக்களில் (ஆபாச புராணங்கள்) பல விவரங்களை வெடிகுண்டு போல வெடித்திருக்கிறார், ஆனால், கந்த சஷ்டி கவசத்தில் என்னை பொருத்தமட்டில், அவ்வளவு பெரிய விமர்சனம் வைக்கும் அளவிற்கு ஒன்றுமில்லை. 

நேற்று "கந்த சஷ்டி கவசம்" முழுபாடலை, எழுத்துக்களோடுச் சேர்த்து வீடியோ பார்த்தேன், வரிகளையும் படித்தேன். பாதுகாப்பு வேண்டுமென்றுச் சொல்லி பாடப்பட்ட பாடல் அது, அதற்கு இவ்வளவு  பெரிய விமர்சனத்தை சுரேந்திரன் வைத்திருக்கவேண்டியதில்லை. மேலும், கந்த சஷ்டிகவசம் பற்றி கேள்வி கேட்டே ஆகவேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால், அதனை ஆபாச வார்த்தைகளோடு சேர்த்து கேட்கவேண்டிய அவசியமென்ன?  ஒரு கடவுள் பிரார்த்தனையில் ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளின் பிரயோகம் என்று சிம்பிளாக கேட்டுயிருந்தால் போதுமானது. ஆபாச புராண வீடியோக்களில் பெரிய பெரிய யானைகளை தாக்கிக்கொண்டு இருந்த இவர், திடீரென்று ஏன் ஒரு சேவலுக்கு பின்னால் போகவேண்டும்?

இரண்டாவதாக, அவரை விமர்சித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் பற்றிய கோபம். முருகனைத் தவிர்த்து, ஆபாச புராணங்கள் என்றுச் சொல்லி, மற்ற பெரிய இந்து தெய்வங்களின் கதைகளை, கிழி கிழி என்று கிழிக்கும் போது, கோபம் வராத இவர்களுக்கு, எப்படி திடீரென்று முருகனைத் தொட்டவுடனே வந்தது? தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.

இவர்கள் அவரை பலவாறு விமர்சித்து மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால், அவர் மீது வழக்கு போட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பியதால், அவரை "தியாகியாக்கிவிட்டார்கள்", இதுவும் தேவையில்லாதது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் என்று சொல்வது போன்று, லட்சம் பேர் பார்க்கவேண்டியதை, கோடி பேர் பார்க்க வைத்துவிட்டார்கள் இவர்கள். இவர்களே பெரிய விளம்பரத்தை கொடுத்துவிட்டார்கள்.

தமிழர்களுக்கு ஒரு கேள்வி: 

கந்த சஷ்டி கவச பிரச்சனை ஒரு புறமிருக்கட்டும், உங்கள் முருகனை எப்படி சுப்ரமணியத்திடமிருந்து (ஆரியர்களிடமிருந்து) காப்பாற்றப்போகிறீர்கள்?
முருகனை தமிழர்கள் காப்பாற்றிக் கொள்ளட்டும். நம் விஷயத்துக்கு வருவோம்.

இயேசுவை ஈஸாவாக்கிய அரேபியர்கள்

இயேசுவிற்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரியர்கள் தமிழ் கடவுள்களை ஆட்டையைப்போட்டது போன்று ஆரேபியர்கள் 'இயேசுவை' ஆட்டையைப் போடப்பார்த்தார்கள்.

அரேபியாவில் ஒரு புதிய ஆன்மீக தலைவர் உருவானார், இது தான் உலகத்துக்கான வேதம் என்றுச் சொல்லி ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்தார். அந்த புத்தகத்தில் இயேசுவிற்கு ஒரு புதிய சாயத்தை பூசினார். அவர் இயேசுவை மட்டும் திருடப்பார்க்கவில்லை, பைபிளின் முதல் மனிதன் ஆதாம் முதற்கொண்டு, மோசே, தாவீது, சாலொமோன், யோவான் ஸ்நானகன் என்று தொடர்ந்து வந்து இயேசுவில் வந்து நின்றார்.

அந்த அரேபியர் பைபிளின் இறைவனை எடுத்துக்கொண்டதை கூட மன்னித்துவிடலாம், ஆனால் பைபிளில் வரும் சாத்தானையும் எடுத்து அவனுக்கும் ஒரு புதிய சாயத்தை பூசியதைத் தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
  • ஆரியர்கள் முருகனுக்கு பூணூல் போட்டார்கள், அரேபியர்கள் இயேசுவிற்கு தொப்பி போட்டார்கள்.
  • ஆரியர்கள் முருகனை பிராமணாக்கினார்கள், அரேபியர்கள் இயேசுவை முஸ்லிமாக்கினார்கள்.
  • ஆரியர்கள் முருகனுக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தார்கள், அரேபியர்கள் இயேசுவை தங்கள் நபித்துவ குடும்பத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.
ஆனால், கிறிஸ்தவர்கள் தங்கள் இயேசுவை அரேபியர்களின் பிடியில் முழுவதுமாக சிக்க விடவில்லை. ஆனால் தமிழர்கள் இன்றுவரை முருகனை இழந்து தவிக்கிறார்கள். 

இதற்கு காரணமென்ன? இதற்குஇரண்டு காரணங்களை சொல்லமுடியும். ஒன்று புதிய ஏற்பாடு தன் கோட்பாடுகளில் உறுதியாக உள்ளது. யாரும் இயேசுவை கொள்ளையடித்துக் கொண்டுபோக அது இடம் கொடுக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் இறையியலும், வசனங்களும் எந்த அரேபியராலும் அசைக்கமுடியாத அளவுக்கு உறுதியாக உள்ளது. இரண்டாவதாக, கிறிஸ்தவர்கள் தங்கள் உறுதியிலும், பைபிளை பின்பற்றுவதிலும் உண்மையாக  இருந்தமையால், இயேசுவை யாரும் திருட முடியவில்லை.

ஆனால், தமிழர்கள் ஏன் தங்கள் முருகனை ஆரியர்களிடம் விட்டுக்கொடுத்துவிட்டார்கள்? முருகனைப் பற்றிய நூல்கள் எவை? அவைகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது? முருகனுக்கு பூணூல் போட்டார்கள் என்பதற்கு சான்றுகள் உண்டா? எப்போது முருகனுக்கு ஒரு குடும்பத்தை ஆரியர்கள் கொடுத்தார்கள் போன்றவற்றை ஆய்வு செய்வார்களா தமிழர்கள்?  ஏதோ சுரேந்திரனின் புண்ணியத்தாலும், மேலும் அவரை விமர்சித்து பிரச்சனையை  ஊதி பெரியதாக்கிய‌வர்களின் தவறினாலும், இப்போது தான் தமிழர்களுக்கு கொஞ்சம் தெளிவு உண்டாகியுள்ளது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு படித்த தமிழ் மக்கள் தங்கள் பழைய நூல்களை தூசி தட்டி எடுத்து, மேலும் பல உண்மைகளை கொண்டு வந்தால், தமிழ்நாட்டுக்கு நன்மை உண்டாகும்.

முடிவுரை:

ஒரு யுடியூப் சானலை முடக்கிவிட்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. சுரேந்திரனை விட்டால், இன்னும் அனேகர் இப்படி விமர்சிப்பவர்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள். மகான்கள், சுவாமிகள், போதகர்கள், தலைவர்கள் எதை சொன்னாலும், கண்முடித்தனமாக பின்பற்றிக்கொண்டு மக்கள் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதற்கு இது 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமோ அல்லது அதற்கு முந்தைய  காலமோ அல்ல.

இது இன்டர்னெட் காலம், மொபைள் வந்துவிட்ட பிறகு மக்களின் கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எனவே, இலட்சக்கணக்கான விமர்சனங்கள் வரும், ஆயிரக்கணக்கானவர்கள் இந்து மதம், இஸ்லாம் கிறிஸ்தவம் போன்றவற்றுக்கு எதிராக பேசுவார்கள் எழுதுவார்கள், நீங்கள் நம்பும் கோட்பாடுகளில் உண்மை இருந்தால், அது நிச்சயம் ஜெயிக்கும். பொய்களுக்கு இனி உலகில் இடமில்லை. எங்கள் முன்னோர்கள் பின்பற்றியதை எப்படி விடமுடியும் என்று யாரும் கேட்கமுடியாது? நம் முன்னோர்கள் பின்பற்றியது உண்மையாக இருந்தால், அது நிலைத்து நிற்கும், அதில் மூடபழக்கங்களும், சமுதாய கேடுகளும் இருந்தால், அது சீக்கிரமாக உதிர்ந்துவிடும் நேரம் வந்துவிட்டது.

சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட்(Survival of the fittest) என்பார்கள், யாரிடம் உண்மையும் நியாயமும் இருக்கின்றதோ அது நிச்சயமாக ஜெயிக்கும். சத்யமேவ ஜெயதே.

குறிப்பு:

ஆரியர்கள் தங்கள் வைதீகத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்ததைப் பற்றி பேசும் நீ (கிறிஸ்தவன்), வெளியிலிருந்து வந்த இயேசுவை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்வது பற்றி எதையும் பேசமாட்டாயா? என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா? தாராளமாக பேசலாம். கிறிஸ்தவம் தமிழ் நாட்டுக்குள் வந்த பிறகு என்ன நடந்தது? இந்தியாவிற்குள் வந்த பிறகு கிறிஸ்தவம் என்ன செய்தது? இந்திய சாமிகள் தெய்வங்கள் செய்ய முடியாததை இயேசு ஏதாவது இந்தியாவிற்குச் செய்துள்ளார? மக்களின் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை கிறிஸ்தவம் செய்தது என்ன? தமிழ் மொழிக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த தொண்டு என்ன? போன்றவற்றையும் நாம் தாராளமாக விவாதிக்கலாம்.

இதைப் பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தை பார்க்கவும், சிறிது தெளிவு வரும். 
முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறா? என்ற 50 நிமிட விவாதம்  பாண்டே மற்றும் சுகிசிவம்
  • முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam - https://www.youtube.com/watch?v=RmJ7OUEiRT0

திங்கள், 27 ஜூலை, 2020

கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்றால் என்ன?

கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட அறிவுரையை பின்பற்றி 'நம்முடைய‌ விசுவாசம் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தகுந்த சான்றுகளோடு பதில் கொடுப்பதாகும்'.

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)

"நாம் கிறிஸ்தவர்" என்று வெளியே தெரிந்தவுடன், அனேக வேளைகளில் பலர் பல கேள்விகளை கேட்பார்கள், சிலர் சில விஷயங்களை அறிந்துக்கொள்ள கேள்வி கேட்பார்கள், இன்னும் சிலர் நம்மை மட்டம் தட்ட கேள்வி கேட்பார்கள், அதாவது நாத்தீகர்கள் இறைநம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால் ஒரு சில கேள்விகளை கேட்பார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு நம் விசுவாசம் பற்றி பதில் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு வேளை ஒரு முஸ்லிமை நாம் காணும்போது, அவருடைய குர்‍ஆனிலும் இயேசு பற்றியும், கிறிஸ்தவர்கள் பற்றியும் சொல்லியுள்ளதால், அவரும் நம்மிடம் கேள்வி கேட்பார். அப்போது நாம் அவருக்கும் பதில் சொல்லவேண்டும்.

இது ஒரு புறமிருக்க, சிலர் நம்முடைய நம்பிக்கையை பொய்யாக்க நம்மிடம் கேள்வி கேட்பதும் உண்டு, உதாரணத்திற்கு முஸ்லிம்களையும், நாத்தீகர்களையும் சொல்லலாம்.

உதாரணம் 1: முஸ்லிம்களோடு விவாதம்: விசுவாசம் தாக்கப்படும் போது, பதில் சொல்லத்தான் வேண்டும்.

ஒரு முஸ்லிம் நம்மைப் பார்த்து, இயேசு தெய்வமில்லை என்று குர்‍ஆன் சொல்கிறது என்று சொல்லும் போது, அந்த குர்‍ஆனை படித்து அவர் சொல்வது போன்று குர்‍ஆன் சொல்கிறதா? என்பதை தெரிந்துக்கொண்டு, அதன் பிறகு அவருக்கு நம்முடைய தற்காப்பு பதிலை கொடுப்போம். நம்முடைய விசுவாசத்தை தற்காத்துக்கொள்வதற்காக பதில் சொல்லும் போது, குர்‍ஆனையும் ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட நேரங்களில் சில உரையாடல்கள் சூடு பிடித்து, ஒரு திட்டமிட்ட விவாதமாகவும் நடக்க வாய்ப்பு உருவாகிவிடுகிறது.

உதாரணம் 2: நாத்தீக புத்தகங்களுக்கு மறுப்பு:

நாத்தீகர்களுடைய முதலாவது நோக்கம் "இறைவன் இல்லை" என்பதை நிருபிக்கவேண்டும் என்பதாகும். இதற்காக அவர்கள் அனேக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்தவர்களில் சிலர் இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு சான்றுகளோடு பதில் சொல்வார்கள், நாத்தீகர்களோடு கூட விவாதங்களிலும் ஈடுபடுவார்கள். இதில் தவறு ஏதுமில்லை.

உதாரணம் 3: கள்ள உபதேசங்களுக்கு பதில்கள்:

அவ்வப்போது சில  கள்ள உபதேசங்கள் எழும்புகின்றன, பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்படுகின்ற‌ன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நாம் பதில் சொல்லவேண்டிய நிற்பந்தத்தில் தள்ளப்படுகிறோம்.

உதாரணம் 4: வலியச் சென்று விவாதம் புரிவது

மேலே சொன்னவைகள் ஒரு பக்கம் இருக்கும்போது, நாம் வாழும் சமுதாயத்தில் சில தவறான பழக்கவழக்கங்கள் நம் கண் எதிரே நடக்கும் போது, அவைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. நமக்கு உடனே ரோஷம் வந்து (ஆவி கொழுந்துவிட்டு எரியும் போது என்று ஆவிக்குரிய வட்டாரத்தில் இதனைச் சொல்லுவார்கள்), களத்தில் இறங்கி நியாயம் சொல்லவும், தீமையை கண்டித்துக் கேட்கவும் தொடங்கும் போதும் 'விவாத கேள்வி பதில்கள் நடைப்பெற வாய்ப்பு வாய்த்துவிடும்'.

உங்களுக்கு இந்த பாயிண்டு புரியவில்லையா? இதோ விளக்குகிறேன்.

நம் கண்ணெதிரே, சதி என்றுச் சொல்கின்ற பழக்கத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இந்த பழக்கம் இருந்தது.  கணவன் மரித்துவிட்டால், மனைவியையும் உயிரோடு வைத்து கொளுத்துவிடுவார்கள் (நல்ல பாரம்பரியம்!). அதே  போல, சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, மேலும் தேவதாசி என்றுச் சொல்லி கோயிலுக்கு  நேர்ந்துவிட்ட பெண்களை தவறாக பயன்படுத்தும் பழக்கம் போன்றவை இந்தியாவில் இருந்தன. இப்படிப்ப‌ட்டவைகளை பார்க்கும் போது, ஒரு கிறிஸ்தவனால் சும்மா இருக்கமுடியாது. இயேசு இவர்களின் உள்ளத்தில் இல்லாததால் தான் இப்படி 'தவறான பழக்கங்களுக்கு இவர்கள் அடிமையாகியுள்ளார்கள்' என்றுச் சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறும் போது, அது சண்டையாகவும், சில நேரங்களில் விவாதமாகவும், நம்முடைய உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவிடுவதுண்டு.

உதாரணம் 5: சுவிசேஷ கடமையை நிறைவெற்றப்போக  அது விவாதமாக மாறும் சூழ்நிலை

எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு நமக்கு  கொடுத்த கடமையாகிய 'நற்செய்தியை அறிவிப்பது' அனேக நேரங்களில், விவாதங்களாகவும் மாறிவிடுவதுண்டு. மற்ற மார்க்கத்தார்கள் நம்மை திட்டித்தீர்ப்பதும் இந்த கடமையை நிறைவேற்ற நாம் முயலுவதும் தான்.  நாம் நற்செய்தியையும், நம் சாட்சியையும் சொல்லாமல் இருக்கமுடியாதே!  இயேசு செய்த அற்புதங்களையும், வாழ்வைப்பற்றியும் சாட்சி பகராமல் இருக்கமுடியாதே! 

பெரும்பான்மையாக, எல்லா மக்களும் கேட்பது, 'ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவை அறிவிக்காமல் இருப்பதே இல்லை! எங்களுகெல்லாம் சாமி இல்லையா?' என்பதைத் தான். நாங்கள் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்! 'யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்' என்ற வாக்கியத்தின் படி, என் இரட்சிப்பை உலக மக்களுக்கு சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளாரே, அவருடைய கட்டளையை நிறைவேற்றாமல் இருக்கமுடியாதே!

கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்கள், 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட இரண்டாம் பாகத்தை மறக்கக்கூடாது: சாந்தத்தோடும், வணக்கத்தோடும் பதில் சொல்லவேண்டும்.

"யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)"

நற்செய்தி அறிவிக்கும் போது விவாதம் புரிவது பைபிளின் படி சரியானதா?

கிறிஸ்தவர்களில் சிலர் 'நாம் விவாதம் புரியக்கூடாது, பதில் சொல்லக்கூடாது, இது பைபிளின் சரி தவறானது, வெறும் நற்செய்தி மட்டும் தான் சொல்லவேண்டும்' என்று கூறுகிறார்கள்.  இது தவறான புரிதலாகும்.  நாம் ஒருவருக்கு நற்செய்தியைச் சொல்லும் போது, அவர் அமைதியாக கேட்டுக்கொண்டு இருப்பார் என்று எதிர்பார்க்கமுடியாது. அவர் பல கேள்விகளை கேட்டு, நம்மிடம் சரியான பதில்களை எதிர்ப்பார்ப்பார்.  சில நேரங்களில் அவரது தவறான புரிதலை நாம் அவருக்கு  விளக்கவேண்டும், அவரது தற்போதைய  நம்பிக்கையில் உள்ள வித்தியாசங்களை அவருக்கு எடுத்துக் காட்டவேண்டும்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு சான்றுகளோடு கூடிய பதில்களைக் கொடுப்பது தான் 'விசுவாச தற்காப்பு ஊழியம்' என்பது, இது தவறு என்று எப்படி சொல்லமுடியும்? 1 பேதுரு 3:15 சொல்வதும் இதைத் தானே!

விசுவாச தற்காப்பு ஊழியம் பற்றி நாம் கற்கவேண்டுமென்றால் நாம் முதலாவது இயேசுவிடம் தான் கற்கவேண்டும்.

இயேசுவும் விசுவாச தற்காப்பு ஊழியமும்:

இயேசுவிடம் பலர் கேள்விகளை கேட்டனர், கற்றுக்கொள்ளவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் இருந்தனர், இயேசுவை கேலி செய்யவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் உண்டு.  

இயேசு எல்லோருக்கும்  ஒரே மாதிரியான பதிலை கொடுக்கவில்லை. சிலரிடம் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டார், சிலருக்கு நேரடி பதில் கொடுத்தார்.  சிலரின் கேள்விக்கு ஒரு உவமையை பதிலாகச் சொன்னார், நேரடி பதில் தரவில்லை. தன்னிடம் கேள்வி கேட்பவர்கள் சிந்திக்கும் படிச் செய்தார்.

இயேசு 307 கேள்விகளை கேட்டதாகவும், அவர் நேரடியாக வெறும் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுத்ததாகவும், ஒருவர் ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்:

ஆக, விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது பைபிளுக்கு எதிரான செயல் அன்று.

விசுவாச தற்காப்பு ஊழியத்திற்கு யோபு புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு:

பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு புத்தகத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தாலும், அது பல  கேள்விகளாலும், ஞான வார்த்தைகளாளும், விவாதங்களாளும் நிரம்பியிருப்பதை பார்க்கமுடியும். யோபுவும், அவரது நண்பர்களும் ஒருவர் மாறி ஒருவர் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்வார்கள். கடைசியாக, தேவனும் யோபுவிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். யோபுவின் அந்த நிலைக்கு காரணம் யோபுவின் அநீதியான வாழ்க்கை என்று அரவது நண்பர்கள் குற்றம் சாட்டினார்கள். உடனே யோபு தன் நிலைப்பற்றி விவாதம் புரிந்தார். இப்படி பல முறை நடந்தது.

அப்போஸ்தலர் பவுலடியாரின் விவாதங்களும் தற்காப்பு ஊழியமும்:

பவுலடியார் ஊழியம் செய்யும் போதும், அது பல வேளைகளில் விவாதங்களாக, பேச்சுவார்த்தைகளாக மாறியதை பார்க்கமுடியும்.

கிரேக்கர்களிடம் பேசும் போதும், யூத ஆலயங்களில் பேசும் போதும் அவர் பல காரியங்களை விவாதங்களாக பதில்களாக முன்வைத்தார். ராஜாக்களுக்கு முன்பாக தன் நம்பிக்கைப் பற்றி சாட்சி சொல்லும் போது, மிகவும் தைரியமாக அதனை சொன்னார், சாட்சி சொல்வதும் ஒரு 'கிறிஸ்டியன் அபாலஜிடிக்ஸ்' இல்லையா?

கிரேக்கர்களாகிய மேதாவிகளிடம் பேசினார், இயேசுவின் நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிக்காட்டினார். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கையையும் தொட்டுத் தான் பேசினார்.

அப்போஸ்தலர் 17:

2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

16. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,

17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்

19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.

எனவே, கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்டது போன்று நம் விசுவாசம் குறித்து சாட்சி சொல்லி, மக்களின் சந்தேகங்களை தீர்க்கப்பட உதவி செய்து, மக்கள் சிந்திக்கும்படி சில வேளைகளில் எதிர்கேள்விகள் கேட்டு, நற்செய்திச் சொல்வதாகும்.

தேதி: 27th July 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/christian_apologetics.html

பைபிளில் வரும் அந்நிய ஜனம்/ ஜாதி (Gentile) என்ற வார்த்தையைப் பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

ஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, " gentilis " என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "நாடு அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள்" என்பதாகும். எபிரேய மொழியில் நாடு என்பதற்கு "கொய்(goy)" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் எல்லா நாடுகளையும் குறிக்க இந்த வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துவிட்ட பிறகு, 'ஜென்டைல்' என்றால் "மற்ற நாடுகள்" அதாவது யூதரல்லாத மற்ற நாடுகள் என்ற பொருளில் அது அமைந்துவிட்டது. 

இதன்படி பார்த்தால், யூதர்களின் படி 'கிறிஸ்தவர்களும்' ஜென்டைல் என்ற அந்நிய ஜனங்கள் தான். அனைத்து நாடுகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை, கடைசியாக யூதரல்லாத நாடுகளை மட்டுமே குறிக்க பயன்படும் படி ஆகிவிட்டது.

தமிழ் பைபிளில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நாடு அல்லது ஜனங்கள் என்று வரும் வார்த்தையை, தமிழில் "ஜாதி" என்று மொழியாக்கம் செய்துவிட்டார்கள். இந்திய சூழலில் ஜாதி என்ற வார்த்தை மிகவும் அதிகமாக அடிபடும் வார்த்தையாக உள்ளது.

 மக்களை கீழ்ஜாதி மேல்ஜாதி என்று பிரித்துப் பார்க்கும் இந்துக்களின் மொழி நடையினால், அனேகருக்கு "ஜாதி" என்ற வார்த்தையை பைபிளில் பார்க்கும் போது, பைபிள் கூட ஜாதி பார்க்கச்சொல்கிறதா? என்ற எண்ணம் வந்துவிடுகிறது. 

மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவேண்டுமென்றால், தேவன் முதல் மனிதனை படைக்காமல், முதல் மனிதர்களை படித்து இருந்திருப்பார். ஒரே ஒரு ஆதாமை படைக்காமல், பிராமண் ஆதாம் என்றும், ச‌த்திரியன் ஆதாம், வைசியன் ஆதாம், சூத்திரன் ஆதாம் என்று ஒவ்வொருவரையும் வெவ்வேறு  இடங்களிலிருந்து  படைத்து இருந்திருப்பார்.

எனவே, நாடு என்ற வார்த்தையைத் தான், பைபிளில் 'ஜாதி' என்று குறிப்பிட்டள்ளார்கள் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். பைபிள்  பொது மொழிப்பயெர்ப்பில் "ஜாதி" என்ற வார்த்தைக்கு பதிலாக, நாடு என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தியுள்ளனர்.

எபிரேய வார்த்தை "கொய்" என்பதற்கு எபிரேய அகராதியில் 1471 எண் கொடுக்கப்பட்டுள்ளது (https://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H1471&t=KJV ).  நாடு/ஜாதி/ ஜென்டைல் என்ற வார்த்தை யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளையும் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள்.

நோவாவின் பிள்ளைகள் தனி நாடுகளாக வளருவார்கள்:

Gen 10:32: These are the families of the sons of Noah, after their generations, in their nations: H1471 and by these were the nations H1471 divided in the earth after the flood.

ஆதியாகமம் 10:32

தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

பொது மொழிப்பயெர்ப்பு:

நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர். 

தமிழில் "ஜாதி" என்ற வார்த்தை, உண்மையில் "நாடு" என்று மொழியாக்கம் செய்யப்பட்டு இருந்திருக்கவேண்டும்.

ஆபிரகாமின் சந்ததி பெரிய நாடு ஆகும் என்ற ஆசீர்வாதம்:

Gen 12:2 : And I will make of thee a great nation, H1471 and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:

ஆதியாகமம் 12:2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

பொது மொழிப்பயெர்ப்பு:

நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.

இஸ்மவேலின் பிள்ளைகளும் பெரிய நாடாக மாறுவார்கள்:

Gen 17:20: And as for Ishmael, I have heard thee: Behold, I have blessed him, and will make him fruitful, and will multiply him exceedingly; twelve princes shall he beget, and I will make him a great nation. H1471

ஆதியாகமம் 17: 20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

பொது மொழிப்பயெர்ப்பு:

"நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும்.

இஸ்ரேல் மக்கள் தவறு செய்யும் போது, இதர நாடுகளின் கைகளில் அவதிப்படுவார்கள்:

இங்கும் இதே வார்த்தை, "நாடுகள்" என்ற வருகிறது. மற்ற நாடுகளின் கைகளில் இஸ்ரேல் மக்கள் அவதிப்படுவார்கள் என்ற பொருள் வருகிறது. நாடுகள் என்ற வார்த்தை தான் ஜென்டைல், புறஜாதி என்று பயன்படுத்துகிறோம்.

Lev 26:38: And ye shall perish among the heathen, H1471 and the land of your enemies shall eat you up.

லேவியராகமம் 26:38: புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.

பொது மொழிப்பயெர்ப்பு:

வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள்.

எனவே, ஜென்டைல் என்று ஆங்கிலத்தில் சொல்வதோ, தமிழ் மொழியாக்க பைபிளில் வரும் "ஜாதி" என்ற வார்த்தையோ "நாடு" என்பதைத் தான் குறிக்கும்.

தேதி: 27th July 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/gentile_nation.html

இஸ்லாம் கிறிஸ்தவம் சின்னஞ் சிறு கேள்வி பதில்கள்: 1000 - கிறிஸ்தவம் (401 - 420) - பாகம் 15

"சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000" தொடரின் முந்தைய பதிவுகளை இங்கு சொடுக்கி படிக்கலாம்.  இந்த தற்போதைய கட்டுரையில், "கிறிஸ்தவம்" என்ற தலைப்பில்  மேலும் 20 கேள்வி பதில்களைக் காண்போம்.


(பாகம் 15  - "கிறிஸ்தவம்"  கேள்விகள் பதில்கள் 401-420 வரை)

கேள்வி 401: இன்றைய எருசலேம், இஸ்ரேலின் தலைநகரமாக இருக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்களா?

பதில் 401:   ஜெருசலேம் நகரம் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பல முக்கிய நிகழ்வுகள் எருசலேமைச் சுற்றி நடக்கிறது. மேலும், இஸ்லாம் வந்த பிறகு, இரண்டாம் கலிஃபா உமர் அவர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அதனை கைப்பற்றிய பிறகு இன்னும் அதன் முக்கியத்துவம் பெருகிவிட்டது. இதுமட்டுமல்லாமல், கி.பி. 691ல், இஸ்லாமிய உம்மையத் கலிஃபா அப்துல் மாலிக் என்பவர், எருசலேமில் டெம்புல் மௌண்ட் என்ற இடத்தில், "டூம் ஆஃப் ராக்" என்ற கட்டிடத்தை கட்டியபிறகு, முஸ்லிம் நாடுகளின் பார்வை எருசலேம் பக்கம் திரும்பியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இயேசுவின் இரண்டாம் வருகையின் போதும், எருசலேம் முக்கிய  இடத்தை பிடிக்கும் என்றும் வெளிப்படுத்தின விசேஷத்தில்  காணமுடியும். பைபிளின் படி, எருசலேமில் நடக்கவேண்டிய தீர்க்கதரிசனங்கள் இன்னும் அனேகம் இருக்கின்றன.

இவைகள் ஒரு பக்கம் இருந்தாலும், புதிய ஏற்பாட்டின் படி, திருச்சபையும், அரசும் வெவ்வேறு ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கு எருசலேம் ஒரு முக்கிய நகரமாக இருந்தாலும், ஆவிக்குரியவர்களாக இருந்து, இன்றைய எருசலேம் நகரத்திற்காக போராட்டங்களில் ஈடுபடுவது போன்றவைகளை செய்யக்கூடாது. 

எருசலேமின் அமைதிக்காக ஜெபிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாகும். இயேசுவின் வருகைக்காக எதிர்ப்பார்த்துக்கொண்டும், பரிசுத்தமாக நம்மை காத்துக்கொண்டும் அவருக்காக‌ காத்திருப்பதுமே கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியவைகளாகும்.

கேள்வி 402: கிறிஸ்தவர்கள் ஏன் மேலை நாடு உடைகளை அணிகிறார்கள், ஏன் இந்திய உடைகளை அணிவதில்லை?

பதில் 402: இந்திய கலாச்சார உடைகளை கிறிஸ்தவர்கள் அணிவதில்லையென்று யார் சொன்னார்கள்? இது தவறான வாதமாகும். ஒரு சிலர் அணியும் உடைகளை கவனித்துவிட்டு, எல்லோரையும் குற்றப்படுத்துவது சரியில்லை. இன்றைய 21ம் நூற்றாண்டில், இந்திய உடைகள் என்றால் எவைகள் என்று அடையாளம் காட்டமுடியுமா?

பைபிள் கிறிஸ்தவர்களுக்கு "தகுதியான உடைகளை" அணிய கட்டளையிடுகிறது. கீழ்கண்ட வசனங்கள் பெண்களுக்கு சொல்லப்பட்டாலும், அவைகள் ஆண்களுக்கும் பொருந்தும்.  இந்திய உடைகளோ, மேலை நாட்டு உடைகளோ 'நாகரீகமான உடைகளை' அணிய பைபிள் சொல்கிறது.

I தீமோத்தேயு 2:9, 10

9. ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,

10. தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

கிறிஸ்தவர்களிலும் சிலர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, அவைகளில் பெண்கள், ஆண்கள் உடைகளை அணிவது போன்று "அநாகரீகமான" உடைகளை அணிவது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்ல. 

உடைகள் விஷயத்தில் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு பழக்கமானாலும் சரி, அதைச் செய்வது 'நமக்கு தகுதியாக இருக்குமா? என்று பார்த்து செயல்படவேண்டும்.

I கொரிந்தியர் 6:12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

I கொரிந்தியர் 10:23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.

பொதுவாக இஸ்லாம் "மக்களை கட்டாயப்படுத்தியாவது ஒரு காரியத்தை நிறைவேற்ற‌ முயற்சி எடுக்கும்", ஆனால் கிறிஸ்தவம் "அன்பால் சொல்லிக் கொடுக்கும், கட்டாயப்படுத்தி செய்யச் சொல்லாது". இதனால் சிலர் தங்கள் தகுதிக்கு ஏற்காத உடைகளை அணிந்து சபைக்கு வருவதும், வேலை செய்யும் இடங்களிலும் மற்றவர்கள் இடறிவிழும்படி அணிவதும் செய்கிறார்கள். இவைகளை ஆண்களும், பெண்களும் செய்கிறார்கள்,  இவைகள் தவறான செயல்களாகும். தங்களுடைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறவர்கள். சிலர் பைபிளுக்கு எதிராக நடந்துக்கொண்டால், அதற்கு கிறிஸ்தவத்தை குறை கூற முடியாது.

நம் திருச்சபைகளில் ஒரு பெண் த‌ன் உள்ளாடைகள் தெரியும் வகையில் மிகவும் மெல்லிய மேலாடைகளை அணிந்துக்கொண்டும், முழங்காலுக்கு மேலே தெரியும் வண்ணம் குட்டை பாவாடையை போட்டுக்கொண்டு வந்து, சபையின் பரிசுத்தத்தை கெடுத்தால், யாரைக் குற்றப்படுத்துவது?  அப்பெண்ணின் பெற்றோர்களையும், அந்த சபையின் போதகரைத்தானே!

மற்றவர்களின் பரிசுத்தத்திற்கும், விசுவாசத்திற்கும் இடறல் உண்டாக்கும் படி நாம் வாழக்கூடாது என்று இயேசு கூறியுள்ளாரே!

மத்தேயு 18:6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.

என் உடல், என் உடைகள், நான் எப்படியாவது அணிவேன் என்று இன்றைய சினிமா நடிகை நடிகர்கள் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் இப்படி சொல்லக்கூடாது.

கேள்வி 403: பழைய ஏற்பாட்டு நபர்கள் பலதார திருமணம் புரிந்திருப்பதினால், ஏன் கிறிஸ்தவர்களும் பலதார திருமணம் புரியக்கூடாது?

பதில் 403: பலதாரமணம் ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அது ஒரு நல்ல சமுதாய பழக்கம் என்று பைபிள் எங்கும் சொல்லவில்லை. பழைய ஏற்பாட்டில் பல பேர் பலதாரமணம் புரிந்தவர்களாக இருந்தார்கள், உதாரணத்திற்கு ஆபிரகாம்,யாக்கோபு, தாவீது, சாலொமோன் என்றுச் சொல்லலாம்.  அப்படியானால், ஒரு காலத்தில் (பழைய ஏற்பாட்டில்) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பழக்கம் எப்படி புதிய ஏற்பாட்டில் மாறிவிட்டது என்ற கேள்வி எழும். இதற்கு சில காரணங்கள் உள்ளன.

மனித சமுதாயம் சரியாக வளராத பழமையான காலக்கட்டத்தில், அதாவது இன்றிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டால், மனித சமுதாயம் 'ஆண்களை தலைவர்களாக கொண்ட சமுதாயமாக' இருந்தது.  பெண்களுக்கு படிப்போ, பாதுகாப்போ இல்லாத காலமாக இருந்தது. ஒரு பெண் எப்போதும் ஒரு ஆண் துணையுடன் இருக்கவேண்டி இருந்தது. முதலாவதாக தன் தந்தையின் மீதும், அதன் பிறகு சகோதரர்கள் மீதும் சார்ந்து வாழவேண்டும், திருமணமாகிவிட்ட பிறகு கணவன் மீது சார்ந்து வாழவேண்டி இருந்தது.

அக்காலத்தில் அனாதையாகிவிட்டால், அதாவது தந்தை, சகோதரன் மற்றும் கணவன் என்று எந்த ஒரு ஆணின் துணையில்லாமல் இருந்தால், அவளவு வாழ்வாதாரத்திற்கு வழியும் இல்லாமல் போய்விடும்.  யாராவது ஒருவருக்கு  அடிமையாகவேண்டி வரும், அல்லது விபச்சாரம் போன்ற செயல்களிள் ஈடுபடவேண்டி வரும். எனவே, பலதார மணம் இருந்தால், ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வான், அந்த அனாதை பெண்களுக்கு தேவையான‌ உணவு, உடை, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு கிடைத்துவிடும். ஒரு ஆணின் துணை இருப்பதினால், மற்ற ஆண்கள் தவறாக அப்பெண்ணை பார்க்க வாய்ப்பு இல்லை. இது ஒரு காரணம் ஆகும்.  மேலும் ஆதி காலத்தில் மக்கள் வேகமாக பெருகி பூமியை நிறப்புவதற்கு, பலதாரமணம் தேவையாக இருந்தது.

ஆதிகாலத்தில் பலதார மணத்தை தேவன் அங்கீகரிக்கவும் இல்லை, அதை தடை செய்யவும் இல்லை.  ஆனால், அதனால் உண்டாகும் பிரச்சனைகளை தன் வேதம் முழுவதும் சொல்லிக்கொண்டே   வந்தார், காலம் செல்லச் செல்ல அவைகளைப்  எச்சரித்து வந்தார்.

கடைசியாக, மக்கள் முன்னேறி மற்றும் பூமியை நிறப்பிய பிறகு, தன் உண்மையான நோக்கத்தை தெள்ளத்தெளிவாகச் சொல்லி தடை விதித்தார்.

ஆரம்பத்திலிருந்து பலதாரம் பற்றி பைபிளின் நிலைப்பாட்டை சுருக்கமாக காண்போம்:

  • ஆதியிலிருந்து தேவன் "ஒருத்தனுக்கு ஒருத்தி" என்ற கோட்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக கொண்டு இருந்தார் (ஆதி 1:27; 2:21-25).
  • ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு மனித ஆரம்பத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது , பாவம் அதனை முரிக்கும் வரைக்கும் (ஆதி 4:1).
  • மோசேயின் சட்டம் "ஆனேக ஸ்திரிகளை திருமணம் செய்யவேண்டாம்" என்று தெளிவாகச் சொல்கிறது. (உபா 17:17)
  • பலதாரமணத்தைப் பற்றிய எச்சரிக்கையை மறுபடியும் 1 இராஜாக்கள் 11:1,2 வசனங்கள் எடுத்துக்கூறுகின்றன.  அனேக திருமணங்கள் மூலமாக எப்படி தேவனுக்கு எதிரான பாவத்தை சாலொமோன் செய்தார் என்று இந்த அதிகாரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
  • இயேசுவும் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற ஆதியிலிருந்த  அமைப்பை மறுபடியும் மத்தேயு 19:4ல்  ஞாபகப்படுத்துகிறார்.
  • புதிய ஏற்பாடு, "ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்" என்று கட்டளையிடுகிறது (1 கொரிந்தியர் 7:2)
  • மேலும் சபை ஊழியர்கள் ஒரே மனைவியை உடையவர்களாக இருக்கவேண்டும் என்று மறுபடியும் புதிய ஏற்பாடு கட்டளையிடுகிறது (1 தீமோத்தேயு 3:,2,12). இது சபை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த கட்டளை பொருந்தும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த நபர்கள் பல திருமணங்களை செய்தார்கள், அதை தேவன் கட்டளையிட்டதினால் தான் செய்தார் என்று சொல்லமுடியாது. பழைய எற்பாட்டுக் காலத்தில் பலதாரமணத்தை தேவன் ஆசீர்வதிக்கவில்லை, அதற்கு பதிலாக இதனால் விளையும் தீமைகளை ஆங்காங்கே குறிப்பிட்டு எச்சரித்துள்ளார். ஆபிராகாமின் குடும்பத்தில்  நிலவிய பிரச்சனை(சாராள், ஆகார், இஸ்மவேல், ஈசாக்கு), யோசேப்புவின் வாழ்வில் நடந்த காரியங்கள் (தன் சகோதரர்களால் பட்ட பாடுகள்), சாலொமோனின் பாவம்  என்று அனேக இடங்களில் பலதாரமண குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தேவன் வெளிக்காட்ட தவறவில்லை. 

பழைய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகள் நமக்கு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிறிஸ்தவன் இயேசு போதித்த போதனையில் வாழுவதினால், அவன் பலதார மணத்தை பின்பற்றுவதில்லை.

இயேசு வந்த பிறகு, தேவனின் மனதில் இருந்ததை அவர் உடைத்து போட்டுவிட்டார். 

மத்தேயு 19:4-6

4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,

5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

எனவே, கிறிஸ்தவர்கள் பலதார மணம் புரிவது வேதத்திற்கு எதிரானதாகும்.

கேள்வி 404: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?

பதில் 404: பைபிளை படிக்கும் நீங்கள் குர்-ஆனை படிப்பதினால் எந்த பிரச்சனையும் இல்லை, அது குற்றமும் ஆகாது. ஆனால், குர்-ஆனை படிக்கவேண்டிய அவசியம் உண்டா இல்லையா? என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.

குர்-ஆனை படிப்பது என்றால் என்ன?

நீங்கள் "குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்தீர்கள்" என்றுச் சொல்கிறீர்கள், இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் குர்-ஆனை எந்த மொழியில் படித்துக்கொண்டு இருந்தீர்கள்? என்பதாகும்.

நீங்கள் இதற்கு முன்பு, அரபியில் குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்திருந்தால், இப்போது அதனை அரபியில் படிப்பதினால் எந்த ஒரு நன்மையும் இல்லை. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பதினால் என்ன நன்மை உங்களுக்கு கிடைத்தது?  அதே போல, இப்போதும் அதனை அரபியில் படிப்பதினால் என்ன நன்மை? எனவே, இரட்சிக்கப்பட்ட ஒருவர், தனக்கு புரியாத மொழியில் குர்-ஆனை படிப்பதினால் ஒரு நன்மையும் அவருக்கு உண்டாகாது. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பனும், இந்து கோயில்களில் பூசாரி சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் சொல்லும் போது, பக்தி ததும்ப புரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பனும் சமமே! இருவருக்கும் காதுவரைக்கும் எட்டிய சத்தங்கள் மூளைக்கு எட்டுவதில்லை. 

நமக்கு அரபி அல்லது சமஸ்கிருதம் மொழி புரியாமல் இருக்கும் போது, இம்மொழிகளில் ஓதப்படும் மந்திரங்கள் நம் காதுகளை எட்டினால், அவைகள் வார்த்தைகள் அல்ல, அவைகள் வெறும் சத்தங்கள் தான்.

குர்-ஆனை தமிழில் படித்தல்:

இதுவரை அரபியில் மட்டுமே புரியாமல் குர்-ஆனை படித்த நீங்கள், இப்போது தமிழில் படிக்க விரும்பினால், அது வரவேற்கத்தக்கது. வேதம் என்ற நிலையில் குர்-ஆன் இல்லை. இருந்தாலும், அதில் என்ன சொல்லியிருக்கிறது என்ற அறிவைப் பெறுவதற்காக நீங்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இது குற்றமாகாது. குர்-ஆன் என்பது மட்டுமல்ல, மதசார்பற்ற புத்தகங்களையும், நாத்தீகர்கள் எழுதும் புத்தகங்களையும் அறிவு பெருக்கத்துக்காக படிக்கலாம், இதில் தவறில்லை. நான் கிறிஸ்தவ-இஸ்லாமிய கட்டுரைகளுக்காக, அடிக்கடி குர்-ஆனை படிக்கிறேன்.

குர்-ஆனை தமிழில் படிப்பதின் அவசியம்:

இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்து கிறிஸ்தவத்தை நாம் பின்பற்றுவதினால், குர்-ஆனின் போதனைகள் பற்றி ஓரளவிற்கு தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கவேண்டும். பல நூறு முறை நாம் அரபியில் குர்-ஆனை படித்திருந்தாலும், இயேசுவை பின்பற்றுகிறவனாக மாறிய பிறகு, ஒரு முறையாவது குர்-ஆனை தமிழில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்லுவேன்.

சில வேளைகளில் முஸ்லிம்கள் நம்மிடம் பேசுவார்கள், விவாதிப்பார்கள், நமக்கு குர்-ஆன் பற்றி ஒன்றுமே தெரியாது என்றுச் சொல்வார்கள். இவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றால், நாம் குர்-ஆனை தமிழிலும் படித்து அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். 

புண்ணியம் கிடைக்கும், நன்மை கிடைக்கும் என்று நம்பி யாரும் குர்-ஆனை படிக்கத் தேவையில்லை. மக்களை இஸ்லாமின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை இஸ்லாம் முன்மொழிகின்றது. புரியாமல் படித்தாலும் நன்மைகள் வரும் என்றுச் சொல்வது அறிவுடமையன்று.

சுருக்கம்:

1) குர்-ஆனை அரபியில் படிப்பதினால் எந்த நன்மையும் இல்லை.

2) குர்-ஆனை தமிழில் படிப்பதினால், அதன் போதனைகளை தெரிந்துக்கொண்டு, இஸ்லாம் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ளமுடியும்.

3) குர்-ஆனை அரபியிலோ தமிழிலோ படிப்பதினால், புண்ணியமோ, நன்மையோ இல்லை. புண்ணியம் கிடைக்கும் என்றுச் சொல்வது முடநம்பிக்கையாகும். பைபிளையும் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் புரிந்துக்கொள்ளாமல் படித்தால் புண்ணியம் என்றுச் சொன்னால், இதையும்  நம்பாதீர்கள்.

4) முஸ்லிம் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு, குர்-ஆன் பற்றிய குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகின்றது, இது முஸ்லிம்களோடு உரையாடும் போது பயன்படும்.

5) அறிவைப் பொருத்தமட்டில், பார்க்காதே! தொடாதே! என்று கிறிஸ்தவம் சொல்வதில்லை. பார், தொடு ஆனால் புரிந்துக்கொள் என்று தான் சொல்கிறது. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(1 தெச 5:21)

6) நீங்கள் ஒரு பாஸ்டராக  இருப்பீர்களானால், நிச்சயம் குர்-ஆனையும், அதன் விளக்கவுரைகளையும் படித்து கற்றுக் கொள்ளவேண்டும். இது நற்செய்தி அறிவிப்பதற்கு பயன்படும்.

7) பைபிளையும் குர்-ஆனையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறவர்கள் குர்-ஆனை படிக்கலாம். பைபிளின் நிகழ்ச்சிகள் எப்படி குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை படித்து ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளலாம்.

நான் கிறிஸ்தவத்தை ஏற்றுகொண்ட பிறகு, புதிய ஏற்பாட்டை நன்கு படித்து அறிந்துக்கொண்ட பிறகு நான் செய்த முதல் காரியம், என் வீட்டில் தமிழ் குர்-ஆனை கொண்டு வந்தேன். அது வரை என் வீட்டில், அரபி குர்-ஆன் மட்டுமே இருந்தது. சென்னைக்கு என் உறவினர் ஒருவர் சென்ற போது, தமிழ் குர்-ஆன் ஒன்றை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன், அவரும், முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்தை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். என் கட்டுரைகளில் நான் முஹம்மது ஜான் தமிழாக்கத்தை அதிகமாக பயன்படுத்த இதுவும் ஒரு காரணம். அதன்  பிறகு அதனை நான் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன், இன்றுவரை அந்த தமிழாக்கம் என்னிடம் உள்ளது.

எனவே, ஒரு புதினத்தை படிப்பது போன்று கிறிஸ்தவர்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இதில் தவறு இல்லை. 

கேள்வி 405: நான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று சபைக்கு வந்துக்கொண்டு இருந்து, அதே நேரத்தில் மசூதியில் நமாஜூம் செய்தால், இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?

பதில் 405: ஒரு கிறிஸ்தவர் தன்  ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்காக, இஸ்லாமிய நூல்களையும் குர்‍ஆனையும் தமிழில் படிக்கலாம் என்பதை மேலே உள்ள பதிலில் விளக்கினேன்.  ஆனால், இந்த கேள்வியில் கேட்டது, வெறும் குர்‍ஆன் படிப்பது பற்றி அல்ல, மசூதியில் சென்று , நமாஜ் என்றுச் சொல்லக்கூடிய தொழுகை நடத்துவதாகும்.

ஒருவர் இஸ்லாமிய தொழுகை செய்தால், அவர் கீழ்கண்டவைகளை அறிக்கையிடுகிறார்:

1) நேரடியாக அல்லாஹ் இறைவன் என்றுச் சொல்கிறார் (மறைமுகமாக யெகோவா தேவனை புறக்கணிக்கின்றார்).

2) நேரடியாக முஹம்மது அல்லாஹ்வின் தீர்க்கதரிசி என்று அறிக்கையிடுகின்றார் (மறைமுகமாக யெகோவா தேவனை புறக்கணிக்கின்றார், அதாவது முஹம்மது யெகோவா தேவனின் தீர்க்கதரிசி அல்ல)

3) இயேசுவின் தெய்வீகத்தன்மையை புறக்கணிக்கின்றார்

4) இயேசு கொடுத்த இரட்சிப்பையும், கிருபையையும் புறக்கணிக்கின்றார்

கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒன்றையொன்று அடிப்படை கோட்பாடு அளவில் எதிர்க்கின்றன. கிரியை மூலமாக என் நீதியை நிலைநாட்டுவேன் என்று நாம் சொல்லும்போது, கிருபை மூலம் கிடைக்கும் இரட்சிப்பை நாம் வேண்டாம் என்று சொல்கிறோம் என்று பொருள்.

அல்லாஹ் என்பவன் தெய்வமில்லை, முஹம்மது என்பவர் யெகோவா தேவன் அனுப்பிய நபி இல்லை என்று அறிக்கையிட்டுவிட்ட பிறகு எப்படி "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதன் ரஸூலுல்லாஹ்" என்று சொல்லமுடியும்? விக்கிரக வணக்கம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட பிறகு எப்படி சிலைகளுக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்து தொழமுடியும்?

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?

II கொரிந்தியர் 6:13-18

13. ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன். 

14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?  15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? 16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

தொழுதுக்கொண்டால் மெய்யான தேவனை தொழுதுக்கொள்ளவேண்டும், அல்லது பொய்யான தெய்வமாகிய அல்லாஹ்வை தொழுதுக் கொள்ளவேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யமுடியாது.

கேள்வி 406: உன் அயலானை நேசி என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். மத நல்லிணக்கத்திற்காக, என் சபையை முஸ்லிம்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள நான் ஏன் அனுமதிக்கக் கூடாது?

பதில் 406: மதநல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கு, மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ போதகர்கள் தங்கள் திருச்சபையை மாற்று மத அன்பர்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள அனுமதிக்கிறார்கள். முக்கியமாக, முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தொழுது கொள்வதற்கு தங்கள் திருச்சபையை சில மணி நேரங்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். இது சரியான செயலா? அல்லது பரிசுத்த வேதாகமத்தின் படி இது அனுமதிக்கப்படாத செயலா?

இது மத நல்லிணக்கமில்லை, இது அறியாமை ஆகும்.  இயேசு மத நல்லிணக்கத்தை பேணும் படி சொல்லவில்லை, அவர் மனித நல்லிணக்கத்தை பேணும்படி கட்டளையிட்டார். நம் அயலானை நாம் நேசிப்பதற்கும், அந்த அயலான் வணங்கும் தெய்வத்தை அவன் தொழுதுக்கொள்ள நம் திருச்சபையில் இடமளிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

கிறிஸ்த சபையில் மாற்றுமத அன்பர்கள் தங்கள் வணக்க வழிபாடு செய்ய அனுமதிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இயேசு தன் சுய இரத்தம் சிந்தி சம்பாதித்த திருச்சபையில், அந்நிய தெய்வங்களை வணங்க இடம் தருவது, இயேசுவை அவமானப்படுத்துவதற்கு சமம், மற்றும் இயேசுவிற்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமாகும்.

கேள்வி 407: உன்னைப்போல உன் அயலானை நேசி என்று இயேசு கூறினாரே, இதன் அர்த்தமென்ன? நாம் மாற்றுமத நண்பர்களை அதாவது முஸ்லிம்களை, இந்துக்களை நேசிக்கக்கூடாதா?

பதில் 407: உன் அயலானை நேசி என்று இயேசு சொன்னது, உன் அயலகத்தாராகிய முஸ்லிம்கள், இந்துக்கள் பசியாக இருந்தால் அவர்களுக்கு உணவு கொடுங்கள். அவர்கள் வியாதியாக இருந்தால், அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, உதவி புரியுங்கள். அவர்களுக்கு உடை தேவையென்றால் அதனை கொடுத்து உதவுங்கள் என்று பொருள். இப்படி நம் அயலானை நேசிப்பதைத்தான் இயேசு கூறினாரே தவிர,  அவனுடைய மதத்தை நேசிப்பதைப் பற்றி இயேசு கூறவில்லை.  அவனுடைய பழக்க வழக்கங்களை பின்பற்றும்படிச் சொல்லவில்லை. இந்துக்களை நேசியுங்கள் என்றுச்  சொன்னால், அவர்கள் பின்பற்றும் பழக்கங்களாகிய வாஸ்து பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 'கணவன் மரித்தால், அவன் மனைவியையும் அவனோடு கொளுத்தும்' இந்துக்களின் பழக்கங்களை பின்பற்றும் படி அல்ல.

எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவம் ஏற்பதில்லை. அதற்கு பதிலாக, எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி அவருக்கு உதவி புரிவதை ஊக்குவிக்கிறது.

கேள்வி 408: இயற்கை சீற்றங்களின் காலங்களில் மாற்றுமத அன்பர்களுக்கு என் திருச்சபையை திறந்து அவர்கள் தங்க இடம் தரலாமா?

பதில் 408: இயற்கை சீற்றங்களாகிய மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் நம் திருச்சபைகளை மற்ற மக்களுக்காக கட்டாயமாக திறந்து கொடுக்கவேண்டும்.

மனிதன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனுக்கு ஆபத்து என்றால், உதவி என்று ஒன்று தேவைப்பட்டால், அதற்காக உங்கள் திருச்சபையை திறந்து கொடுங்கள், அங்கே அவர்கள் தங்கட்டும். மருத்துவ உதவியும் தேவைப்பட்டால் செய்யுங்கள். 

அவனுக்கு பசியென்றால் உணவு வழங்குங்கள். நீங்கள் இரண்டு வேளை பட்டினியாக இருக்கநேரிட்டாலும், அவன் பசியை போக்குங்கள், இது தான் இயேசு காட்டிய வழி.

அவனுக்கு உடுக்க உடை இல்லையென்றால், உங்களிடம் இருப்பதை கொடுங்கள். இயேசுவின் கட்டளையின் படி, நம்மிடம் இரண்டே உடைகள் இருந்தாலும், அதில் ஒன்றை இல்லாதவருக்கு கொடுக்கவேண்டும், அதாவது நம்மிடம் உள்ள உடைகளில் 50% ஐ கொடுக்கும் படி இயேசு கட்டளையிட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால், நம் அயலான் தேவையில் இருந்தால், அவனுக்கு இருக்க இடமும், உண்ண உணவும், உடுத்த உடையும் கொடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை, முக்கியமாக திருச்சபையை நடத்தும் போதகருக்கு அதிகபடியான கடமையுள்ளது.

கேள்வி 409: தேவையில் உள்ளவன் தங்குவதற்கு திருச்சபையை திறந்துக்கொடுத்து உதவிய நாம், ஏன் வெள்ளிக்கிழமை அன்று தன் இறைவனை அவன் தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது?

பதில் 409: இந்த இடத்தில் தான் கிறிஸ்தவர்களாகிய நாம் அனேக முறை தவறு செய்கிறோம். மனிதனை நேசிப்பது பற்றி தான் நான் மேலே குறிப்பிட்டேன், மதத்தை நேசிப்பது பற்றியல்ல.

உன்னைப்போல் உன் அயலானை நேசி என்று இயேசு சொன்ன இரண்டாவது கட்டளையை நாம் பின்பற்றுவதற்கு முன்பாக, இயேசுவின் முதலாம் கட்டளையை பின்பற்றவேண்டும்.

மத்தேயு 22; 37-40

37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக

38. இது முதலாம் பிரதான கற்பனை.

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

தேவையில் உள்ள மனிதனுக்காக உங்கள் சபையை திறந்து கொடுங்கள், தவறில்லை. தேவைப்பட்டால் அந்த  மனிதனின் உயிரைக் காக்க, தேவாலயத்தின் காணிக்கை பெட்டியில் விழும் அனைத்து காணிக்கையையும் செலவழியுங்கள் (பல ஆயிரங்கள், இலட்சங்கள் கூட இருக்கலாம்), இதுவும் தவறில்லை. ஆனால், பரிசுத்த தேவனை தொழுதுக்கொள்ளும் ஆலயத்தில், பொய்யான தெய்வங்களை தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டாம், இது வேதத்தின்படி தவறு, கர்த்தரை மறுதலிக்கும் செயல் ஆகும்.

உங்களுக்கு இன்னும் புரியவில்லையென்றால், இதை கவனியுங்கள்.  ஒரு உதவியற்ற‌ முஸ்லிமின் உயிரைக் காக்க திருச்சபையை அடமானம் வைத்து, அல்லது விற்றுவிட்டு கூட நீங்கள் உதவுங்கள். ஆனால், அந்த சபையில் அவன் தன் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கும் முட்டாள்தனத்தைச் செய்யாதிருங்கள்.  

தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் முதலாவது கட்டளை: 

யாத்திராகமம் 20: 3-4

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

எனவே, அந்நிய தெய்வங்களை தொழுதுக்கொள்ள நம் திருச்சபையை கொடுக்கக்கூடாது. இது கொஞ்சம் கடினமான உபதேசம் தான், ஆனால் வேறு வழியில்லை, சத்தியத்தை சொல்லாமல் இருக்கக்கூடாதே.

இதுவரையில் சொல்லப்பட்டவைகளை கவனித்தால், மனித நல்லிணக்கத்தை பேணும்படி பைபிள் சொல்வதை கவனிக்கமுடியும், மதநல்லிணக்கத்தை அல்ல.

கேள்வி 410: ஒருவேளை நம் சபையை முஸ்லிம்களுக்கு தொழுகைக்காக திறந்துவிட்டால் என்ன தீமை உண்டாகிவிடும்?

பதில் 410: நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? (II கொரிந்தியர் 6:14). 

ஒரு கிறிஸ்தவ சபை போதகர் தன் சபையை மாற்று மத ஆராதனைகளுக்கு திறந்து கொடுக்கும் போது, அவர்:

1) அந்த அந்நிய மதம் கூட, கிறிஸ்தவம் போன்ற ஒரு மார்க்கம் தான் என்று ஒப்புக்கொள்கிறார் என்று அர்த்தம்.

2) தன் சபை விசுவாசிகள் தவறுவதற்கும், குழம்புவதற்கும் அவர் காரணமாக ஆகிவிடுகிறார்.

3) தேவன் தம் விரல்களால் எழுதிக்கொடுத்த 10 கட்டளைகளில் முதலாவது கட்டளையை மீறுகிறார் என்று பொருள்.

4) இயேசு கட்டளையிட்ட இரண்டு கட்டளைகளில் முதலாவது கட்டளையை மீறுகிறார் என்று அர்த்தம்.

5) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்லியிருக்கும் போது, வேறு ஒரு வழியும் உண்டு என்றுச் சொல்லி, இயேசுவிற்கு எதிராக செயல்பட்டதற்கு சமமான செயலாகும்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மனிதனின் மதத்தைப் பார்க்காமல், மனித நல்லிணக்கத்தை பேணவே பைபிள் நமக்கு கட்டளையிடுகிறதே தவிர, 'மத நல்லிணக்கத்தைப் போண' அல்ல.

கேள்வி 411: சில திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக பகவத் கீதை மற்றும் குர்‍ஆன் போன்ற புத்தகங்களில் சில வசனங்கள் படிக்கப்பட்டதாக கேள்விப்படுகிறோமே! இவைகள் சரியான செயல்களா?

பதில் 411: இவைகள் எப்படி சரியான செயல்களாக இருக்கமுடியும்?

கிறிஸ்தவ திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக  குர்‍ஆனை படிக்கவைப்பது, பகவத்கீதையை படிக்கவைப்பதெல்லாம், தவறான செயல்கள், அறியாமையின் உச்சக்கட்டங்கள். இப்படிப்பட்ட திருச்சபை போதகர்களுக்கு  பைபிளும் தெரியாது, குர்‍ஆனும் தெரியாது, பகவத் கீதையும் தெரியாது.

மனிதனை நேசி என்றுச் சொன்னால், அவன் மார்க்கத்தை ஏன் நேசிக்கிறீர்கள்?

கிறிஸ்தவ ஊழியர் ரவி ஜகரியா அவர்கள் மிகவும் தெளிவாக இப்படி கூறுவார்: "மேலோட்டமாக பார்க்கும் போது, அனைத்து மதங்களும் ஒன்று போலவே தென்படும், ஆனால் அடிப்படை கோட்பாடுகளில் அவைகள் வித்தியாசமானவைகள், அவைகள் சமம் அல்ல".

கிருஷ்ணன்:

பகவத் கீதையில் கிருஷ்ணன், நான் தான் இறைவன், என்னால் அனைத்தும் படைக்கப்பட்டது என்று சொல்லும் போதே, அவர் மற்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்கிறார் என்று அர்த்தம்.

அல்லாஹ்: 

லாயிலாஹ இல்லல்லாஹ் என்று குர்‍ஆன் சொல்லும் போதே, அதாவது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று குர்‍ஆன் சொல்லும் போதே, மற்ற மார்க்கங்களை அது புறக்கணிக்கிறது என்று அர்த்தமாகின்றதல்லவா? இதுகூடவா நமக்கு புரியாது?

இயேசு:

நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று இயேசு சொன்னபோதே, அவர் மற்ற மார்க்கங்களை புறக்கணிக்கிறார் என்று புரிகின்றதல்லவா?

உண்மை இப்படி இருக்க, ஒரு மார்க்கத்தை புறக்கணித்த‌ வேதத்தை கொண்டு வந்து இன்னொரு மார்க்க ஆலயத்தில் வாசித்தால், என்ன அர்த்தம்? யாருடைய காதில் பூவைக்க பார்க்கிறார்கள் இவர்கள்?

மத நல்லிணக்கம் நமக்கு தேவையில்லை, மனித நல்லிணக்கம் தான் தேவை.

நான் முஸ்லிம்களை நேசிக்கிறேன் என்றுச் சொல்லி, அவன் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள உன் திருச்சபையை திறந்து நீ கொடுத்தால், நீ கிறிஸ்தவனில்லை, நீ இயேசுவின் சீடனில்லை. 

தேவைப்பட்டால், அந்த முஸ்லிமின் உயிரைக் காக்க அவனது அறுவை சிகிச்சைக்காக‌, உன் திருச்சபையை விற்று அவனுக்கு உதவி புரி. இயேசு உன் செயலைக் கண்டு மகிழ்வார். அவரது இரண்டாம் வருகையில் உங்களைப் பார்த்து, நான் வியாதியாய் இருந்தேன் என்னை பார்க்கவந்தீர்கள், உதவி செய்தீர்கள் என்று கூறி உங்களை மெச்சிக்கொள்வார். நான் எப்போது உங்களுக்கு உதவி செய்தேன் என்று  நீங்கள் கேட்கும் போது, நீ அந்த முஸ்லிம் சகோதரனுக்குச் செய்தது எனக்கு செய்தது தான் என்று சொல்லுவார்.

கிறிஸ்தவ ஊழியர்களே! போதகர்களே! நன்றாக கவனியுங்கள், மனிதனுக்குச் செய்யும் உதவிக்கும், மத நல்லிணக்கம் என்றுச் சொல்லி செய்யும் உதவிக்கும் இடையே இமாலய அளவு வித்தியாசம் உள்ளது. இதனை புரிந்துக்கொண்டால் தான் நீங்கள் இயேசுவிற்காக உண்மையான ஊழியராக சேவை செய்யமுடியும்.

கேள்வி 412: இயேசுவைப்போன்று முஹம்மதுவும் ஒரு தீர்க்கதரிசி என்பதால், ஏன் கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை பின்பற்றுவதில்லை?

பதில் 412: முஹம்மது என்பவர் ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று இஸ்லாம் சொல்கிறது. கிறிஸ்தவமோ அல்லது பைபிளோ முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்வதில்லை. இதுமட்டுமல்லாமல், பைபிளின் அடிப்படை கோட்பாடுகளின் படி, முஹம்மதுவை நோக்கும் போது, அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று தெரிகின்றது. எனவே, பைபிள் ஒருவரை 'கள்ளத்தீர்க்கதரிசி' என்று அடையாளப்படுத்தி காட்டும் போது, பைபிளுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் எப்படி 'முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசி' என்று ஏற்றுக்கொள்வார்கள்?

"இயேசுவைப் போன்று முஹம்மதுவும் ஒரு தீர்க்கதரிசி" என்றுச் சொல்வதே, கிறிஸ்தவத்திற்கு அவதூறு ஆகும்.

அடுத்தபடியாக, இயேசு வெறும் தீர்க்கதரிசி மட்டுமல்ல, அவர் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார். அவர் இறைவனுடைய வார்த்தையாகவும், மேசியாவாகவும் இருக்கிறார்.  பைபிளின் வசனங்களை ஆய்வு செய்தால், இயேசுவிற்கு தெய்வீகத்தன்மை உண்டு என்றும், அவர் இறைவனாக இருப்பதாகவும் அறியமுடியும்.

கேள்வி 413: சில கிறிஸ்தவர்கள் மருந்து எடுப்பதில்லையே? உடல் நலக்குறைவின் போது ஏன் மருத்துவரிடம் சென்று பார்த்துக்கொள்வதில்லை?

பதில் 413: உடல் நலக்குறைவின் போது மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துக்கொண்டால், 'நமக்கு விசுவாசம்' இல்லை என்று கருதப்பட்டுவிடுமோ என்று "சில கிறிஸ்தவர்கள் தவறாக" கருதுகிறார்கள். உடல் நலக்குறைவின் போது, மருத்துவரை அணுகாதீர்கள் என்றோ, சிகிச்சை பெறாதீர்கள் என்றோ பைபிள் எங்கும் சொல்வதில்லை. நாம் மருத்துவமனைக்குச் சென்றால் நமக்கு தேவன் மீது விசுவாசம் இல்லை என்று கருதி, தேவன் சுகம் கொடுக்கமாட்டார் என்று சிலர் தவறாக கருதுகிறார்கள்.

தேவன் சுகம் தருவார் என்பது உண்மை தான், அவர் அற்புதங்கள் செய்கின்றார் என்பதும் உண்மை தான், அதற்காக 'சிகிச்சை கையில் இருக்கும் போது, அதனை செய்யாமல், தேவன் அற்புதம் செய்தால் தான் நான் ஒப்புக்கொள்வேன்' என்றுச் சொல்வது, சரியான விசுவாசமில்லை. 

சாலையில் செல்லும்போது திடீரென்று விபத்து நேரிட்டு, தலை உடைந்து இரத்தம் கொட்டும் போது, நான் மருத்துவமனைக்குச் செல்லமாட்டேன், என் விசுவாசத்தை இங்கு இப்போதே காட்டுவேன் என்றுச் சொல்லிக்கொண்டு , இயேசு வந்து சுகம் கொடுப்பார் என்று சொல்லிக்கொண்டு நடுரோட்டில் உட்கார்ந்துக்கொண்டால், நமக்கு உதவி செய்ய வரும் ஓரிருவரும், நம்முடைய பிடிவாதத்தைப் பார்த்து, 'சாகட்டும்' என்று விட்டுவிடுவார்கள். ஆனால் இயேசுவை நம்பி, உதவி கரம் நீட்டுபவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்தால், சரியான நேரத்திற்குள் "மருத்துவ அவசர ஊர்தியை (Ambulance)" அவரே அனுப்புவார், நாம் மயக்க நிலையில் இருந்தாலும் நல்ல சமாரியன்களை அனுப்பி, நம்மை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வார், மருத்துவர்கள் தவறுகள் செய்யாமல்,  சரியாக சிகிச்சை அளிக்க உதவி செய்வார்.

நமக்கு உதவி செய்த ஒவ்வொருவருக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும், மேலும் இவர்கள் அனைவரையும் சரியான நேரத்தில் அனுப்பி, நமக்கு சுகம் கொடுத்த இயேசுவையும் துதிக்கவேண்டும். இது தான் சரியான விசுவாசம்.

மருத்துவர்கள் பற்றி அனேக வசனங்கள் பைபிளில் உள்ளது. மருத்துவ சிகிச்சை தேவை என்று பைபிளில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

காயங்களுக்கு சிகிச்சை தேவை: 

ஏசாயா 1:6 உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

இலைகளும் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்:

எசேக்கியேல் 47:12. நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.

கீலேயாத்திலே புகழ்பெற்று விளங்கும் ஜன்டுபாம்/அம்ருதாஞ்சன் போன்ற பிசின் தைலம்: 

எரேமியா 8: 22. கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

யாருக்கு வைத்தியன் வேண்டும்? இயேசுவின் பதில்: நோய்வாய்ப்பட்டவனுக்கு

மத்தேயு  9:12. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைப் பெறுவது பற்றி மனதில் வைக்கவேண்டியவைகள்:

1) உலகில் மருத்துவ குணங்கள் அடங்கிய மரங்களை, செடிகளை உண்டாக்கியவரே தேவன் தான்.

2) மருத்துவ படிப்பு மற்றும் அதற்குரிய ஞானத்தை மனிதனுக்கு  கொடுத்து, அவன் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க உதவியதே தேவன் கொடுத்த ஞானமும், அவர் படைத்த செடிகொடிகளுமேயாகும்.

3) சிகிக்கை பெற்றுக்கொள்வது பாவமல்ல, தேவன் அனுமதித்த ஒன்றாகும்.

4) மருத்துவர்கள் மூலமாக சிகிச்சைப் பெறுவது தவறு இல்லை, ஆனால் அவர்களை இறைவன் போல பார்ப்பது தான் தவறு.

5) அனேக நேரங்களில் மருத்துவர்கள் கைவிட்ட மக்களை தேவன் அற்புதமாக சுகமாக்கியுள்ளார்.

நாம் நோய்வாய்ப்பட்டால், மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவேண்டும், அதே நேரத்தில் தேவன் தான் நம்மை சுகமாக்குகின்றார் என்று நம்பவும் வேண்டும். 

சில கிறிஸ்தவ பெற்றோர்கள் "தங்கள் விசுவாசத்தை காட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு,  தங்கள்  குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்காமல், அவர்களை கொலை செய்கிறார்கள்". இப்படிப்பட்ட தவறுகளை சில பெற்றோர்கள் செய்தபடியினால் மரித்த  பிள்ளைகளும் இருக்கிறார்கள். இது கண்டிக்கப்படத் தக்கது. 

உடல் நலக்குறைவின் போது, மருத்துவரை அணுகவேண்டாம் என்று பைபிள் எங்கும் சொல்வதில்லை. எனவே, நோய்வாய்ப்பட்டால் தேவனை நம்பி, அவரிடம் ஜெபித்துவிட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது தான் பைபிளின் படி சரியானது.

கேள்வி 414: கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?

பதில் 414:  ஆங்கிலத்தில் "PBUH" என்று கூறினால் "peace be upon him" என்று அர்த்தம். அரபியில் "Salla Allahu Alaihi Wa Sallam (SAW)" என்பார்கள், இதன் பொருள் : "அல்லாஹ்வின் ஜெபங்கள் மற்றும் சாந்தி அவர் மீது இருப்பதாக".

இவ்விரண்டும் கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (குர்‍ஆன் 33:56)

"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறினாலோ அல்லது "ஸல்" என்று கூறினாலோ, முஹம்மது மீது சாந்தியும் ஜெபங்களும் உண்டாவதாக என்று பொருள். இவ்விரண்டில் எதனை நாம் பயன்படுத்தினாலும், அது ஏற்கனவே மரித்து தன் முடிவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மனிதன் மீது ஆசீர்வாதத்தை கொடுக்கும் படி வேண்டிக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரத்தில் பைபிள் கீழ்கண்டவாறு கூறுகிறது:

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27)

ஆக, ஒரு மனிதன் மரித்துவிட்டால், அந்த நபர் அல்லது சகோதரி, ஒன்று இறைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது இறைவனுடைய பிரசன்னத்தின் மகிழ்வினால் நிரம்பி சந்தோஷத்தோடு இருக்கவேண்டும். ஆக, மேற்கண்ட இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு, உலகத்தில் உயிரோடு வாழ்பவர்களின் வேண்டுதல்கள் பாதிக்காது (இதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை). ஒரு மனிதர் மரித்துவிட்டபிறகு அவருக்காக வேண்டுதல் செய்வது வீணான செயல் இதனால் உபயோகம் ஒன்றுமில்லை.

இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், முஹம்மதுவின் பெயரை நாம் கூறும்போது, அதோடு கூட ஆசீர்வாதத்தையும் வேண்டுதல்களையும் நாம் சேர்த்து சொன்னால், "முஹம்மது உண்மையாகவே இறைவனின் தூதர்" என்று நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அங்கீகரித்தது போல் ஆகிவிடும். ஆக, பைபிளின் தெளிவாக வசனக்களின்படி, நாங்கள் முஹம்மதுவை நம்புவதில்லை, "அவர் ஒரு நபி" என்று நம்புவதில்லை.

கிறிஸ்தவனாகிய நான் உங்களிடம் வந்து, இனி "ஈஸா (இயேசு)" என்று நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் (கூறும் போதெல்லாம்) "ஆண்டவராகிய‌ இயேசுக் கிறிஸ்து" என்று கூறுங்கள் என்றுச் சொன்னால் அது சரியாக உங்களுக்கு தென்படுமா? "இயேசுவை ஆண்டவர்" என்று அழைப்பது, அவர் பழைய ஏற்பாட்டின் சர்வ வல்லவரான தேவனை குறிப்பிடுவதாக இருக்கும். 

இப்படி நீங்கள் இயேசு ஆண்டவர் என்று அழைத்தால், அது உங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதை அறிந்தும், நீங்கள் இயேசுவை இப்படி அழைக்கத்தான் வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிட்டு நேரத்தை வீணடிக்கமுடியுமா? இருந்த போதிலும் வேதம் தெளிவாக கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

ரோமர் 10:9

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கட்டும்: இன்று நீங்கள் இயேசுவை பின்பற்றுபவராக மாற விரும்புகிறீர்களா? இன்று நீங்கள் மரித்தால் எங்கு போவீர்கள்? நீங்கள் போகும் இடம் துன்பம் நிறைந்த இடமா? அல்லது இறைவனின் பிரசன்னம் இருக்கும் இடமா? இதில் எதை நீங்கள் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள்? எல்லா தீர்க்கதரிசிகள் சொன்ன சத்தியமாம் இயேசுக் கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வாயினால் அவர் தான் இறைவன் என்று நம்புங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த முடிவிற்காக ஒருபோதும் நீங்கள் மனம் வருந்தமாட்டீர்கள்.

இயேசு தாமாகவே சொன்ன இந்த வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள்:

யோவான் 5:24

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கேள்வி 415: கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்றால் என்ன?

பதில் 415: கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட அறிவுரையை பின்பற்றி 'நம்முடைய‌ விசுவாசம் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தகுந்த சான்றுகளோடு பதில் கொடுப்பதாகும்'.

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)

"நாம் கிறிஸ்தவர்" என்று வெளியே தெரிந்தவுடன், அனேக வேளைகளில் பலர் பல கேள்விகளை கேட்பார்கள், சிலர் சில விஷயங்களை அறிந்துக்கொள்ள கேள்வி கேட்பார்கள், இன்னும் சிலர் நம்மை மட்டம் தட்ட கேள்வி கேட்பார்கள், அதாவது நாத்தீகர்கள் இறைநம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால் ஒரு சில கேள்விகளை கேட்பார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு நம் விசுவாசம் பற்றி பதில் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு வேளை ஒரு முஸ்லிமை நாம் காணும்போது, அவருடைய குர்‍ஆனிலும் இயேசு பற்றியும், கிறிஸ்தவர்கள் பற்றியும் சொல்லியுள்ளதால், அவரும் நம்மிடம் கேள்வி கேட்பார். அப்போது நாம் அவருக்கும் பதில் சொல்லவேண்டும்.

இது ஒரு புறமிருக்க, சிலர் நம்முடைய நம்பிக்கையை பொய்யாக்க நம்மிடம் கேள்வி கேட்பதும் உண்டு, உதாரணத்திற்கு முஸ்லிம்களையும், நாத்தீகர்களையும் சொல்லலாம்.

உதாரணம் 1: முஸ்லிம்களோடு விவாதம்: விசுவாசம் தாக்கப்படும் போது, பதில் சொல்லத்தான் வேண்டும்.

ஒரு முஸ்லிம் நம்மைப் பார்த்து, இயேசு தெய்வமில்லை என்று குர்‍ஆன் சொல்கிறது என்று சொல்லும் போது, அந்த குர்‍ஆனை படித்து அவர் சொல்வது போன்று குர்‍ஆன் சொல்கிறதா? என்பதை தெரிந்துக்கொண்டு, அதன் பிறகு அவருக்கு நம்முடைய தற்காப்பு பதிலை கொடுப்போம். நம்முடைய விசுவாசத்தை தற்காத்துக்கொள்வதற்காக பதில் சொல்லும் போது, குர்‍ஆனையும் ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட நேரங்களில் சில உரையாடல்கள் சூடு பிடித்து, ஒரு திட்டமிட்ட விவாதமாகவும் நடக்க வாய்ப்பு உருவாகிவிடுகிறது.

உதாரணம் 2: நாத்தீக புத்தகங்களுக்கு மறுப்பு:

நாத்தீகர்களுடைய முதலாவது நோக்கம் "இறைவன் இல்லை" என்பதை நிருபிக்கவேண்டும் என்பதாகும். இதற்காக அவர்கள் அனேக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்தவர்களில் சிலர் இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு சான்றுகளோடு பதில் சொல்வார்கள், நாத்தீகர்களோடு கூட விவாதங்களிலும் ஈடுபடுவார்கள். இதில் தவறு ஏதுமில்லை.

உதாரணம் 3: கள்ள உபதேசங்களுக்கு பதில்கள்:

அவ்வப்போது சில  கள்ள உபதேசங்கள் எழும்புகின்றன, பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்படுகின்ற‌ன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நாம் பதில் சொல்லவேண்டிய நிற்பந்தத்தில் தள்ளப்படுகிறோம்.

உதாரணம் 4: வலியச் சென்று விவாதம் புரிவது

மேலே சொன்னவைகள் ஒரு பக்கம் இருக்கும்போது, நாம் வாழும் சமுதாயத்தில் சில தவறான பழக்கவழக்கங்கள் நம் கண் எதிரே நடக்கும் போது, அவைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. நமக்கு உடனே ரோஷம் வந்து (ஆவி கொழுந்துவிட்டு எரியும் போது என்று ஆவிக்குரிய வட்டாரத்தில் இதனைச் சொல்லுவார்கள்), களத்தில் இறங்கி நியாயம் சொல்லவும், தீமையை கண்டித்துக் கேட்கவும் தொடங்கும் போதும் 'விவாத கேள்வி பதில்கள் நடைப்பெற வாய்ப்பு வாய்த்துவிடும்'.

உங்களுக்கு இந்த பாயிண்டு புரியவில்லையா? இதோ விளக்குகிறேன்.

நம் கண்ணெதிரே, சதி என்றுச் சொல்கின்ற பழக்கத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இந்த பழக்கம் இருந்தது.  கணவன் மரித்துவிட்டால், மனைவியையும் உயிரோடு வைத்து கொளுத்துவிடுவார்கள் (நல்ல பாரம்பரியம்!). அதே  போல, சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, மேலும் தேவதாசி என்றுச் சொல்லி கோயிலுக்கு  நேர்ந்துவிட்ட பெண்களை தவறாக பயன்படுத்தும் பழக்கம் போன்றவை இந்தியாவில் இருந்தன. இப்படிப்ப‌ட்டவைகளை பார்க்கும் போது, ஒரு கிறிஸ்தவனால் சும்மா இருக்கமுடியாது. இயேசு இவர்களின் உள்ளத்தில் இல்லாததால் தான் இப்படி 'தவறான பழக்கங்களுக்கு இவர்கள் அடிமையாகியுள்ளார்கள்' என்றுச் சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறும் போது, அது சண்டையாகவும், சில நேரங்களில் விவாதமாகவும், நம்முடைய உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவிடுவதுண்டு.

உதாரணம் 5: சுவிசேஷ கடமையை நிறைவெற்றப்போக  அது விவாதமாக மாறும் சூழ்நிலை

எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு நமக்கு  கொடுத்த கடமையாகிய 'நற்செய்தியை அறிவிப்பது' அனேக நேரங்களில், விவாதங்களாகவும் மாறிவிடுவதுண்டு. மற்ற மார்க்கத்தார்கள் நம்மை திட்டித்தீர்ப்பதும் இந்த கடமையை நிறைவேற்ற நாம் முயலுவதும் தான்.  நாம் நற்செய்தியையும், நம் சாட்சியையும் சொல்லாமல் இருக்கமுடியாதே!  இயேசு செய்த அற்புதங்களையும், வாழ்வைப்பற்றியும் சாட்சி பகராமல் இருக்கமுடியாதே! 

பெரும்பான்மையாக, எல்லா மக்களும் கேட்பது, 'ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவை அறிவிக்காமல் இருப்பதே இல்லை! எங்களுகெல்லாம் சாமி இல்லையா?' என்பதைத் தான். நாங்கள் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்! 'யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்' என்ற வாக்கியத்தின் படி, என் இரட்சிப்பை உலக மக்களுக்கு சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளாரே, அவருடைய கட்டளையை நிறைவேற்றாமல் இருக்கமுடியாதே!

கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்கள், 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட இரண்டாம் பாகத்தை மறக்கக்கூடாது: சாந்தத்தோடும், வணக்கத்தோடும் பதில் சொல்லவேண்டும்.

"யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)"

நற்செய்தி அறிவிக்கும் போது விவாதம் புரிவது பைபிளின் படி சரியானதா?

கிறிஸ்தவர்களில் சிலர் 'நாம் விவாதம் புரியக்கூடாது, பதில் சொல்லக்கூடாது, இது பைபிளின் சரி தவறானது, வெறும் நற்செய்தி மட்டும் தான் சொல்லவேண்டும்' என்று கூறுகிறார்கள்.  இது தவறான புரிதலாகும்.  நாம் ஒருவருக்கு நற்செய்தியைச் சொல்லும் போது, அவர் அமைதியாக கேட்டுக்கொண்டு இருப்பார் என்று எதிர்பார்க்கமுடியாது. அவர் பல கேள்விகளை கேட்டு, நம்மிடம் சரியான பதில்களை எதிர்ப்பார்ப்பார்.  சில நேரங்களில் அவரது தவறான புரிதலை நாம் அவருக்கு  விளக்கவேண்டும், அவரது தற்போதைய  நம்பிக்கையில் உள்ள வித்தியாசங்களை அவருக்கு எடுத்துக் காட்டவேண்டும்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு சான்றுகளோடு கூடிய பதில்களைக் கொடுப்பது தான் 'விசுவாச தற்காப்பு ஊழியம்' என்பது, இது தவறு என்று எப்படி சொல்லமுடியும்? 1 பேதுரு 3:15 சொல்வதும் இதைத் தானே!

விசுவாச தற்காப்பு ஊழியம் பற்றி நாம் கற்கவேண்டுமென்றால் நாம் முதலாவது இயேசுவிடம் தான் கற்கவேண்டும்.

இயேசுவும் விசுவாச தற்காப்பு ஊழியமும்:

இயேசுவிடம் பலர் கேள்விகளை கேட்டனர், கற்றுக்கொள்ளவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் இருந்தனர், இயேசுவை கேலி செய்யவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் உண்டு.  

இயேசு எல்லோருக்கும்  ஒரே மாதிரியான பதிலை கொடுக்கவில்லை. சிலரிடம் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டார், சிலருக்கு நேரடி பதில் கொடுத்தார்.  சிலரின் கேள்விக்கு ஒரு உவமையை பதிலாகச் சொன்னார், நேரடி பதில் தரவில்லை. தன்னிடம் கேள்வி கேட்பவர்கள் சிந்திக்கும் படிச் செய்தார்.

இயேசு 307 கேள்விகளை கேட்டதாகவும், அவர் நேரடியாக வெறும் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுத்ததாகவும், ஒருவர் ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்:

ஆக, விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது பைபிளுக்கு எதிரான செயல் அன்று.

விசுவாச தற்காப்பு ஊழியத்திற்கு யோபு புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு:

பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு புத்தகத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தாலும், அது பல  கேள்விகளாலும், ஞான வார்த்தைகளாளும், விவாதங்களாளும் நிரம்பியிருப்பதை பார்க்கமுடியும். யோபுவும், அவரது நண்பர்களும் ஒருவர் மாறி ஒருவர் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்வார்கள். கடைசியாக, தேவனும் யோபுவிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். யோபுவின் அந்த நிலைக்கு காரணம் யோபுவின் அநீதியான வாழ்க்கை என்று அரவது நண்பர்கள் குற்றம் சாட்டினார்கள். உடனே யோபு தன் நிலைப்பற்றி விவாதம் புரிந்தார். இப்படி பல முறை நடந்தது.

அப்போஸ்தலர் பவுலடியாரின் விவாதங்களும் தற்காப்பு ஊழியமும்:

பவுலடியார் ஊழியம் செய்யும் போதும், அது பல வேளைகளில் விவாதங்களாக, பேச்சுவார்த்தைகளாக மாறியதை பார்க்கமுடியும்.

கிரேக்கர்களிடம் பேசும் போதும், யூத ஆலயங்களில் பேசும் போதும் அவர் பல காரியங்களை விவாதங்களாக பதில்களாக முன்வைத்தார். ராஜாக்களுக்கு முன்பாக தன் நம்பிக்கைப் பற்றி சாட்சி சொல்லும் போது, மிகவும் தைரியமாக அதனை சொன்னார், சாட்சி சொல்வதும் ஒரு 'கிறிஸ்டியன் அபாலஜிடிக்ஸ்' இல்லையா?

கிரேக்கர்களாகிய மேதாவிகளிடம் பேசினார், இயேசுவின் நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிக்காட்டினார். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கையையும் தொட்டுத் தான் பேசினார்.

அப்போஸ்தலர் 17:

2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

16. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,

17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்

19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.

எனவே, கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்டது போன்று நம் விசுவாசம் குறித்து சாட்சி சொல்லி, மக்களின் சந்தேகங்களை தீர்க்கப்பட உதவி செய்து, மக்கள் சிந்திக்கும்படி சில வேளைகளில் எதிர்கேள்விகள் கேட்டு, நற்செய்திச் சொல்வதாகும்.

கேள்வி 416: மக்களை கட்டாயப்படுத்தி  ஏன் கிறிஸ்தவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கக்கூடாது?

பதில் 416: உலகத்தில் இராஜ்ஜியங்களை ஸ்தாபியுங்கள் என்று பைபிள் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடவில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு பழைய ஏற்பாட்டில் இராஜ்ஜியம் அமைக்க தேவன் அனுமதித்தார். ஆனால், அவர்கள் பல போர்கள் புரிந்து தங்கள் இராஜ்ஜியத்தை விஸ்தரிக்க அவர் அனுமதிக்கவில்லை, கட்டளையிடவில்லை.

முஹம்மது உயிரோடு இருந்தபோது, முழு அரேபிய தீபகர்ப்பத்தை போர் புரிந்து ஆக்கிரமித்தார், அதன் பிறகு வந்த நான்கு கலிஃபாக்கள் இன்னும் பல நாடுகளை வலியச் சென்று சண்டையிட்டு வென்றார்கள்.

இஸ்லாமின் கணக்குப்படி, முஹம்மது 10 ஆண்டுகளில் 95 போர்களில்/வன்முறை செயல்களில்   ஈடுபட்டார்.

இயேசுவோ புதிய ஏற்பாடோ 'வன்முறையை பயன்படுத்தி நற்செய்திய அறிவிக்கும்படி சொல்வதில்லை, ஆட்சி அரசாங்கங்கள் அமையுங்கள்' என்று சொல்லவில்லை.

என் அரசாங்கம் இவ்வுலகத்துக்கு உரியது அல்ல என்று இயேசு தெளிவாக கூறினார்:

யோவான் 18:36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

கட்டாயப்படுத்தி மக்களை இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்படிய முயன்றால் அது வீணான பக்தியாகும். இஸ்லாம் இப்படிச் செய்கிறது, கிறிஸ்தவம் அல்ல.

மனிதன் மனந்திரும்ப வேண்டும், அவன் மாறும் போது குடும்பம் மாறும், குடும்பம் மாறும் போது, சமுதாயம் மாறும், இப்படித்தான் இயேசு மனங்களில் ஆட்சி செய்ய விரும்புகிறார்.

நற்செய்தி சொல்வது நம் வேளை, அதனை ஏற்பதோ, புறக்கணிப்பதோ மனிதனுக்கு உள்ள உரிமை. வன்முறையை பயன்படுத்தி தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பது பைபிளுக்கு எதிரான செயலாகும்.

இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களை அழித்துவிடும்படி சீடர்கள் ஒரு முறை எண்ணினர், அதனை இயேசு தடுத்தார், அவர்களை கடிந்துகொண்டார்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தான் கிறிஸ்தவர்களை அமைதியானவர்களாக மாற்றியுள்ளது. இஸ்லாமில் அதிகமாக சண்டை, வன்முறை நடப்பதற்கு காரணம், முஹம்மதுவின் மன்னியாத தன்மையாகும்.

லூக்கா 9:53-56

53. அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.

55. அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,

56. மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

கேள்வி 417: பைபிள் நிகழ்ச்சிகளை கார்ட்டூன் படங்களாகவோ அல்லது சாதாரண படங்களாக வரைந்து பயன்படுத்துவது தவறா?

பதில் 417:  படங்கள் வரைவது மற்றும் அவைகள் மூலமாக பைபிள் நிகழ்ச்சிகளை விளக்குவது தவறு என்று பைபிள் எங்கும் சொல்லவில்லை.  ஆதாம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன, அவைகள் பைபிளிலும் பதிக்கப்பட்டுள்ளன. 

பைபிள் நிகழ்ச்சிகளை படங்கள் மூலமாக விளக்குவது மிகவும் பயனுள்ளதாகும். முக்கியமாக, பிள்ளைகளுக்கு படங்கள் மூலமாக இயேசுவின் உவமைகளை விளக்குவதும், இயேசுவின் அற்புதங்களை விளக்குவதும் நல்ல பலனைத் தரும். 

பெரியவர்களுக்கும் படங்கள் மூலமாக பைபிளின் நிகழ்ச்சிகள் சுலபமாக புரியும் மட்டுமல்ல, மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும்.

1) ஆதாம் ஏவாள் ஏதோன் தோட்டத்தில் இருந்த காட்சி

2) நோவாவின் கப்பலில் மிருகங்கள் செல்லும் காட்சி

3) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள்

4) யோசேப்பு அடைந்த துன்பங்கள் மற்றும் எகிப்தில் பெரிய பதவியில் அவர் உட்கார்ந்த நிகழ்ச்சி

5)செங்கடல் பிளந்த நிகழ்ச்சி, மோசேயின் 10 கட்டளைகள் இவைகளை யார் மறக்கமுடியும்?

6) தாவீது கோலியாத் சண்டையை படமாக பார்க்காதவர் யாராவது இருக்கமுடியுமா?

7) தானியேலின் சிங்க கெபியில் அவர் ஜெபித்த காட்சி

8) இயேசுவின்  பிறப்பு, தேவதூதர்களின் மகிழ்ச்சி, மேய்ப்பார்களின் சந்தோஷம்.

9) இயேசு சொன்ன உவமைகள்: கெட்ட குமாரன், விதை/அறுவடை பற்றிய உவமை, கானா ஊர் கலியாணம்.

10) இயேசு செய்த அற்புதங்கள், இயேசுவின் இரண்டாம் வருகை, இவைகள் பற்றிய படங்கள் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்த படங்கள் தானே!

படங்களை, உருவங்களை, சிலைகளை வணக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது:

கீழ்கண்ட வசனத்தில் உருவங்களை, படங்களை வணக்கப் பொருட்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள் என்று கட்டளையிடப்பட்டுள்ளது, அவைகளை மற்ற காரியங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அல்ல.

லேவியராகமம் 26:1. நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

கலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவைகள் ஆராதனையின் மையமாக இருக்கக்கூடாது. கீழ்கண்ட வசனத்தில் 'கேருபீன்களை விசித்திரவேலையாக செய்து திரைச்சீலை' வைக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்த கேருபீன்கள் வணக்கப்பொருளாக ஆகக்கூடாது.

யாத்திராகமம் 26:31

31. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.

நற்செய்தி அறிவிப்பதற்கு அனேக வழிமுறைகள் உள்ளன, அவைகளில் ஒன்று படங்கள் மூலமாக  முக்கியமாக பிள்ளைகளுக்கு சத்தியங்களை சொல்லிகொடுப்பதாகும். இதில் தவறு ஏதுமில்லை.

இயேசுவின் வாழ்க்கை முழுவதும் காமிக்ஸ் படங்கள் போட்டு புத்தகமாக வருகின்றது. மேலும் ஆங்கில பைபிள்களில் பல முக்கியமான நிகழ்ச்சிகள் விளக்கப்படும் போது, அதைப் பற்றிய படத்தையும் போட்டு பிரிண்ட் எடுத்திருப்பார்கள்.

பைபிள் நபர்களின் படங்கள் வரைதல் தவறு என்றால், இயேசுவின் படத்தை (சினிமா) எடுத்து பல கோடி மக்கள் பார்த்து, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்குமே!

ஆக, படங்கள், சித்திர கைவேலைகளைச் செய்தல், சிலைகள் வடித்தல் போன்றவைகளை பைபிள் எதிர்க்கவில்லை, ஆனால் அவைகளை வணங்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என்பது தான் கட்டளை.

கேள்வி 418: பைபிளில் வரும் அந்நிய ஜனம்/ ஜாதி (Gentile) என்ற வார்த்தையைப் பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

பதில் 418: ஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, " gentilis " என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "நாடு அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள்" என்பதாகும். எபிரேய மொழியில் நாடு என்பதற்கு "கொய்(goy)" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் எல்லா நாடுகளையும் குறிக்க இந்த வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துவிட்ட பிறகு, 'ஜென்டைல்' என்றால் "மற்ற நாடுகள்" அதாவது யூதரல்லாத மற்ற நாடுகள் என்ற பொருளில் அது அமைந்துவிட்டது. 

இதன்படி பார்த்தால், யூதர்களின் படி 'கிறிஸ்தவர்களும்' ஜென்டைல் என்ற அந்நிய ஜனங்கள் தான். அனைத்து நாடுகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை, கடைசியாக யூதரல்லாத நாடுகளை மட்டுமே குறிக்க பயன்படும் படி ஆகிவிட்டது.

தமிழ் பைபிளில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நாடு அல்லது ஜனங்கள் என்று வரும் வார்த்தையை, தமிழில் "ஜாதி" என்று மொழியாக்கம் செய்துவிட்டார்கள். இந்திய சூழலில் ஜாதி என்ற வார்த்தை மிகவும் அதிகமாக அடிபடும் வார்த்தையாக உள்ளது.

 மக்களை கீழ்ஜாதி மேல்ஜாதி என்று பிரித்துப் பார்க்கும் இந்துக்களின் மொழி நடையினால், அனேகருக்கு "ஜாதி" என்ற வார்த்தையை பைபிளில் பார்க்கும் போது, பைபிள் கூட ஜாதி பார்க்கச்சொல்கிறதா? என்ற எண்ணம் வந்துவிடுகிறது. 

மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவேண்டுமென்றால், தேவன் முதல் மனிதனை படைக்காமல், முதல் மனிதர்களை படித்து இருந்திருப்பார். ஒரே ஒரு ஆதாமை படைக்காமல், பிராமண் ஆதாம் என்றும், ச‌த்திரியன் ஆதாம், வைசியன் ஆதாம், சூத்திரன் ஆதாம் என்று ஒவ்வொருவரையும் வெவ்வேறு  இடங்களிலிருந்து  படைத்து இருந்திருப்பார்.

எனவே, நாடு என்ற வார்த்தையைத் தான், பைபிளில் 'ஜாதி' என்று குறிப்பிட்டள்ளார்கள் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். பைபிள்  பொது மொழிப்பயெர்ப்பில் "ஜாதி" என்ற வார்த்தைக்கு பதிலாக, நாடு என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தியுள்ளனர்.

எபிரேய வார்த்தை "கொய்" என்பதற்கு எபிரேய அகராதியில் 1471 எண் கொடுக்கப்பட்டுள்ளது (https://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H1471&t=KJV ).  நாடு/ஜாதி/ ஜென்டைல் என்ற வார்த்தை யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளையும் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள்.

நோவாவின் பிள்ளைகள் தனி நாடுகளாக வளருவார்கள்:

Gen 10:32: These are the families of the sons of Noah, after their generations, in their nations: H1471 and by these were the nations H1471 divided in the earth after the flood.

ஆதியாகமம் 10:32

தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

பொது மொழிப்பயெர்ப்பு:

நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர். 

தமிழில் "ஜாதி" என்ற வார்த்தை, உண்மையில் "நாடு" என்று மொழியாக்கம் செய்யப்பட்டு இருந்திருக்கவேண்டும்.

ஆபிரகாமின் சந்ததி பெரிய நாடு ஆகும் என்ற ஆசீர்வாதம்:

Gen 12:2 : And I will make of thee a great nation, H1471 and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:

ஆதியாகமம் 12:2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

பொது மொழிப்பயெர்ப்பு:

நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.

இஸ்மவேலின் பிள்ளைகளும் பெரிய நாடாக மாறுவார்கள்:

Gen 17:20: And as for Ishmael, I have heard thee: Behold, I have blessed him, and will make him fruitful, and will multiply him exceedingly; twelve princes shall he beget, and I will make him a great nation. H1471

ஆதியாகமம் 17: 20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

பொது மொழிப்பயெர்ப்பு:

"நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும்.

இஸ்ரேல் மக்கள் தவறு செய்யும் போது, இதர நாடுகளின் கைகளில் அவதிப்படுவார்கள்:

இங்கும் இதே வார்த்தை, "நாடுகள்" என்ற வருகிறது. மற்ற நாடுகளின் கைகளில் இஸ்ரேல் மக்கள் அவதிப்படுவார்கள் என்ற பொருள் வருகிறது. நாடுகள் என்ற வார்த்தை தான் ஜென்டைல், புறஜாதி என்று பயன்படுத்துகிறோம்.

Lev 26:38: And ye shall perish among the heathen, H1471 and the land of your enemies shall eat you up.

லேவியராகமம் 26:38: புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.

பொது மொழிப்பயெர்ப்பு:

வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள்.

எனவே, ஜென்டைல் என்று ஆங்கிலத்தில் சொல்வதோ, தமிழ் மொழியாக்க பைபிளில் வரும் "ஜாதி" என்ற வார்த்தையோ "நாடு" என்பதைத் தான் குறிக்கும்.

கேள்வி 419: கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?

பதில் 419: கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பற்றிய சுருக்கமான விளக்கம்:

1. தனிச்சிறப்புமிக்க "தேவன் ஒருவரே" என்று நாங்கள் நம்புகிறோம்.

உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

2. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் "தேவன்". தன்னுடைய வார்த்தையினால் இவைகள் அனைத்தையும் உருவாக்கினார்.

பைபிள் சொல்கிறது: (ஆதியாகமம் 1:3): தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவருடைய வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது.

3. தேவனால் படைக்கப்பட்டவர்களாகிய நாம் எப்படி தேவனை அறிந்துக்கொள்ள முடியும்? மிகவும் சிறியவர்களும் அற்பமானவர்களாகிய நாம் எப்படி தேவனுடைய சிந்தனைகளை அறிந்துக்கொள்ள முடியும்? நம்மால் முடியும் - தேவன் தன்னை வெளிப்படுத்த சித்தமானதால் தான் நம்மால் அவரை அறியமுடிகிறது. அவர் தன்னை வெளிப்படுத்தும் தேவனாக இருக்கிறார்.

உபாகமம் 29:29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

தேவன் தன்னைப்பற்றி எவைகளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்?

4. அவர் பரிசுத்தமானவர் - அவர் அப்பழுக்கற்றவர்.

அவரிடம் எந்த ஒரு குறையும் இல்லை. அவருக்கும் பாவத்திற்கும் அல்லது தீய சிந்தனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆபகூக் 1:13ம் வசனம் சொல்கிறது, "தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே;..."

5. அவர் நீதியுள்ளவர்

இதன் பொருள் என்னவென்றால், தீமை செய்யும் எல்லாரும் தண்டிக்கப்படவேண்டும் என்பதாகும். இதைப் பற்றி மக்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். நீதியும் இரக்கமும் ஒன்றல்ல, இவை இரண்டும் வெவ்வேறானவை ஆகும். நீதி என்றால், நீங்கள் சட்டத்தை மீறினால், கண்டிப்பாக நீங்கள் அபராதம் செலுத்தியே ஆகவேண்டும் என்பதாகும்.

தேவன் தன் இயற்கையான குணமான பரிசுத்தத்தை விட்டுக்கொடுக்கமாட்டார். தவறு செய்யும் எல்லாரையும் அவர் தண்டிப்பார்.

தேவ‌ன் ந‌ம்முடைய‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எல்லாம் தராசின் ஒரு தட்டில் வைத்து, ந‌ம்முடைய‌ எல்லா தீய‌ செய‌ல்க‌ளை அடுத்த தட்டில் வைத்து, எந்த‌ ப‌க்க‌ம் அதிக‌ க‌ன‌ம் உள்ள‌து என்று பார்ப்பார் என்று பொருள் அல்ல‌. ஒரு எடுத்துக்காட்டுக்காக: நான் உங்கள் சகோதரனை கொலை செய்துவிட்டால், ஒரு நீதிபதி, "பரவாயில்லை, போகட்டும், நாம் இவனை விடுதலை செய்துவிடலாம், ஏனென்றால், இவன் தன் வாழ்நாட்களில் நிறைய நல்ல செயல்களை செய்துள்ளான்" என்று தீர்ப்பு வழங்குவாரா? அப்படி சொல்வாரானால், அவர் ஒரு நீதியுள்ள நீதிபதியாக இருக்கமுடியுமா? மக்கள் செய்யும் தவறுகளை பார்க்காதவாறு தேவன் தன் கண்களை மூடிக்கொண்டு இருக்கமாட்டார். தேவன் தீமையை சகிப்பதில்லை.

ஆனால், நாம் அனைவரும் தூசுக்கு சமமானவர்கள் என்று தேவனுக்குத் தெரியாதா? எப்படியென்றால், நாம் தவறுகள் செய்ய பலவீனமானவர்கள் என்று தேவனுக்குத் தெரியாதா? பழுதே இல்லாத ஆணோ அல்லது பெண்ணோ யாரும் இல்லை. ஆம், இது நமக்குத் தெரியும். விஷயம் இப்படி இருக்கும் போது, நாம் செய்யும் தவறுகளை தேவன் கவனிக்காமல் விட்டுவிடுவார் என்று அர்த்தமா? தேவன் பரிசுத்தமானவர் மற்றும் அவர் நீதியுள்ளவர், ஆகையால், நம் தவறுகளை அவர் நிச்சயமாக கவனிப்பார். இவைகளை நாம் புரிந்துக்கொண்டோமானால், நாம் எவ்வளவு மோசமான நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியும்.

நாம் நேர்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் என்றுமே சுயநலமுடன் அல்லது தவறான சிந்தனையை உடையவர்களாக இல்லை என்றும், நாம் பொய்யே ஒரு முறை கூட சொல்லவில்லை என்றும் சொல்லமுடியுமா? பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நமக்கு சுத்த இதயம் உள்ளது என்று யார் சொல்லமுடியும்? இனிமேல் நாம் த‌வ‌றுக‌ளே செய்யாம‌ல் வாழ்வோம் என்று சொன்னாலும், க‌ட‌ந்த‌ கால‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்த‌ த‌வ‌றுகளுக்கு நாம் சொல்லும் ப‌தில் என்ன‌? தேவ‌னுக்கு நியாப‌க‌ ச‌க்தி குறைவாக‌ இருக்குமா? ந‌ல்ல‌ செய‌ல்க‌ளைச் செய்வ‌து, தீய‌ செய‌ல்க‌ளை துடைத்துவிடுமா? இல்லை என்ப‌து தான் ப‌தில்.

நம்மில் ஒவ்வொருவரும் தேவனின் நியாயத்தீர்ப்பிற்கும், நரக நெருப்பிற்கும் உள்ளாக வேண்டியவர்கள். இது ஒன்றும் "என்னை மன்னித்துவிடும், அடுத்த முறை நான் தவறுகள் செய்யாமல் இருக்க முயற்சி செய்கின்றேன்" என்று ஒரு சின்ன ஜெபம் செய்தால் தீர்ந்துவிடும் காரியம் அல்ல. இப்படி செய்வதில் எந்த நியாயமும் இல்லை.

ஒரு எடுத்துக்காட்டு:

ஒரு சாலையில் சிகப்பு விளக்கு எரிந்துக்கொண்டு இருக்கும் போது, நான் நிற்காமல் சென்றுக்கொண்டு இருந்தால், ஒரு அதிகாரி என்னை நிறுத்தினால், "அய்யா, நான் இனி என் வாழ்நாட்களில் எப்போதும் பச்சை வண்ண விளக்கு எரிந்த பின்பு செல்கின்றேன்" என்றுச் சொன்னால், இதனால் ஏதாவது நன்மை விளையுமா? இப்படியாக நாம் சொல்வது ஒரு அதிகாரியிடம் வேலை செய்யாது அல்லது இதனால் பயன் இல்லை என்று இருக்கும் போது, பரிசுத்தமான மற்றும் நீதியான தேவனிடம் எவ்வளவு குறைவாக இது வேலை செய்யும். இவ்விதமாக‌ எழுதப்பட்டுள்ளது: (ரோமர் 6:23) "பாவத்தின் சம்பளம் மரணம்".

நம் எல்லாருக்கும் ஒரு நற்செய்தி என்னவென்றால், கதை இதோடு முடியவில்லை.

6. தேவன் சர்வவல்லவர் (God is Almighty)

தேவன் எதை செய்யவிரும்புவாரோ அதை அவர் செய்ய வல்லவர். எரேமியா 32:17 வசனம் சொல்கிறது "ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை".

அவருக்கு எந்த எல்லையும் இல்லை, அவருடைய வல்லமைக்கும் எல்லையில்லை.

தேவன் தன் நிலையில் சரியாக உள்ளார். தேவன் முரண்படுவதில்லை. அவர் தன் பரிசுத்தம் மற்றும் நீதியான குணத்திற்கு எதிராக முரண்படுவதில்லை. அவர் தன் சட்டத்தை தானே மீறுவதில்லை.

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கட்டும்:

"நீங்கள் ஒருவரைப் பற்றி எப்படி அறிந்துக்கொள்கிறீர்கள்?" மற்றவர்களை வெளிப்புறமாக நீங்கள் காணுவதினால் அவர்களைப் பற்றி ஓரளவிற்குச் சொல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்றும் அவர்கள் உள்ளங்களில் மறைந்திருப்பது என்ன என்பதும் உங்களால் சொல்லமுடியாது. நாம் ஒருவரின் வார்த்தைகளை கேட்கவேண்டும். அவர்கள் இதயங்களில் என்ன மறைந்துள்ளது என்றும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்களின் வார்த்தைகள் தான் நமக்கு சொல்லும்.

நான் என் விருப்பங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளன. என் சிந்தனைகளை எழுதி உங்களுக்கு ஒரு கடிதமாக அனுப்பலாம். அதை நீங்கள் படிக்கலாம். ஆனால், உங்களுக்கு சில கேள்விகள் எழலாம், அல்லது என் கடிதத்தில் உள்ளவைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கலாம். இதற்கு ஒரு சரியான வழி என்னவென்றால், என்னை நன்றாக அறிந்த என் நண்பனிடம் அந்த கடிதத்தை கொடுத்து உங்களிடம் அனுப்புவது தான். என் நண்பன் அந்த கடிதத்தில் நான் என்ன சொல்லியுள்ளேனோ அதை உங்களுக்கு விவரமாக விளக்குவார். இதைவிட ஒரு நல்ல வழிமுறை என்னவென்றால், நான் உங்களுக்கு தொலைபேசி மூலம் நேரடியாக தொடர்பு கொள்வது தான். இவைகள் எல்லாவற்றையும் விட சிறந்த முறை என்னவென்றால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான் வந்து, உங்களோடு நேரடியாக பேசுவது தான்.

தேவனுடைய வார்த்தையின் மூலமாகத் தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது. அவரது வார்த்தைகள் நாம் கற்பனை செய்யவும் புரிந்துக்கொள்ளவும் முடியாத அளவிற்கு வல்லமையுடையது. நாம் அவரை அறியவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் தன் வார்த்தைகளை சட்டமாக நமக்கு கொடுத்துள்ளார். அவர் தன் வார்த்தைகளை விளக்குவதற்கும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் தீர்க்கதரிசிகளை அனுப்பியுள்ளார்.

எபிரேயர் 1:1 "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,"

தேவன் மிகவும் வல்லமையுள்ளவர், அவரால் முடியாதது ஒன்றுமில்லை. தேவன் விரும்பினால், அவருடைய வார்த்தையை நம்மிடம் அனுப்பமுடியும், அந்த வார்த்தை நம் முகத்திற்கு நேராக வரமுடியும். அவரது வார்த்தை மனிதனாக வரமுடியும்.

7. தேவன் அன்பாக இருக்கிறார் (God is LOVE)

தேவன் நம்மில் அன்பு கூறுகிறார் மற்றும் நாம் அவரை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார், ஆகையால், அவரது வார்த்தையை மனிதனாக அனுப்பினார்.

இப்படியாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது: (யோவான் 1:1, 14) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அவர் பரிசுத்தமான தேவனுடைய வார்த்தையாக உள்ளார். ஆபிரகாமையும் அவரது மகனையும் ஞாபகம் செய்துக்கொள்ளுங்கள் (ஆதியாகமம் 22: 1-14). ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படியவேண்டும் என்றும் அவருக்கு தன்னை சமர்பிக்கவேண்டும் என்றும் விரும்பினார். அவர் தன் மகனை எடுத்து தேவனுக்கு பலியிட கூட தயங்கவில்லை, போகும் வழியில் அவரது மகன், "நெருப்பும் கட்டையும் உள்ளது, ஆனால், பலியிட ஆடு எங்கே?" என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம் பதில் அளித்தார், "தேவன் அவரே பலிக்கான ஆட்டை தருவார் என்றுச் சொன்னார்" ஆபிரகாம் தன் மகனை பலிபீடத்தில் கிடத்தி, கத்தியால் பலியிட முயற்சித்த வேளையில், தேவன் அவரை அழைத்தார், "ஆபிரகாமே, உன் மகன் மீது உன் கையை வைக்காதே?" மற்றும் ஆபிரகாம், தலையை ஏறெடுத்து பார்க்கும் போது, தேவன் தயார்படுத்தி வைத்திருந்த ஒரு ஆட்டை கண்டார், அந்த ஆடு முட்களின் இடையில் மாட்டிக்கொண்டு இருந்தது, அதை எடுத்து ஆபிரகாம் தேவனுக்கு பலியிட்டார். அவரது மகன் தப்பிக்கப்பட்டார்.

"இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:16) என்று பைபிள் அழைக்கிறது. தீர்க்கதரிசியான யோவான் "இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று பறைசாற்றும் போது, இதன் பொருள், இயேசு நம்மை அடிமைத்தனத்திலிருந்து விலைசெலுத்தி விடுவித்துள்ளார் என்பதாகும். தேவனுடைய வார்த்தை (இயேசு) நம் மீது வைத்த அன்பினாலே, நமக்கு வரவேண்டிய தண்டனையை, நியாயத்தீர்ப்பை தன் மேல் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், மரித்தவர் அப்படியே இருந்துவிடவில்லை, அப்படி அவர் இருக்கவும் முடியாது, அவர் வெற்றியுள்ளவராக உயிரோடு எழுந்தார், மற்றும் மரணத்தை ஜெயித்தார்.

நாம் தேவனை அறிந்துக்கொள்வது எப்படி?

இது சுலபம் அல்ல - இதற்கு நமக்கு தாழ்மை வேண்டும்.

நாம் தூசுக்கு சமம் என்றும், நமக்கு சுத்தமில்லாத இதயம் உண்டென்றும், மற்றும் நம்முடைய செயல்களினால் நமக்கு நரகம் தான் கிடைக்கும் என்றும் நாம் உணர்ந்து தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும்.

தேவன் நமக்காக என்ன செய்து இருக்கிறார் என்பதை உணர்ந்து நாம் அதை தாழ்மையோடு அங்கீகரிக்கவேண்டும். அவர் நம் அழுக்கு நீங்க நம்மை கழுவுவார், நம்மை பரிசுத்தவான்களாக மாற்றுவார், மற்றும் தன்னுடைய ஆவியை நமக்கு உதவி செய்யும்படி அனுப்பி, நாம் ஒரு கீழ்படிதல் உள்ள வாழ்க்கையை வாழ உதவிபுரிவார்.

தேவனை நாம் அறிந்துக்கொண்டால் நமக்குள் ஒரு விடுதலை மற்றும் எல்லையில்லா ஆனந்தம் உண்டாகும். தேவன் ஒருவரே, அவர் தான் உலகத்தைப் படைத்தவர், அவர் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தியவர், அவரே பரிசுத்தர், நீதியுள்ள நியாயாதிபதி, அவர் சர்வவல்லவர் மற்றும் அன்பானவர்.

அவர் நம்மை தன் வேலைக்காரர்கள் என்று அழைப்பதில்லை, அதற்கு பதிலாக "பிள்ளைகள்" என்று நம்மை அழைக்கிறார். இயேசு சொல்கிறார் (யோவான் 15:15) "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்....".

இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது (யோவான் 1:12), அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

கேள்வி 420: முன்னால்  ரோமன் கத்தோலிக்க போப் (John Pope II) அவர்கள், குர்‍ஆனுக்கு முத்தமிட்டுள்ளாரே, அவர் செய்தது தவறா?

பதில் 420: முதலாவதாக, "அவர் செய்தது நிச்சயமாக 100% தவறு, இதில் மாற்று கருத்தில்லை". 

இரண்டாவதாக, அவர் இஸ்லாமிய நாடாகிய ஈராக்கிற்கு சென்றிருந்தபோது, அவருக்கு மதிப்பினிமித்தம் கொடுக்கப்பட்ட குர்‍ஆனை அவர் பெற்றுக்கொண்டார். குர்‍ஆனுக்கு முன்பாக குனிந்தும், அதை வாங்கிய பிறகு முத்தமும் கொடுத்தார். அவர் அறியாமையில் இருந்தார், குர்‍ஆன் பற்றிய ஞானம் அவரிடமில்லை.

  • குர்‍ஆன் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று அவருக்குத்தெரியுமா?
  • குர்‍ஆன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவ கோட்பாட்டை மறுக்கிறது என்பதை அவர் அறிவாரா?
  • இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று குர்‍ஆன் சொல்கிறது, இதனை போப் ஏற்பாரா?
  • இயேசு உயிர்த்தெழவில்லை என்றும் குர்‍ஆன் சொல்கிறது, அப்படியானால், போப் இதனை அங்கீகரிப்பாரா?
  • "என்னைத்தவிர பிதாவினிடத்தில் யாரும் போகமுடியாது" என்று இயேசு சொல்லியுள்ளாரே, இதனை அறிந்தும் போப் அவர்கள், "பிதாவினிடத்தில் சேருவதற்கு முஹம்மதுவும் ஒரு வழி" என்று உலகிற்கு சொல்லவருகின்றாரா?

போப் அவர்கள் ஓரு மரியாதைக்காகத்தான் அப்படி குர்‍ஆனுக்கு முத்தமிட்டார் என்றுச் சொன்னால், மரியாதைக்காக கைகளில் அதனை பெற்றுக்கொண்டால் போதாதா? ஒரு மார்க்கத்தின் தலைவர் இப்படிப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒருவேளை குர்‍ஆனில் மேற்கண்ட போதனைகள் உள்ளன என்பதை போப் அறியாமல் இருந்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டால், "ஆம், இருக்கலாம், அவருக்கு குர்‍ஆன் பற்றிய அடிப்படைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்".

ஒருவேளை, "ஈராக்கில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக அவர் அப்படி செயல்பட்டு இருந்திருக்கலாம் அல்லவா" என்று கேட்டால், "ஆம் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்".  உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை ஈராக்கின் கிறிஸ்தவர்கள், போப்பின் குர்‍ஆன் முத்தத்திற்காக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பது மிகவும் முக்கியமான கேள்வி.

தேதி: 27th Jul 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-15.html