ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 17 ஜூன், 2012

குர்‍ஆன் ஏன் மற்றும் எப்படி தரப்படுத்தப்பட்டது?

             

குர்‍ஆன் ஏன் மற்றும் எப்படி தரப்படுத்தப்பட்டது?

HOW AND WHY THE QUR'AN WAS STANDARDIZED

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

குர்-ஆன் தன்னைப் பற்றி பொதுவாக சொல்லிக்கொள்ளும் ஒரு வாதம் "அது முஹம்மது மூலமாக அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நம்மிடம் வந்துள்ளது மற்றும் இதில் எந்த ஒரு மனிதனின் தலையீடும் திருத்தமும் இல்லை" என்பதாகும். குர்‍ஆனில் இருக்கும் எல்லா வசனங்களையும் முஹம்மது தான் தரப்படுத்தினார் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். என்னிடம் இஸ்லாமியர்கள் கொடுத்து படிக்கச்சொல்லும் துண்டு பிரசுரங்களிலும் இன்னும் அனேக புத்தகங்களிலும் மேற்கண்ட வாதத்தை நான் அனேக முறை படித்துள்ளேன். இஸ்லாமிய ஆசிரியர்க‌ள் (எழுத்தாளர்க‌ள்) சொல்லும் வாதங்களை கீழே படிக்கவும்:

"குர்‍ஆனின் எல்லா வசனங்களும் நமபகமானவைகளாகும். குர்‍ஆன் வெளிப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது, அதில் எவ்வித மாற்றமும் இல்லை, திருத்தல்களும் இல்லை வேறு எந்தவகையாக மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கிறது". (M. Fethullah Gulen, Questions this Modern Age Puts to Islam. London: Truestar, 1993. p.58)

குர்‍ஆன் முஹம்மதுவினால் மனனம் செய்யப்பட்டு பிறகு தம்முடைய தோழர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதை எழுதி வைத்தார்கள், அவைகளை முஹம்மது தம் வாழ்நாட்களில் சரிபார்த்தார். பல நூற்றாண்டுகளாக குர்‍ஆனில் உள்ள 114 சூராக்களில் (அதிகாரங்களில்) ஒரு வார்த்தை கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. (Understanding Islam and the Muslims, The Australian Federation of Islamic Councils Inc. (pamphlet) Nov. 1991) .

நாம் மேலே படித்த இஸ்லாமியர்களின் வாதங்கள் உண்மையா? அல்லது இவைகள் குர்‍ஆன் பற்றி இஸ்லாமியர்கள் மிகைப்படுத்திச் சொல்கிறார்களா? இந்த கேள்விகள் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள் தான். இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் இஸ்லாமிய ஆதார நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4992

உமர்பின் கத்தாப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள் .

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் .

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2410

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

"ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள் ' என்று கூறினார்கள்.

"நபி(ஸல்) அவர்கள், 'வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்' என்று கூறினார்கள்.

குர்‍ஆன் ஓதுவதில் சில மாற்றங்கள் இருப்பதை முஹம்மது அனுமதித்து இருக்கிறார் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4986

(வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்:

உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள் .

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். …….

குர்ஆனின் முடிவான ஒரு முழு தொகுப்பை முஹம்மது தம் வாழ்நாட்களில் தயாரிக்கவில்லை/தொகுக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக காட்டுகிறது. முழு குர்‍ஆனையும் ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பாக (புத்தகமாக) மாற்றவேண்டும் என்று அபூ பக்கர் கூறும் போது: அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒரு வேலையை நீங்கள் எப்படி செய்யலாம் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. முஹம்மது குர்‍ஆனை ஒரு தொகுப்பாக முழுவதுமாக ஒன்று சேர்த்து தொகுக்கவில்லை. ஏனென்றால், அவருக்கு நம்பகமான, குர்‍ஆனை கற்றுக்கொடுக்கும் தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்புக்களை கொண்டு இருந்தார்கள்.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3758

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் " என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது" என்று கூறுகிறார்கள்.

(உபை மற்றும் மஸ்வூத் என்பவர்களை கவனத்தில் கொள்ளவும். குர்‍ஆன் தொகுப்பு சரித்திரத்தில் பிற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் இவர்களின் பங்கு முக்கியமானதாகும்.)

முஹம்மதுவின் இந்த தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்பை தொகுத்து இருந்தார்கள் மற்றும் அதிலிருந்து மற்றவர்களுக்கு குர்‍ஆனை கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இந்த குர்‍ஆன்கள் ஒரே மாதிரியாக இருக்கவில்லை, இதனால் ஆரம்ப கால இஸ்லாமியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது, குர்‍ஆனை எப்படி ஓதுவது மற்றும் எந்த குர்‍ஆனிலிருந்து ஓதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பம் பற்றி கீழ்கண்ட இரண்டு ஹதீஸ்கள் எடுத்துக்காட்டுகிறது.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4944

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.

பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்' என்று கூறினார்கள் .

பல பாகங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட வசனத்தை எப்படி ஓதவேண்டும் என்ற விஷயத்தில் மாற்று கருத்து கொண்டு இருந்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அல்துல்லாஹ் பின் மஸூத் என்பவரிடம் குர்‍ஆனை கற்றவர்கள் குர்‍ஆன் சூரா 92:1-3ம் வசனங்களில் உள்ள ஒரு வாக்கியத்தை "ஆண் மற்றும் பெண் மீது ஆணையாக" என்று வாசித்தார்கள். ஆனால், மற்ற இஸ்லாமியர்களிடம் குர்‍ஆனை கற்றவர்கள் "ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது ஆணையாக" என்று வாசித்தார்கள். ஆக, ஆரம்ப கால இஸ்லாமியர்கள் எல்லாரும் குர்‍ஆனை ஒரே மாதிரியாக மனனம் செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

இந்த பிரச்சனை கீழ்கண்ட ஹதீஸில் இன்னொரு முறை வருவதை நாம் காணலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்:பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4481

உமர்(ரலி) அறிவித்தார்.

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார் எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

குர்‍ஆனில் உள்ள வசனங்களில் எந்தெந்த வசனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்று முஹம்மதுவின் தோழர்களின் இடையே கருத்துவேறுபாடு உண்டானது என்று இந்த ஹதீஸ் தெளிவாக கூறுகிறது. இதர முஹம்மதுவின் தோழர்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது /நீக்கப்பட்டு விட்டது என்று கருதும் வசனங்களை உபை என்ற நபித்தோழர் குர்‍ஆனோடு சேர்த்து அவைகளையும் தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்துள்ளார். அவ்வசனங்கள் இரத்துசெய்யப்பட்டுவிட்டது என்பதை அவர் ஏற்க மறுத்தார் மற்றும் "இவ்வசனங்களை நான் அல்லாஹ்வின் தூதரின் வாயின் மூலமாக பெற்றேன், ஆகையால், வேறு எந்த காரணம் கொண்டும் இவைகளை நான் விட்டுவிட முடியாது" என்று கூறினார். அதன் பிறகு, இந்த ஹதீஸ் ஸூரா 2:106ம் வசனத்தை மேற்கோள் காட்டி, இப்படித் தான் குர்‍ஆன் வசனம் இரத்து செய்யப்படுகிறது என்று கூறுகிறது. இதன் விளைவு என்னவென்றால், முஹம்மதுவின் தோழர்கள் குர்‍ஆனை பலவகையாக வித்தியாசமாக வாசித்துக்கொண்டு இருந்தார்கள், உபை என்பவர் மட்டும் இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்களோடு குர்‍ஆனை ஓதிக்கொண்டு இருந்தார்கள்.

மஸூத் மற்றும் உபை என்பவர்கள் இதர இஸ்லாமியர்களுக்கு குர்‍ஆனை வித்தியாசமாக கற்றுக்கொடுத்தார்கள். நாம் இதற்கு முன்பே பார்த்திருக்கிறோம், அதாவது குர்‍ஆனை கற்றுக்கொடுக்க‌ தகுதியுள்ளவர்களாக இவ்விருவரை முஹம்மது இதர மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளார். இருந்தபோதிலும், இவ்விருவரிடம் இருந்த குர்‍ஆன் தொகுப்பு ஒரே மாதிரியாக இல்லாத காரணத்தினால், யாரிடமிருந்து குர்‍ஆனை கற்கவேண்டும் என்ற பிரச்சனை இருந்தது. இதைப் பற்றி இஸ்லாமிய அறிஞர் லபிப் அச் சையத் (Labib as-Said) கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"ஈராக்கிய இஸ்லாமியர்களோடு சிரியன் இஸ்லாமியர்கள் போராடி வாதாடுகிறார்கள்" என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிரியன் இஸ்லாமியர்கள் உபை இபின் காப் என்பவரின் குர்‍ஆனை ஓதுகிறார்கள், ஈராக்கிய இஸ்லாமியர்கள் அல்துல்லா இபின் மஸூத் என்பவரின் குர்‍ஆனை ஓதுகிறார்கள். இவ்விரு பிரிவினரும் ஒருவரை இன்னொருவர், இஸ்லாமிய நம்பிக்கை இல்லாதாவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். (Labib as-Said, The Recited Koran: A History of the First Recorded Version, tr. B. Weis, et al., Princeton, New Jersey: The Darwin Press, 1975, p. 23)

ல‌பிப் அஸ்ஸைய‌த் [1] ம‌ற்றும் அஹ‌ம‌த் வ‌ன் டென்ஃபெர் [2] போன்ற‌ சில‌ இஸ்லாமிய‌ர்க‌ள், இபின் ம‌ஸூத் ம‌ற்றும் உபை (இன்னும் நபித்தோழர்கள்) போன்ற‌வ‌ர்க‌ள் தொகுத்து வைத்திருந்த‌ ப‌ல‌ வ‌கையான‌ குர்‍ஆன்க‌ளான‌து, த‌ங்க‌ள் சொந்த‌ உப‌யோக‌த்திற்காக‌ தொகுக்க‌ப்ப‌ட்ட‌து என்று கூறுகிறார்க‌ள். ஆனால், நாம் மேலே க‌ண்ட‌ ஹ‌தீஸ்க‌ளின் ப‌டி, இபின் ம‌ஸூத் தான் தொகுத்து வைத்திருந்த‌ குர்‍ஆன் தொகுப்பை த‌ன்னுடைய‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு க‌ற்றுக்கொடுத்தார் என்றும், இதே போல‌ உபைய் என்ப‌வ‌ரும் க‌ற்றுக்கொடுத்தார் என்று கூறுகிறது, இத‌னால் இவ்விருவ‌ருடைய‌ மாண‌வ‌ர்க‌ளிடையே ப‌ல‌ வேறுபாடுக‌ள், மனவருத்த சண்டைகள் ஏற்ப‌ட்டுள்ள‌தை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறிய‌லாம். இஸ்ல‌மிய‌ ச‌ரித்திர‌த்தையும், த‌ற்கால‌த்தில் க‌ண்டெடுக்க‌ப்ப‌டுகிற‌ அக‌ழ்வாராய்ச்சி க‌ண்டுபிடிப்புக்க‌ளையும் நாம் க‌ண்டால், இந்த‌ குர்‍ஆன் தொகுப்புக்க‌ள் த‌னிப்ப‌ட்ட‌ உபயோக‌த்திற்கு அல்ல‌, அத‌ற்கு ப‌திலாக‌ பொதுவான‌ ம‌க்க‌ள் உப‌யோக‌த்திற்கு என்று அறிய‌லாம்.[3]

இந்த பிரச்சனை எப்படி ஒரு முடிவிற்கு வந்தது என்பதை அடுத்த ஹதீஸில் காணலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4987

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி)அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள் .

பல வகையான குர்‍ஆன்கள் கொண்டு வந்த பிரச்சனை எப்படி தீர்ந்தது என்பதை இங்கே நாம் காணலாம். இந்த பிரச்சனை உஸ்மான் மூலமாக தீர்க்கப்பட்டது, அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் தொகுப்பை வைத்துக்கொண்டு, இதர அனைத்து குர்‍ஆன்களையும் எரித்துவிடும் படி கட்டளையிடப்பட்டது. முஹம்மது அனுமதித்த "ஏழு வகையாக குர்‍ஆனை ஓதும்" வழிமுறைகளையும் இந்த கட்டளை நீக்கிவிட்டது, அதே போல இதர நபித்தோழர்கள் தொகுத்து வைத்திருந்த குர்‍ஆன் பிரதிகளும் அழிக்கப்பட்டது. இதன் பிறகு, எழுத்து வடிவான குர்‍ஆனாக இருந்தாலும் சரி, வாய் வழி குர்‍ஆன் ஓதும் முறையாக இருந்தாலும் சரி, உஸ்மான் தரப்படுத்திய குர்‍ஆன் தொகுப்பையே பின்பற்றப்படவேண்டும்.

குர்‍‍ஆன் முழுவதுமாக எரிக்கப்பட்ட வரலாறு போன்று எல்லா பிரதிகள் முழுவதுமாக எரிக்கப்பட்ட வரலாறு பைபிளுக்கு இல்லை என்பதை இங்கு கவனிக்கவேண்டும்.

நாம் கேட்கவேண்டிய அடுத்த‌ கேள்வி என்னவென்றால், "உஸ்மானோ மற்றும் அவரது குழுவோ, அவர்கள் தங்கள் குர்‍ஆன் தொகுப்பை தயாரிக்கும் போது, ஏதாவது மாறுதல்கள், தெரிவு செய்தல் போன்ற திருத்தல்கள் குர்‍ஆனில் செய்தார்களா? " என்பதாகும்.

நாம் பார்க்கப்போகும் அடுத்த மூன்று ஹதீஸ்கள் ஆம், குர்‍ஆனில் திருத்தல்கள் மற்றும் தெரிவு செய்து நுழைத்த வசனங்கள் குர்‍ஆனில் உண்டு என்பதை நமக்கு காட்டுகின்றன.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே? ' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன்.

விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றும், இவ்வசனம் குர்‍ஆனிலிருந்து எடுக்கப்படக்கூடாது என்று உமர் நம்பினார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தற்போது நம் கைகளில் இருக்கும் குர்‍ஆனில் இந்த குர்‍ஆன் வசனம் இல்லை. அப்படியானால், அந்த வசனங்கள் எங்கே போனது? குர்‍ஆனை தொகுத்தவர்களால் இவ்வசனம் நிச்சயமாக நீக்கப்பட்டு இருக்கும். உமர் இவ்வசனங்களை ஞாபகம் வைத்திருந்தார் மற்றும் மற்றவர்கள் திருத்தி நீக்கிவிட்டது போல இவ்வசனம் குர்‍ஆனிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பவில்லை என்பது தெளிவு. இன்று நம்மிடம் இருக்கும் குர்‍ஆனில் இவ்வசனம் இல்லை.

உஸ்மான் எப்படி குர்‍ஆன் வசனங்களின் மீது தன் முழு அதிகாரத்தை வைத்திருந்தார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களில் மறுபடியும் காணலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்:பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4530

அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) அறிவித்தார்

நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.

குர்‍ஆனில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை சேர்க்கலாமா இல்லையா என்பது குறித்து இபின் அஜ் ஜுபைர் மற்றும் உஸ்மான் என்பவர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தது என்பதை இங்கு காணலாம். அஜ் ஜுபைரின் நம்பிக்கையின் படி, அந்த வசனம் இரத்து செய்யப்பட்டு விட்டது மற்றும் அது குர்‍ஆனிலிருந்து நீக்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால், இவ்வசனம் குர்‍ஆனில் இருக்கவேண்டும் என்று உஸ்மான் கட்டாயப்படுத்தினார். கடைசியாக, உஸ்மான் வெற்றிப்பெற்றார், இதனால் அந்த வசனம் இன்று நம்மிடம் இருக்கும் குர்‍ஆனில் இருக்கிறது.

குர்‍ஆனின் கடைசி வசனங்கள் மீது எப்படி உஸ்மான் ஆதிக்கம் செலுத்தினார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களில் மறுபடியும் முறை நாம் காணலாம்.

மிஷ்கத் அல் மஸபிஹ்: புத்தகம் 8, அதிகாரம் 3, கடைசி ஹதீஸ் [4])

"உஸ்மானிடம்[1] கீழ்கண்டவாறு தாம் கேட்டதாக இபின் அப்பாஸ் கூறினார்:

குர்‍ஆனின் மதனி சூராவாகிய அல் அன்ஃபல்[2] சூராவையும், நூறு வசனங்கள் அடங்கிய சூராக்களில் ஒன்றாகிய பரா[4] சூராயும் ஒன்று சேர்த்துவிட்டு, ஆனால், "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.." என்ற சொற்றொடரை சேர்க்காமல், ஏன் இதர ஏழு பெரிய சூராக்களோடு சேர்த்துவிட்டீர்கள்? இப்படி செய்ய உங்களை தூண்டியது என்ன? இதே கேள்வியை இபின் அப்பாஸ் உஸ்மானிடம் ம‌றுப‌டியும் கேட்ட‌போது, உஸ்மான் கீழ்க‌ண்ட‌வாறு ப‌தில் அளித்தார்.

"அதிக‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அட‌ங்கிய‌ சூராக்க‌ள் அல்லாஹ்வின் தூத‌ருக்கு வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌போது, அவ‌ர் குர்‍ஆனை எழுதும் ந‌ப‌ர்க‌ளை அழைத்து, இப்போது இற‌ங்கிய‌ இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளை, அந்த‌ குறிப்பிட்ட‌ சூராவில், அந்த‌ குறிப்பிட்ட‌ வ‌சன‌ங்க‌ளுக்கு பிற‌கு சேர்த்துவிடுங்க‌ள் என்று சொல்லுவார். இப்போது, ம‌தினாவில் இற‌ங்கிய‌ சூராக்க‌ளில் அல் அன்ஃப‌ல் என்ப‌து முத‌லாவ‌து இற‌ங்கிய‌ சூராவாகும். அதே போல‌, ப‌ரா என்ற‌ சூரா குர்‍ஆனில் இற‌ங்கிய‌ சூராக்க‌ளில் க‌டைசியாக‌ இற‌ங்கிய‌ சூராவாகும். இவ்விரு சூராக்க‌ளின் க‌ருத்து/சாராம்ச‌ம் ஒரே மாதிரியாக‌ இருக்கிற‌து, ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ சூராக்களை எத‌னோடு சேர்க்க‌வேண்டும் என்று சொல்லாம‌லேயே இறைத்தூதர் ம‌ரித்துவிட்ட‌ப‌டியினால், நான் அவைக‌ளை ஒன்றாக‌ சேர்த்து "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்ற‌ சொற்றொட‌ர்க‌ளை சேர்க்காம‌ல், இத‌ர‌ பெரிய‌ சூராக்க‌ளோடு சேர்த்துவிட்டேன்.

மேற்கண்ட ஹதீஸீன் பின்குறிப்பு:

1) உஸ்மான் என்பவர்,முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மூன்றாம் காலிபா ஆவார்(இஸ்லாமிய தலைவராவார்).

2) அல் அன்ஃபல் என்பது குர்‍ஆனின் எட்டாவது சூராவாகும்.

3) மதனி: 100 வசனங்களை விட குறைவாக இருக்கும் குர்‍ஆன் சூராக்கள் (அதிகாரங்கள்) ஆகும்.

4) பரா மற்றும் தௌபா என்பது குர்‍ஆனின் ஒன்பதாவது சூரா ஆகும்.

5) ஒன்பதாவது சூராவைத் தவிர, குர்‍ஆனில் உள்ள அனைத்து சூராக்களும் "அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று தொடங்கும்.

இந்த ஹதீஸில் நாம், இதர இஸ்லாமியர்கள் உஸ்மானிடம் "ஏன் ' அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ' என்ற சொற்றொடரை ஒன்பதாவது சூராவின் (அத்தியாயத்தின்) ஆரம்பத்தில் சேர்க்கவில்லை என்று கேள்வி கேட்டதாக காண்கிறோம். இந்த கேள்விக்கு உஸ்மானின் பதில் என்னவென்றால், "இந்த ஒன்பதாவது சூராவை எந்த சூராவோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று சொல்லாமலேயே முஹம்மது மரித்துவிட்டதால், இதோ பொருளோடு/கருத்துக்களை கொண்ட எட்டாவது சூராவோடு தாம் சேர்த்துவிட்டதாக கூறினார்". இங்கு தெளிவாக தெரியும் ஒரு விவரம் என்னவென்றால், சில இஸ்லாமியர்கள் "அந்த ஆரம்ப" சொற்றொடர்கள் இந்த ஒன்பதாவது சூராவின் எழுதவேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால், உஸ்மான் அதனை செய்யவில்லை என்பதாகும். கடைசியாக உஸ்மானே வெற்றி பெற்றார், ஆகையால் இன்று நம்மிடம் இருக்கு குர்‍ஆனில் அவ்வாக்கியங்கள் ஒன்பதாவது சூராவில் சேர்க்கப்படவில்லை.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்கள் மூலமாக தெளிவாக்கப்பட்டுள்ளது என்னவென்றால், "குர்‍ஆனை தொகுத்த நபர்கள் மூலமாக சில மாறுதல்கள் குர்‍ஆனில் செய்யப்பட்டுள்ளது என்பதாகும். இதில் தெளிவாக்கப்பட்ட இன்னொரு விவரம் என்னவென்றால், உஸ்மான் எடுத்த அந்த முடிவு எல்லா இஸ்லாமியர்களும் ஒருமித்து எடுத்த முடிவல்ல என்பதாகும். இந்த முடிவு ஏக யோசனையாக ஒருமித்து எடுத்த முடிவு அல்ல.

உஸ்மானின் குர்‍ஆன் குறித்து ஒரு நபித்தோழர் காட்டிய எதிர் வினை என்ன என்பதை அடுத்த ஹதீஸ் தெரிவிக்கிறது.

சஹீஹ முஸ்லிம்: தொகுப்பு 4, ஹதீஸ் எண் 6022, பக்கம் 1312, புத்தகம் 29

அப்துல்லாஹ் (இப்னு மஸூத்) அறிவித்ததாவது, அவர் தன்னுடைய தோழர்களுக்கு தங்களுடைய குர்‍ஆனை மறைத்துவைக்கும் படி கூறினார். மேலும், யார் எவைகளை மறைத்து வைக்கிறாரோ அவைகளை நியாயத்தீர்ப்பு நாளில் வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் அப்துல்லாஹ் இப்னு மஸூத் கூறினார். மேலும் அவர் 'யாருடைய முறைப்படி நான் ஓதவேண்டும் என்ரு எனக்கு நீங்கள் சொல்லுவீர்கள்'? நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) முன்பாக குர்‍ஆனின் 70க்கும் அதிகமான ஸூராக்களை ஓதிக்காட்டியுள்ளேன், மற்றும் இதனை அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தோழர்களும் அறிவார்கள். எனவே அவர்களை விட எனக்கே அல்லாஹ்வின் வேதம் பற்றிய புரிதல் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை என்னை விட நன்றாக அல்லாஹ்வின் வேதத்தை அறிந்தவர் இருப்பாரானால், அவரிடம் நான் நிச்சயமாக செல்வேன். ஷாகிக் கூறும் போது 'இந்த சமயத்தில் நான் அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தோழர்களுடன் உட்கார்ந்து இருந்தேன், ஆனால், மஸூத் இவ்விதம் கூறும் போது, நபித்தோழர்களில் யாரும் அதனை நிராகரிக்கவோ அல்லது அவரது கூற்றில் குறைகண்டுபிடிக்கவோ இல்லை.

Muslim: vol. 4, hadith 6022, p. 1312; book 29

`Abdullah (b. Mas'ud) reported that he (said to his companions to conceal their copies of the Qur'an) and further said: He who conceals anything he shall have to bring that which he had concealed on the Day of Judgement, and then said: After whose mode of recitation do you command me to recite? I in fact recited before Allah's Messenger (may peace be upon him) more than seventy chapters of the Qur'an and the Companions of Allah's Messenger (may peace be upon him) know it that I have better understanding of the Book of Allah (than they do), and if I were to know that someone had better understanding than I, I would have gone to him. Shaqiq said: I sat in the company of the Companions on Muhammad (may peace be upon him) but I did not hear anyone having rejected that (that is, his recitation) or finding fault with it.

மேற்கண்ட ஹதீஸிலிருந்து நான்கு விவரங்களை நாம் காணலாம்.

1) சில காரணங்களுக்காக தங்கள் குர்‍ஆனை மறைத்துவைக்கும் படி இபின் மஸூத் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

2) குர்‍ஆனை வேறுவகையாக ஓத வேண்டும் என்று இவருக்கு கட்டளையிடப்பட்டதினால் இவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்றால், உஸ்லாம் குர்‍ஆனின் ஒரு தொகுப்பை தரப்படுத்தவேண்டும் என்றுச் சொல்லி, இதர குர்‍ஆன்களை எரித்துவிடும் படி கட்டளையிட்டாரே அப்போது நடந்து இருக்கவேண்டும்.

3) இபின் மஸூத் குர்‍ஆனை எப்படி ஓதினாரோ அதைவிட்டு வேறு வகையாக ஓதவேண்டும் என்ற கட்டளையை இவர் எதிர்த்ததற்கு அவர் சொன்ன காரணம்: "அவர்களை காட்டிலும் எனக்கு (இபின் மஸூத்) அல்லாஹ்வின் வேதம் பற்றிய அறிவு அதிகம்" என்பதாகும்.

4) ஷகீக் "முஹம்மதுவின் தோழர்கள் மஸூத் சொன்னதை அங்கீகரித்தார்கள்" என்று கூறுகிறார்.

உஸ்மானின் குர்‍ஆனை எல்லா இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இஸ்லாமிய அறிஞர் அஹமத் அலி அல் இமாம் (Ahmad `Ali al Imam) பதிவு செய்துள்ளார்.

உஸ்மான் குர்‍ஆனை தொகுத்த பிறகு, குர்‍ஆனை ஓதும் (கிரா) அனைவருக்கும் உஸ்மான் தொகுத்த மஸஹிப்பின் படி ஓதும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, எல்லாரிடமும் இருந்த தனிப்பட்ட குர்‍ஆன் தொகுப்புக்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. எல்லா அன்சார் நகரங்களில் உஸ்மானின் மஸஹிப்பின் கை மேலோங்கி இருந்தது, ஒரு சில எதிர்ப்புக்களை தவிர, அதாவது இபின் மஸூத் மற்றும் இபின் ஷன்புத் போன்றவர்களின் எதிர்ப்புக்களைச் சொல்லலாம். (Ahmad `Ali al Imam, Variant Readings of the Qur'an, Virginia: IIIT, 1998, p. 120)

உஸ்மான் தொகுத்த குர்‍ஆனை இபின் மஸூத் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது, இதனால் பொதுமக்கள் நடுவில் இபின் மஸூத்தை சாட்டையால் அடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

"இபின் மஸூத் தன் குர்‍ஆனை கைப்பிரதியை கொடுக்க மறுத்துவிட்டார். ஏனென்றால், குர்‍ஆனை தொகுக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரின் நம்பகத்தன்மை தன்னை விட குறைவாக இருப்பதினால் இவர் கொடுக்க மறுத்துவிட்டார். இபின் மஸூத்தின் இந்த மறுப்பு கலிஃபாவை எப்படி கோபப்படுத்தியது என்றால், மிகவும் வயதான நபராகிய இபின் மஸூத்தை சாட்டையால் அடிக்கவைக்கும் படி கோபப்படுத்தியது. இறைத்தூதரின் மிகவும் வயது முதீர்ந்த இபின் மஸூத் என்பவருக்கு கொடுத்த சாட்டை அடியினால் அவரது இரண்டு விலா எலும்புகள் உடைக்கப்பட்டது மற்றும் இதனால் அவர் மூன்று நாட்கள் கழித்து மரித்துவிட்டார் . உஸ்மானின் இந்த கொடூரமான செயல், அவரது சமகால இஸ்லாமியர்களுக்கு அவர் மீது வெறுப்பை உண்டாக்கியது. தற்காலத்தில் உஸ்மானின் இந்த செயல் "ஒரு கொடூரமான குற்றம்" என்று "ஷியா (Schutes)" என்பவர்களால் வர்ணிக்கப்படுகிறது.

Ibn Mas'ud refused to deliver his copy to the committee whose president, although one of the readers of the word of God, had earned much less trust and authority than he. This refusal incited such a level of indignation from the Khalif that he publicly whipped the "old saint". One notes that the old companion of the prophet had two ribs broken from the violence of the strikes and that he died after three days. This cruelty, that drew upon Othman the hatred of his contemporaries, is today regarded by the "schutes" as an atrocious crime. (T. J. Newbold, Journal Asiatique, December 1843, p. 385)

சுருக்கம்:

1) குர்‍ஆனை எப்படி ஒரே வகையாக ஓதவேண்டும் என்பதை முஹம்மது நிர்ணயிக்கவில்லை, அதற்கு பதிலாக அனேக விதமான ஓதும் முறையை அனுமதித்து இருந்தார்.

2) முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு குர்‍ஆனை ஓதும் முறையிலும், மனனம் செய்வதிலும் அதிக வித்தியாசங்கள் இருந்தன, இது அனேக பிரச்சனைகளை உருவாக்கியது.

3) உஸ்மானும், அவ‌ர‌து குழுவும் சில‌ மாறுத‌ல்க‌ள் செய்து ஒரு குர்‍‍ஆனை தரப்படுத்தி தொகுத்தார்க‌ள்.

4) இத‌ர‌ குர்‍ஆனை கையெழுத்து பிர‌திக‌ளை அழித்துவிடும் ப‌டி உஸ்மான் க‌ட்ட‌ளையிட்டார். இஸ்லாமிய‌ உல‌க‌ம் அனைத்திலும் தாம் தொகுத்த‌ குர்‍ஆனை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும் என க‌ட்ட‌ளையிட்டார். வாய்வ‌ழியான‌ குர்‍ஆன் ஓதும் முறையானாலும் ச‌ரி, எழுத்து வ‌டிவான‌ குர்‍ஆனாலும் ச‌ரி, உஸ்மானின் தொகுப்பையே ஆதார‌மாக‌ இருக்க‌வேண்டும் என‌ க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்ட‌து.

5) சில‌ ந‌பித்தோழ‌ர்களுக்கு இப்னு மஸூத்தைப்போல, உஸ்மானின் செய‌ல்க‌ள் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, இத‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அனேக‌ பிரச்ச‌னைக‌ளை ச‌ந்தித்தார்க‌ள்.

 

முடிவுரை:

இக்க‌ட்டுரையின் ஆர‌ம்ப‌ ப‌குதியில் நாம் கீழ்க‌ண்ட‌ இஸ்லாமிய‌ வாத‌த்தை க‌வ‌னித்தோம்:

"குர்‍ஆனின் எல்லா வசனங்களும் நமபகமானவைகளாகும். குர்‍ஆன் வெளிப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது, அதில் எவ்வித மாற்றமும் இல்லை, திருத்தல்களும் இல்லை வேறு எந்தவகையாக மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கிறது". (M. Fethullah Gulen, Questions this Modern Age Puts to Islam. London: Truestar, 1993. p.58)

குர்‍ஆன் முஹம்மதுவினால் மனனம் செய்யப்பட்டு பிறகு தம்முடைய தோழர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதை எழுதி வைத்தார்கள், அவைகளை முஹம்மது தம் வாழ்நாட்களில் சரிபார்த்தார். பல நூற்றாண்டுகளாக குர்‍ஆனில் உள்ள 114 சூராக்களில் (அதிகாரங்களில்) ஒரு வார்த்தை கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. (Understanding Islam and the Muslims, The Australian Federation of Islamic Councils Inc. (pamphlet) Nov. 1991) .

இதுவரை நாம் அனேக ஹதீஸ்களையும் மற்றும் இதர இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்து அனேக ஆதாரங்களை கண்டுள்ளோம். நாம் கண்ட எல்லா நம்பகமான ஹதீஸ்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த இஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு சாதகமாக சொல்லும் வாதமானது, மிகைப்படுத்தி கற்பனையாக கூறியவைகள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த ஹதீஸ்களை நாம் பார்க்கும் போது, இஸ்லாமியர்கள் கூறும் விவரங்களுக்கு எதிராகவே இந்த ஹதீஸ்கள் சாட்சி பகருகின்றன. முஹம்மது குர்‍ஆனை தரப்படுத்தவில்லை மற்றும் அனேக வழி முறைகளில் குர்‍ஆனை ஓத அவர் அனுமதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆரம்ப கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்யும் போது பல வகையாக வித்தியாசமாக மனனம் செய்தார்கள். உஸ்மானும் அவரது குழுவும் சில மாற்றங்களை செய்து ஒரே ஒரு குர்‍ஆன் தொகுப்பை உருவாக்கினார்கள், மற்றும் இதர பிரதிகளை எரித்துவிட்டார்கள். முஹம்மது ஓதிக்காட்டிய அனேக வழிமுறைகளில், சிறந்த வழிமுறையில் குர்‍ஆனை உஸ்மான் உருவாக்கினார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால், முஹம்மது ஓதிய அனேக குர்‍ஆன் முறைகளில், உஸ்மான் தொகுத்தது தான் சிறந்த குர்‍ஆன் என்று கருதமுடியாது, ஏனென்றால் இந்த குர்‍ஆனை முஹம்மது தொகுக்கவில்லை.

பின் குறிப்புக்கள்:

[1] Labib as-Said, The Recited Koran: A History of the First Recorded Version, tr. B. Weis, M. Rauf and M. Berger, Princeton, New Jersey: The Darwin Press, 1975, p. 22

[2] Ahmad Von Denffer, `Ulum Al-Qur'an, Leicester: The Islamic Foundation, 1994 (Revised edition), p. 52

[3] Here are just a few references that show that the collections of the Masud and Ubai were used publicly.

  1. Bukhari and Muslim record many hadiths about the arguments among early Muslims regarding the differences between Masud's recition of the Qur'an and the Uthman Qur'an. This shows that Masud's Qur'an was not for "private use" only. 
   o Bukhari: 
      1. Vol. 5, hadith 85-86, pp. 62-64, hadith 105, p. 71-72; book 57.
      2. Vol. 6, hadith 467-468, pp. 441-442; book 60. 
   o Muslim: 
      1. Vol. 2, hadith 1797-1802, pp. 393-394, book 4.

  2. Al-Nadim lists some of the differences between the collections of Masud and Ubai and the Uthman collection (pp. 53-62). In another section of his book entitled: The Books Composed about Discrepancies of the [Qur'anic] Manuscripts (p. 79), Al-Nadim lists seven early Qur'anic scholars who studied the differences between these different collections. (Bayard Dodge (tr.), The Fihrist of al-Nadim (2 vols) (New York, London: Columbia University Press, 1970. pp. 53-62)

  3. In the 1980's many ancient Qur'ans were discovered in San`a'. Some of these have the surah order that was credited to Masud and others. Thus we have actual copies of these other collection and so can be sure that they did exist and were in public use. (Gerd-R Puin, Observations on the Early Qur'an Manuscripts in San`a'. In "The Qur'an as Text" ed. Stefan Wild, Leiden: Brill, 1996. pp. 110-111)

[4] Mishkat Al-Masabih: Ahmad, Tirmidhi and Abu Dawud transmitted it. (tr. by James Robson, Sh. Muhammad Ashraf, Lahore, p. 470

ஆங்கில மூலம்: HOW AND WHY THE QUR'AN WAS STANDARDIZED

சாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்

அனைத்து முஸ்லிம்களுக்கு வெளிப்படையான சவால்

Open Challenge to All Muslims

சாம் ஷமான்

கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் இடும் பொதுவான சவால் என்னவென்றால், 'பரிசுத்த பைபிளிலிருந்து "நான் தேவன்" (அ) "என்னை தொழுதுக்கொள்ளுங்கள் " என்ற சொற்றொடர்களை இயேசு சொன்னதாக காட்டமுடியுமா?' என்பதாகும். "இந்த வார்த்தைகளை அப்படியே இயேசு சொல்லவில்லை என்று நிருபனமாகிவிட்டால், இயேசு தேவனில்லை என்பதும் நிருபனமாகிவிடும்" என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் இதனால் தான் இப்படி சவால் விடுகிறார்கள். இன்று இஸ்லாமியர்கள் கூறும் இந்த வார்த்தைகளை "அன்று" இயேசு அப்படியே சொல்லி தன் தெய்வீகத் தன்மையை நிருபித்து இருக்கவேண்டும் என்று இஸ்லாமியர்கள் விரும்புகிறார்கள். இப்படி இயேசு கூறவில்லையானால், அவரை நாங்கள் நம்பமுடியாது அல்லது "தன்னை தேவன்" என்று இயேசு சொல்லியிருக்கமாட்டார் என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிகிறார்கள்.

இயேசுவை தங்கள் கண்களால் கண்ட சாட்சிகள் (சீடர்கள்), இயேசுவின் தெய்வீகத் தன்மையை நிருபிக்கும் வசனங்களை புதிய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். இந்த புதிய ஏற்பாட்டு வசனங்களை இயேசுவின் தெய்வீகத் தன்மையை நிருபிப்பதற்கு கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டும் போது, இஸ்லாமியர்கள் அவைகளை மறுத்துவிடுகிறார்கள், இந்த வார்த்தைகள் "இயேசு தம் வாயிலிருந்து சொன்னவைகள் அல்ல " என்றும், புதிய ஏற்பாட்டு வசனங்கள் அதனை எழுதிய சீடர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் சொல்லி புறக்கணித்துவிடுகிறார்கள்.

முஸ்லிம்களின் இந்த மேற்கண்ட வாதங்களினால் ஒரு நன்மையும் இல்லை. புதிய ஏற்பாடு வெளிப்படுத்தும் இயேசுவின் குமாரத்துவத்தின் தெய்வீகத் தன்மையை இஸ்லாமியர்களின் மேற்கண்ட வாதம் மட்டுப்படுத்தாது என்பதை

கீழ்கண்ட சவால்களை நாம் இஸ்லாமியர்களின் முன் வைத்து சவாலிடுகிறோம்.

1. இயேசு தம்முடைய வாயிலிருந்து கீழ்கண்ட விவரங்களை "அப்படியே" சொல்லியதாக, குர்‍ஆனிலிருந்து வசனங்களைக் காட்டுங்கள்.

அ) நான் இறைவனில்லை (I am not God)

ஆ) நான் தேவகுமாரனில்லை (I am not the Son of God)

இ) நான் உங்கள் பாவங்களுக்காக மரிக்க வரவில்லை (I did not come to die for your sins)

ஈ) நான் மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிரோடு எழும்புவதற்காக வரவில்லை (I did not come to rise from the dead on the third day)

"இயேசு இறைவனில்லை" அல்லது "இயேசு இறைக் குமாரனில்லை" என்று குர்‍ஆனின் ஆசிரியர் சொன்ன வசனங்களை இதற்கு பதிலாக நீங்கள் வைத்தால், அது "என்னுடைய மேற்கண்ட சவாலுக்கு பதிலாக" அமையாது. ஏனென்றால், நீங்கள் காட்டும் வசனங்கள் "இயேசு சுயமாக சொன்னவைகள் அல்ல" அவைகள் "குர்‍ஆனை எழுதிய எழுத்தாளனின் சொந்த கருத்துக்களாகும் ".

மேற்கண்ட சவாலை சந்திக்க இஸ்லாமியர்களால் முடியவில்லையானால், அதன் அர்த்தமென்ன? இயேசுவின் தெய்வீகத்தன்மையை குர்‍ஆன் மறுக்கவில்லை என்பதாகும். ஏனென்றால், இயேசு சுயமாக தம்முடைய வாயிலிருந்து "நான் இறைவன் இல்லை", "நான் இறைக் குமாரன் இல்லை" என்று சொல்லிய‌ வார்த்தைகளை அப்படியே குர்‍ஆன் கொண்டிருக்கவில்லை, ஆகவே, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குர்‍ஆன் மறுக்கவில்லை என்பது நிருபனமாகும்.

2) இஸ்லாமியர்களே, நீங்கள் காட்டப்போகும் இயேசு சொன்னதாக வரும் வாக்கியங்களை இயேசு பேசிய மூல மொழியில் காட்டவேண்டும்.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது பேசிய "அராமிக்" மொழியில் நீங்கள் அவ்வாக்கியங்களை காட்டவேண்டும். இயேசு பேசியதாகச் சொல்லி, அரபியில் சில வார்த்தைகளை காட்டினால் அதனை நாங்கள் அங்கீகரிக்கமுடியாது, ஏனென்றால், இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு போதும் அரபி பேசவில்லை, முக்கியமாக குர்‍ஆனிய அரபியை அதாவது குரைஷி வழக்க அரபியை அவர் பேசியதில்லை . இந்த குரைஷி வழக்கத்தின் படியுள்ள அரபியில் குர்‍ஆன் இறக்கியதாக கூறப்படுகிறது. ஆகவே, இந்த குரைஷி வழக்க அரபியை இயேசு பேசவில்லை.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4987

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி)அவர்களை,(இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளில் உள்ள முரண்பாட்டை நாம் மேற்கண்ட விவரங்கள் மூலமாக வெளிக்காட்டுவதோடு மட்டும் அல்லாமல், கீழ்கண்ட விவரங்களையும் தெளிவாக்க விரும்புகிறோம்: குர்‍ஆனுக்கு இயேசுவின் தெய்வத்தன்மையை மறுக்க, இயேசுவின் வாயிலிருந்து "நான் இறைவனில்லை" என்ற வார்த்தைகள் தேவைப்படாத போது, இயேசுவின் தெய்வத்தன்மையை நிருபிக்க புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இயேசு "நான் இறைவன்" அல்லது "என்னை தொழுதுக்கொள்ளுங்கள்" என்ற நேரடி வார்த்தைகள் தேவையில்லை என்பது திண்ணம். (Just as the Quran can deny Jesus being God without needing to put words in his mouth to do so, in a similar manner the NT writers could (and actually do) affirm the Deity of Christ without having to quote Jesus as saying the words, "I am God" or "Worship me".)


சமீப காலத்தில், என்னுடைய சவாலை சந்திக்கும் படி, பிஸ்மிகா அல்லாஹும்மா" தளத்தின் ஆசிரியராகிய "புரோ பாஸ்" என்பவர் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதினார். அவரது மறுப்பில் உள்ள ஒரு வேடிக்கை என்னவென்றால், என்னுடைய சவாலை சந்திப்பதற்கு பதிலாக, நான் கூறியவைகள் சரியான சவால்கள் அல்ல என்று நிருப்பிக்க எனக்கு சவால் எழுப்பியுள்ளார்.

அவருடைய வாதங்களில் உள்ள மடமையை வாசகர்கள் கவனிக்கவும். அதாவது என்னுடைய சவால்களின் முக்கிய நோக்கமே, "இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கு மறுப்பதற்கு இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அந்த சவால்கள் மடமையானது, பயனற்றது" என்பதை நிருபிக்கவாகும். இவரோ என் சவால் அனைத்தையும் விட்டுவிட்டார். இது எதனை நிருபிக்கிறது என்றால், என்னுடைய சவால்களை இவர்களால் சந்திக்கமுடியாது, இதனை அவர் மறைமுகமாக அங்கீகரித்துவிட்டார். இஸ்லாமியர்களின் சவாலுக்கு ஏற்பட்ட பாதிப்பை கொஞ்சம் குறைப்பதற்காக எனக்கு அவர் சவால் விடுகிறார். ம‌ட்டும‌ல்ல‌, இப்ப‌டி இஸ்லாமை காப்பாற்ற‌ நினைத்து, இஸ்ல‌மிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாத‌ங்க‌ளில் நேர்மைய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தை நிருபித்துவிட்டார் ம‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ளின் வாத‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் குர்‍ஆன் ம‌ற்றும் இஸ்லாமுக்கு எதிராக‌வே மாறிவிடுகிறது என்பதை மறைமுகமாக அங்கீகரித்துள்ளார்.

எனினும், என் சவால்களுக்கு பதில் தருவதாக நினைத்து, அந்த இஸ்லாமிய சகோதரர் "பிரோ பாஸ்" மேற்கோள் காட்டிய குர்‍ஆன் 5:116,117ம் வசனங்கள் மிகவும் வேடிக்கையானவைகள், அவைகளை இப்போது படித்து, அதற்கு என் மறுப்பை பார்ப்போம்

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். (5:116) "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); (5:117)

ஆக, அடிப்படையிலேயே, அந்த மிஷனரி நிற்பதற்கு அவருக்கு இடமில்லாமல் போய்விட்டது, அதாவது இயேசு தான் இறைவன் இல்லை என்ற வார்த்தைகள் நமக்கு குர்‍ஆனில் கிடைத்துவிட்டது

என்னுடைய சவால்களில் ஒன்றையும் மேற்கண்ட வசனங்கள் சந்திக்கவில்லை என்பதற்கு அனேக பதில்களைத் தரலாம். முதலாவதாக, நான் முஸ்லிம்களுக்கு இப்படி சவால் இடவில்லை, அதாவது, "அல்லாஹ்விற்கு அடுத்து இன்னொரு இறைவனாக என்னை ஆக்கிக்கொள்ளுங்கள்" என்பதை இயேசு மறுக்கும் படி நான் உங்களுக்கு சவால் இடவில்லை. மேற்கண்ட வசனம் இதனைத் தான் சொல்கிறது. இன்னொரு முறை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இயேசுவிடம் என்ன கேட்கிறார் என்பதை கவனியுங்கள்:

And when Allah saith: O Jesus, son of Mary! Didst thou say unto mankind: Take me and my mother for TWO GODS BESIDE Allah (ilahayni min dooni Allahi)? ... S. 5:116 Pickthall

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது …(5:116)

(ilahayni min dooni Allahi)

புதிய ஏற்பாடோ அல்லது இதர கிறிஸ்தவ சரித்திர ஆதாரங்களோ , "அல்லாஹ் முதல் தெய்வமென்றும், இயேசு மற்றும் அவரின் தாய் மற்ற இரு தெய்வங்களாகவோ" எப்போதும் கூறியதில்லை. மேற்கண்ட வசனம் என்னுடைய சவாலை சந்திக்க தவறிவிட்டது என்பதை மட்டும் காட்டவில்லை, இன்னும் எப்படி குர்‍ஆன் கிறிஸ்தவ சரித்திர கோட்பாடுகளை புரட்டுகிறது என்பதையும் காட்டுகிறது. எப்படி இஸ்லாமியர்கள் அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக இயேசு இருக்கிறார் என்ற கோட்பாட்டை எதிர்க்கிறார்களோ அதே போல், கிறிஸ்தவர்களும் இயேசுவின் தாய் அவருக்கு இணையாக தெய்வம் என்ற இஸ்லாம் சொல்லும் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள்.

இரண்டாவதாக, மேற்கண்ட குர்‍ஆன் வசனம், இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் பேசியதாக உள்ள வார்த்தைகள் அல்ல. எதிர் காலத்தில் கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவும் அல்லாஹ்வும் பேசப்போவதாக உள்ள ஒரு கற்பனையே அல்லாமல் வேறு இல்லை. இவ்வசனங்களில் இயேசு தன் போதனைப் பற்றி பேசுவதாக இருந்தாலும், அது இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் நேரடியாக பேசிய வார்த்தைகள் அல்ல. (என்னுடைய சவால் அவர் உலகத்தில் வாழ்ந்த காலத்தில் "நான் இறைவன் இல்லை" என்று இயேசு பேசியதாக குர்‍ஆனில் காட்டமுடியுமா என்பது தான்).

மூன்றாவதாக, இஸ்லாமியர்கள் சொல்லுகின்ற படி, "இயேசு எதிர்காலத்தில் சொர்க்கத்தில் பேசியதாக உள்ள வார்த்தைகள் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றுச் சொன்னால்", நம்முடைய புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷத்தில்" இயேசு நேரடியாக கூறியவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அவர் உலகில் வாழ்ந்த காலத்தில் சொன்ன வார்த்தைகள் அடங்கிய சுவிசேஷங்கள் மட்டுமல்ல, வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள வசனங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். வெளிப்படுத்தின விசேஷத்தின் வார்த்தைகள் அனைத்தும் நேரடியாக கிரேக்க மொழியில் (அராமிக் மொழியில் அல்ல) யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட வசனங்களாகும்.

இஸ்லாமியர் "பிரோ பாஸ்" மேலும் ஒரு சுயாரசியமான விஷயத்தை கூறுகிறார்:

"… 'தான் இறைவன் இல்லை' என்று இயேசு கூறியதாக குர்-ஆன் தன் சொந்த வார்த்தைகளில் கூறுகிறது. மேலும் இயேசு தேவகுமாரன் இல்லை என்று குர்-ஆனும் கூறுகிறது, ஆனால் அதனை அரபி மொழியில் கூறுகிறது. ஏனென்றால், குர்-ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டது, ஒரு அரபி பேசும் நபிக்கு இறக்கப்பட்டது என்று குர்-ஆனே சாட்சி கொடுக்கிறது. குர்-ஆன் அரபியில் இல்லாமல் வேறு மொழியில் வந்திருந்த்தால், அந்த அரபி பேசும் மக்கள் தங்களுக்கு குர்-ஆன் புரியவில்லை என்று குறை கூறுவார்கள்."

ஆக, இயேசுவின் வார்த்தைகளை அரபி மொழியில் மாற்றி கூறுவது என்பது குர்-ஆனுக்கு பிரச்சனை இல்லை மேலும் இயேசு "தான் இறைவன் இல்லை" என்று கூறியதாக குர்-ஆன் கூறினாலும், அது சரியான ஆதாரமாக இருக்கும் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். ஆனால், இயேசு "தான் தனி சிறப்பு மிக்க தேவகுமாரன் என்றும், தான் தேவன் என்றும் கூறியதை" புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் கூறினால் அதை இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பதில்லை. அதாவது இயேசு தம்முடைய தாய் மொழியில் கூறியதை மட்டுமே நாம் அங்கீகரிப்போம், கிரேக்க மொழியில் அதனை புதிய ஏற்பாடு தெரிவித்தால், அது ஆதாரமாக கருதப்படாது என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், தங்கள் குர்-ஆன் மட்டும் இயேசுவின் தாய் மொழியில் அல்லாமல் அரபியில் இயேசு கூறியதாகச் சொன்னால், அதுமட்டும் ஆதாரமாக கருதப்படும் என்று வாதிப்பார்கள்.

முடிவுரையாக, இந்த இஸ்லாமியர் கூறிய ஒரு வாக்கியத்தை அப்படியே இங்கு குறிப்பிட்டு முடிக்கிறோம். ஏனென்றால், அதனைத் தான் நாம் கூற முனைந்துள்ளோம், அதனையே அவர் கூறியுள்ளார்.

It is obvious, however, that his demands are as preposterous as it is stupid .

இப்படி இயேசு கூறியிருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்ப்பது, அடிமுட்டாள் தனமானது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

இதனை நாங்கள் முழுவதுமாக அங்கீகரிக்கிறோம். அதாவது முஸ்லிம்களின் வாதங்கள் அடிமுட்டாள்தனமாக உள்ளது என்பதை அங்கீகரிக்கிறோம். இதைவிட அதிக அழுத்தமாக எங்களால் சொல்லியிருக்கமுடியாது. என்னுடைய கட்டுரையை நான் எந்த நோக்கத்திற்காக எழுதினேனோ மற்றும் ஏன் இஸ்லாமியர்களுக்கு சவால் விட்டேனோ, அந்த நோக்கத்தை சரி என்று நிருபிக்கும் வண்ணம் எப்படி இந்த இஸ்லாமியர் தன்னுடைய கட்டுரையின் கடைசியில் ஒப்புக்கொண்டுள்ளார் பாருங்கள். 'இஸ்லாமியர்கள் எவ்வளவு முட்டாள் தனமாக வாதிக்கிறார்கள் மற்றும் எவ்வளவு நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்' என்பதையே இது காட்டுகிறது.

ஆங்கில மூலம்: Open Challenge to All Muslims

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

வியாழன், 14 ஜூன், 2012

உமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்

உமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்

muslim-woman-politician.jpg

Source: http://www.faithfreedom.org/features/news/men-should-be-allowed-sex-slaves-and-female-prisoners-could-do-the-job-and-all-this-from-a-woman-politician-from-kuwait/

இஸ்லாமிய ஆண்கள் செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டமாக்கவேண்டும் என்று குவைத் நாட்டின் சல்வா அல் முடைரி (Salwa al Mutairi) என்ற முன்னால் அரசியல் தலைவி அறிக்கை விடுத்துள்ளார். சரி இந்த கால கட்டத்தில் இப்படி செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே யார் முன்னுக்கு வருவார்கள்? என்று கேள்வி கேட்டால், இதற்கும் இந்த சகோதரியிடம் பதில் உண்டு. அதாவது இஸ்லாமியரல்லாத நாடுகளின் மீது நடக்கும் போரில் கைது செய்யப்படும் பெண்களை இப்படி "செக்ஸ் அடிமைகளாக" விற்கலாம், அவர்களை வாங்கி குவைத் நாட்டின் ஆண்கள், தங்கள் வேட்கையை தீர்த்துக்கொள்ளலாம், இதனால், அவர்கள் (குவைத் ஆண்கள்) தாங்கள் விபச்சாரத்தில் விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இப்படி செய்வதினால், இன்னொரு நன்மையும் உண்டாம், அதாவது "போர் நடந்து முடிந்த பிறகு, அந்த இஸ்லாமியரல்லாத நாட்டில் வாழும் பெண்கள் தங்களுக்கு உணவு கிடைக்காமல் வறுமையில் தவிப்பார்கள், எனவே, இவர்களை இங்கு கொண்டு வந்து விற்றுவிட்டால், இவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடும் கிடைக்கும், அதே நேரத்தில் குவைத் ஆண்களின் மனதும் நிறம்பும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், செசன்யா போரில் பிடிபட்ட அனேக ரஷ்ஷிய பெண்கள் இருப்பார்கள், இவர்களை இப்படி விற்காலம் என்று இந்த சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

என்னே அருமையான சகோதரி!

வறுமையில் வாடும் பெண்களின் வயிறு பசியை போக்க நல்லதொரு திட்டம்!

மேலும் தாம் மக்காவிற்குச் சென்று இருந்த போது, ஒரு இஸ்லாமிய அறிஞரிடம் இதைப் பற்றி கேட்டபோது, இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்திருப்பது தவறானது அல்ல என்று கூறினாராம், இது ஹராம் இல்லை என்று கூறினார்களாம். மற்றும் குவைத்திலும் அனேக இஸ்லாமிய அறிஞர்களை கேட்டபோதும், இது ஹராம் இல்லை என்று சொன்னார்களாம்.

ஒரு சௌதி அறிஞர் கூறும் போது, ஒரு இஸ்லாமிய நாடு, இஸ்லாமியரல்லாத நாட்டின் மீது படையெடுத்து ஜெயித்தால், அந்த நாட்டில் கிடைக்கும் இஸ்லாமியரல்லாத பெண்கள் தான் இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம் என்றாராம்.

இந்த சகோதரின் கூற்றுப்படி, "இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்து இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல, இது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட ஒன்றல்ல".

இதனை மேலும் விளக்க, ஒரு எடுத்துக்காட்டையும் இந்த அருமை அன்னை சொல்லியுள்ளார்கள், அதாவது 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாருன் அல் ரஷீத் (Haroun al-Rashid) என்ற இஸ்லாம்ய அரசர் 2000 வைப்பாட்டிகளை (செக்ஸ் அடிமைகளை) வைத்திருந்தாராம். ஆகையால், இது தவறல்ல.
கடைசியாக, இந்த சகோதரின் அறிவுரை என்னவென்றால், எப்படி வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்களோ அதுபோல, பல அலுவலகங்களை திறந்து, இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளை விற்கும் வியாபாரம் கூட செய்ய நாடு முன் வரவேண்டும் என்பதாகும்.

இந்த தலைவியின் இந்த அறிக்கைகள், அனேகரை துக்கப்படுத்தியுள்ளது. ஆனால், இவர் மீது குறை கூற நமக்கு வாய்ப்பு இல்லை, ஏனென்றால், இஸ்லாம் எதனை அங்கீகரித்துள்ளதோ அதனைத் தான் இவர்களும் கூறியுள்ளார்கள். பணம் படைத்த ஆண்கள், தங்கள் காமவேட்கையை தீர்ப்பதற்காக இப்படி செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதே! திருமணத்திற்கு வெளியே இப்படி போரில் பிடிபட்ட பெண்களை வைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, அதனைத் தான் இவர்களைப்போல இருப்பவர்கள் கருத்து கூறுகிறார்கள்.

இந்த சகோதரியிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள்:

ஆண்களும், ம(மா)னக்கட்டுப்பாடும்

  • ஆண்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், அவர்கள் இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களை செய்யவேண்டியதில்லையே!
  • ஆண்கள் விபச்சாரம் செய்யாமல் இருக்க இந்த ஏற்பாடு சரியானது என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படி அடிமைகளிடம் உடலுறவு கொள்வதும் கூட "ஒரு விபச்சாரமில்லையா?"
  • ஆண்களில் சிலருக்கு காமவேட்கை அதிகம் என்பதால், அவர்களுக்கு இப்படிப்பட்ட சட்டப்பூர்வமான விபச்சாரத்தை செய்ய அனுமதி கொடுப்பதை விட, அவர்களுக்கு அறிவுரை கூறி, கட்டுப்பாட்டுடன் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கலாமே!
  • ஆண்களின் காமவேட்கையை பூர்த்தி செய்வதற்கு செக்ஸ் அடிமைகளை பயன்படுத்தலாம் என்று ஒரு தீர்வை கொடுக்கும் நீங்கள், அந்த குடும்பத்தில் இருக்கும் அந்த ஆணின் மனைவியின் நிலை என்ன என்று எண்ணிப்பார்த்தீர்களா?
  • ஒரு பெண் எதை வேண்டுமானலும் பகிர்ந்துக்கொள்வாள், ஆனால், தன் கணவனை பகிர்ந்து கொள்ளமாட்டாள், அப்படி பிடிவாதமாக அந்த ஆண் திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது என்பது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்காதா?
  • சமுதாயத்தை மதித்து, தன் குடும்பத்தை மதித்து, தன் ஆசைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு ஆண், இப்படி சட்டப்படி விபச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதைக் கண்டால், இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த தன் நடத்தையை கெடுத்துக்கொண்டு, இப்படி செக்ஸ் அடிமைகளை விலைக்கு வாங்கி தன் நல்ல நிலையை விட்டு இறங்கிவிடுவானே, இது தவறு இல்லையா?
  • இஸ்லாமிய ஆண்களின் நிலைக்கே வருகிறேன், ஒரு முஸ்லிம் நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் சொல்லும் போது, உங்கள் முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகளும் போதவில்லையா? நான்கு பேர் இருந்தும் அவர்களின் காமம் தணியவில்லையா?
  • இஸ்லாமியரல்லாத ஆண்களை எடுத்துக்கொண்டால், ஒரு பேச்சுக்காகவாவது சொல்லாம்(பேச்சுக்காக மட்டுமே), அதாவது ஒரு மனைவியோடு வாழ்கிறான், ஆசைகள் அவனுக்கு அதிகம், அதனால் இந்த ஏற்பாடு என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஆனால், ஏற்கனவே 4 மனைவிகளை உடைய முஸ்லிமுக்கு இன்னும் தன் ஆசை தீரவில்லையானால், அதனை என்னவென்றுச் சொல்வது? வாழ்க்கையே காமம் தானா? வேறு வேலையே முஸ்லிமுக்கு இருப்பதில்லையா? ஒரு சதவிகிதம் கூட 'மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம்' போன்றவைகள் பற்றி பேசுவது/சிந்திப்பது இல்லையா?
  • அன்பான சகோதரியே, பணம் படைத்தவன் தன் காமவேட்கையை தீர்த்துக்கொள்ள வழியைச் சொன்னீர்கள், ஆனால், ஏழை முஸ்லிம் என்ன செய்யவான்? அவனுக்கு இருக்கும் அதிகமான காமத்திற்கு வழி என்ன? எப்போதாவது அவன் விபச்சாரம் செய்ய அனுமதி உண்டா? அல்லது ஏழைகள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் கூறப்போகிறீர்களா? பணக்காரனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு ஒரு நியாயமா? செல்வந்தனோ ஏழையோ இருவரும் மனிதர்கள் தானே.. இருவருக்கும் ஆசைகள் (மிதமிஞ்சிய ஆசைகள்) இருக்குமல்லவா?
  • ஒருவேளை எங்கள் ஆண்களுக்கு (முஸ்லிம் ஆண்களுக்கு) அதிகமாக ஆசை உள்ளது என்று முஸ்லிம் பெண்கள் நினைப்பீர்களானால், முதலாவது அவர்கள் அதிகமாக பெண்கள் விஷயங்கள் பற்றி பேசுவதை, வெள்ளிக் கிழமைகளில் இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை (சொற்பொழிவுகளை) கேட்பதை நிறுத்தச் சொல்லுங்கள், அப்போது தானாக அடங்கும் ஆசை. மதரஸாக்களில், மசூதிகளில் பேசுப்படும் விவரங்களை கொஞ்சம் காது கொடுத்து கேட்பீர்களானால், எங்கே பிரச்சனை என்பது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ற வள்ளுவரின் வாக்கை படித்த அனுபவம் நமக்கு உண்டா?

காபிர்களின் 21ம் நூற்றாண்டை முஸ்லிம்களின் 7ம் நூற்றாண்டாக்காதீர்கள்?
  • செசன்யா நாட்டில் ரஷிய பெண் போர் கைதிகள் இருப்பார்கள், அவர்களை விற்கலாம் அல்லவா? என்று அறிவுரை கூறும் நீங்கள்… உங்கள் நாட்டில் ஒரு இஸ்லாமியரல்லாத நாடு போர் தொடுத்து, உங்களை போர் கைதியா ஆக்கினால், நீங்கள் வேறு நாட்டில் ஒரு செக்ஸ் அடிமையாக விற்கப்பட்டால், உங்கள் நிலை எப்படி இருக்கும்?
  • உங்கள் எஜமானின் வீட்டில், அவனது செக்ஸ் ஆசைகளை மட்டும் தீர்க்கும் ஒரு இயந்திரமாக இருக்க நீங்கள் விரும்புவீர்களா?
  • சாப்பாடு இல்லாமல் மரிக்கும் பெண்களுக்கு இது நன்மை செய்வதாக அமையும் என்றுச் சொல்லும் நீங்கள், உங்களுக்கு இதே நிலை வருமானால் 'உயிர் வாழ்வதற்காக உணவு கொடுக்கிறார்கள்', இதனால், இந்த வேலைக்கு நான் தயார் என்று சொல்லமுடியுமா?
  • போர் மூண்டதால் உணவு கிடைக்காமல் ஒரு நாடு தள்ளாடும் போது, அம்மக்களுக்கு உண்வு, உடை இருப்பிட வசதிகளை செய்ய உங்கள் நாட்டின் செல்வத்தில் ஒரு பாகத்தை அனுப்பி அவர்கள் மானத்தை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, எங்கள் ஆண்களுக்கு ஆசை அதிகம், ஆகையால், உணவு இல்லாதவர்களை எங்கள் ஆண்களின் காம பசிக்கு இறையாக்கிக்கொள்கிறோம் என்றுச் சொல்வது நியாயமாக தெரிகின்றதா?
  • இறைவன் நமக்கு செல்வத்தை அதிகமாக கொடுக்கும் போது, அதை பயன்படுத்தி மற்ற மக்களின் பசியை போக்கவேண்டுமே ஒழிய அவர்களின் மானத்திற்கு விலை பேசக்கூடாது.
  • ஒரு இஸ்லாமிய நாடு (ஈராக்) இன்னொரு இஸ்லாமிய நாட்டை (குவைத்) பிடித்த போது, வேறு ஒரு இஸ்லாமிரல்லாத நாடு (அமெரிக்கா) உங்களுக்கு ஆதரவாக நின்று உங்களை விடுதலையாக்கியதே. இதையெல்லாம் மறந்துவிட்டு, இன்று இஸ்லாமியரல்லாதவனின் மனைவியை, மகளை, தாயை உங்கள் ஆண்களின் பசிக்கு அழைக்கிறீர்கள்? இது உங்களுக்கு நியாயமாக உள்ளதா?


நாட்டுவாசியை காட்டுவாசி ஆக்காதீர்கள், பிளீஸ்!

  • அரசர்கள் ஆட்சி செய்த கடந்த காலத்தில், அனேக தீய செயல்கள் நடந்துள்ளன. மண்ணுக்கும், பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்ட போர் புரிந்தாரக்ள். கேட்பார் யாருமில்லை என்ற நிலையில் அரசர்கள் தங்கள் விருப்பப்படி செய்து வந்தார்கள்.
  • இன்று அப்படி இல்லை, சுனாமி வந்து மக்களை துன்பப்படுத்தும் போது, அனேக நாடுகள் உதவி கரம் நீட்டுகின்றன, உணவும், உடைகளும் மருந்துகளும் கொடுத்து அனுப்புகின்றன. தன் குடும்பமே துன்பத்தை அனுபவிக்கிறது என்று கவலைக்கொண்டு உலக மக்கள் தாராளமாக பணத்தை, பொருளை கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உயர்த்த முயற்சி எடுக்கிறார்கள். நீங்கள் கருதுவது போல, உணவு இல்லாத மக்களின் நிலையை உங்கள் காமவேட்கையை தீர்க்க பயன்படுத்துவதில்லை.
  • அநியாயமாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தால் பல நாடுகள் ஒன்று சேர்ந்து பிரச்சனையை நிவர்த்தி செய்ய முன்னுக்கு வருகின்றன. யாரோ எங்கேயோ இரண்டு நாடுகள் போர் புரிகின்றன, நமக்கு என்ன வந்தது? என்ற தோரணையில் அல்லாமல், பெரும்பான்மையான நாடுகள் பிரச்சனைகளை தீர்க்க முன்வருகின்றன.
  • தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் தன் சுய இராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்வது, வீணாக மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து, வென்று, அந்நாட்டவரின் சொத்துக்களை அபகரிப்பதற்கும், கைதிகளாக மக்களை கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக, தன் நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால், சரியான பதிலடி கொடுத்து, தன் நாட்டு மக்களின் நலனை காப்பதற்காக ஆகும்.

எனவே, உலக சரித்திரத்தில் நடந்துமுடிந்துவிட்ட அனேக கோரமான போர்கள், சண்டைகள், மரணங்கள், கற்பழிப்புக்கள், அடிமை வியாபாரம் போன்றவைகளை மறுபடியும் தலை தூக்காத படிக்கு நாம் பார்த்துக்கொள்ளவேண்டுமே ஒழிய மறுபடியும் மனிதனை காட்டுவாசியாக்கும் முயற்சி சரியானது அல்ல.

சனி, 9 ஜூன், 2012

மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்

குர்‍ஆன் முரண்பாடு

 

குர்‍ஆன் மோசேயின் கதையை மட்டுமல்ல, மோசே மற்றும் பார்வோனின் கதையை அனேக இடங்களில் சொல்கிறது. குர்‍ஆன் சொல்லும் இந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் பல முரண்பாடுகள் மற்றும் தவறுகளை இந்த பக்கங்களில் குறிப்பிட்டுள்ளோம். இந்த சிறிய கட்டுரையிலும், குர்‍ஆன் எப்படி பைபிளுக்கு முரண்படுகிறது என்பதை விவரமாக காண்போம். ஏன் இப்படி குர்‍ஆன் முரண்படுகிறது என்று பார்த்தால், குர்‍ஆனின் ஆசிரியர் பைபிளில் காணப்படும் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறித்து குழம்பியுள்ளார், ஆதலால், ஒரு கதையில் வரும் விவரங்களை இன்னொரு கதையில் நுழைத்துவிட்டுள்ளார்.

மோசே மற்றும் யாக்கோபு என்பவர்களாகிய இவ்விருவர் தங்கள் ஊரை விட்டு ஓடிப்போனார்கள் (யாக்கோபு தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி ஓடிப்போனார், மோசே ஒரு எகிப்தியனை கொன்று விட்டதினால் தன் உயிர் தப்ப ஓடிப்போனார்). மட்டுமல்ல, இவ்விருவரின் திருமணம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் அல்லது தங்கள் மனைவிகளை கண்ட விதமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். இவ்விருவர் வேறு நாட்டிலிருந்து வந்தார்கள், வாலிப்பபெண்கள் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைக்க வரும்போது, மற்றும் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது, இவ்விருவரும் உதவி செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் வார்த்து கொடுத்தார்கள். மோசே மற்றும் யாக்கோபின் கதையில் வரும் இந்த ஒற்றுமைகள் குர்‍ஆன் ஆக்கியோனின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை முதலில் பைபிளிலிருந்து படிப்போம், அதன் பிறகு குர்‍ஆனின் வசனங்களைக் காண்போம்.

பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். (யாத்திராகமம் 2:15-22)

குர்‍ஆனின் படி மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை இப்போது காண்போம்:

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள். ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; "என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" என்று கூறினார். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார். அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்." அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்." (அதற்கு மூஸா) கூறினார் "இதுவே எனக்கும் உங்களுக்கிமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். ( குர்‍ஆன் 28:23-28)

மேற்கண்ட குர்‍ஆன் வசனங்கள், பைபிளில் சொல்லப்பட்ட அதே நிகழ்ச்சியைத் தான் குறிப்பிட்டு பேசுகிறது. ஆனால், அனேக முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் குர்‍ஆன் குறிப்பிடும் வசனங்களில் காணப்படும். இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன: முதலாவதாக, யாத்திராகம‌த்தில் நாம் பார்க்கும் போது, மோசே ஏழு வாலிப பெண்களை காண்கிறார், மற்றும் அந்த ஏழுபேரும் ஒரே மனிதனின் பெண் பிள்ளைகளாக இருந்தார்கள். ஆனால், குர்‍ஆனில் பார்க்கும் போது, அது வெளிப்படையாக "மோசே அங்கு சந்தித்தது இரண்டு பெண்களை" என்று கூறுகிறது, மற்றும் அவ்விருவரும் ஒரே மனிதனின் புதல்விகள் என்றும் கூறுகிறது. பைபிள் மற்றும் குர்‍ஆன் கூறும் நிகழ்ச்சிகளில், அந்த மனிதன், மோசேக்கு தன் மகள்களில் ஒரு மகளை திருமணத்திற்காக கொடுக்கிறார். ஆனால், குர்‍ஆனில் ஒரு வித்தியாசம் உள்ளது, அது என்னவென்றால், அந்த பெண்ணின் தந்தை, மோசேயிடம் "என் மகளை திருமணம் புரிய" எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கிறார். இந்த பணத்தை எப்படி கொடுப்பது என்று பார்த்தால், அந்த பெண்ணுக்காக மோசே 8 அல்லது 10 ஆண்டுகள் தன்னிடத்தில் உழைக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனையை போடுகிறார்.

இங்கு குறிப்பிடவேண்டிய விவரம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகள் பற்றி குர்‍ஆன் கூறுகிறது, அவைகள் அடுத்தடுத்த வரும் எண்களாக இருந்தாலும், 8 அல்லது 10 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. குர்‍ஆனின் நிகழ்ச்சிப்படி இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வருட எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்‍ஆனில் காணப்படும் இந்த விவரங்கள் எப்படி மற்றும் எங்கிருந்து வந்தது? அவைகள் பைபிளில் யாக்கோபின் கதையில் வருகிறது, அதாவது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார் என்ற விவரங்களிருந்து எடுத்து குர்‍ஆனின் ஆக்கியோன், மோசேயின் கதையில் குழப்பத்தில் நுழைத்துள்ளார். இப்போது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்தார் என்பதை பைபிளிலிருந்து காண்போம்.

யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள். அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான். அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான். அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான். (ஆதியாகமம் 29:1-30)

இது தான் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுடைய நிகழ்ச்சியாகும், மற்றும் யாக்கோபு தான் நேசித்த பெண்ணுக்காக இரண்டு தவனை முறையில் தன் மாமனாரிடம் வேலை செய்தார். "இல்லை.. நாங்கள் இதனை அங்கீகரிக்கமாட்டோம்", குர்‍ஆன் இப்படி யாக்கோபின் கதையில் வரும் சிலவற்றை காப்பி அடித்து மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துச் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், அடுத்த வசனத்தில் குர்‍ஆன் சொல்லும் விவரத்தை சிறிது படித்துப் பாருங்கள்.

ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். (குர்‍ஆன் 28:29)

மோசே தன் மனைவியை திருமணம் செய்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டு இருந்த அந்த காலக்கெடு முடிந்தபிறகு அவர் தன் குடும்பத்துடன் தன் மாமனாரை விட்டு பிராயணம் மேற்கொண்டார். ஏன் ? மோசே எந்த ஊருக்குப் போகிறார்? பைபிளின்படி நாம் பார்த்தால், மோசேயை தேவன் எரியும் முட்புதரிலிருந்து சந்தித்து பேசிய நிகழ்ச்சியானது, மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்யும் போது அல்ல, அதற்கு பதிலாக, அவர் தனது அனுதின வேலையாகிய ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் போது நடந்த நிகழ்ச்சியாகும்.

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். (யாத்திராகமம் 3:1-4)

"மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்தார், அந்த வழியில் இறைவனை சந்தித்தார்" என்ற இந்த குறிப்பிட்ட விவரமானது, மூன்றாவதாக முஹம்மது செய்த தவறாகும். அதாவது பைபிளின் படி கூறப்பட்ட யாக்கோபின் நிகழ்ச்சியிலிருந்து சில விவரங்களை எடுத்து முஹம்மது மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துள்ளார். யாக்கோபு தான் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் காலக்கெடு முடிந்தவுடன் சென்றார். இன்னும் சில ஆண்டுகள் அதிகபடியாகவும் அவர் தன் மாமனாருடன் இருந்துள்ளார் (ஆதியாகமம் 30:25 லிருந்து 31:55 வரை பார்க்கவும்). இதைத் தான் ஒரு மாதிரியான நிபந்தனையாக "எட்டு ஆண்டுகள்... பத்து ஆண்டுகள்" என்று குர்‍ஆன் ஸூரா 28:27ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாக்கோபு தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் தாய் நாட்டிற்கு (ஊருக்கு) செல்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

(1) லாபான் யாக்கோபை அனேகமுறை ஏமாற்றினார் (ஆதியாகமம் 31:41) மற்றும்

(2) தன் சகோதரனாகிய ஏசாவுடன் ம‌றுபடியும் ஒற்றுமையடைய செல்கிறார் (ஆதியாகமம் 32,33).


இந்த பயணத்தின் போது யாக்கோபு தேவனை சந்தித்தார் (ஆதியாகமம் 32:22 லிருந்து 30 வரை).

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து புரியும் விவரம் என்னவென்றால், குர்‍ஆனின் ஆசிரியர் யாக்கோபின் மற்றும் மோசேயின் வாழ்க்கை வரலாறை சரியாக புரிந்துக்கொள்ளாமல் குழப்பமடைந்துள்ளார். குர்‍ஆன் ஆக்கியோன், யாக்கோபின் வாழ்வில் நடந்த அனேக விவரங்களை எடுத்து, தாமே சொந்தமாக மோசேயின் வாழ்க்கையோடு முடிச்சு போட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அல்லது நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த குழப்படைந்த நபரே இறைவனாக இருப்பது தான் அல்லது இந்த குழப்பம் அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று முஸ்லிம்கள் நம்புவது தான். இதன் முடிவு? ஏற்கனவே குர்‍ஆனில் காணப்படும் அனேக பிழைகள் மற்றும் முரண்பாடுகளோடு சேர்ந்து, இந்த முரண்பாடும் ஒண்டிவிடுகிறது, இதன் மூலம் அறிவது என்ன? குர்‍ஆன் என்பது அறியாமையில் இருக்கும் மற்றும் தவறுகள் செய்யும் ஒரு சாதாரண மனிதனின் கைவேலை என்பது நிருபனமாவதாகும்.

தோரா அல்லது ஐந்தாகமங்களின் விவரங்களின் படி பார்க்கும் போது, குர்‍ஆன் சொல்லும் விவரங்கள் எப்படி முஹம்மதுவின் அறியாமையினாலும், குழப்பத்தினாலும் நிரம்பியுள்ளது என்பதை எளிதாக கண்டுக்கொள்ளலாம். இந்த குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், முஹம்மது சுயமாக எபிரேய வேதத்தை பார்த்து படித்து தெரிந்துக்கொள்ள அவரால் முடியவில்லை ஆகையால், தன்னுடைய குறையுள்ள ஞானத்தோடு அங்கும் இங்கும் கேட்ட நிகழ்ச்சிகளை தன் சொந்த கதைகளோடு சேர்த்து குர்‍ஆனில் கூறியுள்ளார். குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற கற்பனை கட்டுக்கதையை இதுவரை கேட்காமல் இருக்கும் ஒரு சராசரி மனிதன், மேற்கண்ட விவரங்களைக் கண்டால், அவன் இப்படித்தான் நினைத்துக்கொள்வான், அதாவது இந்த விவரங்களை குர்‍ஆனில் சேர்த்தவர் கண்டிப்பாக இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி குழம்பிப்போய் இப்படி முரண்பட்டுள்ளார் என்று எண்ணுவான். குர்‍ஆனின் குழப்ப கதைகளுக்கு இந்த நிகழ்ச்சி மட்டும் ஒரு எடுத்துக்காட்டு என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. இது போல அனேக நிகழ்ச்சிகளை பைபிளிலிருந்து எடுத்து அதை புரிந்துக்கொள்ளாமல் குழம்பமடைந்து இப்படி முரண்பட்ட நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் ஏராளம் உண்டு. இவைகள் பற்றி அறிய "குர்‍ஆனின் சரித்திர பிழைகள்" என்ற தலைப்பில் உள்ள முரண்பாடுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும்.

மேலும், ஒருவேளை குர்‍ஆனில் சொல்லிய படியே தோராவில் இருந்தது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், இது எப்படி சாத்தியமாகும் என்பதை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்? இஸ்லாமியர்கள் "தோரா திருத்தப்பட்டது" என்று சொல்வது அவர்களுக்கு சுலபமான பதிலாக இருக்கும். ஆனால், எந்த ஒரு குற்றமும், அல்லது பரிசுத்த வார்த்தைகளை மாற்றி எழுதும் குற்றமும் வெறுமனே நடந்துவிடாது, அவைகளுக்கு பின்னே ஒரு மிகப்பெரிய காரணம் அல்லது நோக்கம் இருக்கும். இப்போது இஸ்லாமியர்கள் பதில் சொல்லுங்கள், ஒரு மனிதனுக்கு "இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்" என்ற வார்த்தைக‌ள் இருக்கும் இடத்தில் "ஏழு பெண்கள் இருக்கிறார்கள்" என்று மாற்றி எழுதவேண்டுமானால், இப்படி ஒருவன் மாற்றவேண்டியதின் அவசியம் என்ன? மட்டுமல்ல, இப்படி மாற்றுவது சுலபமானதும் அல்ல, உலகில் அந்த காலத்தில் தோராவின் எத்தனை பிரதிகள் இருந்தனவோ, அவைகள் அனைத்திலும் சென்று இந்த மாற்றம் செய்வது கூடாத காரியமாகும். இந்த "இரண்டு பெண்கள்" என்ற இடத்தில் "ஏழு பெண்கள்" என்று மாற்றுவதினால், மத ரீதியாக தத்துவ ரீதியாக எந்த முக்கியத்துவம் அடையப்போவதில்லை, இதனால் எந்த உபயோகமும் இல்லை. இப்படி எந்த ஒரு யூதனும், அல்லது கிறிஸ்தவனும் மாற்றப்போவதில்லை, அவனுக்கு இதில் விருப்பமும் இருக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பைபிள் மற்றும் குர்‍ஆனுக்கு இடையே காணப்பட்ட இந்த ஒரு வித்தியாசத்தை மட்டும் இஸ்லாமியர்கள் விளக்கினால் போதாது, இது போல இருக்கும் இன்னும் அனேக குழம்ப்பம் தரும் குர்‍ஆனின் தவறுகள், மற்றும் முரண்பாடுகளை அவர்கள் விளக்கவேண்டும், அதாவது அனேக கதைகளில் குர்‍ஆன் செய்த குழப்பம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் எந்த ஒரு மத கோட்பாட்டையும் மாற்றிவிடப்போவதில்லை, அதாவது "இரண்டு பெண்கள்" என்ற வார்த்தையை "ஏழு பெண்கள்" என்று ஒரு யூதன் மாற்றுவதினால், மார்க்க ரீதியாக என்ன பயன் உண்டாகப்போகிறது? எந்த ஒரு பயனும் இல்லை, ஆகவே, இது மாற்றமடைந்த ஒன்று அல்ல, இது குர்‍ஆனின் குழப்பமாகும்.

நேரடியாக ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆனின் இந்த குழப்பத்திற்கு காரணம் முந்தைய வேதங்கள் பற்றிய அறிவு முஹம்மதுவிற்கு சரியான முறையில் இல்லாமல் இருந்தது தான். இந்த ஆய்வின் மூலமாக நாம் அறிவது இது தான், இயற்கையாகவே முஹம்மது அதிகமாக குழம்பியுள்ளார். எந்த ஒரு இஸ்லாமியரும், இது வரை தங்கள் குர்‍ஆன் இறைவனின் வேதம் என்று நிருபிக்க, இப்படிப்பட்ட முரண்பாட்டுக்கு சரியான முறையில் பதில் சொல்லி, குர்‍ஆனை காப்பாற்றிக்கொள்ளவில்லை.

ஆங்கில மூலம்: Qur'an Contradiction - Moses or Jacob?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கவும்.

ஆசிரியர் ஜோசன் கட்ஜ் அவர்களின் இதர கட்டுரைகளை இங்கு படிக்கவும்

காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?

ஆபிரகாம் மற்றும் சலொமோன்

ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3366 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள்.

மேலும் அதே ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425 என்ற ஹதீஸையும் படிக்கவும், இந்த ஹதீஸின் முடிவுரையில் சில மாற்றம் உண்டு, ஆனால், சரித்திர விவரம் ஒன்று போலவே உள்ளது:

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425

அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள்.

நாம் தோராயமாக கணக்கிட்டால், ஆபிரகாம் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 2000 ஆகும், சாலொமோன் வாழ்ந்த காலம் கி.பி. 950 ஆகும். முஹம்மதுவின் கூற்றுப்படி படி, ஆபிரகாம் காபாவை கட்டினார் (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365), அதன் அடித்தளத்தை "ஆபிரகாம் அமைத்தார்" (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368). ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்பது பைபிளுக்கு முரண்பட்ட கருத்தாகும். உண்மையாகவே ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள் என்று கேட்டால், இதுவரை யாரும் இதற்கு சரியான பதிலை தரவில்லை. இந்த கட்டுரையை பொருத்தமட்டில், ஆபிரகாம் மக்காவிற்கு சென்றாரா இல்லையா என்பது முக்கியமல்ல, "ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று முஹம்மது நம்பினார்" அதனால் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. எருசலேமில் முதல் ஆலயத்தை கட்டியது சாலொமோன் ஆவார்.

ஆபிரகாமுக்கும், சாலொமோனுக்கும் இடையே இருப்பது 40 ஆண்டு கால இடைவெளி இல்லை, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளியாகும். இந்த முரண்பாடு குர்‍ஆனின் முரண்பாடு இல்லை, இதை ஏன் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இது ஹதீஸில் காணப்படுகிறது. அதாவது முஹம்மதுவின் மூளை எதனை சரி என்று நம்பியதோ அதுதான் குர்‍ஆனிலும் உண்டு, ஹதீஸ்களிலும் உண்டு. குர்‍ஆனில் அனேக சரித்திர பிழைகள் உண்டு, அது போலவே, முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸிலும் அனேக சரித்திர தவறுகளை காணலாம்.

மேலதிக விவரங்களுக்காக இந்த ஆங்கில கட்டுரையையும் படிக்கவும்: The Farthest Mosque?

ஆங்கில மூலம்: Abraham and Solomon

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கவும்

செவ்வாய், 5 ஜூன், 2012

ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஏன் கிறிஸ்தவரானார்?

அன்பு இஸ்லாமியர்களே, நான் ஏன் கிறிஸ்தவனானேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும்

Dear Muslim, let me tell you why I believed

ஆசிரியர்: வாலித்

பொருளடக்கம்

  1. அறிமுகம்
  2. பைபிளின் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்
  3. நம்பிக்கை (விசுவாசம்) என்றால் என்ன?
  4. உலக மார்க்கங்களின் சாராம்சம்
  5. பாதுகாப்பாக வைத்திருத்தல் என்பது போதுமான ஆதாரமாகுமா?
  6. இறைவன் ஒருவன் உண்டு என நம்புவது, உங்களை சொர்க்கம் செர்க்குமா?
  7. இஸ்லாமியரல்லாதவர்களுக்கு குர்ஆன் கொடுக்கும் சவால்
  8. பைபிள் தீர்க்கதரிசனங்களின் மூலம் ஆதாரங்கள்
  9. இதோ மாட்டுக்கறி இங்குள்ளது
  10. கிறிஸ்துவின் வருகையும் மரணமும்
  11. நிகழ்தகவு சட்டம்
  12. இஸ்ரவேல் நாட்டின் மறுபிறப்பு
  13. இஸ்ரவேல் ஒரு குர்ஆனிய தீர்க்கதரிசனம்
  14. நம்முடைய கண்களில் இருக்கும் பெரிய கட்டையை பார்ப்போம்
  15. இறைவன் யூதர்களோடு உள்ளாரா?
  16. இஸ்ரவேலுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்த அரேபிய நாடுகளின் வீழ்ச்சி, பைபிளின் தீர்க்கதரிசனம்
  17. கோக் மாகோக் (இஸ்ரவேலை பிடிக்க வரும் இஸ்லாமிய இரஷ்ஷியா மீது உண்டாகும் தண்டனை)

மேற்கண்ட கட்டுரைகள் பற்றி வந்த பின்னூட்டங்கள் அதற்கான மறுப்புக்களை இங்கு படிக்கவும்: மஸீஹி - வாலித - மஸீஹி 

வாலித் அவர்களின் இதர புத்தகங்கள் 

இஸ்ரவேல் பற்றிய விரிவான உரையாடல்கள்: Israel and the World's Mock Trial

எதிர் காலம் என்ன சொல்கிறது? Islam and the Final Beast

ஆங்கில மூலம்: Dear Muslim, let me tell you why I believed

பைபிள் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் - ஒரு இஸ்லாமிய தீவிரவாதியின் அழைப்பு

Take the Bible Challenge

ஆசிரியர்: வாலித்

பல வருடங்களுக்கு முன்பாக, ஒரு நாள் நான் ஒரு இடத்தை கடந்துச் சென்றுக்கொண்டு இருந்தேன், அந்த இடத்தில் ஒரு மேஜை வைக்கப்பட்டு இருந்தது, மற்றும் ஒரு அறிவிப்புப் பலகையில் "பெப்ஸி சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது. அதைக் கண்டவுடன் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அதாவது "நான் ஏன் என் வாழ்நாள் எல்லாம் கோக் குடித்துக்கொண்டு இருக்கவேண்டும்? இன்னும் அந்த கோக்கை நான் விரும்புகிறேனா?" என்ற கேள்விகள் எண்ணத்தில் வந்தது. அந்த மேஜையில் இரண்டு குவளைகள் வைக்கப்பட்டு இருந்தது, ஆனால், அவைகளில் எந்த குவளையில் பெப்ஸி உள்ளது என்ற விவரம் தரப்படவில்லை. இவைகளில் எதில் பெப்ஸி உள்ளது என்பதை அறிய நான் இரண்டு குவளைகளையும் எடுத்து ருசி பார்த்து கண்டுக்கொண்டேன், அதன் பிறகு நான் முடிவு எடுத்தேன். இந்த தெரிவு மிகவும் சுலபமான தெரிவாகும், அதாவது, பெப்ஸியை குடிக்க நான் முடிவு எடுத்தாலும், அல்லது கோக்கை குடிக்க முடிவு எடுத்தாலும், இதனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால், முக்கியமான விவரம் என்னவென்றால், நான் எதனை தெரிந்தெடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாக நான் கட்டாயமாக அந்த குவளைகளில் உள்ள பானத்தை ருசி பார்க்கவேண்டும். ருசி பார்க்காமல் நம்மால் சரியான முடிவு எடுக்கமுடியாது.

இப்படி ருசி பார்த்து ஒப்பிட்டுப்பார்ப்பது மிகவும் சரியான வழியாக உள்ளது. இப்படி ருசி பார்த்து ஒப்பிடவில்லையானால் எது சரியானது என்று எப்படி தெரிந்துக்கொள்ள முடியும்? இதே போலத்தான் பைபிள் மற்றும் குர்‍ஆனின் வார்த்தைகளை ருசி பார்க்காமல் அவைகளில் உண்மையானது எது என்று எப்படி தெரிந்துக் கொள்ளமுடியும்? நாம் அவைகளை அப்படியே விழுங்கக்கூடாது, அதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக மென்று ருசி பார்க்கவேண்டும், பிறகு விழுங்கவேண்டுமா அல்லது துப்பவேண்டுமா என்பதை முடிவு எடுக்கலாம்.

எனக்கு இன்று கூட ஞாபகம் உள்ளது, ஒரு நாள் என் மனதிலே ஒரு மிகப்பெரிய ஆசை வந்தது, அதாவது குர்‍ஆனோடு பைபிளை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆசை தான் அது. ஆகையால், நான் அந்த இரண்டு வேதங்களையும் அடுத்தடுத்து வைத்து இரண்டையும் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். இந்த ஆய்வு பல மாதங்கள் தொடர்ந்தது. இறைவன் தன்னுடைய சத்தியத்தால் என்னை அதிகமாக நிரப்பினார். மேலும் எது சத்தியம் எனபதை முழுவதும் அறியும் வரை இந்த இரு வேதங்களையும் விஞ்ஞான அளவுகோலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதை நிறுத்தக்கூடாது என்று நான் எனக்குள்ளேயே ஒரு முடிவை எடுத்துக்கொண்டேன். இப்படி உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அதற்குள்ள ஒரே வழி "பைபிளின் சவாலை ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்வதாகும்".

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த அனைத்தையும் நான் பதிவு செய்துள்ளேன். அதனையே இப்போது உங்களோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன். என்னோடு சேர்ந்து, "பைபிளின் சவாலை சந்திக்க" உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

குறிப்பு: இந்த தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி எடுங்கள். இந்த கேள்விக்குறிகள் (?) கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகள் அனைத்தும் உங்களை நோக்கிய கேட்கப்பட்டுள்ளது. அவைகளுக்கு பதில்களைக் கொடுக்க முயற்சி எடுங்கள், ஏனென்றால், அப்போது தான் உங்கள் நம்பிக்கை கண்மூடித்தனமாக அல்லாமல், சத்தியத்தில் கட்டப்பட்டு இருக்கும். உங்கள் பதில்களை எனக்கு அனுப்புங்கள், நான் உங்கள் பதில்களுக்காக பொறுமையோடு காத்திருக்கிறேன்.

[முந்தைய அத்தியாயம் செல்ல‌] [பொருள் அட்டவணை செல்ல] [அடுத்த அத்தியாயம் செல்ல]

ஆங்கில மூலம்: Take the Bible Challenge

அன்பு இஸ்லாமியர்களே, நான் ஏன் கிறிஸ்தவனானேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும்

ஆசிரியர்: வாலித்

அறிமுகம்

இன்று, உலகத்தில் பாதி ஜனத்தொகை தங்களை இஸ்லாமியர்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இந்த இரண்டு மார்க்கங்களும் தனக்கென்று ஒரு தனி வேத புத்தகத்தை கொண்டுள்ளது, மற்றும் ஒரு நாள் வரும் அன்று நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு முன்பாக நியாயந்தீர்ப்பதற்கு நிற்கப்படுவோம் என்றும் இம்மார்க்கங்கள் கூறுகின்றன. மேலும், தங்கள் மார்க்கத்தில் தான் இறைவன் அனுப்பிய உண்மையான செய்தி உள்ளது, அல்லது தங்கள் மார்க்கம் தான் உண்மையான மார்க்கம் என்று இவைகள் சொல்லிக்கொள்கின்றன. இன்று நம்மிடம் காணப்படும் பைபிள் தன்னுடைய மூலத் தன்மையிலிருந்து மாறிவிட்டது, அதாவது திருத்தப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் வாதிக்கிறார்கள். ஆனால், இறைவன் தன்னுடைய வார்த்தையாகிய பைபிளை ஒரு நாளும் கெடுக்கப்பட இடம் தரமாட்டார் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். நாம் இறைவனின் சத்தியத்தை நம்புகிறோமா இல்லையா என்பதைப் பொருத்து நம்முடைய நித்தியம் (சொர்க்கம் அல்லது நரகம்) எது என்பதை இறைவனுடைய தீர்ப்பு முடிவு செய்யும். இஸ்லாமின் வாதத்தின் படி, சொர்க்கத்திற்குச் செல்லும் வழி இவ்விதமாக அறிக்கையிடுவதினால் கிட்டும் என்றுச் சொல்கிறது அதாவது "அல்லாஹ்வைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை, முஹம்மது மனித இனத்துக்கு அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் " என்று அறிக்கையிடுவதின் மூலம் சொர்க்கம் செல்லமுடியும் என்றுச் சொல்கிறது. கிறிஸ்தவத்தின் படி, ஒரு மனிதன் இறைவனின் செயலாகிய இயேசுக் கிறிஸ்து சிலுவையில் மரித்து தனக்காக சம்பாதித்துக் கொடுத்த விமோசனத்தை/விடுதலையை நம்புவது தான் ஒரே வழி என்று கிறிஸ்தவம் சொல்கிறது.

இந்த இரண்டு தெரிவுகளில், நிச்சயமாக ஒன்று சரியானது, மற்றொன்று தவறானதாகும் (இரண்டும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லை). இவைகளில் சரியான தெரிவு நம்மை நித்திய வாழ்விற்குள் (சொர்க்கத்திற்குள்) அழைத்துச் செல்லும், மற்றும் தவறான தெரிவு நம்மை நித்திய அழிவிற்குள் அழைத்துச் செல்லும் (நரகம்). இவைகளில் எதனை நீங்கள் தெரிந்தெடுக்கப்போகிறீர்கள்? நான் ஏன் 'கிறிஸ்தவத்தை' தெரிந்தெடுத்தேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன். என்னைப் பொருத்தமட்டில், கிறிஸ்தவமே நம்மை பரலோகில் சேர்க்கும் உண்மையான மார்க்கமாக உள்ளது.

இந்த இரண்டு வழிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை அறியவேண்டுமென்றால், ஒருவர் அதிக நேரத்தை பயன்படுத்தி, இவ்விரண்டு மார்க்கங்கள் கொடுக்கும் ஆதாரங்களை அறிந்துக்கொள்ளவேண்டும். குர்ஆன் இவ்விதமாக அறிக்கையிடுகின்றது: "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (குர்ஆன் 2:111). இதே போல, பைபிள் இவ்விதமாக அறிக்கையிடுகின்றது: "உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார் (ஏசாயா 41:21) ." இந்த இரண்டு வகையான அறிக்கைகளை மதிக்கும் வண்ணமாக, மற்றும் இவர்களின் கட்டளையின்படியும், நான் இவைகளை விஞ்ஞான அளவுகோலுடன் ஆராய முற்படுகிறேன்.

என் வாழ்க்கையிலே அனேக ஆண்டுகள் குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு படிப்பதற்கு ஒதுக்கினேன். பைபிள் திருத்தப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு தேவையான ஆதாரங்களை தேடுவதில் செலவழித்தேன். இந்த நீண்ட ஆய்வின் பலன் மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. இந்த கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள், நான் சேகரித்த சரித்திர, தீர்க்கதரிசன மற்றும் விஞ்ஞான ஆதராங்களை காணும் போது, அவர்களின் அறிவு விரிவடையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஒப்பிடல் ஆய்வில், பைபிள் மற்றும் குர்ஆனில் காணப்படும் அனேக தலைப்புகள் அலசப்பட்டது, அதாவது, பல தலைப்புக்களில், நிகழ்வுகளில், இவ்விரு வேதங்களில் காணப்படும் மனிதர்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. உதாரணத்திற்கு,"இஸ்லாமில் அமைதி மற்றும் போர்", "பைபிள் மற்றும் குர்ஆனில் விஞ்ஞானம்", இஸ்ரவேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள், குர்ஆனில் காணப்படும் தீர்க்கதரிசனங்கள், பைபிள் பற்றிய சரித்திர, தொல்பொருள், தீர்க்கதரிசன மற்றும் கையெழுத்துப் பிரதி ஆதாரங்கள் என்னென்ன? இதுபோன்ற அனேக தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த புத்தகத்தை எழுதுவதற்கான என் நோக்கம் என்னவென்றால், கிறிஸ்தவத்தை இஸ்லாமியர்கள் எப்படி கண்ணோக்குகிறார்கள்? என்பதை காட்டி மேலும், கிறிஸ்தவமே உண்மையான ஒரே மார்க்கம் என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை இஸ்லாமியர்களுக்கு காட்டுவதே என் நோக்கமாகும் .

நான் ஒரு இஸ்லாமியனாக வளர்க்கப்பட்டேன், 18 ஆண்டுகள் பரிசுத்த பூமியில் (எருசலேமில்) வாழ்ந்தேன், மற்றும் குர்ஆனை சுவாசித்தேன், இஸ்லாமிய பாதையில் நடந்தேன் மற்றும் குர்ஆனை படித்து அதன் பாதையில் வாழ்ந்தேன்.

இறைவனின் உண்மை வார்த்தையை தேடும் வாசகர்கள் தங்கள் மனதில் எந்த வித கலங்கமும் இல்லாமல் இக்கட்டுரைகளை படிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இறைவன் தன்னுடைய வார்த்தையை நாம் அனைவரும் சரியான வகையில் புரிந்துக்கொள்ள நம் மனதை திறப்பானாக. இவ்வார்த்தைகளை அசை போடும் உங்களோடு இறைவன் இருப்பாராக. அவர் ஒருவருக்கே நாம் நம்மை சமர்பிக்கிறோம், அவர் ஒருவருக்கே எல்ல புகழும் உரித்தாகுக.

 [பொருள் அட்டவணை செல்ல] [அடுத்த அத்தியாயம் செல்ல]

ஆங்கில மூலம்: Dear Muslim, let me tell you why I believed