ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 27 ஜூன், 2008

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?


சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?


தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!




முன்னுரை: சமீப காலமாக தமிழ் முஸ்லீம் அறிஞர்கள், இஸ்லாமுக்காக பல கட்டுரைகளை, கேள்வி பதில் கட்டுரைகளை, இஸ்லாமை தழுவிய மாற்று மத நண்பர்களின் சாட்சிகளை பதித்துக்கொண்டு வருகிறார்கள். இதே போல கிறிஸ்தவர்களும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக, உலக அளவில் மக்கள் ஒரு மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கும், அதே போல இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக கவனித்தால், மத நம்பிக்கையிலிருந்து நாத்தீகத்திற்கும் அதிக அளவில் மக்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.



முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.




1. பொய்யை உண்மை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள்:



மக்கள் சின்ன பொய்யை விட பெரிய பொய்யை சீக்கிரத்தில் நம்புவார்கள் என்று சொல்லுவார்கள். அது போல, நம் இஸ்லாமிய தளங்கள் ஆதாரங்கள் எதையுமே காட்டாமல், பெரிய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒருசில பொய்களை கீழேயுள்ள கட்டுரைகளில் படிக்கலாம்:




A) 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்கள்:



சூடான் நாட்டின் “கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்” பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினாராம். இவர் மூலமாக இதுவரை (5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்களாம். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்களாம். படிக்கவும்: 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்ககளா?



இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன், இன்று வரை பதில் இல்லை.



B) கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?



கிறிஸ்தவ பாதிரிகள் ஹஜ்செய்தார்கள் என்று கட்டுரை எழுதினார்கள், அப்படியானால், ஆதாரம் எங்கே என்று கேட்டேன், இதுவரை பதில் இல்லை. ஏதோ ஒரு பத்திரிக்கை பெயரை குறிப்பிடுவார்கள்( தமிழ் நாட்டில் உள்ளவர்கள், அந்த பத்திரிக்கைகளில் இச்செய்தி உள்ளதா என்று தேடிபார்க்கமாட்டர்கள் என்று நம்பிக்கையில்), ஆனால், அந்த செய்தி வெளியான தொடுப்பை கொடுக்கமாட்டார்கள். படிக்க: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?




C) ஜீமெயில் படத்தை திருத்தி, இது தான் ஆதாரம் என்றார்கள்:



தங்களுக்கு வாசகர்களிடமிருந்து கேள்விகள் வந்தன என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் பற்றி கட்டுரைகளை எழுதினார்கள். இவைகள் பொய் என்றுச் சொன்னோம், உடனே, தங்களுக்கு வாசகர்களிடமிருந்து மெயில் வந்ததாகச் சொல்லி, ஜீமெயில் படத்தை திருத்தி அதை ஆதாரமாக பதித்தார்கள். படிக்க: கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம்





2. இப்பொழுது இன்னொரு செய்தி, முஸ்லீம்களிடமிருந்து:



மன்னர் பஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!




இந்த செய்தியை நான் பொய் என்று திட்டவட்டமாக சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக இந்த செய்திக்கான ஆதாரத்தை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த செய்தி பல இஸ்லாமிய தமிழ் தளங்களில் பதிக்கப்பட்டுள்ளது.



இப்னுபஷீர், சித்தார் கோட்டை, மஸ்டோகா, ஆதிரை ஐஐசி, தமிழ் முஸ்லீம்.





இத்தாலிய பாதிரியார் இஸ்லாமை தழுவிய விதம்:


சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


emphasis mine




3. இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் காட்டிய ஆதாரங்கள்:



இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஆதாரம், அரப் நியூஸ் என்ற ஆங்கில தளம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த ஆங்கில செய்தித் தளத்தை இவர்கள் குறிப்பிட்டார்களோ, அந்த தளத்தில் இச்செய்தி வெளிவந்த தொடுப்பையும் இவர்கள் தரவில்லை. எந்த கட்டுரையை மொழிபெயர்த்தார்களோ அதன் தொடுப்பை கொடுத்து இருக்கலாம், அதையும் இவர்கள் தரவில்லை. மூல தொடுப்பை கொடுக்காமல் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடும் கலாச்சாரத்தை என்னவென்றுச் சொல்ல.




இனி இச்செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை அலசுவோம்





4. எளிமையான சவஅடக்கத்தை கண்டு ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவ
வாய்ப்பு இல்லையா?






ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நற்செயலும் காரணமாக இருக்கலாம், ஒரு அரசரின் சவ அடக்கம், மிகவும் எளிமையாக நடைப்பெறுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு உள்ளது. இங்கு என் சந்தேகம், என்னவென்றால், இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையா என்பதாகும்? மன்னர் மரித்தது உண்மை தான், மன்னரின் சவ அடக்கம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது உண்மை தான் ( மன்னர் உயிரோடு இருக்கும் போது எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பது வேறு விஷயம்). ஆனால், இந்த எளிமையான சவ அடக்கத்தைக் கண்டு, கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா?




இச்செய்தி:



உண்மையாகவும் இருக்கலாம்



அல்லது



பொய்யாகவும், முஸ்லீம்களின் கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.





என் கருத்துப்படி, இச்செய்தியில் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி, இது உண்மையாக இருக்க குறைவான வாய்ப்பு உள்ளது. ஆனால், பொய்யாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் காண்கின்றேன்.




நான் ஏன் இப்படி முடிவு செய்யவேண்டி வந்தது என்பதற்கான காரணங்களை இங்கே தருகிறேன். ஒருவேளை என் கணிப்பு தவறாக இருக்குமானால், அதை தெரிவித்தால், இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இக்கட்டுரையை என் தளத்திலிருந்து எடுத்துவிடுகிறேன்.





1. முதலாவதாக, ஆங்கில மூல தொடுப்பையும் முஸ்லீம்கள் தராமல் ஏன் கட்டுரை எழுதுகின்றார்கள்.



நீங்கள் சொல்ல வந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டுரையை பதித்தவர்களில் ஒருவராவது ஆங்கில தொடுப்பை கொடுத்து இருக்கலாம்.



இக்கட்டுரையின் ஆங்கில தொடுப்பை நான் தருகிறேன்.






Link:
Moved by Simplicity of Royal Funeral, Priest Embraces Islam


P.K. Abdul Ghafour, Arab News


...
அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப்
நியூஸ் ஆங்கில நாளிதழ்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
...




Source: http://www.arabnews.com/?page=1§ion=0&article=68768&d=21&m=8&y=2005





2. மொழிபெயர்க்கும் போது, விட்டு விட்ட முக்கியமான விவரம்:



இஸ்லாமியர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கீழ் கண்ட விவரங்களை மொழிபெயர்க்கவில்லை.




“Al-Riyadh Arabic daily reported without mentioning his name.”

“ரியாத் நகரில் வெளியாகும் அரபி தின‌ பத்திரிக்கை அவரின் பெயரை
குறிப்பிடாமல் தெரிவித்தது”





அதாவது, அரப்நியூஸ் என்ற தளத்தில் வெளியான இந்த செய்தி, “Al-Riyadh Arabic daily “ பத்திரிக்கையின் மூல தொடுப்பு இல்லாமல், பெயர் இல்லாமல், நாள் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்த விவரத்தை ரியாத் நகரில் வெளிவரும் அரபி செய்தித்தாள் வெளியிட்டதாம். இந்த அரப்நியூஸ் தளம் வேறு எந்த ஆதாரத்தையும் தராமல், ஒரே வரியில் தன் ஆதாரத்தை முன்வைத்து விட்டது. சரி, நம் இஸ்லாமியர்கள் அதையாவது மொழிபெயர்த்தார்களா என்று கேட்டால், அதையும் இவர்கள் செய்யவில்லை.




இப்போது நம் சந்தேகங்கள்:


1. ஏன் அரப்நியூஸ் தளம் தான் வெளியிட்ட செய்தி, ரியாதில் தினமும் வெளிவரும் அரபி தினபத்திரிக்கையில் எந்த நாள், எந்த தேதியில் வெளிவந்தது என்று குறிப்பிடவில்லை? இந்த அரப்நியூஸ் தள நிர்வாகிகளுக்கு இச்செய்தி ஒரு பொய்யான செய்தி என்று தெரியுமா?



2. “Al-Riyadh Arabic daily” என்பது ஒரு பத்திரிக்கையின் பெயரா? அல்லது “இந்தியாவில் தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது” என்று சரியான ஆதாரமே இல்லாமல் சொல்வது போல ஒரு பொதுவான விவரமா?




3. பிரபல கிறிஸ்துவ பாதிரியார் (a well-known Christian priest) என்பதன் பொருள் என்ன?


தமிழில் "பிரபல கிறிஸ்தவ பாதிரியார்" என்றும் ஆங்கிலத்தில் "A
Well-Known Christian Priest
” என்றும் எழுதிவிட்டு, அவர் இஸ்லாமை தழுவியது, ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு குடிசையில் நடந்த நிகழ்ச்சி போல ஆதாரமே சொல்லாமல் எழுதினால் எப்படி சகோதரரே? என் சந்தேகம் வலுவானதாக மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.




ஒரு பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவினார் என்பது ஒன்றும் ஒரு சாதாரண விஷயமல்லவே! மட்டுமல்ல, அவர் இஸ்லாமுக்கு மாறியிப்பாரானால், வேறு ஏதாவது பத்திரிக்கையில் அச்செய்தி வந்திருக்குமே, இப்படி இஸ்லாமியர் அல்லாத பத்திரிக்கையில் வந்ததாக என் கண்ணில் படவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.




அப்படியில்லையானால், இந்த பிரபலமானவர் இன்னும் தன் கிறிஸ்தவ சபையையே நடத்திக்கொண்டு, இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? ஒரு பிரபல பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருந்தால், அந்த சபைக்கு முதலாவது தெரியும், அவர் சபையை நடத்தமாட்டார், இந்த விஷயம் குறைந்தபட்சம் இத்தாலியில் அவர் வாழ்ந்த நகரில், ஒரு செய்தியாக செய்தித்தாள்களில் வெளிவந்து இருக்கும். இந்த இணைய காலத்தில், இணையத்திலும் உலாவரும்.




சில முஸ்லீம்கள் "அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் தான், அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடவில்லை" என்று சொல்லக்கூடும். இது பலவீனமான வாதம் ஏனென்றால், அவர் தழுவியது இஸ்லாமை, அப்படியானால், அவருக்கு பாதுகாப்பு நிச்சயமாக இஸ்லாமியர்களே தருவார்கள், இன்னும் ஒரு விவரம் என்னவென்றால், எந்த கிறிஸ்தவனும் அவரை கொல்லமாட்டான், அப்படி கொல்லும்படி எங்களுக்கு எங்கள் தேவன் கட்டளை கொடுக்கவும் இல்லை, அதாவது ஒரு கிறிஸ்தவர் முஸ்லீமாக மாறினால் அவரை கொல்லுங்கள் என்று இத்தாலியில் இப்படி ஒரு சட்டமும் இல்லை. விஷயம் இப்படி இருக்கும் போது, எப்படி ஆபத்து வரும்? இது நம்பும்படி இல்லை.





4. ஆதாரத்திற்காக இணையத்தில் என் தேடல்:



இக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக, இணையத்தில் இதற்கு யாரவது பதில் அளித்து இருப்பார்கள் என்று தேடிப்பார்த்ததில், ஏமாற்றம் தான் மிஞ்சியது.



ஆனால், ஒரு கத்தோலிக்க போரமில் (http://forums.catholic.com/showthread.php?t=70876 ) ஒரு இஸ்லாமிய உறுப்பினர் இதே கட்டுரையை பதித்து இருந்தார்கள். அதற்கு ஆதாரம் என்ன‌? என்று அத்தளத்தில் கேட்கப்பட்டு இருந்தது, இதற்கு அக்கட்டுரையை பதித்த இஸ்லாமியர், தான் அந்த செய்தியை வெளியிட்ட அரப்நியூஸ் தளத்திற்கு மெயில் அனுப்பி, இன்னும் விவரங்களை சேகரித்து, பதிப்பதாக சொல்லியிருந்தார்கள்.




Re: Priest Embraces Islam B/c Of Fahd's Funeral



The story was taken from www.arabnews.com, which is run by Saudi Research & Publishing Co., a Saudi based English-language daily newspaper. It is a well established news outlet and is distributed around the world. It seems they took the story from ar-Riyadh, which is an arabic newspaper.



As for why theres no name, perhaps he didnt wanna be named for fear or to avoid public attention.



Anyhow, i dont mind looking into the story myself, i will write to the writer of the article and ask if he could provide more sources for the story. If he replies, ill post the sources.
…..


I think it is fair for those reading this thread to doubt the story. Although what i know from that source is that they are credible, i cannot find anymore sources other than them. And since this is regarding a conversion, it is important there be no shadow of a doubt the story is true.



thanks for all your replies.



Source : http://forums.catholic.com/showthread.php?t=70876




அதே போல, ஒரு கிறிஸ்தவ சகோதரர், வாடிகன் ஏசியாநியூஸ்(AsiaNews, Vatican) செய்தித்தாள் நிறுவத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி யாரும் மாறவில்லை என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். (உண்மையிலேயே இத்தாலி பாதிரியார் இஸ்லாமுக்கு மாறினார் என்பதை ஆதாரத்துடன் நிருபித்தால், இந்த சகோதரருக்கு மெயில் அனுப்பி இவரது செய்தியின் நம்பகத்தன்மையை நான் அறிந்துக்கொள்வேன்). இதையும் படிக்கவும்.




I have received a mail from the Director of Asianews, Vatican.


According his reports no priest embraced to Islam recently from Italy.



If any one has any link with the priest`s name please provide. If you don`t have his name and clear address please don`t.



Source Page 2: http://forums.catholic.com/showthread.php?t=70876&page=2




இந்த கத்தோலிக்க இணையத்தில் இப்பதிவுகள் பதிக்கப்பட்டது கடைசியாக செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டு ஆகும்(மன்னர் காலமானவது 2005 ஆகஸ்ட் மாதமாகும்.) ஆனால், இதுவரை எந்த தகவலும் அந்த இஸ்லாமிய உறுப்பினர் பதித்ததாக தகவல் இல்லை.



5. தமிழ் முஸ்லீம்களிடம் நான் கேட்க விரும்புவது?




இந்த ஒரு செய்தியை பல தளங்களில் பதித்து உள்ளீர்கள், உங்களில் யாராவது அந்த அரப்நியூஸ் செய்தித்தாள் தளத்திற்கு மெயில் அனுப்பி, விவரங்களை தெரிந்துக்கொண்டு பதித்தால், நீங்கள் சொன்னது உண்மை என்று நிருபிக்கப்படும். இந்த வேலையை நாங்கள் ஏன் செய்யப்போகிறோம், நீ தான் செய்யனும் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏனென்றால், செய்தியை ஆதாரம் இல்லாமல் வெளியிட்டது நீங்கள், எனவே, ஆதாரத்தை சேகரிக்கும் வேலையும் உங்களுடையது தான். ரியாதில் உள்ள உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த "ரியாத் தினசெய்தித்தாள்" பற்றி தெரிந்துக்கொண்டு விவரங்களை சேகரித்து தெரிவியுங்கள். இப்படி நீங்கள் செய்தால், உங்கள் நம்பகத்தன்மை, நேர்மை வெளிப்படும், இஸ்லாமுக்காக நீங்கள் படும் பாடுகள் அனைத்திற்கும் உபயோகம் என்பது இருக்கும்.



நீங்கள் இந்த விவரங்களை தரவில்லையானால், பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று எல்லா மக்களுக்கும் தெரிந்துவிடும். உங்கள் தளங்களில் உள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை என்னவென்று எல்லாருக்கும் தெரிந்துவிடும்.



முடிவுரை: இதுவரை நான் சொன்ன விவரங்களில் ஏதாவது குறைகள் இருக்குமானால், அல்லது இதற்கு யாராவது பதில் சொல்ல விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள் ( isa.koran (at) gmail (dot) com ). அல்லது பின்னூட்டம் இடுங்கள். கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான், நீங்கள் சொன்ன விவரம் உண்மையாக இருக்குமானால், உங்களால் நிச்சயமாக ஆதாரங்களை சேகரிக்கமுடியும். எனக்கு வந்த இந்த சந்தேகம் தீர்க்கப்படலாம்.




என் சந்தேகத்தை மட்டுமே முன்வைத்தேன், ஒருவேளை உண்மையாகவே இத்தாலிய பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருக்கலாம், ஆனால், ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். இச்செய்தி பொய்யாக இருக்கலாம் என்று நம்புவதற்கு அதிகமாக வாய்ப்புக்கள் இருப்பதால் தான் நான் கேட்கிறேன், உங்களை அவமானப்படுத்த அல்ல.




(பின்குறிப்பு: யாராவது ஒரு பொய்யான மெயிலை தயார் செய்து, இது எங்களுக்கு அரப்நியூஸ் தள நிர்வாகத்திலிருந்து வந்தது என்றுச் சொல்லி, மறுபடியும் பொய்யான தகவலை பதித்தால், அதுவும் வெளிவர அதிக நாட்கள் பிடிக்காது என்பதையும் என் அருமை தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்).



ரோமர் 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.











Isa Koran Home PageArticles Index

திங்கள், 23 ஜூன், 2008

அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்

அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே "ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது", அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.

வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா


பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.

அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.


Source: http://adirai-iic.blogspot.com/2008/06/blog-post_21.html

----------------------------------------------------------------------

ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.

இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:

2. இஸ்லாமில் கட்டாயமில்லை:

3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.

4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.

5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.

6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.


இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள்.

ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.


Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman


சமத்துவம், சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:

1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?

2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா?"

3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?

4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?

5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?

7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?

9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.

10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?

11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?

12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?

கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?

மத்தேயு 10:14எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
லூக்கா 9:5உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
அப்போஸ்தல நடபடிகள் 13:51இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.


இயேசு தன் செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஊரை விட்டு வரும் போது, காலில் படிந்த துசியைக்கூட உதறிவிட்டு வரும்படிச் சொன்னார், அவர்களை சபிக்கவேண்டாமென்றுச் சொன்னார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால், முகமதுவோ தன் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையானால், போர் செய்வேன், நாட்டை பிடிப்பேன், உன் வலிமையை அற்றுப்போகப்பண்ணுவேன் என்றுச் சொல்கிறார்.

இயேசு அஹிம்சை மூலமாக தன் செய்தியை தெரிவித்தார். முகமதுவோ "ஹிம்சை" மூலகாம தன் செய்தியைச் சொன்னார். ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் வேண்டுமானால், வெவ்வேறு குணங்களை கொண்டிருக்கலாம், ஆனால், ஒரு இறைவன் அனுப்பியவர்கள் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டு தன் செய்திகளைச் சொல்லமாட்டார்கள்.

இதில் யாராவது ஒருவர் தான் உண்மையாக இருக்கமுடியும்? இயேசு அல்லது முகமது ? முகமது சொன்னதை பின்பற்றிக்கொண்டு, இயேசுவைக் கூட அதே இறைவன் தான் அனுப்பினான் என்றுச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள்.

எனவே, கிறிஸ்துவின் பாதையில், அமைதியின் பாதையில், உண்மையின் பாதையில் வரும் படி நான் உங்களை அழைக்கிறேன். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், நிம்மதியைக்கொண்டுவரும். இயேசுவை உங்கள் உள்ளத்தில் வரும் படி அழையுங்கள், அது போதும். உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும்.

1) Image Source: http://www.answering-islam.de/Main/Muhammad/oman.gif

சனி, 21 ஜூன், 2008

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் "Radiallah tala anho" (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

(Zakir Naik's Remarks on Yazid Spark Anger Among Muslims Shahid Raza Burney, Arab News )


மும்பையில் நடந்த 10 நாள் அமைதி முகாமில், நாயக் அவர்கள் யஜித் என்பவரின் பெயரை கூறியபோது, அதோடு கூட "ரதிஅல்லா தால அன்ஹூ" என்று கூறினார் மற்றும் கர்பலா என்ற போர் ஒரு "அரசியல் போர்" என்று கூறினார். இந்த அவரது கருத்தை பல இந்திய முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் நாயக் அவர்கள் இதற்கு மன்னிப்பு கோரவில்லையானால், தன் கருத்தை திரும்ப பெறவில்லையானால் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.



ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது:

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

Source: Arab News . Com

2. THE TIMES OF INDIA : (Row Over Islamic Preachers Remarks)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

Naik, who returned from Haj on Wednesday, conveyed his reaction through his brother Mohammed Naik: "At the peace conference, while replying to a question, I neither condemned nor lauded Yazid. I did say 'May Allah be pleased with him' while mentioning Yazid. I can show the fatwas from seminaries like Darul Uloom Deoband supporting my stand."

Source : THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: Mind Your Words Mr. Zakir Naik

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

Source: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. Islamic Insights.com : Zakir Naik Draws Ire With Karbala Comments

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Most Sunni scholars and jurists, including Ibn Kathir, Ibn Taymiyya, and Ahmad bin Hanbal, have condemned Yazid and deemed it permissible to curse him.

Source: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condenmn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1



Press Conference to condenmn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2



Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3




Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4




Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5



டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch?v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு

REPLY BY DR ZAKIR NAIK ON KARBALA & YAZID (YAZEED)
Dr. Naik's Response



இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.


முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.

ஞாயிறு, 15 ஜூன், 2008

பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம் - இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2



இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2

(பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம்)


தமிழ் கிறிஸ்தவர்களின் முன்னுரை: தமிழ் முஸ்லீம்கள் கடந்த சில மாதங்களாக பைபிளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் முக்கியமானது:





பைபிள் நபிகளை(தீர்க்கதரிசிகளை)ப் பற்றி தரம் குறைவாக விவரிக்கிறது என்ற குற்றச்சாட்டாகும்.




முக்கியமாக தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்ட நிகழ்ச்சி தவறானது, இப்படி அவர் செய்யவில்லை. பைபிள் தவறாக இப்படிச் சொல்கிறது. அல்லாவின் நபிகள் இப்படி அநியாயமாக ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு கொலை எல்லாம் செய்யமாட்டார்கள் என்று பலவாறு குற்றம் சாட்டுகிறார்கள்.



உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால்:





1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,

2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,

3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,

4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்




குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

நாம் முதல் பாகமாக, "இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 1" என்ற கட்டுரையை வெளியிட்டோம், இப்போது இரண்டாம் பாகமாக, தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை எடுத்துக்கொண்ட விவரங்களை குர்‍ஆன் மற்றும் இஸ்லாமிய மூலங்களிலிருந்து அலசுவோம்.

பிஜே அவர்கள் முதல் புத்தம் புதிய இஸ்லாமிய தளங்கள் வரை அனைவரும் பைபிள் மீது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இவர்கள் எல்லாருக்கும் எங்கள் பதிலாக இக்கட்டுரையை முன்வைக்கின்றோம்.

இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் பாகம் - 1ஐ படிக்க இங்கு சொடுக்கவும்

பாகம் 2 தொடர்கிறது...



இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2

(பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம்)


Islam and the Sins of the Prophets By Sam Shamoun

கடைசி எடுத்துக்காட்டாக தாவீது மற்றும் பெத்செபாளைப் பற்றி சிந்திக்கப்போகிறோம். குர்‍ஆனிலே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட சில மறைமுக குறிப்புக்கள் உள்ளன.





தாவீதை சந்தித்த இரண்டு வழக்காளிகள் பற்றி குர்‍ஆன் வசனங்கள் - குர்‍ஆன் 38:21-24,30


அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - (38:21)

தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" (38:22)

(அவர்களில் ஒருவர் கூறினார்;) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்." (38:23)

(அதற்கு தாவூது;) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (38:24)

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். (38:30)




இந்த கதை நமக்கு 2 சாமுவேல் 12:1 லிருந்து 14ம் வசனம் வரை உள்ள நிகழ்ச்சியை நியாபகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் நாத்தான் என்பவர் தாவீது செய்த தவறை "ஒரு பணக்காரன் எப்படி தன் அயலகத்தானுடைய ஆட்டை ஏமாற்றி எடுத்துக்கொண்டார் என்று உவமையாக" சொல்லி வெளிப்படுத்தினார். ஆனால், குர்‍ஆன் மற்றும் பைபிள் சொல்லும் விவரங்கள் இரண்டிற்கும் உள்ள ஒரே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், நாத்தான் சொன்ன ஒரு உவமைக்கதையை குர்‍ஆன் ஒரு சரித்திர நிகழ்வாக மாற்றி சொல்லியுள்ளது!

இது குர்‍ஆனின் ஆசிரியருக்கு எது சரித்திர நிகழ்ச்சி என்பதை பகுத்தறியும் ஞானம் இல்லை என்பதை காட்டும் இன்னொரு அத்தாட்சியாகும்: மேலும் அறிய படிக்கவும்:




Quran External Contradictions
Quran's History Compressions



பொதுவாக, இரண்டு பேர் அரச சபைக்குச் சென்று தங்கள் பிரச்சனையை அரசரிடம் சொல்லி தீர்த்துக்கொள்ளும்படி முடிவு செய்தால் அதற்கு முன்பு பல முறை சிந்தித்துப்பார்ப்பார்கள். முக்கியமாக வழக்காடுபவர்கள் இரண்டு பேர் இருந்தால், நிச்சயமாக பல முறை யோசிப்பார்கள். ஒரு ஏழை, அரசர் தனிமையில் இருக்கும் போது, தன்னை ஏமாற்றிய பணக்காரனை தன்னோடு கூட‌ அரசரிடம் முதல் விசாரணைக்கு அழைத்துச் செல்லமுடியுமா என்பது கற்பனை செய்து பார்ப்பதும் கடினமே. அவ்வளவு ஏன், பொதுவாக அரசர் மக்களுக்கு முன்பாக அரச சபையில் இருக்கும் போதும் கூட அழைத்துச் செல்லமுடியாது. நிஜ உலக நிகழ்வுகளை நாம் கவனிக்கும் போது, ஏமாற்றப்பட்டவன் அல்லது நஷ்டமடைந்தவன் அரசரிடம் சென்று தன் வழக்கை முதலாவது சொல்லுவான். அதன் பிறகு தான் காவல் துறையினர் அல்லது அரச காவலாளிகள் சென்று குற்றம் இழைத்தவனை அரச நீதிமன்றத்திற்கு அழைத்துவருவார்கள். ஆனால், குர்‍ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கண்ணோக்கினால், இப்படி நடந்ததாக நிச்சயமாக தெரியவில்லை. ஒரு சரியான பகுத்தறிவுடன் நாம் இதை அனுகினால், பைபிள் சொல்லும் நிகழ்ச்சியே மிகவும் சரியானதாகவும்,மற்றும் உண்மையானதாகவும் இருக்கமுடியும் என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த நிகழ்ச்சி பற்றிய மேலதிக விவரங்கள் இந்த கட்டுரையில் "I am ALL the Prophets" விவாதிக்கப்பட்டுள்ளது.

1. அல்-தபரி(Al-Tabari) சரித்திர நூலிலிருந்து ஆதாரம்:



இந்த நிகழ்ச்சியை மேலும் தொடர்ந்து பார்ப்போம். இதை படிக்கும் உங்களுக்கு இது ஆச்சரியமாக கூட‌ இருக்கலாம். இஸ்லாமிய ஆரம்ப கால அறிஞர்கள் குர்‍ஆன் சொல்லும் இந்த கதை "தாவீதையும், பெத்செபாளையும்" பற்றிய நிகழ்ச்சியை குறிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை. கீழே கொடுப்பட்ட விவரங்கள் அல்-தபரி(Al-Tabari) என்ற சரித்திர நூலிலிருந்து எடுத்தது:



ஒரு நாள், தாவீது தன் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு இறைவனிடம் எவ்வளவு மதிப்பு இருந்ததோ அது போல மதிப்பு தனக்கும் தேவை என்று தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டார். இறைவன் எப்படி முற்பிதாக்களை சோதித்தாரோ மற்றும் பிறகு அவர்களுக்கு எப்படி கிருபை பொழிந்தாரோ அது போல, தன்னை சோதித்து, நல்ல பலனை தனக்கு அருளும்படி தாவீது இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

முஹம்மத் பி. அல்ஹுசைன் அஹமத் பி. அல்முஃபட்டல் அஸ்பத் சொல்கிறார்:

அல்‍-சுத்தி கூறுகிறார், தாவீது தன் நேரத்தை மூன்று பாகங்களாக(நாட்களாக) பிரிந்திருந்தார். முதல் நாளை தன் மக்களோடு கழிப்பார், அடுத்த நாளை தன் இறைவனின் பாதத்தில் கழிப்பதற்கு ஒதுக்குவார், மற்றும் மூன்றாம் நாளை தன் மனைவிகளோடு கழிப்பதற்கு ஒதுக்குவார், அந்த சமயத்தில் அவருக்கு 99 மனைவிகள் இருந்தார்கள். அவர் புத்தகங்களில் படித்தார், ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் விசேஷித்த தன்மையை அவர் கண்டுக்கொண்டார். இவைகளை அவர் படித்து கண்டுபிடித்த பிறகு, அவர்: "ஓ இறைவா! என் முற்பிதாக்கள் நல்ல நிலையை பெற்று இருந்தார்கள், அவர்களுக்கு இருந்த அதே நிலையை எனக்கும் அருளுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

பிறகு இறைவன் அவருக்கு அறிவித்தார்(Inspired him): "உன் முற்பிதாக்கள் பல விதங்களில் கடினமாக சோதிக்கப்பட்டார்கள், ஆனால் இதுவரை இப்படி நீ சோதிக்கப்படவில்லை. ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்கும்படி சோதிக்கப்பட்டார், ஈசாக்கு தன் கண்பார்வையை இழந்தார், மற்றும் யாக்கோபு தன் மகனாகிய யோசேப்பிற்காக மிகவும் அதிக துக்கத்தை அனுபவித்தார். ஆனால், நீ இப்படிப்பட்ட எந்த சோதனையையும் இன்னும் அனுபவிக்கவில்லை" என்றார். அதற்கு தாவீது: "ஓ இறைவா! அவர்களை சோதித்து அவர்களுக்கு நீங்கள் எதை கொடுத்தீர்களோ, அதே போல என்னையும் சோதித்து எனக்கும் நன்மையை கொடுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

இறைவன் தாவீதுக்கு
"நீ சோதிக்கப்படப் போகிறாய், எனவே, நீ உன்னை காத்துக்கொள்" என்றார். இறைவன் விரும்பும் நேரம்வரும் வரை தாவீது காத்துக்கொண்டு இருந்தார். பிறகு சாத்தான் ஒரு பொன் புறாவின் உருவத்தில் வந்தான். தாவீது நின்றுக்கொண்டு தொழுதுக்கொண்டு இருக்கும் போது, அப்புறா அவர் பாதத்தின் அருகே வந்து அமர்ந்தது. இந்த செய்தியை சொல்பவர் தொடர்ந்துச் சொன்னார். தாவீது தன் கைகளால் அந்தப் புறாவை பிடிக்க முயன்றார், ஆனால், அது உடனே விலகிச்சென்றது. அவர் அதை தொடர்ந்துச் சென்றார், ஆனால், அப்புறா தூரமாகச் சென்று ஒரு மேற்கூறையில் நின்றது. அந்த புறா எங்கு நின்றது என்று தெரிந்துக்கொள்ள அவர் அதை தொடர்ந்துச் சென்றார்.

அங்கே ஒரு பெண் தன் வீட்டின் மேற் கூறையில் குளிப்பதை தாவீது கண்டார், அந்தப் பெண் மிகுந்த அழகுடையவளாக காணப்பட்டாள். அந்தப்பெண் திரும்பும் போது, தாவீதைக் காண நேரிட்டது, அவள் தன் தலைமுடியினால் தன் உடல் முழுவதையும் மூடிக்கொண்டாள். அதனால், அப்பெண்ணின் மீது, தாவீதின் ஆசை அதிகரித்தது.

தாவீது அந்த பெண்ணைப்பற்றிய விவரங்களை கேட்டனுப்பினார், அவளுடைய கணவன் இன்ன இன்ன இடத்தில் போருக்கு சென்றுள்ளார் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. உரியாவை[Sam- Arabic, Ahriya/Awriya] ஒரு குறிப்பிட்ட எதிரி படைகளுக்கு முன்பாக அனுப்பும்படி அந்த யுத்த களத்தில் உள்ள தளபதிக்கு தாவீது ஒரு கட்டளையை எழுதி அனுப்பினார். தளபதி உரியாவை அப்படியே அனுப்பினார், ஆனால், அந்த எதிரிகளின் மீது உரியா வெற்றிக்கொண்டான். தளபதி உரியாவின் வெற்றியைப் பற்றி தாவீதுக்கு செய்தி அனுப்பினார். மறுபடியும் தாவீது, முன்பை விட பலசாலிகளான ஒரு குறிப்பிட்ட எதிரிகளுக்கு முன்பாக உரியாவை நிறுத்தும்படி சொல்லியனுப்பினார். தளபதியும் அப்படியே செய்தார், இந்த முறையும் உரியா அந்த எதிரிகள் மீது வெற்றிப்பெற்றார். இந்த இரண்டம் வெற்றியைப் பற்றி தளபதி மறுபடியும் எழுதி அனுப்பினார்.
தாவீது மறுபடியும் ஒரு குறிப்பிட்ட எதிரிகளுக்கு முன்பாக உரியாவை அனுப்பும்படி செய்தி அனுப்பினார். தளபதியும் அப்படியே செய்தார், இந்த மூன்றாம் முறை உரியா யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார்.

தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார். அந்தப் பெண் தாவீதோடு வந்து சேர்ந்து சில நாட்களே ஆனபோது, இறைவனால் மனித வடிவில் அனுப்பப்பட்ட இரண்டு தூதர்கள், தாவீதை சந்திக்க வேண்டுமென்று அனுமதி கோரினார்கள். ஆனால், அந்த நாள் தாவீது இறைவனை தொழுதுக்கொள்ளும் நாள் என்பதால், காவலாளிகள் அவர்களை உள்ளே விடவில்லை. எனவே, அந்த இரண்டு பேரும் தாவீது இருக்கும் தனிமையான அறையின் உள்ளே ஆச்சரியமான விதத்தில் நுழைந்தார்கள். தாவீது தொழுதுக்கொண்டு இருந்ததால், இவர்கள் உள்ளே வந்தது பற்றி அறியவில்லை. ஆனால், திடீரென்று அவர்கள் தனக்கு முன்பாக உட்கார்ந்து இருப்பதைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்!" இதன் பொருள் தவறாக செயல்படாதீர் என்பதாகும். மற்றும் "எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" தாவீது "உங்கள் வழக்கு என்ன என்று கேட்டார்", அதற்கு ஒருவன் "
இவர் என் சகோதரர், இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன, ஆனால் என்னிடம் ஒரு ஆடு மட்டும் தான் உள்ளது. இவர் தன்னிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை நூறு ஆகவேண்டும் என்பதற்காக‌, என்னிடம் உள்ள அந்த ஒரு ஆட்டையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்" என்றார்.

தாவீது மற்றவனைப் பார்த்து, "இதற்கு உன் பதில் என்ன?" என்றுக் கேட்டார். அதற்கு அவன், "என்னிடம் 99 ஆடுகள் இருக்கின்றன, இந்த என் சகோதரனிடம் ஒரு ஆடு இருக்கின்றது, என்னிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 100 ஆக வேண்டும் என்பதற்காக, இவனிடம் உள்ளதை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்" என்றான். அதற்கு தாவீது, "உன் சகோதரன் தன் ஆட்டை உனக்கு கொடுக்க விரும்பவில்லையானாலும், நீ அதை எடுத்துக்கொள்வாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆம், அவன் விரும்பவில்லையானாலும் நான் எடுத்துக்கொள்வேன்!" என்றான். தாவீது "அப்படியானால், அதை நீ எடுத்துக்கொள்ள நாங்கள் உன்னை அனுமதிக்கமாட்டோம்" என்றார். அதற்கு அவன் பதிலாக "உங்களால் அதை தடுக்க முடியாது" என்றான். தாவீது "நீ அதை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தால், உன்னை அங்கும் இங்குமாக அடிப்போம்" என்றார். [அஸ்பத் "அங்கும் இங்கும்" என்பதற்கு "உன் மூக்கிலும், நெற்றியிலும் அடிப்போம்" என்று பொருள் கூறுகிறார்.]
அதன் பிறகு அந்த மனிதன் "ஓ தாவீதே, அங்கும் இங்கும் அடி வாங்க நீ அதிகமாக தகுதியானவன், ஏனென்றால், உனக்கு 99 மனைவிகள் இருக்கிறார்கள், ஆனால் உரியாவிற்கு ஒரே ஒரு மனைவி உண்டு. ஆனால், அவன் போர்க்களத்தில் மரிக்கும் வரை நீ தொடர்ந்து செயல்பட்டு, அவன் மரித்த பிறகு அவன் மனைவியை திருமணம் செய்துக்கொண்டாய்" என்றான்.

தாவீது திரும்பி பார்க்கும் போது, தன் அறையில் யாரையும் காணவில்லை. பிறகு அவர் என்ன நடந்தது என்று புரிந்துக்கொண்டார், மற்றும் தான் எப்படி சோதிக்கப்பட்டார் என்பதையும் அறிந்துக்கொண்டார். அவர் தாழவிழுந்து அழுதார். அவர் அப்படி விழுந்துக்கிடந்து 40 நாட்கள் அளவும் அழுதுக்கொண்டு இருந்தார். ஒரு சில முக்கியமான தேவையின் போது மட்டும் தன் தலையை மேலே உயர்த்தினார், பிறகு மறுபடியும் விழுந்துகிடந்து அழுதுக்கொண்டே இருந்தார். அவர் தொழுதுக்கொண்டார், எதுவரைக்கும் என்றால், தன் கண்ணீரினால் மண் நனைந்து புல் முளைக்கும் நாட்கள் அளவிற்கு தொழுதுக்கொண்டார்.

நாற்பது நாட்கள் கடந்த பிறகு, இறைவன் அவருக்கு வெளிப்படுத்தினார்(Inspired), "ஓ தாவீதே, உன் தலையை மேலே எழுப்பு, நான் உன்னை மன்னித்து விட்டேன்." தாவீது சொன்னார், "ஓ இறைவா! நீ என்னை மன்னித்தாய் என்று நான் எப்படி அறிந்துக்கொள்வேன், ஏனென்றால், நீ யாருக்கும் நியாயத்தீர்ப்பில் தயவு தாட்சனை காட்டாத நீதிபதி அல்லவா? நியாயத்தீர்ப்பு நாளிலே உரியா தன் வலது அல்லது இடது கையிலே தன் தலையை வைத்துக்கொண்டு உனக்கு முன்பாக நிற்கும் போது, அவனுடைய கழுத்து நரம்புகளிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து உன் சிங்காசனத்தின் முன்பு விழும்போது, அவன் "ஓ இறைவா!, இந்த மனிதன் என்னை ஏன் கொலை செய்வித்தான்? என்று கேளுங்கள்" என்று கேட்பானே?" என்றார். இறைவன் மறுபடியும் தாவீதுக்கு வெளிப்படுத்தினார், "ஒரு வேளை நீ சொன்னது போலவே நடக்குமானால், நான் உரியாவை அழைத்து, உனக்காக எனக்கு ஒரு வெகுமதியாக கொடுக்கச்சொல்வேன், பிறகு அவன் உன்னை எனக்கு கொடுப்பான் மற்றும் அதற்கு பதிலாக நான் உரியாவிற்கு சொர்க்கத்தைக் கொடுப்பேன்." பிறகு தாவீது, "ஓ இறைவா! நீ என்னை மன்னித்துவிட்டாய் என்று இப்போது நான் அறிந்துக்கொண்டேன்" என்றார். அதன் பிறகு தான் மரிக்கும் நாள் வரை தாவீது வெட்கத்தினால், தன் கண்களை வானத்திற்கு நேரே ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

அலிப் ஷஹல் எனக்கு அறிவித்தார் – அல்-வலித் பி முஸ்லீம்- அப்த் அல்-ரஹ்மான் பி யாஜிப் பி ஜபீர் - அட அல்குரசானி:

தாவீது தான் செய்த பாவத்தை மறக்காமல் இருப்பதற்காக, அதை தன் கையின் உள்ளங்கையில் எழுதிவைத்துக்கொண்டார். எப்போதெல்லாம், அதை அவர் அதை பார்ப்பாரோ, அவரது கைகள் நடுக்கம் காணும்.

(The History of Al-Tabari, Volume III, The Children of Israel, trans. William M. Brunner [State University of New York Press, Alban 1991], pp. 144-146; bold emphasis ours - see the below Addendum for more of Al-Tabari)

அல் டபரியின் இந்த நிகழ்ச்சிப் பற்றி இன்னும் அறிய, இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்ட "பின் குறிப்புக்களை - Addendum " படிக்கவும்.



2. முஹம்மத் இபின் அப்த் அல்லா அல் கிசை கீழ் கணட விவரங்களைச் சொல்கிறார்:

தாவீது அந்த பறவையின் அழகில் மயங்கினார் மற்றும் அதன் அழகை விவரிக்க இயலாத ஒன்றாக கண்டார். அவர் தனக்குள், "இது நிச்சயமாக சொர்க்கத்தின் பறவைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்" என்று சொல்லிக்கொண்டார். அவர் கையினால் அதை பிடிக்க முயன்றார், ஆனால், அது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தன் மாளிகையின்(Tower) அருகே இருந்த ஒரு குளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு மரம் வரை அந்த பறவை பறந்துச்சென்று, பிறகு மறைந்துவிட்டது. அவர் அந்த பறவையை தேடிக்கொண்டு இருக்கும் போது, அந்த குளத்தின் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அதைக்கண்டார், சாதாரணமாக இஸ்ரவேல் பெண்கள் அந்த குளத்தில் குளிப்பது வழக்கம். தாவீது அந்த பக்கமாக வரும் போது, ஒரு பெண் தன் மேல் தண்ணீர் ஊற்றி குளிக்கும் சத்தத்தை அவர் கேட்டார். அந்தப்பெண் குளிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அந்தப்பெண் மிகவும் அழகுள்ளவள், அவளின் பெயர், பெத்ஷெபா என்பதாகும். அவள் ஹன்னானின் மகனான உரியாவின் மனைவி மற்றும் அவள் ஜோஷுவாவின் மகளாவாள். அந்த வருடமே அவளுக்கு திருமணமாகி இருந்தது, இன்னும் அவள் கர்ப்பமாகவில்லை. தாவீதின் சொந்தக்காரனான ஜருயாவின் மகனான நாபாலின் தலைமையின் கீழ் இப்பெண்ணின் கணவன் உரியா போர்க்களத்தில் இருந்தான், அவன் அங்கு கொல்ல‌ப்பட்டான். (தாவீது தன் இனத்தானான நாபாலிடம் உரியாவை யுத்தகளத்தில் முன்வரிசையில் நிறுத்தும்படி கட்டளையிட்டு சொல்லியனுப்பியதாகவும், நாபாலும் அப்படியே செய்ததாகவும், உரியா மரித்தவுடன், தாவீது உரியாவின் மனைவி பெத்செபாளை திருமணம் செய்துக்கொண்டதாகவும், அறிவிக்கப்பட்டது)

இறைவன் காபிரியேல் மற்றும் மிகாவேல் என்ற தூதர்களை அழகான உருவத்துடன் பூமிக்குச் சென்று, தாவீது செய்த பாவத்தை(Transgression) அவருக்கு தெரிவிக்கும்படி கட்டளையிட்டார். "இறைவா! வரம்பு மீறி தீமை செய்பவர்களை மன்னிக்காமல் இரும், மற்றும் ஒடுக்குகிறவர்களின் கைகளிலிருந்து ஒடுக்கப்படுபவர்களை பாதுகாத்தருளும்" என்று சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது, இரண்டு தூதர்கள் மாளிகையின் மேற்கூறையிலிருந்து மனித வடிவில் இறங்கி வந்தனர். அவர்கள் வழக்காளிகளாக சொல்லிக்கொண்டு வந்தனர், அவர்களில் ஒருவர் வலுவானவர், இன்னொருவர் பலவீனமானவர், இவர்கள் தாவீதுக்கு முன்பாக நின்றனர். தாவீது அவர்களை கண்டவுடன் மிகவும் நடுக்கமுற்றார் மற்றும் தன் கையில் இருந்த சங்கீத புத்தகத்தை(Book of Psalms) நழுவவிட்டார் மற்றும் பயத்துடன் காணப்பட்டார்.

அவர்கள், "சட்டத்தை மீறுகிறவர்கள் மீது கடுமையாக இருப்பரே, பயப்படாதீர், மற்றும் நாங்கள் சொல்வதை கேட்பீராக, நாங்கள் வெகு தூரமுள்ள இடத்திலிருந்து வந்துள்ளோம் என்றுச் சொன்னார்கள்.", அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - …. தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; ….(38:21,22)

தாவீது தன் நியாயத்தீர்ப்பு அளிக்கும் ஆசனத்தில் உட்கார்ந்துக்கொண்டு, உங்கள் வழக்கு என்ன? என்று கேட்டார்.

காபிரியேல், "ஓ இறைவனின் தீர்க்கதரிசியே, இவர் என் சகோதரர், இவரிடம் 99 ஆடுகள் இருக்கின்றன, அவைகள் வெண்மையான வண்ணமுடையவைகள் மற்றும் கொழுத்த ஆடுகளும் கூட‌, பல முறை அவைகள் குட்டிகளையும் பெற்றுள்ளன; எனக்கு ஒரே ஒரு ஆடு மட்டும் உள்ளது: என் சகோதரர் என்னிடம், "உன்னிடம் உள்ள அந்த ஒரு ஆட்டை எனக்கு கொடுத்துவிடு" என்று கேட்கிறார், இதனால் அவர் என்னிடம் தொடர்ந்து வழக்காடிக்கொண்டு இருக்கிறார்( பார்க்க குர்‍ஆன் 38:24) என்றார். இதைப்பற்றி என் இறைவனிடம் நான் முறையிட்டேன், நீங்கள் பூமியில் அவரது பிரதிநிதியாக இருப்பதால், உங்களிடம் போகும்படிக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.

தாவீதின் கோபம் அதிகரித்தது மற்றும் அவர் "உன் சகோதரர் தன்னிடம் ஆடுகள் இருந்தும் உன்னுடையை ஆடுகளை கேட்பதால், அவர் தவறு செய்கிறார், ஒன்றாக சேர்ந்து வியாபாரம் செய்யும் மனிதர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் தீமை செய்வதுண்டு, அது போலத்தான் உன் சகோதரர் உனக்கு எதிரான தீமையை புரிந்துள்ளார்" என்றார் (பார்க்க குர்‍ஆன் 38:25)

மிகாவேல் பேசினார், "ஓ இறைவனின் தீர்க்கதரிசியே, நீங்கள் சரியான முடிவை(தீர்ப்பை) சொல்லவில்லை, ஏனென்றால், அவன் தன் கூட்டாளியாக இல்லாதவனுக்கு தீமை செய்யலாம் அல்லவா?"

இந்த வார்த்தகளைக் கேட்டு, தாவீது கோபத்தால் கொதித்தார், தன் கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு, "இந்த தடியால் உன்னை அடிப்பேன்" என்றார்.

தாவீதின் கையிலுள்ள தடியானது, "ஓ தாவீதே, இது தான் நீ சட்டத்தை மீறுபவர்களுக்கு அளிக்கும் தண்டனையாக இருக்குமானால், நீ ஒரு சட்டத்தை மீறியவன் தான்" என்று கத்தியது.

மிகாவேல் தூதன் புன்னகைத்து இப்படியாகச் சொன்னார், "என்னை விட தடியடி வாங்க நீர் அதிக தகுதியானவர், நீர் முதல் வழக்காளியின் வாதத்தை கேட்டு, பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலேயே தீர்ப்பு சொல்லியுள்ளீர்". இப்படியாகச் சொல்லி அவர்கள் இருவரும் எப்படி உள்ளே வந்தார்களோ அதே வண்ணமாக கூறையை தாண்டி மேலே எழும்பி சென்றுவிட்டனர். "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். ( பார்க்க குர்-ஆன் 38:24) " அவர் வேதனையோடு தன்னை தாழ்த்தி நாற்பது நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தார். தன் முகத்தின் சதை தொங்கும் அளவிற்கும், தன் கண்ணீரினால் பூமியில் புல் முளைக்கும் அளவிற்கும் அவர் அப்படியே விழுந்துகிடந்தார். இதைக்கண்டு தேவத்தூதர்கள் இறைவனிடம், "எங்கள் இறைவனே, உன்னுடைய தீர்க்கதரிசியும், மற்றும் பூமியில் உம் பிரதிநிதியாகவும் இருக்கின்ற இவர், எங்கள் கண்கள் கலங்கும்படி செய்கிறார், அவருடைய வரம்புமீறுதலைப் மன்னித்து, அவரின் பிதாவாகிய ஆதாமுடைய பின் மாற்றத்தை நீ மன்னித்த வண்ணமாக இவரது பின்மாற்றத்தையும் மன்னிப்பாயாக" என்று வருந்திக்கேட்டுக்கொண்டனர்.

"பேசாமல் இருங்கள்!" இறைவன் சொன்னார், "நான் இரக்கத்திலும் இரக்கமுள்ளவனாக இருக்கிறேன், என்னை தொழுதுக்கொள்பவர்களுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன, மற்றும் தன் தவறுக்காக மனஸ்தாபப்படுகிறவர்களின் மனஸ்தாபத்தை நான் அங்கீகரிப்பவனாக இருக்கிறேன்". (Tales of the Prophets (Qisas al-anbiya), translated by Wheeler M. Thacktson Jr. [Great Books of the Islamic World, Inc., 1997; Distributed by Kazi Publications, Chicago Il.], pp. 282-284)

3. குர்‍ஆன் 38:23-24 மற்றும் 26ம் வசனத்திற்கு இபின் அப்பாஸ் சொன்னதாக உள்ள உரை(Commentary):

(ஒரு ஆடு) என்றால் ஒரு மனைவி; (மற்றும் அவர் சொன்னார்: என்னிடம் கொடுத்துவிடு, மற்றும் அவன் தன் வார்த்தைகளால் வசப்படுத்தினான்) தாவீது உரியாவிற்கு என்ன செய்தார் என்பதை அவருக்கு புரியவைக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் இப்படி சொன்னார்கள். (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; bold and underline emphasis ours)

தாவீது கூறினார்: அவனுக்கு அனேக ஆடுகள் இருந்தும், உன்னுடைய ஆட்டை அவர் கேட்டது மிகவும் தவறானது. இப்படித்தான் பல கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வரம்புமீறி நடக்கிறார்கள். அல்லாவிற்கு பயந்து நன்மை செய்பவர்கள் மிகக்குறைவே. அவ்விருவர்கள் எங்கே இருந்து வந்தார்களோ அங்கேயே சென்று விட்டார்கள், தான் செய்த பாவத்திற்காக நாம் தான் அவரை சோதித்தோம் என்பதை தாவீது அப்போது உணர்ந்துக்கொண்டார். மற்றும் தாவீது தான் செய்த பாவத்திற்காக பாவ மன்னிப்பை தன் இறைவனிடம் கோரினார். அவர் சாஸ்டாங்கமாக விழுந்து தன் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு தொழுதுக்கொண்டார். அவர் செய்த செயலுக்காக மனம் வருந்தினார் . (Source; bold and underline emphasis ours)

((மற்றும் அவருக்கு இவ்விதமாக சொல்லப்பட்டது): ஓ தாவீதே! கவனியும்! உம்மை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம்) உம்மை நாம் இஸ்ரவேல் நாட்டு மக்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாக‌ இராஜாவாக நியமித்தோம்.(எனவே, மனிதர்களுக்கு சரியான முறையில் தீர்ப்பு வழங்கவும்) மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கவும்,( மற்றும் ஆசையை பின்பற்றவேண்டாம்) எப்படியென்றால்,
உரியாவின் மனைவியினிடத்தில் நீர் கொண்ட ஆசையைப்போல செய்யாதிரும். உரியா தாவீதின் உறவினனாக இருந்தார். (அல்லாவின் வழியிலிருந்து உம்மை விலகச்செய்வதாக இருந்தது) அல்லாவிற்கு கீழ்படியாதவாறு செய்தது. (கவனியுங்கள், யார் யாரெல்லாம் அல்லாவிற்கு) கீழ்படிவதை விட்டுவிட்டு தூரமாகச் செல்கிறார்களோ, நியாயத்தீர்ப்பு நாளை மறக்கிறார்களோ, அவர்களுக்கு பயங்கரமான ஆபத்து காத்துக்கொண்து இருக்கிறது (Source; bold and underline emphasis ours)

இதே மூலத்தொடுப்பு குர்-ஆன் 33:38ஐ குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறது:



[தமிழ் மொழியாக்க குறிப்பு: குர்-ஆன் 33:38 ல் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை, தன் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின்னர், திருமணம் செய்துக்கொண்ட நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது. வாசகர்களுக்கு சரியாக உரை புரியவேண்டும் என்பதற்காக, இவ்வசனம் இங்கு தரப்படுகிறது,ஆங்கில மூல கட்டுரையில் இந்த பத்தி இல்லை. குர்-ஆன் 33:38 நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.]

(இதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை) இதில் நபி அவர்கள் எந்த பாவமும் செய்யவில்லை, குற்றமும் செய்யவில்லை, இந்த திருமணம் அல்லாவின் அங்கீகாரத்தால் நடக்கிறது. முகமதுவிற்கு (அவர் மீது சாந்தி உண்டாவதாக) முன்பு வாழ்ந்தவர்களுக்கும் அல்லா இப்படியே கட்டளையிட்டுள்ளான். இந்த வசனத்தில் "முன்பு வாழ்ந்தவர்கள்" என்றுச் சொல்வது, தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்த நிகழ்ச்சியை குறிக்கும். மட்டுமல்ல, இது பல்கிஸ் என்ற பெண்ணோடு சாலோமோன் செய்த திருமணத்தை குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (Source; bold and underline emphasis ours)

4. குர்-ஆன் 38:22 மற்றும் 24ம் வசனம் பற்றி "இரண்டு ஜலால்கள் - Two Jalals " என்றுச் சொல்லக்கூடிய இரண்டு இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய உரையின் படி:

அவர்கள் தாவீது இருந்த அறைக்குள் நுழைந்தவுடன், தாவீது அவர்களைக்கண்டு திடுக்குற்றார். அவர்கள் சொன்னார்கள், "பயப்படாதீர், நாங்கள் இரண்டு வழக்காளிகள் (சிலர் "இரண்டு குழுக்கள்" என்று இதற்கு பொருள் சொல்கிறார்கள், ஏனென்றால், இந்த இடத்தில் பன்மையில் வினைச்சொல் வருவதனால், [of the verb dakhalū,], சிலர் இது இந்த இருவரை மட்டுமே குறிக்கும் என்றுச் சொல்கிறார்கள், அல்-காசிம் என்பவர் "ஒருவர் அல்லது அதற்கு மேலான நபர்களைக் குறிக்கும்" என்கிறார். இவர்கள் இருவரும் வழக்காளிகளாக உருவம் மாற்றி வந்த இரண்டு தூதர்களாவார்கள். குறிப்பிடப்பட்ட வழக்கு இவ்விரண்டு பேர்களின் இடையில் தான் நடந்தது, அதுவும் உண்மையாக அல்ல, தாவீது(அவர் மீது சாந்தி உண்டாவதாக) செய்த செயலைப் பற்றி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வழக்கு உருவாக்கப்பட்டது. அவர் தனக்கு 99 மனைவிகள் இருந்தும், ஒரே ஒரு மனைவியுள்ள ஒருவரின் மனைவியின் மீது ஆசைக்கொண்டார். அவர்(தாவீது) அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். எங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக செயல்படுகிறார், எனவே, வரம்பைமீறாமல் எங்களுக்கு நீதி வழங்கவும், அநீதி இழைக்காமல், நேரான பாதையை எங்களுக்கு காட்டாவும். (Source; bold and underline emphasis ours)

அவர் கூறினார், "தன்னுடைய ஆடுகளோது சேர்த்துக்கொள்ள உன்னுடைய ஆட்டையும் அவர் கேட்டு அவர் தவறு செய்துவிட்டார். உண்மையில் கூட்டாளிகளில் பலர் ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படுகிறார்கள், நம்பிக்கைக் கொண்டு நல்ல செயல்கள் செய்யும் சிலரைத் தவிர, ஆனால் இப்படிப்பட்டவர்கள் சிலரே(mā emphasises the 'fewness')" . இந்த இரண்டு தூதர்களும் வானத்திற்கு எடுத்துக்கொண்டுச் செல்லும்போது, ஒருவர் மற்றவரிடம், "இவர் தனக்கு தானே நியாயத்தீர்ப்பை(Judgement) வருவித்துக்கொண்டார்" என்றுச் சொன்னார். தாவீது தன் தவறுப் பற்றி அப்போது உணர்ந்தார். இறைவன் ஒருவனே உயர்த்தப்படுவானாக, இறைவன் சொன்னார்: "அந்த பெண்ணைப்பற்றிய பரிட்சையை நாம் தான் தாவீதுக்கு வைத்தோம் என்று தாவீது நினைத்தார். அதனால், அவர் தன் இறைவனிடம் தாழவிழுந்து, மன்னிப்பைத் தேடினார் மற்றும் அவர் தொழுதுக்கொண்டு தன் தவறுக்காக மனம் வருந்தி வேண்டிக்கொண்டார். (Source; bold and underline emphasis ours)

5. தாவீது மற்றும் அந்த இரண்டு வழக்காளிகளின் நிகழ்ச்சியைப் பற்றி முஹம்மத் அசத் உடைய உரை:

"எங்களிடம் உள்ள மிகவும் பழமையான மூல ஆதாரங்களின் படி, நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி, குர்‍ஆன் வசனங்கள் 21 லிருந்து 26 வரை உள்ள தர்மசங்கடமான நிகழ்ச்சியாகும். இந்த வசனங்கள் எழுப்பும் கேள்வி என்னவென்றால், இறைவன் தெரிந்தெடுக்கும் நபர்கள் முக்கியமாக நபிகள்(தீர்க்கதரிசிகள்), இறைவன் தாவீதுக்கு அளித்தது போல, இவர்களுக்கு ஞானத்தையும் நியாயம் தீர்க்க தேவையான அறிவையும் அளித்துள்ளார்.இப்படிப்பட்ட நபிகள் பாவம் செய்யமுடியுமா அல்லது ஒரு முறையாவது இவர்கள் பாவம் செய்துள்ளார்களா என்ற கேள்வியாகும். இதை வேறு வகையில் சொல்லவேண்டுமானால், சாதாரண மனிதர்கள் இயற்கையாக பாவ சுபாவம் என்ற குறைபாடு உள்ளவர்களாக இருப்பது போல, நபிகள்(தீர்க்கதரிசிகள்) கூட இயற்கையான பாவ சுபாவ குறைபாடுகள் உள்ளவர்கள் தானா? அல்லது இவர்கள் "ஒரு முறையும் பாவம் செய்யாமல் இருக்கும் – (Masum) " குணத்தை இறைவனிடமிருந்து பெற்றவர்களாக இருப்பார்களா?

"இஸ்லாமின் ஆரம்ப காலத்திலிருந்து அதிகார பூர்வமாக சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த நிகழ்ச்சி மேலே சொல்லப்பட்ட கோட்பாட்டிற்கு(நபிகள் பாவம் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு) முரண்படுகிறது. அதிகார பூர்வமாக அறிவித்த நபர்களில் டபரி, பஹாவி மற்றும் நபித்தோழ‌ர்களாகிய அப்துல்லா இபின் அப்பாஸ், அனாஸ் இபின் மாலிக் போன்றாவர்கள் ஆவார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், நபித்தோஷர்களின் அடுத்த நேரடி தொடர்புடையவர்கள் கூட இதே நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். நபிகள் என்பவர்கள் இயற்கையாகவே பாவம் செய்யமாட்டார்கள், அவர்கள் பரிசுத்தமானவர்கள் மற்றும் அவர்களின் உள்ளத்தில் நடக்கும் போராட்டத்தினால், அவர்கள் பாவமின்மை என்ற நிலையை அடைந்தார்கள் என்று காலப்போக்கில் இஸ்லாமிய அறிஞர்கள் சொந்தமாக உருவாக்கிய கோட்பாட்டுற்கு முரண்பட்டதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நாம் பார்த்தால், நபிகளுக்கு இதனால் ஆன்மீக வலிமை கிடைக்குமே ஒழிய இது அவர்கள் பிறப்பிலிருந்து வந்த தகுதி அல்ல.

டபரி மற்றும் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் உரை எழுதியவர்களின் அறிவிப்பின் படி,
தாவீது தன் வீட்டு கூறையிலிருந்து தற்செயலாக பார்க்க நேரிட்ட ஒரு அழகான பெண்ணின் மிது காதல் கொண்டார். அவளின் விவரங்களைச் சேகரித்த போது, அவள் தன்னிடம் இராணுவத்தில் பணிபுரியும் ஒரு இராணுவ வீரனாகிய உரியாவின் மனைவி என்று தெரியவந்தது. அப்பெண்ணின் மீது கொண்ட ஆசை தாவீதை மேற்கொண்டதால், தாவீது தன் தளபதியிடம், இந்த உரியாவை போர் நடக்குமிடத்தில் ஒரு குறிப்பிட்ட முன்வரிசையில் நின்று போரிட நிறுத்தி, அதன் மூலம் உரியா நிச்சயமாக மரணத்தை அடையவேண்டும் என்று கட்டளை பிரப்பித்தார். தாவீதின் கட்டளை அப்படியே நிறைவேற்றப்பட்டபோது, உரியா மரித்தார், தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் (இந்த பெண் தான் சாலோமோனின் தாயானாள்). இந்த நிகழ்ச்சி பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு பெரும்பான்மையாக பொருந்துகிறது(2 சாமுவேல் 11ம் அதிகாரம்). இந்த பெண்ணின் பெயர் பெத்சேபாள் என்று பைபிள் கூறுகிறது. உரியாவின் மரணத்திற்கு முன்பே, தாவீது அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்கிறது(வசனம் 4,5). இந்த குற்றச்சாட்டை முஸ்லீம்கள் அங்கீகரிப்பதில்லை, அதாவது கணவன் உயிரோடு இருக்கும் போது, அவன் மனைவியோடு விபச்சாரம் செய்வ‌து மிகப்பெரிய குற்றமாகும்: நான்காவது காலிபாவாகிய அலி இபின் அபிதலிப் கூற்றுப்படி(quoted by Zamakhshari on the authority of Sa'id ibn al- Mussayyab): "யாராவது தாவீதின் நிகழ்ச்சியை கதை சொல்பவர்கள் போல சொன்னார்களானால், நான் அப்படிப்பட்டவனுக்கு 160 சவுக்கு அடிகளை அடிப்பேன், ஏனென்றால், இது தான் நபிகள் அவதூறு செய்தார்கள் என்றுச் சொல்பவர்களுக்கு ஏற்ற தண்டனையாகும்(இது ஒரு சாதாரண மனிதன் மீது ஆதாரம் இல்லாமல் விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்துபவனுக்கு குர்‍ஆன் 24:4ன் படி 80 சவுக்கு அடிகள் தரப்படும் தண்டனையை குறிக்கிறது.) (Asad, Message of the Qur'an [Dar Al-Andalus Limited 3 Library Ramp, Gibraltar rpt. 1993], pp. 696-697, fn. 22)

இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து முக்கியமாக நாம் அறிவது என்னவென்றால், பெத்செபாளோடு உறவு கொள்வதற்கு முன்பாக தாவீது உரியாவை கொன்றார் என்பதாகும். தாவீது வேண்டுமென்றே திட்டம் தீட்டி உரியாவின் மனைவியை அடையவேண்டுமென்ற ஆசையினால், உரியாவை கொன்றார். ஆனால், பரிசுத்த பைபிளின் விவரங்களின் படி, தாவீது உரியாவை கொள்வதற்கு முன்பாகவே உரியாவின் மனைவியை கர்ப்பமாக்கினார். தாவீது தன் முந்தைய திட்டங்கள் ஒன்றும் பயனளிக்க வில்லை என்பதால் தான் கடைசியாக உரியாவை கொன்றார் என்று பைபிள் கூறுகிறது. உரியாவின் மனைவி தன் மூலம் தான் கர்ப்பமானாள் என்பதை மறைப்பதற்காக, முதலில் அரசனாகிய தாவீது உரியாவிற்கு அதிகமாக திராட்சை ரசம் குடிக்கக்கொடுத்து, நீ வீட்டிற்குச் சென்று உன் மனைவியோடு சந்தேஷமாக இரு என்று சொல்லி திட்டம் தீட்டினார், ஆனால், அது பயனளிக்கவில்லை என்பதால், உரியாவை கொன்றார் என்று பைபிள் சொல்கிறது (இந்த நிகழ்ச்சி பற்றிய முழுவிவரங்கள் 2 சாமுவேல் 11 மற்றும் 12ம் அதிகாரங்களில் காணலாம்)

குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களைப் போல அல்லாமல், பைபிள் தேவனின் வெளிப்பாடாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் தெளிவாகவும் மற்றும் நடந்தது நடந்தது போலவும் சொல்கிறது. குர்‍ஆன் மற்றும் பைபிள் சொல்லும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை விடுத்து நாம் கவனித்தோமானால், தாவீதின் நடத்தையில் இருந்த பாவத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
தாவீது உரியாவை அவன் மனைவியோடு உறவு கொண்டபிறகு கொன்றாரோ அல்லது அதற்கு முன்பு கொன்றாரோ, ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, இறைவனின் பார்வையில் தாவீது பாவம் செய்த குற்றத்தை செய்தவராகிறார், அதாவது திருமணமான ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு அவர் இறைவனின் பார்வையில் பாவம் செய்தவராகிறார் (மத்தேயு 5:27-28, 31-32)



ஆக, தாவீது குற்றம் இழைத்து இருந்தும், இஸ்லாமியர்கள் அவர் குற்றம் செய்யாதவராக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். மற்றவனின் மனைவியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்த ஒரு திட்டமிட்ட கொலை (Premeditated Murder) என்பது மிகப் பெரிய பாவமாகும்.

அஸத் அவர்களின் கூற்றுப்படி, இந்த கதையை சொல்பவனுக்கு சவுக்கடி கொடுக்கப்படவேண்டும் என்று அலி உறுதி எடுத்தார் அல்லவா என்று இஸ்லாமியர்கள் இப்போது வாதம் புரிவார்கள். அதாவது ஆரம்பகால முஸ்லீம்கள் இந்த கதையை மறுத்தார்கள் அல்லவா என்று கூறுவார்கள். ஆனால், ஒன்றை கவனிக்கவேண்டும், அஸத் அவர்களின் கூற்றுப்படி, அலி இக்கதையை முழுவதுமாக தள்ளிவிடவில்லை, அதற்கு மாறாக "கதை கூறுகிறவர்கள் – Story-tellers" சொல்பவர்கள் போல இந்நிகழ்ச்சியை சொன்னால் தான் அவர் சவுக்கடி கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும்.

சிலர் இந்த ஹதீஸ்கள் விவரங்கள் அனைத்தும் சரியானது அல்ல என்றுச் சொல்லி தள்ளிவிடுவார்கள். இப்படி யாராவது சொல்வார்களானால், அவர்களிடம் நாங்கள் இரண்டு கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:

1. தன்னிடம் வந்த இரண்டு வழக்காளிகளைச் சந்தித்த பின்னர், தாவீது பாவ மன்னிப்பு வேண்டி இறைவனிடம் வேண்ட காரணமென்ன? அந்த இரு வழக்காளிகளின் கதை எப்படி தாவீது தான் ஒரு பாவி என்பதை இறைவன் முன்பு அங்கீகரிக்கும் படி செய்தது?
(What was the reason for David repenting after his encounter with two disputants? How does their story affect David's moral standing before God?)



2. சாலொமோன் தாவீதின் குமாரன் என்று குர்‍ஆன் அங்கீகரிக்கின்றது, அப்படியானால், சலொமோனின் தாய் யார்?
(Since the Quran agrees that Solomon is David's son, who then is Solomon's mother?)

பரிசுத்த பைபிள் இவ்விதமாக கூறுகிறது:

"பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்." (2 சாமுவேல் 12: 24-25)

சாலொமோன் தாவீதின் குமாரன் என்பதை குர்‍ஆன் அங்கீகரிப்பதால், பைபிள் சொல்வது போல, சாலொமோனின் தாய் பெத்செபாள் தான் என்பதை குர்‍ஆன் அங்கீகரித்தே ஆகவேண்டும், வேறு எந்த ஒரு வாய்ப்பும் குர்‍ஆனுக்கு இல்லை. ஒருவேளை இதனை தவிற்க‌ முஸ்லீம்கள் சலொமோனுக்கு தாய் என்பவள் இல்லவே இல்லை என்று சொல்லக்கூடும்! பெத்செபாள் சலொமோனின் தாய் இல்லை என்று் முஸ்லீம்கள் சொல்வார்கள் அல்லது பெத்செபாளும் தாவீதும் சட்டபூர்வமாகவே நியாயமான முறையின் படி தான் திருமணம் செய்துக்கொண்டார்கள், பிறகு பிறந்தவர் தான் சலொமோன் என்று சொல்லக்கூடும். ஆனால், ஒரு வேளை இப்படி முஸ்லீம்கள் சொன்னாலும், இன்னும் முதலாவது கேள்வி பதில் தரப்படாமல் அப்படியே உள்ளது.



இதுவரை நாம் கண்ட விவரங்கள் குர்‍ஆன் முழுமையானது அல்ல என்றும் மற்றும் சரியான விவரங்களை குர்‍ஆன் கொண்டு இருக்கவில்லை என்பதையும் நமக்கு நிருபிக்கின்றது (These factors prove that the Quran is an incomplete and imperfect record.)

இதுவரை மேலே நாம் கண்ட விவரங்கள் ஒரு உண்மைய மட்டும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தாவீது பெத்செபாளோடு உடலுறவு கொண்டார் மற்றும் உரியாவை கொல்ல கட்டளை பிறப்பித்தார் என்பதை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் நம்பினார்கள் என்பது தெளிவு.

முஸ்லீம்களின் வாதங்களுக்கான நம்முடைய பரிசீலனை இதோடு முடிவடைகிறது. மகா வல்லமையுள்ள தேவனும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில், நித்திய மகிமையோடு உயிர்த்தெழுந்த நம் ஆண்டவரின் ஊழியத்தில் அடியேன். அவருக்கே என்றேன்றும் மகிமை உண்டாவதாக, ஆமென். வாரும் இயேசு கிறிஸ்துவே, வாரும். எங்கள் உயிர்ந்தெழுந்த இயேசுவே உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்.



பின்குறிப்பு - ADDENDUM: அல் டபரி சரித்திர நூலிலிருந்து மீதமுள்ள விவரங்களை இந்த தொடுப்பை சொடுக்கி(Sins of Prophets - David - ADDENDUM) ஆங்கில கட்டுரையின் கடைசியில் உள்ள பின்குறிப்பை படித்துக்கொள்ளவும். நீண்ட கட்டுரையாக இருப்பதால் பின்குறிப்பை தவிர்க்கிறேன்.

Source: Sins of Prophet - David

ஆசிரியர் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்:

1. இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் - 1

2. மாற்கு 16ன் சவால் ( The Challenge of Mark 16)


Isa Koran Home PageBack - Sam Shamoun Articles
1