முஸ்லீம்களின் வருடந்தோறும் இரண்டு முக்கியமான பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். முதலாவது, ரமலான் மாத முடிவில் அவர்கள் நோன்பை முடித்து "ஈகைத் திருநாள்" ஐக் (Festival of Breaking the Fast) கொண்டாடுகின்றனர். இரண்டாவது, ரமலான் முடிந்து இரு மாதங்கள் கழித்து, சுமார் 60 நாட்கள் கழித்து "பக்ரீத் பண்டிகை" (Festival of the Sacrifice) ஐக் கொண்டாடுகின்றனர். "ஈகைத் திருநாள்" ஐ விட "பக்ரீத்" தான் பெரிய பண்டிகை என்றாலும், ஒரு மாத நோன்பின் (உபவாசத்தின்) முடிவில் கொண்டாடுவதால் முஸ்லீம்கள் "ஈகைத் திருநாள்" ஐ அதிகம் கொண்டாடுகின்றனர். முஸ்லீம்களின் புனிதப் பயணமான ஹஜ் செல்லுதலுடன் தொடர்புடையதாக இருப்பதால், "பக்ரீத்" பண்டிகை முஸ்லீம்களுக்கான முக்கியமான மற்றும் பெரிய பண்டிகை ஆகும். "பக்ரீத்" என்ற வார்த்தையின் பொருள் "மிகப் பெரிய பண்டிகை" என்பதாகும். முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகையானது இப்றாஹீமின் வாழ்க்கையுடன் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இப்றாஹீம் தன் மகனை பலியிடச் சென்றபோது, அல்லாஹ் அவரை தடுத்து வேறொரு "மகத்தான பலியை" கொடுத்து அச்சோதனையில் இருந்து இப்றாஹீமின் மகனைக் மீட்டதாக குர்-ஆன் 37:102-108ல் வாசிக்கிறோம். நான் முன்பு சொன்னது போல, எந்த மகன் என்று குர்-ஆன் குறிப்பிடவில்லை. ஆயினும், இப்றாஹீம் தன் மகனாகிய இஸ்மவேலைக் கூட்டிச் சென்றார் என முஸ்லீம்கள் நம்புகின்றனர்.
அல்லாஹ் "மகத்தான பலியைக்" கொண்டு இப்றாஹீமின் மகனை மீட்டதைக் கொண்டாடும் முஸ்லீம்கள், ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்றும் நம்புகின்றனர். குர்-ஆனில் இது பற்றி இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. மேலும், இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, காபாவில் உள்ள "கறுப்புக் கல்" முதன் முதலாக பூமியில் விழுந்த போது பளிங்கு போல வெள்ளைக் கல் ஆக இருந்ததாகவும், மனிதர்களின் பாவத்தினால் அந்தக் கல் கறுப்பாக மாறினதாகவும் சொல்லப்படுகிறது. முஸ்லீம்கள் ஹஜ் பயணத்தின் போது இந்தக் கல்லை முஹம்மதுவின் பெயரைச் சொல்லி முத்தமிடுவார்கள். ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்க முடியாது என்றால், ஏன் வெள்ளைக் கல் கறுப்பாக மாறியது, ஏன் "தியாக பலி" என்ற இறையியல் கேள்வி-பதில் விளக்கம் இஸ்லாமில் இல்லை. இந்த முரண்பாடான கொள்கையானது மனிதர்களின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்ததை நிராகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முஸ்லீம்களைப் பொறுத்த வரையில், "ஈகைத் திருநாள்" இல் சகாத் காணிக்கை கொடுப்பதிலும், "பக்ரீத் திருநாள்" இல் ஒரு பெரிய விலங்கை பலியாகக் கொடுப்பதிலும் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள்.
ஆபிரகாமை தேவன் சோதித்தார் என்றாலும், அவன் தன் மகனை பலியிட அனுமதிக்கவில்லை. நாம் முதல் நாளில் பார்த்தபடி, ஈசாக்கை பலியிடுவதில் இருந்து காப்பாற்றின தேவன், கொல்கொதா என்ற வேறொரு மலையில் தேவன் தம் ஒரே பேறான மகனாகிய இயேசுவை சகல மனிதர்களின் பாவங்களையும் தீர்க்க பலியாக ஒப்புக் கொடுத்தார் என வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று உண்மை. அதுவே மனிதரின் இரட்சிப்புக்கும் ஆதாரமாக இருக்கிறது. "எல்லாரையும் மீட்கும் பொருளாக" இயேசு தம்மையே கொடுத்தார் என வேதம் கூறுகிறது. "வேறொரு இயேசு," "வேறொரு ஆவி," "வேறொரு சுவிசேஷம்" என்பதைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரிந்தியர் 11ல் கூறுகிறார். இஸ்லாம் கூறுகிற ஈஸாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? "சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்" பற்றி அறிவிக்க வேண்டியது நம் கடமை ஆகும்.
முன்னமே சொன்னபடி, முஸ்லீம் நாடுகளில், சமுதாயங்களில் கிறிஸ்தவத்திற்கெதிரான உபத்திரவங்கள் அதிகம். அவைகளின் மத்தியிலும் இயேசுவை அறிவித்ததினால், இயேசுவை ஏற்றுக் கொண்டதினால் அனேக பாடுகளைப் பட்ட ஊழியர்கள், முஸ்லீமாக இருந்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் அனேகர் உண்டு. நாம் இயேசுவுக்காக என்ன தியாகம் செய்யப் போகிறோம்.
"இயேசுகிறிஸ்து தேவனாக இருந்தும் அவர் எனக்காக மரித்தது உண்மை எனில், நான் அவருக்காக செய்யும் எதுவும் பெரிய தியாகமாகி விட முடியாது" - சி. டி. ஸ்டட்
"அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைப் பற்றி" (வெளிப்படுத்தல் 5, 7) பரலோகத்தில் பாடப் போகிற நாம், மனிதர் எல்லாரும் அந்த பாக்கியத்தைப் பெற ஜெபிப்போம், செயல்படுவோம். Because he lives...
- அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 23rd May 2020