ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 31 அக்டோபர், 2007

"எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது

"எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது


குர்-ஆன் 9:30 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?


முன்னுரை: குர்-ஆன், பல பைபிள் நிகழ்ச்சிகளை மறுபதிவு செய்துள்ளது. அப்படி மறுபதிவு செய்யும் போது சில நிகழ்ச்சிகளை பைபிளில் விவரித்துள்ளது போலவே சொல்லப்பட்டுள்ளது. மற்றும் சில நிகழ்ச்சிகளை குர்-ஆன் மாற்றி சொல்லியுள்ளது. இப்படி குர்-ஆன் மாற்றிச் சொல்லும் போது பல முரண்பாடுகளை செய்துள்ளது.

குர்-ஆன் இன்னும் ஒரு படி மேலே சென்று கடந்த காலத்தில் நடந்திராத நிகழ்வுகள் நடந்ததாக சொல்கிறது. அப்படி சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்லது நம்பிக்கை தான் நாம் மேலே படித்த குர்-ஆன் 9:30 வசனம்.

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (குர்-ஆன் 9:30)


1. கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள் ;

கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, " இயேசு தேவனுடைய குமாரன் " என்று சொல்கிறார்கள்.

இதிலும், கிறிஸ்தவர்கள் சொல்லும் "இயேசு தேவனுடைய குமாரன்" என்பது ஒரு ஆன்மீக முறையில் குமாரன் என்று சொல்கிறோம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது குர்-ஆன் சொல்வது, சரீர பிரகாரமான உறவு முறையில் இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதாக குர்-ஆன் சொல்கிறது. இந்த தற்போதைய கட்டுரையின் கருப்பொருள் இது அல்ல. பைபிள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்வதற்கும், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம்
.


2. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்;

பைபிளின் பழைய ஏற்பாட்டு வேதபாரகன்(வேத அறிஞன்) ஏஸ்றா என்பவரை யூதர்கள் "அல்லாவின் குமாரன் " என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இந்த வசனம் தான் இந்த கட்டுரையின் கருப்பொருள்
.

குர்-ஆன் சொல்வது போல,


இப்படி யூதர்கள் சொன்னார்களா?

பழைய ஏற்பாட்டு யூதர்கள் சொல்லியிருப்பார்களா?

புதிய ஏற்பாட்டு யூதர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா?

இந்த 21ம் நுற்றாண்டு யூதர்கள் சொல்கிறார்களா?

"ஓர் இறைக்கொள்கையை" மிகவும் தீவிரமாக நம்பும் யூதர்கள் இப்படி சொல்ல வாய்ப்பு உள்ளதா?

இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ "யூதர்கள் இப்படி நம்புகிறார்கள்" என்று ஏதாவது புதிய ஏற்பாட்டில் சொன்னார்களா? அல்லது கண்டித்தார்களா?

இயேசுவை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் என்று ஏன் துடித்தார்கள்?


போன்ற கேள்விகளுக்கு பதிலை இக்கட்டுரையில் அலசப்போகிறோம். இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தெரிந்துக்கொள்ளும் பொது, குர்-ஆன் 9:30 ல் உள்ள பிழையை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியும்.

2.1. யூதர்கள் "ஓர் இறைக்கொள்கையை" தீவிரமாக நம்புகிறவர்கள்(இஸ்லாமியர்களைப் போல):

" யூதர்கள் எஸ்றாவை தேவனுடைய(அல்லாவுடைய) குமாரன்" என்று சொல்கிறார்கள் என்ற குர்-ஆனின் வாதம் ஆதாரமற்றது. ஏனென்றால், யூதர்கள் "ஓர் இறைக் கொள்கையை" நம்புகின்றனர். யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது இராஜாதி இராஜாவாக வர இருக்கும் " மேசியாவை " மட்டும் தான். இந்த மேசியா ஒரு ஏழையாக, சாந்தமுள்ளவராக வருவார் என்று அவர்கள் நம்புவதில்லை. எனவே தான் இயேசு மேசியா என்று அவர்கள் நம்பவில்லை.

ஒரு மனிதன் அல்லது நபி வந்து " நான் தான் அல்லா" என்றோ "இறைவன் என்றோ" சொன்னால், எப்படி முஸ்லீம்கள் நம்பமாட்டார்களோ அதே போல, யூதர்களும் நம்பமாட்டார்கள். எனவே, யூதர்கள் "எஸ்றா தேவனுடயை குமாரன் " என்று யூதர்கள் சொன்னார்கள் என்று குர்-ஆன் சொல்வது, ஒரு மிகப்பெரிய பொய்யாகும்.

2.2. யூதர்கள் கிறிஸ்தவர்களின் திரித்துவ கொள்கையை நம்பாதவர்கள் : 

கிறிஸ்தவர்களின் நம்பிக்கை திரித்துவ (Trinity) கொள்கையாகும், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்பது. ஆனால், யூதர்கள் இந்த திருத்துவ கொள்கையை நம்புவதில்லை, இயேசுவிற்கு தேவனுக்கு சமமான இடத்தை கொடுக்க யூதர்களின் "ஓர் இறைக்கொள்கை " தடையாக உள்ளது. [கிறிஸ்தவர்களும் ஒரு இறைவனைத்தான் நம்புகின்றனர், இது இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு அப்பாற்பட்டதால், திரித்துவ நம்பிக்கையைப் பற்றி நாம் தனி கட்டுரையாக காணலாம்.]

யூதர்களின் இந்த நம்பிக்கைக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால், அவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டார்கள் . இப்படித் தான் இயேசுவையும் அவர்கள் கொலை செய்தார்கள். எனவே, தேவனுக்கு குமாரன் எஸ்றா என்று யூதர்கள் சொல்ல வாய்ப்பு இல்லை .


2.3. பழைய ஏற்பாட்டு யூதர்கள்,"எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்பினார்களா?

ஏஸ்றா என்பவர் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால், பழைய ஏற்பாட்டில் யாராவது இப்படி சொல்லி இருக்கலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்லலாம். எனவே, எஸ்றாவை பற்றி பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது, யூதர்கள் அவர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று சிந்திப்பது நல்லது.

1. எஸ்றா கி.மு. 4-5ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

2. எருசலேம் பாபிலோன் அரசனால் பிடிக்கப்பட்டு, பாபிலோனில் இஸ்ரவேலர்கள் அடிமைகளாக வாழ்ந்தார்கள். பாபிலோனை பெர்சிய அரசன் கைப்பற்றினான்.

3. பெர்சிய அரசன் "அர்தசஷ்டா" என்பவர், எருசலேமுக்கு செல்பவர்கள் செல்லலாம் என்று சொல்லி, பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பும்போது, எஸ்றா என்ற வேதபாரகன் தலைமையில் ஒரு குழு எருசலேமுக்கு சென்றது.

4. மோசே மூலமாக கொடுக்கப்பட்ட நியாயபிராமாணத்தில் தேறியவராகவும், தேவனுக்கு பயந்தவராகவும் இருந்தார்.

5. எருசலேமிலே இருந்த இஸ்ரவேலர்கள் அன்னிய ஜனங்களோடு சம்மந்தம் கலந்து அவர்களின் அருவருப்புக்களை பின்பற்றியதால், வேதனைப்பட்டு, எல்லா மக்களுக்காக எஸ்றா மன்றாடி ஜெபித்தார், மக்கள் தங்கள் பாவங்களை விட்டு வாழும்படி உட்சாகப்படுத்தினார்.

6. எஸ்றா காலை முதல் மதியம் வரை நியாயபிரமாணத்தை வாசித்து இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளைகளை விளக்கிக்காண்பித்தார். மக்கள் தேவனுடைய வழியில் நடக்க உட்சாகம் கொண்டார்கள். (எஸ்றா 7-10 வரையுள்ள அதிகாரங்கள், நெகேமியா அதிகாரம் 8)


பழைய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் "தான் ஒரு தேவகுமாரன்" என்று எஸ்றா சொன்னதும் இல்லை. அதே நேரத்திலும் யூதர்கள் "எஸ்றாவை தேவ குமாரன்" என்று சொன்னதுமில்லை. அப்படி அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை.

எஸ்றா, நேகேமியாவின் காலத்திற்கு பின்பு ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. இவர்கள் ஏற்றிச் சென்ற விளக்கு(எழுப்புதல்) இயேசு கிறிஸ்து வரும் வரை எரிந்துக்கொண்டு இருந்தது. இயேசு காலகட்டத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள், வேதபாரகர்கள் தங்கள் நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

எஸ்றாவிற்கு முன்பு வாழ்ந்த தாவிது, சாலொமோன், மோசே, ஆபிரகாம் போன்ற பழைய ஏற்பாட்டு நபர்கள் யாருக்கும் எஸ்றா என்பவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. எனவே, இயேசுவின் காலத்திற்கு முன்பு 500 ஆண்டுகளில் வாழ்ந்த யூதர்களுக்கு மட்டும் எஸ்றாவைப் பற்றி தெரியும், மற்றும் இயேசு கிறிஸ்து முதல் முகமது வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு தான் எஸ்றாவைப் பற்றி தெரியும்.

எஸ்றாவின் விவரங்களைப் பற்றி நாம் படிக்கும் போது, குர்-ஆன் சொல்வது போல யூதர்கள் சொல்லியிருக்க முடியாது. அப்படி சொன்னவர்களை யூதர்கள் உயிரோடு வைத்திருக்கமாட்டார்கள்.


2.4. புதிய ஏற்பாட்டு யூதர்கள் "எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்பினார்களா?

புதிய ஏற்பாட்டு காலத்தில் அதாவது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களாவது இப்படி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதா என்று சிந்தித்தால், இதற்கும் வாய்ப்பு இல்லை. புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் போன்ற பல விவரங்கள் மிகவும் தெளிவாக புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களும், மற்ற புத்தகங்களும் தெரிவிக்கின்றன. இன்னும் பல யூத பாரம்பரிய விவரங்கள் அடங்கிய பல பிரதிகள் இருக்கின்றன. இவைகளில் ஒன்றிலும் இப்படி "எஸ்றா தேவகுமாரன்" என்ற வாசகம் வராது.  

முதல் நூற்றாண்டு யூதர்கள் இப்படி நம்பியிருந்தால், அவர்கள் கிறிஸ்தவர்களை எதிர்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. அற்புதம் செய்து, மரித்தவர்களை உயிரோடு எழுப்பிய இயேசுவை கிறிஸ்தவர்கள் "தேவ குமாரன்" என்று அழைத்தார்கள், அதை யூதர்கள் மறுத்தார்கள். ஒரு வேளை குர்-ஆன் சொல்வது போல, முதல் நூற்றாண்டு யூதர்கள் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்லியிருந்தல், கிறிஸ்தவர்களே கேள்வி கேட்டு இருப்பார்கள். யூதர்கள் இயேசுவை எதிர்ப்பதற்கான ஆதாரமே அடிபட்டு இருக்கும். எனவே, முதல் நூற்றாண்டு யூதர்களும் சொல்லியிருக்க முடியாது.


2.5. 21ம் நூற்றாண்டு யூதர்கள் "எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்புகிறார்களா?

இன்று வாழும் யூதர்களாவது இப்படி சொல்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் இல்லை. யூதர்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட "மேசியா" இயேசு தான் என்று நம்பாமல், இன்னும் மேசியாவிற்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர, எஸ்றா தேவகுமாரன் என்று சொல்லிக்கொண்டு இல்லை. குர்-ஆன் சொல்லும் விவரம் ஒரு ஆதாரமற்ற செய்தியே தவிர வேறு ஒன்றுமில்லை.


2.6. இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று ஏன் யூதர்கள் துடித்தார்கள்:
(காரணம், இயேசு செய்த அற்புதங்களா? அவரது கட்டளை கருத்துக்களா அல்லது வேறு ஒரு காரணமா?)

யூதர்கள் குர்-ஆன் சொல்வது போல சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதற்கான மிகவும் தெளிவான காரணம் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

இயேசு பல அற்புதங்களை செய்தார், குருடர்களை பார்க்கச் செய்தார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். இதை குர்-ஆனும் ஆமோதிக்கிறது.

யூதர்கள் இயேசுவின் அற்புதங்களைக் கண்டு அவரை விசுவாசிக்கவில்லை. காரணம் யூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. இயேசு அற்புதங்கள் செய்கிறார் என்று அவரை கொலை செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.  ஒரு முறை இயேசு ஓய்வு நாளில் அற்புதம் செய்தபொது, இன்று செய்யவேண்டாம், வேறு நாட்களில் உங்கள் அற்புதங்களை செய்துக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார்கள். இயேசு எது செய்தாலும், சொன்னாலும் சகித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், தன்னை தேவகுமாரன் என்று சொன்னதை மட்டும் ஏற்கமாட்டார்கள்.

எப்போது இயேசு தன்னை ஒரு "தேவகுமாரன்" என்றுச் சொன்னாரோ, தன்னை " தேவனுக்கு சமமானவர்" என்றுச் சொன்னாரோ, அதை யூதர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்று முஸ்லீம்களுக்கு இருக்கும் இதே வைராக்கியம் தான் அன்று யூதர்களுக்கு இருந்தது. எனவே, "எஸ்றா தேவகுமாரன் என்று யூதர்கள் சொல்கிறார்கள் " என்பது ஒரு மிகப்பெரிய தவறு.


மத்தேயு: 26: 63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி, நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64. அதற்கு இயேசு, நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65. அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. 66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள், மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள் .


இயேசு தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்தினதால்(தேவனுடைய வலது பக்கத்தில் உட்காருவேன் என்று இயேசு சொன்னதால்) ஆசாரியர்கள் "தேவதுஷணம்" என்றுச் சொல்லி இயேசுவை கொல்ல முடிவுசெய்தார்கள்.

எனவே யூதர்கள் அன்றும் சரி, இன்றும் சரி "எஸ்றா தேவனுடைய குமாரன்" என்று சொல்லவில்லை, சொல்லமாட்டார்கள்.


2.7 இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்களின் இந்த நம்பிக்கையை எதிர்த்தார்களா?

இயேசு 33 1/2 ஆண்டுகள் வாழ்ந்ததாக அறிகிறோம். அவரது வாழ்நாட்கள் அனைத்தும் "நாசரேத்" என்ற ஊரிலும், எருசலேமிலும் அதைச் சுற்றிலும் இருந்த பகுதிகளிலும் தான் இருந்தது , யூதர்களின் மத்தியில் அவர் வாழ்ந்தார், அவரது வளர்ப்பு தந்தையும், மேரியும் யூதர்கள் தானே. இயேசு யூதர்களின் சில அவசியமில்லாத பழக்கங்களைப் பற்றி கடிந்துக்கொண்டார், இதனாலும் யூத ஆசாரியர்கள் அவர் மீது கோபம் கொண்டனர். ஆனால், ஒரு முறை கூட, " யூதர்கள் இப்படி தவறாக நம்புகிறார்கள்" என்று அவர் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், அதை நாம் 4 சுவிசேஷங்களில் கண்டு இருப்போம் .

இயேசுவின் சீடர்களுக்கு யூத நம்பிக்கையைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், ஒருவரும் " ஏஸ்றா தேவகுமாரன் " என்று யூதர்கள் சொல்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டவில்லை. அதைப் பற்றி குறிப்பிடவில்லை. இயேசுவின் சீடர்களுக்கும் யூத நம்பிக்கைகள் எல்லாம் தெரியும், முக்கியமாக அப்போஸ்தலர் பவுல் ஒரு யுதமார்க்கத்தை முழுவதும் அறிந்த பண்டிதர். அவரும் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

எனவே, குர்‍ஆன் சொல்லும் வசனம் வெறும் யூதர்கள் மீது முகமது சுமத்தும் குற்றச்சாட்டே தவிர உண்மையில்லை.


3. யூதர்கள் "எஸ்றாவை" வணங்கியதாக சொல்லப்பட்ட ஹதீஸ்:

இந்த கட்டுரைக்கு வலுவூட்டுவதாக ஒரு ஹதீஸ் உள்ளது. யூதர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று மட்டுமல்ல, "எஸ்றாவை" யூதர்கள் வணங்கியதாகவும் ஒரு ஹதீஸ் உள்ளது.


Bukhari :: Book 6 :: Volume 60 :: Hadith 105

Narrated Abu Said Al-Khudri:

………. Then the Jews will be called upon and it will be said to them, 'Who do you use to worship?' They will say, 'We used to worship Ezra, the son of Allah.' It will be said to them, 'You are liars, for Allah has never taken anyone as a wife or a son . What do you want now?' They will say, 'O our Lord! We are thirsty, so give us something to drink.' They will be directed and addressed thus, 'Will you drink,' whereupon they will be gathered unto Hell (Fire) which will look like a mirage whose different sides will be destroying each other. Then they will fall into the Fire. Afterwards the Christians will be called upon and it will be said to them, 'Who do you use to worship?' They will say, 'We used to worship Jesus, the son of Allah.' It will be said to them, 'You are liars, for Allah has never taken anyone as a wife or a son,' Then it will be said to them, 'What do you want?' They will say what the former people have said. ………


[(இது பெரிய ஹதீஸ் என்பதால், தேவையான பாகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது)]

இந்த ஹதீஸின் படி நியாயத்தீர்ப்பு நாளில், ஒட்டுமொத்த கிறிஸ்தவர்கள் நம்பிக்கை "இயேசு தேவகுமாரன்" என்பதால், அவர்கள் பொய்யர்கள் என்று அல்லா சொல்வாராம்.

அதே போல யூதர்கள் அழைக்கபடுவார்களாம், அவர்களிடம் அல்லா சொல்வாராம், "நீங்கள் யாரை வணங்கினீர்கள்?" என்று. அப்போது யூதர்கள் "நாங்கள் அல்லாவின் குமாரனாகிய எஸ்றாவை வணங்கினோம்" என்று சொல்வார்களாம். அப்போது "நீங்கள் பொய்யர்கள்" என்று அல்லா சொல்வாராம். இது தான் இந்த ஹதீஸ்.

இந்த ஹதீஸின் படி, "எஸ்றா தேவகுமாரன்" என்று குர்-ஆன் சொல்வது, ஒரு சில யூதர்களின் நம்பிக்கை அல்ல . அது மொத்த யூதர்களின் நம்பிக்கை என்று அறியலாம். ஆனால், உண்மையில் யூதர்கள் இதை நம்புவதில்லை. அவர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று சொல்வதில்லை.

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியும் இன்னொரு விஷயம் என்னவென்றால், இன்றுள்ள யூதர்களும் "குர்-ஆன் சொல்வது போல நம்புகிறார்கள்" என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அதாவது நியாயதீர்ப்பு நாளில் இப்படி யூதர்கள் சொல்வார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அப்படியானால், இன்று உலகத்தில் வாழும் யூதர்கள் கூட‌ இப்படி நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றல்லவா பொருள் கொள்ளமுடியும் .
இன்று எந்த யூதனாவது இப்படி நம்புகிறானா? இஸ்லாமியர்கள் தான் கேட்டு தெரிந்துக் கொள்ளவேண்டும்.

எனவே, எப்படி பார்த்தாலும், குர்-ஆன் 9:30ம் வசனம் யூதர்களைப் பற்றி சொல்லும் செய்தி, ஒரு மிகப்பெரிய சரித்திர தவறாகும்.


இவ்வசனத்தைப் பற்றி இஸ்லாமியர்களின் வாதங்கள்


வாதம்: 1. இவ்வசனத்தில் அல்லா குறிப்பிடுவது "சில யூதர்களை" மட்டுமே!

ஒரு வேளை இஸ்லாமியர்கள், யூதர்களில் சிலர் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்லியிருக்கலாம், எனவே, அவர்களைப் பற்றி தான் அல்லா இப்படி சொல்லியுள்ளார்" என்று சொல்லலாம்.

இது ஒரு சரியான காரணம் ஆகாது. ஏனென்றால், இது ஒட்டு மொத்த யூதர்களின் கூற்று என்று குர்-ஆனின் வசனத்தை படித்தால் புரியும்.  

 குர்-ஆன் 9:30 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? 

மேலே உள்ள வசனத்தில் "யூதர்கள்" என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட யூதர்கள் என்றோ, சிலர் என்றோ அல்லா சொல்லவில்லை.

இந்த வசனத்தின் முதல் பாகத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் கீழே காணலாம்.


Waqalati alyahoodu AAuzayrun ibnu Allahi
Waqalati alnnasara almaseehu ibnu Allahi


வகலதி அல்யஹூது அவ்ஜைரூன் இப்னு அல்லாஹி
வகலதி அல்நசரா அல்மஸீஹு இப்னு அல்லாஹி


மேலே உள்ள வரிகளில், அரபியில் "அல்"(al) என்பது, ஆங்கிலத்தில் "The" என்பதற்கு சமமாகும். யஹூது என்றால் "யூதர்கள் " என்று பொருள்.

எனவே, அல்யஹூது என்றால், "The Jews " என்று பொருள். இதே போல தான் அல்நசரா என்று சொல்லப்பட்டுள்ளது (நசரா என்றால், நசரேயராகிய இயேசு )

இந்த வசனத்தில் அல்லா " சில யூதர்கள் – Some Jews " என்றோ, ஒரு குறிப்பிட்ட யூதர்கள் என்றோ சொல்லவில்லை. ஒட்டு மொத்த யூதர்களையே குறிக்கிறார்.

அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகிய "இயேசு தேவகுமாரன்" என்பதற்கு ஈடாக யூதர்கள் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்கிறார்கள் என்று அல்லா சொல்லியுள்ளார். எனவே, இது ஒரு குறிப்பிட்ட யூதர்களை குறிக்காது.

ஒரு வேளை சில யூதர்கள் இப்படி சொல்லியிருந்தாலும், அதை ஒட்டு மொத்த யூதர்களின் கூற்றாக எப்படி அல்லா கருதுகிறார்? இது தவறில்லையா? அப்படி அல்லா குறிப்பிடும் போது, சில யூதர்கள் இப்படி நம்புகிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்று தானே அல்லா சொல்லியிருக்கவேண்டும் .

இந்த வசனம் ஒன்றும் "யூதர்கள் தேவகுமாரன்" என்று ஒரு வீட்டின் மூலையில் உட்கார்ந்து இரகசியமாக சொன்னார்கள் என்று சொல்லவில்லை, அதற்கு மாறாக, கிறிஸ்தவர்கள் "இயேசு தேவ குமாரன்" என்று எப்படி எல்லாருக்கும் முன்பாக பிரகடனம் செய்கிறார்களோ அதற்கு ஈடாக அல்லவா சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனம் ஒரு சில குறிப்பிட்ட யூதர்களின் கூற்றாக அல்லா சொல்லாமல், ஒட்டு மொத்த யூத சமுதாயமே இப்படி சொல்கிறார்கள் என்று சொல்கிறார். எனவே, இஸ்லாமியர்களின் இந்த வாதம் பயனற்றது, ஆதாரமற்றது.


வாதம்: 2. சில யூத பாரம்பரியம் "எஸ்றாவை யூதர்களின் தந்தை என்று சொல்கிறதே" அது எப்படி?

யூதர்களுக்கு எஸ்றாவின் மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஏனென்றால், அவர் இவர்களின் ஆன்மீய வாழ்விற்கு மிகவும் உதவியாக இருந்தார், அதை நான் மறுக்கவில்லை. வேண்டுமானால், எஸ்றா யூதர்களின் தந்தை என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆனால், யூதர்கள் இவரை "தேவ குமாரன்" என்று சொன்னார்களா! என்பது தான் கேள்வி . இப்படி அவர்கள் தங்கள் மார்க்கத்திற்கு விரோதமாக சொல்லவில்லை.

உதாரணத்திற்கு: மகாத்மா காந்தியை நாம் "தேசப் பிதா" என்று கூறுகிறோம். ஆனால், யாரும் மகாத்மா காந்தியை " இறைவனின் குமாரன் (அ) கடவுளின் மகன் " என்று சொல்லமாட்டார்கள். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

"தேசப்பிதா" என்பது அவரது " சமுதாய சேவைக்காக கொடுக்கப்பட்டது "

"கடவுளின் குமாரன்" என்பது "மத சம்மந்தமானது ".

மேற் கண்ட‌ இரண்டு பட்டங்களும் வெவ்வேறானவை, ஒன்றாகாது.

அது போலத்தான், எஸ்றா ஆற்றிய சேவைக்காக அவருக்கு "யூதர்களின் தந்தை " என்று சொல்லப்படலாமே ஒழிய, அதற்காக "யூதர்களின் தந்தை என்று சொன்னவர்கள் தேவனின் குமாரன்" என்று கூட எல்லாரும் நம்புகிறார்கள் என்பது உண்மையல்ல.


வாதம் 3: இந்த வசனத்திற்கு ஏன் முகமதுவின் காலத்தின் யூதர்கள் மறுப்பை தெரிவிக்க‌வில்லை .

கீழ் கண்ட பத்தி சொல்வது போல, இந்த வசனம் மதினாவில் சொல்லப்பட்ட வசனம், மட்டுமல்ல, இது சொல்லப்படும் போது, முகமதுவை எதிர்க்கவோ, அல்லது அவரோடு வாதம் புரிவதற்கோ யூதர்கள் இல்லை என்பது தான் காரணம்.

First we note, that the entire discussion is based on Muslim sources only. These writers might just not have had the interest to report such protest. If writings by Jews from Medina had been preserved, our understanding of much of Muslim history might look very different. But even considering only the Muslim sources that are available, it is interesting that you ignore so much Islamic history! This Sura was "revealed" less that one year following the Battle of Hunain, after which the most of Arabia came under Muhammad's rule. Only a few communities of the "old order" remained scattered over some far corners of the country. Most of the Arabian Jews, at this point in time, either fled, converted, or were dead. Therefore, they were in no position to dispute Muhammad's "revelation". Source : http://www.answering-islam.org/Responses/Saifullah/ezra.htm


முடிவுரை:

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்  

குர்-ஆன் 4:82 ல் அல்லா சொல்கிறார், குர்-ஆனில் எந்த பிழையும், முரண்பாடும் இருக்காது, அப்படி இருக்குமானால், இந்த குர்-ஆன் உலகை படைத்தவனிடமிருந்து வந்திருக்காது என்று. நாம் இந்த கட்டுரையில் படித்தது போல,  குர்-ஆன் சொல்வது போல யூதர்கள் நம்புகிறவர்கள் கிடையாது, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை .

இந்த கட்டுரையை படிப்பவர்களாகிய நீங்கள் ஒருவேளை முஸ்லீமாக இருப்பீர்களானால், இதைப் பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய தளங்களிலும் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். உண்மை மார்க்கத்தை தெரிவிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள். நிச்சயமாக இயேசு உங்களுக்கு உண்மை மார்க்கத்தை காட்டுவார். உங்களை வெளிச்சத்தின் பால் அழைப்பார். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்கிறார். இந்த சத்திய மார்க்கத்தை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


For More Details:

1. Responses to Islamic Awareness: Was 'Uzayr (Ezra) Called The Son Of God?  
2.
Is Ezra 'a son' or 'the Son' of God?  
3.
False and/or misleading statements in the Qur'an  
4.
Islamic Awarness Article
5.
Ezra Wikipedia
6.
Book of Ezra Wikipedia

Contact Umar

 Source:  http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/ezrasonofallah.htm

Isa Koran Home Page Back - Koran Index
1

திங்கள், 29 அக்டோபர், 2007

சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்:

சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்:
(கவனிக்கவும் மார்க்கம் இல்லை மாக்கம்)

ஈஸா குர்‍ஆன் தளம் மூலமாக‌, இது தான் தள கட்டுரைகளுக்கு பதில் எழுதிக்கொண்டு வருவது எல்லாருக்கும் தெரியும்.

"பாரான் அக்னி பிராமாணம்" என்ற இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு நான் மறுப்பு எழுதியிருந்தேன். அதற்கு "சத்திய மாக்கம்" என்ற பெயரில் ஒரு காமண்ட் வந்தது. அதில் இஸ்லாம் சகோதரர் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் பற்றி கீழ் கண்டவாறு கூறப்பட்டது.

கீழ் கண்ட கேள்விக்கு, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் தவறான‌ பதில் சொல்லியிருந்தார்கள் என்று "சத்திய மாக்கம்" சொன்னார்கள்.

 
Quote:
===========================
கேள்வி: முஸ்லிம்கள் புளு பலிம் பார்க்கலாமா?

பதில் : புளு பிலிம் பார்க்கலாம் ஏன் என்றால் அடுத்தமுறை மனைவியுடன் உடலுரவில் ஈடுபடும்போது பொசிசனை சரி செய்து கொள்ள உதவும் - ஜி.என்
===========================


நான் அதற்கு ஆதாரத்தோடு காமண்ட் வையுங்கள் என்று எழுதியிருந்தேன்.

Quote:
===========================
நீங்கள் சொல்வது போல எந்த தளத்தில் அவர் பதில் அப்படி அளித்தார் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால், படிக்கும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
===========================


இதற்கு சத்திய மார்க்கம்(www.satyamargam.com) என்ற தளம் கீழ்கண்டவாறு கட்டுரை எழுதினார்கள்.

Source : http://velicham2006.blogspot.com/2007/10/blog-post_5676.html

1. சத்திய மார்க்கம், அல்லது சத்திய மாக்கம் என்ற பெயரில் யாரோ ஒரு போலி நபர் இப்படி தவறாக எழுதுகிறார்.
2. இந்த காமண்ட்க்கும்(Comment), சத்திய மார்க்கம் தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
3. தங்கள் தளத்தின் பெயரை கெடுப்பதற்கு இப்படி பல போலிகள் பொய்யான தகவல்களை தருகிறார்கள்


என்று எழுதியிருந்தார்கள்.

இந்த சத்திய மார்க்கம் தள கட்டுரைக்கு ஜி. நிஜாமுத்தீன் அவர்களும் காமண்ட் கீழ் கண்டவாறு எழுதியிருந்தார்கள்.
Quote:
=========================
சத்தியமாக்கம் என்ற (தவறான பெயருடன்) கிறிஸ்த்தவ இணையத்தளத்தில் எனக்கு எதிராகவே ( சற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல்) மிகக் கேவலமான கருத்துப்பதிக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் இணையத்தில் கிறிஸ்த்தவ இணையத்தின் பின்னூடலுக்கு பதிலளித்தோம். விமர்சிப்பவர்கள் அந்நிய முகமூடி அணிந்துக் கொள்வதன் அவசியம் என்னவென்று புரியவில்லை. சிறப்பாக செயல்படும் இணையங்களில் பெயரைக் கெடுக்க எடுக்கப்படும் சதிவேலையாக இது இருக்குமோ...

கருத்து எழுதியவர் ஜி.நிஜாமுத்தீன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 8:35
=========================


மறுபடியும் "சத்திய மாக்கம்" என்றவர் என் கட்டுரையில் கிழ்கண்ட பதிவை இட்டுள்ளார். இதற்கு என் பதிலை கீழே கொடுத்துள்ளேன்.

Quote:
========================================
சத்திய மாக்கம் said...
தோழரே நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருவதால் என்ன நடந்தது என்று தெறியவில்லை.

நீங்கள் கேட்டது போல் நிறைய ஆதாரங்கள் இந்த கு.நி என்பவரின் பொய்முகத்தை கிழிப்பதற்கு உள்ளன.

அவற்றை எப்படி ஏற்றுவது என்று எனக்கு தெறியவில்லை இங்கு சற்று விளக்கவும்.

சத்தியமார்க்க்ம் என்பவர்கள் என்னை போலி என்று கட்டுரை போட்டுள்ளார்கள். சத்தியமார்க்கம் எனும் தளமே போலி என்பது தான் எனது கருத்து. சத்தியமார்க்கமும் அதில் எழுதக்கூடிய அனைவருமே போலிகள்.

இவர்கள் எப்படி அடுத்தவனை போலி என கூற முடியும்?

சத்திய மார்க்கம் உண்மை என்றால் சத்தியமார்க்கம் தளமும் அதில் எழுதக்கூடியவர்களும், பின்னூட்டக் கூடியவர்களும் தங்கள் சொந்தப் பெயரில் முகவரியும் போன் நம்பரும் போட்டு பதிவு செய்யட்டும் பின்னர் மற்றவர்களை போலி என்று சொல்லட்டும்.

பொய்யர்களும் போலியுமான சத்தியமார்க்கத்தை பிறகு பார்க்லாம், முதலில் இந்த கு.நி உங்களிடம் செய்தது போலவே தற்போது அடைக்களமாகியிருக்கும் ததஜ வினரிடம் கள்ள மெயில் மூலம் கேள்வி பதில் வெளியட்டு மாட்டி செருப்படி வாங்கினார் அதற்குறிய ஆதாரங்கள் நிறைய பி.டி.எப் பைல்களாக உள்ளன அவற்றை எப்படி ஏற்றுவது என்று கூறுங்கள் அல்லது உங்கள் முகவரி தாருங்கள் மெயிலில் அனுப்புகின்றேன்.

இதை தனிப்பதிவாக போடவும்.

நான் போலி இல்லை. போலி என்று கூறுபவர்கள் தாங்கள் உண்மை என்று நிறுபித்து விட்டு மற்றவர்களை போலி என கூறட்டும்.

இதையெல்லாம் எழுதுவதால் நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் என்று அர்த்தமல்ல மாறாக நான் உங்களுக்கு பதில் அளிக்க மற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளோடும் அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஓடும் திருட்டுத் தனங்கள் ஓடுமு் ஒத்துப்போகவில்லை என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும்.

உங்களை வேறு ஒரு சமயத்தில் பார்த்து கொள்ளுகின்றேன். தற்சமயம் இஸ்லாத்தில் போலி வேடம் போடும் சத்தியமார்க்கம் என்ற திருட்டுத் தளம் மற்றும் அதில் எழுதும் பல போலிகளின் முகமூடியை கழற்றுவோம்.

உங்களைப்போன்ற இஸ்லாத்தின் மீது அவதுர்று அளிப்பவர்களுக்கு கு.நி போன்று திருட்டுத்தனங்களும் பித்தளாட்டங்களும் செய்து பதில் அளிக்குமாறு எங்கும் இஸ்லாம் போதிக்கவில்லை.


ஆதாரங்களை அனுப்பித் தருகின்றேன் தனிப்பதிவாக போடவும்.

சத்திய மார்க்கம் (உண்மையானது - போலி அல்ல)

October 27, 2007 3:22 PM

Source: இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு
http://isakoran.blogspot.com/2007/09/blog-post.html
========================================


சத்திய மாக்கத்திற்கு ஈஸா குர்‍ஆன் பதில்:

உங்கள் பதிவில் என்னை தொட்டது இரண்டு விஷயங்கள்:

1. இஸ்லாமுக்கு விரோதமாக அவதூறு சொல்கிறவர்களுக்கு நீங்கள் பதில் தர யாராக இருப்பது.

2. இஸ்லாமில் உள்ள சில போலிகளை உலகத்திற்கு வெளிச்சம் காட்டுவது.


Quote:
================
இதையெல்லாம் எழுதுவதால் நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் என்று அர்த்தமல்ல மாறாக நான் உங்களுக்கு பதில் அளிக்க மற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளோடும் அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஓடும் திருட்டுத் தனங்கள் ஓடுமு் ஒத்துப்போகவில்லை என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும்.

உங்களை வேறு ஒரு சமயத்தில் பார்த்து கொள்ளுகின்றேன். தற்சமயம் இஸ்லாத்தில் போலி வேடம் போடும் சத்தியமார்க்கம் என்ற திருட்டுத் தளம் மற்றும் அதில் எழுதும் பல போலிகளின் முகமூடியை கழற்றுவோம்.

உங்களைப்போன்ற இஸ்லாத்தின் மீது அவதுர்று அளிப்பவர்களுக்கு கு.நி போன்று திருட்டுத்தனங்களும் பித்தளாட்டங்களும் செய்து பதில் அளிக்குமாறு எங்கும் இஸ்லாம் போதிக்கவில்லை.
================
1. இஸ்லாமில் உள்ள போலிகளை உலகத்திற்கு வெளிச்சம் காட்டுவது பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். அது உங்கள் விருப்பம்.

2. ஆனால், அதை நீங்கள் முதலாவதாக செய்வதாக சொல்கிறீர்கள், அது தான் என் மனதிற்கு விசனமாக உள்ளது.

3. எனவே, நான் சொல்வது என்னவென்றால், "போலிகளை" கண்டுப்பிடிப்பதை இரண்டாவதாகச் செய்யுங்கள். முதலாவது, இஸ்லாமுக்கு அவதூறு கொண்டுவரும் கட்டுரைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

4. இனிமேல் நீங்கள் எது எழுதினாலும், அவர்கள் (சத்திய மார்க்கம் தளம், மற்றும் ஜி.நிஜமுத்தீன் அவர்கள்) பதில் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, என் கட்டுரைகளுக்கு பதில் சொல்வீர்களானால், நன்மை செய்கிறவர்களாக எண்ணப்படுவீர்கள்.


5. அவர்களை விட்டுவிடுங்கள், நம் விஷயத்திற்கு வருவோம்.

1. நான் இயேசுவின் வரலாறு என்ற 6 தொடர்களுக்கு பதில் அளித்துள்ளேன். நீங்கள் அக்கட்டுரையில் ஜி.நிஜாமுத்தீன் சொல்வதை பார்க்கவேண்டாம். அதற்கு பதிலாக, இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு என் பதிலை படியுங்கள். உங்கள் மறுப்பை அளியுங்கள். இன்னும் பல கட்டுரைகளை என் தளத்தில் பார்க்கலாம். அதற்கு பதில் அளிக்க முற்படுங்கள். அல்லா உங்களுக்கு நற்கூலி கொடுப்பான்.

நான் மொழி பெயர்த்த இரண்டு கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கலாம், இந்த கட்டுரைகளுக்கு பதில் கொடுப்பதோடு "எனக்கு" உங்கள் மறுப்பை எழுத ஆரம்பிப்பீர்களானால், நன்றாக இருக்கும்.

2. ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா (Allah Starts Christianity...by Accident)
http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/davidwood/allahstartschristianity.htm

3. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/IsQuranPreserved.htm

[இந்த மூன்று கட்டுரைகள் மிகவும் முக்கியமானவையாக நான் கருதுவதால், இவைகளை மட்டும் குறிப்பிட்டேன்.]

நான் எழுதிய மீதமுள்ள கட்டுரைகளை கிழ் கண்ட தளங்களில் பார்க்கலாம்.

1. http://www.tamilchristians.com
2. http://www.geocities.com/isa_koran
3. http://isakoran.blogspot.com

உமக்கு நான் உதவமுடியும்

1. உங்கள் பதில்களை எப்படி எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று குழம்பவேண்டாம். நீங்கள் விரும்பினால், உங்கள் பதில்களுக்காக நான் ஒரு தளத்தை ஆரம்பிக்கவும் தயாராக உள்ளேன்(தளங்களை நாம் இலவசமாக ஆரம்பிக்கலாமே, காசா பணமா).

2. அல்லது உங்கள் பதில்களை எனக்கு மெயில் அனுப்பினாலும் சரி, நான் அதில் ஒரு எழுத்தும் மாற்றாமல் என் தளத்தில் பதித்து பதில் எழுதுவேன்.
என் மெயில் ஐடிக்கள்: isa.koran@gmail.com and isa_koran@yahoo.co.in

3. இன்னுமொறு சுலபமான வழி என்னவென்றால், தமிழ் கிறிஸ்டியன்ஸ்(http://www.tamilchristians.com) தளத்தில் இலவசமாக ஒரு ஐடியை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் நீங்கள் உங்கள் கட்டுரைகளை, பதில்களை பதிக்கலாம். இதில் இன்னொரு வசதி என்னவென்றால், பல கிறிஸ்தவர்கள் உங்கள் பதில்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

http://www.tamilchristians.com

உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கும், உங்கள் நண்பன்.
இதைப்பற்றி முந்தைய தமிழ் கிறிஸ்டியன்ச் தள பதிவை இங்கு பார்க்கலாம்.

நிஜாமுத்தீன் அவர்கள் பற்றிய ஒரு செய்தி - (True or False)
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=362

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

      

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்முன்னுரை: தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல், இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள்.

என்னுடைய இந்த கட்டுரை, கிறிஸ்தவ மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு இவர்கள் புது அர்த்தத்தை கொடுத்துள்ளதைப் பற்றி அலசுகிறது. இந்த வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் உள்ளது. கிறிஸ்தவர்களை மாற்றுமத நண்பர்கள் " அல்லேலூயா கூட்டம் " என்று கூடச் சொல்வார்கள்.


இக்கட்டுரையில் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு "தமிழ் முஸ்லீம்" தளம் என்ன பொருள் சொல்கிறது என்றும், உண்மையில் இவ்வார்த்தைக்கு சரியான பொருள் என்னவென்றும், இப்படி இஸ்லாமியர்கள் மாற்றுமத வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கற்பிப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் பார்க்கப்போகிறோம்.

1. தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரை:

கீழ் கண்ட தொடுப்பில், தமிழ் முஸ்லீம் தளத்தின் " பிற மத வேதங்களில் இஸ்லாம் " என்ற கட்டுரையை படிக்கலாம்.

பிற மத வேதங்களில் இஸ்லாம் தொடர் 3 http://www.tamilmuslim.com/piramathangak/piramatangal3-4.htm

இக்கட்டுரையில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நான் இக்கட்டுரையில் "கிறிஸ்தவ வேதத்தில் காணப்படும் அல்லேலூயா" என்ற வார்த்தையைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி மட்டும் சொல்லப்போகிறேன். மற்ற விவரங்களைப் பற்றி கர்த்தருக்கு சித்தமானால், தனி கட்டுரையாக பார்க்கலாம். இக்கட்டுரையில் தமிழ் முஸ்லீம் தளம் எழுதிய வரிகள் பச்சை வண்ணத்தில்(and Bold) கொடுக்கப்படுகிறது


அல்லேலூயா என்ற வார்த்தையைப் பற்றி தமிழ் முஸ்லீம் தளம் கூறியது :


தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்
முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்!இனி இவ்வார்த்தைக்கு உள்ள உண்மை பொருளைப்பற்றி பார்க்கலாம்.

2. Hallelujah, Halleluyah, or Alleluia (அல்லேலூயா) வார்த்தையின் பொருள் என்ன?

அல்லேலுயா(Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது:

1. Halelu -- அல்லேலு

2. Yah -- யா


"Halelu" என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise) என்று பொருளாகும்.

"Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும். "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்பது.

இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் " யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh " என்பதாகும்.

[இயேசுவின் (Yeh oshua) பெயரிலும் "Yah" இருப்பதை கவனிக்கலாம். இயேசு என்றால், "யேகோவா என் இரட்சிப்பு" என்று பொருள். Source: http://en.wikipedia.org/wiki/Jesus ]

இந்த விவரங்களோடும் இன்னும் மேலதிக விவரங்களுக்கு "விகிபீடியா" என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள். Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah


Hallelujah, Halleluyah, or Alleluia , is a transliteration of the Hebrew word הַלְלוּיָהּ (Standard Halləluya, Tiberian Halləlûyāh) meaning "[Let us] praise (הַלְּלוּ)." It is found mainly in the book of Psalms. The word is used in Judaism as part of the Hallel prayers, and in Christian praise. It has been accepted into the English language, but its Latin form Alleluia is used by many English-speaking Christians in preference to Hallelujah.

The word hallelujah mentioned in Psalms is the Hebrew word for requesting a congregation to join in praise. "Hallel" means to recite praise, "hallelu" is the plural form. The grammatical extension "yah" is a way of expressing magnanimity[1], hence halleluyah means "a great praise."

There are other ways of interpreting this word, as the Hebrew language does include the possibility for many meanings in the same word; thus it can also be understood to mean " Praise (הַלְּלוּ) the LORD (יָהּ) or God ." This interpretation comes from the idea that the suffix "-yah" could be a shortened form of the name "Yahweh/Jehovah," although this would make it an exception, and not typical of standard Hebrew.[2]

For most Christians, "Hallelujah" is considered the most joyful word of praise to God, rather than an injunction to praise Him. In many denominations, the Alleluia, along with the Gloria in Excelsis Deo, is not spoken or sung in liturgy during the season of Lent, instead being replaced by a Lenten acclamation.

The term is used 24 times in the Hebrew Bible (mainly in the book of Psalms (e.g. 111-117, 145-150, where it starts and concludes a number of Psalms) and four times in Greek transliteration in Revelation.
(emphasis mine)


எபிரேய மொழியில் ஒரு வார்த்தைக்கு பல பொருள்கள் கூறமுடியும், அதன்படி பார்த்தால், "Yah" என்ற வார்த்தைக்கு "Great" என்ற பொருளும் உள்ளது. அதன் படி இவ்வார்த்தையை "A Great Praise": என்று கூடச் சொல்லலாம் என்று விகிபீடியா சொல்கிறது.

3. தமிழ் முஸ்லீம் தள பொருளில் உள்ள குறைபாடு :

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :


இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது
.


இவர்களின் கருத்துப்படி, "அல்லேலூ யா – Hallelu yah " என்ற வார்த்தையில் உள்ள "யா - Yah " என்பது ஒரு விளி வேற்றுமைச் சொல்லாகும் . இது இவர்களின் சொந்தக்கருத்து, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை..

ஆனால், உண்மையில், "யா" "Yah" என்பது ஒரு பெயர்ச் சொல். அதாவது, இது "யேகோவா – Yehweh" தேவனைக் குறிக்கிறது. எப்படி "அல்லா" என்பது ஒரு பெயரோ அது போல "யா" என்பது "யேகோவா" என்ற பெயர்ச் சொல்லின் சுருக்கமாகும்.

இவ்வார்த்தை ஒரு எபிரேய(ஹிப்ரு) மொழி வார்த்தை என்று தெரிந்த உங்களுக்கு, இதன் பொருள் என்ன என்று தெரியாமல் போனதென்ன? அல்லது பொருள் தெரிந்துக்கொண்டே "யார் நம்மை" கேள்வி கேட்பது என்று நினைத்தீர்களா?

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை .


உண்மை தான் இவ்வார்த்தைக்கு எபிரேய மொழியின் பொருள் "யோகோவாவை துதி - Praise Yahweh" என்று இருக்கும் வரை, இதை திருப்பிப்போட்டாலும் பொருள் மாறுவதில்லை. ஆனால், பிரச்சனை "யா " என்ற வார்த்தை ஒரு நபரை(Yahweh) குறிக்கும் போது, அதை ஒரு "விளி வேற்றுமை " என்று சொல்கிறீரே அது தான்.

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :


கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்

முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்

அவ்வளவுதான் வித்தியாசம்!
உண்மையில் இந்த இரண்டு வரிகளை படிக்கும் பாமர கிறிஸ்தவன் "அடடா என்ன அருமையாக சொல்லியிருக்கிறார்கள் முஸ்லீம் சகோதரர்கள், இது அல்(ல)வா ஒற்றுமை என்பது " என்று மெய் மறந்துப்போவான்.

இவ்வளவு அருமையான ஒற்றுமை அல்லது சின்ன வேற்றுமையை இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம், அல்லது மக்கள் காட்டுவார்களானால், நான் 1008 "சலாம்" சொல்வேன்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்:


"யா அல்லாஹ் " என்ற சொற்றொடரில்:

யா = விளி வேற்றுமை (உங்கள் கருத்துப்படி, எனக்கு அவ்வளவு இலக்கணம் தெரியாது)
அல்லாஹ் = பெயர்ச் சொல்

உண்மையில் "யா அல்லேலு" என்ற சொற்றொடரில் :

யா = பெயர்ச் சொல் (Yah, or Yahweh)
அல்லேலு = துதித்தல், Praise (வினைச்சொல்)

எவ்வளவு அழகாக " அல்லாஹ்" மற்றும் "அல்லே லு" என்ற வார்த்தைகளில் சில எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வருவதால், இவைகளை ஒன்றாக இணைத்து "இஸ்லாமிய முறையில்" தவறான ஒரு பொருளை கொடுத்து, மக்களை(உங்கள் தளத்தில் படிக்கும் வாசகர்களை, என்னோடும் சேர்த்து) முட்டாளாக்கியுள்ளீர்கள். யாருக்கு வரும் இந்த கலை.

4. சில கேள்விகள்:

உங்கள் வழிக்கே வருகிறேன். அல்லேலூயா என்றால், "யா அல்லாஹ்" என்பதற்கு சமம் அல்லது அதற்கு இணையானது(கடைசி சில எழுத்துக்கள் தான் வித்தியாசம்) என்று சொல்கிறீர்களே, அப்படி நீங்கள் சொல்வதை "நடைமுறையில்" கொண்டுவரமுடியுமா?

அதாவது,

1. உங்கள் மசூதிகளில், அல்லது நீங்கள் எங்கேயெல்லாம் "யா அல்லாஹ்" என்றுச் சொல்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "அல்லேலு யா" என்றோ அல்லது "யா அல்லேலூ" என்றோ சொல்லவேண்டும் என்று உங்கள் இஸ்லாமிய மக்களுக்கு கட்டளையிட முடியுமா?

2. "அல்லேலுயா – Praise to God " என்ற வார்த்தைக்கு இணையான அரபி வார்த்தை "அல்ஹம்துலில்லாஹ் - Alhamdulillah " என்று விகிபீடியா சொல்கிறது. முஸ்லீம்கள் பல செயல்களின் போதும், இன்ன பிற நேரங்களிலும் "அல் ஹம்து லில் லாஹ்" என்றுச் சொல்கிறார்கள், குறைந்த பட்சம் "அல் ஹம்து லில் லாஹ்" என்று சொல்வதற்கு பதிலாகவாவது, "அல்லேலூயா" என்று சொல்லமுடியுமா ?


Source http://en.wikipedia.org/wiki/Alhamdulillah

Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning "Praise to God" or "All praise belongs to God," similar to the Hebrew phrase Halelu Yah. In everyday speech it simply means "Thank God!" It is used by Muslims as well as Arabic-speaking Jews and Christians , but primarily by Muslims due to centrality of this specific phrase within the texts of the Quran and the speech/sayings of Muhammad.

3. அரபி பேசும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் "அல்(the) ஹம்து(Praise) லில்(Preposition for, to etc..) லாஹ்(God or Allah)" என்று சொல்கிறார்களாம், ஏனென்றால், அரபி பைபிளில் "தேவன்" என்ற இடத்திலே "அல்லாஹ்" என்று மொழிபெயர்த்து விட்டார்கள். எனவே, அரபி பேசும் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள முஸ்லீமகள் (குறைந்தது உங்கள் தளத்தை படிக்கும் முஸ்லீம்களாவது) "அல்லேலூயா" என்று சொல்லுங்கள் என்று உங்களால் உங்கள் தளத்தில் எழுதமுடியுமா ?

5. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள் :

அன்பு சகோதரர், சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், ( கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி ) உடனே அதில் சொல்லப்பட்டது "உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரி, முதலில் அதை படித்து, ஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்து, உங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள் .

முடிவுரை: இனியாவது மாற்றுமத கட்டுரைகளை எழுதும் போது, சிறிது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்துக்கள் வேதங்கள் பற்றியும் எழுதியுள்ளீர்கள், அதில் இன்னும் என்னன்ன குழப்படிகள் செய்துள்ளீர்களோ? இறைவனுக்குத் தான் வெளிச்சம் "யா அல்லேலு" .


Isa Koran Home Page Back - Rebuttal Index page

வியாழன், 25 அக்டோபர், 2007

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)

           

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி

தமிழாக்க முன்னுரை: "இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி" இது தான் இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி. முகமதுவும் "இயேசுவிற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் உலக நபர்களில், தான் மட்டும் தான் இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்" என்கிறார். ஆனால், இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்வீர்கள், இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல. இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக முகமது போதித்தார் என்பதை அறிந்துக்கொள்ளலாம். இக்கட்டுரையில் இயேசுவின் தெய்வீகத்தன்மையோடு முகமதுவின் வாழ்க்கையை ஆசிரியர் ஒப்பிடவில்லை, மாறாக இவர்கள் இருவரின் போதனைகள் ஒன்றல்ல என்பதை மட்டும் காட்டுகிறார். இதை படித்தபிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம், அது என்ன? இயேசு ஒரு இஸ்லாமிய நபியோ (அ) தீர்க்கதரிசியோ அல்ல. இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் வெவ்வேறானவை ஒன்றல்ல. இரண்டும் இருபெரும் துருவங்கள், என்றும் ஒன்றாக கலக்காத இரயில் தண்டவாளங்கள். எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பது தான் கேள்வி.

Jesus is a Muslim Prophet? By Frankly Speaking


இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி?


பைபிளின் சுவிசேஷங்களையும், குர்-ஆனையும் படித்துப் பாருங்கள். இயேசுவும், முகமதுவும் தங்கள் செய்திகளை வெவ்வேறு மூலத்திலிருந்து ( different sources) பெற்றதாக அறிந்துக்கொள்ளலாம். இயேசுவின் போதனையும், வாழ்க்கையும் முகமதுவின் வாழ்க்கைக்கு எதிர்மறையாக இருப்பதாக அறியலாம். இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி (தீர்க்கதரிசி) என்று சொல்கிறார்கள். சுவிசேஷங்களுக்கும், குர்-ஆனுக்கும் இடையே எந்த வித்தியாசங்கள் வந்தாலும், அந்த வித்தியாசத்திற்கு காரணம் "கிறிஸ்தவர்கள்" சுவிசேஷங்களை மாற்றி விட்டார்கள் என்று வாதாடுகிறார்கள். இஸ்லாமிய அறிஞர்களின் இந்த சந்தேகம், இஸ்லாமுக்கு நன்மையாக மாறுவதற்கு முன்பாகவும், இந்த இரண்டு புத்தகங்களையும் படிக்காதவர்களுக்காகவும் ஒரு சிறிய ஆய்வு செய்யலாம். குர்-ஆனையும், பைபிளையும் ஒப்பிட்டு, முகமது எதை பிரச்சாரம் செய்தாரோ, அதற்கு நேர் எதிராக இயேசு செய்த போதனைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.1. திருமணம் மற்றும் விபச்சாரம் (ADULTERY AND MARRIAGE)

இயேசுவை பொருத்தவரையில், ஒருவன் ஒரு பெண்ணை காமத்தோடு பார்த்தாலே போதும், அது "விபச்சாரம்" செய்ததற்கு சமம் என்று சொல்கிறார். விவாகரத்து என்பது "இறைவனின் கட்டளை" அல்லது "இறைவன் விரும்பும் செயல்" அல்ல என்று இயேசு தெளிவாகச் சொன்னார். யுதர்கள் பல மனைவிகளை உடையவர்களாக இருந்தாலும், மனிதன் "ஒரு மனைவி உடையவனாக" இருக்கவேண்டும் என்று இயேசு அழுத்திச் சொன்னார்(அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்றார்).

இந்த விஷயத்தில் முகமது கொஞ்சம் அதிக சுதந்திரத்தை கொடுத்தார். மனைவி அல்லாத பெண்களோடு உடலுறவு(Sex) கொள்வது அனுமதிக்கப்பட்டது, மட்டுமல்ல அது ஒரு ஆசீர்வாதமானது. இந்த பெண்களை நமக்கு சொந்தமானவர்களாக இருக்கவேண்டும்(அடிகைகள்) மற்றும் இவர்களின் அனுமதியில்லாமல் அவர்களிடம் உடலுறவு கொள்ளலாம்(கற்பழிப்பு). முகமது நான்கு மனைவிகள் வரையில் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று பலதாரமணத்திற்கு அனுமதியளித்தார்
.


இயேசு:

மத்தேயு 5:

27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.


மாற்கு 10

4. அதற்கு அவர்கள், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத்தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, உங்கள் இருதயகடினத்தினிமித்தம்இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
6. ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும்பெண்ணுமாக உண்டாக்கினார்.
7. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன்மனைவியோடே இசைந்திருப்பான்;
8. அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள்இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
9. ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்என்றார்.


முகமது:

குர்-ஆன் 4:3,

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

குர்-ஆன் 4:24

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (4:24)2. மரணத்தின் பின் வாழ்க்கை (AFTERLIFE)

இயேசு மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை உடலுறவு இல்லாத ஒரு "ஆவிக்குரிய - spiritual " வாழ்க்கை என்றுச் சொன்னார், அங்கு திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்றுச் சொன்னார். ஆனால், முகமதுவின் போதனைப்படி சொர்க்கம் என்பது ஒரு உடல் சம்மந்தப்பட்ட இடம், அங்கு இளவயது கன்னிகள்(பெண்கள்) இருப்பார்கள் (virgins "whish favours of the Lord" would not be denied (including sex)). முகமது கீழ்கண்ட வசங்களிலும் குர்-ஆன் 37:40-48; 44:51-55; 52:17-20, etc., இன்னும் பல வசனங்களிலும் சொர்க்கத்தைப் பற்றி விவரிக்கிறார், அங்கு மிகவும் அழகான மெத்தைகள், விருப்புகள் இருப்பதாகச் சொல்கிறார், இங்கும் உடலுறவிற்கு தடையில்லை.

இயேசு யூத சதுசேயர்கள் "உயிர்த்தெழுதல், மற்றும் சொர்க்கத்தில் திருமண வாழ்வு பற்றி" கேட்ட கேள்விக்கு இயேசு பதில் அளித்தார்


மத்தேயு 22 :

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;


முகமது சொர்க்க தோட்டத்தைப் பற்றி விவரிக்கிறார்
குர்-ஆன் 55

70: அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். (55:70)
71: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:71)
72: ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (55:72)
73: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:73)
74: அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)
75: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:75)
76: (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)3. எதிரிகளை எப்படி சமாளித்தார்கள்: (HOW TO DEAL WITH ENEMIES)

தன்னை பின்பற்றுபவர்கள் "சமாதானம் செய்கிறவர்களாக - peacemakers" இருக்கவேண்டும் என்று இயேசு மலை பிரசங்கத்தில் சொல்கிறார். ஏனென்றால், இப்படிப்பட்டவர்கள் தான் "தேவனுடைய குமாரர்கள் ஆவார்களாம்" என்றுச் சொல்கிறார் (மத்தேயு 5:9). இயேசு மன்னிக்கும் சுபாவத்தை அதிகமாக புகழ்ந்தார், உட்சாகப்படுத்தினார், ஏனென்றால், மன்னிக்கும் சுபாவம் மூலம் தான் "சமாதானத்தை" தர இயலும். இயேசு உங்கள் விரோதிகளையும் நேசியுங்கள் என்று போதித்தார், மற்றும் எல்லாரும் இறைவனைப் போல மிகவும் கருணை உடையவர்களாக வேண்டும் என்று விரும்பினார்.

முகமது மிகவும் 'சுலபமான' வழிமுறையை பின்பற்றினார், "உங்கள் எதிரிகளை கொல்லுங்கள், அவர்கள் மீது ஆளுகை செலுத்துங்கள்". இவருடைய எண்ணம் என்னவென்றால், உன் எதிரி உன் கைக்குள் அடங்கவில்லையானால்(Surrender), அல்லது மரிக்கவில்லையானால்(dead) உனக்கு "சமாதானம்" இல்லை. முகமது தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "அவர்களை கொல்லுங்கள்" அவர்களோடு போர் புரியுங்கள் என்றுச் சொன்னார், ஒரு வேளை அவர்களுக்கு போர் புரிவது பிடிக்கவில்லையானாலும், அதை செய்யவேண்டும் காரணம், அல்லாவைப் பொருத்தவரையில் சண்டையிடுவது ஒரு நல்ல செயல்.

இயேசு:

 
லூக்கா 6:

35
. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,
36. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.


முகமது:

குர்-ஆன் 2:

190: உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190)

191: (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். (2:191)

216: போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)4. தங்கள் செய்தியை பரப்பிய விதம் (PROSELYTIZING):

இயேசு மற்றும் முகமது இருவரும் "தங்கள் செய்தி" மக்களுக்கு சென்று அடையவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், இவர்கள் இருவரும் வித்தியாசமான வழிமுறைகளை கையாண்டனர். இயேசு நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள், அற்புதங்கள் செய்வதின் மூலமாக, இடம் பொருள் ஏவலை கருத்தில் கொண்டு மக்களுக்கு தன் செய்தியைச் சொன்னார் (Jesus opted for persuading people with good words, deeds and miracles taking in account the protocols and manners of the time.) ஒரு வேளை மக்கள் இவருடைய செய்தியை கேட்கவில்லையானால், அவர்களை அப்படியே விட்டுவிடும்படி இயேசு சொன்னார், ஏனென்றால், அந்த மக்களோடு இறைவன் இடைபடுவார் என்று விட்டுவிட்டார்.

வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், ஆரம்ப காலத்தில் தன் மக்களுக்கு முகமது தன் செய்தியை அமைதியான முறையில் பரப்பினார், ஆனால் அவருக்கு வெற்றி இல்லை. முகமதுவின் செய்தியை கேட்டவர்கள் அவரை எதிர்த்தார்கள், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவர் தன் கையில் வாளை எடுத்தார். இவர் சில யுத்தவீரர்களின், திருடர்களின், கொல்லையடிப்பவர்களின் உதவியுடன், தன் செய்தியை நம்பும் பல மக்களை சம்பாதித்தார். இவர்களுக்கு உவ்வுலகத்தில் செல்வ செழிப்பையும்,மறு உலகத்தில் பெண்களையும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தார்.(With the help of some mercenaries, thieves and pirates who were promised riches in earth and sex in the after life Muhammad gets more people interested in his message.) இஸ்லாமுக்கு மாறாத மக்களை கொன்றார் அல்லது "ஜிஸ்யா" என்ற வரி கட்ட கட்டாயப்படுத்தினார்
.


இயேசு:

லூக்கா 10:

3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்
4. பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது, இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன்கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான. வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
9. அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்,
11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.


முகமது: 

குர்-ஆன் 9

28: ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9:28)
29: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கௌ;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (9:29)

5. பிள்ளைகள் அல்லது குழந்தைகள் (CHILDREN)

இயேசுவும் முகமதுவும் குழந்தைகளை நேசித்தார்கள், ஆனால், வித்தியாசமான வழியிலே. இயேசு தன் சீடர்களுக்கு "குழந்தைகளைப் போல கள்ளம் கபடற்றவர்களாகவும், தாழ்மையாகவும் இருக்கும்படியாக" போதித்தார். ஏனென்றால், தேவனுடைய அரசு (இறைவன் இருக்கும் இடம் - the kingdom of Heaven) இப்படிப்பட்டவர்கள் உடையது என்றுச் சொன்னார். இயேசு தன் கைகளை பிள்ளைகள் மீது வைத்தார் மற்றும் அவர்களை ஆசீர்வதித்தார்.

முகமது கூட சின்ன குழந்தைகளை நேசித்தார், முக்கியமாக சிறுமிகளை. குர்-ஆன் 65:4ம் வசனத்தை அரபி மொழியில் மிகவும் சரியாக புரிந்துக்கொள்ளலாம். ஏனென்றால், வேறு மொழியில் மொழிபெயர்ப்பவர்கள், இந்த வசனத்தின் உண்மை பொருளை கூறாமல், மழுப்பி மாற்றி மொழி பெயர்க்கிறார்கள். இந்த வசனத்தில் "மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும்," என்ற சொற்றொடருக்கு சரியான பொருள், "இதுவரை ருதுவு எய்தாத(வயதுக்கு வராத) சின்ன சிறுமிகள்" ஆகும். (Qur'an 65:4 is better understood in original Arabic because translators obscure the real meaning of "and for those who have no courses (it is the same)" which means young girls yet to menstruate.) அரபி தெரிந்தவர்களுக்கு இதோ அந்த சொற்றொடர்:

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُوْلَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا

இந்த வசன வெளிப்பாடு முகமதுவிற்கு ஒரு வாய்ப்பை தருகிறது, அதாவது முகமது ஆயிஷா என்ற சிறுமிக்கு 6 வயதாகும் போது, திருமணம்(Marry) செய்துக்கொண்டார், மற்றும் 9 வயதாகும் போது முழுமையாக திருமணம்(Consummate the Marriage) செய்துக்கொண்டார். (இவைகள் பற்றி இந்த ஹதீஸ்கள் மூலமாக அறிந்துக்கொள்ளலாம் Sahih Muslim 8:3310; Bukhari 5:58:234, 8:73:151, Tabari IX: 131)


இயேசு:
 

மாற்கு 10:

13. அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களைஅவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள்அதட்டினார்கள்.
14. இயேசு அதைக்கண்டு விசனமடைந்து, சிறு பிள்ளைகள் என்னிடத்தில்வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்;தேவனுடையராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தைஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து,அவர்களை ஆசீர்வதித்தார்.முகமது:

குர்-ஆன் 65:

4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (65:4)

6. தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் இவர்கள் கையாண்ட முறை (PREJUDICE)

இயேசுவும், முகமதுவும் தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி அதிகமாக வேதனைப்பட்டனர். ஆனால், இவர்கள் இதற்காக வித்தியாசமாக செயல்பட்டார்கள். இயேசு தன்னையும் தன் செய்தியையும் ஏற்றுக்கொள்ளாத மக்களின் இச்செயலுக்காக, அவர் தன்னுடைய செய்தியை இஸ்ரவேல் இல்லாத மக்களுக்கு (அன்னிய மக்களுக்கு) சொல்ல ஆரம்பித்தார்.

முகமதுவோ, கிறிஸ்தவர்களிடமும், யூதர்களிடமும், விக்கிர ஆராதனைக்காரர்களிடமும், மற்றும் தன் செய்தியை நம்பாதவர்களிடமும் நட்பு (நண்பர்களாக) இருக்கக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக கட்டளையிட்டார். (Muhammad strongly prohibits friendship with Christian, Jews, idolaters and unbelievers.)
 


இயேசு:
யோவான் 3

16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில்அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.


யோவான் 4:

7. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
8. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளைநோக்கி, தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி, நீர்யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்றுஉன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தயானால், நீயே அவரிடத்தில்கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ, ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும்ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர்பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும்தாகமுண்டாகும்.
14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.


முகமது:

குர்-ஆன் 5:


41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. (5:41)

44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)

51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)

முடிவுரை: (CONCLUSION) 

இயேசு மற்றும் முகமது இருவரும் ஒரே செய்தியை போதிக்கவில்லை என்பதை, எழுத்தறிவில்லாத பாமரன் கூட தெளிவாக புரிந்துக்கொள்வான். இந்த கட்டுரையின் நோக்கமானது, கிறிஸ்தவத்தையும், இஸ்லாமையும் நியாயம் தீர்ப்பதற்காக அல்ல. அதற்கு மாறாக, இவ்விரண்டும் வித்தியாசமானவை என்பதை சொல்வதற்காகவே. இந்த சரித்திர நபர்களின் போதனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அல்லது ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம். இப்போது நாம் பார்த்த இந்த வித்தியாசங்கள் நமக்கு "இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் போதனைகள்" வித்தியாசமானவை என்பதை காட்டுகிறது.

முகமதுவின் கருத்துப்படி "இயேசுவின் சீடர்கள் சுவிசேஷங்களை மாற்றியதாகவும், அதை, தான் சரி செய்வதாகவும்" நினைத்திருந்தார். அதனால், தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இவ்வளவு வித்தியாசங்கள்.

இதை படிக்கும் வாசகர்களைப் பொருத்தது, இவர் (முகமது) கொண்டு வந்த மாற்றங்கள் உண்மையிலேயே தேவையா அல்லது இவைகள் ஆன்மீக நல்ல வாழ்விற்கு எதிரானவையா என்று முடிவு செய்யவேண்டியது, படிக்கும் உங்கள் கையில் உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் சரி, முகமது இயேசுவின் போதனைகளை மதிக்கவில்லை என்பது புரியும். இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக இருக்கும் செய்தியை முகமது போதித்தார். இயேசு போதித்த ஒவ்வொரு செய்திக்கும் எதிராக போதித்து, இயேசு வாழ்ந்த வாழ்விற்கு எதிராக போதித்துவிட்டு, "இயேசு ஒரு முஸ்லீம் தீர்க்கதரிசி(நபி)" என்றுச் சொல்வது, வெறும் "உதடுகளால் செய்யும் புகழாரமே ஒழிய வேறில்லை
.

It is up to you, the reader, if these changes were necessary or morally objectionable. In any case Muhammad did not respect the teachings of Jesus. Muhammad preached the opposite. Calling Jesus a Muslim prophet is just paying lip service to Christians while at the same time contradicting everything Jesus stood up for and taught.


Source:  http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1400

Thanks to"FaithFreedomInternational"Isa Koran Home Page Back - Jesus Christ Index
1

செவ்வாய், 23 அக்டோபர், 2007

முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)

  

முஸ்லீம் vs. முஸ்லீம்

தமிழாக்கம்

முன்னுரை: பொதுவாக உலக இஸ்லாமியர்கள் "முஸ்லீம்களை" மற்ற மார்க்கத்தவர்கள் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்லி வேதனையடைவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவில் நடந்த சில கலவரங்களைச் சொல்வார்கள், அமெரிக்கா போரில் கொன்ற பட்டியலை காட்டுவார்கள். இதில் எனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால், முஸ்லீம்களே மற்ற முஸ்லீம்களை கொன்று குவித்துள்ளார்கள் என்றுச் சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இக்கட்டுரையில் ஆசிரியர், ஈரான்-ஈராக் போர், பாகிஸ்தான்-பாங்களாதேஷ் போர் என்று பட்டியலிருகிறார். இந்த போர்களில், மற்றும் மற்ற தாக்குதல்களில் அதிகமாக மரித்தது யார்? முஸ்லீம்களே. மற்றவர்கள் முஸ்லீம்களை கொன்றது ஆயிரம் என்றால், முஸ்லீம்களே முஸ்லீம்களை கொன்றது பதினாயிரம். இக்கட்டுரையில் சொல்லப்படும் செய்தி, அமைதியான முறையில் வாழும் முஸ்லீம்களை குறித்து அல்ல, இஸ்லாமின் பெயரை வைத்துக்கொண்டு தாக்குதல்கள் நடத்தும் நபர்களை மட்டுமே குறிக்கும். ஒரு எதிரியை அல்லது நபரை பழி வாங்குவேன் என்றுச் சொல்லி, தன் சொந்த மக்களை பல நூறுபேரை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் நபர்களைப் பற்றி ஆசிரியர் எழுதுகிறார். இந்தியாவில் வாழும் பல முஸ்லீம்களும் அமைதியை விரும்புகிறார்கள், இப்படி தாக்குதல் நடத்தும் நபர்களை வெறுக்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கமுடியாது. இக்கட்டுரையின் மூலமாக இஸ்லாமிய சிறும்பான்மையினரை, பெண்களை காப்பாற்றும்படி இஸ்லாமியர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் வேண்டுதலை முன்வைக்கிறேன்.

கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்கிறது...

முஸ்லீம் vs. முஸ்லீம்

Muslim versus Muslim ;
Jews kill a Palestinian and its death to Israel By: Lee Jay Walker Dip BA MAபொதுவாக ஊடகங்கள்(Media) "இஸ்லாமிய ஊடகங்கள்" போல குறுகிய கண்ணொட்டத்தை உடையதாக தெரிகிறது. ஏன்?

ஈரான்-ஈராக் போர், சொமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி, ஈராக், ஈரானில் குர்தீஸ் மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், 1970 லிருந்து 4 மில்லியனுக்கு அதிகமான முஸ்லீம்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்கள்; 1982ல் சிரியாவில் 20,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்; கடந்த 12 வருடங்களாக 1,00,000 ஷியா முஸ்லீம்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்த உள்நாட்டு கலவரங்களால் கொல்லப்பட்டார்கள்.

பசியினாலும், அடிமைகளாகவும் வேதனை அனுபவித்து 2 மில்லியன் கிறிஸ்தவர்களும், அனிமிஸ்ட்களும் சூடான் நாட்டில் முக்கியமாக ஆப்ரிக்கர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படி இருந்தும், அரபியர்களும், முஸ்லீம்களும் "நாம் அனைவரும் சகோதரர்கள்" என்று சொல்கிறார்கள், மற்றும் பாலஸ்தீன அரபியர்களின் கவலை, ஒட்டு மொத்த மனித இனத்தின் மீது நடத்தப்படும் குற்றம் என்று சொல்கிறார்கள். ஆனால், சௌதி அரேபியாவில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுதல், சூடான் நாட்டில் உள்ள அடிமைத்தனம், முஸ்லீமல்லாதவர்களை கூண்டோடு அழித்தல், அல்ஜீரியாவில் நடக்கும் கொடுமை, எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் கொடுமை, மற்றும் அரேபியர்களால் துன்புறுத்தப்படும் இதர செயல்கள் எல்லாம் ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கண்களை நீங்கள் மூடிக்கொண்டு, ஊடகங்கள் சொல்லும் செய்திகளை மட்டும் கேட்பீர்களானால், இஸ்ரவேல் நாடும், மற்ற இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகவும் கொடுமையாளர்களாகவும், "இரத்தத்தை குடிக்கிறவர்களாகவும்" தென்படுவார்கள், இவர்களிடம் எப்போதும் துன்பத்தை அனுபவிப்பது முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும். ஆனால், உண்மை அது அல்ல. அது வேறு மாதிரியாக உள்ளது. ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சௌதி அரேபியாவில் இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்கு மாறுகிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானில் கற்பழிக்கப்படும் பெண்கள், சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள், ஏனென்றால், அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று நிருபிக்க நான்கு ஆண்களை சாட்சிகளாக கொண்டுவராததால். பாங்களாதேஷில் புத்தமதத்தவர்களும், பாகிஸ்தானில் "அஹமதி முஸ்லீம்களும்", சொமாலியாவில் கிறிஸ்தவர்களும், பாகிஸ்தானில் இந்துக்களும், மற்றும் பலர் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், அல்லது பல நிலைகளில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு மிகவும் கீழ்தரமாக நடத்தப்படுகிறார்கள். பாங்களாதேஷில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகமாகும் காரணத்தால், புத்தமத்ததவர்கள் அதிகமாக தாக்கப்படுகிறார்கள், அவர்கள் கோயில்கள் தரைமட்டமாக்கப்படுகிறது, மற்றும் இவர்களின் பெண்களை முஸ்லீம் ஆண்கள் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, 2002ல் இஸ்லாமிய நாடுகளில் வாழும் பெண் இனம் மிகவும் அதிக கொடுமைக்கு ஆளாகியது, மற்றும் ஹானர் கில்லின்க் (Honour Killing) என்ற கொலைகள் அதிகமாக பெருகியது, பொதுவாக ஊடகங்கள் இவைகளை மேற்கத்திய மக்களுக்கு மறைத்துவிட்டது. வடநைஜீரியாவிலிருந்தும், இந்தோனேஷியாவின் சில பாகங்களிலிருந்து கொடுமைகளை தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிய பல ஆயிர கிறிஸ்தவர்களின் செய்தியை எப்படி ஊடகங்கள் மறைத்ததோ அதே போல இவைகளையும் ஊடகங்கள் மறைத்துவிட்டது. சூடானிலும், மௌரிடானியாவிலும்(Mauritania) முஸ்லீம்கள் செய்யும் அடிமைத்தன கொடுமைகளை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கேள்விபட்டு இருக்கமாட்டீர்கள். ஏனென்றால், ஆப்ரிக்காவில் மூஸ்லீம்கள் மூலமாக நடக்கும் அடிமைத்தனம் அவ்வளவு முக்கியம் இல்லை. ஆனால், இதே ஒரு இஸ்ரவேல் நாடோ, அல்லது கிறிஸ்தவ நாடோ அடிமைத்தனத்தை ஆதரிப்பதாகவும், செயல்படுத்துவதாகவும் செய்தி வெளியானது என்று நினைத்துக்கொண்டால், அப்போது எவ்வளவு பலமாக அதற்கு எதிர்ப்பு வரும் என்று கற்பனை செய்து பார்க்கமுடியுமா?

ஒருவன் "உண்மை இஸ்லாம்" என்றால் என்ன என்றும், உண்மை இஸ்லாமிய சட்டம் என்ன என்றும் தெரிந்துக்கொள்ள விரும்பினால், அவன் சௌதி அரேபியாவிற்கு சென்று பார்க்கக்கடவன். உங்களோடு கூட புத்தமதத்தவர்களையும், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், யூதர்களையும், சீக்கியர்களையும், ஜொரோஸ்ட்ரியன்களையும், மற்ற மத நம்பிக்கையுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு சௌதி அரேபியாவிற்குச் சென்று, அங்குள்ள சௌதி குடிமக்களிடம் தங்கள் நம்பிக்கையைப் பற்றி சுதந்திரமாக பேசச் சொல்லுங்கள், பிறகு என்ன நடக்கும் என்று பாருங்கள்? அப்போது உங்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்றும், முகமதுவின் காலத்தில் இஸ்லாம் என்ன செய்தது என்றும், அது அப்படியே மக்கா மதினா இடங்களில் இன்றளவும் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை சுலபமாக புரியும். சௌதி அரேபியாவில் உள்ள உங்கள் நண்பரிடம் நீங்கள், உங்கள் மதத்தைப் பற்றி சௌதி மக்களிடம் சுதந்திரமாக பேசுங்கள் என்று சொல்லமுடியாது. அப்படி சொல்லி, உங்கள் மார்க்கத்திற்கு வரும் படி சௌதி மக்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது. அப்படி யாராவது மாறினால், அதன் விளைவு மரணம் தான்.

இவைகள் ஒருபுறமிருக்க, முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீம் சிறும்பான்மையினரையும், பெண்களையும், ஹோமொசெக்ஸுவல்களையும் கொடுமைபடுத்தும் நிலை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் "இஸ்ரவேலுக்கு மரணம்" என்ற கோஷங்கள் இஸ்லாமிய நாடுகளில் தொடர்கிறது. இவர்களுடைய முக்கிய நோக்கம் என்ன? தன்னிடம் எண்ணை வளம் அதிகமாக உள்ளதால் சௌதி அரேபியா இப்படி தான் என்ன நினைத்தாலும் செய்யமுடியும் என்று நினைக்கிறதா? அல்லது இஸ்லாமியர் அல்லாதவர்களாகிய "நாம்" எவ்வளவு நல்லவர்கள் என்று ஒன்றும் செய்யாமல் நாம் சும்மா இருப்பதாலேயா? (கிறிஸ்தவர்களும் மற்றும் இதர இஸ்லாமியரல்லாதவர்களும் "இஸ்லாமுக்கு பலிகடா ஆக்கப்படுகிறோம்"). அல்லது இவை இரண்டும் காரணமா?

உண்மை எதுவாக இருந்தாலும், இந்த நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று மட்டும் உண்மை. அது என்னவென்றால், ஒட்டு மொத்த கிறிஸ்தவ தலைவர்கள், தங்கள் மிதமிஞ்சிய அமைதியினால், மௌனத்தினால் முஸ்லீமல்லாதவர்களை காட்டிக்கொடுத்துள்ளார்கள்; மேற்கத்திய ஊடகங்கள் வெட்கப்படவேண்டும்.

"Whatever the "truth is," and of course it will be because of multiple factors, one reality remains and this is that Christian leaders have on the whole betrayed non-Muslims due to their overwhelming silence; and Western media should be ashamed of basic generalizations which should shame them. "

1970லிருந்து முஸ்லீம்கள் 4 மில்லியன் முஸ்லீம்களை கொன்று குவித்தது போல, அமெரிக்காவும் மூன்று போர்களில்(Cyprus, Bosnia, and Kosovo) இஸ்லாமுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு, அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானில் உள்ள அடிப்படைவாத இஸ்லாமுக்கு தங்கள் உதவியை கொடுத்துள்ளார்கள். ஆனால், இந்த இரண்டு நாடுகளும், ஈஸ்ட் டிமொரில் (East Timor) 1970 களில் கொள்ளப்பட்ட 2,00,000 (2 லட்சம்) கிறிஸ்தவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

எனவே, இஸ்லாமிய நாடுகளில் உள்ள "இஸ்லாமியரல்லாதவர்களுக்காவும், பெண்களுக்காகவும், இஸ்லாமிய சிறும்பான்மையினருக்காகவும்" யார் குரல் கொடுக்கப்போகிறார்கள். யாருமே இல்லை! ஆனால், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் இன்னும் அதிகவேகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்துக்கொண்டே இருக்கிறது.

ஆகையால், நான் புலம்புகிறேன், இதோ இன்னொரு முறை என் காதுகளில் இஸ்லாமிய ஊடகங்களிலிருந்தும், மேற்கத்திய ஊடகங்களிலிருந்தும் "இஸ்ரவேலுக்கு மரணம்" என்ற கோஷம் விழுகிறது.

Source: http://www.faithfreedom.org/Articles/Leejaywalker/muslim_vs_muslim.htm

------------------------கட்டுரை முற்றிற்று---------------------------

என் பங்கிற்கு ஏதாவது விவரங்கள், தொடுப்புக்கள் கொடுக்கமுடியுமா என்று தேடிப்பார்த்தேன். எனக்கு கிடைத்த சில விவரங்களை கீழே தருகிறேன்.

1. பாகிஸ்தானில் பேநஜிர் புட்டோவை கொல்ல செய்யப்பட்ட தாக்குதல், 130 பேர் மரணம், பல நூறு பேர் காயம் - பெரும்பான்மையாக முஸ்லீம்கள் தானே... இந்தியாவில் ஹைதராபாத் மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் மரித்தவர்கள், அஜ்மீர் தர்காவில், மற்றும் இன்னும், உலகமனைத்திலும் ஷிய, சுன்னி முஸ்லீம்களின் மசூதிகளில் வெடிக்கும் குண்டுவெடிப்பில் மரிப்பவர்கள் யார்? முஸ்லீம்கள் தானே... யார் இவர்களை காப்பாற்றுவார்?

2. ரமளான் மாதத்தில் போர் செய்யக்கூடாது என்று முகமது சொன்னார் என்றுச் சொல்வார்கள், ஆனால், இந்த ஆண்டு ரமளான் மாதத்தில் :

Once again, Islam puts up big Ramadan numbers: 1,327 dead bodies in 282 terror attacks in 20 countries during its holiest month.

Source : http://www.thereligionofpeace.com/


3. ஒரு ஆண்டுக்கு 5000 பெண்கள் "ஹானர் கில்லின்க்" என்ற முறையில் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் எல்லாரும் இஸ்லாமிய பெண்கள் தான்.

The United Nations Population Fund estimates that the annual worldwide total of honor-killing victims may be as high as 5,000 women . Source: http://en.wikipedia.org/wiki/Honor_killing


4. ஈராக்-ஈரான் யுத்தத்தில் மரித்தவர்கள் (அ) காயப்பட்டவர்களின் புள்ளிவிவரங்கள்.

Source : http://en.wikipedia.org/wiki/Iran-Iraq_War

Casualties

Iran- Est. 500,000-750,000 soldiers/militia/civilians killed or wounded

Iraq- Est. 375,000-500,000 soldiers/militia/civilians killed or wounded


5. பாகிஸ்தான் - பாங்களாதேஷ் யுத்தத்தின் விளைவு:

Pakistan vs.Bangladesh war

Source : http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

Casualties

India: 1,426 KIA

3,611 Wounded (Official)

Mukti Bahini: NA*

Pakistan ~8,000 KIA[citation needed]

~10,000 Wounded[citation needed]

93,000 POWs[citation needed]

Civilian death toll: Between 307,013–3,000,000[3]

6. The Real 2006 'Iraq Body Count'

16,791 Iraqi civilians killed last year by ISLAMIC Terrorists

225* Iraqi civilians killed collaterally in incidents involving Americans (and Islamic Terrorists)

Source: http://www.thereligionofpeace.com

7. இந்த அக்டோபர் மாதம் , வாராந்திர தாக்குதல்கள், மரணங்களின் எண்ணிக்கை (Weekly Jihad Report Oct. 07 - Oct. 12)

தாக்குதல்கள் - Jihad Attacks: 63

மரித்தவர்களின் எண்ணிக்கை - Dead Bodies: 359

காயப்பட்டவர்கள்- Critically Injured: 572

Source: http://www.thereligionofpeace.com

8. கடந்த இரண்டு மாதங்களில் 2521 பேர் மரித்துள்ளனர், 4060 பேர் காயப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்துள்ளது. பெரும்பானமையாக முஸ்லீம் நாடுகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

Source: http://www.thereligionofpeace.com/index.html#Attacks

9. இது வரை எத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளது, எத்தனை பேர் மரித்துள்ளார்கள், காயப்பட்டுள்ளார்கள் போன்ற விவரங்களை கிழ்காணும் தொடுப்பில் காணலாம்.

Source: http://www.thereligionofpeace.com/attacks-2007.htmIsa Koran Home Page Back - Articles Index
1

திங்கள், 1 அக்டோபர், 2007

நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...? சந்தேகம் தீர்த்துவிடுங்கள், பிளீஸ்

 நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

முன்னுரை: நேசமுடன் தளத்தில் " இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் " என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில் சொல்லப்பட்ட செய்தி இது தான்:

1. சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினார்.

2. குவைத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கை "அல் முஜ்தமா" என்ற அரபு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

3. இவர் மூலமாக இதுவரை(5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்கள். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு இக்கட்டுரையில் "சொல்லப்பட்ட செய்தியைப்" பற்றி சில சந்தேகங்கள் தோன்றின, அவைகளை தீர்த்துக்கொள்ள எனக்கு ஆவலாக உள்ளது. என் சந்தேகங்களை "நேசமுடன்" தளத்திற்கு கேள்விகளாக முன்வைக்கின்றேன். தயவு செய்து என் சந்தேகங்களை தீர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

இக்கட்டுரையை கீழ்கண்ட பாகங்களாக பிரிக்கவிரும்புகிறேன்.

1. நேசமுடன் கட்டுரை.

2. குவைத் பத்திரிக்கை அல் முஜ்தமா பற்றி

3. பேட்டியில் சொல்லப்பட்ட செய்திக்கு ஈஸா குர்-ஆன் கருத்து.

4. இஸ்லாமிய உலகில் நிலவும் புரளிகள் அல்லது வதந்திகள்

5. சூடான் (இஸ்லாமிய) நாடு பற்றிய சில செய்திகள்

6. முடிவுரை.1. நேசமுடன் கட்டுரை

கீழ்கண்ட தொடுப்பில் "நேசமுடன்" தள கட்டுரையை படிக்கலாம்.

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் Source: http://neshamudan.blogspot.com/2007/09/blog-post_9701.html

இக்கட்டுரையில் நான் நேசமுடன் தளகட்டுரை முழுவதும் Quote செய்து பதில் தருகிறேன்.


2. குவைத் பத்திரிக்கை அல் முஜ்தமா பற்றி:

நேசமுடன் தளத்தில் ஒரு மிகப்பெரிய செய்தியைச் சொல்லி இருக்கிறார்களே தவிர, அதற்கான ஆதாரத்தை கொடுக்க மறந்துவிட்டார்கள். பத்திரிக்கையின் பெயரைச் சொன்னார்களே தவிர அதன் தொடுப்பு தரவில்லை. முக்கியமாக இப்படி மாற்று மத சம்மந்தப்பட்ட விவரங்களைச் சொல்லும் போது, அந்த கட்டுரையின் மூல மொழி தொடுப்பு ( Url or Source Link) தரவேண்டும்.

கட்டுரையில் சொல்லப்பட்ட குவைத் பத்திரிக்கை "அல் முஸ்தமா" என்ற பத்திரிக்கையைப் பற்றி இணையத்தில் தேடும் போது, அதன் தொடுப்பு கிடைத்தது.

அரபி மொழியில் பத்திரிக்கையின் தொடுப்பு:  http://www.almujtamaa-mag.com/detail.asp?InServiceID=3&intemplatekey=mainpage&Inmagflag=1

இந்த பத்திரிக்கையை கூகுள் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படிக்க: Translated version in English:

http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fwww.almujtamaa-mag.com%2Fdetail.asp%3FInServiceID%3D3%26intemplatekey%3Dmainpage%26Inmagflag%3D1&langpair=ar%7Cen&hl=en&ie=UTF-8&oe=UTF-8&prev=%2Flanguage_tools  

நான் கூகுள் உதவி கொண்டு பல பக்கங்களை, மற்றும் பல வார்த்தைகள் கொடுத்து தேடிப்பார்த்தேன், ஆனால், என்னால், நேசமுடன் தளம் மொழிபெயர்த்த சரியான கட்டுரையை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இப்பத்திரிக்கையின் இம்மாத 15ம் தேதியின் பிரதியை படிக்க:

Issue Date: 15/09/2007  http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1769

Issue Date: 05/01/2002  http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1483

Issue Date: 04/01/2003  http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1533

அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்றும் ஆங்கிலத்திலிருந்து அரபிக்கும் மொழிபெயர்ப்பதற்கு கூகுள் தொடுப்பு:

Google Translate Page :  http://translate.google.com/translate_t

கூகுள் தொடுப்பை பயன்படுத்தி மேலே உள்ள தொடுப்புகளை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் படிக்கலாம்.

நேசமுடன் தள ஆசிரியருக்கு:

தயவு செய்து, இந்த கட்டுரை வெளி வந்த தொடுப்பு, மற்றும் தேதியை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் பத்திரிக்கையின் எடிடருக்கு மெயில் அனுப்பி மற்ற விவரங்களை தெரிந்துக்கொள்கிறேன்.

ஒரு விவரத்தை சொல்லும் போது, என்ன சொல்கிறோம் என்பதை விட, நாம் சொன்ன விவரங்கள் உண்மை என்று நிருபிப்பதற்கு எவ்வளவு ஆதாரங்கள் காட்டுகிறோம், என்பது தான் முக்கியம். எனவே, நீங்கள் மொழிபெயர்த்த கட்டுரையின் தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

(எனக்கு அரபி தெரியாத காரணத்தால், என்னால், சரியாக தேடமுடியவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் மொழிபெயர்த்து பார்க்க அதிக நேரம் ஆகிறது.)

3. பேட்டியில் சொல்லப்பட்ட செய்திக்கு ஈஸா குர்-ஆன் கருத்து.

நேசமுடன் கட்டுரை படித்தவுடன் பல கேள்விகள் எனக்குள் எழும்பின. முதலாவது, அவர் சொன்ன பத்திரிக்கையில், எந்த தொடுப்பில் இக்கட்டுரை வெளியானது என்று பற்றி தெரிந்துக்கொண்டு பிறகு பதில் எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால், என்னால் தொடுப்பை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆகையால், அவரிடமே தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுள்ளேன்.

இப்போது அவர் கட்டுரைப் பற்றி என் கருத்தை (கேள்விகளை அல்லது சந்தேகங்களை) முன்வைக்கிறேன்.

நேசமுடன் எழுதியது:

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்

(கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலாளர் )

பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு :
சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இந்த பெயரைக் கொண்ட ஒரு பொதுச் செயளாலர் இருக்கிறாரா என்று இனணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால், எனக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே, இதைப் பற்றி ஒரு தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரையை முழுவதுமாக படித்தால், இவர் இப்படி இஸ்லாமுக்கு மாறினாரா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தெளிவிற்கு வாசகர்கள் வரமுடியும். இவர் இஸ்லாமுக்கு மாறவில்லை என்று என்னால் 100% அடித்துச் சொல்லமுடியாது, ஆனால், நேசமுடன் தள கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்களை பார்க்கும் போது, இவர் இஸ்லாமுக்கு மாறினார் என்பது ஒரு பொய்யான செய்தி அல்லது ஒரு வதந்தி என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே, அஷோக் கோலன் யாங் பற்றிய இதர விவரங்களைக் கொடுத்து, தான் வெளியிட்ட செய்தி "உண்மை" என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு நேசமுடன் தளத்திற்கு உள்ளது.

நேசமுடன் எழுதியது:

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

நான் இந்த பத்திரிக்கையின் இணைய தொடுப்பை கொடுத்துள்ளேன். இந்த அல் முஸ்தமா பத்திரிக்கை வாரம் ஒரு முறை வெளியாகும் பத்திரிக்கை என்று தெரிகிறது.
இத்தளத்தில் 2001ம் ஆண்டிலிருந்து வெளியான பிரதிகள் இணையத்தில் இருக்கின்றன.

எனவே, நேசமுடன் தள கட்டுரை ஆசிரியர், அவர் சொன்னது போல இத்தளத்தில் எந்த தொடுப்பில் இந்த கட்டுரை வெளியானது என்று தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தொடுப்பை கொடுத்தால் மட்டும் போதும், கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருள் உதவியுடன் நான் ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்துக்கொள்வேன். பிறகு அந்த பத்திரிக்கைக்கு நான் மெயில் அனுப்பி மற்ற விவரங்களை நான் சேகரித்துக்கொள்கிறேன்.

நேசமுதம் எழுதியது:

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை,
அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இஸ்லாமுக்கு மாறியதாக சொல்லப்படும் அஷோக் காலன் யாங் அவர்கள் உண்மையிலேயெ மாறியிருந்தால், இந்த வார்த்தைகளை சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு வதந்தி என்று நிருபிக்கப்பட்டால், இது ஒரு முஸ்லீமின் உள்ளத்திலே மறைந்திருந்து வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.

பைபிளின் முதல் புத்தகமாகிய "ஆதியாகமத்திலிருந்து" புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" வரை கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருக்கின்றது, மட்டுமல்ல, 40க்கும் அதிகமாக ஆசிரியர்களால் தேவனின் ஆவியைக்கொண்டு எழுதப்பட்டது. இந்த ஆசிரியர்களில் சிலர் படித்த மேதைகள், சிலர் ஆசாரியர்கள், சிலர் மேய்ப்பர்கள், சிலர் தீர்க்கதரிசிகள், சிலர் இராஜாக்கள், மருத்துவர்கள், சிலர் மீனவர்கள் என்று சமுதாயத்தின் அடிமட்ட மனிதர்கள் முதல் கொண்டு, உயர்ந்த பதவி வகித்த அரசர்கள் வரை இருக்கிறார்கள்.

40க்கும் மேல் ஆசிரியர்கள், சுமாராக 1500 ஆண்டுகள் வரை நீடிக்கும் பைபிளின் மொத்த சாராம்சம் சற்றும் மாறாமல் ஒரே ஆசிரியர் எழுதியது போல் இருந்து, கடந்த 3500 ஆண்டுகளாக மக்களை நல்வழி படுத்திக்கொண்டு இருக்கிறது பைபிள்.

ஆனால், குர்-ஆன் 23 ஆண்டுகளுக்குள் ஒரு ஆசிரியரால் அதாவது முகமதுவால் எழுதப்பட்டது. அதன் விளைவு என்ன என்று தெரிந்துக்கொள்ள நாளைக்கு வெளிவரும் செய்தித்தாளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேசமுடன் எழுதியது:

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.

இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள் .

ஈஸா குர்-ஆன் எழுதியது:

முகமது தான் ஒரு இறைத்தூதன் என்பதையும், குர்-ஆன் இறைவனின் வேதம் என்பதையும், அல்லாவும், முகமதுவும் நிருபிக்கவே இல்லை.

முகமது என்பவர் பைபிளின் தேவன் அனுப்பிய தூதனாக இருந்திருந்திருந்தால், முகமதுவை இறைத்தூதன் என்பதை நிருபிக்க தேவன் பல அற்புதங்களை அவர் மூலம் செய்துக்காட்டி இருந்திருப்பார். யூதர்கள் அற்புதம் செய்து காட்டும் படி கேட்டாலும், முகமதுவும், அல்லாவும் அற்புதங்கள் செய்ய மறுத்துவிட்டனர்.

பைபிளில், இஸ்ரவேல் மக்கள் தன்னை ஒரு இறைதூதர் என்று நம்பமாட்டார்கள் என்று மோசே தேவனிடம் கேட்கும் போதும், எகிப்து இராஜா நம்பமாட்டான் என்று மோசே முறையிடும் பொதும், பல அற்புதங்கள் மூலம் "மோசேயை ஒரு இறைத்தூதன்" என்பதை பைபிளின் தேவன் நிருபித்தார். இயேசுவும் தன்னை ஒரு தேவகுமாரன் என்பதை நிருபிக்க அனேக அற்புதங்கள் செய்து நிருபித்தார். மனிதர்கள் வெறுமனே நம்பவேண்டும் என்று பைபிளின் தேவன் எதிர்பார்க்கவில்லை. தான் அல்லா என்றும், முகமது தன் தூதன் என்றும் நிருபிக்கும் பொறுப்பு அல்லாவிற்கு உண்டு, அதை அல்லா செய்யவில்லை.

நேசமுடன் எழுதியது:

இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இங்கு தான் நேசமுடன் தளம் சதம் அடித்தது.

இது வரை சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருந்த கட்டுரை, இங்கு திசை திரும்புகிறது. எனக்கு கேள்விகள் எழ காரணமானது இந்த இரண்டு வரிகள் தான்.

அதாவது இவரது முயற்சியினால்:

1. கிறிஸ்தவர்கள் 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.

2. இவர்களில் 2,500 பேர் சபை போதகர்கள்.

இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும்?சூடான் நாட்டைப் பற்றிய சில புள்ளிவிவரங்களை காண்போம்:

சூடான் நாட்டின் ஜனத்தொகை : 3,69,92,490 (July 2006 estimate)

சூடான் நாட்டின் அரசாங்கத்தின் நிலைப்பாடு : இஸ்லாமிய நாடு

சூடான் நாட்டில் முஸ்லீம்களின் சதவிகிதம்: 75% ( 2,77,44, 367.5 )

சூடான் நாட்டில் கிறிஸ்தவர்களின் சதவிகிதம்: 4-10% ( 14,79,700 - 36,99,249)

இதர மார்க்க மக்களின் சதவிகிதம் : 15% (55,48,873.5)WorldFacts என்ற தளம் சூடான் நாட்டில் கிறிஸ்தவர்கள் 5%, முஸ்லீம்கள் 70%, மற்றமார்கங்கள் 25% என்றுச் சொல்கிறது. http://worldfacts.us/Sudan.htm

எனவே, நாம் சூடான் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் 7% என்று பொதுவாக எடுத்துக்கொள்ளலாம் ((4+10)/2 = 7). அதாவது 25,89,475 கிறிஸ்தவர்கள் என்று கணக்கிடலாம்.

நேசமுடன் கட்டுரையின் கணக்குப்படி, சூடான் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் மொத்த ஜனத்தொகையில் 150000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.

நாம் கணக்கிட்ட சூடான் கிறிஸ்தவ ஜனத்தொகை: 25,89,475    (7%)

இஸ்லாமுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை: 1,50,000

மொத்த கிறிஸ்தவ ஜனத்தொகையில் இஸ்லாமுக்கு மாறியவர்களின் சதவிகிதம்: 5.79 ( approx.. 5.8 %)

இது ஒரு உலக மகா சாதனை :

ஆக, சூடான் நாட்டில் உள்ள மொத்த கிறிஸ்தவ ஜனத்தொகையில் 5.8 சதவிகிதம் பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள், இது ஒரு உலக மகா சாதனை, அதுவும் 5 ஆண்டுக்குள் (2002 லிருந்து 2007)சில முக்கிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள்:


1. ஒரு இஸ்லாமிய நாட்டில் இப்படிப்பட்ட சாதனை நடந்து இருந்தும், ஏன் இது வரை இச்செய்தி இதர செய்தித்தாள்களில் வரவில்லை?

2. இப்படி இத்தனை பேர் இஸ்லாமுக்கு மாறுவது, உலக இஸ்லாமிய நாடுகளுக்கும், மக்களுக்கும் அதிக மகிழ்ச்சியைத் தரும் செய்தி. ஆனால், ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் இச்செய்தி வரவில்லை? அப்படி வந்திருந்தால்? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

3. இஸ்லாமிய மீடியாவிற்கு மட்டுமல்ல, மேற்கத்திய மீடியாவிற்கும்(செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையம்) இது ஒரு முக்கியமான செய்தி. இருந்தும் ஏன் ஒரு செய்தித்தாள்களிலும் வரவில்லை?

4. இவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தக்காரரான "அஷோக் கோலன் யாங்" இப்போது எந்த நாட்டில் "இஸ்லாமிய சேவை" செய்கிறார்?

5. இவரை, குவைத் பத்திரிக்கை தவிர வேறு ஏதாவது இஸ்லாமிய அல்லது மற்ற பத்திரிக்கைகள் பேட்டி கண்டுள்ளார்களா?
ஏன் மற்ற பத்திரிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய விஷயம் தெரியாமல் போனது?

6. இஸ்லாமுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்ததுபோல, 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமுக்கு மாறியிருந்தால்? இவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் ?

7. இவர்களில் சிலர் சாதாரண இஸ்லாமிய விசுவாசியாகவும், சிலர் இஸ்லாமிய இமாம் அல்லது போதகராகவும் மாறியிருப்பார்கள் அல்லவா? இப்படி இஸ்லாமிய போதகரானவர்கள் எத்தனைப் பேர், இவர்கள் எங்கே ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்?

8. குறைந்தபட்சம் இந்த செய்தி, கிறிஸ்தவ மீடியாவிற்காவது தெரிந்திருக்கும்? ஆனால், இது வரை இப்படி 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை? வேறு யாருக்காவது ஏதாவது விவரம் தெரியுமா?

9. இப்படி மாறியிருந்தால், சூடான் இஸ்லாமிய அரசாங்கம், இந்த இஸ்லாமியர்களாக மாறியவர்களுக்கு சில சலுகைகள் அல்லது சில வசதிகள் கொடுத்து இருக்கவேண்டும். ஏனென்றால்,
இந்த 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமியர்களாக மாறியபிறகும் கிறிஸ்தவ போதகர்களாக இருக்கமாட்டார்கள். அகையால், இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமல்லவா? சூடான் அரசாங்கள் இப்படி வேலை வாய்ப்பு கொடுத்ததாக ஏதாவது செய்தி உண்டா?

ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும், அதாவது 150000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்பதும், 2500 பேர் இவர்களில் போதகர்கள் என்பதும், இஸ்லாமியர்களால் தெரிந்தே சொல்லப்பட்ட பொய் ஆகும்.

நேசமுடன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

ஈஸா குர்-ஆன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று பல வகையில் மக்களுக்கு தொண்டு செய்கின்றன. ஆனால், இவைகள் மூலமாக மட்டும் தான் கிறிஸ்தவம் பரவுகின்றது என்பது மட்டும் உண்மையில்லை. காரணம், உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள் என்று கணக்கு எடுங்கள், ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை ஆண்டுகளாக இயங்கிவருகின்றன என்று கணக்கெடுங்கள். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ சதவிகிதத்தை கணக்கெடுங்கள்.

இதே போல, இஸ்லாம் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் கல்லுரிகள் எத்தனை என்று கணக்கெடுங்கள், மற்றும் இஸ்லாமிய சதவிகிதத்தை கணக்கெடுங்கள். இப்போது இந்தியாவில் கிறிதவ வளர்ச்சியையும், இஸ்லாமிய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இந்தியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் சதவிகிதத்தை கணக்கெடுங்கள். யாருடையது அதிகம் என்று பாருங்கள், மற்றும் மக்கள் வளர்ச்சி யாருடையது அதிகம் என்று பாருங்கள்.

இந்தியாவில் இஸ்லாம், அமைதியான முறையில், சேவை செய்து பரப்பப்பட்டதா என்று சிறிது யோசித்து பாருங்கள்.

நேசமுடன் எழுதியது:

உதவிகளை வழங்குவதன் மூலம்

தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பணம், பதவி மற்றும் பெண் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று.

நீங்கள் தவறுதலாக "கிறிஸ்தவத்தின் பால்" என்று எழுதவேண்டும் என்று நினைத்து, "இஸ்லாத்தீன் பால்" என்று எழுதியுள்ளீர்கள்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் "பெண்" மற்றும் "பணம்" போன்றவற்றை காண்பித்து தானே மக்களை இஸ்லாமுக்கு அழைத்தார் முகமது.

முஸ்லீமாகிறவர்களுக்கு பணம் கொடுத்த முகமது:

புதிதாக இஸ்லாமுக்கு வருபவர்களுக்கும், இஸ்லாமுக்கு மக்களை அழைக்க முகமது பணத்தை பயன்படுத்தியதாக கீழ்கண்ட ஹதீஸ் வசனம் சொல்கிறது.Volume 4, Book 53, Number 374:

Narrated Anas:

The Prophet said, "I give to Quraish people in order to let them adhere to Islam , for they are near to their life of Ignorance (i.e. they have newly embraced Islam and it is still not strong in their hearts."
Source: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/053.sbt.html#004.053.374


குர்-ஆன் கூடச் சொல்கிறது, புதிதாக இஸ்லாமுக்கு வருபவர்களை தக்கவைக்க அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும், அதுவும் இஸ்லாமியர்கள் "ஜாகாத்" ஆக கொடுக்கும் பணத்திலிருந்து.

குர்-ஆன் 9:60 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.இஸ்லாமிய போர் செய்தால், பெண்கள் இலவசம்:

இஸ்லாமிய போர் செய்துவிட்டு, அதில் கிடைக்கும் பெண்களை எல்லாரும் (முகவதுவோடு கூட) தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டதாக பல ஹதீஸ்கள் உண்டு, இதற்கு மறுப்பு சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Volume 3, Book 46, Number 717: Narrated Ibn Aun:

I wrote a letter to Nafi and Nafi wrote in reply to my letter that the Prophet had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day. Nafi said that Ibn 'Umar had told him the above narration and that Ibn 'Umar was in that army.
Source:  http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/046.sbt.html#003.046.717இஸ்லாமியர்களுக்கு இங்கு மட்டும் அல்ல, மரித்த பிறகும் சொர்க்கத்தில் அல்லா நிறைய பெண்களை ஆயத்தப்படுத்தி கன்னிகளாக வைத்திருப்பார். செம ஜாலி தான்.

எனவே, "பெண்கள் காட்டி" என்று கிறிஸ்தவத்திற்கு எதிராக விரல் நீட்ட இஸ்லாமுக்கு என்ன அதிகாரம் அல்லது தகுதி இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்?

நேசமுடன் எழுதியது:

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே . ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

ஆமாம், இஸ்லாமியர்களின் மத்தியிலே ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது. ஆனால், இஸ்லாம் அல்லாத மாற்று மத மக்கள் இஸ்லாமுக்கு எதிரிகள் அப்படித்தானே. மாற்று மத மக்கள் அந்த ஒரே இறைவனின் மக்கள் என்றாலும், இஸ்லாமியர்களோடு நண்பர்களாக முடியாது.

கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று அல்லாவே சொல்வது தான் ஆச்சரியம்.

கிறிஸ்தவ சபையிலே ஏழைகளை, கலர் வித்தியாசம் உள்ளவர்களை சேர்க்கக்கூடாது என்று பைபிளிலிருந்து ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா?

ஒரு காலகட்டத்தில் புத்தியில்லாதவர்கள் செய்த தவறை இப்போது சுட்டிக்காட்டினால், பைபிள் இப்படி வித்தியாசம் காட்டுங்கள் சொன்னதாக ஆகுமா என்ன?

ஆனால், குர்-ஆனில், மாற்றுமதத்தவர்களை நண்பர்களாக கொள்ளாதே என்ற வசனம் அப்படியே உள்ளது.

"இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புக்கள்" என்றால் என்ன?

இஸ்லாமியர்கள் மீது வெடிகுண்டு போடவேண்டும் என்ற கருத்துடைய கிறிஸ்தவ அமைப்புக்களா? அல்லது இஸ்லாமியர்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அழைக்கும் அமைப்புக்களா?

நேசமுடன் எழுதியது:

பரமரகசியக் கூட்டங்கள் :

கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள் .

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

முதலாவது இப்படிப்பட்ட கூட்டம் உண்மையில் நடந்ததா இல்லையா? என்பது, எழுதுகிற நேசமுடன் தள ஆசிரியருக்கும், குவைத் பத்திரிக்கைக்கும் தான் தெரியும்.

நண்பரே நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். நாங்கள் கிறிஸ்தவர்கள் எங்கள் வருமானத்தில் 10த்தில் ஒரு பாகத்தை தசமபாகமாக நாங்கள் செல்லும் சபைக்கு கொடுக்கிறோம். எதற்காக? மற்ற நாடுகளில் வெடிகுண்டு வைப்பதற்கு அல்ல, மசூதிகளில், இரயில் நிலையங்களில், இரயில் பெட்டிகளில் பள்ளிகளில் வெடிகுண்டு வைப்பதற்கு அல்ல.

தான் வாழும் தாய் நாட்டில் தீவிரவாத செயல் புரிய தேவையான துப்பாக்கிகளை வாங்க அல்ல.

ஆனால், இயேசுவின் அன்பை உலகிற்கு அறிவிக்க மட்டும் தான். நாங்கள் பெற்ற மன நிம்மதியை மற்ற மக்களுக்கு கொடுக்க, உலகத்தின் மன நிம்மதியை கெடுக்க அல்ல.

நேசமுடன் எழுதியது:

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள் . இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இதை படிக்கும் போது சிரிப்பு வருகிறது. அதாவது "திருநெல்வேளிக்கு அல்வா கொடுப்பது ", "திருப்பதிக்கு மொட்டையா " என்று கேள்வி பட்டு இருக்கிறோம் அல்லவா அது போல இருக்கிறது.

அதாவது ஒரு முஸ்லீம் அல்லது முஸ்லீமாக மாறிய ஒருவர், தன்னை கிறிஸ்தவர்கள் கொன்று விடுவதாக பயமுறுத்த பார்த்தார்கள், முயற்சித்தார்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

1. கிறிஸ்தவத்திலிருந்து ஒருவர் வெளியே சென்று விட்டால், அவரை கொலை செய்யும்படி பைபிள் சொல்வதில்லை. ஆனால், குர்-ஆன் சொல்கிறது, கொல்கிறது. செய்தித்தாள்களை பார்க்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு தெரியும். எத்தனை பேர்கள் இப்படி இஸ்லாமிய நாடுகளில் மரிக்கிறார்கள் என்று.

2. உண்மையிலேயே அஷோக் கோலன் யாங் சொல்வது உண்மையாக இருந்தாலும், அப்படி கொலை செய்யமுயற்சித்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

3. அதாவது, "ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டவேண்டும்" என்று ஒரு முஸ்லீம் சொன்னால், எப்படி அவர் இஸ்லாமுக்கு சம்மந்தப்பட்டவர் இல்லையோ, அதே போலத் தான், மற்றவனை கொலை செய்யமுயற்சிக்கும் நபர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல.

4. இப்போதுள்ள சூழலில் இப்படி கொலை செய்ய கிறிஸ்தவர்கள் முயற்சித்தார்கள் என்று இஸ்லாமிய உலகிற்குத் தெரிந்தால், அவ்வளவு தான், இஸ்லாமிய பத்திரிக்கைகளுக்கு புதையல் கிடைத்தது மாதிரித் தான்.

5. கிறிஸ்து ஒன்றும் கொலை வெறி பிடித்தவர் அல்ல, எங்கள் "தேவன்" அல்லாவும் அல்ல.

[முதலாவது, இப்படி ஒருவர் இஸ்லாமுக்கு மாறி இத்தனை ஆயிரம் பேரை மாற்றினார் என்பது பொய் என்று நிருபிக்கப்படுமானால், இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம், இஸ்லாமியர்களின் கைவேலை அல்லாமல் வேறு என்ன?]

நேசமுடன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

எங்கள் திட்டமிடுதல் மற்றவர்களின் உயிரை எப்படி குடிக்கலாம் என்று இல்லாமல் எப்படி எங்கள் உயிரை கொடுக்கலாம் என்று இருக்கும். உங்களால் முடிந்தால், உலகத்தில் இதுவரை எத்தனை கிறிஸ்தவ மிஷனரிகள், போதகர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சொல்வதற்காக உயிரை விட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என்றும், அதே போல எத்தனை இஸ்லாமிய இமாம்கள், போதகர்கள் அல்லாவின் செய்தியை பரப்புவதற்கு மற்றவர்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். புனிதப்போர் என்றுச் சொல்லி, அதில் மரித்தவர்கள் பட்டியல் உலகத்திற்கு வேண்டாம். சாதாரணமாக இஸ்லாமைப் பற்றி பிரச்சாரம் செய்தவர்கள், எப்படி மரித்தார்கள் என்றுச் சொல்லுங்கள்.

நேசமுடன் எழுதியது:

எகிப்தில் செயல்பட்டு வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்கு எதிராகவும், முடியுமானால் அதன் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்வதற்கும், எனக்கு 1 மில்லியன் 800 ஆயிரம் (18 லட்சம்) சம்பளமாகக் கொடுக்கப்பட்டது,

ஈஸா குர்-ஆன் எழுதியது:

அருமையான தகவல். அய்யா! நான் சொல்வதை முதலாவது கேளுங்கள்.1. இஸ்லாமிய ஸ்தானப தலைவரை கொல்லும் அளவிற்கு உலகில் யாருக்கும் தைரியம் இல்லை. மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கு அதன் அவசியமில்லை.

2. இது ஒரு பெரிய பொய்யாக இருக்கவேண்டும்.

3. இல்லை, இது உண்மை என்றுச் சொல்வீர்களானால், முதலாவது, யார் அப்படி பணம் கொடுத்தார்கள்? எந்த ஸ்தாபனம் இப்படி கொடுத்தது என்று உலகிற்குச் சொல்லச் சொல்லுங்கள்.

4. இப்படிப் பட்டவர்களுக்கு முதலாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.


சில சந்தேகங்கள்:

இவருக்கு இப்படி பணம் கொடுக்க முயன்றார்கள் என்றால்,
இவர் இதற்கு முன்பு எத்தனை முஸ்லீம் தலைவர்களை அப்படி கொன்று இருக்கிறார்?

அனுபவம் இல்லாதவர்களிடமா இப்படி கொலை செய்ய பணம் கொடுப்பார்கள்? எங்கேயோ இடிக்கிறதே .. (இவர் பல முஸ்லீம் தலைவர்களை கொன்று இருக்கவேண்டும், சின்ன சின்ன கொலைகள் செய்து வெற்றி பெற்றால் தானே பெரிய தலைவர்களை கொலை செய்ய இவருக்கு பணம் கொடுப்பார்கள்....?)

இல்லை, இது தான் இவர்களுடைய(கிறிஸ்தவர்களுடைய) முதலாவது கொலை முயற்சியா?

இதில் இன்னொரு திருப்புமுனை கேள்வி என்னவென்றால், சூடான் ஒரு இஸ்லாமிய நாடு, கிறிஸ்தவ ஆலயங்களின் மீது குண்டு வீசுவதும், கிறிஸ்தவ பெண்களை கற்பழிப்பதும், கிறிஸ்தவர்களை அடிமைகளாக ஆக்குவதும் சூடான் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள். இப்படிப்பட்ட நிலையில், ஒரு இஸ்லாமிய ஸ்தாபன தலைவர்களை கொலை செய்ய கிறிஸ்தவ முயற்சி, அதுவும் எகிப்து.... எப்படி சாத்தியம். [பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு, இக்கட்டுரையை எழுதியர் அல்லது பேட்டி கொடுத்தவர் சினிமா எடுத்தால், அது நன்றாக் ஓடும்]

முதலாவது, நேசமுடன் தள ஆசிரியரே, இப்படி ஒருவர் இஸ்லாமுக்கு வந்தார் என்றும், பல ஆயிர போதகர்கள் இஸ்லாமுக்கு வந்தார்கள் என்றும் நிருபியுங்கள்.... பிறகு இதைப் பற்றி பல கட்டுரை எழுதுங்கள்.

நேசமுடன் எழுதியது:

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள் . உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

//உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள்.//

இஸ்லாத்தை பின்பற்றினால் பலசாலிகள் ஆவார்கள், மேற்கத்திய நாடுகள் அஞ்சுவார்கள் என்று சொன்னாரே, இதன் பொருள் என்ன? பலசாலிகள் என்றுச் சொன்னால், ஜிஹாத் பற்றிச் சொல்கிறாரா? ஒரு மதத்தை ஒருவன் சரியாக பின்பற்றினால், மற்ற நாடுகள் ஏன் பயப்படவேண்டும்? அதாவது இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில், அல்லது பட்டணத்தில் ஒரு முஸ்லீம் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றினால், மற்ற நாடுகள் அஞ்சவேண்டிய அவசியம் என்ன?

இந்த கட்டுரை எழுதவன் முக்கிய நோக்கமே இந்த வரிகளில் இருப்பதாக எனக்கு தெரிகிறது.

சரி, நேசமுடன் தள ஆசிரியரே, இந்த கட்டுரையில் நான் முன்வைத்த கேள்விகளுக்கு நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் எழுதிய கட்டுரைக்கு தேவையான ஆதாரங்களை நீங்கள் தான் தரவேண்டும்.

குறைந்த பட்சம் நீங்கள் மொழிபெயர்த்த "அரபி கட்டுரையின்" தொடுப்பையாவது உங்கள் கட்டுரையில் நீங்கள் கொடுத்துயிருக்கலாம். அதையும் செய்யவில்லை. இருந்தாலும் கேட்கிறேன், எந்த தைரியத்தில் இப்படி "ஒரு ஆதாரமும் உங்கள் கட்டுரையில் கொடுக்காமல்"  கட்டுரையை எழுதுகிறீர்கள்?

சரி, நீங்கள் இதற்கு பதில் கொடுப்பீர்கள் என்று நம்பி என் சந்தேகங்களை முன்வைத்தேன். என் சந்தேகங்களை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

4.இஸ்லாமிய உலகில் நிலவும் புரளிகள், வதந்திகள்:

இந்த கட்டுரையில் நாம் பார்த்ததுபோல, பல தளங்களில் இப்படி மிகவும் புகழ்பெற்றவர்கள் "இஸ்லாமுக்கு" மாறியதாக சில இஸ்லாமியர்கள் வதந்திகளை பரப்பிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நிலவில் கால் வைத்த "நீல் ஆம்ஸ்ட்ரொன்க்" தான் நிலவில் கால்வைக்கும் போது, அவருக்கு ஒரு ஓசை கேட்டதாம், அது என்னவென்று அவர் பூமிக்கு வந்த பிறகு "அது இஸ்லாமிய மசூதிகளில்" ஓதும் "அஜான்" என்று தெரிந்துக்கொண்டு இஸ்லாமுக்கு மாறினாராம். இதைப் பற்றி கிறிஸ்தவ தளம் அவருக்கு மெயில் அனுப்பி விவரங்களை தெரிந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அதை ஒரு புரளி என்றும், தான் இஸ்லாமுக்கு மாறவில்லை என்றும் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் சினிமா நடிகர் வில் ஸ்மித் முதல், நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரான்க் வரை புரளிகள் இணையத்தில் நிலவுகின்றன. இவைகளை பல இஸ்லாமிய தளங்கள், நியூஸ் குரூப் போன்ற தளங்கள் பதிக்கின்றன. மைக்கேல் ஜாக்சன் ஒரு பாடலில் அல்லா வார்த்தைகள் வந்ததற்காக அவர் முஸ்லீமாகிவிட்டார் என்று கூட புரளிகள் வந்தன.

இப்படி பல கதைகள் உண்டு, அவைகளைப் பற்றி கீழுள்ள தொடுப்புகளில் சென்று படிக்கவும். இவைகளைப் போலவே, நேசமுடன் கட்டுரையும் இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்.

Falsely Claimed Conversions:

Hollywood Star Will Smith

Neil Armstrong

Jaques Cousteau

Jacques Cousteau, Michael Jackson & Neil Armstrong (a Muslim knows better)

Maurice Bucaille

King Offa

Abdu'l-Ahad Dawud (Professor David Benjamin Keldani), a former Catholic Bishop?

The Coptic Cardinal Abu Ishaq

Source: http://www.answering-islam.org/Hoaxes/index.html

5. சூடான் (இஸ்லாமிய) நாடு பற்றிய சில செய்திகள் .

சூடான் ஒரு முஸ்லீம் நாடு, அதில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

கீழே சில விவரங்களை தருகிறேன். இதை படித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட நாட்டில் "நேசமுடன்" தள கட்டுரை சொல்லும் விவரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று சிந்தித்துப்பாருங்கள்.

சூடான் நாட்டில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை அடிமைகளாக்குகின்றனர்.

Muslim slavers in the Sudan primarily enslave non-Muslims, and chiefly Christians. According to the Coalition Against Slavery in Mauritania and Sudan (CASMAS), a human rights and abolitionist movement, "The current Khartoum government wants to bring the non-Muslim black South in line with Sharia law, laid down and interpreted by conservative Muslim clergy. The black animist and Christian South has been ravaged for many years of slave raids by Arabs from the north and east and resists Muslim religious rule and the perceived economic, cultural, and religious expansion behind it."


11000 ஆண் பெண் இளைஞர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்றி, பேசக்கூடாது என்று எச்சரித்தனர். BBC Reports .

The BBC reported in March 2007 that slave raids "were a common feature of Sudan's 21-year north-south war, which ended in 2005….According to a study by the Kenya-based Rift Valley Institute, some 11,000 young boys and girls were seized and taken across the internal border -- many to the states of South Darfur and West Kordofan….Most were forcibly converted to Islam, given Muslim names and told not to speak their mother tongue ."

ஒரு கிறிஸ்தவ அடிமையை முஸ்லீமாக்கி, இஸ்லாமுக்காக சண்டைபோட பயிற்சி கொடுத்தார்கள் .

One modern-day Sudanese Christian slave, James Pareng Alier, was kidnapped and enslaved when he was twelve years old. Religion was a major element of his ordeal: "I was forced to learn the Koran and re-baptised "Ahmed ." They told me that Christianity was a bad religion. After a time we were given military training and they told us we would be sent to fight."

Source: The Persistence of Islamic Slavery By Robert Spencer FrontPageMagazine.com -  http://frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID={2E8FEEC5-1ED1-4EE8-A030-0A65B596F94C}


கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாம் கட்டாயப்படுத்தப்படுகிறது, பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் .

Sudan jihad forces Islam on Christians

Women refusing to convert gang-raped, mutilated, says relief worker

Posted: March 4, 2002 1:00 a.m. Eastern By Art Moore © 2002 WorldNetDaily.com

Sudan's militant Muslim regime is slaughtering Christians who refuse to convert to Islam, according to the head of an aid group who recently returned from the African nation. The forced conversions are just one aspect of the Khartoum government's self-declared jihad on the mostly Christian and animist south, Dennis Bennett, executive director of Seattle-based Servant's Heart told WorldNetDaily. Villagers in several areas of the northeast Upper Nile region say that when women are captured by government forces they are asked: "Are you Christian or Muslim?" Women who answer "Muslim" are set free, but typically soldiers gang-rape those who answer "Christian" then cut off their breasts and leave them to die as an example for others.Source: http://www.worldnetdaily.com/news/article.asp?ARTICLE_ID= 26672

6. முடிவுரை

நேசமுடன் தளம் என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த கட்டுரையில் அவர் சொன்ன விஷயங்கள், உண்மையாகவும் இருக்கலாம், அல்லது பொய்யாகவும் இருக்கலாம். இது வரையில் நான் முன் வைத்த கேள்விகள் அனைத்தும் அவர் சொன்ன விவரங்கள் உண்மையில்லை என்பதை காட்டுகிறது.
அதாவது 5 ஆண்டுகளில் 1,50,000 பேர் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதும், அதில் 2,500 பேர் அவர் சொல்வது போல தேவாலய தலைவர்கள் என்பதும் உண்மையானால், அது ஒரு உலக அதிசியமாகும். இப்படி மாறியவர்கள் சூடான் என்ற ஒரு நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் இப்படி இவர் மூலமாக மாறினார்கள் என்றாலும், இது உலக அதிசயம் தான். அதாவது, பல ஆண்டுகளாக டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஜைனுல் ஆபீதீன் போன்றவர்கள் செய்ய முடியாததை, 5 ஆண்டுகளில் இவர் செய்தார் என்றால், அதிசயம் தானே?

இஸ்லாமிய தலைவர்களை கொலை செய்யும்படி அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது என்னைப் பொருத்தவரை வெறும் கற்பனையே அல்லாமல் வேறில்லை.

என்னுடைய இந்த எல்லா சந்தேகங்களுக்கும் அவர் பதில் கொடுக்கும் போது, என் சந்தேகங்கள் அனைத்தும் பயனற்றது என்று எல்லாருக்கும் புரியும். அப்படி இவர் பதில் சொல்லவில்லையானால், அவர் எழுதிய அனைத்தும் பொய்யென்றும், "இது இஸ்லாம்" ஒரு நல்ல அமைதியான மார்க்கம் என்று காட்டுவதற்கு, இஸ்லாமியர்கள் பயன்படத்தும் யுக்தி என்று எல்லாருக்கும் விளங்கும்.

தமிழ் முஸ்லீம்(இது தான் இஸ்லாம்) தளம் இதற்கு முன்பே, ஒரு ஜிமெயில் படத்தை மாற்றி அதில் சில விவரங்களை தில்லுமுல்லு செய்து, தன் தளத்தை படிக்கின்ற எல்லா வசகர்களையும் முட்டாளாக்கியுள்ளது.
இதுவரையில் அதற்கு பதில் சொல்லவில்லை. இதைப் பற்றி இங்கு படிக்கலாம்.

நேசமுடன் தளம் என் இந்த கட்டுரைக்கு சரியான ஆதாரங்கள் காட்டி, பதில் தரவில்லையானால், தமிழ் முஸ்லீம்(இது தான் இஸ்லாம்) தள தில்லுமுல்லு பட்டியலில் நேசமுடன் தளத்தையும் வாசகர்கள் சேர்க்கவேண்டி வரும்.

இஸ்லாமியர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு உங்கள் நம்பிக்கையில் அதிக திடம் இருக்குமானால், இயேசுவின் வாழ்க்கையை படித்துப்பாருங்கள். உங்களுக்கு கிறிஸ்தவம் என்றால் என்ன? சத்தியம் என்றால் என்ன? என்பது புரியும்.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". நீங்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல மரம் நல்ல கனிகளை கொடுக்கும். அவர்கள் கனிகளினால் அவர்களை அறியுங்கள். இஸ்லாமியர்களின் இந்த புரளிகள், பொய், பித்தளாட்டம் அவர்களின் கனிகள் ஆகும்.

என் இந்த சந்தேகங்களுக்கு சரியான ஆதாரம் கொடுக்கப்பட்டால், நான் என் தளத்தில் அதைப் பற்றிய விவரத்தை தெரிவிப்பேன், மற்றும் நேசமுடன் தளம் தன் தனித்தன்மையை காத்துக்கொண்டது என்ற அறிவிப்பை பதிய தயாராக உள்ளேன்.

நேசமுடன் தளம் உன்னை நீ நிருபித்துக்கொள். சத்தியத்தைச் சொல், உன் கட்டுரை உண்மையென்று நிருபிப்பது உன் கடமை. ஆமென்.

all emphasis are mine

Isa Koran Home Page Back - Rebuttal Index page

1