ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

என் பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 பிப்ரவரி, 2013

"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் வைராக்கியத்துடன் இயேசுவின் தனித்தன்மை மற்றும் தெய்வீக தன்மையைப் பகிர்ந்து கொள்ளும்போது இயேசு தேவனாக இருக்கிறார் என்று சீக்கிரத்தில் உரக்கக் கூறிவிடுகிறார்கள். ஆனால் அது இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய தடையாக ஆகிவிடுகிறதை அவர்கள் உணர்வதில்லை. இஸ்லாமானது ஏக இறைவனை – ஒரே இறைவனைக் கொண்ட மதம் ஆகும். ஒரே மெய்யான இறைவனுக்கு நிகராக வேறு யாரையாவது, எதையாவது கருதுவது இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் அவர்களின் மதத்தை மீறுகிற ஒரு செயலாகவும், பயங்கரமான பாவச் செயலாகவும் இருக்கிறது. ஆகவேதான் ஒன்றாகிய மெய்த்தெய்வத்தைத் தவிர இயேசுவும் ஒரு தெய்வமாக இருக்கிறார் என்ற இருகடவுள் கொள்கைக்கு எதிராக குர்-ஆன் தெளிவாக பின்வருமாறு கூறுகிறது:
"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. ஸூரத்துல் அல் மாயிதா (5):72
நாம் திரும்பவும் வைராக்கியமான கிறிஸ்தவரிடம் வருவோம். அவர் எப்பொழுதெல்லாம் இயேசு தேவனாக இருக்கிறார் என்று சொல்கிறாரோ, அப்பொழுது இஸ்லாமியர் தன் மனதுக்குள், " கிறிஸ்தவர் சொல்வது போல இயேசு தேவனாக இருக்கிறார் என்றால், இயேசு இறைவனை நோக்கி "பிதாவே" என்று ஜெபித்திருக்கிறார் எனில். குறைந்தது இரு கடவுள்களாவது இருக்கிறார்கள் என கிறிஸ்தவம் போதிக்கிறது" என நினைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த இஸ்லாமியர் மேற்கொண்டு கிறிஸ்தவ சாட்சிக்கு இடம் கொடுக்காமல் விலகிச் சென்றுவிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் தங்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டியது என்னவெனில், இஸ்லாமியர்கள் நினைப்பது போல உண்மையிலேயே இரு கடவுள்களை வணங்குகிறோமா அல்லது மாற்கு 12:29ல் இயேசுதாமே போதித்தபடி ஒரே மெய்தேவனை விசுவாசிக்கிறோமா என்பதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள் என்ற தவறான புரிதல் இஸ்லாமியருக்கு உண்டாக்காதபடி இருப்பது மிக முக்கியமானதாகும். அப்படிச் செய்வார்கள் எனில், இயேசு இரட்சகராக இந்த பூமிக்கு தேவனுடைய இரக்கத்தை வெளிப்படுத்தவும், விழுந்து போன மனுக்குலத்தை மீட்கவும் வந்தார் என்ற எளிமையான நற்செய்தியை கேட்பதில் இருந்து இஸ்லாமியரைத் தடுத்து அவர் இடறுவதற்கேதுவான கல்லாக கிறிஸ்தவர்கள் இருந்துவிடக் கூடும். ஆகவேதான் வேதாகம அறிவிப்பான "நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் " என்ற வசனம் பற்றி குழப்பம் வேண்டாம்.

வேதாகமத்தில் இயேசு தேவனாக இருக்கிறார் என்ற நேரடி வாசகம் இடம் பெறவைக்காமல் மாறாக இயேசுவின் தெய்வீகத்தன்மையைச் சுட்டிக்காட்டும் பின்வரும் குறிப்புகளை நாம் காண்கிறோம்:
தேவனுடைய வார்த்தை (வெளிப்படுத்தல்.19:13);
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து…. (எபிரேயர் 1:3);
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் ( கொலோசேயர் 1:15); மற்றும்
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து (2 கொரிந்தியர் 4:4).
இந்த குறிப்புகள் இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட ஒரே மெய்யான தேவனைக் குறித்து பேசுகின்றன. நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையில் வேதாகமத்தை பயன்படுத்தி, நம் வேத வசனப் பிரயோகங்களை பயன்படுத்துவோமாகில், நாம் ஒரே தேவனில் உள்ள நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த முடியும், அதேவேளையில் நம் இஸ்லாமிய நண்பரிடம் பைபிளும் குர்-ஆனும் இரண்டுமே இயேசுவை தேவனுடைய வார்த்தை என குறிப்பிடுகின்றன என்று நினைவுபடுத்துவதன் மூலம் இயேசுவின் தெய்வீகத் தன்மையில் உள்ள நம் விசுவாசத்தை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெரும்பாலான முஸ்லீம்கள் தேவனுடைய வார்த்தையானது ஒருபோதும் உண்டாக்கப்பட்டிருக்க முடியாது, அது மரிக்கவும் முடியாது, அது தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விதத்தில் நாம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை, ஜீவனுள்ள தேவ வார்த்தையைக் குறித்து நாம் பேச முடியும்.

இயேசுவின் தன்மையைப் பற்றி உள்ள இரகசியத்தை உங்கள் இஸ்லாமிய நண்பரிடம் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தெய்வீகத்திற்க்கடுத்த காரியங்களை சாதாரண மனிதர்களாகிய நம்மில் யார் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்! ஆனால் நற்செய்தியின் எளிமையை சிக்கலானதாக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கயாக இருங்கள். மேலும், மிகவும் சிக்கலான இறையியல் புரிதல் தேவைப்படுகிற காரியங்களைச் சொல்ல முயற்சிக்க வேண்டாம். இரட்சிப்பைப் பெறுவதற்கு இயேசுவின் தன்மையைப் பற்றிய முழு அறிவுக்கு நாம் வரவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவே இல்லை. இயேசுவின் தெய்வீகத்தைப் முழுமையாக விளக்கக் கூடிய திறமையின் அடிப்படையில் இரட்சிப்பு இல்லை, மாறாக, இயேசு தேவனால் அனுப்பப்பட்ட மனுக்குல இரட்சகர் என்றும் தேவனால் அனுப்பப்பட்ட இவர் மூலமாக மட்டுமே நமக்கு மீட்பும் பாவ மன்னிப்பும் உண்டாகிறது என்று ஏற்றுக் கொள்கிற இருதயத்தின் அடிப்படையிலேயே இரட்சிப்பு இருக்கின்றது. அதுவே நற்செய்தி ஆகும்.
ஆங்கில மூலம்: The Objection to the claim "Jesus is God"

இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்

இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்

குர்-ஆனில் காணப்படும் இயேசுவின் தனித்துவத்தை மறைக்க முயலுவதற்காக, அனேக முஸ்லிம்கள் பின்வரும் வசனத்தைக் காண்பிக்கின்றனர்:
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். ஸூரத்துல் மாயிதா (5):75
இயேசு தன் மனித தன்மையில், அவர் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளைப் போல ஒரு மனிதனாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், இந்த மாம்ச உடலில் தான் தெய்வீகத் தன்மையை உடைய "தேவ வார்த்தை" வாசம் பண்ணினார் என்று வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தும் போதனையை நாம் புறந்தள்ள முடியாது. (யோவான்.1:14, " அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"). இயேசுவின் மனித மற்றும் தெய்வீக தன்மையின் இரகசியத்தை நாம் விவரிக்க இயலாது என்றாலும், அது உண்மைதான் என்று வேதாகமம் உறுதி செய்கிறது. குர்-ஆனும் கூட இயேசுவின் மனித மற்றும் தெய்வீகத் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, குர்-ஆனில் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்:
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஸூரத்துல் அன்னிஸா (4):171
அந்நாட்களில் வாழ்ந்து வந்த கள்ள உபதேசக் கிறிஸ்தவர்களின் கூற்றை, அதாவது இயேசு தன் தாயாருடன் கூட மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கிறார் என்பதை மறுப்பதற்காக குர்-ஆன் மேற்கண்டவாறு சொல்லி இருக்கிறது என்றாலும், இயேசுவை "அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்…அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மாதான்" என்று சொல்வதன் மூலமாக குர்-ஆன் இயேசுவின் தனித்துவத்தையும் தெய்வீக மகிமையையும் பாதுகாத்திருக்கிறது என்பதை கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுப் புத்தகம் இயேசுவை "தேவனுடைய வார்த்தை" (வெளி 19:13) என்று அழைக்கிறது. இந்த வார்த்தையைச் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இறைவனுடைய வார்த்தை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை என்றும் அது மரிக்க முடியாது என்றும் அது நித்திய காலங்காலமாக இருக்கக் கூடியது என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் உடனே ஒத்துக் கொள்வர். அப்படிப்பட்ட வார்த்தை தெய்வீகத் தன்மையுடையதாக மட்டுமே இருக்க முடியும்.

" அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா" என்ற சொற்றொடரின் அரபி மூலத்தில் "ரூஹ்-உன் மின் ஹூ (ruh-un min hu)" என்பதாகும். இது குர்-ஆனில் மற்றொரு இடத்திலும் காணப்படுகிறது.
அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். ஸூரத்துல் முஜாதலா (58):22
யூசுப் அலி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட விளக்கவுரையுடன் கூடிய குர்-ஆனில் எண் 5365 எனும் அடிக்குறிப்பு காணப்படுகிறது. அது அவனிடம் இருந்து வந்த ஆன்மா என்பதை தெய்வீக ஆன்மா, மனித மொழியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில் இறைவனின் தன்மை மற்றும் சக்தி என்றுச் சொல்வதே சரியாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது.

மேற்கண்ட குறிப்பில் இருந்து ஸூரத்துல் அன்னிஸா (4):171ல் இயேசுவைக் குறிப்பிட குர்-ஆன் பயன்படுத்துகிற அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா" என்ற சொற்றொடரானது ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலான ஒருவரைப் பற்றிக் கூறுகிறது என்பது தெளிவு!

இயேசுவின் தனித்துவத்தை போதிக்கும் அனேக குர்-ஆன் வசனங்கள் உண்டு. அவைகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. அவை கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன:

1) அற்புத கன்னிபிறப்பு

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். "அவ்வாறேயாகும்; ´இது எனக்கு மிகவும் சுலபமானதே …. என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். ஸூரத்துல் மர்யம் (19):20-21
ஆதாமுக்கு தகப்பன் இல்லாமல் இருந்தது போலவே இயேசுவும் இருக்கிறார், ஆகவே இவ்விசயத்தில் அவர் தனித்துவமானவர் என்று சொல்லக் கூடாது என முஸ்லிம்கள் கூறுகின்றனர். ஆதாமுக்கு மனித தகப்பன் இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அது நாம் எதிர்பார்க்கக் கூடியதே. முதன் முதலாக வந்த மனிதனுக்கு எப்படி இயற்கையான பெற்றோர்கள் இருக்கமுடியும்? ஆனால் இயேசுவைப் பொறுத்த வரையில் அது முற்றிலும் வேறுபட்டதாகும். ஆதாமுக்குப் பின் கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிறந்துள்ளனர், மற்ற தீர்க்கதரிசிகள் எப்படி பிறந்தார்களோ, இதே போல இவர்களில் யாராவது ஒரு பெற்றோர்களுக்கு இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? ஆனால், இயேசுவின் அற்புதமான பிறப்பு மனுக்குலத்துக்கு ஒரு அடையாளமாக தரப்பட்டது. இயேசு பூமியில் உள்ள மனித வித்தில் இருந்து வரவில்லை, மாறாக பரத்தில் உள்ள இறைவனின் தெய்வீக தன்மையில் இருந்து வந்தார் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்பினார்.

2) பரிசுத்தமானதொரு வாழ்க்கையை வாழ்ந்தார்.

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார். ஸூரத்துல் மர்யம் (19):19
இயேசு உண்மையிலேயே ஒரு பரிசுத்த பிள்ளையாக இருந்தார். மனித வித்தில் தோன்றாமல் இறைவனிடத்தில் இருந்து வந்ததினால், அவர் பிறக்கும்போது சாத்தானால் அவரின் வாழ்க்கை தொடப்படவில்லை. உண்மையாகவே, இயேசு தவறு செய்யாத ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். எல்லா தீர்க்கதரிசிகளும் குற்றமற்றவர்களே, ஆகவே இயேசுவுக்கு எவ்வித தனித்தன்மையும் இல்லை என்று அனேக இஸ்லாமியர் வாதிடுவர். ஆனால், நாம் குர்-ஆனைக் கவனமாக ஆராய்ந்தால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்டு கொள்ளலாம். பெரிய தீர்க்கதரிசிகள் கூட இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர் என்பது சான்றாக இருக்கிறது. இயேசுவைப் போலல்லாமல், அவர்கள் எல்லாரும் மற்ற மனிதர்களைப் போல ஆதாமின் வித்தில் இருந்து பிறந்தவர்களே. பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்:
ஆதாம் (மற்றும் ஏவாள்): அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள். ஸூரத்துல் அஃராஃப் (7):23

ஆபிரகாம்: "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். ஸூரத்துஷ் ஷூஹாரா (26):82

மோசே: "என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார் . ஸூரத்துல்-கஸஸ் (28):16

தாவீது: "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். ஸூரத்து ஸாத் (38):24

சாலமோன்: "என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! ஸூரத்து ஸாத் (38):35

யோனா: ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் - (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். ஸூரத்து ஸாஃப்பாஃத் (37):142-144

முஹம்மது:

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். ஸூரத்துல் ஃப்த்ஹ் (48):1-2

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக . ஸூரத்து முஹம்மது (47):19
ஒருவர் குர்-ஆனைக் கவனமாகப் படிப்பார் எனில், இயேசு இறைவனிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் ஒரு இடத்தில் கூடக் காண மாட்டார். இதற்கான காரணம் இப்போது தெளிவாக இருக்கிறது. அவர் பரிசுத்தமானவராக இருந்தார், அவர் குற்றமற்றவராகவும் பரிபூரண பரிசுத்தமானவராகவும் இருந்தார். அவர் இந்த உலகத்தில் இருந்து வந்தவரல்ல, பரத்தில் இருந்து வந்தவர்.

3) பலத்த அற்புதங்களைச் செய்தார்

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;... ஸூரத்தில் ஆல் இம்ரான் (3):49
மாபெரும் அற்புதங்களையும், இறந்தோரை உயிர்ப்பித்தலை மட்டும் இயேசு செய்யவில்லை, அவருக்கு முன்பு அல்லது பின்னர் வந்த தீர்க்கதரிசிகளைப் போலல்லாமல், ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி, அதில் ஊதி, அதை உயிருள்ளதாக மாற்றினார் என குர்-ஆன் கூறுகிறது.

4) இறைவனிடம் திரும்பிச் சென்றார்

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். ஸூரத்துல் ஆல் இம்ரான் (3):55
மரித்து மண்ணுக்குத் திரும்பிய மற்ற தீர்க்கதரிசிகளைப் போல அல்லாமல், இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு அல்லாமல், இறைவன் தன்னளவில் உயர்த்தி கொள்ளப்பட்ட நிலைக்குச் சென்றார் என்பது மிகவும் முக்கியமானதாகும். வேறெந்த தீர்க்கதரிசிக்கும் இப்படிப்பட்ட மேன்மையை குர்-ஆன் கொடுக்கவில்லை. இயேசு பரத்திலிருந்து, இறைவனிடத்தில் இருந்து வந்தபடியால், அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்றார் என்று குர்-ஆனின் படி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

5) இந்த உலகத்திற்கு திரும்பவும் வருவார்

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார். ஸூரத்து அஸ்ஸுக்ருஃப்- (43):61
பரலோகத்தில் இருந்து இயேசு திரும்பிவருவதைக் குறித்து குர்-ஆன் விளக்கமாகக் கூறவில்லை என்றாலும் கூட, கடைசி நாட்களில் சாத்தானின் சேனையைத் தோற்கடித்து, உலகளாவிய அமைதியை உண்டாக்க இயேசு திரும்ப வருவார் எனும் இஸ்லாமிய பாரம்பரிய நம்பிக்கைக்கு ஆதரவாக இந்த வசனத்தை அனேக முஸ்லீம் அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வசனத்துக்கான அடிக்குறிப்பாக யூசுப் அலி அவர்கள் தன் குர்-ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: இது உயிர்த்தெழுதலுக்கு முன் இயேசு வந்தது போல கடைசி நாட்களில் அவரின் இரண்டாவது வருகையைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், ஆதாமின் வழியில் தோன்றாமல் அற்புதமாகப் பிறந்தவரும், பாவமற்ற பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்தவரும், அனேக அற்புதங்களையும் சிருஷ்டிப்பையும் கூடச் செய்தவரும், உயர்த்தப்பட்டு இறைவனிடம் அவருக்குச் சமமாக இருக்கிறவரும் மற்றும் உலகளாவிய அமைதிக்கு வழிவகுக்க திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறவரே இயேசு என மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எந்த மதப் புத்தகத்திலும் வேறெந்த தீர்க்கதரிசியைப் பற்றியும் இப்படிப்பட்ட குறிப்பு கிடையாது. சில இஸ்லாமியர்கள் சொல்வதைப் போலல்லாமல், இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல என்று குர்-ஆன் மிகவும் உரக்கக் கூறுகிறது!!!
ஆங்கில மூலம்: The Claim that Jesus was no more than a Prophet

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசுவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமியர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தின் அடிப்படையில், முஹம்மது மட்டுமே எல்லா காலத்திற்கும், அனைத்து மக்களுக்குமான உலகளாவிய நபியாக வந்தார் என்று முஸ்லிம்கள் கூறுவதில், அவர்கள் கிறிஸ்தவர்களை முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமியர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்:
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். மத்தேயு 10:5-6

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது முக்கியமானது ஆகும். அனேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஒப்புக் கொடுத்தலின் நிமித்தம் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமானது இரண்டு தன்மைகளை உடையதாக இருந்தது. முதலாவதாக, ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகளை (சந்ததியினர்) ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எனும் அந்த வம்சத்தில் அனைத்து தேசத்தாருக்கும், அதாவது அனைத்து மக்களுக்குமான ஆசீர்வாதத்தை எழுப்புவேன் என்று வாக்களித்தார். (பார்க்க: அப்போஸ்தலர் 3:25-26 மற்றும் கலாத்தியர் 3:8,14).

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தில், இஸ்ரவேலரின் சந்ததியினரும், புறஜாதியாரும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) ஆகிய இருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இது அனேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு பிறந்தபோது உறுதிப் படுத்தப்பட்டது. குழந்தை இயேசுவை அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த பக்தியுள்ள வயது சென்ற ஒரு மனிதர் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு அங்கு வந்தார். அவர் தன் கைகளில் அந்தக் குழந்தையை ஏந்தி பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் ஜெபத்தில் சொன்னார்:
(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், (2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32
மேற்கண்ட வேதபகுதியில் இருந்து, இயேசுவின் ஊழியமும் இரண்டு தன்மையுடையது என்பதை நாம் அறிகிறோம். முதலாவது, அவர் இஸ்ரவலரிடத்தில் பிறந்தபடியால், இஸ்ரவேலரிடம் தன்னையும் தேவனையும் வெளிப்படுத்துவது அவருடைய முதல் ஊழியமாக இருந்தது. அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்- ஆபிரகாம், ஈசாக்கும் மற்றும் யாக்கோபின் சந்ததியினர். குர்-ஆனும் இந்த வித்தியாசத்திற்கு சாட்சி பகருகிறது:
வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம். ஸூரத்துல் ஸாத் (38):45-46

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! ஸூரத்துல் அல்-பகரா (2):47
மிகவும் வருந்தத்தக்கதாக, இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர் தேவனைப் பற்றிய காரியங்களில் கடினப்பட்டவர்களாகவும் வேறுபட்டவர்களுமாக மாறியிருந்தனர். இதன் விளைவாக, நீண்ட காலமாக இஸ்ரவேலர்கள் எதிர்பார்த்திருந்த ஆசீர்வதிக்கப்பட்டவரும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக தேவனால் அபிசேகிக்கப்பட்டவருமான மேசியா, நானே என்று இஸ்ரவேலரிடம் உறுதிப்படுத்தும் படியாக, இயேசு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வது அவசியமானதாக இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவருடைய தனிப்பட்ட ஊழிய காலத்தில், இயேசு தம் சீடர்களை இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமே போகும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் முதலாவது செய்தியைக் கேட்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பற்றிய வாக்குத்தத்த உடன்படிக்கையின் மக்களாக இருந்த படியினால், இது அவர்களின் பாக்கியமாக இருந்தது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில் ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:
நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26
இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின் பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1 தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது. இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47
மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின் (ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர் சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:
நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ….. மத்தேயு.28:19
இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை உறுதிப்படுத்தினார்:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12
மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார். குர்-ஆனும் இதேபோல இயேசுவின் உலகளாவிய ஊழியத்தைப் பற்றிக் கூறுகிறது. அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு வருகிறது:
'அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும் (ஆயத்-அல் லின்னாசி), நம் அருளாகவும் ஆக்குவோம்.... ஸூரத்துல் மர்யம் (19):21
கவனியுங்கள், "இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்" என்று சில இஸ்லாமியர்கள் நம்புவது போல இங்கு இல்லை. உண்மையில் அரபியில் இந்த வார்த்தை "அனைத்து மக்களுக்குமான அடையாளம்" என்று வருகிறது.
ஆங்கில மூலம்: The Claim that Jesus was a Prophet Only to Israel

சனி, 5 ஜனவரி, 2013

ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்

ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்

தங்கள் நபியான முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் யூத மற்றும் கிறிஸ்தவர்களின் கறைபடுத்தப்பட்ட, காலாவதியான மத அமைப்புக்குப் பதிலாக புதிய சட்ட திட்டங்களோடு கூடிய ஒரு புதிய மதத்தை நிறுவுவதே என சில இஸ்லாமியர்களால் கூறப்பட்டது. இந்தக் காரணத்தினால், அனேக முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய செய்திக்கு எவ்வித கவனமும் செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவ மதமானது புதிய மற்றும் சிறந்த மதத்தினால் மேற்கொள்ளப்பட்டுவிட்டது, இஸ்லாம் என்ற மதம் கிறிஸ்துவுக்குப் பின் 600 வருடங்கள் கழித்து முஹம்மதுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிந்தனை இஸ்லாமியர்கள் அனேகருக்குள் பரவியிருந்தாலும், அது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆனின் போதனைக்கு எதிரானதாக இருக்கிறது.
குர்-ஆனின் படி, முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் முற்றிலும் ஒரு புதிய மதத்தை நிறுவுவது அல்ல, மாறாக ஆபிரகாமின் மதத்தில் தொடர்ந்து நிலைநிற்பது ஆகும்.
'(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. ஸூரத்துல் அந்நஹ்ல் (16):123.
எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை' என்று கூறுவீராக! ஸுரத்துல் அல் அன்ஆம் (6):161.
''அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):95.
'யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்' என்று கூறுகின்றனர். 'அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்று வோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் பகரா (2):135.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க் கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். ஸூரத்துல் அன்னிஸா (4):125
மேற்சொன்னவைகளைத் தவிர, குர்-ஆனும் கூட முகம்மது அவர்கள் புதிதாக எதையும் போதிக்க வரவில்லை எனச் சொல்கிறது. உண்மையைச் சொல்வதானால், ஏற்கனவே அருளப்பட்ட வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தும் படிக்கே அவருக்கு வெளிப்பாடு அருளப்பட்டது என குர்-ஆன் நமக்குச் சொல்கிறது. முன்னமே அருளப்பட்டதை திருத்தவோ, மாற்றவோ, அதில் சேர்க்கவோ அல்லது அதை செல்லாதது என அறிவிக்கவோ அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்படாமல், அவைகளை உறுதிப்படுத்தவே அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்பட்டது.
இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருக் கிறது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்ப தற்காகவும், நன்மை செய்வோருக்கு நற் செய்தி கூறுவதற்காகவும் அரபு மொழியில் அமைந்த வேதமாகும். (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது. ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):12
(முஹம்மதே!) உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.உமது இறைவன் மன்னிப்புடையவன்; துன்புறுத்தும் வேதனையுடையவன். ஸூரத்துல் ஃபுஸ்ஸிலத் (41):43.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். (ஸூரத்துல் அஷ்ஷூரா (42):13.
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):9
நம்பிக்கை கொண்டவர்களின் சமுதாயத்திற்கு தீர்க்கதரிசி மோசே மூலமாக தேவனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுக்க மற்றும் சமூகச் சட்டங்களின் அடிப்படையில் ஆபிரகாமின் மார்க்கம் விரிவுபடுத்தப்பட்டது என்பதைக் கவனிப்பது முக்கியமானது ஆகும். அதன் விளைவாக, இஸ்லாம் பொதுவில் காணப்பட்ட பல பழக்க வழக்கங்களை அதிலும் குறிப்பாக முஹம்மதுவின் வருகைக்கு முன் பல நூறாண்டுகளாக யூதர்கள் மத்தியில் இருந்த பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டது. வேதாகமத்தில் காணப்படுவதற்கொத்த இஸ்லாமிய பழக்கவழக்கங்களில் சில கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும் என்று சில முஸ்லீம்கள் நினைப்பதற்கு மாறாக, இவை ஒரு புதிய மதத்திற்கான புதிய சட்டதிட்டங்கள் அல்ல, அவை முன்னமே இருந்தவையாகும்.
  1. சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
  2. தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
  3. தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
  4. ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
  5. விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
  6. எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
  7. பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
  8. விருத்தசேதனம் (லூக்கா 2:21)
  9. முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
  10. நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
  11. பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
  12. பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)

வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்

வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்

வேதாகம மத பழக்க வழக்கங்கள் (BIBLICAL RELIGIOUS CUSTOMS)
  1. சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
  2. தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
  3. தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
  4. ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
  5. விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
  6. எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
  7. பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
  8. விருத்தசேதனம் (லூக்கா 2:21)
  9. முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
  10. நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
  11. பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
  12. பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)
இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் (MUSLIM PRACTICES)
  1. அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்)
  2. சமய சுத்திகரிப்பு, "உளு (wudu)"
  3. பள்ளிவாசலுக்குள் காலணிகளுக்கு அனுமதி இல்லை
  4. சஜ்தா செய்கையில் முழங்கால்படியிடுதல் "sajda"
  5. ஈத் உல்-அதா/ஈத் உல்-குர்பான் (Eid-ul Adha / Eid-ul Qurban) - குர்பானி, விலங்கு பலியிடுதலின் பண்டிகை
  6. மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்தல், ஹஜ் "hajj"
  7. பெண்கள் தலையை மூடிக் கொள்ளுதல்
  8. விருத்த சேதனம் (அ) சுன்னத், "khilan"
  9. குழந்தை பிறக்கும்போது அதற்காக பலியிடுதல், அகீகா "akika"
  10. ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருத்தல், சௌம் "saum"
  11. இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை
ஆங்கில மூலம்: Similarities between Biblical and Muslim Cultures

சனி, 19 ஜூலை, 2008

இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்

 
அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1

குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்

[குறிப்பு: இக்கட்டுரை "இயேசுவும் திராட்சை ரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்" என்ற கட்டுரையிலிருந்து எடுத்த ஒரு பகுதியாகும். அதாவது, இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி, மக்களுக்கு குடிக்கக் கொடுத்து அவர்களை போதையூட்டினார் என்று இஸ்லாம் கல்வித் தளம் குற்றம் சாட்டியபோது, அதற்கு பதிலாக எழுதப்பட்ட கட்டுரையாகும். அந்த பதிலில், "அல்லா முஸ்லீம்கள் குடித்துவிட்டு நமாஜ் செய்ய அனுமதித்தார்" என்று நான் எழுதியிருந்தேன், அதற்கு இப்போது இஸ்லாம் கல்வி தளம் பதில் அளித்துள்ளது. நான் அளித்த பதிலில் சொல்லியபடி, இப்போது "இஸ்லாமும் மதுபானமும்" என்ற தலைப்பில் நான் அவர்களின் கட்டுரைகளுக்கு மறுப்புகளும், அதே நேரத்தில் அவர்கள் பைபிள் மீது திராட்சை ரசம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில்களும் இந்த தொடர் கட்டுரைகளில் அளிக்க உள்ளேன்.]

இஸ்லாம் கல்வி எழுதிய மறுப்பு: மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-1)

இப்போது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரைக்குத் தான் இஸ்லாம் கல்வி மறுப்பு அளித்துள்ளது. நான் இக்கட்டுரையை மறுபதிவு செய்கின்றேன், ஏனென்றால், இஸ்லாம் கல்வி தளம் எந்த கட்டுரைக்கு பதில்/மறுப்பு அளிக்கிறது என்ற விவரத்தை/தொடுப்பை கொடுக்காமல் எழுதியது. எனவே, தான் இக்கட்டுரையை மறுபதிவு செய்கிறேன், மட்டுமல்ல, அவர்களின் பதிலுக்கு என் கருத்தை அடுத்த கட்டுரையில் கர்த்தருக்கு சித்தமானால் தருகிறேன்.



முகமது நபியாக தன்னை வெளிக்காட்டிய பிறகு கூட இஸ்லாமிய மக்கள் குடிக்கவும், போதைக்கொள்ளவும் அல்லா அனுமதி அளித்துள்ளார்.

1. குடிக்க அல்லாவின் அனுமதி:

மதுபானம் குடிக்கலாமா இல்லையா என்று முகமதுவிடம் முஸ்லீம்கள் கேட்ட போது, அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமை தான் அதிகம் என்றுச் சொன்னாரே தவிர, பாருங்கள் முஸ்லீம்களே இனி நீங்கள் குடிக்கவேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதனால், முஸ்லீம்கள் குடித்தார்கள், போதை கொண்டார்கள். அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)


இவ்வசனம் இறக்கிய பிறகு முஸ்லீம்கள் குடியை நிறுத்தவில்லை, காரணம் அல்லா தடை செய்யவில்லையே அதனால் தான்.

2. குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:

அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? மறுபடியும் ஒரு வசனத்தை இறக்கினார். "மதுபான தடை வசனம்" அல்லா இறக்கியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணிப்பு தவறு. அதாவது, முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் "குடியை நிறுத்தக்கூடாது என்பதில்" அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள். அல்லாவை விட நம் நாட்டு மருத்துவர்களே மேல், மதுசாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுங்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், முடிந்தால் விட்டு விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், அல்லா இப்படி இல்லை, குடியுங்கள், போதை ஏறட்டும், அப்படி ஏறினால், தொழுகைக்கு வராதீர்கள், தொழுகைக்கு வரவேண்டுமானால், அதற்கு முன்பு குடிக்காதீர்கள் என்றார். என்னே தெய்வம்!


(குர்‍ஆன் 4:43) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. ........ நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.


இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், யாரை குறிப்பிட்டு அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்? முஸ்லீம்களை குறித்து தான் என்பது தெள்ளத்தெளிவு. பாவம் அல்லா, குடிபோதையில் நாக்கு குழம்பி தொழுகையில் ஓதும் சூராக்கள் புரியாமல் போகும் அளவிற்கு போதை இருக்குமானால் முஸ்லீம்களுக்கு, தொழுகைக்கு வராதீர்கள் என்று கட்டளையிடுகிறார். அப்படியென்றால், எப்போதும் ஸ்டடியாக பேசும் குடிக்காரன் நமாஜ் படிக்கலாம். அல்லது தொழுகை ஆன பிறகு நாக்கு குழம்பும் அளவிற்கு குடிக்கலாம் என்று தானே இதன் பொருள்.

The Prohibition of Approaching Prayer When Drunk or Junub:

Allah forbade His believing servants from praying while drunk, for one does not know the meaning of what he is saying in that state, and He forbade them from attending the Masjids while sexually impure, except when one is just passing through the Masjid from one door to another. This Ayah was revealed before alcohol consumption was completely prohibited, as evident by the Hadith that we mentioned in Surat Al-Baqarah when we explained Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=59


சரி, இந்த வசனம் இறங்கிய பிறகு தொழுகைக்கு வரும்போது மட்டும் முஸ்லீம்கள் குடிக்கவில்லை என்பது தெளிவு. ஏனென்றால், அல்லா எதை முகமது மூலம் சொன்னாலும் அப்படியே முஸ்லீம்கள் கேட்பார்கள். எனவே, தொழுகை நேரம் தவிர மற்ற நேரங்களில் குடித்தார்கள், போதையில் மயங்கினார்கள் நம் அருமை இஸ்லாமிய நபித்தோழர்கள். அதாவது முகமது நபியாக தன்னை காட்டிவிட்ட பிறகு, குர்‍ஆனின் வசனங்கள் இறங்கிக்கொண்டு இருக்கும் போது, மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. நான் கேட்கிறேன், இஸ்லாமிய அறிஞர்களே, மதுபானம் தடை வரும் வரை, முஸ்லீம்கள் குடித்தார்களா? இல்லையா?

இந்த வசனத்தின் படி சில முஸ்லீம்கள் குடித்துவிட்டு, தொழும் போது, சொல்லப்படும் குர்‍ஆன் சூராக்களை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார்கள், போதை மூளைக்கு ஏறினால் வார்த்தைகள் எப்படி சரியாக இருக்கும். எனவே, அல்லா, தம்பிகளா, நமாஜுக்கு வரும் போது மட்டும் குடிக்காதீர்களடா! ஏனென்றால், வார்த்தைகள் சரியாக வராது என்று வசனத்தை இறக்குகிறார். ஆக, மதுபான தடை வசனம் வரும் வரை முஸ்லீம்கள் குடித்தார்கள். இதற்கு முகமதுவும் அனுமதி அளித்துள்ளார்.


16:67 பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

(And from the fruits of date palms and grapes, you derive strong drink) This indicates that it was permissible to drink it before it was forbidden. It also indicates that strong drink (i.e., intoxicating drink) derived from dates is the same as strong drink derived from grapes. Also forbidden are strong drinks derived from wheat, barley, corn and honey, as is explained in detail in the Sunnah.

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2965&Itemid=71


வெங்காய பூண்டு வாடை, மதுபான வாடையை விட தீயது:

சிறிது இங்கு கவனியுங்கள், பல ஆண்டுகள் மக்கள் குடித்துவிட்டு, குடித்த வாடையோடு வந்தாலும் அல்லா தொழுகைக்கு அனுமதியளித்துள்ளார். ஆனால், பூண்டு, வெங்காயம் என்பது மிகவும் தீய‌ வாடையாக‌ மாறிவிட்டது. பூண்டு வெங்காய வாசனையை விட மதுபான வாசனை அல்லாவிற்கு பெரிய பிரச்சனையாக இல்லை. பூண்டு வெங்காயம் உண்பவர் தொழுகைக்கு வரவேண்டியது இல்லை என்று முகமது சொல்லியுள்ளார்.இதை உண்டு முகமதுவுடன் தொழக்கூடாது ஏன்? "பூண்டு வெங்காய வாடை" வரும். ஆனால், மதுபானம் அறுந்தினவர் தொழலாம். இப்படி மதுபானத்திற்கு சொல்லியிருப்பாரா? [பூண்டு வெங்காய வாடை நல்லது என்று நான் சொல்ல வரவில்லை]


பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 856

அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

3. கடைசியாகத்தான் அல்லா மதுபான தடையை கொண்டுவந்துள்ளார்:

பல ஆண்டுகள் முஸ்லீம்கள் குடித்தார்கள், வெறித்தார்கள், தப்பு தப்பாக குர்‍ஆன் சூராக்களை ஓதினார்கள், அல்லா நாமாஜ் செய்யும் போது மட்டும் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், ஆனால் தடை விதிக்கவில்லை. கடைசியாகத்தான் அவர் கட்டளை கொடுக்கிறார்.

(குர்‍ஆன் 5:90 )ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.


குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா? இந்த வசனத்திற்கு பிறகு முஸ்லீம்கள் மதுபானம் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் மற்றும் இதன் பிறகு மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும், பிரயாணத்தின் போது இடையில் சண்டை போட்டுக்கொண்டு எங்கே இவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்று அல்லா நினைத்து இவ்வசனத்தை இறக்கியுள்ளார் என்று கீழ்கண்ட தொடுப்பில்(http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm) சொல்லப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள், முகமது நபித்துவம் வகித்தார், குர்‍ஆனில் உள்ள 114 அதிகாரங்கள் உள்ளன. இந்த மதுபானம் தடை செய்யப்பட்ட அதிகாரம் 5ம் அதிகாரம் ஆகும், இது கடைசியில் வெளிப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது அதிகாரங்கள் வெளிப்பட்ட வரிசையைச் சொன்னால், இந்த 5வது அதிகாரம் 112வதாக வெளிப்பட்டதாம்(Source : http://www.submission.org/Q-T.html).

அதாவது கிட்டத்தட்ட 18-19 வருடங்கள், குடித்துள்ளார்கள முஸ்லீம்கள். கடைசியாகத்தான் அல்லாவிற்கு கொஞ்சம் ஞானம் வந்து,அவர் மதுபானத்தை தடை செய்துள்ளார்.

Maududi says that Sura 5 was revealed in the timeframe of AD 628 and 629, so it is a late sura (Muhammad dies of a fever in AD 632). It lays down rules for a growing community after the Treaty of Hudaybiyah in AD 628 in which Muslims were promised a free and unmolested pilgrimage to Mecca a year later, which took place. So it was important for Muslims to prepare themselves and to give up all intoxicants. Hence, these two verses came down from Allah:

5:90 You who believe, intoxicants and gambling, idolatrous practices, and [divining with] arrows are repugnant acts—Satan's doing: shun them so that you may prosper. 91 With intoxicants and gambling, Satan seeks only to incite enmity and hatred among you, and to stop you remembering God and prayer. Will you not give them up?

Source: http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm Formats mine


நான் இதோடு என் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி: அல்லா முகமது மூலமாக தன் வசனங்களை 18 வருடங்கள் இறக்கும் போது கூட முஸ்லீம்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள், அதுவும் போதையில்லாத திராட்சை இரசமல்ல, போதையுள்ள ரசத்தை குடித்தார்கள்.

அதாவது கி.பி. 628-29 என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பு யூதர்கள்,கிறிஸ்தவர்களுக்கு அல்லா இதன் தடை விதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

ஆனால், எம். எம். அக்பர் அவர்கள் எப்படி இயேசு போதையுண்டாக்கினார் என்று குற்றம் சாட்டுகிறார்?

உங்கள் அல்லா தான் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் என்றுச் சொல்லும் நீங்கள், அவர் மதுபானத்தை தடை செய்தது முகமதுவின் கடைசி காலத்தில் அல்லவா? அப்படியானால், கிறிஸ்தவர்கள் குடிக்க அனுமதி அல்லா கொடுத்துள்ளார் என்று தான் பொருள் அல்லவா?

ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன், புதிய ஏற்பாடு மதுபானத்தை ஏற்கனவே தடை செய்துவிட்டது. அப்படியானால், மதுபானம் தீமை என்பதை அல்லா தெரிந்துக்கொள்வதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பைபிளின் தேவன் அதை தடை செய்துள்ளாருங்கோ...


இந்த கட்டுரையை நான் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளேன், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்கள் எனக்கு கேள்விகள் கேட்டாலோ, மறுப்பு எழுதினாலோ, பதில் எழுதினாலோ, அப்போது விவரமாக இஸ்லாமும் மதுபானமும் என்ற பொருளில் எழுத முயற்சிப்பேன்.. இஸ்லாமிய அறிஞர்களே, எம். எம். அக்பர் அவர்களே, இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி தன் சிடர்களுக்கு குடிக்கவில்லை, இயேசுவின் சீடர்கள் யாரும் குடித்துவிட்டு, போதையுடன் ஜெபிக்கவில்லை. மற்றும் அது போதை தரும் ரசமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு விவரம், உங்கள் குர்‍ஆனில் அல்லா மதுபானம் தடை செய்தது உண்மையானால், இயேசுவின் காலத்தில் உள்ள மக்கள் அதை உண்பதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு காரணம் அல்லா தானே. இனி எந்த குற்றச்சாட்டையும் பைபிள் மீது வைக்கும் போது, முதலாவது உங்கள் குர்‍ஆனில் அது பற்றி என்ன சொல்லியுள்ளது, இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொண்டு எழுதினால்... உங்களுக்கு சிறிது நன்றாக இருக்கும், எனக்கும் நேரம் மிச்சமாகும்.

இஸ்லாமில் மதுபானம் பற்றி மேலும் அறிய விரும்பினால், கீழ்கணட தொடுப்புகளில் படிக்கலாம்:


1. Muhammad, the Quran, and Prohibition(Islam's punishments for drinking and gambling)

2. Qur'an Contradiction: Fully Detailed Or Incomplete? E.g., The Statements On Wine

3. Islam And Wine Consumption Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

4. Wine: Allah's Provision or Shaitan's Abomination?

5. WINE IN ISLAM



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.


5. காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?


 
 

புதன், 9 ஜூலை, 2008

கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)

 
அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்

கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா

பாகம் - 3


[அப்துல்லாவும் அப்ரஹாமும் நெருங்கிய நண்பர்கள், இவர்கள் அடிக்கடி தங்கள் மார்க்க விவரங்களைப் பற்றி பேசுக்கொள்வதுண்டு. இப்படி இவர்கள் பேசிய ஒரு உரையாடலே இந்தக் கட்டுரை. அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு இரவு 9 மணிக்கு போன் செய்து பேசுகிறார்.]

அப்துல்லா: ஹலோ, அப்ரஹாம் எப்படி இருக்கே?

அப்ரஹாம்: ஹலோ, அப்துல்லாவா, நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே, என்ன இந்த சமயத்திலே போன் செய்யரே?

அப்துல்லா: ஒன்னுமில்லே, ஒரு கட்டுரையை படிச்சேன், அதைப் பற்றி உன் கருத்து என்ன என்று கேட்கலாம் என்று தான் போன் செய்தேன்.

அப்ரஹாம்: அப்படியா, சொல்லுடா, என்ன கட்டுரை, எதைப் பற்றியது?

அப்துல்லா: நீ அந்த கட்டுரையில் எழுதியிருப்பதை படித்தால், அவ்வளவு தான் ஆடிப்போயிடுவே.

அப்ரஹாம்: அப்படி என்னடா, அந்த கட்டுரையில் எழுதியிருக்கு, சீக்கிரம் சொல்லுடா, சஸ்பண்ஸ் வேண்டாம்.

அப்துல்லா: சரி, சொல்றேன் கேளு, கட்டுரையின் பெயர், திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு". இஸ்லாம் கல்வி என்ற தளம் அதை வெளியிட்டு இருக்கு, உனக்கு நான் நாளைக்கு அதை அனுப்புறேன், அதை படிச்சு, உன் பதில் என்ன என்று நீ சொல்லனும்.

அப்ரஹாம்: ஓஹோ, அந்தக் கட்டுரையா, நான் ஏற்கனவே, அதை படிச்சுட்டேனே. நேரம் கிடைக்கும் போது, உன்னோடு பேசலாம் என்று நினைத்தேன், நீயே கேட்டுட்டே.

அப்துல்லா: நல்லதாப் போச்சு, சரி சொல்லு, உன் கருத்து என்ன? அந்தக் கட்டுரையில் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டுள்ளது, மனிதர்கள் பைபிளின் வசனங்களை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது? அல்லா யூதர்களுக்கு இறக்கிய வேதத்தை அவர்கள் மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது, அதைப்பற்றி நீ என்ன சொல்றே? உன்னால், இப்போதைக்கு ஏதாவது பதில் சொல்ல முடியுமா? இல்லே உனக்கு இன்னும் அவகாசம் தேவையா? சொல்லுடா சொல்லு பார்க்கலாம்.

அப்ரஹாம்: அப்போ, நான் பதில் சொல்லித்தான் ஆகனும் அப்படித்தானே?

அப்துல்லா: உன்னால் முடிந்தால்! பதில் சொல்லுடா பார்க்கலாம்.
அப்ரஹாம்: சரி, நான் பதில் சொல்கிறேன், அதற்கு முன்பு ஒரு கதை சொல்றேன் கேளு, பிறகு அந்த கதையின் அடிப்படையில் நான் சில கேள்விகளை நான் கேட்பேன், நீ பதில் சொல்லு, அந்த பதிலில் தான், இந்த கட்டுரைக்கு என் பதில் அடங்கியிருக்கு. என்ன கதையை ஆரம்பிக்கட்டுமா?
அப்துல்லா: என்னடா எப்போ பாத்தாலும், கதை, எடுத்துக்காட்டு என்று சொல்றே. சரி, சொல்லு கேட்கிறேன்.

அப்ரஹாம்: கவனமாக கேட்கனும், கடைசியில் நான் கேள்வி கேட்பேன். ஒரு ஊரிலே ஒரு இராஜா இருந்தான், அவன் மிகவும் அறிவாளி, அவனைப்போல உலகத்தில் வேறு யாரும் அவ்வளவு அறிவாளி கிடையாது. அவருக்கு பல இலட்ச போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவன் தன் கோட்டையைச் சுற்றி தண்ணீர் விட்டு, முதலைகளை அதில் விட்டுவைப்பான், யார் வந்தாலும் சரி, முதலைகள் திண்றுவிடும். அந்த கோட்டைக்குள்ளே போகனும் என்றால், ஒரே வாசல் தான், அந்த வாசலின் முன்பும், பின்பும் பல நூறு காவலாளிகள் 24 மணி நேரமும் காவல் காப்பார்கள்.

அப்துல்லா: சரிடா, சீக்கிரமாக விஷயத்துக்கு வாடா

அப்ரஹாம்: இதோ வரேன்.அந்த இராஜாவிற்கு உள்ள ஒரு வினோத சக்தி என்னவென்றால், தன்னை யார் எதிர்க்க வந்தாலும், அதை அவர் தன் சக்தியால் கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய கோட்டைக்குள் எந்த ஒரு மனிதன் வரவேண்டுமானாலும், பல பரிசோதனைகள் செய்துவிட்டுத் தான் வரவேண்டும். மட்டுமல்ல, இராஜாவை எதிர்க்க, அல்லது கொல்லவதற்காக ஒரு வேளை யாராவது நல்லவர்கள் போல நடித்து உள்ளே வரமுடியாது, ஏனென்றால், மனதில் உள்ளதை அறியும் சக்தியும் அவருக்கு உள்ளது.

அப்துல்லா: ரொம்ப நல்லா இருக்கே, கண்டினியூ பண்ணு.

அப்ரஹாம்: அதாவது, எப்படி இறைவனுக்கு முன்பாக எதுவும் மறைக்கமுடியாதோ, இறைவனை தோற்கடிக்கமுடியாதோ அது போல, இந்த இராஜாவும். இந்த இராஜா ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் தன் சட்டங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார். மற்றும் அந்த சட்டப்புத்தகம், தன் அரண்மனையிலேயே தன்னிடமே வைத்துக்கொண்டு இருக்கிறார். மட்டுமல்ல, அந்த புத்தகத்தில் உள்ள விவரங்களை, மக்களுக்குச் சொல்லி, இவர் பெருமைப்பட்டுக்கொண்டு இருப்பார், மக்களும் இவரின் ஞானத்தை மெச்சிக்கொள்வார்கள். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகத்தை இந்த இராஜா தவிர மற்ற யார் தொட்டாலும், உடனே, அம்மனிதர், கல்லாக மாறிவிடுவார். இராஜாவின் அனுமதி இல்லாமல், யாரும் கோட்டைக்குள் வரமுடியாது, மற்றும் அப்புத்தகத்தை தொடவும் முடியாது. இராஜா அனுமதி கொடுத்தால், அப்புத்தகத்தை தொடலாம், படிக்கலாம்.

அப்துல்லா: அடேங்கப்பா! ரொம்ப வினோதமாக உள்ளதே. சரி, மேலே சொல்லு.

அப்ரஹாம்: இப்படி இருக்கும்போது, அந்த ஊரிலே இருக்கும், ஒரு ஏழை விவசாயிக்கு இந்த இராஜா மீது பொறாமை வந்தது. எப்படியாவது, அந்த கோட்டைக்குள் நிழைந்து, அவர் எழுதிய புத்தகத்தை கிழித்துவிட்டு வரவேண்டும் என்று இவரது ஆசை. இதற்காக, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இந்த ஏழை விவசாயி.

அப்துல்லா: அப்படியானால், இந்த திட்டத்தை அந்த இராஜா தெரிந்துக்கொண்டு இருப்பாரே?

அப்ரஹாம்: கண்டிப்பாக, இந்த விஷயம் இராஜாவிற்கு தெரியும், ஏனென்றால், இப்படிப்பட்ட வினோத சக்தி அந்த இராஜாவிற்கு இருக்கிறதே

அப்துல்லா: சரி, பிறகு என்ன ஆச்சு, அந்த ஏழை விவசாயி, எப்படி பலத்த பாதுகாப்பு உள்ள கோட்டைக்குள் நிழைந்தார், இராஜாவின் சட்ட புத்தகத்தை கிழித்தாரா இல்லையா? சொல்லடா? சஸ்பண்ஸ் வேண்டாம், சீக்கிரம் சொல்லு.

அப்ரஹாம்: திடீரென்று ஒரு நாள், அந்த இராஜா ஒரு அறிக்கையிட்டார், அது என்னவென்றால், தன்னிடம் உள்ள புத்தகத்தை யாரோ ஒரு மனிதர் கிழித்துவிட்டு சென்று விட்டதாக சொன்னார். மக்கள் எல்லாம் அதிர்ந்துப்போனார்கள், ஆச்சரியப்பட்டார்கள்.

அப்துல்லா: நிறுத்துடா, அது எப்படி சாத்தியமாகும்? இந்த இராஜாவிற்கு தான் சகல அதிகாரமும், சக்தியும் பாதுகாப்பும் உண்டே, பின் எப்படி ஒரு மனிதன் நிழைந்து இராஜாவிற்கு தெரியாமல் அப்புத்தகத்தை கிழிக்கமுடியும், மட்டுமல்ல, இராஜாவின் அனுமதி இல்லாமல் அதை தொடுபவன் கல்லாக மாறிவிடுவானே? இது எப்படி முடியும்?

அப்ரஹாம்: ஆனால், அந்த இராஜா மிகவும் நம்பிக்கையாகச் சொல்கிறார், தன்னிடம் உள்ள சட்டபுத்தகம் கிழிக்கப்பட்டதாம். ஒரு மனிதன் கோட்டைக்குள் நுழைந்து இதைச் செய்தானாம். இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த இராஜா பொய் கூட சொல்வதில்லை. எனவே, எல்லாருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இப்படி இருக்கும் போது, இது எப்படி சாத்தியம் சொல்லு?

அப்துல்லா: வாய்ப்பே இல்லை, NO CHANCE.

அப்ரஹாம்: என்னை பொருத்தவரையில் இதற்கு வாய்ப்பு உள்ளது. இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

அப்துல்லா: முட்டாள்தனமாக பேசாதேடா! இவ்வளவு திறமையுள்ள அரசனை ஏமாற்றி, கோட்டைக்குள் நிழைந்து செல்வது என்பது முடியாத காரியம். சரி, சொல்லு, என்ன வாய்ப்பு இருக்கு?

அப்ரஹாம்: நான் சொல்வதை கவனமாக கேளு. இதற்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

1) ஒரு ஏழை அல்லது தன்னைவிட பலவீனமானவன் தன் கோட்டைக்குள் நிழையும் போது, அதை அறிந்து இராஜாவே, அம்மனிதனை உள்ளே வர அனுமதி அளித்தால், அந்த மனிதன் உள்ளே வர வாய்ப்பு இருக்குமல்லவா? மற்றும் அந்த புத்தகத்தை தொட்டால் அம்மனிதன் கல்லாக மாறிவிடுவான், எனவே, இராஜாவே அந்த ஏழைமனிதனுக்கு தன் சட்டபுத்தகத்தை கிழிக்க அனுமதி அளித்தால், அந்த ஏழை அதை கிழிக்கலாம் அல்லவா?

ஆக, முதலாம் வாய்ப்பாக நான் சொல்லவருவது, அந்த இராஜாவே தன் சுயவிருப்பத்தின் படி தன் சட்டபுத்தகத்தை அந்த ஏழை விவசாயி கிழிக்க அனுமதி வழங்கி விட்டுக்கொடுப்பது தான். இப்படி விட்டுக்கொடுக்க வில்லையானால், காவலாளிகள் அவனை கோட்டையின் கதவுக்கு முன்பே அவனை கொன்று இருப்பார்கள், அப்படியே அவன் உள்ளே வந்தாலும், அப்புத்தகத்தை தொட்ட மாத்திரத்தில் கல்லாக மாறியிருப்பான்.

அப்துல்லா: இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது, தன் சக்தியை பிரயோகம் செய்யவில்லையானால், தான் அந்த பலவீனமான ஏழை விவசாயி இப்படிப்பட்ட செயலை செய்யமுடியும். சரி, இரண்டாவது வாய்ப்பு என்ன?

அப்ரஹாம்: இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால், அந்த ஏழை விவசாயி, அந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும், அதாவது, கோட்டைக்கு முன்பாக உள்ள பல நூறு பேரை கொன்றுப்போடும் சக்தி உடையவனாக அவன் இருக்கவேண்டும். மற்றும் உள்ளே செல்லும் வரையில் வரும் அனேக எதிர்ப்புக்களை சமாளித்து வெற்றியுள்ளவனாக அவன் இருக்கவேண்டும்.

இன்னும் அந்த புத்தகத்தை தொட்டால் கல்லாக மாறவேண்டும் என்ற இராஜாவின் சக்தியை மிஞ்சி, அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டு ஒரு புது சக்தியை பயன்படுத்தி அந்த சட்டபுத்தகத்தை கிழிக்கவேண்டும். அதாவது, இராஜாவின் சக்தியைவிட இந்த ஏழை விவசாயி சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும்.


அப்துல்லா: இதுவும் சரியாகத் தான் தோன்றுகிறது.

அப்ரஹாம்: அதாவது, இராஜாவிற்கு நான் சொன்ன தகுதிகள், சக்திகள் இருப்பது உண்மையானால், அந்த இராஜா, தன் புத்தகத்தை யாரோ கிழித்துவிட்டார்கள், என்றுச் சொன்னதும் உண்மையானால், இந்த இரண்டு வாய்ப்புக்கள் தவிர வேறு எந்த செயலாலும், இக்காரியத்தை செய்யமுடியாது? நீ என்ன நினைக்கிறே?

1) இராஜாவே தன் சுய விருப்பத்தின்படி தன் சட்டப்புத்தகம் கிழிக்கப்பட விட்டுக்கொடுக்கவேண்டும்

அல்லது

2) அந்த ஏழை இந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக, பலசாளியாக இருக்கவேண்டும்.


அப்துல்லா: சரி, இதை நான் அங்கீகரிக்கிறேன், இப்போ இந்த கதைக்கும், யூதர்களுக்கு அல்லா இறக்கிய வேதங்களை மனிதர்கள் மாற்றினார்கள் என்று நாங்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்? கொஞ்சம் விவரமாகச் சொல்லுடா?

அப்ரஹாம்: சில கேள்விகள் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லு. குர்‍ஆனை இறக்கியது யாரு?

அப்துல்லா: அல்லா தான் குர்‍ஆனை இறக்கினார்.

அப்ரஹாம்: குர்‍ஆனை யாராவது மாற்ற முடியுமா?

அப்துல்லா: முடியவே, முடியாது, குர்‍ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார், அவரே பொருப்பேற்று உள்ளார், எனவே, மனிதனால் எந்த ஆபத்தும் வராது?

அப்ரஹாம்: ஏன் மனிதனால் முடியாது?

அப்துல்லா: ஏனென்றால், மனிதனை விட அல்லா மிகவும் சக்தியானவர், மனிதன் ஒன்றும் செய்யமுடியாது

அப்ரஹாம்: சரி அடுத்த கேள்விக்கு வருகிறேன். முந்தைய வேதங்கள் என்று குர்‍ஆன் சொல்லும் வேதங்களை யார் இறக்கியது?

அப்துல்லா: முந்தைய வேதங்களை இறக்கியது அல்லா தான்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும்,
இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(இன்னும் பார்க்க‌ குர்-ஆன் 2:4, 2:285)


அப்ரஹாம்: அல்லா இறக்கிய முந்தைய வேதங்களில் அல்லா என்ன சொல்லியிருந்தார்?

அப்துல்லா: முந்தைய வேதங்களில் நேர் வழியும், ஒளியும், நல்லுபதேசங்களும் இருந்தன மற்றும் அது நேர் வழிகாட்டியாகவும் இருந்தது. இதில் எந்த சந்தேகமுமில்லை.

குர்-ஆன் 5:44 நிச்சயமாக
நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக
நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்;
அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
(குர்-ஆன் 5:44, 21:105, & 5:46 )

அப்ரஹாம்: சரி, ரொம்ப சந்தோஷம், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் இப்போது அப்படியே உள்ளதா? அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டதா?

அப்துல்லா: முந்தைய வேதங்களின் வசனங்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டதாக அல்லா தெள்ளத்தெளிவாகச் சொல்கிறான். இதோ அந்த வசனம், குர்-ஆன் 5:41.

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்.
மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)


அப்ரஹாம்: ஆக, அல்லா இறக்கிய வேதத்தை மனிதர்கள் மாற்றினார்கள், அப்படித்தானே?

அப்துல்லா: அப்படித்தான், இதில் துளியளவும் சந்தேகமில்லை.

அப்ரஹாம்: குர்‍ஆனில் சொல்லப்பட்டதை அப்படியே முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? அதாவது, குர்‍ஆன் வசனம் சொல்வது உண்மைத் தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அப்துல்லா: 100 சதவிகிதம் நம்புகிறோம், குர்‍ஆனின் வசனங்கள் உண்மை, அதில் சொல்லப்பட்ட விவரங்களும் உண்மைத் தான்.

அப்ரஹாம்: இப்போது, நான் உனக்கு இதற்கு முன்னால் சொன்ன அந்த இராஜாவின் கதையோடு இந்த விவரங்களை சம்மந்தப்படுத்தி சில கேள்விகள் கேட்கிறேன். அல்லா சக்தியுள்ளவரா?

அப்துல்லா: ஆமாம்.

அப்ரஹாம்: அப்படியானால், அந்த இராஜாவைப் போல அல்லாவும் சக்தியுள்ளவர், அதாவது அந்த இராஜாவை விட வல்லமையுள்ளவர்.
இப்பொழுது நான் சொன்ன கதைக்கும், அல்லாவின் அறிக்கைக்கும் உள்ள சம்மந்தத்தைச் சொல்கிறேன் கேள்.

நான் இந்த கதையில் சொன்ன இராஜா தான் "அல்லா".
அந்த இராஜாவின் சட்டபுத்தகமே அல்லா இறக்கிய‌ முந்தைய வேதங்கள்.
அந்த ஏழை விவசாயி தான், யூதர்களும், கிறிஸ்தவர்களும்.

அந்த இராஜா சொன்னது போலவே, அல்லாவும் குர்‍ஆனில், என் முந்தைய வேதங்களை யூதர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்கிறார்.

இப்போது என் கேள்விகள் என்னவென்றால்,

அல்லாவின் வேதங்களை மண்ணுக்கு சமமான மனிதர்கள் திருத்தவேண்டுமானால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலாவதாக, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாவை விட சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் அல்லாவே இறக்கிய வேதத்தை அவர்கள் திருத்தமுடியும். ஒரு பலவானை கட்டி அவனை செயலிழக்க செய்யாமல் எப்படி ஒரு பலவினமானவன் அந்த பலவானுடைய வீட்டில் உள்ள பொருளை திருடமுடியும்?

இரண்டாவதாக‌, மனிதர்கள் தன் வேதத்தை திருத்த தானே அனுமதி அளித்து இருந்திருக்க வேண்டும், ஏனென்றால், குர்‍ஆனை எப்படி அல்லா பாதுகாத்தாரோ அப்படி முந்தைய வேதங்களை அல்லா பாதுகாக்கவில்லை.


என்ன அப்துல்லா கேட்டுக்கொண்டு இருக்கிறாயா?


அப்துல்லா: சொல்லுடா, கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

அப்ரஹாம்: ஆகா, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று குர்‍ஆன் சொல்வதால், இரண்டு குற்றச்சாட்டை நான் அல்லாவின் மீது வைக்கிறேன்.

a) அல்லா மிகவும் பலவீனமானவர், அதாவது சக்தியில்லாதவர், தன் படைப்பின் மீது வல்லமை இல்லாதவர், அதனால், தான் மனிதர்கள் திருத்தும் போது, தடுக்க திராணியில்லாமல், கையாளாகாதவராக இருந்துவிட்டார்.

b) அப்படி இலலை, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம், அல்லாவிற்கு சக்தி இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொன்னால், அல்லா வேண்டுமென்றே மக்கள் தன் வேதத்தை திருத்த அனுமதி அளித்துள்ளார்? மட்டுமல்ல, தன் முந்தைய வேத்ததை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளிக்கும் போது, குர்‍ஆனை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளித்து இருக்கமாட்டார் என்று எப்படி நம்புவது?

நண்பா, அப்துல்லாவே, உனக்கு நான் இரண்டு தெரிவுகளை தருகிறேன், நீ ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1) முதலாவது, அல்லா பலவீனமானவர், சக்தியற்றவர். ம‌ற்றும் யூத‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் அல்லாவை விட‌ ச‌க்தியுள்ள‌வ‌ர்க‌ள்.

அல்ல‌து

2) அல்லா ஒரு அநீதிக்கார‌ர், அநியாய‌க்கார‌ர், அவ‌ரிட‌ம் நீதி நியாய‌ம் இல்லை, த‌ன் முந்தைய‌ வேத‌த்தை அழிக்க‌விட்டு, பிந்தைய‌ வேத‌த்தை பாதுகாக்கிறார்.


இதில் நீ எதை தெரிந்தெடுத்தாலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்சனையும் இல்லை.

ஒரு வேளை, இரண்டாவது தெரிவை நீ தெரிந்தெடுத்தால், இன்னும் ஒரு பிரச்சனை முளைக்கும், அதாவது, தன் முந்தைய வேதம் அழிக்க அனுமதி அளித்த ஒரு இறைவனிடம், அதாவது அல்லாவிடம் எப்படி நாம் நியாயம் நீதியை எதிர்ப்பார்ப்பது, அதே நேரத்தில், குர்‍ஆனை அவர் பாதுகாத்தார் என்று எப்படி நம்பமுடியும்? இதையும் அவர் திருத்தப்பட அனுமதி அளித்து இருக்கலாம் அல்லவா?

அந்த இராஜாவின் கதைக்கும் அல்லாவின் கதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான்.
உன் பதில் என்ன சொல்லு?



அப்துல்லா: ....

அப்ரஹாம்: என்ன சத்தத்தை காணோம்

அப்துல்லா: இல்லேடா, இது ஒரு யோசிக்க வேண்டிய விஷயம் தான். யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

அப்ரஹாம்: நீ யோசித்து முடிவு சொல்லு பரவாயில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் அப்துல்லா, அது என்னவென்றால், உன்னைப்போல யார் யாரெல்லாம் முந்தைய வேதங்களை மனிதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று பொய்யான தகவலைச் சொல்வார்களோ, அவர்கள் முதலாவது இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

அல்லாவிற்கு சக்தியில்லையா அல்லது அவர் ஒரு அநியாயக்காரரா? சொல்லுங்கள்.

அவரே அனுமதி அளித்துவிட்டு, அவரே இப்போது மனிதர்கள் மீது குற்றப்படுத்தினால், நாங்கள் என்ன காதில் காலிப்பிளவர் பூவா வைத்துள்ளோம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டு தலை ஆட்டுவதற்கு?

முதல்லே, இறைவன் கொடுத்துள்ள மூளையை பயன்படுத்தி கொஞ்சம் யோசித்துப் பாரு. அந்த இராஜாவின் செயல்களைப் பார்த்தால், உனக்கு என்ன தோனுது, அவன் ஒரு பொய்யன் அல்லது அநியாயக்காரன். அது போல, குர்‍ஆன் வசனங்களின் படி அல்லா ஒரு பொய்யான் அல்லது அநியாயக்காரன். ஏன் பொய்யன் என்றுச் சொல்கிறேன், தனக்கு சக்தி இல்லாதிருந்தும், தான் ஒரு பலசாளி என்று சொல்லிக்கொண்டான் அல்லவா அந்த இராஜா, அப்படியானால், அந்த இராஜா(அல்லா) பொய்யன் தானே. இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாயானால், அவர் ஒரு அநியாயக்காரர், தானே அழிக்கவிட்டு, தானே இப்போது ஒப்பாரி வைத்தால் என்ன அர்த்தம்.

அப்துல்லா: அல்லா பொய்யனும் இல்லை மற்றும் அநியாயக்காரரும் இல்லை. அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

அப்ரஹாம்: அப்படியில்லையானால், இந்த அல்லாவின் பிரச்சனையை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் நீங்கள்.

அப்துல்லா: சரிடா, நான் உனக்கு நாளைக்கு போன் பண்றேன். இப்போ குட் நைட்.

அப்ரஹாம்: குட் நைட், பாய்.



அப்துல்லாவின் மற்றும் அப்ரஹாமின் இதர உரையாடல்கள்:

1. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 1( ஏன் அரபியில் மட்டும்.... )

2. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 2(குர்-ஆன் தொகுப்பு, அபுபக்கர் காலத்தில்...)


 

 

திங்கள், 28 ஜனவரி, 2008

Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்

         
Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)


பிஜே அவர்களின் குற்றச்சாட்டு:
"இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு"


முன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா? என்ற புத்தகத்திற்கு "ஈஸா குர்ஆன்" தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் "தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று " என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் பதில்:

இக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.

பாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்

பாகம் - 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.


பாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்


பிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.

1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


பிஜே அவர்கள் எழுதியது:

3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.



ஈஸா குர்ஆன் பதில்:

இயேசு தன் சீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் "சீமோன் பேதுரு" தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.
பிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல "நீதிபதி இருக்கையில்" உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு "நீதிபதியாக" வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு "நீதிபதியாக" இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )



அதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலிருந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் "இப்படிப்பட்டவனுக்கு ஐயோ" என்று சொல்லப்படுகிறது.

பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!(ஏசாயா: 5:23)



ஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.

இயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து "நியாயத்தீர்ப்பு" மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

எனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.

இருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் "பேதுரு" தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய "கணிப்பு" தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.

2. எதற்காக பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே" என்று இயேசு சொன்னார்?

பேதுருவை இயேசு ஒரு சமயத்தில் "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.

பிஜே அவர்கள் எழுதியது:

அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்
இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்
கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்



அ) ஏன் இயேசு பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே " என்றுச் சொன்னார்?

ஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்?

இ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்?

இப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது " இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்".

இப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.


மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

மத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.



பிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:

இயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்து ,

இயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,



இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்.

இப்படிப் பட்டவர்கள் "தனக்கு இடறலாக இருக்கிறார்கள்" என்று இயேசு சொல்கிறார்,

இப்படிப் பட்டவர்கள் "தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் " என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, "இப்படி உமக்கு பாடுகள், மரணம்" வரக்கூடாது என்றுச் சொன்னார்.

ஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.

பேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை "நீ சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தட‌ம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி பேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.

3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்:

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை" மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு " எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.

இஸ்லாம் படி, முகமது "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை" என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.

இப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .

எனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.

இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,

ஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்?

இப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா? இல்லையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.

குர் ஆனைப் பொருத்தவரையில்:
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,

இயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,

இயேசு உயிர்த்தெழவில்லை


இயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:

இயேசுவின் சிலுவை பாடுகள்,

அவரது மரணம்,

உயிர்த்தெழுதல்

இவைகளை மறுத்தவர்கள்:

அது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் சரி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் " போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:

"பின்னாகப்போ சாத்தானே"

"நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்"

"நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்"

என்பதாகும்.

இதன் படி, "இஸ்லாமைப் பார்த்து" எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது" என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது" என்று இயேசு சொல்கிறார்.

பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.

நான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால்? எப்படி பொருந்தாது? என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிஜே அவர்கள் எழுதியது:

அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.

இந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.

ஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, "நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்" என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல "மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை" என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

ஆனால், நடந்தது என்ன?
பேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.

இதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா? "எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது" என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.

உண்மையில் நடந்தது என்ன? இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.

பிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது?

ஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு "இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் "என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே? இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே? பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.

இயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார்? பேதுருவா? இயேசுவா? பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா? பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது?

4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா?

பிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Formats mine


ஈஸா குர்ஆன் பதில்:

அருமையான பிஜே அவர்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா?

அதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.
1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்?

2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா? உமக்கு இந்த 9 எப்படி வந்தது?

3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே?

4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது?

5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது? அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?


கேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா?

பிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்? சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் சொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்?

ஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இருந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.

ஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார்? அதற்கு பேதுரு தகுதியானவரா? பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா? என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

முடிவுரை:

கடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:
1. பேதுரு "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்" நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்.

2. இப்படிச் சொன்னது "இயேசு" இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர‌ , மற்றபடி, பேதுருவை இயேசு "சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.

3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், "நீ ஒரு திடமான‌ கல்" என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, "நீ பாக்கியவான்" என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்?

4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.

5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.

6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.


மற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.

"பேதுரு ஒரு பேரொளி", "பேதுரு ஒரு சிறந்த தலைவர்" என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.


பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?



Isa Koran Home Page Back - Answering PJ index Page

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjPeter1.htm