ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 28 ஜூன், 2019

வாட்ஸப் வலி: முஹம்மதுவைப் பற்றி அறிந்திருக்கவேண்டிய 10 அற்பு(அபத்)தங்கள்

என்னுடைய சொந்தக்கார தம்பி ஒருவர், ஒரு வாட்ஸ்அப் செய்தியை எனக்கு அனுப்பினார். ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய முஹம்மது பற்றிய 10 அற்புதங்கள் என்ற‌  தலைப்பில் அந்த செய்தி ஆங்கிலத்தில்  இருந்தது.

அதனை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த, 10 அற்புதங்களில் ஒரு அற்புதத்தை கூட குர்ஆனிலோ நம்பகமான ஹதீஸ்களிலோ காண முடியாது. இஸ்லாமை நன்றாக கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்கள் கூட‌ அந்த பத்து அற்புதங்களை பார்த்தால் தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். இருந்தபோதிலும் அநேக முஸ்லிம்கள் தாங்கள் அனுப்பும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன என்று புரிந்து கொள்ளாமல், தாங்கள் அல்லாஹ்வுக்கு ஊழியம் செய்வதாக நினைத்துக் கொண்டு பொய்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். 

சரி வாருங்கள், அந்த பத்து அற்புதங்கள் எவைகள் என்றும் அவைகளில் உள்ள பொய்கள் என்ன என்றும் சிறிது ஆய்வு செய்வோம். இதைப் பார்த்தாவது முஸ்லிம்கள் இப்படிப்பட்ட பொய்களை பரப்பாமல் இருப்பார்களாக.  

[இந்த சிறிய கட்டுரையின் மூலமாக கிறிஸ்தவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுக்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்களில் சிலர் உண்மைக்கு புறம்பான செய்திகள் தங்களுக்கு வரும் போது, மேற்கண்ட  செய்தியை பரப்பும் முஸ்லிம்களைப்போல எதைப் பற்றியும் சிந்திக்காமல் வாட்ஸ்அப் மூலமாக மற்றவர்களுக்கு உடனே அனுப்பிவிடுகிறார்கள். இன்டர்நெட் இலவசம் என்பதால் தங்களுக்கு வரும் அனைத்து செய்திகளையும் தேவையில்லாமல் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இனியாவது அதனை தவிர்ப்பார்களாக.]

எனக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி இது தான்:

10 MIRACLES YOU MUST KNOW ABOUT PROPHET MUHAMMAD(S.A.W)

1. Do you know that "Flies,insects, ants and mosquitoes" never land on his body talk less of bitten him? (S.A.W)

2. Do you know that he did not "yawn" in his life time? (S.A.W)

3. Do you know that both "Domestic and wild Animals" never a second angry with him? (S.A.W)

4. Do you know that if he "sleeps" he hears any "conversation"? (S.A.W)

5. Do you know that he "sights" every thing both "front" and "back" at the same time without turning? (S.A.W)

6. Do you know that "Land" covers his "urine" and stool immediately he passed them?(S.A.W)

7. Do you know that he is always "one feat taller" than any body that comes "near" him? (S.A.W)

8. Do you know that he was "circumscribed, washed and cleaned in his Mother's womb before born to this world?(S.A.W)

9. Do you know that he never had a "wet dream"that signify Men's "puberty"?(S.A.W)

10. Do you know that he has no "shadow" even in the "Sun", Moon or "Light"?(S.A.W).

Even if you did not forward, you will be rewarded, but if you do, your reward will be unmeasurable!!!

தமிழாக்கம்:

மேற்கண்ட 10 அற்புதங்களை முதலில் தமிழில் படிப்போம்:

அற்புதம் 1: உங்களுக்கு தெரியுமா? ஈக்கள், கொசுக்கள், எறும்புகள்  மற்றும் சின்ன சின்ன பூச்சிகள் இவைகளெல்லாம் முஹம்மதுவின் உடலில் உட்காரவில்லை, அதேபோல அவரை கடிக்கவில்லை.

அற்புதம் 2: முஹம்மது அவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை கூட கொட்டாவி விடவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?

அற்புதம் 3: முஹம்மது அவர்கள் மீது வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும் ஒரு நொடி கூட கோபமாக இருந்ததில்லை.

அற்புதம் 4: முஹம்மது அவர்கள் தூங்கும் போது கூட மற்றவர்கள் பேசுவதை கேட்கமுடியும்.

அற்புதம் 5: முஹம்மது அவர்கள் முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேரத்தில் பார்ப்பார், அதாவது தலையை பின்னுக்கு திருப்பாமலேயே தனக்கு பின் நடப்பதை பார்ப்பார்.

அற்புதம் 6: முஹம்மது அவர்கள் சிறுநீர்  அல்லது மலம் கழித்தால், உடனே பூமியானது மண்ணால் அதனை மூடிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அற்புதம் 7: முஹம்மது அவர்கள் யார் அருகில் சென்றாலும் அந்த நபரைக் காட்டிலும் ஒரு அடி உயரமாகவே தென்படுவார்.

அற்புதம் 8: முஹம்மது அவர்கள் தம் தாயின் வயிற்றில் இருக்கும் போது சுன்னத்(விருத்தசேதனம்) செய்யப்பட்டார், கழுவப்பட்டார் (தீயவைகள் நீக்கப்பட்டது) என்பதை நீங்கள் அறிவீர்களா?

அற்புதம் 9: பொதுவாக வாலிபர்கள் ஒரு வயதை அடைந்தவுடன் தம்மை அறியாமல் தூக்கத்தில் அவர்களுக்கு "விந்து வெளிப்பட்டுவிடும்", இது போல முஹம்மதுவிற்கு நடக்கவே இல்லை.

அற்புதம் 10: முஹம்மது அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை, சூரியன், நிலவு மற்றும் இதர வெளிச்சத்தின் கீழே அல்லது பக்கத்திலே நின்றாலும், அவரது நிழல் பூமியில் விழுவதில்லை.

மேற்கண்ட செய்தியை வாட்ஸப்பில் பார்க்கும் முஸ்லிம் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்து உடனே மற்றவர்களுக்கு அனுப்பிவிடுகின்றான்.  ஆனால் இந்த செய்தி உண்மையா? இதனால் இஸ்லாமுக்கு ஏதாவது கேடு விளையுமா? என்று அவன் சிந்திப்பதில்லை, இப்படி சிந்திக்க இஸ்லாம் விடுவதும் இல்லை என்பது தான் வேதனை.

மேற்கண்டவைகள் அனைத்தும் அற்புதங்கள் தான் என்று நம்பும் முஸ்லிம்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:

அற்புதம் 1:  பற்றிய கேள்விகள்

1) ஒருவேளை இந்த அற்புதங்களை முஹம்மதுவிற்கு  அல்லாஹ் கொடுத்திருந்தான் என்று நம்பினாலும், இதன் மூலமாக அல்லாஹ் உலகிற்கு எதனைச் சொல்லவருகிறான் என்று உங்களால் சொல்லமுடியுமா? 

2) முஹம்மதுவின் உடலில் ஒரு கொசுவோ, ஒரு ஈயோ உட்காராமல் இருந்ததினால் யாருக்கு என்ன லாபம்? இதன் மூலம் முஹம்மதுவிற்கு என்ன லாபம்? அவருடைய ஸஹாபாக்களுக்கு என்ன லாபம்? அக்கால முஸ்லிம்களுக்கும் இக்கால முஸ்லிம்களுக்கும் என்ன லாபம்? இதற்கான பதிலை யாராவது சொல்ல முடியுமா?

3) நான் அனுப்பிய இறைத்தூதர் மீது ஒரு கொசு கூட உட்காரக் கூடாது என்று ஜாக்கிரதை பட்ட அல்லாஹ், ஏன் ஒரு குறிப்பிட்ட யுத்தத்தில் ஒருவன் எரிந்த கல்லால்  முஹம்மதுவின் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது? கொசுக்களிலிருந்து முஹம்மதுவை காப்பாற்றுவது சிறந்ததா? எதிரிகளின் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவது சிறந்ததா?

அற்புதம் 2:  பற்றிய கேள்விகள்

4) முஹம்மது கொட்டாவி விட்டார் என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டால், அதனால் முஹம்மதுவிற்கு என்ன தீமை விளைந்துவிடும்? ஏன் முஸ்லிம்கள் அற்பமான காரியங்களை பொய்களாக பரப்பிக்கொண்டு வருகிறார்கள்?

5) கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது என்றும், அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறான் என்றும் வரும் ஹதீஸ்களின் அடிப்படையில், இப்படி முஹம்மது வாழ்நாள் முழுவதும் கொட்டாவியை விடவில்லை என்றுச் சொல்வது முட்டாள்தனமாகப் படவில்லை?

6) முதலில், அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறான் என்பதும், ஷைத்தானிடமிருந்து கொட்டாவி வருகிறது என்றுச் சொல்வதுமே, ஒரு பித்தலாட்டாம் ஆகும். ஏன் அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறான்? அவன் தானே மனிதனை படைத்தான்! அவன் தானே அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறான்! வெறுக்கின்ற ஒன்றை எப்படி மனிதனில் உருவாக்கியுள்ளான் அல்லாஹ்? கொட்டாவி விடுவதினால் நன்மைகள் என்ன? அது ஏன் வருகிறது போன்றவைகளை இணையத்தில் தேடி படித்துக் கொள்ளுங்கள்.

7) சரி முஹம்மது கொட்டாவி விடவில்லை என்றே நாம் கருதுவோம். 1400 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் கொட்டாவி விடவில்லை என்பதால், இன்று உலக முஸ்லிம்களுக்கு என்ன நன்மை உண்டாகிவிட்டது? அன்று முஹம்மதுவிற்கு என்ன நன்மை இதனால் உண்டானது? இக்கேள்விகளுக்கு யாராவது பதில்  சொல்லமுடியுமா?

அற்புதம் 3:  பற்றிய கேள்விகள்

8) வீட்டு மிருகங்களும், கட்டு மிருகங்களும் முஹம்மது மீது கொபம் கொள்ளவில்லை என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதனால் என்ன நன்மை உலக முஸ்லிம்களுக்கு உண்டாகிவிட்டது?

9) முஸ்லிம்கள் சொல்வதைப் பார்த்தால், முஹம்மது ஒரு ஆவி அல்லது ஆத்துமா போன்று கண்ணுக்கு தெரியாமல்  இருந்தால் தான், வீட்டு/காட்டு மிருகங்கள் பார்க்கமுடியாது, அப்போது தான் இப்படிப்பட்ட காரியங்கள் சாத்தியமாகும். முஹம்மதுவை ஒரு ஹீரோவாக காட்டுவதற்கு இப்படியெல்லாம் தரம் தாழ்த்தி அவரை வருணிக்கவேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு ஏன் வந்தது?

அற்புதம் 4:  பற்றிய கேள்விகள்

10) முஹம்மது அவர்கள் தூங்கும் போது கூட மற்றவர்கள் பேசுவதை கேட்கமுடியும் – ஏன்? ஒரு மனுஷனை நிம்மதியாகவும் தூங்கவிடமாட்டானா அல்லாஹ்?

11) இது அற்புதமோ, ஆசீர்வாதமோ அல்ல முஸ்லிம் நண்பர்களே! இது முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட‌ மிகப்பெரிய சாபக்கேடு (உண்மையாகவே இது நடந்திருந்தால்!).

12) நன்றாக ஆழமாக தூங்கும் மனிதன் தான் ஆரோக்கியமான மனிதன். இப்படிப்பட்ட அற்புதங்களை முஹம்மதுவிற்கு கொடுப்பதினால், முஸ்லிம்கள் 'அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற' ஷிர்க் என்ற அல்லாஹ்வால் மன்னிக்கமுடியாத பாவத்தை செய்பவர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

13) தூங்கும் போதும் மற்றவர்கள் பேசுவதை கேட்கும் குணம், இறைவனுக்கு உரியது, அதாவது இறைவன் தூங்குவதில்லை என்றுச் சொல்லலாம். இந்த குணம் முஹம்மதுவிற்கு உண்டு என்று நீங்கள் சொல்வதினால், அவரையும் பாவியாக்கி, நீங்களும் பாவியாக மாறுகிறீர்கள், முஸ்லிம்களே! உங்களை காப்பாற்றவே நான் இதனை எழுதுகிறேன், மனந்திரும்புங்கள்!

அற்புதம் 5:  பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேரத்தில் பார்ப்பார், அதாவது தலையை பின்னுக்கு திருப்பாமலேயே தனக்கு பின் நடப்பதை பார்ப்பார்.

14) உடலை திருப்பாமல், தலையை மட்டும் திருப்பி பார்ப்பது போன்ற கம்பியூட்டர் கிராபிக்ஸ் சமாச்சாரத்தைக் காட்ட‌ இது என்ன பேய் படமா? 

15) அறிவு உள்ளவன் யாராவது இப்படி சொல்லுவானா? கண்கள் முன்னால் இருந்தால், அது எப்படி அவர் பின்னால் பார்க்கமுடியும்? 

16) இறைவனுக்கு இருக்கும் சர்வ வியாபி என்ற குணத்தை முஹம்மதுவிற்கு கொடுப்பதினால், முஸ்லிம்கள் இணைவைக்கும் பாவத்தைச் செய்கிறார்கள் என்பதை முஸ்லிம்களுக்கு  உணர்த்த இன்னும் எத்தனை யுகங்கள் தேவையோ எனக்கு தெரியவில்லை!

அற்புதம் 6:  பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் சிறுநீர்  அல்லது மலம் கழித்தால், உடனே பூமியானது மண்ணால் அதனை மூடிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

17) இந்த அற்புதத்தை முஹம்மதுவிற்கு கொடுப்பதைவிட, அல்லாஹ் ஒன்று செய்திருக்கலாம், அதாவது முஹம்மது வாழ்நாள் முழுவதும் சிறுநீர் கழிக்காதவராகவோ, மலம் கழிக்காதவராகவோ செய்திருந்தால், மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

18) எப்படியெல்லாம் முஸ்லிம்கள் சிந்திக்கிறார்கள் பாருங்கள்? ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ!  முஸ்லிம்களே, முஹம்மது மலஜலம் கழிக்கும் போது, பூமியானது தானாகவே அதனை மூடும் அளவிற்கு ஒரு கேவலமான அற்புதத்தை முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுப்பதற்கு ஒரு பலமான காரணத்தைச் சொல்லுங்கள்!

அற்புதம் 7:  பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் யார் அருகில் சென்றாலும் அந்த நபரைக் காட்டிலும் ஒரு அடி உயரமாகவே தென்படுவார்.

19) மூன்று அடி உள்ள ஒரு குள்ளமான மனிதனுக்கு அருகில், முஹம்மது சென்றால், அவர் நான்கு அடியாக தென்படுவாரா? அப்படியானால், பார்ப்பதற்கு மிகவும் கேவலமான, அல்லது கேலியான உருவமாக உங்கள் முஹம்மது தென்படமாட்டார்?  

20) சர்கஸ்ஸில் கோமாளிகள் வந்து நமக்கு சிரிப்பு காட்டுவார்களே! அவர்களில் சிலர் குள்ளமாகவும் இருப்பார்கள், அவர்கள் பக்கத்தில் முஹம்மதுவை நிற்கவைத்து, கண்கொள்ளா காட்சியை பார்க்க முஸ்லிம்கள் விரும்புவார்களா?

55 செ.மீ. உள்ள இந்த நபரின் பக்கத்தில் முஹம்மது சென்றால், அவர் 85 சென்டி மீட்டர் உயரம் இருப்பார் என்று சொல்ல வருகிறீர்களா? முஸ்லிம்களே!

21) உலகில் மிகவும் உயரமான மனிதன் 8 அடிக்கு மேல் இருந்தால், இவரது அருகில் முஹம்மது வந்தால், ஒன்பது அடியாக காணப்படுவாரா? 

22) சரி போகட்டும், முஸ்லிம்களின் வழிக்கே வருவோம். ஒருவேளை 2 அடி உயரமுள்ளவனும், 8 அடி உயரமுள்ளவனும் ஒரே இடத்தில் இருக்கும் போது, முஹம்மது அவர்கள் அருகில் வந்தால் எந்த உயரத்தில் காணப்படுவார்?

இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள் (2 நிமிடங்கள்), கின்னஸ் சாதனை புரிந்த இருவர் இதில் காணப்படுகிறார்கள், மிகவும் குள்ளமான, மிகவும் உயரமான இருவர் சந்திக்கிறார்கள். இவர்கள் மத்தியில் முஹம்மது நின்றால் அவர் எப்படி காணப்படுவார்?

The World's Tallest Man Meets World's Smallest: 2015 - www.youtube.com/watch

இப்படியெல்லாம் முஸ்லிம்கள் தன்னைப் பற்றி பரப்புவார்கள் என்றும், என்னைப்போன்றவர்கள் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்றும் முஹம்மது அறிந்திருந்தால், தனக்கு அந்த இறைத்தூதர் பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்திருந்திருப்பார். பாவம் முஹம்மது, முஸ்லிம்களிடமிருந்து அவரை யாராலும் காப்பாற்றமுடியாது, இவ்வளவு பெரிய அறிவாளிகளை  இஸ்லாம் பெற்றுத்தள்ளிக்கொண்டு இருக்கிறது!

அற்புதம் 8: பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் தம் தாயின் வயிற்றில் இருக்கும் போது சுன்னத்(விருத்தசேதனம்) செய்யப்பட்டார், கழுவப்பட்டார் (தீயவைகள் நீக்கப்பட்டது) என்பதை நீங்கள் அறிவீர்களா?

23) இப்படி கேட்கிறேன் என்று கோபம் கொள்ளக்கூடாது முஸ்லிம்கள். முஹம்மதுவின் மர்ம உறுப்பை சஹாபாக்களில் (அவரது மனைவிகள் தவிர) யாராவது பார்த்திருக்கிறார்களா?  ஆம், பார்த்திருக்கிறார்கள் என்று சொல்வீர்களலென்றால், யார் பார்த்தது? பெயரைச் சொல்லமுடியுமா? இஸ்லாமில் இதற்கு ஆதாரமுண்டா? அல்லது முஹம்மது எப்போதாவது "நான் பிறந்த பிறகு எனக்கு சுன்னத்து செய்யப்படவில்லை, நான் பிறப்பதற்கு முன்பாகவே சுன்னத்து செய்யப்பட்டேன்" என்று சொல்லியுள்ளாரா?

24) ஒருவேளை, ஒரு குறை பிரசவமாகவோ, அல்லது மர்ம உறுப்பு அரைகுறையாக வளர்ந்த  நபராக‌ முஹம்மது பிறந்திருப்பாரோ!

அற்புதம் 9: பற்றிய கேள்விகள்

பொதுவாக வாலிபர்கள் ஒரு வயதை அடைந்தவுடன் தம்மை அறியாமல் தூக்கத்தில் "விந்து வெளிப்பட்டுவிடும்" இது போல முஹம்மதுவிற்கு நடக்கவே இல்லை.

25) தன் வாலிபவயதில் இப்படி தனக்கு ஈரமான கனவு அல்லது விந்து தூங்கும் போது வெளிப்படவில்லை என்று முஹம்மது எங்கேயாவது சொல்லியுள்ளாரா? ஆதாரம் காட்டமுடியுமா?

26) முஹம்மதுவிற்கு 30 ஆண்களின் சக்தி இருந்தது என்ற சஹாபாக்கள் பேசிக்கொண்ட ஹதீஸ்கள் இருக்கும் போது, அவர் "எதற்கும்" லாயக்கில்லை என்பது போன்ற செய்திகளை வாட்ஸப்பில் பரப்புவது நியாயமாக இருக்கிறதா முஸ்லிம்களே!

27) ஒரு ஆரோக்கியமான வாலிபனுக்கு, பொதுவாக அப்படி நடப்பது சகஜமே, அது என்னவோ பெரும் பாவம் போலவும், தங்களுடைய நபி ரொம்ப சுத்தம் போலவும், செய்திகளை பரப்புவது மிகவும் தப்பு முஸ்லிம்களே! மேலும், ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையென்றால், மக்கள் வேறு மாதிரி நினைக்க வாய்ப்பு உண்டாகிவிடும். முஹம்மதுவை ஒரு ஹீரோவாகவும், நல்லவராகவும் காட்டுவதற்காக, பொய்யான அற்புதங்களை பரப்பிகொண்டு, கடைசியாக அவரது ஆண்மைக்கே வேட்டு வைத்துவிடுவீர்கள் போல இருக்கிறதே முஸ்லிம்களே!

அற்புதம் 10: பற்றிய கேள்விகள் 

முஹம்மது அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை, சூரியன், நிலவு மற்றும் இதர வெளிச்சத்தின் கீழே அல்லது பக்கத்திலே நின்றாலும், அவரது நிழல் பூமியில் விழுவதில்லை.

28) சுத்தம்! இனி முஹம்மதுவை அல்லாஹ்வே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. ஸஹி ஹதிஸ்களிலோ, குர்‍ஆனிலோ இதற்கு ஆதாரமுண்டா? இஸ்லாமிய அறிஞர் சுயூதியே இதனை எழுதினாலும் அது தப்பு முஸ்லிம்களே!

29) நிழல் தெரியாத மனிதனை உலகம் கண்டிருக்குமா? இதோ இருக்கிறார், இஸ்லாமிய நபி முஹம்மது!  முஹம்மதுவை அல்லாஹ்விற்கு இணையாக பேசுவது தப்பு முஸ்லிம்களே!

30) முஹம்மதுவின் நிழல் பூமியில் விழவில்லை என்று பொய்யாக சொல்வதை விட, முஹம்மதுவின் மீது வெயிலே படவில்லை என்று  சொல்லியிருந்தால், குறைந்தபட்சம் அந்த பாலைவன வெயிலிலிருந்து ஒரு பேச்சுக்காகவாவது நீங்கள் அவருக்கு நிம்மதியை கொடுத்திருந்திருக்கலாம் முஸ்லிம் நண்பர்களே!

இந்த 10 அற்புதங்கள் செய்துமா? மக்காவினர் அவரை நபி என்று ஏற்கவில்லை?

முஹம்மதுவின் மீது கட்டுக்கதைகளை அள்ளிவீசும் முஸ்லிம்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறார்கள். உண்மையாகவே மேற்கண்ட 10 அற்புதங்கள் முஹம்மதுவின் வாழ்வில் நடந்திருந்தால், பிறந்ததிலிருந்தே, முஹம்மது ஒரு தெய்வீகப்பிறவியாக இருந்திருப்பார்.

அவர் அனாதையாக இருந்திருக்கவேண்டியதில்லை, அவரை ஊரே அள்ளி அணைத்திருந்திருக்கும்.

அவர் உணவுக்காகவும், உடைக்காகவும் அலைந்து இருந்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ஒருவருடைய‌ நிழல் பூமியில் படவில்லை என்றுச் சொல்வதே பெரிய அற்புதமில்லையா? 

அவரை நபியாக மக்கள் சின்ன வயதிலிருந்தே ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள்.

அவரை கொல்ல மக்காவினர் முயன்று இருந்திருக்கமாட்டார்கள்.

இப்படியெல்லாம் சிந்திக்க முஸ்லிம்களால் முடியாது. அவர்களின் கண்களை இவ்வுலகத்தின் அதிபதி அதாவது அல்லாஹ் மூடிவிட்டான், அவர்களின் காதுகளுக்கு திரைபோட்டுவிட்டான், அவர்களின் மூளையிலிருந்து சிந்திக்கும் திறமையை நீக்கிவிட்டான் என்றுச் சொல்வதைத் தவிர வேறு என்னத்தைச் சொல்லமுடியும்?

இனியாவது வாட்ஸப் செய்திகளை முக்கியமாக இஸ்லாம் பற்றிய செய்திகளை கொஞ்சம் சிந்தித்து ஃபார்வோட் செய்யுங்கள்.

வாட்ஸப் வழியா? வலியா? என்று கேட்டால், இந்த செய்தியை பொருத்தமட்டில் 'வாட்ஸப் வலி' தான் என்பதை கற்றறிந்த முஸ்லிம்கள், சிந்திக்கும் முஸ்லிம்கள் இப்போதைக்கே புரிந்துக்கொண்டு இருப்பார்கள்.


வாட்ஸப் வழி(வலி)கள் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/whatsapp/mhd10miracles.html


செவ்வாய், 4 ஜூன், 2019

2019 ரமளான் 10 – “சகக்கழுத்தி” இஸ்லாமில் ஹலால், கிறிஸ்தவத்தில் ஹராம்!

இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் ஒப்பிட்டு தொடர் கட்டுரைகள் எழுதும் போது, பலதார திருமணத்தைப் பற்றி ஒரு விவரத்தையும் சொல்லாமல் தொடரை முடித்தால் 'பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கும்'?  அதாவது, ஒரு பட்டிமன்ற பேச்சாளர்கள் தன்னுடைய பேச்சை முடிப்பதற்கு முன்பாக கணவன் மனைவி பற்றிய ஒரு ஜோக்கை சொல்லாவிட்டால் அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்று கருதப்படமாட்டார் என்று சொல்வது போல‌, இஸ்லாமிய திருமணம் பற்றி எழுதாமல் எந்த ஒரு தொடர் கட்டுரையும் முடிவு பெறாது.

முஸ்லிம் ஆண்கள் நான்கு பேரை திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என்று மாற்று மார்க்க ஆண்களுக்கு பொறாமை, அதனால் தான் இஸ்லாமின் பலதாரமணத்தை விமர்சிக்கிறார்கள் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்லக்கூடும். 

இந்த கூற்றில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பதை அறிய முஸ்லிம் பெண்களை கேட்டுப்பாருங்கள்?

சகக்கழுத்தி (காலப்போக்கில் இது சக்காளத்தி என்று மாறிவிட்டது) உள்ள முஸ்லிம் குடும்ப பெண்களையும், அவர்களின் பிள்ளைகளையும் கேட்டுப்பாருங்கள், உண்மை விளங்கும். அவ்வளவு ஏன் முஹம்மதுவின் குடும்பத்திலேயே சகக்கழுத்தி பிரச்சனைகள் இருந்தன. அந்த ஒரு குறிப்பிட்ட மனைவிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? போன்ற கேள்விகள் அவரிடமும் கேட்கப்பட்டது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது திருமணம் செய்திருந்த பெண்களால் முஹம்மதுவிற்குத் தான் அதிக தொல்லைகள் என்றுச் சொல்லலாம்.  தன்னுடைய நபி படும் பாடுகளைக் கண்டு, அல்லாஹ் வசனங்களை இறக்கி, அவர்களை பிளாக்மெயில் செய்துள்ளான் என்றுச் சொன்னால் பார்த்துக் கொள்ளுங்களேன், பலதாரமணத்தினால் எவ்வளவு பிரச்சனைகள் உண்டாகுமென்று. நபிக்கே இந்த கதியென்றால் சாதாரண மக்களைச் சொல்லவேண்டுமா? தம்முடைய மனைவிகளிடம் இருந்து அல்லாஹ் காப்பாற்றுவார் என்று முஹம்மது எண்ணியிருந்தார், ஆனால் அல்லாஹ் என்ன சொன்னார் தெரியுமா, "நீங்கள் நபிக்கு அதிக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், உங்களை அவர் விவாகரத்து செய்து, அவருக்கு வேறு நல்ல பெண்களை மறுபடியும் நான் திருமணம் செய்து வைப்பேன் என்று இஸ்லாமிய தாய்மார்களை மிரட்டினான். 

அது முஹம்மதுவின் குடும்ப பிரச்சனை நமக்கெதற்கு! சரி விஷயத்துக்கு வருவோம்.

ஒருத்தியோடு மட்டுமே வாழவேண்டும் என்று கணவனை மனைவி கட்டாயப்படுத்தினால்! - இஸ்லாமில் இது ஹராம்:

நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ள‌ முஸ்லிம் கணவனுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்து இருக்கும் போது, அதனை தடுப்பது ஹராம் ஆகாதா?

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

[கவனிக்கவும், அல்லாஹ் இந்த வசனத்தில் "ஒவ்வொன்றாகவோ" என்று சொல்கிறானா பாருங்கள், எடுத்த எடுப்பிலேயே இரண்டிரண்டாகவோ என்று தொடங்குகிறான்]

ஒரே ஒரு பெண்ணைத் தான் திருமணம் செய்யச்சொல்லி இஸ்லாம் சொல்கிறது, ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தான் இரண்டு, மூன்று அல்லது  நான்கு பேரை திருமணம் செய்ய குர்‍ஆன் அனுமதிக்கிறது என்று முஸ்லிம்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். அதாவது,

 • முதல் திருமணம் நடந்தது,
 • தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இரண்டாம் திருமணம்
 • மறுபடியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மூன்றாம் திருமணம்
 • மறுபடியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான்காம் திருமணம்.

ஒரு முஸ்லிம் ஆணுக்கு எத்தனை முறைதான் 'தவிர்க்க முடியாத சூழ்நிலை' வரும், மற்றவர்களுக்கெல்லாம், இப்படிப்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலையே வருவதில்லையே! அது ஏன்? ("தவிர்க்க முடியாத சூழ்நிலை" என்றால் என்ன சிறிது முஸ்லிம்கள் விளக்கமுடியுமா?).

முஸ்லிம்களின் படி இது தான் சீக்குவன்ஸ்:
முஸ்லிம் ஒரு திரும‌ணம் செய்வான் -> தவிர்க்க முடியாத சூழ்நிலையில் -> 2/3/4 திருமணங்கள் செய்துக்கொள்ளலாம்.

ஆனால், குர்‍ஆன் 4:3 இப்படி சொல்லவில்லை!

குர்‍ஆன் 4:3ன் படி இது தான் சீக்குவன்ஸ்:
ஒரு முஸ்லிம் 2/3/4 திருமணங்கள் செய்யலாம் -> தவிர்க்க முடியாத நூழ்நிலையில் -> ஒரு திருமணம் செய்யலாம்.

சீக்குவன்ஸ் எதுவாக இருந்தாலும், முஸ்லிம் பெண்களின் படி, சகக்கழுத்தி  என்பது ஹராம் ஆகும்.

இது தவறான கருத்தாகும், முஸ்லிம் பெண்கள் "தங்கள் ஆண்கள் இப்படி நான்கு திருமணங்கள் செய்வது ஹராம்" என்று கருதுவதில்லை என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், கீழ்கண்டவைகளை செய்துப்பாருங்கள்:

1) உங்கள் மகளுக்கு ஒரு நல்ல கணவனை தெரிவு செய்து திருமணம் செய்யுங்கள். அவன் உங்கள் மகளை ராணி மாதிரி அன்பாக பார்த்துக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து, உங்கள் மருகமனிடம் சென்று, உனக்கு இரண்டாம் திருமணம் செய்ய விருப்பமா? என்று மகளுக்கு முன்பாக‌ கேட்டுப்பாருங்கள். இப்போது உங்கள் மகளின் ரியாக்ஷ்ன் என்னவாக இருக்கும் என்று கவனித்துப் பாருங்கள். அடுத்தபடியாக, உண்மையாகவே உங்கள் மருமகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி எடுத்துப்பாருங்கள், அதன் பிறகு உங்கள் மகளின் ரியாக்ஷ்னை கவனியுங்கள். இஸ்லாமா? மகளா? யார் ஜெயிப்பார்கள் என்று அப்போது புரியும். [நீயெல்லாம் ஒரு அப்பனா என்று காறி துப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை]

2) மேற்கண்ட இதே சூழ்நிலையில் உங்கள் சகோதரியை வைத்து கற்பனை செய்துப்பாருங்கள். உங்கள் சகோதரியின் ரியாக்ஷ்ன் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் மகளோ/சகோதரியோ, தன் கணவன் தனக்கு மட்டுமே கணவனாக இருக்கவேண்டும் என்று விரும்புவது தவறா?

ஒருத்தியோடு மட்டுமே வாழவேண்டும் என்று கணவனை மனைவி கட்டாயப்படுத்தினால்! - கிறிஸ்தவத்தில் இது ஹலால்:

ஒரு கிறிஸ்தவப்பெண் தன் கணவன் தனக்கு மட்டுமே கணவனாக இருக்கவேண்டும் என்று விரும்புவது ஹலால் ஆகும். இதனையே இயேசுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லியுள்ளார். அவன் பாதை மாறிச் சென்றால், கிறிஸ்தவப்பெண் அவன் மீது வழக்கு தொடுப்பாள், இந்த உரிமை முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். [பலதாரமண கணவனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் என் இஸ்லாமிய தங்கைகள், அக்காக்கள் படும் வேதனை சொல்லிமுடியாது.]

மத்தேயு 19:4-6
4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,

5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆண்களுக்கு சுயகட்டுப்பாட்டை கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு...

பொதுவாகவே, ஆண்கள் ஒரு மாதிரியானவர்கள். இஸ்லாமின் படி நான்கு பெண்களை திருமணம் செய்தாலும், ஐந்தாவது மனைவியைத் தேடுவான் மனுஷன். ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துபவனே சுயகட்டுப்பாடுள்ள உண்மையான ஆண் என்று கருதப்படுவான்.  ஒரு மனைவியை உடைய சில  ஆண்களும், மற்ற பெண்களைப் பார்க்கும் போது சில வேளைகளில் உள்ளத்தில் சபலப்படுவார்கள், ஆனாலும் தன் சமுதாய அந்தஸ்தை கருத்தில் கொண்டு, தன் குடும்பத்தை கருத்தில் கொண்டு, சுயகட்டுப்பாட்டுடன் தன் 'சிற்றின்ப ஆசைகளை கட்டுப்படுத்தி' வெற்றிப்பெற்றுக்கொண்டு முன்னேறிச் சென்றுக்கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இப்படிப்பட்ட சுயகட்டுப்பாடு உடையவர்களாக இருக்கவேண்டும் என்று இயேசு எதிர்ப்பார்க்கிறார். ஆனால், அல்லாஹ் எதை கற்றுக்கொடுக்கின்றான்? இரண்டிரண்டாகவோ, மூம்மூன்றாகவோ, நன்னான்காகவோ என்று இரண்டிலிருந்தே தொடங்குகிறான். அல்லாஹ்விற்கு கணக்கை ஒன்றிலிருந்து ஆரம்பிக்க விருப்பமில்லைபோலும்.  இது போதாது என்று திருமணம் செய்துக்கொள்ளாமலேயே வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ள அடிமைப்பெண்களை வாங்கிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அடிமைப்பெண்களின் எண்ணிக்கை சொல்லப்படவில்லை.

பணம் அதிகமாக உள்ள முஸ்லிம், பல பெண்களை விலைக்கு வாங்கி உடலுறவில் ஈடுபடலாம்,  என்ன கன்ராவி இது, ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் இப்படியெல்லாம் செய்யமுடியுமா?

முஹம்மது முதற்கொண்டு, அவருடைய நெருங்கிய தோழர்கள் முதற்கொண்டு, பணம் படைத்த இன்றைய அரேபிய மன்னர்கள் இதனை செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மக்காவில் விவாகரத்து அதிகமாக நடக்கிறது என்பதை அறியும் போது, புனித நகரத்தின் புனிதம் மீது சந்தேகம் வருகிறது.

எது எப்படியோ, முஸ்லில்ம் பெண்களுக்கு இஸ்லாம் ஒரு சாபம், முஸ்லிம் ஆண்களுக்கு இஸ்லாம் ஒரு வரம்.

முடிவுரை:

கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரே மரத்தின் கிளைகள் அல்ல. இவ்விருவரும் வேறு வேறு மரத்தின் கிளைகள். வீட்டிற்கும் நாட்டிற்கும் பலதாரமணம் ஒரு எலும்புறுக்கி நோய் போன்றது. பெண்களை துக்கப்படுத்தி, கணவன் மனைவி அன்பை சிதைத்து, பிள்ளைகள் மனச்சோற்விற்கு ஆளாவதற்கு காரணமாக இருப்பது பலதாரமணம்.

ஒரே தாய்க்கு பிறந்த பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் சொத்துக்களுக்காக அடித்துக்கொண்டு சாகிறார்கள், இதில் சகக்கழுத்தியின் பிள்ளைகள் என்று வந்துவிட்டால், அந்த வீட்டில் நிம்மதிக்கு இடமிருக்குமா? ஏதோ ஆயிரத்தில் ஒரு வீட்டில், பலதாரமணத்தினால் பிரச்சனை இல்லாமல் இருக்கும், ஆனால், பெரும்பான்மையான வீடுகளில் ஒரு ஆண் தன் அன்பை பல பெண்களோடு பகிர்ந்துக்கொண்டால், நிம்மதி வீட்டைவிட்டு வெளியே சென்று விடும், அவ்வீட்டின் பெண்களின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

எந்த தலைப்பை எடுத்துக்கொண்டாலும் சரி, முஹம்மதுவும் இயேசுவும் ஒருமித்து கருத்து சொல்வதில்லை, இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒத்துப்போவதில்லை.

எவைகளை இயேசு ஹராம் என்றுச் சொல்லி எச்சரித்தாரோ, அதனை ஹலால் என்று முஹம்மது பின்பற்றியுள்ளார். தொழுகை முதற்கொண்டு திருமணம் வரைக்கும், பிறப்பு முதற்கொண்டு இறப்பு வரைக்கும் இவ்விரு துருவங்கள் ஒரு போதும் ஒன்று சேராது. இதனை மறுப்பவர்கள் இவ்விரு மார்க்கங்களின் புத்தகங்களை படித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

முஸ்லிம்களே, இஸ்லாமிலிருந்து உங்கள் பெண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தேதி: 4th Jun 2019


2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-10.html


திங்கள், 3 ஜூன், 2019

2019 ரமளான் 9 - குர்‍ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது அல்லாஹ்வின் படி ஹராம்

குர்‍ஆனில் எங்கேயாவது ஒரு வசனத்தில் 'இந்த குர்‍ஆனை ஒரு புத்தகத்தில் (தோல் சுருளில்) எழுதி வையுங்கள்' என்ற கட்டளையை அல்லாஹ் கொடுத்துள்ளானா? 

23 ஆண்டுகள் 6236 வசனங்களை மளமளவென்று கொடுத்த அல்லாஹ், எந்த ஒரு வசன‌த்திலாவது, "முஹம்மதே! இந்த சங்கைமிக்க குர்‍ஆனை பாதுகாக்கும் வண்ணம், ஒரு புத்தகத்தில், ஒரு எழுத்தாளரைக் கொண்டு எழுதி வையுங்கள்" என்று சொல்லியுள்ளானா?

இது என்ன புது கேள்வி? விதண்டாவாதத்திற்கு ஒரு அளவில்லையா! என்று சொல்லத்தோன்றுகிறதா! உங்களுக்கு? மேற்கொண்டு படியுங்கள், இந்த கேள்வியில் உள்ள நியாயம் புரியும்.

குர்‍ஆன் பற்றி முஸ்லிம்கள் கீழ்கண்ட மூன்று வசனங்களை மேற்கொள் காட்டி பதில் சொல்வார்கள்.

குர்‍ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ்வே வாக்கு கொடுத்துள்ளான்:

15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

இந்த குர்‍ஆன் எழுத்து வடிவில் லவ்ஹுல் மஹ்ஃபூளில் பாதுகாப்பாக உள்ளது:

85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

குர்‍ஆனை ஓசை வடிவில் பாதுகாக்க அல்லாஹ் விரும்பினான்:

29:49. அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் தான் நானும் என் சந்தேகத்தை முன்வைத்துள்ளேன்.

நீங்கள் மேற்கோள் காட்டிய வசனங்களின் படி,

 • லவ்ஹுல் மஹ்ஃபூள் புத்தகத்தை அல்லாஹ் எழுத்துவடியில் பாதுகாத்துள்ளான்
 • குர்‍ஆனை ஓசை வடிவில் கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாத்துள்ளான்

ஏன் இந்த வித்தியாசம்?  அல்லாஹ் என்ன செய்திருக்கவேண்டும்? குர்‍ஆனை எழுத்துக்களில் பாதுகாத்து இருந்திருக்கவேண்டும், தன்னிடமுள்ள தாய் புத்தகத்தை தன் விருப்பத்தின்படி பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால், தலைகீழாக செயல்பட்டு இருந்துள்ளார்.

எழுத்துவடிவில் பாதுகாப்பது சரியானதா? அல்லது ஓசைவடிவில் மனிதனின் மனதில் பாதுகாப்பது சரியானதா?

உண்மை என்னவென்றால், குர்‍ஆனை எழுத்து வடிவில் கொண்டுவர‌ அல்லாஹ் விரும்பவில்லை. குர்‍ஆனை எழுத்து வடிவில் கொண்டு வரவேண்டும் என்று முஹம்மதுவும் விரும்பவில்லை.

முஹம்மது மரிப்பதற்கு முன்பு வரை அவருக்கு இருந்த செல்வத்தைக் கொண்டு, சிறப்பாக எழுதும் எழுத்தாளர்களைக் கொண்டு, ஒரு புத்தகமாக அவர் குர்‍ஆனை தொகுக்கவில்லை.  கலிஃபாக்களுக்கு முடிந்தது, முஹம்மதுவினால் முடியாமல் போகுமா என்ன? அவர் நினைத்திருந்தால்? குர்‍ஆனை எழுத்துவடியில் ஒரு புத்தகமாக கொண்டுவரவேண்டும் என்ற தேவை ஏற்பட்டபோது, முஹம்மது செய்யாத ஒன்றை நாங்கள் செய்வது எப்படி என்று தயக்கம் காட்டினார்கள் கலிஃபாக்கள்.

ஆக, முஹம்மதுவின் படி, அல்லாஹ்வின் படி குர்‍ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது என்பது ஒரு ஹராமான செயலாகும், அல்லது  அது ஒரு ஹலால் செயலில்லை. ஹலாலாக இருந்திருந்தால் அதனை அவர்கள் செய்திருப்பார்களே! முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, குர்‍ஆன் ஒரு புத்தகமாக மாறியிருந்திருக்குமே! குர்‍ஆனை மனனம் செய்தவர்கள் போர்களில் மரித்தாலும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காதே!

வேதங்களை எழுத்துவடிவில் கொண்டுவருவது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

நான் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, பத்து கட்டளைகள் பற்றிய நிகழ்ச்சியை படிக்கும் போது, எனக்கு தோன்றிய கேள்வி இது தான்:

"பத்து கட்டளைகளை மனப்பாடம் செய்யமுடியாத அளவிற்கு பலவீனராக மூஸா இருந்தாரா?"   

முஹம்மதுவிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 1500 - 1400 காலக்கட்டம்), மூஸாவிடம் தேவன் 10 கட்டளைகளை கொடுக்கும் போது, மனப்பாடம் செய் மோசே என்றுச் சொல்லாமல், இரண்டு கற்பலகைகளில் தாமே தம் கைகளால் எழுதிக் கொடுத்தார்.

இது என்ன வேடிக்கை?

 • மோசேயினால் 10 வாக்கியங்களை அதுவும் சிறிய வாக்கியங்களை மனப்பாடம் செய்யமுடியாதா?
 • எகிப்து அரண்மனையில் வளர்ந்து, எகிப்தின் கலைகளை, படிப்புக்களை கற்றறிந்த மோசேயினால், சில வார்த்தைகளை அதுவும் சுலபமான 10 வாக்கியங்களை மனனம் செய்யமுடியாதா?

சரி போகட்டும், இஸ்ரேல் மக்கள் செய்த செயலினால் கோபம் கொண்டு, கற்பலகைகளை மோசே உடைத்துப்போட்டார், இந்த முறையாவது பைபிளின் தேவன், நான் ஏற்கனவே சொன்ன 10 கட்டளைகளை நீ மனப்பாடம் செய்து இருந்திருப்பாய். எனவே, அவைகளை மக்களுக்கு கற்றுக்கொடுத்து, அவைகளை பின்பற்ற அவர்களுக்கு கட்டளைக் கொடு என்றுச் சொல்லாமல், இந்த முறையும் கற்பலகைகளை தயாரித்து கொண்டு வா! அவைகளை மறுபடியும் எழுதித்தருகிறேன் என்கிறார். அதே போல பலகைகளை தயாரித்துக்கொண்டு சென்ற போது, மோசே அதனை எழுதும் படிச் செய்தார். என்ன நடக்கிறது இங்கே! பத்து கட்டளைகளை எழுத ஏன் இந்த தடால்புடால்?

யாத்திராகமம் 32:15-16
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 
16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது. 


யாத்திராகமம் 34:1, 27,28
1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். 
27 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார். 
28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

இதுமட்டுமல்ல, வேதத்தை எழுதுவது பற்றி அனேக இடங்களில் கர்த்தர் கட்டளையிடுகிறார், அவைகளை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன் படித்துக்கொள்ளுங்கள்.

வேத எழுத்துக்களை எழுதவேண்டும் என்பது தேவனின் படி, ஒரு ஹலாலான‌ செயலாகும், அதனை நிச்சயம் செய்தாகவேண்டும். ஆனால், குர்‍ஆனின் படி, அல்லாஹ்வின் எழுத்துக்களை எழுதுவது என்பது ஹராம் ஆகும். இதனை மறுப்பவர்கள் குர்‍ஆனிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக்காட்டுங்கள். சின்ன சின்ன காரியங்களுக்கும், தேவையில்லாத காரியங்களுக்கும் வசனங்களை இறக்கிய அல்லாஹ், குர்‍ஆனை எழுதும் படி ஏன் ஒரு வசனத்தையும் இறக்கவில்லை?

பத்து வசனங்களையும் எழுதச் சொல்லும் யெகோவா தேவன் ஒரு பக்கம், 6236 வசனங்களையும் மனப்பாடம் செய்தே பாதுகாக்கவேண்டும் என்றுச் சொல்லும் அல்லாஹ் இன்னொரு பக்கம். என்ன ஒரு சூப்பர் எதிர்மறை!

கடைசியில் யார் வெற்றிப் பெற்றார்கள்:

யெகோவா தேவன் தான் வெற்றிப்பெற்றார். அல்லாஹ் தோல்வியுற்றார்.

முஹம்மது மரித்து 2 ஆண்டுகள் கூட முழுமையாக முடியவில்லை, அபூ பக்கரின் காலத்தில், குர்‍ஆனை புத்தகவடிவில் கொண்டுவரவேண்டும் என்று உமரும் அபூ பக்கரும்  உணர்ந்து குர்‍ஆனின் வசனங்களை சேகரித்தார்கள். அல்லாஹ்வும் முஹம்மதுவும் இதனை உணராமல் போனார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

அல்லாஹ் கல்விமான்களின் உள்ளங்களில் சேகரிப்பார் என்ற வசனம் (29:49) பொய்யாகிவிட்டது. இவ்வசனத்தை பொய்யாக்கிய பெருமை அபூ பக்கர் மற்றும் உமரைச் சாரும்.  

29:49. அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

குர்‍ஆனை மனப்பாடம் செய்தவர்களை அல்லாஹ் போர்களில் மரிக்காமல் செய்திருக்கவேண்டும்!  குர்‍ஆனை மனப்பாடம் செய்தவர்களுக்கு தீர்க்க ஆயுசு என்றுச் சொல்வோமே! அது போல பல்லாண்டுகள் வாழும் படி செய்திருக்கவேண்டும்.

எது எப்படியோ, எழுத்து வடிவில் குர்‍ஆன் மாறாமல் இருந்திருந்தால், இன்று முஸ்லிம்கள் படிக்க குர்‍ஆன் இருந்திருக்காது.  

மூஸா மனப்பாடம் செய்ய முடியாதவர் என்பதால் யெகோவா தேவன் தன் கட்டளைகளை கற்களில் பதித்து கொடுக்கவில்லை, மனிதர்களை பல ஆயிர ஆண்டுகள் தம் வார்த்தைகள் வழி நடத்தவேண்டுமென்றால், அவைகளை எழுத்துக்களாக மாற்றவேண்டும் என்ற ஞானம் அவருக்கு இருந்தது, இந்த ஞானம் அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் இல்லாமல் போனது.

சில முஸ்லிம்கள், குர்‍ஆன் வசனங்களை முஹம்மது எழுதும் படி சிலரை நியமித்தார் என்றுச் சொல்லி, ஹதீஸ்களிலிருந்து சில விவரங்களை எடுத்துக்காட்டுவார்கள். முஹம்மதுவிற்கு பிறகு 150 அல்லது 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட ஹதீஸ்கள் பற்றி இங்கு நான் சொல்லவில்லை. குர்‍ஆனில் தன் வார்த்தைகளை எழுதும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானா என்பது தான் என் கேள்வி.

அல்லாஹ்வின் படி குர்‍ஆனை எழுத்துக்களாக மாற்றுவது ஹராம் ஆகும், யெகோவா தேவனின் படி, மனப்பாடம் மட்டுமே செய்து வேத வசனங்களை பாதுகாக்க நினைப்பது முட்டாள்தனமான செயலாகும்.

அடிக்குறிப்புக்கள்:

[1] யாத்திராகமம் 32:15-16

15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது

[2] யாத்திராகமம் 34:1, 27,28

1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்

27 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார். 

28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

[3] உபாகமம் 17:18-20

18. அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

19. இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,

20. அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்துதனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.

[4] உபாகமம் 31:24

24. மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிமுடித்தபின்பு,

[5] யோசுவா 24:26

26. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,

[6] II இராஜாக்கள் 23:21

21. பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.

[7] எரேமியா 30:1, 2

1. கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.

[8] எரேமியா 36:15-18

15. அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.

16. அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.

17. அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.

18. அதற்கு பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்

[9] ஆபகூக் 2:2

2. அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

[10] வெளி 1:11

11. அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

தேதி: 3rd Jun 2019


2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source:  https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-9.html