பாகம் 3
பாகம் 1, பாகம் 2ஐ படிக்க சொடுக்கவும். இந்த மூன்றாம் பாகத்தில் 21வது காரணத்திலிருந்து 30வது காரணம் வரை காண்போம்.
21. மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பியவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?
முஹம்மது தம் மனைவியாகிய "சௌதா" அவர்களை விவாகரத்து செய்ய விரும்பினார். உடனே சௌதா அவர்கள் தம்மை விவாகரத்து செய்யவேண்டாம் என்று முஹம்மதுவிடம் கேட்டுக்கொண்டார்கள், மேலும் இதற்கு பதிலாக முஹம்மது தன்னிடம் செலவிடும் தன் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாக சௌதா சொன்னார்கள். இதனை முஹம்மது அங்கீகரித்துக்கொண்டார். ஏன் முஹம்மது சௌதாவை விவாகரத்து செய்ய விரும்பினார்? சௌதா அவர்களுக்கு வயதுகூடிவிட்டதாம், இதனால் அவர்கள் அழகாக இல்லையாம், இதனால் அவர் தன்மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தார். "என்றும் பதினாறு" என்றுச் சொல்வது போல எப்போதும் இளமையோடு முஹம்மது இருப்பாரா? மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பியவர் எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? ஒரு சராசரி மனிதனிடம் எதிர்ப்பார்க்கும் நல்ல குணம், ஒரு நபியிடம் இருக்கவேண்டாமா? இவரை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி என்று கருதுவது சரியே! கள்ளத் தீர்க்கதரிசிகளின் கனிகளினால் (செயல்களினால்) அவர்களை அறியலாம் என்று இயேசு கூறியது எவ்வளவு உண்மையாக இருக்கிறது.[21]
22. வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்யும் அளவிற்கு அப்படி என்ன பெரிய தேவையோ?
தலைக்குமேலே வெள்ளம் போனாலும் செய்யக்கூடாத செயல் ஒன்றை அல்லாஹ் முஹம்மதுவிற்கு செய்துள்ளார். குர்-ஆன் 33:37ம் படி, முஹம்மதுவின் வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்து செய்த பின்னர், நீ அவளை திருமணம் செய்யலாம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அனுமதி கொடுத்துள்ளார். இது என்ன நியாயம்? எங்கு நடக்கும் இப்படிப்பட்ட கொடுமை? மருமகளை மாமனாருக்கு திருமணம் செய்யும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? முஹம்மது தம் மருமகளை திருமணம் செய்யவேண்டிய அவசியம் என்னவோ? இப்படிப்பட்ட செயலை இயேசு வெறுக்கிறார். மருமகளை திருமணம் செய்தவர் எப்படி ஒரு நல்ல தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? முட்செடிகளில் நற்கனிகளைக் காணமுடியுமோ! ஆகையால், முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரியே! [22]
23. இன்னொருவரின் மனைவியை முஹம்மதுவிற்கு திருமணம் செய்ய வெட்கப்படாத அல்லாஹ்
முஹம்மதுவின் வளர்ப்பு மகன் உயிரோடு இருக்கும் போதே, அவரது மனைவியை முஹம்மதுவிற்கு மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகின்றார். கணவன் உயிரோடு இருக்கும் போதே, அவன் மனைவியை அடுத்தவனுக்கு மனைவியாக்குவது இறைவனுக்கு தகுமா? மேலும், முஹம்மது தன் மருமகளை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்துவிட்டு ஆசைக்கொண்டதாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கூறுகின்றார்,இதனையே குர்-ஆன் 33:37 ம் வசனம் "மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்" என்று கூறுகின்றது. எது எப்படியோ இன்னொருவரின் மனைவியை முக்கியமாக மருமகளை திருமணம் செய்பவர் நிச்சயமாக உண்மை நபியாக இருக்கமுடியாது? [23]
24. ஆதாம் 60 முழம் உயரமாக இருந்தாரா?
முஹம்மது மக்களுக்கு உண்மையில்லாத விஷயங்களை கூறியுள்ளார், விஞ்ஞானத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார். ஆதாமை இறைவன் படைத்த போது, அவர் 60 முழம் உயரமாக இருந்தார் என்று கூறியுள்ளார். இது விஞ்ஞான பிழையாகும். அறுபது முழம் என்றுச் சொன்னால், 90 அடியாகும், அல்லது 27.5 மீட்டராகும். முஹம்மதுவின் போதனையின் படி ஆதாம் கிட்டத்தட்ட 10 அடுக்கு மாடியை விட உயரமாக இருந்திருக்கிறார், இது பிழையாகும். முஹம்மது சொந்தமாக தன் உலக அறிவைப் பயன்படுத்தி மக்களை முட்டாள்களாக்கியுள்ளார், அன்றிலிருந்து மனிதர்கள் தங்கள் உயரத்தில் சிறிது சிறிதாக குறைந்துவிட்டார்கள் என்றும் இவர் கூறியுள்ளார். இவர் கள்ள நபி என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். [24]
25. மாது விஷயத்தில் சலுகைகளை அள்ளிச்சென்ற தீர்க்கதரிசி
சராசரி முஸ்லிம்களுக்கு இல்லாத சலுகைகள் முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்துள்ளார். பெண்கள் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனிச்சலுகைகள் உண்டு. முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகள் அனுமதிக்கப்பட்டது, ஆனால் முஹம்மதுவிற்கோ கணக்கில்லை. தன்னை அர்ப்பணிக்கும் எந்த பெண்ணையும் முஹம்மது திருமணம் செய்யலாம். இந்த சலுகைகள் இவருக்கு மட்டும் தான், இதர முஸ்லிம்களுக்கு அல்ல. முஹம்மது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள தனக்கு சாதகமான வசனங்களை குர்-ஆனில் சேர்த்துள்ளார். நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டவேண்டிய தீர்க்கதரிசி, மற்றவர்கள் வழி கெடுக்கப்படும் படி வாழ்ந்துள்ளார். இவர் உண்மையான தீர்க்கதரிசி அல்ல என்பதற்கு பெண்கள் விஷயத்தில் அவரின் குர்-ஆன் சலுகை வசனங்களே ஆதாரம்.[25]
26. அஜ்வா பேரிச்ச பழம் சாப்பிட்டால் விஷம் மற்றும் சூனியம் முறிந்துவிடும்
முஹம்மது அனேக பொய்களைக் கூறியுள்ளார். அஜ்வா என்ற பேரிச்ச பழங்களை காலையில் சாப்பிட்டால், அந்த நாள் முழுவதும் எந்த ஒரு விஷமும், சூனியமும் முறிந்துவிடும் என்றுச் சொன்னார். தனக்கு விஷம் வைத்தபோது, முஹம்மது அதை சாப்பிட்டு அனேக நாட்களாக துன்பம் அனுபவித்து அதனாலேயே மரித்தார், ஆனால் மற்றவர்களுக்கு பேரிச்ச பழங்கள் பற்றிய வைத்தியத்தை கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, முஹம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டதென்று இஸ்லாம் கூறுகின்றது. இன்று எந்த ஒரு முஸ்லிமாவது இந்த பேரிச்ச பழத்தை சாப்பிட்டு விஷயத்தை குடிப்பாரா? இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. [26]
27. சாபம் தரும் கள்ளத் தீர்க்கதரிசி
சில யூதர்கள் முஹம்மதுவை சந்திக்கும் போது, "அஸ்ஸாமு அலைக்க – உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்" என்றுச் சொல்வார்களாம். இவர்களுக்கு சமமாக முஹம்மதுவும், உங்களுக்கும் மரணம் உண்டாகட்டும் என்றுச் சொல்லியுள்ளார். எதிரிகளுக்கு நன்மை செய்யுங்கள், அவர்களுக்காக ஜெபம்செய்யுங்கள், தீமைக்கு தீமை செய்யவேண்டாம், நன்மை செய்யுங்கள் என்று இயேசு கூறுகிறார். ஆனால், இந்த முஹம்மதுவோ பதிலுக்கு பதில் சாபம் கொடுக்கிறார். இவர் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிர் போதனைகளைச் செய்தவரை கிறிஸ்தவர்கள் எப்படி தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்வார்கள்? இப்படிப்பட்டவரை நாம் பின்பற்றினால், நாமும் மற்றவர்களை சபித்துக்கொண்டு இருக்கவேண்டியது தான். [27]
28. எல்லாம் விதிப்படி நடந்தால், தீர்க்கதரிசிகள் நமக்கெதற்கு?
குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது அக்குழந்தையின் விதியை (பிறப்பு, இறப்பு, சொர்க்கமா? நரகமா?) எழுதும் படி ஒரு தூதனை அல்லாஹ் அனுப்புவாராம். அதன்படியே அக்குழந்தை வாழுமாம், அதற்கு சொர்க்கம் எழுதப்பட்டு இருந்தால், கடைசி வரை தீய காரியங்கள் செய்துவிட்டு, கடைசியில் ஒரு நன்மையை செய்து அம்மனிதன் விதியினால் சொர்க்கம் சென்றுவிடுவானாம். இதே போல, நல்லதையே செய்துகொண்டு இருந்தவன், கடைசியாக தீமை செய்து நரகம் சென்று விடுவானாம். இப்படிப்பட்ட போதனையை முஹம்மது மக்களுக்கு செய்துள்ளார். விதியை நம்பினால், நமக்கு நபிகள் எதற்கு? மனம் போல வாழலாம், எல்லா தீய காரியங்களையும் செய்யலாம், விதி எப்படியோ அப்படித்தானே நடக்கும் என்று மக்கள் பாவத்திலும், துன்மார்க்கத்திலும் வாழ்வார்கள் அல்லவா? இப்படிப்பட்ட போதனையை ஒரு உண்மையான தீர்க்கதரிசி செய்யமாட்டார். இவரது போதனை பைபிளுக்கு விரோதமானது. எனவே, முஹம்மது நிச்சயமாக ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார்.[28]
29. விவசாயம் செய்வது பாவமா? கலப்பை வீட்டில் இருந்தால் அல்லாஹ் இழிவைக் கொடுப்பாரா?
ஒரு வீட்டில் ஏர் கலப்பையும், இதர விவசாய கருவிகளும் இருந்தால், அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என்று முஹம்மது கூறியுள்ளார். இது என்ன போதனை? இப்படியும் இறைவன் செய்வானா? உழவுத் தொழில் தான் உலக ஆரம்பகாலத்தில் மனிதன்செய்த தொழில். இதில் என்ன பாவம் இருக்கிறது? வாய்க்கு வந்தபடி முஹம்மது போதனை செய்துள்ளார். ஏழை விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லையானால், முஹம்மது சோற்றில் கைவைக்கமுடியாது என்பதை அவர் அறியவில்லையா? இவரா தீர்க்கதரிசி? இயேசு உவமைகளில் அனேக விவசாயம் பற்றிய விவரங்களைக் கூறியுள்ளார், விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்றவற்றை இயேசு மேன்மையாக கூறினார், பரலோக இராஜ்ஜியத்திற்கு ஒப்பிட்டு இயேசு விவசாயத்தை கூறியுள்ளார். ஆனால் முஹம்மதுவோ இதற்கு எதிராக போதனை செய்துள்ளார், அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. [29]
30. இதற்காகவும் அல்லாஹ் வசனங்களை முஹம்மதுவிற்கு இறக்குவாரா?
மக்கள் மலம் கழிப்பது, சிறுநீர் போவது, உடலுறவு கொள்வது போன்றவற்றிற்கு அதிக (தேவையில்லாத) முக்கியத்துவத்தை முஹம்மதுவும் அல்லாஹ்வும் கொடுத்துள்ளார்கள். மக்கள் மலஜலம் கழிக்கும்போது, தங்கள் மர்ம உறுப்பு வானத்திற்கு தென்பட்டு விடுகின்றது என்று வெட்கப்படுகிறார்களாம், எனவே அல்லாஹ் இதற்கு ஒரு வெளிப்பாட்டை கொடுக்கிறார் (குர்-ஆன் 11:5). எந்தெந்த காரணங்களுக்கு அல்லாஹ் காபிரியேல் தூதனை அனுப்பி வசனங்களை இறக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு, தரம் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் இறைவனுக்கு முன்பாக நிர்வாணிகள் தானே, இதனை விளக்குவதற்கு ஒரு வசனம் தேவையோ! இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முஹம்மது சொந்தமாக வசனங்களை சொல்லியுள்ளார், இவைகளை காபிரியேல் தூதன் வந்து தனக்கு இறக்கினான் என்றும் பொய்களைச் சொல்லியுள்ளார். இவைகளை கிறிஸ்தவ சமுதாயம் படிக்கும் போது சிரிக்கின்றது, இவரா இறைத்தூதர்? இவரா தீர்க்கதரிசி? என்று ஆச்சரியப்படுகின்றது. அக்காலத்தில் பாலைவனத்தில் மக்கள் நாகரீகம் இல்லாமல், சரியான வசதிகள் இல்லாமல் வாழ்ந்தார்கள். இன்றோ நமக்கு வசதிகள் உள்ளது. இன்று இந்த போதனைகள் எப்படி சரிப்பட்டு வரும்? ஆனால், முஸ்லிம்களோ, முஹம்மது சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் இன்றும் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறார்கள். [30]
அடிக்குறிப்புக்கள்:
அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
[21] குர்-ஆன் 4:128-130 & ஸஹீஹ் புகாரி எண் 5206
4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
5206. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் 'என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகி கொள்ளலாம்'' என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)141
Volume :5 Book :67
இப்னு கதீர் விளக்கவுரை
Making peace is better than separation. An example of such peace can be felt in the story of Sawdah bint Zam'ah who WHEN SHE BECAME AGED, THE PROPHET WANTED TO DIVORCE HER, but she made peace with him by offering the night he used to spend with her to A'isha so that he would keep her. The Prophet accepted such terms and kept her.
Abu Dawud At-Tayalisi recorded that Ibn 'Abbas said, "Sawdah feared that the Messenger of Allah might divorce her and she said, 'O Messenger of Allah! Do not divorce me; give my day to 'A'ishah.' And he did ...
In the Two Sahihs, it is recorded that 'A'ishah said that when Sawdah bint Zam'ah BECAME OLD, she forfeited her day to 'A'ishah and the Prophet used to spend Sawdah's night with 'A'ishah ...
<And making peace is better>. IT REFERS TO THE WIFE RELINQUISHING SOME OF HER MARITAL RIGHTS and his acceptance of the offer. Such compromise is better than total divorce, as the Prophet did when retained Sawdah bint Zam'ah. By doing so, the Prophet set an example for his Ummah to follow as it is a lawful act ... (the preceding citation taken and adapted from Tafsir Ibn Kathir - Abridged, Volume 2, Parts 3, 4 & 5, Surat Al-Baqarah, Verse 253, to Surat An-Nisa, Verse 147 [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, Lahore; first edition March 2000], pp. 599-601, and Tafsir Ibn Kathir, Part 5, Sura An-Nisa, ayat 24-147, abridged by Sheikh Muhammad Nasib Ar-Rafa'i [Al-Firdous Ltd., London, 2000 first edition], pp. 193-194; bold and capital emphasis ours)
அல்தபரி விளக்கவுரை:
Umra bin Ali & Zaid bin Ahram said: second by Abu Dawud, said: second by Sulaiman bin Mu'ath, from Simak bin Harb, from Ikrimah, from Ibn Abbas, said: Saudah feared divorce by the messenger of Allah, so she said: Do not divorce me, and do not share with me! And he did, and this verse was revealed: And if a woman fears ill usage or desertion on the part of her husband.
Muhammad bin Husain said: He claimed that this verse came down in reference to the messenger of Allah, and Saudah bint Zama'h who became old, then the messenger of Allah wanted to divorce her, but they agreed that he will keep her but give her day to Ai'sha. (Arabic source; translated by Mutee'a Al-Fadi)
அல் குர்-துபி விளக்கவுரை:
In this verse there are four issues: the first, Al-Tirmidhi told that Ibn Abbas said: Saudah feared that the messenger of Allah will divorce her so she said, "Do not divorce me and keep me, and give my day with you to Ai'sha." He did and this verse came down: "there is no blame on them, if they effect a reconciliation between them, and reconciliation is better." He said: this is a good and strange hadith. (Arabic source; translated by Mutee'a Al-Fadi)
இதைப் பற்றிய முழு விவரங்களுக்கு answering-islam.org/Shamoun/sauda.htm
[22] குர்-ஆன் 33:37
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
மேலதிக விவரங்களுக்கு: www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm
[23] குர்-ஆன் 33:37
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
மேலதிக விவரங்களுக்கு: www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm
From Tabari - The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3
The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, "Where is Zayd?" He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd's wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: "He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!" The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told "the Messenger of God is at the door." She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: "Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!"
When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, "Why didn't you ask him to come in?" He replied, "I asked him, but he refused." "Did you hear him say anything?" he asked. She replied, "As he turned away, I heard him say: 'Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!'"
So Zayd left, and having come to the Messenger of God, he said: "Messenger of God, I have heard that you came to my house. Why didn't you go in, you who are as dear to me as my father and mother?Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her." Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, "Keep your wife." Zayd separated from her and left her, and she became free.
While the Messenger of God was talking with 'A'isha, a fainting overcame him. When he was released from it, he smiled and said, "Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?" Then the Messenger of God recited: "And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, 'Keep your wife to yourself .'"- and the entire passage.
According to 'A'isha, who said: "I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters - what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us." (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3)
[24] ஸஹீஹ் புகாரி 3326
3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60
இவைகள் பற்றிய இதர ஆய்வுக் கட்டுரைகள்:
http://www.answering-islam.org/Responses/Osama/90feet-adam.htm
http://www.answering-islam.org/Responses/Menj/60cubits.htm
[25] குர்ஆன் 33:50
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை)அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.
[26] ஸஹீஹ் புகாரி எண்கள்: 5445, 5768, 5769 மற்றும் 5779.
5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :70
5768. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் சில 'அஜ்வா' ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் அலீ இப்னு மதீனீ(ரஹ்) அல்லாத மற்றவர்கள் 'ஏழு பேரீச்சம் பழங்களை' என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்தார்கள். Volume :6 Book :76
5769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :76
5779. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
[27] ஸஹீஹ் முஸ்லிம் 4371, 4373, 4374 & 4375
4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :39
4373. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு "அஸ்ஸாமு அலைக்கும்" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் "அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா" (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள்.
நான் "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான்தான் "அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது. அவற்றில் ("அலைக்கும்" என்பதற்கு முன்) "வ" எனும் (இடைச்)சொல் இடம்பெறவில்லை. Book :39
4374. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க"" (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (பதில்) சொன்னார்கள். நான் "அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு" (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் (முகமன்) கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே" என்று கூறினார்கள். நான், "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் அவர்கள் சொன்னதற்கு "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக) பதில் சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்" (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது. Book :39
4375. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று முகமன் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக பதில்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நான் கேட்டுவிட்டு அவர்களுக்கு (நளினமாக) பதில் சொல்லிவிட்டேனே! அவர்களுக்கு எதிராக நாம் செய்த பிரார்த்தனை ஏற்கப்படும். நமக்கெதிராக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்கப்படாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
[28] ஸஹீஹ் புகாரி 3208
3208. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது" என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) Volume :3 Book :59
[29] ஸஹீஹ் புகாரி 2321
2321. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார்.
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். Volume :2 Book :41
[30] ஸஹீஹ் புகாரி 4681 & 4682:
4681. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்' என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் 'மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவு உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது' என்று கூறினார்கள். Volume :5 Book :65
4682. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) கூறினார்
இப்னு அப்பாஸ்(ரலி) 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்' என்று இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், 'அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள 'தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்' என்பதன் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர்கள், 'சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகிறதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது' என்று கூறினார்கள். Volume :5 Book :65
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக