ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 12 டிசம்பர், 2008

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்(MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK)

 
ஆசிரியர்: சைலஸ்(Silas)
 
அறிமுகம்:


 
கி.பி. 622ல் முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு அங்கிருந்த உள்ளூர் மக்களில் சிலர் அவரை வெறுத்தார்கள். அவர்களில் அநேகர் யூதர்களாயிருந்தனர், சிலர் புறமத அரேபியர்கள்(Pagan Arabs). ஒருவர் பின் ஒருவராக முஹம்மதுவின் எதிரிகள் எல்லாரும் அடக்கப்பட்டார்கள், சிலர் முஸ்லீம்களானார்கள், சிலர் கொல்லப்பட்டனர், மற்றவர்களோ மதினாவை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த கட்டுரையானது முஹம்மது தன்னுடைய ஆட்களிடம் அபு அஃபக்(Abu Afak) என்னும் ஒரு யூத மனிதனைக் கொல்லும்படியான வேண்டுகோளை பற்றி விளக்குகிறது. அபு அஃபக் 120 வயதுடையவராக இருந்தார். இவர் செய்த குற்றம் என்ன? அவர் தன்னுடைய சக மதினா மக்களை முஹம்மதுவைப் பற்றி சந்தேகிப்பதற்கு துரிதப்படுத்தினார்.
 
 
இஸ்லாமிய ஆதாரங்களின் அறிமுகம்:

 
குறிப்பு: என் விளக்கக் குறிப்புக்களை [] என்ற கட்டங்களுக்குள் தருகிறேன் மற்றும் () என்ற அடைப்புக் குறியில் இருப்பது, ஆங்கில மொழிப்பெயர்ப்பாளரின் விளக்கக் குறிப்புக்களாகும்.

 
இபின் இஷாக் அவர்கள் எழுதிய முஹம்மதுவின் சரிதையாகிய "சீரத் ரசூல் அல்லா(SIRAT RASUL ALLAH -THE LIFE OF THE PROPHET OF GOD)" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் (1) பக்கம் 675:
 
 
அபு அஃபக்கை கொல்லுவதற்கு சலீம் பி. உமரின் அவசர பயணம்

 
அபு அஃபக் என்பவர் உபய்தாவின் வம்சமாவார்(Abu Afak was one of the B. Amr b. Auf of the B. Ubayda clan). இறைத்தூதர் அல்-ஹாரித் பி. சுவாயித் பி. சமித்தைக் கொன்ற போது, அபு அஃபக் தன்னுடைய வெறுப்பைக் வெளிக்காட்டினார். அவர் சொன்னதாவது:

 
"வெகுகாலம் நான் வாழ்ந்தும் ஒரு நாளும் நான் கண்டதில்லை
ஒரு கூட்டமான அல்லது குழுவான மக்களை
தங்களின் ஆளுகைக்கு மிக விசுவாசமாக
அவர்களின் கூட்டானவர்கள் வரவழைக்கப்பட்டபோது
கெய்லாவின் புத்திரர்கள் கூடினபோது,
அவர்கள் மலைகளை பெயர்த்து தள்ளுபவர்கள் ஒரு நாளும் விட்டுக்கொடாதவர்கள்,
ஒரு சவாரி செய்பவன் அவர்களிடத்தில் வந்து எல்லா விதக் காரியங்களையும்
"அனுமதிக்கப்பட்டது" "மறுக்கப்பட்டது" என்று கூறி அவர்களை இரண்டாக பிரித்தான்.
மகிமையில் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா அல்லது அரசாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா?
நீங்கள் துப்பாவையே பின்பற்றியிருக்கலாம்.

 
[குறிப்பு: துப்பா என்பவன் யெமனிலிருந்து வந்த ஒரு பிரபு, அவன் அந்த காலத்தில் சவுதி அரேபியாவின் பகுதிகளை வென்றிருந்தான், கெய்லாக்கள் அவனை எதிர்த்தார்கள்.]
 
 
இறைத்தூதர், "எனக்காக இந்த முட்டாளின் கதையை முடிப்பவன் யார்?" என்று கேட்டார். அப்போது சலீம் உமர், பி. அமர் பி. அவுப் பின் சகோதரன் முன்னேறிப் போய் அவரை கொன்று போட்டார்.
 
 
அதைப் பற்றி உமாமா பி. முஜாரியா கூறியதாவது:

 
நீ இறைவனுடைய‌ மதத்திற்கும் அகமது [முஹம்மது] என்ற மனிதனுக்கும் எதிராக‌ பொய்யை வழங்கினாய்
உன்னுடைய தகப்பன் தீமையானதை பெற்றெடுத்தார்
அந்த அபு அஃபக்கை உன்னுடைய வயதுக்கு பதிலாக எடுத்துக் கொள் என்று கூறி
ஒரு "ஹானிப்" உனக்கு ஒரு ஊடுருவலைக் கொடுத்தார்
அந்த மரண இரவில் உன்னைக் குத்தின அவன் மனிதனா அல்லது ஜின்னா என்று
எனக்கு தெரிந்திருந்த போதும் (நான் ஒன்றும் சொல்லேன்)
 
 
இபின் ஸையத் அவர்களின் புத்தகமாகிய "கிதாப் அல்-தபாகத் அல்-கபீர்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் (Volume 2, page 31):
 
 
அல்லாவின் தூதருடைய‌ ஹிஜ்ராவின் கி.பி 622ல் மெக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தது இருபதாவது மாதத்தின் தொடக்கத்தில் ஷவ்வால் மாதத்தில் யூதரான அபு அஃபக்கிற்கு விரோதமாக சலீம் இப்னு உமர் அல் அம்ரியின் 'சரைய்யாஹ்" அதாவது திடீர் தாக்குதல் நடந்தேறியது. அபு அஃபக் நூற்றிருபது வயதை அடைந்திருந்த, பானு அம‌ர் இப்னு அவுஃப் இனத்தைச் சார்ந்த‌ ஒரு வயோதிகர். அவர் யூதராக இருந்து வழக்கமாக அல்லாவின் தூதருக்கு விரோதமாக மக்களைத் தூண்டி விடுவார் மேலும் முஹம்மதுவைப் பற்றி ஏளனமான வசனங்களை இயற்றினார்.

 
பத்ருப் போரில் பங்கெடுத்திருந்த மிகச் சிறந்தவரான‌ சலீம் இப்னு உமர் கூறினார், " நான் ஒரு பொருத்தனையை எடுக்கிறேன், நான் அபு அஃபக்கை கொல்லுவேன் அல்லது அவருக்கு முன்பாக மரிப்பேன். அபு அஃபக் ஒரு திறந்த வெளியில் படுத்திருக்கும் அந்த சூடான இரவு வரும் வரை அவன் அந்த சந்தர்பத்திற்காக காத்திருந்தான். சலீம் இப்னு உமர் அதை அறிந்து அவருடைய ஈரலைப் பிளந்து படுக்கையில் பாயும் வரை ஒரு பட்டயத்தை பாய்ச்சினான். அல்லாவின் எதிரி அலறினார், அவனை பின் பற்றுகிறவர்களாயிருந்த மக்கள் விரைந்தோடி அவரை எடுத்துக் கொண்டுப் போய் அடக்கம் செய்தார்கள்.
 
 
நம் காலத்தைச் சார்ந்த‌ ஒரு இஸ்லாமிய அறிஞரிடமிருந்து

FROM A CONTEMPORARY MUSLIM SCHOLAR ON ISLAM


 
அலி தஸ்தியின்(Ali Dashti) அவர்களின் புத்தகமாகிய "23 வருடங்கள்: முஹம்மதுவின் நபித்துவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆய்வு :பக்கம் 100" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் (3).
 
 
அபு அஃபக் என்னும் ஒரு முதிர் வயதானவர் (கீர்த்தியோடு 120 வருடங்கள் வாழ்ந்தவர்) கொல்லப்பட்டார், ஏனென்றால் அவர் முஹம்மதுவை இகழ்ந்து எழுதியிருந்தார். இந்த சம்பவம், "எனக்காக இந்த முட்டாளின் கதையை முடிப்பார்கள் யார்?" என்று கேட்டிருந்த நபியின் சார்பாக சலீம் பி. உமரால் நடத்தப்பட்டது. ஒரு வயதான மனிதரைக் கொன்ற இந்தக் கொலை ஒரு பெண் கவிஞரான அஸ்மா பி. மார்வனை முஹம்மதுவப் பற்றி அவமரியாதையான வசனங்களை எழுத வைத்தது, அவளும் படுகொலை செய்யப்பட்டாள்."
 
 
பக்கம் 97ல், முஹம்மது கட்டளையிட்ட எல்லாப் படுகொலைகளையும் வரிசைப்படுத்த முதன்மையாக அலி தஸ்தி கூறுகிறார் :
 
 
"இவ்வாறு இஸ்லாமானது ஒரு சுத்தமான ஆன்மீக பணியிலிருந்து மிக கடுமையாக தண்டிக்கிற இராணுவ‌ அமைப்பாக மெதுவாக உருமாற்றம் அடைந்தது, அவர்களது வளர்ச்சி போரில்(திடீர்த் தாக்குதல்கள்) கொள்ளையிட்ட பொருள்களையும், ஜக்காத் வரியினால் குவிந்த தொகையையும் சார்ந்ததாக இருந்தது."

 
"Thus Islam was gradually transformed from a purely spiritual mission into a militant and punitive organization whose progress depended on booty from raids and revenue from the zakat tax."
 
 
விவாதம் (DISCUSSION)

 
அஃபக் மதினாவில் வாழ்ந்த மக்களிடம் முஹம்மதுவை சந்தேகிக்கும்படியும் அவரை பின்பற்றாமல் விட்டுவிடும் படியும் ஏவினார். அஃபக், முஹம்மதுவின் கருத்துகள் விநோத‌மாகவும் அடக்குமுறையாகவும் இருப்பதாக கண்டார். முஹம்மதுவின் பேரில் தங்கள் விசுவாசத்தை வைத்திருந்த அரேபியர்களை அவர் கடிந்துக்கொண்டார். முஹம்மது இவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த 120 வயது மனிதனை தன்னுடைய நம்பகத்தன்மைக்கு, பெயர் புகழுக்கு அச்சுறுத்தலாக கண்டார், தன்னுடைய உயிருக்கு அல்ல. எந்த இடத்திலும் அஃபக் தன்னுடைய சக அரேபியர்களிடம் முஹம்மதுவை தாக்கும்படியாகவோ அல்லது தீங்கு செய்யவோ தூண்டியதாக சொல்லப்படவில்லை. நிச்சயமாக 120 வயதுடைய ஒரு மனிதன் முஹம்மதுவின் மற்றும் அவரது அடியார்களின் உயிர்களுக்கோ ஒரு அச்சுறுத்துதலாக இருந்திருக்க முடியாது.

 
எனக்கு மிகுந்த ஆச்சர்யமூட்டுவதாக இருப்பது என்னவென்றால், உமாமா பி. முஜாரியாவின் இறுதி வாக்கியம் தான்:
 
 
"அந்த மரண இரவில் உன்னைக் குத்தின அவன் மனிதனா அல்லது ஜின்னா என்று எனக்கு தெரிந்திருந்த போதும் (நான் ஒன்றும் சொல்லேன்)"
 
 
இந்த வாக்கியம், முஸ்லீம்கள் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மதுவின் வேண்டுகோளுக்கிணங்கி செய்த திட்டமிட்ட கொடுமையான கொலை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதை அவர்கள் மறைமுகமாக வைக்க விரும்பினார்கள். தங்களுடைய தீமைகளை பெரிய அளிவில் பொதுவில் வரதாபடிக்கு மறைக்க விரும்பினார்கள். அதனால் தான் உமாமா, யார் அஃபக்கை கொலை செய்தார்கள் என்பதை தான் வெளிப்படுத்தமாட்டேன் என்று கூறினார்.

 
கொலை செய்யும் படி தங்களை பின்பற்றுபவர்களுக்கு கட்டளையிடும் மக்களைக் குறித்து நான் நினைக்கும்போது, திட்டமிட்டு செயல்படும் குற்றம் புரிபவர்களுக்குத் தலைவன், கெட்ட அரசியல் தலைவர்கள், பொய்யான மதகோட்பாடுகளின் தலைவர்கள் ஆகிய இவர்களைத் தான் என்னால் நினைக்க முடிகிறது(When I think of what type of people order their followers to commit murder, I only can think of organized crime bosses, corrupt political figures, and cult leaders). சதாம் உசேன் தான் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறார். ஒரு ஈராக்கி சாதம் உசேனைப் பற்றி எதிராக‌ பேசியிருந்தால் என்ன செய்யப்பட்டிருந்திருப்பார்? சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கொடுத்த தகவலின் படி கடந்த (வருடத்தில்) நாட்களில் மட்டும் ஈராக்கில் 1500 அரசியல் குற்றவாளிகளுக்கு கொலை தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 
அல்லது இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால், அயாதுல்லா கோமினியை (Ayatollah Khomenni) எடுத்துக்கொள்ளுங்கள். இவரது அடிப்படை வாத ஆட்சியின் கீழ், தன்னை எதிர்த்த ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களெல்லாரும் முஹம்மதுவை அப்படியே பிரதிபலிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களெல்லாரும் முஹம்மதுவின் "உன்னுடைய பெயர், புகழ், கொள்கைக்கு அச்சுறுத்துதலாக இருக்கும் எல்லாரையும் கொல்" என்ற கோட்பாட்டை பின்பற்றியிருக்கிறார்கள்.
 
 
கேள்விகள் (QUESTIONS)
 
 
1) 120 வயதான மனிதர் தன்னுடைய சக குடிமக்களிடம் முஹம்மதுவை சந்தேகிக்க கூறியதால் கொலை செய்த முஹம்மது எப்படிப்பட்ட மனிதராக‌ இருந்திருப்பார்? (What kind of man was Muhammad that he would have a 120 year old man murdered because he urged his fellow citizens to doubt Muhammad?)

 
2) சரி, அபு அஃபக் முஹம்மதுவின் நபித்துவத்திற்கு, நம்பகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தார் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் சதி திட்டமாக கொலை செய்யப்படவேண்டியவரா? அவருடைய கருத்து முஹம்மதுவுக்கு அவ்வளவு பயமுறுத்தலாக இருந்ததா? பத்ரு பேரில் மலக்குகள் முஹம்மதுக்கு உதவவில்லையா? அப்படியிருக்கும் போது ஏன் 120 வயதான ஒரு யூத மனிதனுக்கு பயப்படவேண்டும்?

 
3) இந்த இஸ்லாமிய மதிப்புகள் நம்முடைய அமெரிக்காவில் உள்ள மதிப்புகளோடு இணக்கமாக உள்ளதா? முஹம்மதுவை பழித்துக் கூறும் அமெரிக்கர்கள் தங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு எதிர்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டுமா? அல்லது தங்கள் எண்ணத்தை பரப்புவதால் கொல்லப்டுவோமா என்ற பயத்துடனே வாழவேண்டுமா? அமெரிக்காவில் உள்ள முஸ்லீம்கள் ஏற்கனவே தங்கள் மதத்தின் காரணமாக அமெரிக்கர்களை கொல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 
4) இந்த அமைப்பை (அதவாது தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை கொல்லுவது,) முஹம்மது இடங்கொடுத்திருந்தால், இது இஸ்லாமிய சமுதாயத்தை எப்படி பாதிக்கும்? (If Muhammad put this system in place, i.e., the murdering of people who disagree with him, how does it affect Islamic society?) இஸ்லாமிய சமுதாயங்களான அல்ஜீரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சவுதி ஆகிய இவைகளில் நடந்தவைகளாக நாம் காணும் காரியங்களோடு இவை எவ்வாறு தொடர்பு படுகிறது. இப்படிப்பட்ட கொடூரமான கொலைகள் செய்யும் சூழ்நிலைகளின் மத்தியில் வாழ இஸ்லாமியர்கள் விரும்புவார்களா?

 
5) இன்று முஹம்மது உயிரோடிருந்திருந்தால், மேலும் அவர் கொன்றவர்களை நாம் அறிந்திருந்தால், அமெரிக்கா என்ன கூறும்? இப்படிப்பட்ட மனிதன் தான் செய்தவைகளுக்கு தக்க தண்டனையை அடைந்து தீர வேண்டுமென்று, அல்லது ஆயுள் கைதியாக சிறையில் அடைக்கப்ப‌ட்டு, ஏன் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று நாம் விரும்பியிருக்கமாட்டோமா?

 
6) இப்போது நாம் அறிந்திருக்கிற சிறந்த நன்னெறிகளின் அடிப்படையில் முஹம்மதுவை நியாயம் விசாரிக்க(Judge Muhammad) நமக்கு உரிமையில்லையா? அவர் தன்னை இறைவனின் கடைசி நபியாக உரிமை கொண்டாடினார். அவருடைய முறைமை தான் எல்லா மனிதர்களுக்குமான இறைவனின் இறுதி முறைமை என்றும் உரிமை கொண்டாடினார். எனவே நம்முடைய நிலைகளின்படி, நன்னெறிகளின் படி முஹம்மது என்ன செய்தாரோ அது மிகவும் கொடூரமானது என்று உங்களுக்கு தெரியாதா? நம்முடைய நன்னெறிகள் அவருடைய நெறிகளைவிட சிறந்ததாக இருந்தால், அவர் தன்னுடைய நபித்துவத்தைப் பற்றி வலியுறுத்துவது எந்த அளவிற்கு மதிப்புடையதாகும். நம்முடைய நன்னெறிகள் ஏன் இறைவனின் கடைசி நபி என்றுச் சொன்ன அந்த தீர்க்கதரிசியின் நன்னெறிகளை விட மேன்மையானதாக சிறப்பானதாக இருக்கிறது?
 
 
முடிவுரை (CONCLUTION)

 
தன்னுடைய தீய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக முஹம்மது அநேகரை இரத்தம் உறைய கொன்றிருக்கிறார். இப்படி மரித்தவர்களில் ஒருவர் தான் 120 வயது நிறம்பிய‌ அபு அஃபக். முஹம்மதுவுடைய‌ செயல்கள் எல்லாம் இறைவனால் அல்ல அவருடைய மாம்சீக மற்றும் கர்வத்தினால் உண்டானது என்று பார்த்தோம். மாற்றுக் கருத்துக் கொண்ட மக்கள் சில விஷயங்களில் கருத்து வேறுபட்டு ஒருவரையொருவர் வருத்தப்படுத்துவதைப் போல் அபு அஃபக்கும் முஹம்மதுவுக்கு ஒரு தொல்லையாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த ஒரு சிறந்த மனிதனும் முஹம்மது இந்த மனிதரைக் கொன்றதை நியாயப்டுத்தமாட்டார்.

 
இயேசு உங்களுடைய சத்துருக்களை சிநேகித்து, விரோதிக்கிறவர்களுக்காக ஜெபிக்க கற்றுக் கொடுத்தார். இரவெல்லாம் சுற்றித் திரிந்து கொலை செய்யுங்கள் என்று இயேசு கற்றுக் கொடுக்கவில்லை. எடுத்துக் காட்டாக கிறிஸ்துவையும் அவரை எதிர்த்த சமாரியர்களையும் பாருங்கள்.

 
 
"பின்பு, அவர் எடுத்துக் கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: 'ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா" என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: 'நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். " லூக் 9: 51-56
 
 
அப்படியானால் மனித இனத்திற்கு "இறைவனின் அன்பு" என்னும் அவருடைய செய்தியை யார் உண்மையாக கொண்டுவந்தார்கள்?
 
 
விளக்க குறிப்புகள்(REFERENCES)

(1) "The Life of Muhammad", a translation of Ibn Ishaq's "Sirat Rasul Allah" (The Life of the Prophet of God) by A. Guillaume. This book is the best biography of Muhammad available. Note that Guillaume added in other references from Tabari, and other early Islamic writings.
(2) "Kitab al-Tabaqat al-Kabir", (Book of the Major Classes), by Ibn Sa'd. Translated by Moinul Haq, published by the Pakistan Historical Society
(3) "23 YEARS: A Study of the Prophetic Career of Mohammad", by Ali Dashti. Translated by F.R.C. Bagley.
abu-afak.htm
Rev. A: 4-9-98


Source: http://www.answering-islam.org/Silas/abu-afak.htm

 


 

 
 

கருத்துகள் இல்லை: