ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 11 ஜூலை, 2015

2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

[2015 ரமளான் மாத முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இவ்வாண்டு ரமளான் மாதத்தில் கலிஃபாக்களை விமர்சித்து உமர் சில கடிதங்களை தம் தம்பிக்கு எழுதியுள்ளார். இக்கடிதத்தில், உமரின் தம்பி, உமருக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறார். அதாவது முஹம்மது பத்து பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று நற்செய்தி சொல்லியுள்ளார். அல்லாஹ்வினாலும், முஹம்மதுவினாலும், சொர்க்கவாசிகள் (அஷரத்துல் முபஷ்ஷரா) என்று முன்குறிக்கப்பட்டவர்கள் மீது எந்த குற்றத்தையும் நீங்கள் சாட்டமுடியாது என்று உமரின் தம்பி இக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். இதற்கு உமர் எழுதிய பதிலையும் இதே கடிதத்தில் காணலாம். இந்த அஷ்ரத்துல் முஹஷ்ஷரா என்ற ஒரு விஷயத்தைச் சுற்றியுள்ள இஸ்லாமிய இறையியல் பிரச்சனைகளை உமர் இக்கடிதத்தில் அலசுகிறார்.]

அல்லாஹ்வின் சொர்க்கவாசிகள்  - அஷரத்துல் முபஷ்ஷரா

அன்பான உமரண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் கலிஃபாக்களை விமர்சித்து எழுதிய கடிதத்தை படித்தவுடன் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன், ஆனால் மறந்தே போய்விட்டேன். உங்களுடைய நேற்றைய கடிதத்தை படித்தவுடன், அந்த முக்கியமான விஷயம் நினைவுக்கு வந்தது. அதனை உங்களுக்கு இப்போது நான் எழுதுகிறேன், கவனமாக படிக்கவும், இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் கொடுக்கப்போகும் பதிலுக்கு முன்பாக நூறு முறை சிந்திக்கவும். இது உங்களுக்கே (கிறிஸ்தவத்திற்கு) தலைவலியாக மாறக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் எங்கள் கலிஃபாக்கள் நால்வரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளீர்கள். அவர்கள் பற்றி மேலும் நீங்கள் எழுதுவதற்கு முன்பாக, அவர்களின் மேன்மையை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொருவரின் அதிமுக்கியமான ஆசை:

எந்த இறைவனை நம்புபவனாக இருந்தாலும், அவனுடைய முதல் இலட்சியம், அவன் சொர்க்கம் செல்லவேண்டும் என்பதாகும். இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துத்துவம் என்று எந்த மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், சொர்க்கம் செல்லவேண்டும் அல்லது முக்தி அடையவேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்தவர்களாகவே அவர்கள் அனைத்து காரியங்களையும் செய்கிறார்கள். இதனை நீங்களும் அறிந்துள்ளீர்கள். 

எங்கள் இறைத்தூதர் சஹாபாக்களில் பத்து பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்று நற்செய்தி கூறியுள்ளார். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது, இப்படிப்பட்ட நற்செய்தியைப் பெறுவது பாக்கியங்களிலெல்லாம் மிகப்பெரிய பாக்கியும். இந்த பத்து பெயர்களில், கீழ்கண்ட நான்கு பெயர்கள் முதலாவது வருகிறது, நீங்கள் கலிஃபாக்களை விமர்சித்தபடியினால், அவர்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.

1) அபூபக்கர் (ரலி) – முதல் கலிஃபா
2) உமர் (ரலி) – இரண்டாம் கலிஃபா
3) உத்மான் (ரலி) – மூன்றாம் கலிஃபா
4) அலி (ரலி) – நான்காம் கலிஃபா

இவர்களின் மேன்மை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மனிதன் உயிரோடு இருக்கும் போதே அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்திச் சொல்வதை வேறு எந்த மதத்திலாவது நீங்கள் பார்த்தது உண்டா? குறைந்தபட்சம் கிறிஸ்தவத்திலாவது இதனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? 

இறைத்துதர் முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக இவர்கள் இஸ்லாமிலே மிகவும் மேன்மையுள்ளவர்கள். இவர்களை அல்லாஹ்விற்கு சமமாக நீங்கள் கருதுங்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால், இவர்களின் மேன்மையை எப்படி அல்லாஹ் உயர்த்தியுள்ளான் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே இவர்களைப் பற்றி நீங்கள் எழுதப்போகும் ஒவ்வொரு வரியையும் பல முறை சிந்தித்து எழுதவும். 

எச்சரிக்கை: இஸ்லாமிய இறையியலை நீங்கள் தொட்டால், இவ்விஷயத்தைப் பற்றி கிறிஸ்தவ இறையியல் தொடப்படும் என்பதை மனதில் வைக்கவும்.

இந்த கடிதத்தைக் கண்டவுடன், இனி கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவேண்டாம். 

உங்கள் பதிலுக்காக ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இப்படிக்கு 
உங்கள் தம்பி
சௌதி அரேபியா

உமரின் பதில் கடிதம்:

சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு கர்த்தரின் கிருபையும், சாந்தியும் உண்டாவதாக.

உன் உச்சக்கட்ட விசுவாசத்தை உன் கடிதம் பிரதிபலிக்கிறது. இஸ்லாமின் மீது உனக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனால் மித மிஞ்சிய நம்பிக்கை இருக்கக்கூடாது. 

மணலைக் கொண்டு அனேக நல்ல பயனுள்ள காரியங்களைச் செய்யலாம், ஆனால், மணலின் மீது மாளிகையை எழுப்பக்கூடாது. நீ மணலின் மீது மாளிகையை எழுப்ப முடிவு செய்துள்ளாய், அந்த மாளிகை நிற்காது, சீக்கிரத்தில் தரைமட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். 

பொதுவாக நான் தான் உனக்கு எச்சரிக்கை தருவேன், ஆனால், இந்த முறை நீ என்னை எச்சரித்துள்ளாய். இஸ்லாமிய இறையியலை நான் தொட்டு எழுதினால், கிறிஸ்தவத்தின் இறையியல் உன்னால் ஆய்வு செய்யப்படும் என்ற தோரணையில் நீ எழுதியது, எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது தான் சரியான போட்டி, உனக்கு என் வாழ்த்துக்கள். உன் இஸ்லாமிய இறையியலின் இரண்டு கண்களிலும் என் விரல்களை விட்டு, ஆட்டோ ஆட்டு என்று ஆட்டாமல் நான் விடப்போவதில்லை. கிறிஸ்தவத்தின் இறையியலை தட்டிப்பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும், தழுவிப்பார்க்கவும் உன்னை அன்புடன் வரவேற்கிறேன். நீ எதைச் செய்தாலும், கிறிஸ்தவர்கள் உன்னை தட்டிவிடமாட்டார்கள், தைரியமாக நீ ஆய்வு செய்யலாம். 
முதலில், சொர்க்கவாசிகள் பற்றிய உன் கேள்விகளுக்கு விடையை கொடுத்துவிட்டு, அதன் பிறகு "முதல் கலிஃபா மற்றும் சொர்க்கவாசி அபூ பக்கர் அவர்களின் ஆட்சி பற்றி" ஆய்வு செய்வோம்.

உபதலைப்புக்கள்
  1. சொர்க்கவாசிகள் பத்து பேர்  - ஹதீஸ்களின் சாட்சியும் முரண்பாடுகளும்
  2. இந்த பத்து பேருக்கு "தாங்கள் சொர்க்கவாசிகள்" என்ற விஷயம் முஹம்மது உயிரோடு இருந்த போதே தெரியுமா?
  3. சொர்க்கவாசிகளும், இஸ்லாமிய இறையியலின் பிரச்சனைகளும்.
  4. முடிவுரை
-----------------------------------

1) சொர்க்கவாசிகள் பத்து பேர்  - ஹதீஸ்களின் சாட்சியும் முரண்பாடுகளும்

சொர்க்கவாசிகள் இவர்கள் தான் என்று பெயர் குறிப்பிட்டு குர்-ஆன் சொல்வதில்லை, அவைகளை நாம் ஹதீஸ்களில் காணலாம், அதுவும் ஸஹீஹ் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களில் இவைகளை காணமுடியாது. இதர ஹதீஸ் தொகுப்புகளாகிய அபூ தாவுத் மற்றும் திர்மிதியில் இவைகளை காணமுடியும்:

சுனன் அபூ தாவூத் ஹதீஸ்

Dawud :: Book 40 : Hadith 4632

Narrated Sa'id ibn Zayd: 

AbdurRahman ibn al-Akhnas said that when he was in the mosque, a man mentioned Ali (may Allah be pleased with him). So Sa'id ibn Zayd got up and said: I bear witness to the Apostle of Allah (peace_be_upon_him) that I heard him say: Ten persons will go to Paradise: The Prophet (peace_be_upon_him) will go to Paradise, AbuBakr will go to Paradise, Umar will go to Paradise, Uthman will go to Paradise, Ali will go to Paradise, Talhah will go to Paradise: az-Zubayr ibn al-Awwam will go to paradise, Sa'd ibn Malik will go to Paradise, and AbdurRahman ibn Awf will go to Paradise. If I wish, I can mention the tenth. The People asked: Who is he: So he kept silence. The again asked: Who is he: He replied: He is Sa'id ibn Zayd. 

திர்மிதி

Narrated Abdur Rahman bin Awf:
that the Messenger of Allah (sallallahu 'alayhi wa sallam) said: "Abu Bakr is in Paradise, 'Umar is in Paradise, 'Uthman is in Paradise, 'Ali is in Paradise, Talhah is in Paradise, Az-Zubair is in Paradise, 'Abdur Rahman bin Awf is in Paradise, Sa'd bin Abi Waqqas is in Paradise, Sa'id ibn Zayd is in Paradise, and Abu 'Ubaidah bin Al-Jarrah is in Paradise."

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் பெயர்கள்:

எண்
அபூ தாவுத் ஹதீஸ் தொகுப்பு
திர்மிதி ஹதீஸ் தொகுப்பு
1
முஹம்மது
அபூ பக்கர்
2
அபூ பக்கர்
உமர்
3
உமர்
உஸ்மான்
4
உஸ்மான்
அலி
5
அலி
தல்ஹா
6
தல்ஹா
ஜுபைர்
7
ஜுபைர் இப்னு அவாம்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
8
ஸைத் இப்னு மாலிக்
ஸஃது இப்னு அபீ வக்காஸ்
9
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
ஸயீது இப்னு ஸைது
10
ஸயீது இப்னு ஸைது
அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் 

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு பட்டியல்களையும், நாம் பார்த்தால், பல முரண்பாடுகளை காணமுடியும்.

திர்மிதி ஹதீஸில்: 
  • முஹம்மதுவின் பெயர் காணப்படவில்லை. 
  • "ஸைத் இப்னு மாலிக்" என்பவரும் காணவில்லை.
அபூ தாவுத் ஹதீஸில்:
  • "ஸஃது இப்னு அபீ வக்காஸ்" என்பவர் காணப்படவில்லை.
  • "அபூ உதைபா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்" என்பவர் காணப்படவில்லை.
இந்த இரண்டு பட்டியலை நாம் ஒன்று சேர்த்தால், நமக்கு 12 நபர்களின் பெயர்கள் வருகின்றன. இதில் எந்த பட்டியலில் கொடுக்கப்பட்டதை சரியானதாக கருதுவது?

எண்
அபூ தாவுத் / திர்மிதி
1
முஹம்மது
2
அபூ பக்கர்
3
உமர்
4
உஸ்மான்
5
அலி
6
தல்ஹா
7
ஜுபைர் இப்னு அவாம்
8
ஸைத் இப்னு மாலிக்
9
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
10
ஸயீது இப்னு ஸைது
11
ஸஃது இப்னு அபீ வக்காஸ்
12
அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்

புகாரி மற்றும் முஸ்லிமில் இது ஏன் காணப்படவில்லை?

சுன்னி முஸ்லிம்களின் ஆறு ஹதீஸ் தொகுப்புகளில், முதல் இரண்டு தொகுப்புகளாகிய புகாரி மற்றும் முஸ்லிம் 100% ஆதாரமானவை என்று கருதப்படுகின்றது. ஆனால், இந்த சொர்க்கவாசிகள் பற்றிய ஹதீஸ் இந்த இரண்டு தொகுப்புக்களில் வராமல் விடப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்குமா? புகாரி, முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பாளர்கள், "சொர்க்கவாசிகள் பற்றிய ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ்" என்று அருதி தங்கள் தொகுப்பில் சேர்க்காமல் விட்டிருப்பார்களா? இது ஒரு முக்கியமில்லாத சாதாரண விஷயம் அல்ல. சஹாபாக்களின் மேன்மையை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு ஹதீஸ் இவர்களின் கண்களில் படாமல் விடப்பட்டதா? அல்லது பட்டதை இவர்கள் பொய் என்றுச் சொல்ல வருகிறார்களா? முதல் நான்கு கலிஃபாக்களின் காலம் முடிந்த பிறகு வந்த முஸ்லிம்கள், இந்த பத்து சஹாபாக்களின் மேன்மையை உயர்த்துவதற்கு இட்டுக் கட்டியதா இந்த ஹதீஸ்? புகாரி முஸ்லிம் ஹதீஸ்களில் கட்டாயமாக எல்லா ஹதீஸ்களும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால், இவ்வளவு முக்கியமான ஹதீஸ் விடப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. ஷியா முஸ்லிம்கள் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டியது என்று நம்புகிறார்கள். 

இந்த ஹதீஸ் உண்மை என்று கருதினால் வரும் இறையியல் பிரச்சனைகளை நான் இந்த கடிதத்தில் எழுதுகிறேன்.

2) இந்த பத்து பேருக்கு "தாங்கள் சொர்க்கவாசிகள்" என்ற விஷயம் முஹம்மது உயிரோடு இருந்த போதே தெரியுமா?

தம்பி, நாம் இதுவரை முதல் நான்கு கலிஃபாக்களின் செயல்களை முழுவதுமாக பார்க்கவில்லை. அபூ பக்கர் ஆட்சி தொடங்கி, அலி அவர்கள் மரணிக்கும் வரைக்கும் நாம் ஆய்வு செய்தால், நமக்கு கீழ்கண்ட கேள்விகள் எழும்:
  • இவர்களா சொர்க்கவாசிகள்?
  • தாங்கள் சொர்க்கவாசிகள் என்று அவர்களுக்கு தெரிந்திருந்ததா?
  • ஒருவருக்கு இன்னொருவர் சொர்க்கவாசி என்று தெரிந்து இருந்ததா? அபூ பக்கர் சொர்க்கவாசி என்று அலிக்கு தெரியுமா?
  • இவர்களின் நடத்தைகள், சொர்க்கத்திற்கு தகுதியானவர்களின் செயல்களாக காணப்படவில்லையே? அல்லாஹ் இவர்களின் செயல்களை அங்கீகரித்தானா?
  • இவர்கள் சொர்க்கவாசிகள் என்று அல்லாஹ் சொல்லி தவறு செய்துவிட்டானா?
அலியின் அதிகார ஆசைப் பற்றியும், ஃபாத்திமாவிற்கு கிடைக்கவேண்டிய ஆஸ்தி கிடைக்கவில்லையே என்ற கோபத்தினால், முதல் கலிஃபாவிற்கு ஒத்துழைப்புத் தராமல் இருந்ததைப் பற்றியும் நாம் சுருக்கமாக பார்த்துள்ளோம். இவர்களைப் பற்றி அடுத்தடுத்த கடிதங்களில் நாம் அதிகமாக தெரிந்துக் கொள்வோம்.

இந்த கடிதத்தில், "சொர்க்கவாசிகள் பற்றிய வஹியை அல்லது செய்தியை" முஹம்மதுவிற்கு இறக்கிய அல்லாஹ்வின் செயலினால், உண்டாகும் இறையியல் பிரச்சனையை மட்டும் பார்ப்போம்.

3) சொர்க்கவாசிகளும், இஸ்லாமிய இறையியலின் பிரச்சனைகளும்

தம்பி, இஸ்லாமிய இறையியலின் படி, இந்த பூமியிலே முஸ்லிமாக வாழும் ஒரு நபர் "நான் மரித்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வேன், அல்லாஹ் அதை கொடுப்பான், இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை" என்றுச் சொல்லக்கூடாது.  ஏனென்றால், தீர்ப்பு நாளில், இந்த முடிவை எடுப்பவன் அல்லாஹ், எனவே, மனிதர்கள் தங்கள் தரப்பிலிருந்து செய்யவேண்டியவைகளைச் செய்யவேண்டுமே ஒழிய, "எனக்கு சொர்க்கத்துக்கு டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்" என மரிப்பதற்கு முன்பு சொல்லக்கூடாது.

இது ஒரு புறமிருக்க, பத்து நபர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று முஹம்மது சொல்லியுள்ளார். மறுபடியும் இஸ்லாமிய இறையியலின் படி, முஹம்மதுவின் இந்த வார்த்தைகள் கூட ஒரு வகையான வஹி தான். இதனையும் அல்லாஹ்விடமிருந்து பெற்றுத் தான் முஹம்மது சொல்லியிருக்கிறார், ஆக, இதனை அல்லாஹ்வின் வார்த்தையாகவே கொள்ளவேண்டும். 
சஹாபாக்களில் சிலர் மரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, முஹம்மது இதனை சொல்லியுள்ளதால், இதனை முஸ்லிம்கள் நம்புவதினால், இஸ்லாமிய இறையியல் (அல்லாஹ்) கீழ்கண்ட பிரச்சனைகளை/கேள்விகளை சந்திக்கிறது:

அ) சொர்க்கவாசிகள் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவர்கள் மரிக்கும் நாள் வரை சொர்க்கவாசிகள் பாவங்களை செய்யமாட்டார்கள், அவர்கள் அல்லாஹ்வைப் போல (இனி) பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்லாஹ் வாக்கு கொடுத்தானா?

ஆ) ஒருவேளை, அவர்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும், அதனை  கண்டுக் கொள்ளமாட்டேன் என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டு, இப்படி வாக்கு கொடுத்தானா?

இ) அல்லது அவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்றபடி, முதலாவது நரகத்தில் அவர்களை தண்டித்து, அதன் பிறகு சொர்க்கத்துக்கு அனுப்பலாம் என்று அல்லாஹ் கருதினானா?

ஈ) அவர்கள் எந்த பாவம் செய்தாலும் சரி, "நேரடி சொர்க்கம் தான்" என்று முடிவு செய்து, அல்லாஹ் சொர்க்கவாசி ஹதீஸை இறக்கினானா?

உ) இப்படி செய்தால், அல்லாஹ்வின் இறையான்மைக்கு என்ன மதிப்பு இருக்கிறது? இதர சஹாபாக்களும் பாவங்கள் செய்தபோதும்,நேரடியாக சொர்க்கத்துக்கு அனுப்பாதது ஏன்?

ஊ) ஒரு சொர்க்கவாசி, இன்னொரு சொர்க்கவாசியோடு போர் புரிந்தாரே (அலியும், தல்ஹாவும், ஜுபைரும்), இப்படி இருக்கும் போது இவர்களை எப்படி ஒரே சொர்க்கத்தில் அல்லாஹ் அனுமதிப்பான்?

எ) ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் போர் செய்தால் அவர்கள் இருவரும், காஃபிர்கள் என்று சொல்லப்படுவதற்கு இணங்க, தல்ஹா மற்றும் ஜுபைர் அவர்கள் அலிக்கு எதிராக போர் செய்தார்களே இவர்களில் யார் காஃபிர்? அல்லது இவர்களுக்கு எதிராக போர் செய்த அலி காஃபிரா? இஸ்லாமின் படி என்ன பதில்?

ஏ) சண்டையிடும் இரண்டு முஸ்லிம்களும் காஃபிர்கள் என்றால், அவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். இதன்படி இந்த மூன்றுபேரும் நரகம் செல்வார்களா? அப்படியானால், சொர்க்கவாசிகள் என்ற ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதா?

ஐ) இப்படி இவர்கள் ஜமல் போரில் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவார்கள் என்ற எதிர்கால நிகழ்வை அல்லாஹ் அறியாமல் வாக்கு கொடுத்துவிட்டானா? 

ஒ) அல்லாஹ்விற்கு எல்லாமே தெரியும் என்றால், இவர்கள் தவறு செய்திருந்தாலும், இவர்களை சும்மாவே மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ் நினைத்தானா? இப்படி செய்தால், சஹாபாக்களிடையே பாகுபாடு உண்டாக்குவது போல ஆகுமல்லவா?

ஓ) நாம் ஏற்கனவே சொர்க்கத்தின் பிரஜையாகிவிட்டதால், இனி நல்ல அமல்கள் அதிகமாகச் செய்யத்தேவையில்லை என்று அவர்களில் ஒருவர் நினைத்திருந்தால்? மனிதர்கள் என்ற முறையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

4) முடிவுரை: 

தம்பி, சொர்க்கவாசிகள் என்ற ஹதீஸ் அல்லாஹ்வின் இறையான்மையை கேள்விக்குரியாக்குகிறது. இஸ்லாமின் இறையியலை சந்தேகிக்கிறது. மேற்கண்ட கேள்விகள் அனைத்தும், இந்த ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ் என்று சொல்வதாக உள்ளது. குர்-ஆனின் இறையியல் சொல்வதற்கு எதிராக இந்த சொர்க்கவாசிகள் ஹதீஸ் இருப்பதினால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் இதனை பொய்யான ஹதீஸ் என்று எதிர்காலத்தில் தள்ளக்கூடும்.

உன்னிடம் கடைசியாக கேட்கவிரும்பும் கேள்விகள்:

1) சொர்க்கவாசிகள் என்பதால் அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

2) இவர்களின் கடைசி கால வாழ்க்கையை பார்த்தால், மிகவும் படுகேவலமாக இருக்கிறது. பதவிக்காக, பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொல்வது இவர்கள் மத்தியிலே சாதாரணமாக காணப்படும் ஒரு செயலாக உள்ளது. இவர்களை யார் சொர்க்கவாசிகள் என்று ஏற்றுக்கொள்வார்கள்?

3) இவர்கள் மரிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் போது, இவர்கள் சொர்க்கவாசிகள் என்று வாக்கு செய்வது சரியானதா? இது இஸ்லாமிய இறையியலுக்கும், குர்-ஆனுக்கும் எதிரானது அல்லவா?

தம்பி, நீ என்னை எச்சரிக்காதே, முதலாவது கலிஃபாக்களின், சஹாபாக்களின் நடபடிகளை அறிந்துக் கொள்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், 

இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்
தேதி: 11 ஜூலை 2015


கருத்துகள் இல்லை: