ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பாகம் 3 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?


(முஸ்லிமல்லாதவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் போக முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தவேண்டும்)

முன்னுரை:

இந்த தலைப்பின் முந்தைய இரண்டு கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

இவைகளின் தொடர்ச்சியாக, இந்த மூன்றாவது பாகத்தில், முஸ்லிமல்லாதவர்களை முஸ்லிம்கள் சாலையில் எப்படி நடத்தவேண்டும்? என்ற கேள்விக்கு இஸ்லாம் என்ன பதில் சொல்கிறது என்பதை ஆய்வு செய்வோம். 

இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்கள் இஸ்லாமிய நூல்களிலிருந்தும், இஸ்லாமிய விரிவுரைகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

பாகம் 3

முஸ்லிமல்லாதவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் போக முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தவேண்டும்

சென்னை மக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டபோது, முஸ்லிம்கள் உற்சாகமாய் உதவிகளைச் செய்தனர்.  இதன் பின்னணியை முழுவதுமாக அறிய மேலே கொடுக்கப்பட்ட முதலாவது பாகத்தை படிக்கவும்.  முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் அன்பாக நடந்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளுங்கள் என்று இஸ்லாம் வெளிப்படையாக சொல்லியிருக்கும் போது, முஸ்லிம்கள் அதனை புறக்கணித்துவிட்டு, முஸ்லிமல்லாதவர்களுக்கு தங்கள் உயிரைக் கொடுத்து உதவிகள் செய்துள்ளனர்.  இதனை முஸ்லிமல்லாதவர்கள் எப்படி புரிந்துக் கொள்வது? இஸ்லாம் சொல்வது சரியா? அல்லது முஸ்லிம்கள் செய்தது சரியா? இப்படிப்பட்ட  கேள்விகளுக்கு விடை காண்பது தான் இக்கட்டுரைகளின் முக்கிய நோக்கம். 

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது வாழ்த்துதல்/ஸலாம் சொல்லாதீர்கள் என்று முஹம்மது கற்றுக்கொடுத்த விவரத்தை இரண்டாம் பாகத்தில் ஆய்வு செய்தோம்.  இப்போது அதே இஸ்லாமிய ஆதாரத்தின் அடுத்த பாகத்தை ஆய்வு செய்வோம்.

முஹம்மது கீழ்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார் (ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376):

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள்.அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் செல்லும் படி கட்டாயப்படுத்துங்கள்:

மேலே நாம் பார்த்த ஹதீஸ், ஆதாரபூர்வமான முஸ்லிம் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகும். ஒரு சாலையில் யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ சென்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சாலையில் முஸ்லிம்களும் சென்றுக்கொண்டு இருந்தால், அந்த நேரத்தில் முஸ்லிம்கள் சாலையில் விசாலமான பாதையில் செல்லவேண்டுமாம்,   அதாவது முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு வழியை விட்டுவிட்டு, அவர்கள் நெருக்கடியான பாதையில் செல்லவேண்டுமாம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், முஸ்லிமல்லாதவர்கள் நெருக்கடியான பாதையில் போகும் படி "முஸ்லிம்கள்" அவர்களை  கட்டாயப்படுத்தவேண்டுமாம்.  உலக மக்களுக்கு ஒளியாக வந்தவர் முஹம்மது என்று முஸ்லிம்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள், இப்படிப்பட்டவர் தம்முடைய மக்களுக்கு "இதர மக்களிடம்" இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். 

மேற்கண்ட ஹதீஸையும், அதன் தாக்கத்தையும் அறியாத முஸ்லிம்களில் சிலர், கீழ்கண்ட விதமாக ஆட்சேபனை செய்யலாம். அவர்களுக்கு இந்த ஹதீஸின் பாதிப்பு என்னவென்பது சரியாக புரியவேண்டுமென்பதற்காக சில உதாரணங்களை இந்திய பின்னணியிலிருந்து எடுத்துக் காட்டுகிறேன்.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 1


இந்த ஹதீஸ் பொய்யாக இருக்கலாம், ஏனென்றால் எங்கள் இறைத்தூதர் இப்படியெல்லாம் சொல்லியிருக்கமாட்டார்.

சுன்னி பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் குர்-ஆனுக்கு அடுத்தபடியாக ஹதீஸ்களை  நம்புகிறார்கள். புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்கள் முஸ்லிம்களுக்கு அதி முக்கியமான இறைநூல்களாகும். இவ்விரண்டு தொகுப்புக்களுக்கு பிறகு தான் இதர ஹதீஸ்களின் நம்பகத்தன்மை தரம்பிரிக்கப்படுகிறது.   நாம் மேலே படித்த ஹதீஸ் "முஸ்லிம்" நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். உங்களுக்கு இந்த ஹதீஸ் தொகுப்பின் மீது சந்தேகம் இருந்தால், உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடமும் கேட்டுப் பாருங்கள், இஸ்லாமிய தளங்களிலும் சென்று படித்துப் பாருங்கள்.  முஸ்லிம்களாகிய நீங்கள் இவ்விதமான ஹதீஸ்களை புறக்கணிக்கும் அடுத்த நிமிடமே காஃபிராகி (இஸ்லாமை விட்டு வெளியேறியவராகி) விடுவீர்கள். எனவே, முஸ்லிம்களே! உங்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முயலாதீர்கள். தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் குழுவினர், இப்படிப்பட்ட ஆதாரபூர்வமான ஆனால், அதே நேரத்தில் தர்மசங்கடமான ஹதீஸ்களை மறுத்துக்கொண்டு வந்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஒருவேளை அவர்களது தற்போதைய பட்டியலில் இல்லாமல் இருந்தால், வருங்காலங்களில் இந்த முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐயும் அவர்கள் தங்கள் மறுக்கப்படும் ஹதீஸ் பட்டியலில் சேர்த்துக்கொள்வார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. காத்திருப்போம், காலம் பதில் சொல்லும். 

ஷியா பிரிவினர்: இஸ்லாமின் இன்னொரு பிரிவினர் ஷியா பிரிவினராவார்கள்.  இவர்கள் இந்த முஸ்லிம், புகாரி ஹதீஸ் தொகுப்புக்களை முழுவதுமாக நம்புவதில்லை, ஷியா பிரிவினருக்கு தனியாக ஹதீஸ் தொகுப்புக்கள் உள்ளன. இவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்தால், மேற்கண்ட ஹதீஸ் போன்ற தர்மசங்கடமான  விவரங்கள் இன்னும் அதிகமாக வெளிப்படும். ஷியா பிரிவினர் இஸ்லாமில் சிறும்பான்மையினராக இருக்கிறார்கள். என்னுடைய மறுப்புக்கள் மற்றும் கேள்விகள் அனைத்தும் பெரும்பான்மையினராகிய சுன்னி முஸ்லிம்களுக்குத் தான். 

எனவே, புகாரி, முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் உள்ள விவரங்களை முஸ்லிம்கள் புறக்கணிக்கக்கூடாது.  எனக்கு தெரிந்தவரை, இந்த முஸ்லிம் ஹதீஸை (எண் 4376ஐ) யாரும் இதுவரை மறுக்கவில்லை.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 2


முஹம்மது கட்டளையிட்டதில் என்ன தவறு இருக்கிறது? பெரும்பான்மையினர் ஆட்சி செய்யும் நாட்டில் சிறும்பான்மையினர் சிறிது அடங்கிச் செல்வதில் என்ன தவறு இருக்கிறது?

முஸ்லிம்களே! உங்களின் இந்த கருத்து தவறானது. இதே நிலையில் நீங்கள் இருந்தால், அதனை ஏற்றுக்கொள்வீர்களா? உதாரணத்திற்கு, இந்தியாவில் இந்துக்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது, அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். ஒரு இந்து சாது அல்லது சாமியார்,  உங்கள் முஹம்மது சொன்னதுபோலவே இந்துக்களுக்கு கட்டளையிட்டால்,  அது சரியானது என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இதே போல, மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லிம்களை நடத்தினால், அதனை ஏற்றுக்கொள்வீர்களா?

நம் இந்தியாவிலும், சுதந்திரத்திற்கு முன்பாக,  இந்துக்கள் இடையேயும் மேல் ஜாதிமக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று பாகுபாடு இருந்தது. இந்துக் கோயில்களில் சில பிரிவினர் வரக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. சாலையில் செல்லும் போது மேல் ஜாதி மக்களுக்கு மதிப்பு கொடுக்கும் படி கீழ்ஜாதி மக்கள் விலகிச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இப்படிப்பட்டவைகள் தவறானவை என்றும், இஸ்லாம் இப்படிப்பட்ட பாகுபாடு காட்டுவதில்லை என்றும் மேடை போட்டு பேசும் முஸ்லிம்களே! உங்கள் முஹம்மது சொன்னதும் இதைத் தானே! முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் "முஸ்லிம்கள்" என்பவர்கள் மேல் ஜாதி மக்கள், இதர மார்க்கத்தார்கள் "கீழ் ஜாதி" மக்களாவார்களா?  ஜாதிப்பிரிவினை பிரச்சனைகள், இந்து தர்மத்தில் இருந்தால் அது பாவம், இஸ்லாமில் இருந்தால் அது புண்ணியமா? அவர்களுக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா?

நாம் வாழும் இக்காலத்திலும் சில கிராமங்களில் இப்படிப்பட்ட ஜாதிவெறி செயல்கள் வெளிப்படும் போது, கொதித்து எழும் முஸ்லிம்கள், ஏன் உங்கள் முஹம்மது சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள்? இஸ்லாம் என்று வந்தால் மட்டும், உங்கள் கோபமும், எழுச்சியும் ஏன் அப்படியே அமைதியாக இருந்துவிடுகிறது?

நீங்கள் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி முஹம்மது சொன்னது ஜாதிவெறிச்செயலாகும். ஒரு சமுதாயத்தில் சகோதரர்களாக வாழும் மக்களுக்கு இடையில் விரிசலையும், ஏற்றத்தாழ்வுகளையும்  உண்டாக்கும் படி முஹம்மது போதனை செய்துள்ளார்.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 3


இந்த  ஹதீஸில், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழியை விடாதீர்கள் என்றுச் சொல்லப்பட்டதே தவிர, இந்துக்களுக்கு இல்லையே! ஏன் மேற்கண்ட ஹதீஸை இந்துக்களோடு சம்மந்தப்படுத்தி, இஸ்லாமை கேவலப்படுத்துகிறீர்கள்?

யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இப்படி கீழ்தரமாக முஸ்லிம்கள் நடந்துக் கொள்வது இஸ்லாமுக்கு கேவலமில்லையா? இந்துக்களிடம் நடந்துக் கொண்டால் தான் இஸ்லாமுக்கு கேவலமா?

இங்கு குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் குர்-ஆனின் படி "வேதம் அருளப்பட்டவர்கள்" ஆவார்கள். வேதம் அருளப்பட்டவர்களிடமே இஸ்லாம் இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ளுமானால், மற்றவர்களின் நிலை இதை விட அதிக கேடுள்ளதாக இருக்குமல்லவா?

எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை இதர குடிமக்களைப்போல சரி சமமாக நடத்தவேண்டும், அப்படி நடத்தாத இஸ்லாமிய அரசைப் பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள். 

யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாட்டில் ஏன் சாலைகளில் ஓரமாக நடந்துச் செல்லவேண்டும்? முஸ்லிம்கள் என்ன வானத்திலிருந்து இறங்கிவந்தவர்களா? ஒரு மனிதனை மனிதனாக மதிக்காமல், அவன் நம்பிக்கையை காரணம் காட்டி, அவனது மனதை புண்படுத்துவது எந்த வகையில் நியாயம்? 

நாம் மேலே கண்ட ஹதீஸில், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழி விடாதீர்கள் என்று முஹம்மது சொன்னதாக காண்கிறோம். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் விரிவுரைகளின் படி, முஸ்லிமல்லாத அனைவருக்கும் முஸ்லிம்கள் விசாலமான வழியை விடக்கூடாதாம்.  இதனை அடுத்த பாகத்தில் விவரமாக காணலாம்.

இஸ்லாமிய விரிவுரையாளர்கள், இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறார்கள்?

நாம் மேலே பார்த்த முஸ்லிம்  ஹதீஸின் விளக்கவுரையை பாருங்கள்.  

Chapter 138

Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative

866. Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (PBUH) said, "Do not greet the Jews and the Christians before they greet you; and when you meet any one of them on the road, force him to go to the narrowest part of it.'' [Muslim]. 

Commentary: This Hadith prohibits Muslims from greeting non-Muslims first. It also tells us that when the road is crowded, we should use the middle of the road and let the non-Muslims use its sides. This Hadith shows the dignity of Muslims and the disgrace and humiliation of the non-Muslims. (Riyad-us-Saliheen, compiled by Al-Imam Abu Zakariya Yahya bin Sharaf An-Nawawi Ad-Dimashqi, commentary by Hafiz Salahuddin Yusuf, revised by M.R. Murad [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, Lahore, First Edition: June 1999], Five. The Book of Greetings, Chapter 138: Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative, Volume 2, p. 711).
மூலம்: http://abdurrahman.org/2014/09/04/riyad-us-saliheen-imaam-nawawi-chapter-138/  and http://islamicstudies.info/hadith/riyad-us-saliheen/riyad.php?hadith=866&to=868

ரியாத் அஸ் ஸாலிஹீன் - விளக்கவுரை: இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.  மேலும்,  சாலையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தால், முஸ்லிம்களாகிய நாம் சாலையில் மத்தியில் செல்லவேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் சாலையில் ஓரங்களில் செல்லவேண்டும். இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை எடுத்துக் காட்டுகிறது. அதேபோல, முஸ்லிமல்லாதவர்கள் எவ்விதமாக அவமானம் அடையவேண்டும், மேலும் முஸ்லிம்களுக்கு முன்பாக எப்படி தாழ்தப்பட்டு போகவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  

முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடாதே:

"இஸ்லாம் கேள்வி பதில்கள்" (islamqa) என்ற தளத்தில் இதைப் பற்றி ஒரு முஸ்லிம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடாமல், அவர்கள் சுவரின் ஓரமாகச் செல்ல கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொல்வது, முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க தூண்டுமல்லவா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட பதிலைச் சொல்லியுள்ளார்கள். 

What it means is that just as you do not initiate the greeting of salaam, you should not make room for them. If they meet a group of you, do not split up to let them pass, rather continue on your way and leave them the narrow space if there is a narrow part of the road. This hadeeth is not meant to put people off Islam, rather it is a manifestation of the Muslim's pride and a sign that he does not humiliate himself for anyone except his Lord.

இதன் பொருள் என்னவென்றால்,  யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முதலாவது ஸலாம் சொல்லாதீர்கள், மேலும் அவர்களை சாலையில் சந்தித்தால், அவர்களுக்கு வழியை விடாதீர்கள் என்பதாகும். அவர்கள் உங்களை சாலையில் சந்திக்கும் போது, அவர்களுக்கு வழி கிடைக்கவேண்டும் என்பதற்காக, நீங்கள் (முஸ்லிம்கள்) தனியாக ஒதுங்கிக்கொண்டு அவர்களுக்கு வழியை விடாதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் வழியிலே நீங்கள் தொடர்ந்து சென்றுக்கொண்டே இருங்கள், அக்கம் பக்கத்தில் இடமிருந்தால், அவர்கள் அந்த நெருக்கமான வழியில் செல்லட்டும். இந்த ஹதீஸ் இஸ்லாம் பற்றி மக்கள் தவறாக நினைக்கவேண்டும் என்று சொல்வதாக இல்லை, அதற்கு பதிலாக, இது முஸ்லிம்களின் மேன்மையையும் கண்ணியத்தையும் வெளிக்காட்டக்கூடியதாக இருக்கிறது. அதாவது ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு தவிர வேறு நபர்களுக்கு முன்பாக தாழ்ந்து போகக்கூடாது என்பதைக் காட்டுகிறது. 

ஒரு கேவலமான விஷயத்தை எவ்வளவு நாசுக்காக சொல்லியுள்ளார் என்பதை கவனியுங்கள். ஒரு முஸ்லிமின் கண்ணியம், அவன் சாலையில் செல்லும் போது இதர மார்க்க மக்களுக்கு வழியை விடாமல் இருந்தால் கிடைத்துவிடுமாம். அதே நேரத்தில், முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு அதிகமாக இப்படிப்பட்ட அவமானங்களை சந்திக்கவேண்டி வரும் என்பதை பாருங்கள். மேற்கண்ட விதமாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது வெறும் பேச்சுக்காக அல்ல, உண்மையாகவே இதனை இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அனுதினமும் அனுபவிக்கிறார்கள்.  

சுருக்கமும் முடிவுரையும்:

தமிழ் முஸ்லிம்கள் மனிதாபமானத்தோடு சென்னையில் உதவி செய்தார்கள். ஆனால், முஸ்லிமல்லாதவர்களிடம் மனிதாபமானத்தோடு நடந்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. 

அ) இஸ்லாமிய நூல் "முஸ்லிம் ஹதீஸின்" படி, முஸ்லிம்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடக்கூடாது.

ஆ) முஹம்மதுவின் கட்டளையின் படி, முஸ்லிமல்லாதவர்கள் நெருக்கமான வழியில் செல்லும் படி முஸ்லிம்கள் அவர்களை கட்டாயப்படுத்தவேண்டும்.

இ) இஸ்லாமிய விரிவுரையாளர்களின் படி – இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, மற்ற மார்க்க மக்களைவிட முஸ்லிம்கள் உயர்ந்தவர்கள் என்பதை இது காட்டுகிறது. 

ஈ) இஸ்லாமிய விரிவுரையாளர்களின் படி - சாலையில் முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு வழியை விட்டால், அது அவர்கள் தாழ்ச்சி அடைந்துவிட்டதாக கருதப்படும். எனவே, முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு சாலையில் வழியை விடக்கூடாது. 

உ) ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு காட்டவேண்டிய குறைந்த பட்ச உதவியை கூட செய்யக்கூடாது என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது. 

இஸ்லாம் மேற்கண்ட விதமாக முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டு இருக்கும்போது, நம் தமிழ் முஸ்லிம்கள் எப்படி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதவிகள் செய்தனர்? முஸ்லிமல்லாதவர்களுக்கு சாலையில் வழியை விடக்கூடாது என்று முஹம்மது சொல்லியிருக்கும் போது, தமிழ் முஸ்லிம்கள் எப்படி இந்துக்களின் தெருக்களில் சாக்கடையில் நடந்துச் சென்று, பொருட்களை சுமந்துச் சென்று உதவி செய்தனர்? கிறிஸ்தவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது என்றும், அவர்களுக்கு வழியை விட்டு முஸ்லிம்கள் தாழ்ந்துவிடக்கூடாது என்றும் இஸ்லாம் கட்டளையிட்டு இருக்கும் போது, தமிழ் முஸ்லிம்கள் எப்படி கிறிஸ்தவர்களின் வீடு தேடிச் சென்று, உணவுகள், மருந்து பொருட்கள் மற்றும் இதர உதவிகள் செய்தனர்?

லாஜிக் எங்கேயோ இடிக்கிறதே!  தமிழ் முஸ்லிம்கள், இஸ்லாம் சொல்வதை நம்புவதில்லையா? அல்லது இஸ்லாமின் போதனை நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றுச் சொல்லி இஸ்லாமை புறக்கணித்துவிட்டார்களா? இஸ்லாம் சொல்வதைப்போல தமிழ் முஸ்லிம்கள் நடந்துக் கொண்டு இருந்திருந்தால், சென்னையில் இதர முஸ்லிம்களுக்கு மட்டுமே உதவி செய்திருக்கவேண்டும், இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்திருக்கக்கூடாது. ஆனால், தமிழ் முஸ்லிம்கள், தங்கள் உயிரை துச்சமாக நினைத்து அல்லவா அனைவருக்கும் உதவினார்கள்!

இக்கேள்விகளுக்கு நம் தமிழ் முஸ்லிம்கள் பதில் சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இஸ்லாம் சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், முஹம்மது சொன்னதை புறக்கணித்துவிட்டு, சென்னையில் உதவி புரிந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த முஸ்லிம்களை முஹம்மதுவும், அல்லாஹ்வும் மன்னிப்பார்களா? இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த கட்டுரை. . .

அடுத்த கட்டுரையில் பீஜே அவர்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வதைப் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதையும், நாம் மேலே பார்த்த முஸ்லிம் ஹதீஸ் பற்றி அவர் என்ன விளக்கம் கொடுத்துள்ளார் என்பதைப் பற்றியும் சுருக்கமாக காண்போம்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பாகம் 2 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

முன்னுரை:

இத்தொடர் கட்டுரைகளின் அறிமுகத்தை முதல் பாகத்தில் படித்துவிட்டு, இந்த இரண்டாம் தொடரை படிக்கவும். 

முதல் பாகத்தில் "தாடி, தலைமுடி, மீசை, வேட்டி மற்றும் செருப்பு" போன்ற அற்பமான விஷயங்களில் முஸ்லிம்கள் எப்படி முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளவேண்டும் என்று முஹம்மது கற்றுக்கொடுத்தார் என்பதை ஆய்வு செய்தோம்.

இந்த இரண்டாம் தொடரில் இன்னும் எந்தெந்த விஷயங்களில் முஸ்லிம்களின் மனதில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான விஷ வாயுவை இஸ்லாம் செலுத்தியுள்ளது என்பதைக் காண்போம். இந்த விவரங்களை முஸ்லிம்கள் படிப்பதினால் அவர்களது மனது  புண்படலாம், ஆனால் அதற்கு காரணம் இஸ்லாம் தான். நீங்கள் மேற்கொண்டு ஏதாவது உறுப்படியாக செய்யவேண்டுமென்று விரும்பினால், இந்த தொடர்களில் கொடுக்கப்படும் இஸ்லாமிய ஆதாரங்களை  ஆய்வு செய்து, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள். 

பாகம் 2

சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளை பார்க்கும் போது, "இந்துக்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் அதாவது முஸ்லிமல்லாதவர்களிடம்" மனித நேயத்தோடு நடந்துக் கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களுக்கு இஸ்லாம் போதிக்கிறது என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. 

முஸ்லிமல்லாதவர்களுக்கு உதவி செய்யும் படி இஸ்லாம் போதிக்கின்றது என்றுச் சொல்பவர்கள் அதற்கான ஆதாரங்களை குர்-ஆனிலிருந்து காட்டவேண்டும். ஆனால், இதற்கு எதிராக அனேக ஆதாரங்களை இஸ்லாமில் காணலாம். முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக் கொள்ளுங்கள் என்று முஹம்மது அனேக கட்டளைகளை கொடுத்துள்ளார். இக்கட்டுரையில் இதைப் பற்றிய இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லிமல்லாதவர்களிடம் காட்டும் வெறுப்புணர்வின் வெளிப்பாடு

முஸ்லிம்களே! முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலில் முகமன் (ஸலாம்) சொல்லாதீர்கள்

ஒருவர் இன்னொருவரைக் காணும் போது, ஹலோ அல்லது வணக்கம் என்றுச் சொல்வது சாதாரண விஷயம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை காணும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்"  என்றுச் சொல்வார்.   ஒரு முஸ்லிம், ஒரு இந்துவையோ, கிறிஸ்தவனையோ வழியில் காணும் போது,  எப்படி முகமன் (வணக்கம்) சொல்லவேண்டும்?  இதைப் பற்றி முஸ்லிம்களின்  வழிகாட்டி முஹம்மது என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376

மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது இரண்டு (அருமையான!) அறிவுரைகளை முஸ்லிம்களுக்கு கொடுத்துள்ளார்.  இவ்விரண்டு அறிவுரைகளும் மாற்று  மதத்தவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றன. இவ்விரண்டு அறிவுரைகளும் முஸ்லிம்களின் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடியவைகளாக உள்ளன. இக்கட்டுரையில் முதல் அறிவுரையைப் பற்றி ஆய்வு செய்வோம்.

குறிப்பு: யூதர்கள் முஹம்மதுவிற்கு ஸலாம் சொல்லும் போது, "உங்கள் மீது மரணமுண்டாகட்டும் – அஸ்ஸாமு அலைக்கும்" என்று சொல்வார்கள், அதற்கு முஹம்மதுவும் "உங்கள் மீதும்" என்றும் சொல்வார். பதிலுக்கு பதில் சரியாக அமைந்துவிடும். யாராவது இப்படி வாழ்த்து கூறினால், நீங்கள் இப்படியே சொல்லுங்கள் என்று அவர் கற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், இந்த தொடரில் நாம் ஆய்வு செய்யப்போவது இந்த விவரமல்ல, முதலாவது முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா இல்லையா என்பது தான்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலில் முகமன் கூறாதீர்கள் -  நல்ல மனிதர்களை கெடுக்க முயலும் இறைத்தூதர்:

ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் ஏற்கனவே தங்கள் நம்பிக்கைகளினால் பலவகையாக பிரிந்து கிடக்கிறார்கள்.  என் இறைவன் தான் பெரியவன், உன் இறைவன் அப்படி இல்லை, என் மதம் தான் சரியானது, உன் மதம் தவறானது என்று மக்கள் நினைத்துக் கொண்டு வாழுகிறார்கள். 

இந்த நிலையில் மக்கள் இருக்கும் போது, நீங்கள் மாற்று மதத்தவர்களுக்கு முதலில் வணக்கம் சொல்லாதீர்கள் என்று "முஹம்மது" கட்டளையிடுவது எவ்வளவு கீழ்தரமானது?  நண்பர்களும், உறவினர்களும் பல காரணங்களுக்காக சில காலம் பிரிந்து இருந்தாலும், இவர்களில் யாராவது ஒருவர் சுயமாக முன்வந்து, மற்றவருக்கு வணக்கம் சொல்லி, நலம் விசாரித்தால், பழைய பகையையெல்லாம் மறந்து மறுபடியும் நட்பு கொண்டு ஒற்றுமையாக வாழ்வதை நாம் அவ்வப்போது நிஜவாழ்க்கையில் காண்கிறோம்.  இதேயே முஹம்மது முஸ்லிம்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்,  அதாவது முஸ்லிம்களில் இருவர் மனஸ்தாபம் கொண்டு பிரிந்து இருந்தால், அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் அவர்களின் பிரிவு இருக்கக்கூடாது. இவர்களில் யார் அடுத்தவரை முதலில் சந்தித்து ஸலாம் கூறுகிறாரோ, அவர் தான் சிறந்தவர் என்று முஹம்மது முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் (பார்க்க ஸஹீஹ் புகாரி நூல் எண் 6077). இந்த கட்டளை முஸ்லிம்களுக்கு மட்டுமே, முஸ்லிமல்லாதவர்களுக்கு இல்லை, இதனை இஸ்லாமிய அறிஞர்கள் மறுத்தால் விளக்கம் தரவும். 

தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்ளும் முஸ்லிம்களின் நிரந்தர வழிகாட்டியாகிய முஹம்மது சொல்லும் அறிவுரையை நன்றாக கவனித்துப் பாருங்கள்.   

இப்படிப்பட்ட அறிவுரைகளை படிக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் மாற்று மத மக்களைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகும்?

  • எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் ஒன்றைச் சொன்னால், அது சரியாகத் தான் இருக்கும்.
  • முஹம்மது "ஆம்" என்றால் "ஆம்", அவர் "இல்லை" என்றால் "இல்லை" – இது தான் முஸ்லிம்களின் உயிர் மூச்சு.
  • முஸ்லிமல்லாதவர்கள் மீது முஹம்மதுவிற்கு எவ்வளவு வெறுப்புணர்வு இருந்தால், இப்படி முதலாவது நீங்கள் முகமன் சொல்லாதீர்கள் என்றுச் சொல்வார்?
  • இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏன் ஈவு இரக்கமில்லாமல், முஸ்லிமல்லாதவர்களை கொல்கிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட இஸ்லாமிய கட்டளைகளே காரணம் என்பதை புரிந்துக் கொள்ள முடிகின்றதா?
  • முதலாவது ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாதவனுக்கு வணக்கமோ, ஸலாமோ சொன்னால், அவனுக்கு என்ன குறைந்துவிடும்? அவன் வாயிலிருந்து முத்துக்கள் உதிர்ந்துவிடுமா? இதனால் அல்லாஹ்விற்கு என்ன தீமை நடந்துவிடும்? 
  • சக மனிதனுக்கு ஜாதி பார்க்காமல், "முதலாவது வாழ்த்துக்கள் சொல்வதற்கும்" தடைவிதிக்கும் இஸ்லாமை பின்பற்றும் அதே முஸ்லிம்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து சென்னையில் ஜாதி மதம் பார்க்காமல் எப்படி உதவி செய்தார்கள்? இது எப்படி சாத்தியம்?  இவர்கள் முஹம்மதுவையும் அவரது போதனைகளையும் புறக்கணித்தவர்களா?

இந்த வாழ்த்துதல் சொல்வதைப் பற்றி இதர இஸ்லாமிய விவரங்களை இப்போது காண்போம். படிக்கும் போது சிரிப்பு வந்துவிட்டால், சிரித்துவிடுங்கள், அதன் பிறகு இஸ்லாம் பற்றி சிந்தியுங்கள், நம் தமிழ் முஸ்லிம்களின் நிலைப்பற்றியும் சிந்தியுங்கள்.

1) என் வாழ்த்துதலை எனக்கு திருப்பி கொடுத்துவிடு:

ஆரம்ப கால முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை கவனியுங்கள். சிறு பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டால், 'நான் நேற்று கொடுத்த சாக்லெட் திரும்ப கொடுத்துவிடு' என்று கேட்பது போல் இருக்கிறது.

அப்துர்ரஹ்மான் கூறினார்: "இப்னு உமர் ஒரு கிறிஸ்தவரை கடந்துச் சென்றார். அந்த கிறிஸ்தவர் இப்னு உமருக்கு வாழ்த்து கூறினார், உடனே இப்னு உமரும் அவருக்கு திரும்ப வாழ்த்து கூறினார். அதன் பிறகு இப்னு உமருக்கு 'அந்த நபர் ஒரு கிறிஸ்தவர்' என்று அறிவிக்கப்பட்டபோது, உடனே இப்னு உமர் திரும்பச் சென்று அந்த கிறிஸ்தவரிடம் "என்னுடைய வாழ்த்துதலை திரும்ப கொடுத்துவிடு" என்று கேட்டார். (இமாம் புகாரியின் 'அல்-அதப் அல்-முஃப்ரத்' எண்: 1115)

521. When someone greets a Christian whom he does not recognise

1115. 'Abdu'r-Rahman said, "Ibn 'Umar passed by a Christian who greeted him and Ibn 'Umar returned the greeting He was told that the man was a Christian. When he learned that, he went back to him and said, 'Give me back my greeting.'" (Al-Adab Al-Mufrad - Imam Al-Bukhari (Rahimullaah) - Translation by Ustadah Aisha Bewley)

2) ஒரு கிறிஸ்தவனுக்கு எப்படி வாழ்த்து கூறுவது? சொல்லிய வாழ்த்தை மாற்றுவது ஏன்?

முஸ்லிம்களின் மனதில் எப்படிப்பட்ட விஷவாயு பரவியிருந்தது என்பதை எடுத்துக் காட்டும் இன்னொரு உதாரணம். ஆனால் நம் தமிழ் முஸ்லிம்களைப் பாருங்கள், எவ்வளவு மனித நேயத்தோடு நமக்கு உதவி செய்துள்ளார்கள்!  இந்த கீழ்கண்ட ஹதீஸில், ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்தவருக்கு வாழ்த்தை கூறுகிறார்,  அவர் கிறிஸ்தவர் என அறிந்து, தான் கூறிய வாழ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய வாழ்த்தைக் கூறினார்.

520. ஒரு திம்மி (கிறிஸ்தவனுக்கு) எப்படி வாழ்த்து கூறுவது? 

1112. "உக்பா இப்னு அமிர் அல் ஜுஹானி" ஒரு மனிதரைக் கடந்துச் சென்றார். ஒரு முஸ்லிமைப்போல தோற்றமளித்த இவர் உக்பாவிற்கு வாழ்த்து கூறினார். உடனே உக்பா மறுமொழியாக "உங்கள் மீதும் சமாதானம் உண்டாவதாக, இன்னும் அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாகட்டும்" என்று வாழ்த்து கூறி சென்றுவிட்டார்.  உக்பாவின் அடிமை "அவர் ஒரு கிறிஸ்தவர்" என்று உக்பாவிற்கு அறிவித்தார்.  உடனே உக்பா எழுந்து அந்த கிறிஸ்தவரை சந்திக்கும் வரை வந்த வழியே சென்றார். அவர் அந்த கிறிஸ்தவரை சந்தித்ததும் "அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது. எனவே உனக்கு கூறிய வாழ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டு, வேறு வகையான வாழ்த்தைக் கூறுகிறேன், "உங்களுக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளும், பிள்ளைச் செல்வங்களும், இதர செல்வங்களும் கொடுப்பானாக" என்றுச் சொன்னார்.

520. How to make supplication for a dhimmi

1112. 'Uqba ibn 'Amir al-Juhani passed by a man who looked like a Muslim who greeted him. 'Uqba answered him, saying, "And on you and the mercy of Allah and his blessings." His slave said to him, "He is a Christian." 'Uqba got up and followed him until he caught up to him. He said, "The mercy of Allah and His blessings are for the believers, but may Allah make your life long and give you much wealth and many children." (Al-Adab Al-Mufrad - Imam Al-Bukhari (Rahimullaah) - Translation by Ustadah Aisha Bewley)

மேற்கண்ட விவரம் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஏன் உக்பாவின் அடிமை "அவர் ஒரு கிறிஸ்தவர்" என்றுச் சொன்னார்? கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் பற்றிய வாழ்த்துச் சொல்லக்கூடாது என்று இந்த அடிமைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததா? அப்படியானால், இதனை முஹம்மது சொல்லாமல் எப்படி அவருக்கு தெரிந்திருக்கும்? அவர் கிறிஸ்தவர் என்று தெரிந்தவுடன், உக்பா விஷயத்தை (தன் தவறை) புரிந்துக்கொண்டு, உடனே திரும்பிச் சென்று வேறு வகையான வாழ்த்தைச் சொன்னதிலிருந்து, இஸ்லாம் எப்படிப்பட்ட எண்ணங்களை முஸ்லிம்களின் மனதில் விதைத்திருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளமுடிகின்றது! இஸ்லாமின் இறையியல் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக இருந்தால், எப்படி அவர்கள் அல்லாஹ்வை தெய்வமென்று அறிந்து அவரை தொழுதுக் கொள்ளமுடியும்? அல்லாஹ்வின் அருள் இல்லாமல், எப்படி கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கமுடியும்? ஏன் இப்படியெல்லாம் முஹம்மது போதனை செய்து முஸ்லிம்களின் மனதில் முஸ்லிமல்லாதவர்கள் பற்றி தீய எண்ணங்களை விதைத்திருக்கிறார்?

தற்கால தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள், "ஸலாம்" பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்?

அ) புறக்கணிக்கப்பட்ட சலாம்

புறக்கணிப்பட்ட சலாம் என்ற பெயரில் ஒரு கட்டுரை சுவனத்தென்றல் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது (அதன் தொடுப்பு).

இந்த கட்டுரையில் ஏன் முஸ்லிம்கள் ஸலாம் சொல்லவேண்டும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வது பற்றிய தலைப்பு வரும் போது, ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறி நழுவிவிட்டார். மேலும், நான் மேலே காட்டிய ஹதீஸ் பற்றி முச்சு விடவில்லை.

இக்கட்டுரையின் முன்னுரை இவ்விதமாக உள்ளது:

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

அடுத்தது. . . முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுவது பற்றி இவ்விதமாகச் சொல்லப்பட்டுள்ளது:

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும். 

இவ்விவரங்களை படிப்பவர்களுக்கு எழும் கேள்விகள்:

  • 14 நூற்றாண்டுகள் தாண்டியும், இன்னும் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா வேண்டாமா? என்ற ஆய்வு நடந்துக்கொண்டே இருக்கிறது! ஒரு சின்ன விஷயத்தில் கூட இன்னும் நீங்கள் ஒருமித்த கருத்துக்கு வரவில்லையா?
  • ஸஹீஹ் முஸ்லிம் எண் 4376ஐ பற்றி, ஏன் இக்கட்டுரையில் விவரிக்கவில்லை? 
  • குர்-ஆன் 4:86ம் வசனத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கத்திற்கு எதிராக, முஹம்மது கூறியுள்ளார் (முஸ்லிம் ஹதீஸில் எண் 4376). குர்-ஆன் சொல்வது தவறா அல்லது முஹம்மது சொல்வது தவறா? 

ஆ) பீஜே குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 159 - ஸலாம் கூறும் முறை:

பீஜே அவர்களின் குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 159ல், பீஜே அவர்கள் ஸலாம் பற்றி பல விவரங்களைக் கொடுத்துள்ளார். அதில் முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐ பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. 

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர்.

நம்முடைய கேள்வி என்னவென்றால், "முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது ஸலாம் சொல்லாதீர்கள்" என்று முஹம்மது "முஸ்லிம் ஹதீஸில்" சொல்லியுள்ளாரே, அதைப் பற்றி பீஜே அவர்கள் மூச்சுவிடவில்லையே ஏன்?  மாற்று மத சகோதரர்களிடம் சகோதரத்துவத்தை இஸ்லாம் வளர்க்கிறது என்று முஸ்லிம்கள் சொல்வது பொய் அல்லவா? சின்ன விஷயமாகிய ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்ளக்கூடாது என்று முஸ்லிம்களுக்கு முஹம்மது கட்டளையிடுவது  எவ்வளவு கீழ்தரமானது? 

இத்தொடரின் சுருக்கமும், சென்னையில் உதவி புரிந்த முஸ்லிம்களுக்கு கேள்விகளும்:

1) குர்-ஆன் 4:86, தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் என்று கட்டளையிடுகிறது. 

2) ஆனால் முஹம்மதுவோ, யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்க்கும் முதலாவது வாழ்த்துக்கள் சொல்லாதீர்கள் என்று கட்டளையிட்டார்(முஸ்லிம் எண் 4376).

3) ஆரம்ப கால முஸ்லிம்கள், சிறந்த வாழ்த்தை முஸ்லிமல்லாதவர்களுக்கு தவறுதலாக சொன்னாலும், உடனே அதனை திரும்ப பெற்றுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சில சமயங்களில் வாழ்த்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, வேறு வாழ்த்தைச் சொல்லியுள்ளார்கள். இவைகளை முஹம்மதுவின் மூலமாகவே இவர்கள் அறிந்திருப்பார்கள். இவைகள் சிறுபிள்ளைத் தனமான செயல்களாக காணப்படுகின்றது. 

4) குர்-ஆன் 4:86ம் வசனத்திற்கு எதிராக ஸஹீஹ் முஸ்லிம் 4376 உள்ளது. முஹம்மது எப்படி குர்-ஆன் 4:86க்கு எதிராக போதித்துள்ளார் என்பதை இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது, அதனை இங்கு படிக்கலாம்: குர்-ஆன் மற்றும் சுன்னாவின் படி இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது? 

5) இந்த இஸ்லாமிய ஆதாரங்கள் ஒரு புறமிருக்க, தமிழ் முஸ்லிம்கள் இவைகளை புறக்கணித்துவிட்டு, ஜாதி மதம் பேதமின்று உதவிகள் புரிந்துள்ளனர். 

6) இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழ் முஸ்லிம்கள் ஒரே அடியாக இஸ்லாமை புறக்கணித்துவிட்டார்களா? அல்லது இவ்விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்திருந்தும், அவைகளை மறைத்துவிட்டு, இஸ்லாமுக்கு வெளியுலகில் நல்லப்பெயர் கிடைக்கவேண்டுமென்று, நமக்கு உதவிகள் செய்தார்களா?

முடிவுரை:

முஸ்லிமல்லாத அனேகருக்கு மேற்கண்ட விவரங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்! முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் இப்படிப்பட்ட  இன்னொரு பக்கம் இருப்பதை அறியாதவர்கள் அனேகர். இஸ்லாமிய மூல நூல்களை நாம் படித்தால், இஸ்லாமின் அடுத்தபக்கத்தை சரியாக புரிந்துக் கொள்ளலாம்.

அடுத்த தொடர் கட்டுரையில், இதே முஸ்லிம் ஹதீஸ் 4376ல் உள்ள இரண்டாவது பாகத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.