குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு
குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
The Quran, Moses and the Tablets of Stone
இறைவனின் உண்மையான வேதமும், இஸ்ரவேல் மக்களின் மிகவும் பழமையான சரித்திர விவரங்களும் அடங்கிய பரிசுத்த பைபிளில், இஸ்ரவேல் மக்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக, கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை தேவன் மோசேவிற்கு கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். (யாத்திராகமம் 31:18)
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். (யாத்திராகமம் 34:29)
நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். (உபாகமம் 4:13)
இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். (உபாகமம் 5:22)
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது. (உபாகமம் 9:10)
ஆனால், இஸ்ரவேல் மக்களின் சரித்திரம் சொல்வதற்கு முரணாக குர்ஆன் சொல்கிறது. அதாவது, மோசே இரண்டிற்கும் அதிகமான பலகைகளை பெற்றுக்கொண்டார் என்று குர்ஆன் சொல்கிறது.
மேலும் நாம் அவருக்கு பலகைகளில் (al-alwahi), ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்" (என்று கூறினான்). (குர்ஆன் 7:145)
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை (al-alwaha) எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார். (குர்ஆன் 7:150)
மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை (al-alwaha) எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
குர்ஆனில் கற்பலகைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை "அல்வா" (alwah) என்பதாகும், இது பன்மையைக் குறிக்கும் வார்த்தையாகும். அரபி மொழியில் ஒருமை, பன்மை மட்டுமல்ல, 'இருமை'யும் உண்டு, அதாவது சரியாக இரண்டு எண்ணிக்கையை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். அரபி மொழியில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையை குறிக்க "பன்மை" பயன்படுத்தப்படுகிறது. குர்ஆனின் ஆசிரியர் இரண்டு கற்பலகைகள் என்று கூற விரும்பியிருந்தால், அவர் "அல் வாய்ஹ்னி' (al-lawhayni) என்று மேற்கண்ட மூன்று வசனங்களிலும் சொல்லியிருக்கவேண்டும், ஆனால், அவர் அப்படி கூறவில்லை.
அரபி மொழியில் பன்மை என்பது மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையை குறிக்கும் என்பதால், குர்ஆனின் மேற்கண்ட மூன்று வசனங்களின் படி, மோசே பெற்றுக்கொண்ட பலகைகள் குறைந்த பட்சம் மூன்று இருக்கும், அதிகபட்சமாக மூன்று கோடியாகவும் இருக்கலாம்! குர்ஆனின் வசனம் எத்தனை பலகைகளை மோசே பெற்றார் என்பதற்கு ஒரு வரயறையை வைக்காமல், பன்மையில் சொல்லியுள்ளது (மூன்று அல்லது அதற்கும் அதிகம்). இரண்டு பலகைகளுக்கும் அதிகம் என்றுச் சொல்லும்போது, அது தோராவிற்கு முரண்பட்ட எண்ணிக்கையை உடையதாக உள்ளது.
குர்ஆனின் சிறந்த விரிவுரையாளர்களில் ஒருவரான அல் ஜலாலைன் என்பவரின் தஃப்ஸீரின் படி, பலகைகளின் எண்ணிக்கை ஏழாகவோ அல்லது பத்தாகவோ இருக்கும் என்பதாகும். இப்படி விரிவுரை கூறினாலும், இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது, திட்டமாக இத்தனை பலகைகள் என்று சொல்லப்பட்டதல்ல. இருந்தபோதிலும், இந்த விரிவுரை எங்களின் வாதத்திற்கு சாதகமாக உள்ளது,அதாவது
(அ) அரபி வசனம் இரண்டு பலகைகளுக்கும் அதிகமான எண்ணிக்கையைப் பற்றி கூறுகிறது.
(ஆ) இதனால், இஸ்லாமியர்கள் தங்கள் யூகங்களை ஓடவிட்டு, இத்தனை பலகைகள் இருக்கலாம் என்று தோராயமாக சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதாகும்.
மேலும், இதே தஃப்ஸீர் (விரிவுரை), அந்த பலகைகள் சொர்க்கத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது, அல்லது அதில் முத்துக்கள் பதிக்கப்பட்டு இருந்தது என்று கூறுகிறது. இந்த விரிவுரை விவரமும், தோரா சொன்னதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது தோராவின் படி, அந்த பலகைகள் கற்களினால் ஆனது.
இப்போது முஸ்லிம்கள் இவ்விதமாக சொல்வார்கள், மோசே முதலாவது பெற்றுக்கொண்ட பலகைகளை உடைத்துவிட்டார், இரண்டாம் முறை பெற்றுக்கொண்ட பலகைகள் பற்றி தான் குர்ஆன் கூறுகிறது என்று சொல்வார்கள் (மொத்தம் 4 பலகைகள்). இஸ்லாமியர்களின் இந்த வாதமும் செல்லுபடியாகாது, ஏனென்றால், குர்ஆன் 7:150ம் வசனத்தில் வரும் விவரம் மோசே தேவனிடத்திலிருந்து முதல் முறை பெற்றுக்கொண்ட பலகைகளைப் பற்றி கூறுகிறது. இதன் பிறகு தான் இஸ்ரவேல் மக்கள் காளைக் கன்றை வணங்குவதைக் கண்டு அவைகளை மோசே உடைத்துப்போட்டார். (பார்க்கவும் 7:148-154).
ஆக, ஒரு முஸ்லிம் பைபிளின் பக்கங்களை படித்து இத்தனை பலகைகளைத்தான் இறைவன் மோசேவிற்கு கொடுத்தார் என்றுச் சொல்லமுடியாது, அப்படி பைபிளைப் படித்து எங்களிடம் எண்ணிக்கையைச் சொன்னாலும், பைபிள் குர்ஆனின் பிழையை சுட்டிக்காட்டி, குர்ஆனை பொய்யாக்குகிறது என்பதாக அமைந்துவிடும், அதாவது பைபிள் தான் உண்மை, குர்ஆன் ஒரு பொய்யான வேதம் என்பது நிருபனமாகிவிடும். சரியான எண்ணிக்கையை கொடுப்பதற்கு பைபிளை படித்தாலும் இஸ்லாமியர்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.
சாம் ஷமான்
ஆங்கில மூலம்: Another historical error in the Quran: The Quran, Moses and the Tablets of Stone
இதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக