ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 29 ஏப்ரல், 2009

இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?

Jesus or Muhammad: Who is God's True Seal of Prophethood?

 
சாம் ஷமான்
 
முஹம்மது, இறைவனின் நபித்துவ முத்திரையாகவும், அதனால் மனித குலத்திற்கு இறுதித் தூதராகவும் இருப்பதாகக் குர்‍ஆன் மேன்மை பாராட்டிக் கொள்கிறது.
 

"முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.." சூரா: 33:40

 
அனேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி மக்களை ஏமாற்றுவார்கள் என கர்த்தராகிய‌ இயேசு கூறியதைக் காரணம் காட்டி, இதனால், இயேசுவிற்குப் பின் மற்றுமொரு உண்மையான தீர்க்கதரிசி வந்தாகவேண்டுமென்று இஸ்லாமியர்கள் ஆணித்தரமாக வாதிடுகின்றனர். கிறிஸ்துவிற்குப் பின் எந்த‌ தீர்க்கதரிசிகளும் இல்லையெனில் இயேசு, கள்ளத்தீர்க்கதரிசிகளை வேறுபடுத்திக்காட்டும் வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு எந்தத் தீர்க்கதரிசியும் இல்லை எனச் இயேசு சுருக்கமாகவே சொல்லியிருக்கலாம் என இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். (பார்க்கவும்: மத்தேயு 7:15-20, 24:23-26)

இஸ்லாமியர்களின் இத்தகைய வாதத்தில் உள்ள பிழை என்னவெனில், இவ்வாதம் பரிசுத்த‌ பைபிளின் முழுப் பிண்ணனியையும் காண மறுப்பதே ஆகும். உதாரணமாக, தமது வார்த்தைகளையும் செயல்களையும் உறுதிப்படுத்திக் காட்ட தேவன் தமக்கு அவரின் சொந்த அடையாள முத்திரையை வழங்கியிருப்பதாக இயேசு சொல்லியிருக்கிறார்.
 
 
"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." யோவான் 6:27

"Do not work for food that spoils, but for food that endures to eternal life, which the Son of Man will give you. On him God the Father has placed HIS SEAL OF APPROVAL." John 6:27
 
 
இதே விவரம் வேறு இடங்களிலும் தேவனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. யோவான் 5:36-38

"நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்" யோவான் 8.:16-18

"பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." யோவான் 10: 36-38

"அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." யோவான் 14: 9-11
 
 
தேவன் கொடுத்த அங்கீகாரத்தில், இயேசு வலியுறுத்தியவைகளில் ஒன்று "கிறிஸ்து தான் இறுதித்தூதர் (Final Messanger) என்கின்ற உண்மையாகும்". இதன் முழு அர்த்தம் என்னவெனில், கர்த்தராகிய‌ இயேசு தான் தேவனின் அனைத்துக் காரியங்கள் குறித்த இறுதி மற்றும் ஒரே விளக்கம் என்பதேயாகும். (Part of Jesus' claims, which God has given his approval to, includes Christ's statement that he is the final messenger. This essentially means that the Lord Jesus is God's final and only perfect commentary in relation to the things pertaining to God:)
 
 
 
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்று போட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்." மாற்கு 12:1-8

 
தேவ‌ன் த‌ம‌து ஊழிய‌க்கார‌ராகிய‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளை அனுப்பின‌ பின்பு இறுதியில் த‌ம‌து ஒரே பேறான‌ குமார‌னை அனுப்பினார். இது எதைக் காட்டுகிற‌து என்றால், தாம் மக்களிடம் பேசும்படிக்கு‌ இறுதியில் சென்றவ‌ர் வெறும் இறைத்தூதுவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, தாம் தேவ‌னின் நேச‌ குமார‌னும் அனைத்துக்கும் வாரிசானவர் (அனைத்திற்கும் சொந்தக்காரர்) என‌ இயேசு புரிந்து கொண்டிருந்தார் என்ப‌தேயாகும். (ம‌த்தேயு 28:18; லூக்கா 10:22; யோவான் 5:17-31; 10:36; 13:3; 16:13-15; 17:10 ம‌ற்றும் எபிரேய‌ர் 1:2-3)

 
உண்மையில், பிதா தாமே "இயேசு தம் நேசகுமாரன்" என சாட்சியளிக்கின்றார்.

 
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 1:9-11

ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 9:2-7

கிறிஸ்து தேவகுமாரன் என்று தேவனே கொடுத்த‌ சாட்சியை முஹம்மது மறுப்பதினால், முஹம்மது, இறைவனின் தீர்க்கதரிசியோ அல்லது அவரின் முத்திரை பெற்றவரோ இல்லை என்பதனை அறிய‌ இது ஒன்றே போதுமானது.
 
 
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17-18

 
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ….சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். …இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளி 22:12-13,16,20

 
ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசு கிறிஸ்து ஆல்பாவும் ஒமேகாவுமாக‌வும், ஆர‌ம்ப‌மும் முடிவுமாக‌வும், முத‌லும் இறுதியுமாக‌வும் இருக்கிறார் என சொல்லியுள்ளார். ப‌டைப்பு ம‌ற்றும் அனைத்துக் கிரியைக‌ளின் முழுமைக்கும் இயேசுவே பிற‌ப்பிட‌ம் என்பதே இத‌ன் பொருள். கிறிஸ்து ஒருவ‌ரே அனைத்து ஆக்கங்களையும் தம் நோக்கத்தின்படியும் விருப்பத்தின்படியும் நடத்தி ஆளுகை செய்கின்ற‌வ‌ர்.

 
ப‌ழைய‌ ஏற்பாட்டின் பிண்ணனியின் படி தன்னை, "முத‌லும் முடிவுமான‌வ‌ர் - the First and the Last" எனக் குறிப்பிட்டது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஒரே மெய்த் தேவன் என்பதையே காட்டுகின்றது.
 
 
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். ஏசாயா 44:6

 
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே. ஏசாயா 48:12

 
ப‌டைப்பு ம‌ற்றும் அனைத்துக் கிரியைக‌ளின் முழுமைக்கும் இயேசுவே பிற‌ப்பிட‌ம் என்பதையும் கிறிஸ்துவே பிதாவுட‌னும் ப‌ரிசுத்த‌ ஆவியுட‌னும் இணைந்து ஒரே மெய்க் க‌ட‌வுளாக‌ இருக்கிறார் என்ப‌தையும் முஹம்மது ஏற்றுக் கொள்ள‌வில்லை. இத‌னால் முஹம்மது தேவ‌னின் முத்திரை அல்ல‌ என்றும் அவ‌ர் மெய்யான‌ தேவ‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ உண்மை இறைத்தூத‌ர் அல்ல‌ என்றும் அறிய‌லாம்.

 
ப‌ழைய‌ ம‌ற்றும் புதிய‌ ஏற்பாட்டில், தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்துவின் வ‌ருகையினால் அவைகளின் நோக்கங்களும், அவைகளின் நிறைவேறுதலும் முழுமை அடைகிறது என்று ஆணித்த‌ர‌மாகச் சொல்லப்படுகிறது.

 
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். எபிரெயர் 1:1-3

 
தீர்க்கதரிசிகளின் மூலமாக மனிதர்களிடம் பேசிய தேவன், தமது இறுதி வெளிப்பாடினைத் தமது குமாரன் மூலமாக நிறைவேற்றுகிறார். குமாரனும் தமது செய்தியினைத் தாம் நியமித்த மனிதர்களின் வழியாக வழங்குகின்றார்.
 
 
 
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். யோவான் 15:16

 
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:7-8

 
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்… அதற்குக் கர்த்தர் நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன். அப்போஸ்தலர் 9:1-6, 15-16

 
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

 
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுய ஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:12-18

 
அன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். I கொரிந்தியர் 7:25

ஒருவன் தன்னைத் தீர்க்தரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் . I கொரிந்தியர் 14:37-38

கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே…ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். I தெசலோனிக்கேயர் 4:2, 8

ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரெயர் 2:1-4

பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். II பேதுரு 3:1-2

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது….. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளி 1:1-3, 10-11
 
 
இவைகளைத் தங்கள் சுய விருப்பத்தின்படியல்லாமல், இந்த அப்போஸ்தலர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தினால் தங்களின் எஜமானனின் கட்டளைகளாக அவைகளைப் பதிவு செய்யவும் அறிவிக்கவும் முற்பட்டனர் என்பதையே இவ்வசனங்கள் நமக்கு உறுதி செய்கின்றன‌.

 
இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற அர்த்தத்தையும் நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. தானியேல் 9:20-26
 
 
 
இப்பகுதியில் காணப்படுபவைகளின்படி, காபிரியேல் தூதன், மேசியா வருமட்டும் அறுபத்தி ஒன்பது வாரங்கள் (ஏழு வாரமும் + அறுபத்திரண்டு வாரமும்) செல்லும் என்றும், அதன் பின்பு மேசியா வந்து சங்கரிக்கப்படுவார் ("cut off") என்றும், எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அதிகாரிகளால் அழிக்கப்படுமென்றும் தானியேலுக்கு அறிவிக்கிறார். இந்தக் கால கட்டத்தில் தரிசனமும் வெளிப்பாடும் நிறைவடையும்.

 
இந்த நிகழ்வுகள், இயேசுவின் முதலாம் வருகையின் போது அவர் கொடூரமாக சிலுவையில் அடிக்கப்பட்ட போதும் அதின் பின்பு எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அழிக்கப்பட்டபோதும் நிறைவேறின‌ (33-70 AD). இது, கிறிஸ்துவின் வருகைக்குப்பின் அவரால் நியமிக்கப் பெற்ற எந்த ஒரு தூதனும் வரப்போவதில்லை என்பதினைத் தெளிவாக வலியுறுத்துகிறது. கிறிஸ்துவுக்குப் பிறகு, தான் ஒரு தீர்க்கதரிசி என அறிக்கையிட்டுக் கொள்ளும் எவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மட்டுமே, கிறிஸ்துவும் அவரின் அப்போஸ்தலரும் போதித்த சுவிசேஷத்தினை உறுதி செய்யும் வகையில் தீர்க்கதரிசனம் சொல்லியாக வேண்டும்.

 
ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள். மத்தேயு 23:34
 
 
தீர்க்கதரிசிகளை அனுப்புவேன் என்று ஆண்டவராகிய இயேசு உரைக்கிறார். தேவன் ஒருவரே தீர்க்கதரிசிகளை அனுப்பவும் அவர்களை பலப்படுத்தவும் முடியும் என்பதினால் இயேசுவே தேவன் என்பதை இது நிலைநிறுத்துகிறது. மேலும், ஒரு தீர்க்கதரிசி, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலேயே பேச வேண்டும் என்பதினையும் இயேசுவின் மற்றும் அப்போஸ்தலரின் செய்தியையும் உறுதிப்படுத்துகிறது. மீண்டும்:

 
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:11-13

 
இயேசு தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் சுவிசேஷர்களையும் அனுப்புகிறவர் என்கின்ற கருத்தை இப்பகுதி மீண்டும் தெளிவாக்குகிறது. இத்தகைய தீர்க்கதரிசிகளில் சிலர்:

 
அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 11: 27-29

 
நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். அப்போஸ்தலர் 21:10-11

 
யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி; அப்போஸ்தலர் 15:32

 
இதன் பொருள் என்னவெனில், தேவன் அனுப்பியவர்களில் இயேசு ஒருவரே தேவன் நேரடியாக அனுப்பிய இறுதியானவர் என்பதே. அதின் பின்பு கிறிஸ்துவே ஏனைய தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் அனுப்புபவராக உள்ளார்.

 
நீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன் . யோவான் 17:18

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். யோவான் 20:21-23
 
 
கிறிஸ்து முன்னறிவித்தது இதோ:

இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற்கு 14:9

இதே கருத்து வேறொரு இடத்திலும் வலியுறுத்தப்படுகிறது:

 
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, வெளி 14:6


சுவிசேஷம் என்பது அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலத்திலும் இரட்சிப்பின் வழியே என்றும் இது உலகம் முழுவதிலும் அறிவிக்கப்படும் என்றும் இந்தப் பகுதி விளக்குகின்றது. இயேசுவால் அறிவிக்கபட்ட இந்த‌ சுவிசேஷத்திற்கு முரண்பட்ட எந்தவொரு செய்தியைக் கொண்டு வருபவரும் தேவனிடம் இருந்து வந்தவரல்ல. பவுல் அப்போஸ்தலரின் வார்த்தைகளில் சொல்வோமானால்:

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:6-9

முஹம்மதுவிட‌ம் பேசிய தேவ‌தூத‌ன் கிறிஸ்து அறிவித்த‌ சுவிசேஷ‌த்திற்கு முர‌ணான‌ செய்தியைக் கொண்டு வந்தான் என‌க் காண்ப‌தினால், இந்த‌த் தூத‌ன் தேவ‌னின் நித்திய‌ த‌ண்ட‌னைக்குப் பாத்திர‌ன் ஆகிறான். இத‌னால் இந்த‌ தேவ‌ தூத‌ன் காபிரியேல் அல்ல‌வென்றும், மாறாக‌ இவ‌ன் ச‌த்தானால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒரு போலி தேவ‌ தூத‌ன் என்றும் அறிகிறோம். இது ஒன்றும் ஆச்ச‌ரிய‌ம‌ல்ல‌; ஏனெனில், சாத்தான், ம‌க்க‌ளை மெய்யான இர‌ட்சிப்பின் செய்தியைத் த‌ழுவிக்கொள்வ‌தைத் த‌டுத்து அவ‌ர்க‌ளை ஏமாற்ற‌, ஒளியின் தூதனாக வேட‌மணிந்து வ‌ருவான் எனப் ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌ம் தெள்ள‌த் தெளிவாக‌க் கூறுகிற‌து:

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். II கொரிந்தியர் 11:13-15

இதன் காரணமாகவே, பரிசுத்த வேதாகமம், கள்ளத் தீர்க்கதரிசிகளை, உண்மையானவர்களிடமிருந்தும், பொய் சொல்லும் ஆவியினை தேவனின் பரிசுத்த ஆவியிலிருந்தும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள ஒரு சோதனை முறையைக் கொடுத்துள்ளது:

ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். I கொரிந்தியர் 12:3

பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள். நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். I யோவான் 2:18-24

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். I யோவான் 4:1-6
 
 
இந்த‌ வ‌சன‌ங்க‌ளின்ப‌டி, இயேசு, மாமிசத்தில் வந்த தேவ‌னின் நித்திய‌ குமார‌ன் என்பதைனையும் அவரது இறைத் தன்மையையும் ம‌றுத‌லிக்கும் எந்த‌வொரு ம‌னித‌னும் அல்லது ஆவியும் இறைவனால் உண்டான‌வை அல்ல‌ என‌ விள‌ங்குகின்ற‌து. இஸ்லாம், இந்த‌ அடிப்ப‌டை உண்மைக‌ளை ம‌றுத‌லிப்ப‌தால், அது, மெய்யான‌ இறைவனிடமிருந்து வந்திருக்க‌ முடியாது.

உண்மையில், தேவன் தம் குமாரனைக் குறித்து கொடுத்த‌ சாட்சியை ம‌றுத‌லிப்ப‌தால், இஸ்லாம் தேவ‌னைப் பொய்ய‌ராக்குகிற‌து.

நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். I யோவான் 5:9-12

ஆண்டவராகிய இயேசு தொடர்கிறார்:

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். யோவான் 15:26-27

இயேசு சொன்னதின்படி, பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு இயேசுவுக்குச் சாட்சியாய் இருக்கும். இயேசுவுக்கு சாட்சியாய் இல்லாதிருக்கிற எந்தவொரு தீர்க்கதரிசியையும் கள்ளத் தீர்க்கதரிசியாகவே கருத வேண்டும். உண்மையில், தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவை அறிவிப்பதாகவே இருக்க வேண்டும்.

அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். அப்போஸ்தலர் 10:42-43

அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். வெளி 19:10

தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவே, அதாவது அவரின் வரலாறே. ஏனெனில், அனைத்தும் அவராலே ஒன்றிணைக்க‌ப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றன‌.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். கொலோசெயர் 1:19-22
 
 
அனைத்திலும் கிறிஸ்துவே ம‌கிமைப்ப‌டும்ப‌டிக்கு மேன்மையுள்ளவராக இருக்கும் படிக்கு, தேவ‌ன் இதனை இவ்வித‌மாய் உருவாக்கினார்.

 
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். கொலோசெயர் 1:15-18

சுருங்கக் கூறின்:

 • தாமே மனுக்குலத்திற்கு தேவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என்பதை இயேசு அறிவிக்கிறார்.
 • கிறிஸ்துவின் வருகையுடன் தீர்க்கதரிசனங்களும் நோக்கமும் நிறைவடைகின்றன எனப் பழைய ஏற்பாடு உறுதிபடச் சொல்கிறது.
 • தீர்க்கதரிசனங்களின் மையக் கருத்து இயேசுவின் தெய்வத்துவம், அவர் தேவ குமாரனென்ற நிலைப்பாடு, அனைத்துப் படைப்புகளையும் ஆளுகை செய்யவல்ல‌ அவரது அதிகாரம் ஆகியன குறித்த சாட்சியே.
 • சுவிசேஷங்களின் செய்தி, உலகளாவியதும் அனைத்து மனிதர்க்கும் அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தும் வண்ணமாக‌ இரட்சிப்பின் ஒரே வழியாயும் இருக்கிறது.
 • கிறிஸ்துவுக்குப் பின் வரும் எந்தவொரு தீர்க்கதரிசியும் அவர் பிரசங்கித்து, புதிய ஏற்பாட்டில் பதிவிடப்பெற்ற நற்செய்தியின்படியே இயேசுவின் பெயரால் பேசவேண்டும்.

 
மேலே க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ளின்ப‌டி, முஹம்மது ஒரு உண்மையான‌ தீர்க்க‌த‌ரிசியோ அல்ல‌து தேவ‌னின் ந‌பித்துவ‌ முத்திரை பெற‌ப்ப‌ட்ட‌வ‌ரோ அல்ல. தேவனின் ஒரேபேறான குமாரனும் மகிமையும் மகத்துவமுமானவருமாகிய இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசங்களின் அடிப்படையையும் மையக் கருத்தையும் முஹம்மது மறுதலிக்கிறார். இவ்வாறு அவர் பேசுவதினால், அவர் பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தும் மெய்யான தேவனின் (Yahweh Elohim) நபி அல்ல என்று காட்டிக்கொள்கிறார்.
 
 
இணைப்பு

 
தேற்றரவாளனாக முஹம்மது

 
MUHAMMAD AS THE PARACLETE
 
 
முஹம்மது வரப்போவதை இயேசு முன்னறிவித்ததாகக் காட்ட சில முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு அவர்கள் பெரும்பாலும் வேறொரு தேற்றரவாளனை (கிரேக்கத்தில் Paraclete) அனுப்புவது குறித்த வாக்குத்தத்தத்தைத் தங்கள் நபி குறித்த முன்னறிவிப்பாக மேற்கோள் காட்டுகிறார்கள். (யோவான் 14:16-17, 26; 15:26; 16:7-15)

 
யோவான் 14:26 ல், ஆண்டவராகிய இயேசு, பரிசுத்த ஆவியானவரே அந்தத் தேற்றரவாளன் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், முஸ்லிம்கள் தேற்றரவாளன் பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது என நிரூபிக்க யோவான் 16:7 ஐக் காட்டுகிறார்கள்.

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7

 
தேற்றரவாளன் வர வேண்டுமென்றால், தான் செல்ல் வேண்டும் என இயேசு தெளிவாக்குகிறார். கிறிஸ்து செல்லவில்லையெனின், தேற்றரவாளன் வரமாட்டார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஊழியக் காலத்திலேயே இருந்ததினால், தேற்றரவாளன் எனக் குறிப்பிட்டது அவரை அல்ல எனக் கொள்ளலாம் , எனவே இது கிறிஸ்து சென்ற பின்பு சுமார் அறுனூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த முஹம்மதுவைத் தான் குறிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். (மத்தேயு 3:16-17)

 
முஸ்லீம்களின் இத்த‌கைய விளக்கத்தில் உள்ள‌ பிர‌ச்சனை என்ன‌வெனில், இயேசு எவ்வாறான‌ சூழ்நிலையில் இவ்வாறு கூறினார் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை. உதார‌ண‌மாக‌, தேற்றர‌வாள‌ன் பிர‌ச‌ன்ன‌மாக‌வில்லை என‌ இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக, எதிர்காலத்தில் தேற்றரவாளன் வெளிப்படும் விதமாக இப்பொது அவர் வெளிப்படவில்லை என்பதைச் சொன்னார். (Jesus wasn't claiming that the Comforter was not already present, but that the Comforter would not be present in the manner that Jesus had described earlier). இந்தக் கருத்தின் சூழலில்‌ இயேசுவின் வார்த்தைக‌ளைப் பாருங்கள்:
 
 
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:16-17

 
தேற்றரவாளன் ஏற்கனவே சீஷர்களுடன் இயேசுவைப் பின் பற்றியவர்களுடன் பிரசன்னமாய் இருந்தார் எனவும் அவர்கள் அவரை அறிவார்கள் எனவும் ஆண்டவர் தெளிவாக வெளிப்படுத்துகிறார். இதில் வித்தியாசம் என்னவெனில், தேற்றரவாளன் சீஷர்களிடம் பிரசன்னமாய் இருந்த போதிலும், இயேசு பரம் ஏறி மகிமை அடையும் வரையிலும் அவர்களின் உள்ளங்களில் வலுப்பெற்று அவர்களை பலப்படுத்தவில்லை என்பதே. (The Lord clearly states that the Comforter was already present with the disciples and that his followers knew him. The difference is that even though the Comforter was present with the disciples he would not be able to indwell and empower them until Jesus ascended into heavenly glory.)
 
 
இந்த நோக்கில் தான் யோவான் தமது சுவிசேஷத்தில் இவ்வாறாய் குறிப்பிடுகிறார்:

 
பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். யோவான் 1:32

 
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

 
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. யோவான் 7:37-39

 
எனவே, யோவான் 16:7 ஐ அதின் சமீபத்திய மற்றும் விரிந்த சூழலில் ஆராய்வோமானால், தேற்றர‌வாளன் எனக் குறிப்பிடப்படுவது தேவனின் பரிசுத்த ஆவியையே என்பது விளங்கும். அது முஹம்மதுவைக் குறிக்கவில்லை.

மேலும், முஹம்மதுவை தேற்றர‌வாளனாய்ப் பார்க்கும் கண்ணோட்டத்தில் உள்ள கூடுதல் சிக்கல்களைக் கீழே காணுங்கள்:

 • யோவான் 14:17ன் படி, தேற்றர‌வாளன், ஒரே சமய‌த்தில் எல்லா சீஷர்களிலும் வாசம் செய்திருக்க வேண்டும். இது அவ்வாறாயின், அவர் ஒரு பொருளாகவோ மனிதனாகவோ அல்லாமல் ஒரு ஆவியாகத் தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருளோ மனிதனோ எல்லோரிலும் ஒரே சமயத்தில் வாசம் செய்வ‌து இயலாத காரியம், பல உருவில் வாழக்கூடிய‌ மனுஷர்களிருந்தால் கூட அவ்வாறு வாசம் செய்ய‌ முடியாது. எனவே தேற்றர‌வாளன் என்பவர் அனைத்திலும் வியாபித்து இருப்பவர் எனப் பொருள்படுகிறது (Comforter is omnipresent). இறைவன் தான் அவ்வாறு இருக்க முடியும் என்பதினால் தேற்றர‌வாளன் கடவுளாகத் தான் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம், முஹம்மதுவைக் கடவுளாகக் கருதாத பட்சத்தில், இத்தகைய கண்ணோட்டத்திற்கு அடிப்படையே இல்லை.
 • தேற்றர‌வாளன் என்பவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வண்ணமாய், அவருக்கு உரிய மகிமையை அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்.

 
 
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். யோவான் 16:13-15

 
பிதாவுக்கு உரியவைகள் அனைத்தும் தம்முடையவைகள் என இயேசு உரிமை பாராட்டுகிறார். இது அவரை அனைத்துக்கும் வாரிசானவர் எனக்காட்டுகிறது. எனினும், குர்‍ஆன் அல்லாஹ்வை அனைத்துக்கும் வாரிசாக இனம் காட்டுகிறது.
 
 
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். சூரா: 15:23

 
நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள். சூரா: 19:40
 
 
இந்தக் கருத்துக்களை அலசும் போது, நாம் இயற்கையாகவே பெறும் முடிவு "முஹம்மதுவின் கடவுளாகிய அல்லாஹ், இயேசுவே!". கீழ்வரும் தத்துவ ரீதியான வாதத்தைப் பாருங்கள்!
 1. முஹம்மதுவே தேற்றர‌வாளன்
 2. தேற்றர‌வாளன் என்பவர் இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும்
 3. அனைத்துப் பொருட்களும் கிறிஸ்துவுக்கே சொந்தம்
 4. முஹம்மது அல்லாஹ்வை மகிமைப்படுத்தினார்
 5. அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வுக்கே சொந்தம்
 6. எனவே, இயேசு தான் அல்லாஹ்!
 
 
ஆங்கிலத்தில்
 1. Muhammad is the Comforter
 2. The Comforter was to glorify Jesus
 3. All things belong to Christ
 4. Muhammad glorified Allah
 5. All things belong to Allah
 6. Therefore Jesus is Allah!
 
 
எந்த‌ முஸ்லிம் தான் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளுவார்? இத்த‌கைய‌ ஒரு வாத‌த்தை எந்த‌ ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள‌மாட்டார் என்கின்ற‌ உண்மையே, இயேசு முன்ன‌றிவித்த‌ தேற்றர‌வாள‌ன் "முஹம்மது" அல்ல‌ என்கின்ற‌ வாத‌த்தை வ‌லுவுள்ள‌தாக்குகிற‌து.

 
உயிர்த்தெழுந்த‌ ந‌ம்முடைய‌ ஆண்ட‌வ‌ரும் மீட்ப‌ருமாகிய‌ இயேசு கிறிஸ்துவின் ப‌ணியில் சதாகாலங்களிலும், ஆமென். ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசுவே, வாரும். உம்மை எப்பொழுதும் நாங்க‌ள் நேசிக்கிறோம்.
 
 

பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?

பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?

 
நான் அடிக்கடி இது போன்ற ஒரு கேள்வியை எதிர்கொள்வதுண்டு:
 
"சமீபத்தில் நான் கலைக்களஞ்சியத்தில் தீர்க்கதரிசிகள் பற்றி யூத-கிறிஸ்தவர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதைக் கண்டு அதிர்ந்து போனேன். தீர்க்கதரிசிகள் பெரும் பாவிகளாகப் பார்க்கப்படுகின்றனர். நான் கண்டவற்றுள் சில விவரங்களை இங்கே காணலாம்:

லோத்: அவரது மகள்கள் அவரை மது அருந்தச்செய்து, அவருடன் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள்.

ஆரோன்: மோசே விலகிச்சென்ற பின் ஆரோன் மக்கள் வழிபட "தங்கக் கன்றை" செய்தார். இது ஷிர்க் ஆகும் (அல்லாஹ்விற்கு இணைவைத்தல் - மிகப்பெரிய பாவமாகும்). எப்படி ஒரு தீர்க்கதரிசி இப்படிப்பட்ட‌ மிகப்பெரிய அப்பாவத்தைச் செய்ய இயலும்?

நோவா: பெருவெள்ளத்திற்குப் பின் திராட்சை ரச‌ மதுவைக் கண்டறிந்து, குடிகாரனானார்.

தாவீது: அவர்கள் தாவீது வேசித்தனத்தின் மகன் என்று கூறுகிறார்கள். ஒரு தீர்க்கதரிசி பிறப்பிலிருந்தே பரிசுத்தமாக இருக்கவேண்டும்."
 
மேற்கண்ட விவரங்களை எந்த கலைக்களஞ்சியத்திலிருந்து (encyclopaedia) நம் இஸ்லாமிய‌ நண்பர் படித்தாரென்று தெரியவில்லை. அவற்றுள் சில சரியானவை மற்றும் சில விவரங்கள் தவறானவையாகும். எடுத்துக்காட்டாக தாவீது வேசித்தனதின் மகன் என்று பைபிளில் எங்கும் கூறவில்லை. நோவா ஒருமுறை குடித்தார் என பைபிளில் உள்ளது. அவர் தொடர்ந்து குடித்துக்கொண்டு இருந்த ஒரு "குடிக்காரர்" என்று பைபிளில் எங்கும் கூறப்படவில்லை.

நாம் இக்கதைகளை விரிவாக பார்க்க முடியும் ஆனால், இந்த இஸ்லாமியர் சொல்லவரும் முக்கியமான கருத்து வேறு ஒன்று உள்ளது, அது கீழ்கண்ட வாக்கியத்தில் பொதிந்துள்ளது.
 
"தீர்க்கதரிசிகள் பாவம் செய்வதில்லை. அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் அல்லாஹ்வினால் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்."
 
இதை சிந்தித்துப் பாருங்கள்: நீங்களே செய்யும் தவறை, பிறரைச் "செய்யாதே" என எப்படி கூற இயலும்?

Think of this: how can you tell someone not to do something if you do it yourself?
 
 
இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிக்கல் கிடையாது என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.

முஹம்மது தன்னைப் பின்பற்றுவோர் 4க்கு மேற்பட்ட மனைவிகள் வைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.

அவருக்கோ குறைந்தபட்சம் 11 மனைவிகள் இருந்தனர். அவர் மரிக்கும் போது 9 மனைவிகளை விட்டுச் சென்றார்.

இருந்தாலும் அவரைப் பின்பற்றுவோர் அவரது கட்டளையை மதித்து நான்கு மனைவிகள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இது எப்படி சாத்தியமாகும்?

இது ஒரு பிரச்சனையே அல்ல‌ என்று நீங்கள் கூறுவீர்கள் என எனக்குத் தெரியும்.

 
பின்பு ஏன் பாவங்கள் செய்யும் தீர்க்கதரிசிகள் மக்களுக்கு கடவுளின் உண்மையான கட்டளைகளை போதிக்க முடியாது? சில நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை, உண்மையை போதிக்க என்ன தடை? அவர்கள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது வெளிவேடமே! அது நம்பகத் தன்மையை உடைக்கிறது. ஆனால், இவர்கள் தவறுகள் செய்யும் போது கடிந்துக்கொள்ளப்பட்டு மனந்திரும்பி திருந்தி வாழ்வார்களானால், இப்படிப்பட்டவர்கள் இன்னும் சத்தியத்தை போதிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் காண்கிறேன் மற்றும் இவர்கள் சொல்வதை நாம் உன்னிப்பாக கவனித்து பின்பற்றலாம். அவர்கள் போதனை செல்லும். தான் செய்த பாவங்களை விட்டுவிட்டு, அப்பாவங்களை அறிக்கையிட்டு, அதை மீண்டும் செய்யாமல் போராடும் மனிதர்கள் என்னை மிகவும் கவர்கிறவர்களாய் உள்ளனர். அவர்கள் போதனைகளை என் மனம் ஏற்க மறுப்பதில்லை. அவர்களின் சாட்சி, தேவன் இத்தகைய‌ வழுவும் மனிதர்களை பழுதற்றவர்களாய் மாற்றும் போது நான் என் தவறுகளை உணர்ந்து அவைகளை விட்டுவிடும் போது என்னையும் மாற்றுவார் என்னும் நம்பிக்கையைத் தருகிறது. பைபிளில் உள்ள தீர்க்கதரிசிகள் என்னைப் போன்ற மனிதர்களே என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும் இறைவன் முன் ஒரு வாய்ப்பு மற்றும் நம்பிக்கை உண்டு என உணர்கிறேன்.

முஸ்லிம்களுக்கு வாழ்நாள் முழுவதும் போதிக்கப்படும் கருத்துக்களால், இந்த விவரங்களை புரிந்துக்கொள்வது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்பதை நான் அறிவேன். இஸ்லாம் பைபிளைக் காட்டிலும் வேறுபட்டது. அந்தந்த மார்க்கங்களை அவற்றின் சொற்களால் புரிந்துகொள்வதே சரியானதாகும். உண்மையைக் கூறுவதில் எந்த இழிவும் இல்லை. பைபிள் ஒரு பாரபட்சமற்ற சத்திய நூல் ஆகும். அதன் கதாநாயகர்களின் பாவங்களைக்கூட வெளிப்படையாகக் கூறுகிறது. பைபிளை நான் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. என்னிடத்தில் பைபிள் எதையும் மறைப்பதில்லை. நன்மை மற்றும் தீமை இவைகளின் மத்தியில் தேவனின் கிருபையே நமக்கு துணையாக இருக்கிறது.
 
ஆங்கில மூலம்: Is the Bible insulting the prophets?இதர கேள்வி பதில்களை படிக்கவும்

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

 


கேள்வி:

இதோ இங்கு என் கேள்வியை முன்வைக்கிறேன், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். யூதாஸும் அவருடைய‌ செயல்களும் என்னதான் தீயதாகக் காணப்பட்டாலும், கிறிஸ்தவம் தோன்ற தவிற்கமுடியாத காரணி இல்லையா? யூதாஸ் இல்லை என்றால், அதிகாரிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் கேவலமான‌ செயலை யார் செய்திருப்பார்? என்னைப் பொருத்தவரை கிறிஸ்தவம் முழுமையடைய யாராவது இதனைச் செய்திறுக்க வேண்டும். யூதாஸ் இந்த 'கடமையை' செய்ய முன்விதிக்கப்பட்டிருந்தாரா? அவர் காட்டிக் கொடுக்காதிருந்தால் எப்படி கிறிஸ்தவம் உருபெற்றிருக்கும்? நீங்கள் சொல்கிறபடி இயேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பாரா?
 
 
பதில்:

இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டது யூத மத அமைப்பே ஆகும். இயேசுவின் ஒரு சீடரே காட்டிக்கொடுக்க முன்வரும் போது அவர்கள் அதை சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால் யூதாஸ் முன்வராதிருந்திருந்தால் அவர்கள் வேறு வகையில் இயேசுவை ஒழிக்கத் திட்டமிட்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன். சுவிஷேத்தில் பல இடங்களில் யூதாஸ் காட்டிக் கொடுக்கும் முன்பே அவர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டமிடுவதைக் காணலாம்.


நீங்கள், ஒரு முஸ்லிமாக இதே போல இருக்கும் மற்றும் இதை விட‌ இன்னும் சிக்கலான விஷயமான "குர்‍ஆன் சூரா அபூ லஹப்" பற்றிய பிரச்சனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? குர்‍ஆன் படைக்கப்படாத நித்தியமான ஒன்று என்றும், அது முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்? அபூ லஹப் பிறக்கும் முன்பே அவரை நித்திய கண்டனத்திற்கு/தண்டனைக்கு உள்ளாவதாக இந்த சூரா குறிப்பிடுகிறதே! அபூ லஹப் இதில் மாறுபட்டு நடக்க வாய்ப்பிருந்ததா? அவர் நித்திய கண்டனத்திற்கு முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

இது விளையாட்டல்ல. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். முன்விதிக்கப்படுதல் (Predestination) ஒரு கடினமான இறையியல் பிரச்சனையாகும். அது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இதர ஒரிறைக்கொள்கை உள்ள மதங்களுக்கும் பொருந்தும். எவ்வாறு இறைவன் அனைத்தையும் கட்டுப்படுதுபவராக இருந்தும், அதே சமயம் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் இருக்க முடியும்? மிகவும் உயரிய தேவன் இதைச் செய்வாரா? இறைவனின் விருப்பத்திற்கு எதிராக மனிதர்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் எப்படி சர்வ வல்லவராக (எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக) இருக்கமுடியும்? அல்லது மனிதர்கள் தவறுகள் செய்வது இறைவனின் சித்தமானால், பின் ஏன் அவர் மனிதர்களை தண்டிக்கிறார்?

இதைக்குறித்து நல்ல ஆழமான இறையியல் புத்தகங்கள் உள்ளன. இந்த கேள்விக்கு சில வரிகளில் பதிலளிக்க முடியாது. நான் இதை முழுமையாகப் புரிந்து கொண்டதாக‌ காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இந்த பதில் ஒரு முழுமையான பதிலாக இல்லாமலிருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இது ஒரு நேர்மையான பதிலாகும். மற்றும் இது கிறிஸ்தவத்தின் பிரச்சனை அல்ல, இது ஒரு பொதுவான இறையியல் தத்துவரீதியான பிரச்சனையாகும்.

ஆங்கில மூலம்: Was Judas predestined to do evil?

புதன், 15 ஏப்ரல், 2009

இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு

இயேசுவா முஹம்மதுவா?உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
ஆசிரியர்: சைலஸ்

முன்னுரை


கிறிஸ்துவ‌த்தை இயேசுவும் இஸ்லாமை முஹம்மதுவும் ஸ்தாபித்தார்க‌ள். இவ்விர‌ண்டும் முறையே 180 கோடி ம‌ற்றும் 110 கோடி உறுப்பின‌ர்க‌ளைக் கொண்ட‌ இரு மாபெரும் ம‌த‌ங்க‌ளாகும். என‌வே சந்தேக‌மின்றி இவ்விருவ‌ரும் மனிதர் மத்தியில் மிக வ‌ல்ல‌மையானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளாக‌ இவ‌ர்க‌ள் ம‌னித‌ வாழ்க்கைக்காக பல கோட்பாடுகளை முன் வைத்துள்ள‌ன‌ர்.


இவ்விரு மார்க்கங்களிலும் பல விஷயங்கள் பொதுவாக உள்ளன. ஆனால், ஏனைய காரியங்களில் முற்றிலும் வேறுபடுகின்றன. இவைகளை ஸ்தாபித்தவர்களின் குணாதிசயங்கள் எவ்விதமாய் உள்ளன? அவர்களின் ஒப்பீடுகள் எவ்வண்ணம் உள்ளன? இயேசுவைப் பற்றி குர்‍ஆனும் பைபிளும் சொல்வது என்ன? அவர்களின் போதனைகளும் செய்கைகளும் அவர்களைப் பின்பற்றுவோரை எவ்விதம் நடக்கத் தூண்டுகின்றன? இந்தக் கட்டுரை அவர்களின் சில போதனைகளையும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு அவைகளின் வேறுபாடுகளை ஆராய்ந்து இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.

குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்திய பைபிள் வசனங்கள் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட தமிழ் பைபிளாகும்[1]. குர்‍ஆன் தமிழாக்கம் ஜான் டிரஸ்ட் வெளியிட்ட மொழியாக்கமாகும்[2]. ஹதீஸ்களாகிய புகாரி[3], முஸ்லீம்[4] போன்றவைகளிலிருந்தும், இபின் இஷாக்கின் "சீரத் ரசூலுல்லாஹ்[5]" மற்றும் தபரியின் சரித்திரத்திலிருந்தும்[6], சுனன் அபூ தாவுத்[7] போன்றவைகளிலிருந்தும் மேற்கோள்கள் கொடுத்துள்ளேன். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல் பற்றிய விவரங்கள் உள்ளடக்கிய ஹதீஸ்களாகிய புகாரி மற்றும் முஸ்லீமை இஸ்லாமிய அறிஞர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக கருதுகிறார்கள். அதே போல, இபின் இஷாக்கின் "சீரத் ரசூலுல்லாஹ் - முஹம்மதுவின் வாழ்க்கை சரிதை" மற்றும் தபரியின் "சரித்திரம்" போன்றவைகள் இஸ்லாமிய சமுதாயத்தினால் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது.

அவர்களின் இறுதி வார்த்தைகளில் சில:


இயேசு: தாம் காட்டிக் கொடுக்கப்பட்டு தக்க காரணமின்றி மரண தண்டன வழ‌ங்கப்பெற்று கல்வாரிச் சிலுவையில் மரணமடையும் போது அவ‌ர் "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23:34) என‌க் கூறினார்.


முஹம்மது: நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது ".....இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!" எனக் கூறினார்…" புகாரி, (பாகம் 1, அத்தியாயம் 8, எண் 435)


[பல வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களால் கொலைசெய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு யூதப் பெண்மணியால் முஹம்மதுவிற்கு விஷம் வைக்கப்பட்டது, அந்த விஷ‌ம் சிறிது சிறிதாகத் தன் வேலையைச் செய்தது. தமது மனைவி ஆயிஷாவின் மடியில் அவர் உயிரை விடும் போது அவர் இவ்விதம் கூறினார்].


விளக்கம்


இவ்விருவ‌ரின் வாழ்க்கையை நான் ஆராய்ந்து பார்க்கும் போது அவ‌ர்க‌ளின் குணாதிச‌ய‌ங்க‌ளில் சில உறுதியான‌ வித்தியாசங்களைக் காண்கிறேன். அவ‌ர்க‌ளின் இறுதி நிலைப்பாட்டினை எடுத்துண‌ர்த்தும் ம‌ர‌ண‌ வாக்குமூல‌ம் இது தான். அதில் கிறிஸ்து த‌ம‌து ப‌கைவ‌ர்க‌ளை ம‌ன்னிக்கும்ப‌டி தேவ‌னிட‌ம் வேண்டிக்கொள்கிறார், ஆனால் முஹம்மதுவோ அவரது நபித்துவத்தினை நிராக‌ரித்தோர் மீது க‌ச‌ப்பான‌ சாப‌ங்க‌ளை உச்ச‌ரிக்கின்றார். முஹம்மது, தாம் சாகும்போது அல்லாஹ்விடம் கிறிஸ்துவ‌ர்க‌ளையும் யூத‌ர்க‌ளையும் ந‌ல்வ‌ழியில் ந‌ட‌த்த‌ வேண்டிக் கொண்டிருந்தால் அது மிக‌வும் பொருத்த‌மான‌தாய் இருந்திருக்கும‌ல்ல‌வோ?

அடிமைத்தனம்


இயேசு அடிமைகள் யாரையும் வைத்திருக்கவில்லை. அவர், பிறர் நமக்கு என்ன செய்யவேண்டும் என நாம் விரும்புகிறோமோ அவைகளையே பிறருக்குச் செய்ய வேண்டும் எனப் போதித்தார். அவரிடம் அடிமைகள் இல்லை. எனவே அவரது போதனைகளின்படி அவர் ஒருபோதும் அடிமைகளை வைத்திருக்க மாட்டார் என்பது வெளிப்படை. அவர் மனிதர்களை அடிமைப்படுத்தாமல் அவர்களை விடுவித்தார். ஒருவரும் அடிமைத்தனத்தை விரும்புவதில்லை.


1 தீமத்தேயு 1: 8-10 வசனங்களில் பவுல் இவ்வண்ணமாய்க் கூறுகிறர்:


"ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண் புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும் (Slave Traders), பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,".

இந்த வசனங்களினின்று, பலாத்காரமாய் மக்களை அடிமைப் படுத்துதல் கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரானவை எனக் காண்கிறோம்.


முஹம்மது ஒரு அடிமைப்ப‌டுத்துப‌வ‌ர். அவ‌ர் ஆண்க‌ளும் பெண்க‌ளுமான‌ ப‌ல‌ அடிமைக‌ளை வைத்து இருந்தார், அவ‌ர்களை விற்க‌வும் செய்தார். மேலும் அவர், அல்லாஹ் அவ‌ரையும் அவ‌ர‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் பெண் அடிமைக‌ளுட‌ன் தாங்கள் விரும்பும்போது உட‌லுற‌வு வைத்துக்கொள்ள‌ அனும‌தித்து இருந்தார் என‌க் கூறியுள்ளார், ஆதார‌ம் சூரா 33:50, 52, 23:5, ம‌ற்றும் 70:30. இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு போர் (raids) அடிமைக‌ள் கொள்ளைப் பொருளாக‌க் க‌ருத‌ப்ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் அவ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ரின் உட‌மைக‌ளாக‌க் கருதப்பட்டனர். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அடிமைப் ப‌டுத்தி முஹம்மது பெருமை பாராட்டிக்கொண்டார்.


மாபெரும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி, முஹம்மது தம்முடைய அடிமைப் பெண்ணாகிய மரியாவுடன் உடலுறவு கொண்டதாக எழுதியுள்ளார். "அவள் அவரது உடமையாக (சொத்தாக) இருந்தபடியினால் அவளுடன் உடலுறவு கொண்டார்" என தபரி வால்யூம் 39, பக்கம் 194ல் காண்கிறோம்.


முஹம்மது தாம் எதிர்த்துப் போரிட்டவர்களை அடிமைகளாக்கினார். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், பானுகுரைதா யூதர்களில் பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொண்டு, எஞ்சிய‌ 800 ஆண்களை (இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை) படுகொலை செய்த நிகழ்ச்சியாகும், சூரா 33:26. சீரத் ரசூலுல்லா என்ற முஹம்மதுவின் ஆர‌ம்ப‌கால‌ வாழ்கை வ‌ர‌லாறு இது ப‌ற்றி ப‌க்க‌ம் 461 முத‌ல் மேலும் த‌க‌வ‌ல்க‌ளைத் த‌ருகின்ற‌து. ப‌க்க‌ம் 466 ல், இபின் இஷாக், இப்ப‌டுகொலைக்குப் பின் நடந்த‌ன‌வ‌ற்றை எழுதுகிறார்:


"பின்பு இறைத்தூதர், பானுகுரைஷாவினரின் உடமைகளையும் மனைவியினரையும் பிள்ளைகளையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தார்கள். அந்நாளில், குதிரைகளிலும் மனிதர்களிலும் தாம் ஐந்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொண்டதற்கான அறிவிப்பினைச் செய்தார்கள். (போரின் அனைத்துக் கொள்ளையிலும் முஹம்மதுவும் அவரது குடும்பத்தினரும் ஐந்தில் ஒரு பங்கினைப் பெற்றார்கள்).... பின்பு இறைத்தூதர் சையத்திடம் . . .உடன் தாம் கைப்பற்றிய பானுகுரைஷிய பெண்களை நஜ்ஜுக்கு (Najd) அனுப்பி அவர்களை குதிரைகளும் ஆயுதங்களும் வாங்குவதற்காக விற்றார்கள்".


முஹம்மது ஏராளமான அடிமைகளை வைத்திருந்ததாக புகாரி பதிவு செய்துள்ளார் (தொகுப்பு. 5, # 541 & தொகுப்பு. 7, # 344) முஹம்மதுவிடம், நீக்ரோ, அரேபிய, எகிப்திய, யூத, கிறிஸ்தவ மற்றும் அராபிய மாற்று மத ஆண், பெண் அடிமைகள் இருந்தனர்.


அடிமைகள் கொடூரமாக அடிக்கப்பட முஹம்மது அனுமதித்தார். அவரது மனைவி விபச்சாரக் குற்றச்சாட்டில் பரிசோதிக்கப்பட்ட நேரத்தில், முஹம்மதுவின் மருமகன் அலி, முஹம்மதுவின் முன்னிலையில் ஆயிஷாவின் அடிமைப் பெண்ணை ஆயிஷாவினைப் பற்றிய உண்மையினைச் சொல்லும்படியாக மிருகத்தனமாக அடித்தார். இபின் இஷாக்கின் "Sirat Rasulallah" விலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட, "The Life of Muhammad by A. Guillaume", பக்கம் 496 லிருந்து:


"எனவே இறைத்தூதர், விசாரிப்பதற்காக புரைராவை (Burayra - ஆயிஷாவின் அடிமைப் பெண்ணை) கூப்பிட்டார். அப்போது அலி எழுந்து, "இறைத்தூதரிடம் உண்மையைச் சொல்...." எனக்கூறி அவளை பலமாக அடித்தார்".


அலி அந்த அடிமைப் பெண்ணை அடிப்பதை முஹம்மது தடுக்கவில்லை.


புதிதாய்ப் பிடித்த பெண் போர்க் கைதிகளை உடலுறவிற்காய் பயன்படுத்திக் கொள்வதை முஹம்மது அனுமதித்தார்.


சஹீஹ் முஸ்லீம் (தொகுப்பு 2, #3371) ஹதீஸிலிருந்து:


அபூ சைய்து அல்குத்ரி அபூ சிர்மாவிடம் கூறியதாவது. "அபு சைய்துவே, அல்லாவின் தூதர், பெண்ணிடம் உறவுகொள்ளும்போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல் (al-azl - coitus interruptus) பற்றிக் கூறியதை அறிவீரோ?" அதற்கு அவன் ஆம் என்று கூறி மேலும் சொன்னதாவது: "நாம் அல்லாவின் தூதருடன் மஸ்தலிக்கு போரிடச் சென்று அற்புதமான அரேபியப் பெண்கள் சிலரைச் சிறையெடுத்து வந்தோம். நங்கள் எங்க‌ளின் மனைவியர் இல்லாததினால் ஏற்பட்ட‌ மோகத்தினால் அவதியுற்று அவர்களுடன் உறவுகொள்ள விரும்பினோம். (அதே நேரத்தில்) நாம் அவர்களை விற்று அப் பணத்தை அடையவும் விரும்பினோம். எனவே அவர்களுடன் al-azl (coitus interruptus, பெண்ணிடம் உறவுகொள்ளும் போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல்) முறையில் உடலுறவு கொள்ளத் தீர்மானித்தோம். ஆயினும் நாங்கள் சொல்லிக்கொண்டோம்,"நாம் ஒரு செயலைச் செய்கிறோம், ஆனால் நம்முடன் இறைத்தூதர் இருக்கிறார்; எனவே நாம் அவரிடம் கேட்டால் என்ன?" அல்லாவின் தூதரைக் கேட்டபோது அவர் சொன்னார், " நீங்கள் அதனைச் செய்யாவிடினும் பரவாயில்லை; ஏனெனில் இறுதித் தீர்ப்பின் நாள் வரை பிறக்க வேண்டிய‌ ஒவ்வொரு உயிரும் பிறந்தே தீரும்".

சஹீஹ் முஸ்லீம் தொகுப்பு 3, #3432 என்ற ஹதீஸிலிருந்து:


ஹுனைன் போரில் (Battle of Hunain), அல்லாஹ்வின் தூத‌ர் அடஸுக்கு (Autas) ஒரு ப‌டையை அனுப்பி எதிரிக‌ளைச் சந்தித்து அவ‌ர்க‌ளுட‌ன் போரிட்டார் என‌ அபூ சைய்து அல்குத்ரி தெரிவித்தார். அவ‌ர்க‌ளை வென்று அடிமைக‌ளாக‌ப் பிடித்த‌ பின்பு, அல்லாஹ்வின் தூத‌ருடைய‌ தோழ‌ர்க‌ள், பிடிக்க‌ப்ப‌ட்ட‌ அடிமைப் பெண்க‌ளுட‌ன் உட‌லுற‌வு கொள்வ‌தைத் த‌விர்த்து இருந்தார்க‌ள். ஏனெனில் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ன்மார் பல மாற்று தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளாய் இருந்தார்கள். அத‌ன் பின்பு மேன்மைமிகு அல்லாஹ் அது ப‌ற்றிய‌ வ‌ச‌ன‌த்தை இற‌க்கினார்:


"இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது." (குர்‍ஆன்: 4:24)


(அதாவ‌து அவ‌ர்க‌ளது இத்தா (Idda) மாத‌வில‌க்கு நாட்க‌ள் முடிந்த‌பின்பு அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள்).


விளக்கம் :


இயேசுவினுடைய போதனைகள் மக்களை பலவந்தமாக அடிமையாக்குவதைத் தடுத்தன. லூக்கா 6:31 ல் "மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." எனச் சொல்லப்படுகிறது. இதற்கு நேர் எதிராக‌, முஹம்மதுவும் அவரின் படை வீரரும் வலியச் சென்று பலரைத் தாக்கி, பலவந்தமாக அடிமைப்படுத்தினர். அதிலும் மோசமாக, முஹம்மது, அடிமைகளின் குடும்பங்களைப் பிரித்து அவரது படை வீரர்களிடையே பங்கிட்டுக்கொடுத்து பெண் அடிமைகள் அவர்களால் கற்பழிக்கப்பட அனுமதித்தார்.


பாவம்:


இயேசு: பாவமின்றிப் பிறந்தார்; பாவமற்ற வாழ்கை வாழ்ந்தார். அவரது பாவமற்ற வாழ்வினை உறுதி செய்தார். யோவான் 8:46 - "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்றார். மேலும் 2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5, மற்றும் எபிரேயர் 4:15 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.முஹம்மது: ஒரு பாவியாகப் பிரகடனப் படுத்தப்படுகிறார், சூரா 40:55 - "ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!".


சூரா 48:1,2 - "(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்….".


முஹம்மதுவும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட இறைவனை வேண்டினார்.

புகாரி தொகுப்பு 9, #482: "ஓ அல்லாஹ், என் கடந்தகாலப் பாவங்களையும் அல்லது வருங்காலங்களில் செய்யும் பாவங்களையும், இரகசியத்திலோ அல்லது வெளிப்படையாகவோ செய்யும் பாவங்களையும் மன்னித்தருளும்."


"...O Allah! Forgive me the sins that I did in the past or will do in the future, and also the sins that I did in secret or in public."

மேலும், முஹம்மது, தான் நியாயமற்ற முறையில் மனிதர்களை சபித்தும், பாதிப்படையச் செய்தும் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.


சஹீஹ் முஸ்லீம் தொகுப்பு 4, "The Book of Virtue and Good Manners, and Joining the Ties of Relationship, chapter MLXXV" என்ற புத்தகத்திலிருந்து:

அல்லாஹ்வின் தூத‌ர் எவ‌ர்மீது சாப‌ங்க‌ளைக் கொடுத்தாரோ அவ‌ர் அத‌ற்குத் த‌குதியாய் இல்லாத‌ ப‌ட்ச‌த்தில், அவ‌ருக்கு அது க‌ருணையாயும் வெகும‌தியின் ஊற்றாயும் இருக்கும்.


"HE UPON WHOM ALLAH'S APOSTLE INVOKED CURSES WHEREAS HE IN FACT DID NOT DESERVE IT, IT WOULD BE A SOURCE OF REWARD AND MERCY FOR HIM".

ஹதீஸ் #6287 அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அபு ஜுரைரா சொன்னது: "ஓ அல்லாஹ், நான் ஒரு மனிதன். முஸ்லிம்களில் ஏதாவது ஒரு மனிதனை நான் சபித்து இருந்தாலோ அல்லது கசையடி கொடுத்து இருந்தாலோ அதனை தூய கருணையின் ஊற்றாக மாற்றுவீராக."


விளக்கம்


இயேசு பாவமற்றவர் தேவனின் குமாரன். முஹம்மது, தான் ஒரு தீர்க்கதரிசி என்று சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு இறைவாக்கினர். அதாவது நல்ல மற்றும் தீய பண்புகளைக் கொண்ட, தவறுகளையும் பாவங்களையும் செய்யத்தக்க ஒரு மனிதன். சில சம‌யங்களில் அவர் கருணை உள்ளம் கொண்டவராகவும் சில சமயங்களில் சபிக்கவும் பலரை காயமடையச் செய்பவராகவும் இருந்தார். இவர்களின் இயல்பும் பண்பும் எந்த அளவிற்கு அவர்களின் மார்க்கங்களுக்குள் ஊடுருவியிருக்க முடியும்? இயேசு பாவமற்ற பரிசுத்தர். முஹம்மதுவோ தாம் தமது பாவங்க‌ளுக்காக மன்னிப்பை ஒரு நாளைக்கு 70,000 முறை வேண்டிக்கொண்டதாக அவ‌ரே சொல்லியுள்ளார்! நீங்கள் யாரைப் பின்பற்றுவீர்கள்?


மனம் திரும்ப விரும்புகின்ற‌ பாவிகளைத் தண்டித்தல்


இயேசு


யோவான் 8: 2 முதல் 11 வரை:


மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.


அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.


அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.


முஹம்மது


ஹதீஸ் அபூ தாவூத் (Abu Dawud) எண் #4428


புரைதா (Buraidah) சொன்னது: "காமித்தைச் சேர்ந்த ஒரு பெண் நபியிடம் சொன்னாள், "நான் விபச்சாரம் செய்துவிட்டேன்." அதற்கு அவர், "திரும்பிப்போ" என்றுச் சொன்னார். அவள் மறு நாள் மறுபடியும் வந்து, நீங்கள் ஒருவேளை மயிஜ் பி மாலிக்குச் செய்தது போலவே என்னையும் திருப்பியனுப்பவே விரும்பலாம். ஆனால் நான் கர்ப்பமாய் இருக்கிறேன் என அல்லாஹ்வின் நாமத்தில் உறுதியாகச் சொல்கிறேன்" என்றாள். அதற்கு அவர் "திரும்பிப்போ" என்றுச் சொன்னார். அவள் மறு நாள் திரும்பவும் அவரிடம் வந்தாள். அவர் அவளிடம் சொன்னார், "நீ பிள்ளை பெறும்வரை திரும்பிப் போ". அவள் திரும்பிச் சென்றாள்.


அவள் ஒரு பிள்ளையைப் பெற்ற போது அந்தப் பிள்ளையை அவரிடம் கொண்டு வந்தாள். அவள்,"இதோ, நான் பிள்ளையைப் பெற்றுவிட்டேன்" என்றுச் சொன்னாள். அதற்கு அவர், "நீ திரும்பிச் சென்று அது பால்குடி மறக்குமட்டும் அதற்குப் பால் கொடு" என்றுச் சொன்னார். அவள் அவனைப் பால்குடி மறக்கப் பண்ணின பின்பு, அவன் கையில் ஒரு பண்டத்தைச் சாப்பிடக்கொடுத்து, அவரிடம் அவனைக் கொண்டு வந்தாள். அந்தப் பையன் ஒரு முஸ்லிம் ஆளிடம் ஒப்படைக்கப்பட்டான்.


நபி அவளைக் குறித்துக் கட்டளையிட்டார். அவளுக்காக ஒரு குழி வெட்டப்பட்டது. அவள் சாகும் வரை கல்லெறியப்படவேண்டும் என்று நபி கட்டளையிட்டார். காலித் என்பவன், அவளைக் கல்லெறிந்தவர்களுள் ஒருவன். ஒரு கல்லை அவன் அவளை நோக்கி எறிந்தபோது, ஒரு துளி இரத்தம் அவன் கன்னத்தில் பட்டது,அவன் அவளைச் சபித்தான். அதற்கு நபி அவனிடம் சொன்னார்,"நிதானமாக‌ச் செய் காலித். அவள் மனம் திரும்பிவிட்டாள். அவளை அதிகமாக தண்டிப்பவர் அவளைப் போன்றே அதற்காக மனம் திரும்பும்போது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்." பின்பு அவர் அவளைக் குறித்துக் கட்டளையிட்ட பின்பு அவளின் உடல்மீது பிரார்த்தனை பண்ணினார். அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.


விளக்கம்


இவ்விருவரிடமும் (இயேசு, முஹம்மது) காணப்படும் தெளிவான வித்தியாசம் இதுதான். இயேசு விபச்சாரப் பெண் குறித்த நடவடிக்கையில், அவளைத் தண்டிக்கவில்லை. அவள் திரும்பிச்சென்று பாவமற்ற வாழ்கை வாழும்படி ஆணையிட்டார், அவள் மீட்கப்பட ஒரு வாய்ப்பளித்தார். கருணையின் உதாரணம் இதுவே.


எத்தனை பேர் தவறான பாதையில் சென்று பின்பு பல ஆண்டுகளுக்குப் பின் தங்க‌ள் வாழ்கையை முற்றிலுமாக மாற்றி நல்லவர்களாக வாழ்ந்துள்ளனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அது மட்டுமின்றி, மற்றவர்களும் தங்களின் வாழ்வினை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் உதவியுள்ளனர்? இயேசு இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தினை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். சட்டத்தின்படி, யூதர்கள் அவளை கல்லெறிந்து கொன்றிருக்கலாம்; ஆனால் இயேசுவின் அன்பும் கருணையும் அதைவிட மகத்தானது.


முஹம்மதுவின் அனுகுமுறை முற்றிலும் மாறுப‌ட்ட‌து. முத‌லாவ‌து அந்த‌ விப‌ச்சார‌ப் பெண்ணை விர‌ட்டிவிட்டார். அவ‌ள் அவ‌ள‌து பாவ‌த்தினை அவ‌ரிட‌ம் அறிக்கையிட்டாள். அவ‌ரோ அத‌னைக் கேட்க‌வோ அது குறித்து எதுவும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வோ ம‌றுத்தார். மாறாக‌ அவ‌ளை விர‌ட்டிய‌டித்தார். மூன்று முறை இவ்வித‌ம் ந‌டைபெற்ற‌து. மூன்று த‌ர‌ம் இந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் தவிர்க்க‌ முஹம்மது முற்ப‌ட்டார். இறுதியாக‌ அப்பெண்ணின் பிடிவாதமான ஒப்புக்கொடுத்தலின் பேரில், முஹம்மது அவளது பாவப் பிரச்சினையை எதிர்கொள்ள முடிவெடுத்தார். அவ‌ள் பிள்ளை பெற‌வும் அத‌ற்குப் பால் குடி ம‌ற‌க்க‌ப்ப‌ண்ணும் வ‌ரையிலும் அனும‌தித்தார். இத‌ற்கு ஒன்று முத‌ல் மூன்று ஆண்டுக‌ளாவ‌து ஆகியிருக்கும். அத‌ன் பின்பு திரும்பிய‌ அவ‌ளை கொலை செய்ய‌ப்ப‌ட‌ முஹம்மது ஒப்புக்கொடுத்தார்.


இந்த‌ப்பெண் குற்ற‌த்தை ஒப்புக்கொண்ட‌துட‌ன் ம‌ட்டுமின்றி அத‌ற்காக‌ ம‌ன‌ம் வருந்தினாள். அவ‌ள் அவ‌ள‌து பிள்ளைக்கு ஒரு ந‌ல்ல‌ தாயாக‌வும் ச‌மூக‌த்தில் ஒரு பொறுப்பான குடிம‌க‌ளாக‌வும் காண‌ப்ப‌டுகிறாள். முஹம்மது அவ‌ளுக்கு, அவ‌ர், ப‌ல‌ பேர்க‌ளுக்கு ப‌ல‌வித‌மான பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ன்னித்த‌து போல‌ ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கியிருக்க‌ முடியாதா? முஹம்மது ப‌ல‌ரின் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட‌ அனும‌தித்துள்ளார். த‌ங்க‌ளின் சொந்த‌ குடும்ப‌த்தினையே கொலை செய்த‌வ‌ர்க‌ள் கூட‌ முஹம்மதுவின் ந‌பித்துவ‌த்தினையும் கடவுளின் ஏகத்துவத்தினையும் ஒப்புக்கொண்ட‌தின் பேரில் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் முஹம்மதுவினால் இந்த‌ப் பெண்ணிட‌ம் க‌ருணையுட‌ன் நடந்து கொள்ள‌ முடிய‌வில்லை. அவ‌ர் குறுகிய‌ பார்வை கொண்ட‌வ‌ர். அவ‌ள் வாழ்கையை முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்ட‌வ‌ள் என்றும் முறையாகத் தன் குழந்தையை வளர்த்துள்ளவள் என்றும், சரியானதையே செய்தாள் என்றும் காணத் தவறிவிட்டார். முஹம்மதுவின் குறுகிய‌ க‌ண்ணோட்ட‌ம் அவ‌ள‌து சாவிற்குக் கார‌ண‌மாயிற்று.


இதை முஹம்மது யூதச் சட்டத்தின்படிக் கூட அனுகவில்லை. மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி விபச்சாரம் செய்தவர் கல்லெரிந்து கொல்லப்படுதல் வேண்டும். முஹம்மது இவ்விதம் செய்யவில்லை. அவளை, முஹம்மது , பல ஆண்டுகள் வாழ அனுமதித்தார். அவள் பிள்ளை பெறும்படி தாற்காலிகமாக அவளை அனுமதித்து இருந்தாலும் கூட முஹம்மது அந்தப் பிள்ளை பால் குடி மறக்குமட்டும் பொறுத்திருந்தார். நிச்சயமாகவே அக்குழந்தையைப் பராமரிக்க வேறு பெண்கள் இருந்திருக்கக் கூடும். முஹம்மது அவருக்குத் தெரிந்த விதத்தில் நலமாகவோ அல்லது மாறாகவோ இந்த நிலைமையைக் கையாண்டிருக்கிறார். அவர் போகிற போக்கில் அவ்வப்போது அவரது சட்டங்களை உருவாக்கியுள்ளார்.


போர் - பகைவர்களை எதிர்கொள்ளுதல்


இயேசு, லூக்கா 9:54,55 ல், அவரை நிராக‌ரித்த‌ ந‌க‌ர‌த்தை நிர்மூல‌மாக்க‌ விரும்பிய‌ த‌ம‌து சீஷ‌ர்க‌ளைக் கடிந்து கொண்டார். மேலும் லூக்கா 22:52 ல், சீஷ‌ர்க‌ள், இயேசுவைக் கைது செய்ய‌ வந்த‌வ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையிட்ட‌ போது அவ‌ர்க‌ளைத் த‌டுத்து அந்த‌ கைக‌ல‌ப்பில் காய‌முற்ற‌ ஒரு ம‌னித‌னைக் குண‌ப்ப‌டுத்தினார்.


முஹம்மது, சூரா 9:5 ம‌ற்றும் 9:29 ல், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது க‌டும் போர் புரியும்படிச் சொல்லியுள்ளார். சூரா 9 என்பது முஹம்மது இறுதியாகக் கொடுத்த சூராக்களில் ஒன்றாகும். ஆரம்பகாலத்தில் முஹம்மதுவின் கூட்டத்தின‌ர் மிக‌வும் ப‌ல‌வீனமாக‌ இருந்த‌போது, அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இசைந்து வாழும்ப‌டி க‌ட்ட‌ளையிட்டு இருந்தார். ஆனால் பிற்கால‌த்தில் முஸ்லீம்கள் ப‌ல‌மடைந்த‌போது, இஸ்லாமை, பலாத்காரத்தின் மூல‌ம் ப‌ர‌ப்ப‌ ஆணையிட்டார். அபுப‌க்க‌ர், உம‌ர் ம‌ற்றும் உத்மான் ஆகியோர் அவ‌ர‌து ஆக்கிர‌மிப்புப் போர்களைத் தொடர்ந்து நடத்தினர். முஹம்மதுவின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் சில‌:


800 யூத‌ ஆண் போர்க் கைதிக‌ளை ப‌டுகொலை செய்த‌து (சூரா 33:26 ல் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து)


மெக்காவைக் கைப்ப‌ற்றிய‌போது, அவ‌ர், 10 பேர்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்யும்ப‌டி ஆணை பிற‌ப்பித்தார். அதில் மூவ‌ர், முன்பு முஹம்மதுவைக் கேலி செய்த‌ அடிமைப் பெண்க‌ள். (பார்க்க‌: "முஹம்மதுவின் வாழ்கை - The Life of Muhammad" பக்கங்கள் 551, 52)

அவர் யூதப் பட்டணமான கைபர் மீது தாக்குதல் நடத்தியபோது, யூதத்தலைவர்களில் ஒருவரை எங்கோ புதைக்கப்பட்டிருந்த பணத்தின் இருப்பிடத்தைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தார். அந்த மனிதன் அதைச் சொல்ல மறுத்தபோது அவன் மரணிக்கும் தருவாயில் அவனது தலையை வெட்ட ஆணையிட்டார். "முஹம்மதுவின் வாழ்க்கை, (The Life of Muhammad)" ப‌க்க‌ம் 515 ஐப் பார்க்கவும்

விளக்கம்


பல ஆண்டுகளுக்கு முன்பு, தம்மைக் கேலி செய்த பெண் அடிமைகளைக் கொல்லும் காரியத்தில், இயேசுவை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர் மிகவும் மேலான செய்திகளையும் நலமான வாழும் முறையினையும் கொண்டு வந்தவர். புதைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொணர ஒரு மனிதனை சித்திரவதை செய்பவ‌ரென இயேசுவை ஒருவரும் கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது. அவரது வாழ்க்கை பேராசைகள் அற்ற ஒரு வாழ்க்கையாக இருந்தது.


முஹம்மது ஒரு மூர்க்க குணமுடைய‌ நபராக‌ இருக்கக் கூடும். தம்மைக் கேலி செய்த பெண்ண‌டிமைகளைக் கொலை செய்தல் நியாயமானதா? அவர்களைக் கொலை செய்வித்தல் ஏற்புடையதா? அது நாகரீகமானதா அல்லது அறிவுடமைதானா? வெறும் பணத்தை அடைவதற்காக ஒரு மனிதனைச் சித்திரவதை செய்தார் முஹம்மது. இப்படிப்பட்ட நபரை ஒரு சமுதாயம் கீழ்படியவும், அவரை ஒரு முன்னோடியாக ஏற்றுக்கொள்ளவும் இவர் தகுதியுடையவராக இருப்பாரா?


பெண்களும் திருமணமும்


இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் பெண்களை குணப்படுத்தினார். அவர்களை மன்னித்து ஆறுதல் படுத்தினார். ஆண்கள் அவரவரின் மனைவிமார்களை நேசிக்கவும் அவர்களிடம் கடினமாக நடந்து கொள்ளா வண்ணமும் இருக்க புதிய ஏற்பாடு கற்றுக்கொடுக்கிறது: கொலோசெயர் 3:19, எபேசியர் 5:25.


கலாத்தியர் 3:28, "ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்" என்றும் 1 பேதுரு 3:7, "புருஷர்களே,.........நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து,.....அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்" என்றும் போதிக்கின்ற‌ன‌.


முஹம்மது அவரைப் பின்பற்றும் ஆண்கள், அவர்களின் அடங்காத மனைவிகளை அடிக்கக் கட்டளை கொடுக்கிறார். தொடர்ந்து கீழ்படிய மறுக்கும் தமது மனைவிகளை அடிக்கும் உரிமையை ஆண்களுக்கு வழங்குகிறார்.


சூரா 4:34 "…அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள்…".


மேற்படி வசனம் ஒரு பெண் தனது கணவன் தன்னை முகத்தில் அடித்ததாகவும் அதன் தடம் முகத்தில் இருப்ப‌தாகவும் முஹம்ம்துவிடம் புகார் செய்ததாகக் கூறும் சம்பவத்தின் தொடர்பாக இறக்கப்பட்டது. முதலில் முஹம்ம்து "அவனுடன் சமாதானமாக இரு" என்றுச் சொல்கிறார், பின்பு, "நான் இதுபற்றிச் சற்றுச் சிந்திக்கும்வரை பொறுத்திரு" என்றார். பின்பு தான் இவ்வசனம் இறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முஹம்ம்து , "நாம் (தாமும், அப்பெண்ணும்) ஒன்றை விரும்பினோம் ஆனால் அல்லாஹ் வேறொன்றை விரும்பினான்" என்றுச் சொன்னார்.


இந்த ஹதீஸ் பெண்களைப்பற்றி மேலும் அதிகமாகச் சொல்கிறது:


முஹம்மது, "பெண்கள் பொதுவாகத் தீமையுள்ளவர்களே; நரகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே," எனச் சொல்கிறார். புகாரியைத் தொடர்வோமானால்:

தொகுப்பு 1, #301: "பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்;..."


புகாரி தொகுப்பு 1, #28: ந‌பி சொன்னார், "எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்..."

அவ‌ர்க‌ள் சொர்க்க‌த்தில் சிறுபான்மையின‌ரே என‌ சஹீஹ் முஸ்லிம் சொல்கிற‌து‌


தொகுப்பு 4, #6600: "அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக இம்ரான் உசேன் அறிவித்தார்,"சொர்கத்தில் வசிப்பவர்களில் பெண்கள் சிறுபான்மையினரே ஆவார்கள்"


இவ்விர‌ண்டு ஹ‌தீஸ்க‌ளையும் ஒன்றாக்கிப் பார்ப்போமானால், பெண்க‌ள் சொர்க்க‌‌த்தில் சிறுபான்மையின‌ராகவும் ந‌ர‌க‌த்தில் பெரும்பான்மையான‌வ‌ர்க‌ளாயும் இருக்கின்ற‌ன‌ர் என‌ முஹம்மது சொன்ன‌தாக‌ விள‌ங்கும். இது ஒரு க‌ண‌க்கீட்டின் படியான விகிதாச்சாரமாக இருப்பதாகத் தோன்றவில்லை, அதாவது, அதிக பெண்கள் மற்றும் குறைவான ஆண்கள் உலகத்தில் இருக்கக்கூடும் எனவே, தான் இந்த கணக்கு என்பதல்ல. மாறாக, முஹம்மது பெண்களை ஆண்களைவிட அதிகம் பாவம் செய்யக்கூடியவர்களாகக் கருதினார் என்பதாகவே காணப்படுகிறது. ந‌ர‌க‌த்தில் அதிக‌ம் பெண்க‌ள் காண‌ப்ப‌டக் கார‌ண‌ம், முஹம்மதுவின் வாக்கின் படி பெண்க‌ள் பெரும்பாலும் த‌ம் க‌ண‌வ‌ருக்கு துரோக‌ம் செய்யும் இயல்பினர் என்ப‌தே!


பெண்கள் ஆண்களைவிட அறிவில் குறைந்தவர்கள் எனவும் முஹம்மது அறிவித்துள்ளார்:


புகாரி தொகுப்பு 1, #301:

"……நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;…"

விளக்கம்


தேவனின் பார்வையில் பெண்ணும் ஆணும் சரிசமம் என இயேசுவின் போதனை சொல்கிறது."ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்". சமுதாயக் கண்ணோட்டத்தில் தேவனின் கிருபையின் படி இயேசு அவர்களைக் கையாண்டார்.


முஹம்மது, பெண்களை, அடிமைக்கும் சுதந்திரமான மனிதருக்கும் இடையில் வைத்தார். இன்றும் கூட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் இரண்டாந்தர மக்களாகவே ஆண்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறார்கள். இது முஹம்மதுவின் போதனைகளில் பெண்களுக்கு அவர் அளித்த இடம் கருதியே ஆகும்.


கிறிஸ்துவின் அடையாளம்


இயேசு தாம் தேவ குமாரன் எனச் சொன்னார், காண்க‌: யோவான் 5:18-27, 10:36, மத்தேயு 26:63, 64.


அப்பொழுது அவர் (இயேசு) நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு 16: 15-17)


தேவனின் வார்த்தையே இயேசு


"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." (யோவான் 1:14)


இறைவனாகிய இயேசு


"கிறிஸ்து இயேசு…அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2:5-7)


முஹம்மது, இயேசு தேவ குமாரன் அல்ல என்றுச் சொல்லியிருக்கிறார். நபிகளுக்குள் குர்‍ஆன் வேறுபாடு காணவில்லை; இயேசுவும் ஒரு நபியை விட மேன்மையானவர் இல்லை:


சூரா 5:75 "மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர்...."


இயேசுவின் தெய்வீக ஆதாரத்தினை குர்‍ஆன் மறுக்கிறது:


சூரா 43:59: "அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.."


சூரா 3:59: "அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்."


விளக்கம்


இயேசு ஒரு பெரிய தீர்க்கதரிசியாக, ஒரு போதகராக, தாம் தேவகுமாரனென்றும், தேவனின் வார்த்தை என்றும், மேசியா என்றும் மனிதனாக வந்த இறைவன் என்றும் போதித்தார். முஹம்மது இதனை மறுத்தார். இயேசு ஒருவேளை உண்மை சொல்லியிருக்கவேண்டும் அல்லது அவர் ஒரு பொய்யராகவோ பைத்தியக்காரராகவோ இருக்கவேண்டும். அவர் யார் என்ற அடையாளத்தைக் குறித்து இருவரும் (இயேசு, முஹம்மது) சொல்வதும் சரியாக இருக்க முடியாது. ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். முஹம்மது இயேசுவிற்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் பாலைவனங்களில் அலைந்து திரிந்து கொண்டு வெளிப்பாடுகளைச் சொல்லி வந்தார். அவர் கூறுவது பற்றிய‌ ஆதாரம் சிறிதளவும் இல்லை. இறைவனின் வார்த்தை தான் என அவர் ஒப்புக்கொள்ளும் பைபிள் கூறுவனவற்றிற்கு எதிராக அவர் பல கருத்துக்களைச் சொல்லுகிறார்.


இயேசு வணங்குதற்குரியவர்

ஒரு மனிதன் இயேசுவை வணங்கினான். அதனை இயேசு அனுமதித்துவிட்டு தேவன் ஒருவரே வணக்கத்திற்கு உரியவர் எனப் போதித்தார், மத்தேயு 4:10


அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார்.


எனினும் இயேசு மக்கள் தம்மை வணங்குவதை அனுமதித்தார். "அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து..." மத்தேயு 8:2


இயேசுவை வணங்கும்படி பைபிள் ஆணையிடுகிறது


"குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்." யோவான் 5:23


"... தூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக் கடவர்கள்." எபிரேயர் 1:6


"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." பிலிப்பியர் 2:10, 11


முஹம்மது: இயேசு வணங்கத்தக்கவர் அல்ல என்றார்


இயேசு வணங்கத்தக்கவரில்லை என குர்‍ஆன் சொல்கிறது:


சூரா 43:81: " (நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"


விளக்கம்


தேவ‌ன் ஒருவ‌ரே வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர். ம‌னித‌ர்க‌ள் ஆட்சியாள‌ர்கள் என்ற வகையில் வ‌ண‌க்க‌த்தைப் பெற்றார்க‌ள். ஆனால் தேவ‌ன், அவ‌ர் ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர் என்கின்ற‌ உரிமையை க‌ட்டளையின் மூலம் நிலை நாட்டினார். இயேசு அத‌னைப் போதித்தார்; வ‌ண‌க்க‌த்தினையும் பெற்றார். இயேசு யார் என்று முஹம்மதுவுக்குத் தெரிய‌வில்லை; என‌வே தேவ‌ மைந்த‌னை வ‌ண‌ங்க‌ ம‌றுத்தார்.


ஜெபம்


இயேசு தம் சீஷர்களுக்கு எளிய முறையில், இதயத்தின் ஆழத்தினின்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். தேவன் இதயத்தினின்று வருவனவற்றையே கவனிக்கிறார் - வெளிப்படையானவைகளை அல்ல‌ என போதித்தார்.

"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்…" மத்தேயு 6:5-13


பரலோகப் பிதாவுடனான உறவினை வெளிப்படுத்தும் தொடர்பே உண்மையான ஜெபம் என இயேசு கற்றுக்கொடுத்தார்.


முஹம்மது வெளியரங்கமான தொழுகை முறைகளையே போதித்தார்: (புகாரி தொகுப்பு 1 ன் படி)

488 - தொழும் ந‌பரின் குறுக்கே செல்லுதல் அவனின் தொழுகையை பயனற்றதாக்கும்.


489 - ஒருவர் தொழும்போது அவரின் குறுக்கே செல்லுதல் பாவமாகும்


660 - இமாம் (வெளியர‌ங்கமான தொழுகை முறைகளை நடத்தும் இஸ்லாமிய மார்க்கத்தலைவர்) தொழுகையிலிருந்து எழும் முன்பு எழுவது கூடாது. அவ்வாறு செய்தால் கடவுள் அவனின் முகத்தை கழுதையின் முகத்தைப் போலாக்குவார்.


685 - தொழுபவர்களின் வரிசை (ஆண்கள்) நேராக இல்லாவிட்டால், கடவுள் உங்கள் முகத்தை மாற்றுவார்.


690 - தொழுபவர்களின் வரிசை நேராக இல்லாவிட்டால் அது நல்லதொரு தொழுகை அல்ல‌.


717 - தொழுகையின்போது மேலே பார்த்தால் உங்களின் கண் பார்வை போய்விடும்.


759 - குனிந்து நிமிர்தலைச் சரியாகச் செய்யாவிட்டால் உங்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இந்த மனித‌ர்கள் (இயேசு, முஹம்மது) முற்றிலும் மாறுபட்டவர்கள். இருவரும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். கிறிஸ்துவர்கள் இயேசுவையும் இஸ்லாமியர்கள் முஹம்மதுவையும் பின்பற்றுகின்றனர். இருவரும் கடவுளிடத்தினின்று வந்தவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவர்களின் போதனைகளாளும் நடத்தையாலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருக்கின்றனர். எனவே ஒருவர் மட்டுமே தேவனிடம் இருந்து வந்திருக்க முடியும்.


கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள் என இயேசு சொன்னார்: "அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் ". மத்தேயு : 24:11


முஹம்மது இத்தகைய கள்ளத்தீர்க்கதரிசி என்கின்ற வரிசையில் பட்டியலில் வர வாய்ப்புள்ளதா?


ஆதார நூற்ப்பட்டியல்:


[1] இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட தமிழ் பைபிள்
[2] ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர்‍ஆன் தமிழாக்கம்

[3] "Sahih Al-Bukhari" - "The Translation of the Meanings of Sahih Al-Bukhari", translated by Dr. M Khan, pub. by Kitab Bhavan, New Delhi, India.
[4] "Sahih Muslim", translated into English by A. Siddiqi, pub. by International Islamic Publishing House, Riyadh, Saudi Arabia.
[5] "Sirat Rasulallah" - "The Life of the Prophet of God", translated as "The Life of Muhammad" by A. Guillaume, pub. by Oxford University Press, London, England.
[6] "The History of Tabari", published by SUNY, Albany, New York, USA.
[7] "Sunan of Abu Dawud", published by Al-Madina Publications, New Delhi, India.

Source: இயேசுவா முஹம்மதுவா? உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு


Isa Koran Home Page
Back - Silas Index Page

Source: http://www.answering-islam.org/tamil/authors/silas/founders.html

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Polygamy)

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்

இஸ்லாமியரல்லாதவர்கள் கேட்கும் பொதுவாக கேள்விகளுக்கு பதில்கள்

பல தார மணம் (Polygamy)


இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.

கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?


பதில்:


1. பலதார மணம் என்றால் என்ன?


பலதார மணம் என்ற திருமண அமைப்பில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். பல தார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது Polygyny என்பதாகும் இதில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம். இரண்டாவது Polyandry என்பதாகும், இம்முறைப்படி ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம். இஸ்லாமில் முதலாம் வகையான polygyny ஒரு வரையறையோடு அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டாம் வகையான polyandry முழுவதுமாக‌ தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது பழைய கேள்விக்கு வருவோம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள‌ ஏன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது?

டாக்டர் ஜாகீர் நாயக்கின் வரையறையை (விளக்கத்தை) நான் ஏற்றுக்கொள்கிறேன்.

2. உலகத்தில் உள்ள மதம் சார்ந்த மத நூல்களிலேயே திருக் குரானில் தான் ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள் என்ற வார்த்தைகள் அல்லது கருத்து உள்ளது. மற்ற மறை நூல்களில் அவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இல்லவே இல்லை எனலாம். ஏனைய மறை நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம் ஆகியனவற்றில் ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்ற வரையறை காணப்படவில்லை. அந்நூல்களில் உள்ளபடி ஒரு மனிதன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.

இது ஒரு பொருந்தாத வாதமாகும். பைபிளுக்கு ஒவ்வாத வாதத்தை ஜாகிர் நாயக் முன்வைத்திருக்கிறார். ஆனால், இவர் சொல்வதற்கு எதிர்மறையாக‌, தேவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திட்டத்தைத் தான் உருவாக்கி வைத்து இருந்தார். இதைத்தான் வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காண்கிறோம்.

"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24)


"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனை படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியை குறித்து எச்சரிக்கையாடிருங்கள்" (மல்கியா 2:15)

இயேசுவும் இவ்விதம் சொல்லியுள்ளார்...


"இப்படி இருக்கிறபடியினால் அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் எனறார். அதற்கு அவர்கள்; அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவனை தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை". (மத்தேயு 19:6-8)

பின்னர் தான் கிறிஸ்தவ பாதிரிகளும் இந்து பூசாரிகளும் மனைவிகளின் எண்ணிக்கையை ஒன்று என குறைத்துவிட்டனர்.

வேதாகமத்திலேயே தேவனுடைய திட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என தெளிவாக கூறப்பட்டுள்ள போது, திருச்சபையானது எப்படி ஒரு மனிதனுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்திருக்க முடியும்? இந்து திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் வரமுடியும்? என்று நான் வியப்படைகிறேன். டாக்டர் நாயக் தான் உண்மையானது என கருதும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்த, தான் தவறானது என கருதும் மற்றொரு மதத்தின் திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் நுழைக்க முடியும்?

இந்து மதத்தில் உள்ள பிரபலமான அனேகர் பல மனைவிகளை கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக ராமரின் தந்தையான தசரதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை மணமுடித்து இருந்தார். கிருஷ்ணருக்கும் பல மனைவிகள் இருந்தனர்.

டாக்டர் நாயக் தனது மூதாதையரின் மதத்தை பற்றி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். ஒரு ஆண் வாரிசை பெறுவதற்காக தசரதன் மூன்று பெண்களை திருமணம் செய்தார். தசரதனுக்கு மகள் இருந்தாள் ஆனால் தனது அரியணையை அலங்கரிக்க ஆண் வாரிசு வேண்டும் என விரும்பினார். கௌசல்யை மகனை பெறாததால் சுமித்திரையை திருமணம் செய்தார், அவரும் ஆண் வாரிசை பெற தவறியதால் கைகேயியை திருமணம் செய்தார். இவ்வாறு இருந்த சூழ் நிலையிலும் இந்து மதத்தில் ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்ததில்லை. ராமன், லஷ்மணன், பரதன், சத்ருகன் ஆகியோர்கள் ஒரு மனைவியை மாத்திரம் திருமணம் செய்திருந்தனர். கிருஷ்ணரும் பல பெண்கள் அவரை திருமணம் செய்ய விரும்பியதால் அவர்களை திருமணம் செய்தார். இந்து மதத்தில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் பழக்கத்தையும் திரௌபதியின் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது.


நான் மறுபடியும் டாக்டர் நாயக்கை வினவுகிறேன், ஏன் தனது மத நம்பிக்கைகளை வலுப்படுத்த இந்து புராணங்களை இழுக்கிறார். இந்து மத பாத்திரங்கள் எங்ஙனம் இஸ்லாமிய முறைமைகளை உறுதிப்படுத்த முடியும். நம்பிக்கையற்றவர்களின் பழக்கவழக்கங்களைக்கொண்டு தனது மதத்தை ஏன் அவர் நியாயப்படுத்த முயல்கிறார்.

பண்டைய காலத்தில் கிறிஸ்தவ ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர், பைபிள் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஒரு வரையறையை கொடுக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கிறிஸ்தவ திருச்சபை ஒரு மனிதனுக்கு ஒருத்தி என நெறிப்படுத்தியது.

இல்லை, பவுல் அப்போஸ்தலன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கிறிஸ்தவ சபையின் தொடக்க காலத்திலேயே பிரசங்கித்து வந்தார்.

"ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:2


"மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:12


"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்" தீத்து 1:6


"இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எபேசியர் 5 :31

டாக்டர் நாயக்:


ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்ய யூத மதத்தில் அனுமதியுள்ளது, தல்மூத் சட்டத்தின் படி ஆபிரகாமுக்கு 2 மனைவிகள் இருந்தனர், சாலொமொனுக்கோ நுற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர்.

டாக்டர் நாயக் சாலொமோனின் வரலாறை கூறியுள்ளார். சாலொமோனின் வாழ்க்கை வரலாறு நமக்கு போதிக்கும் பாடம், நம் சொந்த விருப்பத்தின் படி நடந்து, தேவனுடைய திட்டத்தின் படி நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதின் மிகச்சிறந்த உதாரணமாகும்.

அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. (1 இராஜாக்கள் 11:3-4)

தனது தெய்வீக திட்டத்திற்கு முரண்பட்ட சமுதாய அமைப்பை தேவன் அங்கீகரிக்கவேண்டுமென்று அவரை கட்டாயப்படுத்தமுடியாது. முகமதுவின் பலதாரமண கொள்கை அமைதியான குடும்ப வாழ்விற்கான அமைப்பாக இருந்ததில்லை. அவரது மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் மனக்கசப்புகள், போராட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. ஒருமுறை தனது வீட்டில் சமாதானத்தை நிறுவச்செய்ய இறைவனிடமிருந்து வெளிப்பாடுகள் அவருக்கு தேவைப்பட்டது. மேலும் விபரங்களுக்கு "தன் பாலியல் காரணங்களுக்காக தான் செய்த சத்தியத்தை உடைத்த நபி - Sex, Oaths, and the Prophet (சூரா 66)" என்ற கட்டுரையை படிக்கவும்.


தேவன் ஆதாமை படைத்து அவனது துணையாக ஏவாளையும் படைத்தார், இதுவே மனுக்குலத்திற்கு தேவன் அமைத்த சரியான குடும்ப முறையாகும். ஒரு மனுஷனும் மனுஷியும் இணையும் திருமணம் என்ற அமைப்பை தேவன் மதித்து அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகினால் (அஃதாவது ஒருவன் பல பெண்களை திருமணம் செய்தல், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தல், விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய தொடர்புகள், ஓரினச்சேர்க்கை.. போன்றவைகளை நாம் செய்தால்) வாழ்க்கையிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு நாளிலும் எதிர்மறையான விளைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்.

ஒருவன் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் ரபி கெர்சோம் பென் யெகுதா (கிபி 960 முதல் கிபி 1030) (Rabbi Gershom ben Yehudah) எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் வரை நீடித்து இருந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 1950 வரை இப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். இஸ்ரேலில் இருந்த தலைமை மதகுரு ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்யும் வரை இப்பழக்கம் நீடித்தது.

ரபி கெர்சோம் பென் யெகுதா தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்பதையே இது காட்டுகிறது

3. இந்துக்களே இஸ்லாமியரை விட பலதார மணம் புரிபவராக இருந்துள்ளனர். 1975ல் வெளியிடப்பட்ட" இஸ்லாமில் பெண்களின் நிலை - Committee of The Status of Woman in Islam" என்ற அறிக்கையில் பக்கங்கள் 66,67 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அஃதாவது 1951 முதல் 61 வரை நடைபெற்ற பலதார மணங்களின் படி இந்துக்கள் 5.06 விழுக்காடாகவும் இஸ்லாமியர் 4.31 விழுக்காடாகவும் பலதார மணம் புரிபவராக இருந்துவந்துள்ளனர். அதுவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் பலதார மணம் புரிவது சட்டவிரோதம் என இருக்கும் போதே இந்த நிலை. ஒருவேளை இந்து ஆண்களுக்கு பலதார மணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களின் பலதாரமண விழுக்காடு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும். 1954 ம் ஆண்டு இந்து திருமண சட்டம் வந்த பின் தான் இந்து ஆண்கள் ஒரு பெண்ணுக்கும் மேல் திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலை வந்தது. இப்போதும் கூட இந்திய சட்டம் தான் இந்துக்களின் பலதார மணத்தை தடை செய்து வைத்துள்ளதேயன்றி இந்து வேதங்கள் அல்ல.

மறுபடியுமாக ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அது என்னவெனில் டாக்டர் நாயக் அவர்கள் தனது மத பழக்கவழக்கங்களை நியாயப்படுத்த ஏன் தான் போலி சமயமாக கருதும் இந்து மதத்தை குறிப்பிடுகிறார்? ஏன் 19ம் நூற்றாண்டு மோர்மொன்கள், பல்வேறு நாடுகளில் இருந்த மதங்கள் பலதார மணம் என்ற பழக்கத்தை கொண்டிருந்தது தெரியவில்லையா? அவைகள் பற்றி ஏன் அவர் குறிப்பிடவில்லை? டாக்டர் நாயக் அவர்கள் "பொய்யான" மார்க்கம் எனக்கருதும் ஒரு மதத்தின் பழக்கங்கள் எப்படி அவர் "சரியான மார்க்கம்" எனக் கருதும் இஸ்லாம் சரியானது என நிருபிக்க உதவும்? வட இந்தியாவிற்கு எனது வாழ் நாளில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், நான் பார்த்த வரை எந்த ஒரு இந்து மனிதனும் பலதார மணம் புரிந்தவராக இருந்ததில்லை.

சரி இப்போது நாம் இஸ்லாமில் ஏன் ஒரு மனிதன் பலதார மணம் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காண்போம்.


4. அளவான பலதார முறையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த உலகத்தில் உள்ள மறை நூல்களிலேயே இஸ்லாமிய மறை நூலான குர்ஆனில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என கூறப்பட்டுள்ளது. இதை சூரா நிஸா என்ற அத்தியாயத்தில் காணலாம், "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)..(குர்ஆன்4:3). குர்ஆன் இறக்கப்படும் முன்னர் வரை ஆண்கள் வகைதொகையற்ற அளவு மணம் புரிபவர்களாக இருந்தனர். ஒருவர் நூற்றுக்கணக்காக கூட திருமணம் செய்து இருந்தனர். இஸ்லாம் மாத்திரமே நான்கு மனைவியர் என்ற அதிகபட்ச அனுமதியளித்துள்ளது. இஸ்லாமில் மாத்திரமே ஒரு மனிதன் அவர்களிடம் நியாயமான முறையில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் 2, 3 அல்லது 4 பேரை திருமணம் செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. சூரா நிஸாவின் 129 ல் "(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" (குர்ஆன் 4:129). எனவே பலதார மணம் என்பது சட்டம் அல்ல அது ஒரு விதிவிலக்கு மாத்திரமே. ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக 4 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இஸ்லாமில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என 5 காரியங்கள் உண்டு.


1) "ஃபார்ஸ் - Farz" அதாவது கட்டாயமாக செய்யவேண்டியவைகள்
2) "மஸ்தஹப் - Mustahab" அதாவது பரிந்துரைக்கப்பட்டது
3) "மஃபா - Mubah" அதாவது அனுமதியளிக்கப்பட்டது
4) "மாக்ரூஹ் - Makruh" அதாவது பரிந்துரைக்கப்படாதது
5) "ஹராம் - Haram" அதாவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டது


பலதார மணம் இதில் நடுவில் வரும் அனுமதிக்கப்பட்ட பிரிவில் வருபவர். இதை 2, 3 அல்லது 4 மனைவிகள் உள்ள இஸ்லாமியர் ஒரு மனைவி உள்ள இஸ்லாமியரை விட சிறந்தவர் என நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

முகமது ஏன் 4 மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்?

5. பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். இயற்கையாகவே ஆண்களும் பெண்களும் ஒரே விகிதாச்சாரப்படியே பிறக்கின்றனர்.


சிறுவயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளை விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதனாலேயே சிறு வயதில் ஆண் பிள்ளைகள் அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். போர்க்காலங்களில் ஆண்களே பெண்களைவிட அதிகம் கொல்லப்படுகின்றனர். பல ஆண்கள் விபத்துகளிலும் நோய்களிலும் பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாகும். எந்த ஒரு காலகட்டத்திலும் துணையை இழந்து வாழுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பர்.

இவ்வாறு இருப்பினும் பால் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, மூலம் (2000 est.).


இதை பகுத்து பார்த்தால்


பிறப்பின் போது : 1.05 ஆண்கள்/ பெண்கள்


15 வயதுக்கு கீழ் : 1.05 ஆண்கள்/ பெண்கள்


15 முதல் 64 வயது வரை : 1.02 ஆண்கள்/பெண்கள்


65 வயதுக்கு மேல் : 0.78 ஆண்கள்/ பெண்கள்


எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.

6. இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர்.


பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் அதை சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும். இதற்கு காரணம் இந்தியாவில் அதிகம் காணப்படும் பெண் சிசுக்கொலை எனும் பழக்கமாகும். இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இத்தீய பழக்கம் ஒழிக்கப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பார்கள்

சரி இப்போது புள்ளிவிவரத்திற்கு வருவோம்.


2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது.


கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.


2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,


பஹ்ரைன் 1.03 ஆண்கள்/பெண்கள்


ட்ஜிபௌடி 1.07 ஆண்கள்/பெண்கள்


ஜோர்டான் 1.1 ஆண்கள்/பெண்கள்


குவைத் 1.5 ஆண்கள்/பெண்கள்


ஓமன் 1.31 ஆண்கள்/பெண்கள்


கத்தார் 1.93 ஆண்கள்/பெண்கள்


சவுதி அரேபியா 1.24 ஆண்கள்/பெண்கள்


ஐக்கிய எமிரேட் 1.51 ஆண்கள்/பெண்கள்


டாக்டர் நாயக் அவர்களே இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் இதே நிலை உள்ளது.

7. உலகத்திலேயே ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.

உலக பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவே. உலகத்தில் 3,059,307,647 ஆண்களும் 3,019,466,887 பெண்களும் உள்ளனர் (மூலம்). அதாவது உலகத்தில் பெண்களை விட 40 மில்லியன் ஆண்கள் அதிகமாக உள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.

இல்லை, அமெரிக்காவில் 134,774,894 ஆண்களும் 140,787,779 பெண்களும் உள்ளனர், அஃதாவது 6 மில்லியன் பெண்கள் அதிகம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 5.9 மில்லியன் பெண்கள் 65 அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்களாவார்கள். (மூலம்)

நியூ யார்க்கில் மட்டும் ஆண்களை விட 1 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். நியூ யார்ர்கின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கம் (gays i.e sodomites) உள்ளவர்கள்.

நியூ யார்க் நகரத்தில் 3,437,687 ஆண்கள் மற்றும் 3,884,887 பெண்களும் உள்ளனர். அஃதாவது 447,000 பேர் பெண்கள் அதிகம் ( மூலம்). ஆனாலும் இதில் அதிக பட்சம் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உள்ளனர். நியூ யார்க் நகரத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்கள் என டாக்டர் நாயக் எப்படி முடிவு கட்டினார் என எனக்கு புரியவில்லை. 3,437,687 ஆண்கள் நியூயார்க்கில் உள்ளனர், இதில் 1,113,888 ஆண்களில் (32% ) திருமணமே ஆகாதவர்கள், மற்ற்வர்கள் திருமணமானோர்,விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோர். டாக்டர் நாயக்கின் கணக்கை அடைய வேண்டுமானால் நியூயார்க்கில் திருமணமாகாத ஆண்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவரே என்று சொல்லவேண்டும்d, இந்த கணக்கில் ஏனைய திருமணமானோர், விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோரும் அடங்குவர். டாக்டர் நாயக் இதை யோசித்து இருக்க மாட்டார், அதாவது பெண்களில் கூட ஓரினச்செர்க்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நியூயார்க்கில் 1,080,026 திருமணமாகாத பெண்கள் உள்ளனர். இதில் சிலர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடியவர்களாகவும் இருக்கலாம்!

அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் ஆண்களுக்கும் மேல் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்த ஆண்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்வதில்லை.

இந்த புள்ளி விவரத்திற்கு என்ன ஆதாரம்? ஓரினச்சேர்க்கை ஆண்களை பற்றி பேசும் டாக்டர் நாயக் ஓரினச்சேர்க்கை பெண்களை பற்றி கவனிக்க மறுக்கிறார்.

பிரிட்டனில் மட்டும் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

பிரிட்டனில் 29,303,077 ஆண்களும் 30,208,387 பெண்களும் உள்ளனர், அதாவது 1.6 மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர், இவர்கள் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.

ஜெர்மனியிலும் ஆண்களை விட 5 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

ஜெர்மனியில் 40,451,865 ஆண்களும் 42,345,543 பெண்களும் உள்ளனர். அஃதாவது 1,893,678 பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். இருப்பினும் ஆண்களைவிட அதிகமாக உள்ள 3 மில்லியன் பெண்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்! (மூலம்).

ரஷ்யாவில் ஆண்களை விட 9 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர். உலகம் முழுவதிலும் எவ்வளவு பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதை இறைவன் அறிவார்.

இதிலும் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்டவரே.

8. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு மனைவி என்ற சித்தாந்தம் நடைமுறையில் ஒத்துவராத ஒன்றாகும்.


ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு மனைவியை திருமணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பெண்களுக்கு கணவர்கள் கிடைக்கமாட்டார்கள் (அமெரிக்காவில் 25 மில்லியன் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய ஆண்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால்). அதேபோல் பிரிட்டனில் 4 மில்லியன் பெண்களுக்கும், ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்களும் ரஷ்யாவில் 9 மில்லியன் பெண்களுக்கும் கணவர்கள் கிடைக்கமாட்டார்கள்.

அமெரிக்காவில் 28,200,083 ஆண்களும் 23,434,118 பெண்களும் திருமணமே ஆகாதவர்களாக உள்ளனர்! (மூலம்). இந்த வேறுபாட்டைக்கொண்டு எப்படி பலதார மணத்தை அங்கீகரிக்க முடியும்? டாக்டர் நாயக் அவர்களின் இந்த ஓரினச் சேர்க்கை பற்றிய அவரது புள்ளிவிவரத்திற்கு ஆதாரத்தை கொடுக்கும் படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களை குறித்து டாக்டர் நாயக் அவர்களின் புள்ளிவிபரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் வெறும் 3 மில்லியன் பேரே ஓரினச்சேர்க்கை பழக்கம் இல்லாத வாலிபர்களாக இருப்பார்கள்.

ஒருவேளை உங்களுடைய அல்லது என்னுடைய தங்கை அமெரிக்காவில் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம், அவருக்கு திருமணம் ஆகியிராத பட்சத்தில் அவர் ஏற்கனவே திருமணமான ஆணைத்தான் திருமணம் செய்யமுடியும் அல்லது பொதுவான உடமையாக (Public property) இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாதோர் பலரிடம் இதை குறித்து கேட்டபோது நூற்றுக்கணக்கானோர் முதலாவது வழிமுறையே சிறந்தது என ஒத்துக்கொண்டனர். சில புத்திசாலிகள் மாத்திரம் தங்கள் தங்கையர் திருமணம் செய்யாமல் கன்னியாகவே வாழ அனுமதிப்போம் என்றனர்.

என்னது பொது உடைமையா??!! (Public property!??!), டாக்டர் நாயக் அவர்களின் தங்கையோ அல்லது வேறு எவரின் தங்கையோ யாருக்கும் பொது உடமையாக இருப்பார்கள் என எனக்கு நம்பிக்கையில்லை. வேதம் நமக்கு இப்படி கூறுகிறது.

"மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும்தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி 1 கொரி 7:4

உயிரியல் பூர்வமாக எந்த ஒரு மனிதனோ மனுஷியோ வாழ் நாள் முழுவதும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது, ஒருவேளை சில விதிவிலக்குகள் அதுவும் பத்தாயிரத்தில் ஒன்று என இருக்கலாம். பெரும்பாலான மக்கள் திருமணம் செய்கின்றனர் அல்லது முறைகேடான பால் உறவு பழக்கங்களை கொண்டுள்ளனர். மனிதனுடைய உடலில் பால் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பிகள் வாயிலாக கலக்கின்றன. அதனால் தான் இஸ்லாமில் துறவற பழக்கமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.

மனிதனின் பால் உறவு வேட்கையை காரணம் காட்டி, பல தாரமணத்தையோ அல்லது தவறான பால் உறவின் தீய செயல்கள் செய்வதையோ நாம் நியாயப்படுத்த முடியாது. தேவன் நமக்கு பால் உறவு வேட்கையையும் கொடுத்திருக்கிறார் அதேபோல் இந்த பால் உறவு வேட்கையை தணித்துக்கொள்ள திருமணம் என்ற அருமையான எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார். எப்போதெல்லாம் நாம் தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகி பலதாரமணம் என்ற வகையிலோ அல்லது வேறு தவறான இச்சைகளை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்தாலோ நாம் அதன் பலனை அனுபவிக்கவேண்டும். இதைத்தான் வேதம் இவ்வாறு சொல்கிறது.

விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. (1 கொரி 7:8-11)

மேற்கத்திய சமுதாயத்தில் ஒரு மனிதன் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வதோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்துக்கொள்வதோ சகஜமான ஒன்று, இதனால் பெண் பாதுகாப்பில்லாத மற்றும் அவமானகரமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது. அதே மேற்கத்திய சமுதாயம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ளவோ அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதியளிப்பதில்லை. இதனால் கணவர் கிடைக்காத பெண் ஒன்று திருமணமான் ஆணை திருமணம் செய்யவேண்டும் அல்லது பொது உடமையாக வேண்டும். இஸ்லாம் மாத்திரமே முதலாவது வழிமுறையை ஆதரித்து இரண்டாவது வழிமுறையை எதிர்த்து தடை செய்கிறது. பலதார மணத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருப்பினும் பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் பாதுக்காகவே என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆண்கள் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்பதை டாக்டர் நாயக் எப்படி, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகிறார்? பெண்களும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துள்ளார்கள் என்பதை டாக்டர் நாயக் புறந்தள்ளிவிடுகிறார். ஒரு மனிதன் தானாகவும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளமுடியாது. பல மனைவிகள் வைத்துள்ள மனிதன் ஒருவன் முறைதவறிய உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதையும் டாக்டர் நாயக் மறந்துவிடுகிறார். மறுபடியும், பெண்கள் "பொது உடமைகள்" என்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விவரத்தை நாயக் சொல்லியுள்ளார்.


குர்ஆனிலும் பெண்கள் எவ்வாறு "மதிப்பாக வைக்கப்படுகின்றனர்" என்பதை கீழ்க்கண்ட வாசகத்தில் காணலாம்.

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (2:223)

Polyandry


கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?


பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அஸ்திபாரம் நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.

மேற்கண்ட குர்‍ஆன் வசனமானது, இக்கேள்விக்கான பதிலை தருகிறது: குர்‍ஆனின் படி பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை காண்போம்.


1. ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரை எளிதில் அடையாளம் காணப்படும். ஆனால் பல ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தாயை வைத்தே அடையாளம் காணப்படுமேயன்றி தந்தையை வைத்து அல்ல. இஸ்லாம் பெற்றோர் இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உளவியல் நிபுணரும் நமக்கு கூறுவது என்னவெனில் பெற்றோரை அறியாத குழந்தைகள் அதிலும் குறிப்பாக தகப்பனை அடையாளம் தெரியாத குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களது குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்காது. இதனாலேயே விலை மாதரின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. இப்படி திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தகப்பன் என சொல்ல நேரிடும். சமீப காலங்களில் ஒரு குழந்தையின் தாய் தகப்பனை மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த ஒரு வாதம் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

சரி அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்துள்ளவர் வீடுகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்குமா? முக்கியமாக வாலிப பெண் பிள்ளைகளுக்கு?

2. இயற்கையாகவே பெண்ணைவிட ஆண் பலதார மண எண்ணம் உள்ளவராக இருக்கின்றனர்.

மனிதன் இயல்பாகவே பாவ சுபாவ உணர்ச்சிகள் உள்ளவன். ஆனால் அதற்காக நம் பாவமான சுபாவங்களை நியாயப்படுத்த‌ பலதார மனம் போன்ற பாவமான அமைப்பை நாம் உருவாக்க வேண்டுமா? தேவன் ஒரு பாவத்தை மற்றொரு பாவத்தை விட லேசானது என ஏற்றுக்கொள்வாரா?

3. உயிரியல் ரீதியாக பல மனைவிகளை உடையவன் தனது கடமைகளை தவறாமல் செய்யமுடியும், ஆனால் பல கணவரை உடைய பெண்ணுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது கடமைகளை செய்ய முடியாது.

டாக்டர் நாயக் இந்த விஷயத்தை மேலும் தெளிவு படுத்தியிருக்கலாம், உண்மையாகவே, இதில் எந்த தெளிவும் இல்லை.

4. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்திருந்தால் பலரோடு பால் உறவு கொள்ள நேரிடும். அப்போது பால்வினை நோய்கள் அவர்கள் மூலமாக அவர்களது கணவர்களுக்கு பரவ நேரிடும். அவர்களது கணவர்கள் வேறு தொடர்புகள் வைத்திருக்குக்காதபோதே இந்த நிலை தான். ஆனால் ஒரு மனிதன் பல மனைவிகள் வைத்திருக்கும் போது நோய் பரவும் வாய்ப்புகள் குறைவே. இது போன்ற காரணங்கள் நாம் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவையே. இது போன்ற பல காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது திவ்ய ஞானத்தால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கத்தை தடைசெய்திருக்கிறார்.

இவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஒரு வேளை இவ்வித அமைப்பில் உள்ள மக்கள் வேறு எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்தாலும் எங்ஙனம் பால் ரீதியான நோய்கள் பரவுகின்றன?


ஆக மொத்தத்தில் ஒரு தார மணம் என்ற வழக்கமே மனுக்குலத்திற்கு கடவுள் காட்டியுள்ள வழியாகும். இதிலிருந்து நாம் மாறுபட்டால் பாடுபடவேண்டியதுதான். மற்ற மத வழக்கங்களில் உள்ள பலதார மணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாமில் உள்ள பலதார வழக்கத்தை நாம் நியாயப்படுத்த முடியாது. விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, இச்சை போன்ற பாவங்களை மேற்கொள்ள ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதம் தேவனுடைய பரிசுத்தத்தையும் ஞானத்தையும் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும்.


ஆங்கில மூலம்: Response to Zakir Naik - Polygamy


ஆதார நூற்பட்டியல்:

[1] CIA - The World Factbook 2000: Part A (Afghanistan - Cayman Islands) Part B (Central African Republic - Haiti) Part C (Honduras - Madagascar) Part D (Malawi - Paraguay) Part E (Peru - Tromelin Island) Part F (Tunisia - Zimbabwe)
ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்
Isa Koran Home Page
Back - Dr. Zakir Naik Rebuttal Index

Tamil Source: http://www.answering-islam.org/tamil/responses/responses-to-dr-zakir-naik/polygamy.html