ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 3 செப்டம்பர், 2007

ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல

 
BIBLE FAQ: ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல


முகமது இறைத்தூதுவராக வந்தார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்ல, மற்ற வேதங்களில் அவர் வருகைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் தேடிக்கொண்டும், மாற்று மத வேதங்களில் சில வசனங்கள எடுத்துக்கொண்டு, இந்த வசனம் முகமதுவின் வருகைப் பற்றி சொல்கிறது என்று தவறாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

இப்படி இஸ்லாமியர்கள் சொல்கின்ற வசனங்களில் "பைபிளின் பழைய ஏற்பாட்டின்" ஆபகூக் புத்தகமும் ஒன்று. ஆபகூக் 3:3ம் வசனத்தில் வரும் "பரிசுத்தர் பாரான் வனாந்திரத்திலிருந்து வந்தார்" என்ற வாக்கியம் "முகமதுவை" குறிக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர்.

இவர்களின் இந்த வாதம் தவறானது. இந்த வசனம் குறிப்பிடும் நபர் தேவனாவார் . இவர்களின் இந்த வாதம் சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை அலசுகிறது
.


ஆபகூக் 3:3ம் வசனம் குறிப்பிடுவது "தேவன் அல்லது இறைவனைத் தான், முகமதுவை அல்ல" என்பதற்கான காரணங்கள்:

1. பாரான் என்பது மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இது தவறான ஆதாரமற்ற வாதம் என்பதை கீழே உள்ள கட்டுரை தெளிவாக விளக்குகிறது. இக்கட்டுரையை முதலாவது படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

கட்டுரை-1: பாரான் என்பது மக்கா அல்ல!

2. இஸ்லாமியர்கள் உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது "முகமதுவைத் தான்" என்று சொல்கிறார்கள். இந்த வாதமும் தவறானது என்றும், இஸ்லாமியர்கள் பைபிள் வசனங்களுக்கு புது பொருள் கூறுகிறார்கள் என்றும், உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது "கர்த்தரைத் தான்" முகமதுவை அல்ல என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

கட்டுரை-2: உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடும் நபர் "கர்த்தர்" முமகது அல்ல!


மேற்கண்ட இரண்டு கட்டுரைகள், இந்த தற்போதைய கட்டுரைக்கு அடித்தளமாக அமையும். எனவே அவைகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது ஆபகூக் 3:3ம் வசன விளக்கத்திற்குச் செல்வோம்.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் முன்வைத்த வாதம்:

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.

Source


1. அல்லா அனுப்பியது "தோரா, ஜபூர், இஞ்ஜில்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர், பின் ஏன் ஆபகூக் லிருந்து ஆதாரம்?

இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி மோசேவிற்கு "தோராவையும் (ஆதியாகமம் – உபாகமம்)", தாவீதுக்கு "ஜபூர் - சங்கீதம் " என்ற வேதத்தையும், இயேசுவிற்கு "இஞ்ஜில்" என்ற வேதத்தையும் அல்லா இறக்கினான். இவைகள் தவிர பைபிளில் உள்ள மற்ற தீர்க்கதரிசன புத்தகங்கள் அல்லா இறக்கவில்லை என்றும், இன்னும் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்களுக்கு அடுத்துள்ள புத்தகங்கள் வேதங்கள் அல்ல என்று நம்புகின்றனர்[1].

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், அதாவது "ஆபகூக்" என்ற புத்தகம் அல்லா இறக்கியதாக நம்பும் "தோரா, ஜபூர் மற்றும் இஞ்ஜில்" போன்ற மூன்று வேதங்களிலும் வராது.

என் கேள்வி:

1. இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள மற்றும் அல்லா இறக்கியதாகச் சொல்லும் தோரா(ஆதியாகமம் -உபாகமம்), ஜபூர் ( சங்கீதம் ) மற்றும் இஞ்ஜில் வேதத்தையே நம்புவதில்லை. ஆனால், அல்லா இறக்கியதாகச் சொல்லாத "ஆபகூக்" என்ற பைபிள் புத்தகத்திலிருந்து மட்டும் ஏன் அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கின்றனர்?

2. பைபிளின் "ஆபகூக்" புத்தகத்தைப் பற்றி,  ஏதாவது வசனத்தை அல்லா குர்-ஆனில் சொல்லியுள்ளாரா?

3. ஆபகூக் 3:3ம் வசனத்தை நம்பும் இஸ்லாமியர்கள், இந்த ஆபகூக் புத்தகம் முழுவதும் திருத்தப்படவில்லை என்று நம்புகிறார்களா?

4. தீர்க்கதரிசி ஆபகூக் போல பைபிளின் மற்ற தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, எரேமிய, தானியேல் இன்னும் பல தீர்க்கதரிசிகள் புத்தகங்களையும் இஸ்லாமியகள் நம்புகிறார்கள் என்று நாம் நினைக்கலாமா?


2. ஆபகூக் புத்தகத்தின் சாராம்சம் (சாராம்சத்திற்கு வெளியே பொருள் தேடும் இஸ்லாமியர்கள்):

ஆபகூக் புத்தகம் முழுவதும் ஒரு முறை படித்துப்பாருங்கள். மக்களின் துன்மார்க்க வாழ்க்கையை பார்த்து தேவனிடம் முறையிடுகிறார்(ஆபகூக் அதிகாரங்கள் 1, 2) மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் தேவனின் அதிசய செயலை நினைத்து அவர் மீது சார்ந்துக்கொள்கிறார். தேவன் மூலமாக வரும் இரட்சிப்பை நினைத்து துதிபாடுகிறார்.


ஆபகூக் 1:2-4

2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

4. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறதுஎதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்படவில்லை. தேவன் கடந்த காலத்தில் செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சொல்வது போல, முகமது பாரானிலிருந்து வருவார் என்று ஆபகூக் சொல்லவில்லை, இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

ஆபகூக் புத்தகத்தில் உள்ள மூன்று அதிகாரங்களை படிக்கும்படி இஸ்லாமியர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சில இஸ்லாமிய அறிஞர்களின் இந்த வாதம் தவறானது என்பது புரியும்.

3. ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு பாடலே (விண்ணப்பம்) ஒழிய, முகமது வருகையின் தீர்க்கதரிசனமல்ல?

ஆபகூக 3:1ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, இந்த மூன்றாம் அதிகாரம் " ஒரு பாடலாகிய விண்ணப்பம்" என்று, இஸ்லாமியர்களின் கூற்றுப்படி இது ஒரு "எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் அல்ல ". பார்க்க ஆபகூக் 3:1

ஆபகூக் 3:1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.

A prayer of Habakkuk the prophet upon Shigionothஇந்த பாடல் ஒரு வகையான வாத்தியத்தில் (அல்லது) ஒரு குறிப்பிட்ட இராகத்தில்  பாடின பாடலாகும். அந்த வாத்தியம் அல்லது இராகம் சிகாயோனில் [2] என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வாத்தியத்தில் தாவீது இராஜா கூட ஒரு சங்கீதம் பாடினார், இதை ஏழாம் சங்கீதம் தலைப்பு பகுதியில் காணலாம். இந்த வார்த்தை ஏழாம் சங்கீதத்தில் ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது. (Note: Shiggaion = singular, Shigionoth = Plural)

சங்கீதம் 7ன் தலைப்பு பகுதி: பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கி பாடின சீகாயோன் என்னும் சங்கீதம்.

A shiggaion of David, which he sang of the LORD concerning Cush, a Benjamite. (NIV Study Bible)இந்த ஆபகூக் மூன்றாம் அதிகாரத்தின் முதல் சில வசனங்கள்(13 வசனங்கள்)   ஒரு பாடல் தான் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம், ஆபகூக் 13ம் & 3:3 ம்   வசனத்தின் கடைசியில் உள்ள "சேலா" என்ற வார்த்தையை பார்த்தால் புரியும் .

ஆபகூக் 3:13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.இந்த "சேலா " என்ற வார்த்தை ஜபூர் என்ற சங்கீத புத்தகத்தில் 39 சங்கீதங்களுக்கு வருகிறது (சங்கீதம் 3,4,7,9,20, 140,143 etc…). இது பாடல்களுக்கு, அல்லது இசைக்கு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். இதனை சங்கீதத்தை(Psalm)  படிப்பவர்கள் கவனிக்கலாம்.

இந்த விவரங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறன, இந்த ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு விண்ணப்பம் அல்லது பாடலாகிய விண்ணப்பம் என்று. எனவே, ஆபகூக் 3:3ம் வசனம் முகமதுவினுடைய வருகையின் தீர்க்கதரிசனம் அல்ல என்பது தெளிவு.

4. ஆபகூக் 3:3 வசன "பரிசுத்தர்" என்பது தேவதூதரோ அல்லது மனிதனோ அல்ல, அவர் "கர்த்தர்"

இந்த வசனத்தில் ஆபகூக் தேவனைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் பேசுகிறார். இந்த இடத்தில் பரிசுத்தர் என்பது முகமதுவோ அல்லது இது தான் இஸ்லாம் தள கட்டுரை சொல்வது போல தேவதூதரோ அல்ல, இந்த வசனத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தர் "தேவன்" ஆவார் .

பாரான் என்பது மக்கா அல்ல. இது சீனாய் தீபகர்பத்தில் உள்ள பாரான் வனாந்திரமாகும். (
பாரான் என்பது மக்கா அல்ல என்ற கட்டுரையை இங்கு படிக்கவும் .)

ஆபகூக் 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா . அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.இந்த இடத்தில் ஆபகூக் கடந்த கால(Past not Future) நிகழ்ச்சியை குறிப்பிடுகிறாரே தவிர, தன் காலத்திலிருந்து 1200 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முகமதுவை குறித்து அவர் குறிப்பிடவில்லை. (ஆபகூக் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாகும்). "வந்தார்" என்ற வார்த்தை கடந்த காலத்தை குறிக்கும், "வருவார்" என்று ஆபகூக் கூறவில்லை என்பதை கவனிக்கவும்.

இந்த  ஆபகூக் பலமுறை கர்த்தர், தேவன், தேவரீர் என்று அடிக்கடி சொல்வதை காணலாம். அதாவது இவர் தேவனிடம் தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறதை பார்க்கலாம்.

பரிசுத்தர் என்ற வார்த்தையை தேவன் தன்னை குறிப்பிட பலமுறை பயன்படுத்தியுள்ளார். சில நேரங்களில் பக்தர்கள் "தேவன்" என்ற வார்த்தையும், "பரிசுத்தர்" என்ற வார்த்தையையும் சேர்த்தே (அடுத்ததடுத்து) பயன்படுத்தியுள்ளனர்.


ஆபகூக் 1:12-13      12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா ? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?

12 O LORD, are you not from everlasting?  My God, my Holy One, we will not die.  O LORD, you have appointed them to execute judgment;  O Rock, you have ordained them to punish.

     13 Your eyes are too pure to look on evil;  you cannot tolerate wrong. Why then do you tolerate the treacherous?  Why are you silent while the wicked 
     swallow up those more righteous than themselves?

எசேக்கியேல்: 39:7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

Ezekiel 39: 7 " 'I will make known my holy name among my people Israel. I will no longer let my holy name be profaned, and the nations will know that I the LORD am the Holy One in Israel.

ஓசியா: 11:9 என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.

Hosea 11:9 I will not carry out my fierce anger, nor will I turn and devastate Ephraim. For I am God, and not man— the Holy One among you. I will not come in wrathஇந்த மேலே சொல்லப்பட்ட வசனங்களைக் கண்டும் நீங்கள் இன்னும் "பரிசுத்தர்" என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்டது "தேவன்" தான் என்பதை நம்பவில்லையானால், நான் இன்னும் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் நம்பமாட்டீர்கள்.

5. " தேவன்" என்பதை "முகமது" என்று சொல்வது இஸ்லாமியர்களுக்கு "ஷிர்க்" ஆகும்

இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்துக்கொண்டு வரும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், பைபிளில் எங்கெல்லாம் (தங்களுக்கு சாதகமான வசனங்களில்) "தேவன்" அல்லது "இறைவன்" என்று வருகிறதோ, அங்கெல்லாம் அந்த வார்த்தை குறிப்பிடுவது "முகமது" தான் என்று சொல்லிவருகிறார்கள்.

இது இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி "ஷிர்க் - SHIRK" ஆகும். அதாவது, அல்லாவிற்கு இணையாக மனிதனை ஒப்பிடுவது. இதை இவர்கள் தெரிந்து செய்கிறார்களோ தெரியாமல் செய்கிறார்களோ எனக்கு தெரியாது. முகமதுவை நபி என்று நிருபிக்க வேறு வழி ஏதாவது தேடினால் அவர்களுக்கு நல்லது, இல்லையென்றால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்திற்கு ஆளாகவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


6. பாரான் மலை அரேபியாவின் "ஹிரா" மலை அல்ல.

பாரான் என்பது மக்கா அல்ல என்பதை நாம் முன்பே பார்த்தோம். இங்கு இது தான் இஸ்லாம் தள நண்பர் எழுதுகிறார், பாரான் மலை என்பது "ஹிரா" மலையாகும் என்று. இதற்கு எந்த ஆதாரமும் காட்டமுடியாது.

இஸ்லாமியர்களின் வாதம் தவறானது என்று இது வரை நாம் பார்த்த விவரங்கள் மிகத்தெளிவாகச் சொல்கிறது. இவர்களுடைய வாதம் வெறும் ஆதாரமில்லாத வாதமே ஒழிய வேறில்லை.

7. ஆபகூக் இந்த வாதத்தைப் பற்றி இதர இஸ்லாமிய அறிஞர்கள்:

டாக்டர் ஜமால் பதாவி: இவர் இந்த வசனத்தைப் பற்றி பேசும் போது ஒருபடி மேலே சென்று, பைபிளின் பொருள் மாறும்படி சில வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதி தன் வாதத்தை முன்வைக்கிறார்
.


Dr. Jamal Badawi also claimed that, "Habakkuk 3:3 speaks of God (God's help) coming from Te'man (an Oasis North of Medina according to J. Hasting's Dictionary of the Bible), and the holy one (coming) from Paran. That holy one who under persecution migrated from Paran (Mecca) to be received enthusiastically in Medina was none but prophet Muhammad." Source :   http://bibleandquran.com/quran-word-of-god8.htm

தேவன் என்று வரும் வார்த்தையை தேவனின் உதவி அதாவது God's Help என்று அடைப்பு குறிக்குள் போட்டுவிட்டு இவர் பொருள் கூறுகிறார். "God's Help" என்று எழுதினால் தான், முகமதுவிற்கு உதவியாக இருக்கும் என்று இவர் எழுதுகிறார்.

இன்னொரு இஸ்லாமிய சகோதரர் தேவன் என்ற வார்த்தைக்கு பக்கத்தில் His Guidance என்று எழுதி வசனத்தை வெளியிடுகிறார். உண்மையில் அந்த வசனத்தில் தேவன் என்ற வார்த்தை உள்ளதே தவிர "தேவனின் உதவி" அல்லது God's Guidance என்று இல்லை. இவைகள் எல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் திருவிளையாடல்கள். Source:  
http://www.answering-islam.de/Main/Muhammad/Foretold/mish1a.html  முடிவுரை:

முடிவாக முகமதுப் பற்றி ஒரு வசனமும் பைபிளில் இல்லை. அப்படி இருந்து இருந்தால், அதை கிறிஸ்தவர்கள் தான் முதலாவது நம்பியிருப்பார்கள். மாற்று மத வேதங்களை எப்படியெல்லாம் திருத்திச் சொல்லவேண்டுமோ அப்படியெல்லாம் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் திருத்திச் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.

இயேசுவிற்கு அடுத்து இன்னொருவர் வரவேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமானால், கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள், பல பொய்யைச் சொல்வார்கள், ஏன் பல அற்புதங்களையும் செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. இயேசு தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை இஸ்லாமிய அன்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஜெபத்துடன் முடிக்கிறேன்.


[1] இஸ்லாமியர்கள் பைபிளிலுள்ள எந்த புத்தகத்தையும் அல்லாவின் வேதம் என்று நம்புவதில்லை, அல்லாவே அவைகளை இறக்கினான் என்று குர்-ஆனில் சொல்லியிருந்தாலும். தோரா, ஜபூர், இஞ்ஜில் கூட திருத்தப்பட்டது என்று சொல்லிவருகிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு முகமதுவை நபி என்று காட்ட (மக்களை குழப்ப) பைபிள் வசனங்கள் வேண்டும்.

[2] Q: In Hab 3:1, what is a shigionoth?

A: It is either a musical instrument, or possibly a style of music. We do not have any more details of the instrument today. It appears to be the plural form of Shiggaion, which Psalm 7 mentions. Source : 
http://www.muslimhope.com/BibleAnswers/hab.htm  


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Anyway
Quran is a last Message from Goad who create the wold(Allah,qartar) ok
no need to discus read the quran
u will understand
The world's last moment
Ur Jeesus will come back
he will Tell bout Islam & Quran & Mohammed (Who Finalize the Goad's Message)
He will Gide the quran(bcs it is Completed Way)
O Pls try to learn About Islam
not a joke
otherwise u will go to hell(Thats True)
bye

M saleh சொன்னது…

Anyway
Quran is a last Message from Goad who create the wold(Allah,qartar) ok
no need to discus read the quran
u will understand
The world's last moment
Ur Jeesus will come back
he will Tell bout Islam & Quran & Mohammed (Who Finalize the Goad's Message)
He will Gide the quran(bcs it is Completed Way)
O Pls try to learn About Islam
not a joke
otherwise u will go to hell(Thats True)

பெயரில்லா சொன்னது…

Anyway
Quran is a last Message from Goad who create the wold(Allah,qartar) ok
no need to discus read the quran
u will understand
The world's last moment
Ur Jeesus will come back
he will Tell bout Islam & Quran & Mohammed (Who Finalize the Goad's Message)
He will Gide the quran(bcs it is Completed Way)
O Pls try to learn About Islam
not a joke
otherwise u will go to hell(Thats True)