உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே "2015ம் ஆண்டு ரமளான் மாதத்தில்" கடித உரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவைகளை படிக்க இங்குசொடுக்கவும்.
இதுவரை ஏழு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த எட்டாவது கடிதத்தில் உமரின் தம்பி முன்வைத்த வாதம் "முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனதால் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் வந்தன" என்பதாகும். உண்மையாகவே இது மட்டும் தான் காரணமா? அல்லது அல்லாஹ் இதற்கு காரணமா? இக்கேள்விகளுக்கு இக்கடிதம் பதில் அளிக்கும்.
முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்
அன்புள்ள தம்பிக்கு,
உன் அண்ணன் உனக்கு இயேசுவின் பெயரில் சமாதானம் கூறி எழுதிக்கொள்வது. உனக்காக நாங்கள் அனுதினமும் ஜெபிக்கிறோம். நீ மனம் திறந்து உன் கேள்விகளை, சந்தேகங்களை எனக்கு எழுதுகின்றபடியால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது மட்டுமல்ல, என் மீது நீ வைக்கும் குற்றச்சாட்டுகளையும் நான் ஒரு ஆரோக்கியமான உரையாடலின் ஒரு அங்கம் என்றே கருதுகிறேன்.
முஸ்லிமல்லாதவர்கள், இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, ஒவ்வொரு முஸ்லிமும் வெவ்வேறு வகையாக அதற்கு பதில்(அடி) கொடுக்கிறார்கள்:
• சில முஸ்லிம்கள், கண்டும் காணதவர் போல இருந்துவிடுவதுண்டு.
• சில முஸ்லிம்கள், கெட்ட வார்த்தைகளால் திட்டுவிட்டு, வேறு ஒன்றையும் செய்ய திராணியில்லாதவர்களாக, திட்டியதே போதும், உள்ளத்திலிருந்த பாரமெல்லாம் இறங்கிவிட்டது என்றுச் சொல்லி திருப்தியாக இருந்துவிடுகிறார்கள்.
• சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சாபத்தைக் கூறுகிறார்கள், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமல், நீ நாசமடைவாய், அல்லாஹ் உன்னை தண்டிப்பான், நீ நரகத்துக்குச் செல்வாய் என்றுச் சொல்லிவிட்டு, அமைதியாக ஜகா வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
• சில முஸ்லிம்கள், ஒரு படி மேலே சென்று விமர்சனம் செய்தவனின் குடும்ப நபர்களை முக்கியமாக பெண்களை படுப்பதற்கு அழைப்பார்கள். எதிரிகளாக பாவிப்பவர்களின் குடும்ப பெண்களை படுப்பதற்கு அழைக்கும் ஆசையை இவர்கள் உள்ளத்தில் போட்டவர்கள்/வளர்த்தவர்கள் யார் என்பதை எல்லாரும் ஆய்வு செய்யவேண்டும்.
• கடைசியாக, சில முஸ்லிம்கள் இஸ்லாம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஆய்வு செய்து, அனேக ஆதார நூல்களில் பதில்களைத் தேடிப்பார்த்து, உண்மை எதுவென்று கண்டுபிடிப்பார்கள். மேலும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் இதர மேதாவிகளிடமும் கேள்விகள் கேட்டு, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு, ஒரு ஆரோக்கியமான பதிலை தங்களால் முடிந்தவரை கொடுக்க முயற்சி எடுப்பார்கள். ஒரு வேளை இவர்களின் ஆய்வின் முடிவு, இஸ்லாமுக்கு எதிராக இருந்தால், தைரியமாக இஸ்லாமை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டார்கள்.
தம்பி, நீ கடைசியாக சொன்ன வகையைச் சார்ந்தவன் என்று நான் நம்புகிறேன்.
இப்போது உன் கடிதத்தில் நீ சுட்டிக்காட்டிய "முஹம்மதுவின் கடைசி ஆசை" பற்றிய விவரத்தையும், ஹதீஸையும் காண்போம்.
முதலாவது நீ எழுதிய வரிகளை இங்கு பதிக்கிறேன்:
"முஹம்மது தாம் மரிப்பதற்கு முன்பாக ஒரு எழுதுகோலையும், எழுதுவதற்கு பயன்படும் காகிதம் போன்ற ஒன்றையும் கேட்டார், அதில் அவர் சிலவற்றை எழுதவேண்டும் என்றும் விரும்பினார். அவர் தன் கடைசி ஆசையை எழுதியிருந்தால், இஸ்லாமிய சமுதாயம் குழப்பத்திற்குள்ளாக செல்லாது" என்றும் கூறினார். ஆனால், பல தடைகளினால் அது முடியாமல் போனது. ஆகையால் தான் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே சில சலசலப்புக்கள் காணப்பட்டது.
ஆனால், உமரண்ணா, நீங்கள் அனைத்திற்கும் இஸ்லாம் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள், இது சரியான விமர்சனம் அல்ல. ஆரம்ப கால சஹாபாக்கள் எதை செய்தாலும், இஸ்லாமிய இறையியலை குற்றப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது.
சஹாபாக்களைப் போலவே இயேசுவிற்கு பிறகு, அவரின் சீடர்கள் மத்தியிலேயேயும் இப்படிப்பட்ட சலசலப்புக்களும், வாக்குவாதங்களும், பிரச்சனைகளும் காணப்பட்டது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டும்.
தம்பி, உன்னுடைய மேற்கண்ட வாதத்தில் நியாயம் இல்லை. இறைவன் செய்கின்ற எதுவும் தவறிப்போகாது, அது முழுமையடையும். இதனை கீழ்கண்ட தலைப்புகளில் உனக்கு விளக்குகிறேன். இந்த கடிதத்தில், சஹாபாக்களும், முஹம்மதுவின் கடைசி ஆசையும் என்பதைப் பற்றிய விவரங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறேன்.
இயேசுவின் சீடர்கள் பற்றி நீ எழுதியவைகள் பற்றி தனி தலைப்பிலே உனக்கு இன்னொரு கடிதத்தை நான் எழுதுவேன்.
1) முஹம்மதுவின் கடைசி ஆசை - புகாரி ஹதீஸ்
2) உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?
3) முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்
4) முடிவுரை
முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்
1) முஹம்மதுவின் கடைசி ஆசை - புகாரி ஹதீஸ்
தம்பி, உன் கடிதத்தில் "முஹம்மதுவின் கடைசி ஆசை பல தடைகளினால் நிறைவேறாமல் போனது" என்று சொல்லியுள்ளாய். ஆனால், உண்மையாக அன்று என்ன நடந்தது என்று ஆதாரத்தோடு சொல்லவில்லை. உனக்காக, இந்த விஷயத்தைப் பற்றி வரும் புகாரி ஹதீஸை இங்கு பதிக்கிறேன்.
புகாரி 7366. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள்.உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என்றார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடந்தவற்றை சுருக்கமாக நான் உனக்கு தருகிறேன்.
அ) முஹம்மது மரண படுக்கையில் இருக்கிறார்
ஆ) உமர் உட்பட சிலர் அங்கு இருக்கிறார்கள்.
இ) இந்த கூட்டத்தைக் கண்டு, "ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன், இதன் மூலமாக நீங்கள் வழிதவறிப் போகமாட்டீர்கள் என்று" முஹம்மது சொல்கிறார்.
ஈ) எங்களுக்கு குர்-ஆனே போதும், இப்போது எதுவும் எழுதத்தேவையில்லை என்று உமர் மறுக்கிறார்.
உ) ஒரு சிலர் முஹம்மது கேட்டதை கொடுப்போம், அவர் முக்கியமான ஒன்றை எழுதித்தருவதாகச் சொல்கிறார் எனவே தடை செய்யவேண்டாமென்றுச் சொல்கிறார்கள்.
ஊ) வேறு சிலர், உமரின் வார்த்தைகளுக்கு இணங்க, கொடுக்க மறுக்கிறார்கள்.
எ) கூச்சல் அதிகமாவதைக் கண்ட முஹம்மது அனைவரையும் வெளியே போகும் படி கட்டளையிடுகிறார்.
ஏ) உமர் எண்ணியதுபோலவே நடந்தது.
2) உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?
என் அருமை தம்பி, புகாரி ஹதீஸை படித்தாயா?
23 ஆண்டு ஊழியம், ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான குர்-ஆன் வசனங்கள்(6236), பல வழிப்பறி கொள்ளைகள், பல போர்கள், பல கொலைகள், பல பெண்களின் கற்பு பாலைவன சூட்டில் சூரையாடப்பட்டது அதாவது, போரில் பிடிபட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், அடிமைகளாக விற்கப்பட்டார்கள். எத்தனை முறை ஜிப்ராயீல் தூதன் இறங்கி வந்து வசனத்தை இறக்கினானோ, எண்ணிக்கை முஹம்மதுவிற்குத் தான் தெரியும். மேற்கண்ட அனைத்து காரியங்களுக்கும் வெளிப்பாடுகளைப் பெற்ற முஹம்மது இன்று மரணப் படுக்கையில் கிடக்கிறார்.
இவர் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும் தான். அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு பயன்படும் ஒன்றை எழுதித் தருகிறேன் என்றார். நீங்கள் எழுதுவது எங்களுக்கு தேவையில்ல என்று மறுத்துவிட்டார். கூச்சலும் குழப்பமும் தொடங்கிவிட்டது. (முஹம்மதுவிற்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்று தானே முஸ்லிம்கள் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கு எப்படி இவர் பேனாவையும், பேப்பரையும் கேட்கிறார்…? இதைப் பற்றி மற்றொரு நேரத்தில் சிந்திப்போம்).
உமர் ஏன் தடை செய்யவேண்டும்? உமர் அறியாமையில் இதனைச் செய்தாரா? அல்லது இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது இருக்கின்றதா?
சஹாபாக்களின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை தீர்த்துவைத்த முஹம்மதுவின் கடைசி (பென்) ஆசை அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது. பாவம் முஹம்மது, ஒரு கைதிக்கு கூட உன் கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள், ஆனால் இவருக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது.
உங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட குர்-ஆன் எங்களுக்கு உண்டு, அதுவே போதும் என்று உமர் கூறினார். குர்-ஆன் போதுமென்று முஹம்மதுவிற்குத் தெரியாதா? உமர் முஹம்மதுவிற்கு புதிதாக ஏதாவது கற்றுக்கொடுக்க முடியுமா என்ன?
ஒரு வேளை, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும் என்று முஹம்மது எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டால், என்ன செய்வது? மதினாவின் முஸ்லிம்களாகிய அன்சாரிகளுக்கு அந்த நாற்காலி சென்றுவிட்டால் என்ன செய்யமுடியும்? முஹம்மது ஒரு முறை எழுதிவிட்டால், அதனை யாரும் மாற்றமுடியாது அல்லவா? இந்த சூழல் வருவதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்? தானாக வாய்ப்பு வந்தாலும் அதனை எப்படியாவது கெடுத்துவிடலாம் என்ற எண்ணம் உமரின் உள்ளத்தில் தோன்றியதோ?
அண்ணே! ஆட்சியை பிடிக்கவேண்டுமென்கிற இப்படிப்பட்ட கீழ்தரமான கேடுகெட்ட எண்ணங்கள் சஹாபாக்களுக்கு வராது என்றுச் சொல்லத்தோன்றுகிறதா தம்பி?
நீ கட்டாயம் இந்த ஹதீஸை படித்தே ஆகவேண்டும்.
புகாரி 4447. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். Book :64
இறைத்தூதரிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுவிடுவோம் என்று சிலர் சொல்லும் போது, அலி அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவருக்கு அடுத்தபடியாக யார் நாற்காலியை பிடிப்பது என்பதைப் பற்றி கேட்பது இந்த சூழலில் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. எனவே கேட்போம் என்றுச் சொன்னபோது, இதனை அலி மறுத்துவிட்டார். முஹம்மது மீது அலி அவர்களுக்கு நம்பிக்கையில்லை, ஒருவேளை ஆட்சி அதிகாரம் அன்சாரிகளுக்கு (மதினா முஸ்லிம்களுக்கு) என்று முஹம்மது சொல்லிவிட்டால், அதன் பிறகு தனக்கு அதிகாரம் வராது என்பதால், அலி மறுத்துவிட்டார்.
முஹம்மது சொன்னது கூட வஹி தான் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட வஹி மூலமாக வரும் செய்தி எங்களுக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார், ஒரு சஹாபா அலி, இவர் முஹம்மதுவின் அன்பான மகளின் கணவராவார். அல்லாஹ் எடுக்கும் முடிவு, தங்களுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? எனவே, வாய்ப்பையை உருவாக்கக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்வையே ஜெயித்துவிட்டார் அலி.
அலி அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செல்லக்கூடாது என்று ஆயிஷா அவர்கள் விரும்பியதாக, இன்னொரு ஹதீஸும் சொல்கிறது. முஹம்மது தனக்கு அடுத்து ஆட்சியை நடத்த அலியை தெரிவு செய்தாராமே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று ஆயிஷா அவர்கள் மறுத்தார்கள். இதனையும் நாம் புகாரி ஹதீஸில் காண்லாம்.
புகாரி 4459. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
"நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே" என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், 'இதைச் சொன்னவர் யார்?' என்ற கேட்டுவிட்டு, '(நபி(ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?' என்று கேட்டார்கள். Book :64
சஹாபாக்கள் - பொறுக்கி எடுத்த இஸ்லாமிய முத்துக்கள்:
அ) அலி அவர்கள் நல்ல வாய்ப்பை உருவாக்க மறுத்துவிட்டார்.
ஆ) உமர் அவர்கள், முஹம்மதுவினால் உண்டான வாய்ப்பையே தட்டிக் கழித்துவிட்டார்.
வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாமிய ஆரம்ப கால முஸ்லிம்கள். பாவம் முஹம்மது, அல்லாஹ்வே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் போது, இவரால் என்ன செய்யமுடியும்? அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் வல்லவராமே!
"அல்லாஹ்வா! சூழ்ச்சி செய்தான்! இல்லை இல்லை, சஹா பாக்கள் செய்த குழப்பத்தினாலும், ஆட்சி அதிகாரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசையினாலும் இப்படி எங்கள் இறைத்தூதருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை" என்று தம்பி நீ சொல்லுவாய். ஆனால், இது தவறு, உனக்கு இஸ்லாம் தெரியாது, குர்-ஆன் தெரியாது, அல்லாஹ்வைத் தெரியாது. இவைகள் எல்லாம், அல்லாஹ்வின் அனுமதிக்கு உட்பட்டுத் தான் நடந்தது. புரியவில்லையா! அடுத்த தலைப்பில் தரப்படும் குர்-ஆன் வசனங்களைப் பார். உண்மை புரியும்.
3) முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்
மேலோட்டமாக, மேற்கண்ட ஹதீஸ்களை பார்த்தால், உமரின் செயலினால் தான் முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று சொல்லத்தோன்றும். ஆனால் உண்மையில், அல்லாஹ் நாடவில்லை, அதனால், முஹம்மதுவின் ஆசை நிறைவேறவில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்.
அ) உச்சு சப்பு இல்லாத அற்பமான விஷயங்களுக்கு அல்லாஹ் வசனங்களை இறக்குவார்.
ஆ) முஹம்மதுவின் ஆசைகளை பூர்த்திசெய்ய அல்லாஹ்விடமிருந்து ஈமெயில் சீக்கிரமாக வரும்.
இ) வளர்ப்பு மகனின் மனைவியை எடுத்து முஹம்மதுவிற்கு கொடுப்பதற்கு அல்லாஹ்வின் வஹி இறங்கிவரும்.
ஆனால், 23 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் கனி கனிந்துவரும் நேரத்தில், சஹாபாக்கள் செய்யப்போக்கும் கூச்சல் குழப்பம், அதிகார துர்பியரோகம், கொலைகள், அவமானங்கள் போன்றவைகள் நடக்கப்போகின்ற நேரத்தில் "அந்த சமுதாயத்துக்கு தேவையான வஹி அல்லாஹ்விடமிருந்து வராது". ஒரு வேளை வந்திருந்தாலும், அதனை உமர் போன்ற ஒரு மனிதரால் தடை செய்யமுடியும் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.
அடுத்த தலைவர் யார் வரவேண்டும் என்ற ஒரு தெளிவான வசனம் குர்-ஆனில் இல்லை, ஹதீஸில் இல்லை, சாவதற்கு முன்பாக யாரோ ஒருவரை விரல் நீட்டி காட்டிவிட்டுச் செல்லலாம் என்று விரும்பினாலும், அல்லாஹ் நாடவில்லை.
குறைந்தபட்சம் ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கலாம் என்று விரும்பினாலும், இஸ்லாமிய உம்மா மக்கள் சும்மாவே சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.
ஒலி வடியில் தான் எங்கள் குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றுச் சொல்கின்ற முஸ்லிம்கள், ஏன் முஹம்மது ஒலிவடியில் தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டுச் சென்று இருக்கக்கூடாது என்று சிந்திக்கவேண்டும். கடைசி ஆசையைச் சொல்ல ஏன் கடைசி வரைக்கும் முஹம்மது காத்திருக்கும் படி அல்லாஹ் செய்தார்? ஒரு வாரம் அல்லது மாதத்துக்கு முன்பாகவே சொல்லிவிட்டுச் சென்று இருக்கலாம் அல்லவா? தம்பி, நீ இவைகளை ஆராய்ந்துப் பார்.
ஒட்டு மொத்த குற்றமும் அல்லாஹ்வுடையது தம்பி. உமரும் அலியும், ஆயிஷாவும் இதர சஹாபாக்களும் வெறும் நடிகர்கள் தான், அவர்களை நடிக்க வைப்பவன் யார் - அல்லாஹ் தான்.
தம்பி, இதுவரை முன்வைத்த விவரங்களுக்கு ஆமீன் என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள்:
அல்லாஹ்வின் சித்தமில்லாமல், எதுவும் உலகில் சிந்தாது:
குர்-ஆன் 9:51. "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
முஹம்மதுவின் கடைசி ஆசை, ஆசையாகவே நின்றுவிடும் என்று அல்லாஹ்வின் ஏட்டில் அல்லாஹ்வே முன்குறித்துள்ளான்:
குர்-ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
குர்-ஆன் 57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
நன்றும் தீதும் பிறர் தரவாரா! – அல்லாஹ்வே கொடுப்பார் (தன் நபி விஷயத்திலும்):
குர்-ஆன் 6:17. "(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
குர்-ஆன் 6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
குர்-ஆன் 76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
4) முடிவுரை
எனக்கன்பான தம்பியே, உனக்காக எவ்வளவு நேரத்தை ஒதுக்கி எழுதுகிறேன் என்று பார்த்தாயா? என் எழுத்துக்களால், ஒரே ஒரு ஆத்துமா பரலோகம் சென்றால், தூதர்கள் முன்பு மிகுந்த சந்தோஷம் அதனால் உண்டானால்,அதுவே எனக்கு போதும். அந்த ஆத்துமா என் தம்பியாக ஏன் இருக்கக்கூடாது?
முஹம்மதுவிற்கு அடுத்து, சஹாபாக்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டார்கள். வஹி இல்லா அனாதைகள், வழி தெரியாமல் தவிக்கும் பிள்ளைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் சென்றார்கள். இவர்களை வழிநடத்த ஜிப்ராயீல் வரவில்லை, வஹி வரவில்லை, இவர்களை சரியான வழியில் நடத்த குர்-ஆனில் தெளிவான வசனங்கள் இல்லை, அவ்வளவு ஏன், இவர்கள் மத்தியிலே ஒரு சகோதர அன்பு இல்லை.
குர்-ஆனின் இறையியல், இவர்களை மாற்றவில்லை, இவர்களை மற்ற போதுமானதாகவும் இல்லை. குர்-ஆன் வசனங்களுக்கு இவர்களை மாற்ற சக்தி இல்லை. தம்பி, இந்த வரிகளை நான் எழுதிக்கொண்டு இருக்கும் போதே, தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன.
• குவைத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.
• துனிசியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். (மூலம்)
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு
உன் அண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக