ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 27 மார்ச், 2016

முஹம்மதுவின் செய்தி, பரிசுத்த பவுலடியாரின் செய்தி – சாட்சிகள் எங்கே?

(2016ம் ஆண்டின் – இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்புக் கட்டுரை)

முன்னுரை: இன்று 2016ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, நான் திருச்சபையில் ஆராதனையில் உட்கார்ந்து இருந்தேன். இன்று உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறுகிறார்கள். என் சபையின் போதகர் இன்று 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து பிரசங்கம் செய்தார். அப்போது எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சுருக்கமாக இந்த கட்டுரையில் எழுதவுள்ளேன்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரங்கள் என்ன? முஹம்மதுவின் நபித்துவத்திற்கு சாட்சி யார்? பவுலடியாரின் சீஷத்துவத்திற்கு சாட்சி யார்? இந்த மூன்று கேள்விகள் இக்கட்டுரையில் கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. 


1) முஹம்மது பற்றிய கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு

முஸ்லிம்கள் முஹம்மது என்பவரை தீர்க்கதரிசியாக (இறைத்தூதராக) கருதுகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் குர்-ஆன் ஆகும்.  கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" என்று நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் பைபிள் ஆகும். 

முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசியாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம்கள் பெரும் முயற்சி எடுக்கிறார்கள், ஆனால், அவர்களால் வெற்றிப்பெற முடிவதில்லை. சில முஸ்லிம் அறிஞர்கள், பைபிளின் அடிப்படையிலேயே முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்க இமாலய முயற்சி எடுக்கிறார்கள், ஆனால், அதுவும் தோல்வி அடைகிறது. 

பைபிளின் படி, முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி ஆவார். இயேசுவின் போதனைகளின் படியும், அப்போஸ்தலர்களின் போதனைகளின் படியும், முஹம்மது ஒரு பொய்யராவார். 

2) பரிசுத்த பவுலடியார் பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு

புதிய ஏற்பாட்டின் படி, பவுலடியார் ஒரு அப்போஸ்தலர் ஆவார். இயேசுவின் சீடர்களாகிய பரிசுத்த பேதுரு, யோவான் போன்ற வரிசையில், பவுலடியாரையும் கிறிஸ்தவம் "அப்போஸ்தலர்" என்று அழைக்கிறது. ஆனால், முஸ்லிம்களின் படி, "பவுலடியார் ஒரு கள்ள சீடர், இயேசு போதிக்காதவற்றை போதித்தவர்". மேலும், "இயேசு தாம் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று போதித்தார், ஆனால், பவுல் வந்து இதனை மாற்றி, இயேசு தேவகுமாரன் என்றும், இயேசுவிற்கு தெய்வீகத்தன்மை உண்டு என்றும் போதித்தார்" என்று முஸ்லிம்கள் பரிசுத்த பவுலடியார் மீது குற்றம் சுமத்துகிறார்கள். 

ஒரு சராசரி மனிதன் புதிய ஏற்பாட்டை படிப்பாரானால், முஸ்லிம்களின் மேற்கண்ட நிலைப்பாட்டில் உள்ள பிழைகளை சுலபமாக கண்டுபிடிப்பார். இந்த சவாலை ஏற்கவிரும்பும் முஸ்லிம்கள் புதிய ஏற்பாட்டை படிக்க இன்று முதல் ஆரம்பிக்கட்டும்.

3) கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய  பரிசுத்த பவுலடியாரின் போதனைகளுக்கு சாட்சிகள் உண்டா? 

கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகும். இதனை சுருக்கமாக பரிசுத்த பவுலடியார், கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில்  எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 15:14
15:14  கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

மேற்கண்ட வசனத்தில் "கிறிஸ்தவத்தின் நம்பிக்கை" இயேசுவின் உயிர்த்தெழுதலில் அடங்கியுள்ளது என்பதை பரிசுத்த பவுலடியார் குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்தை முழுவதுமாக படிக்கவும், நான் இங்கு சில வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன். 

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் சாட்சிகள்? இதனை மக்கள் நம்புவது எப்படி?

பவுலடியார் ஒருவர் மட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கிறது என்று நாம் கருதலாம். ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அவரது உள்வட்ட சீடர்கள் தான் முதலாவது சாட்சிகள் என்று பவுலடியார் குறிப்பிடுகிறார், இதனை வரிசைப்படுத்தி எழுதுகிறார்:

1 கொரிந்தியர் 15:3 - 8

15:3  நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 
15:4  அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 
15:5  கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். 
15:6  அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். 
15:7  பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். 
15:8  எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். 

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியார் போதனை செய்துள்ளார், உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது கண்டவர் பவுலடியார் ஆவாரா? இல்லை! இவர் உயிர்த்தெழுந்த இயேசுவை கடைசியாக கண்டவர் ஆவார்.

மேலேயுள்ள வசனங்களை கவனிக்கும் போது, உயிர்தெழுந்த இயேசுவானவர்:
அ) பேதுருவிற்கு காணப்பட்டார்
ஆ) இதர சீடர்களுக்கு காணப்பட்டார்
இ) அதன் பின்பு, ஐந்நூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு காணப்பட்டார்
ஈ) கடைசியாக, பவுலடியாருக்கு காணப்பட்டார்.

இயேசுவின் சீடர்களில் சிலரும், அந்த ஐந்நூறு பேர்களில் பலரும் இந்த நிருபத்தை பவுலடியார் எழுதிய போது உயிரோடு இருந்துள்ளார்கள். அக்காலக்கட்டத்தில், பவுலடியாரின் போதனையின் நம்பகத்தன்மையை சரி பார்க்க விரும்புகிறவர்கள், உயிரோடு இருந்த இதர சீடர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். உயிர்த்தெழுந்த இயேசுவை பார்த்தவர்களில் பவுலடியார் தம்மை "கடைசியாக குறிப்பிடுகிறார்" என்பதை கவனிக்கவும். 

பரிசுத்த பவுலடியார் பொய் சொல்கிறார் என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், முதலாவது அவர்கள் இயேசுவின் முக்கிய சீடர்களாகிய பேதுரு, யோவான் போன்ற சீடர்களைத் தான் குற்றப்படுத்த வேண்டும். மேலும் இதர 500 சீடர்களை குற்றப்படுத்தவேண்டும். இந்த வசனத்தில் "நாங்கள்" என்று பவுலடியார் குறிப்பிடுவது, இயேசுவின் சீடர்களையும் சேர்த்துத் தான். 

1 கொரிந்தியர் 15:15  மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.


ஆனால், இயேசுவின் இந்த சீடர்கள் பற்றி 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் என்ன சொல்கிறது? இச்சீடர்கள் பொய் சொல்பவர்கள் என்றோ, இவர்களின் விசுவாசம் கெடுக்கப்பட்டுவிட்டதென்றோ சொல்கிறதா? குர்-ஆன் வசனத்தைப்  பாருங்கள்:

குர்-ஆன் 61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இந்த வசனத்தில் வரும் "அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்" என்பது இயேசுவின் சீடர்களைத் தான் குறிக்கும். இந்த வசனம் இறக்கப்பட்டது 7ம் நூற்றாண்டில், இயேசுவின் சீடர்களும் பவுலடியாரும் வாழ்ந்த காலம் முதலாம் நூற்றாண்டாகும்.  இந்த வசனத்தின் படி, வெற்றியாளர்களாக அல்லாஹ் மாற்றியது முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களாகிய இயேசுவின் சீடர்கள் மற்றும் பவுலடியாரைத் தான். மேலும் இவர்களின் போதனைகளின் படி வாழ்ந்த கிறிஸ்தவர்களைத் தான். 

இதுவரை கண்ட விஷயங்களின் படி, பரிசுத்த பவுலடியாரின் போதனைகளுக்கு முதலாவது சாட்சிகள், ஐந்நூறுக்கும் அதிகமான இயேசுவின் சீடர்கள் ஆவார்கள். 

பரிசுத்த பவுலடியாரின் செய்திக்கு இன்னொரு ஆதாரத்தையும் இயேசு கொடுத்திருந்தார், அது "அற்புதங்களும் அடையாளங்களுமாகும்". இறைவன் தன் இறைத்தூதர்களை அனுப்பும் போது, மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக, அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்துடன் அனுப்புவார். இதனை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளாகிய மோசே முதற்கொண்டு, இயேசுவின் அப்போஸ்தலர் பவுலடியார் வரை நாம் பரவலாக காணலாம். பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்களை காண புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை படிக்கவும். 

சுருக்கமாக சொல்வதென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும், இதனை இயேசுவின் சீடர்களோடு கூட சேர்ந்து, பவுலடியாரும் போதனை செய்துள்ளார். பவுலடியாரின் போதனைகளுக்கு இரண்டு வகையான சாட்சிகளை ஆதாரங்களை தேவன் கொடுத்திருந்தார். முதலாவது ஆதாரம், உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட ஐந்நூறுக்கும் அதிகமான சீடர்கள், இரண்டாவது ஆதாரம், பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்கள் ஆகும். இவ்விவரங்கள் முஸ்லிம்களின் பவுலடியார் பற்றிய குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கிவிடுகிறது. 

இப்போது, முஹம்மதுவின் செய்திக்கு என்ன சாட்சிகளை அல்லாஹ் கொடுத்துள்ளான் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

4) இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவமும், மற்றும் குர்-ஆனின் நம்பகத்தன்மையை நிருபிக்கும் சாட்சிகளும்

இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம் "முஹம்மதுவின் நபித்துவம் ஆகும்", இரண்டாவது அஸ்திபாரம் குர்-ஆன் ஆகும். முஹம்மதுவின் நபித்துவத்தின் வெளிப்பாடு தான் குர்-ஆன். குர்-ஆனில் உள்ளவைகளை முஹம்மது போதித்தார். குர்-ஆனில் இல்லாதவைகளையும் முஹம்மது போதித்தார், அதனை ஹதீஸ்கள் என்று கூறுவார்கள். 

பரிசுத்த பவுலடியாரின் "அப்போஸ்தலத்துவத்தையும், செய்தியையும் மேலே ஆய்வு செய்தது போல, முஹம்மதுவின் நபித்துவத்தையும், செய்தியையும் ஆய்வு செய்வோம்".

அ) முஹம்மது ஒரு இறைத்தூதர் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ஆ) குர்-ஆன் இறைவேதம் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

இந்த கேள்விகளை நாம் முஸ்லிம்களிடம் கேட்டால், 

முஹம்மது இறைத்தூதர் என்று குர்-ஆன் சொல்கிறது என்று முதலாவது கேள்விக்கு பதில் சொல்வார்கள்.
குர்-ஆன் இறைவேதம் என்று முஹம்மது சொல்கிறார் என்று இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வார்கள். 

இது எப்படிப்பட்ட வேடிக்கையாக இருக்கிறது என்று பாருங்கள். முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி, குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி. இவ்விரண்டிற்கு வெளியே இஸ்லாமில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இஸ்லாம் இறைவனால் (பைபிளின் தேவனால்) கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்றுச் சொல்வதற்கு, எந்த ஒரு ஆதாரத்தையும் இஸ்லாம் கொடுப்பதில்லை. பைபிளின் தீர்க்கதரிசிகளுக்கு தேவன் கொடுத்து அனுப்பியது போல, எந்த ஒரு அற்புதமும் முஹம்மதுவிற்கு  கொடுக்கப்படவில்லை.  

பரிசுத்த பவுலடியாருக்கு முன்னோடிகளாக, இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள், பவுலடியாரின் செய்தியை சரி பார்க்கும் உரைக்கற்களாக அப்போஸ்தலர்கள் இருந்தார்கள். ஆனால், முஹம்மதுவின் செய்தியை பரிசோதிக்க, இயேசுவிற்கு பிறகு முஹம்மதுவிற்கு முன்பு, எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லை, இதனை இஸ்லாமே சொல்கிறது. முஹம்மதுவின் செய்தியின் நம்பகத்தன்மையை சரிப்பார்க்க இருந்த ஒரே ஆதாரம் பைபிள் தான். இதனை குர்-ஆன் பல இடங்களில் சொல்லியுள்ளது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க குர்-ஆன் வந்தது என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்களே, பைபிளை நீதிபதியின் இருக்கையில் அமர்த்திவிட்டு, குற்றவாளி கூண்டில் தன்னை நிறுத்திக்கொண்டது. எந்த பைபிளை நிருபிக்க குர்-ஆன் வந்ததோ, அந்த பைபிளுக்கு எதிராக குர்-ஆன் போதனை செய்துள்ளது. 

ஆக, இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரமாகிய "முஹம்மதுவின் நபித்துவத்தை" நிருபிக்கும் ஆதாரம் இஸ்லாமிடம் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம். 

இரண்டாவதாக, பரிசுத்த பவுலடியாரின் மூலமாக இயேசு செய்த அற்புதங்களைப்போல, ஒரு அற்புதத்தையும் முஹம்மது மூலமாக அல்லாஹ் செய்யவில்லை. வியாதிகளை குணமாக்குவது, மரித்தவர்களை உயிரோடு எழுப்புவது போன்ற அற்புதங்கள் ஒன்றையும் முஹம்மது செய்து தன் "நபித்துவத்தையும், குர்-ஆன் இறைவேதம் தான்" என்பதையும் நிருபித்துக் கொள்ளவில்லை.

முடிவுரை: இச்சிறிய கட்டுரையில், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய "இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியாரின் செய்தியை பார்த்தோம்". தன் செய்திக்கு சாட்சிகளை பவுலடியார் கோர்வையாக கொடுத்துள்ளதை, 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து எடுத்துக் காட்டினோம். பழைய ஏற்பாட்டின் படி, ஒரு வழக்கிற்கு இரண்டு சாட்சிகள் தேவைப்படுகிறது, ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு 500க்கும் அதிகமானோரின் சாட்சி இருப்பதைக் கண்டோம். 

இதே போல, இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவம் மற்றும் குர்-ஆன் பற்றி என்னென்ன ஆதாரங்களை இஸ்லாம் கொடுத்துள்ளது என்று ஆய்வு செய்யும் போது, நமக்கு எந்த ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. முஹம்மதுவைப்போல கள்ளத்தீர்க்கதரிசிகள் அனேகர் எழும்புவார்கள், தங்கள் போதனைகளை ஒரு புத்தகமாக மாற்றி, இது தான் இறைவேதம் என்றுச் சொல்வார்கள். நீ ஒரு இறைத்தூதன் என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால், புத்தகத்திற்கு நேராக தங்கள் விரலை நீட்டுவார்கள். இந்த புத்தகம் இறைவேதம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், இறைத்தூதர் நான் சொல்கிறேன் என்றுச் சொல்வார்கள். ஏதாவது அற்புதம் செய்து உம் நபித்துவத்தை நிருபியுங்கள் என்று கேட்டால், இந்த புத்தகம் தான் என் அற்புதம் என்றுச் சொல்வார்கள். இப்படிப்பட்டவரை முஸ்லிம்கள் நபி என்று நம்புவார்களா? நிச்சயமாக இல்லை, இதே போலத்தான் கிறிஸ்தவர்களும் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை. 

குர்-ஆனின் இலக்கிய நடை "அது இறைவேதம் என்பதற்கு ஆதாரம்" என்று முஸ்லிம்கள்  சொன்னால், திருக்குறளும், இதர பண்டைய இலக்கியங்களும் குர்-ஆனை மிஞ்சும் இலக்கிய நடையில் இருப்பதை இவர்கள் கவனிக்க தவறுகிறார்கள் என்று அர்த்தம். மேலும், குர்-ஆன் இறைவேதம் என்று எண்ணும் முஸ்லிம்கள், இதர மொழி/தமிழ் இலக்கியங்களையும் இறைவேதம் என்று நம்பவேண்டும். 

குர்-ஆன் சொல்லும் செய்தி வேறு நூலில் இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், இது மிகப்பெரிய பொய்யாகும். நான் சவால் விடுகிறேன், குர்-ஆனை விட கருத்தில், கட்டளைகளில் மேன்மையுள்ள நூல்கள் உலகில் அனேகம் உள்ளன. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தரத்தில் குர்-ஆனின் சில கட்டளைகள் மிகவும் கேவலமானதாகவும், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கட்டளைகளாகவும் இருக்கின்றன (உதாரணத்திற்கு, ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களைச் செய்ய குர்-ஆன் அனுமதிப்பதையும், அடிமைப்பெண்களோடு விபச்சாரம் புரிவதை குர்-ஆன் அனுமதிப்பதையும் சொல்லலாம்.)

ஆக, இயேசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் நினைவு கூறும் இந்த நாளில், முஹம்மதுவின் நபித்துவம், பவுலின் அப்போஸ்தலத்துவத்திற்கு முன்பாக மண்டியிட்டுள்ளதை காணமுடிகின்றது. அருமையான அப்போஸ்தலர்களை கொடுத்த இயேசுவையும், இவ்வப்போஸ்தலர்கள் செய்த ஊழியத்தையும் பார்த்து நாங்கள் பிரமிக்கிறோம். இயேசுவை துதிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்தது போல, எங்களையும அவரது வருகையில் உயிர்ப்பிப்பார் என்ற விசுவாசத்துடன், இவ்வுலகப் பயணத்தை தைரியத்துடன் தொடருகிறோம்.

திங்கள், 14 மார்ச், 2016

கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் இஸ்லாமிய விமர்சனம்: முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகின்றதா?

முன்னுரை: கேரள உயர்நீதி மன்ற நீதிபதி கமல் பாஷா அவர்கள் கடந்த வாரம், இஸ்லாமிய சட்டம் பற்றி விமர்சித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தின் படி (Muslim Personal Law), முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படும் போது, ஏன்  முஸ்லிம் பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது? போன்ற சில கேள்விகளை எழுப்பினார். இக்கருத்துக்கு அனேக இஸ்லாமிய குழுக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவரின் இஸ்லாமிய விமர்சனத்தை இக்கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்யப் போகிறோம்.

1) கேரள உயர்நீதி மன்ற நீதிபதியின் விமர்சனம் என்ன?

2) இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா?

3) முஸ்லிம் பெண்களின் நன்மைக்காக, முஸ்லிம் ஆண்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்யவேண்டியவைகள் யாவை?

4) முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக முஸ்லிமல்லாத சட்ட நிபுனர்கள், வழக்கறிஞர்களின் கடமைகள் என்ன?

5) முஸ்லிம் தனியார் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும்?

6) முடிவுரை: 


1) கேரள உயர்நீதி மன்ற நீதிபதியின் விமர்சனம் என்ன?

கேரள உயர்நீதி மன்ற நீதிபதி, இந்தியாவில் தற்போது அமுலில் இருக்கும் "முஸ்லிம் தனியார் சட்டம்" பற்றி தம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அவரது விமர்சனத்தின் சுருக்கத்தை, "தினமலர்" மற்றும் "த ஹிந்து" நாளிதழ்களில் வந்த செய்திகளை தமிழில் இங்கு படிக்கவும். ஆங்கில தொடுப்புக்கள் இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. 

தினமலர் செய்தி: முஸ்லிம் ஆண்கள் மட்டும் 4 திருமணம் செய்யலாமா: கேரள ஐகோர்ட் நீதிபதி கேள்வி

திருவனந்தபுரம்;''முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,'' என, கேரள ஐகோர்ட் நீதிபதி கமல் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள மாநிலம், கோழிக்கோட்டில், தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: முஸ்லிம் தனிநபர் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது. இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது. இதுபோன்ற  தீவிரமான பிரச்னைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த சட்டப்படி, ஒரு ஆண், நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம். இதுபோல பல திருமணங்கள் செய்து கொள்ள, முஸ்லிம் நாடுகள் கூட தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது.

பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  பாதுகாப்பு கிடைக்கச் செய்ய முடியும்.இந்த விஷயங்களில் தலையிட, சுப்ரீம் கோர்ட் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது.இவ்வாறு அவர் பேசினார்.

த ஹிந்து நாளிதழ்:

இஸ்லாமிய சட்டம் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி

முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிரானது என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கெமால் பாஷா கூறியது முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

கோழிக்கோடில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிராக உள்ளது, இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகள் அதன் ஷரியத் சட்டத்தினால் முடக்கப்படுகின்றன, இது பெண் சமுதாயத்தின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக உள்ளது, இதனால் அனைவருக்குமான பொதுச் சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் நியாயம் இல்லை, உச்ச நீதிமன்றம் கூட இதில் தலையிட மறுத்து வருகிறது என்று பேசியுள்ளார்.

இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ள முஸ்லிம் குழுக்களும் கூட ஒன்று திரண்டு நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளன. 

சன்னி முஸ்லிம் பிரிவினர் நடத்தும் சுப்ரபாதம் என்ற மலையாள நாளிதழ் தனது தலையங்கத்தில் நீதிபதியின் இந்தக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

நீதிபதி பாஷாவின் கருத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது என்றும் முஸ்லிம் இருப்பின் மீதே கையை வைக்கிறது என்றும் அந்தத் தலையங்கம் சாடியுள்ளது.

2) இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா?

இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். பல ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்து சட்டவிஷயங்களில் அனுபவம் பெற்றவர்களைத் தான் நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இவர் ஒரு முஸ்லிம் பின்னணியைக் கொண்டவர்.  இஸ்லாமை விமர்சிப்பவர்கள் மீது முஸ்லிம்கள் பொதுவாக கூறும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், "இவர்கள் அறியாமையினால் இப்படி செய்கிறார்கள், இவர்களுக்கு இஸ்லாம் தெரியாது" என்பதாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தை விமர்சித்த இவர் ஒரு பாமர மனிதனல்ல, இவர் இந்திய சட்டம் தெரிந்தவர், இதுமட்டுமல்ல, அந்த சட்டம் தன் மாநிலத்தில் மீறப்படுகின்றதா என்பதை கவனித்து தண்டனை வழங்கும் நீதிபதி ஆவார். சட்டத்தை நிலை நாட்ட உதவி புரிபவர். மேலும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனியாக இருக்கும் "முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law)" பற்றியும் அறிந்தவர். எனவே, இவரது விமர்சனத்தை நாம் புறக்கணிக்கமுடியாது. எனவே இவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை காண்போம். 

"முஸ்லிம் தனியார் சட்டம்" பற்றி, கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் கருத்துக்கள்/விமர்சனங்கள்:

அ) முஸ்லிம் ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது?

ஆ) முஸ்லிம் தனியார் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது.

இ) இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது.

ஈ) பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

உ) கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  பாதுகாப்பு கிடைக்கச் செய்ய முடியும்.

ஊ) இந்த விஷயங்களில் தலையிட, சுப்ரீம் கோர்ட் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும்.

எ) இதுபோன்ற  தீவிரமான பிரச்சனைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இவைகள் செய்திகளில் வந்தவைகள் மட்டுமே, இன்னும அவர் எவைகளை பேசினாரோ நமக்குத் தெரியாது.

மனதில் "சிறிதாவது மனித நேயம்" ஒட்டிக்கொண்டிருக்கும்  எந்த மனிதனும் மேற்கண்ட விமர்சனங்களை குற்றப்படுத்த மாட்டான். தன்னைப் பெற்ற தாயையும், தான் பெற்ற மகள்களையும், தன்னோடு பிறந்த சகோதரிகளையும், தன் மனைவியையும் (ஒருமையை கவனிக்கவும்)  நேசிக்கும் எந்த ஒரு முஸ்லிமும் மேற்கண்டவைகளில் குறைகள் உள்ளது என்றுச் சொல்லமாட்டான். பெண்களுக்கு  நன்மைகள் உண்டாகவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இவரது விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள். 

ஆனால், அனேக இஸ்லாமிய குழுக்கள் இந்த விமர்சனங்களை கண்டித்தார்களாம். இந்த இஸ்லாமிய குழுக்களில் பெண்கள் இருப்பார்களா? நம் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய குழுக்களில், ஆண்களுக்கு சமமாக பெண்கள் கூட அதிகாரிகளாக (Board Members) இருக்கிறார்களா? 

நீதிபதி கமல் பாஷா அவர்கள் சொன்னது போல, பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட முன்வரவேண்டும். முக்கியமாக இஸ்லாமிய பெண்கள் முன்வரவேண்டும். ஆனால், இஸ்லாமிய பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதற்கு அனேக தடைகள் உள்ளன. 

முதலாவது முஸ்லிம் பெண்களில் படித்தவர்களின் சதவிகிதம் குறைவு. 

இரண்டாவது, முஸ்லிம் ஆண்கள் இவர்களின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள ஆண்களுக்கு தெரியாமல், இவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. 

மூன்றாவதாக, முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தில் திரை போட்டுக்கொண்டு இருப்பதினால் இதர பெண்களோடு சேர்ந்து, சில முக்கியமான உரிமை போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற மனதைரியத்தை பெரும்பான்மையாக பெருவதில்லைம்.

நான்காவதாக, இஸ்லாமையும், குர்-ஆனையும் விமர்சிப்பது இஸ்லாமியர்களில் தடை செய்யப்பட்டுள்ளது, இதில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்கு உரியது. எனவே இஸ்லாமிய சட்டம் பற்றி பேச முஸ்லிம் ஆண்களுக்கே தைரியம் இல்லாத போது, முஸ்லிம் பெண்களுக்கு எப்படி தைரியம் வரும்?

ஐந்தாவதாக, திருமணமான முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வது மிகக்குறைவு, மேலும், அவர்களின் எல்லா பொருளாதார தேவைக்காகவும் அவர்கள் ஆண்கள் மீதே சார்ந்து இருப்பதினால், அவர்களால் பெண்களின் பொதுநலத்தை மனதில் வைத்தவர்களாக, தங்கள் குடும்ப ஆண்களுக்கு எதிராக நின்று போராடுவது என்பது கடினமே, ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. 

இந்திய முஸ்லிம் பெண்கள் இப்படிப்பட்ட பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் போது, அவர்களை தூக்கிவிடுவது யார்? இவர்களுக்கு உதவி செய்ய மாற்று மதத்தவர்கள் முன்வருவது என்பது கடினம், எனவே மனிதாபமுள்ள முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் வழக்கறிஞர்களும் முன்வந்து உதவிகள் செய்தால் முஸ்லிம் பெண்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும்.

3) முஸ்லிம் பெண்களுக்கு நன்மை உண்டாகும் படி, முஸ்லிம் ஆண்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்யவேண்டியவைகள் யாவை?

நீதிபதி கமல் பாஷா அவர்களின் கருத்துப் படி, முஸ்லிம் தனியார் சட்டம் "முஸ்லிம் பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது மற்றும் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது".

இவரது இந்த விமர்சனத்தை குற்றப்படுத்துபவர்கள், முதலாவது "இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில்" இப்படிப்பட்ட நிலை இல்லை என்பதை நிருபிக்கவேண்டும். அதாவது, முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை ஆதரிப்பதில்லை என்பதையும், முஸ்லிம் பெண்களுக்கு சரிசமமான உரிமைகளை இச்சட்டம் வழங்குகிறது என்பதையும் அவர்கள் நிருபிக்கவேண்டும். இவர்களால் இதனை நிருபிக்க  முடியாவிட்டால், இந்த முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி கமல் பாஷா போன்ற இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட நீதிபதிகள் ஒன்று திரண்டு, தங்கள் சமுதாய பெண் இனத்திற்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடி, அவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவி செய்யவேண்டும், இதனை அவர்கள் செய்வார்களா?

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்க முஸ்லிம் ஆண்கள் முன்வரவில்லையென்றால், மற்றவர்கள் எவ்வளவு சத்தமாக குரல் கொடுத்தாலும் அது எடுபடாது. எனவே, தன் சகோதரி, தாய், மனைவி, மகள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், முஸ்லிம் தனியார் சட்டத்தை மறுபரிசோதனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் சில திருத்தங்களை கொண்டுவர போராடவேண்டும். 

கிறிஸ்தவ பெண்களின் உரிமைகளுக்காக, இந்து பெண்களின் உரிமைகளுக்காக போராடுங்கள் என்று நான் இங்கு முஸ்லிம் ஆண்களிடம் வேண்டுகோள் வைக்கவில்லை, அதற்கு பதிலாக, உங்கள் சமுதாய பெண்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்று தான் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். 

"எங்கள் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தேவை" என்று எங்களுக்குத் தெரியும் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்வார்களானால், பின் ஏன் முஸ்லிம் தனியார் சட்டம் பெண்களை கொடுமைப்படுத்துகிறது என்று நீதிபதி சொல்கிறார்? நாட்டு நடப்புக்களை பார்க்கும் போது, முஸ்லிம் பெண்கள் நீதிமன்றங்களில் போடும் வழக்குகளை ஆய்வு செய்யும் போது, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பரிக்கப்படுவதாக அறிகிறோமே அது ஏன்? 

இந்திய முஸ்லிம் வழக்கறிஞர்களே, நீதிபதிகளே! மாற்று மத பெண்களுக்காக நீங்கள் போராடி, நியாயம் பெற்று கொடுத்தது போற்றத்தக்கது. ஆனால், உங்கள் சமுதாய பெண்களின் நிலை என்ன? சம்பளத்திற்காக மாற்று மத பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் படி நீங்கள் உழைக்கிறீர்கள்! ஆனால், சம்பளம் இல்லாமல், உங்கள் முஸ்லிம் பெண்களுக்காக கொஞ்சம் உழைக்கக்கூடாதா? அவர்களுக்கு நியாயம் கிடைக்க சிறிது நேரம் ஒதுக்கக்கூடாதா? முஸ்லிம் பெண்களின் கண்ணீரை துடைக்க "முஸ்லிம் தனியார் சட்டத்தை சிறிது தூசு தட்டக்கூடாதா?".  பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் சட்டம் படித்தீர்களா? மருத்துவர்கள் ஆசிரியர்கள் சட்டம் படித்தவர்கள், இவர்கள் அனைவரும் சமுதாய மக்களுக்கு முக்கியமானவர்கள். இப்போது நாம் முஸ்லிம் பெண்களுக்காக கையேந்துவது சட்டம் படித்தவர்களிடம் தான். முஸ்லிம் சமுதாயம் என்றால் அது வெறும் முஸ்லிம் ஆண்களை மட்டுமே குறிக்கும் என்று கருதிவிட்டீர்களா? உங்கள் பெண் சமுதாயத்தின் மீது சிறிது இரக்கம் காட்டுங்கள் பிளீஸ்.

4) முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக முஸ்லிமல்லாத சட்ட நிபுனர்கள், வழக்கறிஞர்களின் கடமைகள் என்ன?

• இது முஸ்லிம் பெண்களின் பிரச்சனை இதற்கு நாங்கள் ஏன் உதவவேண்டும்?

• இது முஸ்லிம் சமுதாயப் பிரச்சனை, எங்களுக்கும் இப்பிரச்சனைகளுக்கும் சம்மந்தமில்லை!

• எங்கள் சமுதாய பெண்களுக்கு இந்திய சட்டம் இருக்கிறது, நாங்கள் இருக்கின்றோம், அது போதும் எங்களுக்கு, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன? 

நம்மில் (முஸ்லிமல்லாதவர்களில்) சிலர் இப்படி நினைக்கக்கூடும், ஆனால், நம் பக்கத்து வீடு எரிந்துக் கொண்டு இருந்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் அது நல்லதா? கண்ணில்லாத ஒருவன் ஒரு குழியை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை பார்த்த பின்பும் பார்வை இருக்கும் நாம் சும்மா இருக்கலாமா? ஓடிச்சென்று அவனுக்கு உதவ மாட்டோமா?

இந்து, கிறிஸ்தவ மற்றும் நாத்தீக வழக்கறிஞர்களே! முஸ்லிம் தனியார் சட்டத்தை (Muslim Personal Law),  ஆய்வு செய்து, இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கு கொடுத்திருக்கின்ற உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் விவரங்கள், முஸ்லிம் தனியார் சட்டத்தில் கண்டுபிடித்தால், அதனை சரிசெய்ய தேவையான உதவிகளைச் செய்வீர்களா? இது முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு மட்டுமல்ல, இதர மத தனியார் சட்டத்துக்கும் பொதுவானதே.

எல்லோரும் சட்டம் படிக்கவில்லை, படித்த உங்களைப்போல உள்ள சிலரிடம் தான் நாங்கள் கையேந்தி நிற்கிறோம். முஸ்லிம் பெண்களின் கண்ணீரை சிறிது எண்ணிப் பாருங்கள். 

நாங்கள் உதவி செய்யச் சென்றாலும், முஸ்லிம் பெண்களிடமிருந்தே எங்களுக்கு எதிர்ப்புக்கள் வருகின்றன, எனவே நாங்கள் எப்படி உதவி செய்வது என்று சிலர் கேட்கலாம். உங்கள் ஆதங்கம் உண்மை தான், ஆனால் எதிர்ப்பு இருக்கின்றதே என்றுச் சொல்லி, நாம் சும்மா உட்கார்ந்தால் எப்படி? குறைந்தபட்சம் முயற்சி எடுக்கலாமே!

5) முஸ்லிம் தனியார் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும்?

முதலாவது நாம், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளவைகளை  அறியவேண்டும். அதன் பிறகு, இந்திய சட்டத்தில் எல்லா பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளில் எவைகளை "முஸ்லிம் பெண்கள் இழக்கிறார்கள்" என்பதை ஆய்வு செய்யவேண்டும். இதனை யார் செய்வது? சட்டம் தெரிந்தவர்கள் தான் செய்யவேண்டும். இதனை ஒரு முஸ்லிம் செய்தால் எப்படி இருக்கும்? மிகவும் அருமையாக இருக்கும்.

இலங்கை முஸ்லிம் சகோதரரின் தைரியமான செயல்:

இலங்கை முஸ்லிம் சகோதரர் ஒருவர் இதனை செய்துள்ளார். அதாவது "இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை" பரிசீலித்து, சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். இவரது இதர கட்டுரைகளை நான் படிக்கவில்லை. இந்த ஒரு கட்டுரையையின் தொடுப்பை இங்கு தருகிறேன்.

முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பும் நீதி அமைச்சரும் –சில கவனயீர்ப்புக் குறிப்புகள்

இஸ்லாம் முஸ்லிம் பெண்ணின் திருமண வயதை வரையறை செய்யவில்லை. பருவமடைந்த பெண்களுக்கு திருமணம் முடிப் பதைத் தாமதிக்க வேண்டாம் என வந்துள்ள ஹதீஸ்களை நாம் தவறாகவே விளங்கி வைத்துள்ளோம். 12 வயதிலுள்ள ஒரு சிறுமி இன்னொரு குழந்தையைச் சுமக்கும் உடற் பக்குவம் பெற்றிருப்பாளா என்பதை நாம் சிந்திக்கத் தவறுகின்றோம்.

தம் தளத்தில் அவர் குறிப்பிட்ட முதலாவது திருத்தம், சிறுமிகளுக்கு திருமணம் செய்வது பற்றியதாகும். "சின்னங்சிறு சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைப்பது, அவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடிகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார். இவரின் முழூ கட்டுரையையும் படிக்க, மேலே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கவும். 

இந்த கட்டுரையை படிக்கும் நபர்களில், வழக்கறிஞர்கள் இருந்தால், அவர்கள் இதற்கு உதவலாம். 

முடிவுரை:

கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் ஒரு முக்கியமான விமர்சனம் இதுவாகும்: ''முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது".  

இவர் தன்னை ஒரு முஸ்லிமாக காட்டிக்கொண்டு, மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  "இந்திய முஸ்லிம் தனியார் சட்டம்" என்பது குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் இதனை விமர்சிக்கிறாரோ அவர் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் விமர்சிப்பதற்கு சமமாகும். முஸ்லிம் பெண்களின் திருமணம் பற்றி இவர் எழுப்பியுள்ள கேள்வி, குர்-ஆனின் ஆண் ஆதிக்க தன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இதனை நிச்சயமாக முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். ஒருவேளை, இவர் இஸ்லாமை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டாரோ? என்ற சந்தேகம் வருகிறது. இஸ்லாமை பின்பற்றிக் கொண்டு யார் இஸ்லாமை விமர்சிக்க முன்வருவார்கள்?  இதைப் பற்றி என் விமர்சனத்தை முடிந்தால் அடுத்த கட்டுரையில் எழுதுவேன்.

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/judge_kamal_basha_aimpl.html

திங்கள், 7 மார்ச், 2016

குர்-ஆன் 4:3 குறிப்பிடுவது ஓர் அடிமைப் பெண்ணையா? (அ) பல அடிமைப் பெண்களையா?

(மொழியாக்கம் செய்தவர்களின் குழப்பத்திற்கு காரணமென்ன?)

முன்னுரை: 

ஒரு புத்தகத்தை அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு முழு தரத்துடன் மொழியாக்கம் செய்வது என்பது சிறிது கடினமே. அதிலும், மத சம்மந்தப்பட்ட புத்தகங்களை மொழியாக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, குர்-ஆனை மற்றும் பைபிளைச் சொல்லலாம். இவைகளை தமிழாக்கம் செய்பவர்கள், தாங்கள் வாழும் காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். 

குர்-ஆனை எடுத்துக் கொண்டால், குர்-ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னணி என்ன? ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்ன? போன்ற சரித்திர விவரங்களை சரிவர அறிந்துக்கொண்டு அதன் பின்பு மொழியாக்கம் செய்யவேண்டும். குர்-ஆனின் முழு இறையியலை சரியாக புரிந்துக் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும். இதுமட்டுமல்ல, அரபி மொழியின் அக்கால இலக்கிய நடை, இலக்கணம், அரபி வார்த்தைகளின் சரியான அர்த்தங்கள் (அருஞ்சொற்பொருள்) போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும். 

முஸ்லிம் அறிஞர்களின் குர்-ஆன் மொழியாக்க குழப்பங்கள்

குர்-ஆனை மொழியாக்கம் செய்யும் முஸ்லிம் அறிஞர்களில் சிலர், இன்னொரு முக்கியமான விவரத்தையும் கவனத்தில் கொள்கிறார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் குர்-ஆன் வசனங்களை தெரிந்தே பொருளை மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் வரும் கெட்டப்பெயரை நீக்குவதற்கு சில வசனங்களின் பொருளை திருத்தி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படி செய்யப்பட்ட ஒரு வசனத்தை இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.

குர்-ஆன் 4:3ம் வசனம்:

ஒரு முஸ்லிம் எத்தனை அடிமைப் பெண்களோடு விபச்சாரம் செய்யலாம்? அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே எத்தனை அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளலாம்? இந்த விவரத்தை குர்-ஆன் 4:3ம் வசனத்தில் காணலாம். இந்த வசனத்தை ஐந்து குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து காண்போம்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லதுநீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள்.நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். 

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். 

பிஜே குர்-ஆன் தமிழாக்கம்:

4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.  

மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகம் – பதித்த குர்-ஆன் தமிழாக்கம்:

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்)பெண்களில் உங்களுக்கு விருப்பமானவகளை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்கமுடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும். 

(இந்த வாக்கியத்தில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை. 

"உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்)"

"அடிமைப்பெண்ணில் உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்" என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஆபாசமாக சொல்வதுபோல உள்ளது. எனவே, தற்போதைய கட்டுரையில் இந்த தமிழாக்கத்தை நாம் புறக்கணித்துவிடுவோம், தேவைப்பட்டால் இன்னொரு ஆய்வு கட்டுரையில் இந்த மொழியாக்கம் பற்றி காண்போம்.) 

ஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)

If ye fear that ye shall not be able to deal justly with the orphans, Marry women of your choice, Two or three or four; but if ye fear that ye shall not be able to deal justly (with them), then only one, or (a captive) that your right hands possess, that will be more suitable, to prevent you from doing injustice.

மூன்று இஸ்லாமிய அறிஞர்களை தர்மசங்கடத்தில் தள்ளிய வசனம்

மேற்கண்ட தமிழாக்கங்களில், முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இவ்வசனத்தை எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். மேலும் யூசுஃப் அலி அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தையும் கவனிக்கவும். 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

4:3. . . . அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - . . . 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

4:3. . . . அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். . . .

ஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)

. . . , or (a captive) that your right hands possess, . . .

ஒரு முஸ்லிம் தன் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களோடு (அடிமைப் பெண்களோடு) உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் 4:3ம் வசனம் சொல்லியிருக்கும் போது, மேற்கண்ட மூன்று முஸ்லிம் அறிஞர்கள் "ஒருமையில் – அடிமைப் பெண்" என்று எழுதியுள்ளார்கள். இவர்களை இவ்வசனம் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனை மறைக்க அடைப்பிற்குள் "ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) என்று முஹம்மது ஜான் அவர்கள் எழுதுகிறார், அப்துல் ஹமீது பாகவி அவர்களோ, "நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே" என்று எழுதுகிறார். வலக்கரம் சொந்தமான அடிமைப்பெண் என்றோ அல்லது பெண்கள் என்றோ அவ்வசனம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையென்றாலும், அடிமைப்பெண்கள் பற்றிய இஸ்லாமிய கட்டளைகளை பார்க்கும் போது, பன்மை (அடிமைப்பெண்கள்) என்பது தான் சரியான மொழியாக்கமாக இருக்கும். இதனை மறுப்பவர்கள் தகுந்த ஆதாரத்தோடு மறுக்கட்டும்.

வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்:

முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இதர குர்-ஆன் வசனங்களில் "வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்" என்பதை பன்மையிலேயே தமிழாக்கம் செய்துள்ளார்கள். உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை கவனிக்கவும்.

குர்-ஆன் 23:6:

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

அப்துல் ஹமீது பாகவி:

23:6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.

குர்-ஆன் 4:24

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. . . .

அப்துல் ஹமீது பாகவி:

4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. . . .

குர்-ஆன் 33:52

இவ்வசனம் முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்பெண்கள்) பற்றி பேசுகின்றாது.

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; . . .

அப்துல் ஹமீது பாகவி:

33:52. . . .  ஆயினும், உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்அவ்வாறன்று. (அவள் உங்களுக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கின்றான்.

மேற்கண்ட வசனத்தில் அப்துல் ஹமீது பாகவி அவர்கள், "முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிய அடிமைப்பெண்கள்" பற்றி தமிழாக்கம் செய்யும் போதும், "ஒருமையிலேயே" சொல்லியுள்ளார். இங்கு இவர் என்ன சொல்ல வருகிறார்? முஹம்மதுவிற்கு ஒரே ஒரு அடிமைப்பெண் மட்டுமே இருப்பாளா? இப்பெண்ணிடம் மட்டுமே முஹம்மது திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு (விபச்சாரம்) செய்யலாம் என்று சொல்ல வருகிறாரா? ஆனால், குர்-ஆன் இந்த இடத்தில் பன்மையில் தான் சொல்கிறது. இவரை இந்த வசனம் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நினைக்கிறேன்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கத்தின் மிகப்பெரிய தவறு:

"கிணறு வெட்ட பூதம் கிளம்பிய" கதை என்றுச் சொல்வார்கள், அது போல ஒரு சிறிய விவரத்திற்கு குர்-ஆன் வசனங்களை படித்து ஆய்வு செய்தால், பல விவரங்கள் வெளிப்படுகின்றன.

புத்திசாலித்தனமாக இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தன் குர்-ஆன் தமிழாக்கத்தில் ஒரு உண்மையை மறைத்துள்ளது. இதை அவர்கள் தெரிந்து செய்தார்களா அல்லது இவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று சரியாக தெரியவில்லையா? என்று சந்தேகமாக உள்ளது. இன்னொரு முறை அவ்வசனத்தை படிப்போம்.

4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையேமனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். 

முஸ்லிம் ஆண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லியிருக்கும் போது, இந்த அசிங்கத்தை தர்மசங்கடத்தை ஜீரணித்துக் கொள்ளாத இவர்கள் "மனைவியாக்கிக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தையை இடையில் சொறுகி,  குர்-ஆனின் அசிங்கத்தை மூட முயற்சி எடுத்துள்ளார்கள்.

இஸ்லாமில் "மனைவிக்கும், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும்" இடையே இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா?

 • குர்-ஆனின் படி, ஒரு முஸ்லிமுக்கு ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் தான் மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கமுடியும், ஆனால் அடிமைப்பெண்கள் எத்தனையானாலும் இருக்கலாம்.
 • மனைவிக்கு இருக்கும் உரிமைகள், அடிமைப்பெண்களுக்கு இல்லை.
 • மனைவியை மற்றவர்களுக்கு அடிமையாக விற்கமுடியாது, ஆனால், அடிமைப்பெண்களை பல நாட்கள் கற்பழித்துவிட்டு மறுபடியும் மற்றவர்களுக்கு அடிமையாக விற்றுவிடலாம்.

இப்படிப்பட்ட அடிப்படை விவரங்கள் கூட தெரியாமல் எப்படி இவர்கள் குர்-ஆன் தமிழாக்கம் செய்ய வந்துவிட்டார்கள்? உண்மையில் இவர்களுக்கு இஸ்லாம் தெரியும், ஆனால் குர்-ஆனில் உள்ள அசிங்கங்களை ஜீரணிக்க முடியாமல், இப்படி குளறுபடிகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். 

முடிவுரை: தாம்பத்தியம் – கற்பழிப்பு – விபச்சாரம்:

குர்-ஆன் 4:3ம் வசனம்,  திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது. 

ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவளை மனைவி என்று அழைப்பார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் கட்டாயப்படுத்தி அவளோடு உடலுறவு கொண்டால், அதனை "கற்பழிப்பு" என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் அவளின் அனுமதியோடு அவளோடு உடலுறவில் கொண்டால், அதனை "விபச்சாரம்" என்று கூறுவார்கள். குர்-ஆன் 4:3ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சலுகைக்கு என்ன பெயர் சூட்டுவது? தாம்பத்தியமா? கற்பழிப்பா விபச்சாரமா? இந்த தர்ம சங்கடத்திலிருந்து எப்படி விடுபடுவது? இதிலிருந்து முழுவதுமாக விடுபடமுடியாவிட்டாலும்,  தங்களால் இயன்ற விதத்தில் இதன் பாதிப்பை குறைக்கலாம் என்று எண்ணி, முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்க அறிஞர்களும் முயற்சி எடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை இவர்களுக்கு இஸ்லாமில் "வலக்கரத்துக்கு சொந்தமான அடிமைப்பெண்கள்" பற்றிய இறையியலே (கட்டளைகளே) தெரியாமல் போய்விட்டதா? இப்புதிருக்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

குர்-ஆன் தமிழாக்கங்களின் குளறுபடி கட்டுரைகள்

குர்-ஆனின் இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/quran_tamil_translations/quran_4_3_confusion.html


பாகம் 4 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

(பிஜே அவர்களின் விளக்கமும், இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கமும்)

முன்னுரை: 

இந்த தலைப்பின் முந்தைய மூன்று கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

இவைகளின் தொடர்ச்சியாக, பிஜே அவர்கள் "முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம்" சொல்லுதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம். மேலும், இவரது விளக்கமும் இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களும் ஒன்றாக இருக்கின்றதா அல்லது எதிர்மறையாக இருக்கின்றதா என்பதையும் இக்கட்டுரையில் காண்போம். கடைசியாக, பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய "முஸ்லிம் ஹதீஸ்" பற்றி சில கேள்விகளை பிஜே அவர்களிடம் கேட்போம்.

இந்த தொடர் கட்டுரைகளின் பின்னணி: இந்த தொடர் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. சென்னை தண்ணீரில் மிதந்த போது, எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு பேருதவி புரிந்தனர். ஆனால், இவர்களின் இறைவேதமாகிய குர்-ஆனும், இறைத்தூதராகிய முஹம்மதுவும் இவர்களின் இச்செயல்களை அங்கீகரிக்கமாட்டார்கள். இதனை நாம் இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறும்பான்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் காணலாம். ஆனால், இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, பணம் செலவு செய்து முஸ்லிமல்லாதவர்களுக்கு உதவி செய்தனர். நாம் கண்டது கனவா அல்லது நிஜமா? இதனை மாற்று மதத்தவர்கள் எப்படி புரிந்துக் கொள்வது? இதனை நமக்கு புரியவைக்கவேண்டியது தமிழ் முஸ்லிம்களின் கடமையாக உள்ளது. முஸ்லிம்கள் நமக்கு இதனை புரியவைப்பதற்கு உதவியாக இருக்கும்படியாக, சில இஸ்லாமிய ஆதாரங்களை நான் இத்தொடர் கட்டுரைகளில் முன்வைக்கிறேன். முஸ்லிம்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கும் போது இவ்விவரங்கள் அவர்களுக்கு  பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 

1) முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் முதலில் சொல்வது பற்றி பிஜே அவர்களின் நிலைப்பாடு

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்வது பற்றி பிஜே அவர்களின் நிலைப்பாடு இது தான்.

அ) தற்காலத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு (காஃபிர்களுக்கு) முதலில் முஸ்லிம்கள் "ஸலாம்" சொல்லலாம்.

ஆ) முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ல் "யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்" முதலில் ஸலாம் சொல்லக்கூடாது என்று முஹம்மது கட்டளையிட்டது உண்மை தான். ஆனால், அது அக்காலத்து யூத கிறிஸ்தவர்களுக்காக கொடுக்கப்பட்ட கட்டளையாகும். இக்காலத்தில் நம்மோடு வாழும்  யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அது பொருந்தாது.

இ) முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ல் சொல்லப்பட்ட விவரம் அக்கால யூத கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே, இந்துக்களும் இதர முஸ்லிமல்லாதவர்களும் இதில் அடங்கமாட்டார்கள்.

ஈ) இதன் படி, அக்காலத்தில் யூத கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்ல முஸ்லிம்கள்  அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும், தற்காலத்தில் முஸ்லிம்கள் "எல்லா காஃபிர்களுக்கும் முதலாவது ஸலாம் சொல்லலாம்". அதாவது தற்காலத்தில் ஒரு முஸ்லிம், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களும் மேலும் இதர மக்களுக்கும் முதலாவது "அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில் தவறில்லை, இதனை இஸ்லாம் அனுமதிக்கிறது.

இவைகள் தான் பிஜே அவர்களின் "ஸலாம்" பற்றிய நிலைப்பாடு, இதனை கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் மூலம் அறியலாம்.

2) முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் முதலில் சொல்வது பற்றி இதர இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.

குர்-ஆனின் உண்மை விளக்கத்தையும், முஹம்மதுவின் உண்மை வழிகாட்டுதலையும் நாம் பார்க்கவேண்டுமென்றால், முஸ்லிம்கள் சிறும்பான்மையாக இருக்கும் நாடுகளில் காணமுடியாது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளிலும் தான் அதனை நாம் காணமுடியும். 

முஸ்லிம்களின் கை (எண்ணிக்கை) குறுகியதாக இருக்கும் போது எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளது. அதே போல, முஸ்லிம்களின் கை (எண்ணிக்கை) ஓங்கி இருக்கும் போது, எப்படி இஸ்லாமை "முழுவதுமாக" பின்பற்றவேண்டும் என்று இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. 

பிஜே போன்ற சில இஸ்லாமிய அறிஞர்கள் (இஸ்லாமியரல்லாத நாடுகளில் வாழுபவர்கள்), இஸ்லாம் சொல்லும் முதலாவது வழிகளில் செல்கிறார்கள் (வேறு வழி இல்லை என்பதால்). ஆனால், இந்தியா, "பாகிஸ்தான் போல" பெரும்பான்மை முஸ்லிம் நாடு போல மாறுமானால், இவர்களின் நிலைப்பாடே வித்தியாசமாக இருக்கும். 

இப்போது "காஃபிர்களிடம்" எப்படி நடந்துக் கொள்ளவேண்டும், அவர்களுக்கு எப்படி ஸலாம் சொல்லவேண்டும் என்று இதர இஸ்லாமிய அறிஞர்கள் போதிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். அதன் பிறகு, பிஜே அவர்களின் நிலைப்பாட்டை கேள்வி கேட்போம்.

islamqa.info: "இஸ்லாம் கேள்வி பதில்கள்" என்ற தளத்தில் முஸ்லிம்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்கள். அவைகளிலிருந்து சில மேற்கோள்களை இப்போது காண்போம். வாசகர்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கி, அந்த தளத்தில் நாம் மேற்கோள் காட்டிய விவரங்களை ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளலாம். 

அ) முஸ்லிமே, நீ ஒரு காஃபிருக்கு முதலாவது கைகளை குலுக்காதே! அவன் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தால், அவனுக்கு தேனீர் கையில் கொடுக்காதே, கோப்பையை மேஜையில் வைத்துவிடு:

ஒரு முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது கைகளை குலுக்க முஸ்லிம்கள் முயலக்கூடாது. அந்த காஃபிர் உங்கள் கைகளை முதலாவது பிடித்து குலுக்கினால், நீங்கள் அதன் பிறகு குலுக்கலாம்.

ஒரு காஃபிருக்கு தேனீர் கொடுப்பது பற்றி சொல்லவேண்டுமென்றால், ஒரு காஃபிர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போது, முஸ்லிமாகிய நீ அவருக்கு தேனீர் கோப்பையை கொடுக்கக்கூடாது, இது மக்ரூ ஆகும், இதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஆனால், அந்த காஃபிர் உட்கார்ந்து இருக்கும்போது, தேனீர் கோப்பையை அவருக்கு முன்பாக இருக்கும் மேஜையில் வைத்துவிடுவதில் தவறு இல்லை. 

ஈஸா குர்-ஆன் உமரின் விமர்சனம்: நட்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் ஒரு முஸ்லிம், ஒரு இந்துவிற்கோ, கிறிஸ்தவருக்கோ தேனீர் கொடுப்பது மனிதர்கள் வாழும் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நடப்பது. இதே போல,  தங்கள் வீடுகளுக்கு வருகை தரும் முஸ்லிம்களுக்கு இந்துக்கள் கிறிஸ்தவர்கள் தேனீர் கைகளில் ஏந்திச் சென்று கொடுப்பது "சமுதாயத்தில் மத நல்லிலக்கணத்தை உண்டாக்கும்". ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி போதனை செய்துள்ளார்கள் என்பதை கவனியுங்கள். 

தமிழ் முஸ்லிம்களுக்கு கேள்விகள்:  குறைந்தபட்ச மரியாதையின் வெளிப்பாடாகிய "தேனீர் கோப்பையை கைகளில் கொடுப்பதை" முஸ்லிம்கள் அறிஞர்கள் இஸ்லாமை காரணம் காட்டி தடை செய்வார்கள் என்றால், "இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உயிரை கொடுத்து முஸ்லிம்கள் சென்னையில் உதவினார்களே, இதனை நாம் எப்படி புரிந்துக் கொள்வது? இதன் பின்னணி என்ன?".

ஆ) முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது "ஸலாம் – வாழ்த்து" சொல்லி, காஃபிர்களுக்கு முன்பாக முஸ்லிம்களே நீங்கள் தாழ்ந்துவிடாதீர்கள்.

இஸ்லாம் கேள்வி பதில்கள் தளத்தில் "முஸ்லிமல்லாதவருக்கு வாழ்த்து சொல்வது எப்படி?" என்ற கேள்விக்கு கீழ்கண்ட பதில் சொல்லப்பட்டுள்ளது. அதனை தமிழில் நான் தருகிறேன்.

ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது "ஸலாம்/வாழ்த்து" சொல்வது ஹராம் (இஸ்லாமில் அனுமதிக்கப்படாதது) ஆகும். ஏனென்றால், நம் இறைத்தூதர் இப்படி சொல்லியுள்ளார்.

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள் (முஸ்லிம் ஹதீஸ்). . . .

இதே போல, ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவருக்கு நல்வரவு (Welcome – அஹ்லன் வ ஸஹ்லன்) என்று முதலாவது சொல்லக்கூடாது. இப்படி சொன்னால், காஃபிர்களை நாம் மதிப்பதாக ஆகிவிடும். ஆனால், காஃபிர்கள் முதலாவது நமக்கு நல்வரவு சொன்னால், நாமும் அதற்கு பதில் நல்வரவு சொல்லலாம். அல்லாஹ்விற்கு முன்பாக முஸ்லிம்கள் உயர்ந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள்  சொல்லி தங்களை தாழ்த்திக் கொள்ளக்கூடாது. 

முடிவுரையாக, ஒரு காஃபிரை முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்து சொல்லக்கூடாது, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனை தடுத்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை மதித்தால், அது முஸ்லிம்கள் தாழ்ச்சி அடைந்துவிட்டதாக கருதப்படும். . . .

சில நேரங்களில் வேறு வழியில்லாமல், ஒரு காஃபிருக்கு ஒரு முஸ்லிம் முதலாவது வாழ்த்து சொல்லவேண்டி வரும்போது, அப்போது வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை. ஆனால், இந்த வாழ்த்து "ஸலாம்" என்றுச் சொல்வதாக இருக்கக்கூடாது, அதற்கு பதிலாக "நல்வரவு" என்றோ, "எப்படி இருக்கிறீர்கள்?" என்றோ சொல்லலாம். இப்படி சொல்லும்போது, அவர்களை நாம் கனப்படுத்துவதாக ஆகாது, ஒரு காரணத்திற்காக வாழ்த்து சொல்வதாக அமையும். 

. . . 

இப்னு கைய்யும் அவர்கள் (இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக), தம்முடைய ஜாஅத் அல் மஆத்(2/424) புத்தகத்தில் காஃபிருக்கு முதலாவது வாழ்த்து சொல்வது பற்றி இவ்விதம் கூறியுள்ளார்:

இஸ்லாமிய அறிஞர்களின் குழு சொன்னதாவது: "ஒரு முஸ்லிம் ஒரு காஃபிருக்கு முதலாவது வாழ்த்து சொல்வது அனுமதிக்கப்பட்டது, ஆனால், அதற்கு கீழ்கண்ட ஏதாவது ஒரு அழுத்தமான காரணம் இருக்கவேண்டும்: அதாவது முஸ்லிமின் நோக்கம் இதன் மூலம் நிறைவேறவேண்டும், அல்லது முஸ்லிம் மீது வன்முறை தாக்குதல் நடைப்பெறும் என்று பயமிருந்தால் அல்லது உறவினராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு முக்கியமான காரணத்திற்காக, ஒரு முஸ்லிம் முதலாவது வாழ்த்து கூறலாம்".

ஈஸா குர்-ஆன் உமரின் விமர்சனம்: வாசகர்கள் நன்றாக கவனியுங்கள். பேச்சுத்திறன் கொண்ட மனிதர்கள் ஒரு சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்தைக் கூட இஸ்லாம் தடை செய்கிறது. ஒரு முஸ்லிமுக்கு ஒரு காரியம் நடைப்பெறவேண்டும் என்றால், உள்ளத்திலிருந்து அல்லாமல், வெளிவேஷம் போட்டு வாழ்த்து சொல்லலாம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் போதிக்கிறார்கள்.  சில வேளைகளில் தர்மசங்கடமான நிலையில் முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்து சொல்வதாக இருந்தால் கூட "ஸலாம்" என்று சொல்லக்கூடாதாம், "நல்வரவு" என்றோ, "எப்படி இருக்கிறீர்கள்?" என்றோ சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு கீழ்தரமான கோட்பாடுகள்? இப்படி பெரும்பான்மை மக்கள் நினைத்தால், அச்சமுதாயத்தில் வாழும் சிறும்பான்மையின் நிலை என்னவாக இருக்கும்?

தமிழ் முஸ்லிம்களுக்கு கேள்விகள்: முஹம்மது முஸ்லிம் ஹதீஸில் சொன்னது வெறும் யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா "முஸ்லிமல்லாதவர்களுக்கும்" என்று இதர இஸ்லாமிய அறிஞர்கள் நம்புகிறார்கள். ஆனால், பிஜே மட்டும் அந்த ஹதீஸை மாற்றிச் சொல்கிறார்? இதில் எது உண்மை?

3) பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய முஸ்லிம் ஹதீஸ் 4376

பிஜே அவர்கள் "மாற்று மதத்தவருக்கு ஸலாம் கூறலாமா?" என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐ குறிப்பிட்டார்.  இந்த ஹதீஸில் வரும் ஸலாம் பற்றிய பகுதிக்கு பதில் அளித்தார். ஆனால், யூத கிறிஸ்தவர்களை சாலையில் நெருக்கடியான பாதையில் ஒதுங்கிப்போகச் செய்யுங்கள் என்ற பகுதிக்கு பதில் தரவில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (4376)

இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விவரங்கள் உள்ளன. முஹம்மதுவும் அவரது சகாக்களும் மக்காவில் சிறும்பான்மையாக இருந்தபோது, இந்த கட்டளையை முஹம்மது கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் மக்காவில் யூத கிறிஸ்தவர்கள் குறைவாகவே இருந்தனர், மதினாவில் அவர்கள் அதிகமாக இருந்தனர். மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த பிறகு ஆரம்ப காலக் கட்டத்திலும் முஹம்மது மேற்கண்ட கட்டளையை கூறியிருக்கமுடியாது, காரணம் அப்போதும் அவரிடம் ஆள்பலம் குறைவாகவே இருந்தது. ஆனால், முஹம்மது வழிப்பறி கொள்ளைகளை செய்து, அக்கம் பக்கம் இருப்பவர்கள் மீது போர் தொடுத்து ஆள்பலமும் பண பலமும் பெருகிவிட்ட பிறகு தான் மேற்கண்ட கட்டளையை கொடுத்திருக்கமுடியும்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது தான், யூத கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லிமல்லாதவர்கள் சாலையில் செல்லும் போது, நெருக்கடியான பாதையில் செல்ல அவர்களை கட்டாயப்படுத்தமுடியும். உதாரணத்திற்கு, இந்தியாவில் முஸ்லிம்கள் இப்படி நெருக்கடியான பாதையில் செல்லும் படி, கிறிஸ்தவர்களையோ, இந்துக்களையோ கட்டாயப்படுத்தினால், அவர்களின் வால் முழுவதுமாக வெட்டப்படும். ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இப்படி செய்தால், கிறிஸ்தவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. 

பாகிஸ்தானில் / ஆப்கானிஸ்தானில் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லிமை பார்க்கும் போது, "அஸ்ஸாமு அலைக்கும் - உங்களுக்கு மரணமுண்டாகட்டும்" என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். முஹம்மது சொன்னது போல முஸ்லிம்கள் "வா அலைக்கும் – உங்கள் மீதும்" என்று சொல்லிவிட்டு, அமைதியாக சென்றுவிடுவார்களா? நிச்சயமாக இல்லை, அப்போதே அந்த கிறிஸ்தவர் மீது மரணம் உண்டாகிவிடும்.  ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான வழக்கைப்போட்டு, சித்திரவதை செய்கிறார்கள். இந்த இலட்சனத்தில் "அஸ்ஸாமு அலைக்கும்" என்று சொல்வதற்கே இடமில்லை. 

பிஜே அவர்களே! மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் பாகம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்ன தான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், சாலையில் செல்லும் இதர மார்க்கத்தாருக்கு எதிராக இப்படி நடந்துக் கொள்ளுங்கள் என்று கீழ்தரமாக உங்கள் இறைத்தூதர் கூறியிருப்பது எந்த வகையில் நியாயம்? சாலையில் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்பகை எதுவும் இல்லாத நேரத்திலும், பெரும்பான்மை மக்களின் உள்ளத்தில் இப்படிப்பட்ட வெறுப்புணர்வின் விஷத்தை உங்கள் இறைத்தூதர் விதைத்திருப்பது சரியா? 

நம் நாட்டில் பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருக்கிறார்கள். சில சமயங்களில் இவர்களின் தலைவர்களில் சிலர் (முஹம்மதுவைப் போல) தவறான போதனை செய்துவிடுகிறார்கள். இந்த போதனையின் விஷத்தன்மையை சரி பார்க்காமல், பாமர தொண்டர்கள் (முஸ்லிம்களைப்போல), இந்தியாவில் வாழும் சிறும்பான்மையினருக்கு எதிராக நடந்துக் கொள்கிறார்கள். இதனை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.  உங்கள் இறைத்தூதருக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? தற்காலத்தில் இப்படிப்பட்ட போதனைகளைச் செய்து, பாமர மக்களுக்கு மூளைச்சலவை செய்பவர்களுக்கு நீங்கள் என்ன பெயரைச் சூட்டுவீர்கள்? இவர்களை "இறைத்துதர்கள்" என்று அழைப்பீர்களா அல்லது "இழிவான தூதர்கள்" என்று அழைப்பீர்களா? இவர்களுக்கு என்ன பெயர் வைப்பீர்களோ, அதே பெயரைத் தான் உங்கள் முஹம்மதுவிற்கும் முஸ்லிமல்லாதவர்கள் சூட்டுவார்கள். முஸ்லிமல்லாதவர்கள் உங்கள் பதிலுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

முடிவுரை: பிஜே அவர்களே, சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனால், முஹம்மதுவை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்களே என்று வேதனைப்படுகிறேன். "சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?" என்ற தலைப்பில் இதுவரை நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளேன், சில இஸ்லாமிய ஆதாரங்களை முன்வைத்துள்ளேன்.  முஹம்மது காஃபிர்களுக்கு எதிராக நடந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கும் போது, முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு உதவியாக கரம் நீட்டினர். இதனை எப்படி புரிந்துக் கொள்வது, உங்கள் பாணியில் விளக்குங்களேன், பிளீஸ்.


சென்னையில் முஸ்லிம்களின் பேருதவி தொடர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

ஆங்கில கட்டுரைகள்:


வியாழன், 3 மார்ச், 2016

முஹம்மதுவின் அல்லாஹ் – உண்மையில் யார்?

இந்தக் கட்டுரை மிகவும் சுருக்கமானதாகும்.

குர்ஆனின் படி, அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் சிறந்தவர் ஆவார்.

ஸூரா 3:45

அவர்கள் சூழ்ச்சி (மூல அரபி மொழியில் Wa'makaroo) செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் (wa'makara Allahu). அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன் (wa'Allahu khayru al-makireena). (பிஜே மொழிபெயர்ப்பு)

(அவர்கள்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு)

(மேற்கண்ட வசனங்களில் நாம்  அடைப்பிற்குள் அரபி வார்த்தைகளை கொடுத்துள்ளோம்.)

குர்ஆன் 3:54 க்கு ஒத்த வசனங்களை 8:30 மற்றும் 27:50 வசனங்களிலும் காணலாம்.

சூழ்ச்சி செய்வதில், சதிசெய்வதில், வஞ்சிப்பதில் மற்றும் மற்றவர்களை தவறாக வழிநடத்துவதில் எவராலும் மிஞ்ச முடியத ஒருவர் யார்.

ஸூரா 4:142

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (பிஜே மொழிபெயர்ப்பு)

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு)

ஸூரா 10:21

மனிதர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி (makrun) செய்கின்றனர். 'அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன் (makran) என கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர். (பிஜே மொழிபெயர்ப்பு)

மேலும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நம்புவதைப் பார்க்கிலும் சிறந்ததை அறிந்தவர்களாக இருப்பதால், அல்லாஹ்வின் சூழ்ச்சி மற்றும் வஞ்சிக்கும் பொய்களில் இருந்து பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள் என குர்ஆன் சான்று பகருகிறது:

ஸுரா 7:99

அல்லாஹ்வின் சூழ்ச்சியில் அச்ச மற்று இருக்கிறார்களா (makra Allahi)? இழப்பை அடைந்த கூட்டத் தினர் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியில் (makra Allahi) அச்சமற்று இருக்க மாட்டார்கள். (பிஜே மொழிபெயர்ப்பு)

அதுமாத்திரமல்ல, சூழ்ச்சிகள் மற்றும் சதிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை என்று பெருமை பாராட்டிக் கொள்கிறது.

ஸூரா 13:42

இவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி (makara) செய்தனர். சூழ்ச்சிகள் யாவும் (al-makru) அல்லாஹ்வுக்கே உரியன. ஒவ்வொரு வரும் செய்வதை அவன் அறிவான். யாருக்கு அவ்வுலகின் (நல்ல) முடிவு என்பதை (ஏக இறைவனை) மறுப்போர் அறிந்து கொள்வார்கள்.

அரபி மொழியில் உள்ளதை நாம் மாற்றிச் சொல்கிறோம் என்று எவரும் குற்றம் சாட்டாதபடி, தரமான சொல்லகராதிகள் makr/makara  என்ற பதத்திற்கு தரும் பொருள் கீழே தரப்பட்டிருக்கிறது: 

م ك ر Miim-Kaf-Ra ம க ர = வஞ்சித்தல் அல்லது சூழ்ச்சி செய்தல் அல்லது குறுக்கு வழியில் செல்லுதல், தப்பிச் செல்லுதல் அல்லது விலகுதல், சதி செய்தல்,   தந்திரமாக செயல்படுதல், விதிகளுடன் செயல்படுதல்.

م ك ر makara வினைச்சொல். (1)

perf. act. 3:54, 3:54, 7:123, 13:42, 14:46, 16:26, 16:45, 27:50, 40:45, 71:22

impf. act. 6:123, 6:123, 6:124, 8:30, 8:30, 8:30, 10:21, 12:102, 16:127, 27:70, 35:10

n.vb. 7:99, 7:99, 7:123, 10:21, 10:21, 12:31, 13:33, 13:42, 14:46, 14:46, 14:46, 27:50, 27:50, 27:51, 34:33, 35:10, 35:43, 35:43, 71:22

participle. act. 3:54, 8:30

LL, V7, p: 256 (Source: http://www.studyquran.co.uk/14_MIIM.htm)

ஏமாற்றுதல், வஞ்சனை அல்லது சதி செய்தல், மற்றவர்களை முட்டாளாக்க விரும்புதல், அருவருக்க தக்கதைச் செய்தல் அல்லது தீய செயலைச் செய்தல், இரகசியமாக அல்லது மற்றவர்கள் அறியாமல் செய்தல்.

makara u (makr) ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய் சொல்தல், முட்டாளாக்குதல், காட்டிக் கொடுத்தல்… 

III to try TO DECEIVE ஏமாற்ற முயற்சி செய்தல்…

(Hans-Wehr, 4th edition, P. 1076:; http://ejtaal.net/aa/#hw4=1089)

சூழ்ச்சிச் செய்வதில் சிறந்தவர் மற்றும் முழு உலகத்தையும் தேவனின் சத்தியத்தில் இருந்து தன் வஞ்சனை மற்றும் புரட்டு மூலமாக வழிவிலகப்பண்ண விரும்புகிறவன் உண்மையில் யார் என பரிசுத்த வேதாகமம் சொல்வதை நாம் இப்பொழுது காண்போம்:

"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." யோவான் 8:44

"உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்." (வெளிப்படுத்தல் 12:9-12)

அடுத்து நாம் பார்க்கப்போகும் வேதாகம வசனங்கள் முஹம்மதுவின் அல்லாஹ் உண்மையில் ஏராளமான முஸ்லீம்களையும் மற்றவர்களையும் ஒரு கள்ள தீர்க்கதரிசியையும் அந்திகிறிஸ்துவையும் பின்பற்றச் செய்து, வஞ்சிக்கும் நோக்கில் ஆபிரகாமின் தேவனைப் போல தன்னைக் காட்டிக்கொண்டு, ஆனால் உண்மையில் தேவன் யார் என்பதையும் அவர் எவ்வளவதிகமாக அவர்களை நேசிக்கிறார் என்பதையும் பற்றிய உண்மையான செய்தியை அறிந்துகொள்ள முடியாதபடிச் செய்கிற பிசாசுதான் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு  இருக்கின்றன:

"நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.  எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே… அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்." 2 கொரிந்தியர் 11:2-4, 13-15

"உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்." கலாத்தியர் 1:6-9

"பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்...இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்." (1யோவான் 2:18, 22-23)

"நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்;தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (1 யோவான் 5:9-13)

தமிழாக்கம்: சகோ. அற்புதராஜ் சாமுவேல்