பின்னணி: உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். இவர் இஸ்லாமை தழுவியுள்ளார். இவரது சமீபகால பேச்சுக்களில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்யை புகழ்ந்து பேசுவது தெரியவந்தவுடன், உமர் இவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில் இந்த ஐஎஸ் என்பது ஒரு தீவிரவாத இயக்கம் ஆகும், அதில் சேர்ந்து அனேகர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், இதர மக்களை கொல்கிறார்கள். எனவே இதை விட்டு தூரமாக இருக்கும்படி அறிவுரை கூறினார் (இந்த முதலாவது கடிதத்தை படிக்க இங்கு சொடுக்கவும்). இந்த முதலாவது கடிதத்தை படித்து உமரின் தம்பி எழுதிய பதிலையும், அதற்கு உமர் கொடுத்த பதிலையும் இந்த இரண்டாவது பாகத்தில் பார்க்கலாம்.
2015 ரமளான் கடிதம் 2
இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
உமரின் தம்பி எழுதிய பதில் கடிதம்:
அன்புள்ள அண்ணாவுக்கு,
உங்கள் தம்பி எழுதிக் கொள்வது. உங்கள் கடிதத்தை படித்தேன். இஸ்லாம் பற்றியும், ஐஎஸ் பற்றியும் உங்களுக்கு இருக்கும் அறியாமை உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்பட்டதை என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை.
உங்களுக்கு இஸ்லாமின் இரண்டு முக்கியமான அஸ்திபாரங்களை (கட்டளைகளை) விவரிக்க விரும்புகிறேன்.
முதலாவது அஸ்திபாரம், இஸ்லாமின் ஆன்மீக கட்டளைகளாகும். அதாவது மனிதனை திருத்தி, நல்வழிப்படுத்தி, இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியச் செய்து, சரியான முறையில் இறைவனை தொழுவதற்கு கற்றுக்கொடுத்து, கடைசியாக அவனை சொர்க்கத்தில் சேர்ப்பது தான் இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம்.
இரண்டாவது அஸ்திபாரம், இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளாகும். இஸ்லாமின் ஆன்மீக சட்டங்கள் தனி மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல, இஸ்லாமிய அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகள் இஸ்லாமிய ஆட்சி தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தனி மனிதனின் ஆன்மீக கட்டளைகளில் அன்பும் அமைதியும், ஒழுக்கமும் காணப்படுவதுபோல, இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளில் தவறு செய்பவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனைகளையும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு தேவையான சட்டங்களையும், நாட்டை ஆட்சி புரிவதற்கான சட்டங்களையும் இஸ்லாம் தருகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் "இஸ்லாமிய ஆன்மீகத்துக்கு" முக்கியத்துவம் கொடுத்து தன் இறைத்தொண்டை நிறைவேற்றும் போது, ஒரு இஸ்லாமிய தலைவனாக அதாவது கலிஃபாவாக ஒருவரை தெரிந்தெடுத்து, இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட இறைத்தொண்டை அவர் மூலமாக நிறைவேற்றுவது தான் "இஸ்லாமிய அரசு" செய்ய வேண்டிய இறைத்தொண்டாகும். உலக மக்களுக்கு இவ்விரண்டும் முக்கியமானவைகளாகும். உலக மக்கள் அமைதியாகவும், சமாதானத்துடனும் வாழவேண்டுமென்றால், இஸ்லாமிய ஆட்சி உலகின் அனைத்து நாடுகளிலும் ஸ்தாபிக்கப்படவேண்டும். இந்த தரிசனத்தோடு தான் ஐஎஸ் போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த கடமையை செய்துக்கொண்டு இருக்கின்றன. இதற்காகவே அனேகர் ஐஎஸ் போன்ற இயக்கங்களோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.
உங்களிடம் நான் கீழ்கண்ட கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
1) உலகம் சமாதானத்தோடு வாழவேண்டுமென்று விரும்புவது தவறா? அதற்காக போராடுவது தவறா?
2) ஒவ்வொரு மார்க்கத்துக்கும் ஒரு தலைவர் உலகளாவிய அளவில் இருக்கும் போது, இஸ்லாமுக்கும் அதுபோல கலிஃபா என்ற தலைவர் இருந்தால் என்ன தவறு இருக்கிறது? இஸ்லாமுக்கு உலகளாவிய தலைவர் இருக்கக்கூடாதா?
3) போப் என்ற பெயரில் ஒரு நபரை தங்கள் மார்க்க தலைவராக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதுவும் தொடர்ச்சியாக பல நூற்றாண்டுகளாக அந்த பதவியை தக்கவைத்துக் கொண்டு வருகிறார்கள் அல்லவா? ஒட்டு மொத்த உலக கிறிஸ்தவத்துக்கு மட்டும் தலைவர் தேவை ஆனால், அதேபோல இஸ்லாமுக்குத் தேவையில்லையா?
4) இஸ்லாமிய ஆரம்ப கால கலிஃபாக்களின் காலத்தை பொற்காலம் என்றுச் சொல்லலாம். இந்த கலிஃபாக்களின் தொடர்ச்சி சிறிது சிறிதாக மறந்துவிட்டது. ஜனநாயகம் என்றுச் சொல்லி, சமத்துவம் என்றுச் சொல்லி, பல நாடுகள் ஒன்றாக சேர்ந்துக்கொண்டு, இஸ்லாமுக்கு உலகளாவிய தலைவர் இல்லாத மார்க்கமாக ஆக்கிவிட்டார்கள். இனி இது செல்லுபடியாகாது, ஒரு புதிய கலிஃபா எங்களுக்கு தோன்றிவிட்டார். கூடிய சீக்கிரம் அவரை உலகம் அடையளம் கண்டுக்கொள்ளும். அவரை அங்கீகரித்துக் கொள்ளும். அப்போது இஸ்லாம் உலக நாடுகளை ஆட்சி புரியும். அல்லாஹ்வின் சட்டம் எல்லா பாராளுமன்றங்களிலும் எதிரொலிக்கும்.
எனவே, இஸ்லாமின் அடிப்படையை அறிந்துக் கொள்ளாமல், இப்படி அபாண்டமான பழிகளை ஐஎஸ் மீது சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால், அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
இப்படிக்கு
உங்கள் தம்பி
சௌதி அரேபியா
தேதி: 17, ஜூன் 2015
மேற்கண்ட கடிதத்திற்கு உமர் அளித்த பதில்
இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?
அன்புள்ள தம்பிக்கு,
உன் கடிதத்தை படித்தேன். உன்னைப் போன்ற முஸ்லிம்கள் கூட தீவிரவாதிகளை ஆதரித்து பேசுகிறார்கள் என்பதை அறியும் போது, மனதுக்கு வேதனையாக உள்ளது.
உன் கடிதத்தில் கீழ்கண்ட இரண்டு தவறுகளை நீ செய்துள்ளாய்:
1. இஸ்லாமிய கலீஃபா பதவி உலகத்தில் அமைதியை கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ளது என்று நீ கருதியுள்ளாய், இது மிகப்பெரிய தவறாகும். முஹம்மதுவின் காலம் துவங்கி இந்த பதவியை வகித்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சுருக்கமாக உனக்கு விவரிக்கிறேன். உனக்கு நேரமிருந்தால், நீயே ஆய்வு செய்து எனக்கு தெரிவிக்கலாம்.
2. போப் என்பவர் ஒட்டு மொத்த உலக கிறிஸ்தவர்களின் தலைவர் என்று தவறாக நினைத்துவிட்டாய். மேலும் இவர் அரசியல் தலைவர் போல நீ மேற்கோள் காட்டிவிட்டாய்.
கலிஃபா என்பவர் உலக சமாதான புறாவா? அல்லது உலகத்துக்கு சமாதி கட்டும் புறாவா?
தம்பி, உன் கடிதத்தில் நீ குறிப்பிட்ட இரண்டு வகையான கட்டளைகளைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இஸ்லாமில் ஆன்மீக சம்மந்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன, அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. ஆனால், இஸ்லாமுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதன் அரசியல் நிலைப்பாடு தான், அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகள் தான்.
நீ குர்-ஆனை தமிழில் படிக்கவேண்டும் என்றும், அனேக குர்-ஆன் விரிவுரைகளை படிக்கவேண்டும் என்றும் நான் அனேக முறை உனக்கு சொல்லியிருக்கிறேன். மேலும் ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் படிக்கச் சொன்னேன். 40 ஹதீஸ்களின் தொகுப்பு, 500 ஹதீஸ்களின் தொகுப்பு என்ற பெயர்களில் விற்கப்படும் ஹதீஸ் புத்தகங்களை நான் படிக்கச் சொல்லவில்லை, மேலும் தற்கால முஸ்லிம்கள் எழுதும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்கச் சொல்லவில்லை. புகாரி முஸ்லிம் போன்ற முழு ஹதீஸ் தொகுப்புகளையும், இப்னு இஷாக், தபரி, இப்னு இஷாம் போன்ற ஆரம்ப கால இஸ்லாமிய ஆசிரியர்கள் எழுதிய முஹம்மதுவின் சரித்திர நூல்களை படிக்கச் சொன்னேன்.
மேற்கண்ட அனைத்தையும் படித்த ஒரு முஸ்லிம், நிச்சயமாக "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்றுச் சொல்லமாட்டான். அப்படி அவன் சொல்வானேயானால், அவன் தெரிந்தே பொய் சொல்கிறான் என்று அர்த்தமாகும்.
கலிஃபா பற்றி நாம் அறியவேண்டுமென்றால், முஹம்மதுவிலிருந்து தொடங்கவேண்டும். முஹம்மது மக்காவில் பிரச்சாரம் செய்யும்போது, ஒரு பூனையைப் போல பயந்து பிரச்சாரம் செய்தார், தன் உயிருக்கு ஆபத்து வரும் போது, மதினாவிற்கு ஓடி ஒளிந்தார். குர்-ஆனின் மக்கா வசனங்களில் மென்மையும், ஆன்மீகவும் வழிந்து ஓடியது.
ஆனால், அதே முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு தனக்கு ஆள்பலம் அதிகமான போது, பூனையின் உருவம் புலியாக பரினாம வளர்ச்சி அடைந்தது. குர்-ஆனில் வன்முறை வசனங்கள், சகிப்புத்தன்மையற்ற வசனங்கள், ஜிஹாத் வசனங்கள் அதிகமாக இடம்பெற்றன. இதுமட்டுமல்ல, மக்காவின் காலத்தில் இறங்கிய மென்மையான வசனங்கள் இரத்து செய்யப்பட்டன.
காலம் செல்லச் செல்ல, இஸ்லாமை ஏற்காதவர்கள் மீது போர் தொடுக்க முஹம்மது ஆரம்பித்தார், தன்னை இறைத்தூதராகவும், இஸ்லாமை தங்கள் மதமாகவும் ஏற்காத நாடுகள் மீது சண்டையிட முடிவு செய்தார், கடிதங்களை எழுதினார். கீழ்கண்ட புகாரி ஹதீஸின் படி, இஸ்லாமை ஏற்றால் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், இல்லையானால், அவர்கள் உடைமைகள் என்னால் சூரையாடப்படும், உயிர்கள் எடுக்கப்படும் என்று பகிரங்கமாக முஹம்மது அறிவித்தார். இதுவா இஸ்லாமிய அரசு உலகத்துக்கு கொடுக்கும் அமைதி? இதுவா கலிஃபாக்களுக்கெல்லாம் கலிஃபாவாக திகழ்ந்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த உலக சமாதானம்?
தம்பி, புகாரி ஹதீஸை இன்னொரு முறை படித்துப் பார்:
'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி எண் 25 Volume :1 Book :2
இஸ்லாமை ஏற்காதவர்கள் மீது போர் புரியும் படி அல்லாஹ்வே முஹம்மதுவிற்கு கட்டளையிட்டுள்ளாராம்.
முஹம்ம்துவின் ஊழியத்தின் ஒட்டுமொத்த சுருக்கமாக மேற்கண்ட ஹதீஸ் உள்ளது, அவரை அல்லாஹ் தெரிந்துக்கொண்ட முழு நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இதற்கு சமமான பைபிள் வசனம் எது தெரியுமா? அதாவது இயேசு தம்முடைய வருகையின் முழு நோக்கத்தை சொன்ன வசனம் மத்தேயு 20:28ல் உள்ளது.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்(மத்தேயு 20:28).
முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு (கலிஃபாவாக) வந்தவர் அபூ பக்கர் ஆவார். இவர் தம்முடைய ஆறு வயது மகளை, 50 வயதை தாண்டிய முஹம்மதுவிற்கு மனைவியாக கொடுத்தார். இப்படி செய்ய இவருக்கு எப்படித் தான் மனது வந்ததோ தெரியாது.
தம்பி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். இவர் கலிஃபாவாக பதவி ஏற்று எத்தனை வெள்ளைப் புறாக்களை வானத்தில் பறக்கவிட்டார்? என்று சொல்லமுடியுமா உன்னால்?
இரத்தத்தை சிந்துவதில், கலிஃபாக்களுக்கு நிகர் கலிஃபாக்காளே.
முஹம்மது மரித்த செய்தி அறிந்த இதர முஸ்லிம் நாடுகள், தாங்கள் முஸ்லிம்கள் இல்லை என்றும், இனி அபூபக்கருக்கு வரிகளை செலுத்துவதில்லை என்றும் அறிவித்தார்கள், இஸ்லாமை புறக்கணித்தார்கள். முஹம்மது மரித்தவுடன் இவர்களின் ஈமான் ஏன் அற்றுப்போனது? ஏனென்றால், கத்தியைக் காட்டி இஸ்லாமுக்கு ஆட்களை சேர்த்தால், இது தான் கதி என்பதை அவர்கள் நேரடியாக தெரிவித்தார்கள்.
"இஸ்லாம் எங்களுக்கு வேண்டாம்" என்று உதறித்தள்ளியவர்களை அபூ பக்கர் என்ன செய்து இருக்கவேண்டும்?
• அமைதி இஸ்லாமை ஏனய்யா புறக்கணிக்கிறீர்கள்? என்றுச் சொல்லி, இஸ்லாமின் அருமை பெருமைகளைச் சொல்லி அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கவேண்டும்!
• உண்மையாகவே, முஹம்மதுவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த அபூ பக்கர் அவர்கள் "முஹம்மதுவிடமிருந்து இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் தான் என்று கற்று இருந்திருந்தால்", அமைதியான முறையில் "இஸ்லாமிய தாவா" செய்து இருக்கவேண்டும்! ஆனால், அவர் என்ன செய்தார்?
• இஸ்லாமை மறுத்தவர்கள் மீது போர் தொடுத்தார், நன்றாக மென்று மண்ணில் காரி துப்பிய வெற்றிலைப் பாக்கை எடுத்து மறுபடியும் அவர்களின் வாயிலேயே வலுக்கட்டாயமாக போட்டார். இவருக்கு இஸ்லாமிய ஆன்மீக கட்டளைகள் கண்களுக்கு தென்படவில்லை, இஸ்லாமிய அரசு கட்டளைகள் தான் தெரிந்தது.
தம்பி, அபூ பக்கர் என்ற கலிஃபாவின் நடபடிகளை ஒருமுறை படித்துபார்த்து, இஸ்லாமை அமைதி மார்க்கமாக இவர் வெளிப்படுத்தினாரா இல்லையா? என்பதை நீ முடிவு செய்.
இன்னும், உமர், உஸ்மான், அலி போன்ற கலிஃபாக்கள் பற்றியும், இதர இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றியும் அனேக விவரங்களைச் சொல்லலாம். உனக்கு விருப்பமானால், அவைகளை அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுகிறேன்.
இரண்டாவதாக, நீ செய்த இன்னொரு தவறு, போப் என்பவர் உலக கிறிஸ்தவர்களின் தலைவர் என்று நீ நினைத்துக் கொண்டாய்.
இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், நீ தெரிந்தே பொய் சொல்லியுள்ளாய் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். அதாவது, நீ கிறிஸ்தவனாக இருந்த காலகட்டத்தில், போப் என்பவர் கத்தோலிக்க பிரிவினரின் ஆன்மீக தலைவர் என்றும், மற்ற கிறிஸ்தவ பிரிவினர்கள் இவரை தலைவராக அங்கீகரிக்கவில்லை என்றும் நாம் அனேக முறை பேசிக்கொண்டோம். இதனை நீ மறக்க வாய்ப்பு இல்லை, ஆனால், என்ன செய்ய! நீ இஸ்லாம் என்ற சாயத்தை பூசிக்கொண்டதால், இஸ்லாமுக்கு நன்மையுண்டாக பொய் சொல்லலாம் என்ற சித்தாந்தத்தை நம்புகிறபடியால், என்னிடமே உன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டாய்! நான் உன் அண்ணன் என்பதை நீ அடிக்கடி மறந்துவிடுகிறாய் என்று நினைக்கிறேன். நீ திருடன் என்றால் நான் பாக்தாத் திருடன் என்பதை மறக்காதே! உன் யுக்திகளை தெரிந்துக் கொள்ளக் கூடாதா நிலையில் நான் இல்லை.
மேலும், போப் என்பவர் ஒரு ஆன்மீக தலைவரே தவிர அவர் ஆட்சித் தலைவர் அல்ல. இஸ்லாமிய கலிஃபாவைப்போல ஒரு இராணுவத்தை உருவாக்கி, அந்த இராணுவத்தை இதர நாடுகள் மீது அனுப்பி, நாடுகளை பிடித்து, அந்த நாடுகளை கிறிஸ்தவ நாடுகளாக மாற்றும் படி பைபிள் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனை போப்பும் செய்யவில்லை, இனி செய்யப்போவதுமில்லை.
• தம்பி, கலிஃபாக்கள் செய்தது இறைத்தொண்டா?
• உன் நாட்டில் வந்து உன்னை அழிப்பேன் என்று முஹம்மது இதர நாடுகளுக்கு செய்தி அனுப்பியது, இறைத்தொண்டா? அந்த செய்திகள் சமாதானப் புறாக்களாக பறந்துச் செல்லவில்லை, சமாதிகள் கட்டும் கழுகுகளாக பறந்துச் சென்றன.
• இஸ்லாமை புறக்கணித்தவர்கள் மீது போர் தொடுத்த அபூ பக்கர் செய்தது இறைத்தொண்டா?
• ஐஎஸ் இப்போது செய்துக்கொண்டு இருப்பது கூட உனக்கு இறைத்தொண்டாக தெரிகின்றதா?
• பெண்களை கற்பழிப்பதும், சிறுமிகளையும், சிறுவர்களையும் கடத்திக்கொண்டுச் செல்வதும் உனக்கு தொண்டாக தெரிகின்றதா?
• மனிதர்களை பிடித்து, உயிரோடு எரித்துக் கொள்வதும், கழுத்துக்களை அறுப்பதும் உனக்கு இறைத்தொண்டாக தெரிகின்றதா?
• இதில் முஸ்லிம்களுக்கே கசப்பாக தெரியும் விஷயம் என்னவென்றால், இந்த ஐஎஸ் என்ற தீவிரவாதிகள், சில இடங்களில் தங்கள் இதர இஸ்லாமிய பிரிவினரையே தாக்குகிறார்கள், கொல்கிறார்கள். இதுவா இறைத்தொண்டு?
• காட்டில் வாழும் மிருகங்கள் கூட, தங்கள் இனத்தை கொன்று சாப்பிடாது, ஆனால், "இஸ்லாமிய இறைத்தொண்டு செய்கிறார்கள்" என்று நீ சொல்கின்ற ஐஎஸ் தங்கள் சொந்த சகோதரர்கள்/சகோதரிகளையே கொன்று அவர்கள் இரத்தத்தை குடிக்கிறார்கள்.
தம்பி, போதும் போதும்!! நீ இஸ்லாமுக்கு மாறிய அன்றிலிருந்து உன் வார்த்தைகளில் நேர்மையும், உண்மையும் சிறிது சிறிதாக மறைந்துக்கொண்டு வருகிறது.
புத்தி சுயாதீனமுள்ள ஒரு சாதாரண பாமர மனிதனுக்கும் தெளிவாக புரிகின்ற விஷயங்கள் கூட ஏன் உனக்கு புரிவதில்லை?
ஐஎஸ் செய்யும் அட்டூழியங்களை ஒரு முறை செய்தித்தாள்களில் படித்துப் பார். அவைகளை உன் இறைத்தூதர் செய்த காரியங்களோடும், இஸ்லாமிய கலிஃபாக்கள் செய்த காரியங்களோடும் ஒப்பிட்டுப் பார். முஹம்மது செய்ததற்கும், ஐஎஸ் செய்துக்கொண்டு இருக்கும் செயல்களுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் உன்னால் காணமுடியாது. குர்-ஆனின் விளக்கவுரையாக "ஐஎஸ்"ன் செயல்கள் காணப்படுகின்றன.
தம்பி, கடைசியாகச் சொல்கிறேன். இஸ்லாமை சரியாக புரிந்துக் கொள்ளக்கூடாத நிலையில் உலக மக்கள் இல்லை. மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள், ஒப்பிடுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள். இஸ்லாமியர்களில் கூட அனேகர் இதனை புரிந்துக்கொண்டு மௌனமாக இஸ்லாமை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் முடிவை வெளியே சொன்னால், இஸ்லாமிய வன்முறைக்கு தாங்கள் பலியாகவேண்டி வரும் என்பதால், அனேகர் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் உன் தோளோடு தோள் சேர்த்து தொழுதுக் கொள்ளும் இன்னொரு முஸ்லிம் உண்மையாக முஸ்லிமாக இருக்கிறானா? என்பதை நீ எப்படி அறிவாய்? அவனை இஸ்லாம் பயமுறுத்தியல்லவா வைத்துள்ளது.
தம்பி, சிந்தித்துப் பார், மக்களின் இரத்தத்தை சிந்துபவர்களை, உன் சிந்தனையில் ஒரு நொடி கூட வைக்காதே!
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், அதுவரை ஐஎஸ் பற்றிய செய்திகளை தொகுத்துவைத்துக் கொள். ஐஎஸ் புரிந்த "இறைத்தொண்டு" பற்றி செய்திகளில் படிக்கும் விவரங்களை எனக்காக சேகரித்து வைத்துக்கொள். அவைகளை எனக்கு அனுப்பு, குறைந்த பட்சம் 10 தொடுப்புக்களையாவது அனுப்பு.
• அவர்கள் புரியும் சேவை என்ன?
• எத்தனை நாடுகளுக்கு அவர்கள் இஸ்லாமை பரப்ப மிஷனரிகளை அனுப்பியுள்ளார்கள்?
• அவர்கள் எத்தனை பள்ளிக்கூடங்களை கட்டியுள்ளார்கள்?
• எத்தனை மருத்துவ மனைகளை கட்டியுள்ளார்கள்? எத்தனை நாடுகளுக்கு ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளை செய்துள்ளார்கள்?
• எத்தனை பெண் பிள்ளைகளின் படிப்பிற்காக எவ்வளவு செலவு செய்துள்ளார்கள்?
• பெண்களின் மேன்மைக்காக அவர்கள் புரிந்த சாதனைகள் என்னென்ன?
• இஸ்லாமியரல்லாத மக்களுக்காக என்ன தொண்டை செய்துள்ளார்கள்?
போன்ற விவரங்களை சேகரித்து எனக்கு அனுப்பு.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கும் வரைக்கும், இஸ்லாமிய வன்முறைப் பற்றி சிறிது சிந்தித்துக்கொண்டிரு.
இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்
தேதி: 17 ஜூன் 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக