ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 13 ஜூன், 2018

2018 ரமளான் 8: பர்னபா சுவிசேஷம் - சரித்திர பிழை: ஏரோதும் பிலாத்துவும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தனர்

பர்னபா சுவிசேஷத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்குசொடுக்கவும்.

இந்த கட்டுரையில் மோசடி முஸ்லிம் "பர்னபா" செய்த ஒரு சரித்திர பிழையைப் பார்ப்போம்.

திருமதி இந்திரா காந்தி அவர்கள் பாரத பிரதமராக இருந்தபோது, தமிழ் நாட்டில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தார் என்று ஒரு எழுத்தாளர் எழுதினால், அவரை எந்த மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று நாம் நினைப்போம் அல்லவா? இப்படிப்பட்டவர் தான் பர்னபா சுவிசேஷம் என்ற நூலை எழுதிய மோசடி முஸ்லிம்.

பர்னபா சுவிசேஷம், அத்தியாயம் 3ல் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:

There reigned at that time in Judaea Herod, by decree of Caesar Augustus, and Pilate was governor in the priesthood of Annas and Caiaphas. Wherefore, by decree of Augustus, all the world was enrolled; wherefore each one went to his own country, and they presented themselves by their own tribes to be enrolled.

இந்த பத்தியில் அவர் என்ன சொல்கிறார் என்றால், ஒரே காலக்கட்டத்தில் ஏரோது என்பவரும், பிலாத்து என்பவரும், இஸ்ரேல் நாட்டில் இயேசுவின் பிறப்பின் சமயத்தில் ஆட்சி செய்ததாகக் கூறுகிறார்.

இவ்வரிகளில் ஐந்து நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:

1) சீசர் அகஸ்டஸ் (Caesar Augustus)

2) அரசர் ஏரோது  (King Herod)

3) கவர்னர் பிலாத்து (Governor Pilate)

4) பிரதான ஆசாரியர் அன்னா (High Priest Annas)

5) பிரதான ஆசாரியர் காய்பா (High Priest Caiaphas)

இதில் அப்படி என்ன சரித்திர பிழை உள்ளது?

  • ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக சீசர் அகஸ்டஸ் கிமு 27 லிருந்து கிபி 14 வரை ஆட்சி செய்தார். 
  • ஏரோது ராஜா கிமு 37 லிருந்து கிமு 4/கிபி 1 வரை யூதேயா பகுதிக்கு அரசராக இருந்தார்.
  • பிலாத்து கிபி 26 லிருந்து 36 வரை கவர்னராக இருந்தார்.
  • காய்பா கிபி 18 லிருந்து 36 வரை பிரதான ஆசாரியராக இருந்தார்.

அகஸ்டஸ் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி புரியும் போது, யூதேயா பகுதியை ஒரு சிற்றரசராக ஏரோது (பெரிய ஏரோது) ஆட்சி புரிந்தார். ஆனால், இவர்களின் காலத்தில் "பிலாத்து" ஆளுநனராக ஆட்சி செய்யவில்லை, மேலும் காய்பா பிரதான ஆசாரியராக இருந்ததில்லை. பிலாத்து கி.பி 26 ல் தான் ஆட்சிக்கு வருகிறார். இவர் கி.பி. 36 வரை ஆட்சியில் இருந்தார். இவரது காலத்தில் தான் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். இதே காலத்தில் தான் காய்பா பிரதான ஆசாரியராக இருக்கிறார். அனேகரின் நன்மைக்காக ஒருவர் மரிப்பது நல்லது என்று யூத தலைவர்களுக்கு அறிவுரை கூறியவர் இந்த காய்பா தான்.

  • அகஸ்டஸும், பெரிய ஏரோதும் ஒரே காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.
  • பிலாத்தும், காய்பாவும் ஒரே காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.

பிலாத்து ஆளுநராக இருந்த போது, ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக இருந்தவர், அகஸ்டஸ் அல்ல, அவர் சக்கரவர்த்தி திபேரியஸ் ஆவார்.

அன்னா என்பவர் காய்பாவின் மாமனார் ஆவார் (யோவான் 18:13).

அன்னா என்பவருக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள், இவர்களும், இவரது மருமகன் காய்பாவும் எந்தெந்த காலக்கட்டத்தில் பிரதான ஆசாரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலை கீழே காணவும்:

Ananus (or Annas):

Eleazar the son of Ananus (கிபி 16–17) அன்னாவின் மகன் 

Caiaphas (18–36) அன்னாவின் மருமகன்

Jonathan the son of Ananus (கிபி 36–37 and 44) அன்னாவின் மகன்

Theophilus ben Ananus (கிபி 37–41) அன்னாவின் மகன்

Matthias ben Ananus (கிபி 43) அன்னாவின் மகன்

Ananus ben Ananus (கிபி 63) அன்னாவின் மகன்

சரித்திர பிழைகள்:

கி.பி. 18லிருந்து பிரதான ஆசாரியராக பதவி வகித்த காய்பாவை எடுத்து, அவர் கிபி 1ம் ஆண்டில் (அல்லது கி.மு 4ல்), பிரதான ஆசாரியராக இருந்தார் என்று பர்னபா சுவிசேஷம் சொல்வது, முதலாவது சரித்திர பிழையாகும்.

இரண்டாவதாக, கி.பி. 26லிருந்து ஆளுநராக பதவி வகித்த பிலாத்துவை எடுத்துக்கொண்டு போய், கிமு 4 அல்லது கிபி 1ல் (இயேசு பிறந்த ஆண்டு) நுழைப்பது இரண்டாவது சரித்திர தவறு.

முடிவுரை:

இதிலிருந்து அறிவது என்னவென்றால், பர்னபா சுவிசேஷம் என்பது ஒரு மோசடி புத்தகம். அதனை இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர் எழுதவில்லை. பர்னபா என்ற ஒரு போலியான பெயரில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு யாரோ ஒருவர் (முஸ்லிம் தான்) எழுதியுள்ளார். அவருக்கு முதல் நூற்றாண்டில் சரித்திரம் தெரியவில்லை. இயேசுவின் பிறப்பு காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் என்று தெரியவில்லை, இயேசுவை சிலுவையில் அறையும் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களை மேலோட்டமாக படித்துவிட்டு, சரித்திரத்தை ஆய்வு செய்யாமல், பொய்யான தகவல்களை மோசடி முஸ்லிம் பர்னபா சுவிசேஷத்தில் எழுதியுள்ளார்.

அடிக்குறிப்புக்கள்:

Augustus (Latin: Imperator Caesar Divi filius Augustus;[nb 1] 23 September 63 BC – 19 August 14 AD) was a Roman statesman and military leader who was the first Emperor of the Roman Empire, controlling Imperial Rome from 27 BC until his death in AD 14

2) en.wikipedia.org/wiki/Herod_the_Great 37– c. 4 BCE/ 1 CE

Pontius Pilate was the fifth prefect of the Roman province of Judaea, serving under Emperor Tiberius from AD 26 to 36.[1][5] He is best known today for the trial and crucifixion of Jesus.

Joseph Caiaphas, known simply as Caiaphas (Hebrew: יוֹסֵף בַּר קַיָּפָא‬; Greek: Καϊάφας) in the New Testament, was the Jewish high priest who organized the plot to kill Jesus. Caiaphas was involved in the Sanhedrin trial of Jesus.[1] The primary sources for Caiaphas' life are the New Testament and the writings of Josephus. Outside of his interactions with Jesus, little else is known about his tenure as high priest.


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்



செவ்வாய், 5 ஜூன், 2018

2018 ரமளான் - 7: பர்னபா சுவிசேஷம் – முஹம்மது மதினாவில் கப்பலேறி மக்காவில் இறங்கி ஹஜ் செய்தார்

இது என்ன வேடிக்கை! இது முட்டாள்தனமான கூற்று என்று சொல்லத்தோன்றுகிறதா?
இப்படிப்பட்ட கூற்றுக்கள் அடங்கிய பர்னபா சுவிசேஷம் தான் தங்கள் இஸ்லாமை தூக்கி நிறுத்தும் என்று  நம்பிக்கொண்டு இருக்கிறார்கள், முஸ்லிம் மௌலவிகள், இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள்!

முஸ்லிம்கள் எழுதிய பர்னபா சுவிசேஷம் என்ற மோசடி நூலை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். முந்தைய பதில்களை படிக்க இங்குசொடுக்கவும்.
பர்னபா சுவிசேஷத்தில் காணப்படும் புவியியல் தவறை இப்போது காண்போம்.

ஒருவர் மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதவிரும்பினால், அவர் எந்த நபரின் வரலாறை எழுதுகின்றாரோ, அவரது மேற்பார்ப்பையில் எழுதவேண்டும், அல்லது அவரோடு பல ஆண்டுகள் இருந்து நெருக்கமாக அவரை பார்த்தவராக இருக்கவேண்டும், அல்லது குறைந்த பட்சம், உண்மையை மட்டுமே எழுதவேண்டும் என்ற நோக்கில் ஆய்வு செய்து விருப்பு வெறுப்பின்றி எழுதவேண்டும். இம்மூன்றையுமே, பர்னபா சுவிசேஷத்தை எழுதிய முஸ்லிமிடம் காணமுடிவதில்லை,  அதனால் தான் அவர் எழுதிய புத்தகத்தில் அனேக பிழைகளை காணமுடிகின்றது.

பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 20 மற்றும் 21ல், இயேசு நாசரேத்து என்ற பட்டணத்துக்கு படகு பிரயாணம் செய்ததாகவும், அதன் பிறகு நாசரேத்திலிருந்து நேரடியாக கப்பர்நகூம் என்ற ஊருக்கு படகு பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறது.

இதனை இப்போது நாம் படிப்போம் (தேவையான விவரங்களை மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது):

Chapter 20 Miracle on the sea wrought by Jesus, and Jesus declares where the prophet is received.
Jesus went to the sea of Galilee, and having embarked in a ship sailed to his city of Nazareth;whereupon there was a great tempest in the sea, insomuch that the ship was nigh unto sinking.

அத்தியாயம் 20: கடலில் இயேசு செய்த அற்புதம் மற்றும் ஒரு தீர்க்கதரிசி எங்கு ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று இயேசு கூறுதல்.
இயேசு கலிலேயா கடலுக்குச் சென்றார், அங்கிருந்து நாசரேத்து என்னும் ஊருக்குச் செல்லும் படகு ஏறினார். அவர் பயணித்த போது, படகு மூழ்கிப்போகும் அளவிற்கு கடலில் பெருங்கொந்தலிப்பு உண்டானது...

இவ்வசனங்களை கூர்ந்து கவனியுங்கள்:
  • இயேசு கலிலேயா கடலுக்குச் சென்றார்
  • அங்கிருந்து நாசரேத்து என்னும் ஊருக்குச் செல்வதற்காக படகில் ஏறிச் சென்றார்.
  • வழியில் கடலில் கொந்தலிப்பு உண்டானது
மேற்கொன்டு படித்தால்,  "நாங்கள் கடலில் அமிழ்ந்து அழிந்துபோய்விடுவோம் என்று சீடர்கள் கதறும்போது", இயேசு கடலின் கொந்தளிப்பை அமரச்செய்தார் என்று பர்னபா எழுதுகிறார்.

அடுத்த பத்தியில் இவ்விதமாக கூறப்பட்டுள்ளது:

Having arrived at the city of Nazareth the seamen spread through the city all that Jesus had wrought. . .  And the scribes and doctors having presented themselves unto him said: 'We have heard how much thou hast wrought in the sea and in Judaea: give us therefore some sign here in thine own country.'

இயேசு நாசரேத்து பட்டணத்தில் நுழைந்த உடன், இயேசு கடலில் எப்படி அற்புதம் செய்தார் என்ற விவரத்தை மாலுமிகள் ஊரெல்லாம் சொல்லிவிட்டார்கள். . . .

இயேசு மறுபடியும், நாசரேத்திலிருந்து கப்பர்நகூம் என்ற ஊருக்குச் சென்றார் என்று அத்தியாயம் 21, தொடங்குகிறது.

Chapter 21 Jesus healeth a demoniac, and the swine are cast into the sea. Afterwards he healeth the daughter of the Canaanites.

Jesus went up to Capernaum, and as he drew near to the city behold there came out of the tombs one that was possessed of a devil,

அத்தியாயம் 21: இயேசு பிசாசு பிடித்தவனை சுகமாக்குதல், பிசாசுக்கள் பன்றிகளுக்குள் புகுந்து, கடலில் குதித்து மடிந்துப்போதல், ...
இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார், அவர் பட்டணத்துக்கு அருகில் வந்தபோது, இதோ, பிசாசு பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வந்துக்கொண்டு இருந்தான்...

நாசரேத்து ஊரில் இயேசுவை கொலை செய்ய யூதர்கள் முயன்றதால் (அத்தியாயம் 20), அவர் மறுபடியும் கப்பல் ஏறி கப்பர்நகூமுக்குச் செல்கிறார் என்று பர்னபா சுவிசேஷம் (அத்தியாயம் 21) சொல்கிறது.

நாசரேத்து ஒரு கடற்கரை பட்டணமா? மதுரை ஒரு கடற்கரை பட்டணமா?

பர்னபா சுவிசேஷம் இயேசு கலிலேயா கடலில் கப்பல் ஏறி, நாசரேத்து என்னும் பட்டணத்துக்குச் சென்றார் என்றுச் சொல்கிறது. இது எப்படி உள்ளதென்றால், சென்னையிலிருந்து கப்பல் ஏறி மதுரைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவர் 1947க்கு முன்பு பயணம் செய்தார் என்று ஒரு சரித்திர ஆய்வாளர் எழுதியது போல உள்ளது.  கப்பலில் பயணம் செய்து யாராவது மதுரை துறைமுகத்தில் இறங்கமுடியுமா?

மெரினா கடற்கரையிலிருந்து கப்பலில் ஏறி யாரும் மதுரையில் கரையிறங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போலத் தான், கலிலேயா கடற்கரையில் கப்பல் ஏறி, நாசரேத்து ஊரில் இறங்க முடியாது என்பது.

நாசரேத்து மலைமீது உள்ள ஒரு  பட்டணமாகும். கலிலேயா கடற்கரைக்கும், நாசரேத்து ஊருக்கும் இடையே 29 மைல்கள்  தூரம் உள்ளது, மேலும் கடற்பயணம் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இதிலிருந்து அறிவதென்ன?
  • பர்னபா சுவிசேஷம் எழுதியவர் ஒரு மோசடி எழுத்தாளர் ஆவார்.
  • அவர் முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்தவரல்ல.
  • அவர் இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேலாக ஊர் ஊராக, கிராம கிராமமாகச் சென்று ஊழியம் செய்தவர் அல்ல.
  • அவருக்கு முதல் நூற்றாண்டின், இஸ்ரேல் நிலப்பகுதிகள் பற்றிய புவியியல் அறிவு இல்லை.
முஸ்லிம்கள் சொல்வது போல, இவர்கள் சொல்லும் பர்னபா என்பவர் இயேசுவின் உண்மையான சீடராக இருந்திருந்தால், இப்படிப்பட்ட அடிப்படை தவறுகளைச் செய்யமாட்டார்.

இன்று நீங்கள் கூகுள் மேப்பில் இவ்விரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை தரைவழியாக கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு 49 கிலோ மீட்டர்கள் வருகின்றது.


நாசரேத்து, கடல் மட்டத்திலிருந்து 347 மீட்டர் உயரத்தில் உள்ள பட்டணம்:

பொய் சொல்ல ஒரு அளவு உண்டு என்று பொதுவாக சொல்வது உண்டு. பர்னபா சுவிசேஷத்தைப் பார்த்தால், அவர் படுமோசமாக பொய் கூறியுள்ளார். இதை அவர் தெரிந்து செய்யவில்லை, தன் அறியாமையில் செய்துள்ளார், ஏனென்றால், அவர் 14/15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராயிற்றே! முதல் நூற்றாண்டின் இஸ்ரேல் நாடு பற்றி அவருக்கு என்ன தெரியும்? இயேசுவைப் பற்றி அவருக்கு என்னதெரியும்?

நாசரேத்து என்ற பட்டணம் கடல் மட்டத்திலிருந்து 347 மீட்டார்கள் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பட்டணமாகும். இந்த பட்டணத்தை இயேசு எப்படி கப்பலில் சென்று இருக்கமுடியும்?

en.wikipedia.org/wiki/Nazareth (347 m (1,138 ft))

கடல் மட்டத்திலிருந்து நாசரேத்து ஊரின் உயரத்தை கவனித்தால், இந்த மோசடி முஸ்லிம் சென்னையிலிருந்து கப்பலில் ஏறி, ஊட்டி போன்ற ஊர்களுக்குச் செல்லமுடியும் என்றுச் சொல்வது போல உள்ளது.

இயேசுவின் அடிச்சுவடு (Jesus Trail - jesustrail.com)

நாசரேத்திலிருந்து கப்பர்நகூமுக்கு இயேசு சென்ற வழியில் ஒரு பயணம்:

இன்று இஸ்ரேலுக்கு உல்லாசப் பயணம் செல்பவர்களை கவர்வதற்காக, ஜீசஸ்டிரைல் என்ற ஒரு வசதி செய்து தரப்படுகின்றது. அதாவது இயேசு வாழ்ந்த காலத்தில் பல முறை அவர் நாசரேத்திலிருந்து கப்பர்நகூமுக்கு சீடர்களோடு சென்றுள்ளார் (பர்னபா சுவிசேஷம் சொல்வதுபோல கப்பலில் அல்ல, நடந்துசென்றுள்ளார்). அவர் சென்ற வழி "இப்படியாக இருக்கக்கூடும் என்று கணக்கிட்டு" ஒரு பயண திட்டத்தை தயாரித்து கொடுத்துள்ளார்கள்.

கீழ்கண்ட படத்தைப் பார்க்கவும்:

நாசரேத்து பட்டணத்திலிருந்து கால்நடையாக பயணிகள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டு, ஆங்காங்கே தங்கி இளைப்பாறி மறுபடியும் பயணத்தை தொடர்ந்து, கடைசியாக கப்பர்நகூமுக்குச் சென்று அடையும் படி 'சாலைகள், சோலைகள்' அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.
இந்த படத்தில், கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் நாசரேத்து உள்ளது என்பதை காட்டியுள்ளார்கள்.
மதினாவிலிருந்து மக்காவிற்கு கப்பல் பயணம்? யார் தயாரா இருக்கிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு, சௌதி அரேபியாவில் அகழ்வாராச்சியாளர்களுக்கு ஒரு தோல் சுருள் கிடைத்தது. முஹம்மது வாழ்ந்த 7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று அது கருதப்படுகின்றது. முஹம்மது மரித்த பிறகு, அவரது நெருங்கிய தோழராக இருந்த 'அபூ பக்கர்' அவர்களால் எழுதப்பட்ட நூல் அது. அந்த நூலில், 'முஹம்மது மதினாவில் கப்பல் ஏறி, மக்காவில் இறங்கி ஹஜ் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது'.

மேற்கண்ட பத்தியை படித்தால், உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? சிரிப்பு கலந்த கோபம் வரவில்லையா? உங்களுக்கு இஸ்லாம் உருவான நிலப்பரப்பு பற்றிய அறிவு இருந்தால், நிச்சயம் கோபம் வரும். அந்த ஆவணத்தை எழுதியவர் 'அபூ பக்கர்' அல்ல என்று அடித்துச் சொல்வீர்கள்? எனென்றால், மதினாவிற்கும் மக்காவிற்கும் இடையே நேரடியாக கடற்பயணம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை. எனவே, அந்த ஆவணம் அபூ பக்கரின் பெயரைக் கொண்டு இருந்தாலும், அது ஒரு மோசடி ஆவணம் என்பதை இப்படிப்பட்ட விவரங்களை அது உள்ளடக்கி இருப்பதினால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இதே நிலையில் தான் பர்னபா சுவிசேஷமும் உள்ளது.

இவ்வளவு தெளிவாக விவரித்துச் சொல்லிய பிறகும், 'ஏன் முடியாது, மதினாவிலிருந்து மக்காவிற்கு கப்பற்பயணம் செய்யமுடியும்' என்று உங்களில் யாராவது நினைத்தால்! உங்களை உங்கள் அல்லாஹ்வினாலும் காப்பாற்றமுடியாது! என்பதை மனதில் பதித்துக் கொள்ளவும்.

முதலில் பர்னபாவின் இறையியல் பிழைகளைப் பார்த்தோம், இக்கட்டுரையில் புவியியல் பிழையைப் பார்த்தோம். அடுத்தபடியாக, ஒரு சரித்திர பிழையைப் பார்ப்போம்.

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part7.html

ஞாயிறு, 3 ஜூன், 2018

2018 ரமளான் - 6: முஹம்மது மஸீஹ் – பர்னபாவின் படி குர்-ஆன் ஒரு பொய்யான புத்தகம்

பர்னபா சுவிசேஷம் என்ற ஒரு மோசடி புத்தகத்தை நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இதுவரை கொடுத்த பதில்களை கீழே படிக்கலாம்:

தற்போதைய கட்டுரையில் இன்னொரு சுவாரசியமான விவரத்தைப் பார்ப்போம். இதுவரை பர்னபா சுவிசேஷத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டு இருந்த முஸ்லிம்கள் அனைவரும், இந்த கட்டுரையில் சொல்லப்படும் விவரங்களைப் பார்த்து, அப்புத்தகத்தை தூக்கி எறிவார்கள். ஏனென்றால், பர்னபா சுவிசேஷம் குர்-ஆனை அல்லவா தூக்கி எறிந்துள்ளது?

உப தலைப்புக்கள்:

1) குர்-ஆனின் படி, 'இயேசு மஸீஹ் (மேசியா)' ஆவார்

2) பர்னபா சுவிசேஷத்தின் படி, 'முஹம்மது மஸீஹ் (மேசியா)' ஆவார்

3) யார் சொல்வது உண்மை? குர்-ஆன் சொல்வதா? (அ) பர்னபா சுவிசேஷம் சொல்வதா?

4) முடிவுரை

-----------------

1) குர்-ஆனின் படி, 'இயேசு மஸீஹ் (மேசியா)' ஆவார்

குர்-ஆனின் கீழ்கண்ட வசனங்களில், 'இயேசு தான் மஸீஹா' என்று தெளிவாக  சந்தேகத்துக்கு இடமில்லாதபடி சொல்லப்பட்டுள்ளது. 

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

குர்‍ஆன் 4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹைகொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்);  . . ..

குர்‍ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . .

குர்‍ஆன் 5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான்அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்; . . . .

குர்‍ஆன் 5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா)தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: . . .

குர்‍ஆன் 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். . . . .

குர்‍ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; . . . .

குர்‍ஆன் 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும்தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; . . . .(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

'மஸீஹ்' என்ற பட்டப்பெயரை குர்-ஆன் இயேசுவிற்கு மட்டுமே சூட்டுகிறது என்பதை கவனத்தில் வைக்கவும் (இவ்விவரத்தை குர்-ஆன், பைபிளிலிருந்து எடுத்து மறுமதிவு செய்துள்ளது என்பது வேறு விஷயம்). 

2) பர்னபா சுவிசேஷத்தின் படி, 'முஹம்மது மஸீஹ் (மேசியா)' ஆவார்

பர்னபா சுவிசேஷம் தான் உண்மையான இன்ஜில் என்றும், பர்னபா என்பவர் தான் இயேசுவின் உண்மையான சீடர் என்றும் முஸ்லிம்கள் தங்கள் குர்-ஆன் மொழியாக்கங்களில், இதர தளங்களில், புத்தகங்களில் எழுதிக்கொண்டு வருகிறார்கள்.

உதாரணத்திற்கு, தமிழ் நாடு தௌஹித ஜமாத் ஆசிரியர் குழு வெளியிட்ட குர்-ஆன் தமிழாக்கத்தில் கீழ்கண்ட விதமாக எழுதப்பட்டுள்ளது:

தமிழ் நாடு தௌஹித ஜமாத் குர்-ஆன் தமிழாக்கம், விளக்க எண்: 456 (அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட நாள்: 30 மே 2018)

மேற்கண்ட விளக்கத்தின் படி, 

• குர்-ஆன் சொல்லும் விவரத்துக்குத் தான் வலுவான ஆதாரம் சரித்திரத்தில் உள்ளதாம், 

• பர்னபா தான் இயேசுவின் நேரடி சீடராம்!

• மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் போன்றவர்களில் இயேசுவின் நேரடி சீடர்கள் இல்லையாம்.

• இயேசுவைப் பற்றி இஸ்லாம் சொல்வதைப்போலவே பர்னபா சுவிசேஷமும் சொல்வதால், கிறிஸ்தவ மதகுருக்கள், இதை நீக்கிவிட்டார்களாம்!

ஆய்வுகள் எதையுமே செய்யாமல், மனம் போன போக்கில் எழுதுவது முஸ்லிம்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. சரி வாருங்கள், இஸ்லாமின் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக முஸ்லிம்கள் காட்டும் பர்னபா சுவிசேஷம் இயேசு மற்றும் முஹம்மது பற்றிச் சொல்லும் பல விவரங்களில் 'மஸீஹா' என்பதைப் பற்றி மட்டும் சுருக்கமாக காண்போம்.

பர்னபா சுவிசேஷமும் 'மஸீஹ்' முஹம்மதுவும்:

கிழ்கண்ட வசனங்களில், இயேசு 'கிறிஸ்து' இல்லையென்றும், முஹம்மது தான் 'கிறிஸ்து' என்றும் இப்புத்தகம் சொல்கிறது. முஸ்லிம்களுக்கு 'கிறிஸ்து' என்றால் அரபியில் 'மஸீஹா' என்று பொருள் என்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

1. Chapter 42. Wherefore they sent the Levites and some of the scribes to question him, saying: "Who are you?" Jesus confessed, and said the truth: "I am not the Messiah." 

2. Chapter 82. The woman said: "O Lord, perhaps you are the Messiah." Jesus answered: "I am indeed sent to the House of Israel as a prophet of salvation; but after me shall come the Messiah, sent of God to all the world; for whom God has made the world.

3. Chapter 83. After the prayer of midnight; the disciples came near to Jesus, and he said to them: "This night shall be in the time of the Messiah, Messenger of God, the jubilee every year that now comes every hundred years.

4. Chapter 96. Therefore I pray you tell us the truth, are you the Messiah of Godwhom we expect?" Jesus answered: "It is true that God has so promised, but indeed I am not he, for he is made before me, and shall come after me."

5. Chapter 97 Jesus answered: "As God lives, in whose presence my soul stands, I am not the Messiah whom all the tribes of the earth expect, 

6. Chapter 97 Then said the priest: "How shall the Messiah be called, and what sign shall reveal his coming?" …" Muhammad is his blessed name." 

7. Chapter 198. but since I have confessed, not only that I am not God, as is the truth, but have confessed also that I am not the Messiah,

8. Chapter 206. When day was come, Jesus went up to the Temple with a great multitude of people. Whereupon the high priest drew near, saying: 'Tell me, O Jesus, have you forgotten all that you did confess, that you are not God, nor son of God, nor even the Messiah?' Jesus answered: 'No, surely, I have not forgotten; for this is my confession which I shall bear before the judgment seat of God on the day of judgment. For all that is written in the Book of Moses is most true, inasmuch as God our creator is [God] alone, and I am God's servant and desire to serve God's Messenger whom you call Messiah.'

'மஸீஹ்' பற்றி இயேசு சரமாரியாக பேசிய வசனங்கள் பர்னபா சுவிசேஷத்தில் மேற்கண்ட விதமாக உள்ளது. பல சந்தர்பங்களில் 'நீர் மஸீஹாவா?' என்று இயேசுவிடம்  கேட்டபோது, உடனே இயேசு 'இல்லை, நான் மஸீஹ் இல்லை' என்று மறுத்துள்ளார். இது மட்டுமல்ல, 'நாம் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்  மஸீஹ் முஹம்மது ஆவார்' என்றும் அவர் சொன்னதாக பர்னபா சுவிசேஷம் சொல்கிறது.

3) யார் சொல்வது உண்மை? குர்-ஆன் சொல்வதா? (அ) பர்னபா சுவிசேஷம் சொல்வதா?

நாம் இதுவரை குர்-ஆன் சொல்லும் விவரத்தையும் பார்த்தோம், பர்னபா சுவிசேஷம் சொல்வதையும் பார்த்தோம்.

குர்-ஆனின் படி --> 'இயேசு தான் மஸீஹா', முஹம்மது வெறும் இறைத்தூதர் தான்

பர்னபா நூலின் படி --> இயேசு வெறும் இறைத்தூதர் ஆவார், 'முஹம்மது தான் மஸீஹா' 

முஸ்லிம்கள் இப்போது என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள்? அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.

பர்னபா சொல்வதை ஏற்றுக்கொண்டு, குர்-ஆனை புறக்கணிக்கப்போகிறார்களா? பர்னபா என்பவர் இயேசுவின் நேரடி சீடர் என்று வக்காளத்து வாங்கும் தமிழ் நாடு தௌஹித் ஜமாத் போன்ற இயக்கங்கள், குர்-ஆன் சொல்வது பொய், அல்லாஹ் சொல்வது பொய், முஹம்மது சொன்னது பொய், பர்னபா சுவிசேஷம் சொல்வது தான் மெய் என்றுச் சொல்லப்போகிறார்களா? 

அல்லது 

தாங்கள் செய்த தவறை உணர்ந்து, தங்கள் குர்-ஆன் தமிழாக்க விளக்கம் எண் 456ஐ நீக்கப்போகிறார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

முடிவுரை:

இந்த கட்டுரையில், குர்-ஆனின் போதனைகளுக்கு நேர் எதிராக போர்க்கொடி தூக்கிய பர்னபா சுவிசேஷத்தின் விவரத்தை சுருக்கமாகக் கண்டோம்.

குர்-ஆன் ஒரு முறை கூட முஹம்மதுவை மஸீஹா என்று அழைப்பதில்லை, ஆனால், அனேக இடங்களில் இயேசுவை மஸீஹ் என்று அழைக்கிறது. இது தவறு என்று பர்னபா சொல்கிறது, அதாவது முஹம்மது தான் மஸீஹா, இயேசு மஸீஹா இல்லை என்றுச் சொல்கிறது. இதுவரை பர்னபாவை தலையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த முஸ்லிம்கள், என்னசெய்வதென்று புரியாமல் தவிக்கிறார்கள், தவிக்கப்போகிறார்கள்.

இதன் மூலம் அறிவதென்ன? அரைகுறை ஞானம் ஆபத்து. பைபிளை குற்றப்படுத்த, குர்-ஆனின் போதனைகளை நியாயப்படுத்த முஸ்லிம்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன. இனியாவது, ஒரு விவரத்தைச் சொல்வதற்குமுன், ஆய்வு செய்து, புரிந்துக்கொண்டு எழுதுவார்களா முஸ்லிம்கள்!

பர்னபா சுவிசேஷத்தின் இன்னொரு முரண்பாட்டை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தேதி: 3 - ஜூன் - 2018


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part6.html