ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 28 மார்ச், 2020

4000 புற இன மக்களுக்கு உணவளித்த இயேசு

நற்செய்திகளை நன்கு அறிந்த எவரும், இயேசு அற்புதமாக மக்கள் கூட்டங்களுக்கு உணவளித்ததை அறிந்திருப்பார்கள். இப்படி பெரிய கூட்ட மக்களுக்கு உணவளித்த சம்பவங்கள் இரண்டு உள்ளன‌:
 • ஒன்று 5000 மக்களுக்கு உணவளித்தது, 
 • இரண்டாவது 4000 மக்களுக்கு உணவளித்தது.
ஏன் இந்த இரண்டு அற்புதங்களும் பதிவு செய்யப்பட்டன? நிச்சயமாக, இந்த இரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக தேவனுடைய வல்லமை வெளிப்பட்டது. இதுதவிர இந்த இரண்டு அற்புதங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கமுடியுமா?

இயேசு ஒரு முறை தம்முடைய சீஷர்களிடம் சவால் விடுவது போன்று கேள்விகளை கேட்டார்:
18. உங்களுக்கு கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவு கூராமலுமிருக்கிறீர்களா?
19. நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 
பன்னிரண்டு” என்றார்கள்.
20. நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 
ஏழு” என்றார்கள்.
21. அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
(மாற்கு 8:18-21)
இந்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி ஏன்  இயேசு அவர்களிடம் 'வினாடிவினா' போன்று  கேள்விகளை  கேட்டார்? இவ்விரு அற்புதங்களை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ அல்லது  மறக்கவோ முடியாது.  விஷயம் இப்படி இருக்கும் போது, ஏன் இயேசு அந்த இரண்டு அற்புதங்கள் பற்றி வேறு கோணத்தில் சீடர்களிடம் கேள்விகள் கேட்டார்?

இந்த கட்டுரையில், அவ்விரு அற்புதங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நாம் ஆய்வு  செய்வோம், இதன் மூலமாக, அவைகளை இன்னும் நன்கு புரிந்துக் கொள்ளலாம்.

இவைகள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், இயேசு இவ்விரண்டு அற்புதங்களை இரண்டு வெவ்வேறு இடங்களில், சமயங்களில் செய்தார்.
 • முதல் அற்புதம் மூலமாக 5000 மக்களுக்கு உணவளிக்கப்பட்டது மற்றும் இது யூதர்கள் வாழும் பகுதியில் நடத்தப்பட்டது. 
 • இரண்டாவது அற்புதம் மூலமாக 4000 மக்களுக்கு உணவளிக்கப்பட்டது இது யூதரல்லாத மக்கள் (புற இன மக்கள்) வாழும் பகுதியில் நடத்தப்பட்டது.
இந்த இரண்டு அற்புதங்களையும் சிறிது உற்று நோக்கலாம் வாருங்கள்.

5000 மக்களுக்கு  உணவளித்தல்

மாற்கு 6:30-44ல் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 5000 கூட்டத்திற்கு உணவளிக்க இயேசு 5 ரொட்டிகளைப் பயன்படுத்தினார்.

இந்த ஐந்து அப்பங்கள் (ரொட்டிகள்) யூதர்களுக்கு தோராவை நினைவூட்டுகின்றன. ஐந்தாகமங்களில்(தோரா) மோசேயின் 5 புத்தகங்கள் உள்ளன, அதாவது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகியவை யூத மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த 5000 மக்கள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ளதை, 12 கூடைகள் நிறைய சேகரித்தார்கள். இஸ்ரவேலில் உள்ள 12 கோத்திரங்களுக்கு இணையாக, இந்த எண் (12) இருப்பதை நாம் கவனிக்கலாம்.

5000 பேருக்கு உணவளித்த அற்புதமானது, யூதர்களுக்காக செய்யப்பட்டது. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் உண்டு. தற்செயலாக எதுவும் நடக்கவில்லை.

இந்த வசனங்களில் மாற்கு இன்னொரு சுவாரசியமான விவரத்தையும் குறிப்பிடுகிறார், பொதுவாக‌ இதனை மேலோட்டமாக படிக்கும் போது, நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
39. அப்பொழுது, எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மாற்கு 6:39)
மக்களை பசும்புல்லின் மீது உட்காரச்சொன்னார், இது எதனை குறிக்கிறது?

சில வசனங்களுக்கு முன்பு, மாற்கு நற்செய்தி நூலில் இவ்விதமாக உள்ளது :
“இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி. . .” (மாற்கு 6:34)
எனவே இங்கே மேய்ப்பனாகிய இயேசு அவர்களை பசும்புல்லின்மேல் உட்கார வைக்கிறார். 23-ஆம் சங்கீதத்தில் இஸ்ரவேலின் தெய்வீக மேய்ப்பனின் செயலை இது நினைவுபடுத்துகிறது. இயேசு இஸ்ரவேலின் மேய்ப்பர், அவருடைய மந்தைக்கு உணவளிக்கிறார்.

இப்போது இரண்டாவது அற்புதம் பற்றி சிந்திப்போம்.

4000 மக்களுக்கு  உணவளித்தல்
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.( யோவான் 10:16)
4000 பேருக்கு உணவளிக்கும் இந்த அதிசயம் புறஜாதி பிராந்தியத்தில் நடந்தது என்று  நமக்கு எப்படித்தெரியும்? இதனை அதே மாற்கு நற்செய்தி வசனங்களே நமக்குச் சொல்கிறன, அதனை படிப்போம் வாருங்கள்.
மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். (மாற்கு 7:31)
தெக்கப்போலி என்ற ஊர் யூதரல்லாத புறஇன மக்கள் வாழும் பிராந்தியமாகும், மேலும் தீரு என்ற ஊரும், சீதோன் என்ற ஊரும் யூதரல்லாத மக்கள் வாழும் பிராந்தியங்கேயாகும்.

மேலும் இதற்கு முன்பு தான் 'தீரு சீதோன்' பகுதியில், சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய ஒரு கிரேக்க ஸ்திரியின் மகளை இயேசு சுகப்படுத்தினார் (பார்க்க: மாற்கு 7:24 - 30). அதன் பிறகு இயேசு தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாகச் சென்றார், அங்கு ஒரு யூதரல்லாத புற இன மனிதனாகிய செவிடனை இயேசு சுகமாக்கினார் (பார்க்க மாற்கு 7:31-37).

ஒரு புறஜாதி பெண் மற்றும் ஒரு புறஜாதி ஆணை சுகமாக்கிய பிறகு, இந்த 4000 மக்களுக்கு உணவளித்த அற்புதம் நடக்கிறது. அக்காலத்திலே யூதர்கள் புறஜாதியினருடன் சேர்ந்து சாப்பிடமாட்டார்கள், எனவே,  4000 பேர் அனைவரும் புறஜாதி மக்களாக இருந்தார்கள் என்று நாம் அறிந்துக் கொள்ளலாம். மாற்கு 8:1-9 ல் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புற இன மக்களுக்கு உணவளிக்க இயேசு 7 ரொட்டிகளைப் பயன்படுத்தினார் என்பதை அறிகிறோம். அம்மக்கள் சாப்பிட்ட பிறகு, மீதியிருந்ததை 7 கூடை நிறைய சேகரித்தார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஏன் 7 கூடை நிறைய எடுத்தார்கள்? இந்த ஏழு என்பது, ஏதாவது ஒரு முக்கியமான விவரத்தை காட்டுகின்றதா? அதாவது, 5 ரொட்டிகள் மூலமாக யூதர்களுக்கு உணவளித்த போது, 12 கூடை மீதமுள்ளதை எடுத்தார்கள் என்பதில், யூதர்களின் 12 கோத்திரங்கள் வருவதினால், இந்த 7 கூடைக்கும் ஏதாவது உள்ளார்ந்த அர்த்தம் உள்ளதா?

இப்போது பழைய ஏற்பாட்டின் கீழ்கண்ட‌ வசனத்தை கவனிக்கவும். இஸ்ரேல் அந்த பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்பு, அந்த இடம் ஏழு புறஜாதி பழங்குடியினரின் வாழும்பகுதியாக  இருந்தது.
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி, (உபாகமம் 7:1)
சுருக்கமாகச் சொல்வதென்றால்,
 • இயேசு யூதர்களுக்கு உணவளித்ததைப் போலவே புறஜாதியினருக்கும் உணவளித்தார்!
 • இயேசு யூதர்கள் பற்றி அக்கறைக் கொண்டது போன்றே புற இன மக்கள் பற்றியும்  அக்கறைக் கொண்டார்!
 • யூதர்களை குணப்படுத்தியபடியே இயேசு புறஜாதியாரைக் குணப்படுத்தினார்!
 • யூதர்களுக்காக அவர் செய்த அதே அற்புதத்தை இயேசு புறஜாதியினருக்காகவும் நிகழ்த்தினார்!
ஜீவ அப்பம் நானே:
இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35)
அவர்களுடைய உடல் பசிக்கு அவர் ரொட்டி வழங்கினார், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்தது. இது எல்லோருக்கும் பொருந்தும்! யூதர்களுக்கும், யூதரல்லாத புற இனத்தவருக்கும் பொருந்தும்.

யூதர்கள் பசியுடன் இருந்தபோது, இயேசு அவர்களுக்கு உணவளித்தார்.
புறஜாதி மக்கள் பசியுடன் இருந்தபோது, இயேசு அவர்களுக்கு உணவளித்தார்.

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார் (யோவான் 6:33)
"தன்னை ரொட்டியுடன் ஒப்பிடுவதன் மூலம், இயேசு வாழ்க்கைக்கு இன்றியமையாதவர் என்று கூறுகிறார். … இயேசு குறிப்பிடும் வாழ்க்கை இந்த உலக வாழ்க்கை அல்ல, அது நித்திய ஜீவ வாழ்க்கை பற்றியதாகும்.
யூதர்கள் இந்த உலக வாழ்க்கைப் பற்றி சிந்திப்பதைவிட்டு, சிறிது ஆன்மீக வாழ்க்கை பற்றி சிந்திக்க இயேசு  தூண்டுகிறார். அவர் மேசியாவாக வந்ததை,  அற்புதமாக உணவளித்த நிகழ்ச்சியோடு ஒப்பிடுகிறார். அற்புதமாக அவர் உருவாக்கியது அழிந்துபோகும் ரொட்டி,  ஆனால் தாமே அழிந்துப்போகாத நித்திய ஜீவன் தரும் ரொட்டி என்றார். (GotQuestions.org).
அவர் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதியினருக்கும் நித்திய வாழ்வு தரும் ரொட்டியாக இருக்கிறார்.
இயேசு கூறினார் “ . . .ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது”. . . (யோவான் 4:22)
“. . .முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது”. (ரோமர் 1:16)
மூலம்: http://www.faithbrowser.com/bread-for-4000-hungry-gentiles/

வெள்ளி, 27 மார்ச், 2020

இயேசு தாம் பிறப்பதற்கு முன்பிலிருந்து அநாதியாக இருந்தாரா?

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மீகா 5:2)
மீகா என்பவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார். இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்தார். மேசியாவின் சரியான பிறந்த இடத்தை அவர் தீர்க்கதரிசனமாக‌ கூறினார் - பெத்லகேம். இது ஒரு ஆச்சரியமான விவரம் தான், ஆனால் இந்த வசனத்தில் இன்னும் ஆச்சரியப்படுத்தும் வேறு ஒரு விவரமும் உள்ளது.

இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் பெத்லகேம் ஊரிலிருந்து வந்தாலும்,  அவருடைய ஆரம்பம் உண்மையில் பெத்லகேமில் இருந்து தொடங்கவில்லை என்று மீகா அறிவிக்கிறார். அவருடைய தொடக்கம்  “அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது“ என்று தீர்க்கதரிசனமாக கூறுகிறார்.

ஒரு நிமிடம் பொறுங்கள்! … ஆனால், நித்தியமானவர் இறைவன் மட்டும் தானே! ஆம், அநாதியாக இருப்பவர், தொடக்கமில்லாமல் இருப்பவர் இறைவன் மட்டும்தான்.

இயேசு அநாதியாக‌, காலத்திற்கும் படைப்பிற்கும் முன்பே, நித்தியமாகவும், படைக்கப்படாதவராகவும் இருந்தார்.

நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்கின்றோம். இதனால் நாம் கடவுளாக மாறிவிடமுடியுமா?”  என்று முஸ்லிம்கள்  கேட்பார்கள்.

முஸ்லிம்களின் இந்த வாதத்திற்கு குர்‍ஆனில் எந்த ஒரு சான்றுமில்லை. இது முஸ்லிம்களின் கற்பனையான வாதமாகும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் பிறப்பதற்கு முன்பு நாம் இருக்கவில்லை.  நீங்கள் பிறப்பதற்கு முன்பே இருந்திருந்தால், நீங்கள் நித்தியமானவர் என்று அழைக்கப்படுவீர்கள்! நீங்கள் அநாதியாக இருந்திருந்தல், நீங்கள் கடவுளாக கருதப்படுவீர்கள்.

நாம் நம்முடைய தாயின் கர்ப்பத்தில் கருத்தரித்த தருணத்தில் தான் நம்முடைய தொடக்கம் ஆரம்பிக்கிறது. அதற்கு முன் 1 வினாடி கூட நாம் இல்லை!

உடனே முஸ்லிம்கள், "சரி ஒப்புக்கொள்கிறோம், ஆனால் நாம் அனைவரும் இறைவனின் அறிவில் இருந்தோம்" என்றுச் சொல்வார்கள்.

இறைவன் சர்வஞானியாக எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கிறார், உண்மை தான். அவருடைய பரிபூரண மற்றும் முழுமையான அறிவில், நாம் பிறப்பதற்கு முன்பே இறைவன் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார் என்பதும் உண்மையே. ஆனால், இதன் அர்த்தம், “நாம் ஏற்கனவே உயிருள்ள மனிதர்களாக இருந்தோம்” என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

இயேசு, “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.” என்று கூறினார் (வெளி  22:13).

இங்கு இயேசு தெளிவாக, குழப்பம் வராத வண்ணமாக “தான் இறைவன்” என்றுச் சொல்வதை கவனிக்கவும். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவைகளை முஸ்லிம்கள் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்வார்கள். அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றான "அல்- அவ்வல் மற்றும் அல்-ஆகிர்" என்ற பட்டப்பெயரை இங்கு அவர்கள் நினைவு கூறுவார்கள். முஹம்மது வந்து இந்தப் பெயரை தன் மக்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே இயேசு இந்த தெய்வீக “அல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் “ என்ற‌ பட்டத்தை தன்னுடையது என்று கூறினார்.

இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன்பு, அவர் திரித்துவத்தின் இரண்டாவது நபராக இருந்தார் (யோவான் 17: 5, 17:24). தந்தையும் குமாரனும் நித்திய காலமாக அன்பு, ஐக்கியம் மற்றும் மகிமையுடன் கூடிய  உறவு இவர்கள் மத்தியில் இருந்ததாக இந்த வசனங்கள் கூறுகின்றன.

கேப்ரியல் தூதன் மரியாளுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்புவரை  “இயேசு” என்ற பெயர் திரித்துவத்தின் இரண்டாவது நபரின் பெயராக அறியப்படவில்லை (லூக்கா 1:31). ஆனால் நித்திய குமாரன் தன்னை "இயேசு" என்று உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்பே நித்திய காலமாக அநாதியாக இருந்தார் (டேவிட் குஜிக்).

பெத்லகேமில் பிறப்பதற்கு முன்பு, எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு ஆவார் (கொலோசெயர் 1: 16-17, யோவான் 1: 1-3). “அவர் எல்லாவற்றிற்கும் முன்பாக இருந்தவர் ஆவார்”.

அவர் எல்லாவற்றையும் படைத்தவர் என்பதால், அவர் நித்தியமானவர், மேலும் அவர் படைத்தவற்றின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இறைவனைத் தவிர மற்ற அனைத்துமே படைக்கப்பட்டவைகள் தான். எது படைக்கப்படவில்லையோ, அது தான் கடவுள்/இறைவன். எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு ஆவார்; எனவே அவர் இறைவன் ஆவார். அவர் தனது சொந்த வேலையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. (கிளார்க்)

மூலம்: http://www.faithbrowser.com/did-jesus-exist-before-he-was-born/

நபியாக நியமிப்பதற்கு முன்பு முஹம்மது வழிக்கேட்டில் இருந்தாரா?

கி.பி 610 க்கு முன்னர், அதாவது ஜீப்ரீல் தூதன் முஹம்மது அவர்களை முதன் முதலாக குகையில் சந்திப்பதற்கு முன்பு அவரது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

முஹம்மதுவின் வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகளில், அவர் இஸ்லாம் அல்லது முஸ்லிம் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அவர் குர்‍ஆனைப் பற்றியும் கேள்விப்படவில்லை. ஒருபோதும் ஷஹதா (இஸ்லாமிய விசுவாச அறிக்கையை) ஓதவில்லை அல்லது ஒரு நாளைக்கு 5 முறை இன்று முஸ்லிம்கள் செய்வது போன்று, சிரம் பணிந்து தொழுகையை நடத்தவில்லை. முஹம்மது தனது வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகள், ஒரு முஸ்லீமாகவோ அல்லது அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாகவோ அல்லது அல்லாஹ்வின் மதத்தைப் பின்பற்றுபவராகவோ வாழவில்லை.

அவர் நபியாக மாறுவதற்கு முன்பு, குகைகளில் சுற்றித் திரிந்தார்.
அவருக்குத் தெரிந்த ஒரே “அல்லாஹ்” தலைமுறை தலைமுறைகளாக காபாவில் அமைதியாக அமர்ந்திருந்த 360 சிலைகளில் ஒரு சிலை தான் அல்லாஹ். முஹம்மதுவின் குடும்பத்தினர் காபாவை பராமரித்துக்கொண்டு இருந்தனர் (கோயில் தர்மகர்த்தா என்றுச் சொல்வோமே, அது போல அவரின் குடும்ப வம்சத்தார் காபாவின் தர்மகர்த்தாவாக இருந்தனர்).

அல்லாஹ்விற்கு மூன்று மகள்கள் இருந்தனர், அவர்களின் பெயர்களாவன: அல்-லத், அல்-மனாத் மற்றும் உஸ்ஸா ஆகும். அல்லாஹ்வின் இந்த மகள்களின் சிலைகளோடு சேர்த்து, அல்லாஹ்வின் சிலையையும், மற்றுமுள்ள சிலைகளையும் சுத்தம் செய்வது அவர்களின் வேலையாக இருந்தது. இந்த வேலையை ஒரு கால அட்டவணை போட்டுக்கொண்டு ஒவ்வொரு வம்சத்தினராக செய்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த பழங்குடியினரான மக்காவினரும், இதர சுற்றுமுள்ள இன மக்களும்  வழிபடுவதற்கும் பிரார்தனைகள் செய்வதற்கும் வரிசைக்கிரமமாக அந்த 360 சிலைகள் காபாவில் வைக்கப்பட்டு இருந்தன.

முஹம்மது கேள்விப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகள் அனைவரும், அவருடைய வர்த்தகத்தின் போது, அவரோடு தொடர்பு கொண்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அந்த தீர்க்கதரிசிகள் யாரும் முஹம்மது வணங்கிக்கொண்டு இருந்த அந்த காபாவின் 360 சிலைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் முஹம்மது மற்றும் அவரது தந்தை அப்துல்லாஹ்  அவர்களும் (பொருள்: அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அவரது முழு கோத்திரமும் அந்த பழங்குடியினரின் 360 சிலைகளையே வணங்கிக்கொண்டு இருந்தனர்.

முஹம்மது தமது முதல் நாற்பது ஆண்டுகள், காபாவில் இருந்த  360 சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்த ஒரு “பல தெய்வவழிப்பாட்டு பழங்குடியினராகவே” வாழ்ந்தார்.  முஸ்லிம்கள் இதை மறுக்க விரும்புகிறார்கள். ஆனால், அந்த நாற்பது ஆண்டுகளில்  (ஜஹலியாவின் காலத்தில்), அந்த பல தெய்வ சிலைகளை வணங்கும் பழக்கங்களை, தொழுகை முறைகளை முஹம்மது எதிர்த்ததாக, நிராகரித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

என்றைக்கு அவர் தன்னை முதல் முஸ்லிமாக அறிமுகம் செய்தாரோ, ஒரு புதிய மதத்தை  அறிமுகம் செய்தாரோ, அந்த மதத்திற்காக கட்டளைகளையும், ஐந்து தூண்களையும், இதர தொழுகைகளையும், குர்‍ஆன் ஓதுதலையும் அறிமுகம் செய்தாரோ, அன்று தான் அவர் அந்த பல தெய்வ வழிப்பாட்டு சிலைகளை எதிர்க்க நிராகரிக்க ஆரம்பித்தார்.

முஹம்மது ஒரு பேகன் (பல தெய்வ வழிப்பாட்டுக்காரர்) என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால், குர்‍ஆன் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராகவே சாட்சி சொல்கிறதே! முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு  பல சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்தார் என்றுச் சொல்கிறதே! முஹம்மதுவிற்கு தாம் வெளிப்பாடு கொடுப்பதற்கு முன்பு, முஹம்மது அறியாதவராக இருந்தார் என்று அல்லாஹ் ஒப்புக்கொள்கின்றான்.

குர்‍ஆன் 42:52 ஐ ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
 அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
42:52. (நபியே!) இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹீயின் மூலமாக அறிவிக்கின்றோம். (இதற்கு முன்னர்) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீங்கள் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர்கள்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
42:52. மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
42:52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர் ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவிக்கின்றோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹீ மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீர்.
பீஜே தமிழாக்கம்:
42:52. இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை[344] மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.  
குறிப்பு: அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட பீஜே அவர்களின் விளக்கத்தை படிக்கவும்.

40 ஆண்டுகளாக, முஹம்மது ஒரு போதும் ஸலாத் (அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது) செய்யவில்லை. மாறாக, பேய்கள் வசிப்பதாகச் சொல்லப்படும் இருண்ட குகைகளில் தியானங்களை செய்துக்கொண்டு இருந்தார்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது, அதாவது இஸ்லாம் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் எதையும் அறியாதவராக இருந்த காலத்தில், அந்த குகையில் அவர் எதனை தியானம் செய்துக்கொண்டு இருந்தார்? தன்னைப் பற்றி எதையுமே, தன் வேதம் பற்றி ஒன்றுமே அறியாத காலத்தில் முஹம்மது செய்த அந்த தியானச் செயலை அல்லாஹ் அங்கீகரித்திருப்பானா?

மூலம்: http://www.faithbrowser.com/the-life-of-muhammad-before-the-revelations/

அடிக்குறிப்பு:

[1] குர்‍ஆன் 42:52க்கு பீஜே கொடுத்த விளக்கம்

344. பிறக்கும் போதே நபியா?

இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

முதல் மனிதரான ஆதம் நபியை இறைவன் படைப்பதற்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் நியமித்து விட்டான் என்பதும், இதனால் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும் தான் அந்தக் கட்டுக் கதை.

பிறக்கும் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகப் பிறந்தார்கள் என்றால் நம்பிக்கை என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது; வேதம் என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது என்று 42:52 வசனத்தில் அல்லாஹ் கூறுவானா?

இறைத்தூதராக நியமிக்கப்பட்டவருக்கு ஈமான் இல்லாமல் இருக்குமா? வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் நபியாக இருக்கவுமில்லை, தாம் இறைத்தூதராக நியமிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறைச்செய்தி வந்த பிறகு தமக்கு வந்தது இறைச்செய்தி தான் என்பதை ஆரம்பத்தில் அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வரகா என்பவர் உறுதி செய்த பிறகுதான் அவர்களுக்கே அது உறுதியானது. (பார்க்க: புகாரி 4, 3392, 4954, 6982)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும், உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் கட்டுக்கதை என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம்.

ஞாயிறு, 15 மார்ச், 2020

எலியா(எலியாஸ்) நபியின் இறைவன் யார்? - யெகோவா? / அல்லாஹ்?

பைபிளில் வரும் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவமுள்ளது. மேலும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள் உள்ளது. இந்த எலியா என்ற பெயரின் பொருள் என்ன?

 • El + i = My God
 • Yah = Yahweh
 • Eli-Yah = MY GOD IS YAHWEH
 • எல் + இ = என் இறைவன்
 • யா = யெகோவா
 • எலியா = என் இறைவன் யெகோவா

இது ஒரு அதிசயமான பெயர். தான் வணங்கும் இறைவனின் பெயரையே தன் பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கிறார் எலியா. இதைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கும் போது,  பைபிளில் யெகோவா என்ற பெயரை தாங்கிய மற்றவர்களும் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. உடனே தேட ஆரபித்தேன். யெகோவா என்ற வார்த்தை வரும் பெயர்கள் சிலவற்றை பைபிளிலிருந்து எடுத்து இங்கு தருகிறேன். கீழ்கண்ட பட்டியலைப் பாருங்கள்:

(குறிப்பு: "யா" என்று எபிரேய மொழியில் ஒரு பெயரை முடிக்கும் போது, அது யெகோவா தேவனை குறிக்கும் என்பதை அறியவும். ஆங்கிலத்தில் "Y"விற்கு பதிலாக "J"  என்று எழுதுகிறார்கள். ஆக, எலியா என்ற பெயரை ஆங்கிலத்தில் "Elijah" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.)

எண்

பெயர்

அர்த்தம்/பொருள்

ஆங்கிலத்தில் பெயரும் பொருளும்

1

அபியா

யெகோவா என் பிதா

Abijah: My Father is Yahweh
2

அதோனியா

யெகோவா என் ஆண்டவர்

Adonijah, a son of David. His name means: My Lord is Yahweh
3

அமரியா

யெகோவா கூறினார்

Amariah, means Yahweh Has Said.
4

ஆனாயா

யெகோவா பதில் கொடுத்தார்

Anaiah, means Yahweh Has Answered.
5

அசரியா

யெகோவா உதவி செய்தார்

Azariah, one of Daniel's friends. His name means: Yahweh Has Helped.
6

அசசியா

யெகோவா வலிமையுள்ளவர்

Azaziah, means Yahweh Is Strong
7

பெனாயா

யெகோவா கட்டினார்

Benaiah, means Yahweh Has Built
8

கெதலியா

யெகோவா பெரியவர்

Gedaliah, means Yahweh is Great
9

கெமரியா

யெகோவா செய்து முடித்தார்

Gemariah, means Yahweh Has Completed
10

அனனியா

யெகோவா கிருபையுள்ளவர்

Hananiah, means Yahweh Is Gracious
11

எசேக்கியா

யெகோவா பெலப்படுத்துகிறார்

Hezekiah, a King of Judah. His name means Yahweh Strengthens
12

ஒதியா

யெகோவாவின் மாட்சிமை

Hodiah, means Majesty Of Yahweh
13

ஏசாயா

யெகோவா என் இரட்சிப்பு

Isaiah is one of the major prophets. His name means Yahweh Is Salvation
14

எகொனியா

யெகோவா ஸ்தாபிப்பார் / நிருபிப்பார்

Jeconiah, means Yahweh Will Establish
15

யோயாக்கீம்

யெகோவா உயர்த்தினார்

Jehoiakim, means Raised by Yahweh
16

யோராம்

யெகோவா மேன்மைபடுத்தினார்

Jehoram, name of two kings in Israel. The name means Exalted By Yahweh
17

யோசபாத்

யெகோவா நியாயந்தீர்த்தார்

Jehoshaphat, a king of Judah. His name means Yahweh Has Judged.
18

யெகூ

அவர் யெகொவா

Jehu, a king of Israel. His name means Yahweh Is He.
19

எரேமியா

யெகோவா உயர்த்துவார்

Jeremiah, one of the major prophets. His name means Yahweh Will Exalt.
20

எரியா

யெகோவா கற்றுக்கொடுத்தார்

Jeriah, means Taught By Yahweh
21

யோவாப்

யெகோவா பிதா ஆவார்

Joab, a commander of David's army. His name means Yahweh Is Father.
22

யோவாஸ்

யெகோவாவின் அக்கினி

Joash, a king of Judah. Meaning Fire of Yahweh
23

யோவேல்

யெகோவா'வே இறைவன்

Joel, name of a prophet. The name means Yahweh Is God.
24

யோவான்

யெகோவா கிருபையுள்ளவர்

John (Yochanan in Hebrew), means Yahweh Is Gracious
25

யோனத்தான்

யெகோவா கொடுத்தார்

Jonathan, son of King Saul and friend of David. Yahweh Has Given
26

யோசுவா

யெகோவா இரட்சிப்பு

Joshua, successor of Moses. Yahweh Is Salvation
27

யோசியா

யெகோவா ஆதரிக்கிறார்

Josiah, a king of Judah. The name means Yahweh Supports
28

யோதாம்

யெகோவா பிழையில்லாதவர்

Jotham, a king of Judah. Means Yahweh Is Perfect
29

மத்தேயு

யெகோவாவின் பரிசு

Matthew, one of the apostles. His name means Gift Of Yahweh
30

மிகாயா

யெகோவாவைப் போன்று யாருண்டு

Micaiah, means Who Is Like Yahweh
31

நெகேமியா

யெகோவா ஆறுதல் செய்கிறார்

Nehemiah, means Yahweh Comforts
32

நேரியா

யெகோவாவின் விளக்கு

Neriah, means Lamp Of Yahweh
33

நெத்தனியா

யெகோவா கொடுத்தார்

Nethaniah, means Yahweh Has Given
34

ஒபதியா

யெகோவாவிற்கு ஊழியம் செய்கிறேன்

Obadiah, name of a prophet. The name means, Serving Yahweh
35

செராயா

யெகோவா என் ஆட்சியாளர்

Seraiah, means Yahweh Is Ruler
36

சேமாயா

யெகோவா கேட்டார்

Shemaiah, means Heard By Yahweh
37

உரியா

யெகோவா என் வெளிச்சம்

Uriah, means Yahweh Is My Light
38

உசியா

யெகோவா என் பெலன்

Uzziah, a king of Judah. Means, My Power Is Yahweh
39

செப்பதியா

யெகோவா அளித்தார்

Zebadiah, means Yahweh Has Bestowed
40

சகரியா

யெகோவா நினைவுகூர்ந்தார்

Zechariah, father of John the Baptist. His name means, Yahweh Remembers
41

சிதேக்கியா

யெகோவாவின் நீதி

Zedekiah, last king of Judah. Means, Justice Of Yahweh
42

செப்பனியா

யெகோவா மறைத்துவைத்தார்

Zephaniah, name of a prophet. His name means, Yahweh Has Hidden

முஸ்லிம்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:

 • பைபிளில் அல்லாஹ்வின் பெயர் எங்கே?
 • அல்லாஹ் என்ற பெயரை ஒருவரும் கேள்விப்படவில்லையா?
 • பைபிளின் நபிகள் அனைவரும் அல்லாஹ்வின் நபிகள் தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படியானால், அல்லாஹ்வின் பெயர் தான் யெகோவாவா?

உண்மையென்னவென்றால்,  யெகோவா என்ற பெயரை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.

மேற்கண்ட பட்டியலில் யெகோவாவிற்கு மகிமை உண்டாகும்படி பல பெயர்களை காண்கிறோம், இதில் தீர்க்கதரிசிகளும்  இருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் பெயரில் ஒரு நபரின் பெயரையும் நம்மால் காணமுடியவில்லை. அல்லாஹ்வின் பெயரைக் கொண்ட ஒருவரின் பெயராவது பைபிளில் இருக்கவேண்டாமா?

முஸ்லிம்கள் நம்மிடம் "எல்- El" என்ற எபிரேய சொல் "அல்லாஹ்வை"க் குறிக்கும் சொல் என்றுச் சொல்வார்கள்.  ஆனால், இது உண்மையில்லை.

"எல் என்பது ஒரு தனிப் பெயர் இல்லை, இது இறைவனைக் குறிக்கும் பொதுப் பெயராகும் (El is not a proper noun. The word El just means God).

எடுத்துக்காட்டு:

 • எசேக்கியேல் என்ற சொல்லின் பொருள் 'இறைவன் பெலப்படுத்துவார்' என்பதாகும்.
 • எசேக்கியா என்ற சொல்லின் பொருள் 'யெகோவா பெலப்படுத்துவார்' என்பதாகும்.

இவ்விரண்டு பெயர்களின் பொருள்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். "இறைவன்" என்பது பொதுப்பெயர்,  "யெகொவா" என்பது தனிப்பெயர்.

அரபி மொழியில் எடுத்துக்கொண்டாலும்:

 • "இலா - ila" என்றால் "இறைவன்/கடவுள்/ஆண்டவர்" என்று பொருள் (பொதுப்பெயர்).

ஆனால்,

 • "அல்லாஹ் - Allah" என்றால் அது 'இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே குறிக்கும்' என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள் அல்லவா.

இதே போலத்தான், எல் என்பது பொதுப்பெயர், யெகோவா என்பது தனிப் பெயர்.

பைபிளின் இறைவனின் பெயர் யெகோவா ஆகும், பைபிளின் இறைவனின் பெயர் 'இறைவன்' இல்லை.

 • But the LORD (Yahweh) is the true God; he is the living God and the everlasting King. Jeremiah 10:10
 • கர்த்தரோ (யெகோவா) மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா;  . . . (எரேமியா 10:10 )

குறிப்பு: தமிழ் பைபிளில், பழைய ஏற்பாட்டை, மொழியாக்கம் செய்யும் போது, "யெகொவா" என்ற எபிரேய பெயர் வரும் இடங்களில் "கர்த்தர்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். இந்த இடங்களில் "யெகோவா" என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும். இதே போன்று ஆங்கில மொழியாக்கங்களில் யெகோவா என்று வரும் இடங்களில் "லாட் - LORD" என்று பெரிய எழுத்துக்களில் மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில், எலியா என்றால் "என் இறைவன் யெகோவா" என்று பொருள் என்பதைப் பார்த்தோம். முஸ்லிம்கள் "எல்" என்றால் அல்லாஹ் என்று சொல்வார்களானால், எலியா என்றால் "என் அல்லாஹ் யெகோவா ஆவார்" என்று பொருள் வரும். இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இஸ்லாம் முழுவதிலும் அதாவது குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும், யெகோவா என்ற பெயர் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.   

இம்மானுவேல்:

இயேசுவின் இன்னொரு பெயர் 'இம்மானுவேல்' என்பதாகும், இதன் பொருள் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதாகும், - அதாவது சரீரதாரியாக வந்த இறைவன் இயேசுவாக நம்மோடு இருக்கிறார்.

முஸ்லிம்கள் "எல்" என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் என்றுச் சொல்வார்களானால், இம்மானுவேல் என்றால், "அல்லாஹ் நம்மோடு இருக்கிறார்" என்று பொருள் வருகிறது. அப்படியானால், இயேசு நம்மோடு இருந்தால், அதன் அர்த்தம் "அல்லாஹ் நம்மோடு இருக்கிறார்" என்று வருகிறது. இதுவும் இஸ்லாம் சொல்லும் போதனையல்லவே!

அல்லாஹ்வை கனப்படுத்த முஸ்லிம்கள் தங்கள் பெயர்களில் 'லாஹ் - lah' என்பதை சேர்த்துக்கொள்கிறார்கள்.

எடுத்துக்காட்டு: 

 • "அப்துல்லாஹ்" இதன் பொருள் "அல்லாஹ்வின் அடிமை" என்பதாகும்.
 • "அமானுல்லாஹ்" இதன் பொருள் "அல்லாஹ்வின் பாதுகாப்பு" என்பதாகும்.

இதே போல, யூத கிறிஸ்தவர்கள் தங்கள் பெயர்களில் "யா" என்ற ஒரு எழுத்தை பெயரின் கடைசியில் அல்லது பெயரின் ஆரம்பத்தில் சேர்த்து, "யெகோவா" தேவனுடைய‌ பெயர் தங்கள் பெயர்களில் வைத்துக்கொண்டு கனப்படுத்துகிறார்கள்.

பைபிளின் எபிரேய தீர்க்கதரிசிகள் யெகோவா தேவனை தொழுதுக்கொண்டார்கள், அவருக்கு ஊழியம் செய்தார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் அல்லாஹ் என்ற பெயரை கேள்விப்படவும் இல்லை, அப்பெயர் பற்றிய வேறு விவரங்களை அறியவும் இல்லை.

ஆனால், எபிரேய தீர்க்கதரிசிகளை குர்‍ஆன் கடத்தி வைத்துக்கொண்டு, இவர்கள் அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகள் என்றுச் சொல்வது அறிவுடமையாகத் தெரியவில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், குர்‍ஆன் கடத்திய எபிரேய தீர்க்கதரிசிகளின் பெயர்களிலேயே யெகோவா தேவனின் பெயர் உள்ளது.

எடுத்துக்காட்டு:

 • "எலி-யா" என்றால் "என் இறைவன் யெகோவா" என்று பொருள்.
 • "ஜகரிய்-யா" என்றால், "யெகோவா நினைவு கூறினார்" என்று பொருள்.

யெகோவாவின் நபிகளை, அல்லாஹ்வின் நபிகளாக காட்டவேண்டுமென்றால், அல்லாஹ் அவர்களின் பெயர்களை மற்றியிருந்திருக்கலாம்.

 • "எலி-யா" என்ற நபியின் பெயரை "எலிலுல்லாஹ்" என்றும்
 • "ஜகரிய்-யா" என்ற பெயரை "ஜகருல்லாஹ்" என்று மாற்றியிருந்திருக்கலாம்.

அடுத்தபடியாக இஸ்லாமின்படி, ஒரு பெயர் "லாஹ் -lah" என்று முடிவு பெற்றாலோ, அல்லது "அல்" என்ற இரு எழுத்துக்கள் பெயர்களில் இருந்தாலோ அது அல்லாஹ்வை குறிக்கும் என்று நம்பப்படுவதினால், இப்படிப்பட்ட பெயர்கள் பைபிளில் உள்ளதா என்று தேடிப்பார்க்க முடிவு செய்தேன். அல்லாஹ்வின் பெயருக்கு ஓரளவிற்கு அருகாமையில் வரும் பெயர்களை பைபிளிலிருந்து தேடி கண்டுபிடித்து கீழே கொடுத்துள்ளேன், அவைகளை படிக்கவும்.

இந்த பெயர்களில் அல்லாஹ் இருக்கிறார் என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.

எண்

பெயர்

அர்த்தம்/பொருள்

ஆங்கிலத்தில் பெயரும் பொருளும்

1

மாகலா (Maha-lah)

பெலவீனம் (அ) உடல் நலக்குறைவு

Maha-lah, means weak or sick - 1 Chronicles 7:18

2

தெலீலாள் (Deli-lah)    

பெலவீனம்

Deli-lah, means weak and languishing - Judges 16:4

3

ஏலாள் (He-lah)

துரு பிடித்தல்

He-lah, means rust - 1 Chronicles 4:5

4

உல்தாள்(Huldah)

மரநாய் (அ) மோல் என்ற ஒரு உயிரினம்

Huldah, means weasel or mole - 2 Kings 22:14

5

பேலியாள் (Belial)

மதிப்பில்லாத‌

Belial, means worthless - Deuteronomy 13:13

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/the-god-of-elijah/

தேதி: 15th Mar 2020


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/the-god-of-elijah.html