குர்ஆன் முரண்பாடுகள்
நோவாவின் வயது (Noah's Age)
பைபிளிலும் மற்றும் குர்ஆனிலும் சொல்லப்பட்ட நோவாவின் கதையை ஒருவர் படித்தால், கீழ் கண்ட விவரங்களை அவர் காண வேண்டி வரும்.
ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)
மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)
நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார், ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.
சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது
- நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
- அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
- அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது
வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள "அவர்கள் மத்தியில்" என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள "அவருடைய சமூகத்தாரிடம்" என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.
ஷேர் அலி அவர்களின் குர்ஆன் மொழியாக்கம்:
And WE, certainly, sent Noah to his people, and he remained among them a thousand years, short of fifty years. Then the deluge overtook them, while they were wrongdoers. Sher Ali
முஹம்மது சர்வார் அவர்களின் மொழியாக்கம்:
We sent Noah to his people and he lived with them for nine hundred and fifty years, then the flood engulfed them for their injustice. Muhammad Sarwar
ரஷித் கலிபா அவர்களின் மொழியாக்கம்:
We sent Noah to his people, and he stayed with them one thousand years, less fifty. Subsequently, they incurred the flood because of their transgressions. Rashad Khalifa
மாலிக் அவர்களின் குர்ஆன் மொழியாக்கம்:
We sent Noah to his people and he lived among them a thousand years less fifty. Then because of their wrongdoings the flood overtook them. Malik
பிரீ மைன்ட்ஸ் குர்ஆன் மொழியாக்கம்:
And We had sent Noah to his people, so he stayed with them one thousand years less fifty calendar years. Then the flood took them while they were wicked. Free Minds
கரிபுல்லா அவர்களின் குர்ஆன் மொழியாக்கம்:
Indeed, We sent Noah to his nation, and he lived amongst them for a thousand years, less fifty (but they belied him), then the Flood seized them while they were harmdoers. Qaribullah
முஹம்மத் அஸத் அவர்களின் குர்ஆன் மொழியாக்கம்:
And, indeed, [in times long past] We sent forth Noah unto his people, and he dwelt among them a thousand years bar fifty; and then the floods overwhelmed them while they were still lost in evildoing: Muhammad Asad
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்ஆனின் இந்த தவறு, பெரு வெள்ளத்திற்குப் பிறகு நோவாவைப் பற்றி குர்ஆன் ஒன்றுமே சொல்லவில்லை என்பதிலிருந்து, இன்னும் நிரூபனமாகிறது. கப்பலை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடும் இடத்திலிருந்து நோவாவின் கதை குர்ஆனில் முடிந்துவிடுகிறது. ஆதியாகமத்தின் 9ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியாகிய "நோவாவோடும் மற்றும் மனித வர்க்கத்தோடும் தேவன் செய்த உடன்படிக்கையைப் பற்றி" குர்ஆனில் ஒன்றுமே சொல்வதில்லை. குர்ஆனை பொருந்த மட்டில், ஆங்காங்கே நோவாவின் சந்ததிகள் என்று சொல்கிறது அதை விடுத்து, குர்ஆனில் நோவாவின் கதை பெரு வெள்ளத்தோடு முடிந்துவிடுகிறது.
இந்த குர்ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்.
ஆக, குர்ஆனின் காலவரிசை கீழ் கண்ட விதமாக உள்ளது.
?ஆண்டுகள்? 950 ஆண்டுகள் ?ஆண்டுகள்?
பி-----------------------------அ-------------------------------------வெ----------------------------ம
பி-----------------------------அ-------------------------------------வெ----------------------------ம
விளக்கம்:
பி: நோவாவின் பிறப்பு
அ: நோவாவை நபியாக அல்லாஹ்வின் அழைப்பு
வெ: வெள்ளம்
ம: நோவாவின் மரணம்
பி: நோவாவின் பிறப்பு
அ: நோவாவை நபியாக அல்லாஹ்வின் அழைப்பு
வெ: வெள்ளம்
ம: நோவாவின் மரணம்
எது எப்படியாயினும், ஒன்று மட்டும் தெளிவு: முஹம்மது தவறுதலாக நோவாவின் முழு வயதை அவரது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே சம்மந்தப்படுத்தியுள்ளார்.
Source: http://answering-islam.org/Quran/Contra/noahs_age.html
Isa Koran Home Page | Back - Koran Index |
2 கருத்துகள்:
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்ஆனின் இந்த தவறு, பெரு வெள்ளத்திற்குப் பிறகு நோவாவைப் பற்றி குர்ஆன் ஒன்றுமே சொல்லவில்லை என்பதிலிருந்து, இன்னும் நிரூபனமாகிறது. கப்பலை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடும் இடத்திலிருந்து நோவாவின் கதை குர்ஆனில் முடிந்துவிடுகிறது. ஆதியாகமத்தின் 9ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியாகிய "நோவாவோடும் மற்றும் மனித வர்க்கத்தோடும் தேவன் செய்த உடன்படிக்கையைப் பற்றி" குர்ஆனில் ஒன்றுமே சொல்வதில்லை. குர்ஆனை பொருந்த மட்டில், ஆங்காங்கே நோவாவின் சந்ததிகள் என்று சொல்கிறது அதை விடுத்து, குர்ஆனில் நோவாவின் கதை பெரு வெள்ளத்தோடு முடிந்துவிடுகிறது.
இந்த குர்ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்.
கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் கொடுத்து விட்டீர்களே சார்.
நோவா 950 வருஷம் வாழ்ந்தார் அவருடைய வாழ்நாளின் கடைசி வருடங்களில் வெள்ளம் பிறகு அவருடைய மரணம்.இப்படியும் எடுத்துக்கலாமே.
SO NO CONTRADICTIONS.
MIST.
நீங்கள் கூறுவதில்தான் முரண்பாடு இருக்கிறது. அதாவது வெள்ளப் பிரளயத்திலிருந்து இப்ராஹீமும் அவரை ஏற்றுக் கொண்டவர்களும் காப்பற்றப்படுகிரார்கள். இந்த நிகழ்வு அவர்கள் வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு வாழ்ந்தார்கள் எனபதை தெளிவுபடுத்து கிறது. இங்கு தொள்ளயிரத்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தார் என்பது அவர் வாழ்ந்த வருடத்தை குறிப்பிடுகிறது. அதாவது வெள்ளபிரலயம் வந்ததை குறிப்பிடவில்லை.
கருத்துரையிடுக