நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . .
If I were a Muslim.....
ஆசிரியர்: டல்லஸ் எம் ரோர்க், Ph.D.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், கீழ்வரும் குர்ஆன் வாக்கியங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருப்பேன்.
சூரா 5:51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்…...."
இது உண்மை அல்ல என நிரூபிக்க உதாரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தானில் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்க ஒரு முஸ்லீமல்லாத நாடே உதவவேண்டி இருந்தது. இவ்வாறே ஈராக்கிலும் நடந்தது, குர்தீஷ் முஸ்லிம்கள் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று மகிழ்ந்தனர். கடந்த நூற்றாண்டின் இறுதியில், ஒரு முஸ்லீமல்லாத நாடு மற்றுமொரு முஸ்லீமல்லாத நாட்டுடன் போர் புரிந்து முஸ்லீம்களை விடுவித்தது. அந்த நேரத்தில் யூத மருத்துவர்கள் இந்த குர்ஆன் சூராவுக்கு முரணாக "கோசாவார் (Kosovar)" முஸ்லீம்களுக்கு மருத்துவம் செய்தனர்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், பல முஸ்லிம்களும் இமாம்களும் எந்த வொரு யூதனையோ அல்லது கிறிஸ்தவனையோ சந்தித்திருக்காத பட்சத்தில் அவர்களை வெறுக்கச் சொல்லும் இமாம்களின் போதனையினைப் பற்றி நான் இருமுறை யோசித்து இருந்திருப்பேன். இது விவரிக்க முடியாத அளவிற்கு மிகவும் தவறான பாரபட்சமாகும். மேலை நாடுகளுக்கு வரும் பல முஸ்லிம்கள், தங்களுக்குக் கிடைக்கும் அன்பான வரவேற்பினைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். முஹம்மதுவின் எதிரிகளை நீங்கள் ஏன் உங்களின் எதிரியாகக் கருதவேண்டும்? இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், பல முஸ்லிம்கள் இந்துக்கள் தங்களிடம் பாசத்துடனும் நேசத்துடனும் இருப்பதாகக் கண்டுள்ளனர். இந்துக்களின் அன்பும் கருணையும் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் ஒரு முஸ்லீமாக இருந்திருந்தால் இது குறித்து நான் வியப்படைவேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்ஆன் என்ன சொல்லுகிறது என அறியும் பொருட்டு அதனை வாசிக்க விரும்புவேன். பல முஸ்லிம்கள் அதனை அரபி மொழியில் மனப்பாடம் செய்திருப்பார்கள், ஆனால் அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியாது. அவர்கள் படிக்கும் அரபியின் அர்த்தம் புரியாதிருக்கும் போது அரபி மொழியினால் என்ன பயன் அவர்களுக்கு? பல முஸ்லிம்களுக்கு குர்ஆன் என்ன சொல்லுகிறது என்றே தெரியாது. அது தெரிய வரும்போது அவர்கள் கேள்விக்குரியதாகக் கருதும் பல கருத்துக்களை குர்ஆன் சொல்வதனைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். நான் ஒரு முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் இவைகளை அறிய விரும்புவேன்.
ஒருவர் ஏன் அரபி மொழியில் பிரார்த்திக்க (நமாஜ் செய்ய) வேண்டும்? இறைவன் (அல்லாஹ்) அனைத்தும் அறிந்தவராயிருப்பின் அவருக்கு அரபி மொழி தவிர வேறு மொழிகள் தெரியாதா?
தமிழாக்க குறிப்பு: இஸ்லாமியர்களில் சிலர் குர்ஆனை படிக்காமலேயே, இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு பதில்களை எழுத ஆரம்பித்து விடுகின்றனர், இப்படிப்பட்ட ஒரு உதாரணம் தான் கீழே தரப்பட்டுள்ளது.
"ஒரு காரியத்தை நான் தெளிவாக்க வேண்டும். FFI (Faith Freedom International) ல் நான் இஸ்லாமைப் பழிப்பவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழுதிக்கொண்டிருந்த போது, குர்ஆனையோ அல்லது ஹதீஸ்களையோ நான் வாசித்தவனல்ல. இஸ்லாம் பற்றிய எனது அறிவு மற்றவர்கள் சொல்ல நான் கேட்ட கேள்வி ஞானம் மட்டுமே." (மூலம்)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இந்த உலகில் உள்ள மற்றவர்கள் அனைவரும் முஹம்மதுவை ஏன் ஒரு குழந்தைகளின் மீது பாலுணர்வு கொள்பவர் (pedophile) என கருதுகிறார்கள் என்று ஆராய ஆரம்பிப்பேன்.
"ஆயிஷாவின் விளக்கம்: தாம் ஆறு வயதாயிருக்கும் போது, இறைத் தூதர் அவரைத் திருமணம் புரிந்தார். மேலும் அவர் ஒன்பது வயதாகும் போது அத்திருமணத்தை உடலுறவினால் நிறைவு செய்தார். அதன் பின்பு, அவர் ஒன்பது ஆண்டுகள் அவருடன் இருந்தார் (அதாவது அவரின் மரணம் வரை)" (Sahih Bukhari Volume 7, Book 62, Number 64)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது அவர் விருப்பம் போல பல மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என அவருக்கு அனுமதி இருக்கும் போது, நான் மட்டும் ஏன் நான்கு மனைவிகளை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளேன் என வியப்பேன்.
கீழ் வரும் முதலாவது சூரா முஹம்மதுவைக் குறித்தது. இரண்டாவது ஏனைய சாதாரண முஸ்லீம்களைக் குறித்தது.
சூரா 33:50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.
சூரா 4:3 அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாக இருக்கும் பட்சத்தில், அதில் ஏன் பல தலை முறைகளாகத் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்கள் குறித்த கற்பனைக் கதை மற்றும் உலகில் ஏனையோர் புனை கதைகள் எனக் கருதும் ஏனைய கதைகள் போன்ற எப்போதுமே நடந்திராத கற்பனைக் கதைகள் குர்ஆனில் இடம் பெற வேண்டும் என வியப்பேன்.
சூரா 18:10 அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.
சூரா 18:25 அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது ஏன் தன்னை விமர்சித்தவர்களை, தன்னை எதிர்த்தவர்களை, தனக்கு எதிராக கேலி செய்யும் கவிதைகளை எழுதியவர்களை மன்னிக்கவில்லை என வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்திருந்தால், இவைகள் மரண தண்டனைக்கு உரிய குற்றங்களா? என வியப்பேன். கேலி செய்தல் மரண தண்டனைக்கு ஏதுவான குற்றமா? என வியப்படைவேன்.
முஹம்மது அவரது மாமனாகிய அபூ லஹப்பை தனது செய்தியினை ஏற்றுக் கொள்ளாததினால் சபித்தார். இந்த சாபம் குர்ஆனில் பதிக்கப்பட்டுள்ளது.
சூரா 111:1-5 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது ஒரு நபி என ஏற்று கொள்ள மறுக்கும் ஒரு சாதாரண காரணத்திற்காகவே எண்ணற்ற மக்களை முஸ்லீம்கள் ஏன் கொலை செய்தார்கள் என வியப்பேன்.
சூரா 2:191 (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், அல்லாஹ்வை நம்பும்படி மக்களை வற்புறுத்துவது இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் தானா என வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்திருந்தால், மக்கள் அல்லாஹ்வை நம்புவதா வேண்டாமா என்பதில் அவர்களுக்கு சுதந்திரம் தரப்படவேண்டும் என்று எண்ணுவேன். மக்கள் அல்லாஹ்வை வணங்க மக்கள் வற்புறுத்தப்பட்டால் அது அல்லாஹ்விற்கே அவமானம் என நான் எண்ணுகிறேன். இது பற்றி அவர் அக்கறைக் கொள்வதில்லையா? இது பற்றி அவருக்குத் தெரியுமா? வற்புறுத்தலினால் ஏற்கப்படும் தொழுகை, வணங்குதல் என்பது தொழுகையே அல்ல. நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் இது குறித்து நான் ஆச்சரியமடைவேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஒரு இறைத்தூதராக, இயேசு, ஏன் தனது போதனையில் முஹம்மதுவை விட பண்பிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்குகிறார் என வியப்பேன்.
சூரா 3:45 மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
இயேசு கூறியதையும் முஹம்மது கூறியவையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்:
இயேசு சொன்னார், "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."(மத்தேயு 5:44)
முஹம்மது சொன்னார், "அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது." (சூரா 8:60)
இயேசு நேரடியாகப் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என குர்ஆன் சொல்லுகிறது. முஹம்மதுவோ மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்.
"இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்" (சூரா 4:157-158)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது கொள்ளையடிக்கவும் ஏதுமறியாத மக்களைக் கொல்லும்படி ஏவும் போதும் தாம் அல்லாஹ்வின் வெளிப்பாட்டினால் மனமாற்றமடைந்தேன் எனக் கூறியவைகளை ஏன் அரேபியாவிலுள்ள அரேபிய மக்கள் சிறிதும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டனர் என வியப்பேன்.
சூரா 2:217 (நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."
ஆரம்ப காலத்தில், புனித மாதத்தில் முஹம்மது போரிடவோ அல்லது அவ்வாறு போரிட்ட கூட்டத்தினரிடமிருந்து கொள்ளைப் பொருளை ஏற்றுக் கொள்வதோ இல்லை. பின்பு அவர் தமது மனதினை மாற்றிக் கொண்டு அதனை மேற்கண்ட சூராவின் மூலம் நியாயப்படுத்திக் கொண்டார்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் பெண்கள் தங்களின் உடல் முழுவதையும் மூடிக்கொள்ள வேண்டும் என வியப்பேன். பெண்களுக்கும் ஆண்கள் போன்றே உணர்வுகள் இருக்கும்; அதற்காக ஆண்கள் தங்களின் உடல் முழுவதையும் மூடிக் கொள்ளக் கூடாதா? நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், முஸ்லீம் ஆண்கள் தங்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால், பெண்கள் இத்தகைய ஒரு நடமாடும் சிறைச்சாலையை கொடிய வெப்பக் காலங்களிலும் சுமந்து திரிய வேண்டுமா? என வியப்படைவேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், பெண்களும் வெயில் காலங்களில் அதற்குரிய வசதியான நாகரீகமான உடைகளை அணியும் கண்ணியத்தினை வழங்கும் பண்பாடு வேண்டும் என விரும்புவேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், பெண்களுக்கு ஏன் ஆண்களுடன் சம உரிமை இல்லை என வியப்படைவேன்.
பெண்கள் அறிவாற்றல் அற்றவர்கள் என முஹம்மது கருதியதால், ஐம்பது கோடி பெண்கள் முழுமையான மனித உரிமையை இழந்தார்கள். நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், இந்த ஏற்றத் தாழ்வைக் குறித்து மிகவும் சங்கடப்படுவேன். அனேகம் அற்புதமான காரியங்கள் மேலை நாடுகளில் பெண்களாலும் அவர்களின் உதவியாலும் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பெண்கள் அறிவாற்றல் அற்றவர்கள் என்கின்ற கருத்தினால், இஸ்லாமிய உலகிற்கு ஏற்பட்டுள்ள அளவற்ற நஷ்டத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன்.
சூரா 4:34, (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள்….
இதற்கு நேர் எதிரான கிறிஸ்துவர்களின் பார்வை கீழ் கண்டவிதமாக உள்ளது.
"யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்."(கலாத்தியர் 3:28)
"Faith in Christ Jesus is what makes each of you equal with each other, whether you are a Jew or a Greek, a slave or a free person, a man or a woman." (Galatians 3:28)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஸ்வீடன் நாட்டில் முஸ்லீம் ஆண்கள் ஏன் ஸ்வீடன் நாட்டுப் பெண்களைக் கற்பழிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என வியப்படைவேன். ஸ்வீடன் நாட்டு ஆண்கள் மத அடிப்படையில் ஒரு பெண்ணைக் கற்பழிப்பதை நியாயப்படுத்துவதில்லையே. யூத அல்லது கிறிஸ்துவ வேதங்கள் பெண்களைக் கற்பழிப்பதை நியாயம் என ஒப்புக்கொள்வதில்லை. நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், இதை ஒரு நாகரீகமான நன்னெறிக்கு எதிரானதாகக் கருதுவேன்
ஸ்வீடன் நாட்டு தேசீய குற்றத் தடுப்புக் குழுவின் (Crime Prevention Council, Brå) ஒரு புதிய ஆய்வில், கற்பழிப்புக் குற்றவாளிகள், ஸ்வீடன் நாட்டவரை விட நான்கு மடங்கு பெரும்பாலும் வேற்று நாட்டினராகவே இருக்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது. அல்ஜீரியா, லிபியா, மொராக்கோ மற்றும் டுனீசியா போன்ற குடியேறிய நாட்டினரே இத்தகைய கற்பழிப்புக் குற்றங்களில் பெரும்பான்மையாக சந்தேகிக்கப்படுகின்றனர். இந்தப் புள்ளி விவரப்படி, ஏறக்குறைய இத்தகைய குற்றவாளிகளில் பாதிப்பேர் குடியேறியவர்களாகவே இருக்கிறார்கள் (மூலம்).
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லீமல்லாதோர் மீது காதல் கொள்ளும் அல்லது அவ்வாறு காதலிப்பதாகக் கருதப்படும் மகள்களை கெளரவத்திற்காகக் கொலை(Honor Killing) செய்வதைக் கண்டு வியப்படைவேன். முஸ்லீம் பெண்களுக்கு அவர்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ள உரிமை கிடையாதா என வியப்பேன்.
மார்ச் 15, 2005ம் ஆண்டு WorldNetDaily.com தள செய்தி - பெர்லின் போலீசார், "கவுரவத்திற்காகக் கொலை செய்தல்" என்கின்ற குற்றத்திற்காக, மூன்று முஸ்லிம் சகோதரர்களைக் கைது செய்துள்ளனர். இத்தகைய சம்பவங்களில் இது மிகச் சமீபத்தில் நடந்தது ஆகும். "ஹாடன் சுருகு (Hatun Surucu) என்கின்ற 23 வயது துருக்கி நாட்டுப் பெண் தலையிலும் மார்பிலும் பல குண்டுக்களால் துளைக்கப் பெற்று மரணமடைந்தாள். "கவுரவத்திற்காகக் கொலை செய்தல்" (Honor Killing) என்பதற்கான அனைத்து அடையாளங்களும் இந்தச் சம்பவத்தில் அடங்கியிருந்தது என ஒரு போலீஸ் மனோதத்துவ அதிகாரி கூறியதாக BBC செய்திகள் தெரிவிக்கின்றன. இது இரண்டு லட்சம் பேர்களே அடங்கிய துருக்கியர் சமுதாயத்தில் சமீப மாதங்களில் இத்தகைய ஆறாவது சம்பவமும், கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்தவைகளில் நாற்பத்து ஐந்தாவது சம்பவமும் ஆகும். ஹாடன் சுருகு (Hatun Surucu) தனது ஐந்து வயது மகனுடன், தான் எட்டு வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தின்படி வாழ்ந்த உறவின் முறைப்படியான கணவனிடமிருந்து ஓடிச் சென்று வேறு ஒரு உறவினரோடு திருமணம் செய்துக் கொண்டாள்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லீம் நாடுகளில் ஏன் போலீசார் இத்தகைய "கவுரவத்திற்காகக் கொலை செய்தல்" (Honor Killing) பற்றி புலனாய்வு செய்யக்கூடாது என வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் ஏன் தகப்பன்மார் தங்கள் மகள்கள் ஒரு முஸ்லிம் அல்லாதவரை மணக்கும் போது கொலை செய்யும் அளவிற்குச் செல்லவேண்டும் என வியப்பேன்.
"சவுதி அரேபிய இளவரசி மிஷாலுக்கு (Misha'al) வழங்கப்பட்ட மரண தண்டனை இத்தகைய "கவுரவ கொலைக்கு" (Honor Killing) ஒரு உதாரணமாகும். இது இஸ்லாமிய மத நீதிமன்றத்தின் நடைமுறைப் படி நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அவளது பாட்டனாரால் நேரடியாக உத்தரவிடப்பட்டது. (மூலம்)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது சொன்னார் என்கின்ற காரணத்திற்காகவே ஏன் நான் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழ வேண்டும் என வியப்பேன்.
சூரா 11:114 பகலின் (காலை, மாலை ஆகிய) இரு முனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்
இப்பொழுது இயேசு சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள்:
மத்தேயு 6:5-7 ல் "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்."
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், நான் தொழுதுக்கொள்ளும் போது, முஹம்மது ஆரம்பத்தில் செய்தது போல எருசலேமை நோக்கியல்லாமல் ஏன் மெக்காவை நோக்கி நின்று தொழுதுக் கொள்ளவேண்டும் என வியப்பேன். இறைவன் எல்லாவிடத்திலும் இல்லையா?
சூரா 2:144 (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்ஆனில் இத்தனை வன்முறைக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டிருக்கையில், ஏன் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" எனக் கருதப்பட வேண்டும் என வியப்பேன். ஒரு சில வசனங்களை உதாரணங்களாக இங்கு காண்போம்:
சூரா 4:89 (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்
சூரா 8:39 (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
சூரா 9:5 (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
சூரா 9:123 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்
நான் ஒரு முஸ்லிமாக இருந்தால், சவுதி அரேபியப் பெண்கள் தங்களது அடையாள அட்டையில் தங்களது புகைப் படத்திற்குப் பதிலாக ஏன் தங்களின் தகப்பனார், சகோதரர் அல்லது பொறுப்பாளர்களின் புகைப் படத்தையே வைத்துக்கொள்ள வேண்டும் என வியப்பேன். முஸ்லிம் பெண்கள் தங்களின் சுய உரிமையில் ஒரு மனிதப் பிறவியாய் ஏற்றுக் கொள்ளப்பட வில்லையா என ஆச்சரியப்படுவேன்.
ரியாத், 13 மார்ச் 2005 -"சவுதி அரேபியப் பெண்கள் இனி அடையாளமின்றி இருக்கப் போவதில்லை. 2006 ல் இருந்து ஒவ்வொரு சவுதிப் பெண்மணியும் கட்டாயம் படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம். தற்போதுள்ள குடும்ப அட்டையில் அவர்களது பெயர் மட்டுமே உள்ளது.......அவரது ஆண் பாதுகாவலரின் அனுமதியற்ற சவுதிப் பெண்மணியினுடைய பாஸ்போர்ட் அத்தகைய ஆண் பாதுகாவலர் இல்லாதிருக்கும் பட்சத்தில் போதுமானது." என ஜெத்தா சிவில் இலாகாவின் இயக்குனர், தர்கி முஹம்மது அல் மலஃபெக் தெரிவிக்கிறார் (மூலம்)
இதற்கு முன்பு, சவுதிப் பெண்கள் பெயரினால் மட்டுமே தங்களின் தகப்பனார் அல்லது கணவரின் அடையாள அட்டையின் மூலம் அடையாளம் காட்டப்பட்டனர், அவர்களின் புகைப்படங்கள் அடையாள அட்டைகளில் இருப்பதில்லை. எல்லாத் தேசத்துப் பெண்களும் சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய சட்டம் உள்ள ஒரே நாடு உலகிலேயே சவுதி அரேபியா ஒன்றுதான் (மூலம்)
சவுதிப் பெண்கள் தனியே செல்லும்போதோ அல்லது தனது கணவனோ அல்லது நெருங்கிய உறவினரோ அல்லாத ஆணுடன் செல்லும் போதோ விபச்சார அல்லது சுய ஒழுங்கின்மைக் குற்றத்திற்கான சந்தேகத்திற்காக கைது செய்யப்படும் அபாயம் உண்டு. (மூலம்)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் இஸ்லாமை விட்டு ஒருவர் வேறு மதத்திற்கு மாறும்போது மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என வியப்படைவேன்.
மார்ச் 30, 2006 WorldNetDaily.com செய்தி — "41 வயது ஆப்கானியர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு அடைக்கலம் வழங்க அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் ஒரு கிறிஸ்தவ ஆதரவாளர் குழு வேண்டுகோள் விடுத்தது. இவர் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவத்திற்கு மாறியதினால் ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை வழங்கப் பெற்றவர்." (கிறிஸ்தவத்திற்கு மாறிய இஸ்லாமியர்கள் என்று வலை தளத்தில் தேடினால் இத்தகைய பல உதாரணங்கள் கிடைக்கும்.)
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இஸ்லாமிய உலகம் ஏன் இந்த உலகத்தின் கொடுமைகளுக்கெல்லாம் யூதர்களையே குற்றம் சொல்கிறது என்றும், ஏன் செப்டம்பர் பதினொன்றில் (9/11) நடந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள் தான் என்றும் அவர்களில் பெரும்பான்மையினர் சவுதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள் தான் எனவும் ஒப்புக்கொள்ள முஸ்லீம்கள் மறுக்கிறார்கள் என வியப்படைவேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஒரு முஸ்லீமுக்கும் ஒரு முஸ்லீமல்லாதோருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு, சண்டை ஏற்பட்டால், பிற முஸ்லிம்கள், ஏன் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த முஸ்லீம் பக்கமே சாய்கிறார்கள் என வியப்படைவேன். இத்தகைய கண்ணோட்டத்துடன் இருப்பின் முஸ்லிம் கலாச்சாரத்தில் நீதி எப்படி தழைத்தோங்க முடியும் என நான் சந்தேகப்படுகிறேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் அல்லாஹ் மரியாளைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவளை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேயின் சகோதரன் ஆரோனின் சகோதரி எனத் தவறாகக் குறிப்பிடுகிறார் என வியப்பேன். குர்ஆன் அல்லாஹ்வினால் எழுதப்பட்ட முழுமையடைந்த சரியான புத்தகம் எனில் அல்லாஹ்விற்கு இந்த வேறுபாடு ஏன் புரியவில்லை என ஆச்சரியப்படுவேன்.
சூரா 19:27-30 பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள். "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என நம்பும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் அவர் அவ்வாறு அறையப்படவில்லை என நினைக்கிறார்கள் என வியப்பேன்.
சூரா 4:157 இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் முஸ்லிம்கள் தாங்கள் குறிப்பிடும் ஒரு காரியத்தை நிரூபிக்க பைபிளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள் என்றும் அவர்களது வாதம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் பைபிள் மாற்றப்பட்டுள்ளது என ஏன் வாதிடுகின்றனர் எனவும் வியப்பேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லிம் நாடுகளில் முஸ்லிமல்லாத பிற மதங்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அதே நேரத்தில் ஜனநாயக நாடுகளில் எப்படி பல தரப்பட்ட மதங்கள் அனுமதிக்கப்படுகின்றன எனவும் வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருக்கும் பட்சத்தில், பலதரப்பட்ட சிந்தனைகள் நிறைந்த இடத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளால் நிலை நிற்க முடியுமா என நான் வியப்பேன்.
கிறிஸ்துவ பிராந்தியங்கள் கைப்பற்றப்பட்ட பின்பு, கிறிஸ்துவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், இஸ்லாமிய ஆளுகையின் கீழ் இரண்டாம் தர மக்களாக அடிமை வாழ்வு வாழ்தல் மற்றும் மரணம் ஆகியவற்றை எதிர்கொண்டனர். "மிருகத்தனமாகக் கீழ்ப்படுத்துதல்" மற்றும் வன்முறை புனித நாட்டில் கிறிஸ்துவர்களுக்கு அன்றாட நிகழ்வாயிற்று. கி.பி. 772 ல், காலிஃபா அல் மன்ஸுர் (Caliph Al-Mansur) என்பவர், கிறிஸ்தவர்களும் யூதர்களும் அடையாளம் காணப்படும் படி கையில் விசேஷித்த முத்திரை இடப்பட வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பாக ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மாறினால் அவர் கடுமையாக நடத்தப்பட்டார். கி.பி.789ல் இஸ்லாமிலிருந்து மாறியதற்காக ஒரு துறவி சிரச்சேதம் பண்ணப்பட்டர். பெத்லகேமிலிருந்த புனித தியோடொசிசஸ் என்ற துறவிகளின் இருப்பிடம்(Monastery of St. Theodosius) சூரையாடப்பட்டதோடு மட்டுமின்றி அங்கிருந்த பல துறவிகள் கொலை செய்யப்பட்டனர். (ஆதாரம்: Robert Spencer, The Politically Incorrect Guide to Islam and the Crusades. -Washington: Regnery Publishing Co, 2005, pp.122-123). இவை போன்ற பல் வேறு சித்திரவதைச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே போகலாம்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லீம்கள் ஏன் பர்னபாஸின் நற்செய்தி நூலை (Gospel of Barnabas) ஆதாரமாகக் காட்டி இயேசுவை ஒரு இஸ்லாமியராகச் சித்தரிக்க முயலுகிறார்கள் என வியப்பேன். 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், ஒரு மோசடியானது என்பது அனைவரும் அறிந்ததே அல்லவா? இஸ்லாம் உண்மையானது தான் என்று மக்களை நம்ப வைக்க இத்தகைய மோசடியை உபயோகிக்கும் இமாம்களின் கண்ணியத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், கிறிஸ்தவ நாடுகளின் மீது ஏழாவது நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் செய்த ஆக்கிரமிப்புகளை மறந்துவிட்டு, ஏன் சிலுவைப் போர்களின் கடுமையை மட்டும் ஞாபகத்தில் கொள்கின்றனர் என வியப்பேன். இந்தியாவில், சில நாட்களிலேயே மூன்று லட்சம் பேர்களைக் கொன்று குவித்த இஸ்லாமிய படையெடுப்புகள் நிகழ்த்திய பயங்கரமான படுகொலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஆகமங்களையும் இஞ்ஜிலையும் படிக்கவேண்டும் எனக் குர்ஆன் சொல்லும்போது, பின் நாட்களில் ஏன் முஸ்லிம்கள் இந்த நூல்கள் மாற்றப்பட்டுள்ளன எனச் சொல்ல வேண்டும் என நான் வியப்பேன்.
சூரா 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்ஆன் முழுவதிலும் கொலை செய்தலும், சண்டையிடுதலும், அடிப்பதும், கல்லெறிதலும் வெறுப்பும் நிறைந்திருக்கையில், எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என அறிக்கையிட முடிகிறது என நான் வியப்பேன்? இஸ்லாம் தன்னை விமர்சிக்கும் நபர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களையும் கொல்லும் போது, அதனை நான் எப்படி அமைதி மார்க்கம் என்று சொல்லமுடியும்?
சூரா 7:157 எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது அற்புதங்கள் ஏதும் நடத்தியிருக்காத போது, இயேசு பல அற்புதங்களைச் செய்ததிருந்தும் ஏன் முஹம்மதுவை இயேசுவைவிட அதிகம் மதிக்க வேண்டும் என நான் வியப்படைவேன். இயேசு தன்னை குற்றப்படுத்தியவர்களைக் கூட மன்னிக்கக் கற்றுக்கொடுத்தாரே!
சூரா 13:7 இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இயேசு மெய்யாகவே தேவனின் குமாரன் தானா; அவர் மரித்தவர்களை எழுப்பி, குருடர்களைப் பார்வையடையச் செய்து முடவர்களையும் குஷ்டரோகிகளையும் சுகமாக்கி அற்புதம் செய்தாரே என வியப்படைவேன். முஹம்மது இத்தகைய செயல்கள் ஏதும் செய்யவில்லையே! நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் உண்மையிலேயே நான் ஆச்சரியப்படுவேன். . . . .
சூரா 2:87 இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்.சூரா 5:110 அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
மூலம்: If I were a Muslim.....
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக