ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 24 மே, 2010

இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

பீஜே அவர்களுக்கு பதில்

"இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு

இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

முன்னுரை: பீஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதி அதில் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு அனேக விவரங்களை கூறியுள்ளார். அவருக்கு நாம் கடைசியாக அளித்த மறுப்பை இங்கு படிக்கலாம்: இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே.

பீஜே அவர்கள் பைபிளின் துணைக்கொண்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்க முயற்சி எடுத்துள்ளார், ஆனால், இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை மேலே உள்ள கட்டுரையை மட்டும் படித்தாலே போதும் புரிந்துக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரை அவருடைய புத்தகத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

கீழே சில கேள்விகள் (36) தரப்பட்டுள்ளது, இக்கேள்விகளுக்கு பதிலை தரும் படி ஒரு இஸ்லாமியரை கேட்டால், அவர் பெரும்பான்மையான கேள்விகளுக்கு "இறைவன்" என்பது தான் பதில் என கூறுவார். பீஜே அவர்களை கேட்டாலும் கீழ் கண்ட அனேக கேள்விகளுக்கு அவர் "இறைவன் (அ) அல்லாஹ்" என்று கூறுவார் (இல்லை, நான் அப்படி கூறமாட்டேன் என்று பீஜே அவர்கள் சொல்வார்களானால், ஏன் என்று விளக்கட்டும், கீழ்கண்ட குணங்களில் ஒன்று கூட அல்லாஹ்விற்கு பொருந்தாது என்று விளக்கட்டும்).

நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ கேள்விகளும் ப‌தில்க‌ளும்

1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? இறைவ‌னின் பெய‌ரில்
2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? இறைவனின்
3. தூதர்களை அனுப்புவது யார்? இறைவன்
4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? இறைவனுக்கு
5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? இறைவனின்
6. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? அங்கிலிருந்து வருபவரும் யார்? இறைவன்
7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? இறைவன்
8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? இறைவனிடம்
9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? இறைவன் மூலமாக‌
10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? இறைவன்
11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? இறைவன்
12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? இறைவன்
13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை? இறைவனின்
14. நித்திய வாழ்வை தருபவர் யார்? இறைவன்
15. நித்திய வாழ்வு யார்? இறைவன்
16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? இறைவன்
17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? இறைவனிடம்
18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? இறைவனிடம்
19. உலகத்தில் ஒளி யார்? இறைவன்
20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? இறைவன்
21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? இறைவனுக்கு
22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? இறைவன்
23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? இறைவன்
24. ஆண்டவர் யார்? இறைவன்
25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? இறைவன்
26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? இறைவ‌ன்
27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? இறைவ‌ன்
28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? இறைவன்
29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? இறைவனின்
30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? இறைவன்
31. மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர் யார்? இறைவன்
32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? இறைவன்
33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? இறைவன்
34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? இறைவ‌ன்
35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? இறைவன்
36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? இறைவன்


மேலே சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் இறைவன் என்பதற்கான குணங்கள் அல்லது இறைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? மொத்தமாக இல்லையானாலும் மேலே சொல்லப்பட்டவைகளில் பெரும்பான்மையான குணங்கள் இறைவனுக்கு இருக்கவேண்டியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆம், ஒப்புக்கொள்கிறோம் என்றுச் சொல்பவர்கள், கீழ்கண்ட‌ வசனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியமாக "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதிய பீஜே அவர்கள் கீழ் கண்ட வசனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? ஆம், இவைகள் ஒரு இறைவனின் குணங்கள் தான் என்றுச் சொல்வாரா அல்லது மேலே சொல்லப்பட்ட குணங்கள் ஒன்றும் இறைவனுக்கு (அல்லாஹ்விற்கு) இல்லை என்று ஒப்புக்கொள்ளப்போகிறாரா? இவைகள் எல்லாம் தன்னுடைய குணங்கள் என்று இயேசு கூறியுள்ளார், பீஜே அவர்கள் நிதானமாக இவைகளை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? ........இயேசுவின் பெய‌ரில்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20

2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? ........இயேசுவின்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

3. தூதர்களை அனுப்புவது யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41

இயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்… மத்தேயு 24:30 ,31

4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? .........இயேசுவிற்கு

இயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31

5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? .......இயேசுவின்

இயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்... மத்தேயு 28:20

6. சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்? ........இயேசு

இயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13

7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? ........இயேசு

இயேசு கூறினார்: நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51

இயேசு கூறினார்: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23

இயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28

8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? ....... இயேசுவிடம்

இயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15

இயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28

9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? ..........இயேசு மூலமாக‌

இயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9

10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? ....... இயேசு

இயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35

11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? ........ இயேசு

இயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44

12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48

13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை ? ....... இயேசுவின்

இயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31

14. நித்திய வாழ்வை தருபவர் யார் ? ....... இயேசு

இயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57

இயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:51

15. நித்திய ஜீவன் யார்? ........ இயேசு

இயேசு கூறினார்: நானே … ஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6

16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? ....... இயேசு

இயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39

17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? .......... இயேசுவிடம்

இயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37

18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? ........... இயேசுவிடம்

இயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38

19. உலகத்தில் ஒளி யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12

20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார் : பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் … ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36

21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ........... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6

22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58

23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? ........... இயேசு

இயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25

24. ஆண்டவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13

25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? ......... இயேசு

இயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2

26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? .......... இயேசு

இயேசு கூறினார்: நானே … சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:1-4

29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? ......... இயேசுவின்

இயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5

30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18

31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? .......... இயேசு

இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23

32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். வெளி 2:23

33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 26:63,64

34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? ........இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8

35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? ......... இயேசு

இயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28

36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? .......... இயேசு

இயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32

இயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36

இயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23

இயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். யோவான் 10:30

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:8 ,9

மனித வடிவில் வந்த இறைவன் தான் இயேசு என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்? இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. இயேசு தானே இறைவன் என்பதை பலமுறை சொல்லியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் இயேசு மொழிந்த வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொள்கின்றனர். யார் யாரெல்லாம் இதனை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் இயேசுவையும் அவர் சொன்னைதையும் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

தொகுத்தவர் டெர்ரெல் ஸ்மித் - ஆங்கில மூலம்: What about God?ஞாயிறு, 23 மே, 2010

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 2

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை காண்போம்.

முஹம்மதுவின் வாழ்க்கை - THE LIFE OF MUHAMMAD

"Power tends to corrupt, and absolute power corrupts absolutely." Lord Acton

"சக்தி கெடுக்கும், அதிக சக்தி முழுவதுமாக கெடுக்கும்"

"The measure of a man is what he does with power." Pittacus

"ஒரு மனிதனின் உண்மை முகம், ஆற்றல் அதிகாரம் அவன் கையில் கிடைக்கும் போது எதை செய்தான் என்பதைக் கண்டு தெரிந்துக் கொள்ளலாம்"

கட்டுரையின் பொருளடக்கம் (OVERVIEW):

1. முஹம்மதுவின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கை

2. மக்காவில் ஒரு அஹிம்சாவாதியாக மற்றும் "எச்சரிக்கை" செய்பவராக 13 ஆண்டுகள் (Warner)

3. மதினாவில் ஒரு போர் செய்கின்றவராக 10 ஆண்டுகள் (Warrior)

4. கி.பி. 622/623ம் ஆண்டில் நடைப்பெற்ற "ஹிஜ்ரா" மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்தல். இஸ்லாமிய நாட்காட்டி இந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது.

மக்கா vs மதினா காலக்கட்டம் = எச்சரிப்பவர் vs சண்டையிடுபவர்

MECCAN VS MEDINAN PERIODS = WARNER VS WARRIOR


முஹம்மது பற்றி நீங்கள் அறியவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், அவர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றவுடன் அவரது "கொள்கைகள்" மாறிவிட்டன. மக்காவில் அவர் அமைதியாக எச்சரிப்பவராக இருந்தார். மதினாவில் அவர் கொடுமையாக சண்டையிடும் போர்வீரராக மாறிவிட்டார்.

முஹம்மதுவின் சூழ்நிலைகள் மாறும் போது, அவரின் வாழ்க்கை மாறியது, அவரது கொள்கைகள் மாறியது, அவரது இஸ்லாம் மாறியது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதுவரை அனுமதிக்கப்படாதது, இனி அனுமதிக்கப்பட்டது உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு முஹம்மதுவின் கட்டளைகள் கீழ்கண்ட விதமாக மாறின.

"இறைத்தூதர் இரண்டாம் அகபாவிற்கு முன்பாக சண்டையிட அல்லது இரத்தம் சிந்த அனுமதிக்கவில்லை. அவர் மனிதர்களை இறைவனிடம் வாருங்கள் என்றும், அவமானங்களை சகித்துக் கொள்ளுங்கள், மற்றவர்களின் அறியாமையை மன்னியுங்கள் என்றும் கட்டளையிட்டார்." Life of Muhammad (LoM), by A. Guillaume, p212

முஹம்மது எச்சரிக்கை செய்பவராக சொன்ன வசனம்:

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

முஹம்மது போரிடுபவராக சொன்ன வசனம்:

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 9:5)

நபித்துவத்திற்கு முன்பு வரை இருந்த‌ முஹம்மதுவின் வாழ்க்கைப் பின்னணி:

[நபியாக அழைப்பு பெறுவதற்கு முன்பாக முஹம்மது: Tabari vol 6 p44 - 56, LoM p69 - 87]

• முஹம்மது வாழ்ந்த காலம் கி.பி. 570 லிருந்து 633 வரை. அரேபிய தீபகற்ப நிலப்பரப்பில் (ஹிஜஜ் - Hijaz) அவர் வாழ்ந்தார். ஹிஜஜ் இடத்தில் வாழ்ந்த மக்கள் பேகன் என்றுச் சொல்லும் பல தெய்வங்களை வணங்குபவர்களாகவும், சிலர் யூதர்களாகவும் மற்றும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தாளர்களில் சிலர் அரேபிய தீபகற்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பல தெய்வங்களை வணங்குபவர்களாக மட்டுமே இருந்தனர் என்று தவறுதலாக சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் அங்கு யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர்.

• அவரது தந்தை அவர் பிறப்பதற்கு முன்பாக மரித்துவிட்டார், அவரது தாயார் 6 ஆண்டுகளுக்கு பின்பு மரித்தார்கள். அவரது சித்தப்பா அபூ தலிப் அவரை வளர்த்தார்.

• அவர் இப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கும் போது, சிரியாவிற்கு வியாபாரத்திற்காக சென்றார், அங்கு கிறிஸ்தவ சந்நியாசிகளை சந்தித்து, மதம் சம்மந்தப்பட்ட அனேக விஷயங்களை அவர்களுடன் விவாதித்தார்.

• அவர் ஒரு சிறந்த வியாபாரியாக இருந்தார். வியாபாரம் செய்து நல்ல செல்வ செழிப்புடன் இருந்த கதீஜாவை திருமணம் செய்துக்கொண்டார். அவரது வாழ்க்கை அமைதியாக நன்றாக சென்றுக்கொண்டு இருந்தது, மற்றும் அவர் ஒரு நாகரீகமுள்ள மனிதனாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மகள்களும் மகன்களும் இருந்தார்கள், ஆனால் அவரது எல்லா ஆண் பிள்ளைகளும் குழந்தை பருவத்திலேயே மரித்துவிட்டனர்.

முக்கிய அம்சம்: முஹம்மதுவின் பண்புகள் (VISTA: MUHAMMAD'S QUALITIES)

"There are depths in man that go to the lowest hell, and heights that reach the highest heaven ..." Carlyle.

"மனிதனில் உள்ள குணங்கள், சில நேரங்களில் நரகத்தைப் போன்ற ஆழத்திற்கும் செல்லும் சில நேரங்களில் வானத்தைப் போன்ற அதிக உயரத்திற்கும் செல்லும்"

"The test of every religious, political, or educational system is the man which it forms." Amiel.

"மதம், அரசியல் மற்றும் கல்வி அமைப்புக்களின் தரத்தை பரிசோதிக்கவேண்டுமானால், அதை உருவாக்கியவர்களின் குணத்தை பரிசோதித்துப் பாருங்கள், தெரிந்துக் கொள்வீர்கள்."

ஒரு மனிதனில் எந்த பண்புகளை நீங்கள் பாராட்ட விரும்புவீர்கள்?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

முஹம்மது நல்ல மற்றும் தீய பண்புகள் கொண்ட மனிதராக இருந்தார். அவர் முழுவதுமாக தீயவராக இல்லை அதே போல அவர் முழுவதும் நல்ல மனிதராக இல்லை. அவர் ஒரு சராசரி மனிதர் மற்றும் மனிதர்கள் செய்யும் தவறுகளை தானும் செய்பவர். அவரை பிசாசு என்று தீர்த்துவிடாதீர்கள். அவர் எப்போதும் தீயவராகவே வாழ்ந்தார் என்றுச் சொல்லாதீர்கள். அவரைப் பற்றிய நம்முடைய மதீப்பீடுகளில் நாம் நேர்மையானவர்களாக இருப்போம்.

முஹம்மதுவின் நற்பண்புகள்:

• அவர் வலிமை மிக்கவராகவும், உறுதிகொண்டவராகவும் இருந்தார்.

• அவர் தன் செய்தியை பொறுமையோடும், தொடர்ச்சியாகவும் அறிவித்தார்.

• த‌ன‌னை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் சுக‌ துக்க‌ங்க‌ளில், ப‌சியில் ப‌ங்கு கொண்டார்.

• அவ‌ர் கொடுமையான‌ துன்புறுத்த‌ல்க‌ளை ச‌கித்தார்.

• சிறிய‌ வெற்றி கிடைத்தாலும் அத‌ற்காக‌ அதிக‌மாக‌ உழைத்தார்.

• ம‌ர‌ண‌ம் வ‌ரும் நேர‌த்திலும் பின் வாங்காம‌ல் போராடினார்.

• த‌ன்னை பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் ம‌த்தியில் தாழ்மையான‌வ‌ராக‌வும், நீதியுள்ள‌வ‌ராக‌வும் ந‌ட‌ந்துக்கொண்டார்.

• அவ‌ர‌து ச‌காக்க‌ள் அவ‌ர் மீது அதிக‌ அன்பு கொண்டு, அவ‌ருக்கு அதிகமாக கீழ்ப‌டிந்தார்க‌ள். • அவரது சில சகாக்கள் கொடுமைபடுத்தப்பட்டார்கள், சிலர் மரித்தும் போனார்கள்.

• அவரது சகாக்கள் அவருக்காக உயிரையும் கொடுத்தார்கள்.

இந்த பண்புகள் ஒரு பலவீனமாக மனிதனின் பண்புகள் அல்லவே!

குர்‍ஆனின் அழகான வசனங்கள்:

குர்‍ஆனில் அனேக நல்ல கட்டளைகள் உள்ளன, அதாவது பசியுள்ளவர்களுக்கு உணவளியுங்கள், உன் சக முஸ்லீமுக்கு உதவி செய்யுங்கள் மற்றும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் போன்றவைகளாகும்.

குர்‍ஆன் 2:177

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)

குர்‍ஆன் 91:1-10

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

முடிவுரை: முஹம்மது பற்றி நீங்கள் மதிப்பீடு செய்யும் போது, அவரில் நல்ல மற்றும் தீய குணங்கள் இரண்டும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நபித்துவ அழைப்பு "முஹம்மதுவின் குகை அனுபவம்" கி.பி. 610

[முஹம்மதுவிற்கு அழைப்பு: Tabari vol6 p60 - 80, various Hadith, LoM p109 - 114]

In morals, what begins in fear usually ends in wickedness; in religion, what begins in fear usually ends in fanaticism. Fear, either as a principle or a motive is the beginning of all evil. Mrs. Jameson.

நற்பண்புகள் பயத்தோடு ஆரம்பிக்கப்பட்டால் அது முடிவில் தீய பண்பாக மாறிவிடும். ஒரு மதம் பயத்தோடு ஆரம்பித்தால், அது வன்முறையிலும் வெறுப்பிலும் முடிவடையும். "பயம்" என்பது ஒரு கோட்பாடாக இருந்தாலும் சரி, அல்லது நோக்கமாக இருந்தாலும் சரி, அது தான் எல்லா தீமைக்கும் ஆரம்பமாக இருக்கின்றது.

முஹம்மது அருகாமையில் இருந்த மலை குகையில் அடிக்கடி சென்று தியானம் செய்தார். ஒரு "ஆவி" அவருக்கு முன் தோன்றியது, அது அவரை அலைகழித்து பிழிந்துவிட்டது, மற்றும் "வாசிக்கும் படி" அவருக்கு கட்டளையிட்டது! இது அவரை பயத்திற்குள்ளாக்கியது. பின்பு இதே ஆவி அவரிடம் "தான் காபிரியேல் தூதன்" என்றுச் சொன்னது.

அவர் கூறினார் "படி!", நான் கூறினேன் "நான் படிக்கமுடியாது." அவர் என்னை வலுவாக பிடித்து அழுத்தினார், நான் மரித்துவிடுவேன் என்று எனக்கு தோன்றியது. பிறகு என்னை விட்டுவிட்டார், மறுபடியும் என்னை நோக்கி "படி!" என்றார். நான் "எதை படிக்கவேண்டும்?" என்று நான் கூறினேன். இப்படி சொல்லி, நான் அவரிடமிருந்து மீண்டேன், மறுபடியும் அவர் என்னை அப்படியே அழுத்துவாரோ என்று பயந்தேன்.

குர்‍ஆன் சூரா 96:1 லிருந்து 5 வரையுள்ள வசனங்கள் தான் குர்‍ஆனில் முதலாவது சொல்லப்பட்ட வசனங்களாகும்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (குர்‍ஆன் 96:5)

முஹம்மது பயத்துடன் அவ்விடத்தை விட்டு ஓடினார். வீட்டிற்கு விரைவாகச் சென்று தனனை மறைத்துக்கொண்டார், தனக்கு பேய் பிடித்துவிட்டதென்றும் அல்லது தான் பையித்தியமாக மாறிவிடுவார் என்றும் நினைத்து பயந்துவிட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனேக முறை தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி எடுத்தார்.

"எனக்கு வேதனையாக இருந்தது, எனக்கு பிசாசு பிடித்துவிட்டது என்று குவாரிஷ்கள் [மக்கா மக்கள்] ஒரு போதும் எனக்கு இப்படி சொல்லக்கூடாது, ஆகையால், நான் ஒரு உயர்ந்த மலையில் ஏறி அங்கிருந்து குதித்து மரித்துவிடுகிறேன் அப்போது தான் எனக்கு நிம்மதி என்று நான் நினைத்தேன்". Muhammad, LoM p106.

இறைத்தூதருக்கு சில காலம் வெளிப்பாடு வருவது நின்று போனது, அவர் மிகவும் வேதனையுற்றார். அவர் மலைகளின் உச்சிக்கு செல்ல ஆரம்பித்தார், அங்கிருந்து விழுந்து மரித்துவிட முடிவு செய்தார்; ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் அப்படி மலையின் உச்சிக்கு செல்லும் போதெல்லாம், காபிரியேல் தூதன் அவருக்கு காணப்பட்டு, அவரிடம் "நீ இறைவனின் நபியாக இருக்கிறாய்" என்றுச் சொல்வார். அதன் பிறகு இறைத்தூதர் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு சாந்தமடைந்து திரும்பி வந்துவிடுவார். Tabari's History, Vol 6, p76

அனேக மக்கள் முஹம்மதுவிற்கு பிசாசு பிடித்துவிட்டது அல்லது பைத்தியம் பிடித்துவிட்டது என்று எண்ணினார்கள் (LoM, p121, 130). முஹம்மதுவிற்கு இப்படி பிசாசு பிடித்துவிட்டது அல்லது அவர் பைத்தியமாகி விட்டார் என்று மக்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது.

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. (குர்‍ஆன் 81:22-25)

இஸ்லாமை தோற்றுவித்தவரைப் பற்றி அறிந்துக்கொள்ள இது தான் முதலாவது துப்பு ஆகும். அது முஹம்மதுவின் மனச்சொற்விற்கும் தற்கொலை மனப்பான்மைக்கும் காரணமாக இருந்தது. இந்த மனச்சொற்வு அவருக்கு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் "மன நோய்" என்றுச் சொல்வார்கள்.

உண்மையான தேவன் தன் மக்களை சந்திக்கும் போது, இப்படி தற்கொலை மனப்பான்மை இருக்காது, அதற்கு எதிரான நிலையை உண்டாக்கும். ஆனால், சாத்தான்/பிசாசு ஒருவரை சந்திக்கும் போது முஹம்மது சந்தித்த அனுபவத்தை தரும். உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை கவனிக்கவும்:

1) பன்றிக் கூட்டம் மலை மிது எறி, அங்கிருந்து குதித்து மாண்டது.

2) பிசாசு பிடித்திருந்த ஒரு வாலிபன் வெருப்பில் தன்னை தள்ளி தற்கொலை செய்துக்கொள்ள‌ முயற்சி எடுத்தான்.


இவைகளை குறித்து அறிய படிக்கவும்: மத்தேயு 8:30-33, 17:14-18

மேலும் நாம் முஹம்மதுவின் இஸ்லாமிய அனுபத்திற்கு முன்பு அவருக்கு இருந்த மத நம்பிக்கையைப் பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். அவருக்கு இறைவன் யார் என்றுத் தெரியாது. அவருக்கு இருந்த இறை நம்பிக்கை மிகவும் பலவீனமாக இருந்தது. உண்மையான இறைவனோடு ஒரு நல்ல உறவுமுறை அவருக்கு இருந்ததா? அல்லது ஒரு உண்மையான இறைவனை அவர் நம்பினாரா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனிடம் உதவிக்காக வேண்டியிருப்பார். ஆனால், அதற்கு பதிலாக முஹம்மது தற்கொலை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வேதனையடைந்தார்.

முஹம்மதுவின் இந்த ஆரம்பகால அனுபவம் இவ்வளவு தான் என்று நினைத்துவிடாதீர்கள், அவரை அலைகழித்த அந்த சக்தி அவருக்கு துன்பத்தை வருவித்து, அவருக்கு அதிக வலியை உண்டாக்கியது.

சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)

1) பைபிள் சொல்லப்பட்ட எந்த நபராவது, அதாவது தேவனை சந்தித்த எந்த நபராவது, இப்படி மன உலைச்சலுக்கு ஆலாகி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுத்துள்ளாரா?

2) ஒரு நபரை பிசாசு பிடித்து இருந்தால், அந்த நபர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத‌ பட்சத்தில், அந்த நபர் எப்படி நடந்துக்கொள்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

3) தொட‌ர்ச்சியான‌ ம‌ன‌ உலைச்ச‌லுக்கும், த‌ற்கொலை முய‌ற்சிக்கும் உண்மையான‌ இறைவ‌ன் கார‌ணமாக‌ இருக்க‌முடியுமா?

4) இயேசு பிசாசினால் சோதிக்க‌ப்ப‌ட்டார் ம‌ற்றும் அவ‌னை வென்றார். பிசாசை சந்தித்த‌ ம‌னித‌ன் எப்ப‌டி ந‌ட‌ந்துக்கொள்வான்?

பாகம் 2 முற்றிற்று

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR

மூன்றாம் பாகம் அடுத்த கட்டுரையில்....


 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 1

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய கருத்தரங்கிற்கு அடிப்படையாக கீழ் கண்ட கட்டுரை தரப்படுகிறது. முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் அதிகமாக விவாதிக்கப்படாத நிகழ்வுகள், அனுபவங்கள் மற்றும் அவரது மனப்பான்மைகளை (Attitude) இக்கட்டுரை அலசுகிறது. இந்த கட்டுரையை கருத்தரங்கிற்காக பயன்படுத்தினால், அந்த கருத்தரங்ககை நடத்துபவர், இஸ்லாம் பற்றிய இதர விவரங்களை தெரிந்தவராக இருப்பது நல்லது, இதனால் அவர் அங்காங்கே வரும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆழமாக விவரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த கட்டுரை, இஸ்லாம் பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு "துணையேடாக" இருக்கும், மற்றும் இக்கட்டுரை ஒரு ஆழமான விளக்க புத்தகமல்ல என்பதை அறியவும். இதனால், இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக அறிய விரும்புகிறவர்களுக்காக அனேக விளக்க பின் குறிப்புகளையும், இதர உதவி புத்தகங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை:

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10:4,5

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையை(முறையாக)க் கடைப்பிடித்து, ஜகாத்தும் செலுத்தும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால், (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மாற்கு 13:21,22

நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம், நாம் சரியான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டாலோ அல்லது தயாராக இல்லாமல் இருந்தாலோ, நாம் தோற்றுவிடுவோம்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படித்து கற்றுக்கொள்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது - ஏன்?

நீங்கள் இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவீர்களானால், உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இஸ்லாம் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நீங்கள் முஹம்மதுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். குர்‍ஆன் பேசுவது அவரைப் பற்றியும் மற்றும் அவரைப் பற்றி மட்டுமே குர்‍ஆன் பேசுகிறது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கைமுறை (Life Style) தான் இஸ்லாமாகும். இவரது வாழ்க்கை முறையை மட்டுமே பிரதிபலிக்கவேண்டும் அல்லது பின் பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். உண்மையான ஹதீதுகளில் 95% சதவிகிதம், முஹம்மது கூறியதாக உள்ள ஹதீதுகளே உள்ளன. இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலாவது முஹம்மதுவை அறிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மது தான் இஸ்லாம் (Muhammad is Islam).

இஸ்லாமிய‌ர்க‌ளின் ம‌த்தியில் ஊழிய‌ம் செய்வ‌தில் அனேக‌ வ‌கைக‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றில் சில ஊழியங்கள் செய்ய இஸ்லாம் பற்றி குறைவாக அறிந்திருந்தாலே போதுமானது. ஆனால், வேறு வகையான ஊழியங்களுக்கு இஸ்லாம் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாம் அனைவரும் ஒரே வகையாக ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைக்கவில்லை. தேவனிடம் ஜெபித்து, அவர் நம்மை எப்படிப்பட்ட ஊழியம் செய்ய அழைத்துள்ளார் என்று, அவரது விருப்பத்தை அறிந்துக்கொள்ளுங்கள். இந்த இக்கட்டுரையை முடித்ததும், நீங்கள் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் மிகவும் ஞானமிக்கவர்களாக பேச தெரிந்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட ஞானம் உங்களுக்குத் தேவையானால், நீங்கள் சுயமாக ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் ஆராய்ந்து படித்துப்பாருங்கள், ஒவ்வொரு தலைப்பாக படித்து ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கருத்தரங்கின் நோக்கங்கள்:

1) முதலாவதாக, நம்முடைய ஆய்விற்காக நாம் இஸ்லாமிய புத்தகங்களை அலசுவோம். நான் சொல்வதில் பெரும்பான்மையான விவரங்களை ஒரு வருடத்தில் நீங்கள் மறந்துவிடுவீர்கள். எனவே, நான் இஸ்லாமிய புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வேனேயாகில் அவைகளை படித்து உங்கள் அறிவை நீங்கள் பெருக்கிக்கொள்ளமுடியும்.

2) முஹம்மதுவின் வாழ்க்கையை சுருக்கமாக‌ தெரிந்துக்கொள்வதுடன், அது எப்படி தற்கால இஸ்லாமோடு தொடர்புக் கொள்கிறது என்பதையும் நாம் காணப்போகிறோம். ஒரு ம‌னித‌னின் 23 ஆண்டுகால‌ வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரமாக சில நாட்க‌ளுக்குள் யாராலும் விவ‌ரிக்க‌ முடியாது என்ப‌தை க‌வ‌னத்தில் கொள்ள‌வும்.

3) நாம் முஹம்மதுவின் செயல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளப்போகிறோம், அவரது செயல்களின் கனிகளை நாம் சுவைக்கப் போகிறோம் மற்றும் முக்கியமாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை படிக்கப்போகிறோம். இந்த பகுதியில் அவரது செயல்களை அலசுவோம், இந்த ஆய்வு அவரது "நடத்தையை" நமக்குக்காட்டும், மற்றும் அதிகமாக விவாதிக்கப்படாத அவரது ஆன்மீக அனுபவங்களைப் பற்றியும் அலசுவோம்.


முஹம்மது பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மதுவை எவ்வளவு அதிகமாக தெரிந்துக் கொள்வீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்வீர்கள். முஹம்மதுவோடு சில மாலைப் பொழுதுகளை செலவிடுங்கள். அவரோடு விருந்தை உண்ணுங்கள். அவரது கண்களோடு சூரிய உதயத்தைக் காணுங்கள், மதிய வேலை வெயிலின் உஷ்ணத்தையும் உணருங்கள். அவர் தன் மக்களுக்காக எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதை மற்ற மக்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இக்கட்டுரை முஹம்மது பற்றிய முக்கியமான விமர்சனத்தை முன்வைக்கிறது. நீங்கள் ஞானமாக இந்த விவரத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால், கிறிஸ்தவர்களே, ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள், பொதுவாக மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் சரி, முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள இருண்ட பக்கத்தைப் பற்றிய அறிவை புகட்டவேண்டியது மிக மிக அவசியம்.

என்னுடைய‌ இந்த‌ க‌ட்டுரையான‌து முழுக்க‌ முழுக்க‌ இஸ்லாமிய‌ ஆதார‌ நூல்க‌ள் மீதே ஆதார‌ப்ப‌ட்டு த‌யாரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அனேக‌ மேற்கோள்க‌ள், குறிப்புக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

என‌வே ப‌டியுங்க‌ள், புரிந்துக்கொள்ளுங்க‌ள் ம‌ற்றும் உங்கள் மனதில் வைத்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் செய்யவேண்டிய "சிந்திக்கும் வேலையை" எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கொடுக்காதீர்கள்.

குறிப்புக்கள்:

1. சுருக்க குறியீடு: "LoM" என்றால் "A. Guillaume" என்பவர் எழுதிய புத்தகமாகிய "Life of Muhammad" என்பதைக் குறிக்கும்.

2. தலைப்புக்கள் என்ற பகுதியில் மேற்கோள்களுக்காக புத்தகங்களின் பகுதிகளை/வசன எண்களை கொடுத்துள்ளேன். ஒரே நிகழ்ச்சி பற்றி அனேக இஸ்லாமிய ஹதீஸ்கள்/விவரங்கள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நான் இப்படிப்பட்ட ஹதீஸ்களை/விவரங்களை தருவேன்.

3. முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள அனேக "இருண்ட அல்லது தீய நடத்தையுள்ள‌" நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட்டுள்ளேன். அதே போல, முஹம்மதுவின் நல்ல செயல்களை மட்டும் சொல்லும் அனேக புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. பொதுவாக மக்களுக்கு அதிகமாக தெரியாமல் இருக்கும் முஹம்மது வாழ்க்கையின் "இருண்ட பாகுதியை" உங்களுக்கு முன்பாக கொண்டு வரலாம் என்று நான் விரும்புகிறேன்.

முஹம்மது பற்றி:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. குர்‍ஆன் 33:21

"நான் அவரைப் பற்றி படித்தேன் - அவ‌ர் அற்புதமான மனிதர் - என்னுடைய கருத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு புறம் அவர் அந்திக்கிறிஸ்துவாக இருந்தாலும், அவர் மனிதவர்க்கத்தின் இரட்சகர் என்றுச் சொல்லலாம்" - ஜியார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய "The Genuine Islam"என்ற புத்தகத்திலிருந்து.

"I have studied him - the wonderful man - and in my opinion far from being an anti-Christ he must be called the saviour of humanity." George Bernard Shaw in The Genuine Islam)

• முஹம்மது தான் இஸ்லாம்

• சரித்திரத்தில் மிகவும் முக்கியமான ம‌னித‌ர்

• இன்றுள்ள‌ இர‌ண்டாம் மிக‌ப்பெரிய‌ ம‌த‌த்தை தோற்றுவித்த‌வ‌ர்

• முஹ‌ம்ம‌துவின் ம‌ர‌ண‌த்திற்கு பின்பு 100 ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய‌ இராணுவ‌ம் மிக‌ப்பெரிய‌ இராஜ்ஜிய‌ங்க‌ளை ஜெயித்த‌து. இஸ்லாமிய‌ ஆக்கிர‌மிப்பு ஸ்பெயின் தொட‌ங்கி தென் கிழ‌க்கு ஐரோப்பா, இந்தியா, சைனா மற்றும் மத்திய ஆப்ரிக்கா வரை பரவியது.

நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்பும் முக்கியமான விஷயம்:

சூழ்நிலைகள் மாறும் போது முஹம்மது மாறினார், இதை தத்துவரீதியாக சொல்ல வேண்டுமென்றால், "இஸ்லாம் மாறியது" என்றுச் சொல்ல வேண்டும். மக்காவின் முஹம்மது மதினாவின் முஹம்மது அல்ல. மக்காவின் இஸ்லாம் மதினாவின் இஸ்லாம் அல்ல, அதாவது மக்காவின் இஸ்லாம் வேறு மதினாவின் இஸ்லாம் வேறு.

இதனால் தான் இன்று இஸ்லாம் மக்களின் கேலிக்கும் வேடிக்கைக்கும் பாத்திரமாக உள்ளது. சில இஸ்லாமியர்கள் மக்காவின் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள், வேறு சிலர் மதினாவின் இஸ்லாமை பின் பற்றுகின்றனர். இன்னும் சிலரோ, சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல், இவ்விரண்டிற்கும் இடையே அடிக்கடி தாவிக்கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மூல ஆதார நூல்கள் - ISLAMIC SOURCE MATERIAL

"அறிவே ஆற்றல் - Knowledge is power." Francis Bacon

பின்குறிப்பு ஆதாரங்கள்: இவைகள் தான் இந்த கருத்தரங்கின் முக்கிய பகுதியாகும். ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு எதுவென்றால், அவர் கொடுத்த விவரங்கள் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்கு எவைகளை படிக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்வது தான்.

ஆரம்பகால இஸ்லாமிய ஆதார நூல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைபடுத்தினால், நமக்கு கிடைப்பவைகள்: குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) ஆகும்.

குர்‍ஆன் ‍ - இது தான் இஸ்லாமிய நூல்களில் பிரதானமானது, ஆனால், நடைமுறையில் கவனித்தால், முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய விவரங்களுக்கு இது பிரயோஜனமற்றது.

ஹதீஸ்கள் (பாரம்பரியங்கள்) ‍ - முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி, அவரது கட்டளைகள் பற்றிய குறிப்புகளையும் நிகழ்ச்சிகளையும் சொல்வது தான் ஹதீஸ்களாகும். ஹ‌தீஸ்க‌ளின் தொகுப்புக்கள், கால‌ வ‌ரிசைப் பிர‌கார‌மாக‌வோ அல்ல‌து ஒரு வ‌ரிசைக் கிர‌ம‌மாக‌வோ த‌ர‌ப்ப‌ட‌வில்லை, அத‌ற்கு ப‌திலாக‌ அவைக‌ள் த‌லைப்பு வாரியாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த ஹதீஸ் கதைகள் அனைத்தும், முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை தொகுக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள‌ அர்பணமுள்ள இஸ்லாமியர்களால் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டது. சுன்னி இஸ்லாமில் ஆறு பெரிய ஹதீஸ் தொகுப்புக்களும், சில சிறிய தொகுப்புக்களும் உள்ளன. இந்த ஆறு பெரிய பாரம்பரிய தொகுப்புக்களை "உண்மையான - சஹீஹ்" அதாவது ஆதிகாரபூர்வமானது என்றுக் கூறுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், இந்த தொகுப்புக்கள் உண்மையானது, நம்பகத்தன்மையுடையது மற்றும் பிழையில்லாதது என்று பொருளாகும். இந்த ஆறு ஹதீஸ்களில் இரண்டு தொகுப்புக்களை "உண்மையானவைகளில் எல்லாம் உண்மையானது" அல்லது சிறப்பானது என்றுக் கூறுவார்கள். இந்த இரண்டு சிறப்பான ஹதீஸ்கள், புகாரி மற்றும் முஸ்லீம் என்ற ஹதீஸ் தொகுப்புக்களாகும்.

• பெரிய தொகுப்புக்களாகிய ஹதீஸ்களை, பல இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் காலத்திற்கு பிறகு 200 - 300 ஆண்டுகளில் தொகுத்தார்கள்.

• ஒரு சில ஹதீஸ் தொகுப்புக்கள் மற்ற தொகுப்புக்களை விட நம்பகத்தன்மை அதிகமுள்ளது என்று கருதப்படுகிறது. சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய பிரிவுகள் தனித்தனி ஹதீஸ் தொகுப்புக்களை கொண்டுள்ளார்கள்.

புகாரி: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் புகாரி" என்பார்கள், அதாவது இது தான் சுன்னி இஸ்லாமிய பிரிவில் முதன்மையான மற்றும் அதிக நம்பகமான ஹதீஸ் தொகுப்பாகும்.

முஸ்லீம்: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் முஸ்லீம்" என்பார்கள், இது புகாரிக்கு அடுத்ததாக நம்பகத்தன்மையுள்ள இரண்டாவது அதிகாரபூர்வமாக தொகுப்பாகும்.

அபூ தாவுத், திர்மிதி, இபின் மஜா மற்றும் அன் நிசா போன்ற இந்த நான்கு ஹதீஸ் தொகுப்புக்கள் மேலே கண்ட தொகுப்புக்களுக்கு (புகாரி, முஸ்லீம்) அடுத்த நம்பகத்தன்மையான ஹதீஸ்களாக கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, அன் நிசா தவிர்த்து மற்ற அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. இணையத்தில் கீழ் கண்ட தொடுப்புக்களில் நீங்கள் சில தொகுப்புக்களை காணலாம்.

English:

Sahih Al-Bukhari

Sahih Muslim

Sunan Abu Dawud

Tamil:

சஹீஹ் அல் புகாரி

சஹீஹ் அல் முஸ்லீம்

சீரா (SIRA) - ‍ சீரா என்பது வாழ்க்கை வரலாறு கூறும் நூல் ஆகும். இதில் முஹம்மதுவின் வாழ்க்கையை காலவரிசையாக விவரிக்கிறது. அதிகாரபூர்வமான மற்றும் இன்று நம்மிடம் உள்ள சீரா இபின் இஷாக்கின் "சீரத் ரசூலல்லாஹ் - Sirat Rasulalla" ஆகும். இந்த வாழ்க்கை வரலாறு இப்போது "A. Guillaume" அவர்களின் புத்தகமாக "The Life of Muhammad" என்ற பெயரில் உள்ளது.

இதில் அனேக இஸ்லாமிய அறிஞர்கள் சந்தேகிக்கும் சில விவரங்களும் உள்ளன. ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் பல காரணங்களுக்காக விவரங்களுக்கு மெருகூட்டி எழுதியுள்ளனர்.

இபின் சாத்தின் "கிதாப் அல் தபாகத் அல் கபிர் (The Book of the Major Classes)" என்ற புத்தகத்தின் முதல் நாங்கு தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மூர் அவர்களின் "The Life of Muhammad" என்ற புத்தகம் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது: www.answering-islam.org/Books/Muir/Life1/section5.htm

நம்மிடம் தபரியின் சரித்திரம் (Tabari's History) 39 தொகுப்புக்களாக உள்ளது. இது ஒரு வாழ்க்கை வரலாறாக தொகுக்கப்படவில்லை, ஆனால், முஹம்மது பற்றிய அனேக வாழ்க்கை நிகழ்ச்சிகள் அதில் சொல்லப்பட்டுள்ளது (தொகுப்புக்கள் 6 லிருந்து 9 வரை முஹம்மது பற்றிச் சொல்கிறது)

இஸ்லாமிய வட்டாரங்களில் சீராவின் நம்பகத்தன்மைப் பற்றி தீவிரமாக விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வாழும் அனேக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த சீரா பற்றி மிகவும் வெட்கமடைகிறார்கள். ஏனென்றால், இந்நிகழ்ச்சிகள் மேற்கத்திய மக்களின் கண்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் வெட்கப்படக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதினால் தான்.

ஆரம்பகால வாழ்க்கை வரலாறாக‌ (Sira) கீழ்கண்ட புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

1) Ibn Ishaq, "Sirat Rasulallah" The most authentic biography of Muhammad extant today. Translated as, "The Life of Muhammad" by A. Guillaume.

2) Ibn Sa'd, "Kitab al-Tabaqat al-Kabir", "Book of the Major Classes". Another lesser-esteemed source of biographical material.

3) Wakidi - book on Muhammad's military campaigns, found in Muir's work, "The Life of Muhammad."

4) Tabari's History, 39 volumes. Tabari used information from many early Islamic writings to compile his history.

மேற்படி ஆய்விற்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்:

பிறகால அறிஞர்களால் முஹம்மது பற்றி அனேக சிறந்த புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது.

1. ஜான் கில்கிறைஸ்ட் அவர்கள் "Muhammad and the Religion of Islam" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். என் கருத்தைச் சொல்லவேண்டுமானால், எல்லா கிறிஸ்தவ ஊழியர்களும் இப்புத்தகத்தின் முதல் 3/4 பாகத்தை கட்டாயமாக படிக்கவேண்டும் என்றுச் சொல்வேன். "அறியாமை அல்லது எனக்கு தெரியாது என்றுச் சொல்வது எப்பொதும் மதிக்கப்படுவதில்லை மற்றும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. சுவிசேஷ ஊழியம் செய்யும் கிறிஸ்தவருக்கு இந்த புத்தகம் அடிப்படை என்றுச் சொல்வேன். இந்த புத்தகம் இப்போது காகிதப்பதிப்பாக வருவதில்லை, ஆனால், இணையத்தில் இதனை இலவசமாக நீங்கள் படிக்கலாம்: Muhammad and the Religion of Islam

நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலைப்புக்கள் பற்றி உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்களை பரிந்துரைக்கின்றேன்.

2. "The Quran and the Bible in the Light of Science and History" by Dr. William Campbell.

3. "Answering Islam" by Norman Geisler and Abdul Saleeb.

4. "23 Years: A Study of the Prophetic Career of Mohammad", by Ali Dashti

5. "The Christian Witness to the Muslim", John Gilchrist

நான் மேலே குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும் நம் காலத்தில் வாழ்ந்துக்கொண்டு/வாழ்ந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களால் எழுதப்பட்டவைகளாகும். இப்புத்தகங்களில் உள்ள விவரங்கள் கோர்வையாக, சுலபமாக புரியும் வகையில் உள்ளது, ஒரே விஷயத்தை பல முறை சொல்லாமல் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி சிறந்த அனேக புத்தகங்களை பல சிறந்த அறிஞர்கள் எழுதியுள்ளார்கள், இவர்களில் வாட், கிப்ஸ் மற்றும் லூயிஸ் (Watt, Gibb, and Lewis) போன்றவர்கள் அடங்குவர்.

இஸ்லாமை அறிய இணைய உதவிகள்:

1. AnsweringIslam.info - great site on Islamic topics
2. AnsweringIslam.info/L_c-on-i.html - Links to various Christian sites on Islam
3. www.muhammadanism.com/
4. http://www.light-of-life.com/ - great site on Islamic topics
5. christian-thinktank.com - great apologetic site; see http://www.christian-thinktank.com/qamorite.html
6. danielpipes.org - good info on Mideast issues (not Christian)
7. http://www.godandscience.org/ - apologetics on science
8. http://www.tektonics.org/ - another apologetic site

இஸ்லாமிய மூல நூல்கள் பற்றி ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

பாகம் 1 முற்றிற்று.

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR


புதன், 5 மே, 2010

இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு:

இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே

"பைபிளின் துணையுடன் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்க பீஜே போன்ற இஸ்லாமியர்கள் எடுக்கும் முயற்சி, குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளின் துணைக்கொண்டு, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றும், முஹம்மது ஒரு அஹிம்சாவாதி என்றும் நிருபிக்க எடுக்கும் முயற்சிக்கு சமமாகும். இவர்களால் பைபிளைக் கொண்டு இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கவும் முடியாது, அதே போல, இஸ்லாமிய நூல்களின் துணைக்கொண்டு இஸ்லாம் ஒருஅமைதி மார்க்கம் என்று நிருபிக்கவும் முடியாது".

முன்னுரை: "இயேசு இறைமகனா?" என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு கீழ்கண்ட பதில்கள் இதுவரை தரப்பட்டுள்ளது.

இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)

பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்

இதன் தொடர்ச்சியாக "இயேசு தன்னை மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்ட வசனங்கள் பற்றி பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தில் எழுதியவைகளுக்கு பதிலாக இக்கட்டுரை பதிக்கப்படுகின்றது.

இக்கட்டுரையை கீழ்கண்ட பாகங்களாக பிரித்து பதில் தருகிறேன்.

பாகம் 1: இயேசு மனிதன் என நிருபிக்க நினைத்து இறைவன் என நிருபித்த பீஜே

முதல் பாகத்தில் (இந்த கட்டுரையில்) பீஜே அவர்கள் காட்டிய வசனங்கள் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக இயேசுவின் இறைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது என்பதை பீஜே அவர்களின் மேற்கோள் வசனங்களை காட்டி பதில் தரப்படுகின்றது..

பாகம் 2: ஏன் இயேசு தன்னை மனுஷ குமாரன் என்றுச் சொன்னார்?

இரண்டாம் பாகத்தில், ஏன் இயேசு தன்னை மனுஷ குமாரன் என்றுச் சொன்னார் என்பதைக் பார்க்கப்போகிறோம்.

இந்த முதல் பாகத்தை முழுவதுமாக படிப்பவர்கள், "பீஜே அவர்கள் காட்டிய வசனங்கள் அவர் சொல்ல வந்த செய்திக்கு எதிராக இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வார்கள்".

பாகம் 1

இயேசு மனிதன் என நிருபிக்க நினைத்து இறைவன் என நிருபித்த பீஜே

பீஜே அவர்கள் எழுதியவை

இயேசு மனுஷ குமாரன்


இறை மகன் என்பதை இறைவன் என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள்,

ஈஸா குர்‍ஆன் பதில்:

இறைமகன் என்றால் என்ன என்பதை இஸ்லாமியர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இறைமகன் என்று இயேசுவை கிறிஸ்தவர்கள் அழைத்தால் அதன் பொருள் என்ன என்று அல்லாஹ்விற்கே தெரியவில்லை. இதைப் பற்றி பீஜே அவர்களின் "இயேசு இறைமகனா" என்ற உப தலைப்பில் அவர் எழுதியவைகளுக்கு பதில் அளிக்கும் போது பார்க்கலாம்.

பீஜே அவர்கள் எழுதியவை

இயேசு தம்மை மனிதன் என்றும் மனுஷ குமாரன் என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?

ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு தம்மை அடிக்கடி மனுஷ குமாரன் என்று அழைத்ததைப் பற்றி கவலைப்படவேண்டியது கிறிஸ்தவர்கள் அல்ல, நீங்கள் தான். காரணம் என்னவென்றால், அவரின் உண்மை இறைத்தன்மை அவ்வசனங்களிலேயே அல்லது அதைச் சுற்றியுள்ள வசனங்களிலேயே உள்ளதால், தவறான வசனங்களை மேற்க்கோள் காட்டிவிட்டோமே என்று கவலைப்படவேண்டியது, பீஜே அவர்களும் அவர் சொல்வதை சரிபார்க்காமல் தலையாட்டும் இஸ்லாமியரகளுமே. இதனை இககட்டுரையை முழுவதும் படித்த பிறகு புரிந்துக்கொள்வீர்கள்.

இனி பீஜே அவர்கள் தன் வாதத்திற்காக மேற்கோள் காட்டிய வசனங்களை கவனிப்போம்.

பீஜே அவர்கள் எழுதியவை

அதற்கு இயேசு, நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.(மத்தேயு 8:20)

ஈஸா குர்‍ஆன் பதில்:

அருமையான பீஜே அவர்களே, உங்களுக்கு "இந்த வசனத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் விவரம் என்ன கிடைத்தது?"

இந்த‌ வ‌ச‌ன‌த்தில் இயேசு "த‌ன்னுடைய‌ சீட‌ராக‌ மாறினால், ச‌ரியான‌ நேர‌த்தில் தூங்க‌வோ, சாப்பிட‌வோ.. அல்ல‌து இன்னும் இருக்கின்ற‌‌ சாதார‌ண‌ வ‌ச‌திக‌ளோ இழ‌க்க‌வேண்டி வ‌ரும்" என்ப‌தை விள‌க்க‌ கூறிய‌ வ‌ச‌ன‌மாகும். தன்னோடு எப்போதும் இருந்தால், இப்படிப்பட்ட வசதியில்லாத நிலையில் ஊழியம் செய்யவேண்டி வரும் என்பதை விளக்கினார்.

மத்தேயு 8:19ல் ஒருவர் வந்து கீழ்கண்டவாறு கூறுகிறார், அதற்கு பதிலாக இயேசு தருகிறார்.

அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

இயேசுவிற்கு சீடராக இருப்பது என்பது சுலபமல்ல, அதற்கு தியாகங்கள் செய்யவேண்டும், குறைந்தபட்ச வசதிகளும் சிலவேலைகளில் கிடைக்காது.

ஆக, பீஜே அவர்களே, இந்த வசனத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் எந்த விவரமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், இதே அதிகாரத்தை முழுவதுமாக படித்தால், இயேசு செய்த அனேக அற்புதங்களை காணமுடியும், தமது வார்த்தையினாலே பிசாசுக்களை துரத்தினார், கடல் கொந்தல்ப்பை அடக்கினார், குஷடரோகிகளை சுகமாக்கினார். எனவே, இந்த வசனத்தின் மூலமாக நீங்கள் எதையும் நிருபிக்கமுடியாது.

பீஜே அவர்கள் எழுதியவை

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ; என்றார். (மத்தேயு 9:6)

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள். (மத்தேயு 9:8)

ஈஸா குர்‍ஆன் பதில்:

1) மனுஷகுமாரனாகிய இயேசு உலக மக்களின் பாவங்களை மன்னிக்கிறவர்

பீஜே அவர்களே, "மனுஷ குமாரன்" என்ற வார்த்தைகளை இந்த வசனங்களில் பார்த்த நீங்கள், "பூமியிலே பாவங்களை மன்னிக்க அந்த மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டு" என்ற விவரத்தை இந்த வசனங்களில் கவனிக்க தவறியது ஏன்?

ஒரு மனிதன் மற்றவர்களின் பாவங்களை எப்படி மன்னிக்கமுடியும்?

ஒரு மனிதன் பாவங்களை மன்னிக்க அதிகாரம் தனக்கு உண்டு என்றுச் சொல்வது தேவ தூஷணம், இறைவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், இதனை நீங்கள் அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக, மனுஷ குமாரன் என்று தன்னை குறிப்பிட்டு, தனக்கு "பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்றுச் சொன்னது" அவரது தெய்வீகத் தன்மையை அது வெளிக்காட்டவில்லையா? இதனை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லையா? அல்லது புரிந்துக்கொண்டும் புரிந்துக்கொள்ளாதது போல நடிக்கிறீர்களா? இதனை யூதர்கள் புரிந்துக்கொண்டு, இவர் ஏன் இப்படி இறைவனுக்கு இருக்கவேண்டிய அதிகாரம் (பூமியிலே பாவங்களை மன்னிக்கின்ற உரிமை) தனக்கு உண்டு என்றுச் சொல்லி, இப்படி தேவதூஷணம் செய்கின்றார் என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள், அவர்களின் இந்த சிந்தனை "பொல்லாதவைகள்" என்று இயேசு சொல்லி, தனக்கு பாவங்களை மன்னிக்க உரிமை உண்டு என்றுச் சொல்கிறார்.

மத்தேயு 9:2-6 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

மத்தேயு 9:8ம் வசனத்தில் "மனுஷருக்கு" என்றுச் சொன்னது, மக்கள் கூறியதாகும், இயேசு கூறியது இல்லை. அவர்கள், இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இவ்விதமாக கூறினார்கள்.

ஆனால், மேலே கண்ட வசனங்களில், இயேசு தன்னை "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்ட வசனங்கள் அவரது தெய்வீகத் தன்மையை வெளிக்காட்டியது என்பதை மட்டும் யாரும் மறுக்கமுடியாது, ஏனென்றால், இறைவனைத் தவிர யார் உலக மக்களின் பாவங்களை மன்னிக்கமுடியும்? இவ்வசனத்தை மேற்க்கோள் காட்டி, இயேசுவின் இறைத்தன்மைகளில் ஒன்றாகிய பாவங்களை மன்னிக்கும் விவரத்தைப் பற்றி எழுத உதவிய பீஜே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இனி பீஜே அவர்களின் அடுத்த மேற்கோள் வசனத்திற்கு நம்முடைய கவனத்தை திருப்புவோம்.

பீஜே அவர்கள் எழுதியவை

பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். (மத்தேயு 16:13)

ஈஸா குர்‍ஆன் பதில்:

2) தேவகுமாரன் என்று அறிக்கையிடுபவன் பாக்கியவான்:

பீஜே அவர்களே, ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் மேற்கொள் காட்டிவிட்டு மற்றவற்றை விட்டுவிட்டால் எப்படி ஒரு நிகழ்ச்சி முழுமைப் பெறும். அதாவது நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில், தன்னை மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று இயேசு கேட்கிறார், அதற்கு சீடர்கள் சிலர் உம்மை எலியா, யோவான் ஸ்நானகன், எரேமியா தீர்கக்தரிசி என்று பலவிதங்களில் சொல்லிக்கொள்கிறார்கள் என்று சொன்னார்கள். அதன் பிறகு, இயேசு தம்முடைய சீடர்களிடம் நீங்கள் என்னை யார் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பேதுரு கீழ்கண்டவாறு பதில் சொன்னார்:

சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:16)

இயேசுவோடு உண்டு, உறங்கி, உரையாடி, அவரின் அனைத்து செயல்களையும் கண்ட பேதுரு "நீர் தேவனுடைய குமாரன் (இறைக்குமாரன்) அதாவது, கிறிஸ்து" என்று கூறுகிறார்.

இதனைக் கேட்டு, இயேசு அவர் மீது கோபம் கொண்டு:

நீ சொல்வது தவறு நான் "மனுஷ குமாரன் தான்" என்றுச் சொன்னாரா?

என்னை ஏன் இறைக்குமாரன் என்றுச் சொல்கிறாய்?

என்று கேள்வி கேட்டு கடிந்துக்கொண்டாரா?

இயேசு பேதுருவை கடிந்துக்கொள்ளவில்லை.

இயேசு பேதுருவை மெச்சிக்கொண்டார்,

நீ பாக்கியாவான் என்றுச் சொன்னார், மற்றும்

இந்த அறிவு அல்லது "இயேசு தான் தேவ குமாரனாகிய கிறிஸ்து என்ற அறிவு" பிதாவாகிய தேவன் வெளிப்படுத்திய அறிவு, உலக அறிவு அல்ல‌ என்றுச் சொன்னார்.

ஆக, இயேசு இறைக்குமாரனாகிய கிறிஸ்து என்று நம்புகின்ற அறிவு என்பது, தேவன் வெளிப்படுத்துகின்ற அறிவாகும், அப்படிப்பட்டவர்களை இயேசு "பாக்கியவான்" என்று மெச்சிக்கொள்கிறார்.


இதோ, பீஜே அவர்கள் காட்டிய ஒரு வசனத்தோடு சம்மந்தப்பட்ட அடுத்தடுத்த வசனங்களை படியுங்கள்:

மத்தேயு 16:13 -17 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

பீஜே அவர்கள் அறைகுறையாக வசனங்களை மேற்கோள் காட்டுகின்றார், முழுவதுமாக அடுத்தடுத்துள்ள வசனங்களை படித்து இருந்தால், இப்படி இந்த வசனத்தை காட்டியிருக்கமாட்டார். எந்த வசனத்தைக் காட்டி, இயேசுவின் இறைத்தன்மையை மறுக்க பீஜே அவர்கள் முயற்சி எடுத்தாரோ, அந்த அதிகாரத்தில், அவர் காட்டிய வசனத்தின் அடுத்த சில வசனங்களிலேயே, இயேசு இறைமகன் என்பது நிருபனமாகிவிட்டது.

இப்படி அறைகுறையாக விவரங்களைச் சொல்லி, வேண்டுமென்றே உண்மையை மறைத்து, கிறிஸ்தவர்களிடம் பீஜே கேட்கிறார்:

இயேசு தம்மை மனிதன் என்றும் மனுஷ குமாரன் என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?

இதனால் தான் நான் மேலே கூறினேன், கிறிஸ்தவர்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, நீங்கள் தான் உங்கள் புத்தகத்தை இனி மாற்றி எழுதவேண்டும், அல்லது திருத்த வேண்டும், அல்லது நீங்கள் திருந்த வேண்டும்.

ஆக, இயேசு தேவகுமாரன் என்றுச் சொல்லும் கிறிஸ்தவர்கள் பாக்கியவான்கள் என்றும், அவர்களின் இந்த அறிவு அல்லது அவர்கள் தெரிந்துக்கொண்ட இந்த சத்தியம் இறைவனிடமிருந்து வரும் வெளிப்பாடு என்றும் இயேசு கூறுகிறார். குறிப்பு: இயேசு இறைக்குமாரன் என்று அறிந்துக்கொள்கின்ற அறிவு, இறைவனிடமிருந்து வருமானால், பீஜே போன்றவர்கள் இயேசு மனிதன் மட்டுமே, அவர் நபி மட்டுமே என்றுச் சொல்லுகின்ற அறிவு யாரிடமிருந்து வந்திருக்கும்? இதற்கு பதில் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

ஆக, ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு அடம் பிடிப்பதை விட்டுவிட்டு, அதற்கு அடுத்தடுத்துள்ள வசனங்களையும் படித்து, முழு நிகழ்ச்சியையும் படித்து சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள் என்று பீஜே அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

பீஜே அவர்கள் எழுதியவை

மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்தேயு 16:27)

ஈஸா குர்‍ஆன் பதில்:

தமிழ் நாட்டின் சிறந்த இஸ்லாமியராகிய நீங்கள் (பீஜே) இந்த வசனத்தைக் காட்டியது, எனக்கு வேதனை அளிக்கிறது.

இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வளவு அறியாமையில் இருப்பார்களா?

நான் இப்படி எழுதுகிறேன் என்று கோபப்படவேண்டாம், ஏனென்றால், ஒரு சராசரி மனிதன் இந்த மேற்கண்ட வசனத்தை படிக்கும் போது, அவனுக்கு புரியும் அளவிற்கு கூட பீஜே அவர்களுக்கு புரியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை இப்படி எழுதவைக்கிறது. (அல்லது புரிந்தும் யார் நம்மை கேட்பார்கள் என்ற நினைப்பா?)

அப்படி என்னத்தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது? இதனை நாம் இப்போது பார்ப்போம், இவ்வசனத்தை இன்னொரு முறை படிப்போம்.

மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.(மத்தேயு 16:27)

இந்த வசனத்தில் "மனுஷ குமாரன்" என்ற வார்த்தை வருகின்றதே தவிர, அந்த மனுஷ குமாரன் என்ன செய்யப்போகிறார்? என்பதை பீஜே சிந்தித்து இருப்பாரா?

இந்த வசனத்தின்படி:

1) மனுஷ குமாரனாகிய இயேசு பிதாவின் மகிமையோடு வரப்போகிறார்

2) தம்முடைய தூதர்களோடு வருவார்

3) உலக மக்களின் (முஹம்மது மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரையும் சேர்த்து) செயல்களுக்கு ஏற்றப்டி பலன் அளிப்பார்.

இந்த வசனம் இயேசுவின் எதிர்கால வருகையைப் பற்றி மிகத்தெளிவாக கூறுகிறது. அவர் வானத்தில் தம்முடைய தூதர்களோடு வருவார் என்று கூறுகிறது, மற்றும் அவரவர் நடத்தைக்கு ஏற்ற பலனை தருவார் என்று கூறுகிறது.

இந்த வசனம் முழுக்க முழுக்க இயேசுவின் எதிர்கால வருகையைப் பற்றியும், அவரது இறைத்தன்மையைப் பற்றியும், கடைசிக் கால நியாயத்தீர்ப்பு பற்றியும் பேசுகின்றது, இந்த நியாயத்தீர்ப்பை தானே செய்வேன் என்றும் இயேசு கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் உங்களுக்கு விளங்கவில்லையா பீஜே அவர்களே!

ஒரு மனிதன் இப்படி சொல்லமுடியுமா?

ஒரு நபி (தீர்க்கதரிசி) இப்படி சொல்லமுடியுமா?

யார் இறைவனுக்கு நிகரான மகிமையோடு வருவார்கள்?

எந்த நபிக்கு சொந்தமாக தூதர்கள் இருந்தார்கள்?

பீஜே அவர்களே, உங்கள் மீது கிறிஸ்தவர்கள் பரிதாபங்கொள்கிறார்கள்.

கடைசி நாளில், நியாயத்தீர்ப்பு நாளில் எல்லா மனிதர்களும் அல்லாஹ்விற்கு முன்பாக நிற்கவேண்டும் அப்போது அவனவன் செய்த கிரியைக்கு தகுந்த பலனை அல்லாஹ் அளிப்பான் என்று கூறுவீர்களே.... அந்த அல்லாஹ்வின் ஸ்தானத்தில் தான் இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இதையா நீங்கள், இயேசுவின் மனித தன்மையை வெளிப்படுத்தும் வசனம் என்றுச் சொல்கிறீர்கள்? ஓ... பீஜே அவர்களே... உங்கள் மீது பரிதாபங்கொள்வதை விட்டு வேறு ஒன்றையும் செய்யமுடியாது....

இந்த வசனத்தில் சொல்லப்பட்ட சுருக்கத்தை விவரிக்கும் வகையில் புதிய ஏற்பாட்டில் அனேக வசனங்கள் உண்டு, அவைகளை இங்கு நான் தரமுடியும், இருந்தாலும் கட்டுரை மிகவும் நீண்டுவிடும் என்பதற்காக அவைகளை இங்கு தரவில்லை.

ஆக, நீங்கள் மேற்க்கோள் காட்டிய இந்த வசனம், உங்களுக்கு பிரயோஜனப்படவில்லை என்பதை அறிந்து வேதனை அடைகின்றோம்.

பீஜே அவர்கள் எழுதியவை

அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார். (மத்தேயு 17:22)

ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (மத்தேயு 17:12)

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 17:9)

ஈஸா குர்‍ஆன் பதில்:

4) மனுஷ குமாரன் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்:

பீஜே அவர்கள் காட்டிய இந்த மூன்று வசனங்களும் மத்தேயு 17ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, அவைகளை அவர் 22, 12, 9 என்ற வரிசையில் மேற்கோள் காட்டியுள்ளார், நாம் அதனை 9, 12, 22 என்ற வரிசையில் பார்க்கப்போகிறோம், ஏனென்றால், இந்த மூன்று வசனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பேசப்பட்ட வசனமாக இருப்பதால், இப்படி படிப்பது சரியாக இருக்கும்.

ஒரு முறை இயேசு தம்முடைய சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என்ற மூன்று சீடர்களோடு ஒரு மலையில் ஏறுகிறார், அங்கே தீர்க்கதரிசிகளாகிய மோசே மற்றும் எலியா காணப்படுகிறார்கள், இயேசுவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது, அவரது உடைகள் வெளிச்சத்தைப்போல வெண்மையாக இருந்தது (பார்க்க மத்தேயு 17:1-3). இந்த தரிசனத்திற்கு பிறகு அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள், அப்போது இயேசு அவர்களிடம் சொல்லும் வார்த்தைகள் தான், பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 17:9ம் வசனம்:

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 17:9)

பீஜே அவர்கள் மேற்கோள் காட்டியது போல, இந்த வசனம் இயேசுவின் மனிதத் தன்மையை வெளிப்படுத்தும் வசனமா? இல்லை, இது இஸ்லாமின் கோட்பாட்டில் மண்ணை அள்ளி வீசும் வசனமாகும், அதாவது, இந்த வசனத்தில் "தான் மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்திருப்பேன்" என்று எதிர்காலத்தில் இயேசு நிறைவேற்ற இருக்கும் சிலுவை மரணம்,மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி கூறுகிறார்.

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அவர் மரிக்கவில்லை, அவர் உயிரோடு மறுபடியும் எழவில்லை என்றுச் சொல்லும் குர்‍ஆனின் கோட்பாட்டை உடைத்தெறியும் வசனமாகும். இதனை மேற்கோள் காட்டி பீஜே அவர்கள் மிகப்பெரிய தவறை செய்துள்ளார்.

சரி, பீஜே அவர்கள் காட்டிய அடுத்த வசனம் 12ம் வசனமாகும். இப்படி இயேசு சொன்ன போது, அந்த சீடர்களும் யூதர்களாக இருந்தபடியினால், அவர்களுக்கு இருந்த அறிவின் படி, மேசியா வரவேண்டுமென்றால், முதலில் "எலியா" வரவேண்டுமே... என்று கேட்கின்றனர். அதாவது பழைய ஏற்பாட்டில் மேசியா வருவதற்கு முன்பு எலியாவைப்போன்று ஊழியம் செய்ய ஒரு தீர்க்கதரிசி வருவார், அவர் வந்து மேசியாவிற்கு வழியை சரிபடுத்துவார் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகையால், இந்த கேள்வியை கேட்டார்கள்.

இந்த கேள்விக்கு பதிலாக இயேசு கூறிய வசனம் தான் பீஜே அவர்கள் காட்டிய வசனம் 17:12:

ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (மத்தேயு 17:12)

இந்த வசனத்திலும் இயேசு தாம் யூதர்களால் துன்புறுத்தப்படுவார் என்பதை கூறுகிறார், இவைகள் அனைத்தும் தமது சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் சம்மந்தப்பட்ட உரையாடலே. இதுவும் குர்‍ஆன் சொல்வதற்கு எதிராக உள்ளது, சிலுவைக்கு முன்பாக நடக்கவிருக்கும் துன்புறுத்தலைக் குறித்து இயேசு கூறுகிறார்.

இப்போது அதே அதிகாரம் 22ம் வசனத்தை நாம் பார்ப்போம். இந்த வசனத்தை பீஜே அவர்கள் முதலாவது குறிப்பிட்டு இருந்தார்கள், நான் ஏன் கடைசியாக குறிப்பிட்டேன் என்பது இப்போது விளக்குகிறேன்.

மத்தேயு 17:22 அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

இந்த வசனமும் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கவில்லை, இது மறுபடியும் இயேசுவின் பாடுகளைக் குறித்து பேசுகின்றது.

மத்தேயு 17:22ம் வசனத்தை மட்டும் காட்டி, இது மனிதத் தன்மையை வெளிப்படுத்துகிறது என்றுச் சொன்ன பீஜே அவர்களின் முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது. மட்டுமல்ல, அடுத்த ஒரு வசனம் பீஜே அவர்கள் படித்து இருக்கவேண்டும், அதனை அவர் படிக்க மறந்து இருக்கலாம், ஆகையால், அதனை இப்போது அவருக்கு படிக்க நாம் இடம் கொடுப்போம்.

மத்தேயு 17:23 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

அந்த மனுஷ குமாரன் கொலை செய்யப்படுவார், அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்.இந்த உயிர்த்தெழுதல் தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. யார் அவர்? அவர் தான் இயேசுக் கிறிஸ்து.

மனுஷ குமாரன் என்ற வார்த்தை இருந்தாலே போதும், அதன் பிறகு என்ன வருகிறது... அதன் அர்த்தம் என்ன? இதனை நாம் மேற்கோள் காட்டினால் சரியாக இருக்குமா? போன்றவைகளை பீஜே அவர்கள் சிந்தித்தாரா?

ஆக, இஸ்லாமுக்கு எதிராக உள்ள இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், மற்றும் உயிர்த்தெழுதல், இவைகள் அனைத்தும் இயேசு முன்னறிவித்தது போலவே நடந்துள்ளது, அவரே மேசியாவாகிய இயேசு. பீஜே அவர்களே... இந்த முறையும் முயற்சி தோல்வி தான். மனுஷ குமாரன் என்ற வார்த்தை வந்த வசனங்களை சிந்திக்காமல் மேற்கோள் காட்டுவது ஆபத்து, அறிவீனம்.

பீஜே அவர்கள் எழுதியவை

அதற்கு இயேசு, மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

ஈஸா குர்‍ஆன் பதில்:

5) மனுஷக் குமாரனே நியாயாதிபதி (நீதிபதி)

இந்த வசனத்தைக் கண்டவுடன், என் உள்ளம் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் என்றுச் சொல்கிறது. ஏனென்றால், பீஜே அவர்கள் இந்த வசனத்தையுமா மேற்கோள் காட்டவேண்டும்? பழம் நழுவி பாலில் விழுந்தது போல் அல்லவா உள்ளது!

நியாயத்தீர்ப்பு நாளிலே இயேசு தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பாராம், அவரது சீடர்கள் 12 பேரும், 12 சிங்காசனத்தில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை நியாயந்தீர்ப்பார்களாம்.

யாரய்யா இந்த அதிகாரத்தை சீடர்களுக்கு தருவேன் என்றுச் சொல்வது? மனுஷ குமாரனா? ஒரு சாதாரண மனிதனா? ஒரு நபியா? யார் அவ‌ர்?

அவர் தான் இயேசுக் கிறிஸ்து, ம‌னுஷ‌ குமார‌னாகிய‌ கிறிஸ்து.

ஒரு ம‌னித‌த் த‌ன்மையுள்ள‌ ஒருவ‌ர் இப்ப‌டி சொல்ல‌முடியுமா? அப்ப‌டி சொன்னால் அது தெய்வ‌க் குற்றமாகாதா?

பீஜே அவர்களே வெறும் "மனுஷ குமாரன்" என்ற வார்த்தையை மட்டும் பார்க்கவேண்டாம், அவர் என்ன செய்வேன் என்றுச் சொல்கிறார் என்பதை பார்க்கவும்.

நானே நீதிபதி, உங்கள் கிரியைக்கு ஏற்ற பலனை தருவேன் என்று இயேசு கூறுகிறார்.

உங்கள் முஹம்மது அவர் செய்த செயல்களுக்கு ஏற்ற பலனை, இயேசுவின் சிங்காசனத்தின் முன்பு நின்று நியாயந்தீர்க்கப்பட்டு பெற்றுக்கொள்ளவேண்டும்.

மக்கள் நியாயந்தீர்க்கப்படும் நாளில் என்ன நடக்கும், யார் இதனை செய்வார்கள் என்று இயேசு கூறுகிறார், மட்டுமல்ல,தன் சீடர்களுக்கு அதிகாரத்தையும் கொடுப்பதாகக் கூறுகிறார்.

ஆக, இந்த மேற்கோளும் உங்களுக்கு உபயோகப்படவில்லை. ஆகையால் தான் சொல்கிறேன், ஓ இஸ்லாமியர்களே இயேசுவின் இறைத்தன்மையை மறுக்க பைபிளை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள், அது உங்களால் முடியாது.

பீஜே அவர்கள் எழுதியவை

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து... (மத்தேயு 20:18)

ஈஸா குர்‍ஆன் பதில்:

ஏன் பீஜே அவர்களே, 18ம் வசனத்தோடு நிறுத்திக்கொண்டீர்கள்... அப்படியே 19ம் வசனத்தையும் மேற்கோள் காட்டியிருக்கலாமே....

சரி, நான் 18 மற்றும் 19ம் வசனங்களை ஒன்றாக பதிக்கிறேன், நீங்கள் படித்துக்கொள்ளுங்கள்.

மத்தேயு 20:18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,

மத்தேயு 20:19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

ஓகோ... 19ம் வசனத்தையும் மேற்கோள் காட்டியிருந்தால், அந்த மனுஷகுமாரன் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றுச் சொன்ன விவரம் வந்துவிடுமோ என்று பயந்தீர்களோ...

அதிக ஜாக்கிரையாகத்தான் எழுதுகிறீர்கள், ஆனால், பிரயோஜனமில்லை பீஜே அவர்களே, நீங்கள் சொன்ன அந்த மனுஷ குமாரன் மூன்றாம் நாளில் எழுந்திருப்பாராம்... அப்படியே எழுந்தாரும் கூட....

பீஜே அவர்கள் எழுதியவை

அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும் படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)

ஈஸா குர்‍ஆன் பதில்:

6) இந்த மனுஷ குமாரன் மீட்பர் , இரட்சகர். அனேகரை மீட்க தம் உயிரை தருபவர்:

இனியும், நீண்ட பத்திகளை எழுத நான் விரும்பவில்லை. நீங்கள் மனிதன் என்று நிருபிக்க விரும்பிய அந்த மனுஷ குமாரன், அனேகரை மீட்க தம் உயிரை தருகின்றாராம். இவரைத் தான் நாங்கள் மீட்பர் என்கின்றோம், இரட்சகர் என்கின்றோம். நீங்கள் காட்டிய இந்த வசனம் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாக இருக்கிறது, உலகத்தை மீட்க விண்ணுலகை விட்டு வந்தார், தன் உயிரைக் கொடுத்து உங்களையும் என்னையும் மீட்டுக்கொண்டார். இந்த வசனத்தையும் காட்டி, மீட்பின் செய்தியை இன்னொரு முறை படிக்க உதவிய பீஜே அவர்களுக்கு என் நன்றிகள்.

நீங்கள் எந்த வசனத்தை மேற்க்கோள் காட்டினாலும், அங்கு கிறிஸ்து வந்துவிடுகின்றார், மீட்பர் வந்துவிடுகின்றார், இரட்சகர் வந்துவிடுகின்றார், நித்திய நியாயாதிபதி வந்துவிடுகின்றார், பாவங்களை மன்னிக்கின்றவர் வந்துவிடுகின்றார்.... என்ன செய்வது... இயேசு இறைமகன் தான் என்று உங்கள் புத்தகத்தின் பெயரை மாற்றிவிடவேண்டியது தான்.

பீஜே அவர்கள் எழுதியவை

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும். (மத்தேயு 24:27)

ஈஸா குர்‍ஆன் பதில்:

7) மனுஷ குமாரனின் பிரகாசமான வருகை:

அடேங்கப்பா! அருமை அருமை... இந்த வசனத்தையுமா நீங்கள் இயேசு மனிதன் என்பதை நிருபிக்க மேற்கோள் காட்டுகிறீரகள்... உங்களின் ஆய்விற்கு ஆயிரம் சலாம்கள் சொல்லலாம்.

இந்த மனுஷ குமாரன் சொல்கிறார், தான் வரும் போது, மின்னல் ஒரு திசையிலிருந்து மறுதிசை வரையில் பிரகாசிக்கிறது போல, அவர் வருவாராம்.

உங்களுக்கு தெரிந்த எந்த மனிதராவது இப்படி சொல்லமுடியுமா?

இப்படி உலகமனைத்தும் காணும்படி வருவேன் என்றுச் சொன்ன இயேசுவா உங்களுக்கு மனிதனாக தெரிகின்றார்.

இந்த வசனம் அவரது தெய்வீகத் தன்மையையும், அவரது வருகையையும் காட்டுகின்றதே தவிர, அவரது மனிதத் தன்மையை காட்டவில்லை.

இயேசு முதல்முறை உலகத்தில் வந்த போது, ஒரு சிறிய கிராமத்தில், எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியா உதித்தார். ஆனால் அவரது அடுத்த வருகை இப்படி இருக்காது எனபதையும், அதே நேரத்தில், இயேசு இங்கு இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால் நம்பவேண்டாம், நான் முதல் முறை வந்த வண்ணமாக அல்ல, இந்த முறை மின்னலைப்போல பிரகாசமாக வருவேன் என்பதைச் சொன்னார்.

பீஜே அவர்களே, நீங்கள் காட்டிய 27ம் வசனத்தின் முன்பாக உள்ள வசனத்தை சிறிது பாருங்கள்:

மத்தேயு 24:25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

மத்தேயு 24:26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

மத்தேயு 24:27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

இன்னும் அதிக விவரத்தை இயேசு கூறுகின்றார், இயேசு இறைவன் அல்ல, மனிதன் மட்டுமே என்றுச் சொல்லி, சம்மந்தேமே இல்லாத வசனங்களை இன்னும் சொல்லப்போனால், தான் சொல்லவந்த செய்திக்கு நேர் எதிராக உள்ள வசனங்களைக் காட்டிய பீஜே அவர்களே, கடைசி காலங்களில் இந்த மனுஷ குமாரன், நீங்கள் மேற்கோள் காட்டிய மனுஷ குமாரன் எப்படி வருவார் என்பதை, நீங்கள் காட்டிய வசனத்தின் அடுத்த சில வசனங்களிலேயே கூறியுள்ளார், இவைகளையும் ஒரு முறை படித்துப்பாருங்கள். முப்பதாம் வசனத்திலும் "மனுஷ குமாரன்" என்ற சொற்றொடர் வருவதை கண்டீர்களா, பீஜே அவர்களே!

மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

மத்தேயு 24:30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

மத்தேயு 24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.

மேற்கண்ட வசனங்கள் பற்றி இன்னும் விவரிக்கவேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியவை

மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். (மத்தேயு 26:24)

ஈஸா குர்‍ஆன் பதில்:

8) தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தபடியே மனுஷ குமாரன் போகிறார்:

மனுஷ குமாரன் என்ற சொற்கள் வருகின்றதா, உடனே அதனை மேற்கோளாக காட்டிவிட்டால் போதும் என்று நினைத்து, இயேசு இறைமகனா என்ற புத்தகத்தை எழுதிய பீஜே அவர்களே, இந்த வசனத்தையும் மேற்கோளாக காட்டி நீங்கள் தவறு இழைத்துவிட்டீர்களே!

இதில் என்ன இறைத்தன்மை வெளிப்படுகின்றது என்று கேட்கிறீர்களா?

இயேசு இங்கு "தன்னைப் பற்றி எழுதியிருக்கின்றபடியே" அல்லது மஸீஹாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் படியே தான் போகிறார் என்று கூறுகின்றார்.

இயேசுவைப் பற்றி அனேக தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் உண்டு, அவைகளின் படியே அவர் தன் மீட்பின் வேலையை முடித்துவிட்டு செல்கின்றார் என்று இயேசு இங்கு கூறுகின்றார்.

ஆக, இந்த வசனமும் மேசியாவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலைக் காட்டுகின்றது.

இயேசு மனுஷனாக இருந்தால் அவரைப் பற்றி ஏன் பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கவேண்டும்? அவர் மனுஷனல்ல, மனுஷனாக வந்த இறைவன்.

பீஜே அவர்கள் எழுதியவை

அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 26:64)

ஈஸா குர்‍ஆன் பதில்:

9) மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பக்கத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பார்:

இந்த வசனத்தைக் காட்டி, இன்னும் அதிகமான பாதிப்பை தனக்குத்தானே பீஜே உண்டாக்கிக்கொண்டார்.

இவ்வசனத்தின்படி, மனுஷ குமாரன்:

1) வானங்களின் மேல் வருவார்

2) தேவனின் வலது பாரிசத்தில் உட்காருவார்.

ஆம, இறைவனுக்கு சமமாக இவர் உட்காருவார், நாம் இக்கட்டுரையில் பல வசனங்களில் பார்த்தது போல அவர் மேகங்கள் மேல் வருவார், மின்னலின் பிரகாசம் போல வருவார்.

இந்த வசனத்தில் எந்த செயலை வைத்துக்கொண்டு, நீங்கள் இது மனுஷ தன்மையை காட்டுகின்றது அவர் இறைவன் அல்ல என்று சொல்ல வருகிறீர்கள் பீஜே அவர்களே?

இயேசு தேவனுக்கு (முஸ்லீம்களுக்கு புரியவேண்டுமென்றால் அல்லாஹ்விற்கு) சமமாக உட்காருவார், மேகங்கள் மேல் வருவார்.

இது ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளா?

இந்த வசத்தில் இன்னொரு முக்கியமான ஒரு விஷயத்தையும் இயேசு கூறியுள்ளார், அதாவது "இயேசு இறைமகனா?" என்ற கேள்வியை கேட்கும் பீஜே அவர்களுக்கு பதிலாக," நான் இறைமகன் தான்" என்பதை இயேசு இந்த வசனத்தில் கூறியுள்ளார். எங்கே காட்டு என்று என்னிடம் சொல்வீர்களானால், இந்த வசனத்தின் முந்தைய வசனத்தை சிறிது படித்துப்பாருங்கள், அதில் நீ தேவகுமாரனா (இறைமகனா) என்ற கேள்வி கேட்கப்படுகின்றது, இயேசு ஆம், நீங்கள் சொல்லுகின்றபடி, நான் தேவகுமாரன் தான் என்றுச் சொல்கிறார்.

பீஜே அவர்கள் காட்டிய வசனத்திற்கு முன்பாக பின்பாக உள்ள ஒவ்வொரு வசனத்தை இப்போது சேர்த்து படிப்போம்.

மத்தேயு 26:63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

மத்தேயு 26:64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26:65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

இயேசு, "தான் இறைமகன்" என்றுச் சொல்லி, இறைவனுக்கு நிகராக "தான் சிங்காசனத்தில் உட்காருவேன்" என்றுச் சொன்னதைக் கேட்ட, பிரதான ஆசாரியன், தன் உடைகளை கிழித்துக்கொண்டு, "இதோ இவன் தேவதூஷணம்" சொல்கின்றானே என்று குதிக்கிறார். தேவதூஷணம் என்றால் என்ன என்று பீஜே அவர்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

இயேசுவின் இறைத் தன்மையை பைபிளைக்கொண்டு உம்மால் (உங்கள் அல்லாஹ்வாலும்) முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீஜே அவர்கள் எழுதியவை

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார். (மத்தேயு 26:45)

ஈஸா குர்‍ஆன் பதில்:

இந்த வசனத்திலும், தன் வேளை வந்தது, தான் சொன்னது போல, பாடுபட்டு சிலுவையில் அறையப்பட தான் தயார் என்பதை இயேசு இங்கு கூறுகின்றார். அவர் சொன்னது போலவே, எல்லாம் நடந்துள்ளது. யூதர்கள் சிப்பாய்களோடு வருகிறார்கள், பிடிக்கிறார்கள் துன்பப்படுத்தி சிலுவையில் அறைகிறார்கள். நான் "இருக்கிறேன்" என்றுச் சொன்னவர் கல்லரையில் அப்படியே இருந்துவிடுவாரா.. மூன்றாம் நாள் எழுந்தார்... இனியும் வரப்போகிறார்.

பீஜே அவர்களே, ஒரு வசனத்தில் "மனுஷ குமாரன்" என்ற வார்த்தைகள் வந்தால் போதும், வேறு ஒன்றும் கவனிக்கவேண்டியதில்லை என்ற நினைப்பில், "அந்த மனுஷகுமாரன்" என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்காமல், வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். இது உங்கள் அறியாமையைக் காட்டுகின்றது. உங்களுக்காக நான் பரிதாப்படுகின்றேன்..

பீஜே அவர்கள் எழுதியவை

மேற்கண்ட இடங்களில் இயேசு தம்மை மனுஷ குமாரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்ற, கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?

ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு தன்னை மனுஷ குமாரன் என்று ஏன் குறிப்பிட்டுக்கொண்டார் என்பதை என் அடுத்த பதிலில், இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன், அதே போல, நீங்கள் நினைப்பது போல, "தேவகுமாரன்" என்றால், தேவன் மனுஷன் குழந்தை பெறுவதுபோல பெற்றார் என்று பொருள் அல்ல. இதனை விளக்க, "இயேசுவை இறைவன், என் நேச குமாரன் என்று அழைத்தால், அவர் இறைவன் ஆகிவிடமுடியுமா?" என்ற உங்களின் விவரங்களுக்கு நான் எழுதப்போகும் அடுத்த மறுப்பு கட்டுரையில் விளக்குகிறேன்.

இயேசு மனுஷ குமாரன் என்று அழைத்துக்கொண்டார், ஆனால் அதே வசனங்களில் அவர் செய்வேன் என்றுச் சொன்ன விவரங்கள் ஒரு மனித தன்மைக்கு உட்பட்டு இருக்கின்றதா என்பதை சிறிது கவனித்துப்பாருங்கள். இயேசுவின் இறைத்தன்மையை வெளிக்காட்டுவதற்கு நீங்கள் காட்டிய வசனங்களே போதுமானது.

பீஜே அவர்கள் எழுதியவை

நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

ஈஸா குர்‍ஆன் பதில்:

பீஜே அவர்களே, உங்களின் இந்த வரிகள் பச்ச பொய்... ஆகும்.

இதுவரை பீஜே அவர்கள் காட்டிய அனைத்து வசனங்களில் உள்ள இயேசுவின் இறைத்தன்மையை நான் விவரித்தேன். இவ்வசனங்களில் இயேசுவின் இறைத்தன்மை தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதை மறுப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதலாம்.

இவ்வசனங்களில் சொல்லப்பட்ட செய்திகள், இறைத்தன்மைய வெளிக்காட்டுகின்றது என்பதை ஒரு சாதாரண மனிதன் கூட இந்த கட்டுரையை படித்தால் சுலபமாக புரிந்துக்கொள்வான்.

பீஜே அவர்கள் காட்டிய வசனங்களில் தெளிவாக இறைத்தன்மை வெளிப்பட்ட விவரத்தை நான் தலைப்பு கொடுத்துள்ளேன். அவைகளை இங்கு சுருக்கமாக தருகிறேன்.

1) மனுஷகுமாரனாகிய இயேசு உலக மக்களின் பாவங்களை மன்னிக்கிறவர்

2) தேவகுமாரன் என்று அறிக்கையிடுபவன் பாக்கியவான்:

3.1) மனுஷ குமாரனாகிய இயேசு பிதாவின் மகிமையோடு வரப்போகிறார்

3.2) தம்முடைய தூதர்களோடு வருவார்

3.3) உலக மக்களின் (முஹம்மது மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரையும் சேர்த்து) செயல்களுக்கு தகுந்த‌ பலன் அளிப்பார்.

4) மனுஷ குமாரன் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்:

5) மனுஷக் குமாரனே நியாயாதிபதி (நீதிபதி)

6) இந்த மனுஷ குமாரன் மீட்பர் , இரட்சகர். அனேகரை மீட்க தம் உயிரை தருபவர்:

7) மனுஷ குமாரனின் பிரகாசமான வருகை:

8) தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தபடியே மனுஷ குமாரன் போகிறார்:

9) மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பக்கத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பார்:

பீஜே அவர்கள் காட்டிய வசனங்களின் படி, இயேசு மீட்பர், இரட்சகர், பாவங்களை மன்னிப்பவர், நியாயந்தீர்ப்பவர், மேகங்கள் மேல் வருபவர், மின்னலின் பிரகாசம் போல வருகின்றவர், தேவனின் வலது பாரிசத்தில் சிங்காசனத்தில் உட்காருபவர், தீர்க்கதரிசனங்களின் படி வந்து மீட்பின் வேலையை முடித்தவர்.

இந்த குணங்கள் ஒரு மனுதனுக்கு இருக்குமா? சிந்தியுங்கள் பீஜே அவர்களே சிந்தியுங்கள்.

பீஜே அவர்கள் எழுதியவை

இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.

ஈஸா குர்‍ஆன் பதில்:

மேற்கண்ட பைபிள் வசனங்களை எந்த கிறிஸ்தவரும் நிராகரிக்கமாட்டார் காரணம், அவைகள் இயேசுவின் இறைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது. அடடே, நான் ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டேனே, இந்த வசனங்களை மேற்கோள் காட்டிவிட்டேனே என்று உங்களை நீங்களே நொந்துக்கொள்ளவேண்மே ஒழிய, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

பீஜே அவர்கள் எழுதியவை

இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர் என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும். கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?

இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவன் என்று புரிந்து கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவை வழிபடுகின்றவர்கள் கூட இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது. அவர்களே இறை மக்களாக - அதாவது இறைவனாக - இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா? இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது.
 
All formats are mine.
ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசுவை இறைமகன் என்று அழைப்பதற்கும், மற்றவர்களை அப்படி அழைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை, உங்களுக்கு இயேசு இறைமகனா? என்ற தலைப்பில் பதில் அளிக்கும் போது விவரிப்பேன்.

முடிவுரை:

இதுவரை பீஜே அவர்களின் வரிகளுக்கு நாம் பதிலைக் கண்டோம். இதற்கு பீஜே அவர்கள் மறுப்பு தெரிப்பதாக இருந்தால், தெரிவிக்கட்டும், பதில் எழுதட்டும்.

இயேசுவிற்கு தாவீதின் குமாரன், இறைக்குமாரன், ஆபிரகாமின் குமாரன், என்றும் இன்னும் அனேக பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் போது, தன்னை அவர் பல முறை ஏன் "மனுஷ குமாரன்" என்று கூறினார்? இதன் பொருள் என்ன? மனுஷ குமாரன் என்ற சொல் ஒரு இரகசிய வார்த்தையா? போன்ற விவரங்களை இதன் இரண்டாம் பாகத்தில் விவரிக்கிறேன்.

அவர் தன்னை மனுஷ குமாரன் என்றுச் சொன்ன ஒவ்வொரு இடத்திலும், தன் தெய்வீகத்தன்மைய வெளிப்படுத்தினார் என்பதை பீஜே அவர்களின் வசனங்களிலிருந்தே பார்த்தோம்.

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: பீஜே அவர்கள் கிறிஸ்தவம் பற்றி எதை எழுதினாலும், பேசினாலும், அவர் எழுதியதை கூர்ந்து கவனித்து, சத்தியத்தோடு சரிபார்த்தால் போதும், அவர் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் என்பது தெளிவாக விளங்கிவிடும். சாதாரண சராசரி கிறிஸ்தவனே சுலபமாக‌ பதில் அளிக்கும் அளவிற்கு அவரது மேற்கோள்கள் இருக்கின்றது என்பதை இக்கட்டுரை தெளிவாக்குகிறது.

அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரையில்,

உங்கள் சகோதரன்

உமர்