ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 27 ஏப்ரல், 2015

ஓவியர் டாவின்சியும், இயேசுவின் திருமணம் பற்றி பீஜே அவர்களின் பதிலும் – பாகம் 2

முன்னுரை:

இயேசுவிற்கு திருமணமானதா? என்ற கேள்விக்கு பீஜே அவர்கள் பதில் கொடுத்துள்ளார். இஸ்லாமின் படி, இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதைப் பற்றி நான் முதலாவது பாகத்தில் விளக்கினேன் (முதல் பாகத்தின் தொடுப்பு).
இந்த இரண்டாம் பாகத்தில், டாவின்சி ஓவியத்தையும், டாவின்சி கோட் என்ற படத்தையும் மேற்கோள் காட்டி, பீஜே அவர்கள் சொன்ன பதிலை ஆய்வுச் செய்யப்போகிறோம்.
கீழ்கண்ட தலைப்புகளில், இந்த இரண்டாம் பாகத்தை அலசுவோம்:
பாகம் 2
1) டாவின்சியின் "லாஸ்ட் சப்பர்" படமும், பீஜே அவர்களின் பதிலும்
2) லாஸ்ட் சப்பர் படத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? டாவின்சி ஓவியத்தில் உள்ள ஓட்டைகள் (பீஜேயின் ஆய்வு இஸ்லாமுக்கு தேய்வு)
3) டாவின்சி இஸ்லாம்/முஹம்மது பற்றி படம் வரைந்திருந்தால்…?
4) டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி பீஜே அவர்கள் என்ன சொல்வார்கள்?
5) இயேசுவின் திருமணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
6) மகதலேனா மரியாள் விஷயத்தில் "அல்லாஹ்வை பொய்யராக்கும்" பீஜே
7) முடிவுரை

1) டாவின்சியின் "லாஸ்ட் சப்பர்" படமும், பீஜே அவர்களின் பதிலும்

முதலாவது, பீஜே அவர்களுக்கு வந்த கேள்வியையும், அதற்கு அவர் கொடுத்த பதிலையும் படிப்போம்.
கேள்வி :
நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்?

PJ அவர்களின் பதில்

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.

மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்ஸிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,
மேற்கண்ட பதிலில், இரண்டாவது பத்தியில் பீஜே அவர்கள் கொடுத்த பதிலின் உண்மையை ஆய்வு செய்வோம்.

லியொனார்டோ டாவின்சியின் காலம் (கி.பி. 1452 – கி.பி. 1519)

டாவின்சி என்பவர் புகழ் பெற்ற ஓவியர். இவரின் மோனா லிசா என்ற ஓவியமும், இயேசுவின் கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்) ஓவியமும் புகழ்பெற்றவைகள். இவர் வாழ்ந்த காலக்கட்டம் 15ம் நூற்றாண்டாகும். அதாவது இவர் இயேசுவிற்கு பிறகு கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர் ஆவார். இந்த விவரங்கள் இந்த கட்டுரையை சரியாக புரிந்துக்கொள்ள நமக்கு உதவும். பீஜே அவர்களின் பதிலை படிக்கும் போது, கீழ்கண்ட விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன:

புகழ்பெற்ற ஓவியர் டாவின்சியின் ஓவியங்கள் இரண்டை பீஜே குறிப்பிடுகின்றார்: மோனா லிசா மற்றும் இயேசுவின் கடைசி விருந்து.
 • இயேசுவின் கடைசி விருந்து ஓவியத்தில், இயேசுவிற்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதை காணமுடிகின்றதாம்.
 • மகதலேனா மரியாள் மூலமாக இயேசுவிற்கு ஒரு மகள் இருக்கிறார்களாம்.
 • இந்த மகளைப் பற்றி டாவின்சி கோட் என்ற படத்தில் "பல ஆதாரங்கள் மூலம்" எடுத்து காட்டப்பட்டுள்ளதாம்.
அந்த படத்தில் காட்டப்பட்ட விஷயங்கள் பீஜே அவர்களுக்கு "பல ஆதாரங்களாக" தென்பட்டுள்ளது. அதாவது அவைகள் உண்மை தான் என்று இவர் நம்புகிறார், அதனால் தான் தன் பதிலிலும் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன் இயேசுவை வந்து பார்த்தவர்களில் மகதலேனா மரியாள் முதலாவது பெண் என்று பீஜே சொல்கிறார். பீஜே தவறாக சொல்லியுள்ளார், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இல்லை, அவர் உயிர்த்தெழுந்த பிறகு முதலாவது அவரைக் கண்டு பேசியது மகதலேனா மரியாள் ஆவார். சிலுவையில் அறையப்பட்டபோது ஊர் மக்கள் அனேகர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். (ஆனால், இந்த ஆதாரத்தை எதிலிருந்து பீஜே எடுத்துச் சொல்கிறார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா? புதிய ஏற்பாட்டிலிருந்து தான். முஸ்லிம்களுக்கு தேவைப்படும் போது பைபிளிலிருந்து வசனங்களை எடுப்பார்கள். பைபிளை குற்றப்படுத்த விரும்பினால், அவ்வசனங்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்வார்கள்).

இயேசுவிற்கு துறவி போன்ற ஒரு இமாஜை கொடுத்தால் தான் மதத்தை பரப்பமுடியுமாம், ஆகையால், கிறிஸ்தவர்கள் இயேசுவின் குடும்ப வாழ்க்கையை இருட்டடிப்பு செய்துவிட்டார்களாம். மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், பீஜே அவர்களின் பொய்களுக்கும் சரியான பதிலைச் சொல்லவேண்டியது, கிறிஸ்தவர்களின் கடமையல்லவா? முக்கியமாக இஸ்லாம் என்ற அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து, எனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க இந்த பூமியில் இறங்கி வந்து, எனக்காக மரித்து முன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்துவை பின் பற்றும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு முக்கிய கடமையல்லவா?

வாருங்கள், உலக புகழ்பெற்ற ஓவியர் டாவின்சியின் லாஸ்ட் சப்பர் (இயேசுவின் கடைசி விருந்து) ஓவியத்தில் உள்ள ஓட்டைகளை காண்போம்.

[முக்கிய குறிப்பு: நான் ஓவியர் டாவின்சியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வரவில்லை. இவர்கள் சொல்வதுபோல இயேசுவைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அவர் ஓவியங்களை வரையவில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவருடைய கற்பனைத்திறன், அனுபவம் மற்றும் விருப்பத்தின் படியே அவர் வரைந்துள்ளார். ஆனால், அவரது ஓவியத்தை முன்வைத்து முஸ்லிம்கள் மற்றும் இதர மக்கள் கிறிஸ்தவத்தை விமர்சிப்பதினால், ஒரு ஆரோக்கியமான முறையில் அந்த படத்தை ஆய்வு செய்கிறோம். இதன் மூலம் முஸ்லிம்களின் அறியாமையும், கயமைத்தனமும் வெளிப்படும் என்பதை உலகிற்கு காட்டவே இந்த விவரங்கள் தரப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் கலைஞர்களை நான் மதிக்கிறேன், அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்த நான் கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஒரு கலைஞனின் ஓவியங்கள்/புத்தகங்கள் என் கருத்துக்களுக்கு நம்பிக்கைக்கு எதிராக இருந்தால், என்னால் முடிந்த பதிலை கொடுக்க விரும்புவேன், உண்மையை உலகம் அறிய வேண்டுமென்று விரும்புவேன். இதை விட்டுவிட்டு, அவர்களை பயமுறுத்தி, அவர்களை அழிக்க விரும்ப மாட்டேன். இது என் கருத்து மட்டுமல்ல, கிறிஸ்தமும் இதைத் தான் செய்கிறது. ]

2. லாஸ்ட் சப்பர் படத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? டாவின்சி ஓவியத்தில் உள்ள ஓட்டைகள்

 1. இந்த கட்டுரையை எழுதுவதற்கு இந்த குறிப்பிட்ட தொடுப்பு எனக்கு பெரும் உதவியாக இருந்தது: www.jaydax.co.uk/lastsupper/lastsupper.htm
 2. இந்த படத்தை ஒரு முறைக்கு பலமுறை கூர்ந்து கவனிக்கவும்: டாவின்சி வரைந்த ஓவியம்: www.jaydax.co.uk/lastsupper/lastsupper.jpg
 3. இதே ஓவியம் விக்கிபீடியாவிலிருந்து (டாவின்சியின் ஓவியத்தை பழுது பார்க்கப்பட்டபின்பு இப்படி காணப்படுகின்றது): upload.wikimedia.org/wikipedia/commons/1/11/Giampietrino-Last-Supper-ca-1520.jpg
இந்த படத்தை இக்கட்டுரையை படிக்கும் போது அடிக்கடி வந்து பார்த்தால் தான் விவரங்கள் புரியும். ஓவியத்தின் பின்னணி: அந்த இரவு விருந்தில் இயேசு பல விஷயங்களை பேசினார், ஆனால், இந்த ஓவியம் "உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு சொன்னபோது, ஒவ்வொரு சீடரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்ட போது, எப்படி சூழ்நிலை இருந்திருக்கும் என்பதை இந்த ஓவியம் காட்டுகிறது, பார்க்க யோவான் 13:21-25:
யோவான் 13:21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். 13:22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 13:23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 13:24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 13:25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
இப்போது பீஜே தவறுதலாக மேற்கோள் காட்டிய ஓவியத்தில் உள்ள ஓட்டைகளை காண்போம். டாவின்சி இயேசுவின் இரவு விருந்து நடந்து முடிந்து 1400 ஆண்டுகளுக்கு பின்பு வாழ்ந்தவர் என்பதை கவனத்தில் வைக்கவும்.
அ) ஓவியத்தில் காணப்படும் குவளைகள் மற்றும் தட்டுகள்:

படம் 1: குவளைகளும் தட்டுகளும்
டாவின்சி ஓவியத்தில் கண்ணாடி குவளைகள் காணப்படுகின்றன, அவைகளில் சிகப்பான திராட்சை ரசம் காணப்படுகின்றது. மேலும் தட்டுகளும் காணப்படுகின்றது. இயேசு வாழ்ந்த காலத்தில், எருசலேமில் வாழ்ந்த மத பக்தியுள்ள யூதர்கள் ரோமர்கள் போல கண்ணாடியினால் அல்லது உலோகங்களினால் தயாரிக்கப்பட்ட குவளைகளில் பானம் அருந்துவதில்லை. மண் குவளைகளிலும், அல்லது கட்டையினால் ஆன குவளைகளிலும் தான் அருந்துவார்கள். யூதர்களில் பணம் படைந்த பெரிய செல்வந்தர்கள் தான் இப்படி உலோகங்களினால் ஆன குவளைகளில் பானம் அருந்துவார்கள். இதே போல, இந்த ஓவியத்தில் காணப்படும் தட்டுகளுக் உலோகங்களினால் ஆனவைகளாக காணப்படுகின்றன, இதுவும் தவறாகும். ஓவியம் வரையும் போது ஓவியரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு இது வரையப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த ஓவியத்தை சரியாக நாம் ஆய்வு செய்யும் போது, வரையப்பட்ட ஒவ்வொரு சின்ன விஷயமும் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டதாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஓவியரிடத்தில் காணப்படவில்லை என்பது புலப்படும். அடுத்த விவரத்தை பார்க்கவும்.
ஆ) இது கடைசி இரவு விருந்து "கடைசி பகல் விருந்து அல்ல"
இந்த ஓவியத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை, இந்த நிகழ்ச்சி நடந்த நேரம் பற்றியதாகும். பைபிள் படி, பஸ்கா விருந்து இரவில் கடைபிடிக்கப்படுகின்றது. அதாவது இறுதி இராவுணவு (லாஸ்ட் சப்பர் - Last Supper) என்பது இரவு உணவை குறிக்கும், பகல் உணவை குறிக்காது (Last Lunch).
யாத்திராகமம் 12ம் அத்தியாயத்தில் காணப்படுவது போல, பஸ்கா பண்டிகை உணவை இரவில் சாப்பிடவேண்டும். யாத்திராகமம் 12:8ம் வசனத்தை கவனியுங்கள்.
யாத் 12:5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். 12:6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, 12:7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 12:8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
இதே போல, இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டது இரவில், பகலில் அல்ல. பஸ்காவை புசித்து, உடனே இயேசு கெத்சமனே தோட்டத்துக்குச் செல்கிறார், அந்த இரவு அவரை கைது செய்கிறார்கள். ஆனால், டாவின்சியின் ஓவியத்தில் நாம் காண்பது என்ன? மேற்கண்ட படத்தை கவனித்துப் பாருங்கள். அதில் மூன்று ஜன்னல்கள் காணப்படுகின்றன, அவைகளிலிருந்து வெளிச்சம் வருகிறது, அதாவது பகலில் அந்த விருந்து நடந்ததாக டாவின்சி சித்தரித்து இருக்கிறார். மேலும் இடது புறத்திலிருந்து ஒரு வெளிச்சம் (ஜன்னல், அல்லது கதவிலிருந்து) வந்து எதிர் புறமிருக்கும் சுவரில் படுவதை காணமுடியும். இது பகலில் அல்லது சாயங்கால வேளையில் (இன்னும் சூரியன் அஸ்தமிக்காமல் இருக்கும்போது) நடந்ததாக, டாவின்சி வரைந்துள்ளார். யூதர்கள் தங்கள் பாரம்பரியங்களில், பண்டிகைகளில் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யமாட்டார்கள். மத விஷயங்களில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தவறாது செய்பவர்கள். இரவில் கொண்டாடவேண்டிய விருந்தை, பகலில் அவர்கள் செய்யமாட்டார்கள். இது டாவின்சியின் ஓவியத்தில் காணப்படும் இன்னொரு மிகப்பெரிய ஓட்டையல்லவா?


படம் 2: ஜன்னல்கள் மற்றும் பகலின் வெளிச்சம்


படம் 3: சுவரில் படும் வெளிச்சம்

பீஜே அவர்களுக்கு கேள்வி: நீங்கள் மேற்கோள் காட்டிய ஓவியரின் படத்தில் காணப்படும் வெளிப்படையான பிழையைப் பார்த்தீர்களா? ஓவியத்தை வரையும் போது, அழகிற்காகவும், தெளிவாக தெரியவேண்டும் என்பதற்காகவும், கற்பனையாக சில விஷயங்களை ஓவியர்கள் சேர்ப்பார்கள் என்பதற்கு இந்த விஷயம் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். இன்னும் ஓட்டைகள் பெரிதாகிக்கொண்டு இருக்கிறது, மேற்கொண்டு படியுங்கள்.

இ) பஸ்கா ஆட்டுக்குட்டி, பஸ்கா மீன் இல்லை
இந்த ஓவியத்தில் இன்னொரு தவறும் உள்ளது. அதாவது பஸ்கா பண்டிகையை ஒர் ஆட்டின் இறைச்சியோடும், புளிப்பில்லாத ரொட்டிகளோடும் கொண்டாடுவார்கள். டாவின்சியின் படத்தை பார்க்கும் போது, அதில் "மீன், அப்பம், திராட்சை இரசம், இன்னும் கீரைகள்" இருப்பதை காணமுடியும், ஆனால், முக்கியமான உணவாகிய ஆட்டின் இறைச்சி இல்லை என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் காணப்படுவது புளிப்பில்லாத அப்பமாக தெரியவில்லை, ஈஸ்ட் கலந்த (புளிப்பு கலந்த) அப்பமாக காணப்படுகின்றது. நாம் இன்று காணும் பண் என்று சொல்லக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. இதுவும் தவறாகும். உணவு விஷயத்தில் இரண்டு தவறுகள் இப்படத்தில் காணப்படுகின்றது, ஆட்டு இறைச்சி இல்லை மற்றும் புளிப்பில்லாத அப்பம் இல்லை.


படம் 4: மீன் மற்றும் அப்பம்

பீஜே அவர்களுக்கு கேள்வி: ஒரு சரித்திர நிகழ்வைச் சித்தரிக்கும் போது அக்காலத்துக்கு ஏற்றவாரும், அவர்களின் பழக்கவழக்கங்களின்படியும் வரைவது தானே உண்மையான ஒன்றாக இருக்கும். ஆனால், உங்கள் டாவின்சி இதில் தவறு செய்துள்ளாரே! இதற்கு உங்களின் பதில் என்ன?

ஈ) கம்பளம் விரிக்கப்பட்ட மேலறை - நாற்காலி, மேஜைகள் கொண்ட அறை அல்ல

பஸ்காவை கொண்டாட, இயேசு சீடர்களை அனுப்பும்போது "கம்பளம் விரிக்கப்பட்ட இடம் கிடைக்கும் அதை ஆயத்தம் செய்யுங்கள்" என்றார், ஆனால், டாவின்சியின் ஓவியத்தில் நாம் கண்பது, நாற்காலிகள், மேஜைகள் கொண்ட ஒரு விருந்தாகும். மிகப்பெரிய செல்வந்தர்களாக இல்லாத யூதர்களின் வீடுகளில், கம்பளம் விரிக்கப்பட்ட அறைகளில் உண்பது தான் வழக்கமாக இருக்கும். இதனை லூக்கா சுவிசேஷத்தில் காணலாம்: லூக்கா 22:7-12
22:7 பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. 22:8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார். 22:9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 22:10 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய், 22:11 அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள். 22:12 அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
இப்போது முக்கியமான விவரத்திற்கு வருவோம்.

உ) இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பது இயேசுவிற்கு பிரியாமான சீடர் யோவானா? அல்லது மகதலேனா மரியாளா?

முதலாவதாக, புதிய ஏற்பாட்டில் நாம் காண்பது, அந்த இரவு உணவு விருந்தில், 13 நபர்கள் இருந்தார்கள், அதாவது இயேசுவும் அவரது 12 சீடர்களும். இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பது, மகதலேனா மரியாள் என்றால், யோவான் எங்கே சென்று இருக்கிறார்? இயேசுவின் அன்பான சீடர் இல்லாமல், இந்த நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு இல்லை. புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலும், தொன்று தொட்டு வந்திருக்கும் சபை பாரம்பரியத்தின் படியும், இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பவர் யோவான் தான், மகதலேனா மரியாள் அல்ல.

யோவான் 13: 21-25ம் வசனங்களில், இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டு இருப்பவன் "இயேசுவிற்கு அன்பான சீடன் என்று" சொல்லப்பட்டுள்ளது:
யோவான் 13:21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். 13:22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 13:23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 13:24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.13:25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் படி, இயேசுவிற்கு அடுத்தபடியாக அமர்ந்து இருந்தவர் யோவான் ஆவார். ஆனால், 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு வரையப்பட்ட ஒர் ஓவியம் வேறுவிதமாகச் சொன்னால், அது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? இதே போல இஸ்லாம் பற்றியும் வரையப்பட்டால் பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதாவது 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் பற்றி தவறாக வரையப்பட்டால் பீஜே அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், டாவின்சி அதனை மகதலேனா மரியாள் என்று சொல்லவில்லை, தற்கால இஸ்லாமியர்களும் ஒரு சில நாத்தீகர்களும் தான் இப்படி மாற்றிச் சொல்கிறார்கள். படத்தை நாம் ஆய்வு செய்யும் போது, அவர் யோவான் என்ற இளவயது சீடர் என்று தான் தெரியவருகிறது.

இரண்டாவதாக, இயேசுவின் சீடர்களில் மிகவும் இளவயது உடையவர் யோவான் என்ற சீடர், இவர் முதல் நூற்றாண்டின் இறுதி வரை உயிரோடு இருந்ததாக பாரம்பரியங்களும், சரித்திரங்களும் சொல்கின்றன. டாவின்சியின் ஓவியத்தை நாம் பார்க்கும்போது, இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பது பெண் என்று எண்ணத்தோன்றும். ஆனால், ஒருவரை பார்த்த போது, பெண் போல தென்பட்டால், அதுவே அவர் பெண் என்பதற்கு ஆதாரமாக கொள்ளமுடியுமா? பைபிளையும், சரித்திரங்களையும் நாம் கவனிக்கும்போது, அந்த நபர் மகதலேனா மரியாள் அல்ல, யோவான் என்பது விளங்கும்.

கீழ்கண்ட விவரங்கள் நமக்கு இதற்கு உதவும்:

இயேசுவின் சீடர்களில் இளவயது உள்ளவரை மற்ற சீடர்களைக் காட்டிலும் வித்தியாசமாக காண்பிக்க ஓவியர்கள் விரும்பி, பெண் போல வரைந்துள்ளார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இப்படி வாலிபர்களை வரைவது டாவின்சி காலத்தின் வழக்கம் என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். இதை இவர் புதிதாக கண்டுபிடிக்கவில்லை, இவரது காலக் கட்டத்தில் எல்லா ஓவியர்களும் இப்படியே வரைந்துள்ளார்கள்.

இதைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: arthistory.about.com/od/renaissanceart/a/altheyoungdudes.htm

கீழ்கண்ட தொடுப்புகளை சொடுக்கி அவைகளில் உள்ள படங்களில் வாலிப ஆண்களை எப்படி வரைந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும் (கி.பி. 1313ம் ஆண்டிலிருந்து 1516ம் ஆண்டுவரை வரையப்பட்ட ஓவியங்கள்):
மூன்றாவதாக, இயேசுவிற்கு வலது புறத்தில் அமர்ந்திருக்கும் நபரின் கழுத்தில் ஒரு சங்கிலி போன்ற ஒன்று இருக்கிறது என்பதால், அது மகதலேனா மரியாள் தான் என்ற வாதத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால், இவர்கள் கவனிக்க தவறுவது என்னவென்றால், அந்த நபர் போட்டு இருக்கும் மேலங்கியின் ஒரு பட்டன் (Button) தான் அது. அது ஒரு சங்கிலியல்ல. இந்த நபர் அணிந்து இருப்பது நக்லஸ் என்று சொல்லக்கூடிய சங்கிலி என்று சொன்னால், அதே போல, இதர ஆறு நபர்கள் இந்த படத்தில் அணிந்துள்ளார்கள். இந்த வாதத்தின் படி, இந்த ஆறு பேரும் பெண்கள் தானா? இந்த ஓவியத்தில் இயேசுவும் அப்படிப்பட்ட மேலங்கியையே அணிந்துள்ளார், அதற்கும் ஒரு பட்டன் போன்ற ஒன்று இருக்கிறது. எனவே இந்த வாதமும் சரியானது அல்ல. 13 பேரில் ஏழு பேருடைய உடைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றபடியினால், அதில் ஒருவர் பெண் என்று சொல்வது சரியாகாது.


படம் 5: மேலங்கியில் உள்ள பொத்தான் (பட்டன்)

நான்காவதாக, இயேசுவிற்கு வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரின் புருவங்கள், பெண்களுக்கு இருப்பது போன்று உள்ளது. அதாவது, பெண்கள் தங்கள் புருவங்கள் அழகாக காணப்படவேண்டும் என்பற்காக அவைகளை சரி செய்வது வழக்கம் (அதிகபடியான முடிகளை சவரம் செய்து எடுத்துவிடுவது). இந்த வழக்கம் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்தது என்ற நிச்சயமாகச் சொல்லமுடியாது, ஆனால், டாவின்சியின் காலத்தில் இது இருந்துள்ளது. இந்த புருவங்களைப் பார்த்து அந்த நபர் மகதலேனா மரியாள் தான் என்ற வாதமும் உள்ளது. ஆனால், இந்த ஓவியத்தை சரியாக பார்த்தால், இயேசுவிற்கு இடது புறத்தில் மூன்றாவதாக இருக்கும் பிலிப்பு என்ற சீடரின் புருவங்களும் பெண்கள் செய்வது போல சவரம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், மகதலேனா மரியாள் இந்த ஓவியத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சரியான வாதம் இல்லை.


படம் 6: புருவங்கள்

ஐந்தாவதாக, இயேசுவின் வலது பக்கத்தில் உள்ள நபர், யோவான் அல்ல, அவர் மகதலேனா மரியாள் ஏனென்றால், அவருடைய தலை முடியைப் பார்த்தால், ஒரு ஆணின் முடியைப்போல அல்லாமல் பெண்ணின் தலைமுடி போல உள்ளது என்ற வாதமும் முன்வைக்கப்படும். ஆனால், இந்த ஓவியத்தில் அனேகருக்கு பெண்களைப்போல தலை முடி இருப்பதை காணலாம். யோவானுக்கு மட்டுமல்ல, இயேசுவிற்கும், அவருடைய இடது பக்கத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது, மூன்றாவது சீடருக்கும் தலைமுடி யோவானுக்கு இருப்பதைப்போலவே உள்ளது. எனவே, தலைமுடியைப் பார்த்து, அவர் மகதலேனா மரியாள் என்று சொல்லக்கூடிய வாதம் கூட அடிபட்டு போகிறது.


படம் 7: தலைமுடி

ஆறாவதாக, அந்த நபருக்கு தாடியில்லை, மற்றவர்களுக்கு உள்ளது என்று சொன்னாலும், இந்த வாதம் எடுபடாது. ஏனென்றால், இந்த படத்தில் உள்ள வேறு இரண்டு சீடர்களும் தாடியில்லாமலேயே இருக்கிறார்கள். இயேசுவின் இடது பக்கத்தில் உள்ள இரண்டு சீடர்களுக்கு தாடியில்லை என்பதை கவனிக்கவும். இந்த வாதமும் மகதலேனா மரியாள் இப்படத்தில் இல்லையென்பதையே தெரிவிக்கிறது.


படம் 8: தாடியில்லாத சீடர்கள்

ஏழாவதாக, நன்றாக கவனியுங்கள், பேதுருவின் கையின் விரல்கள், யோவானின் கழுத்து பக்கத்தில் இருக்கின்றன. ஒரு ஆண் மட்டுமே இன்னொரு ஆணின் தோளில் இப்படி கை வைத்து பேசமுடியும். அந்த நபர் மகதலேனா மரியாளாக இருந்தால், பேதுருவின் இந்த செயல் ஒரு தீய செயலாக இருக்கும். உங்களில் ஒருவர் என்னை காட்டிக்கொடுப்பார் என்று இயேசு சொன்னபோது, யோவானை அழைத்து "அது யார்?" என்று கேள் என்று சீடர்கள் யோவானிடம் கேட்டதாக பைபிள் சொல்கிறது. இந்த நேரத்தில் தான் பேதுரு யோவானை அழைத்து கேட்கிறார். இந்த ஓவியத்தில் மகதலேனா மரியாள் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். உண்மையில், இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் டாவின்சி சரியாகத் தான் படம் வரைந்துள்ளார். ஒவ்வொரு சீடரின் முகத்தில் உள்ள கேள்வியையும், ஆச்சரியத்தையும் பாருங்கள்.


படம் 9: பேதுருவின் கைவிரல்கள், யோவானை அழைக்கிறது.

இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து டாவின்சியின் ஓவியத்தில் மகதலேனா மரியாள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

3) டாவின்சி இஸ்லாம்/முஹம்மது பற்றி படம் வரைந்திருந்தால்…?

இயேசுவிற்கு 1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் வரைந்த ஓவியத்தில் உள்ளதை உண்மை என்று நம்பும் பீஜே அவர்கள், அதே டாவின்சி இஸ்லாம் பற்றி வரைந்திருந்தால், அதுவும் இஸ்லாமுக்கு 1400 ஆண்டுகளுக்கு பிறகு வரைந்திருந்தால், பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

முஹம்மதுவிற்கு 1400 ஆண்டுகளுக்கு பிறகு நாம் இன்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த காலக்கட்டத்தில், ஒரு புகழ்பெற்ற ஓவியர் அல்லது புகழ்பெற்ற நாவலாசியர் ஒரு புத்தகத்தை இஸ்லாம் பற்றி எழுதினால், அதில் உண்மைக்கு புறம்பான விவரங்கள் இஸ்லாம் பற்றி எழுதப்பட்டு இருந்தால் அதனை பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகம் வெளிவந்த பிறகு என்ன நடந்தது என்று அனைவரும் அறிவோம். தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமியர்கள் செய்த அடாவடிகள், பத்வாக்களை நாம் அனைவரும் அறிவோம். பீஜே அவர்களின் லாஜிக்கின் படி, தற்காலத்தில் இஸ்லாம் பற்றி ஓவியங்கள் வரைந்தாலும் புத்தகம் எழுதினாலும், அதனை பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எது உண்மை எது பொய் என்பவைகளை அவர் பார்க்கமாட்டாரா, கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார் என்ற முடிவிற்கு நாம் வரலாமா?

(இதில் வேடிக்கை என்னவென்றால், நவீன கால ஓவியங்களை விடுங்கள், இஸ்லாமின் அஸ்திபார நூல்களாகிய குர்-ஆன், ஹதீஸ்களிலேயே இன்னும் (1400 ஆண்டுகள் கழித்தும்) இவர்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை, 1400 ஆண்டுகள் கழித்தும் ஹதீஸ்கள் பொய்யானவை என்று தள்ளுபடி செய்கிறார்கள் இவர்கள். ஹஃப்ஸ் குர்-ஆனா? வார்ஷ் குர்-ஆனா? எது அல்லாஹ்வின் வார்த்தை என்பதில் ஓயாத சண்டை நடந்துக்கொண்டு இருக்கிறது.)

குறிப்பு: இஸ்லாமுக்கு எதிராக புத்தகம் எழுதத்தேவையில்லை. இஸ்லாமில் உள்ளதை அப்படியே ஓவியங்கள் வரைந்தாலும், புத்தகங்கள் எழுதினாலும், முஸ்லிம்களின் மனம் புண்படும். ஏன் என்பதை வாசகர்களே, முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள்.

4) டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி பீஜே அவர்கள் என்ன சொல்வார்கள்?

பீஜே அவர்கள் டாவின்சியின் ஒரு ஓவியத்தைப் பற்றி தம்முடைய விசுவாசத்தை தெரிவித்தார். ஏனென்றால், அதில் கிறிஸ்தவத்திற்கு எதிராக விஷயங்கள் இருக்கிறது என்று அவர் நம்பிவிட்டார். அவருடைய அந்த நம்பிக்கையில் உள்ள பிழைகளையும், டாவின்சியின் ஓவியத்தில் உள்ள ஓட்டைகளையும், இக்கட்டுரையில் நாம் கண்டோம்.
ஒருவேளை டாவின்சி முஸ்லிமாக மாறிவிட்டார் என்று பீஜே அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி இஸ்லாமுடைய நிலைப்பாடு என்ன? பீஜே அவர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை சுருக்கமாக காண்போமா!

எச்சரிக்கை: ஓவியர்கள் என்றாலே அவர்களுக்கு கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும். பெண்களை நிலவோடு ஒப்பிட்டு கவிதை எழுதாத கவிஞன் கவிஞனல்ல என்று யாரோ சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது. அதே போல, பெண்களை வரையாத ஓவியன் சிறந்த ஓவியனல்ல என்று சொல்லலாம். இதில் சில ஓவியர்கள் (டாவின்சி போல) பெண்களை அறை/முழு நிர்வாணமாக வரைந்துள்ளார்கள். இந்த பத்தியில் கொடுக்கப்படும் விக்கிபீடியா தொடுப்புகளில் சில டாவின்சி ஓவியங்கள் பார்ப்பதற்கு தகுதியாக இராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்க விரும்பாதவர்கள், இதனை படிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம் (ஆனால், நீங்கள் மேற்கொண்டு படிப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும்).

பீஜே அவர்கள் அறியாமையை உலகிற்கு காட்ட இந்த தொடுப்புக்கள் கொடுக்கப்படுகின்றன.

டாவின்சியின் ஓவியங்களின் விக்கிபீடியா தொகுப்பு: http://en.wikipedia.org/wiki/List_of_works_by_Leonardo_da_Vinci

மேற்கண்ட தொடுப்பில் டாவின்சியின் ஓவியங்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவைகளில் இரண்டு ஓவியங்கள் பற்றி பீஜே அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓவியம் 1: The Annunciation (இயேசுவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு):

தொடுப்பு: en.wikipedia.org/wiki/Annunciation_(Leonardo)

இந்த ஓவியத்தையும் டாவின்சி வரைந்தாராம். இதில் காபிரியேல் தூதன், மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை சொல்கிறார். பீஜே அவர்கள் இதன் தொடுப்பை சொடுக்கி பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன், மேலும் இந்த ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் பெரியதாக காட்டியுள்ளார்கள், அவைகளின் தொடுப்புக்களையும் பீஜே அவர்கள் சொடுக்கி பார்க்கவேண்டும்.

கேள்வி: குர்-ஆன் 19:17-19வரையுள்ள வசனங்களின் படி, காபிரியேல் தூதன் மரியாளுக்கு ஒர் ஆண் உருவத்தில் தோன்றினார். ஆனால், டாவின்சியின் ஓவியத்தில் காபிரியேலுக்கு சிறகுகள் உள்ளது, மேலும் ஒரு பெண்ணைப் போலவே அந்த தூதன் காணப்படுகிறார்.

குர்-ஆன் 19:17-19வரை படிப்போம்:
19:17. அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
19:18. "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.
19:19. "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.
டாவின்சி ஓவியத்தை பெரியதாகப் பார்ப்போம்: en.wikipedia.org/wiki/Annunciation_(Leonardo)

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:
குர்-ஆனின் படி ஜிப்ராயீல் தூதன், "ஒரு முழுமையான மனிதராக" தோற்றமளித்தார்.
டாவின்சியின் அதாவது, பீஜே அவர்கள் மேற்கோள் காட்டும் டாவின்சியின் ஓவியத்தில், சிறகுகள் கொண்ட ஒரு தூதனைப்போலவே தோற்றமளிக்கிறார்.
குர்-ஆன் சொல்வது உண்மையா? டாவின்சி சொல்வது உண்மையா?
டாவின்சியின் ஓவியத்தில், ஜிப்ராயீல் தூதனின் உடைகளை கவனிக்கவும், இவைகள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் யூத முறையிலான உடைகளா? அல்லது தூதர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட உடைகளா? பீஜே அவர்கள் இதற்கும் தம்முடைய கருத்தைச் சொல்லவேண்டும். மேலும் இதே படத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு கடற்கரை தெரிகின்றது. பீஜே அவர்கள் இப்படத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, மரியாள் அவர்களின் வீடு, கடற்கரைக்கு பக்கத்தில் இருந்தது என்று வாதம் செய்வாரா?
பீஜே அவர்கள் தம்முடைய விமர்சனங்களில், ஆய்வுகளில் உண்மையாளராக இருந்தால், குர்-ஆன் சொல்வதுபொய்யாகும், டாவின்சி சொல்வது தான் மெய் என்று சொல்லவேண்டும். இப்படிச் சொல்வாரா? ஒருவேளை அவர் சொல்லவில்லையானால், பைபிள் மீது அவர் தன் மனதில் கசப்பை வைத்துக்கொண்டு, பொய்களை உலகத்தில் பரப்புகிறார் என்று அனைவரும் கருதவேண்டியுள்ளது.
பீஜே அவர்களின் இஸ்லாமிய போதனைகளை கண்மூடித்தனமாக நம்பும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா? இனிமேலாவது பைபிள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதிலிருந்து பீஜே அவர்கள் விலகிக்கொள்ளட்டும்? மாட்டேன் என்று அடம் பிடித்தால், இப்படி மாட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.
ஓவியம் 2: The Baptism of Christ (இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுக்கும் யோவான்).

தொடுப்பு: en.wikipedia.org/wiki/The_Baptism_of_Christ_(Verrocchio)

இந்த ஓவியத்தை டாவின்சியின் குரு "வெர்ரக்சியோ" அவர்களும், டாவின்சியும் சேர்ந்து வரைந்தார்களாம். இதில் காணப்படும் இரண்டு குட்டி தேவதுதர்களை டாவின்சி வரைந்தாராம், இதர விவரங்களை அவரது குரு வரைந்தாராம்.

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:
இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, தேவதூதர்கள் இருந்தார்களா? இதைப் பற்றி உங்களுக்கு அல்லாஹ் ஏதாவது வெளிப்பாடு கொடுத்துள்ளாரா?
யோவானின் கையில் உள்ள தடியை கவனிக்கவும், மேலே சிலுவையைப் போன்று வரைந்துள்ளார்கள். டாவின்சியையே நீங்கள் மேற்கோள் காட்டும் போது, அவரது குருவிற்கு எவ்வளவு மதிப்பு தருவீர்கள். எனவே, இந்த சிலுவையைப் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும். யோவானின் கையில் சிலுவையுள்ள தடி எதற்கு? இதனால் டாவின்சி என்ன சொல்லவருகிறார்? இயேசு சிலுவையில் மரிப்பார் என்பதை யோவான் அறிந்து இருந்தார் என்பதை டாவின்சி மறைமுகமாகச் சொல்லவருகிறாரா?
யோவானின் உடையை கவனிக்கவும். பைபிளின்படி அவருடைய உடைகள் ஓவியத்தில் வரையப்பட்ட உடைகள் அல்ல. இவைகள் ஓவியர்களின் கற்பனையின் படி வரையப்பட்டவை, உண்மை சரித்திரத்தை பிரதிபலிப்பவை அல்ல. பார்க்க மத்தேயு 3:4 இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
டாவின்சி வரைந்தவைகள் தான் உண்மை என்று பீஜே அவர்கள் சொல்வார்களா?
இன்னும் அனேக ஓவியங்களை டாவின்சி வரைந்துள்ளார், அவைகளில் சில கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட ஒவியங்கள், அதாவது குழந்தை இயேசு மற்றும் மரியாள் பற்றிய ஓவியங்கள், மேலும் தேவதூதர்கள் கூட அவ்வோவியங்களில் காணப்படுகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தால், அவைகள் இஸ்லாமுக்கு எதிரான விவரங்களையே தருகின்றன. அவைகள் பற்றி கூட பீஜே அவர்கள் விமர்சனம் அல்லது விளக்கம் தருவாரா?
நான் சொல்லவருவது இது தான், ஓவியங்களை வைத்துக்கொண்டு சரித்திரத்தை ஓரளவிற்குத் தான் சித்தரிக்க முடியும். ஓவியங்களை வைத்துக் கொண்டு இது தான் உண்மை என்று சொல்லும் பீஜே போன்றவர்கள் கடைசியில் அவமானத்தில் தலை குனியவேண்டியது தான்.

5) இயேசுவின் திருமணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

டாவின்சியின் ஓவியம் பற்றியும், பீஜே அவர்களின் விமர்சனம் பற்றியும் பல விவரங்களைக் கண்டோம். ஓவியர்களை நம்பி களத்தில் குதிக்கும் பீஜே போன்றவர்கள் சந்திக்கும் சவால்களையும் கண்டோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு தங்களுடைய மணவாளன் என்று சொல்கிறார்கள். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது, திருச்சபை ஒரு மணவாட்டி போல அளங்கரிப்படுவாள் என்றும், இயேசு மணவாளன் போல அந்த திருச்சபையைக் கண்டு மகிழுவார் என்றும் பைபிள் சொல்கிறது. ஆனால், சில மேற்கத்திய நாவலாசியர்களும், பீஜே போன்ற இஸ்லாமியர்களும் சொல்வது போல, இந்த பூமியில் இயேசு வாழ்ந்த போது அவருக்கு திருமணம் நடந்ததா? அவருடைய மனையாக மகதலேனா மரியாள் இருந்தார்களா? உண்மையாகவே, இயேசுவிற்கு குடும்ப வாழ்க்கை அவசியமானதாக இருந்ததா? என்பதை சுருக்கமாக காண்போம்.

அ) இயேசுவின் வருகையின் நோக்கம்:

இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி போல வரவில்லை, அவர் மேசியாவாக உலக மக்களை இரட்சிக்க வந்தார், தன் உயிரை கொடுக்க வந்தார். இதைப் பற்றி இயேசு சொல்வதை படியுங்கள்:
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மாற்கு 10:45 )
மரிப்பதற்கு நான் வந்தேன் என்று சொல்பவர் எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, அவளை பாதியிலேயே அனாதையாக விட்டுச் செல்லமுடியும்?
(குறிப்பு: முஹம்மது தனக்கு 53 வயதாகும் போது, 9 வயது சிறுமையை திருமணம் செய்துக்கொண்டார். அந்த சிறுமியின் பெயர் ஆயிஷா. 9 வருடங்கள் அப்பெண்ணோடு வாழ்ந்தார். ஆயிஷா 18 வயது இருக்கும்போது, இவர் போய் செர்ந்துவிட்டார். ஆயிஷா தனக்கு 64 வயது இருக்கும் போது மரித்ததாக சொல்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் விதவையாக வாழ்ந்தார்கள். இப்படியெல்லாம் இயேசு செய்யமாட்டார்.).

ஆ) இயேசுவின் குடும்ப நபர்கள் பற்றி பைபிள்:

அனேக இடங்களில் இயேசுவின் குடும்ப நபர்கள் பற்றியும், அவரது ஊழியத்தில் உதவின சகோதர சகோதரிகள் பற்றியும் பைபிள் பல இடங்களில் குறிப்பிடுகின்றது (மத்தேயு 12:46, 47; மாற்கு 3:31, 32; 15:40; லூக்கா 8:2, 3, 19, 20; யோவான் 19:25). ஆனால், ஒரு இடத்திலும் அவரது மனைவி இருந்தார்கள், அந்த மனைவியின் பெயர் இது தான் என்று பைபிள் குறிப்பிடவில்லை. ஏன் இப்படி பைபிள் சொல்லவில்லை என்று சிந்தித்தால், உண்மையாகவே அவருக்கு மனைவி இருந்ததில்லை என்பது தான் பதிலாகும்.

இ) அதி முக்கியமான விஷயத்தை ஏன் பைபிள் சொல்லவில்லை?

இயேசுவைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லும் பைபிள், இயேசுவிற்கு திருமணமாகியிருந்தால், அதைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருக்குமா? இயேசுவின் தாய் யார், வளர்ப்பு தந்தையார், உறவினர்கள் யார் என்று சொல்லும் பைபிள் அவருக்கு மனைவி இருந்திருந்தால், அதை சொல்லாமல் விட்டு இருந்திருக்காது.

ஒரு தீர்க்கதரிசி திருமணமானவராக இருப்பது பாவமில்லையே! பைபிள் திருமணத்திற்கு எதிரானதும் இல்லையே, அப்படி இருக்கும் போது, இயேசுவிற்கு உண்மையாக திருமணாகி இருந்தால், பைபிள் நமக்கு தெரிவித்து இருக்கும்.

இயேசுவின் சீடர்களும் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை, காரணம் என்னவென்றால், இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதுதான் உண்மை.

ஈ) பழைய ஏற்பாடும் மேசியாவின் குடும்பம் பற்றி ஒன்றும் சொல்வதில்லை

மேசியாவின் வருகையை பற்றியும், அவர் படும் பாடுகள் பற்றியும், அவரது இரண்டாம் வருகையைப் பற்றியும், பல விஷயங்களை பழைய ஏற்பாடு சொல்கிறது, ஆனால் அவருக்கு திருமணம் ஆகும் என்றும், அவருக்கு குடும்பம் இருக்கும் என்றும் சொல்லவில்லை, ஏனென்றால், அவர் ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல, தீர்க்கதரிசிகளைவிட மேலானவர், அவர் கர்த்தர், அவர் தேவனின் வார்த்தையாக இருக்கிறார். அவருக்கு திருமணம் என்பது தேவையற்றது. அல்லாஹ்விற்கு திருமணமும், மனைவியும் தேவையா? மனிதர்களுக்குத் தான் இவைகள் தேவை தேவனுக்கு தேவையில்லை. ஆகையால், பழைய ஏற்பாடு இதைப் பற்றி சொல்வதில்லை.

ஏசாயா புத்தகத்திலிருந்து சில வசனங்களை மட்டும் இப்போது படிப்போம். இயேசு ஏன் வந்தார் என்பதை சரியா புரிந்துக்கொள்ள, தேவனின் இரட்சிப்பின் தட்டத்தை இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட வசனங்கள் சொல்வதை பாருங்கள். இப்படிப்பட்ட ஊழியத்திற்கு வருபவர், எப்படி திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்துவார்? பீஜே அவர்கள் சிந்திக்கட்டும்.
ஏசாயா 53:2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 53:3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 53:6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். 53:7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 53:8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 53:9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
உ) தாயை பராமரிக்க ஆயத்தப்படுத்தியவர், மனைவி பிள்ளைகளை பராமரிக்க ஆயத்தமாக்கமாட்டாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, தன் பிரியமான சீடன் யோவானிடம் தம்முடைய தாயை பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிடுகிறார். அதே இடத்தில் மகதலேனா மரியாளும் இருக்கிறார்கள், அவர்களை பராமரிக்கும் படி இயேசு எதையும் செய்யவில்லை. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், மகதலேனா மரியாள் மனைவியாக அல்ல அதற்கு பதிலாக, ஒரு நல்ல சீடராக இருந்தார்கள் என்பதாகும். பார்க்க யோவான் 19:25-27.
19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.
19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
19:27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
6) மகதலேனா மரியாள் விஷயத்தில் "அல்லாஹ்வை பொய்யராக்கும்" பீஜே
இந்த வரிகளை படிப்பவராகிய நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால், நிச்சயமாக அடுத்த சில வரிகளை கட்டாயம் படியுங்கள்.
பைபிளை தாக்கிப் பேசும் ஒவ்வொரு முஸ்லிமும், தனக்குத் தெரியாமலேயே, தன் கைகளால் இஸ்லாமுக்கு கல்லறையை கட்டுகிறார். இதனை முஸ்லிம்கள் அறிவதில்லை. உதாரணத்திற்கு, பீஜே அவர்களின் இந்த வரிகளை படியுங்கள்:
// பீஜே அவர்கள் கொடுத்த பதில்:
. . . இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். . . //
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அல்ல, அவர் உயிர்த்தெழுந்த பிறகு வந்து பார்த்தவர்களில் அல்லது இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் பேசிய பெண், மகதலேனா மரியாள் ஆவார்கள். பார்க்க யோவான் 20:16-18

20:16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
20:18 மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதலில் பேசியது மகதலேனா மரியாள் என்பதால், அவர் இயேசுவின் மனைவியாக இருக்கிறார் என்று நீங்கள் (பீஜே) சொல்கிறீர்கள். உங்களுடைய இந்த லாஜிக் உண்மையாக இருந்தால், நீங்கள் இன்றே இஸ்லாமை விட்டு வெளியேறவேண்டும். காரணம் என்ன? மேற்கொண்டு படியுங்கள்.
குர்-ஆனின் படி சிலுவையில் இயேசுவை அறைவதற்கு முன்பே, அல்லாஹ் ஒரு மாயை செய்து, யாருக்கும் தெரியாமல், இயேசுவை தன்னிடத்தில் எடுத்துக்கொண்டார். வேறு ஒரு நபரை இயேசுவைப்போல் காண்பித்துவிட்டார். அந்த நபர் தான் சிலுவையில் அறையப்பட்டார். பார்க்க குர்-ஆன் 4:156,-158 (உங்கள் தமிழாக்கம் தான், ஒரு முறை படித்துவிடுங்கள், பீஜே அவர்களே!)
4: 56, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26
158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133
ஒரு புறம் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று சொல்கிறீர்கள், இன்னொரு பக்கம், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலாவது காணப்பட்டது மகதலேனா மரியாளுக்கு என்று சொல்கிறீர்கள். உங்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனைகள் உங்களுக்கு தெரிகின்றதா?
குர்-ஆனின் படி இயேசு உயிர்த்தெழவில்லை, பீஜேயின் படி, இயேசு உயிர்த்தெழுந்தார்.
குர்-ஆனின் படி, இயேசு சிலுவையிலேயே அறையப்படவில்லை, பீஜேயின் படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மகதலேனா மரியாளுக்கு காணப்பட்டு பேசினார்.
இப்போது தமிழ் முஸ்லிம்கள் யாரை நம்புவது? குர்-ஆன் சொல்வதை நம்பவேண்டுமா? அல்லது பீஜே அவர்கள் சொல்வதை நம்பவேண்டுமா? ஒன்றை ஒன்று முரண்படுகின்றது.
இயேசு சிலுவையில் அறையப்படவில்லையென்றால், அவர் எப்படி உயிர்த்தெழமுடியும்? அவர் எப்படி மரியாளுக்கு காணப்படமுடியும்?
குர்-ஆனின் படி, இயேசுவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாகவே, அவரை அல்லாஹ் எடுத்துக்கொண்டார், அப்படியானால், அவர் மறுபடியும் பூமியில் எப்படி மரியாளுக்கு காணப்பட்டார்?
பீஜே அவர்களின் "இயேசுவிற்கு திருமணமானது" என்ற பதில் உண்மை என்று நாம் ஏற்றுக்கொண்டால், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று குர்-ஆன் சொல்வது பொய்யாகும். இவ்வளவு சீக்கிரமாக பீஜே அல்லாஹ்விற்கு அல்வா கொடுப்பார் என்று யாரும் எதிர்ப்பார்த்து இருந்திருக்கமாட்டார்கள். ஒன்றை கடைசியாகச் சொல்லிக்கொள்கிறேன், கடந்த சில ஆண்டுகளாக, முஸ்லிம்கள் பைபிளை தாக்கி எழுத ஆரம்பித்த நாள் முதற்கொண்டு, இன்று வரை அவர்கள் இஸ்லாமுக்கு கல்லறையை சிறிது சிறிதாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பீஜே போன்றவர்கள் அந்த கல்லறை கட்டும் வேலையை சீக்கிரமாக முடித்துவிடுவார்கள் போல் இருக்கிறது.

முடிவுரை:

இதுவரை விளக்கியவற்றிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது:

இயேசுவிற்கு திருமணமானது என்று பீஜே அவர்கள் சொன்ன பதிலில் ஆதாரமில்லை.
இஸ்லாமிய நூல்களின் ஆதாரங்களின் படியும், இயேசுவிற்கு திருமணமாகவில்லை என்பது தெளிவாக புரிகின்றது.
முஸ்லிம்கள் "கலைஞர்களின் ஓவியங்களை, புத்தகங்களை" ஆதரவாக எடுத்துக்கொண்டு பைபிளுக்கு எதிராக எழுதுவது, இஸ்லாமுக்கே ஆபத்தாக முடியும். டாவின்சியை வம்புக்கு இழுத்து, டாவின்சி கோட் என்ற படத்தை துணைக்கு அழைத்துக் கொண்டதால், பீஜே அவர்களும், குர்-ஆனும் சந்திக்கும் சவால்கள், இஸ்லாமுக்கே தலைவலியாக மாறியதைக் கண்டோம்.
பீஜே போன்ற முஸ்லிம்களுக்கு, கிறிஸ்தவர்களின் எச்சரிக்கை மணியாக இந்த விவரங்கள் அமையட்டும். ஆய்வு செய்யாமல், பைபிளுக்கு எதிராக, இணையத்தில் எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும். பதில் தெரிந்தவர்கள், இந்த இரண்டு கட்டுரைகளுக்கு பதில் சொல்லட்டும்.
இந்த இரண்டு தொடர் கட்டுரைகள் பற்றி, முஸ்லிம்கள் கேள்விகள் எழுப்பினால், மறுப்பு எழுதினால், மேலதிக விவரங்கள் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பீஜே அவர்களே, உங்களை அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன், அது வரை இனி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் சகோதரன்
உமர்

தேதி: 27-April-2015

பின் குறிப்புகள்:

ஓவியர் டாவின்சியும், இயேசுவின் திருமணம் பற்றி பீஜே அவர்களின் பதிலும் – பாகம் 1

முன்னுரை:

இஸ்லாம் பற்றி கேள்விகள் கேட்கும் போது, பீஜே அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் பதில் அளிக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சுலபமாக புரியும் விவரங்கள் அனைத்தும் "உண்மையாக இருக்கும்" என்று சிலர் நினைத்துவிடுகிறார்கள், ஆனால், இது தவறாகும். விவரங்கள் சுலபமாக புரிகின்றதோ இல்லையோ, அவைகளில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பதைத் தான் நாம் கவனிக்கவேண்டும். பீஜே அவர்கள் சொல்லும் பதில்களில் எவ்வளவு சதவிகிதம் உண்மை இருக்கும்? எந்த அளவிற்கு பொய்கள் இருக்கும்? என்பதை முஸ்லிம்கள் அறிவார்களா?

இயேசு ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்ற கேள்வியை ஒரு இஸ்லாமியர் கேட்டார். பீஜே அவர்கள் என்ன செய்து இருக்கவேண்டும்? குர்-ஆனின் படி இது தான் பதில் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கவேண்டும். இதை விட்டுவிட்டு அவர் ஓவியர் டாவின்சியின் ஓவியத்தை உதாரணம் காட்டி, டாவின்சி கோட் என்ற படத்தை உதாரணம் காட்டி பதில் சொல்லியுள்ளார். இப்போது, அவருடைய பதிலை படிக்கும் கிறிஸ்தவர்கள் அவரின் அறியாமையை அவருக்கே முதலாவது எடுத்துச் சொல்லவேண்டும், அதன் பிறகு இஸ்லாமிய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவருடைய பதிலினால் அவருக்கும், குர்-ஆனுக்கும் உண்டாகும் பிரச்சனைகளையும், சவால்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். இவருடைய பதிலை படிக்கும் போது, இவர் ஆய்வு செய்து தான் பதில் சொல்கிறாரா? அல்லது சொந்தமாக பதில் சொல்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது.

இந்த கட்டுரையை கீழ்கண்ட தலைப்புகளாக பிரித்து பதிலைக் காண்போம்:

பாகம் 1:

1) இயேசுவிற்கு திருமணம் ஆனதா? என்ற கேள்வியும், பீஜே அவர்களின் பதிலும்

2) ஓவியர்கள், நாவலாசிரியர்கள், படங்கள் - இவைகள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

3) பீஜே அவர்களின் பதில் ஆய்வு செய்து சொல்லப்பட்ட ஒன்றா? இயேசுவின் திருமணம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

4) முடிவுரை

பாகம் 2:

1) டாவின்சியின் "லாஸ்ட் சப்பர்" படமும், பீஜே அவர்களின் பதிலும்

2) லாஸ்ட் சப்பர் படத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? டாவின்சி ஓவியத்தில் உள்ள ஓட்டைகள்

3) டாவின்சி இஸ்லாம்/முஹம்மது பற்றி படம் வரைந்திருந்தால்…?

4) டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி பீஜே அவர்கள் என்ன சொல்வார்கள்?

5) இயேசுவின் திருமணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

6) மகதலேனா மரியாள் விஷயத்தில் "அல்லாஹ்வை பொய்யராக்கும்" பீஜே

7) முடிவுரை


1. இயேசுவிற்கு திருமணம் ஆனதா? என்ற கேள்வியும், பீஜே அவர்களின் பதிலும்

பீஜே அவர்கள் தம்முடைய ஜீசஸ் இன்வைட்ஸ் என்ற தளத்தில் கீழ்கண்ட விதமாக பதில் அளித்துள்ளார்:

கேள்வி: நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்?

PJ அவர்களின் பதில்:

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.

மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்ஸிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,- மூலம்

மேற்கண்ட பதிலை படித்தவுடன், தமிழ் முஸ்லிம்கள் பீஜே அவர்களின் வார்த்தைகளுக்கு "ஆமீன்" என்று சொல்வார்கள். அவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் என்று நம்பிவிடுகிறார்கள். ஒருவர் கேள்வி கேட்டால், தனக்கு தெரிந்த விவரங்களிலிருந்து பதில் சொல்லவேண்டும். குர்-ஆனின் படி, ஹதீஸ்களின் படி இது தான் பதில் என்று சொல்லி கச்சிதமாக முடித்து இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, ஓவியர் டாவின்சியையும், அதைப் பற்றி வந்த படத்தையும் குறிப்பிட்டு, அதில் சொல்லப்பட்டவைகள் உண்மை என்ற தோரணையில் பதில் கொடுத்தபடியினால், அதன் விளைவை பீஜே அவர்கள் சந்தித்து ஆகவேண்டும்.

2. ஓவியர்கள், நாவலாசிரியர்கள், படங்கள் - இவைகள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

இஸ்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது. இஸ்லாம் பேச்சுரிமைக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என்பதை உலகச் செய்திகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிந்துக் கொள்வார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும், இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மார்க்கத்தார்கள் படும் அல்லல்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை காட்டும் கண்ணாடியாய் உள்ளது. முஸ்லிம்கள் சிறும்பான்மையாக வாழும் நாடுகளில் இதனை நாம் காணமுடியாது என்பதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

கடந்த பல ஆண்டுகளாக, உலகில் நடக்கும் பல மனித உரிமை மீறல்களுக்கு இஸ்லாம் காரணமாக உள்ளது, முக்கியமாக கலைஞர்களுக்கு எதிராக இஸ்லாம் தூக்கிய போர்க்கொடி தான் வன்முறையும், பயமுறுத்தல்களும். ஏன் இப்படி? என்று சந்தேகம் வந்தால், கீழ்கண்ட விவரங்களை படிக்கவும்:

1) முஸ்லிம்களின் படி "ஓவியங்கள்" இஸ்லாமில் அனுமதிக்கப்படுவதில்லை. ஓவியங்களை வரைந்தவர் எவ்வளவு புகழ்பெற்றவராக இருந்தாலும் சரி, முஹம்மது, இஸ்லாமிய கொட்பாடுகள் பற்றிய ஓவியங்களுக்கு அனுமதியில்லை.

2) இதே போல, இஸ்லாமை விமர்சித்து எழுதப்படும் புத்தகங்கள், நாவல்கள் (புதினங்கள்) ஏற்றுக்கொள்ளப்படாது. எழுதினால் தலை உருளும்.

3) புத்தகங்கள் ஆய்வு செய்து எழுதப்பட்டிருந்தாலும், இஸ்லாமிய சரித்திர உண்மைகளை வெளியே சொல்வதாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களின் மனது புண்படும் என்பதால் அனுமதி இல்லை. (முஸ்லிம்களின் மனது எவைகளுக்கெல்லாம் புண்படும்? என்று ஆய்வு செய்து, முஸ்லிம்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வது நல்லது.)

4) இஸ்லாம் பற்றிய கேலிச்சித்திரங்கள், முஹம்மதுவின் உருவம் கொண்ட ஓவியங்களுக்கு அனுமதியில்லை. இப்படி வெளிப்படையாக இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன, சிலர் இப்படி கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

5) இது மட்டுமல்ல, நேர்மையான முஸ்லிம்கள் கூட தங்களுக்கு தெரியாமல், அறியாமையில் முஹம்மதுவை விமர்சித்துவிட்டால் கூட, அவர்கள் தண்டனைக்கு தப்புவதில்லை.

6) இஸ்லாமை விமர்சித்து எடுக்கப்படும் திரைப்படங்கள், "இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்" என்று முஸ்லிம்கள் கருதும் திரைப்படங்களுக்கு அனுமதி இல்லை.

7) தம்மை விமர்சித்து கவிதை எழுதுபவர்களை கொன்று இருக்கின்றார் அமைதி மார்க்கத்தின் இறைத்தூதர் முஹம்மது.

8) முஹம்மதுவை விமர்சிப்பவர் அவர் யாராக இருந்தாலும் சரி (போப்பாக இருந்தாலும் சரி), அவர் இஸ்லாமிய வன்முறையிலிருந்து தப்பமுடியாது. இதனால், உலகளாவிய வன்முறைகள் வெடிக்கும்.

மேற்கண்ட ஒவ்வொன்றிற்கும் அனேக எடுத்துக்காட்டுகளை நாம் செய்திகளில் படிக்கலாம், சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் புரிந்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட அனைத்தையும் அறிந்த பீஜே அவர்கள்,

• மற்றவர்களின் மார்க்க விஷயங்களுக்கு வரும்போது மட்டும், ஓவியர் டாவின்சியை வக்காளத்துக்கு அழைப்பது ஏன்?

• கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகத்தையும், திரைப்படத்தையும் ஆதரித்து அல்லது அதில் சொல்லப்பட்டவைகள் உண்மை தான் என்ற தோரணையில் பதில் சொல்வது ஏன்?

மேற்கண்ட இரண்டு காரியங்களை பீஜே அவர்கள் செய்துள்ளார்கள், அதற்கான விளைவை அவர் சந்தித்தே ஆகவேண்டும். அடுத்த தலைப்பில் நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். தற்கால உலக நிகழ்வுகளை பார்க்கும் போது, இப்படியாக சொல்லத் தோன்றுகிறது:

"சீக்கிரமாக புகழ்பெற்று, பணம் பெறவேண்டுமென்றால், இயேசுவை விமர்சித்து புத்தகம் எழுது, திரைப்படம் எடு".
"சீக்கிரமான புகழ்பெற்று, பிணமாகவேண்டுமென்றால், முஹம்மதுவை விமர்சித்து புத்தகம் எழுது, திரைப்படம் எடு".

3. பீஜே அவர்களின் பதில் ஆய்வு செய்து சொல்லப்பட்ட ஒன்றா? இஸ்லாம் இயேசுவின் திருமணம் பற்றி என்ன சொல்கிறது?

இப்போது பீஜே அவர்கள் எழுதிய வரிகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்வோம். இவரது அறியாமை எப்படி இஸ்லாமுக்கு தலைவலியாக மாறுகின்றது என்பதைக் காண்போம். இவைகளை படிக்கும் முஸ்லிம்கள் நடுநிலையோடு சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.

அ) பீஜே அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்? இந்த கேள்வியைக் கேட்ட சகோதரர் ஒரு முஸ்லிம் ஆவார்.

இவரின் கேள்வியிலிருந்து தெரியவரும் விவரங்கள்:

1) எல்லா தீர்க்கதரிசிகளும் கட்டாயம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று இவர் நம்புகிறார்.

2) முஹம்மதுவுக்கு 12 மனைவிகள் இருந்திருக்கிறார்கள் என்று இவர் அறிந்திருக்கிறார். (ஆனால், முஹம்மதுவிற்கு வைப்பாட்டிகள் இருந்ததை இவர் அறிவாரா? முஸ்லிம்கள் 4 மனைவிகளோடு கூட எத்தனை அடிமைகளை வேண்டுமானாலும் வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளலாம் என்று குர்-ஆன் சொல்வதை இவர் அறிவாரா?)

3) இயேசு மட்டும் பிரம்மச்சாரி என்று சொல்கிறார்களே, இது எப்படி சாத்தியம்? என்று சந்தேகம் இவருக்கு வருகிறது.

4) குர்-ஆனில் அல்லாஹ் "எல்ல நபிமார்களையும் திருமணமானவர்களாகவே நாம் அனுப்பினோம்" என்று படிக்கிறோமே, இயேசு மட்டும் திருமணமாகாதவர் என்று சொன்னால், இது குர்-ஆனுக்கு முரண்படுகின்றதே!

5) இயேசு திருமணமானவராக இருக்கவேண்டும், அல்லது குர்-ஆன் சொல்வது பொய்யாக இருக்கவேண்டும்? இதில் எது உண்மை எது பொய்?

மேற்கண்ட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, அந்த இஸ்லாமிய சகோதரர் பீஜே அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பீஜே என்ன பதில் சொன்னார்? முதலில் அவரது பதிலை படிப்போம், அதன் பிறகு நம் கேள்விகளை முன் வைப்போம்:

PJ அவர்களின் பதில்:

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது. மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்ஸிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,

ஆ) குர்-ஆன் 13:38 எல்லா நபிமார்களும் திருமணமானவர்கள் என்று சொல்கின்றதா?

இவ்வசனம் பற்றி ஜலலைன், இப்னு அப்பாஸ், வஹிதி மற்றும் இபின் கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதைக் காண்போம்.

இந்த வசனம் இயேசுவிற்கு திருமணமானது என்று சொல்லவில்லை. மேலும், எல்லா நபிகளும் திருமணமானவர்கள் தான், பிள்ளைகள் பெற்றவர்கள் தான் என்றும் இந்த வசனம் சொல்லவில்லை. இந்த வசனத்தின் பின்னணியை கவனித்தால், யூதர்களின் குற்றச்சாட்டிற்கு அல்லாஹ் பதில் அளிப்பதாக உள்ளது. முஹம்மது அனேக பெண்களை திருமணம் செய்துள்ளார், இது நபிமார்களுக்கு ஏற்புடையது இல்லை என்று யூதர்கள் குற்றப்படுத்தும் போது, "இவர் மட்டுமல்ல, இவருக்கு முன்பு அனுப்பப்பட்ட நபிமார்கள் திருமணமானவர்கள் தான், பிள்ளைகள் பெற்றவர்கள் தான், எல்லாரும் சாதாரண மனிதர்களாகத் தான் இருந்தார்கள், இதனால் அவர்களின் ஊழியம் தடைபடவில்லை" என்ற பொருளில் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியதாக, அனேக குர்-ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இதனை பீஜே அவர்கள் படித்ததில்லையா?

இங்கு நான்கு விரிவுரையாளர்களின் விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்: இவர்களில் யாரும் இந்த வசனத்தின் அடிப்படையில், "எல்லா நபிமார்கள் திருமணமானவர்கள், பிள்ளைகள் பெற்றவர்கள்" என்ற பொருளை எடுக்கலாம் என்று சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும்.

Tafsir al-Jalalayn:

And when they derided him for having many wives, the following was revealed: And indeed We sent messengers before you, and We assigned to them wives and seed, children — and you are like them; and it was not for any Messenger, from among them, that he should bring a sign, save by God's leave, because they are servants enthralled [by Him]. For every term, period, there is a Book, wherein is inscribed its delimitation. மூலம்

Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn ' Abbas:

(And verily We sent messengers (to mankind) before thee) just as We have sent you, (and We appointed for them wives) more than you have of wives, such as David and Solomon (and offspring) more than your offspring, such was the case with Abraham, Isaac and Jacob. This verse was revealed about the Jews because they said: Had Muhammad been a prophet, he would have been too preoccupied to get married, (and it was not (given) to any messenger that he should bring a portent) a sign (save by Allah's leave) save by Allah's command. (For everything there is a time prescribed) an appointed time. மூலம்

Asbab Al-Nuzul by Al-Wahidi :

(And verily We sent messengers (to mankind) before thee, and We appointed for them wives and offspring…) [13:38]. Said al-Kalbi: "The Jews insulted the Messenger of Allah, Allah bless him and give him peace, saying: 'This man has no aspiration except for women and marriage. If he was really a prophet, as he claims to be, the matter of prophethood would have preoccupied him from women', and so Allah, exalted is He, revealed this verse". மூலம்

Ibn Kathir:

Allah says, `Just as We have sent you O Muhammad, a Prophet and a human, We sent the Messengers before you from among mankind, that eat food, walk in the markets, and We gave them wives and offspring.' Allah said to the most honorable and Final Messenger, மூலம்

இ) இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்கள்:

இயேசுவிற்கு திருமணமானதா? என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதில் அளித்துள்ளார் ஒரு இஸ்லாமிய அறிஞர்.

Your Question-1. Did Jesus (pbuh) ever marry and have children? if he did marry who was he married to and where are the children? The Prophet Isa (a.s.) was only about 32-33 years of age when Allah Subhanah raised him to the heavens. He neither married nor did he have any children. மூலம்

ஈ) ஹதீஸ் திர்மிதி – இயேசு திருமணம் செய்வார், பிள்ளைகள் பெறுவார்

இயேசு கடைசிக் காலத்தில் வருவார் என்றும், அவர் இஸ்லாமுக்குச் சாதகமாக யுத்தம் செய்வார் என்றும், அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, பிள்ளைகள் பெறுவார் என்றும் பல இஸ்லாமிய அறிஞர்கள் திர்மிதி ஹதீஸை ஆதாரமாகக் காட்டி எழுதியுள்ளார்கள். கீழ்கண்ட நான்கு தொடுப்புகளில் இவ்விவரங்கள் தரப்பட்டுள்ளது.

His Marriage, Death and Deputies After his descension on earth, Hadhrat Isa (A.S.) will marry. He will have children, and he will remain on earth 19 years after marriage. He will pass away and Muslims will perform his Janaza Salaat and bury him net to Rasulullah (Sallallahu Alayhi Wasallam). (Tirmidhi) மூலம்

After his descent on earth, Hadhrat Isa (A.S.) will marry. He will have children, and he will remain on earth 19 years after marriage. He will pass away and Muslims will perform his Janaza Salaat (funeral prayers) and bury him next to Rasulullah (SAW). (Tirmidhi) மூலம்

Those who do believe Jesus will come again, see him in a subordinate role to that of the Prophet of Islam. Jesus will be under a Muslim Amir, leader, showing his complete adherence to Islam. Some Ahadith indicate that on his arrival Jesus will kill an impostor Messiah (i.e. the antichrist). He will live for forty years during which he will marry, have children, and perform Hajj (pilgrimage). After his death, he will be buried beside the grave of the Prophet Muhammad (Wali ad-Din, Miskat Al-Masabih, (tr. James Robson), Vol.II, p.1159; Sahih Muslim, Vol.1, p.92). மூலம்

…Jesus عليه السلام will perform Hajj (pilgrimage), marry, begets children, and die after living on Earth. His death will signal the beginning of the last days for humanity before the Day of Judgment… மூலம்

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

இஸ்லாமின் படி, இயேசுவின் முதல் வருகையில் அவருடைய ஊழியம் தோல்வி அடைந்தது, அவரை சிலுவையில் அறைவதற்கு முன்பாக அல்லாஹ் உயிரோடு இயேசுவை தன்னளவில் எடுத்துக்கொண்டார். கடைசி காலத்தில் இயேசு மறுபடியும் வருவார், பல காரியங்களை இஸ்லாமுக்காக செய்வார், மேலும் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெறுவார். இதன் படி பார்த்தால், இயேசுவின் முதல் வருகையில் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிகின்றது. ஒரு வேளை பீஜே அவர்கள் "இயேசுவிற்கு முதல் முறையும் திருமணமும் ஆனது, பிள்ளைகளும் பிறந்தார்கள்", இரண்டாவது முறையும் அதே போல திருமணமும் நடக்கும் பிள்ளைகளும் பிறப்பார்கள் என்று சொன்னால், அவருடைய கருத்தில் காணப்படும் பிழைகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

1. எதன் அடிப்படையில் மேற்கண்ட பதிலைச் சொல்வீர்கள்? ஆதாரம் ஏதாவது உண்டா?

2. இயேசுவின் முதல் வருகையில் அவருக்கு மனைவி மக்கள் இருந்ததாக குர்-ஆன் சொல்கின்றதா? ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?

3. குர்-ஆன் 13:38ம் படி, அல்லாஹ் அனுப்பியதாகச் சொல்கின்ற அனைத்து தீர்க்கதரிசிகளும் திருமணமானவர்கள் என்றோ, பிள்ளைகள் பெற்றவர்கள் என்றோ பொருள் கொள்ளமுடியாது.

4. முதல் வருகையில் இயேசுவிற்கு திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்தார்கள் என்று ஹதீஸ்களிலிருந்து தெளிவான ஆதாரங்களை பீஜே அவர்கள் காட்டமுடியுமா?

5. குர்-ஆனின் படி, இயேசுவை யாருக்கும் தெரியாமல் அல்லாஹ் தன்னிடம் எடுத்துக்கொண்டது உண்மையானால், இயேசுவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக அல்லாஹ் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்? ஏதாவது ஆதாரங்களை பீஜே அவர்கள் காட்டமுடியுமா? (பைபிளின் படி இயேசு தம் சீடனிடம் தம் தாயை பார்த்துக்கொள்ளும் படி பொறுப்புக்களைக் கொடுத்தார். மனைவி, பிள்ளைகள் இருந்திருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்திருப்பார், ஆனால், பைபிளின் படி இயேசுவிற்கு திருமணம் அவசியமில்லை. இதனை இரண்டாம் பாகத்தில் தெளிவாக விளக்குகிறேன்.)

6. இயேசுவை எடுத்துக்கொண்ட பிறகு, அல்லாஹ் சீடர்கள் பற்றி ஒரு சில விவரங்களைச் சொல்கிறார். ஆனால், உண்மையாக இயேசுவிற்கு திருமணம் ஆகியிருந்தால், நிச்சயமாக ஒரு சில விவரங்களையாவது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றி அல்லாஹ் சொல்லியிருக்கவேண்டாமா?

7. இயேசுவின் பிறப்பு மற்றும் அற்புதம் செய்யும் செயல்களில் இயேசுவின் மேன்மையை உயர்த்திச் சொல்லும் குர்-ஆன், அவரது குடும்பம் பற்றி ஒருசில வசனங்களையாவது சொல்லியிருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் ஒரு சில ஹதீஸ்களை இறக்கியிருக்கவேண்டாமா? (ஹதீஸ்களும் ஒருவகையான அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது).

8. இயேசுவின் இரண்டாம் வருகையின் போது, இயேசு ஒரு புதிய தீர்க்கதரிசியாக (நபியாக) வராமல், ஏற்கனவே வந்த இயேசுவாகவே வருகிறார் என்பது தான் இஸ்லாம் மூலமாக நாம் அறிவது. அதாவது, இரண்டாம் முறை வரும் போது, இயேசு குழந்தையாகப் பிறக்கப்போவதில்லை, வானத்திலிருந்து அல்லாஹ்விடமிருந்து அப்படியே வரப்போகிறார். முஹம்மது கடைசி நபி என்று இஸ்லாம் சொல்வதினால், இன்னொரு புதிய தீர்க்கதரிசியாக இயேசு வராமல், முஹம்மதுவிற்கு முந்தி வந்த இயேசுவாகவே திரும்பி வரப்போகிறார். எனவே இந்த முறை இயேசு வரும் போது திருமணம் முடிப்பார், பிள்ளைகளைப் பெறுவார் என்பது தான் இஸ்லாமிய நூல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடிய விவரங்களாக உள்ளது. இஸ்லாமின் படி இந்த பதிலைத் தான் பீஜே அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். ஆனால், தனக்கு வேண்டாத வேலையை பீஜே அவர்கள் செய்து இப்படி மாட்டிக்கொண்டார்.

மேற்கண்ட விவரங்களையெல்லாம் பார்க்கும் போது, இஸ்லாமின் படியே இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பது தெளிவாக புரிகின்றது. பீஜே அவர்களுக்கு இஸ்லாம் முழுவதுமாகத் தெரியுமா? (அல்லாஹ் எப்படி தன் வசனங்களை தள்ளுபடி செய்கிறாரோ அது போல பீஜே அவர்களும் நெற்று சொன்னதை இன்று தள்ளுபடி செய்வார், காரணம் இவரும் ஒரு சாதாரண மனிதர் பாருங்கள். இதை நான் சொல்லவில்லை, பீஜே அவர்களே சொல்லியுள்ளார்கள்.)

பீஜே அவர்கள் மேற்கண்ட விவரங்களுக்கு பதில்களைச் சொல்வாரா? கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், பைபிளுக்கு எதிராகவும் ஏதாவது சொல்லியாகவேண்டும் என்ற வெறியோடு சொல்லப்பட்டதாக பீஜே அவர்களின் பதில் காணப்படுகின்றது (ஒரு வேளை இஸ்லாமுக்கு எதிராக அது இருந்தாலும் சரி).

பாகம் 1ன் முடிவுரை:

இதுவரை இயேசுவின் திருமணம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன? பீஜே அவர்களின் பதில் எப்படி இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றது என்பதைக் கண்டோம். இக்கட்டுரையில் டாவின்சி ஓவியத்தைப் பற்றி பீஜே அவர்கள் முன்வைத்த விவரங்களுக்கு நான் மறுப்பை எழுதவில்லை.

இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், டாவின்சி ஓவியத்தைப் பற்றி பீஜே அவர்கள் சொன்னவற்றில் உள்ள பொய்கள் என்ன? இயேசுவின் கடைசி விருந்து ஓவியத்தில் உண்மையாகவே மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? அந்த ஓவியத்தில் உள்ள வெளிப்படையாகத் தெரியும் ஓட்டைகள் என்ன? மற்றும் ஓவியர்கள் போன்ற கலைஞர்களை இஸ்லாமுக்கு சாதகமாக அழைக்கும் பீஜே அவர்கள், அதே டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி என்ன சொல்லப்போகிறார்? இப்படிப்பட்ட ஓவியர்கள் 1400 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் பற்றி வரைந்தால், ஆசிரியர்கள் புத்தகங்களை எழுதினால், அதனை பீஜே அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? போன்ற விவரங்களை இரண்டாம் பாகத்தில் வாசிப்போம்.

கிறிஸ்தவர்களுக்கு:

பீஜே போன்ற இஸ்லாமியர்களிடம் சிறிது எச்சரிக்கையாக இருங்கள் என்று கிறிஸ்தவர்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடாமல், நீங்களே சுயமாக சிறிது ஆய்வு செய்து பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம்களுக்கு:

முஸ்லிம்களே, கிறிஸ்தவத்தையும், பைபிளையும் அதிகமாக தொடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். எந்த அளவு பைபிளை நீங்கள் விமர்சிக்கிறீர்களோ, அதை விட ஆழமாக இஸ்லாம் கிறிஸ்தவர்களால் ஆய்வு செய்யப்படும். அப்போது பைபிள் சொல்லும் விவரங்களுக்கு முன்பாக குர்-ஆன் தோற்றுப்போவதை நீங்கள் காண்பீர்கள். நான் மேலே முன்வைத்த விவரங்களை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள், சிந்தியுங்கள். நீங்கள் நடுநிலையோடு சிந்தித்தாலும் சரி, இஸ்லாமின் பக்கம் அதிகமாக சாய்ந்து சிந்தித்தாலும் சரி, ஒரு காலம் வரும் அப்போது நீங்கள் உண்மை இஸ்லாமை சுயமாக அறிந்துக் கொள்வீர்கள், சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியம் இஸ்லாமின் பிடியிலிருந்து உங்களை விடுதலையாக்கும்.

உங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் அறியாமை இதோடு முடியவில்லை, அடுத்த பாகத்திலும் அது தொடரும். சும்மா தூங்கிக்கொண்டு இருந்த டாவின்சியை வம்புக்கு பீஜே அவர்கள் இழுத்தப்படியினால், பாவம் அவரது ஓவியம் அடுத்த பாகத்தில் மிகவும் ஆழமாக விமர்சிக்கப்படப் போகின்றது.

திருச்சபையின் மணவாளனாம் இயேசுக் கிறிஸ்து இதன் மூலம் மகிமைப்படுவாராக. ஆமென்.

பீஜே அவர்களுக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

 

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

இயேசுவின் அரசும் முஹம்மதுவின் அரசும் (ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்றா?) பாகம் - 1

ஆசிரியர்: சைலஸ்

 
மஸீஹாவுடைய அரசும், இறைவனின் அரசும்

இயேசு மரணிப்பதற்கு முன்பாக நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் இயேசுவை கைது செய்தது இரண்டாவது நிகழ்வாகும். யூத தலைவர்களில் பலர் இயேசு கொல்லப்படவேண்டும் என்று விரும்பினார்கள். இதே போல பல யூதர்கள் இயேசுவை அதிகமாக நேசித்த்தார்கள் மற்றும் ஆதரித்தார்கள். இவர்களில் பேதுரு என்பவரும் ஒருவர், இவர் இயேசுவிற்காக சண்டையிட்டு அவருக்காக மரிக்கவும் தயாராக இருந்தார். ஆனால், இயேசு பேதுருவின் "சண்டையை நிறுத்து " என்று சொல்லிவிட்டார்.

மேற்கண்ட நிகழ்விற்கு சிறிது நேரம் கழித்து, இயேசு கீழ்கண்டவாறு கூறினார்:

யோவான் 18:36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
 
37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:36-37)
 
இயேசு இவ்வுலகத்தில் ஒரு அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை. இப்படி ஒரு அரசை அமைப்பது அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை, மட்டுமல்ல, மற்றவர்கள் அப்படிப்பட்ட அரசை இயேசுவைக் கொண்டு அமைக்க விரும்பினாலும் அதனை அவர் எதிர்த்தார். இதற்கு பதிலாக, இயேசு முன்பு போதித்தது போல, அவர் தேவ குமாரனாகிய மேசியா, அரசனாக திரும்பி வருவார், அப்போது அவர் மக்களை நீதியாக நியாயந்தீர்த்து, தீயவர்களை தன் இராஜ்ஜியத்திலிருந்து நீக்குவார். (மத்தேயு 13:40-43, 25:31-46, 26:63, 64, இவ்வசனங்களோடு தானியேல் 7:13, 14, 27ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்). மேசியாவின் இராஜ்ஜியம் பூமியில் அமைப்பதற்காக அதுவரைக்கும் காத்திருக்கவேண்டும். எதிர் காலத்தில் ஒரு நாள் அது அமைக்கப்படும், ஆனால் இன்று இல்லை, இயேசு பூமியில் வாழும்போது அது அமைக்கப்படாது.
 
 
இயேசு இன்னொரு அரசு பற்றியும் போதித்தார்:
 
அது தான் "இறைவனின் அரசு (தேவனுடைய இராஜ்ஜியம்)". இயேசு தம்முடைய எதிர கால அரசு (மேசியாவின் அரசு)பற்றி போதித்தவற்றையும் , " தேவனுடைய இராஜ்ஜியம்" பற்றி அவர் போதித்தவற்றையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் "தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு" அதிக முக்கியத்துவம் கொடுத்து போதனை செய்து இருப்பதை நாம் காணமுடியும். இயேசுவின் போதனைகள், உவமைகள் மற்றும் பிரசங்கங்களை கூர்ந்து கவனித்தால், அதில் "தேவனுடைய இராஜ்ஜியம்" பற்றிய விவரங்கள் அதிகம் காணப்படும். இயேசு பூமியில் வாழ்ந்த அந்த காலக்கட்டத்திலும் "தேவனுடைய இராஜ்ஜியம்" இருந்தது, இன்றும், இப்போதும் அது நம்மிடம் இருக்கிறது, மட்டுமல்ல, இயேசு தேவனுடைய வார்த்தையாய், இராஜாதி இராஜனாய், கர்த்தாதி கர்த்தராய் மறுபடியும் வரும் போது, அந்த தேவனுடைய இராஜ்ஜியம் மூழுமையாக ஸ்தாபிக்கப்படும். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன் சீடர்களுக்கு போதிக்கும் போதும், இந்த தலைப்பு ஒரு முக்கியமான தலைப்பாக இருந்தது (பார்க்க அப்போஸ்தலர் நடபடிகள் 1:3).
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இயேசு உயிர்தெழுந்த பிறகு கூட, அவருடைய சீடர்கள் ஒரு உலகப்பிரகாரமான அரசு அமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள் (பார்க்க அப் 1:7). தங்களை ஆட்சி புரிந்துகொண்டு இருந்த ரோமர்களின் அரசு அகற்றப்பட்டு புதிய அரசு இயேசுவால் அமைக்கப்படவேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். தேவனுடைய ஆட்சி உலகில் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். ரோமர்களின் ஆட்சியினால், யூத மக்களும் அவர்களின் நாடும் தாங்கொணா துன்பத்துக்கு ஆளாகியிருந்தது. ஆனால், அந்த மேசியாவின் இராஜ்ஜியம் இப்போது இல்லை என்று இயேசு சீடர்களிடம் சொல்லிவிட்டார், மேலும் அந்த நாள் பிதாவின் வசத்தில் இருக்கிறது என்றுச் சொன்னார். பிறகு இயேசு சீடர்களிடம் "அவர்கள் நிறைவேற்றவேண்டிய ஊழியம்" பற்றி போதித்தார். அதன் பிறகு, இயேசுவின் சீடர்கள், உலகத்தில் ஸ்தாபிக்கப்படவேண்டிய அரசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்கள் ஊழியமும் தரிசனமும் நிறைவேற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டார்கள்.
 
இயேசு சீடர்களுக்கு அதிகமாக தேவனுடைய இராஜ்ஜியம் பற்றி பொதித்தார், ஏனென்றால், அது அவர்களின் வாழ்க்கையில் ஸ்தாபிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு பிரதிபலிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். இயேசு மறுபடியும் திரும்பி வரும்வரை, அவர் போதித்த தேவனுடைய இராஜ்ஜியம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆவிக்குரிய (ஆன்மீக) இராஜ்ஜியமாகவும், ஆன்மிக வல்லமையாகவும் இருக்கவேண்டும். இந்த தேவனுடைய இராஜ்ஜியம் தான் "நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமாகும்" (ரோமர் 14:17), இப்படிப்பட்ட இராஜ்ஜியத்தின் அரசராக தேவன் இருப்பார். தேவன் பரிசுத்த ஆவியானவரின் மூலம் ஒரு அரசராக கிறிஸ்தவர்களின் உள்ளங்களிலும், வாழ்விலும் ஆட்சி செய்வார்.
தேவன் மக்களின் உள்ளங்களிலும் சிந்தனைகளிலும் ஆட்சி செய்யும் போது, மக்கள் மனமாற்றம் அடைவார்கள். இயேசுவின் சிறந்த இரண்டு கட்டளைகள் “நீ தேவனை நேசி அதே போல மற்ற மனிதர்களையும் நேசி” என்பதாகும். கிறிஸ்தவர்களாக மாறும் சகோதரர்களும், சகோதரிகளும் இந்த கட்டளையை மனதார பின்பற்றவேண்டும். கிறிஸ்தவர்கள் பாவத்தை விட்டுவிடவேண்டும் மற்றும் தேவனையும் மனிதனையும் நேசிக்கவேண்டும். கிறிஸ்துவிற்கு கீழ்படிவதினால், இப்படிப்பட்டவர்களின் உள்ளங்கள் மாற்றமடையும். தேவனிடம் இப்படிப்பட்ட அர்பணிப்பைச் செய்யும் கிறிஸ்தவர்கள், இயேசுவிற்காக வாழ்வது மட்டுமல்ல, அவருக்காக பாடுபடவும், மரிக்கவும் தயங்க மாட்டார்கள்.
 
கிறிஸ்துவிற்கு பிறகு அடுத்த சில நூற்றாண்டுகள் கிறிஸ்தவர்கள் பெருவாரியாக துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால், கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்ஜியம் முழுவதும் பரவியது. அந்த ஆரம்ப கால கிறிஸ்தவ சபை மக்களின் உள்ளங்களும் சிந்தனைகளும் தேவனுடைய இராஜ்ஜியத்தினால் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த அன்பும் விசுவாசமும் ரோம சாம்ராஜ்ஜியத்தில் உள்ளவர்களை வென்றுவிட்டது. அக்கால கிறிஸ்தவர்கள் முழுமையான பரிசுத்தர்களாக 100 சதவிகிதம் வாழ்ந்தார்கள் என்று நாங்கள் சொல்லவரவில்லை, ஆனால், அவர்களின் மாற்றமடைந்த உள்ளங்ளும் சிந்தனைகளும், வாழ்க்கை நெறியும் தங்களை தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்களாக பிரதிபலித்தது. கையில் வாளை ஏந்தாமல் கிறிஸ்தவத்துக்கு வெற்றி கிட்டியது. இந்த வெற்றிக்காக அவர்கள் மற்றவர்களை பயமுறுத்தவில்லை உலக பொருட்களின் ஆசைகளைக் காட்டி வசியம் செய்யவில்லை, மற்றவர்களின் இரத்தம் சிந்தவில்லை. இயேசு தான் மஸீஹா என்றும் தேவகுமாரன் என்றும் மக்கள் நம்புவதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை. கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு ஜிஸ்யா போன்ற கட்டாய வரிச் சுமையை சுமத்தவில்லை, இரண்டாம் தர குடிமக்களாக தரக்குறைவாக மற்றவர்களை பார்க்கவில்லை. பாடுகளின் மத்தியிலும், கொடுமைகளின் மத்தியிலும் கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவியது.
 
தன்னை பின்பற்றுபவர்களிடம் உலகில் ஒரு அரசாங்கத்தை அமைக்கும்படி ஏன் இயேசு போதிக்கவில்லை? இயேசு சொல்லியிருந்தால், அவரின் சீடர்கள் வாள்களை பிடித்து போர் புரியவும் தயாராக இருந்திருப்பார்கள். மேசியாவிற்காக ஒரு அரசை அவர்கள் அமைத்து இருந்திருப்பார்கள். உண்மையான கிறிஸ்தவ அரசாங்கம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள். அதில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தேவன் மீது அன்பு கூறுவதிலும், தன்னைப்போல மற்ற மனிதர்கள் மீதும் அன்பு செலுத்துவதிலும் சிறந்து விளங்கியிருந்திருப்பான்.
 
இப்படி ஒரு அரசு அமைத்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட கலாச்சரம், சமூகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். இப்படி அமைக்கப்படும் அரசாங்கங்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் மீது தங்கள் மத நம்பிக்கையை கட்டாயப்படுத்தி இருப்பார்கள், இது நல்லதல்ல.
 
குறைந்தபட்சம் ஒரு மதகுரு அரசராக அமர்ந்துக் கொண்டு நாட்டை ஆட்சி செய்யும்படியான (இறைமையாட்சி) அரசையாவது அமைத்துக் கொள்ளும்படி ஏன் இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிடவில்லை?
 
இயேசு அரசு அமைக்கும் படி கட்டளை கொடுத்திருந்தால் ஏதாவது தவறு நடந்திருக்குமா?
பெத்லகேமில் உள்ள சந்நியாசி பாதிரிமார்கள் சண்டையிட்டுக் கொண்டது போன்ற ஒரு கேவலமான சண்டை உருவாகியிருக்கும்? (இந்த தொடுப்பைப் பாருங்கள்) இந்த செயல் எவ்வளவு ஒரு இழிவான செயல் என்று பாருங்கள்? கிறிஸ்தவத்தின் மீது படிந்த கறையை பார்த்தீர்களா? நாத்தீகர்களும், முஸ்லிம்களும் கிறிஸ்தவத்தை விமர்சிக்க இந்த சண்டை வழிவகுத்துவிட்டது. கிறிஸ்தவம் பிறந்த இடம் எருசலேம் ஆகும், ஆனால் இந்த மனிதர்கள் இயேசு வாழ்ந்தபடி, அவரது சீடர்கள் வாழ்ந்த படி வாழ்ந்து காட்டவில்லை. இவர்கள் கிறிஸ்தவத்தை பிரதிபலிக்கும் மனிதர்களாக காணப்படவில்லை, இவர்களின் கனிகள் உலகத்துக்கு உரியவைகளாக உள்ளன. எனவே, தாம் வந்து மேசியாவின் அரசை அமைக்கும் வரைக்கும், உலக பிரகாரமான அரசை அமைக்கும் படி இயேசு சீடர்களுக்கு இடம் தரவில்லை.
 
முஹம்மதுவின் அரசும், இஸ்லாமிய கலிஃபாக்களும்
 
முஹம்மது தன் ஊழியத்தை 23 ஆண்டுகள் செய்தார், கி.பி. 610 லிருந்து அவர் விஷத்தினால் சாகும்வரை அவரது ஊழியம் நீடித்தது (கி.பி. 632). இந்த காலகட்டத்தில் சாத்தானின் வசனங்களை அவர் வெளிப்படுத்திய விஷயத்தை தவிர அவர் இஸ்லாமை உண்மையாக பின் பற்றினார். அந்த 23 ஆண்டுகளை முஹம்மது இரண்டு பட்டணங்களில் செலவிட்டார், 13 ஆண்டுகள் மக்காவிலும், மீதமுள்ள 10 ஆண்டுகள் மதினாவிலும் வாழ்ந்தார்.
மக்காவில் முஹம்மது இஸ்லாமை பிரச்சாரம் செய்த போது, இஸ்லாம் ஒரு ஆன்மீக மதமாக இருந்தது. பல வகைகளில் அது இயேசுவின் ஊழியத்தைப் போல காணப்பட்டது. இந்த காலகட்டத்தில் முஹம்மது ஒரு அரசாங்கத்தை அமைக்க தேடவில்லை.
(அரபி கிறிஸ்தவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை பைபிளின் தேவனுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் அறிவேன். இந்த கட்டுரையில் நான் அல்லாஹ் என்ற வார்த்தையை இஸ்லாமியர்களின் தெய்வத்தை குறிக்க மட்டும் பயன்படுத்துகிறேன் என்பதை வாசகர்கள் அறிந்துக் கொள்ளவேண்டும்).
 
மக்காவின் காலகட்டத்தில் அல்லாஹ் முஹம்மதுவிற்கு ”மக்களை முஸ்லிம்களாக்க கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று சொன்னார்: குர்-ஆன் 10:99.
 
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்-ஆன் 10:99 முஹம்மது ஜான் தமிழாக்கம்).
 
மக்காவில் முஹம்மதுவிற்கு சிறிய அளவில் வெற்றி கிடைத்தது. இவரை பின் பற்றியவர்கள் பலவீனமானவர்களும், அதிகமாக துன்புறுத்தப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். மக்காவில் பெரும்பான்மையாக இருந்த குறைஷி மக்களிடம் முஹம்மதுவும் அவரது சகாக்களும் வன்முறையை பயன்படுத்தி இருந்திருந்தால், மரணம் அவர்களை சந்தித்து இருந்திருக்கும், இஸ்லாம் முழுமையாக அன்றே அழிந்துவிட்டிருக்கும்.
 
மக்காவை விட்டு மதினாவிற்கு முஹம்மது இடம்பெயர்ந்து போவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சில மதினா மக்கள் முஸ்லிம்களாக மாறினர். இந்த மக்களும் மதினாவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து, இன்னும் சிலரை இஸ்லாமியர்களாக மாற்றியிருந்தனர். ஒரு குறிப்பிட்ட அளவு மக்களின் சக்தி முஹம்மதுவிற்கு மதினாவில் கிடைத்தது. இவர்களில் அனேகர் போர் புரியும் அளவிற்கு வலிமை மிக்கவர்களாக இருந்தனர். அப்பொது தான் இரண்டாவது அகபா உடன்படிக்கை கையெழுத்தானது, இந்த மக்கள் முஹம்மதுவிற்காக சண்டையிட தங்களை அர்பணித்துக் கொண்டார்கள்.
 
முஹம்மதுவின் இஸ்லாமிய பிரச்சார காலகட்டத்தில், முஹம்மது சந்தித்த சூழ்நிலைகள் மாறியது, அதற்கு ஏற்றாற்போல அல்லாஹ்வின் வெளிப்பாடுகளும் மாறினது, இதனால் கடைசியாக இஸ்லாமும் மாறினது. முஹம்மதுவுடன் கைகோர்த்த இந்த யுத்த வீரர்களினால், மிகப்பெரிய மாற்றம் இஸ்லாமில் ஏற்பட்டது. மக்காவில் முஹம்மதுவிற்கு இருந்த சீடர்கள் போல அல்லாமல், மதினாவின் சீடர்கள் (சகாக்கள்) பலவீனமானவர்களாக இருக்கவில்லை, அவர்கள் துன்புறுத்தப்படவில்லை. அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தனர், எப்படி யுத்தம் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள். இந்த நம்பிக்கையில் தான் முஹம்மது மக்காவை விட்டு மதினாவிற்கு ஓடிப்போனார். மதினா வந்த பிறகு அல்லாஹ் ஒரு புதிய கட்டளையை முஹம்மதுவிற்கு கொடுத்தார்: “சண்டையிடுங்கள் என்ற கட்டளைத் தான் அது.”
 
இதைப் பற்றி இப்னு இஷாக் கீழ்கண்டவாறு கூறுகின்றார்:
 
”இரண்டாவது அகபா உடன்படிக்கை கையெழுத்துக்கு முன்பு வரை சண்டையிடவும் அல்லது இரத்தம் சிந்தவும் முஹம்மதுவிற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை. முஹம்மது வெறும் மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கவேண்டும், அதனால் அவமானங்கள், துன்பங்கள் ஏற்பட்டால் அதனை சகிக்கவேண்டும் மற்றும் துன்புறுத்தியவர்களை மன்னிக்கவேண்டும் என்பது தான் அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டு இருந்தது” . . .
 
. . . அதன் பிறகு அல்லாஹ் இறைத்தூதருக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ள சண்டையிட அனுமதி அளித்தார். தனக்கு தீமை செய்தவர்களோடு சண்டையிடவும் அல்லாஹ் அனுமதித்தார் [1].
 
சண்டையிடு என்று கட்டளைப் பெற்ற விவரங்களை இப்னு இஷாக்கின் புத்தகத்தின் 212 மற்றும் 213ம் பக்கத்தில் காணலாம். பல இஸ்லாமிய அறிஞர்கள் ”சண்டையிட முதன் முதலாக இறங்கிய வசனம் எது?” என்ற கருத்தில் ஒருமித்து இல்லை. பெரும்பான்மையான வசனங்கள் ஒரே மாதிரியாக இருப்பதினால் எந்த வசனம் சண்டையிடச் சொன்ன வசனம் என்ற குழப்பத்தில் பல இஸ்லாமிய அறிஞர்கள் இருக்கிறார்கள். இங்கு சண்டைப் பற்றிய பொதுவான வசனங்களை தருகிறோம்: குர்-ஆன் 22:39-41, மற்றும் 2:193. இவைகளிலிருந்து இரண்டு வசனங்களை மட்டும் இங்கு தருகிறோம்.
 
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்-ஆன் 22:39 – முஹம்மது ஜான் தமிழாக்கம்)
 
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்-ஆன் 2:193 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)
 
இரண்டு காரணங்களுக்காக முஹம்மது சண்டையிடலாம் என்று அல்லாஹ் கட்டளையிட்டார், அதாவது தற்காப்பிற்காகவும் சண்டையிடலாம், இவராகவே வலியச் சென்றும் சண்டையிடலாம். பல தெய்வ வழிப்பாடுகளை அழிக்கவும், தன்னை எதிர்க்கிறவர்களை அழிக்கவும் முஹம்மது வலியச் சென்று யுத்தம் செய்ய கட்டளைப்பெற்றார். குர்-ஆனில் ஆரம்பத்தில் இறக்கப்பட்ட அன்பான அஹிம்சையை போதிக்கும் வசனங்கள், இப்போது இரத்து செய்யப்பட்டு விட்டது.
 
சண்டையிடுதல் பற்றி அல்லாஹ்வின் கட்டளையை முஹம்மது கீழ்கண்டவாறு சுருக்கிச் சொல்கிறார்:
 
33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. யார் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்.அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :1 [2]
 
உங்கள் கவனத்திற்கு:
 
இன்று நாம் உலகில் காண்கின்ற இஸ்லாமிய வன்முறைகளை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், உங்கள் ஆய்வு இந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும். முஹம்மதுவின் மேற்கண்ட வார்த்தைகள் தான் இஸ்லாமில் காணப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் அஸ்திபாரமாக உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் அரசை (இராஜ்ஜியத்தை) இந்த பூமியில் ஸ்தாபிக்க முஹம்மது விரும்பினார். யார் யாரெல்லாம் அல்லாஹ்வின் இறைத்தூதராக முஹம்மது இருக்கிறார் என்று அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் சில விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். இது கட்டாயம் பின்பற்றப்படவேண்டிய விஷயமாகும், இது எனக்கு வேண்டாமென்று முஸ்லிம்கள் ஒதுக்கிவிடமுடியாது.
 
இஸ்லாமியரல்லாத மக்கள் இரண்டு காரியங்களைத் தான் செய்யவேண்டும்:
 
1) இஸ்லாமுக்கு தங்களை அர்பணிக்கவேண்டும் (முஸ்லிம்களாக மாறவேண்டும்) அல்லது
2) இஸ்லாமியர்களோடு சண்டையிடவேண்டும்.
 
முஹம்மதுவும் அவரை பின் பற்றுகின்ற முஸ்லிம்களும் ”இஸ்லாமியரல்லாதவர்களோடு போர் புரிய” கட்டளைப் பெற்று இருக்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமுக்கு மாறவேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சிக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவேண்டும். வேதம் கொடுக்கப்பட்டவர்களாகிய யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியில் ஜிஸ்யா என்ற வரிகளைச் செலுத்தி, தரம் குறைந்த குடிமக்களாக வாழவேண்டும் (குர-அன் 9:29).
அல்லாஹ்வின் அரசை பூமியில் முஹம்மது ஸ்தாபித்தார்.
 
அல்லாஹ்விடமிருந்து பெற்ற புதிய கட்டளையை முஹம்மது தாமதிக்காமல் உடனே செயல்படுத்தினார். முஹம்மது அல்லாஹ்விற்கு கீழ்படிந்தார், இஸ்லாமிரல்லாதவர்கள் தங்கள் முழங்கால்களை மடங்கி அவருக்கு முன்பாக சமர்பிக்கும் வரைக்கும் முஹம்மது அவர்களோடு சண்டையிட்டார். அல்லாஹ்வின் அரசை (இராஜ்ஜியத்தை) முஹம்மது பூமியில் ஸ்தாபித்தார். இதனை அவர் எப்படி செய்தார்?
மதினாவிற்கு இடம் பெயர்ந்தவுடன் முஹம்மது தன் இராணுவத்தை வழிப்பறி கொள்ளைகள் அடிப்பதற்காக அனுப்பினார். இஸ்லாமிரல்லாத கிராமங்கள் மீதும், வியாபார விஷயமாக சென்றுக்கொண்டு இருக்கும் வியாபாரிகள் மீதும் அவர்கள் பாய்ந்து கொள்ளையடித்தார்கள். இப்படிப்பட்ட செயல்களினால் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களை கொலை செய்யவேண்டி வந்தது. முஹம்மதுவின் இப்படிப்பட்ட திருட்டுகளும், கொலைகளும் யுத்தங்களுக்கு வழிவகுத்தது.
 
இதைப் பற்றி இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்:
இந்த நிகழ்வு இறைத்தூதருக்கும் குறைஷி மக்களுக்கும் இடையே யூத்தம் செய்யவேண்டிய சூழலை உருவாக்கியது. இவ்விரு குழுவினரும் ஒருவரிடம் ஒருவர் சண்டையிடவும், கொல்லவும் இதுவே ஆரம்பமாக இருந்தது [3]

சரித்திர ஆசிரியர் தபரியின் பதிவின் படி, போர் தொடங்கப்பட காரணமாக இருந்தது குறைஷிகள் அல்ல, முஹம்மது ஆவார். அடுத்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் வன்முறையின் உயரமும் ஆழமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அல்லாஹ்விற்கு கீழ்படிவதிலும், இஸ்லாமை பரவலாக வியாபிக்கச் செய்வதிலும் முஹம்மது வன்முறையையும், பயமுறுத்தலையும் பிரதானமாக பயன்படுத்தினார். அவைகள் பற்றிய ஒரு சுருக்கத்தை கீழே காணலாம்.
1) முஸ்லிமல்லாத கிராமங்கள் மற்றும் வியாபாரிகள் மீது வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுதல்
2) அரேபியா சுற்றுவட்டாரங்களில் கொலை செய்தல்
3) மதினா மற்றும் அதைச் சுற்றியுள்ள யூத மார்க்கத்தார்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துதல், அவர்களை கொடுமைப்படுத்துதல்
4) இராணுவத்தை அனுப்பி நாடுகளை பிடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் மேலும் முஸ்லிமல்லாத அரபு இனத்தை கூண்டோடு அழித்தல்.
5) பல நாடுகளில் இஸ்லாமை ஸ்தாபிக்க இராணுவத்தை அனுப்புதல்

முஹம்மது புரிந்த அனைத்து போர்களிலும் அவர் வெற்றி பெறவில்லை, ஆனால் பெரும்பான்மையான போர்களில் வெற்றிப்பெற்றார். மக்கள் முஹம்மதுவைக் கண்டும், முஸ்லிம்களைக் கண்டும் பயந்தார்கள். நாடுகளுக்கு அனுப்பப்பட்ட முஹம்மதுவின் இராணுவ பிரதிநிதிகள் பிரகடணப்படுத்திய விஷயம் இது தான்: "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்". மக்களுக்கு தெளிவாக புரிந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், நிச்சயமாக அவர்கள் மீது போர் தொடுக்கப்படும், அவர்களின் உடமைகள் கொள்ளையிடப்படும், மக்கள் கொடுமைப்படுத்தப்படுவார்கள், அடிமைகளாக்கப்படுவார்கள், கற்பழிக்கப்படுவார்கள் மற்றும் கொலை செய்யப்படுவார்கள். இதனால், அரேபியா பகுதியில் ஒரு இஸ்லாமிய மந்திரம் எங்கும் ஒளித்துக்கொண்டு இருந்தது, அது "எங்களை உங்களால் மேற்கொள்ள முடியாவிட்டால், எங்களோடு சேர்ந்துவிடுங்கள், முஸ்லிம்களாகிவிடுங்கள்" என்பதாகும். இதனால், முஸ்லிம்களை மேற்கொள்ளமுடியாதவர்கள் முஸ்லிம்களானார்கள். அந்த மக்கள் முஸ்லிம்களால் கொள்ளையிடப்பட விரும்பவில்லை, அவர்களின் மனைவிகள் திருடப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு, தங்கள் கண்களுக்கு முன்பாக கற்பழிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் பிள்ளைகள் அடிமைகளாக விற்கப்பட விரும்பவில்லை, அவர்களை மரிப்பதற்கு ஒப்புக்கொடுக்க அம்மக்கள் விரும்பவில்லை, எனவே முஸ்லிம்களாக மாறினர், இஸ்லாமை ஏற்றனர். சூழ்நிலை இப்படி இருக்கும் போது யார் தான் இஸ்லாமை ஏற்கமாட்டான்? இந்த காரியங்கள் அனைத்தும் முஹம்மதுவின் கட்டளையின்படியும், அவரது மேற்பார்வையிலும் நிறைவேற்றப்பட்டது.
 
முஹம்மது புரிந்த அனைத்து வன்முறைகளைப் பற்றியும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இஸ்லாமும் தீவிரவாதமும் (கட்டுரைகள்)
 
இவைகளில் முக்கியமான மூன்று கட்டுரைகள்:
 
மக்களின் இரத்தம் சிந்துவதிலும், கொடுமைப்படுத்துவதிலும் முஹம்மது முன்னேறிக்கொண்டே சென்றார். அல்லாஹ்வின் ஜிஹாதிய கட்டளைகளை மிகவும் ஆர்வமாக நிறைவேற்ற ஆரம்பித்தார். அவருடைய இஸ்லாமை தன்னைச் சுற்றியுள்ள இடங்களில் ஸ்தாபிக்க தொடங்கினார், அல்லாஹ்வின் அரசு அனேக இடங்களில் நிறுவப்பட்டது. முஹம்மது உயிரோடு இருந்த நாட்களில் ஒருவரும் அவரை எதிர்க்க தைரியம் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் ஆட்சியை முஹம்மது செய்தார், தொடர்ந்து அல்லாஹ்விற்கு கீழ்படிந்தார், இஸ்லாமிய ஆட்சி அமையும் வரை மனிதர்களோடு சண்டையிட்டார். அவரும் அவருடைய சகாக்களும் ஜிஹாத் என்ற புனிதப்போரில் ஈடுபட்டனர், இதனை அவர்கள் அல்லாஹ்வின் அரசு அமைப்பதற்காகச் செய்தார்கள். (ஜிஹாத் என்றால் போராட்டம் என்று பொருள் கூறுவார்கள், ஆனால், இஸ்லாமிய இறையியலின் படி பார்த்தால், அது புனிதப்போர் என்பதைக் குறிக்கும், மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரையில் நான்காவது தலைப்பை படிக்கவும்: குர்-ஆனின் பட்டய வசனம் 9:5 மற்றும் ஜிஹாத்).
 
மக்காவை ஆக்கிரமித்து ஒன்றரை வருடத்திற்கு பிறகு முஹம்மது மரித்துவிட்டார். அவர் ஒரு வெற்றிப் பெற்ற மனிதராக இருந்தார். அவரிடம் பணமிருந்தது, அதிகாரமிருந்தது, புகழ்ச்சி இருந்தது, முஸ்லிம்கள் அவரை மதித்து வந்தார்கள், அனேக அழகான பெண்களோடு உடலுறவுக் கொண்டார், அதாவது அவருக்கு மனைவிகளும் வைப்பாட்டிகளும் இருந்தார்கள். அவர் சந்தித்த கடுமையான சவால்களையெல்லாம் அவர் தீர்த்துக்கொண்டார், அதாவது தன் எதிரிகளை அழித்துவிட்டார். முஹம்மது அதிகபடியான அதிகாரம் பெற்று உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் மரித்தார். தன்னை நபி என்று ஏற்காத மற்றும் தன்னை எதிர்த்த மக்களின் சடலங்களின் மீது அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார்.
 
ஆனால், முஹம்மது மரித்த பிறகு என்ன நடந்தது? இப்போது நாம் அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தின் கனிகளை (செயல்பாடுகளை) காண்போம். அல்லாஹ்வின் அரசின் அதிகாரம் என்ன? அதனால் விளைந்த விளைவுகள் என்ன?
 
அல்லாஹ்வின் ஆட்சியின் தொடர்ச்சி: கலிஃபாக்களின் நிலை பற்றிய ஆய்வு:
 
முஹம்மது மரிக்கும் போது அவருக்கென்று நெருக்கமானவர்கள் அனேகர் இருந்தனர். அவர்கள் அவரை நன்கு அறிந்து வைத்திருந்தனர், அவரை நேசித்தனர் அவருக்கு எப்போதும் கீழ்படிந்து இருந்தனர். முஹம்மதுவை அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினபடியால், அவருக்காக சண்டையிடமும், மற்றவர்களை கொல்லவும், தங்கள் உயிரை கொடுக்கவும் தயங்காதவர்களாக இருந்தனர். அவர்கள் குர்-ஆனை மனனம் செய்து இருந்தனர்.
 
முஹம்மதுவின் போதனைகளையும், செயல்களையும் (ஹதீஸ்கள்) மற்றவர்களுக்கு சொல்கின்றவர்களாக இருந்தனர். மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை முறையை அப்படியே கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். முஹம்மதுவைப் போல நடையிலும் உடையிலும் இன்னும் இதர விஷயங்களிலும் அவரை பின் பற்றுகின்றவர்களாக இருந்தனர். முஹம்மது பற்றிய எந்த ஒரு சிறிய விஷயமும் அவர்களிடம் பற்றாக்குறையாக இருந்ததில்லை. எல்லா முஸ்லிம்களும், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும் என்ற முஹம்மதுவின் போதனையை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற முஹம்மதுவின் போதனையை அவர்கள் அறிந்திருந்தனர். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தலைவர்களாக இருந்தவர்கள், இஸ்லாமை அறியாதவர்கள் அல்ல, இஸ்லாம் பற்றி அனைத்தையும் அறிந்தவர்கள். முஹம்மதுவின் மனதுக்கு அருகாமையில் இருந்தவர்கள், இவர்களைப் பற்றி முஹம்மது நன்கு அறிந்திருந்தார்.

 
அபூ பக்கர்:
 
முஹம்மது மரித்தவுடனே, அடுத்த இஸ்லாமிய ஆட்சித் தலைவர் யார் என்ற சண்டை இவர்களுக்குள் தொடங்கியது. மக்காவிலிருந்து முஹம்மதுவோடு வந்திருந்த முஸ்லிம்கள் (முஜாஹிரூன்), தங்கள் வம்சத்திலிருந்து ஒருவரை தலைவராக நியமிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், மதினாவிலிருந்து முஸ்லிம்களானவர்கள் (அன்சார்கள் – உதவியாளர்கள்) தங்களுக்குள் ஒருவர் தலைவராக வரவேண்டும் என்று விருப்பம் கொண்டனர். சையத் பின் உபைதா என்பவர் தலைவராக வர இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்படி இவர்கள் மத்தியிலே ஒரு கேவலமான சண்டையும், வாக்கு வாதங்களும் உருவாகின. இவர்கள் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டார்கள், கொலை மிரட்டல்கள் விட்டார்கள். சிறிது கைகலப்பும் உண்டானது, வாள்கள் உறைகளிலிருந்து எடுக்கப்பட்டன, ஆனால், இரத்தம் சிந்தும் அளவிற்கு வாள்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் உமர் எழுந்து நின்று, அபூ பக்கர் அவர்கள் தான் தலைவர் என்று அறிக்கையிட்டார், தன்னுடைய ஒத்துழைப்பு இவருக்குத் தான் என்றுச் சொல்லி, மற்றவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ இவருக்கு ஆதரவு தரவேண்டும் என்றுச் சொன்னார். கடைசியாக, அன்சார் முஸ்லிம்கள், அபூ பக்கர் தலைவராக இருப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.
 
முஸ்லிம்களுக்கு இது ஒரு துரதிஷ்டமான எதிர்பாராத ஆரம்பம், உண்மை தானே! முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சகோதரர்கள் போல கருதி வாழவேண்டும் என்று முஹம்மது அனேக முறை போதித்தார், கட்டளையிட்டார். ஆனால், அவர்கள் மத்தியிலே சகோதர அன்பு இல்லாமல் போனது. முஸ்லிம்கள் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாத விஷயமாகும் இது. இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய ஆட்சியில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல தீய காரியங்களை எடுத்துக் காட்டும் ஒரு அடையாள குறியாகும்.
 
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, அனேக பழங்குடி பிரிவினர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறினர். முஹம்மது உயிரோடு இருந்த போது, இவர்கள் மீது போர் புரிந்தும், கட்டாயத்தினாலும் இவர்களை முஸ்லிம்களாக மாற்றியிருந்தார் (விருப்பமிருந்தாலும், விருப்பமில்லாவிட்டாலும் முஸ்லிம்களாக மாறியவர்கள்). முஹம்மது மரித்த பிறகு, இவர்கள் முஸ்லிம்களோடு யுத்தம் செய்யவில்லை. இவர்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ விரும்பினார்கள், கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக மாற்றி கீழ்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை. ஆனால், இஸ்லாமிய ஆட்சியின் கீழ், இந்த மக்கள் "இஸ்லாமை விட்டு வெளியேறியர்கள்" என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள், முஹம்மதுவின் கட்டளையின் படி இப்படிப்பட்டவர்கள் கொல்லப்படவேண்டும். இதன் விளைவாக, அபூ பக்கர் ஆட்சி தலைவராக இருந்தபடியினால், இஸ்லாமை விட்டுவேளியேறிய இவர்கள் தாக்கப்பட்டார்கள், மறுபடியும் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். அபூ பக்கரின் இஸ்லாமிய இராணுவத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த போர்கள் "ரித்தா போர்கள் – (இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களோடு செய்த போர்கள் - Ridda Wars)" என்று அழைக்கப்பட்டது. இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி அவர்களின் புத்தகத்தின் 10ம் தொகுப்பில் இந்த கொடூரமான, காட்டுமிராண்டித் தனமான போர்கள் பற்றி விவரமாக எழுதப்பட்டுள்ளது.

 
முஸ்லிம்கள் மற்றவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றினார்களா? என்ற சந்தேகம் அனேகருக்கு வந்திருக்கும். ஆனால், கட்டாயப்படுத்தி தான் முஸ்லிம்களாக மாற்றப்பட்டார்கள் என்று தெளிவாக சரித்திர நூல்கள் சொல்கின்றன:

 
“You [Muslims] were the most severe people against his enemies who were among you, and the most troublesome to his enemies who were not from among you, so that the Arabs became upright in God’s cause, willingly or unwillingly, and the distant one submitted in abject humiliation until through you God made great slaughter in the earth for His Apostle, and by your swords the Arabs were abased for him.”4
 
"நீங்கள் [முஸ்லிம்கள்] உங்களுக்குள் இருக்கும் அவருடைய எதிரிகளுக்கு நீங்கள் கடுமையானவர்களாக இருக்கிறீர்கள், உங்களுக்கு வெளியே இருக்கும் அவருடைய எதிரிகளுக்கு இன்னும் அதிகமான துன்பத்தை நீங்கள் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், அல்லாஹ்வின் பார்வையில் அரபியர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தனக்கு கீழ்படிகின்றவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத அரபியர்கள் தாழ்மை அடைந்து கீழ்தரமாக நடத்தப்படுகிறார்கள், உங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்த இந்த பூமியில் அல்லாஹ் படுகொலை செய்கின்றான், உங்களின் வாள்கள் அரபியர்களை இழிவுப்படுத்துகிறது"[4]
 
முஸ்லிம்கள் குர்ஆன் 2:256ம் வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவார்கள், இதன் படி இஸ்லாமில் கட்டாயமில்லை என்றுச் சொல்வார்கள். ஆனால், இந்த வசனம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும் சொல்லப்பட்டதே ஒழிய,எல்லா காலத்திற்கும், எல்லா நாடுகளிலும் சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்காக இறக்கப்பட்டது இல்லை என்பதை இவர்கள் அறியவேண்டும்.
 
அபூ பக்கர் முஹம்மதுவின் அடிச்சுவடிகளில் நடந்தார், அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க கட்டாயப்படுத்தியும், யுத்தங்கள் செய்தும், மக்களை இஸ்லாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து வன்முறைகளையும் பயன்படுத்தினார்.
அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தில் வெளிப்படையாக தெரியும் ஒரு பண்பு என்னவென்றால், "முஸ்லிமல்லாத அனைத்தையும் ஆக்கிரமிப்பதாகும்". ஆனால், அவரது இராஜ்ஜியத்தில் வாழும் முஸ்லிமாக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கும்? அல்லாஹ்வின் அரசை எப்படி மக்களின் மனதில் பதியவைப்பது? அல்லாஹ்வின் அரசை எவ்வாறு இயேசு போதித்த "தேவனுடைய அரசோடு" ஒப்பிடுவது?
 
முஹம்மதுவின் நெருங்கிய தோழர்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதை கவனித்தால், இதற்கான பதிலை கண்டுபிடிக்கலாம். ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தாழ்மையோடு நடந்துக்கொண்டார்கள், ஒருவரை ஒருவர் நேசித்தார்கள், மற்றவர்களுக்கு சேவை செய்தார்கள். முஹம்மதுவின் குடும்பத்தார்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள்? நாம் இவர்களின் வாழ்க்கையில் மற்றும் உள்ளங்களில் அல்லாஹ்வுடைய அரசின் உண்மையான கனிகளையும், அதன் சுவையையும் காணமுடியும்.
 
ஆனால், உண்மையில் இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்துக்கொண்டால், ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். முஹம்மதுவின் குடும்ப அங்கத்தினர்களும், நண்பர்களும் ஒருவரின் கழுத்தை ஒருவர் பிடித்துக்கொண்டார். நம்பிக்கைத் துரோகங்கள், படுகொலைகள், அதிகார ஆசை, பேராசை என்ற அனைத்து தீய காரியங்களும் இவர்களின் வாழ்க்கையில் காணப்பட்டது.
 
முஹம்மது மரணிப்பதற்கு முன்பாக கனிசமான அளவிற்கு சொத்துக்களை சேர்த்துவிட்டார். அவருடைய மரணத்திற்கு முன்பே தன் சொத்துக்கள் எவைகளுக்காக செலவிடப்படவேண்டும் என்று சொல்லிவிட்டார். தன் சொத்துக்களில் பெரும் பகுதி இஸ்லாமிய சமுதாயத்தின் மேன்மைக்காக பயன்படவேண்டும், மேலும் தன் மனைவிமார்களின் குடும்ப பராமரிப்பிற்காக அந்த சொத்துக்களிலிருந்து செலவிடவேண்டும் என்றும் கூறினார். இதுமட்டுமல்ல, அந்த செல்வத்திலிருந்து தன் சந்ததிக்கு (பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு) எந்த ஒரு பங்கும் தரப்படக்கூடாது என்றும் கட்டளையிட்டார். முஹம்மதுவின் கருத்தின் படி, யூத நபிகள் (தீர்க்கதரிசிகள்) தங்கள் செல்வங்களை தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லவில்லையாம் (ஆனால், முஹம்மது இந்த விஷயத்தில் தவறாக நினைத்துவிட்டார்). எனவே, அபூ பக்கர் தலைவர் பதவியை ஏற்றவுடன், முஹம்மதுவின் செல்வத்திலிருந்து அவருடைய சந்ததிக்கு (மகள்கள் மற்றும் உறவினர்களுக்கு) பங்கீடு செய்ய மறுத்துவிட்டார்.
 
அபூ பக்கர் முஹம்மதுவின் செல்வத்தை பங்கீடு செய்யாததினால், உறவினர்களிடையே வெறுப்பும் கோபமும் பூசலும் உண்டானது. முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அவரது கணவர் அலி மேலும் உறவினர் அப்பாஸ் இவர்கள் மூன்று பேரும் அபூ பக்கர் மீது கோபம் கொண்டு தங்களுக்கு வரவேண்டிய செல்வத்தை கேட்டனர். முஹம்மதுவின் சொத்துக்களிலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்கமுடியாது என்று அபூ பக்கர் கூறிவிட்டார். இதன் காரணமாக ஃபாத்திமாவும், இதர மக்களும் அபூ பக்கரை அதிகமாக வெறுத்தார்கள். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு ஆறு மாதத்திலேயே ஃபாத்திமா மரித்துவிட்டார்கள். அபூ பக்கரை அலி அவர்கள் எந்த அளவிற்கு வெறுத்தார்கள் என்றால், தன் மனைவி ஃபாத்திமாவின் மரணத்தையும் அவருக்குச் சொல்லிவில்லை மேலும் ஃபாத்திமாவின் அடக்கத்திற்கும் அவரை அனுமதிக்கவில்லை.[5]
 
இவர்களின் உள்ளங்கள் இன்னும் மாற்றமடையாமல் இருப்பதையும், உலக ஆசைகள், பேராசைகள் இவர்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதையும் நாம் இந்த நிகழ்ச்சி மூலமாக அறிந்துக்கொள்ளமுடியும். முஹம்மதுவின் இராஜ்ஜியம் முஸ்லிம்களை வெளிப்புறமாக மட்டுமே மாற்றியுள்ளது, அவர்கள் அதிகாரம் படைத்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறினார்களே தவிர அவர்களின் உள்ளங்கள் மாற்றமடையாமல், இன்னும் பாவ சிந்தனையிலேயே இருந்துள்ளது.
 
அபூ பக்கர் தன் மரணம் வரைக்கும் கலிஃபாவாக இருந்தார், அதாவது ஒன்றரை ஆண்டுகள் அவர் தலைவராக இருந்தார். அவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் முஹம்மதுவை நன்கு அறிந்திருந்தார். உண்மையாகவே, முஹம்மது எவைகளை செய்யவேண்டும் என்று விரும்பினாரோ அதையே அபூ பக்கர் செய்தார் என்று நிச்சயமாக சொல்லமுடியும். அல்லாஹ்வின் இராஜ்ஜித்திற்காகவும், இஸ்லாம் பரவுவதற்கும் அபூ பக்கர் இரத்த ஆறு ஓடச் செய்தார்.
 
உமர்
 
அபூ பக்கர் ஞானமாக செயல்பட்டார், அதாவது எதிர்பாராதவிதமாக தான் மரிக்க நேரிட்ட போது, தனக்கு அடுத்தபடியாக யார் தலைவர் பதவியை வகிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மரித்தார். இதனால், தலைவர் பதவிக்காக நிகழவிருக்கும் வன்முறையும் கொடுமைகளும் தடுக்கப்பட்டது. தனக்கு அடுத்தபடியாக முஹம்மதுவின் இரண்டாவது நெருங்கிய நண்பராகிய உமர் தான் அரசை நடத்தவேண்டும் என்று முடிவு செய்து சொல்லிவிட்டார். உமர் கலிஃபாவாக பதவி ஏற்றதும், இஸ்லாமிய இராணுவத்தை முஸ்லிமல்லாத நாடுகள் மீது போர் தொடுக்க அனுப்பினார். இந்த இராணுவம் சிரியா, பாலஸ்தீனம், ஈராக், பெர்ஷியா மற்றும் எகிப்தை கைப்பற்றியது. இந்த நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய பட்டயங்களினால் வெற்றிக்கொள்ளப்பட்டன. யுத்தங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்தது, முஸ்லிம்கள் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்தார்கள். இஸ்லாம் அமைதி மார்க்கமாக காணப்படவில்லை, அதற்கு பதிலாக, கொடுமைப்படுத்தி கட்டாயப்படுத்தும் மார்க்கமாக செயல்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டாயத்தின் பேரில் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்கள். இஸ்லாமியராக மாறாதவர்களைக் காட்டிலும், இஸ்லாமியர்களாக மாறியவர்கள் நல்ல முறையில் நாட்டில் நடத்தப்பட்டார்கள். இப்படி வன்முறையினாலும், கட்டாயத்தினாலும் அனேகர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.
 
உத்மான் (உஸ்மான்)
 
உமர் அவர்கள் மரித்தவுடன் உஸ்மான் பதவிக்கு வந்தார். இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனை ஒரு அதிகார பூர்வமான தொகுப்பாக வெளியிட்ட பெருமை உஸ்மான் அவர்களுக்கு உண்டு. அவரது காலத்தில் பல வித்தியாசமான குர்ஆன் பிரதிகள் இருந்தன. அவைகள் பெரும்பான்மையாக ஒரே மாதிரியாக இருந்தாலும், பல குறிப்பிட்ட வித்தியாசங்கள் அவைகளில் காணப்பட்டது. இந்த வித்தியாசங்கள் முஸ்லிம்களிடையே பெரிய பிரிவினையை உண்டாக்கியது. இதனை சரி செய்ய, உஸ்மான் ஒரு அதிகார பூர்வமான பிரதியை உருவாக்கி, இதர பிரதிகள் அனைத்தையும் எரித்துவிடும் படி கட்டளையிட்டார்.
 
உஸ்மானின் இராணுவம் அர்மேனியாவையும், வடமேற்கு ஆசியாவையும் மேலும் சைப்பரஸ்ஸையும் ஆக்கிரமித்தது. இவருடைய ஆட்சி காலத்தில் முஸ்லிம்களின் வலிமையும் செல்வமும் பெருகியது.
உஸ்மானின் மரணத்தில் தான் உண்மையான இஸ்லாமிய பழுத்த கனிகள் வெளிப்பட்டன என்று நான் நம்புகிறேன். இவருடைய ஆட்சியில் அரசியல் கறைபட்டுவிட்டது, பல முஸ்லிம்கள் உஸ்மானின் ஆட்சியில் திருப்தி அடையவில்லை, அவர் மீது கோபம் கொண்டனர். பல இஸ்லாமிய நாடுகளில் இருந்த அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள் உஸ்மானை மதினாவில் சந்தித்து, நீதி கேட்பதற்காக மதினாவை நோக்கி நகர்ந்தன. இந்த அதிருப்தி குழுவில் எகிப்திலிருந்து வந்த மக்களும் இருந்தனர், இவர்கள் கலிஃபாவாக "அலி" பதவி ஏற்கவேண்டும் என்று விரும்பினர்.
 
அலி முஹம்மதுவின் மருமகனாவார். முதியவராகிய உஸ்மானை பாதுகாக்கும் பொறுப்பு இவருக்கு இருந்தது. ஆரம்ப காலத்தில் பாதுகாவலர்களை அமர்த்தி தன் பொறுப்பை நிறைவேற்றினார்.
 
எனினும், அலியின் உள்ளத்தின் ஆழத்தில் கசப்பும் எதிர்ப்பும் குடிகொண்டு இருந்தது. முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக தான் தலைவராக ஆகவேண்டும் என்று அலி விரும்பினார். ஆனால், முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக அபூ பக்கர் கலிஃபாவானார், அதன் பிறகு உமர், உஸ்மான் தலைவர்களாக பதவியெற்றார்கள். அலி ஒவ்வொரு முறையும் பல்லை கடித்துக்கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார். அலியின் மனக்கசப்பு இன்னும் வேறூண்றியிருந்தது. கலீஃபா பதவி மீதும், செல்வம், அதிகாரம் போன்றவற்றின் மீதும் இவருக்கு இருந்த இச்சை சாகவில்லை.
 
அதிருப்தி அடைந்துள்ள முஸ்லீம் கும்பல்களுக்கும் மற்றும் உஸ்மானுக்கும் இடையே இருந்த மோதல் மோசமான நிலையை அடைந்தது. இந்த நேரத்தில் உஸ்மானுக்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பையும், குடும்ப நபர்களின் ஆதரவையும் அலி நீக்கிவிட்டார். உஸ்மான் அந்த முஸ்லிம் கும்பலினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை நடக்கும் போது, அலியின் ஆதரவாளர்கள் அங்கே காணப்படவில்லை.
 
இங்கு கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உஸ்மானை கொன்றவர்களில் ஒருவர் அபூ பக்கரின் மகன் “முஹம்மத் பி. அபூ பக்கர்” ஆவார். (அபூ பக்கர் முதல் கலீஃபாவாக பதவி வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கது. முதல் கலீஃபாவின் மகன், மூன்றாவது கலீஃபாவைக் கொன்றார்).
 
இதைப் பற்றி தபரி தன் சரித்திரத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்:
 
”முஹம்மது பி. அபூ பக்கர் பதின்மூன்று நபர்களோடு உஸ்மானிடம் வந்தார். உஸ்மானின் பற்களில் நெருடல் சத்தம் கேட்கும் அளவிற்கு, அவர் உஸ்மானின் தாடியை பிடித்து ஆட்டினார். முஹம்மது பி. அபூ பக்கர் இப்படி கூறினார்: “உங்களுக்கு முஅவியாவினால் எந்த நன்மையும் இல்லை, அதே போல இப்னு அமிர் என்பவரினாலும், உங்கள் கடிதங்களினாலும் எந்த நன்மையும் உண்டாவில்லை”. உஸ்மான் “என் தாடியை விட்டுவிடு, என் சகோதரனின் மகனே, என் தாடியை விட்டுவிடு” என்றார். முஹம்மது பி. அபூ பக்கர் தன்னோரு வந்த போராளிகளில் ஒருவரைப் பார்த்து தன் கண்களால் ஒரு சமிக்ஞை செய்தார். உடனே, அந்த மனிதர் இருப்பு அம்பு கொண்ட ஒரு தடியை கொண்டு வந்து, உஸ்மானின் தலையின் குத்தினார்…. அவர்கள் ஒன்றாக சேர்ந்து அவரை கொன்றார்கள்”. [6]
 
இதனை நீங்கள் கற்பனை செய்துப் பாருங்கள்: ஒருவேளை இயேசுவின் சீடர்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் கொன்றுக்கொண்டு இருந்திருந்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள். பேதுருவின் மகன் ஸ்தேவானை கொலை செய்வதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இப்படி நடந்திருந்தால், இது பயங்கரமான தீய செயலாக இருந்திருக்கும் அல்லவா!
 
இந்த ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திரம் இன்னும் மோசமான இருண்ட தீயதாக மாறுகிறது. உஸ்மான் கொல்லப்பட்ட பிறகு, கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என்று அனேகர் கோஷமிட்டனர். எகிப்திய கலகக்காரர்களின் ஆதரவினால், அலி அடுத்த கலிஃபாவாக பதவியேற்றார். நீண்ட கதையை சுருக்கிச் சொல்கிறேன். அப்போது இருந்த முக்கியமான முஸ்லிம்களாகிய தல்ஹா, ஜுபைர் மற்றும் முஹம்மதுவின் (சிறுமி) மனைவி ஆயிஷா உள்நாட்டு சண்டயை ஆரம்பித்து வைத்தார்கள். அலியும் அவரது இராணுவமும் இவர்களை நோக்கி வந்தது, இவர்களிடையே யுத்தம் நடந்தது. இந்த போரை ”ஒட்டகப்போர் என்பார்கள்(The Battle of the Camel)”. இந்த போரில் அலி வெற்றிப்பெற்றார். தல்ஹாவும், ஜுபைரும் கொல்லப்பட்டார்கள். ஆயிஷா அவர்கள் வீட்டுக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த போரில் மரித்தவர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 20 ஆயிரம் வரை இருந்தது.
 
அதிகாரத்திற்காகவும், பேராசையினாலும் முஹம்மதுவின் தோழர்கள் ஒருவரை ஒருவர் கொன்றதைப் பற்றி இன்னும் சில எடுத்துக்காட்டுகளை சரித்திரத்திலிருந்து எடுத்து உங்கள் முன் வைக்கமுடியும். இந்த கொடூரங்களின் சிகரமாக “சிப்பின் போர் (The battle of Siffin)” என்ற போரை குறிப்பிடலாம். இந்த போரில் நடந்த நிகழ்ச்சி வன்முறையில் சிகரங்களின் சிகரம் என்று அழைக்க தகுதிப்பெற்றதாகும். தமாஸ்கஸ் நாட்டின் இஸ்லாமிய தலைவராக யாஜித் இருந்தார். ஆரம்பகாலத்தில் முஹம்மதுவின் பரம எதிரியாக இருந்த அபூ சுஃப்யானின் பேரனாவார் இந்த யாஜித். இந்த யாஜித்தின் மனிதர்கள் முஹம்மதுவின் பேரன் ஹுசைனை கொன்று, அவரின் தலையை துண்டித்து, இவரிடம் கொண்டு வந்தார்கள். யாஜித்தும், அவரது மனிதர்களும் அந்த தலையை வைத்துக்கொண்டு கேலி பரிகாசம் செய்து அதனை நாசமாக்கினார்கள்.
 
முஹம்மதுவின் மரணத்திற்கு நடந்த நிகழ்வுகளை நீங்கள் மொத்தமாக படித்து அறிந்துக்கொள்ள விரும்பினால், இந்த தொடர் கட்டுரைகளை படிக்கவும்: இஸ்லாமிய அரச குடும்பம், பாகம் 1: முஹம்மதுவின் சொத்துக்கள் (தமிழ் கட்டுரை).
 
இதை விட சிறந்தது எதுவென்றால், தபரியின் சரித்திர புத்தகங்களை வாங்கி நீங்களே படிப்பதாகும். உங்களுக்காக மற்றவர்கள் சிந்திக்க விடாதீர்கள். உங்கள் சொந்த கண்களால் இஸ்லாமிய சரித்திர நூல்களை படித்து, நீங்களே உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். தபரியின் 10வது தொகுப்பிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள்: Volume 10: “The History of al-Tabari Vol. 10: The Conquest of Arabia: The Riddah Wars A.D. 632-633/A.H. 11”
 
 
முடிவுரை:
 
இதுவரை நாம் பார்த்தது இரண்டு இராஜ்ஜியங்களின் ஒப்பீடுதல் ஆகும்: ஒன்று இயேசுவின் இராஜ்ஜியம் அடுத்தது முஹம்மதுவின் இராஜ்ஜியம். இவ்விருவர் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் வழிமுறைகள் என்ன? மற்றும் இவர்களின் கனிகள் என்ன? என்பதையும் உங்களுக்கு காட்ட விரும்பினேன்.
 
இயேசுவின் இராஜ்ஜியம்:
 
மனிதனின் உள்ளான மனம் எப்படி மாறுதல் அடையவேண்டும், எப்படி நல்ல கனிகளை தரவேண்டும் என்பதைப் பற்றிச் சொல்வது தான் இயேசுவின் இராஜ்ஜியம். இயேசுவின் ஆட்சி ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் ஆன்மீக மாறுதலைக் கொண்டு வரும். கிறிஸ்துவின் ஆட்சி மனிதனின் உள்ளத்தில் ஏற்படும் மாறுதலாகும் மேலும் இதனை ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் வாழ்வில் காணலாம். அவர்கள் மற்றவர்களின் உதிரத்தை சிந்தாமல், பட்டயத்தை ஏந்தாமல், ரோம சாம்ராஜ்ஜியத்தை அன்புடனும், விசுவாசத்துடனும் வெற்றுக் கொண்டார்கள். இதே நிலை இன்றுள்ள உண்மையான திருச்சபைகளிலும், உண்மை கிறிஸ்தவர்களின் வாழ்விலும் நாம் காணமுடியும். இயேசுவின் ஆட்சியின் மந்திரம் “ஒருவரை ஒருவர் நேசிப்பதாகும்”. சகோதர அன்பு இல்லையானால், நாம் முதன் முதலில் பார்த்தபடி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சந்நியாசிகளைப் போல ஒவ்வொருவரும் சண்டைபோட்டுக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் மத்தியிலே தேவனுடைய இராஜ்ஜியம் இராது. இயேசுவின் இராஜ்ஜியத்தின் வலிமையும், பிரசன்னமும் அவர் அன்று வாழ்ந்துவிட்டுச் சென்ற நாள் முதல் இன்றுவரை தொடர்ந்து வியாபித்துக்கொண்டே இருக்கிறது.
 
முஹம்மதுவின் இராஜ்ஜியம்:
 
முஹம்மதுவின் இராஜ்ஜியம் வெளிப்புறமானது, அது மக்களின் வெளிப்புற வாழ்க்கையை மட்டுமே மாற்றுகிறது. இறைவன் விரும்பும் விதத்தில் மக்கள் வாழ அவர்களின் உள்ளங்களை மாற்றும் சக்தி அதற்கு இல்லை. முஹம்மது மரித்தவுடன், அவரது நேரடி மேற்ப்பார்வை அகன்று போனது, இதனால், இஸ்லாமிய தலைவர்களாகிய அவரது தோழர்கள் ”நாங்கள் மனதளவில் மாற்றமடையாத மக்களாக இருக்கிறோம்” என்று நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் பாவமான வாழ்க்கை, உலக பொருட்கள் மீது இருந்த இச்சை போன்றவை மாறாமல் அப்படியே இருந்தது. இஸ்லாமின் ஆரம்பகால முஸ்லிம்களின் இதயங்கள் சுயநலத்துடனும், மனக்கசப்புடனும் கொடூரத்துடனும் காணப்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒரு காட்டிக்கொடுத்து, நம்பிக்கை துரோகம் செய்து தங்கள் உயிர் நண்பர்களையே கொன்றார்கள்.
 
முஹம்மதுவின் அரசு பட்டயத்தின் அஸ்திபாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது, அந்த பயத்துடனேயே மக்களை இஸ்லாமிலே தக்கவைத்துக்கொண்டு இருந்தது. அது ஒரு பக்கம் ஆன்மீகத்தையும் இன்னொரு பக்கம் அரசியலையும் கொண்டு இருந்தது. அது படைகளை தனக்கென்று உருவாக்கிகொண்டது, புதிய வரிகளையும், குடும்ப மற்றும் கலாச்சார விதிகளையும், வணிக சட்டங்களையும் உருவாக்கியது. முஹம்மதுவின் அரசு முஸ்லிம்களின் வாழ்க்கையிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் அவ்வப்போது தன் விஸ்வரூபத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது.
 
மக்கள் தங்கள் முழங்கால்களை இஸ்லாமுக்கு முன்பு மடக்கவேண்டும் இதற்காக அவர்களோடு சண்டையிட வேண்டும் என்று அல்லாஹ்வினால் முஹம்மதுவிற்கு கட்டளை பிறந்தது. இந்த சண்டை இரண்டு வகையாக இருந்தது. முதலாவது எதிரிகள் தாக்கும் போது தற்காப்புக்காக சண்டையிடுவது. இரண்டாவது இவரே வலியச் சென்று மக்களோடு போர் புரிந்து முஹம்மதுவின் இராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது.
 
முஹம்மதுவுடைய செய்தி குழப்பம் தராமல் தெளிவாக இருந்தது: “இஸ்லாமை ஏற்றுக்கொள் அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்பது தான் அது. மேலும் ஆயுதங்கள் மூலமாக முஹம்மதுவின் இராஜ்ஜியம் நிர்வாகிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக அரபு பழங்குடியினர் இஸ்லாமை விட்டு வெளியேறியபோது, அவர்கள் தாக்கப்பட்டார்கள், மறுபடியும் இஸ்லாமுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வைக்கப்பட்டார்கள், அல்லது போரில் மரிக்கும் வரைக்கும் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். ஒரு வெள்ளைத் தாளில் இரத்தம் கொட்டப்பட்டால் எப்படி அந்த காகிதம் முழுவதும் அது பரவுமோ அது போல முஹம்மதுவின் அரசு முழு உலகிலும் பரவியது. முஹம்மது மரித்த பிறகு முதல் 100 ஆண்டுகளில் முஹம்மதுவின் அரசு ஒரு அசூரவேகத்தில் பட்டத்தின் முனையில் பரவியது, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாக உருமாறியது.
 
கடைசியாக நான் மூன்று மேற்கோள்களை இஸ்லாமிய சரித்திய நூலிலிருந்து எடுத்துக் காட்டி இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
 
முதலாவது மேற்கோள் ஈராக்கிய கிறிஸ்தவர்கள் பற்றியதாகும். இவர்கள் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தனர், அதன் பிறகு இஸ்லாமுக்கு மாறினார்கள், ஆனால் கிறிஸ்துவை பின் பற்றும்படி மறுபடியும் கிறிஸ்தவர்களானார்கள். இவர்களின் வார்த்தைகள், இந்த கட்டுரையில் இதுவரை நாம் பார்த்த விவரங்களின் சுருக்கமாக அமைந்துள்ளது:
 
”ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்து, அதன் பிறகு இஸ்லாமை தழுவியர்களும் அவர்களில் இருந்தார்கள். இஸ்லாமில் குழப்பங்களும், எதிர்ப்புக்களும் உண்டானபோது, இவர்கள் இப்படி கூறினார்கள்: ‘கடவுள் மீது ஆணையாக, நாங்கள் விட்டுவந்த மார்க்கமே சிறந்ததாக இருந்தது. இந்த இஸ்லாமிய மக்கள் பின் பற்றும் மார்க்கத்தைவிட அதுவே சரியானதாக இருந்தது. இவர்கள் இன்னும் மற்றவர்களின் இரத்தத்தை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள், சாலைகளிலும் திகிலூட்டிக்கொண்டு இருக்கிறார்கள், மேலும் மற்றவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டே இருக்கிறார்கள், இவைகளிலிருந்து இஸ்லாம் இவர்களை மாற்றவில்லை.’. இப்படிச் சொல்லி அந்த மக்கள் தாங்கள் விட்டுவந்த மார்க்கத்திற்கே (கிறிஸ்தவத்திற்கு) திரும்பினார்கள். அல் கிர்ரீத் என்பவர் அந்த கிறிஸ்தவர்களை சந்தித்து கூறியதாவது: “உங்களுக்கு ஆபத்துவரும், ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமாக மாறி, அதன் பிறகு கிறிஸ்தவத்திற்கு திரும்புவதைப் பற்றி அலி அவர்கள் என்ன சொன்னார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இறைவன் மீது ஆணையாக, அவர் யாருடைய பேச்சும் கேட்கமாட்டர், அவர்களை மன்னிக்கமாட்டார், எங்களுக்கு இஸ்லாமுக்கு மறுபடியும் திரும்புவதற்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்டாலும் அதை ஏற்கமாட்டார். இப்படிப்பட்டவர்களைப் பற்றி அவருடைய கட்டளையென்ன வென்றால், அவர்களை அலி கண்டவுடனே, அவர்களின் தலையை துண்டித்துவிடுவார்” [7]
 
இரண்டாவது மேற்கோள் முஹம்மதுவின் தோழர்கள் பற்றியதாகும். முஸ்லிம்களோடு சண்டையிட்டார்கள் என்பதற்காக, 80 வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிக்கு முஹம்மதுவின் தொழர்களில் சிலர் செய்த செயல் என்ன? அவைகளை இப்போது காண்போம்.
ஃபஜாரா பழங்குடியினரால் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் தோற்கடிக்கப்பட்டு இருந்தார்கள். காயப்பட்ட முஸ்லிம் தலைவர் பழிவாங்கவேண்டுமென்று சபதம் எடுத்து இருந்தார். அவர் சுகமடைந்த பின்பு அவர்களை தாக்க மறுபடியும் புறப்பட்டார். அந்த சண்டையில் ஒரு வயதான மூதாட்டி பிடிபட்டார், அவருக்கு அவர் என்ன செய்தார் என்பதை இஸ்லாமிய சரித்திர நூலிலிருந்து காண்போம்.
 
”… மற்றும் உம் கிர்ஃபா ஃபதிமா என்பவர் கைதியாக பிடிபட்டார். இந்த பெண் மிகவும் வயது சென்ற மூதாட்டியாக இருந்தார், இவர் மாலிக் என்பவரின் மனைவியாவார். இந்த பெண்ணின் மகளையும், அப்துல்லா மசதாவையும் பிணைக்கைதிகளாக் பிடித்துக்கொண்டார்கள். ஜையத் உம் கிர்ஃபாவை கொல்லும் படி கேய்ஸுக்கு கட்டளையிட்டார். அவளை அவர் மிகவும் கொடூரமான முறையில் கொன்றார். (தபரி சரித்திரம்: அவளுடைய இரண்டு கால்களிலும் இரண்டு கயிறுகளால் கட்டி, இரண்டு ஒட்டகங்களில் கட்டினார்கள். இந்த இரண்டு ஒட்டகங்களும் நேர் எதிரே இழுத்துச் செல்லும்படி அவைகளை ஓட்டினார்கள். அவள் இரண்டாக பிளக்கப்பட்டு மரித்தாள்). [8]
 
மூன்றாவது மேற்கோள், தன்னை கேலி செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஹம்மது என்ன செய்தார் என்பதைப் பற்றியது (சில மாதங்களுக்கு முன்பாக பிரான்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதல் சார்லி ஹெப்டோவை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்). இந்த நிகழ்ச்சியில் ஒரு முஸ்லிம் தன் அடிமைப்பெண்ணை எப்படி கொன்றார் என்பதைப் பற்றியதாகும். அந்த அடிமைப்பெண் முஹம்மதுவை கேலி செய்தாள் என்பதற்காக கொள்ளப்பட்டாள்.
 
அப்துல்லா இப்னு அப்பாஸ் அறிவித்ததாவது:
 
ஒரு குருடனுக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தாள், அவள் பிள்ளைகள் பெற்றவளாக இருந்தாள். இந்த பெண் இறைத்தூதர் பற்றி அவதூறுகளை பேசுபவளாக இருந்தாள். இப்படி செய்யாதே என்று அந்த மனிதன் கூறியும், அவள் அதனை நிறுத்தவில்லை. அவளை கடிந்துக்கொண்ட பிறகு, தன் பழக்கத்தை அவள் விடவில்லை. ஒரு நாள் இரவு இப்படியே அவள் இறைத்தூதர் பற்றி அவதூறு வார்த்தைகளை பேசிக்கொண்டே இருந்தாள். அம்மனிதன் ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் வைத்து குத்தி கொன்றுவிட்டான். அவளின் குழந்தை அவள் கால்களுக்கிடையில் இரத்தக் கறைகளுடன் காணப்பட்டது. அடுத்த நாள் காலை இந்த விவரம் இறைத்தூதருக்கு அறிவிக்கப்பட்டது.
 
இறைத்தூதர் மக்களை ஒன்று கூட்டினார், மேலும் இவ்விதமாக கூறினார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த செயலைச் செய்தவர் யார்? அவர் இப்போது எழுந்து நிற்கட்டும் என்றார். அந்த மனிதர் நடுங்கியவராக எழுந்து நின்றார்.
 
அந்த மனிதர் இறைத்தூதருக்கு முன்பாக உட்கார்ந்தார், மேலும் இப்படி கூறினார்:
 
”அல்லாஹ்வின் தூதரே: நான் தான் அவளின் எஜமானன், அவள் என் அடிமையாவாள். அவள் உங்களைப் பற்றி கேலி செய்துக்கொண்டு இருந்தாள். இப்படி சொல்வதை தவிர்த்துவிடு என்று சொன்னேன், ஆனால் அவள் நிறுத்தவில்லை. நான் கடிந்தும்கொண்டேன், அவள் தன் பழக்கத்தை விடவில்லை. அவள் மூலமாக எனக்கு இரண்டு மகன்கள் முத்துக்களைப் போல பிறந்து இருக்கிறார்கள், அவள் என் துணைவி தான். நேற்று இரவு அவள் அப்படியே உங்கள் மீது அவதூறு வார்த்தைகளைச் சொன்னாள், எனவே, நான் ஒரு கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தி அவளை கொன்றுவிட்டேன்.”.
 
இப்படி அந்த மனிதர் சொன்ன போது, இறைத்தூதர் இப்படியாக சொன்னார்: “இன்று நீங்கள் எல்லாரும் இதற்கு சாட்சிகளாக இருக்கிறீர்கள். அவளை கொன்றதற்காக எந்த ஒரு இரத்த பரிகாரமும் செய்யத்தேவையில்லை” [9]
 
மேலே நாம் கண்ட மூன்று உதாரணங்களில் படுகொலையையும், வன்முறையையும், மிருகத்தனத்தையும் காணமுடியும். இது தான் முஹம்மது போதித்த இஸ்லாம். முஹம்மதுவை கேலி செய்பவர்களை கொலை செய்வது என்பது முஹம்மதுவிற்கு நன்மையான ஒன்றாக காணப்படுமானால், இப்படி கொலைகள் செய்வது நன்மையானதாக ஏன் முஸ்லிம்களுக்கு இன்று காணப்படாது?
 
இக்கட்டுரை தலைப்பின் ஒரு பகுதி “ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்றா?” என்பதாகும். இதுவரை நாம் பார்த்த உதாரணங்கள், இஸ்லாமிய மேற்கோள்களினால், “ஆம், ISIS என்பது முஸ்லிம்களுக்கு ஹலால் தான், ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்று தான்” என்ற முடிவுக்குத் தான் நம்மால் வரமுடியும். அதாவது ஐஎஸ்ஐஎஸ் என்பது ஒரு ஆதாரபூர்வமான இஸ்லாமிய கோட்பாடுகளின் மீது கட்டப்பட்ட ஒரு அமைப்புத் தான் என்பதை நாம் அறிந்துக் கொள்ளமுடியும். இஸ்லாம் என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள முஹம்மதுவின் போதனைகள் மற்றும் செயல்களை ஆய்வு செய்தல் போதுமானது. மேலும் இதுவரை கண்ட விவரங்களிலிருந்து உண்மையான இஸ்லாமிய மார்க்கம் ஒரு பயங்கரமான தீய மற்றும் மனிதாபமற்ற மதமாகும் என்பதை அறிந்துக்கொண்டோம். இது மட்டுமல்ல, இயேசுவிற்கும் முஹம்மதுவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக இவ்விருவர்களின் இராஜ்ஜியத்தைப் பற்றியும் விவரித்தேன்.
அறியாமையில் உள்ள மக்கள் அனேக முறை இவ்விரு மார்க்கங்களும் ஒன்று தான் என்று தவறாக நினைத்துவிடுகின்றனர். இவர்களின் கருத்துப்படி, இவ்விரு மார்க்கங்களும் மிகபெரிய மார்க்கங்களாக இருக்கின்றன, இவ்விருவர்கள் பெருந்தலைவர்களாக இருக்கிறார்கள், இம்மார்க்கங்களில் பல விஷயங்கள் ஒத்துப்போகின்றன, எனவே இவை இரண்டும் ஒன்று தான் என்று தவறான நினைத்துவிடுகின்றனர். ஆனால், உண்மையில் இவ்விருவரும் நேர் எதிர் துருவங்களாகும், இயேசு மற்றும் முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் ஒருபோதும் ஒன்றுபடமுடியாது.
 
பின்குறிப்புகள்
 
1. Ibn Ishaq, "Sirat Rasulallah", compiled by A. Guillaume as "The Life of Muhammad", Oxford, London, 1955, page 212
2. Muslim, Abu’l-Husain, “Sahih Muslim”, International Islamic Publishing House, Riyadh, Saudi Arabia, 1971, translated by A. Siddiqi, volume 1, #33
3. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press,” volume 7, page 29
4. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press” volume 10, page 2
5. For a description of this event see: al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press volume 9, 1993, pages 196, 197
6. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press,” volume 15, pages 190, 191
7. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press, volume 17, pages 187, 188
8. Ibn Ishaq, "Sirat Rasulallah", compiled by A. Guillaume as "The Life of Muhammad", Oxford, London, 1955 page 665
9. Abu Dawud, Suliman, “Sunan”, al-Madina, New Delhi, 1985, translated by A. Hasan, Book 38, Number 4348