ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

அப்துல் மஜீத்

 
முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, முதல் பாகத்தை பதித்தேன், அதனை இங்கு(அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1) படிக்கவும். இரண்டாம் பாகத்தை இக்கட்டுரையில் காணலாம்.
 

 
அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2

 
சகோதரர் அப்துல் மஜீத் அவர்களுக்கு உமரின் இரண்டாம் பதில்நான் ஏற்கனவே, என் முதல் பதிலை உங்களுக்கு அனுப்பினேன், ஆனால், அது உங்களுக்கு வந்தடையவில்லை என்றுச் சொல்கிறீர்கள். இது என் இரண்டாம் பதில்.

 
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

ந‌ண்பரே, கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ளவை அனைத்தும் த‌ங்க‌ளூடைய‌ குற்றச்சாட்டுக்க‌ள். இத‌ற்கான‌ ப‌திலை கீழே பார்க்கவும்.

2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?
3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:
4. இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:
a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:

என் ப‌தில்:

இஸ்லாம் தோன்றிய‌து கி.பி.6 ஆம் நூற்றாண்டில்,ஸ்தாபிக்க‌ப்ப‌ட்ட‌ உட‌னே அது உல‌கின் ப‌ல‌ மூலைக‌ளூக்கும் ப‌ர‌விய‌து இல்லையா? அப்ப‌டியானால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார்?அன்றைக்கு கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌ப்ப‌ட்டிருந்த நாடுக‌ளில் இருந்த ம‌க்க‌ளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார்? எனவே வீம்புக்காக‌வும், சுய‌லாப‌த்திற்காக‌வும் வாழ்கின்ற கிறிஸ்த‌வ‌ர்க‌ளை த‌விர‌ ம‌ற்ற கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்க‌ள் என்ப‌து புலனாகிறது அல்ல‌வா?
 
Umar:

ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு இஸ்லாம் எப்படி பரவியது? அமைதியான முறையில் பரவியது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், இப்படித்தான் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், இஸ்லாமிய ஆதாரங்கள், அதிகார பூரவமான ஹதீஸ்கள் அப்படி சொல்லவில்லை.
 
• உங்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் கால கட்டத்திலேயே அவர் அனேக நாடுகளுக்கு "இஸ்லாமை தழுவும்படி" கடிதங்கள் எழுதினார்.

• இஸ்லாமை ஏற்கிறீர்களா அல்லது போருக்கு தயாரா என்று கேட்டார்.( அஸ்லிம் தஸ்லம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்)

• இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் நாட்டில் எங்கள் வீரர்கள் வந்திறங்குவார்கள், உங்கள் நாடுகள் எங்களுக்கு சொந்தமாகும் என்றுச் சொன்னார்.

• இப்படி அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளன.
 
 
இந்த தலைப்பைப் பற்றி எனக்கும் சகோதரர் அபூமுஹை அவர்களுக்கும் இடையே நடைபெற்ற அனைத்து உரையாடல் கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். சகோதரர் அபூ முஹை அவர்கள் பதித்த அனைத்து கடிதங்களையும் நீங்கள் தமிழில் படிக்கலாம். அவைகளை படித்துப்பார்த்து, இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரப்ப உங்கள் நபி அவர்கள் விரும்பினாரா? என்பதை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.
 
 
முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:
(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates')


உங்கள் நபி மறைந்த பிறகு அனேக நாடுகள், இஸ்லாமுக்கு தாங்களாகவே மாறினார்கள் என்று நீங்கள் பெருமைப்பட்டுக்கொண்டு இருந்த நாடுகள், இஸ்லாமின் உன்னத கோட்பாடுகளை கண்டு ஆச்சரியப்பட்டு இஸ்லாமை தழுவிய நாடுகள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நாடுகள், இஸ்லாமைவிட்டு வெளியேறின. ஏன்?

ஏனென்றால், அவர்கள் முஹம்மதுவின் இராணுவ பலத்தைக் கண்டு, பயத்தில் மாறியவர்கள். ஆகையால், தலைவர் போய்விட்டார் இனி நமக்கு என்ன நடக்கும், நாம் இனி இஸ்லாமில் இருக்கவேண்டியதில்லை என்றுச் சொல்லி மாறினார்கள்.

பிறகு இவர்களை வழிக்கு கொண்டுவர, இஸ்லாமின் கட்டுப்பாட்டில் கொண்டு வர "அபூ பக்கர்" அவர்கள் இரண்டாண்டுகள் சண்டையிட்டு, போரிட்டார். இதனை நீங்கள் அறியமாட்டீர்களா? "The Wars Of Al-Riddah" என்றால் என்ன என்று கேள்விப்பட்டதில்லையோ?
 
Ridda wars

From Wikipedia, the free encyclopedia

The Ridda wars (Arabic: حروب الردة), also known as the Wars of Apostasy) were a set of military campaigns against the rebellion of several Arabic tribes against the Caliph Abu Bakr during 632 and 633 AD, following the death of Muhammad. The revolts, in Islamic Historiography later interpreted as religious, were in reality mainly political.[1][2]

Source: http://en.wikipedia.org/wiki/Ridda_wars
 
ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
 
அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.

 
அருமை நண்பரே, சுயலாபத்திற்காக, உயிருக்கு பயந்து அன்று இஸ்லாமை தழுவியவர்கள் அனேகர். இன்றும் அப்படித்தான், இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள், தாங்கள் வேறு ஒரு மார்க்கம் நல்லது என்று கண்டு, அதற்கு மாற நினைக்கும் போது, அவர்களுக்கு மரண தண்டனை என்றுச் சொல்லி,பயப்படவைத்து, கேவலமாக‌ வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது, "உங்கள் இஸ்லாம்".

இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை நாங்கள் கொல்வதில்லை என்று சட்டம் கொண்டுவரச் சொல்லுங்கள், அப்படி வந்தால், அதனை சரியாக நியாயமான முறையில் பின்பற்றினால், இஸ்லாம் எத்தனை ஆண்டுகள் தாக்குபிடிக்கும் என்பதை நாமே நம் கண்களால் காணமுடியும். எனவே, இஸ்லாமை அமைதியான முறையில் முஹம்மது பரப்பினார் என்ற பழைய கதையையே இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

மேலும் க‌ட‌ந்த சில‌ நூற்றாண்டுக‌ளில் உல‌க‌த்தையே கல‌க்கிய‌ த‌த்துவ‌மான‌ க‌ம்யூனிச‌த்தை ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ஏற்றுக்கொண்ட‌ நாடுக‌ள் கிறிஸ்த‌வ‌ நாடுக‌ளா? இஸ்லாமிய‌ நாடுக‌ளா? நாங்க‌ள் க‌ம்யூனிச‌த்தை ச‌ரி என்று சொல்ல‌ வ‌ர‌வில்லை ஆனால் ஏன் கிறிஸ்த‌வ‌ சித்தாந்தங்க‌ள் அவ‌ர்க‌ளை த‌டுக்க‌வில்லை? இன்னும் உண்மையை சொல்வ‌தென்றால் நாத்திக‌ர்க‌ள் அதிக‌ம் இருப்ப‌து கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தில் தான்.
 
Umar:

கிறிஸ்தம் இஸ்லாமைப் போல அடாவடிச் செய்து, அதை நம்பிக்கொண்டு இருக்கிறவர்களை பயப்படவைத்து, வேறு மார்க்கத்திற்கு(நாத்தீகாமானாலும் சரி, கம்யூனிசமானாலும் சரி, இஸ்லாமானாலும் சரி...) மாறினால் சட்டங்கள் போட்டு தண்டிக்காது. கிறிஸ்த‌வ‌ம் ஒரு ம‌னித‌னின் ம‌ன‌தில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌வேண்டும், அவ‌ன் இறைவ‌னுக்கு விருப்ப‌மான‌ செய‌ல்க‌ளை செய்ய‌வேண்டும் என்று எதிர்பார்க்கிற‌து.

 
மனிதனுக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கிறிஸ்தவம் அளிக்கிறது. ஒரு வேளை ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமுக்கு மாறினால், கிறிஸ்தவ பெரியோர்கள் ஓரிரு முறை அறிவுரைச் சொல்வார்கள், கேட்கவில்லையானால், விட்டுவிடுவார்கள். அதை விட்டுவிட்டு, இஸ்லாமைப் போல‌, ப‌ய‌ப்ப‌ட‌வைத்து, அவ‌னை துன்ப‌ப்ப‌டுத்தி, ப‌டாத‌பாடு ப‌டுத்த‌மாட்டோம். இஸ்லாமை போல‌ உயிரை எடுக்க‌மாட்டோம், ப‌த்வாக்க‌ள் போட‌மாட்டோம்.

ஏன் கிறிஸ்தவ சித்தாந்தங்கள், கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுகிறவர்களை தடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள், நான் ஒரு கேள்வியை கேட்கிறேன், ஏன் முஹம்மது மரித்ததும் அனேக நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின? ஏன் இஸ்லாமின் கோட்பாடுகள் அவர்களை தடுக்கவில்லை. உங்கள் முதலாம் காலிபா போர் செய்துதான் அவர்களை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தார். அடுத்தவரின் இரத்தத்தில் வாழ்வதற்கு கிறிஸ்தவம் ஒன்றும் இஸ்லாம் இல்லையே.

இவ்வுலகத்தில் மனிதன் எடுக்கும் முடிவு, அவனது அடுத்த உலகத்தை பாதிக்கும் என்று எல்லா மார்க்கமும் சொல்கின்றன. ஆனால், நீங்கள் ஒரு படி மேலே சென்று, நீ உன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையானால், கொன்றுவிடுவோம் என்று பயப்படுத்துகிறீர்கள்.

உங்களைப்போல அராஜகம் செய்து, பயப்படவைத்து வெளியேறுகிறவர்களை தக்கவைக்கும் கேவலமான நிலை எங்களுக்கு வேண்டாம்.

// Abdul Majeeth Said:

இன்னும் உண்மையை சொல்வ‌தென்றால் நாத்திக‌ர்க‌ள் அதிக‌ம் இருப்ப‌து கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தில் தான்.//

 
நண்பரே கொஞ்சம் சரியாகச் சொல்லுங்கள். ஒருவன் நாத்தீகனாக மாறினால், அவன் மறுபடியும் கிறிஸ்தவன் என்றுச் சொல்லமாட்டான், அதே போல ஒருவன் இஸ்லாமிலிருந்து நாத்தீகனாக மாறினால், இஸ்லாமியன் என்றுச் சொல்லமாட்டான், "முன்னால் கிறிஸ்தவன், முன்னால் இஸ்லாமியன்" என்றுச் சொல்லிக்கொள்வான்.

ஒரு விவரத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், தற்காலத்தில் இஸ்லாமின் உண்மை முகம் கண்டுக்கொண்ட அனேக இஸ்லாமியர்கள் நாத்தீகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

என‌வே உலக‌ வ‌ர‌லாற்றை புர‌ட்டி பாருங்க‌ள் நண்ப‌ரே. வரலாறு நெடுக‌ யூத‌ர்க‌ளை கொன்று குவித்து வெறியாட்ட‌ம் போட்ட‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை எண்ணி பாருங்ள். சிலுவை போர்க‌ள்(CRUSADE) என்ற பெய‌ரில் ம‌னித குல‌த்துக்கே பெரும் அபாயமாக செய‌ல்ப‌ட்ட‌து யார்? உங்க‌ளூடைய‌ திருச்ச‌பைக‌ள் அல்ல‌வா? அன்பை போதித்த‌ இயேசுவின் பெய‌ரால் அக்கிர‌ம‌ம் செய்த‌து யார்? மேலும் உண்மையை சொல்வ‌தென்றால் வாளாலும், துப்பாக்கிக‌ளாலும், பீர‌ங்கிக‌ளாலும், மிர‌ட்ட‌ல்க‌ளாலும், பொய்க‌ளாலும்,த‌ந்திர‌த்தாலும் முக்கிய‌மாக‌ பணத்தாலும் ம‌த‌மாற்றம் செய்(வ‌)த‌து யார்? சிந்தியுங்க‌ள் ச‌கோதர‌ரே தெளிவு பிறக்கும்.
 
ஆமாம், ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் வெறியாட்டம் போட்டனர், சிலுவைப் போர் என்றுச் சொல்லி, இயேசு சொல்லாததை செய்தனர். இதைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேதனை அடைகிறோம்.

ஆனால், உங்கள் முஹம்மது சொன்னதும், செய்ததும் வெறியாட்டம் தானே, கொலையும், கற்பழிப்பும், குடியும் கும்மாளமும் போட்டு ஒரு ஆன்மீக தலைவரைப்போலவே அவர் நடந்துக் கொள்ளவில்லையே. நீங்கள் குற்றம் சாட்டினால், கிறிஸ்தவர்கள் மீது சாட்டலாம், ஆனால் ,கிறிஸ்து மீது சாட்டமுடியாது.

தன் மார்க்கம் தான் சரியானது என்ற எண்ணத்தை மற்றவர்கள் மீது திணித்து, அவர்கள் அடிபணியவில்லையானால் இரத்த ஆறு ஓடும் என்றுச் சொல்லி, தன் "அமைதியான" மார்க்கத்தை பரப்பியவர் தானே உங்கள் நபி அவர்கள். இதில் வேறு, இன்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே மூச்சாக "இஸ்லாம் என்றால் அமைதி" என்ற பொய்யை ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், எத்தனை நாட்கள் தான் இப்படி செய்வீர்கள்?

சரி போர்கள் தான் புரிந்தார், அப்பெண்களையாவது விட்டுவிடலாம் அல்லவா? அடிமைப்பெண்களை கற்பழிக்கலாம் என்ற கட்டளையே குர்‍ஆனில் புகுத்திவிட்டாரே? "உங்கள் முஹம்மதுவை விட நீங்கள் நல்லவராக இருப்பீர்கள்". ஜுவரிய்யா, ரிஹானா மற்றும் சுபியா (Juwairiya, Safiyah & Rayhanah) என்ற மூன்று பெண்களோடு முஹம்மதுவிற்கு என்ன உறவு இருந்தது என்று உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் (இபின் இஷாக்) படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
 
இந்த கட்டுரைகளை படித்துப்பாருங்கள்,


 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

த‌ங்க‌ளின் ம‌ற்றொரு குற்றச்சாட்டு:

b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)


இந்த‌ வ‌ச‌ன‌த்தை கொஞ்ச‌ம் நிதான‌மாக‌ மீண்டும்,மீண்டும்

ப‌டித்து பாருங்க‌ள்.திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளுக்கும் க‌ன‌க‌ச்சித‌மாக‌ பொருந்துகிறது அல்ல‌வா? உண்மையில் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌த்தை உருவாக்கிய‌வ‌ர், இயேசுவை நேரில் க‌ண்ட‌து கிடையாது,கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மீது வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்து விட்ட‌வ‌ர்,த‌ன்னுடைய‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்ப‌ இயேசுவின் நாம‌த்தை துஷ்பிர‌யோகாப்பாடுத்திக்கொண்ட‌வ‌ர்,த‌ன்னுடைய‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்ப‌ பொய் சொல்ல‌லாம்,த‌ந்திர‌ யுக்திக‌ளை கையால‌ளாம் இன்னும் எண்ணற்ற தான் தோன்றி கோட்பாடுக‌ளை உண்டாக்கிய‌ திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளையும் கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்ல‌ முடியுமே.நான் ஏன் இந்த குற்றச்சாட்டுக‌ளை வைக்கின்றேன் என்றால் திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளின் அங்கீகார‌ம் என்ன‌ என்ப‌துதான் என் கேள்வீ?
 
 
Umar:

அனேக கொலைகள் செய்தவர், கற்பழித்தவர், தனக்கு 50 வயதாக இருக்கும் போது பேத்தி வயதுள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொண்டவர், தன் வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்து செய்தபிறகு அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டவர், தன் மார்க்கத்தை பரப்ப வன்முறை கடிதங்களை அனுப்பி பயப்படவைத்தவர், போரில் கிடைத்த பெண்களை வைத்துக்கொண்டவர், கற்பழித்தவர், இப்படிப்பட்டவர் "எனக்கு ஒரு தூதன் காணப்பட்டு குர்‍ஆனை இறக்கினார்" என்றுச் சொன்னால் நம்புவீர்கள். ஆனால், இந்த கீழ்தரமான எந்த செயலையும் செய்யாத அப்போஸ்தலர் பவுல் உங்களுக்கு பொய்யராக தெரிகிறார். என்ன செய்ய, காலம் கெட்டுகிடக்கு.

உங்கள் முஹம்மதுவிற்கே நீங்கள் அங்கீகாரம் கொடுக்க வெட்கப்படாத போது, இயேசுவிற்காக தன் வாழ்க்கையை கொடுத்தவரை நாங்கள் அங்கீகரிப்பதில் எந்த தவறும் இல்லை, என் அருமை இஸ்லாமிய சகோதரரே!
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

?நீங்க‌ள் மேற்கோள் காட்டிய‌ அதே மத்தேயு 7 அதிகார‌ம் 21,22,23,24 வ‌ச‌ன‌ங்க‌ளை திரும்ப‌,திரும்ப‌ வாசித்து பாருங்க‌ள். எத்த‌னை தெளிவாக‌ இயேசு திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளின் க‌ள்ளதீர்க்க‌த‌ரிச‌ன‌ம் பற்றி உரைத்துவிட்டு போயிருக்கிறார் என்ப‌து புரியும்.முஹ‌ம்ம‌த் ந‌பியின் தூதுத்துவ‌த்தை ப‌ற்றி இவ்வ‌ளவு ஆராய்ச்சி செய்யும் நீங்க‌ள், ப‌வுல் அடிக‌ளாருக்கு ஏன் வேறோர் அள‌வுகோலை தேர்வு செய்கிறீர்க‌ள்.

எல்லாம் வ‌ல்ல‌ க‌ர்த்தர் ந‌ம‌க்கு நேர் வ‌ழி காட்டி அருள்வாராக‌.

இது என்னுடைய‌ 2 வ‌து க‌டித‌ம், முத‌ல் க‌டித‌த்திற்கு இதுவ‌ரை ப‌தில் இல்லை. இப்படிக்கு,

அப்துல் ம‌ஜீத்.
 
அருமை நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட மத்தேயு 7: 21 லிருந்து 24 வரை படித்தேன், நண்பரே. என்ன தான் அற்புதங்கள் செய்திருந்தாலும், தான் சொல்லிய வசனங்களை பின்பற்றாமல் வாழ்பவர்களுக்கு "உங்களை நான் அறியவில்லை என்று இயேசு சொல்லிவிடுவார்". இன்று உலகில் முஸ்லீம்களாகிய உங்களில் சிலர், இயேசு சொன்ன அமைதி மார்க்கத்தை விட்டுவிட்டு, உங்கள் நபி சொன்ன மார்க்கத்தை பின்பற்றுகிறீர்கள், உன் சத்துருக்களை நேசியுங்கள் என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, சொந்த நாட்டுக்காரனையும் கொல்கிறீர்கள். உங்களைப் பார்த்து இயேசு சொல்வார், அக்கிரம செய்கைக்காரர்களை என்னை விட்டு அகன்றுப்போங்கள்.

ஒன்றைச் சொல்லட்டுமா? முஹம்மதுவிற்கும் அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே எவ்வளவு பெரிய ஏணியை வைத்தாலும் எட்டாது சகோதரரே. அவ்வளவு கேவலமான வாழ்க்கையை உங்கள் நபி வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். இயேசு, "அவர்கள் கனிகளால் அவர்களை அறியுங்கள் என்றார்". முஹம்மதுவின் கனிகள் என்ன வெறுப்புக் காட்டுதல், கொலை செய்தல், கற்பழித்தல், கொள்ளையடித்தல், அடிமைகளோடு உடலுறவு கொள்ளுதல், இது தானே உங்கள் நபியின் கனிகள்.

சமுதாயத்தில் ஒரு சாதாரண சராசரி மனிதனின் அளவுகோலோடும் உங்கள் முஹம்மதுவை அளக்கமுடியாது நண்பரே. இப்படிப்பட்டவரை நாங்கள் ஒரு போதும் நபியாக ஏற்கமுடியாது, அவரை பின்பற்றுகிறவர்களாகிய இன்றைய தீவிர பற்றுள்ள இஸ்லாமியர்களின் செய்கைகளையும் நாங்கள் கண்டுக்கொண்டு தான் இருக்கிறோம், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தாயைப்போல பிள்ளை.

உங்கள் முஹம்மதுவினுடைய வாழ்க்கையை முழுவதுமாக மக்களின் முன்பாக வைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதே போல இயேசுவின் வாழ்க்கையையும், மற்ற அனைத்து சீடர்களின் வாழ்க்கையையும் நாங்கள் முன்வைக்கிறோம். பிறகு மக்கள் அல்லது நம் விவரங்களை படிக்கும் வாசகர்கள் முடிவு எடுக்கட்டும், ஒரு நபி எப்படி இருக்கவேண்டும், ஒரு ஆன்மீக தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று வாசகர்களே முடிவு எடுக்கட்டும்.


நான் மேலே சொன்ன விவரங்கள் அனைத்தும் ஏதோ இஸ்லாமியர் அல்லாதவர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்துச் சொன்னதாக நினைக்கவேண்டாம், அவைகள் அனைத்தும் குர்‍ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் ஆரம்ப கால சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதைகள், இஸ்லாமிய உரைகள் (தஃப்ஸீர்கள்)எழுதியவர்களின் போன்றவைகளிலிருந்து எடுத்தது. உங்களுக்கு விவரம் தேவையானால், கேளுங்கள் தருகிறேன். 

 

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் - 1

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

 

அப்துல் மஜீத்

 

முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், இந்த என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, இவைகளை இங்கு பதிக்கிறேன்.


 
அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1
 
// Abdul Majeeth said:

அன்புள்ள ந‌ண்ப‌ர் ஈஸா குரான் அவ‌ர்க‌ளூக்கு உங்க‌ள் பெயர் தெரியாத‌தால் இப்ப‌டி குரிப்பிடுகிறேன்.த‌ங்க‌ளூடைய‌ க‌ட்டுரைக‌லை எல்லாம் ப‌டித்தேன் ந‌ல்ல‌ முய‌ற்சி. பாராட்டுக்க‌ள். //
 
 
அன்பான சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே, உங்கள் மெயிலுக்காக நன்றி.

என்னுடைய தளத்தின் பெயர் ஈஸா குர்‍ஆன் மற்றும் என் புனைப்பெயர் "உமர்". நீங்கள் இணையத்திற்கு புதியவராக இருந்திருப்பீர்கள், அதனால், என் பெயர் தெரியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். மற்றும் புதியவர்களுக்கு என் பெயர் தெரியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமிய தளங்களாகும், அவர்கள் எழுதும் கட்டுரைகளில் என் தளத்தின் பெயரையும் என் பெயரையும் குறிப்பிடுவதில்லை, அதற்கு பதிலாக, "கிறிஸ்தவர்கள்" என்ற ஒரு பொதுப்படையான பெயரை குறிப்பிடுகிறார்கள். எங்கள் தளங்களின் தொடுப்பையும் கொடுக்கமாட்டார்கள், அவ்வளவு பயந்துள்ளார்கள், இஸ்லாமுக்காக இணையத்தில் உழைக்கும் அறிஞர்கள். எங்கே உங்களைப் போன்ற புதியவர்கள் எங்கள் தளங்களை படித்துவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்.
 
 
// Abdul Majeeth said:

தங்க‌ளூடைய‌ கீழ்க்கண்ட க‌ட்டுரையில் அதில் முஸ்லிம்க‌ள் ப‌தில் சொல்வ‌தில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளீர்க‌ள். ஆனால் ந‌டைமுரையில் த‌மிழக‌த்தில் முஸ்லிம்க‌ள் ம‌ட்டும்தான் இஸ்லாம் ஒரு இனிய‌ மார்க்கம் மற்றூம் கேள்வி பிறந்தது இன்றூ ( IFT-PERAMBUR ANSWERS BY DR.K.V.S.HABEEB MOHAMMED) போன்ற நிக‌ழ்ச்சிக‌ளீன் மூல‌ம் முஸ்லிம‌ல்லாத‌வ‌ர்க‌ளூக்கு இஸ்லாத்தை ப‌ற்றீய‌ கேள்விக‌ளூக்கு ஒரு ச‌பையில் ப‌ல்வேறூ த‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் முன்னிலையில்,அழகிய‌ முரையில், த‌குந்த ஆதார‌ங்க‌ளோடடு ப‌தில் அளீக்கின்றார்க‌ள். //
 
 
உங்களின் இந்த மெயிலுக்கு சம்மந்தப்பட்டு நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன், அதனை இங்கே படிக்கவும்: "ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? ".

இந்த கட்டுரையில் இஸ்லாமியர்கள் ஏன் மேடைகள் போட்டு, இஸ்லாம் பற்றி விவரிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளேன் படிக்கவும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் நிகழ்ச்சிப் பற்றி தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

நீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் கீழ் கண்ட கட்டுரையிலிருந்து எடுத்துள்ளீர்கள்.

பின் ஏன் இந்த கட்டுரையில் இப்படி எழுதினேன் என்று நீங்கள் யோசிக்கலாம். நான் எழுதிய வரிகளை நன்றாக கவனிக்கவும்.
 
முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

 
நான் மேலே எழுதிய வரிகள் முழுக்க முழுக்க இணையம் வைத்து எழுதுபவர்களுக்கு என்பதை கீழ் கண்ட வரிகளிலிருந்து நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.

// சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "...." என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். //
 
 
அதாவது, இணையம் வைத்து இஸ்லாம் பர‌ப்புவர்கள் நாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, "விஷமிகள், கோழைகள், தொடை நடுங்கிகள்" என்று வசை பாடுகிறார்கள். மற்றும் "இஸ்லாமுக்கும், எங்கள் நபிக்கும்" அவதூறு செய்கிறார்கள் என்றுச் சொல்கிறார்களே தவிர அறிவுடமையோடு பதில் சொல்வதில்லை. அப்படி பதில் சொல்ல விரும்புபவர்கள் கூட,

யாருக்கு பதில் சொல்கிறார்கள்?

அவர்களின் தளத்தின் பெயர் என்ன?

எந்த கட்டுரைக்கு பதில் சொல்கிறோம்?

என்று நியாயமான முறையில் பதில் சொல்வதில்லை.
 
 
// Abdul Majeeth said:

உங்க‌ளீட‌ம் ச‌த்திய‌ வேதாக‌ம‌ம் இருப்ப‌தாக‌ சொல்லும் நீங்க‌ள் (அல்ல‌து உங்க‌ள் போதகர்க‌ள்) இது போன்ற ஓர் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்த‌லாம் அல்ல‌வா? முஸ்லிம்க‌ளாகிய‌ நாங்க‌ள் அத‌னை மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறோம். //
 
 
நான் மேலே கொடுத்த கட்டுரையை நீங்கள் படித்தால் உங்களுக்குப் புரியும் ஏன் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், இதற்கு பல காரணங்களை நான் கொடுத்துள்ளேன். மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நான் அக்கட்டுரையில் குறிப்பிட்ட அவசியங்கள் இல்லை, எனவே, நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால், அனேக இணையங்கள், புத்தகங்கள் எங்களுக்கு உண்டு, அதாவது இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு பதில் தருவதற்கு. தமிழில் கடந்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் காலம் செல்லச் செல்ல அனேக தளங்கள், கேள்வி பதில் தளங்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே எழுதிய கட்டுரையை படித்துவிட்டு, இந்த என் பதிலை(கடிதத்தை) படிப்பீர்களானால், உங்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும்.

மற்றும் எங்களுக்கு இஸ்லாமில் உள்ளது போல (உபயோகமில்லாத) சடங்காச்சாரங்கள் இல்லை, அதாவது, இத்தனை முறை தொழுதுக்கொள், இத்தனை முறை கைகளை இப்படி கழுவு, நமாஜ் படிக்கும் போது இப்படி விரலை ஆட்டு போன்ற பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லாததால், கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மையாக "இறைவனை தொழுதுக்கொள்ளும்" முறைப்பற்றி அதிக சந்தேகங்கள் வருவதில்லை. எனவே, கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத்தேவையில்லை.
 
// Abdul Majeeth said:

மேலும் என‌க்கு த‌ங்க‌ளால் ஒரு விஷய‌ம் தெரிய‌வேண்டும் அதாவ‌து பைபிளீன் வ‌ர‌லாறூ, புதிய‌ ம‌ற்றூம் ப‌ழய‌ ஏற்பாடு இய‌ற்றப்பட்ட‌து யாரால்?எப்பொழுது? தொகுக்க‌ப்ப‌ட்ட‌து யாரால்?எப்பொழுது? கால‌ங்க‌லை (கி.மு,கி.பி) தெளீவாக‌ குறீப்பிட‌வும். //
 
 
உங்களுக்கு பைபிள் பற்றிய விவரங்கள் தேவையானால், அவைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் சென்று ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளவும், தமிழில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அதே நேரத்தில், எந்த கேள்வியை நீங்கள் பைபிளுக்கு எதிராக கேட்பீர்களோ, அதே கேள்விக்கு நீங்கள் குர்‍ஆனுக்காகவும் பதில் சொல்லியாக வேண்டும்.

உங்கள் குர்‍ஆன் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் படிக்கவும், உங்களுக்கு உண்மை அப்போது விளங்கும்.

குர்‍ஆன் முழுமையானதா?

குர்‍ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது அவைகள் என்ன?

ஏன் குர்‍ஆனின் பிரதியை எரித்தார்கள்?

இப்போதுள்ள குர்‍ஆன் பிரதிகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பல கட்டுரைகள் உண்டு.
 
 
முதலாவது, குர்‍ஆன் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள், பைபிள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் ஒரு முழுமையான நிலைக்கு வரமுடியும், உங்கள் இமாம்கள், அறிஞர்கள் சொல்வதை மட்டும் நம்பினால், நீங்கள் எதையும் முழுவதுமாக புரிந்துக்கொள்ளமாட்டீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொன்னதால், நான் விவாதம் பற்றிய சில விவரங்களை தரவிரும்புகிறேன்.

விவாதம் என்றுச் சொன்னால், அதற்கு ஒரு தலைப்பு வேண்டும், நீங்கள் எந்த தலைப்பையும் தெரிந்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு,
 
1) பைபிளின் வரலாறு மற்றும் குர்‍ஆனின் வரலாறு

2) இயேசுவின் வாழ்க்கை மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை

3) முஹம்மதுவின் திருமண வாழ்க்கை

4) இயேசு தேவ குமாரனா? மற்றும் முஹம்மது இறைத்தூதரா?

5) இஸ்லாம் அமைதி மார்க்கமா?

6) இஸ்லாம் எப்படி பரவியது?

7) பைபிள் முரண்பாடுகள், குர்‍ஆன் முரண்பாடுகள்

 
இத்தலைப்புக்கள் ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன், நீங்கள் உங்கள் சொந்தமாகவும் தலைப்புக்களைத் தரலாம். ஆனால், நீங்கள் பைபிள் பற்றி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், நான் என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் நான் குர்‍ஆன் பற்றி கேள்விகள் எழுப்புவேன்.

நீங்களும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அல்லது விளக்கலாம், இப்படி நாம் தொடருவோம்.

அதை விடுத்துவிட்டு, கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தால், அது விவாதம் என்று சொல்லமாட்டார்கள். என் பழக்கமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் குர்‍ஆனுக்கும், முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் கேள்விகள் கேட்பது தான்.

இதனை என் எல்லா கட்டுரைகளையும் படித்தால் உங்களுக்கு புரியும், படிக்கவும்,

என் தளங்கள்:

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்:

மற்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலும் என் கட்டுரைகள் வெளியாகின்றன.

மேற்கொண்டு விவாதம் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிவிக்கவும்.

 
1. எழுத்து விவாதத்தை மட்டுமே நான் ஏற்பேன்.

2. மெயில் மூல‌ம் ந‌ட‌ந்தாலும் ச‌ரி, அல்ல‌து

3. த‌மிழ் கிறிஸ்டிய‌ன்ஸ் போர‌ம் (www.tamilchristians.com) த‌ள‌த்தில் நாம் விவாதித்த‌லும் ச‌ரி.

4. மெயில் மூலம் நடந்தாலும், என் தளங்களில், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலும் உங்கள் பதிலும் என் பதிலும் பதிக்கப்படும், இதனால் எல்லா மக்களும் நம் உரையாடலை அறியா வாய்ப்பு உண்டாகும்.

 
உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும்.

உண்மையிலேயே நீங்கள் புதியவராக இருந்தால், என் தள அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் கிறிஸ்தவம் பற்றியும், இஸ்லாம் பற்றியும் ஓரளவிற்கு உங்களுக்குப் புரியும்.

கீழ் கண்ட இஸ்லாமிய அறிஞர்களுக்கு(தளங்களுக்கு) கிறிஸ்தவர்களின் பதில்கள்

டாக்டர் அஹமத் தீதத்
டாக்டர் ஜாகிர் நாயக்
பி. ஜைனுல் ஆபீதீன்
இஸ்லாம் கல்வி தளம் மற்றும் எம். எம். அக்பர்
தமிழ் முஸ்லீம் (இது தான் இஸ்லாம் தளம்)
நேசமுடன் தளம்
அபூமுஹை தளம்
ஏகத்துவ தளம்
சுவர்ன தென்றல் தளம்
இஸ்லாம் இணைய பேரவை தளம்

இப்படிக்கு உங்கள் சகோதரன்

உமர் 

 
 

திங்கள், 19 ஜனவரி, 2009

ஏகத்துவத்திற்கு பதில்:பாகம் - 3 - அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?

ஏகத்துவத்திற்கு பதில் அல்லது கேள்வி


ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 3
 

அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?Mis-Quotations in the Arabic Text of the Qur'an?

 
தொகுத்தவர் பேரி பீடர்ஸ்(Barry Peters)
 
இஸ்லாமியர்கள் அவ்வப்போது கேட்பார்கள்: "சுவிசேஷ நூல்கள் நான்கு இருக்கின்றன. இவைகளில் எது சரியானது?" இக்கேள்விக்கு பதில் கீழே தரப்படுகிறது.


குர்‍ஆனில் ஒரு சில‌ குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் பல இடங்களில் மறுபதிவு(Parallel Accounts) செய்யப்பட்டுள்ளது, அவைகளில் கீழ் கண்ட நிகழ்ச்சிகள் அடங்கும்:
 
ஆதாமின் படைப்பு, முதல் பாவம் மற்றும் சாத்தானின் வீழ்ச்சி (2:30-39; 7:11-25; 15:28-43; 17:61-65; 18:50; 20:116-123; and 38:71-85),

நோவாவின் கதை (7:59-64; 11:25-49; 23:23-30),

ஆபிரகாமும் மற்றும் விக்கிர ஆராதனைக்காரர்களும் (21:51-71; 26:70-82; 29:16-18, 24,25; 37:83-98),

லோத்துவின் கதை (11:77-83;15:61-75; 26:160-175; 27:54-58; 29:28-35),

மோசேயின் குழந்தைப் பருவம் (20:38-40; 28:7,11-13),

மோசேவும் எரியும் புதரும் (20:9 -24; 27:7-14; 28:29-35),

மோசேவும், பார்வோனும் மற்றும் மந்திரக்காரர்களும் (7:103-126; 20:65-73; 26:41-68; 44:17-32; 79:15-26),

இஸ்ரவேல் மக்களுக்கு அல்லாவின் கட்டளைகள் (2:58,59; 7:161-162),

யோவான் ஸ்நானகனின் பிறப்பு (3:38-41; 19:1-15),

இயேசுவின் பிறப்பு (3:42-48; 19:16-34).

மேலேயுள்ள நிகழ்ச்சிகளின் விவரங்களில் அனேக வித்தியாசங்கள் உண்டு, ஆனால், நாம் "நேரடி பேச்சில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே" கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
 
ஒரே நிகழ்ச்சியில் வரும் "நேரடி பேச்சுக்களில்" உள்ள வித்தியாசங்கள்


Variant "direct speech" quotations from the same incidents:


கீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் "நடந்துவிட்ட‌ நிகழ்ச்சியைப்" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும்(உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு? ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் "நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் "பேசிய வார்த்தைகள்" எது? அவைகளில் எந்த விவரம் சரியானது?
 
1) ஆதாமை உருவாக்கியதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறார்


 
15:28 (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும், 38:71 (நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; 
 
2) ஆதாமைப் பற்றி தூதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை
 
2:34 ... "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது... 15:29 ..., "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! 
 
3) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அல்லாஹ்வின் கட்டளைகள்
 
 
2:35 மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.  7:19 (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்). 
 
4) ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டுகிறார்
 
 
7:24 (அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.  20:123 "இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்
 
5) நோவா தன் மக்களுடன் பேசும் விவரங்கள்
 
 
7:59 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார். 11:25-26 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்."  "நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்" (என்று கூறினார்). 
 
6) நோவாவிற்கு அல்லாவின் கட்டளைகள்
 
 
11:37 "நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்."  23:27 அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம். 
 
7) ஆபிரகாம் தன் தந்தையிடமும், தன் மக்களிடமும் கேள்வி கேட்கிறார்
 
 
21:52 அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது  26:70 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது,  37:85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது, 
 
 
8) ஆபிரகாமிடம் அவ்வூர் மக்கள் தங்கள் விக்கிர ஆராதனைப் பற்றி நியாயப்படுத்துகிறார்கள்
 
 
21:53 அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.  26:74 (அப்போது அவர்கள்) "இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்" என்று கூறினார்கள். 
 
 
9) லோத்துவிற்கு தூதர்களின் கட்டளைகள்
 
 
11:81 (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"  15:65 ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள். 
 
 
10) மோசே எரியும் புதரைக் காண்கிறார்
 
 
20:10 அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்).  27:7 மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!  28:29 ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். 
 
 
11) எரியும் புதரிலிந்து அல்லாஹ் மோசேயிடம் பேசுகிறார்
 
 
27:9 "மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.  27:10 "உம் கைத்தடியைக் கீழே எறியும்;" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார் "மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்." 
 
 
12) வெண்குஷ்ட கைப் பற்றி அல்லாஹ் மோசேயிடம் விவரிக்கிறார்
 
 
20:22 "இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும்.  27:12 'இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.  28:32 உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும் , அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" (என்றும் அவருக்கு கூறப்பட்டது). 
 
 
13) மோசேயிடம் சவால் விட்ட சூனியக்காரர்கள்
 
 
7:115 "மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.  20:65 "மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?" என்று (சூனியக்காரர்) கேட்டனர். 
 
 
14) சூனியக்காரர்களின் மனம் வருந்துதல்
 
 
7:120-122 அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து "அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; "அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள்.  20:70 (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - "ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்" என்று கூறினார்கள். 
 
 
15) சூனியக்காரர்களுக்கு பார்வோனின் மிரட்டல்
 
 
7:123 அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!  20:71 "நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று (ஃபிர்அவ்ன்) கூறினான். 
 
 
16) மோசேவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்
 
 
26:52 மேலும், "நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்" என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.  44:23 "என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்.) 
 
 
17) இஸ்ரேல் மக்களுக்கு கட்டளைகள்
 
 
2:58 இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்;மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.  7:161 இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது. 
 
 
18) ஸமுது கூட்டத்தாரை ஸாலிஹ் எச்சரிக்கிறார்
 
 
7:73 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.  11:64 "அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்).  26:154-155 அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."  "இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்." 
 
 
19) தேவ தூதரிடம் ஜகரியா பேசுகிறார்
 
 
3:40 அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான்.  19:8 (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார். 
 
 
20) ஜகரியாவிடம் தேவதூதர் பேசுகிறார்
 
 
3:41 "என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான்.  19:10 (அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான். 
 
 
21) இயேசுவின் பிறப்பு அறிவிப்பின் போது மரியாளின் கேள்வி
(கீழ்கண்ட வசனங்களில் ஆங்கில வார்த்தைகளை நாம் இட்டுள்ளோம்)
 
 
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்(Walad) உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."  19:20 அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்(Ghulam) உண்டாக முடியும்?" என்று கூறினார். 
 
 
22) மக்கா மக்களிடம் என்ன சொல்லவேண்டுமென்று முஹம்மதுவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்
 
 
35:40 "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்).  46:4 "நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. 

Source: http://www.answering-islam.org/Authors/Peters/misquotations.pdf
Source Tamil: http://www.answering-islam.org/tamil/authors/peters/misquotations.htm

 
 
 ஏகத்துவத்திற்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர மறுப்புக்களை படிக்க: 

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா? - Is the Savior necessarily God?

பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்

 

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா?Is the Savior necessarily God?

 

சாம் ஷமான்(Sam Shamoun)

 
கேள்வி:
 
இயேசுவை "மீட்பர் – Saviour" எனச் சொல்லப்பட்டுள்ள‌தினால், கிறிஸ்துவர்கள் அவரைக் "கடவுள்" என வாதிடுகின்றனர். ஆனால், பழைய ஏற்பாட்டில் யேகோவா தேவன் ஒருவ‌ரே "மீட்பர்" எனச் சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 43:11, 45:21, ஓசியா 13:4). இந்த வாதம், யேகோவா தேவன் ஒருவரே மீட்பராக இருப்பினும் அவர் தம் சித்தத்தை நிறைவேற்றுகையில் தமது பிரதிநிதியாக இன்னொருவரை நியமித்து அனுப்புகிறார் என்கின்ற விவரத்தை காணத் தவறுகிறது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ஒத்னியேல் என்கின்ற ஒரு இஸ்ரவேலரை, இஸ்ரவேல் மக்களை மீட்க யேகோவா தேவன் பயன்படுத்தினார் எனப் பார்க்கிறோம். அவரும் கூட "மீட்பர்" என்றே அழைக்கப்படுகிறார்! (நியாயாதிபதிகள் 3:9, ஓபதியா 1:21). யேகோவா தேவன் ஒருவரே மீட்பர் எனச் சொல்லும் போது, அது, அவர் ஒருவரே மீட்பின் பிறப்பிடமாய் இருக்கிறார் என்றே உண்மையில் அர்த்தமாகின்றது. வேறு எவரையும் மீட்பினைக் கொண்டுவர தேவன் பயன்படுத்த முடியாது என இதனைப் பொருள் கொள்ளலாகாது. இதன் அடிப்படையில், இயேசு, தேவனின் பிரதிநிதியாக தேவனால் "மீட்பர்" எனப் அழைப்பட்டிருந்தால், அவரைக் "கடவுள்" என‌ அழைப்பது எவ்விதத்தில் நிரூப‌ண‌மாகும்?
 
பதில்:

யேகோவா தேவனுக்கு இணையாக வேறு எந்த இரட்சகரும் இல்லை எனச் சொல்லும் வேத வசனங்கள் இவைகளே:
 
"நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்து கொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை"(ஏசாயா 43:10-11).

 
"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறிய வேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை"(ஓசியா 13:4).
 
 
ஆனால் இந்தக் கேள்வியிலேயே உள்ளபடி "இரட்சகர்/ மீட்பர்" என அழைக்கப்படும் வேறு நபர்களும் உண்டு எனவும் இது அவர்களை கடவுளாகவோ அல்லது தெய்வீகத் தன்மை உள்ளவர்களாகவோ ஆக்கவில்லை எனவும் காண்கிறோம்.
 
 
"கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோப மூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப் போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும் படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப் பண்ணினார்"(நியாயாதிபதிகள் 3:8-9).

"ஏசாவின் பர்வதத்தை நியாயந் தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்" (ஒபதியா 1:21).
 
 
இவ்வாறு ஒப்பிடுவதில் பிரச்சினை என்னவென்றால், இயேசுவை இரட்சகர் என்று அழைப்பதற்கும் ஏனையோரை அவ்வாறு அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான். முதலாவதாக, தேவன் இந்த மனிதர்களை "இஸ்ரவேலை அதன் பகைவர்களிடமிருந்து மீட்பதற்காக" பயன்படுத்தினார். அவர்கள் இஸ்ரவேலின் நெருக்கத்தினின்று அதைக் காப்பாற்ற அனுப்பப்பட்டனர். அவர்களின் பாவத்தினின்று அவர்களை மீட்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நித்திய வாழ்வினை வழங்கவோ அவர்கள் அனுப்பப்படவில்லை. அது தேவனால் மட்டுமே முடியும்.

 
இரண்டாவதாக, இந்தக் கேள்வியிலேயே அமைந்துள்ளபடி, இரட்சிப்பு யேகோவா தேவனிடமிருந்து மட்டுமே வர முடியும்; அது அவருக்கே உரியது என பழைய ஏற்பாடு வேத வசனங்கள் போதிக்கிறது.
 
"இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக" (சங்கீதம் 3:8).

"நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்" (யோனா 2:9).
 
 
இங்கு தான் இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கான நிரூபணம் வெளிப்படுகிறது. இரட்சிப்பு ஆண்டவராகிய இயேசுவுக்கே உரியதாகி அவரிடமிருந்தே புறப்படுகிறது என புதிய ஏற்பாடு கூறுகிறது.
 
 
"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்" (வெளி 7:10).
 
 
மேலும், யேகோவா தேவன் அவர் தம்மக்களை அவருக்கே உரியவர்களாக்கும் பொருட்டு அவர்களை பாவத்தினின்று மீட்டுக் கொண்டாரென எபிரேய வேதமாகிய பைபிள் தெரிவிக்கின்றது‌.
 
 
"இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக் கொள்வீர்களானால்,சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது" (யாத்திராகமம் 19:5).

"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்"(உபாகமம் 7:6).

"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்து கொண்டார்"(உபாகமம் 14:2).

"கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக் கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்.."(உபாகமம் 26:18).

"இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்"(சங்கீதம் 130:7-8).

"அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப் படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ் செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் "(எசேக்கியேல் 37: 23).
 
 
எனினும், ஆண்டவராகிய இயேசு, யேகோவா தேவன் செய்தது போன்றே செய்தார் என புதிய ஏற்பாடு போதிக்கிறது. சான்றாக, அவர் பாவிகளை அவர்களது பாவங்களினின்று மீட்டு அவர்களை அவரது சொந்த ஜனமாக்கிக் கொள்ளவே இவ்வுலகிற்கு வந்தார் என வாசிக்கிறோம்.
 
"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.."(மத்தேயு 1:21).

"நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்."(தீத்து 2:13-14).
 
இறுதியாக, விசுவாசிப்போர் தங்களது அடைக்கலத்தையும் பரிசுத்தமாகுதலையும் சகல முழங்கால்களும் முடங்கும் யேகோவா தேவனிடம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என தீர்க்கதரிசிகள் அறிவித்தார்கள்.
 
"நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்; இதைப் பூர்வகால முதற் கொண்டு விளங்கப் பண்ணி அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்" (ஏசாயா 45: 21-25).
 
 
மேலும், பழைய ஏற்பாட்டின் படி யேகோவா தேவனுக்கே உரித்தான குறிப்பிடப்பட்ட காரியங்கள் இயேசுவுக்கும் குறிப்பிடப்பட்டன என புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.
 
 
"நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்."(I கொரிந்தியர் 1:30-31).

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்"(பிலிப்பியர் 2:9-11).
 
 
மேலே சொன்னவைகள் ஒரு விவரத்தை தெளிவாக்குகிறது. இயேசுவை, ஒத்னியேல் போன்றவர்களின் வரிசையில் இரட்சகராகக் கருதப்படலாகாது. ஏனெனில், அவர் இஸ்ரவேல் மக்களை அவர்களின் பகைவர்களினின்று இரட்சிக்க அனுப்பப்பட்ட பிரத்தியோகமான மனிதத் தூதர் அல்லர். மாறாக, அவர் தேவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை செய்யும் படிக்கு பிதாவினால் அனுப்பப்பட்டு இரட்சிப்பின் ஊற்றாகச் செயல்பட்டார். அதாவது அவரை விசுவாசிக்கும் சகல மனிதரையும் அவர் தம் பாவக்கறை நீங்க அவரது மாசற்ற தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து நித்திய மீட்பை அவர்களுக்கு அவரது கீழ்படிதலாலும் தியாகத்தினாலும் பெற்றுக் கொடுத்தார்.
 
 
"கிறிஸ்துவானவர் வரப் போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச் சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும் பொருட்டு அவர் மரண மடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்து கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்" (எபிரெயர் 9:11-15).

"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்"(I யோவான் 4:9,10,14).
 
 
மேலே சொன்னவைகளின் அடிப்படையில், புதிய ஏற்பாட்டின் வேத வசனங்கள் இயேசுவே ஜீவனை உண்டாக்குபவர், அவரே நித்திய மீட்பின் ஊற்றுக்கண், அவரே நமது தேவன் மற்றும் நமது மீட்பர் என புதிய ஏற்பாடு அழுத்தமாக வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டுகொள்வதில் சற்றும் வியப்பில்லை.(In light of the above it is not surprising to discover that the NT documents emphatically proclaim that the Lord Jesus is the Author of life, the very Source of eternal salvation, our great God and Savior: )
 
"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4).

"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்"(யோவான் 6:37-40).

"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த் தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்"(யோவான் 11:23-27).

"பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்" (அப்போஸ்தலர் 3:14,15).

"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்"(எபிரெயர் 2:10,11).

"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்"(எபிரெயர் 5:8-10).

"...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்"(எபிரெயர் 12:1-2).

"நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:" (II பேதுரு 1:1).

 
த‌ர்க்க‌ சாஸ்திர‌த்தின்(syllogism) அடிப்ப‌டையில் பார்ப்போமானால்:
 
1. யேகோவா தேவ‌ன் ஒருவ‌ரே இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Yahweh God alone is the Source of salvation and life).

2. இயேசு இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Jesus is the Source of salvation and life).

3. என‌வே இயேசுவே யேகோவா தேவனாவார்(Therefore, Jesus is Yahweh God).
  

சனி, 17 ஜனவரி, 2009

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி - The Testimony of Brother Sharafuddin

மலாய் மொழியில் படிக்க‌ - Bahasa Melayu

 

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி


The Testimony of Brother Sharafuddin

 
எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின்(Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன்(Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.

 
இது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை(fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.

 
கடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

 
எனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம்(Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.

 
படிப்படியாக எனது சிந்தனை வளர‌ ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில் இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லை. மற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு "ஆன்மீக அதிருப்தியில்" வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.

 
நான் சொல்லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத்(Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும், பர்து ஐன்(fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கை, என்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும், அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். "ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்" போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும், உண்மையான அனுபவத்தில் பார்த்தால், இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய அன்பையும் கிருபையையும்(ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.

 
வேறுவகையாகச் சொல்லவேண்டுமானால், அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார்! அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih) என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் "அன்பும் கிருபையும்" நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும், பிலா காய்பா(bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.

 
இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள், மற்றும் தக்லிக்(Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. "எப்படி? " என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப(Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் "இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி!( These are God's words, just believe it and obey it!)" என்பது தான். இறுதியாக, அவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய், நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.

 
இது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால், இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மது, இஸ்லாமிய போதனையாகிய‌ "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரை, முழு இஸ்லாமிய உலகில், எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் 5 வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவிலாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால், உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால், அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால், ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த‌, கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும்? ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த(hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன? பேச முடியாததும், காண முடியாததும், செவி மடுக்க முடியாததும், சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன?

 
போதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்காமல்(taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும்? காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா? இது விக்கிர ஆராதனை இல்லையா? இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா?

 
இஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான், படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லாதார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால், இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க‌ முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்து, பின்னர் ஏதாவது ஒரு மத‌ நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.

இவர்களில், இங்கிலாந்திலுள்ள‌, ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்பட, நித்திய வாழ்க்கை, தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில், தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றி, நம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.

"வெறும் கிறிஸ்தவம்(Mere Christianity)" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும், அதன் விளக்கமும், வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும், நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா(Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.

இறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...
 
 
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

"For GOD so LOVED the World, that He gave us His one and only Son, so that all who believe in him should not perish (be destroyed) but would have everlasting life.."(யோவான் 3:16).
 
 
இதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடு ஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது! கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை! கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை. துரதிஷ்டவசமாக, குர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத‌ ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.

 
பைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல‌ தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில், அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடு, கிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.

மலாய் மொழியில், நாங்கள் "நதியின் மகன் - son of the river (Anak Sungai)", "சாவியின் மகன் - son of the key (Anak Kunci)", "நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)" மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும், சாவிக் கொத்தையும், இளம் பிறையையும் குறிப்பிடுகிறது. அனாக்(Anak) என்ற சொல்லுக்கு மகன்(Son) என்ற பொருள் ஆகும். "மகன்" என்ற வார்த்தை வருவதினால், சரீர சேர்க்கையினால்(உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதா? உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா? அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா? இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம், நிச்சயமாக இல்லை!

 
நாங்கள் "சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்" என்றுச் சொல்லக்கூடிய‌ இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்ச‌னையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.

 
"வெறும் கிறிஸ்தவம்" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.

 
கிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால், நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க‌ முடியும். ஆனால், அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடு, நாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும்? நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவே, ஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம், அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால்.

"If Christianity was something we were making up, of course we could make it easier and simpler. But it IS NOT. We cannot compete, in simplicity, with people who are inventing religions. How could we? We are dealing with Fact. Of course anyone can be simple if he has no facts to bother about."

C.S.Lewis, Mere Christianity (New York, The Macmillan Company, 1943, Page 145)
 
 
உங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக!

இப்படிக்கு
ஷரபுத்தீன்

குறிப்பு:

"வெறும் கிறிஸ்தவம்" என்ற நூலை இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்.


இதர சாட்சிகளை தமிழில் படிக்க
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்