ஈஸா குர்ஆனும் மெயில் விவாதங்களும்
அப்துல் மஜீத்
முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, முதல் பாகத்தை பதித்தேன், அதனை இங்கு(அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1) படிக்கவும். இரண்டாம் பாகத்தை இக்கட்டுரையில் காணலாம்.
நான் ஏற்கனவே, என் முதல் பதிலை உங்களுக்கு அனுப்பினேன், ஆனால், அது உங்களுக்கு வந்தடையவில்லை என்றுச் சொல்கிறீர்கள். இது என் இரண்டாம் பதில்.
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:நண்பரே, கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தங்களூடைய குற்றச்சாட்டுக்கள். இதற்கான பதிலை கீழே பார்க்கவும்.
2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?
3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:
4. இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:
a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:என் பதில்:
இஸ்லாம் தோன்றியது கி.பி.6 ஆம் நூற்றாண்டில்,ஸ்தாபிக்கப்பட்ட உடனே அது உலகின் பல மூலைகளூக்கும் பரவியது இல்லையா? அப்படியானால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?அன்றைக்கு கிறிஸ்தவம் பரப்பட்டிருந்த நாடுகளில் இருந்த மக்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யார்? எனவே வீம்புக்காகவும், சுயலாபத்திற்காகவும் வாழ்கின்ற கிறிஸ்தவர்களை தவிர மற்ற கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பது புலனாகிறது அல்லவா?
Umar:
ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு இஸ்லாம் எப்படி பரவியது? அமைதியான முறையில் பரவியது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், இப்படித்தான் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், இஸ்லாமிய ஆதாரங்கள், அதிகார பூரவமான ஹதீஸ்கள் அப்படி சொல்லவில்லை.
• உங்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் கால கட்டத்திலேயே அவர் அனேக நாடுகளுக்கு "இஸ்லாமை தழுவும்படி" கடிதங்கள் எழுதினார்.• இஸ்லாமை ஏற்கிறீர்களா அல்லது போருக்கு தயாரா என்று கேட்டார்.( அஸ்லிம் தஸ்லம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்)• இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் நாட்டில் எங்கள் வீரர்கள் வந்திறங்குவார்கள், உங்கள் நாடுகள் எங்களுக்கு சொந்தமாகும் என்றுச் சொன்னார்.• இப்படி அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளன.
இந்த தலைப்பைப் பற்றி எனக்கும் சகோதரர் அபூமுஹை அவர்களுக்கும் இடையே நடைபெற்ற அனைத்து உரையாடல் கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். சகோதரர் அபூ முஹை அவர்கள் பதித்த அனைத்து கடிதங்களையும் நீங்கள் தமிழில் படிக்கலாம். அவைகளை படித்துப்பார்த்து, இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரப்ப உங்கள் நபி அவர்கள் விரும்பினாரா? என்பதை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.
- ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்.
- இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
- ஈஸா குர்ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
- இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace )
இவைகளையும் படியுங்கள்:
- அபூமுஹை & மத்தேயு 10:14 - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்
- இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்கள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்ஆனிலும் வன்முறை) Top ten reasons why Islam is NOT the religion of peace (Violence in Muhammad's life and the Quran)
முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:
(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates')
(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates')
உங்கள் நபி மறைந்த பிறகு அனேக நாடுகள், இஸ்லாமுக்கு தாங்களாகவே மாறினார்கள் என்று நீங்கள் பெருமைப்பட்டுக்கொண்டு இருந்த நாடுகள், இஸ்லாமின் உன்னத கோட்பாடுகளை கண்டு ஆச்சரியப்பட்டு இஸ்லாமை தழுவிய நாடுகள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நாடுகள், இஸ்லாமைவிட்டு வெளியேறின. ஏன்?
ஏனென்றால், அவர்கள் முஹம்மதுவின் இராணுவ பலத்தைக் கண்டு, பயத்தில் மாறியவர்கள். ஆகையால், தலைவர் போய்விட்டார் இனி நமக்கு என்ன நடக்கும், நாம் இனி இஸ்லாமில் இருக்கவேண்டியதில்லை என்றுச் சொல்லி மாறினார்கள்.
பிறகு இவர்களை வழிக்கு கொண்டுவர, இஸ்லாமின் கட்டுப்பாட்டில் கொண்டு வர "அபூ பக்கர்" அவர்கள் இரண்டாண்டுகள் சண்டையிட்டு, போரிட்டார். இதனை நீங்கள் அறியமாட்டீர்களா? "The Wars Of Al-Riddah" என்றால் என்ன என்று கேள்விப்பட்டதில்லையோ?
Ridda warsFrom Wikipedia, the free encyclopediaThe Ridda wars (Arabic: حروب الردة), also known as the Wars of Apostasy) were a set of military campaigns against the rebellion of several Arabic tribes against the Caliph Abu Bakr during 632 and 633 AD, following the death of Muhammad. The revolts, in Islamic Historiography later interpreted as religious, were in reality mainly political.[1][2]
Source: http://en.wikipedia.org/wiki/Ridda_wars
ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.
அருமை நண்பரே, சுயலாபத்திற்காக, உயிருக்கு பயந்து அன்று இஸ்லாமை தழுவியவர்கள் அனேகர். இன்றும் அப்படித்தான், இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள், தாங்கள் வேறு ஒரு மார்க்கம் நல்லது என்று கண்டு, அதற்கு மாற நினைக்கும் போது, அவர்களுக்கு மரண தண்டனை என்றுச் சொல்லி,பயப்படவைத்து, கேவலமாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது, "உங்கள் இஸ்லாம்".
இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை நாங்கள் கொல்வதில்லை என்று சட்டம் கொண்டுவரச் சொல்லுங்கள், அப்படி வந்தால், அதனை சரியாக நியாயமான முறையில் பின்பற்றினால், இஸ்லாம் எத்தனை ஆண்டுகள் தாக்குபிடிக்கும் என்பதை நாமே நம் கண்களால் காணமுடியும். எனவே, இஸ்லாமை அமைதியான முறையில் முஹம்மது பரப்பினார் என்ற பழைய கதையையே இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:மேலும் கடந்த சில நூற்றாண்டுகளில் உலகத்தையே கலக்கிய தத்துவமான கம்யூனிசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நாடுகள் கிறிஸ்தவ நாடுகளா? இஸ்லாமிய நாடுகளா? நாங்கள் கம்யூனிசத்தை சரி என்று சொல்ல வரவில்லை ஆனால் ஏன் கிறிஸ்தவ சித்தாந்தங்கள் அவர்களை தடுக்கவில்லை? இன்னும் உண்மையை சொல்வதென்றால் நாத்திகர்கள் அதிகம் இருப்பது கிறிஸ்தவ மார்க்கத்தில் தான்.
Umar:
கிறிஸ்தம் இஸ்லாமைப் போல அடாவடிச் செய்து, அதை நம்பிக்கொண்டு இருக்கிறவர்களை பயப்படவைத்து, வேறு மார்க்கத்திற்கு(நாத்தீகாமானாலும் சரி, கம்யூனிசமானாலும் சரி, இஸ்லாமானாலும் சரி...) மாறினால் சட்டங்கள் போட்டு தண்டிக்காது. கிறிஸ்தவம் ஒரு மனிதனின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும், அவன் இறைவனுக்கு விருப்பமான செயல்களை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
மனிதனுக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கிறிஸ்தவம் அளிக்கிறது. ஒரு வேளை ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமுக்கு மாறினால், கிறிஸ்தவ பெரியோர்கள் ஓரிரு முறை அறிவுரைச் சொல்வார்கள், கேட்கவில்லையானால், விட்டுவிடுவார்கள். அதை விட்டுவிட்டு, இஸ்லாமைப் போல, பயப்படவைத்து, அவனை துன்பப்படுத்தி, படாதபாடு படுத்தமாட்டோம். இஸ்லாமை போல உயிரை எடுக்கமாட்டோம், பத்வாக்கள் போடமாட்டோம்.
ஏன் கிறிஸ்தவ சித்தாந்தங்கள், கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுகிறவர்களை தடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள், நான் ஒரு கேள்வியை கேட்கிறேன், ஏன் முஹம்மது மரித்ததும் அனேக நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின? ஏன் இஸ்லாமின் கோட்பாடுகள் அவர்களை தடுக்கவில்லை. உங்கள் முதலாம் காலிபா போர் செய்துதான் அவர்களை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தார். அடுத்தவரின் இரத்தத்தில் வாழ்வதற்கு கிறிஸ்தவம் ஒன்றும் இஸ்லாம் இல்லையே.
இவ்வுலகத்தில் மனிதன் எடுக்கும் முடிவு, அவனது அடுத்த உலகத்தை பாதிக்கும் என்று எல்லா மார்க்கமும் சொல்கின்றன. ஆனால், நீங்கள் ஒரு படி மேலே சென்று, நீ உன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையானால், கொன்றுவிடுவோம் என்று பயப்படுத்துகிறீர்கள்.
உங்களைப்போல அராஜகம் செய்து, பயப்படவைத்து வெளியேறுகிறவர்களை தக்கவைக்கும் கேவலமான நிலை எங்களுக்கு வேண்டாம்.
// Abdul Majeeth Said:
இன்னும் உண்மையை சொல்வதென்றால் நாத்திகர்கள் அதிகம் இருப்பது கிறிஸ்தவ மார்க்கத்தில் தான்.//
நண்பரே கொஞ்சம் சரியாகச் சொல்லுங்கள். ஒருவன் நாத்தீகனாக மாறினால், அவன் மறுபடியும் கிறிஸ்தவன் என்றுச் சொல்லமாட்டான், அதே போல ஒருவன் இஸ்லாமிலிருந்து நாத்தீகனாக மாறினால், இஸ்லாமியன் என்றுச் சொல்லமாட்டான், "முன்னால் கிறிஸ்தவன், முன்னால் இஸ்லாமியன்" என்றுச் சொல்லிக்கொள்வான்.
ஒரு விவரத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், தற்காலத்தில் இஸ்லாமின் உண்மை முகம் கண்டுக்கொண்ட அனேக இஸ்லாமியர்கள் நாத்தீகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:எனவே உலக வரலாற்றை புரட்டி பாருங்கள் நண்பரே. வரலாறு நெடுக யூதர்களை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட கிறிஸ்தவர்களை எண்ணி பாருங்ள். சிலுவை போர்கள்(CRUSADE) என்ற பெயரில் மனித குலத்துக்கே பெரும் அபாயமாக செயல்பட்டது யார்? உங்களூடைய திருச்சபைகள் அல்லவா? அன்பை போதித்த இயேசுவின் பெயரால் அக்கிரமம் செய்தது யார்? மேலும் உண்மையை சொல்வதென்றால் வாளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், மிரட்டல்களாலும், பொய்களாலும்,தந்திரத்தாலும் முக்கியமாக பணத்தாலும் மதமாற்றம் செய்(வ)தது யார்? சிந்தியுங்கள் சகோதரரே தெளிவு பிறக்கும்.
ஆமாம், ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் வெறியாட்டம் போட்டனர், சிலுவைப் போர் என்றுச் சொல்லி, இயேசு சொல்லாததை செய்தனர். இதைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேதனை அடைகிறோம்.
ஆனால், உங்கள் முஹம்மது சொன்னதும், செய்ததும் வெறியாட்டம் தானே, கொலையும், கற்பழிப்பும், குடியும் கும்மாளமும் போட்டு ஒரு ஆன்மீக தலைவரைப்போலவே அவர் நடந்துக் கொள்ளவில்லையே. நீங்கள் குற்றம் சாட்டினால், கிறிஸ்தவர்கள் மீது சாட்டலாம், ஆனால் ,கிறிஸ்து மீது சாட்டமுடியாது.
தன் மார்க்கம் தான் சரியானது என்ற எண்ணத்தை மற்றவர்கள் மீது திணித்து, அவர்கள் அடிபணியவில்லையானால் இரத்த ஆறு ஓடும் என்றுச் சொல்லி, தன் "அமைதியான" மார்க்கத்தை பரப்பியவர் தானே உங்கள் நபி அவர்கள். இதில் வேறு, இன்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே மூச்சாக "இஸ்லாம் என்றால் அமைதி" என்ற பொய்யை ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், எத்தனை நாட்கள் தான் இப்படி செய்வீர்கள்?
சரி போர்கள் தான் புரிந்தார், அப்பெண்களையாவது விட்டுவிடலாம் அல்லவா? அடிமைப்பெண்களை கற்பழிக்கலாம் என்ற கட்டளையே குர்ஆனில் புகுத்திவிட்டாரே? "உங்கள் முஹம்மதுவை விட நீங்கள் நல்லவராக இருப்பீர்கள்". ஜுவரிய்யா, ரிஹானா மற்றும் சுபியா (Juwairiya, Safiyah & Rayhanah) என்ற மூன்று பெண்களோடு முஹம்மதுவிற்கு என்ன உறவு இருந்தது என்று உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் (இபின் இஷாக்) படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்த கட்டுரைகளை படித்துப்பாருங்கள்,
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:தங்களின் மற்றொரு குற்றச்சாட்டு:b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)
இந்த வசனத்தை கொஞ்சம் நிதானமாக மீண்டும்,மீண்டும்
படித்து பாருங்கள்.திரு.பவுல் அவர்களுக்கும் கனகச்சிதமாக பொருந்துகிறது அல்லவா? உண்மையில் இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கியவர், இயேசுவை நேரில் கண்டது கிடையாது,கிறிஸ்தவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்,தன்னுடைய மதத்தை பரப்ப இயேசுவின் நாமத்தை துஷ்பிரயோகாப்பாடுத்திக்கொண்டவர்,தன்னுடைய மதத்தை பரப்ப பொய் சொல்லலாம்,தந்திர யுக்திகளை கையாலளாம் இன்னும் எண்ணற்ற தான் தோன்றி கோட்பாடுகளை உண்டாக்கிய திரு.பவுல் அவர்களையும் கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்ல முடியுமே.நான் ஏன் இந்த குற்றச்சாட்டுகளை வைக்கின்றேன் என்றால் திரு.பவுல் அவர்களின் அங்கீகாரம் என்ன என்பதுதான் என் கேள்வீ?
Umar:
அனேக கொலைகள் செய்தவர், கற்பழித்தவர், தனக்கு 50 வயதாக இருக்கும் போது பேத்தி வயதுள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொண்டவர், தன் வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்து செய்தபிறகு அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டவர், தன் மார்க்கத்தை பரப்ப வன்முறை கடிதங்களை அனுப்பி பயப்படவைத்தவர், போரில் கிடைத்த பெண்களை வைத்துக்கொண்டவர், கற்பழித்தவர், இப்படிப்பட்டவர் "எனக்கு ஒரு தூதன் காணப்பட்டு குர்ஆனை இறக்கினார்" என்றுச் சொன்னால் நம்புவீர்கள். ஆனால், இந்த கீழ்தரமான எந்த செயலையும் செய்யாத அப்போஸ்தலர் பவுல் உங்களுக்கு பொய்யராக தெரிகிறார். என்ன செய்ய, காலம் கெட்டுகிடக்கு.
உங்கள் முஹம்மதுவிற்கே நீங்கள் அங்கீகாரம் கொடுக்க வெட்கப்படாத போது, இயேசுவிற்காக தன் வாழ்க்கையை கொடுத்தவரை நாங்கள் அங்கீகரிப்பதில் எந்த தவறும் இல்லை, என் அருமை இஸ்லாமிய சகோதரரே!
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:?நீங்கள் மேற்கோள் காட்டிய அதே மத்தேயு 7 அதிகாரம் 21,22,23,24 வசனங்களை திரும்ப,திரும்ப வாசித்து பாருங்கள். எத்தனை தெளிவாக இயேசு திரு.பவுல் அவர்களின் கள்ளதீர்க்கதரிசனம் பற்றி உரைத்துவிட்டு போயிருக்கிறார் என்பது புரியும்.முஹம்மத் நபியின் தூதுத்துவத்தை பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்யும் நீங்கள், பவுல் அடிகளாருக்கு ஏன் வேறோர் அளவுகோலை தேர்வு செய்கிறீர்கள்.
எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு நேர் வழி காட்டி அருள்வாராக.
இது என்னுடைய 2 வது கடிதம், முதல் கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை. இப்படிக்கு,
அப்துல் மஜீத்.
அருமை நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட மத்தேயு 7: 21 லிருந்து 24 வரை படித்தேன், நண்பரே. என்ன தான் அற்புதங்கள் செய்திருந்தாலும், தான் சொல்லிய வசனங்களை பின்பற்றாமல் வாழ்பவர்களுக்கு "உங்களை நான் அறியவில்லை என்று இயேசு சொல்லிவிடுவார்". இன்று உலகில் முஸ்லீம்களாகிய உங்களில் சிலர், இயேசு சொன்ன அமைதி மார்க்கத்தை விட்டுவிட்டு, உங்கள் நபி சொன்ன மார்க்கத்தை பின்பற்றுகிறீர்கள், உன் சத்துருக்களை நேசியுங்கள் என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, சொந்த நாட்டுக்காரனையும் கொல்கிறீர்கள். உங்களைப் பார்த்து இயேசு சொல்வார், அக்கிரம செய்கைக்காரர்களை என்னை விட்டு அகன்றுப்போங்கள்.
ஒன்றைச் சொல்லட்டுமா? முஹம்மதுவிற்கும் அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே எவ்வளவு பெரிய ஏணியை வைத்தாலும் எட்டாது சகோதரரே. அவ்வளவு கேவலமான வாழ்க்கையை உங்கள் நபி வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். இயேசு, "அவர்கள் கனிகளால் அவர்களை அறியுங்கள் என்றார்". முஹம்மதுவின் கனிகள் என்ன வெறுப்புக் காட்டுதல், கொலை செய்தல், கற்பழித்தல், கொள்ளையடித்தல், அடிமைகளோடு உடலுறவு கொள்ளுதல், இது தானே உங்கள் நபியின் கனிகள்.
சமுதாயத்தில் ஒரு சாதாரண சராசரி மனிதனின் அளவுகோலோடும் உங்கள் முஹம்மதுவை அளக்கமுடியாது நண்பரே. இப்படிப்பட்டவரை நாங்கள் ஒரு போதும் நபியாக ஏற்கமுடியாது, அவரை பின்பற்றுகிறவர்களாகிய இன்றைய தீவிர பற்றுள்ள இஸ்லாமியர்களின் செய்கைகளையும் நாங்கள் கண்டுக்கொண்டு தான் இருக்கிறோம், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தாயைப்போல பிள்ளை.
உங்கள் முஹம்மதுவினுடைய வாழ்க்கையை முழுவதுமாக மக்களின் முன்பாக வைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதே போல இயேசுவின் வாழ்க்கையையும், மற்ற அனைத்து சீடர்களின் வாழ்க்கையையும் நாங்கள் முன்வைக்கிறோம். பிறகு மக்கள் அல்லது நம் விவரங்களை படிக்கும் வாசகர்கள் முடிவு எடுக்கட்டும், ஒரு நபி எப்படி இருக்கவேண்டும், ஒரு ஆன்மீக தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று வாசகர்களே முடிவு எடுக்கட்டும்.
நான் மேலே சொன்ன விவரங்கள் அனைத்தும் ஏதோ இஸ்லாமியர் அல்லாதவர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்துச் சொன்னதாக நினைக்கவேண்டாம், அவைகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் ஆரம்ப கால சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதைகள், இஸ்லாமிய உரைகள் (தஃப்ஸீர்கள்)எழுதியவர்களின் போன்றவைகளிலிருந்து எடுத்தது. உங்களுக்கு விவரம் தேவையானால், கேளுங்கள் தருகிறேன்.
நான் மேலே சொன்ன விவரங்கள் அனைத்தும் ஏதோ இஸ்லாமியர் அல்லாதவர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்துச் சொன்னதாக நினைக்கவேண்டாம், அவைகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் ஆரம்ப கால சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதைகள், இஸ்லாமிய உரைகள் (தஃப்ஸீர்கள்)எழுதியவர்களின் போன்றவைகளிலிருந்து எடுத்தது. உங்களுக்கு விவரம் தேவையானால், கேளுங்கள் தருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக